Everything posted by goshan_che
-
கிழக்கை காப்பாற்ற வேண்டுமாயின் வடக்கு மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும் - த. சுரேஸ்
சகல தமிழ் தேசிய கட்சிகளும் சேர்ந்து கேட்டால் அம்பாறை திருமலையில் தலா 1 எடுக்க வாய்புள்ளது. அம்பாறையில் இந்த வாய்ப்பு கூட. ஆனால் இந்த முறை தேசிய கட்சிகள் பிரிந்து கேட்பதால், கூடவே பில்லையான் கட்சியிம் கேட்பதால் - வாய்ப்பே இல்லை என நினைக்கிறேன். திருமலையில் புலிகள் இருந்த போது மட்டுமே, மக்கள் ஓரணியில் திரண்டு 2 சீட்டை கடைசியாக எடுத்தனர் என நினைக்கிறேன். பிள்ளையான், கருணா வண்டவாளம் திருமலையில் நன்கு உணரபட்டுள்ளது ஆகவே அங்கு அவர்களுக்கு பெரிய செல்வாக்கு இல்லை. வீடு, சைக்கிள், சங்கு திருமலையில் வீட்டின் கீழ் கேட்கிறார்கள் என நினைக்கிறேன். இதனால் திருமலையில் 2 சீட் கிடைத்கால் அது பெரிய சந்தோசமாக இருக்கும்.
-
கிழக்கை காப்பாற்ற வேண்டுமாயின் வடக்கு மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும் - த. சுரேஸ்
ஓம். பிள்ளையான் வெல்வது உறுதி என நினைக்கிறேன். வியாழனுக்கு சனி மாற்றம் - வேட்பு மனுவில் வேலையை காட்டியதால் - அவர் இல்லை. இந்த முறை ஹிஸ்புல்லா 16 வருடங்களின் பின் முஸ்லிம் காங்கிரசின் மரச் சின்னத்தில் கேட்கிறார். காத்தான்குடி வாக்குகள் லம்பாக விழும் என நினைக்கிறேன். அமீர் அலியிம் கேட்கிறார் ஓட்டமாவடி பக்க வாக்குகள் இவருக்கு விழும். இருவரும் ஒரே அணியில் கேட்டிருந்தால் கிட்டதட்ட 2 பேரும் வருவது உறுதியாகி இருக்கும். ஆனால் பிரிந்து கேட்பதால் 1 மட்டுமே உறுதி. இருக்கும் 5 சீட்டில், பிள்ளையான் 1, தமிழரசு 2, முஸ்லிம் வேட்பாளர் 1 - எஞ்சும் 1 சீட்டையே இப்போ கணிக்க கஸ்டமாக இருக்கிறது, ஆனால் இது முஸ்லிம் ஒருவராக அமையவே வாய்ப்புக்கூட. தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றாக கேட்டிருப்பின் இந்த கடைசி சீட்டை அந்த அணி எடுக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும். வியாழேந்திரனுக்கு போன வாக்குகள் இந்த முறை எங்கே போகும் என யோசித்தால் - இவை தமிழ் வாக்குகள் எனவே முஸ்லிம் வேட்பாளருக்கு போகாது. அதே சமயம் அவர் கட்சி தாவிய பின் அவருக்கு கிடைத்த வாக்குகள். எனவே தமிழ் தேசிய கட்சிகளில் நாட்டம் இல்லாதர்களாக இருக்க வாய்ப்பு அதிகம். எனவே இது பிள்ளையானுக்கும் போக கூடும். சுருக்கமாக 5 வது சீட், தமிழரசு, முஸ்லிம், பிள்ளையான் யாரிடமும் போக கூடும் என நினைக்கிறேன்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
அரசியல் எண்டு வந்தா இனி தினம் ஒரு நினைவு கூரல் மாதம் ஒரு அறிக்கை என இருந்தாதானே மக்கள் நினைவில் வைப்பார்கள்🤣. இதே போல பெரியாருக்கு நேரில் போய் மாலை, சாதி தலைவர் முத்து இராமலிங்கத்துக்கு வீட்டில் வைத்து படத்துக்கு அஞ்சலி செலுத்தியமையும் ஒரு செய்தியை சொல்வதாகவே படுகிறது. இந்த நகர்வுகளின் மூலம் யார் என தெரியவில்லை. விஜை நாம் எவரும் எதிர்பார்க்கா வண்ணம் இயற்கையிலே அரசியல் நுணுக்கம் தெரிந்தவரா அல்லது இப்படி ஒரு ஆள் அல்லது டீம் அவரிடம் இருக்கிறதா என்பது புரியவில்லை. நீங்கள், @வாலி, @பகிடி போல தமிழ் நாட்டு அரசியலை சோசல் மீடியா அலப்பறைகளை தாண்டி அவதானிப்பவர் என்ன நினைக்கிறீர்கள் என அறிய ஆவல். @பாலபத்ர ஓணாண்டிக்கு விஜையினை சூழ இருந்து அட்வைஸ் பண்ணும் ஆட்கள் யார் என்ற முழு விபரமும் தெரியுமாம். நேரம் இன்மையால் இன்னும் எழுதவில்லை. எதுக்கும் ஒரு ரிமைட்டர போட்டு வைப்பம்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
பாவம் 200 ரூபா ஊபிஸ் இலங்கை அரசு நியமித்த பட்டதாரி அபிவிருத்தி அதிகாரிகள் போல், வேலைக்கு போவது மட்டும்தான் வேலை இப்போ அவர்களுக்கு🤣. நம்ம தலைவர் ரேஞ்சே வேற, ஒருகாதை குரு மூர்த்தி கடிக்க, ஒரு காதை லதா கடிக்க, அடிக்கடி வைரமுத்து போனில் வந்து உருட்ட, சொல்புத்தியும் இல்லாமல், சுயபுத்தியும் இல்லாமல் - கடைசியில் “ஒரு கணம் தலை சுத்திடிச்சு” என உண்மையை ஒத்து கொண்டார் 🤣.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
அன்னாரின் பிறந்த தின வாழ்த்துக்களை கூட, விஜை வாழ்த்துச்சொன்னார் என்ற செய்தியின் கீழ்த்தான் அவரின் ரசிகர்கள் பகிர்ந்து மகிழ்கிறார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயம்.
-
தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும்- இரா.சாணக்கியன்
அனுரவோடு தமிழரசு ஐக்கியம் ஆக முதல் சமிக்ஞை கொடுக்கிறார் என நினைக்கிறேன். பரவாயில்லை அப்படியாச்சும் எதையாவது செய்து துலையுங்கோ. ஆனால் வீடு+சைக்கிள்+ சங்கு அம்பாறையில் ஒன்றாக நின்றிருந்தால் பேரம் பேசு வலு இன்னும் கூடி இருக்கும் அல்லவா?
-
கிழக்கை காப்பாற்ற வேண்டுமாயின் வடக்கு மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும் - த. சுரேஸ்
கிழக்கில் ஒரே ஒரு தமிழ் தேசிய கட்சி மட்டுமே போட்டியிடும் என்ற நிலையை உருவாக்க முனையாத உங்கள் தலைமையை முதலில் கேளுங்கள் தம்பி. கிழக்கில் எல்லாரும் சேர்ந்து கேட்டால் திருமலை 1, மட்1, அம்பாறை 1 = 3 தமிழர் சீட் எடுக்கலாம்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
இல்லை இதே போல் யாழில் ரஜனியையும் “சனம்” கிழித்து தொங்கத்தான் விட்டது. அவர்கள் அல்ல அவற்றை வாசித்தும் வாசிக்காதது போல் நடிக்கும் ஓரிருவருக்குத்தான் நடுவில கொஞ்சம் பக்கத்தை காணோம். #மெடுலா ஓப்பலங்கேட்டா # என்னது முட்டை ஆம்லெட்டா🤣
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
ஏன் யாழ்பாணத்தானான உங்களுக்கு தெரியாது என சொன்னால் - உங்கள் பிரதேசவாதம் அப்பட்டமாக தெரிந்து விடும் என்பதால் யூகேயை இழுக்கிறீர்களாக்கும்.🤣 இங்கே முன்பே எழுதியதுதான் வடக்கு கிழக்கின் எந்த ஊரும் என் சொந்த ஊரே. எனக்கே நான் எந்த ஊரவன் என்ற பிரக்ஞை இல்லாத போது உங்களுக்கும் அது தேவையில்லை🤣. தகவல்கள் பிழை என்றால் சுட்டலாம். பொத்தாம் பொதுவில் நான்-கிழக்குமாகாணத்தான், non-கிழக்குமாகாணத்தான் என்ற பிரதேசவாத கதைகளை விட்டு விட்டு.
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
கூட்டமைப்பு பிழை விட்டது என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இதை பிரதேசவாதத்தால் வந்த பிழை - என வேண்டும் என்றே தப்பாக வர்ணித்து அதன் மூலம் வடக்குகிழக்கு தமிழ் மக்கள் மனதில் மேலும் மேலும் பிரிவினையை தூண்டி, ஒற்றுமையை குலைத்து, அவர்கள் பலத்தை மேலும் சிதைக்க உதவியது அதைவிட பெரிய வரலாற்று பிழை. அதில் உங்களுக்கும் ஒரு பங்கு உண்டு. கருணாவுக்குத்தான் வாக்கு போட்டேன் என்கிறீர்கள் - நீங்கள் அம்பாறை வாக்காளர் எனில் பிள்ளையானுக்கு எப்படியிம் போட்டிருக்க முடியாதே🤣. கள்ள வாக்கு போட்டால்தான் உண்டு. ஆனால் அந்த தேர்தலில் அம்பாறையில் பிள்ளையான் கட்சி விலகி கொள்ள அங்கே கருணா கேட்டார். இருவரும் ஒரு துப்பாக்கியின் இரு குழல்கள்தான். நீங்கள் கூட யாழ்களத்தில் கருணாவுக்கு ஆதரவு, பிள்ளையானுக்கு இல்லை என்றெல்லாம் எழுதவில்லை. மட்டு அம்பாறையில் எந்த தமிழ் தேசிய கட்சிக்கும் ஆதரவில்லை. பிள்ளையான், கருணாவுக்கு ஆதரவு என்பதே உங்கள் நிலைப்பாடாக இருந்தது. அதாவது ஸ்டாலின், கோபாலகிரிஸ்ணன் ஆகியோரால் முன் தள்ளபட்ட “கிழக்கு மைய அரசியல்”. அதைத்தான் நீங்கள் ஆதரித்தீர்கள். இப்போ கிழக்கு மைய அரசியல் மையவாடிக்கு போனதும் கருணா அச்சா, பிள்ளையான் கக்கா என புதுக்கரடி விடுகிறீர்கள்🤣. கருணாவும், பிள்ளையானும் கோக்கும் பெப்சியும் போலதான். அடுத்து, கருணா வெல்லவில்லை ஆகவே நானும் அவரும் பொறுப்பல்ல என மெல்ல நழுவ பார்கிறீர்கள் (இதைதான் தமிழகத்தில் நீங்கள் பாவித்த அநாகரீக சொல்லான மொள்ளமாரி என்பார்கள்). நீங்கள் கருணாவுக்கு வாக்கு சேகரிக்கும் முன்பே அவர் எம்பி, பிரதி அமைச்சர், சுதந்திர கட்சி பிரதித்தலைவர். அப்போதும் காணி பிரச்சனை, உங்கள் ஆன்மாவிற்கு நெருங்கிய கல்முனை விடயம் எல்லாமும் இருந்தது? ஒரு கல்லைத்தன்னும் தூக்கிப்போட்டாரா? இல்லை. அப்போ அடுத்த முறை தனியே எம்பியாகி அதுவும் சிங்கள கட்சி எதுவும் சீட் கூட கொடாமல் திரத்தி விட்ட பின், இவர் ஆணி புடுங்குவார் என எப்படி நினைத்தீர்கள். டகால்டி வேலை தானே👇
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
இல்லை உங்கள் எடுகோளே பிழை. 1. நீங்கள் ஏதோ கூட்டமைப்பு கிழக்கில் மொக்குத்தனம் பண்ணியமைக்கு அவர்கள் யாழ்பாணத்தவர் என்பதுதான் காரணம் என்பது போலவும். கிழக்கை மட்டும் அவர்கள் கைவிட்டது போலவும் கதை சொல்கிறீர்கள். இது ஒரு பொய்யாய கதையாடல். False narrative 2. கிழக்கில் என்ன பிழை விட்டதோ அதைத்தான் வடக்கிலும் கூட்டமைப்பு விட்டது. இதில் பிரதேச வஞ்சிப்பு இல்லை. எங்கும் அவர்களுக்கு சுயநலனே பிரதானம். கூட்டமைப்பு மட்டும் அல்ல, சைக்கிள், விக்கி, சங்கு எல்லா கோமாளிகளும்தான். 3. கிழக்கில் கருணா பிள்ளையான் போல வடக்கில் டக்லஸ், கேபி. 4. எவராவது வந்து என்னிடம் எனக்கு வடக்கில் தேசிய கட்சிகள் மீது நம்பிக்கை போய்விட்டது ஆகவே நான் டக்லசை ஆதரிக்க போகிறேன் என்றாலும் என் பதில் மேலே உங்களுக்கு சொன்னதுதான். 5. தேசிய கொள்கையை வரித்து கொண்ட எவரும், விலகி இருக்கலாம், புதியதாக அருச்சுனாவோ, கிருஸ்ணாவோ எவரையும் கொண்டு வர முயற்சிக்கலாம், அருண் தம்பிமுத்து, அங்கயனோடு கூடப்போகலாம், ஆனால் டக்லஸ், கருணா, பிள்ளையான்….இல்லை. அது அடிப்படை கொள்கை விளக்க கோளாறு என்பதைதான் காட்டுகிறது. 6. என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டு அரசியல் வேறு, ஈழ அரசியல் வேறு. சீமானை நான் ஏன் எதிர்கிறேன் என்பதற்கு யாழ் முழுவதும் நான் கூறிய விளக்கம் உள்ளது. 7. இதில் சோகம் என்னவெண்டால் யாழில் எல்லாரையும் புரொக்சி, தேசிக்காயென. நக்கலாக என கூறி விட்டு, கடைசியில் நீங்களே பிள்ளையான், கருணா ஒரு ஆணியையும் புடுங்கவில்லை என்றதும். இப்போ அது சும்மா டிரை பண்ணி பார்த்தோம் என கதை விடுகிறீர்கள். பிள்ளையானும், கருணாவும் முஸ்லிம்களை, சிங்களவரை எதிர்த்து கல்முனை, மேய்ச்சல் தரை எதிலும் ஒரு சிறு தீர்வையாவது பெற்று தருவார்கள் என தாமும் நம்பி, ஏனையோரையும் நம்ப வைத்தோர் - ஒன்றில் தெரிந்தே பொய் கூறினர். அல்லது அடி முட்டாள்.
-
சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் - மறவன்புலவு சச்சிதானந்தன்
இது உண்மையாயின் திருமதி சுமந்திரன் வழக்கு போட வேண்டும். திருச்சபைக்கு வருவதை ஒருவருக்கு வருவதாக சொல்வதும் - அதை அவர்கள் சட்டவிரோதமாக பாவிப்பதாக சொல்வதும் - பொய்யாயின் பாரிய பொய்கள். ஆனால் இப்படி வழக்கு போட்டால் அதை வைத்து ஒரு சைவ-கத்தோலிக்க முறுகலை உருவாக்கி குளிர்காயலாம் என சங்கி ஆனந்தம் நினைப்பதாகவும் இருக்க கூடும்.
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
நான் இப்படி வார்த்தைகளை இந்த திரியிலுமோ வேறு எந்த திரியிலுமோ பயன்படுத்தியதில்லை. ஆகவே நீங்கள் வேறு ஏவரோ ஒரு நாலாம் தர நபருக்கு அவர் இறந்த பின் கொடுத்த 3ம் தர பதில்கள் பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் நான் இந்த திரியில் என்னை இழுத்து சாதி கதை கதைத்வருக்கு கொடுக்க வேண்டிய ஷாட்டை கொடுத்துள்ளேன். நாங்கள் யூகே யில் அல்ல, உப்பு கராஜில் இருக்கும் போதும் இப்படி சாதி திமிர் கதையள் கதைக்கிற ஆட்களை கண்டால் போட்டு மொத்தி போட்டுத்தான் விடுறது. தெருப்பொறுக்கியில் சீமானை காணவில்லை. இரெண்டும் ஒன்ராக இருக்கும் போது ஏன் பிரிவினை🤣. நான் எந்த அரசியல்வாதியையும் தலைவராக ஏற்றதமில்லை வேலை செய்ததும் இல்லை. பிள்ளையான், கருணாவின் பிரசாரகர் மொள்ளமாரி தலைவர்களை பற்றி பேசுவது - இந்த சிரிப்பையும் வாசகர்களிடமே விடுகிறேன்.
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
நீங்கள் மறுபடியும் கூட்டமைப்பு செய்யலாம் நான் செய்ய கூடாதா என நாயகன் டயலாக் பேசினாலும்…. என் பொருள் என் இஸ்டம் என்பதும் உண்மையே ஆனாலும்…. யார் நாவில், எழுத்தில் ஏனைய சாதி, மத (இதற்கான உதாரணங்களை நான் காட்டவில்லை) , இன, பிரதேச மக்கள் பற்றியும், கலப்பின பிள்ளைகள் பற்றியும் எள்ளல், நக்கல், வாதங்கள் சரளமாக பிழங்குகிறது என்பது வாசிப்பவர்களுக்கு புரியும். ஆனால் சாதி கதைகள், வசவுகளை, தெரிந்து கொண்டே, என்னையும் இழுத்து கதைதால் - என் இஸ்டப்படி பொருள் விளக்கம் கிடைக்கும். சனத் ஜெயசூரிய அடிப்பது சிக்சர் ஷொட் சாதிமான்களுக்கு கொடுப்பது சப்பல் ஷாட்.
-
சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் - மறவன்புலவு சச்சிதானந்தன்
ம்ம்ம்…கத்தோலிக்கர்கள் உதவி செய்வதாக, அதன் மூலம் மக்கள் சுய விருப்பில் மதம் மாறுவதாக தன்னும் கேள்விப்பட்டுள்ளேன். தமிழ் கத்தோலிகரிடையே கலியாணம் முடிப்பதாயினும் இந்து மட்டும் அல்ல, பிற கிறிஸ்தவ சபைகளில் கூட இருப்பது அரிது. ஆனால்… தமிழ் புரொட்டொஸ்தாந்தினர் கொஞ்சம் மேட்டிமை மிக்கவர்களாக, வந்தா வா வா, வரலன்னா போ, கம் ஓ கோ சிக்காகோ என்று இருப்பவர்கள். சுமனை எப்படியிம் அடிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் சங்கி ஆனந்தம் பேசுவதாகவே எனக்கு படுகிறது. ஆனால் இந்த, மாதம் 1100 டொலர் வருவது விசாரிக்க படல் வேண்டும். பொய் என்றால் சங்கி ஆனந்தத்தை வங்குரோத்து ஆக்கும் அளவுக்கு வழக்கு போட வேண்டும்.
-
சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் - மறவன்புலவு சச்சிதானந்தன்
நூல் பந்தையே விட்டாலும்🤣
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
கந்தையா அண்ணை பெட்டி வாங்கீட்டார்🤣
-
சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் - மறவன்புலவு சச்சிதானந்தன்
உங்களுக்கு தெரியாதா? சேர் பி - லூதியானா அருணாச்சலம் - ஜலந்தர் பாரதியார் - ஹைபர் -போலான் 🤣 #வந்தேறி🤣 ——- அண்ணை நான் சொன்னது சங்கி-ஆனத்தத்தின் தலைப்பாகை இந்தியாவில் மடாதிபதிகள் கட்டும் ஸ்டைலில் இருப்பதை. பிகு பாரதியார் காசிக்கு போய் வந்த பின் தான் தலைப்பாகை கட்ட தொடங்கினார் என நினைக்கிறேன். வட இந்திய தழுவலாக இருக்கலாம்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
ஒத்து கொள்கிறேன். மொழிவாரி பிரிப்பின் போது தமிழகத்தில் தங்கிவிட்ட, அதன் பின் தமிழகத்தை தன் தாய் நிலமாக, தமிழை தன் இன அடையாளமாக மனதார ஏற்கும் சீமான் ஒரு தமிழரே! சீமானை தமிழர் இல்லை என்பவர்கள் இனத்தூய்மைவாதிகள். அதேபோல் எப்படி விஜை, ஜோச்சப் விஜை என்பது எனக்கு பொருட்டல்லவோ அதே போலத்தான் சீமான், சைமன் என்பதும். ஆனால் தன் சொந்த அடையாளங்களை மறுதலிப்பவர்கள் மீது எனக்கு எப்போதும் சந்தேகம் உண்டு.
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
ம்ம்ம்… இந்த பிளேட்டின் பின் பக்கமும் நல்லாத்தான் இருக்கு 🤣. சம்பந்தம் இல்லாமல் இல்லை, இருவரும் கையில் எடுத்தது இனத்தூய்மைவாத அரசியலை என காட்டவே அந்த டிஸ்கி. நீங்கள் கருணாநிதியை சொருவினால் கூட வழமையான உங்கள் திசை திருப்பும் பாணி என கடந்து போகலாம். நீங்கள் பாவித்தது சாதிய வசவை, தெரிந்து கொண்டே, அதுவும் நான் சீமானை எதிர்ப்பது கருணாநிதி மீதான என் சாதிய பாசத்தால் என்ற தொனியில் - அதுதான் சம்பவமாகி போய்ட்டு🤣. மேலே நீங்கள் கொடுத்த தன்னிலை விளக்கம் எல்லாம் உங்களுக்கும் வாசகர்களுக்குமிடையானது. என்னை பொறுத்தவரை நான் பிரதேசவாதி என கருதும் வகைப்பாட்டுள் உங்கள் செயல்பாடு அடங்குகிறது. அவ்வளவே. இதை வாசகர் சிரிப்பிற்கே விட்டு விடுகிறேன். கூட்டமைப்பு தமிழ் தேசிய அரசியலுக்குள் குளறுபடி செய்கிறது எனவே நான் தமிழ் தேசிய அரசியலை கருவறுக்க உறுதி பூண்ட, அதற்கு துரோகம் இழைத்த, வடக்கு-கிழக்கு பிரிவினையை தொடர்ந்து தூண்டி அதை மேலும் நலிவடைய செய்யும் கருணா, பிள்ளையானை ஆதரிக்கிறேன், ஏனையோரையும் அவர்களுக்கு ஆதரவாக திருப்புகிறேன் என்ற அதி அற்புத கொள்கை முடிவை தலைவர் எடுத்திருப்பார் என நான் நினைக்கவில்லை. அதுசரி…. இப்ப எல்லாம் அவரவர் தம் அம்மணத்தை மறைக்க தலைவரை போர்வை போல போத்தி கொள்வது ஒரு டிரெண்ட் ஆகி விட்டது🤣.
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
உங்கள் care ஐ அல்லது don’t care ஐ வைத்து நான் என்ன செய்யப்போகிறேன். அம்மஞ்சல்லிக்கு பிரயோசனம் இல்லை. கஸ்தூரி பற்றிய திரியில் சம்பந்தமே இல்லாமல் சாதிய வசை சொல்லை பாவித்து, தெரிந்து கொண்டே பாவித்து, அதில் என்னையும் இழுத்து, எனக்கும் கருணாநிதிக்கும் ஒரு சாதிய பாசமோ? என்ற தொனிப்பட நீங்கள் எழுதியதற்கான எதிர்வினையே இதுவரை நடந்தது. அதில் இனதூய்மைவாத, சாதிய வாத, பிரதேசவாத பழைய உதாரணங்களை எடுத்து காட்டும் படி ஆகிற்று. சர்சைக்குரிய சாதிய பதிவு👆
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
நாம் கதைத்து கொண்டிருப்பது பிள்ளையானுக்கு வீழ்ந்த, விடும் வாக்குகள் பற்றி. பிள்ளையானின் அரசியல், அதை நீங்கள் இன்றும்(?) ஆதரிப்பது பற்றியது. இதில் ஏன் கருணாவுக்கு வீழ்ந்த வாக்குகள் எண்ணப்படுகிறன. அப்படியே ஆயினும், முஸ்லிம் ஆதிக்கம், கல்முனை தரமுயர்த்தல் இரெண்டும் கருணா, பிள்ளையானால் தீர்க்கப்பட்டு விட்டதா? ஆகவே உங்கள் ஹீரோக்களும் சீரோக்கள்தான். மற்றையவர் தேசிக்காய்கள் என்றால் உங்கள் ஹீரோக்கள் சுண்டங்காய்கள்🤣. அவர்கள் எலக்சனுக்காக பேசுவதை அப்பாவி பாமர மக்கள் நம்பினால் கூட பரவாயில்லை. ஆனால் படித்தவர்கள் கூட? அப்படியே ஆயினும், மகிந்த இனவாதிதான், இனப்படுகொலையாளந்தான் ஆனால் முஸ்லீம்களின் வாலை வெட்டினார், வீதிகளை புனரமைத்தார் எனவே அவருக்கு நான் பிரச்சாரம் செய்கிறேன் எனும் சிங்கள வாக்காளருக்கும் உங்களுக்கும் ஒரு வேறுபாடுமில்லை. அவர் இனவாதி. நீங்கள் …. இது அந்த சமயம் நீங்கள் யாழில் எழுதியமைக்கு மாற்றாக உள்ளது. அந்த தேர்தலில் பிள்ளையான் மட்டிலும், கருணா அம்பாறையிலும் கேட்டார்கள். நீங்கள் தெளிவாக சொல்லி இருந்தீர்கள்…இந்த முறை உங்கள் வாக்கும், உங்களை சூழ உள்ளோர் வாக்கும் இவர்களில்ளுக்கே என்பதை நீங்கள் உறுதி செய்வீர்கள் என. ஆதாரம் கேட்டு திரியை நீளடிப்பதாயின் அது உங்கள் விருப்பம். எனக்கு இந்த ஆதாரம் காட்டும் விடயத்தில் முன்பு போல் ஆர்வம் இல்லை, அதே போல் யாழில் இப்போ தேடுவதும் கடினமாக உள்ளது - இது மாத்தி மாத்தி எழுதுவோருக்கு வசதியாயும் போய்விட்டது.
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
அவரும் தோற்கடிக்கப்படவேண்டியவரே. நான் அவருக்கும் வாக்கு போட்டிருக்க மாட்டேன். நிச்சயம் சிங்கபூரில் இருந்து டிக்கெட் போட்டு போய் அவருக்கு பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டிருக்க மாட்டேன். தவிரவும் அவரும் மட்டகளப்பு, அவர் வன்கொடுமை செய்ய பெண்ணும், மட்டகளப்பு, அவரை ஆதரித்த உள்ளூர் கட்சியினரும் மட்டகளப்பு வாக்களித்த வாக்காளரும் மட்டகளப்பு எனும் போது இதில் பிரதேசவாதம், மையவாதம் என்ற கோணமே எழவில்லை. இல்லையே…அப்பட்டமாக பிரதேசவாதம் கக்காத தமிழ் தேசிய அரசியலும் செய்யாத பலர் அங்கே தேர்தலில் நின்றார்களே. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லை, சரி வேறு ஒரு தெரிவை எடுக்கலாமே? தென்னிலங்கை கட்சியில் கேட்ட ஒரு தமிழருக்கு போட்லாலாமே? நான் இன்றும் மேடைக்கு மேடை பிரதேசவாதம் கக்குபவருக்குதான் வாக்கு போடுவேப் ஆனால் நான் பிரதேசவாதி இல்லை என்பது நம்பும்படியாகவா இருக்கு? தெரியும். மட்டகளப்பு மாவட்டமும் பெரும்பான்மை தமிழர் பகுதிதான். பிரதர், நான் தமிழ் தேசிய வடையை நியாப்படுத்தவில்லை. அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை . நீங்கள் நன்னா டிரக்கை மாத்த வேண்டாம். தமிழ் தேசிய அரசியல் உதவாது என்ற நிலைப்பாடு = பிரதேசவாதம் என நான் எங்கும் எழுதவில்லை. ஆனால் அப்பட்டமாக செயலில், சொல்லில் இன்றுவரை பிரதேசவாதத்தை எழுப்புவரை, அவரின் கொள்கையை ஆதரிப்பது, இறங்கி வேலை செய்வது, நிச்சயம் பிரதேசவாதம்தான். இது நான் ஹிட்லரின் அனுதாபி, அவருக்கு வாக்கு போடுகிறேன், அவருக்கு வாக்கு போடுமாறு பிரச்சாரமும் செய்கிறேன் ஆனால் நான் நாஜி இல்லை என்பது போல ஒரு நிலைப்பாடு.
-
சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் - மறவன்புலவு சச்சிதானந்தன்
சங்கி ஆனந்தம் சொன்னது சம்பந்தமாக, மெதடிஸ்ட் (CSA, CoE, American Mission) இப்படி ஊருக்குள் போய் மதம் மாற்றுகிறார்களா? நான் அறிய 5ம் வேதம் என கூறப்படும், யெஹோவா சாட்சிகள், பெந்திகோஸ்த் ஆட்கள்தான் இப்படி செய்வது.
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
நீங்கள் மட்டும் அல்ல, கருணாவை பிள்ளையானும்தான் எதிர்கிறார். நிச்சயமாக - பிள்ளையான் இன ஒற்றுமைக்கு, இனத்துக்கு, செய்த அத்தனைக்கும் பிறகு எவர் ஒருவர் அவருக்கு வாக்கு போடுகிறாரோ - அவர் நிச்சயம் பிரதேசவாதிதான். ஒட்டு மொத்த மட்டகளப்பும் அவருக்கு வாக்கு போட்டாலும் அதுதான் உண்மை. மகிந்தவுக்கு பெருவாரியாக வாக்கு போட்டதால் சிங்களவர் இனவாதிகள் இல்லை என வாதிட முடியாதுதானே? அந்த புனர்வாழ்வு கழக பெண்னுக்கு நிகழ்ந்தது, அவர் யாழ்ப்பாண பெண், ஊருக்கு போக விழைகிறார், போகும் வழியில் இல்லையா? இதையே குற்றம் சாட்ப்பட்டவர் ஒரு மட்டகளப்பு பெண்ணுக்கு இதுவரை செய்யவில்லை அல்லவா? இதில் உள்ள பிரதேசவாத கோணம் மெத்த படித்த உங்களுக்கு புரியவில்லை. நம்பீட்டோம். ஆகவே என்னை நீங்கள் மையவாதி என்றும் அழைக்கலாம், மையவாடி என்றும் அழைக்கலாம். நாமிருவரும் பொதுவெளியில் எழுதும், எழுதிய கருத்துகள், எடுத்த நிலைகள் எம்மை யார் என அடையாளம் காட்டும் 🤣. நான் பெத்த ஷாட் ஓ, பெட் ஷீட்டோ… உங்கள் எழுத்துக்கு நீங்கள்தான் பொறுப்பு. Blonde ஐ பழுப்பு என எழுதலாம் நாகரீகமாக…நக்கல் தொனியில் “செம்பட்டை” என எழுதியது …. இப்போ அதுக்கு நீங்கள் கொடுக்கும் விளக்கம்… யாழில் எல்லாரும் பால்குடி என நினக்கிறீர்கள் என நினைக்கிறேன்.