இந்த தொடரை கூட்டமைத்த ரஞ்சித்துக்கு பாராட்டுகள்.
இந்த உழைப்பு மெச்சதக்கது. மட்டும் இல்லை ஒரு திரியில் வரலாறு திரிக்கப்படும் போது - அதை அங்கே மட்டும் எதிர்காமல் - அதை ஒரு தொடராக்கி - ஆவணப்படுத்துவது செயற்கரிய செயல்.
பலர் சுட்டியது போல இது ஒரு பக்க சார்பான செய்திகளை மட்டுமே தாங்கி நிற்கிறது. அதை ரஞ்சித்தும் ஏற்று கொண்டிருக்கிறார்.
ஆனால் 2002க்கு பின்னான ரஞ்சித் இணைத்த தரவுகளில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு படவில்லை.
அதே போல் முறிந்த பனைகள் யாழில் வளராது என்பதும் உண்மைதான். பலவருடங்களுக்கு முன்பே எனது ஒரு நீண்ட பதிவை நீக்கி விட்டு நிழலி ஒரு விளக்கம் கொடுத்தார் - யாழ் பக்கம் சாரா ஊடகம் இல்லை என்று. ஆகவே இதை வாசிக்கும் எதிர்கால சந்ததி இந்த பக்க பார்வையை இங்கும், மறுபக்க பார்வையை வேறு எங்கோவும் தேடி கண்டு, உண்மை அறியும்.
ஆனால் வாழ்ந்த சாட்சியாக -உண்மை மிக அதிகமாக ரஞ்சித்திற்கு அருகேதான் இருக்கும் என்பதையும் அவர்கள் கண்டுகொள்வார்கள் என்பது என் துணிபு.
ஆனால் ஒரு constructive feedback (அதானே குறை சொல்லாமல் கோஷனா🤣) - ரஞ்சித் எழுத தொடங்கிய பரப்பை விட்டு கொஞ்சம் mission creep பண்ணி, வேறு விடயங்களையும் தொட்டதால் கவனம் சிதறி விட்டது என நினைக்கிறேன்.
இதை “ஒரு” துரோகத்தின் நாட்குறிப்பு என்ற வரையறையில் 2002 க்கு பின்னான நிகழ்வுகளில் மட்டும் கவனத்தை செலுத்தி இருந்தால் - யாருக்கும் அவற்றில் முரண்பட ஏதும் இருக்காது என நினைக்கிறேன்.
அதை விடுத்து ரஞ்சித், எது துரோகம், துரோகத்தின் பல்வேறு வடிவங்கள், என்று போகும் போது பார்வைகள் மாறுபடுவது தவிர்கவியலாதது.
ரஞ்சித் தனியே தரவுகளின் மீள் பிரசுரம் என்பதோடு நின்று, தன் வர்ணனையை தவிர்த்திருந்தால் அவர் நோக்கம் இன்னும் சிறப்பாக இலக்கை அடைந்திருக்கும்.
பலர் இதில் கருத்திட்டு, இந்த திரியை விவாததிரியாக மாற்றாமைக்கும் ரஞ்சித்தின் நோக்கத்தை புரிந்து வழி விட்டதே காரணம் எனவும் நான் நம்புகிறேன்.