-
Posts
15724 -
Joined
-
Last visited
-
Days Won
177
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by goshan_che
-
நன்றி. எல்லா ஊடகங்களுக்கும் ஒரு நோக்கு (agenda) இருக்கும். அதே போல் அவர்களின் கதையாடலும் (Narrative) அவர்களின் போஷகர்கள் நலன்பால்பட்டே இருக்கும். அந்த வகையில் பிபிசியின் நோக்கும், கதையாடலும் கூட பிரித்தானிய அரசின் நலன் சார்ந்தே இருக்கும் (அரசாங்கத்தின் அல்ல), குறிப்பாக வெளிநாட்டு விடயங்களில். அதே போல் தமிழோசையில் கடந்த 25 ஆண்டுகளாக ரோவின் கை ஓங்கி இருப்பதும், பணத்தை மிச்சம் பிடிக்கிறோம் என டெல்லிக்கு மாற்றி இதை பிபிசி இன்னும் மோசாமாக்கியதும் உண்மையே. ஆனால் இவற்றை வைத்து ஒட்டுமொத்த பிபிசியையும், குழந்தை கழுவிய நீரோடு குழந்தையையும் தூக்கி எறிவது போல, எறியக்கூடாது. குறிப்பாக பிபிசி direct tax எனும் நேரடி வரி மூலம் fund பண்ண படுவதே - அதை உள்ளூர் அரசியலில் அன்றைய அரசுக்கு பயப்படாமல் ஓரளவு நடுநிலையாக நடக்க வைக்கிறது. இதுதான் பல தீவிர வலதுசாரிகள், தீவிர இடதுசாரிகள் கண்ணை உறுத்துகிறது. பிபிசியையும், direct tax-funding modelஐயும், public service broadcasting principles ஐயும் நாட்டில் இருந்து அகற்றி விட்டால், தத்தம் நிலை சார்ப்பு பிரச்சாரங்களை மட்டும் நம்பி இருக்க வேண்டிய நிலைக்கு மக்களை இட்டு வருவது சுலபமாக இருக்கும் என்பது அவர்கள் கணக்கு. தொலைக்காட்சி ஊடகங்கள், உள்ளூர் அரசியல் விடயங்களை பக்கசார்பின்றி கையாள்வதில் அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உண்டு. இந்த வித்தியாசத்தை தக்க வைப்பதே நான் மேலே சொன்ன பிபிசி, அது எப்படி போசிக்கபடுகிறது, பொதுநலன்சார் ஒளிபரப்பு விழுமியம் என்ற மூன்றும்தான். அவற்றை அகறிவிட்டால் - மெர்டோக்கின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா தான்🤣 (ஏலவே யூகேயின் print media அப்படித்தான் உள்ளது).
-
மேலே தந்த விக்கி இணைப்பில் இன்றும் license fees நடைமுறையில் உள்ள, கண்டம் வாரியாக பகுத்து, பல நாடுகளின் பட்டியல் உள்ளது. ஓம். நான் மேலே சொன்ன public service broadcasting ஐ யூகேயில் இல்லாது ஒழித்து அமெரிக்காவின் Fox, CNN போல குப்பாடி ஊடகங்கள் கையில், ரூபர்ட் மேர்டோக்கின் கையில் தொலைக்காட்சி ஊடகதுறையை கொடுத்து விட வேண்டும் என்பது கன்சவேட்டிவ் கட்சியில் உள்ள ஜேக்கப் ரீஸ் மொக் போன்ற சில அதி வலதுசாரிகளின் நீண்ட நாள் அரிப்பு. பிரெக்சிற் போல இதையும் அதிகம் விளக்கம் இல்லாதவர்களுக்கு மண்டையை கழுவுவதன் மூலம் செய்ய எத்தனிக்கிறர்கள். அதன் ஒரு அங்கம்தான் இந்த லைசன்ஸ் காசு வீண் விரயம் என்ற முன்னெடுப்பு. ஆனால் இதை செய்யமுதல் அவர்கள் பதவி அடுத்த எலக்சனில் போய்விடும் என்பது என் எதிர்பார்ப்பு.
-
டிவி லைசன்ஸ் என்பது ஒரு வகை வரி, ring-fenced, direct taxation. வழமை போல் வரியை திறைசேரிக்கு எடுத்து, பின் அதை எப்படி செலவழிப்பது என அரசு முடிவு எடாமல் (உதாரணம் road tax) - இது நேரடியாக பிபிசிக்கு எண்டு சொல்லி வசூலிக்கப்படும், பிபிசிக்கு கொடுக்கப்படும் வரி. உலகில் பல நாடுகளில் இது வழமைதான். சந்திரிகா ஆட்சியில்தான் இலங்கையிலும் இந்த டிவி லைசன்ஸ் வரி வசூலிப்பது கைவிடப்பட்டது. https://en.m.wikipedia.org/wiki/Television_licence
-
ஓம் ஆனால் நாம் ஒரு போதும் ஒரு நிறுவனத்தின் நம்பகதன்மையை பெற மாட்டோம். காரணம் எமக்கு பின்னால் ஒரு ரிசேர்ச் டீம் இல்லை. எதையாவது தப்பாக சொல்லி வழக்கு என வந்தால் சானலை மூடி விட்டு ஓட்டம் எடுப்போம்🤣. BBC Hardtalk கோட்ட அபய பேட்டி பார்த்திருப்பீர்கள். ஒரு நாலு பேர் இயக்கும் யூடியூப் சானலினால் இப்படி தரவுகளை சேகரித்து, சரி பார்த்து, சட்ட சிக்கல் வராத படி கேள்வி கேட்க முடியாது. கேபிள் டிவி வந்ததும், சினிமா அழிந்து விடும் என்றது போலத்தான், கொமேர்சல் டிவி, யூடியூப்பால் பப்ளிக் புரோட்காஸ்டிங் அழியும் என்பதும். ஆனால் இவற்றுக்கான இடம் தொடர்ந்தும் இருக்கும்.
-
அமெரிக்காவில் தொழில்நுட்பம் இருக்கிறது ஆனால் டிவியில், குறிப்பாக விபரணம் எடுப்பதில் தொழில் சார் நேர்த்தி இல்லை. ஒரே technology எல்லாரிடமும் இருக்கலாம் ஆனால் அதை வைத்து உச்ச output ஐ கொடுக்கும் technical ability ஒரு மனித வலு. அதை பிபிசியில் வைத்திருப்பது போல் அமெரிக்க நிறுவனங்கள் வைத்திருப்பதில்லை. டிஸ்கவரி/ நேஷனல் ஜியோகிரபி, ஸ்மித்சோனியன் சானல்களின் ஒரு flagship விபரணத்தையும், பிபிசியின் அதே போல் ஒரு விபரணத்தையும் போட்டு பாருங்கள் - நான் சொன்ன output இன் தரம் (quality) விளங்கும். அடுத்து தனியார் என்றால் எல்லாவற்றையும் தீர்மானிப்பது லாபம். Profit margin. ஆகவே சில அதீத செலவுகள் செய்து சிலதை செய்ய மாட்டார்கள். காரணம் எவ்வளவுக்கு லாபத்தை கூட்ட முடியுமோ? என்பதே அவர்கள் நோக்கு. யூடியூப்பும் இப்படி ஒரு monetize எனும் பணம் பண்ணுவதின் ஓரங்கமே. ஆனால் பிபிசியின் இயங்குதளமும், நோக்கும் இந்த தளம் அல்ல. யுடியூப் காலத்துக்கு முன்னான மீடியா உலகில், commercial broadcasting, public services broadcasting என அழைப்பார்கள். இ பிபிசி இதில் இரெண்டாம் வகை. இப்படி பிபிசி இருப்பதால்தான் அதனால் மேலே கூறிய சிறப்பான வேலைகளை செய்ய முடிகிறது. அதை இலாபநோக்கு துறையோடு ஒப்பிட கூடாது, முடியாது. அப்படி இருந்தும் இன்றும் Sky TV, BT, Virgin எல்லாவற்றிலும் பார்க்க value for money என்றால் அது பிபிசிதான். பிபிசிக்கு 1 வருடம் கட்டும் காசு, இவர்களுக்கு 3 மாதம் கட்டவே காணுமாய் இருக்கும். இதில் எனக்கு பிடிக்காமல் போக என்ன இருக்கிறது. சீமானின் பேச்சின் முதல் ரசிகன் நான். ஆனால் ஒருவர் பேசுவதை மட்டும் லைவ் ரிலே பண்ணுவது மட்டும் அல்ல, செய்தியின் பின் புலத்தை, வரலாற்று ஆவணங்களை, ஆராய்சி கட்டுரைகளை, தரவுகளை, நேரிடை நேர்முகங்களை என ஒரு செய்தியை நம்பகமாக கொண்டு செல்ல தேவைப்படும் உழைப்பு அபரிமிதமானது. அதை லாபநோக்கு அமைப்புகள் சரியாக செய்யாது.
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
goshan_che replied to goshan_che's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
ஒண்டும் தப்பா எழுதவில்லை தெய்வமே…கதைக்கு கொஞ்சம் ஜனரஞ்சகத்தை கூட்ட ஒரு சுவாரஸ்யமான மனிதர் தேவைப்பட்டார்…அவ்வளவே….🙏🏾 -
நானும் இதை பற்றி அடிக்கடி யோசிப்பேன். நான் மத்தியதர குடும்பத்தில் இருந்து வந்தவன் (நீங்களும் அப்படி என்றே நினைக்கிறேன்). ஆனாலும் இருமாதம் ஒரு முறை இறைச்சி எடுப்பதே அரிதாகவே இருந்தது. ஆனால் வாரத்தில் 3 நாட்கள் கடலுணவு எடுத்தோம். கொழும்பு வந்து வாரம் ஒரு நாள், இரு நாள் என ஆகிய இறைச்சி உண்ணல். இப்போ வாரம் 5 நாளில் வந்து நிற்கிறது.
-
தமிழ் சிறி அண்ணா என்கிற யாழ்களத்தின் “சின்னவர்”!🤣 எனக்கு இவரின் தமிழ் உணர்வை பற்றியும், போராட்டம் மீதான பற்றுப்பற்றியும் வெளி உலகில்தான் முதலில் தெரியும். பின்னர்தான் யாழில் அறிமுகம். இன்னும் அவருக்கு நான் அறியாமுகம். நாங்கள் பிடியாத சண்டையும் இல்லை. நாங்கள் அடிக்காத லூட்டியும் இல்லை. ஊர்கிழவியும், உடான்ஸ் சாமியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான். வாழ்த்துக்கள்👏🏾👏🏾👏🏾. 30 ஆம் 45 ம் ஆண்டிலும் இப்படி வாழ்த்த வேண்டும்.
-
Slingshot என்பது சரியே. Catapult உம் ஆங்கில வார்த்தைதான்.
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
goshan_che replied to goshan_che's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
🤣 பாவம் எண்டு ஒரு கெளரவபாத்திரம் கொடுத்த என்னைதான் வையணும்🤣 -
பெண் முறைப்பாடு : இலங்கை கிரிக்கெட் வீரர் சிட்னியில் கைது
goshan_che replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
ஆஸ்திரேலியாவில் ஆப்பிள் மரத்தில் ஏறி கொப்போடு முறித்ததாக அல்லவா வழக்கு🤣? -
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
goshan_che replied to goshan_che's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
நன்றி அண்ணா. நீங்கள் சொல்வது போல் கஞ்சல்கள் வயிற்றில் சேர்ந்தாலும், மனதில் சேர்ந்தாலும் ஆபத்துத்தான். முதலில் கஞ்சலை உள் எடுப்பதை குறைக்க வேண்டும் அல்லது ஆபத்து நெருங்கும் அறிகுறி தெரிந்ததும் ஆவது உதவியை எடுக்க வேண்டும். -
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
goshan_che replied to goshan_che's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
இதை விட வேறு என்ன அதிகமாக சொல்ல முடியும். கதையை வாசித்து இதை பகிர வேண்டும் என நினைத்ததையே கதையின் வெற்றியாக கொள்கிறேன்🙏🏾. நன்றி. சியாமளனின் இந்த படத்தை பார்த்துப்போட்டு இரெண்டு நாள் பேயறைந்தது போல் இருந்திருக்கிறேன். என்னை ஊக்க்கப்படுத்த சொல்லுகிறீர்கள் என புரிந்தாலும், மூன்றாம் பிறை, Sixth Sense என வித்யாசமான படக்கதைகளை இணைத்து கதைப்பதே சந்தோசமாக உள்ளது🙏🏾. -
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
goshan_che replied to goshan_che's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
பாகம் IV ஐ தவிர்த்து பாகம் III இருந்து நேரடியாக பாகம் V ஐ வாசிக்கவும். பாகம் V ஹைபோகிளைசீமியா ஒரு பொல்லாத விசயம். சாதாரணமாக இருப்பது போல் இருக்கும், ஆனால் உணவையும் மருந்தையும் கிரமமாக எடுக்காது போனால் குருதியில் குளுகோசின் அளவு திடீரென்று, ஹிடின்பேர்க்கின் அறிக்கைக்கு பின்னான அதானியின் நிகர மதிப்பு போல கிடுகிடு என இறங்க தொடங்கி விடும். உடல் வியர்க்கும், நடுங்கும், கடும் கோபம் வரும், ஏன் ஆக ரத்த குளுகோசின் அளவு குறைந்தால் கொலை வெறி கூட வரும். இன்னும் குறைந்தால் கோமாக்கு கொண்டுபோய் ஆளின் கதையையே முடித்து விடும். இதை எல்லாம் தவிர்க்கவேண்டும் என்றுதான் அவன் கோப்பி கடைக்குள் நுழைகிறான். ஆனால் அவனின் லக் அப்படி, கோப்பி கடையில் ஒரு கூட்டம் சனமாக இருந்தது. அந்த நெரிசலில் நிற்க தலையை சுத்தி கொண்டு வந்தது அவனுக்கு. பிரித்தானியரில் என்ன கெட்ட பழக்கம் இருந்தாலும் வரிசையில் நிற்கும் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. ஆனால் இப்போ அந்த நல்ல பழக்கமே அவனுக்கு எமனாக வந்து விடும் போல் இருந்தது. ஒரு வழியாக வரிசையில் முன்னுக்கு நின்றவனிடம் தன் நிலையை சொல்லி, அனுமதி பெற்று இரெண்டு சீனி தூவிய டோநட்களையும் ஒரு கோக் கானையும் வாங்கி கொண்டு மேசையில் போய் அமர்ந்தான் அவன். கோக் குடியாதேங்கோ எண்டு சொல்லுறது இதுக்குத்தான். குளுகோஸ் தண்ணிக்கு அடுத்து ரத்தத்தில் சீனியின் அளவை உடனடியாக கூட்ட கோக்கை விட்டால் வேறு பானம் இல்லை. ….இதைதான் வருத்தம் ஏதும் இல்லாத பிள்ளையள் கூட வாங்கி குடிக்குதுகள். பின்ன ஏன் டயபிடிஸ் வராது….. நினைத்தபடியே…கோக் கானை “டொப்” என மூடி உடைத்து பருக தொடங்கினான் அவன். கோப்பி கடையில் கல்லாவில் நின்றவனை நினைக்க நினைக்க அவனுக்கு கோவம் பற்றி கொண்டு வந்தது. என்ன அசிரத்தை இது? ஏதோ இலவசமாக தருவது போல் இருந்தது அவனின் பாவனையும் நடந்து கொண்ட முறையும். முந்தி எல்லாம் இந்த நாட்டில் இப்படி இல்லை. முன்பு யூகேயில் கஸ்டமர் சேர்விஸ் நன்றாக இருக்கும். இப்போ?…பச்…. அவனை பார்த்தால் உக்ரேன் காரன் போல இருந்ததது. உக்ரேன்காரர் உக்கல் சனம், நிறவெறி பிடித்தவர் என யாழ்களத்தில் முருகர்சாமி அண்ணை எழுதியது ஏனோ அவனுக்கு நியாபகம் வந்தது. கிட்டதட்ட ஒரு இருபது நிமிடம் ஆகி இருக்கும். கோக் கான் முக்கால்வாசி தீர்ந்து விட்டிருந்தது. ஆனாலும் ஓடர் பண்ணிய டோநட்டை இன்னும் காணவில்லை. “ஹலோ ஆம் ஐ கெட்டிங் மை டோ நட் டுடே, ஓர் டுமோரோ”? கொஞ்சம் சத்தமாகவே உக்ரேன்காரனை டோநட் இன்றா அல்லது நாளையா கிடைக்கும்? கேட்டான் அவன். ஆனால் அந்த உக்ரேனியனோ (முடிவே கட்டிவிட்டான்) கோப்பி மெசின் அருகில் எதையும் கேளாதவன் போல் நின்று எதையோ கழுவிக்கொண்டிருந்தான். திடீரென திரும்பி பார்த்தால் அந்த உக்ரேனியன் அவனை நோக்கி ஒரு பெரிய கத்தியோடு ஓடி வந்து கொண்டிருந்தான்…….. கண்களில் நிறவெறி ஜொலி ஜொலித்தது…….. ”என்ர பிள்ளையாரே, முருகர்சாமி அண்ணை உவங்களை உக்கல் எண்டு சொன்னது சரிதான்” என ஒரு கணம் அவன் திகைத்து நின்றாலும்……. மறுகணமே அவனின் உடலில் அதிரீனலீனின் “தப்பியோடு அல்லது சண்டையிடு” பொறிமுறை வேலை செய்ய தொடங்கி இருந்தது. உக்ரேனியன் கொண்டு வரும் கத்தியோ பெரிது…வேறு வழியில்லை, ஒரு நல்ல கனமான மரக்கதிரையை தூக்கி கொண்டு அந்த உக்ரேனியனை நோக்கி பாய்ந்தான் அவன். —————————————— அப்போதுதான் டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ், அவனின் பிரான்சில் இருந்து வருவிக்கபட்டிருந்த தம்பிக்கும், டாக்டர் பிரணவணுக்கும் சீசீடிவி படங்களை போட்டு காட்டி முடித்திருந்தார். தம்பிக்கு ஏதோ விளங்கியது போலவும் இருந்தது ஆனால் விளங்காதது போலவும் இருந்தது. கேள்வி குறியோடு டாக்டரின் முகத்தை பார்த்தான் தம்பி. மொழி பிரச்சனையை விளங்கி கொண்ட டாக்டர், ”ஐ வில் எக்ஸ்பிளைன் டு ஹிம் இன் ஹிஸ் ஓன் லாங்குவேஜ்”…….. என பிலிப்சுக்கு சொல்லியபடி தம்பியிடம் தனது புலம்பெயர் கொச்சை தமிழில் பேச தொடங்கினார். சீசீடிவி பார்தனிங்கள்தானே…சும்மா டோநட் எடுத்து கொண்டிருந்த அவர போட்டு நல்லா அடிச்சு வச்சிருக்கிறார். இதுக்கு ஒரு ரீசனும் இல்லை. பொலிஸ் அன் புரொவோக்ட் அட்டாக் எண்டு சொல்லினம்….. அதுக்கு முதல் மூண்டு அவர்ஸ் காரில இருந்து…போனில கதைச்சிருக்கிறார்…. ஆனால் போனை செக் பண்ணி பார்த்தா அந்த மூண்டு அவர்ஸ்சும் எந்த ஒரு கோலும் கூட வரலேல்ல உங்கட அண்ணாக்கு…. அதுமாரி….சில மாசமா…. ஒவ்வொரு நாள் காலமையிலும், பின்னேரமும் ஒப்பசிட்டா இருக்கிறா ஸ்கூல் வாசலில் வந்து நிண்டிருக்கிறார்….. ஆனா நாங்கள் செக் பண்ணி பார்த்தா உங்கட அண்ணாக்கு பிள்ளையோ, வைவ்வோ கூட இல்லை. எல்லாம் சேர்த்து பார்த்தா எனக்கு இது ஒரு மனசு சரியில்லாத வருத்தம் எண்டுதான் விளங்குது…. இத நான், தொடர்ந்து வெளிநாட்டில தனியாவே இருந்ததால வந்த ஒரு மெண்டல் ஹெல்த் பிரச்சனை என சஸ்பெட்க் பண்ணுறன்…. அதால… உங்கட அண்ணையை செக்சன் பண்ணுற முடிவை எடுக்கப்போறம்…. செக்சன் எண்டால்…? புரியாதவனாக கேட்டான் தம்பி. செக்சன் எண்டால்…. வந்த வருத்தம் மாறும் வரைக்கும் அவரை ஒரு சைகியாடிரிக் கொஸ்பிடலை தடுத்து வச்சிருப்பம். உங்களுக்கு விருப்பம் இல்லாட்டி நீங்கள் அப்பீல் பண்ணலாம். நாளைக்கு ஒரு இண்டர்பிரிட்டரை வச்சு எல்லாத்தையும் வடிவா சொல்லுறன். அவன் இப்போதைக்கு வெளியில் வர வாய்ப்பில்லை என்பதை முடிந்தளவு தன்மையாக சொன்னார் டாக்டர் பிரணவன். என்ன செய்தாலும்….. அண்ணையை பழையபடி மாத்தி தாங்கோ டொக்டர்…. எங்களை எல்லாம் வெளிநாட்டுக்கு எடுத்து ஆளாக்கினது அவர்தான்…. கண்ணீர் புரண்டோட…கை கூப்பினான் அவனின் தம்பி. அப்ப கூட்டத்தை முடிக்கலாம்…… என்ற தோரணையில்……. கையை திருப்பி….. மணிக்கூட்டை வெறித்துப்பார்த்தார் இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ். (யாவும் கற்பனை) முற்றும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபா. ஐந்தாம் பாகம் பற்றிய பார்வையையும் எழுதுங்கள்.🙏🏾 நன்றி சுவை அண்ணா. இப்ப எழுதியதை வாசிதால் சேது விக்ரம் நியாபகம் வருவாரோ?😀 -
பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு ஊடகவியளாலர் சந்திப்பு?
-
எங்கள் வடகொரியாவையும் தாக்கவில்லை. கிம்முதான் பெஸ்டு….பைடன் எல்லாம் புஸ்கு….🤣
-
சின்ன காசில்லைத்தான் ஆனாலும் வருடத்துக்கு £159 தானே? பிபிசியை தனியார் மயப்படுத்தினால் குறைந்தது மாதம் £30 ஆவது கேட்பார்கள். அதில் வரும் அற்புதமான விபரணங்களை 4k யில் பார்க்கவே (frozen planet, blue planet, Serengeti etc) இந்த £159 கட்டலாம். அதை தவிர சிறுவர்களுக்கு, பாடசாலை மாணவருக்கு என பலவிசயம், பிறகு ரேடியோ அதிலும் உள்ளூர் ரேடியோ… தமிழோசை குப்பைதான். ஆனால் மிகுதி உலக சேவை அப்படி அல்ல. பிகு 1. உலக சேவையை முன்னர் லைசன்ஸ் கட்டணத்தில் அன்றி, foreign office காசில்தான் நடத்தினார்கள். கமரென் வந்து அதை நிப்பாட்டினார். ஆனாலும் உலக சேவை தவிர் ஏனைய சேவைகளை வெளிநாட்டில் இருந்து பெற பிபிசிக்கு காசு கட்ட வேணும். 2. பிபிசியை தனியார் மயமாக்கினால் பங்குகளை வாங்கி போடலாம். அவர்களிடம் இருக்கும் கட்டிடம், கொப்பிரைட், ஆவணம், தொழில் நுட்ப வல்லமை உலகில் வேறு எந்த நிறுவனத்திடமும் இல்லை.
-
குருந்தூரில் புத்தர் சிலை நிறுவுதல் தடுத்து நிறுத்தம்
goshan_che replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
மோடி இருந்தால் தமிழர் பகுதியில் புத்த சிலை வைக்க முடியாது என்போருக்கு, சிலை அல்ல விகாரையே வைப்பான்🤣.