Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'! Mathivanan MaranUpdated: Monday, November 4, 2024, 14:38 [IST] சென்னை: 300 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர்களின் அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்கள் தெலுங்கர்கள்; அவர்கள் இன்று தமிழர்கள் இனம் என சொல்லும் போது எப்பவோ வந்த பிரமாணர்களை தமிழர்களே இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? என்று நடிகை கஸ்தூரி பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆந்திராவில் இருந்து மலம் அள்ள வந்தவர்கள் அருந்ததியர்கள் என பேசிய பஞ்சாயத்தே முடியாத நிலையில் அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள் என பேசியிருப்பது கடும் சர்ச்சையாகி இருக்கிறது. ஆரியர்கள் வருகை தந்தது உண்மை: பிராமணர்கள் பாதுகாப்பு கோரும் ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசியது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி பேசியதாவது: சுதந்திரப் போராட்டத்தில் உயிரைக் கொடுத்தவர்கள் பெரும்பாலானவர்கள் அந்தணர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ் அந்தணர்கள். தமிழர்கள். ஆரிய வந்தேறி.. ஆரிய வந்தேறி என்கிறார்கள்.. யார் ஆரிய வந்தேறி? கைபர் போலன் வழியாக பல மதத்தினர் வந்தாங்க.. அதை எல்லாம் பேச ஆரம்பிச்சா உங்க ஓட்டுதானே குறையும்.. 4,000 வருஷத்துக்கு முன்னாடி வந்ததாக சொல்லப்படுவதைப் பற்றி சொல்றீங்களே.. ஆரியர்கள் இங்கே வருகை தந்த போது ஷத்ரியர்கள் இடத்தில் வன்னியர்கள் இணைந்து கொண்டார்களோ, வைசியர் பாகுபாட்டில் செட்டியார்கள், முதலியார்கள், வேளாளர்கள் இணைந்து கொண்டார்களோ கோவில் பணிகளைச் செய்கிறவர்களில் சிவாச்சாரியார்கள், ஐயர்கள், ஐயங்கார்கள் , பண்டாரங்கள் போன்றவர்கள் இணைந்து கொண்டார்கள். அந்தப்புர சேவைக்கு வந்த தெலுங்கர்கள்: அதை எல்லாம் மறந்துவிட்டு தெரியாமத்தான் கேட்கிறேன்.. 300 வருஷம் முன்னாடி ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிரோ சேவைகள் செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்?. அதனால்தானே தமிழர் முன்னேற்றக் கழகம்னு பெயர் வைக்க முடியமலை.. திராவிடர்கள் பெயர் கண்டுபிடிச்சீங்க.. இவ்வாறு கஸ்தூரி பேசினார். சீமான் போல பேச்சு: நடிகை கஸ்தூரியின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆந்திராவில் இருந்து மலம் அள்ள வந்தவர்கள் அருந்ததியர்கள் என பேசியது சர்ச்சையானது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. தற்போது சீமானைத் தொடர்ந்து தெலுங்கர்களை தமிழ்நாட்டு மன்னர்களின் அந்தப்புர பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் என நடிகை கஸ்தூரி பேசியிருப்பது புதிய பஞ்சாயத்தை கிளப்பிவிட்டிருக்கிறது. https://tamil.oneindia.com/news/chennai/a-new-controversy-erupts-over-actress-kasturis-remarks-about-telugu-people-651735.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி ஒரு தோல்வி பட இயக்குனர் வெறுப்பரசியலை கையில் எடுத்து நல்ல சுக போகமாக இருப்பதை கண்ட மார்கெட் இல்லாத நடிகைக்கும் தானும் அதே போல் வாழ ஆசை வந்துள்ளது.
  2. இந்த கார்டூனிஸ்ட் பாலாவுக்கு horsepower என்பது என்ன என்பதும், கார் இயந்திரங்கள் ஏன் இன்றும் ஹோஸ்பவர் அடிப்படையில் வலு எண்ணப்படுகிறன என்பது தெரியாது என நினைக்கிறேன். ஒரு வண்டியில் ஒத்தை குதிரையை பூட்டி ஓடினால் அது 1 horsepower, அதே வண்டியில் 2 குதிரையை பூட்டி ஓட்டினால் அது 2horsepower. 2>1. ஆனால் நாதக மாதிரி வண்டியில் ஆயிரம் குதிரையை பூட்டினாலும் பலனில்லை, ஏன்னா வண்டிச் சாரதி, காசை வாங்கி கொண்டு நிமிடத்துக்கொரு யூ டர்ன் அடிப்பவர்🤣.
  3. தட் ஊருல உள்ள ரவுடி எல்லாம் என்னை அடிச்சு ஓஞ்சு போய் ஊரக்காலி பண்ணிட்டான் மொமெண்ட்🤣
  4. தட் தம்பி அப்படி ஓரமாய் போய் விளையாடு மொமெண்ட். சீமானை இப்போவெல்லாம் எல்லோரும் லெப்ட் ஹாண்டில் டீல் பண்ணுகிறார்கள்.
  5. பொது நல அறிவிப்பு கற்பிணிகள், இளகிய மனம் படைத்தோர், தம்பிகள் இந்த யூடியூப் வீடியோவிற்கு வந்துள்ள கமென்ஸ்சை வாசிப்பதில் இருந்து தவிர்ந்து கொள்ளவும்🤣.
  6. பெண்களை சீரழித்த நீங்க எதில் அடிபட்டு..? சீமானுக்கு எதிராக விஜய் 'தங்கை' நடிகை விஜயலட்சுமி ஆவேசம் Mathivanan MaranUpdated: Sunday, November 3, 2024, 16:08 [IST] சென்னை: நடிகர் விஜய் லாரியில் அடிபட்டு சாவார் என சாபமிடுகிற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பல பெண்களை சீரழித்தவர்; அவர் எதில் அடிபட்டு சாவார்? என நடிகை விஜயலட்சுமி ஆவேசமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும், திமுகவுக்கு என்ன செய்ய வேண்டும் என திமுகவுக்கு தெரியும்; விஜய் அண்ணனுக்கு என்ன செய்யனும் என அவருக்கு தெரியும்; நீங்கதான் கூமுட்டை மாதிரி அலைந்து கொண்டிருக்கிறீர்கள் எனவும் அந்த வீடியோவில் நடிகை விஜயலட்சுமி காட்டமாக விமர்சித்துள்ளார். விஜய் அண்ணனுக்கு சாபமா?: இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில் நடிகை விஜயலட்சுமி கூறியிருப்பதாவது: என்ன மிஸ்டர் சீமான்? சாபம் எல்லாம் விடுறீங்க? நேற்று விஜய் அண்ணனுக்கு, ஒன்னு ரோட்டோட இந்த பக்கம் இரு; இல்லைன்னா அந்த பக்கம் இரு.. சென்டரில் இருந்தா லாரி அடிச்சு செத்துப் போயிடுவேன்னு சாபம் எல்லாம் விடுறீங்க? உத்தமரா நீங்க?: நீங்க என்ன ரொம்ப உத்தமரா மிஸ்டர் சீமான்? சாபம் எல்லாம் விடுவதற்கு.. நான் உங்க ரூட்டுக்கே வருகிறேன். அண்ணன் விஜய் ஆகட்டும் இல்லை திமுகவாகட்டும்.. கொள்கை ரீதியாகத்தானே தவறு பண்ணி இருக்காங்க.. அதாவது உங்க பிரகாரம் மக்கள் ஒன்றும் சொல்லலை.. நீங்க சொல்லிகிட்டு இருக்கீங்க.. பெண்கள் சீரழிப்பு: So கொள்கை ரீதியாக தவறு பண்றவங்களே லாரி அடிச்சு சாவாங்க அப்படின்னா.. எங்களை மாதிரி பெண்களோட வாழ்க்கையை சீரழிச்சு எங்களை நடுரோட்டுல.... விட்டீங்களே.. நீங்க எது அடிச்சு சாகப்போறீங்க மிஸ்டர் சீமான்? ஆபாச வீடியோ வருதாமே?: முதலில் உங்க கட்சியில் இருக்கிற ஓட்டையை எல்லாம் போய் சரி பண்ணுங்க போங்க.. உங்க கட்சியில் நிறைய ஊழல் நடந்துகிட்டு இருக்காம். அடுத்தாப்ல திருச்சி சூர்யா வந்து உங்க ஆபாச வீடியோ எல்லாம் ரிலீஸ் பண்ணி உங்க மானத்தை வாங்க போறாராம்.. அதை எல்லாம் என்ன என முதலில் போய் பாருங்க.. கூமுட்டை மாதிரி.. : திமுகவுக்கு என்ன செய்யனும் என திமுகவுக்கு தெரியும்.. விஜய் அண்ணனுக்கு என்ன செய்யனும் என விஜய் அண்ணனுக்கு தெரியும். இப்படி எல்லாருக்கும் அவங்க வேலை என்ன என்பது நன்றாகவே தெரியும். தலைவர் பிரபாகரன் கொடுத்த வேலையை ஒழுங்கா பார்க்க தெரியாம காலையில் எழுந்தது முதல் சும்மா பப்ளிசிட்டி செய்து கொண்டு, சபித்துக் கொண்டு நீங்கதான் கூமுட்டை மாதிரி அலைந்து கொண்டிருக்கீங்க.. ஓகேவா? 24 மணிநேரமும் நான் சாபம் விடுறேனே: ஏதோ பெரிய உத்தமர் மாதிரியும் கண்ணகி மாதிரியும் சாபம் எல்லாம் விடாதீங்க.. 24 மணிநேரமும் பெங்களூரில் இருந்து நான் உங்களுக்குதானே சாபம் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன்.. அதனால கொள்கை ரீதியாக தவறு செய்தவங்க லாரி அடிச்சு சாவாங்க அப்படீன்னா நீங்க தமிழ்நாட்டு மக்கள் செ.....ல அடிச்சே சாவீங்க. இவ்வாறு நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/actor-vijayalakshmi-slams-naam-tamilar-chief-seeman-remarks-against-tvk-president-vijay-651607.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel டிஸ்கி அண்ணனின் ஆபாச ஆடியோவை மிமிக்கிரி என முட்டு கொடுத்தது போல், இப்படி ஆபாச வீடியோ வந்தால் அதை AI என முட்டுகொடுக்க வருமாறு, நா.த.க கில்மா பாசறை அறைகூவல் 🤣.
  7. தமிழகத்தில் பெருகி வரும் யாழ்ப்பாணப் பனை! ‘பனைமரக்காடே பறவைகள் கூடே’ என ஒரு திரைப்படப்பாடலில், இலங்கை நாட்டில் உள்ள யாழ்ப்பாணம் பகுதியைப் பற்றி எழுதியிருப்பார், கவிஞர் வைரமுத்து. அந்தளவுக்குப் பெருமை வாய்ந்தவை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த பனை மரங்கள். இவை நம் நாட்டில் உள்ளபனைமரங்களைக் காட்டிலும் சற்றுத் தடித்துக் காணப்படும். தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலை யாழ்ப்பாணப் பனைகள் வளர்வதற்கு ஏற்ற நிலையில் இருப்பதால், பலரும் இம்மரங்களை இங்கு பயிரிட்டுள்ளனர். குறிப்பாக விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் இம்மரங்கள் அதிகளவில் உள்ளன. யாழ்ப்பாணப் பனைமரங்கள் குறித்து, செஞ்சி அருகே உள்ள பூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த பனை விவசாயி விஜயராமனிடம் பேசினோம். “நான் சின்ன வயசா இருக்குறப்போ எங்க பகுதியில இருந்து மரம் ஏறுறதுக்காக நிறையபேர் திருப்புவனம் பக்கம் போவாங்க. எங்கப்பாவும் அடிக்கடி போவார். ஒருமுறை இங்கேயிருந்து நிறையபேர் அப்படிப் போனப்போ, அந்தப்பகுதியில கிடைச்ச யாழ்ப்பாணம் பனை விதைகளை எடுத்துட்டு வந்து, இந்தப்பகுதியில பரவலா விதைச்சு விட்டாங்க. கிட்டத்தட்ட ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயம் இது. அப்போ விதைச்சு வளர்ந்த மரங்கள்தான் இப்ப நின்னு பலன் கொடுத்துட்டுருக்கு. இந்தப்பக்கம் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் யாழ்ப்பாணப் பனைமரங்கள் இருக்கும். என் வயல் ஓரத்துலேயே 300 பனைமரங்கள் இருக்கு. அதுல கிட்டத்தட்ட 200 மரங்கள் யாழ்ப்பாண ரகம்தான். இந்த மரங்கள்ல அதிகமாகப் பதநீர் கிடைக்கும். மாசி மாசத்துல இருந்து ஆனி மாசம் வரைக்கும் சீசன் இருக்கும். சீசன் சமயங்கள்ல பனை விதைகள், பனங்கிழங்கு, பதநீர்னு விற்பனை செய்வோம். பனம் பழங்களைச் சேமிச்சு வெச்சு விதை எடுத்து மண்ணுக்குள்ள புதைச்சு வெச்சா மூணு மாசத்துல பனங்கிழங்குகள் கிடைக்கும். பெரும்பாலும் கிழங்கை நாங்களே ஒரு கிழங்கு மூணு ரூபாய்னு விற்பனை செஞ்சுடுவோம். வியாபாரிகளும் தேடி வந்து வாங்கிட்டுப் போறாங்க. ஆனா, வியாபாரிங்க ஒரு கிழங்குக்கு ஒரு ரூபாய்தான் கொடுப்பாங்க. சீசன் நேரங்கள்ல பதநீர் விற்பனை நல்லாயிருக்கும். மரங்கள்ல சுண்ணாம்பு தடவுன பானைகளைக் கட்டி பதநீர் இறக்குவோம். ஒரு பாளையில ஒரு வேளைக்கு ஒரு லிட்டர்ல இருந்து ஐந்து லிட்டர் வரை பதநீர் இறங்கும். தினமும் ரெண்டு வேளையும் மரம் ஏறுவோம். இந்தப் பகுதிகள்ல நம்ம நாட்டு ரக மரங்களையும் சேர்த்து மொத்தம் ரெண்டு லட்சம் பனைமரங்கள் இருக்கு. நம்ம பனை மரம், அடிப்பகுதியில இருந்து மேல்பகுதிக்குப் போகப்போக மெல்லிசாக இருக்கும். ஆனா, யாழ்ப்பாணப் பனை மரங்கள் அடிப்பகுதியும், மேல் பகுதியும் தடிச்சிருக்கும். நடுவுல மெலிஞ்சுருக்கும். யாழ்ப்பாணப் பனைமரங்களோட ஓலைகள் பூ விரிஞ்ச மாதிரி பார்க்க அழகா இருக்கும்” என்ற விஜயராமன் பனைமரங்களைக் காட்டியபடியே தொடர்ந்தார். “இப்போ நிறைய பேர் பனை விதைகளை வாங்கிட்டு போறாங்க. யாழ்ப்பாணப் பனை விதைகளுக்குக் கொஞ்சம் கிராக்கி அதிகம். யாழ்ப்பாணப் பனை விதைகளை மற்ற விதைகளைவிட ஒரு ரூபாய் அதிகமா வெச்சுத்தான் விற்பனை செய்றேன். போன வருஷம் 200 யாழ்ப்பாணப் பனை மரங்கள்ல இருந்து ரெண்டு லட்சம் ரூபாய் லாபம் கிடைச்சது. எந்தப் பயிர் கைவிட்டாலும், பனை எங்களைக் கைவிடாது” என்றார், விஜயராமன். யாழ்ப்பாணப் பனை விதைகளை அதிகளவில் நடவு செய்திருக்கும் ‘எழில்சோலை’ மாசிலாமணி, “நான், பனை விதைகளை வாங்கலாம்னு போனப்போ ‘யாழ்ப்பாணப் பனை விதைகள்’ இங்க கிடைக்கும்னு விவசாயிகள் சொன்னாங்க. நான் ஆச்சர்யத்தோட பார்க்கவும் அந்த மரங்களைக் காட்டி விளக்கிச் சொன்னாங்க. இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தில் சிறப்பு வாய்ந்த உணவு வகைகளில் பனை சார் உணவுப்பொருள்களுக்கு முக்கியத்துவம் உண்டு. அவங்களோட பாரம்பர்ய உணவு பனை உணவுதான். யாழ்ப் பாணத்துக்குச் சுற்றுலா வர்றவங்களும் பனை உணவுகளை விரும்பிச் சாப்பிடுவாங்க. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1981-ம் வருஷம் 11 மில்லியன் (ஒரு கோடியே பத்து லட்சம்) பனை மரங்கள் இருந்ததாகச் சொல்றாங்க. இலங்கையில் பனை மேம்பாட்டுக்காகப் ‘பனை அபிவிருத்திசபை’ ஆரம்பிச்சுப் பனைத்தொழிலை மேம்படுத்திட்டு இருக்காங்க. அதேமாதிரி தமிழ்நாட்டிலும் பனை பத்தின விழிப்பு உணர்வை அதிகரிக்கணும்” என்றார் அக்கறையுடன். தொடர்புக்கு மாசிலாமணி, செல்போன்: 94436 38545 துரை.நாகராஜன் - படங்கள்: தே.சிலம்பரசன் நன்றி- பசுமை விகடன்- #jaffna #palmyrah https://www.facebook.com/share/p/17rDnXcNKW/?
  8. யாழ். வடமராட்சியில் ஒரு இலட்சம் பனம் விதை நடுகை திட்டம் ஆரம்பம்.! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் கிழக்கு பகுதியில் மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு ஒரு இலட்சம் பனம் விதை நடுகை திட்டம் இன்று (11) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க முன்னாள் தலைவர் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க பொது முகாமையாளர் பிரதம விருந்தினாராக கலந்து கொண்டு பனம் விதை நடுகை திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். மேலும் வாசிக்க….. https://tamilwin.com/article/jaffna-one-lakh-seeds-project-1730543964#google_vignette
  9. பிற்சேர்க்கை பாடலின் இசை, குரல் எல்லாம் அற்புதமாக இருந்தாலும், மூன்றாம் பந்தியில் பாதி+இரெண்டாம் பந்தியில் மீதி என கொத்துப்பரோட்டா போட்டு பாடலில் உயிரையே சிதைத்து விட்டார்கள் 👎👎👎. —————- எனக்கு பிடித்த வர்ஷன் சஞ்சய் சுப்ரமணியத்தினுடையது👇.
  10. பாரதியார் பாடல் என்றாலே கற்கண்டு, அதிலும் இது தேனில் தோய்ந்த கற்கண்டு. பின்வரும் பந்தியை அல்சைமர் நோயுடன், வயோதிபத்துடன் பொருத்தி பார்த்தால் - பாரதி எப்பேற்பட்ட பெருங்கவி என்பது உறைக்கும். அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே அறிகிலாத போது - யாம் அறிகிலாத போது - தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ இயம்பிக் காட்ட மாட்டாயா?
  11. ததேகூ வை சொன்னாலும் பரவாயில்லை. தமிழரசுக்கும் மாவீரருக்கும் என்னையா சம்பந்தம்? சங்கரி உதயசூரியனை மடக்கியதால் ததேகூ வுக்கு வீட்டு சின்னத்தை பாவித்தார்கள். அம்புட்டுத்தே.
  12. https://www.ilakku.org/tamil-govt-cut-c-democratic-tamil-national-alliance-contest-in-trincomalee/?amp திருமலையில் தமிழரசும் சங்கும் இணைந்து வீட்டில் போட்டி. அம்பாறையில் இதே மாதிரி சங்கில் போட்டி போடும் உடன்படிக்கையை சுமன் உடைத்துள்ளார். ஆகவே தனி ஆவர்த்தனம். கஜே யும் சுமனும் ஒரே மாதிரி கிருமிகள். தமிழர் பிரதிநிதிதுவம் இல்லாமல் போவது பொருட்டல்ல - ஏலுமான அளவு வாக்கை கூட்டி தேசியபட்டியலில் ஒரு சீட் எடுப்பதுதான் குறி.
  13. சீமானின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றுவதாலும், பெரியாரை அவரின் குறை நிறைகளோடு ஏற்பதாலும், சங்கிகளை, சீமான் போன்ற சங்கி ஏஜெண்டுகளை எதிர்பதாலும் யாழில் என் மீது வைக்கப்படும் ஆதாரம் ஏதுமற்ற அவதூறு இது. இதை உரக்க கூவிய ஒருவர் காலப்போகில் தான் ஒரு பிஜேபி ஆதரவாளர் என்பதை தன்வாயாலே ஒத்து கொண்டு, யாழை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டார். அடுத்தவர்களும்….🤣 நான் மேலே சொன்னவை எல்லாம் சீமான் சொன்னவைதான். யாழில் ஆதாரம் கேட்டால், சுடச்சுட ஆதாரம் தரும் கருத்தாளர் யார் என்பதும், கேட்ட கேள்விகளுக்கு வருட கணக்கில் பதில் சொல்லாமல், தமிழ் நாட்டு தேர்தல் முடிவு பற்றிய போட்டியில் பங்கு கொள்ள கூட தில் இல்லாத கருத்தாளர் யார் என்பது யாழுக்கு தெரியும் ப்ரோ 🤣. எனக்கு சிங் சாங் போட ஒரு சிலர் வருவார்கள் என்கிறீர்கள். உங்களுக்கு அந்த ஒரு முதிய உறவு மட்டும்தான் ஆனால் வந்தால் சிங் சாங் அல்ல, இடுப்பில் சலங்கை கட்டியே ஆடுவார்🤣.
  14. இதை காலம்தான் சொல்லும். நான் மூக்குச்சாத்திரம் பார்ப்பதில்லை.
  15. அதெப்படி ஹைபர் கணவாய் வழிவந்த கமல் தமிழர் எனவும், விஜய நகர படை எடுப்போடு வந்த வைக்கோ, விஜயகாந்த் தெலுங்கர் எனவும் சீமான் முடிவெடுத்தார்? முக்குலத்தை சேர்ந்த விஜை சேதுபதியை இதே யாழிலும், வெளியிலும் தெலுங்கன் என தம்பிகளை வைத்து மிரட்டியவர் அல்லவா சீமான். ராஜபக்சே பணத்தை இலைக்கா முதலிடுவதாக தமிழ் தேசிய சக்திகள் எதிர்த்த போது, பணத்தை வாங்கி கொண்டு முண்டு கொடுத்தவர்தானே சீமான்? சீமானை பொறுத்தவரை அவருக்கு தேவைபடுபவன் தமிழன், அவரை எதிர்ப்பவர் தெலுங்கன், மலையாளி, கன்னடன், செவ்வாய் கிரகத்தவன்.
  16. இந்த வன்னி அரசைதானே ஒரு 2 வருடம் முதல் கழுவி ஊத்தினீர்கள்? தம்மை மூர்க்கமாக எதிர்ப்போரை பற்றி இப்படியான கதைகளை திமுக ஐடி விங் கிளப்பி விடுவது வழமை என்பதை உங்களால் மறுக்க முடியாதுதானே🤣. திருட்டு தீம்கா ப்ரோ 🤣
  17. அதிமுக கொடுக்குமா என்பதை சொல்ல முடியாது, ஆனால் அடுத்த தேர்தலில் விஜையோடு சேராவிடால் அதிமுக அடிவாங்கும். விஜையும் பெரிதாக வெல்ல முடியாது. திமுக கரை சேர்ந்து விடும். விசிக விஜை பக்கம் வராது என நினைக்கிறேன். பாஜக வை தொட யாரும் தயாரில்லை. மிஞ்சி இருப்பது, அதிமுக, காங், தேமுதிக, பாமக, உதிரிகள்தான். இவர்கள் விஜை தலைமையில் கூட்டணி இல்லாவிடினும், தேர்தலுக்கு முந்திய சீட் பகிர்வு வைத்தால் மட்டுமே திமுகவை அகற்ற முடியும். இதை நோக்கியே விஜை நகர்கிறார் என நினைக்கிறேன்.
  18. எதிர்ப்பு பார்பனியம், வர்ணாசிரமம் அதன் வழிவந்த கொள்கைகளுக்கே ஒழிய பிராமண தனி நபர்களுக்கு, கூட்டத்துக்கு அல்ல. மேலே நான் பார்பனியம் என குறிப்பிட்ட இன மேலாண்மைவாத racial supremacy கொள்கையின் இன்னொரு பெயர்தான் ஹிந்துதுவா, சனாதனம். இந்த சனாதனக்கு எதிராக அடக்கபடும் மக்களிடம் இருந்து எழுந்தவைதான் அம்பேத்கரின் தலித்தியமும், பெரியாரின் திராவிடமும். பார்பனியமும், தலித்தியமும், திராவிடமும் ஒத்த கொள்கைகள் அல்ல. பார்பனியம் அடிப்படையிலேயே மனித குல விரோதமானது. ஆனால் திராவிடமும், தலித்தியமும் மனித குல முன்நோக்குக்கானது. திராவிடத்தை சிலர் கைகொண்டு கொள்ளை அடிப்பதால், ஹைஜாக் பண்ணி அரசியல் இலாபம் அடைவதால், அது பார்பனியம் போல ஒரு மோசமான தத்துவம் என கூற முடியாது. பெரியார் பார்பனியத்யை எதிர்த்தார். பார்பனிய சாதி, தனி நபர்களை அல்ல. சீமான் எதிர்ப்பது தெலுங்கு வம்சாவழியினரை, தனி நபரை.
  19. விஜயகாத் அப்படி சொல்லி, பின் கூட்டணி வைத்து - நம்பகதன்மை இழந்தார். சீமான் அப்படி சொல்லி விட்டு - 8% வாக்கு வங்கி இருந்தும் ஆம்மஞ்சல்லிக்கு பயனற்ற, தன் சுய செல்வாக்கை, செல்வத்தை மட்டும் உயர்த்தும் அரசியல் செய்கிறார். இருவரில் இருந்தும் பாடம் படித்த விஜை - ஆரம்பக்திலேயே கொள்கை உடன்பாடு உள்ளோரோடு கூட்டணி என்கிறார் என நினைக்கிறேன். உண்மையில் விஜை அதிமுகவோடு, காங்கிரசையும் சேர்த்து 45%+45+10% சீட்டுகளை பங்கிட்டு ஒரு உடன்படிக்கை செய்தாலே போதும். அடுத்த தேர்தலில் கணிசமான இடத்தை பெறலாம். இது அதிகாரத்தை அடையும் கணக்கு. இதில் கொள்கை அடிப்படையில் எதிர்க்க எதுவும் இல்லையே.
  20. நேற்று வரை விஜையை இன்னொரு தமிழ் தேசிய சக்தி என வரவேற்ற நீங்கள், நேற்றைய சீமானின் பேச்சுக்கு பின் நிலை மாறுகிறிர்கள்? ஏன்? சீமான் விசுவாசமா? விஜையை ஏன் முகமூடி என்கிறீர்கள். என்னை போல் அவரும் இரெண்டிலும் அதிக வேறுபாடு காணாத, இரெண்டிலும் பல நன்மைகள் இருப்பதை உணரும் ஒருவராக இருக்கலாம்.
  21. மேலே ரசோ எழுதியதையே நானும் சொல்கிறேன். திராவிட இனம் = 5 மொழிவாரி இனங்களின் கூட்டுப் பொதுப்பெயர். திராவிட அரசியல் சித்தாந்தம் = தமிழ் நாட்டில் ஆரிய சித்தாந்ததுக்கு எதிராக நீதி கட்சி, பின் பெரியாரால் எழுப்பபட்டது. நீங்கள் இனப் பகுப்பை, சித்தாந்தத் தோடு போட்டு குழப்பி கொள்கிறீர்கள். மெட்ராஸ் மாநிலமாக இருந்த போதே மற்றைய 3 தென் மானிலங்களாக பிரிந்த பகுதிகளில் திராவிட சித்தாந்தம் பரவவில்லை. அவர்கள் ஒன்றில் காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ் அல்லது ஜனதா கட்சி (பின்னாளில்)தான். தமிழர் பகுதியில்தான் அநேகம் பிராமண எதிர்ப்பு அரசியல் நிலை கொண்டது. இதன் ஆரம்பகால பெயர் பிராமணர் அல்லாதோர் சங்கம். அப்போ 5 மொழி பேசுவோரும் ஒன்றாக இருந்தமையால், பிராமண எதிர்ப்பு அரசியல் என்ற தத்துவத்தை பிராமணர் அல்லாதோருக்கு பொதுவாக திராவிடம் என்ற சொல் உள்ளே வருகிறது. ஆனால் இதன் இனவழி அடையாளப்பொருள் மொழி வாரி மாநில பிரிப்போடு செத்து விடுகிறது. இப்போ திராவிடம் என்றால் அது தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரித்தான அரசியல் தத்துவம் மட்டும்தான். இதை திராவிட சித்தாந்தம் என சொல்லுவது கசக்கிறது என்ரால் பெரியாரிசம் என சொல்லி விட்டு நகருங்கள். சுருங்க சொல்லின், ஆரியத்தை இரு வகையில் எதிர்க்கலாம். தமிழ் தேசியம் அல்லது திராவிடம். மூன்றாவதாக இரெண்டு வழியையும் சேர்த்து, தமிழனாய் உணர்பவன் எல்லாம் தமிழன் என்ற அடிப்படையில் இன்னும் சிறப்பாகவும் எதிர்க்கலாம். முந்தி சைவமா, வைணமவா என நம் மன்னர்கள் அடிபட்டார்கள், அதே போல் மூவேந்தர் அடிபட்டார்கள். கடைசியில் தஞ்சையை மராட்டியனிடமும், மதுரையை நவாப்பிடம் கொடுத்ததுதான் மிச்சம். இதை ஒத்த ஒரு வீண் வேலைதான் இந்த திராவிடம் vs தமிழ் தேசிய போலி விவாதமும். இதை தூண்டி விடுவதில் முன் நிற்பவர்கள் “ஒற்றுமை கிலோ என்ன விலை” என கேட்கும் ஈழத்தமிழர்கள் என்பது வியப்பில்லை. கொள்கை மோதல், பிரதேச மோதல், இயக்க மோதல், இயக்க-உள் மோதல் என தமது தலையில் மண்ணை அள்ளி கொட்டி கொண்ட ஒரு இனம், இப்போ தமிழ் நாட்டிலும் இப்படி ஒரு நிலையை உருவாக்கி விட உழைக்கிறது.
  22. கலந்து கொள்ள முயற்சிக்கிறேன். பல வகைகளில் இது தமிழர் பகுதியில் ஒரு திருப்புமுனை தேர்தலாக இருக்கும் என நினைக்கிறேன். கிழக்கு மாகாணத்தை கணிப்பது ஓரளவு இலகு. திருமலை தமிழரசு 1 மட் தமிழரசு 2, பிள்ளையான் 1, முஸ்லிம் 2. என வரும் என நினைக்கிறேன். முஸ்லிம் 1, என்பிபி 1 என ஆகவும் கூடும். அம்பாறையில் இருக்கும் வாய்ப்பை எல்லாரும் கேட்டு வெற்றிகரமாக கெடுப்பார்கள் என நம்புகிறேன். யாழில் என் பி பி, அருச்சுனா என இரு வலுவான வாக்கு பிரிப்பாளர்கள் இந்த முறை என்ன பாதிப்பை தருவார்கள் என்பது ஒட்டுமொத்த மாவட்ட முடிவுகளை கணிக்க கடினமானதாக்கி உள்ளது. சுமந்திரன், சிறிதரன், டக்கிளஸ் கிட்டதட்ட உறுதி என நினைக்கிறேன். மிகுதி 3 இடம்கள் - லாட்டரிதான். வன்னி - சுத்தமாக ஐடியா இல்லை. சிங்களவர் + கணிசமான தமிழர் + முஸ்லிம் வாக்குகளால் ஒரு தமிழர் தரப்பு சீட்டை என்பிபி லபக்க கூடும்.
  23. @வீரப் பையன்26 மகிந்த-ரணில் ஒப்பீடு திசை மாற்றும் உத்திக்கான உதாரணம் மட்டுமே🙏.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.