Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. என்ன இது? நல்ல நண்பர்கள், கலியாண வீட்டில் பொட்டலம் எல்லாம் கடத்தி, கட்டியணைத்தீர்கள். விலாசம் தெரியாமலா? விலாசம் தராமலா பார்சல் வரவில்லை என்று ஏங்குகிறார்? பயணம் போவதும் வருவதும் பிரச்சனையல்ல, கொண்டுவரும் பொருட்களை கொடுத்து முடிப்பதே பெரிய வேலை.
  2. இது தொல்பொருள் அமைச்சுக்கு தெரியுமோ? உடனடியாக வந்துதடை ஏற்படுத்தி தேடத்தொடங்கி விடுவார்களே? பௌத்த சாசன அமைச்சர் என்று சொல்லிக்கொண்டு தமிழரின் காணிகளை பிடித்த அமைச்சரின் பெயரை மறந்து விட்டேன், அவரும் மறைந்து விட்டாரா? கள்ளரின் தொலைபேசிகளும் செயலிழந்து விட்டனவாம்.
  3. யாரோ அப்பாவி சின்னப்பையன், பெற்றோரோடு அமர ஆசைப்படுகிறார் என்று நினைத்திருப்பார். அது சரி, தங்களின் பயணக்கட்டுரை எப்போ வெளிவருகுதாம்? படிக்க ஆவல்! கொண்டுவந்த பொட்டலங்கள் பகிர்ந்தளிச்சாச்சா உரியவர்களுக்கு, அன்பானவர்களுக்கு, வேண்டப்பட்டவர்களுக்கு?
  4. தொழில் நுட்ப கோளாறான விமானம் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தியது? நெதன்யாகு பாவம், அவர் யாரையும் கொலை செய்ய நினைக்கவில்லை. நேற்று சத்துணவுக்கு வரிசையில் நின்ற குழந்தைகளை இலக்கு, இன்று தண்ணீருக்கு நின்ற குழந்தைகள் இலக்கு. ஆனால் அது தொழில் நுட்ப கோளாறா, நெதன்யாகுவின் மூளைக்கோளாறா? போர் முடியுமுன்னோ பின்னோ நெதன்யாகு அரசியலில் இருந்து துரத்தப்படுவார்.
  5. அவர்களும் கையில் எடுக்கட்டும். நமகென்ன பயம்? நாம் என்ன இல்லாததையா கிளறுகிறோம்? அன்று தொடங்கி இன்றுவரை இடையறாமல் இதற்காக குரல் கொடுத்தோம் போராடினோம். அவர்களும் தங்களால் இயன்றதை செய்யட்டும். அவர்கள்; மக்கள் புலிகள் இல்லையாம், தமிழ் மக்களின் சனத்தொகையில் இருபத்தைந்து வீதமே புலிகளாம், புலிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லையாம். மக்கள் செல்வாக்கு இல்லாமலா முப்பது ஆண்டுகள் புலிகள் நிர்வாகம் நடத்தினர்? வெள்ளைவத்தை வரை முள்ளிவாய்க்கால் நினைவு கூருகிறார்கள்? மக்கள் புலிகள் இல்லை என்றால் இருபத்தைந்து சதவீத புலிகளையா சிங்களம் கொன்றது? அப்போ ஏன் தமிழ் மக்களை வயது வேறுபாடின்றி வகைதொகையின்றி கொன்றது? எதற்கு வெள்ளைவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவு கூருகிறார்கள்? என கேள்வி எழுப்புது ஒன்று. நாங்கள் எங்கை வேண்டுமானாலும் செய்வோம் அதற்கு இவருக்கு ஏன் வயிறு எரியுது? இவ்வளவு நாளும் கிண்டாத செம்மணியை இப்போ ஏன் கிண்டவேண்டுமென்று வேறு கேள்வி? எப்போ வேண்டுமானாலும் கிளறலாம். அங்கே தமிழரின் உடல்கள் கொன்று புதைக்கப்படுள்ளது. மக்கள் வேறு புலிகள் வேறு என்பவர் பொதுமக்களின் உடலையே தாம் புதைத்ததாக அடையாளம் காட்டியுள்ளனர். இப்போ என்னவென்றால்; தென்பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் இடம்பெற்றுள்ளது, சிங்கள சட்டத்தரணி இசைப்பிரியா, பாலச்சந்திரனுக்கு நீதி வேண்டி முறையிட்டிருக்கிறார், இப்படியே போனால் சிங்கள, தமிழ் மக்கள் ஒன்றிணைந்தால் தமக்கு அரசியல் செய்ய ஏதுமில்லை, அதோடு அடித்தே கொன்று போட்டாலும் போடுவார்கள் என்றொரு பகுதி பதைபதைக்குது, அவர்களுக்கு கால் கழுவி, ஏவல் வேலை செய்து பிழைக்கும் கூட்டம் பிழைப்பு போகுதே என கூக்குரலிடுகுது. அனுரா உண்மையில் சமாதானத்தை, நாட்டின் முன்னேற்றத்தை விரும்பினால் இதய சுத்தியோடு நீதி விசாரணை நடத்தி ராஜபக்ச குடும்பத்தை சர்வதேச நீதிமன்றத்தில் கையளிக்க வேண்டும். அப்போ இந்த ஏவல் கூட்டம் ஓடி ஒதுங்கும். அனுரா ஆட்சியேற்றவுடன் சவால் விட்டவர்கள் இப்போ, ஒருவர் ஒருவராக ஓடி மறைக்கின்றனர், நோயாளிகளாகின்றனர். அவ்வளவு சுமையை தாங்கி நாட்டை ஏமாற்றிக்கொண்டு வாழ்ந்திருக்கின்றனர். இது உங்களுக்கான பதிலல்ல, பலபேர் காண முடிவதால் எழுதுகிறேன்.
  6. ஒரு கன்னியாஸ்திரி கரவெட்டியை சேர்ந்தவர். அவரும் அந்நேரம் மக்களோடு மக்களாக மக்களுக்காக சேவை செய்தவர். இன்னொருவர் சிவந்தமேனி அழகான முகத்தோற்றமுடையவர் பெயரை மறந்துவிட்டேன் இவர்கள் இருவரும் எனக்கு அநேகமாக தெரிந்தவர்கள் இதிலொருவர் அல்லது அவர்கள் ஒருவருமே இல்லாமல் வேறொருவராக இருக்கலாம் உங்கள் அன்ரா. அவர் யாராக இருந்தாலும், இறைவனில் ஆறுதலடைவாராக!
  7. சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே யும் காணாமல் ஆக்கப்படுவாரா அல்லது உண்மையை தென்னிலங்கைக்கு தெளிவு படுத்துவாரா?
  8. இல்லை. அருண் சித்த்தார்த், நேரத்து ஒரு பெயர் பட்டியலோடு அலைகிறார். தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிஞாயமும், சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனையும் வாங்கிக்கொடுக்கப்போகிறாராம், அதற்காக காத்திருக்கலாமென நினைக்கிறன்.
  9. இன்று அருண் சித்தாத்தின் அறைகூவல் ஒன்று பாத்து வயிறு கிழிய சிரித்தேன். டக்லஸின் அறைகூவல் மறைய இவர் ஆரம்பித்திருக்கிறார். ஒரு விஷச்செடியிலிருந்து இன்னொரு விஷம் உருவாகும். மூன்றரை லட்ஷம் தமிழரில் இருபத்தைந்து வீதம் புலிகளாம் ஆகவே புலிகள்தான் மக்கள் மக்கள் தான் புலிகள் என்று சொல்ல முடியாதாம். அப்போ சிங்களம் கொன்ற தமிழர் எத்தனை லட்ஷம்? ஏன் அவர்களை சிங்களம் கொன்றது? புலிகளை அழித்து விட்டோம் என்று கர்சித்துக்கொண்டு இன்னும் ஏன் தமிழர் நிலப்பரப்பில் ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கிறார்கள்? முஸ்லிம்களின் படுகொலைக்கு நீதிவேண்டி புலம்பெயர் தமிழரை தண்டிக்கப்போகிறாராம். அவர்களின் கொலைக்கு எல்லா ஆதாரங்களுமுண்டாம். சரி, ஆதாரமிருந்தால் ஏன் இதுவரை தோண்டவில்லை? சரியான நிலம் அடையாளம் காணப்படவில்லையாம். நாங்கள் எல்லா ஆதாரம், சாட்சி, பொறுப்பு எல்லாவற்றுடனுமே தோண்ட தொடங்கினோம். அதை நிறுத்தியது யார்? ஏன் அரசோடு ஓத்துஇயங்கிய இவர்களால் அதை செய்ய முடியவில்லை? கோவில் பாடசாலைகளில் கொலை செய்தார்களாம் புலிகள். அப்போ இலங்கை அரசு செய்யவில்லையா? புலிகள் இருக்கும்போது ஏன் இவர் அதை கேட்கவில்லை? அப்போ இவர் எங்கே ஒளிந்திருந்தார்? இப்போ, இவருக்கு வயிறு வளக்க ஒரு தொழில் வேண்டும், அதற்கு ஒரு இயக்கம் வேண்டும், அதற்காக ஒட்டுக்குழுக்கள், கொலைகளை சந்தித்தவர்களை தன்னோடு இணையட்டாம். தான் நீதி வாங்கித்தருவாராம். மூஞ்சூறு தான் போக வழியை காணேல்ல விளக்கு மாத்தையும் தூக்கிக்கொண்டு ஓடிச்சாம். இப்போ அனுரா தனக்கு அழைப்பு விடுப்பார் என்று குரல் கிழிய கத்துது. துணுக்காயில் நான்காயிரம் பேரை புலிகள் கொன்றார்களாம், அதற்கான லிஸ்ற் இல்லை இந்த முகவரிடம். முஸ்லிம்கள் எழுபத்திரண்டு பேர் என லிஸ்ற் காட்டுது. வெகுவிரைவில் தன வாயாலேயே கெடப்போகுது. மக்கள் ஒருபோதும் புலிகள் பக்கம் இல்லையாம். மக்கள் ஆதரவு இல்லாத இயக்கம் எவ்வாறு முப்பது ஆண்டுகள் நீடித்தது? என்ன அறிவாளி? வயிறு வளப்பதற்கு இப்போ ஒரு இயக்கம் தேவைப்படுகிறது இவருக்கு. மகிந்தாவுக்கு வக்காலத்து வாங்க வந்து செருப்பால அடி வாங்கியும் புத்தி வரல இதுக்கு. பாப்போம் அனுராவின் பதில் எப்படியிருக்குமென்று. கத்தி கத்தியே மாரித்ததவளை தனக்கு ஆபத்தை வருவிக்குமாம். நீதிக்காக கதைக்கிறானா, இனத்துக்காக கதைக்கிறானா, வயிற்றுப்பிழைப்புக்காக நடிக்கிறானா? வடக்கின் வசந்தம், கிழக்கின் விடிவெள்ளியெல்லாம் கதிகலங்குது. இது கண்டும் நேற்றுப் பெய்த மழைக்கு இன்று முழைத்த காளான் துள்ளிகுதிக்குது. இதுக்கு தமிழரசுக்கட்சியில இடம் கிடைத்திருந்தால்; இதன் நிலையை நினைத்துப்பாருங்கள்! கடவுளாய்ப் பார்த்துத்தான் குதிரைக்கு கொம்பு கொடுக்கவில்லை.
  10. அவர்கள் செம்மணி புதைகுழியின் குற்றவாளிகளை மறைக்க, காக்க இதை இப்போ கையிலெடுக்கிறார்கள். அவர்கள் யாரையோ குறிவைத்தே, இதை செய்து தடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் யார் இதன் சூத்திரதாரிகள் என்பது. எல்லா புதைகுழிகளின் பின்னாலும் ஒரே நிறுவனம். நீங்களே தெரிவிப்பது இவர்களை கொன்றது யாரென்பதை. இலங்கை அரசும் அதனோடு ஒட்டியிருந்த பல உண்ணிகூட்டங்களில் ஒன்றும். எதற்கு அப்போது தமிழ் முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்தி குளிர் காய வேண்டியிருந்ததோ அதுவே காரணம்.
  11. நீங்கள் சொல்வதெல்லாம் சரி ஆமத்துறு, இந்த பயங்கரவாதச்சட்டத்தால் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இளைஞர் பாதிக்கப்படும்போதெல்லாம் ரசித்துக்கொண்டிருந்துவிட்டு, இப்போ இந்த பன்னிரண்டு பேருக்காக வீதியில் இறங்கி கொடி பிடிப்பதேன்? அன்றெல்லாம் உங்களுக்கு பயங்கரவாதசட்டம் தேவையாயிருந்தது, அதை மேலும் மேலும் பலப்படுத்த வேண்டியிருந்தது. இப்போ அது உங்களுக்கு எதிராக பாயும்போது அகற்ற வேண்டுமென்கிறீர்கள் அது என்ன நிஞாயம் என்பதுதான் எனக்குப் புரியவில்லை? இயற்றினவர்கள் அதற்கு இரையாகும்போது நீங்கள் கூப்பாடு போடுவீர்கள், உங்களுக்கு போட்டு வளர்த்தவர்கள் அவர்களாச்சே. இப்போ உங்கள் தேவைக்கு தமிழரும் சேர்ந்து. இந்த பன்னிரண்டு பேரும் நாட்டுக்காக உழைத்தவர்களா, அனிஞாயத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர்களா? நாட்டை கொள்ளையடித்தவர்களுக்காக குரல் எழுப்பி மிகுதி கொள்ளையரையும் காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள்.
  12. தென்பகுதியில் இந்தச்சம்பவம், மக்களை கடற்படையினரே காப்பாற்றியதாக செய்திகள் வெளிவந்து, கடற்படையினருக்கு வாழ்த்துக்கள் குவியும். எத்தனை உயிர்களை கடலில் வைத்து வெட்டியும் கொன்றுமிருக்கும் இந்த கடற்படை. உயிருக்காக தங்கள் கைகளை உயர்த்தி உதவி தேடி கெஞ்சியிருப்பார்கள் எங்கள் மக்கள். அதில் எத்தனை குழந்தைகள் இருந்திருப்பர். இதனையும் அந்த காப்பாற்றப்பட்ட மக்கள் தெரிய முடிந்தால் தமிழரின் காருணியம், எதிரிக்கும் இரக்கம் கட்டும் மனநிலை புரிய வாய்ப்புண்டு. சுற்றுலா வரும் சிங்கள பயணிகளுக்கு இவைகளை தெரியப்படுத்த வேண்டும். முள்ளி வாய்க்கால் பேரவலம் முடிந்த பிற்பாடு, மஹிந்த, ஒவ்வொரு பௌத்த சங்கத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் பத்தாயிரம் ரூபா கொடுத்து வடக்கிற்கு தமது வீரத்தை காண்பிக்க, பௌத்த சங்க சுற்றுலா அனுப்பிவைத்தார். சம்பில் துறையில் தான் மிகப்பிரமாதமாக கட்டிய விகாரை எல்லாம், தன்னை தெற்கில் பிரபல்யப்படுத்த அவர் எடுத்துக்கொண்ட உத்திகள். அப்போ, தென்பகுதி சுற்றுலாப்பயணிகள் விறகுகள் தளபாடங்கள் என வாகனங்களில் வந்து தங்கிச்சென்ற வண்ணமிருந்தனர். அப்படியிருக்கையில் அவர்களது வாகனமொன்றும் விபத்தில் மாட்டிக்கொண்டது. ஆனால் எம்மக்கள் வெறுப்பை காட்டாமல் அவர்களை மீட்டு காப்பாற்றி அனுப்பி வைத்தனர். அந்த தோல்வி, இழப்பு, வெறுமை, போன்ற நிலையிலும் எம்மக்கள் மனிதாபிமானத்தை இழக்கவில்லை. இங்கே இருக்கிறார் புத்தன், ஜேசு, காந்தி, அல்லா. இதை புரியாமல் புத்தன் பெயரை வைத்துக்கொண்டு செய்வதெல்லாம் கொலை, கொள்ளை, அடாவடி.
  13. அதற்கு ஏன் நீங்கள் இடம் அளிக்கிறீர்கள்? உங்கள் பிரஜைகளை நீங்கள் கௌரவத்துடன் வாழ விட்டால் மற்றவர்கள் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? தமிழரின் அரசியல் உரிமைகளை பறித்தது இந்தியாவா? அவர்கள் மீது கலவரங்களை தூண்டி கொன்று ஒழித்தது இந்தியாவா? அவர்களின் நிலங்களைபறித்தது இந்தியாவா? தமிழரின் பூர்வீக நிலங்களில் இராணுவ காவலரண்களை, விகாரைகளை உருவாக்கியது இந்தியாவா? பிக்குவிற்கு இப்போ சிங்களத்தை புனிதமாக்க வேண்டிய தேவையுள்ளது. எங்கோ கேட்டதை இங்கு வந்து கக்குகிறார். ஆனால் கண்ணுக்கு முன் நிகழ்ந்தவைகளை, நிகழ்த்தியவைகளை மறைக்கிறார். பிரச்சனைக்கு தீர்வு காண முயலாமல் பழியை வேறொரு பக்கம் காட்டி தொடருங்கள் அடுத்த அத்தியாயத்தை, அந்த இந்தியாவே வெகு விரைவில் உங்களையும் கூறு போடும். உள்நாட்டு பிரச்சனையை சுமுகமாக தீர்க்க வக்கில்லாமல் சர்வதேசத்துக்கு கொண்டு போய், பிச்சை எடுத்து, சர்வதேச படைகளையும் ஆலோசனைகளையும் கையாண்டு சொந்த மக்களை கொன்றொழித்த இந்த இந்த நாட்டுக்கு இறைமையேது, அதிகாரமேது, பொருளாதாரமேது? உங்கள் மதம் என்னத்தை போதித்தது, சாதித்தது? நீங்கள் போதிப்பது மத போதனையுமல்ல நீங்கள் ஆன்மீக வழிகாட்டியுமல்ல. உங்கள் வாயிலிருந்து வெளிவருவது இனவாதம் மதவாதம் அழிவின் வழிகாட்டிகள் நீங்கள். அதுபற்றி நீங்கள் வெட்கப்படுவதில்லை, பெருமை பேசிக்கொள்கிறீர்கள். அரசியல் கூட்டங்களில் அரசியல்வாதிகளில் முதல் இருக்கைகளை தேடுகிறீர்கள். உங்களுக்கு எதற்கு மதம், காவி? இரத்தம் குடித்து வாழும் விஷ ஜந்துக்கள். முகத்தில் குரூரம், வாயில் கக்கும் இனவாதம், அடாவடி, பொய், திரிப்பு. வேறு என்ன உங்களிடமுண்டு மக்களுக்கு போதிப்பதற்கு?
  14. முன்னவர் கால்தடங்களை பின்பற்றுகின்றனர் கதிரையாசை, பதவியாசை பிடித்தவர்கள்.
  15. ஒருவேளை உங்கள் அன்ராவை நான் அறிந்திருக்க வாய்ப்பிருக்கலாம்.
  16. பரவாயில்லை, நாட்டிலுள்ள எல்லா புதைகுழிகளையும் தோண்டுங்கள், அதற்கான காரணத்தையும் கர்த்தாக்களையும் கண்டு பிடியுங்கள். எல்லா கொலைகளுக்கும் பின்னால் இருப்பது, சிங்கள இனவாதமே. விடுதலைபோரின் எதிராளிகள், இனவாதிகளும் அரசுமேயொழிய சாதாரண மக்களலல்ல. சாதாரண மக்களை தாக்கியது கொன்றது அரசும் அதன் கைக்கூலிகளுமே. அவர்களை இனங்கண்டு தண்டியுங்கள். ஆனால் அதை செய்ய மாட்டார்கள். தன்னை யாரும் தண்டிப்பதில்லை. அவர்களுக்கு பதவிகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். அதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோமே!
  17. அப்பாவி மக்களை கொல்வதற்கென்றே இந்த மருத்துவமனைகளை பயன்படுத்துகிறார்களா? இஸ்ரேலின் தாக்குதல் திட்டம் புரிகிறது. கமாஸை காரணமாக வைத்து அந்த நாட்டை அழிப்பது போர் நிறுத்தம் ஒன்று வருவதற்குமுன் அதை செய்து முடித்து கமாஸை அழித்து விட்டோமென விழா எடுப்பார்கள். இத்தனை மக்கள் நாளாந்தம் கொத்துக்கொத்தாக இறக்கிறார்கள், காரணம் நெதன்யாகு எனும் கொலைக்குற்றவாளி. அவனை கைது செய்ய முடியவில்லை, அதன் பின் மக்கள் எல்லாம் இறந்து புதைகுழியானபின் விசாரணையென உலகத்தை ஏமாற்றும், காலத்தை இழுத்தடிக்கும் செயலை அரங்கேற்றுவார்கள். ஒருதடவையில் பாடம் படிக்காதவர்கள் எப்போதுமே படிக்கச மாட்டார்கள். தாக்கப்பட்டவனையே பழி சொல்வார்கள். கோத்தா சொன்னானே, சர்வதேசம் போரை முடிவுக்கு கொண்டுவர எங்களை வற்புறுத்தியது, நாங்கள் அதற்கு செவிமடுக்காமல் போரை தொடர்ந்து செய்தோம், அதனால் சர்வதேசம் விசாரணை என்கிற பெயரில் பழிவாங்குகிறது. இதுதான் ஒரு இனத்தை அழிக்கும் யுக்தி. எப்போ எதிர்த் தரப்பு தொடர்ந்து தாக்குதல் நடத்தவில்லையோ, அப்போதே போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று பொருள். தொடர்ந்து ஒரு தரப்பு அதுவும் வென்ற தரப்பு போரை நடத்துவது என்பது மிஞ்சியுள்ள பொதுமக்களை அழித்து, அவர்களுக்கு சொந்தமான நாட்டை, நிலத்தை கைப்பற்றும், அபகரிக்கும் செயல். அதற்கு வேறு விளக்கம், நாம் செய்தது எதிரியுடனான போர் என, கோழைத்தனமான விளக்கம். அதையும் பார்த்துக்கொண்டே மனிதாபிமான சபைகள் நிறுவனங்கள் இருக்கின்றன. அவைகள் நடந்து கொள்ளும் விதமும் ஒவ்வொரு போரின்போதும் வெளியில் வந்து கொண்டே இருக்கின்றன. ஒருவேளை இவர்களே போரை உந்தித் தள்ளுகிறார்களோ என்கிற சந்தேகம் எனக்கு? இவர்களால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நன்மை, பாதுகாப்பு? அவர்கள் முன்னாலேயே இவ்வளவு கொடூரங்களும் நிகழ்கின்றனவே.
  18. குறைந்தது தனக்குப்பின் கட்சியை கொண்டுசெல்ல ஒருவரை தயார் படுத்தாமல் யமனோடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு கடைசிவரை தலைவர் பதவியில் குந்திக்கொண்டிருந்தவர். கட்சியின் கொள்கை ஒழுக்கத்தை கைவிட்டவர். இப்போ; பதவிக்காக அடிபாடு நடக்கிறது. இதில சம்பந்தரை யார்? ஏன் நினைவு கூரவேண்டும் ?சுமந்திரன் எனும் கொள்ளிக்காம்பை செருகியவரே இந்த ராஜ தந்திரிதான் கட்சியை சிதிலமாக்க.
  19. அவர் கொண்டுவந்த பார்சல்கள் பிரித்து பங்கிடுவதில் மும்முரமாக இருக்கிறார், கண்டிப்பாக உங்களுக்குரிய பார்சலோடு அழைப்பு வரும்!
  20. மன்னிக்கவும்! அவர்களுக்கு இப்போ இவற்றுக்கு நேரமில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். உட்கட்சிப்பூசல், குழி பறித்தல், உறுப்பினர்களை கட்சியிலிருந்து விரட்டியடித்தல் என்பவற்றில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
  21. அதே! இனியாவது சொல்வதை செய்வார்களா? இந்தப்போக்கு நிலைத்தால்; எதிர்காலத்தில் இவர்களின் பொருட்களை வாங்குவோருமில்லை, இவர்கள் உற்பத்திசெய்யும் தேவையுமில்லை.
  22. சிறியர் தனக்கு மட்டுமா கொண்டுவந்தவர்? பக்கத்துவீட்டுக்கார(ரி)ர், நண்பர்கள் இப்படி ஏகப்பட்ட கூட்டம் ஐயாவைசுற்றி போகப்போகிறாரென கேள்விப்பட்டதுமே. எத்தனைபேர் பட்டியல் கொடுத்திருப்பார்கள்? எத்தனைபேரை இரகசியமாக மனதுக்குள் நினைத்து வாங்கியிருப்பார். அவர் கொடுத்து வைத்தவர், வயிறு எரியுது எனக்கு.
  23. இராணுவத்தால் பிடிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இராணுவத்தின் காலத்திலேயே அடையாளம் காணப்பட்டு, வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு சாட்சிகளால், குற்றவாளிகளால் ஒப்புக்கொண்டு, அடையாளகாட்டி, அகழப்பட்டு,உறுதிப்படுத்தப்பட்டு பெயர் விவரங்கள் கொடுக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு மேலும் கிளறினால் தங்கள் கொலைகள் வெளியே வருமெனப்பயந்து அகழ்தல், பொறுப்புக்கூறல் கைவிடப்பட்டு இப்போ, மீண்டும் தொடர்கிறது. இவை யாவும் சம்பந்தப்பட்ட காலத்தில் தொடங்கி தொடர்கின்றன, மறுப்பதற்கோ மறைப்பதற்கோ இல்லை. அவைக்கு சாட்சியாக விசாரணைக்கோப்புகள் இன்னும் உள்ளன. ஆனால் அருண் என்பவரோ, அவரின் மனைவி என காண்பிக்கப்படுபவரோ கூறப்படும் காலத்தில், அங்கே பிரசன்னமாகி இருந்தது, இந்திய இலங்கை இராணுவமும் இவர் போன்ற ஒட்டு ஆயுதக்குழுக்களும். நாலாயிரம் பேர் என்கிறார், அவர்களின் பெயர் விபரங்கிகள் வெளிவரவில்லை, ஆதாரங்கள் இல்லை, சாட்சிகளில்லை, முறைபாடுகளில்லை, விசாரணையேதும் நடைபெறவில்லை, காணாமற் போனவர்களை தேடி எடுக்கப்படும் போராட்டங்களில் கூட இவர்கள் யாரும் பங்குபற்றியதாக தகவலேதுமில்லை. சம்பவம் நடந்ததாகஇவர்கள் கூறும் காலப்பகுதியில் புலிகள் அதிகாரத்திலில்லை, அவர்களே மறைந்து வாழ்ந்த, வேட்டைடையாடப்படும் காலத்தில் அவர்கள் பிரபல்யமான இடத்தில், பகிரங்கமாக அலுவலகம் நடத்தினார்கள் என்று சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதா? அந்தக்காலத்தில் யார் பிரசன்னமாகியிருந்தனர் என்று தெரிந்துகொள்ளக்கூடிய நிலையில் இவர்களின் வயதும் இருக்கவில்லை. யாரோ சொன்னார்கள் என்பது இவரது தர்க்கம். அந்த யாரோ என்பது யார்? அவர் ஏதும் ஒட்டுக்குழுவை சார்ந்து இந்தக்கொலைகளை நடத்தி தப்பிக்கும் நோக்கில் இவர்களை வழிநடாத்துகிறாரா? எந்த ஆதாரமுமில்லாமல் நடைமுறைகளுமில்லாமல் இப்போ திடுதிப்பென்று வந்து ஒரு குற்றச்சாட்டை வைப்பது அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கும் ஒரு காரணமே. இவரை கஷ்ரப்பட்டு படிக்க வைத்த தந்தையாரை தலைகுனியச்செய்யும் செயல். காரணம் சொல்லும் பொய்யை கூட பொருந்தச்சொல்லவே தெரியவில்லை இவரால். தன்னை சமுதாயம் தள்ளி வைத்தது என்பது இவரது கற்பனை. இவரது வக்கிரப்பேச்சு, செயலே அதற்கான காரணம். சம்பாதிக்க அப்பப்போ ஏதோ ஒன்றை தானே தேடிக்கொண்டிருக்கிறார். வயிற்றுக்கு வேணுமே! பாவம் ஏதோ கற்பனையில் வாழ்ந்து ஏமாற்றம் தாங்காமல் இப்படி ஒரு சம்பவத்திற்கு காத்திருந்து,பின்னால் ஓடிச்சென்று பிழைப்பு நடத்துகிறார். அதை உணரும் தன்மை கூட இல்லாத ஜென்மம் இது!
  24. நீங்கள் சொல்லாமலே எனக்குத்தெரியும் சிறியர், நீங்கள் ஒரு வெள்ளைபேப்பர். கஸ்ரம்சிலை உங்களை சோதிக்க வேண்டிய தேவை வைக்க மாட்டீர்களென்பது. அதிருக்க; பக்கத்து வீட்டுக்காரிக்கு பிடித்தமானது எதையாவது வீடுக்குத்தெரியாமல் எடுத்து வரவில்லையே? அங்கு பிடிபடாமல் முக்கியமான சோதனைச்சாவடியில் சிக்கி முழிக்கப்போகிறீர்களோ என்கிற பயத்தால் கேட்டேன்! பயணக்களையில் மறந்து கோட்டை விட்டிட்டு மாட்டுப்படாதீர்கள். உங்கள்மேலுள்ள அக்கறையினால் சொல்கிறேன்.
  25. நல்ல பாம்பாக இருக்குமோ? அசையாமல் இருந்திருக்குது. எப்படி இந்த மலைப்பாம்புகளை உள்ளாடைக்குள் வைத்துக்கொண்டு இயல்பாக நடந்திருக்க முடியும்? ஒருவேளை பயணப்பெட்டியில் உள்ளாடைக்குள் சுற்றி மறைத்து வைத்திருந்திருந்திருப்பாரோ? வாசகர்களை குழப்பியடிக்கிற மாதிரியான செய்திகள்! நீங்கள் ஒன்றையும் மறைத்து கொண்டுவரவில்லைத்த்தானே சிறியர்? எனக்குத்தெரியும் நீங்கள் அப்படியெல்லாம் செய்யக்கூடியவரல்ல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.