Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. தான் பெறப்போகும் குழந்தை இவ்வுலகில் மனிதர்களோடு, மனிதத்தோடு சிறப்பாக வாழவேண்டும் என்ற எண்ணம்கூட அந்த கறுப்புசட்டை போட்ட அம்மாவுக்கும் இல்லையோ!🤔
  2. விபசாரம்’ செய்ய ஒப்பானதான ‘தமிழரசுக் கட்சி’ முருகானந்தம் தவம் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலையடுத்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கத் தமிழ்த் தேசியக் கட்சிகளில் முதன்மையானதும் தாய் கட்சி என்றும் அழைக்கப்படும் இலங்கை தமிழரசுக் கட்சி முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் (ஈ.பி.டி.பி.) ஆதரவு கேட்டு அக்கட்சியின் அலுவலகப் படி ஏறியமை தமிழ்த் தேசிய அரசியலிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. இந்த மனிதருக்கு தான் செய்தது தவறென்று இன்னுமா புரியவில்லை.???????
  3. ஒருவர் தும்மினால் “நூற்றாண்டு” என்று சொல்லி அவர் நூறு வயதுவரை வாழவேண்டும் என்று வாழ்த்துவது எங்கள் மரபு, இங்கு நீதிபதி கிழவனை 128 வயது வரை வாழ வேண்டித் தீர்ப்பு வழங்கிவிட்டாரே. இப்படியான வக்கிரர்கள் வளர்வதைச் சட்டம் போட்டோ தண்டனை கொடுத்தோ தடுக்க முடியாது. இப்படி நினைத்தாலே நினைப்பவர்கள் பயம்வந்து நடுங்கி வாழச் செய்ய வேண்டும். நலமடித்து கை கால்களை முடமாக்கி வாழும்வரை மனழ் நொந்து வாழ விடவேண்டும்.😳
  4. இது ஒன்றும் அதிசயமல்ல. பிணம் புணரும் வெறி கொண்ட படைவீரர்களும் எங்கள் நாட்டு அரசிடம் உண்டு என்பதை நீங்கள் அறியவில்லையா.?🤔
  5. குட முழுக்கு என்பதே ஒரு அபத்தமான நிகழ்வு என்ற ஒரு பதிவைப் படித்துள்ளேன். அதாவது கோவில்களின் கட்டுமானப் பணிகள், பிராமண உயர்சாதி இனம் என்று வரையறுக்கப்பட்ட மனிதர்களால் மட்டும் மேற்கொள்ளப்படுவதில்லை, அனைத்துச் சாதி மனிதரகளாலும் மேற்கொள்ளப்படுவதால் அதில் தீட்டு உள்ளதாம், ஆகவேதான் தீட்டு நீங்கக் குடமுழுக்கு நிகழ்வு நடத்தப்படுகிறதாம். உண்மை என்ன.????
  6. தலையங்கத்தால் வாசகர்களைக் கவர முனையும் பதிவுகள் மலிந்துவிட்டன. யானையின் இலத்தியில் கண்டெடுத்த விளாம்பழம்போல் சில பதிவுகள் ஏமாற்றமளிக்கிறது.🤔
  7. அவை சிங்களவர்களுடைய எலும்புகள் என்ற உல்டா கதை மிக விரைவில் வெளிவரும்.
  8. இலங்கையில் தமிழினத்தின் அறிவார்ந்த வளர்ச்சியுடன் தாங்களும் வளரவேண்டும் என்ற எண்ணமோ, முயற்சியோ இன்றி அங்குள்ள படித்த சிங்கள இனவாதிகளும் காழ்புணர்சியோடு தமிழினத்தின் வளர்ச்சியை நோக்குவது போல், இந்தியாவிலும் தமிழ் மாநிலத்தின் வளர்ச்சியை அதன் சில மாநிலங்களிலுள்ள இனவாதிகள் நோக்குவது தெரிகிறது. இது இந்தியாவின் அழிவுக்கான அறிகுறிகள் என்பதை இலங்கையைப் பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும்.🤔
  9. அம்மாள் வருத்தம் என்று பொக்கிளிப்பான், சின்னமுத்து போன்ற நோய்களுக்கு உள்ளாகி நான் வருந்தியபோது பனம்கள் வாங்கி வெங்காயம் போட்டு அம்மா அருந்தத் தருவா, ஓரிரு நாட்களில் நோய் பறந்துவிடும்.😆
  10. புகையிலையாலும் பொருள் ஈட்டித் தமிழர்கள் வளர்ச்சி பெற்றது உண்மை. அதனை அழிப்பதற்காகவே கரிசனை கொண்டன சிங்கள அரசுகள்.😲
  11. வானத்தில் விமானங்கள் பறந்து செல்வதை வேடிக்கை பார்த்த கண்கள் இப்போது பயத்தடன் பார்க்கின்றன.🫣
  12. சிறீ லங்காவில் பிழைகள் தண்டிக்கப்படும். தவறுகள் மன்னிக்கபட்டு உயர் பதவிகளும் வழங்கப்படும்.🤫
  13. அர்ச்சுனா ஒரு பைத்தியம்தான். இந்தப் பைத்தியத்தினால்தான் நாங்கள் கடவுளுக்கு நிகராக வரித்துக்கொண்ட வைத்தியப் பெருமக்களில் கொடூரர்களும் புகுந்து ஒழிந்திருப்பது தெரியவந்தது. அர்சுனா மோதுவது எளியோரோடல்ல, மக்களைச் சுரண்டிவாழும் பெரும் வலியாரோடு.😳
  14. அமெரிக்கப் பூர்வீக குடிமக்கள் செவ்விந்தியரே. அவர்களைவிட இன்று அங்குள்ள அனைவரும் குடியேறிகளே. நான் சொல்லவில்லை அமெரிக்க சரித்திரமே சொல்கிறது.
  15. மணிரத்தினம் இயக்கிய படம் என்றாலே காலையில் கோவில் மணிஓசை கேட்டுக் கண்மலரும் இன்பம் உண்டாகும். இங்கு இப்போது யாழ்உறவுகள் இணைந்து மணியின் நாக்கையே அறுத்து எறிந்துவிட்டார்களே, 😟😭 சாமி நான் முற்றிப் பழுத்துவிட்டேன்.🙏
  16. அத்தியட்டி தில்லைவிநாயகலிங்கம் அவர்களின் பதிவுகளில், அந்தத் தம்பதிகளின் சுயவிபரப் படத்தைப் பார்த்துப் பரவசப்பட்டு மகிழ்ந்திருந்த என்னை, இந்த நினைவாஞ்சலிப் பதிவு பெரும் அதிர்வைத் தந்து வருத்துகிறது.😭
  17. வைத்தியசாலையில் பணிபுரிந்த, பணிசெய்யும் சிலரிடமிருந்து நான் கேள்விப்பட்ட வரையில், சில அரசியல்வாதிகள் பாதாள உலகில் குண்டர்களை வைத்துத் தங்கள் காரியங்களைச் சாதிப்பதுபோன்று வைத்தியர் சத்தியமூர்த்தியும் வைத்தியசாலையில் பணிபுரிவோரில் சிலரைத் தனக்கு ஆதரவாகச் செயல்பட வைத்துத் தன் காரியங்களைச் சாதிப்பதுபோல் தெரிகிறது.😳
  18. செய்திமூலமோ, பிறர்சொல்லியோ அறியாமல், சிங்கள அரசின் ஆமிபற்றி என் அனுபவத்தில் நான்கண்ட உண்மைகள் உங்கள் பதிவை ஏற்பதற்கு மறுக்கிறது. சிங்களவர் போகட்டும், உங்கள் மனநிலை என்னவென்று அறிய மனம் விளைகிறது.
  19. எமக்கு புலிகள் பாதுகாவலர்கள். சிங்களவருக்கு ஆமி வேட்டைநாய்கள்.
  20. காமம்தான் காதலுக்கு அத்திவாரம் என்ற ரீதியில் பல கவிஞர்களும், அறிஞர்களும் கூறியுள்ளார்கள், எழுதியம் வருகிறார்கள. ஆனால் மனித அறிவுப் பசியும் காதலுக்கு உரமாகி அத்திவாரம் இடும் என்ற உண்மையை கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அவர்களின் இந்தப் பதிவு துல்லியமாக உணர்த்துகிறது. நூலகத்தை மனித மிருகங்கள் எரித்துத் தமிழினத்தை உலகில் அழித்துவிட முயன்றாலும், அது சாம்பல் ஆகியபின்பும், தமிழினத்தின் நெற்றியில் அமர்ந்து உலகம் உள்ளளவும் துலங்கி, அந்த இனம் அழியாது காப்பாற்றிவரும். இந்த உண்மையை எவராலும் மறுக்கவோ, மாற்றவோ முடியாது நம்பலாம்.😠

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.