Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. இந்த குற்றச்சாட்டை நீங்கள் மட்டும் அல்ல. வேறு எவரும் கேள்விபட்டிருக்க முடியாது. அது சிலரின் மனதில் உதித்த கற்பனை. புலிகளின் பகுதியில் இருந்து மாற்று இயக்க உறுபினர்களின் குடும்பங்கள் வெளியேறியது உண்மை. குறிப்பாக, 89 இல் இந்தியன் ஆமியோடு சேர்ந்து வெறியாட்டம் ஆடிய பலரின் குடும்பங்கள் இந்தியாவுக்கும் கொழும்புக்கும் போயினர். அதே போல் யாழ் பல்கலைகழக ஆட்கள் சிலரும் ஓடித்தப்பினர். ஆனால் அரசியலில் சம்பந்தபடாத குடும்ப உறவுகளை புலிகள் இம்சித்ததாக தரவுகள் இல்லை. அப்படி இருந்தாலும் கூட, கைது செய்து விடுவித்தார்கள், இந்தியாவுக்கு வள்ளம் எடுத்து அனுப்பி விட்டார்கள் என்பதும், அசாத் செய்ததை போல் கொலை செய்வதும் ஒன்றல்லவே. ஆகவே எப்படி பார்த்தாலும் - அசாத்தை புலிகளோடு ஒப்பீடு செய்து இரெண்டும் ஒன்றே என எழுதியது விஷமத்தனம்தான். இந்தளவுக்கு இறங்கி அசாத்துக்கு ஏன் வெள்ளை அடிக்க வேண்டும்? இப்படி எழுதுவதன் நோக்கம் புலம்பெயர் தமிழ் மந்தைகளை மேற்கின் எதிரிகளாக்கி வைத்திருப்பது. இந்த மந்தைகள் மேற்கில் இருந்த படி மேற்கை எதிர்க்கும் மட்டும், இவர்கள் மூலம் இலங்கையில் இந்திய நலன் பாதிக்கப்படாது.
  2. முதலில் உங்கள் தெளிவான, நீண்ட பதிலுக்கும், மேலே புலிகள் மீது சொல்லப்பட்ட ஆதாரமற்ற கருத்துக்கு நீங்கள் கொடுத்த மறுத்தானுக்கும் நன்றி. உங்கள் இருவரையும் சுட்ட காரணம் உண்டு. 1. யாழை ஆரம்பகாலத்தில் இருந்து வாசிப்பவன் என்ற வகையில் - ஒரு காலத்தில் இங்கே பல புலிகளின் பிரச்சார பீரங்கிகள் இருந்தார்கள். கால ஓட்டத்தில் அவர்கள் குண்டுகள் எல்லாம் புஸ்ஸாகி விட்டது. எனக்கு தெரிய இப்போ புலிகள் மீது தவறான கருத்து எழுந்தால் - நீங்கள் இருவரும்தான் பதில் எழுதுகிறீர்கள். நான் வரலாற்றின் தரவுகள் என சிலதை திருத்தி எழுதுவதுண்டு. எவரும் எழுதாவிட்டால் விசுகு அண்ணை எழுதுவார். நான் என்றும் புலிகளின் ஆதரவாளன் என்ற profile இல் யாழில் எழுதியதில்லை. அவர்கள் தியாகங்களை மதிக்கும் இயக்கங்களுக்கு பொதுவான மனிதனாகிய நான் எழுதுவதை விட, இதற்கான பதில் அவர்களின் ஆதரவாளர்களான உங்களிடம் இருந்து வருவது சிறப்பு என எண்ணினேன். 2. ஆர்பரிக்கவில்லை. ஆனால் நிச்சயம் உங்கள் பக்கம் இருந்தே நானும் இதை அணுகுகிறேன். அதனால்தான் fact-check பண்ண எவரும் இல்லையா என கேட்டேன். அசாத்துக்கு வெள்ளை அடிக்கும் ஆர்வத்தில், புலிகள் சக இயக்கங்கள் மீது செய்த வன்முறை மிகவும் பெருப்பித்து காட்டப்பட்டது மட்டும் இல்லாமல் குடும்பங்களை கைது செய்தார்கள் என்ற நடக்காத தகவல் கூட எழுதப்படுகிறது. புலிகள் மிக மோசமான முறையில் சக போராளிகளை 86-87 இல் அழித்தார்கள் மறுக்கவில்லை. ஆனால் அசாத் எதிர்க்கும் போராளிகளை மட்டும் அல்ல, அவர்களின் ஊர்களையே அழித்தார். இரசாயன குண்டுகள் போட்டார். பல்லாயிரக்கணக்கில் மக்களை சிறை வைத்தார். பல நூறு மனித படுகொலை கூட்டு புதைகுழிகளை நாட்டில் விதைத்துளார் (mass graves). இவை எதையும் புலிகள் செய்யவில்லை. இவை எல்லாவற்றையும் வெள்ளை அடிக்க, புலிகளும் இதையே செய்தார்கள் என்ற தரவு-பிழை கையாளப்படுகிறது. 3. முன்பும் எழுதியுள்ளேன், எம்மை மேற்கு மீதான ஒரு வெறுப்பு நிலையில் வைத்திருக்க எவரோ விரும்புகிறார்கள். அது சீனாவோ ரஸ்யாவோ அல்ல. அவர்கள் எம்முடன் மினெக்கெடுவதில்லை. ஜெய் ஹிந்த்!
  3. எவருக்கும் நிபந்தனை அற்ற ஆதரவு இல்லை ஐயா. நடக்கும் முறையில்தான் ஆதரவும், எதிர்ப்பும். ஆரம்பத்தில் கூத்தாடினாலும், தேர்தல் நெருங்கிய சமயம் அருச்சுனா போக்கில் நல்ல மாற்றம் தெரிந்தது. ஆனால்…வெற்றிக்கு பின்…பழைய பல்லவிக்கு மாறி விட்டார் போல தெரிகிறது.
  4. நாமலின் அட்டோர்னி அட் லா தகமையை எவரும் கேள்வி கேட்கமுடியாது….. ஏன் என்றால் அவருக்காக தனி அறையில் இருந்து பைனல் எக்சாம் எழுதியவர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ்🤣
  5. 1. ஊழியர் இலஞ்சம் கொடுத்து வேலை வாங்கினால் - அதை வழக்கு போட்டு விலக்க வேண்டும். 2. பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் எங்கேயும் திறந்த வீட்டில் குதிரை நுழைவது போல் நுழைய முடியாது. பாராளுமன்ற உறுப்பினர்க்கு பொலிஸ் அதிகாரம் இல்லை. பொலிஸ் கூட சில நடைமுறைகளை பின்பற்றியே உள்ளே நுழையலாம். 3. இவர் ஒட்டு மொத்த யாழ் மாவட்டத்தின் பிரதிநிதி. சாவகச்சேரி தொகுதியில் அதிக வாக்குகளை பெற்றார். அவ்வளவே. நாளைக்கு அருச்சுனா உங்கள் வீட்டு குளியறைக்குள் நுழைந்தால் - அவரை தடுப்பது மக்களை தடுப்பது போல் என நினைத்து அனுமதிப்பீர்களா? எல்லாத்துக்கும் ஒரு முறை இருக்கு.
  6. இதை யாழ்களத்தில் fact-check பண்ண, மறுத்துரைக்க ஒருவரும் இல்லையா? பழையகாய் ஒன்று பச்சை வேறு குத்தியுள்ளார்🤷‍♂️. @valavan @ரஞ்சித்
  7. தெனாலி ராமன் கதைகளை நிஜத்தில் செய்து காட்டுகிறார் அருச்சுனா சேர்🤦‍♂️
  8. சம்பிரதாய பூர்வ அமர்வில் இவர் சபாநாயருக்குரிய wவிக்கை தவறாக அணிந்தார் என தொடங்கிய இவர் மீதான தாக்குதல் இன்று வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. இனவாதம் போன்றே வர்கவாதமும் சிங்களவர்களிடம் ஊறிப்போன ஒன்று. எம்மிடையே சாதி போல.
  9. சும்மா வார்த்தைகளால் சொன்னால் நம்பமாட்டாம்🤣 எனக்கும்தான் அண்ணை. என்ன செய்வது வீடியோவை பார்த்தாச்சு🤣 உங்கள் கணவர் சொல்வது சரிதான். கம்யூட்டர் முன் இருக்கும் posture முக்கியம். போதிய தூரம், உயரத்தில் ஸ்கிரீன், மவுஸ், கீ பாட் ஒருக்க வேணும். அதே போல் படுக்கும் மெத்தை சரியில்லை, பழசாகினாலும் இந்த பிரச்சனை வரும். சித்தாலேப வை போட்டு மெலிதாக அளுத்தி விட்டு சுடுதண்ணி ஒத்தடம் கொடுத்தால் சரி வரலாம்.
  10. எப்போதும் குறுக்காலபோவபர்கள் இருப்பார்கள்தானே🤣. மணிவண்ணனை இதில் சேர்க கஜனின், மணியின் ஈகோ விட்டு கொடுத்தால் நல்லம். கஜன்+சிறி+செல்வம் இப்போ அவர்கள் பின்னால் நிற்பவரோடு இணைந்தாலே போதும். சித்தர், மாம்பழம்களும் வரும்.
  11. இதுபோல இந்த தலைமயிர் வெட்டும் தமிழ் அண்ணையள், கழுத்தை முடக்கி நெட்டி முறிப்பதும் ஆபத்தான வேலை. அண்மையில் ஒரு வீடியோ பார்த்தேன்…நெட்டி முறித்தவுடன் ஆள் அப்படியே…பரலைஸ்ட் ஆகி படுத்து விடுவார். இதன் பின் வழமையான தமிழ் அண்ணையிடம் போவதில்லை என்ற முடிவில் இருக்கிறேன். வேண்டாம் என்றபின்னும் பழக்க தோசத்தில் திருப்பி விட்டால் என்ற பயம்தான்.
  12. மசாஜ் செய்ய எவ்வளவு நல்ல பாகங்கள் உடலில் இருக்க….. சும்மா கொண்டுபோய் கழுத்தை ஏன் கொடுப்பான்….🤣 அதுகுள்ளானதான் முண்நாண் எனப்படும் நரம்பு கோர்வையே போறது. ஏங்கோ எசகு பிசகாக அளுத்தி விட்டது போல.
  13. நிச்சயமாக….. அனுர போன்ற ஒரு இனவாதிக்கு கூட, அவர்களால் பாதிக்கப்பட்ட இனமான தமிழர்கள் மத்தியில் கூட நேரடி, மறைமுக ஆதரவாளர்கள் இருப்பதை கண்டோமே? ஆனால் எவருக்காகவேனும் உண்மையாக போராடினால் - அவர்களை அந்த மக்களில் பெரும்பாலோனோர் காலத்துக்கும் நினைவில் வைத்திருப்பார்கள். ❤️❤️❤️
  14. ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ வெளியேறிய போது…ரஸ்யா ஊடகங்கள் மட்டும் அல்லா…. யாழிலும் சிலர் இப்படித்தானே நீச்சல் அடித்தனர்🤣. படலைக்கு….படலை
  15. உண்மைதான். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் அழித்தாலும், இடித்தாலும் மக்களுக்காக மரணித்தவர்கள் அவர்கள் மனங்களில் வாழ்வாங்கு வாழ்வார்கள். மாற்றான் அழித்தாலும் மாவீரர் கல்லறை மண்ணாய் நிலைக்கும் ஐயா… ஆற்றல் மிகுந்த மாவீரர் கல்லறை மண்ணில் அனலே முளைக்கும் ஐயா…. -புதுவை இரத்திரதுரை-
  16. அவர்கள் நம்பிக்கை படி தீர்ப்பு நாளில் இவரை மீள எழுப்பி, சுவன தீர்ப்பு எழுத முடியாமல் போகும். அல்லா தனக்குரிய exceptional powers ஐ பாவித்து ஏரிக்கப்பட்ட இவரை மீள எழுப்ப வேண்டும்.
  17. இதில் விளங்க என்ன இருக்கிறது. எவ்வளவு மிலேச்சதனமான அரசாக இருந்தாலும்… ஒரு மதச்சார்பற்ற அரசை - மதம்சார் அரசால் பிரிதியீடு செய்வது சம்பந்தபட்ட, படாத அனைவருக்கும் நீண்ட கால நோக்கில் ஆபத்து என்பது என் கருத்து. அதேபோல் ஒரு நாட்டில் தலையிடும் போது, தலையிட்ட பின் அந்த நாடு புதிய மாற்றங்களுக்கு தயாராக இல்லை எனில் தலையிடாமலே விடலாம். இதனால்தான் ஈராக் யுத்தத்தை எதிர்ர்த்தேன். லிபியாவில் தலையிட்டதையும் எதிர்த்தேன். இது ரஸ்யா சிரியாவில் தலையிட்டமைக்கும் பொருந்தும். ஆனால் இப்போ சிரியாவில் தலையிட்டுள்ளது துருக்கி. மேற்கு அல்ல. துருக்கியிடம் நோஸ் கட் வாங்கும் அளவுக்கு கிளி செத்துவிட்டது என்பது சோகம்தான், வாட் டு டூ🤣.
  18. அருச்சுனா - ஊழியரை மிரட்டிய சம்பவத்தை பார்த்தேன். மேர்வின் சில்வா தரவழி போல் நடந்து கொண்டுள்ளார். திருந்துவார் போல் தெரியவில்லை. இவருக்கு வாக்கு போட்டவர்களுக்கு இப்போ buyer’s remorse வந்திருக்கும்.
  19. தமிழ் தேசிய சக்திகளை ஒரே அணியில் திரட்டினார் எண்டாலே பாதி கிணறு தாண்டியது போலத்தான்.
  20. உலகில் எந்த நாடுகள் jus soli எனப்படும் அங்கே பிறந்தாலே-பிரசை கொள்கையை பின்பற்றுகிறன என்ற தகவல் கீழே👇. https://worldpopulationreview.com/country-rankings/countries-with-birthright-citizenship

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.