Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. ஆதாரத்தோடு வெளியாகிய Bar பொமிட் உரிமையாளர் விபரம்! கிளிநொச்சியில் சந்திரகுமாரும், விக்னேஸ்வரனும், அங்கயனும், டக்ளசும் தான் சாராயக்கடை வைத்திருக்கிறார்கள். இதை யாரும் கதைக்க தயார் இல்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் உரிமையாளர் யார் என்று யாரும் அறிந்துகொள்ளலாம். 1) கந்தசாமி கோவிலுக்கும் கரடிப்போக்கு சந்திக்கும் இடையில் உள்ள ஒரு பார் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த Bar A9 வைன் ஸ்ரோர் என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ளது. 2) சந்திரகுமாரின் மனைவியின் பெயரில் கரடிப்போக்கு சந்தியில் இரண்டு பார்கள் உள்ளன. 3) பரந்தனில் இருக்கும் இரண்டு பார்கள் அங்கயனின் தம்பியின் பெயரில் இருக்கும் நிறுவனத்தின் பெயரில் உள்ளது. 4) 55ஆம் கட்டைக்கு அருகில் தொண்டமான்நகரில் அங்கயனின் தந்தை இராமநாதனின் பெயரில் ஒரு பார் திறக்கப்பட்டுள்ளது. அந்த Bar கேட்ட கடிதமும் வெளிவந்திருக்கிறது. 5) கனகபுரம் வீதியில் உள்ளது தான் கிளிநொச்சியில் அதிகவிலைக்கு விற்கப்பட்ட பாராம். இது டக்ளசின் தம்பி தயானந்தாவின் பெயரில் உள்ளது. 6) பூநகரி சந்தியில் உள்ள ஒன்று Rockland சாராய நிறுவனத்தின் பெயரில் உள்ளது. இது யாழில் நகரில் ஏற்கனவே Bar வைத்திருக்கும் நபர் தான் வாங்கியிருக்கிறார். கொழும்பை சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரால் கனகபுரம் வீதியில் ஒன்று புதிதாக திறக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு பக்கத்தில் உள்ள பார் புலம்பெயர் வாழ் பிரபல தமிழ் வர்த்தகர் பெயரில் உள்ளது. அதுவும் ஒரு சாராய நிறுவனத்தின் பெயரில் தான் பதிவு உள்ளது. விடுதலைப்புலிகள் காலத்தில் கிளிநொச்சியில் 11 பார்கள் இருந்தன. இப்போதும் 11 உள்ளதாம். 6.5 லட்சம் மக்கள் உள்ள யாழில் 67 பார்கள் உள்ளன. 2 லட்சம் மக்கள் உள்ள கிளிநொச்சியில் 11 பார்கள் உள்ளன. 2.5 லட்சம் மக்கள் உள்ள வவுனியாவில் 39 பார்கள் உள்ளனவாம். 1.8 லட்சம் மக்கள் உள்ள முல்லைத்தீவில் 11 பார்கள் உள்ளனவாம். இந்த கயவர்களை மக்கள் அறிய Share செய்யுங்கள் whatsapp
  2. அண்ணை...................... உங்களுக்குள்ள ஒரு 'அன்பே சிவம்' இருக்கிறது இவ்வளவு நாளும் தெரியாமல் போய்விட்டதே.... எல்லாம் 17-18-19 வயதுவரை. 1977 தேர்தல் கூட்டங்களின் போது வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு எதிராக சீன கம்யூனிஸ்ட்டுகளின் கூட்டம் இருந்தபடியால் சங்கானை நெல்லியடி போன்ற இடங்களில் கூட்டம் நடக்கும் போது பாதுகாப்பின் நிமித்தம் வேறுவேறு ஊர்களில் இருந்து கலவரங்கள் வெடித்தாலும் என்று பாதுகாப்புக்காக வாகனங்களில் போவோம். வாகனங்களில் ஆயுதமும் இருப்பதாக கதைப்பார்கள்.ஒருநாளும் நான் காணவில்லை. வீட்டிலே ஒரே பிரச்சனைஇ உன்னை ஏன் கொண்டு திரியிறாங்களா என்று தெரியுமாடா என்று அப்பா கேட்பார். அது புரிவதற்கு நீண்டகாலம் எடுத்தது. திருமணத்தின் போது கூட ஐயரை வைத்து செய்ய விருப்பமில்லை.ஆனாலும் தனித்து நின்றதால் முடியாமல் போய்விட்டது. அந்தநேரங்களில் இயக்கம் இருப்பது தெரிந்திருந்தால் சிலவேளை போராளியாகி இருப்பேன். காயுமில்லை பழமும் இல்லை.வெறும் சிப்பாய் தான். சிறுப்பிட்டியில் சிந்தில்வேல் ஒருவர் சிறந்த பேச்சாளர் இப்போதும் இருக்கிறார்.
  3. கல்வி அமைச்சைப் பொறுத்தளவில் ஏறத்தாள உயர்கல்வி அந்தக்கல்வி இந்தக்கல்வி என்று அதற்கு மட்டும் 7 அமைச்சர்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.7 அமைச்சர்களுக்கும் எத்தனை உதவியாளர்கள் வாகனங்கள் எரிபொருட்கள் அத்தனை பேருக்கும் கட்டடங்கள். ஒரு ஆள் செய்ய வேண்டிய வேலையை இப்படியாக வீண்செலவு செய்தார்கள். இதே போலவே இந்த விமானசேவையும் இருக்கும் என எண்ணுகிறேன். அதற்கும் ஏதாவது திட்டங்கள் வகுப்பார்கள் அப்போ தெரியும் ஏன் நஸ்டத்தில் ஓடியதென்று. எமிரேட்டுடன் இருந்த போது லாபத்தில்த் தானே ஓடியுள்ளது. நேரமிருக்கும் போது இந்தக் காணொளியைக் கேட்டுப் பாருங்கள்.
  4. சிறிய வயதில் சீன கம்யூனிஸ்ட்டுகளுடன் சேர்ந்து இயங்கினேன்.அந்த வகையில் ஒரு கம்யூனிஸ்ட்காரர் அரசில் உள்ளது சந்தோசமாகவே இருக்கிறது.
  5. இனி பாராளுமன்றம் போகிறவர்கள் பாடு ரசியாவுக்கு வேலைக்க போனமாதிரி தான். போட்ட முதலும் காலியாகும்.
  6. பாதுகாப்பு பிரிவினரின் கெடுபிடிகள் லஞ்சம் கப்பம் இல்லாமல் போனதே பெரியதொரு சுமை குறைந்ததாக சொல்கிறார்கள்.
  7. தமிழ் கட்சிகள் பெரிய முதலாளிமார்கள் போல திமிராக நடந்து கொண்டார்கள். இந்த ஜனாதிபதி தேர்தல் அவர்களின் உண்மையான முகங்களைக் காட்டியுள்ளது. தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகராக அனுரவைப் பார்க்கிறார்கள். இதிலே மிகமிக வேதனையான செய்தி என்னவென்றால் ஆன்மீகவாதி விக்னேஸ்வரன் திறுநீற்றுப் பட்டையுடன் உலாவந்து மதுபான அனுமதிப் பத்திரம் எடுத்து கையோடு ரணில் தான் இப்போது நாட்டை கொண்டு நடத்தக் கூடியவர்.அவருக்குத் தான் எனது ஆதரவு என்று தெரிவித்திருந்தார். இப்போது ஆப்பிழுத்த குரங்கு போல மாட்டிக் கொண்டு தந்தார்கள் வாங்கிவிட்டேன் என்கிறார்.
  8. காரணம் இயலாமை ஒரு சிறுபான்மை இன மக்கள் தம்மால் முடிந்த அளவுக்கும் மேலாக அனைத்து வழிகளிலும் முயன்றும் தோல்வி அடைந்த நிலையில் வேறு வழியின்றி.....??? எவனையாவது கடவுள் அனுப்ப மாட்டாரா என்பது போன்ற நிலையில்???? இந்த நிலையில் தான் தவறானவர்களை எம்மவர் பின் தொடர்ந்து விடக்கூடாது என்று இவ்வளவும் எழுதுகிறோம் அண்மையில் டாக்ரர் அர்ச்சுனா ராமநாதனையே ஒரு மீட்டபராக பார்த்தோம். கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நம்மவர்கள் சிறிய தடி தென்பட்டாலும் பற்றிப் பிடிக்கவே செய்வர்.
  9. One storm, 95 dead and a 500-mile path of destruction. Now comes the hard work of recovering from Helene CNN — Short on supplies, short on power and short on patience, the people who saw the power of a massive storm upend their lives have emerged to a new week, facing the daunting challenge of rebuilding. Some of the roads and bridges they need to do the job aren’t there anymore. Electricity could be a week away or longer. Emergency services are stretched. And neighbors, some of whose own homes are gone, are helping neighbors. At least 95 people have died across six states and officials believe there could be more. So far, state and county officials said 36 people died in North Carolina, 25 in South Carolina, 17 in Georgia, 11 in Florida, four in Tennessee and two in Virginia. Many more remain missing, perhaps unable to leave their location or unable to contact family where communications infrastructure is in shreds. வட கரோலினாவில் 38 பேர் இறந்துள்ளனர்.மகனின் வீட்டடியிலும் பல இடங்கள் நிலம் தெரியாத அளவுக்கு வெள்ளமாக இருந்தது. தெ;கரோலினாவில் 25 பேர் . ஜேர்ஜிஜாவில் 17 பேர் புளோரிடாவில் 11 பேர். இன்னும் பல இடங்களை ஏறத்தாள 500 மைல் நீழத்திற்கு குடிமனைகளை தூள்தூள்களாகத் தான் பார்க்க முடிகிறது. காற்று 150 மைல் கிழக்கே வந்திருந்தால் நாங்களும் அகப்பட்டிருப்போம். https://www.cnn.com/2024/09/30/weather/hurricane-helene-recovery-cleanup-monday/index.html
  10. இதுவரை இந்திய விமானங்களில் பயணித்ததில்லை. என்ன அந்தக் குடும்பத்துக்கு 2-3 மில்லியன் வரப் போகுது.
  11. இதிலே எழுதியது மட்டுமல்ல எவ்வளவு கீழ்தரமாக பதிவு செய்கிறார்கள். நடந்தவைகளைத் தானே எழுதியிருக்கிறார்கள் என்று கூட யோசிக்கத் தோன்றவில்லை. ஊரிலே மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். வாக்கே இல்லாத நாம தான் அடித்துப் புடுங்குகிறோம்.
  12. ரஞ்சித் எழுதியது அத்தனையும் உண்மை தான்.நடந்தவைகள் தான். அப்போது அவர்களை வளர்த்துக் கொள்ள முழு இனவாதம் தேவைப்பட்டது. இப்போது வளர்ந்து அதிகாரத்துக்கும் வந்துவிட்டார்கள். முன்னர் இந்தியாவுக்கு எதிராக எப்படியெல்லாம் கூக்குரலிட்டார்கள். இந்திய சாமான்களை விற்கவே கடைக்காரர்கள் பயப்பட்டார்கள். இப்போ இந்தியாவே இவர்களைக் கூப்பிட்டு செங்கம்பளம் விரித்து கைலாகு கொடுத்து வரவேற்கிறது.அவர்களும் யாருக்கும் எதிராக எதுவுமே இன்னமும் சொல்லவில்லை. நீங்கள் எழுதியவைகளை தமிழர்கள் மறக்கவும் கூடாது. முன்னர் புலிகள் பலமாக இருந்த காலங்களில் காலையில் எழும்பினால் இன்று என்னென்ன மாஜாஜாலங்கள் செய்துள்ளார்கள் என்று தமிழ்நாதத்தை புரட்டி எடுப்போம். அதே மாதிரி இன்று சிங்கள மக்கள் மட்டுமல்ல தமிழர்களும் என்பிபி என்னென்ன மாஜாஜாலங்கள் செய்துள்ளார்கள் என்று ஆவலுடன் பார்க்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு செயலும் புலிகள் ஒவ்வொரு தாக்குதல் நடத்தி வெற்றி கண்டது போல உள்ளூர மனம் சந்தோசமடைகிறது. ஒரு தலைவனைத் தேடிக் கொண்டிருக்கும் எமது மக்கள் இவரைத் தேடிப் போவது தவிர்க்க முடியாததாகிறது.அந்தளவுக்கு எமது அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். கீழே வாட்சப்பில் வந்த ஒரு செய்தியை இணைக்கிறேன் பாருங்கள்.காலையில் எழும்பி பார்க்க பிபி தான் எகிறுது. கிளிநொச்சி நகரில் என்னதான் நடக்கிறது*!! *⭕ரணில் விக்ரமசிங்க அரசிடம் சாராயம் விற்பதற்கான அனுமதிப்பத்திரம் வாங்கி அதனை பல கோடி ரூபாக்களுக்கு விற்றதாக பல தமிழ் பேசும் எம்.பிக்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது*. *⭕இந் நிலையில் கிளிநொச்சி நாட்டாமை என்று பெயரெடுத்த சிறிதரன் எம்பியின் கோட்டைக்குள் இவ்வளவு சாராயக்கடைகள் எவ்வாறு வந்தது?* *🟣சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்*…. *A9 வீதி கிளிநொச்சி ஊடாக செல்ல வேண்டிய தேவையின் நிமித்தம் சென்ற போது. வீதி சமிக்ஞைக்கு மேலதிமாக பல பச்சை நிறத்தில் வெள்ளை எழுத்துகளால் ஆன பல பெயர்ப் பலகைகள் காணக் கண்டேன். உற்றுக் கவனித்ததில் அவை யாவும் புதிதாக திறக்கப்பட்டு இயங்கிக்கொண்டு இருக்கும் மதுபான விற்பனை நிலையங்கள் என தெரிந்தது.* *அட என்னடா இது பரந்தன் சந்தி தொடக்கம் அறிவியல் நகர் வரையிலான Bar 9 வீதியில் sorry A9 வீதியில் இத்தனை கடைகளா ? அட இவ்ளோ கடையிலும் போய் வாங்கி குடிக்க அங்க ஆக்கள் வேணுமே டா. என்னங்கடா போட்டிக்கு கடை திறந்தது போல……!* *இதில் முதலாவதாக இருப்பது Bar & Restaurant அதாவது வாங்கி அங்கேயே குடிக்கலாம். இது இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் தான் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகம் மற்றும் ஏனைய கல்வி நிலையங்கள் காணப்படுகின்றது*. *எல்லோரும் அரசியல்வாதிகளை சலுகை பெற்றுவிட்டதாக சொல்லிக்கொண்டு இருக்க, போரால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி Bar ஆல் பாதிக்கப்பட்டுக்கொண்டு இருப்பதையும் எதிர்கால சந்ததிகள் அழிவடைவதற்கு திட்டமிட்ட வகையில் செயற்படுவதையும் பேசவில்லை*. *தேசியம் சுயநிர்ணயம் என்று சொல்லுபவர்கள், திட்டமிட்ட இன அழிப்பு என்று சொல்லுபவர்கள், கருத்துக்களை கோர்த்து அழகாய் பேசி உணர்ச்சி பொங்க பேசுபவர்கள், அரசியல்வாதிகள், அரசியலுக்கு வர இருக்கும் அறிவாளிகள், ஆய்வாளர்கள், சமுக சிந்தனைவாதிகள், அன்மீகவாதிகள் என யாருமே இது பற்றி எதிர்ப்பு தெரிவிக்கவில்லைதெரிவிக்கவில்லை.* *யாரோ சலுகை பெற்றுவிட்டனர் என்றே குறை கூறிக்கொண்டு இருக்கின்றனர். திட்டமிட்டு ஒரு சமுதாயம் அழிக்கப்பட்டுக் கொண்டு இருப்பதை யாரும் சுட்டிக்காட்டவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. இது எல்லா இடத்திலும் இருக்கிறது (Bar) தானே என்பார்கள்.* *ஆனால் பாடசாலைக்கு அருகில் கோவிலுக்கு அருகில் பல்கலைக்கழகங்களுக்கு அருகில் அமைப்பதற்கு யாரும் அனுமதிப்பதில்லை.* *மாறாக பிரதேச மக்களின் எதிர்ப்புகளே இடம்பெற்று இருக்கிறது. அடுத்தவரை குறை கூறி, சாடி பழகிவிட்டோமே தவிர எமது சமுதாயம் சீரழிந்து போவதை தடுப்பதும் இல்லை எதிர்ப்பதும் இல்லை. சுய லாப அரசியல்வாதிகளுக்கு பின்னால் நின்று அவர்களை வளர்த்துக்கொண்டே செல்கின்றீர்கள்.* *இது மாற்றப்படல் வேண்டும். “இரத்து செய்யப்பட்ட அனுமதிகள்” என செய்திகளை பார்த்து மகிழ்ந்தோம். அது செய்தி மட்டும் தான் நிஜத்தில் இல்லை என்பது போலவே குறித்த மதுபான விற்பனை நிலைய நடத்துநர்கள் சிரிப்பது தெரிகின்றது.* *10 கிலோ மீற்றர்கள் தூரத்திற்கும் உட்பட்ட குறித்த சாலையில் எனது கண்ணில் தென்பட 14 மதுபான விற்பனை நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட்டிந்தது.* *இன்னும் எத்தனை இருக்கின்றதோ தெரியவில்லை. (உள் வீதிகளில்)* *பல்கலைக்கழகத்திற்கு அருகில் Bar & Restaurant அமைக்கப்பட்டு இயங்கிக்கொண்டு இருக்கிறது யாரும் கேட்கவில்லை எதிர்க்கவில்லை. சமுக சேவைகள் திணைக்களமும் அருகில் தான் இருக்கின்றது.* *இது கடந்து செல்லும் விடயமல்ல…..!*!😱😱😱🤔🤔🤔 வாட்சப்பில் வந்தது.
  13. எமது மாணவர்கள் வெளிநாடு போய் படிப்பது போல வெளிநாட்டு மாணவர்களும் இலங்கைக்கு வந்து படிக்க வேண்டும். இதன் மூலம் வெளிநாட்டு நாணயங்களையும் உள்ளே கொண்டுவரலாம்.
  14. நானும் இதே எண்ணத்திலேயே இருக்கிறேன். இதிலே இரட்டை வேடம் போட்ட பலரை வெளியே கொண்டுவர முடிந்துள்ளது. ரஞ்சித் நேரமிருக்கும் போது இந்தக் காணொளியைக் கேட்டுப் பாருங்கள். சிறி அடுத்துவரும் தேர்தலில் தமிழர் பகுதிகளில் என்பிபியும் கணிசமான ஆசனங்களை எடுக்கப் போகுது.
  15. இது நான் இருக்கும் இடத்தில் இருந்து 150 மைல் தொலைவில்.
  16. புதைகுழி கலாச்சாரத்தை தமிழர்கள் மண்ணில் நிறைவேற்றிய அறிமுகப்படுத்திய அம்மையாருக்கு வெளிநாடுகளில் இருந்து வேலைத் திட்டங்கள் கிடைத்துள்ளது போல.
  17. Sweet Sixteen ஐ அந்தக் காலத்திலேயே கொண்டாடி இருக்கிறார்களோ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.