Everything posted by ஈழப்பிரியன்
-
என் கொறோனா அனுபவம்
அனுபவப் பகிர்வுக்கு நன்றி. சிலருக்கு என்ன தான் நடந்தாலும் ஆங்கில சிகிச்சைகளில்த் தான் நம்பிக்கை.
-
அண்ணா அறிவாலயம்.
பள்ளி வயது ஆணோ பெண்ணோ அவர்களே வெட்கப்படும் அளவுக்கு செய்திருப்பார்கள். ஆண் அவுத்துவிட்டுடவான். பெண் அமுக்கிப் போடுவாள்.
-
அண்ணா அறிவாலயம்.
பப்பாவில ஏத்தி விழுத்துறதென்றே முடிவெடுத்தாச்சு போல.
-
அண்ணா அறிவாலயம்.
எனக்கு தெரிந்தவரையில்லை, அப்படியும் சொய்வார்களா, நல்ல காலம் தப்பிவிட்டோம் உடையார் இது வாங்கிக் குடிப்பவர்களுக்கல்ல. களவாக மரமேறி இறக்குபவர்ளுக்கு. எங்காவது ஒதுக்கு புறமாக உள்ள பனை தென்னையில் எந்தநாளும் களவாக கள் இறக்குவார்கள். இதற்காக முட்டிக்குள் நஞ்சு கலப்பார்கள் மரம் ஏற மட்டை கட்டியிருந்தால் மட்டையில் உள்ள கயிறை அறுத்து நுனியில் விடுவார்கள். நீங்க தானே வாங்கிக் குடித்த ஆளாச்சே.ஆனபடியால் பயம் இல்லை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கொழும்பான் ,தனிக்காட்டுராஜா
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அடப்பாவி அதுக்கு ஒழித்தா இருக்க வேணும்?
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அன்புத்தம்பி பாடல்களை இணைக்கும் போது ஓரிரு வரிகளை தமிழில் எழுதி இணையுங்கள். நன்றி.
-
அண்ணா அறிவாலயம்.
இருக்கும் இருக்கும். ஊரில சும்மா பார்த்தாலே போச்சு. கோதாரி விழ கந்தையருக்கு வெறியிலை எதை கடிச்சு துப்பவேணுமெண்ட விவஸ்தையே இல்லாமல் போச்சு...😂 கந்தையருக்கு பூவரசம் இலை😎 குமாரசாமிக்கு நொச்சி இலை கட்டடிச்சு களவாய் கள்ளடிக்கிற இடத்திலை சுத்திவர நொச்சிமர காடு உந்தக் கோதாரிகளுக்காகத் தான் அமத்தி வாசித்தேன்.
-
அண்ணா அறிவாலயம்.
இளம்வயது பள்ளிவயது பயமறயாத வயது ஒவ்வொரு நாளும் ஒரு சரித்திரம்.
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (இறுதிப் பகுதி)
சில நாய்கள் வடைசிவரை துரத்தும்.சரி இந்த நாய் போகுதென்றால் அடுத்த நாய் துரத்தும். நாய்க் கோஸ்டிகளுடன் ரொம்ப கஸ்டம். ஊரில யாரையும் சமாளிக்கலாம்.பெரிசுகளை சமாளிக்க முடியாது. அச்சொட்டாக எழுதுறபடியால் எனக்கென்னவோ புங்கையரின் சொந்தக் கதையாகவே தெரிகிறது.
-
அண்ணா அறிவாலயம்.
சிறி ஏன் பாதை மாற்றியவர் என்றால் குரல் மாறும் போது குணமும் மாறும்.அக்கா தங்கச்சியா பார்த்தவங்களெல்லாம் வித்தியாசமாக தெரியும். நியதி இப்படி இருக்க சிறி மட்டும் என்ன விதிவிலக்கா?
-
அண்ணா அறிவாலயம்.
என்ன கந்தையர் எல்லாவற்றையும் அவுத்து போட்டு ஆடிலாமோ?வெட்கமாயிருக்கு. பெரியவர் சொல்லுறது 1)புகை 2)தண்ணி இதை எல்லாம் எழுத ஊரில ஒதுக்கி வைத்த மாதிரி யாழிலும் ஒதுக்கி வைத்துவிடுவார்களோ என்று ஒரு பயம். என்ன துல்பன் நீங்களும் சுற்றிசுற்றி சுப்பரின் கொல்லைக்குள் தான் நிற்கிறீர்கள். தம்பி எவ்வடம்? எந்த பள்ளி?
-
அண்ணா அறிவாலயம்.
யாழ் இந்துக் கல்லூரி ஆண்கள் கல்லூரி என்றபடியால் உங்கள் கண்களில் படவில்லை.
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
தொடருமா?முற்றுமா?
-
அண்ணா அறிவாலயம்.
உயிரும் கொடுப்பான் தோழன்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பிழைக்கத் தெரிந்த மனிசன். அடப்பாவி. நிறைய இளைஞர்கள் போய் சேரப் போறாங்களே.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன்.
-
அண்ணா அறிவாலயம்.
வீட்டுக்கு வீடு வாசல்படி.
-
அண்ணா அறிவாலயம்.
ஆமாம் சுவி பள்ளியில் இருந்து யாழ் நோக்கி போகும் போது நகைக்கடைகள் தொடங்குமிடத்தில் இடதுபக்கமாக 100-200 மீற்றர் போனால் இடதுகை பக்கமாக வாசிகசாலை வரும்.
-
அண்ணா அறிவாலயம்.
ஊரில ஒரு பிரச்சனை சின்னன் சிறிசுகள் ஏதாவது குழப்படி என்றால் அப்பா அம்மா வீட்டுக்காரருக்கு மட்டுமல்ல ஊரவனுக்கே பதில் சொல்ல வேண்டும். தெருவீதிகளில் வைத்து சாத்தியும் விட்டுடுவாங்கள். இது தவறான எண்ணம். ஜேம்ஸ் பாண்ட் படங்கள் அப்படியான படங்கள் இல்லை. உலகத்தில் பல இடங்களுக்குப் போயிருந்தும் இதுவரை இந்தியா போகவில்லை. சுகமாக இருந்தால் மனைவியை கோவில்குளம் என்று அழைத்துப் போக விருப்பம்.
-
அண்ணா அறிவாலயம்.
மதியநேர சாப்பாட்டு பொதியுடன் பிளவுஸ் வரை போய் றோஸ் வாங்கி(10 சதம்)சாப்பிட்டிருக்கிறேன்.இன்றுவரை எப்படி ஒரு றோஸ் சாப்பிட்டதில்லை. மொக்னிடம் அடிக்கடி சாப்பிட்டிருக்கிறேன். புட்டும் ரசமும் சாப்பிட்டாலே தனிசுவை.
-
அண்ணா அறிவாலயம்.
இருவரும் என்னை பிழையான வாசிகசாலைக்கு கூட்டி செல்கிறீர்கள்.பள்ளிக்கு பேரூந்தில் வர தொடங்கிய காலத்தில் இருந்து (யாழ்-கோப்பாய் ரூட்) ஆனைப்பந்தியில் இறங்கி நாலவர்வீதி பிரவுண்வீதி நீராவியடிப் பிள்ளையார் கோவிலடி ஊடாகவே நடந்து பள்ளிக்குப் போவோம். நான் சொன்ன வாசிகசாலை கன்னாதிட்டி பக்கமாக உள்ள வாசிகசாலை.
-
அண்ணா அறிவாலயம்.
ஆமாம் சிறி பக்கத்தில் ஒரு கோவில் இருந்தது.சிறிய வாசிகசாலை நிறைய புத்தகங்கள்.ஒரு காலத்தில் படம் அங்கு இங்கு சுற்றுவதை விட வாசிகசாலையே சரண். நீங்களும் உலா வந்திருக்கிறீர்களோ?
-
அண்ணா அறிவாலயம்.
1960களின் கடைசியில் யாழ் இந்துவில் இருந்து வெளியே தலைகாட்ட தொடங்கிய நேரம். முதலாவது பாடம் முடிந்ததும் ஆசிரியர் வெளியேற ஓரிரு நண்பர்களும் நானும் அவர் பின்னாலேயே வெளியேறிவிடுவோம். ஆரம்பத்தில் ஒரு பாடம் இரண்டு பாடமாக தொடங்கி நாளடைவில் அரைநாள் முழுநாளாக மாறிவிட்டது. பாடசாலைக்கு 2 வருடமாக வாகனத்திலேயே வந்து போனேன்.அப்போது மாதம் 10 ரூபா மட்டுமே.வீட்டிலிருந்து வாகனம் வந்துபோகும் பாதை மாத்திரமே தெரியும்.வேறு பாதை தெரியாது. ஒருநாள் படம் பார்க்க போகலாமா என்று நண்பர் கேட்டார்.அவர் மனோகரா திரையரங்குக்கு அருகாமையில் வசிப்பராகையால் யாழில் கூடுதலான இடங்கள் தெரியும். சரி நண்பன் தான் கேக்கிறானே ஆனால் ரிக்கற் எவ்வளவு அதுக்கு என்ன செய்வது என்று யோசிக்க உங்களிடம் காசில்லாவிட்டால் பரவாயில்லை நாளைக்கு தாங்கோ என்றான்.நானும் மற்ற நண்பனும் கோவில் மாடு போல தலையாட்டினோம். ஒரு நண்பனின் தலமையில் பின் தொடர்கிறோம்.பெருந் தெருக்களுக்கு போகாமல் சிறிய ஒழுங்கைகள் வழியாக 10.30 க்குத் தான் படம் தொடங்கும் 10.25 க்கு போனால் சரி என்றான்.நெஞ்சு திக்குதிக்கென்று இருந்தாலும் படம் பார்க்க போகிறோமே என்று சந்தோசமும் ஏதோ சாதனையுமாக இருந்தது. நாங்களும் உள்ளுக்கு போக முதலாவது மணியும் அடிக்கிறது.படம் தொடங்கிய பின் தான் ஒரு ஆங்கிலப் படத்துக்கு வந்திருக்கிறோமே என்று.முதன்முதலாக களவாக பார்த்த படம் ஜேமஸ் பாண்ட் நடித்த கோல் பிங்கர்(Gold Finger) படம் முடிந்து பிற்பகல் முதல்பாடம் இடாப்பு கூப்பிட முதல் போக வேண்டுமே என்று ஓட்டமும் நடையுமாக போய் சேர்ந்துவிட்டோம். அன்று வீட்டுக்குப் போனால் 65 சதம் கொடுக்க வேண்டுமே எப்படி கொடுப்பது?இரவுவரை ஒரு வழியும் தெரியவில்லை. காலையில் குளித்து சாமி கும்பிடும் போது தான் ஒவ்வொரு சாமிப்படத்தின் முன்பும் சில்லரை காசுகள்.ஆகா இதைவிட்டால் வேறு வழியே கிடையாது.பொறுக்கி எடுத்து காற்சட்டை பொக்கற்றுக்குள் போட்டு கிலிங்கி சத்தம் கேக்காமல் ஒரு நுhலாலும் கட்டி கடன் கொடுத்தாயிற்று. இது தான் பள்ளியிலும் வீட்டிலும் தொடங்கிய முதல் களவு.முதல் தவறு செய்வது தான் மிகவும் கஸ்டம்.அப்புறம் அதுவே பழக்கமாயிடும். பின்னர் வின்சர் ராஜா திரையரங்குகளில் 10.30 படம்.காசில்லை அல்லது புதுப்படம் வரவில்லை என்றால் எங்காவது சும்மா சுற்றுவது. ஒருநாள் கஸ்தூரியார் வீதி வழியாக வின்சர் திரையரங்கு நோக்கி போகும் போது நிறைய நேரமிருக்கு என்று அதற்கு முதல் சந்தியில் இடதுபக்கமாக திரும்பி போனால் சிறிய வாசிகசாலை பெயர் அண்ணா அறிவகம். வாசிகசாலை சிறிதாக இருந்தாலும் நிறைய புத்தகங்கள் குறைந்த சனம்.புத்தகங்களுடன் இருந்தில் நேரம் போனதே தெரியவில்லை.படத்துக்கும் நேரம் போய்விட்டது. இதுக்குப் பின் படம் இல்லாவிட்டால் அண்ணா அறிவகம் என்றாகிவிட்டது.நாளாந்தம் போகப் போக படத்துக்கு போகாவிட்டாலும் வாசிகசாலைக்கு போய்வந்தோம். இதுவரை யாழ் பொதுசன நுhலகத்திற்குப் போனதில்லை. ஆனாலும் அண்ணா அறிவகம் மாதிரி ஒரு வாசிகசாலையை இன்னமும் காணவில்லை.அனேகமாக சுவியருக்கு இந்த வாசிகசாலையும் இடங்களும் நன்கு தெரிந்திருக்கலாம்.
-
விட்டுக்கொடுப்பு அகிம்சைவழி ஆயுதவழி மௌனம்.................????
2015இல ராஜபக்ச ஆட்சியைப் பிடித்திருந்தால் எமக்கு சார்பாக பல விடயங்கள் நடந்திருக்கும். அதனால்த் தான் ராஜபக்ச ஆட்சி வர வேண்டுமென இங்கே சொன்னேன்.