Everything posted by goshan_che
-
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
ம்ம்ம்….உது செய்தவர்…செய்யாதவர் எல்லாரும் வழமையா அடிக்கிற கேட்டு புளிச்சு போன டயலாக்தான் அண்ணை 😂. தலைவர் வெளிநாட்டுக்கு பல்மருத்துவம் படிக்க அனுப்பினவர் என்பது தொட்டு யாழில் எத்தனை கஞ்சா கப்ஸா கதையளை நாங்களும் கேட்டு வாறம்😂. நீங்கள் செய்யலாம்…ஆனால் அதை சொன்னால்தானே நாங்கள் பாராட்ட முடியும். சொல்லவும் மாட்டியள், எனவே பாராட்டவும் முடியாது, சொல்லி செய்பவரை பாராட்டினால் அதையும் நொட்டை சொன்னால்? இங்கே ஆமி விளையாடும் கேம் புரியாத பபாக்கள் அல்ல யாரும். உன்னிப்பாக கவனித்தால்…ராசையா குடும்பத்தை பாராட்டிய எவரும் ஆமியை பற்றி ஒரு வரி குஇட எழுதவில்லை என்பது புரியும். அனுரவுக்கு இத்தனை காவடி எடுத்த நீங்கள் இப்படி எழுத வெட்கமாயில்லை? இராணுவத்தை, மகிந்தவை முள்ளிவாய்க்கால் அவலத்தை வெளிநாட்டு அளுத்தத்துக்கு இணங்கி நிறுத்தி விடாதீர்கள், எம் ஆதரவு உண்டு என நெட்டி தள்ளிய பச்சை இனவாதி அனுர, ஜேவிபி. அனுரவுக்கு காவடி தூக்கும் உங்களுக்கு ஆமியை கண்டதும் மாவீரர் நினைவு வந்திட்டாம். நல்ல மாய்மாலம்😂.
-
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
முப்படைகளின் தளபதி, பாதுகாப்பு அமைச்சர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பச்சை இனவாதியாக உள்ள ஒரு நாட்டில்தான் இப்படி எல்லாம் நடக்கும் 😂.
-
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
இராணுவத்தை ஈடுபடுத்தாமல் நீங்கள் மானிப்பாயில் இப்படி ஒரு காரியத்தை செய்யும் போது அதை இதை விட இரு மடங்கு பாராட்டுவோம் அண்ணா😂. #நொட்டைக்கு குறையில்லை 😂
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
அவரை விட பெரிய அரசியல் ஞானியான நீங்கள் 2025 இல் “அனுரவை அனுசரித்து போவதை தவிர வேறு வழியில்லை” என்ற முடிவுக்கும்…. 2022 இல் “ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா தன் பிராந்திய பாதுகாப்பு கருதி நடந்து கொண்டது சரிதான்” என்ற முடிவுக்கு வரவில்லையா? நீங்கள் காலம் தாழ்த்தி வந்த இடத்துக்கு சம்பந்தர் 2009 மேயிலேயே வந்திருக்க கூடும்.
-
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
இன்னயாவிலும் புண்ணியம் கோடி… நன்றி டாக்டர் 🙏 ராஜையா குடும்பத்தினர்.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
உங்கள் அசாத்திய தைரியத்துக்கு வாழ்த்து😂. யாழ்களத்திலேயே அர்ஜூன், ஜூட், துல்பென், ஜீவன் என இப்படி வாய்ப்பை உருவாக்க முனைந்து, பிச்சை வேண்டாம் நாயை பிடி என ஓட வைக்கப்பட்டோர் பலர் 😂. அரசியல் பக்கமே தலைவைத்தும் படுக்காத, நவீனன் சும்மா சங்ககாராவை அவதாரில் வைத்தமைக்காக கூட்டமாக கூடி கொத்தி கலைக்கப்பட்டார். இப்போ ஐலண்டுக்கு சுன்னத் டெஸ்ட் நடக்கிறது 😂. உண்மையில் இங்கே நாதம், நியாயம், கொழும்பான் தாம் முஸ்லிம்கள் என சொல்லி எழுதும் நிலை இருக்க வேண்டும்? ஆனால் தாதாக்களுக்கு பயந்து அவர்களும் தமிழர் என்பது போல் எழுதுகிறார்கள். நிலமை இப்படி இருக்கும் போது, ஒற்றுமையாவது, ஒரே திசையாவது, ஹைகோர்ட்டாவது என்பதுதான் என் மதிப்பீடு😂.
-
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
👆 சும்மாவே சின்னராசுகளை கைல பிடிக்க ஏலாது. இதில் வாயில் லட்டை வேறு கொடுத்தால் சும்மாவா😂 உங்கள் எல்லாரையும் தூக்கி சாப்பிடும் ஒருத்தர் இருக்கார்…. அவர் ஏதோ பெரிசா கடையிறார்… வந்ததும் திரையிடப்படும் சதி லீலாவதி😂
-
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
👆இதில் சிந்தியா ரீட் எப்ஸ்டீனுக்கு இமெயில் போட்டுள்ளார். அதில், டாக்டர் ஜேரெக்கி உங்கள் ஆய்வுக்காக (study) தேவைப்படும் அறிஞர்களின் பெயர் பற்றி அறிந்துள்ளார். ஆனால் இந்த பெயர்களை பாதுகாப்பாக/ பரகசியமாக்காமல் வைத்திருக்கவும் என உள்ளது. இது👇 ராஜன், ரன்ட ஜீவன் கூல்கள் பற்றி அனைவரும் அறிந்த தகவலகள் ஒரு அட்டவணையில் போடப்பட்டுள்ளது. வழமை போல் ஈழத்தமிழ் மொக்கை பீசுகள் தும்பை விட்டு வாலை பிடிக்கிறன. இதில் ஹூல்கள் எந்த சிறுவர் துஸ்பிரயோகம் செய்த ஆதாரமும் இல்லை. அப்படி வந்தால் அப்போ பார்க்கலாம். ஆனால் ஜெப்ரி என்ன ஆய்வை மேற்கொண்டார் அல்லது, மேற்கொள்ள முயன்றார்? அது ஈழதமிழர் பற்றியதா? புலிகளை அழிப்பது பற்றியதா? அல்லது கணிதம், எலேரிக்கல், எலெக்ரோனிகல் சம்பந்தபட்டதா?
- e3186492-4950-4641-aae6-25de5b494db2.jpeg
- 061ee24d-cf3b-4f66-96a6-8aa165154321.jpeg
-
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
வாசகர் தெளிவுக்காக: எப்ஸ்டீன் பல விடயங்களில் மூக்கை நுழைத்த, ஈடுபட்ட ஒரு பெரும் பணக்காரார். தனியே சிறுவர் துஸ்பிரயோகம் மட்டும் அல்ல, அவர் வாழ்க்கை சம்பந்த பட்ட பலதை, பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது: அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும், அவருக்கு கோப்பி வித்தவன், முடிவெட்டினவன், கார் பார்க்கிங்கில் கதவு திறந்தவன் எல்லாரும் சிறுவர் துஸ்பிரயோகத்திலும் ஈடுபட்டார்கள் என சொல்ல முடியாது. இதுவரை நான் அறிந்த தகவல்களை: ராஜன், ஜீவன் கூலை பொறுத்தவரை. எப்ஸ்டீன் scholars list என ஒரு லிஸ்டை தயாரித்துள்ளார். இது ஏன், தயாரிக்கபட்டதென தெரியவில்லை. இலங்கையில் அரசியலில் ஆளுமை செலுத்த தமக்கு ஏதுவானவகளை தெரியும் முயற்சியோ அல்லது வேறு எதுவுமாகவும் இருக்கலாம். இந்த லிஸ்டில் இவர்கள் பெயர் - ஒரு பயோடேட்டா உள்ளது. இந்த லிஸ்டில் தம் பெயர் இருப்பது இவர்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம். இதை வைத்து இவர்கள் சிறுவர் துஸ்பிரயோகத்தில் பங்கு என கூற முடியாது. டிரம்ப்பை, கிளிண்டனை போல் எப்ஸ்டீனின் ஐலண்டுக்கு போனதாயோ, மசாஜ் எடுத்ததாயோ கூட எந்த தகவலோ படமோ இதுவரை இல்லை. பிகு ஆனால் இவர்களின் பின்புலம், தாம் பள்ளிகூடம் கூட போகவில்லை ஆனால் இவர்கள் வெளிநாட்டில் போய் டாக்டரேட் எல்லாம் பண்ணி உள்ளனர் என்ற வயித்தெரிச்சலில் சிலர் இதை குற்றம் நிருபணம் என்ற ரீதியில் பரப்பி லைக்ஸ் பிச்சை எடுப்பது கண்கூடு. ரண்டஜீவனை யாழில் பலதடவை கோஷான் வறுத்துள்ளார். ஹூல்கள் பற்றிய எப்ஸ்டீன் கோப்பில் உள்ள பதிவுகள்.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
2009-2012 இல் இப்போதைக்கு காணி, பொலிஸ் அதிகாரத்தை தரும் 13 ஐ முழுமையாக அமல் படுத்த கோரலாம் என கூறியோரை புலம்பெயர் புஸ்வாணங்கள் துரோகி என கூறி திரத்தி அடித்தனர். சில மாதங்களுக்கு முன்னர் கூட யாழில் ஒரு திரி ஓடியது. இப்போதும் 1987 இல் நாம் ஒரு அரிய சந்தர்பத்தை இழந்தோம் என எத்தனை ஆட்களை யாழில் ஒத்து கொள்ள வைப்பீர்கள். நானும், ஜஸ்டீன் அண்ணா, ஐலன்டும்தான் கை உயர்த்துவோம்😂. ரசோ அண்ணாவும் சேரக்கூடும். 1990களில் இல் TNL ஒரு விவாவத்தில் SL Gunasekara குமார் பொன்னரிடம் சொன்னார்: வரலாற்றில் எப்போதும் நீங்கள் முடியாததை கேட்டு, முடியுமானதையும் இழக்கும் கூட்டம் என. விகிதாசார பிரதிநிதிதுவம் கேட்க வேண்டிய போது, 50:50 உரிமை கேட்டீர்கள், மாவட்ட சபை கோர வேண்டிய போது, மாகாண சபை கோரினீர்கள், மாகாண சபை கிடைத்த போது தனி நாடே தீர்வென்றீர்கள். இப்படி முட்டாள்தனமாக இருந்தால் உங்களுக்கு எதுவும் கிடையாது என. கடைசியில் அந்த இனவாதி கூற்றே நிஜமானது. இப்போ நாமே அனுரவுக்கு காவடி எடுக்கிறோம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ம்க்ஹூம்……😂
-
எப்ஸ்டீன் தொடர்பு ஈழத்தமிழ் - கூல் முகங்களின் ஹொட் தொடர்புகள்!
வாசகர் தெளிவுக்காக: எப்ஸ்டீன் பல விடயங்களில் மூக்கை நுழைத்த, ஈடுபட்ட ஒரு பெரும் பணக்காரார். தனியே சிறுவர் துஸ்பிரயோகம் மட்டும் அல்ல, அவர் வாழ்க்கை சம்பந்த பட்ட பலதை, பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது: அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும், அவருக்கு கோப்பி வித்தவன், முடிவெட்டினவன், கார் பார்க்கிங்கில் கதவு திறந்தவன் எல்லாரும் சிறுவர் துஸ்பிரயோகத்திலும் ஈடுபட்டார்கள் என சொல்ல முடியாது. இதுவரை நான் அறிந்த தகவல்களை: ராஜன், ஜீவன் கூலை பொறுத்தவரை. எப்ஸ்டீன் scholars list என ஒரு லிஸ்டை தயாரித்துள்ளார். இது ஏன், தயாரிக்கபட்டதென தெரியவில்லை. இலங்கையில் அரசியலில் ஆளுமை செலுத்த தமக்கு ஏதுவானவகளை தெரியும் முயற்சியோ அல்லது வேறு எதுவுமாகவும் இருக்கலாம். இந்த லிஸ்டில் இவர்கள் பெயர் - ஒரு பயோடேட்டா உள்ளது. இந்த லிஸ்டில் தம் பெயர் இருப்பது இவர்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம். இதை வைத்து இவர்கள் சிறுவர் துஸ்பிரயோகத்தில் பங்கு என கூற முடியாது. டிரம்ப்பை, கிளிண்டனை போல் எப்ஸ்டீனின் ஐலண்டுக்கு போனதாயோ, மசாஜ் எடுத்ததாயோ கூட எந்த தகவலோ படமோ இதுவரை இல்லை. பிகு ஆனால் இவர்களின் பின்புலம், தாம் பள்ளிகூடம் கூட போகவில்லை ஆனால் இவர்கள் வெளிநாட்டில் போய் டாக்டரேட் எல்லாம் பண்ணி உள்ளனர் என்ற வயித்தெரிச்சலில் சிலர் இதை குற்றம் நிருபணம் என்ற ரீதியில் பரப்பி லைக்ஸ் பிச்சை எடுப்பது கண்கூடு. ரண்டஜீவனை யாழில் பலதடவை கோஷான் வறுத்துள்ளார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
என்னது போட்டி தொடங்க முதலே 15ம் பிள்ளையா😂. இனி சின்ராச கைல பிடிக்கேலா😂
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இது கொஞ்சம் ஓவர் 😂. அப்படி ஒரு வாய்ப்பான ஏது நிலையும் இருக்கவில்லை. மாறாக இப்போ இருப்பதை போன்ற உத்திகள், பலம் ஏதுமற்ற ஒரு கையறுநிலையில் தமிழினத்தை நிறுத்திவிட்டுத்தான் 2009 ஆயுத மெளனிப்பு நடந்தது. இப்படி தோசையை பிரட்டி போட்டு, வரலாற்றை மாற்றி எழுதி எம்மை நாமே பேய்க்காட்டுவதால் மேலும் அழிவே மிஞ்சும். தவிரவும் கூட்டமைப்போ வேறு எவருமோ இலங்கையை நம்புகிறோம் என சொல்லவில்லை. ஜெனிவாவில் தமிழர் தரப்பு ஒட்டு மொத்தமாக வெளியக விசாரணை கோரிய போது, நாடுகள் உள்ளக விசாரணைக்கு இலங்கைக்கு காலம் கொடுத்தன. அதை கூட்டமைப்பு ஏற்காமல் விட்டிருக்கலாம். அப்படி செய்தால் கஜன் போல் யாரும் சீண்டாத நாறல் மீன் போல் ஆகி இருக்கும் அவர்கள் நிலையும். புலிகள் இந்தியா, சர்வதேச சமூகத்தை பகைத்தது போல் நாமும் நடக்ககூடாது என கூட்டமைப்பு பதுங்கி நடக்க… ஆனால் அதிலும் சிங்கள இராஜதந்திரமே ஈற்றில் வென்றது. செலென்ஸ்கியை போல் ஒரு இராஜதந்திரி நமக்கு வாய்க்கவில்லை. அப்படி ஒருவர் 1948 க்கு பின் இருக்கவும் இல்லை. ஒருவேளை முழுச்சுதந்திரம் கொடுத்திருப்பின் பாலா அண்ணை இப்படி வந்திருக்கலாம்.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
மிக தெளிவாக நடந்ததை பேசியுள்ளார். இதுதான் உண்மை என்பதை யாரும் மறுத்தால் அவர்களுக்கு மேல்வீடு பிழை என்றுதான் கருதலாம். ஆனால் இதை இப்படி தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் தலைவர் என சம்பந்தன் பாராளுமன்றில் பேசியிருக்க தேவையில்லை. எமது அழுக்குத்துணியை பொதுவில் கழுவ அல்ல அவர் தெரிவுசெய்யப்பட்டார். அது எம் போன்ற கருத்தாளரின் வேலை. அவர் புலிகளும் தவறிழைத்தனர் ஆனால் அதனால் மட்டும் தமிழரிகளின் நியாயமான போராட்டம் பயங்கரவாதம் என்றாகாது என இதை சொல்லி இருக்க வேண்டும். சம்பந்தன், சுமந்திரன் இருவரும் வக்கீல்கள் ஆனால் தம் brief என்ன என்பதில் இருவருக்கும் சிந்தனை தெளிவு இல்லை: நாம் மேலும் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். சம்பந்தரோ, வேறு எந்த கூட்டமைப்பு அரசியல்வாதியுமோ, அவர்களின் தவறுகளை மறுதலித்து அவர்களுக்கு வெள்ளை அடிக்கும் அளவுக்கு புலி ஆதரவாளர் அல்ல. அவர்களை ஒரு காலத்தில் புலிகள் வேட்டையாடினார்கள். புலிகளும் இவர்களும் ஒரே நேர்கோட்டில் வந்தது பல வேறுபாடுகளை, குறிப்பாக கொள்கை வேறுபாடுகளை புறம்தள்ளியே. என்னால் கூட புலிகளின் பல செயல்களை ஆதரிக்க, நியாயப்படுத்த முடியாது. எனவே இப்படியான அரசியல்வாதிகளிடம் விசுகு அண்ணாவிடம் இருக்கும் புலி பக்தியை எதிர்பார்க்க முடியாது. சுரேஸ் போன்ற கள்ளர்கள் அமசடக்கியாய் இருப்பார்கள். சம், சும் உளறிகொட்டுவார்கள். கஜன்ஸ் விசுகு அண்ணா ரேஞ்சுக்கு இறங்கி பக்தியை காட்டி வாக்கை அள்ளுவார்கள்.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
எல்.ரீ.ரீ.ஈ தோன்றுவதற்கு நியாயமான காரணங்கள் இருந்தன. அதை யாராலும் மறுக்க முடியாது. சிங்கள பொதுமக்கள், தமிழ் பொதுமக்கள், முஸ்லிம் பொதுமக்கள் என பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியபோது அது ஒரு பயங்கரவாத அமைப்பு என்று அழைக்கப்பட்டது. அந்த நேரத்தில்தான் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாத அமைப்பு என்று அழைக்கப்பட்டது. அவர்கள் ஒருபோதும் மனித உரிமைகளை மதிக்கவில்லை; அவர்கள் ஒருபோதும் ஜனநாயகத்தை மதிக்கவில்லை. இவைதான் அவர்களின் தோல்விகள். எல்.ரீ.ரீ.ஈ-ஐ அழித்ததற்காக பலர் பெருமைப்படுகிறார்கள். ஜனநாயகத்தை கடைபிடிக்காமல், மனித உரிமைகளை கடைபிடிக்காமல் எல்.ரீ.ரீ.ஈ தன்னைத்தானே அழித்துக் கொண்டது என்று நான் சொல்கிறேன், அதுதான் உண்மை. நமது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மிகவும் மதிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினரும், எனது நல்ல நண்பருமான மறைந்த லக்ஷ்மன் கதிர்காமர், எல்.ரீ.ரீ.ஈ பலவீனப்படுத்தப்படுவதையும், எல்.ரீ.ரீ.ஈ முடக்கப்படுவதையும், உலகம் முழுவதும் பல நாடுகளில் எல்.ரீ.ரீ.ஈ கட்டமைப்புகள் தகர்க்கப்படுவதையும் உறுதி செய்வதில் மிகவும் முன்னணிப் பங்காற்றினார். எல்.ரீ.ரீ.ஈ-ஐ தோற்கடிக்க சர்வதேச சமூகம் இலங்கைக்கு அளித்த ஆதரவிற்கு அவர் பெரும்பாலும் பொறுப்பேற்றார். லக்ஷ்மன் கதிர்காமர் இன்று வாழ்ந்திருந்தால், இன்று நடக்கும் பல விஷயங்களையும், இன்று சொல்லப்படும் பல விஷயங்களையும் பார்த்து அவர் மிகவும் திகிலடைவார். எனவே, இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஐயா, என் சொந்தத் தலைவர்களும், என் சொந்த சகாக்களும் எல்.டி.டி.இ.யினரால் கொல்லப்பட்டனர். நான் எல்.டி.டி.இ.யின் ஹிட்-லிஸ்டில் இருந்தேன். ஏன்? நீங்கள் எங்களை எல்.டி.டி.இ. பிரதிநிதிகள் என்று அழைக்கிறீர்கள். எல்.டி.டி.இ.யினரால் கொல்லப்பட இருந்ததால் எங்களை பினாமிகள் என்று அழைக்கிறீர்களா? எல்.டி.டி.இ.யின் ஹிட்-லிஸ்டில் இருந்ததால் எங்களை பினாமிகள் என்று அழைக்கிறீர்களா?
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
தெளிவான புரிதல். விடுதலை வீரர்களை போல் அரசியல்வாதிகள் இருப்பர் என எதிர்பார்ப்பது நடைமுறை சாத்தியம் அற்றது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இது வரைக்கும் கணக்கு போட்டு எழுதி என்னத்த கிழிச்சிட்டம்😂. அதனால இந்த முறை டக்கிடிக்கிடோஸ் முறையை பயன்படுத்தினேன்😂. ஓ எல், ஏ எல் நேரம் எல்லாம் எம் சி கியூவில் கைகொடுத்தது😂. பாவம் எ.பொ.த என் பதிலை கண்டு முடிய பிச்சிக்காத குறை😂. நடக்கும் என்பார் நடக்காது… நடக்காதென்பார் நடந்து விடும்.…😂
-
`தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதாம்; உண்மைதான், ஏனெனில்...' - நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் உரை!
தலைவன் பேச்சு போட்டில களம் இறங்கிட்டான்… இனி ராஜசபால ஒவ்வொருத்தனும் சட்டையை பிச்சி கிட்டு பைத்தியமா அலைய வேண்டியதுதான்😂
-
சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!
சக மனிதனாக, என் சொந்த மண்ணில் கெளரவமாக வாழ வேண்டும் என்ற உந்தல்… சுதந்திரவேட்கை….என்றும் போரடிக்காது. ஆனால் ஈரச்சாக்கால் மூடி மழுங்கடிக்கலாம்.
-
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
தமிழ் கட்சிகள் மீது வெறுப்பு என்பதால், யூ என் பி, சஜித், வேறு யாருக்கும் போடவில்லை அல்லவா? இலங்கையின் சுதந்திர நாளுக்கு அரச அதிகாரிகள் கூப்பிட்டால் போகவேண்டும் என்பது நியதிதான். ஆனால் ஒட்டு மொத்த பெற்றாரும் பிள்ளைகளை அனுப்ப மாட்டோம் என முடிவெடுத்தால்? மக்கள் இயல்பாகவே சிறிலங்கன் என உணர தலைப்பட்டு சில வருடங்கள் ஆகிவிட்டது. வடகிழக்கு எங்கும். ஆனால் ஏனைய மாவட்டங்களை விட யாழில் இந்த காவடி ஆட்டம் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது. இதை சொல்ல அப்புகாத்து தேவையில்லை. ஊருக்கு போய் அவதானித்தாலே போதும். நிலமை கைமீறி போய்விட்டதாகவே எனக்கு தெரிகிறது.
-
சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!
மட்டகளப்பு வன்னியால்தான் தமிழ் தேசியம் ஐ சி யூவிலாவது உயிர்வாழ்கிறது. அங்கால படகு ஓட்டுறதுலயும், மேளம் பீப்பீ, காவடி ஆடுறதுலயும் பிசி.
-
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
இதனால்தான் யாழ் மாவட்டத்தில் 3 எம்பி ஜேவிபிக்கு கிடைத்தது என்கிறீர்களா?