Everything posted by goshan_che
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
3 நாளில் கியவ்… ரஸ்யா டாங்கிகள் மீது உக்ரேனியர் பூங்கொத்து எறிவார்கள்…. ஒட்டுமொத்த உக்ரேனும் ரஸ்யவசமாகும்…. இப்படி பலதை சொன்னதையும் நினைவூட்டுகிறேன்🤣. அமெரிக்காவில் ரிபளிக்கன்ஸ் கை ஓங்கினால் உக்ரேன் பாடு கஸ்டம், டிரம்ப் வந்தால் (அவர் புட்டினிடம் பிடி கொடுத்துள்ளவர்) ஐரோப்பவின் நிலையே கஸ்டம் என்பதை உக்ரேன் போருக்கு முதலே இங்கே பலர் எழுதிய படிதான் இருந்தார்கள். உங்களுக்கு பதிலாகவே இவற்றை நான் எழுதியதும் உண்டு. உங்களைத் தீர்கதரிசி, மற்றவர்களை விடு பேயன் என் நிறுவி விடும் மேட்டுகுடி அந்தரிப்பில் இவற்றை செலக்டிவ் அம்னீசியாவில் விட்டு விட்டீர்கள் போலும்🤣.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஓம்…ஜனநாயக நாடுகளில் இது ஒரு பிரசிச்சினை. அதிகாரம் கட்சிக்கு கட்சி மாறுவதால் சில விடயங்களில் கொள்கை தளம்பல் இருக்கும். பொதுவாக இது அமெரிக்க வெளியுறவு கொள்கையில் இருப்பதில்லை. ஆனால் உக்ரேன் விடயத்தில் இருக்கிறது. காங்கிரஸ் மட்டும் அல்லாது பிரெசிடென்சியும் ரிப்பளிக்கன் வசமானானால் செலன்ஸ்கி தலைமையிலான உக்ரேனுக்கு சங்குதான். இது புட்டினுக்கும் தெரியும் - ஆகவேதான் he is playing the long game. விடுதலைபுலிகள் பற்றி முன்னர் எழுதும் போது ஒரு தடவை எழுதினேன். Perfect should never be the enemy of the good. அதாவது நாம் விரும்பும் இலட்சிய தீர்வை அடைவதற்க்காக, கிடைக்க கூடிய நல்ல தீர்வை கைவிடக்கூடாது. செலன்ஸிக்கும் அதுதான். அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரைக்கும்தான் நேரம். அதற்குள் ஒன்றில் இழந்த 20% உக்ரேனை மீட்கவேண்டும், அல்லது மிகுதியையாவது தக்கவைக்கும் ஒரு உடன்படிக்கைக்கு போகவேண்டும். ஆனால் இது ஒன்றும் புதிய விடயம் அல்ல. புட்டின் உக்ரேனில் இறங்கிய தருணமே, டிரம்ப் இதர தீவிர வலது ரிபப்ளிகன் ஆட்கள் சொன்னதை வைத்து, பைடன் தோற்றால் இப்படி ஆகும் என நான், ஜஸ்டின் போன்றோர் முன்பே எழுதியுள்ளோம். பிகு ஆனால் அரசியலில் எதுவும் விரைவில் மாறலாம். தீவிர வலதுசாரிகளின் டார்லிங் தற்போதைய அர்ஜெண்டீனா அதிபர். அவரின் பதவி ஏற்பில் அவர் செலென்ஸ்கியை கொஞ்சாத குறை அவ்வளவு அரவணைப்பு. செலன்ஸ்கியின் தென், வட அமெரிக்க பயணங்கள் தனியே ஊடகங்களை வாசித்துவிட்டு வாந்தி எடுப்போர் சொல்வது போல் “பிச்சை பயணமாக” மட்டும் இல்லாமல், ஆர்ஜெண்டினா வழியாக, American Right இடம் தன்னை/உக்ரேனை re position பண்ணும் முயற்சியாயும் இருக்கலாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
யூகே யிற்கான இஸ்ரேல் தூதர் - “இரு நாடுகள் கொள்கை” இனி சரிவராது என்ற தொனியில் பேட்டி கொடுத்துள்ளார் (இதுவே இப்போதைய இஸ்ரேலிய அரசின் நீண்ட கால நோக்கு). இதை சுனக் மறுதலித்துள்ளார். தீவிரவாத இஸ்ரேலிய குடியேறிகளுக்கு பிரிட்டன் வர தடை என கமரன் அறிவித்தார். https://www.bbc.co.uk/news/live/world-middle-east-67709805
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
யுத்தமுனையிலும், கருத்துக்களத்திலும் stalemate. கூடவே பனிக்காலம் வேற. இரு பக்கத்திலும் பெரிய பீரங்கிகள் ஓய்வில் இருக்கும். சின்ன, சின்ன சில்லறை பிஸ்தோலுக்கள் நாமும் இருக்கிறோம் என்பதை காட்ட இடைக்கிடை வெடிக்கும்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இந்த விளம்பரங்களை யாழ்களம் ஆட்களிடம் நேரடியாக கோராமல் - சில நிறுவனங்கள் ஊடாக செய்ய முடியும் என நினைக்கிறேன். உதாரணமாக நான் தற்ஸ் தமிழை பார்க்கும் போது எனக்கு இலண்டனில் வீடு, கார், சப்பாத்து வாங்கும் விளம்பரம் எல்லாம் வரும். நிச்சயமாக இதை என்னை டார்கெட் பண்ணி தற்ஸ்தமிழ் செய்யவில்லை. ஆனால் அவர்கள் பக்கதில் இந்த விளம்பரம் ஓட, அதை நாம் அழுத்தி பார்க்க, அவர்களுக்கு அதில் ஒரு தொகை போகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ், இன்னும் சில தளங்களில் விளம்பரத்தை பார்க்காமல், பக்கத்தை பார்க்கவே முடியாது. Popup blocker பாவித்தால், நம் தளம் நடக்க விளம்பர பணம் தேவை எனவே popup blocker ஐ நூத்து விட்டு வாருங்கள் என சொல்லும். இப்படி செய்யலாமா? எனக்கு end user அனுபவம்தான். டெக்னிக்கல் சிக்கல் இருக்கலாம்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பிபிசி எம்மிடம் எடுக்கும் licence fee யில் தான் ஓடுகிறது. டெலிகிராப், டைம்ஸ், விகடன், குமுதம், இன்னும் பல paywall. சி என் என், ஸ்கை, யூடியூப், பேஸ்புக், தட்ஸ்தமிழ் - விளம்பரம் மற்றும் popups. இணையத்தில் யாழோடு ஓடத்தொடங்கிய பலர் இப்போ இல்லை. இருப்போர் மேலே சொன்ன மூன்று வகையில் ஏதோ ஒரு வகையில் செலவையாவது எடுக்கிறார்கள். யாழ், யூடியூப் அல்லது தட்ஸ்தமிழின் funding model இல் செயல்பட முடியாதா? எனக்கு அதிக விளக்கம் இல்லை. ஆனால் ஒரு யோசனை. ஒவ்வொரு திரியிலும் விளம்பரத்தை போட்டால் நாம் அதை கர்ம சிரத்தையாக அழுத்தி, ஓடவிட்டு ad revenue வை கூட்ட முடியும்? இந்த முறையில், எவரும் நான் காசு கொடுக்கிறேன் என உதார் விடவும் முடியாது. # மனமுண்டானால் மார்கபந்து
-
துவாரகா உரையாற்றியதாக...
மிக நேர்தியான பார்வை👏🏾
-
துவாரகா உரையாற்றியதாக...
27ம் திகதிக்கு பின் யாழில் அப்படி எழுதியோரின் பெயரை சொல்லுங்கள் பார்ப்போம். நெடுக்ஸ், கரு என்ன சொல்கிறார்கள் என்பது புரியவில்லையா? அல்லது புரியாதது போல் நடிக்கிறீர்களா? பிகு அவர்கள் சொல்வதில் எனக்கும் உடன்பாடில்லை.
-
துவாரகா உரையாற்றியதாக...
போலி+துவாரகா = போலி-கா
-
துவாரகா உரையாற்றியதாக...
நான் வச்ச பெயர் போலி-கா
-
துவாரகா உரையாற்றியதாக...
சொன்னால் நம்ப மாட்டியள். நேற்று உதை பார்க்க தொடங்கி முதலாவது நிமிடத்தில் மனசில் வந்தது இந்த பரவை முனியம்மா சீன் தான்.
-
துவாரகா உரையாற்றியதாக...
மகிழ்ச்சி ❤️
-
துவாரகா உரையாற்றியதாக...
நீங்கள் எதிர்த்ததை மறுக்கவில்லை. ஆனால் நான் தெளிவடைய உங்கள் கருத்து உதவவில்லை. ஏன் என்றால் - இதில் மாற்று நிலைப்பாட்டை சீமான் எடுத்திருந்தால்…தோன்றிய போலி-க்கா, தான் துவாரகா என நீங்கள் வாதாடி இருப்பீர்கள் என்பது என் அபிப்பிராயம். ரஜீவின் தாயின் வடிவில், தலைவரின் மகள்….. Can you see what they are trying to do subliminally? Dear RAW, We know you.
-
துவாரகா உரையாற்றியதாக...
யாழில் சிலரை பார்க்க பரிதாபமாக உள்ளது. இதை விட சொல்ல ஏதும் இல்லை. ஒரு விடயத்தை திறந்த மனதோடு அணுகலாம், ஆனால் மலை போல் ஆதாரம் இருந்த பின்னும், கற்பனையில் உழல்கிறார்கள். @பாலபத்ர ஓணாண்டி நேற்று காசி ஆனந்தன் முதல் சேரமான் வரை ஒரு லிஸ்டை திண்ணையில் வெளியிட்டு இருந்தார். இந்த லிஸ்டில் உள்ளோர் மீது மிக அவதானமாக இருக்க வேண்டும். இந்த விடயத்தில் யாழில் ஆரம்பம் முதலே தெளிவை உருவாக்கி, நான் உட்பட பலரை உரை வர முன்னமே சரியான பாதையில் வழி நடத்திய, @வைரவன், @MEERA @நன்னிச் சோழன். @நந்தன் ஆகியோருக்கு நன்றி🙏.
-
துவாரகா உரையாற்றியதாக...
எஸ் பிள்ளை மிகவும் காத்திரமாக அலசியுள்ளார். ஆனால் ஒரு விடயம் - இப்படி டி சேர்ட்டுக்கு மேலாக சேலை அணிந்தது, மிக(த) மிஞ்சிய முகப்பூச்சு, மஞ்சள்/சிவப்பை தவிர்த்தது எல்லாம் வேணும் என்றே செய்யப்பட்டவை. RAW வுக்கு இன்னமும் புலி, மஞ்சள்-சிவப்பு என்றால் அலர்ஜிதான். தமக்கு இலங்கையில் ஒரு பிடி கிடைக்க இந்த நாடகத்தை ஆடினாலும், எமது அடையாளங்களை வலுவாக்க அவர்கள் விரும்பவில்லை.
-
துவாரகா உரையாற்றியதாக...
அடேய் RAW அப்பிரெசெண்டுகளா, என்னடா இப்படி பண்ணி வச்சிருக்கீங்க? சரி சரி… போய் அடுத்த படத்தையாவது ஒழுங்கா, லைட்டிங், லொக்கேசன், கேமரா ஆங்கிள் எல்லாம் சரியா பண்ணி எடுங்கடா முட்டா பசங்களா. அதிலும் மேக்கப், வசன உச்சரிப்பு ரொம்ப முக்கியம். சரியா? அடுத்து என்ன வா? இனி இதை சனம் நம்பாது…. அடுத்த கரும்புலிகள் நாளுக்கு பொட்டம்மான் வாறார் எண்டு ஏதாவதை உருட்டிப்பாருங்க. ஸ்கோர் விபரம். ஈழத்தமிழர் 5 : RAW 0 பிகு இந்த உணர்வு பூர்வமான நாளில் இலங்கையில் கைவிட்டுப்போகும் தனது கேந்திர நலனை தக்க வைக்க, யாரோ ஒரு பெண்ணை டி சேர்ட்டுக்கு மேல் சேலையை சுற்றி - இதுதான் எமது தலைவரின் வளர்ப்பு என சொன்னால் நம்பும் அளவில் நாம் இல்லை. ஆனால் இதையிட்டு சண்டை பிடித்து, மாவீரராய், தியாகிகளாய் போய் விட்ட எமது இனதின் முதல் குடும்பத்தை நாமே சிலாகிக்கத்தேவையில்லை. வட்டா 🔐 ஐ பிடித்து ஆட்ட வேண்டாம்
- இன்று மாவீரர் தினம்!
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அதெல்லாம் தெரியா, ஊர் தப்பா பேசும், திரிகளை உயிர்ப்புடன் வைத்திருங்கள். போனசாக கிரிப்டோ திரியையும் 🙏. Done deal. 🤝
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
வார்டன் என்றால் அடிப்போம். அது போல், மேற்கு என்றால் அடிப்போம். இலங்கைக்கு மேற்கு உதவியமைக்கு பழி தீர்கிறார்களாம். ஆனால் அதே இலங்கைக்கு அதே போல் உதவிய சீனா, ரஸ்யா, பலஸ்தீன், கடாபி, கியூபாவை ஆதரிப்பார்களாம். ஏன்? மேற்கு என்றால் அடிப்போம். இரெண்டும் ஒன்றில்லத்தான். ஆனால் பாரம்பரிய யுத்தத்தில் அணு ஆயுத பிளாக்மெயில் எனப்பார்த்தால் - இரு நாடுகாளும் இதை செய்தது பொறுப்பற்ற செயல்தான். ஆனால் நீங்கள் கூறியபடி சில மாதங்களின் பின் புட்டின் தன் தவறை உணர்ந்து இந்த rhetoric ஐ கைவிட்டு விட்டார். அதே போல் இந்த மூளை பிசகிய சயானிஸ்ட் அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது நல்லதே. ஆனால் இவை பிளாக்மெயில்தான் செய்தன. அமேரிக்கா பாவிக்கவே செய்தது என்பதும் அது ஒரு போர்குற்றம் என்பதும், என்றும் மறக்ககூடாத அமெரிக்காவின் மீது விழுந்த மறு என்பதும் கூட உண்மைதான்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஒரு சவால்….எனது Marketing Territory ஐ உங்களுக்கு தாரை வார்கிறேன். உங்களுக்கு பந்து இருக்கிறதா என பார்ப்போம் (let’s see if you have the balls). என்னை போல் ஒவ்வொரு திரியாக போய் தம்பட்டம் அடிக்க தேவையில்லை. நான் திரும்பி வரும் வரை: உக்ரேன்-ரஸ்யா, இஸ்ரேல்-பலஸ்தீன் இந்த இரு திரிகளிலும் மட்டும்; நேரம் செலவழித்து, தகவல்கள், கருத்துகளை பதிந்து - பலதரபட்ட கருத்தளருடனும் ஒருமித்தும், எதிர்த்தும் கருத்து பரிமாறி, இந்த இரு திரிகளை மட்டும் உயிர்ப்புடன் வைத்திருங்கள்? செய்வீர்களா? (ஜெ பாணியில் வாசிக்கவும்). அல்லது வெறும் வாய் மட்டும்தானா? (உங்களால் முடியும்).
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நன்றி அண்ணா. தோணியா? சீச்சீ அவர் ஹெலிகாப்டர் ஷார்ட்டைதான் அறிமுகபடுத்தியவர்🤣 @Maruthankerny செல்வத்திற் செல்வம் மக்கள் செல்வம். மக்கள் என்றால் பிள்ளை இல்லை. மனிதர்கள். போகும் போது நம்மிடம் இருக்க போகும் ஒரே செல்வம் ஏனையோர் நம் மீது வைத்துள்ள நம்பிக்கை, நட்பு, மரியாதை, நேசம் இவை மட்டுமே. இன்னொரு முகம் தெரியா கருத்தாளரின் மக்கட் செல்வத்தை க(கா)ண்டு மறுகாமல் …பத்தி பிரிச்சு எழுதுவதில் தொடங்குங்கள். நீங்களும் ஆகலாம் குரோர்பதி.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நன்றி. தற்காலிக ஓய்வு எண்ணம் - சில தனிப்பட்ட விடயங்கள் நேரத்தை கோரப்போகிறன - அதற்கான முன்னேற்பாடு.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
முந்தநாள் திண்ணையில் எழுதினேன். நொஸ்டிரடாமஸ் திரியை மீளாய்வு செய்து விட்டு கொஞ்சம் விலகி இருக்க போகிறேன் என. நேற்று அந்த மீளாய்வை முடித்தேன். இன்று வரை யாரும் திருத்தம் கோருகிறார்களா என காத்திருக்கிறேன். நாளை முதல் கிளம்பும் ஐடியாதான். உங்கள் அட்வைஸை வாசிக்கும் வரை. அதை வாசித்த பின் தான் - என்னை நானே சகலமும் அறிந்தவனாக காட்டி கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதையும், எனது தலைகணத்தை கைவிடா கூடாது என்பதும், எல்லா திரிகளிலும் கண்டபடி பிதற்றுவதிலும் உள்ள அருமை பெருமைகளை புரிந்து கொண்டேன்🤣. நன்றி. ஓம் மருதர் இங்கே எழுதுபவர்கள் ஒன்றில் கடவுளை நம்பும் மோடையர்கள், அல்லது தலைக்கணம் பிடித்த தருக்கர்கள், அல்லது மனித இனப்படுகொலையை ஆதரிக்கும் கயவர்கள் (உக்ரேன் என்றால் பராவாவில்லை அவர்கள் எலிகள் இனம்தானே). உங்களை ஒத்த ஒரு நியாயவானின் பாதம் இங்கே படுவதே நாம் செய்த பூர்வ புண்ணியம்தான். இதில் 4 பந்தியையும் வாசித்து கருத்து வைக்க வேண்டும் என்ற எதிர்பார்பெல்லாம் டூ மச்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இங்கே இன்னுமொரு தக்காளி சோஸ்/ரத்த முரண்நகை. இந்த பைத்தியகார இஸ்ரேலிய சயோனிச வெறி அமைச்சர் அணுகுண்டு போடுவோம் என மோட்டு கதை கதைத்ததை மிக கடுமையாக விமர்சிப்பவர் எல்லாரும் யார் என்கிறீங்க? உக்ரேன் யுத்தத்தின் ஆரம்பத்தில் புட்டின் அப்பட்டமாக அணு குண்டு பட்டனுக்கு பக்கத்தில் இருந்து போட்டோ போட்டபோது, அணு ஆயுத தடிப்பு-பேச்சை (rhetoric) பேசிய போது, அணுஆயுத மிரட்டல் (nuclear blackmail) செய்தபோது - ஒரு அணு ஆயுத நாட்டை சீண்டினால் அது அப்படித்தான் செய்யும் என வக்காளத்து வாங்கிய நம்ம பயலுவதான்🤣. கீழே இரெண்டு நாட்களுக்கு முன் ரஸ்ய அரச தொலைக்கட்ட்சியில் ஒளிபரப்பானதாக சொல்லப்படும் ஒரு அனிமேசன் வீடியோ போட்டுள்ளேன். ரஸ்ய அணு ஏவுகணை ஒன்று எப்படி அமெரிக்கா நகர்களை தாக்கும் என காட்டியுள்ளார்கள். வாயால பேசின அந்த இஸ்ரேல் அமைச்சர்ரையே இந்த வாங்கு வாங்கின நம்ம பயலுவ, இப்படி வீடியோ விட்டு மிரட்டும் புட்டினை, புரட்டி, புரட்டி எடுக்கப்போகிறார்கள் பாருங்களே (don’t hold your breath). 4 பந்தி எழுதினான். 3 வாசிச்சிட்டு, குவோட்டும் பண்ணி, அதை மட்டும் மிஸ்பண்ணி இருக்கிறியள். சோ சாட்🤣
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
யானை பார்த்த விழிபுலனற்றோர் எண்டு எழுதினது சுட்டு விட்டதா? காரியமில்லை🤣.