Everything posted by goshan_che
-
நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்
ராதாகிருஸ்ணன் ஏன் போக போறார்? அவர் என்ன லைனிலா வாழ்கிறார்? அவர் சம்பளம் என்ன 1000 மா? அந்த மக்கள் கொட்டடியில் மாய்ந்தால்தான், இவர் எம்பி இல்லாவிட்டால்? ஆகவே அவர் இப்படித்தான் பசப்பு வார்த்தை பேசுவார். நாங்களும் பதிலுக்கு நிகர்நிலை உதவி கரம் நீட்டினால் - எல்லாம் சுபம் 😂. இவர்களின் மலையக மக்கள் மீதான கரிசனையும், கருணாநிதியின் ஈழத்தமிழர் மீதான கரிசனையும் ஒரே வகை.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
தயவு செய்து அப்டேட் ஆகவும். அதில் பாதிப்பேர் தற்போது அனுர படையணியின் சிறப்பு தளபதிகள்😂
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
மேலே கு சா அண்ணைக்கு கொடுத்த விளக்கத்தை போய் மீள வாசிக்கவும்😂. நடைமுறையில் சரி வரும், நாளைக்கே செய்யலாம் என நான் எழுதவில்லை. கொள்கை அளவில் இது நல்ல விடயம் என்பதை ஏற்றுகொள்ள வேண்டும் என்பது மட்டுமே நான் எழுதியது. என்ன நினைப்பில் அல்லது மிதப்பில் வந்தாலும் - கிடைத்த வேலை ஒன்றை பழகி, அதில் திறமை காட்டி, மேலேபோய், மேளாளர் ஆகி, பெற்றோல் ஷெட்டையிம் வாங்கினார்களா இல்லையா? இதையே ஏன் வடக்கில் மலையக மக்கள் செய்ய கூடாது. முடியாது? ஏன் என்றார் அவர்கள் எம்மை போல் ஊக்கம், திறமை, உந்தல் அற்றவர்கள்?
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
ரத்த திலகம் வைத்த காலங்களில் கூட்டணி தலைவர்கள் உசுபேற்றும் வகையில் பேசுவார்கள் என கேள்விப்பட்டேன். டெமோ காட்டியமைக்கு நன்றி. இத்து போன ஈரோஸ், ஈபி யை தவிர, அவர்களும் பின்னர் இதை கைவிட்டு விட்டார்கள் - எவரும் எந்த காலத்திலும் மலையகம் தமிழர் தாயகம் என கோரியதே இல்லை. மலையகத்தை விட கொழும்பு மாவட்டத்தில் தமிழர் செறிவு அதிகம். அதற்காக கொழும்பு தமிழர் தாயகமா? இனவழி, மரபுபழி தாயாகம் என்பது சும்மா புல்டா போண்டா கதை அல்ல. எழுந்தமானமாக யாழில் வீரவசனம் எழுதுவதால் மட்டும் மலையகம் தமிழர் தாயகம் என ஆகிவிடாது. சக தமிழனை அடுத்த நூறு ஆண்டுக்கு லைன்களில் கட்டி வைத்து, சிங்கள மேலாண்மையின் ரத்த கூலிகளாக இருக்க வைக்கும் -வடக்கில் தமிழ் இனப்பரம்பல் குறைந்து போனாலும் பரவாயில்லை எனது ஆள் இல்லா காணியில் இன்னொரு தமிழனை (இன்னொரு சாதியை சார்ந்த யாழ்ப்பாண தமிழனை கூட) இருக்க விடேன் எனும் நவீன பொன்னம்பலங்கள் சமூகத்தில் இருந்தே ஒதுக்கி வைக்கப்பட வேண்டியவர்கள்.
-
நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்
உதவி கரம் அல்ல உதவி-வாய் 😂
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
ஒரு வழியாக 5ம் பக்கதிலாவது கருத்து சரியானது என்பதை ஒத்து கொண்ட அளவில் மகிழ்ச்சி. எனக்கு தெரிந்த சில low profile, கண்ணை குத்தாத நடவடிக்கைகளை பட்டியல் இட்டுள்ளேன். இலண்டன் கோவில்கள் சிலது கூட மலையகத்தில் திட்டங்கள் செய்துள்ளனர். யார் செய்வது? தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிகெட்டு, பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம் என்கிறார் பாரதி. அந்த நிலைதான் இப்போ நமக்கும். உங்களை போலவே எனக்கும் விடை தெரியவில்லை. ஆனால் -கொள்கை அளவில் கூட இது நல்ல விடயம் என ஒரு கருத்துகளத்தில் கூட இப்படி தொண்டை தண்ணி வத்த கத்த வேண்டி உள்ள போது…. நடைமுறையில் இந்த இனம் இந்த வேலைக்கு சரிப்பட்டு வராது என்றே எண்ணுகிறேன்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
நம்மில் ஒற்றுமை நீங்கினின் அனைவர்கும் தாழ்வு… நன்றிது தேர்ந்திடல் வேண்டும்… இந்த ஞானம் வந்தாற்பின் நமக்கேது வேண்டும். ஆனால் இந்த சக்கு மூளைகளுக்கு இத்தனை இழப்பு, தியாகம், கொடுமைக்கு பின்னும் வரவில்லை எனில், இந்த ஞானம் எப்போதும் வரும் என நான் நம்பவில்லை. இவர்களுக்குரிய பாடல்… எப்பா ஞானம்.. சீதாவ காணம்… பொழுது விடிஞ்சா போக போது மானம்😂
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
அடடே சாதா காவடியை சொன்னால், தூக்குகாவடிக்கு கோவத்தை பாரேன்😂. நான் சுமந்திரனை மிக கடுமையாக இதே யாழில் பல வருடங்களாக விமர்சிக்கும் ஒருவர். ஆனால் அனுர மேல் ஒரு தூசிபட்டாலும் உடனே ஓடி வந்து காவடி தூக்கும், இப்போதும் தூக்கும் நபர் நீங்கள். அனுரவின் ஈரச்சாக்கு அரசியல் இனத்தை நீண்ட கால நோக்கில் படுகுழியில் தள்ளும் என அறிந்தும், அதை ஆதரிக்கும் கோடாலிகாம்பு நானில்லை.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
அதுபாருங்கோ…ஜெப்பணீஸ்க்கு மிகவும் பிடித்தமான டவுசர், சேர்ட் போட்டு அரச அலுவலகங்களில் இருந்து பிளேன் டீ குடிக்கும் வேலைக்குத்தான் வேலையில்லா திண்டாட்டம்😂. மேசன், முட்டாள், விவசாய வேலை, என பல வேலைகளுக்கு வேலையாள் இல்லா திண்டாட்டம். கேட்டுப்பார்த்தேன் - பல முட்டாள்கள் கனடாவில் செட்டில் ஆகி விட்டார்களாம்😂.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இதோ இன்னொருவர் நீ செய், நான் செய்கிறேன் என மடைமாற்றுகிறார்😂. நான் உங்கள் எவரையும் காணியை கொடுங்கள் என சொல்லவில்லை. இப்படியான நகர்வு ஒரு நல்ல நகர்வு என கொள்கை அளவிலாவது ஏற்று கொள்ளுங்கள் என்கிறேன். ஆனால் அதற்கு உங்கள் மையவாதம் விடுகுதில்லை. ஆகவே இப்படி மடை மாற்றுகிறீர்கள். இன்னொரு டிசைன் மடைமாற்று. வடக்கில் கடைசி ஏழை இருக்கும் வரை இப்படி மடைமாற்றி கொண்டே இருக்கலாம். நாம் கீழ்தரமான யாழ் மையவாதிகள் என வெளிப்படையாக ஒத்து கொள்ள வேண்டி வராது. மடைமாற்று 3rd prototype😂
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
1970 களில் யாழ் மாவட்டத்தோடு, ஏனைய தமிழ் மாவட்ட கல்வி நிலை, 2025 இன் நிலையை ஒப்பிட்டு பார்த்தால் இந்த கருத்து பிழை என்பது புரியும். மலையகத்தில் 16 வயதுக்கு பின் கொழுந்து பறிக்க அல்லது கொழும்பு போய், ஆட்டோ ஓட்ட அல்லது கடையில் நிற்க என “தயாரிக்கபடும்” கல்வியை விட யாழ்பாணத்தில் ஹொஸ்டலில் தங்கி, நல்ல ஆசிரியர்களிடம் கற்கும் போது அதே மாணவன் ஒரு டாக்டர் ஆகாவிடினும் கம்பெளண்டர் ஆவது ஆகலாம். அந்த கம்பெளண்டரின் மகன் நாளை டாக்டர் ஆகலாம். இதைதான் social mobility என்பார்கள். இதுவும் புலம்பெயர் தேசத்தில் நாம் அடைந்ததுதான். இது பிரதேசவாதம் இல்லை… நிலப்பரப்பின் பால்பட்டு ஒரு குறித்த மக்கட் தொகையினரின் சக்கு பிடித்த சிந்தனையை உள்ளது உள்ளபடியே சொல்வது. நிழல் அரசு - அது ஒரு இந்த சக்கு பிடித்த சிந்தனை துளியும் இல்லாத, அதை வெறுத்த ஒரு அற்புதமான தலைவரினதும், அவர் பின்னால் திரண்ட அதிசயபிறவிகளினதும் பெறுபேறு. அவர்கள் காலத்தில் இந்த சக்குபிடித்த்ஃ சிந்தனை கொஞ்சம் முகிழ்த்திருந்தது. அவர்களுக்கு முன்பும், பின்பும் எழும்பி ஆடுகிறது.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
ஓ…நீங்களும் காவடியை தூக்கி விட்டீர்கள்😂. என்ன செய்வது தர்க்கம் என்று வந்தால் எதையாவது ஒப்பிக்க வேண்டுமே. ஜேவிபி வட கிழக்கு தமிழர்களுக்கு அரசியல் உரிமை எதையும் தராது என்பது எவ்வளவு நிகரான அதே அளவு நிதர்சனம் மலையக மக்களை அடிமை வாழ்வில் இருந்து மீட்காது என்பதும். நீங்கள் ஏன் மனோ, சுமனில் தொங்குகிறீர்கள் என்பதுதான் புரியவில்லை. இருவரும் சும்மா லுலுலுலா கதைதான் என்பதை நான் முதல் பதிவிலே சொல்லி விட்டேன். ஆனால் அவர்கள் சொன்ன விடயம்தான் முக்கியம். ஆட்களை விட்டு விட்டு, கொள்கையை அதன் சாதக பாதகங்களை அலசுங்கள். அது நாம் அவர்களை சுரண்டினால். வடக்கு தமிழர் சுரண்டல் போக்கிரிகள் என்கிறீர்களா? அப்படி இருக்க கூடாது என்பது என் வாதம்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
அப்படி இல்லை, வன்னியில், கிழக்கிலங்கையில் எத்தனையோ ஏழைபட்ட மக்களுக்கான திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. நான் மேலே சொன்ன விடயத்தை ஒரு பத்து ஊர் சங்கங்கள், பத்து பாடசாலை அமைப்புகள் ஒரு சம்மேளனமாக திரண்டு செய்ய முடியும். பதாகை வைத்து, தம்பட்டம் அடித்து செய்யாமல் - பேரினவாதிகள் கண்ணை குத்தாத வகையில் - பயணாளர் தெரிவில் கொஞ்சம் கெட்டிக்காரத்தனமாக இருந்தே இதை செய்யலாம். இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை மிக சுலபமாக தனியார் நிறுவனக்கள் செய்யலாம். நாம் வேலைக்கு எடுக்கும் 2/10 பேர் மலையக ஆளாக இருக்க வேண்டும் என ஒரு எழுதா விதியை, பெரிய, மத்திய வடக்கு வியாபார அமைப்புகள் கடைப்பிடித்தாலே போதும். நினைவூட்டல்: இஸ்ரேல் தேசமாக முன்பே, உலகெங்கும் உள்ள யூதர்களை கிபுட்ஸ் பண்ணைகள் என நிலத்தை அரபிகளிடம் வாங்கி குடியேற்ற தொடங்கி விட்டான் யூதன். இந்த எண்ணிக்கை பலம் - பின்னாளில் இஸ்ரேஸ் அமைவதை இலகுவாக்கிய காரணிகளில் ஒன்று. இதை எழுதும் போது சிரிக்காமல்தான் எழுதினீர்களா? எந்த அரசு தமிழர் நலனை அதன் கடமையை சரிவர செய்யும் என்கிறீர்கள் ? இலங்கை அரசு? அவர்களின் அரசியல் கட்சிகள் - நவீன கங்காணிகள். இவர்கள் தோட்டத்தை விட்டு வெளிக்கிட்டால் அவர்கள் ஆட்டம் குளோஸ். ஆகவே தம் தலையில் அவர்கள் மண்ணை அள்ளி போடமாட்டர்கள். மனோவின் பேச்சுக்கு இதொகவில் இருந்து கடும் எதிர்ப்பு வந்துள்ளது.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
ஐயா பெரியவரே, எந்த தர்க்கமும் தோற்கும் போது, நீ என்ன செய்தாய். என்ன செய்கிறாய், என்ன செய்வாய் என மடை மாற்றுவது உங்கள் வழமையான உத்திதான். நான் இங்கே மனோ, சுமந்திரன் என்ற மனிதர்களை பற்றியோ, அல்லது அவர்கள் சொன்ன விடயத்தை நடைமுறை படுத்த என்னிடம் திட்டம் உள்ளது என்றோ - அல்லது அதை தலைமை ஏற்று யார் செய்ய கூடும் என்பது எனக்கு தெரியும் என்றோ எங்கும் எழுதவில்லை. அவர்கள் சொன்ன கருத்து, கொள்கை அளவில் - சரியானது, தேவையானது.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
சம்பந்தனின் “அடுத்த தீபாவளிக்குள் தீர்வு” ஜவ்வு மிட்டாய் போல… மலையகமக்களை தோட்டங்களிலேயே ராஜாவாக்குவோம்.. என இங்கே சில அறை கூவல்களை கேட்க கூடியதாக உள்ளது. ராசாமார்….உங்களுக்கு சிங்களவன் தமிழ் ஈழம் கூட தருவான்…ஆனால் இதை செத்தாலும் செய்யமாட்டான்…. இது உங்களுக்கும் தெரியும். ஆனால் நேரடியா மலையக மக்கள் எம் ஊரில் வேண்டாம் என சொன்னால் இமேஜ், டமேஜ் ஆகிவிடும் என்பதால், இப்படி ஒரு சம்பந்த வியாக்கியானம் கொடுக்கிறீர்கள். ஆப்கானிய, எகிப்திய, ஜோர்தானிய, லெபனானிய இன்னும் பல நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் துன்புற்ற யூதர்களை இஸ்ரேல், உள்ளே எடுத்து, வீடும் காணியிம், தொழிலும் கொடுத்தத்து. இப்படி செய்யதால் அது இனச்சுத்தீகரிப்பாகிவிடும்…எனவே நீங்கள் அங்கேயே கிடந்து மாளுங்கள் என சக யூதர்களை அவர்கள் விட்டு விடவில்லை. ம்ம்ம்…அவன் யூதன்…கூர்ப்பில் முன்னேறியவன். நாங்கள் பெயருக்குத்தான் ஜப்னா ஜூ 😂. மூலோபாய சிந்தனை அறவே அற்ற கூட்டம்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
அண்ணை யாரும் யாரையிம் அடியோடு புடுங்க, கேட்காமல் இழுத்து வர கேட்கவில்லை. அவர்கள் எமம்முடன் வந்து வாழும் ஏது நிலையை உருவாக்குவோம்… முதலில் ஒரு சிலர் வரட்டும்…அவர்களை கைதூக்கி விடுவோம்… அதன் பின் அவர்கள் ஏனையோரை அழைப்பர்…அடித்தடுத்த சந்ததி..அவர்களுக்கு அவர்களே வழிகாட்டுவார்கள். இப்படித்தானே அண்ணை, கொழும்பையே காணாத, ஊரில் காலை எழுந்ததும் பனங்கூடலுக்க ஒதுங்கின ஆட்களை எல்லாம் இலண்டன், பரிஸ், கனடா எண்டு எடுத்து விட்டு…இப்ப அவை எல்லாம் செருப்பு போடாமல் நடக்க முடியாது எண்டு சொல்லும் அளவுக்கு “முன்னேறி” இருக்கினம். 2026 இல் 50 குடும்பங்களை, 200 தனி ஆண்களை இப்படி எடுத்து விட்டால், ஆண்டு 9+ படிக்கும் பிள்ளையள் 200 பேரை எமது பள்ளிகளில், பள்ளிக்கு 20 பேர் என ஹொஸ்டலில் சேர்த்து விட்டால்—- 2056ம் வருடத்தில் லைன், தேயிலை பறிக்கும் தொழில் எதுவும் இருக்காது. தேயிலை ஒன்றில் சிங்களவர் பறிக்கலாம், அல்லது அதற்குரிய சம்பளத்தில் சகல இனத்தவரையும் வேலைக்கு அமர்த்தலாம் அல்லது தானியங்கிகளை அறிமுகம் செய்யலாம். வளைவு, கோபுரம், கோவில், விளையாட்டு மைதான சுற்று மதில், அம்மா, அப்பா பெயரில் அன்னதானம்… #இன்ன யாவிலும் புண்ணியம் கோடி புண்ணியம் மட்டும் இல்லை, வடக்கும் தொடர்ந்து தமிழர் நிலமாக நிலைக்கும்😂. அதாவது மாவட்டம்/மாகாணத்துகுரிய வழமையான 100% சுயநலத்துடன் சிந்தித்தால் கூட இது நல்ல விடயமே😎.
-
நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய விமானம்.. 200 உயிர்களை காப்பாற்றிய விமானியின் சாமர்த்தியம்!
பயணிகள் என்ன ஆனார்கள்? வீரகேசரி ஆதவனுக்கு தமிழ் திக்குவது போல டெய்லி மிரருக்கு ஆங்கிலம் திக்கி உள்ளது. இரண்டு பந்தியும் முதலாவது (திரும்பி வந்த) பறப்பைத்தான் சுட்டுகிறன. ஆனால் ஒரு இடத்தில் 202 என்றும் மற்ற இடத்தில் 51 எண்டு அடித்துள்ளனர். டைப்போ என நினைக்கிறேன்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
பசப்பு வார்த்தை பேச நான் என்ன அருச்சுனாவா 😂. பதில்கள் கீழே முடியாது மிக முக்கியகாரணம் கட்டமைப்பாக விரிந்துள்ள வர்க, இனவாதம். இங்கே நாம் தோட்ட மக்களை மட்டுமே அலசுகிறோம். அவர்கள் நில உரிமை அற்றவர்கள். அதாவது அவர்கள் இருக்கும் பகுதிகள் அநேகம் உள்ளூராட்சி சபை அன்றி தோட்ட நிர்வாகத்தின் கீழ் வருவன. இது அவர்களை சம பிரஜைகளாக வாழ விடாமல் தடுக்க அமைக்கப்பட்ட திட்டமிட்ட பொறிமுறை. அவர்களுக்கு தொழிலுடன் குடியிருப்பும் இணைக்கப்படுகிறது. எனவே இந்த முறையில் இருந்து வெளி வந்தால், இரெண்டும் போய்விடும். கிராமமங்களுள் அவர்களை நடமாடவே சிங்களவர் அடிக்கடி கெடுபிடி செய்வார்கள். அருகில் உள்ள கிராமங்களில் குடி அமர்த்த, அல்லது இவர்களுக்கு ஒரு கிராமத்தை அமைக்க முனையின் பிக்குகள் தலைமையில் கிராமமே சேர்ந்து எதிர்க்கும். ஆகவே இருக்கும் ஒரே தெரிவு லைன் வீடு, 1000 ரூபாய் சம்பளம் என இவர்களை சந்ததி சந்ததியாக கட்டிப்போட்டுள்ளனர். இதை எதிர்த்து அவர்களை மலையகத்தில் சிங்களவருக்கு நிகரான சம பிரசைகள் ஆக்குவது. தமிழ் ஈழம் எடுப்பதை விட கடினமானது. பலநூற்றாண்டு காலமாக தொர, சாமி என அடிமைபட்டு போன மக்கள் கூட்டம். இன்றும் அதிகாரத்தின் மீது “பெரியவன்” மீது அதீத பயம் இருக்கிறது. தவிர தொழிற்சங்கங்கள், ஈரோஸ், ஈபி, ஜேவிபி எல்லாரும் இவர்களை பயன்படுத்தினரே ஒழிய, அரசியல் ஓர்மத்தை வளர்க்கவில்லை. எந்தளவுக்கு என்றால் மின்னல் ரங்கா போல ஒரு மரம்தாவியை தமது எம்பியாக்குள் அளவுக்கு அரசியல்படுத்த படாத மக்கள். இவர்களின் அரசியல் அனைத்தும், நவீன கங்காணிகளாக இருக்கும் சில குடும்பங்களால் கட்டுப்படுத்தபசுகிறது. எனவே அவர்கள் போராட வாய்ப்பில்லை. எவரும் இல்லை. வாக்குகளுக்காக சில சலுகைகளை பெற்று கொடுப்பார்கள். இவர்கள் தோட்டத்தை விட்டு நாட்டு மக்கள் ஆகி விட்டால் தமது வாக்கு வங்கி, மிராசுத்தனம் பாதிக்கப்படும் என்பதால் இவர்களை இப்படியே வைத்திருக்கவே இவர்களின் அரசியல் தலைமைகளும் விரும்புகிறன.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
அந்த வீடியோ எல்லாம் புட்டினுக்கு பொன் முட்டையிடும் வாத்து. என்று அதை வெளியிட்டால் தனக்கு தீமையை விட நன்மை என உணர்கிறாரோ அன்று வெளியிடுவார். அண்டைக்கு MAGA மொக்குகளே தம்பருக்கு உயிரோடு சமாதி கட்டுவார்கள்😂.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
அண்ணை, நானும் நீங்களும் இந்த திரியில் எதிர் எண்டால் உக்ரேன் திரியில் ஒரே கருத்து. 2017 முதல் இப்படித்தான். அதேபோல் நீங்களும் யாழை விட்டு ஒதுங்கவில்லை. ஒதுங்கவும் கூடாது. எந்த தனிப்பட்ட உள்நோக்கமும் இல்லை. ஆனால் மலையக மக்களை ஊரில் குடிவைக்க இங்கே சொல்லப்பட்ட எந்த காரணும் தர்க வலு அற்றவை. இந்த எதிர்ப்பின் பின்னால் இருப்பது (நாம் உணரும் (conscious) அல்லது உணரா (unconscious) யாழ் மையவதம் என்பது என் நிலைப்பாடு. இணைந்திருங்கள்.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
இஙளவுக்கு செலன்ஸ்கி இராஜதந்திர கேம் ஆடுகிறார் என நீங்கள் எழுதினால், அண்ணன்மாருக்கு பிளட் பிரசர் ஏகிறிவிடும், கவனம். எல்லாரையும் பட்டியல் இட்டீர்கள். குறை சொன்னீர்கள் - எனக்கும் உடன்பாடுதான். ஆனால், தேடிப்பார்த்தேன், ஒரு இறைமையுள்ள நாட்டினுள் படைகளை அனுப்பி போரை ஆரம்பித்த புட்டின் பற்றி ஒரு வரி கூட இல்லை. வீட்டில் யன்னல்கள் அதிகமோ😂 டிரெம்ப் இருக்கும் வரை புட்டினுக்கு வெற்றி மேல் வெற்றிதான். ஈயூ, யூகே, துணையுடன் - அதிக இழப்பு இல்லாமல் டிரம்பின் பதவிகாலத்தை எப்படி கடத்துவது என்பது மட்டுமே இப்போதைக்கு செலன்ஸ்கியின் குறி என நான் எண்ணுகிறேன். பிகு அமெரிக்கன் அரசிடம் இருக்கும் எப்ஸ்டீன் பைலில் டிரம்ப் பற்றிய போட்டோ தான் உள்ளது…. புட்டினிடம் டிரம்பின் எப்ஸ்டீன் விளையாட்டுகளின் வீடியோவே உள்ளதாம்.
-
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
வெள்ள நேரம் நாட்டில நிண்டனான் பாருங்கோ… ஈழத்தமிழர் காதில் இப்போ முழுசா அனுரா சுத்துற பூத்தான் பாருங்கோ… ஆமி, நேவி இல்லாட்டில் இனமே வெள்ளத்தில அழிஞ்சிருக்கும் எண்ட அளவுக்கு பூந்தோட்டமே காதில இருக்கு கண்டியளே…. இனி எந்த தமிழ்தலைவரின் பூவும் அங்கே வேலைக்கு ஆகும் போல தெரியவில்லை.
-
புட்டு கேட்ட கணவனை போட்டு தள்ளிய மனைவி கத்தியுடன் சரண்
இது பரபரப்புக்காக எழுத பட்ட தலைப்பு போல படுகிறது. சும்மா சந்தோசமான தாம்பத்யத்தில் இருந்த மனைவி - ஒரு நாள் புட்டு கேட்டதற்கா தலையை கொத்துவா? Battered women syndrome போல ஏதோ பிண்ணனி காரணம் இருக்கும் என நினைக்கிறேன். நீங்கள் கொலைக்கான உண்மை காரணத்தை அல்லது அதற்கு அருகான காரணத்தை நெருங்கி இருக்கலாம் என ஊகிக்கிறேன்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
பரம்பரை பரம்பரையாக லைன் ஒற்றை அறை குடிசைக்குள் மூன்று, நான்கு தலைமுறைகள் ஒன்றாக வாழ்ந்தபடி, எந்த சமூக, காணி, மனித அங்கீகாரம் கூட இன்றி, உழைக்கும் இயந்திரங்களாக, நவீன அடிமைகளாக… வெறும் 100 கிமி தொலைவில்… வாழும்… சக தமிழனை… அவன் சுய விருப்பில்…. எமது இடம் கூட்டி வந்து, அவமாக போகும் எமது மனைகளில் இடம், கொடுத்து, ஒரு தொழிலுக்கான பாதையையும் காட்டலாம் என்கிறோம்… யூதனோ, சிங்களவனோ தன் சக இனத்தை இப்படித்தான் நடத்தி இருப்பான். ஆனால் சுண்ணாம்பு தமிழர்களுக்கு இது வினோதமான கோரிக்கையாக இருக்கிறது. சிங்களவரின் பாரம்பரிய தாயகத்தில் அவன் நாலாம் தர பிரஜையாக இருப்பதே அவனுக்கு நல்லது என்கிறீர்கள் 😂. இந்த மனோநிலை வினோதம் அல்ல… விசம்…விசம்…விசம்.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
அதுதான் செலன்ஸ்கியின் குலுக்கல் நடனத்தை பகிர்ந்த கருத்து செழுமையை களமே கண்டதே. சாத்தான் வேதம் ஓதக்கூடாது. வாசகருக்கு, இந்த செலன்ஸ்கி ஒரு கோமாளி பெல்லி டான்ஸ் ஆடுகிறார் என மேற்படி கருத்தாளர் யாழில் பதிந்த வீடியோ ஒரு ஏ ஐ புரட்டு. பச்சை பொய்யர் - பொய் என தெரிந்தே பதிந்தார் என்பது என் குற்றச்சாட்டு. ஆதாரம் இதோ. இதுதான் இவர் ஏ ஐ உலகில் “கருத்தாடும்” இலட்சணம். வெக்கட்கேடு! https://www.reuters.com/article/fact-check/dancer-in-social-media-video-is-not-ukraines-president-zelenskiy-idUSL1N3930VL/