goshan_che
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
Everything posted by goshan_che
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
In a 1994 interview with the BBC, the LTTE leader Velupillai Prabhakaranexpressed his regret over the expulsion and stated that the Muslims belonged to Jaffna and would permit their resettlement once normalcy was restored.[20] Later on, in a press conference in Kilinochchi in 2002, the LTTE political strategist Anton Balasingham appeared alongside the LTTE leader and explained that they had already apologized to the Muslims and that the Tamil homeland also belonged to the Muslim people.[21][22]Balasingham also expressed that the expulsion of the Muslims from Jaffna was a political blunder which could not be justified and said that the LTTE leadership would be willing to resettle them in the northern district.[23] 1994 ஆம் ஆண்டு பிபிசிக்கு அளித்த பேட்டியில், எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வெளியேற்றத்திற்கு வருத்தம் தெரிவித்து, முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இயல்புநிலை திரும்பியவுடன் அவர்களின் மீள்குடியேற்றத்தை அனுமதிப்பதாகவும் கூறினார். [20] பின்னர், 2002 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், எல்.ரீ.ரீ.ஈ அரசியல் மூலோபாயவாதி அன்டன் பாலசிங்கம் எல்.ரீ.ரீ.ஈ தலைவருடன் தோன்றி, அவர்கள் ஏற்கனவே முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும், தமிழ் தாயகமும் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமானது என்றும் விளக்கினார். [21][22] பாலசிங்கம் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது ஒரு அரசியல் தவறு என்றும், அதை நியாயப்படுத்த முடியாது என்றும், எல்.ரீ.ரீ.ஈ தலைமை அவர்களை வடக்கு மாவட்டத்தில் மீள்குடியேற்றத் தயாராக இருக்கும் என்றும் கூறினார். [23] பிகு ஆதார கட்டுரைகளை விக்கியின் கால்குறிப்பில் காணலாம். போன வருடம் காலமான தியாகுவை மறந்துவிட்டீர்களே?
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இவர்தான் நிறுவனத்தை ஆரம்பித்தார் என எங்கே யார் கூறினார்கள்? அதேபோல் ஆரம்பத்தில் மோசடி எண்ணத்தில் ஆரம்பிக்கவில்லை, ஆனால் முடிவில் அப்படித்தான் முடித்துள்ளார்கள் என்பதே கூறப்பட்டது.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
தெண்டித்து எடுக்கத்தான் பார்ப்பார்கள், ஆனால் bonafide receiver, promissory estoppel, maxims of equity போன்ற சட்ட நுணுக்கங்களை பாவித்து மாற்றப்பட்டவர்கள் இவற்றை வைத்திருக்க முயல்வார்கள்.
-
தமிழ் இனப்படுகொலையை அங்கீகரித்தது ஸ்கொட்லாந்து நாடாளுமன்று
பகிர்வுக்கு நன்றி நன்னி. உங்கள் இரண்டாம் பதிவில் சொல்லி இருப்பது போல், தற்போது ஒரு MSP யால் பிரேரணை பாராளுமன்றிற்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. அதை அப்படியே பாராளுமன்றும் பிரசுரித்துள்ளது. இதை மேலும் சில உறுப்பினர்கள் ஆதரிக்கிறனர். இது 5 படிமுறையில் 5 இல் 1. அடுத்த படிமுறை பிரேரணைக்கு ஆதரவு திரட்டல், போதிய ஆதரவு திரட்டியதும் தனிநபர் பிரேரணையாக விவாதம், பின் போதிய ஆதரவு இருப்பின் பிரேரணை, பாராளுமன்றின் தீர்மானமாக நிறைவேற்றல் தேவைப்படின் தீர்மான அடிப்படையில் நடவடிக்கை. இந்த 5 இல் 4 வது படியை தாண்டினால்தான் - ஸ்கொட்டிஷ் பாராளுமன்றம் இதை அங்கீகரித்தது என பொருள்கொள்ள முடியும். அப்படி அங்கீகரித்தாலும் அதற்கு சட்ட வலு இல்லை ஆனால் அரசியல் வலு உள்ளது. ஆனால் இது மிக நல்ல ஆரம்பம். தமிழ் அமைப்புகள் இந்த எம் எஸ் பிகளை சூழ்ந்து மேலும் ஆதரவு நல்க வேண்டும். இது நடந்து 2 வாரம் ஆகியும் இப்போது வரை யாழில் கூட பதிவாகவில்லை. அறியதந்தமைக்கு நன்றி.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
அமெரிக்கன் டிரீம் - நிச்சயமாக இது உண்மை. ஆனால் விளிம்புநிலையில் பிறந்து, விளிம்பு நிலையிலே இறப்பவருக்கு ஐரோப்பா, இலங்கை, அமெரிக்கா என்பதே வரிசை என்பது என் கருத்து.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இந்த சிந்தனைக்கோணம் நானும் கேட்டறிந்து கொண்ட ஒன்றேதான். பெரியார் தளைகளை தூக்கி எறிந்து விட்டு வேலைக்கு போ என சொன்னார் என வாசித்த போது அதை மேலோட்டமாக சம உரிமைக்கான அறைகூவல் என்றே கடந்து விட்டிருந்தேன். ஆனால் பின்னாளில் ஒருவர் கண்தெரியாது, அவருக்கு தடவி உணர்ந்து, தொடுகை மூலம் வாசித்து வேலை செய்ய பல கருவிகளை, ஒரு உதவியாளரை அரசு பலத்த செலவில் செய்த விடயத்தில் ஏன் அவருக்கு வீட்டில் இருக்க கொடுக்கும் காசை விட பலமசடங்கு அதிக காசை செலவழித்து வேலை செய்ய வைக்கிறார்கள் என ஆராய்ந்த போது அறிமுகமானதே இந்த dignity of work என்ற விடயம். இதில் ஒரு விடயம் - work itself is dignity, வேலை என்பதே ஒரு மரியாதைதான் என்பது. இதை முழுவதுமாக புரிந்து கொண்ட பின், படி, வேலைக்கு போ, டிரவுசர் போட்டுகோ, நீ பிள்ளை பெறும் இயந்திரம் அல்ல என பெரியார் சொன்னது, அதன் முழுப்பரிமாணத்தில் விளங்கியது. எல்லா புகழும் கிழவன் ஒருவனுக்கே ❤️. என்னை பொறுத்த மட்டில் உலகில் மக்களின் வாழ்க்கைத்தரம் முன்னேறிய நாடுகள் எண்டால் ஸ்கெண்டிநேவிய நாடுகள் தான். அமெரிக்கா, யூகே எல்லாம் பணக்காரர் நாடுகள். 😂 கிரீசில் மைனசில் போகும் என நினைக்கிறேன்😂.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
நிச்சயமாக. எனக்கு நீங்கள் நினைப்பது போல் எந்த பரிட்சயமும் சம்பந்த பட்ட நபர்களிடம் இல்லை. ஒரு பில்லியனுக்கு எத்தனை சைபர் எண்டாலே கால்குலேட்டர் தேடும் ஆள் நான்😂. நாதமுனி இவர்களிருவரையும் பற்றி எழுதியபோதுதான் இவர்கள் இருப்பதே தெரியவந்தது. அட ஒரு தமிழன் பூந்து விளாடுறானே… என கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது. பின்னர் இவர்களின் துறை சம்பந்தமான ஒருவருடன் ஒரு சாதாரண சந்திப்பில் கதைத்தேன். சிலதை சொன்னார். ஆனால் என்னிடம் ஆதாரம் ஏதுமில்லையே? அப்படியே விட்டு விட்டேன். அண்மையில் அதே நபரை சந்தித்தேன்… என்னடாப்பா உங்கட ஆள் ஊரை விட்டே ஓடிட்டான் எண்டார்… யார்ரா அது…ஊரை விட்டு ஓடும் ஒருவர் எனது ஆள்? அவ்வளவு பெரிய சகவாசம் எமக்கில்லையே…எனப்பார்த்தால்….சங்கதி இதுதான். பின்னர் வந்து செய்தியை தேடிப்பார்தால் இது சில மாதங்கள் முன்பே நடந்துள்ளது. சரி யாழில் அறிமுகமான விடயம், யாழில் தெரிய படுத்துவோம் என ஒரு திரி திறந்தேன். தொடர்ந்து எழுதும் எண்ணம் அப்போ அறவே இல்லை. ஆனால் கருத்தாளர் இருவர் எழுதிய பதில்கள் கடந்து போகதக்கன அல்ல என்பதால் - நேரம் நாசமாகியது 😂. பிகு யாழில் நாம் நேரம் செலவழிக்கும் ஏனைய திரிகளின் பயனாக பிளாட்டினமும் தங்கமும் விளைகிறதா என்ன?😂
-
அரசாங்கத்திலும் ஒரு நாமல் இருக்கிறார் நாமல் ராஜபக்ஷ சாடல்
நன்றி தம்பி. டான் பிரசாத் பாவம் அருமையான இனவாதி - யாரோ போட்டு தள்ளி விட்டார்கள் 😂. யாராயிருக்கும் 😎
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
நிச்சயமாக எமக்கு முழுவிடயமுமே தெரியாது என்பதில் மாற்று கருத்தில்லை. அனைவரும் பத்திரிகை செய்தியை வைத்துத்தானே எழுதுகிறோம். ஆனால் ஒரு பொது விதி உண்மை - யூகே போன்ற ஒரு சட்டத்தின் ஆளுமை உள்ள நாட்டில், கள்ளர் கூட தப்பி ஓடத்தேவையில்லை. இது ரஸ்யாவோ இந்தியாவோ தென்னாபிரிக்காவோ இல்லை. இது + மேலே சொன்ன பல விடயங்கள் - ஓ….இது அது இல்ல? என நினைக்க வைக்கிறது. பெட்டிகடை இன்னொரு திரியில் வாழைபழம் திருடியவின் மன்னிப்பும் மகிந்தவின் மன்னிப்பும், ஒன்றுதான் என எழுதினேன். ஏன் என்றால் மன்னிப்பு என்ற concept ஒன்றுதான். அதே போலத்தான் களவும். 30,300,300, 300 பில்லியன் எல்லாமும் களவுதான்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
ஓம்…இதை நான் இலங்கையில் இருக்கும் வரை உணரவில்லை. ஐரோப்பாவிடம் ஒப்பிடும் போது அமெரிக்கா பாரம்பரிய விடயங்களுக்கு (இதை சிலர் பழமைவாதம் என்பார்கள்) அதிகம் முன்னுரிமை கொடுக்கும் நாடு. இந்த family values என்பதும் அதுவே என நினைக்கிறேன். எந்த நிறத்தவரானாலும் ஒரு காங்கிரஸ் உறுப்பினராக வரக்கூட மனைவியை மேடை ஏற்றி நான் ஒரு நல்ல குடும்பஸ்தன் என அங்கே சொல்ல வேண்டும். ஐரோப்பாவிலோ, யூகேயிலோ அப்படி அல்ல. பதவி ஏற்பு, விலகல், அரிதாக நில பிரச்சார மேடைகளில் தோற்றம் அவ்வளவுதான். இதுவேதான் வரியிலும் எதிரொலிக்கிறது என நினைக்கிறேன். யூகேயை பொறுத்தவரை வருமானம் தனிநபரின் உழைப்புக்கு எனும் போது, வரியும் அதற்கே என்பதுதான் நிலைப்பாடு. இந்த வரி விடயத்தில் பெண்கள் விடயத்தை மட்டும் எடுத்து கொள்வோம். Equal pay, gender pay gap என இரு விடயங்கள் உள்ளன. சட்டம் பல ஆண்டுகளாகவே ஒரே வேலைக்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே ஊதியம் என்பதை equal pay உறுதி செய்து விட்டது. ஆனால் gender pay gap என்பது ஒரு நிறுவனத்தில் ஒட்டு மொத்த ஆண், பெண் தொழிலாளர் இடையே இருக்கும் சராசரி ஊதியத்தின் வேறுபாடு. இன்றும் கிட்டதட்ட அனைத்து துறை, நிறுவனங்களிலும் பெண்கள் இதில் பல விழுக்காடு பின்னால்தான் நிற்கிறார்கள். ஏன்? நான் மேலே சொன்ன traditional family values என்ற போர்வையில் அவர்கள் தலையில் வேலைக்கு அப்பாலான பல சுமைகள் இறக்கி விடபடுகிறன. குழந்தை பிறக்கும் வரை தனது career இல் சமவேகத்தில் முன்னேறி வரும் பெண், அதன் பின் மிகவும் பிந்தங்கி போகிறாள். இந்த நிலையில் மனைவிக்கு அவர் உழைத்தால் கிடைக்கும் tax allowance ஐ அப்படியே தூக்கி கணவருக்கும் கொடுத்தால். மனைவி வீட்டில் இருந்து குழந்தைகளோடு லோல் பட, கணவருக்கோ - tax allowance இரெட்டிப்பாகும். “நீ வேலைக்கு போய் கொண்டு வரும் 20,00 ஐ விட நீ வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்தால் எனது 50,000 ற்கு வரும் வரி பாதியாகும். எனவே நீ வீட்டிலே இரு” என சொல்வது இலகுவாக போகும். வேலை என்பது தனியே உழைப்பு மட்டும் அல்ல. அது ஒரு அங்கிகாரம். ஒவ்வொருவரினதும் சுய மரியாதை (self esteem) சம்பந்தபட்டது. அதனால்தான் இந்த குடும்ப-நலன், family value பத்தாம் பசலிதனத்தை எல்லாம் காலால் நெட்டிதள்ளி விட்டு வேலைக்கு போ என் பெண்களை பார்த்து பல தசாப்தங்கள் முன்னே சொன்னார் பெரியார். இது ஒரு கோணம் மட்டுமே, இப்படி இந்த தனி மனிதருக்கான வரி விதிப்பில் பல நியாயங்கள் உள்ளன. ஆணாதிக்கத்தை இன்னொரு வகையில் திணிக்கும் குடும்பம்-சார் கருத்தியலால் அதை வெல்ல முடியாது என்பது எண் கருத்து. ஆண்கள் கூட வீட்டில் இருக்க பெண்கள் வேலைக்கு போகிறார்கள் என்பது விதி விலக்கு. அதை விதி என மாற்றவே இப்படியான வரி-கொள்கைகள் அவசியமாகிறன. மருத்துவம் - கடந்த 2010-2022 இல் இருந்த அரசு அமெரிக்கா போல் ஒரு காப்புறுதி அடிப்படியிலான தனியார் மருத்துவமாக மாற்ற மறைமுகமாக விரும்பினர். ஆனால் மக்கள் ஆதரவு இல்லை. அதை கொள்கை என அறிவித்தால் கூட தேர்தலில் தோல்வி நிச்சயம். ஆகவே அதை கொஞ்சம், கொஞ்சமாக உள்ளிருந்து அழித்தார்கள். அதன் விழைவுதான் நீங்கள் சொல்லுவது. ஆனால் எனக்கே 2022 இன் பின் நல்ல முன்னேற்றத்தை காண முடிகிறது. விரைவில் 2009 இல் இருந்த நிலைக்க்கு சேவை மீளும். ஆனால் இன்சூரண்ஸ் இல்லையா ரத்தம் கக்கி சாவு என இங்கே ஒரு நாளும் விடமாட்டார்கள். சில டோக்குமெண்டரிகள் பார்த்தேன். ரத்தம் உறையவைக்கும் அளவுக்கு மனிதாபிமானம் இல்லாத முறை அமெரிக்கன் மருத்துவ முறை. என்னை பொறுத்தவரை சொல்கிறேன் ஒரு ஏழையாக, விளிம்புநிலை மனிதராக அமெரிக்காவில் இருப்பதை விட இலங்கையில் இருக்கலாம்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இப்படி இது கிரிமினல் வழக்காகி, குற்றம் தீந்தால் - சொந்த சொத்துக்கள் கூட proceeds of crime என எடுக்கப்படலாம். கட்டாயம் எடுக்கப்படும் என்பதில்லை. இதனால்தான் இருப்பது அனைத்தையும் இப்போதே விற்று விட்டு அல்ல மார்கெட்டில் போட்டு விட்டு ஓட்டம் எடுத்துள்ளனர். ஆனால் தலைமறைவு வாழ்க்கைதான் இலக்கு எண்டால் - இலங்கை பாதுகாப்பு இல்லை. யூகே, இலங்கை இடையா நாடுகடத்தும் ஒப்பந்தமுண்டு. கியூபா, ஈக்குவடோர் எண்டு போனால்தான் தப்பலாம். அல்லது பிரேசில் போய் ஒரு லோக்கல் ஆளை கலியாணம் செய்ய வேண்டும்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
தயவு செய்து நான் எழுதாத எதையும், நான் எழுதியதாக கற்பனை செய்ய வேண்டாம் 😂. புரியும் படியாக எழுதத்தான் முடியவில்லை. எழுதியதை வாசித்து புரிந்து கொள்ளவுமா முடியவில்லை. இங்கே பதிந்த செய்தியில் இவர்கள் மீது மோசடி குற்றம் சுமத்த பட்டுள்ளதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. 100% தரவுகள் அடிப்படையிலேயே செய்திகளும் தலைப்பும் பகிரப்பட்டுள்ளது. செய்திக்கு கீழ் வாசகர் எழுதியது அவரவர் கருத்து. உதாரணமாக மகிந்த மீது போர்குற்ற குற்றபத்திரிகை ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் மட்டும் அவர் போர்குற்றம் செய்யவில்லை என நாம் ஏற்க மட்டோம் அல்லவா? இப்போதைக்கு இது ஒரு சிவில் விடயமாகவே கையாளப்படுகிறது. அதற்கு யூகே அரசு இதனால் நாட்டுக்கு வரும் இழப்பை குறைக்க முயல்வது பிரதான காரணம். ஆனால் be rest assured, Serious Fraud Office தகவல் திரட்ட தொடங்கி இருப்பார்கள். இது சிவில் வழக்காக முடியுமா, கிரிமினல் வழக்காகுமா என்பது சஞ்சீவ் ஒத்துழைப்பதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். ஆனால் மக்கள் மன்றில் மகிந்த போர் குற்றவாளி. சஞ்சீவ் மோசடிக்காரன்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
பிரித்தானிய நடைமுறையும் அவுஸ் போலவே. இதன் பின்னால் பெண்ணுரிமை, தனிமனித உரிமை, வேலை செய்ய கூடிய அனைவரையும் வேலைக்கு அனுப்ப தூண்டுவது, இன்னும் பல வலுவான காரணங்கள் உள்ளன. அனைவருக்கும் உழைக்கும் முதல் 12500 க்கு வரி இல்லை. இதில் 1200 ஐ மணமானவகள் marriage allowance என தமக்குள் பரிமாறி கொள்ளலாம். இருவரும் 12500 க்கு மேல் உழைத்தால். எந்த வரி விலக்கும் இல்லை. ஆனால் அனைவருக்கும் கான்சர் சிகிச்சை வரை இலவசமாக அரசு தரும். இந்த வரிப்பணத்தை வைத்து.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
😂 வாப்பண்டே…. ஈஜிப்ட்ல குட்டியும், குட்டித்தனமா சட்டப்படி ஈக்கீங்க வா… ஜாலிய ஒங்களுக்கு ராஜா போல ஈக்க ஏலாம, ஒயில எடுத்து தல ல கொட்டினா, நாங்க என்ன வாப்ப செய்ய😂. சரி சரி இனி சரி ஓயில் கிட்ட போவாம அல்லாஹட காவல்ல சேப்டியா இரிங்க.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
சொல்ல முடியாது. இவர்கள் பின்னால் இன்னும் பலர் இருக்கலாம். அண்மையில் ஒரு கம்பெனி கொவிட் நேரம் பிரித்தானிய அரசுக்கு கிளினிக்கல் சாமான் தரமற்று விற்ற வழக்கில் 120 மில்லியன் அளவு அரசுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என கோர்ட் ஆடர் இட்டது. ஆடர் வர முதல் நாள் நிறுவனம் வெறும் 600,000 சொத்துடன் திவால். கொவிட் அவரசகால விதிகளின் படி எந்த விதியையும் பின்பற்றாமல் - சில நாட்களுக்கு முன் பதியபட்ட கம்பெனியிடம் பிரித்தானிய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. கம்பெனியின் டிரெக்டரின் மனைவி அப்போதைய ஆளும் அரசில் மேல்சபை சீமாட்டி. அவர் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு கம்பெனியை அறிமுகம் செய்துள்ளார். விடயம் வெடித்தவுடனே கம்பெனியில் இருந்த பணத்தை பிள்ளைகள் இதர ஆட்களுக்கு மாற்றி விட்டார்கள். சீமாட்டி பல மில்லியன் பெறுமதியான கப்பல் மாளிகை ஒன்றையும் வாங்கினார். இது வெறும் 120 மில்லியன். 20 பில்லியனினில் (20x1000 மில்லியன்) பல மறை கரங்களும் இருக்கலாம். இன்னும் எந்த வழக்கும் போட பிந்துவது சந்தேகதை வலுக்க வைக்கிறது. பிகு பெட்டிக்கடை கணக்கு இருநூறாயிரமோ, இருபது பில்லியனொக் - வங்குரோத்து மூலம் சுத்துமாத்து பண்ணும் டகால்டி வேலையின் அடிப்படை ஒன்றேதான். இந்த பிணக்கின் பரிமாணம் எமக்கு வாழ்நாளில் பரிச்சயமில்லா தொகைதான். ஆனால் நம்மிடம் பணம்தான் இல்லை, புத்தி இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை விளங்க அது போதும்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
நீங்கள் சொல்வது சரிதான். இது இவர்கள் மட்டும் செய்த பிழை அல்ல. கம்பெனியில் அதிகாரத்தில் இருந்த அனைவரும் சேர்ந்தே, கிடைத்தவரை இலாபம் என்ற அடிப்படையில் உருவ கூடியதை உருவி உள்ளார்கள் என்றே நான் நினைக்கிறேன். இங்கேதான் KPMG யை அனுப்பி விட்டு - இன்னொரு பிரபலமாகாத கணக்காளரை உள்ளே எடுக்கும் போதே இப்படித்தான் இதை முடிப்பது என திட்டமிட்டே இதை செய்துள்ளார்கள் என நினைக்கிறேன். நட்டத்தில் ஓடும் கம்பெனிகள் டிவிடென் கொடுப்பது வழமை என்பதையும் ஏற்கிறேன். ஆனால் கம்பனியின் இருப்பே கேள்விகுறியாகலாம் என்ற போது இப்படி எடுப்பது - சட்டப்படி சரியாகினும், இவர்கள் நோக்கம் என்ன என்பதை அப்பட்டமாக காட்டுகிறது. மீண்டும் சொல்கிறேன்…ஆரம்பத்திலேயே களவு எண்ணத்தில் தொடங்கியதாக நான் நினைக்கவில்லை. ஆனால் கடைசியில் அப்படித்தான் முடித்துள்ளார்கள்.
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
பைரூஸ் இடம் பெயர்ந்து வாழ்ந்த இடம் நுரைச்சோலை என நினைக்கிறேன். வீரகேசரியில் கவிதைகள் எழுதுவார். பண்பாண மனிதர். இப்போ எப்படி இருக்கிறார் என் அறிய ஆவல்.
-
தவெக உட்கட்சி மோதல்
அருமை👏👏😋. Note to self - நாளைக்கு கட்டாயம் வந்து ஒரு லைக் போட வேண்டும்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
அருமை. ஆனால் யாழ் போன்ற பொதுவெளியில் கூட இது வழமையானதுதான், இதுதான் பிழைக்கும் முறை, நேர்மை என்று எழுதுபவர்கள் கையாலாகதோர் என்பதாக அல்லவா எழுதுகிறார்கள். இப்படி ஒருவர் அல்ல, பலரை வெளியிலும் காண முடிகிறது. பிள்ளைகள் படிப்பும் இல்லை, தொழிலும் ஏதும் இல்லை, ஆனால் G Wagon வாங்கி தந்தால் சந்தோசமாக, எப்படி வந்தது என கேட்காமல் வாங்கும் நிலையில் பல பெற்றார்கள் உள்ளார்கள். வியாபாரம் = களவு என்பது போல் ஆக்கி வைத்துள்ளார்கள் எமது சமூகத்தில். இது வெளி பார்வைக்கு அநியாயமாக தெரிந்தாலும், இதில் ஆழமான தத்துவம் உள்ளது. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் individuality உள்ளது. Income tax ஒரு personal tax என்பதால் அதை அப்படி அறவிடுவதே, சரியானது.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இது கொழும்பான் அல்ல, அமர்தியா சென்னால் கூட விளங்க முடியாத விடயம்😂. சிதம்பர ரகசியம் போல - அனுபவிக்கணும், நக்கல் அடிக்கலாம், ஆராயப்படாது. மூளை கரைந்து விடும்😂. உங்கள் எண்ணம் உன்னதமானது👍. வியாபாரத்தில் முதன்மையானது நீங்கள் உங்கள் வேலையாட்களுக்கு காட்டும் பொறுப்பு என்பது இந்த திரியில் தெளிவாக ஒலிக்கிறது என நம்புகிறேன். அடுத்த பாடம் - விடயம் பிசகும் போது, அதை போத்து மறைகாமல் (KPMG ஐ அனுப்பி விட்டு ஒரு சின்ன அமைப்பவை அமர்த்தியுள்ளனர் ) நேர்மையாக அணுகுங்கள். மூன்றாம் பாடம் ஆங்கிலத்தில் captains of industry என்பார்கள் பெரும் தொழிலதிபர்களை. டைட்டானிக் கேப்டன் போல் உங்கள் தவறோ, இல்லையோ கப்பல் மூழ்கினால் கடைசி ஆளாக வெளி ஏறுங்கள். இயலாதோரை தாள விட்டு விட்டு, கள்ளர் போல் கம்பி நீட்டாமல்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இல்லை பலர் வியாபாரம் ஆரம்பிப்பதே வங்குரோத்து அடித்து அதில் (உறவுகளுக்கு மாற்றிய, வெளியால் எடுத்த காசை) ஆட்டையை போடத்தான். நடிகை ஷில்பா செட்டியின் கணவர் குடும்பம் இலண்டன் ஈலிங் ரோட்டில் ஒரே நகை கடையை வைத்து, பல குடும்ப உறுப்பினர் மாறி, மாறி இப்படி செய்துள்ளனர். கடையின் பெயர் ஐந்து வருடம் ஒரு தரம் மாறும். இதில் இழப்பை சந்திப்பது திறைசேரி. அதாவது ஒவ்வொரு குடிமகனதும் வரிப்பணம். சஞ்சீவும் மனைவியிம் இப்படி நோக்கோடு ஆரம்பித்தனர் என நான் சொல்லவில்லை. ஆனால் கடந்த 3 வருடத்திலாவது இவர்கள் dishonesty யாக நடக்க ஆரம்பித்துள்ளனர். எண்ணை வழங்கியவர்கள் மீதி எண்ணையை எடுத்து கொண்டார்கள். கணவனும், மனைவியிம் கடைசி வருடத்தில் 3.5 மில்லியனை டிவிடெண்ட் எடுத்துள்ளனர். தத்தளிக்கும் ஒரு வியாபரத்தை நீங்க முயல்பவர் இப்படியா செய்வார்? பிள்ளைகள் இருவர் பேரில் டிரஸ்டில் எல்லாத்தையும் போட்டு விட்டு. மாடமாளிகையை மார்கெட்டில் போட்டு விட்டு ஓடி விட்டார்கள். ஏமாந்த சோணகிரிகள்? சம்பளம் இல்லாத தொழிலாளர்கள். திறைசேரி - அதாவது என்போன்றோரின் வரிப்பணம். உண்மையான தொழில்முனைவோர் எண்டால் இதை நாட்டில் நிண்டு டீல் பண்ணி இருப்பார்கள். முதலில் தமக்கு இலாபம் ஈட்டி கொடுத்த வேலியாட்களின் கடைசி மாத சம்பளத்தையாவது கொடுத்திருப்பர். இதை களவு எண்டு சொன்னால் ஒயில் கானோடு ஒருவர் வருகிறார், ஐநா சபையை இன்னொருவர் கூட்டி வருகிறார்😂
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இது கொழும்பான் சொன்னது👆.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
அது பட்டயக்கணக்காளரான தனக்கே புரியவில்லை. சில jargons ஐ ஆங்காங்கே தூவி விட்டு எதுவும் விளங்காத மாதிரி இருக்கு எழுத்து என்பதுதான் கொழும்பானின் கொம்பிளைண்டே (கீழே பார்க்கவும்). நீங்க அவரை போய் விளங்கபடுத்த சொன்னா அவர் பாவம் இல்லையா😂? கொழும்பான் மைண்ட் வாய்ஸ் - கொடுமை கொடுமை எண்டு கோவில்ல வந்து முறையிட்டால் - ஐயர் என்னை மந்திரம் ஓத சொல்லுறார்😂.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
அதுக்கெல்லாம் சட்டத்தோட கொஞ்சம் “உராய்வு” இருக்கோணும் கண்டியளே😂. 😂 அது AirPod Pro 3 யால் கூட முடியாது. பாவம் கொழும்பான் ஒரு பட்டய கணக்காளர் அவருக்கு அக்கவுண்டன்சி புரியும் என நீங்கள் நினைத்தால் அது உங்கள் பிழை. யாராவது கணக்கியலோடு உராய்வில் இருப்பவர்களிடம் கேட்டு பார்க்கலாமே😂.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இந்த திரியை வாசித்தால் சஞ்சீவின் எண்ண ஓட்டம்: என் குறைகளை சுட்டி காட்டிய கோஷானையிம், ஜஸ்டினையும் கூட மன்னிசிருவேன். ஆனா நான் நல்லவன்னு சொல்லி, இரெண்டு பக்கமா பொல்லுக்கு மேல் பொல்ல கொடுத்து அடிவாங்க வைக்கிற அந்த ஒரு கருத்தாளரை மட்டும் சாகும் வரை மன்னிக்க மாட்டேன் 😂.