Everything posted by ஈழப்பிரியன்
-
சங்கா?,குத்துவிளக்கா?; தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் இழுபறி
தகவலுக்கு நன்றி.
-
முன்னாள் அமைச்சர்கள் அரச வீடுகளை மீள வழங்க வேண்டும்: காலக்கெடுவும் விதிக்கப்பட்டது
2015 இல் எதிர்க கட்சித் தலைவராக இருந்த சம்பந்தன் ஐயா பதவியை இழந்த பின்பும் கடைசிவரை எந்த வீட்டையும் வாகனத்தையும் கொடுக்கவே இல்லை என்று சொன்னார்கள். இப்போது ஐயா இருந்திருந்தால் நிலமை எப்படி இருந்திருக்கும்?
-
பொதுத்தேர்தலில் எமது நகர்வு குறித்து இரு தினங்களில் அறிவிப்போம் - சிவில் சமூகம்
ஆமை புகுந்த வீடும் இந்தியா புகுந்த நாடும் உருப்படவே மாட்டுது. இலங்கை சனாதிபதித் தேர்தல் தொடர்பான RAW வின் எதிர்வு கூறல் பிழைத்துவிட்டதே,..🤣 தேர்தல் நாள் இரவு கொழும்பில் அதிகமாக ஓடித் திரிந்தது இந்திய தூதரக வாகனங்கள்தானாம். முடிவு இப்படி வரும் என்று தெரிந்தே ரணிலையும் சயித்தையும் ஓரணியில் கொண்டுவர எவ்வளவோ முயற்சித்தார்கள்.தோற்றுவிட்டார்கள்.
-
பொதுத்தேர்தலில் எமது நகர்வு குறித்து இரு தினங்களில் அறிவிப்போம் - சிவில் சமூகம்
வயது வித்தியாசமெல்லோ.
-
"தோஷமும் விரதமும்"
நான் சிறுவனாக இருந்த போது பல நாட்கள் வீட்டாருடன் சேர்ந்து விரதங்கள் இருந்திருக்கிறேன். இப்போது விரதமே இருப்பதில்லை. அதன் முக்கியத்துவம் தெரிந்தும் கண்டு கொள்வதில்லை. நன்றி தில்லை.
-
சங்கா?,குத்துவிளக்கா?; தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் இழுபறி
பொதுவேட்பாளராக களமிறங்குபவர் இனிமேல் எந்த தேர்தல்களிலும் பங்குபெற மாட்டார் என்ற உத்தரவாதத்துடனேயே களமிறக்கப்பட்டார். இதனாலேயே பலரும் பின் வாங்கினார்கள். ஆனாலும் அரசியலில் எதுவும் நடக்கலாம். என்னையா இரவில் விளக்கை அணைத்துத் தானே பழக்கம். இதென்ன சாட்சி வைத்து காதல் பண்ணுற பழக்கம்? வடக்குக்கு பழைய அரச அதிபர் மகேசனுக்கே பதவி கொடுத்துள்ளனர். இவர் மகத்தான சேவை செய்து கொண்டிருந்த காலத்தில் அங்கயனும் டக்கிளசும் அவர்கள் கைக்குள் போட முயன்று முடியாமல் போக அவரை மிகவும் மிரட்டியே வெளியே விட்டார்கள் என்கிறார்கள். இதுபற்றி மேலதிக தகவல்கள் யாருக்கும் தெரிந்திருந்தால் சொல்லலாம்.
-
சிரிக்க மட்டும் வாங்க
எனக்கு வரம்.
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
இது தான் நிதர்சனம். அதை விட்டுட்டு பலம்பெயர் சிங்னளவர் எப்படி இப்படி அனுராக்காக பாடுபட்டு அரசை அமைத்துள்ளார்கள் என்பதெல்லாம் வெறும்கதை. தமிழர்களை போரில் வென்ற கோத்தாவை வெல்லவைக்க வெளிநாட்டு புலம்பெயர் சிங்களவர் போய் வாக்கு போட்டு வெல்ல வைத்ததே சாதனை.
-
விசா பிரச்சினைக்கு அநுர அரசாங்கத்தின் உடனடி தீர்வு.
https://www.facebook.com/1521571824/videos/1940394226458936 சுமந்திரனின் செவ்வி.
-
உருவப்படுமா?
ஆழ்ந்து சிந்திக்க ணே;டிய கவிதை.
-
ராஜ்குமார் ரஜீவின் செவ்வியை கொஞ்சம் கேளுங்கள்.
இவரைப்பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை.அரகலய போராட்டத்தில் முன்நின்றிருக்கிறார்.மிகமிக தெளிவாக பேசுகிறார். இவரின் கதையைக் கேட்டால் செந்தில் தொண்டமான் மேல் கெட்ட கோபம் வருகிறது.
-
விசா பிரச்சினைக்கு அநுர அரசாங்கத்தின் உடனடி தீர்வு.
இது அவர்களால் ஏற்பட்ட தாமதம் அல்ல. ஒரு ஒப்பந்தம் செய்து ஒரு தரப்பால் முறிக்கப்பட்டால் அதற்கு நஸ்டஈடு வழங்க வேண்டும். அவர்களும் பல கோடிகளை முதலீடு செய்து தான் ஒப்பந்தத்தை எடுத்திருப்பார்கள்.
-
விசா பிரச்சினைக்கு அநுர அரசாங்கத்தின் உடனடி தீர்வு.
இவரும் ஒரு போராளி தானே. எமது போராளிகள் எத்தனை எத்தனை இரவு பகலாக சண்டை பிடித்தார்கள்.
-
பெரும் அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதிகள்! தப்பியோடப் போவது யார்....!
உங்கட வாக்கும் பதிஞ்சாச்சோ? நடந்து முடிந்த தேர்தல் பலரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. அடுத்த தேர்தலில் அது இன்னும் வீரியமடையலாம்.
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
ஒருக்கா சொல்லிப் பாருங்க அப்புறமா பாருங்க. நல்ல செய்தி என்றால் எங்களுக்கும் சொல்லுங்க. பறவாயில்லையே. ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்பார்கள். நீங்க 3 வருடத்துக்கு இழுத்திருக்கிறீர்களே. பலே கில்லாடி தான்.
-
பெரும் அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதிகள்! தப்பியோடப் போவது யார்....!
இது எற்கனவே தொடங்கிவிட்டது.
-
விசா பிரச்சினைக்கு அநுர அரசாங்கத்தின் உடனடி தீர்வு.
இதற்குள் எத்தனையோ கோடி கைமாறப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். தலையை பிடித்துள்ளார்கள்.இனி யார் யார் உள்ளுக்கோ? ஆனாலும் செய்த ஒப்பந்தத்தை எப்படி முறிப்பார்கள் என்று தெரியவில்லை. நீங்கள் போகும்போது நிலமை எப்படி இருந்தது? அண்மையில் எனது குடும்ப நண்பரொருவர் போனார். கேட்டதற்கு ஒரு மைல்வரை நிற்கவேண்டி வந்ததாக கெட்ட வார்த்தைகளால் திட்டினார்.
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
இந்தி திரிகளை மனைவி பிள்னைகளுக்கு காட்டுங்கள். அவர்களும் ஆகா என்ரை மனிசன் எங்கடை அப்பா மந்திரியோ ஏதோ ஒரு பெரிய ராஜதந்திர பதவி கிடைக்கப் போகுதென்று ரொம்ப ரொம்ப சந்தோசப்படுவாங்க. முகப்புத்தகம் வாட்சப்பிலும் பகிர்ந்து உங்களை புகழின் உச்சத்துக்கே கொண்டு போய் விடுவார்கள். நினைக்கவே நெஞ்செல்லாம் குளிர்ந்து சந்தோசமாய் இருக்கல்ல.
-
விசா பிரச்சினைக்கு அநுர அரசாங்கத்தின் உடனடி தீர்வு.
இன்று (26) நள்ளிரவு 12.00 மணி முதல் பழைய முறைப்படி விசா வழங்கும் நடைமுறையைச் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது. விசா வழங்கும் நடைமுறை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டமையால் குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இதனை அடுத்து அந்தச் செய்முறையை இரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி, கடந்த 24 மணி நேரத்திற்குள், பழைய முறைப்படி விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் விசா பெறுவதில் சிக்கல் இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் விடுத்துள்ள அறிக்கையில், VFS நிறுவனத்துக்கு விசா வழங்கும் வசதி வழங்கப்பட்டதால், மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். குறிப்பாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் விசா பெறுவதில் சிக்கல் நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி, கடந்த 24 மணி நேரத்திற்குள், பழைய முறைப்படி விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் எளிதாக விசா பெற்றுக்கொள்ள முடியும். வெளிநாட்டிவர்கள் இப்போது ஒன்லைனில் விசா பெறுவதற்கு எளிதாக விண்ணப்பிக்கலாம். இன்று நள்ளிரவு 12 மணிக்கு இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் விசா வழங்கப்படும். மேலும், VFS நிறுவனத்திற்கு இதனை வழங்கியதால் ஏற்பட்ட முறைகேடு குறித்து உடனடியாக தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ள ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்தக் கணக்காய்வின் மூலம் இந்த கொடுக்கல் வாங்கலில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்கப்பட்டு எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/srilanka-new-passport-system-president-order-1727363241
-
உங்கள் தொலை பேசி, கை தவறி கீழே விழுந்தால்... முதலில் நீங்கள் சொல்லும் வார்த்தை என்ன?
சரி இன்றிலிருந்து போன் விழுந்தால் சாணகமே என்று கத்துவோமாக.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேசியதை தலைவருக்குக் கூட சொல்லவில்லை என்று தான் எழுதினேன். நீங்க தான் பின்கதவைத் திறந்துவிட்டுட்டு இப்போ யார்யாரையோ எல்லாம் சாட்சிக்காக இழுத்துக் கொண்டு திரிகிறீர்கள்.
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
எல்லாமே இப்ப பெரியபெரிய கைகளாக இருக்கே.
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
எங்களுக்கு ஆசிரியராகவும் டீன் ஆகவும் இருந்தவர். சிறந்தநிர்வாகியும் கூட ஆகா ஒவ்வொரு பூனைக்குட்டியாக வெளிய வருதே.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
நீங்கள் சொன்ன அத்தனை பேரும் மண்ணுக்காக குரல் கொடுத்தவர்கள்.இவர்கள் இருவரும் எப்போ எங்கோ மண்ணுக்காக குரல் கொடுத்தார்கள்?
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
தேர்தல்களில் நின்றார்கள் வென்றார்கள் சரி. எப்படி கூட்டணிக்குள் உள்வாங்கப்பட்டார்கள்? இது தான் பலரதும் கேள்வி. கட்சிக்காக எத்தனையோ தியாகம் செய்த பலரிருக்க எப்படி கூட்டணியால் களமிறக்கப்பட்டார்?