Everything posted by Paanch
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
வி.ஜி.பி. கோவிந்தசாமி: கோல்டன் ஏரி மின்சாரம் என்ற பெயரில் பிலிம் ஸ்டுடியோவை உருவாக்கியவர், மற்றும் கோடீஸ்வரர் ஆனார். ராஜாதி ராஜா: கோடீஸ்வரர் ஆனார். சினிமா தொழில் நுட்பத்தில் கோடீஸ்வரர்கள்: ஆர்.ஆர். ரம்யா: பிரபல சினிமா இசையமைப்பாளர், தற்போதைய கோடீஸ்வரர். கலாநிதி மாறன் (Kalanithi Maran): சன் குழுமத்தின் தலைவர், வெற்றிகரமான சினிமா தயாரிப்பாளர், மேலும் கோடீஸ்வரர் ஆனார். சினிமாத் துறை, பணம் சம்பாதிக்க மற்றும் கோடீஸ்வரர் ஆக பல வாய்ப்புகளைத் தருகிறது. இதில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், மற்றும் திரைக்கதை எழுத்தாளர்கள் போன்றோர் அடங்குவர்.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
ஆமாம் நீங்கள் சொன்னால் அது சரிதான். ஆனால் அண்ணனுக்காக தீக்குளிக்கமட்டும் தமிழ்நாட்டில் தமிழன் இருப்பதை வரவேற்று நாங்கள் சுவிற்சலாந்துவரை சென்று கூடி அங்கு தீக்குளித்தவர்களுக்கு அஞ்சலி செய்வதை வரவேற்போம்.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
பணம் சம்பாதிப்பதற்கு அரசியலை விடவும் சினிமா சிறப்பான இடம். அரசியலில் சம்பாதிக்க பல சுத்துமாத்துகள் ஏமாற்றுவேலைகள் செய்யவேண்டும். சினிமா அப்படியல்ல கோடி கோடியாக அனைவரும் பார்த்திருக்க சம்பாதிக்கலாம். அத்தகைய சினிமாவை விட்டுவந்த சீமான் பணம் சம்பாதிக்க வந்தார் என்று சொல்வது ஏற்புடையதல்ல. அவர்மீது மக்களைக் காழ்ப்புணர்ச்சி கொள்ள வைப்பதற்கு இன்று அரசியல் செய்வோரிடம் வேறு காரணங்கள் இருக்கவேண்டும். அதனை அறிந்து தெரிவிப்பதே சாலச்சிறந்தது.🤔
-
'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
தாழ்த்தப்பட்ட சாதி என்று அந்தச் சாதியின் பெண்ணைத் துகிலுரிந்து ரசித்தார்கள். அவர்கள் குடியிருப்புகளைக் கொளுத்தி அட்டகாசம் செய்தார்கள். பாலகர்கள், வயதிபர்கள் என்று பாராமல் இலங்கையில் அரசே இலச்சக்கணக்கில் தமிழரைக் கொலை செய்தது. இதன்போதெல்லாம் ஊடகங்கள், மக்கள் பதிவுகள், கள உறவுகளிடம் இருந்து கூட பெருமளவான ஆட்சேபனைகள் வந்ததில்லை. ஆனால் ஒரு தமிழ் நடிகன், தமிழினம் வெற்றிகொள்ள ஒரு கட்சியைத் தொடங்கியதும் அதற்கு மக்கள் ஆதரவு பெருகுவதையம் பொறுக்கமுடியாத தமிழ்தோல் போர்த்தி தமிழர்களை ஆட்சி செய்யும் வேற்றினத் தலைவர்களின் எடுபிடித் துறைகளின் கூற்றுகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து அளவற்ற பதிவுகளும், ஊட்டங்களும் இடுவது ஏற்புடையதல்ல. மக்களைப் பாதுகாக்கத் திறன் அற்ற இன்றைய அரசின் ஆட்சியாளர்களே இந்த அவலத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். நன்னெறிகளைப் படித்த தமிழராகிய நாங்களும் போட்டி, பொறாமை, காழ்ப்புணர்ச்சி, ம-பொ-சி மாமியார்கள் என்று இல்லாது வாழ்ந்து வாழ்க்கையை இனிதாக்கி வாழ வேண்டும்.🙏
-
'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
சாமி நீங்களுமா??
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
சீமான் விருப்பம்போல் நடக்கிறதா! பகற்கனவு!!. சீமான் விருப்பம்போல் நடைபெற்றிருந்தால் இப்போது தமிழ்நாடு தனிநாடாக மிளிர்ந்திருக்கும். உலகில் தமிழனுக்கு என்று ஒரு அரசும் பிறந்திருக்கும். திராவிடம் என்று தமிழினத்தின் காலைச் சுற்றிய பாம்பிடமிருந்து கடிபடாமல் மீண்டிருக்கும். இலங்கையிலும் அதற்கு ஒரு வாரிசு உருவாகியிருக்கும்.😌
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
மனிதர்கள் உருவாகியிராதிருந்தால் உலகம் உருப்படியாக இருந்திருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.🤔
-
குளிக்க சிறந்த நேரம் காலையா அல்லது இரவா? எது அதிக நன்மை தருகிறது?
எங்கள் வீட்டிற்கு இனிமேல் சிறீத்தம்பி வந்தால் நாங்கள் அனைவரும் மாஸ்க் போட்டுக்கொண்டுதான் அவருடன் பேசுவோம் என்று இன்றுமுதல் உறுதி எடுத்துக்கொண்டுள்ளோம்.😷
-
குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு!
2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை மக்கள் தொகை சுமார் 23.23 மில்லியன்ஆகும் என்று Worldometer போன்ற ஆதாரங்கள் மதிப்பிடுகின்றன, மேலும் இது 2024-ல் இருந்ததை விட சற்றே அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் இதை 23.2 மில்லியனாக குறிப்பிடுகிறது. குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன். 🐒
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
தலைப்பு தடுமாறி தறிகெட்டுப் போகிறது.
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ் அருள்ராஜ் நியமனம்
புதிய அதிபருக்கு வாழ்த்துக்கள்!! மட்டக்களப்பு விருந்தோம்பலுக்குப் பெயர்போனது. அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்கள் அங்கு மக்கள் வருந்தாமல் ஆட்சிபுரிவார் என நம்புவோம்.🙏
-
லஞ்சம் -ஊழலுக்கு உள்ளாகக்கூடிய நிறுவனங்களாக 10 நிறுவனங்களை மக்கள் தேர்ந்தெடுப்பு!
அதிகாரம்காட்டி பயம்காட்டி வற்புறுத்திக் கேட்டுப் பெற்றுவதுதான் லஞ்சம் ஊழலுக்குள் அடங்கும். தவறில்லாத நன்மைபெற்று அதற்கான பிரதி உபகாரத்தை மனமகிழ்ந்து செய்வதை லஞ்ச ஊழல் என்று அடக்குவது தவறு. அடக்கினால் அது மனிதத்தைப் புண்படுத்தும் செயலாகும்.
- ஒரு பயணமும் சில கதைகளும்
-
ஒரு பயணமும் சில கதைகளும்
ரசோதரன் கதை. உறவுகள் ஆகா ஓகோ என்று அடித்துப் பிடித்து ரசிக்கிறார்கள். நானும் ரசிப்போமே என்று கதையைப் பார்த்தேன், அம்மாடியோ கதை அப்படி நீளம். அளந்து பார்த்து இறங்கிப் போவதற்குள் சிட்னியில் இருந்து லொஸ்சேஞ்சல் போய்விடலாம் என்று தோன்றியது. என்றாலும் ஆவல் விடவில்லை, கோழிப் பொரியல் வாங்கி துண்டு துண்டாக தக்காழிக் குழம்பில் தொட்டு உண்பதுபோல் உறவுகளின் ஊட்டத்தையும் தொட்டுத் தொட்டு கதையை உண்டேன். ஆனந்தம் ஆனந்தம், அதுவே சுவையை அப்படி ஊட்டியது. “டேய் கஞ்சப் பயலே வறுத்த முழுக் கோழியை வாங்கித்தாடா” நாக்கு வாட்டி எடுத்தது. தாள் சில்லறையாகி சில்லறையும் தீர்ந்தது, முழுக்கோழி வாங்க நான் எங்கே போவேன்? பணிசெய்து பணம் உழைக்க முதுமை விடுமா???🥵
-
தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை தொல்லியல் திணைக்களத்திற்கு இல்லை - பன்னீர்செல்வம் சிறீகாந்த்
தமிழ்மண் பாதுகாக்க போராடிய தலைவனையும் போராளிகளையும் மண்கவ்வ வைப்பதில் சிங்களத்துடன் முனைப்புடன் செயல்பட்ட ஒரு கட்சியின் ஊடகப் பேச்சாளரின் நாடகம் அரங்கேற முயல்கிறது.🤔
-
4.3 அளவில் பூமி அதிர்வு.
எல்லா அழிவுகளும் ஆபத்துகளும் அமெரிக்காவிலேயே ஏன் வருகிறது என்ற யோசனையோடு நித்திரை கொண்டேன். கனவில் ஒரு சாத்திரி வந்தார், தற்போது அமெரிக்கர் என்று வாழும் மக்களால் கொல்லப்பட்ட பூர்வ அமெரிக்க குடிகளின் ஆவிகள் இன்னமும் அமெரிக்காவை சுற்றி வருவதாகச் சொன்னார். இப்போது இலங்கையிலும் அடிக்கடி பூமி நடுக்கம் வருகிறதாம். ஏன்??????
-
உரும்பிராயில் வைத்தியர் மீது தாக்குதல் நடாத்திய இருவர் விடுவித்த பின் மீண்டும் கைது!
மன்னரும் நானே மக்களும் நானே! மரம், செடி, கொடியும் நானே! சொன்னவன் பொலிசு, சொல்பவன் பொலிசு. துணிந்து நீ போதை ஏற்று.🤪 சிறீமாவோ காலத்தில் எட்டாம் வகுப்புடன் பொலிஸ் படையில் இணைக்கப்பட்டோரும், யெயவர்த்தன காலத்தில் இணைக்கப்பட்ட சிறைக் கைதிகளும் இன்னமும் சேவையில் இருக்கிறார்கள்போல் உள்ளது.🤔
-
தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!
goshan_che குட்டுப் பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப் படவேண்டும் என்று சொல்வார்கள். நான் யாழ்களத்தில், தங்கத்தால் மகுடமே சூட்டிவந்துள்ள வரும் உறவுகளில் ஒருவரின் பத்து விரல்களாலும் ஆசீர்வாதமே பெற்றுவிட்டேன்.🙌 🙌 🙏
-
தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித் தரள நீர்வடிய கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா? கயவனை காலால் மிதித்து இறையும் ஆடியது நல்லோர் இடரின்றி வாழ்வதற்கே.🙏
-
தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!
அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்ட நிலையில் அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டிருந்தன. அந்த கம்பிகள் அண்மையில் திருட்டு போன நிலையில் , குறித்த பகுதி இடிந்து விழுந்துள்ளது. கம்பித் திருடர்களைக் கண்டுபிடித்து மின்சாரக் கம்பத்தில் கட்டித் தூக்கவேண்டும். இலங்கையில் பாரம்பரியங்களை பாதுகாக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சை அரசு உருவாக்கவேண்டும்.
-
பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
தலைவர் சூரியதேவன். இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன். சூரியன் உள்ளவரை இந்தப் பூமியில் இருப்பார். கற்பனை என்பது மனதில் புதிய கருத்துக்கள், பொருள்கள், உருவங்களை உருவாக்கும் திறன் கொண்டது. இது கதைகளை உயிர்ப்பிக்கவும், உணர்ச்சிகளைத் தூண்டவும், படிப்பவர்களை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்தவும் உதவுகிறது.😌
-
பிரதமர் மோடியின் 75ஆவது ஜனன தினம்; கீரிமலையில் விசேட பூசை வழிபாடுகள்!
கவலை வேண்டாம் சாத்தான் கீரிமலையில்தான் ஒருவரின் இறுதிப் பூசை நிகழ்ச்சி நடைபெறும்.
-
பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
உள்ளூர் ஊடகங்களில் காட்டப் பட்ட வீடியோக்கள் இன்னும் இணையத்தில் இருந்தால் அவற்றை நீங்கள் ஏன் வெளியிடவில்லை? வெளியிட்டால் உண்மைகள் வெளிப்பட்டு விடுமே என்ற பயமா? அதனால் நீங்கள்தான் இறுக கண்களை மூடிக் கொண்டிருப்பதுபோல் தெரிகிறது.😣
-
பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
பிரபாகரன் போன்ற தோற்றமுடைய சிங்கள இராணுவ வீரர் குறித்த கோட்பாடுகள் உள்ளன, 2010 இல், ஒரு விடுதலைப்புலிகள் ஆதரவு இணையதளம், பிரபாகரனின் சடலம் என்று காட்டப்பட்ட ஒன்று ஒரு சிங்கள இராணுவ வீரருடையது என்றும், அவர் பிரபாகரனைப் போலவே தோற்றமளித்தார் என்றும் கூறியது.
- பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
Important Information
By using this site, you agree to our Terms of Use.