Everything posted by Paanch
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
தமிழர்கள் பின்பற்றும் சமயங்கள் ஒன்றல்ல. இந்துசமயம், சைவசமயம், கிறித்தவ சமயம் என்று பல்வேறு சமயங்களை அவர்கள் பின்பற்றுகின்றனர். அவைகளில் சைவசமயத்தை தீவிரமாகப் பின்பற்றுபவர்கள் மச்சம், மாமாமிசம் உண்பதில்லை. இருந்தும் தமிழர்கள் எந்தமதத்தவரின் கோவில்களையும் கடந்து செல்லும்போதும் அவைகளுக்குரிய கடவுள்களை வெளிப்படையாக இல்லாவிடினும் நெஞ்சில் கைவைத்து மானசீகமாக வணங்கிச்செல்வார்கள். அந்த வழக்கம் அனேகமாகத் தமிழர் அனைவரிடத்தும் உறைந்து உள்ளது .🙏
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
- குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி!
தமிழினம் ஏன் அநியாயத்திற்கு தன்னை நல்லினமாகக் கட்டமைக்க முயன்று அழிந்து போகிறது.? போரில் ஒரு இனத்தை வென்றாலும் அங்கு தன் ஆட்சியை நிறுவாமல் தோற்ற இனத்திடமே ஆட்சியை ஒப்படைத்து வருவதைச் சரித்திரரீதியாகவும் அறிய முடிகிறது. ஆனால் அந்த தோற்ற இனமே தன்னை அழிக்க முற்பட்டு வருவதை இன்றுவரை உணராமல் தமிழினம் எதற்காகத் தன்னையே அழித்து வருகிறது.????🤔- குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி!
“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” இது மனித அறிவிற்கும் பொருந்தும். புலிகள் பற்றிய மிகவும் கீழ்தரமான சிந்தனை. தாய் பிள்ளைக்குப் பாலூட்டும்போது, பிள்ளைக்குப் புரையேறி உயிராபத்துக்கு உட்பட்டதும் அறிந்துள்ளோம். ஆகவே தாய்மார்கள் பிள்ளைகளுக்குப் பால் ஊட்டக்கூடாது என்று விமர்ச்சிப்பதற்கு ஒப்பானது.🫨- கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான வாய்ப்பு உள்ளதா?
தமிழின வளர்சியையும்,எழுச்சியையும் தடுக்க இந்தியா தன் புனிதத்தையே பலிகொடுக்கும் ஆதாரம் உள்ளது.🧐- அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!
இவரைத்தான் தூசணப் பிக்கு என்று அழைப்பார்களோ???? 🧐- அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
மாநகரசபை நரகசபையாக மாறிவிடுமோ? என்றொரு ஐயம் எழுந்தது! நாங்கள் அப்படி அல்ல என்பதை உணரச் செய்ததுள்ளார்கள். வாழ்த்துக்கள்!! இந்தச் சம்பவம் நீதி மன்றம்வரை செல்லும் என்றொரு செய்தி வந்தது, நீதிபதிகள் இந்தியாவில் படித்துப் பட்டம் பெற்றவர்களாக இருக்கக் கூடாது என்பது எனது பிரார்த்தனை.😌- ஈழத்தமிழர்களை ஒடுக்க இந்தியா எடுத்த புதிய ஆயுதம்: நம்பி நம்பி ஏமாறும் தமிழர்கள்
இந்தியா என்றதும் காந்தி தேசம் என்ற மாயை நீங்கி இப்போது வாந்தி வருகிறது.🤮😩- மன ஆறுதலுக்காக கட்டிப்பிடி வைத்தியம்
இந்தக் கட்டிப்பிடி, தொட்டுப்பிடி திரெப்பி எல்லாம் பணம் பண்ண ஒரு தந்திரமே.🤨 மக்களே ஏமாறவேண்டாம்.🤔 பார்வை ஒன்றே போதுமே!!!🧐 ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளைத்தாச்சி.😂- உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
அவ யாரையோ கண்டு நாணத்தால் நல்லா சிவந்துபோனா. யாராக இருக்கும்????? எனக்கு சாமியார்மேல் கொஞ்சம் டவுட்டு.🫣- எனது சகோதரர் காணாமல்போனதற்கும் பிள்ளையானுக்கும் தொடர்புள்ளது - பேராசிரியர் ரவீந்திரநாத்தின் சகோதரர் ராஜ்
நந்த வனத்திலோர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி, அதைக் கூத்தாடிக் கூத்தாடி நாங்கள் போட்டுடைத்தோமே.🤣 கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்- தந்தை செல்வா🙏 உலகில் மதங்களை உருவாக்கிய மனிதர்கள் அனேகமாக தங்கள் மதத்திற்கு ஒரு கடவுளை உருவாக்கி வணங்கி வழிபட்டு வருகிறார்கள். நாங்கள் பின்பற்ற, எங்கள் பெற்றோராலும் அறியத்தந்த இந்து மதத்திலோ எண்ணற்ற கடவுள்கள்….. எந்தக் கடவுள் வந்து எங்களைக் காப்பாற்றுவார்.?????😢- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உண்மைதான், ஆனால் இரண்டிலுமே ஒரே கடவுச்சொல்தான் சேமித்து வைத்துள்ளேன். கணனிக்கும், ஐபாட்டுக்கும் யாழுடன் ஜாதகப் பொருத்தத்தை பார்க்கவேண்டும்.🤔😁- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கணனி கேட்டது. ஐ பாட் எதையுமே கேட்கவில்லை ஐயா! இதன் நுட்பமோ, மர்மமோ என்ன.????- சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
சுமந்திரன் எதற்காக தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்தாரோ அதற்கான வேலையை அவர் கனகச்சிதமாக முடித்து அதில் வெற்றியும் அடைந்து விட்டார். அவர் ஒரு கொழுத்த பூனை, அவருக்கு மணிகட்ட எண்ணும் எலிகள் எல்லாம் மண்கவ்வுவது நிச்சயம்.🤔- மீன் சந்தையில், மீன் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை.
கவி அருனாசலம் அவர்கள் கவிதை எழுத எங்கு கற்றார் என்பது இப்போது புரிந்தது.😁- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழுக்குள் வர “கணனிக்குள்” நுளைந்தேன் அது கதவை மூடிவிட்டது.☹️ “ஐ பாட்” மூலமாக நுளைந்தேன் அது ஆனந்தமாக வரவேற்றது.🤩- யாழில் தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!
இலங்கையில் புதிதாக அரசு வெளியிட்ட பாலர் பாடப்புத்தகத்திலிருந்து.🐕…..👇 நாய் அரிசி காக்கும்.- ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம்
நானும் கேள்விப்பட்டதில்லைப் பிரியரே! ஆனால் ஆட்டையே சுட்டுத்தர “கொன்றால் பாவம் தின்றால் போகும்” என்ற பழமொழிக்கிணங்க, நானும் தின்றதுண்டு.😛- யாழில் தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!
புத்தர் உண்மையை சொல்கிறார் சூடு தாங்க முடியவில்லை. “குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்”.😂 இங்கு தேங்காய் ஒன்றின் விலை இலங்கைக் காசில் கணக்குப் பார்த்தால் 1000 ரூபாவிற்கும் விற்கப்படுகிறது. அத்துடன் வாங்கி வீட்டில் உடைத்த பின்புதான் தெரியும் அது அழுகலா, கொப்பறாவா, ஓடு கழன்றதா என்று. வாங்கினால் வாங்கியதுதான் திரும்ப கொடுத்து வேறொன்று வாங்கவும் முடியாது, குப்பையில்தான் போடவேண்டும். எந்த நிறுவனத்திலும் முறையிடவும் முடியாது, பணம் போனது போனதுதான்.😩😭- 7 கோள்களும் ஒரே அணிவகுப்பில்; இலங்கையர்களுக்கு அரிதான சந்தர்ப்பம்!
இந்தக் கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சியை இலங்கையர்கள் பார்க்க முடிவதால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன?- 'அழகான கடற்கரை ஓர் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்' சுத்தப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம்!..
கடல், கடற்கரைகளைச் சுத்தம் செய்வதால்…. கடல்பாசி, கடற்கழிவுகளை உண்டுவாழும் கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படாதா??.🥵- ஜெர்மனி தேர்தல்: எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு! வெளியான Exit Poll ரிசல்ட்!
சாத்திரம், ஜோதிடம், கிரகங்கள் மற்றும் கலியுகம், கலியுகம் என்று பூமியில் மக்களைக் கிலிபிடிக்க வைத்த புகழ்பெற்ற மேதைகளின் வார்த்தைகள் பொய்யல்ல என்பதை மெய்ப்பிக்க உண்மையில் இப்போதுதான் கலி தன் வாகனத்தில் பூமிக்கு வந்துள்ளது. பூமியில் தன் வாகனத்தைப் பார்க்செய்யக் கட்டணமற்ற இடம்தேடி முதலில் அமெரிக்காவில் கண்டுபிடித்தது. தன் ஆ ட்டத்திற்கு மேளமடிக்க டிரம்பும் அங்கு இருப்பதும் கண்டு மேலும் அளவில்லா ஆனந்தம் கொண்டுள்ளது. தொடர்ந்து ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்ககா, தென்னமெரிக்கா என்று கண்டம் கண்டமாக அதன் ஆட்டம் தொடரும் என எதிர்பார்க்லாம். கிரகங்கள் தாக்கத்திலிருந்து தப்புவதற்காக கோமாதா தீர்த்தம் அருந்தி செய்யவேண்டிய பரிகாரங்களை உலகத்துக்கே அறியத்தந்த இந்தியா, கலியின் ஆட்டத்தால் தொடர்ந்து வரும் அமெரிக்க வானூர்திக் கிரகங்களைக் கண்டு செய்வதறியாது தடுமாறுகிறது. அமெரிக்காவுக்குக் கலியுக வரதனார் முதலில் வந்தாலும், அவருக்கு முந்திநின்று “ஏஎப்டி” என்று பெயர் சூட்டிப் பெருமைகொள்ளும் பெறுபேற்றை யேர்மனியே அடைந்துள்ளது.🏃🏽♀️💃🏼- அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
எங்கள் பேத்தி காட்டிய கட்சிக்கு வாக்களித்தோம். சாமியார் எப்படி மோப்பம் பிடித்தார்??.🤔- BBC தமிழோசை ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் காலமானார்!!!
ஆனந்தி அவர்களின் ஆத்மா சாந்திபெற இறைவனை வேண்டுகின்றேன்.🙏- ஆரையம்பதியில் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் ; இருவர் படுகாயம்
உண்மைதான் புத்தரே! ஆனால் அரசன் செய்யும் ஆட்சி ..நல்லாட்சியா? இல்லையா? என்றும் கண்டுகொள்ள முடியும். மக்களாட்சியில் அது முடியாது.😲 - குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி!
Important Information
By using this site, you agree to our Terms of Use.