Everything posted by ஈழப்பிரியன்
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
நல்லதொரு விளக்கம். கையோட கம்மாரிஸ்.அடுத்த தெர்தல் வந்துவிட்டது. இதுவரை தமிழர் கத்தாத கத்துக்களா? நீங்களும் கத்துங்க கத்துங்க.யார் தடுத்தது?
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
முடிந்த தேர்தலை தொட்டு மணக்க மணக்க நாற்றம் தான் வரும். அடுத்தடுத்த தேர்தல்களுக்கு நாளும் குறித்தாகி விட்டது. அதை எப்படி எதிர் கொள்ளப் போகிறார்கள் என்று பிரயோசனமாக பேசலாமே?
-
உங்கள் தொலை பேசி, கை தவறி கீழே விழுந்தால்... முதலில் நீங்கள் சொல்லும் வார்த்தை என்ன?
நான் ஒப் என்று கையை காலை கொடுக்க முயற்சி செய்வேன். கைதொலைபேசி வாங்க முதலே cover and screen protector வாங்கி போட்டுவிடுவேன்.
-
புலம்பெயர் தமிழர்கள் vs புலம்பெயர் சிங்களவர்கள்
தமிழ்மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் ஒரு தலைவனைத் தேடிக் கொண்டிருந்தார்கள். நாட்டில் ஏற்பட்ட குழப்பநிலை கஸ்டம் என்று எல்லாமே சேர்ந்து தற்போதைய அரசியல்வாதிகளை ஒதுக்கவிட்டது. புலம் பெயர்ந்த சிங்கள மக்கள் தாங்களாகவே இருக்கிறார்கள். ஆனால் தமிழர்களை தாங்களாகவே இருக்க இந்தியாவோ இலங்கையோ விடுவதில்லை. கோத்தபையனுக்கும் இதே புலர்பெயர்ந்த சிங்கள மக்கள் வாக்கு போடவென்றே பல லட்சம் செலவு செய்து வாக்குகளைப் போட்டு அழகு பார்த்தார்கள். அந்தநேரம் கொள்ளைக்காரரை கண்ணுக்குத் தெரியவில்லையோ? ஜேவிபியை கண்ணுக்குத் தெரியலையோ? இப்போதும் ரணிலின் பேராசையால்த் தான் அனுரா ஜனாதிபதியாகியிருக்கிறார். எத்தனை வருடம் நீடிப்பார்?அடுத்தடுத்து வருவாரா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
எட்டாப்பழம் புளிக்கும். நீங்க தான் படித்த வாலிபர் சங்கம் என்ற ஒன்றை உருவாக்கலாம். எங்களை இரத்தம் கட்டிபட போகுது என்று ஒரே பேச்சாக கிடக்கு. கொஞ்ச நாளுக்கென்றாலும் என்னை தடை செய்ய மாட்டீர்களா? வீட்டுக்கு வீடு வாசல்படி.
- பலியாடுகள் - நிழலி
-
கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
2016இல் ரம்பும் இதைப்பற்றி கதைத்தார். அவர்கள் கட்சியிலிருந்தே ஆதரவில்லாமல் கைவிட்டுட்டார்.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
ஜிஎல் பீரிஸ் யார் அரசு அமைத்தாலும் ஒரு அமைச்சராக வருவார். ஆனால் தேர்தலில் நிற்கமாட்டார். அந்த இடத்துக்கு இவர் வரலாம்.
-
கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
ஒரே வாங்கில் இருந்தபடியால் நீங்கள் அவர்களாகவே மாறிவிட்டீர்கள். சகல கட்சிகளையும் கலைத்துவிட்டு பொதுக்கட்டமைப்பை கட்சியாக்கி இளையவர்களை உள்வாங்கி ஒன்றாக களமிறங்கலாம்.
-
கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
ஜனாதிபதித் தேர்தலில் ரணிலையும் சயித்தையும் ஒன்றாக்கி அனுராவை தோற்கடிக்க இந்தியா எவ்வளவோ முயற்சி செய்து தோற்றுப்போனது. அடுத்த தேர்தலில் அனுரா கட்சியினரை பெரும்பான்மையாக வரவிடாமல் பண்ண மீண்டும் ரணிலையும் சயித்தையும் ஒன்று சேர்க்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இலங்கை ஜனாதிபதியை மக்கள் தெரிவு செய்யலாம். அவர்கள் எவ்வளவு காலம் பதவி வகிக்க வேண்டும் என்பதை சரவதேசமே முடிவு பண்ணணும். உதாரணம் கோத்தபையன்.
-
கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
வந்தவேலை முடிந்தது தானே என்று சயித்தோடு சேர்ந்து கொழும்பில் இறங்கலாம்.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
தம்பி சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி ஒன்று தயார் என்கிறார்கள். வாழ்த்துக்கள்.
-
கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
கல்லோ கல்லோ தமிழ் கட்சிகள் செய்தி கிடைத்ததோ?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அப்பப்ப கள்ளுத் தவறணைகளிலும் தானாகவே போய் நிற்குமாமே?
-
சிந்தனைக்கு சில படங்கள்...
நானும் வந்து ஒருவருடம் கட்டட திருத்த வேலைகள் செய்தேன். மதியம் இதே மாதிரித்தான் வரிசையில் இருந்து சாப்பிடுவோம். நம்மவர்கள் எப்போதும் ஒன்றாகவே இருந்து சாப்பிடுவதை பலரும் வியந்து பார்த்திருக்கிறார்கள்.
-
நேபாளம் சென்றார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச !
கோத்தபையனுக்கு நாளாந்தம் 120 கொமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்குவதாகவும் எண்ணிக்கையில்லா வாகனங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்களே? இதுபற்றி யாருக்காவது விபரங்கள் தெரியுமா? அனுராவின் காதுகளில் இவைகளைப் போட்டுவைத்தால் நல்லது. எப்படியும் தகவல்களை எடுத்திருப்பார் என எண்ணுகிறேன்.
-
தமிழர்களுக்கான சமஷ்டி தீர்வை வழங்காமல் உண்மையான மாற்றம் சாத்தியமில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புரிந்துகொள்ளவேண்டும் - பா.உ கஜேந்திரகுமார்
புதிய ஜனாதிபதியுடன் எப்படி என்ன பேசலாம் என்று கூட்டாக சேர்ந்து கலந்தாலோசியுங்கள். ஆளாளுக்கு ஒரு அறிக்கை விட்டால் யாருடைய அறிக்கையை ஜனாதிபதி பார்த்து நடவடிக்கை எடுப்பது?
-
புவிசார் அரசியல் போட்டியில் சிக்கிக்கொள்வதற்கு இலங்கை விரும்பவில்லை - ஜனாதிபதி அனுரகுமார
மாறாவிட்டால் போர்க்குற்ற விசாரணைக் காடடி மாறவைப்பார்கள். அப்புறம் என்ன ஒண்ணொண்ணா கழட்டி அம்மணமா நிற்க வேண்டியது தான்.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
அடுத்த தேர்தல் வந்து கதவைத் தட்டுகிறது. போய்ப் பார்த்து கவனமாக திறவுங்கள். கடேசி மட்டும் தூங்காதீங்க.
-
கனவு பலிக்குமா?
ஆசைப்படுவது தப்பில்லையே? ஒவ்வொரு ஜனாதிபதி வரும் போதும் இதே மாதிரி ஆசைகள் வந்து போகின்றன.
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
கொள்ளைக்காரருக்கு மறுபெயர் பிரபுக்களோ?
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
இதைவிட தெளிவாக எழுத முடியாது. உங்கள் நேரத்தை ஒதுக்கி எழுதியதற்கு நன்றி.
-
அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள்
ஜேவிபி தனது முத்திரையை குத்த வேண்டுமென்றால் கொஞ்ச பேரை உலுப்பியே தீரவேண்டும். மக்களையும் மகிழ்விக்கத் தானே வேண்டும்.
-
அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள்
கொள்ளையடிக்க முடியாதென்றால் எப்படி ஏன் ஒட்ட வேண்டும்.விலகியே இருப்பம்.
-
ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம்!
https://www.facebook.com/share/v/D47evwySY7dz95KU/?mibextid=UalRPS அனுரவின் பதவியேற்பு உரை தமிழில்.