Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. சிங்கள அரச, நீதி, நிர்வாக, சேவை எல்லாமே கொலை கொள்ளை நிறைந்ததாக இருக்கிறது. அங்கே சட்டங்கள், நீதிமன்றங்கள் எல்லாமே கொலை கொள்ளை ஊழலை வளர்த்துக்கொண்டும் முண்டு கொடுத்துக்கொண்டும் இருந்திருக்கின்றன. நடவடிக்கை எடுக்கத்தொடங்கினால் ஒன்றுமே மிஞ்சாது. அனுராவின் கட்சியில் இருப்பவர்களில் அநேகர் கூட இதோடு தொடர்புடையவர்கள். எப்படி அனுரா சமாளிக்கப்போகிறார்? பலர் தாம் தப்புவதற்காக அரச சார்பாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றனர். அப்போ, சில குற்றவாளிகள் தப்புவதற்கு ஏது காணப்படுகிறது. முன்பே நான் சொன்னேன், அடிமரத்தை சாய்க்க வேண்டுமானால் அதனை தாங்கி பிடிக்கும் கிளைகள், இலைகள் அகற்றப்படவேண்டும் அப்போதான் பலமான மரத்தை இலகுவாக சரிக்கலாம் என.இங்கு சிலர், இதற்கென்றே இருக்கின்றனர், எள்ளி நகையாடினர். இப்போ மரத்தை தனிமையாக்கும் செயல் நடைபெறுகிறது. மரம் சரியுமா சறுக்குமா? பலம் எந்தப்பக்கமென பொறுத்திருந்து பாப்போம்.
  2. ஹா ஹா..... இப்படித்தான் சிலர் எதையோ எதிர்பார்த்து எழுதுவதும், மற்றவர்களை எடை போடுவதும் நடைபெறுகிறது. நாம் நமக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறோம். சிறியர் ஒன்றும் கணக்கு தெரியாத, படிப்பறிவு இல்லாதவரல்லர். சிங்களம் போடும், காட்டும் கணக்குகளை வைத்தே எழுதியிருக்கிறார் என்று நான் நினைக்கிறன். அவரது முன்னைய பதிவுகள் கூட சிங்களத்தின் கணக்கு பிழைகளை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஏளனமாக குத்திக்காட்டியிருக்கிறார். இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என எனக்கு விளங்கவில்லை? உள்ளே உள்ள வக்கிரம் வெளிப்பட சமயம் பார்த்து காத்திருக்கிறது போலுள்ளது!
  3. ஆட்சி மாற்றம் வந்தவுடன், தடபுடலாக ஆரவாரம் காட்டி தாங்கள் நல்லிணக்கத்தை காட்டுகிறோம் குற்றவாளிகளை விசாரிக்கிறோம் என்று போக்குக்காட்டி ஐ. நா. வையும் சர்வதேசத்தையும் நம்ப வைக்க போக்குக்காட்டி தங்களது ஆட்சிக்காலத்தை கழித்து விட்டு வீடு செல்வதும், பிறகு கதிரை ஏறுவோர் இப்படியே ஏமாற்றுவதும் தொடர் கதையாகிவிட்டது. அப்போ யார் இவற்றுக்கு பொறுப்பு கூறுவது? பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீள வேண்டாமா? பொறுப்பெடுத்து குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் இந்த நிலை தொடரும், தெருவில் நின்று வீரப்பேச்சும் அச்சுறுத்தலும் தொடரவே செய்யும். ஆட்சி மாறினானும் செயற்பாடு நிறுத்தப்படாமல் தொடர்ந்து சமாதானத்தை முன்னெடுக்கும் செயல் தொடரும்படியாக செய்யும் பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்.
  4. எனது சகோதரர்கள், அவர்களின் நண்பர்கள் எல்லாம் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து போய் வன்னியிற்தான் படித்து கல்விப்பொதுத்தராதரம் சாதாரணத்தில் சித்தியெய்தி உயர்தரம் போனார்கள். அவ்வாறே அங்கு பாடசாலைகளும் நடந்தன. அவரவர் தாம் அறிந்ததை வைத்து சிங்களத்திற்கு வெள்ளை அடிக்கிறார்கள். தாய்மொழிப்பற்று அது. அதற்காக நாங்கள் வரிஞ்சு கட்டிக்கொண்டு நிற்கத் தேவையில்லை. தமிழ்ப்பிள்ளைகள் படிக்கக் கூடாது என்பதற்காகவும் எதிர்கால சந்ததியை அழிக்க வேண்டுமென்றும் பாடசாலைகள், கோவில்கள், வைத்தியசாலைகள் என்று திரும்பிய இடமெல்லாம் கொட்டினவர்கள் தான். இருந்தாலும் பிள்ளைகள் படித்து பல்கலைக்கழகமும் போயிருக்கிறார்கள்.
  5. விருது கொடுப்பது யார், அது நீங்களா? அல்லது உங்கள் எஜமானாரா? அறிய ஆவல்! மற்றவர்களுக்கு விருது பற்றி கதைப்பவர்கள், தாமும் இதையே எதிர்பார்த்து கதைப்பதுபோல் தெரிகிறது.
  6. எங்கே ஜப்பானுக்கு எதிராக ஒருவரும் குரைக்க காணோம்?
  7. சோமரட்ன ராஜபக்சவும் பாதுகாக்கப்படவேண்டும். என்னை வற்புறுத்தி, பயமுறுத்தி வாக்குமூலம் பெற்றனர் என்கிற கதையெல்லாம் சோடிக்கப்படலாம். ஆனால் அவர் நீதிமன்றத்தில், நீதிபதியின் முன்னால் எந்த வற்புறுத்தலின்றி தானாகவே கேள்வி எழுப்பி வாக்குமூலம் அளித்திருந்தார். ஆகவே அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம். என்ன; உதயன் கம்மன், சரத் வீரசேகர, விமல் வீரவன்ச போன்றோர் களமிறங்கக்கூடும். ஆனால் முன்போல் கூட்டம் கூடாது இவர்கள் பின்னால். இனிமேலும் மக்களை ஏமாற்றி தம்மை பாதுகாக்க முற்பட்டால், பொதுமக்களால் தாக்குதலுக்குள்ளாகவும் கூடும். இவர்கள் ஊழையிட்டுக்கொண்டு ஓடி வருவதால், இவர்களுக்குப்பின்னால் பெரியதொரு குற்றப்பின்புலம் இருக்கிறது. இவர்களை அழைத்து விசாரிக்கும் விதத்தில் விசாரித்தால் எல்லாம் வெளிவரும். எப்படியும் அகப்படத்தான் போகிறார்கள். இப்படியான அரைகுறைகளை உளறவிடுவதும் நல்லது. அண்மையில் கூட அருண் சித்தார்த் என்கிற குழப்ப காரன், ஒரு கதையை உருட்டிக்கொண்டு வந்தார் யாவரும் அறிந்ததே. அதாவது துணுக்காயில் புலிகளினால் கொலைசெய்யப்பட்ட மக்களின் புதைகுழி ஒன்றுள்ளது, அது தொண்நூறாம் ஆண்டு நடந்தது. அதை ஒருவர் நமக்கு சொன்னார், அவர் இங்கு வருவதற்கு அவருக்கு பயம் என்கிறார். அதே நேரம் புலிகளால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டவர்கள் என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தன்னுடன் தொடர்பை ஏற்படுத்தி அறிவித்தார்களாம் என்று ஒரு முன்நாள் ஒட்டுக்குழுவின் பெயரையும் சொன்னார். சரி, புலிகள் செய்த கொலையை, புதைகுழியை அடையாளம் காட்ட சம்பந்தப்பட்டவர் ஏன், யாருக்கு பயப்படவேண்டும்? அங்கு சம்பவ காலத்திற்கு முன் தொடங்கி இன்றுவரை வாழும் மக்கள் கூறுகிறார்கள், அருண் கூறும் காலகட்டத்தில் குறிப்பிட்ட இடத்தில், இந்திய இராணுவத்தை தொடர்ந்து இலங்கை இராணுவமும் அவர்களுடன் ஒட்டி இருந்த ஒட்டுக்குழு, ஓணான் குழுவுமே இருந்தன அப்போ, அங்கு மக்களின் அலறல் சத்தம் கேட்ட வண்ணம் இருந்தன என்றும் புலிகளின் காலத்தில் அங்கே அரிசி ஆலை இயங்கியதாக கூறுகிறார்கள். இந்த இடத்தை வெளியார் யாரும் உடனடியாக அடையாளம் காண முடியாது, இது ஊரின் உள்ளே பல மைல் தூரத்தில் அமைந்துள்ளது, புதிதாக இந்த இடத்திற்கு வரும் யாரும், யாராவது உதவியின்றி உடனடியாக இங்கு வந்து சேர்ந்து விட முடியாது. சம்பவம் நடந்ததாக இவர்கள் கூறும் காலத்தில் சம்பந்தப்பட்டவருக்கு நான்கு வயது, இப்போ யாரையும் கேட்காமல், விசாரிக்காமல் இந்த இடத்திற்கு திடுதிப்பென்று வந்து, இங்கு தொண்நூறாம் ஆண்டு நாலாயிரம்பேர் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள் அதில் எனது தந்தையும் ஒருவர் என்கிறார். அங்கு போலீசார் இருக்கவில்லை, விசாரணை இல்லை, முறைப்பாடு இல்லை, இந்த சம்பவம் பற்றி முன்னெப்போதும் அறியப்படவில்லை. அப்போ; இங்கு புதை குழி ஒன்று இருக்குமென்றால், அதை ஒருவர் இவர்களுக்கு அடையாளம் காட்டியிருந்தால், அதோடு சம்பந்தப்பட்ட ஒருவராலேயே அது சாத்தியம். அது யார்? அவர் கண்டறியப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். அதற்கு அருண் சித்தார்த்தை கைது செய்து உண்மையான குற்றவாளி(யை)வாளிகளை கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி, விசாரணை நடத்தி உண்மைகள் வெளிக்கொணரவேண்டும். நாடு கடனாலும் மனித புதை குழிகளாலும் சூழ்ந்திருக்கிறது. இதிலிருந்து நாடு மீளுமா? அரசியலாளர்கள் இராணுவத்தை வைத்து சாதித்துக்கொண்டதுமல்லாமல் அவர்களை காட்டி தப்பித்துக்கொள்ளவும் முயற்சிக்கிறார்கள்.
  8. அதை செய்யாமல் விட்டதிலிருந்து உள்நோக்கம் புரிந்திருக்குமே? ஏவலர் கூட்டம் எப்போதும் காத்திருக்கும் ஏவல் செய்ய, இதுதானே அவர்களது தொழில். இப்போ புரியும் ஏன் நமது பிரச்சனை தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது என.
  9. சம்பந்தப்பட்ட குற்றவாளி பொலிஸாரின் ஆயுதத்தை பறித்து போலீசாரை தாக்க முற்பட்டவேளை போலீசார் விரைந்து செயற்பட்டு திருப்பி சுட்டத்தில் தாக்குதலாளி சம்பவ இடத்தில் பலி! காயமடைந்த பொலிசதிகாரி வைத்தியசாலையில் அனுமதி! தடுப்புக்காவலில் இருந்த கைதி மின் கம்பியை கடித்து, உடுத்திருந்த ஆடையை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை! இது இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் காவலிலுள்ள கைதிகளை கொலை செய்து விட்டு பொலிஸார் வழக்கமாக கூறும் காரணங்கள்.
  10. அதிகாலையில் கண்விழிக்கு முன்பே, வேலிகளை வெட்டிக்கொண்டும் மதில் பாய்ந்தும் உள்ளே நுழைவார்கள் இராணுவத்தினர். எல்லோரையும் ஒரு பொது இடத்தில கூடும்படி அறிவிப்பார்கள், அங்கே விழித்த கண்ணுடனும் கழுவாத முகத்துடனும் அப்பகுதியில் உள்ளவர்கள் கூடுவோம். தனித்தனியாக விசாரிப்பார்கள் சிலரை தடுத்துவிடுவார்கள். இந்த நேரத்தில் அப்பிரதேசத்திற்கு யாரும் வரவோ அல்லது அங்கிருந்து யாரும் வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள், சுற்றி வளைப்பு பெயர். அதன் பின் குடும்ப அட்டை என்று ஒன்று கொண்டு வந்தார்கள். அதில் வீட்டிலுள்ளோரின் பெயர்கள் பதியப்பட்டு கிராமசேவகர் பிரதேசசபையினரால் உறுதிப்படுத்தப்பட்டு அங்குள்ள இராணுவத்தினரால் சரி பார்க்கப்பட்டு வீட்டில் தொங்க விடப்பட்டிருக்கும். அவர்கள் சோதனைக்கு வரும்போது அந்த அட்டையில்உள்ளவர்கள் அங்கு இருக்க வேண்டும். ஆட்கள் யாராவது கூட்டியோ, குறைந்தோ இருந்தால் மேலதிக விசாரணை. யாராவது உறவினர்கள் வந்தால், அருகிலுள்ள இராணுவ காவலரணில் அறிவிக்க வேண்டும். அதைவிட வீட்டுக்குள் புகுந்து சோதனை. ஒரு சூட்கேஸு பூட்டி வைத்திருந்தால் கூட திறக்கும்படி செய்து சோதனை செய்வார்கள். இப்படி பல சோதனைகள் பல நேரங்களில் காலம் நேரம் அறிவிப்பு கிடையாது. அகால நேரங்களில் கைது செய்யப்பட்ட பெண்கள் குழந்தைகளின் உடலாக இருக்கலாம். இதை செய்தவர்கள் உயிரோடு இருந்தால் இவைகள் வெளிவரும்போது அவர்களது மனச்சாட்சியை உலுக்காதா? அவர்களால் நிம்மதியாக உறங்க முடியுமா? ஆம், மிருகங்கள் ஒவ்வொரு நாளும் அப்பாவி விலங்குகளை துடி துடிக்க கொன்று புசிக்கின்றன, அடுத்த நாளும், வாழ்நாளெல்லாம் அவர்களது வாழ்க்கை சூழல் அதுவாயிற்றே.
  11. நாட்டில் நடந்தது பயங்கரவாதம் ஒழிய இனவாதமல்ல என்று கூறிய, எச்சரித்த இனவாதிகளுக்கு; செம்மணி புதைகுழியில் வெளிவரும் மனித எச்சங்கள், காலங்காலமாக நடந்த வன்முறைகள் அதற்கான சான்றுகள். இனிமேலும் மூடி மறைக்க முடியாதென்கிற சூழலையும், அதான் தாக்கத்தையும் உணர்த்த தொடங்கி விட்டன. அதற்காக எதையாவது செய்வதாக காண்பித்து தம்மை காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது சிங்களம். அதற்காக ஏதேதோ சொல்லவும் செய்யவும் தலைப்படிருக்கிறது. அது நாங்களல்ல அந்தக்கட்சி என்று விரல் நீட்டி தப்பி விட துடிக்கின்றன. கட்சிகளின் பெயரில் மாற்றமிருந்ததேயொழிய கொள்கைகளில் மாற்றமில்லை என்பதையே தொடர்ந்து மாறி மாறி ஆட்சிக்கு வந்த கட்சிகளும் நிரூபித்தன. நல்லாட்சி ஆட்சிக்கு வந்தபோது, ஏதோ செய்வதாக காட்டிக்கொண்டன. ஐ. நாவில் கால அவகாசமும் பெற்றுக்கொண்டன, இறுதியில் எல்லாவற்றையும் கைவிட்டு ராஜபக்சக்களை மின்சாரகதிரையிலிருந்து நாமே காப்பாற்றினோம் என்று புகழ்ந்து கொண்டார்களே ஒழிய பாதிக்கப்பட்ட தரப்புக்கு எதுவும் செய்யவில்லை. இப்போ, அனுரா ஐ .நா. வை சமாளிக்க இப்படி செய்து நாடகம் ஆடுகிறாரா அல்லது உண்மையிலேயே நாட்டை கட்டியெழுப்ப போகிறாரா? எடுத்த திட்டத்தை கைவிட்டால் அதற்கு இவரும் உடந்தையாவதோடு, இவர் வெகு விரைவில் அரசியலில் இருந்து தூக்கியெறியப்பட்டு, ஏளனம் செய்யப்பட்டு, கைதும் செய்யப்படலாம். இங்கு இனமோ இறைமையோ எதுவுமில்லை, அரசியல் அதிகாரமே முக்கியம். தமிழரை ஒடுக்குவதற்கும் அதுவே உண்மையான காரணம். அதை மறைக்க வேறேதோ புனைகிறார்கள். இந்த பெருச்சாளிகளை கைது செய்யாவிட்டால்; நாட்டை காப்பாற்ற முடியாது. குற்றவாளிகளுக்கு துணை போனவர்கள் இப்போ தம்மை பாதுகாத்து கொள்வதற்காக இரகசியங்களை வெளியிட்டு வருகிறார்கள். இங்கே அரசியல் பழிவாங்கல் என்கிற கூச்சலுக்கு இடமில்லை. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் சாட்சிகளுக்கும் இந்த அரசுக்கும் ஆபத்தே.
  12. பொம்மை விளையாடும், புட்டியில் பாலருந்தும் குழந்தையும் பயங்கரவாதி, செஞ்சோலையில் கல்வி கற்ற குழந்தைகளும் பயங்கரவாதிகள் சிங்களத்திற்கு. தற்போது முப்பது வயதுள்ளவருக்கு, பதினாறு ஆண்டுகளுக்கு முன் எத்தனை வயது? அதற்கு முன் அவர் புலி இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி எடுத்து களத்திற்கு போக எத்தனை வருடம் எடுத்திருக்கும்? அப்போ எத்தனை வயதில் அவர் புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருப்பார்? முள்ளிவாய்க்கால் வீழ்ச்சியின் பின், வயதானோர், பெண்கள், குழந்தைகள், மத குருமார் எந்த பாகுபாடுமில்லாமல் கைது செய்து புலிகள் என்று முத்திரை குத்தியது, கொன்றது, காணாமலாக்கியது சிங்களம். அது எந்தக்கணக்கு?
  13. முதலில் தாக்குதல் நடத்தி, ஒரு இனத்தை அழிவின், இருளின் விளிம்புக்கு துரத்தினோம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், அதற்காக மன்னிப்பு கோரவேண்டும், இனிமேல் இப்படி நடக்காது என உறுதி செய்து பொறுப்பு எடுக்கவேண்டும். அப்போதான் உண்மையான நம்பிக்கை, நல்லிணக்கம், சமாதானம் ஏற்படும். அதைவிட்டு அந்த மக்களின் நிலங்களை பறிப்பதாலேயோ, அவர்களுக்கு பொருத்தமில்லாத கட்டிடங்களை எழுப்புவதாலேயோ, அவர்களை அச்சுறுத்துவதாலேயோ, அல்லது அவர்களை குற்றம் சுமத்துவதாலேயோ இழந்த ஐக்கியதை ஒருநாளும் கட்டியெழுப்ப முடியாது. மாறாக சந்தேகம், வெறுப்பு, பகைமை மட்டுமே வளரும். இதை புரிந்து கொள்ள அரசியல்வாதிகளுக்கும் அனுபவமில்லை, மத தலைவர்களுக்கும் ஞானமில்லை, கற்றவர்களுக்கும் அறிவில்லை. நமது தலைவர்களும் புலிகளை குற்றம் சுமத்தி இல்லாத குற்றத்திற்கு மன்னிப்பு கோரி அவர்களை நிஞாயப்படுத்துவதை விடுத்து, பிரச்சனைக்கான மூல காரணத்தை விளக்கி, எங்கிருந்து பிரச்சனை ஆரம்பித்தது, யார் ஆரம்பித்தார்கள் என்பதை விளக்க வேண்டும், ஏற்றுக்கொள்ள தூண்ட வேண்டும். அதை செய்வதற்கு வரலாறு தெரியாவிட்டால் விலகியிருக்க வேண்டும். நாம் குற்றவாளிகள் என்று அவர்களை சந்தோஷப்படுத்த முனைந்தால்; அவர்கள் தங்களை நிஞாயவாதிகளாக காட்டி நம்மை இல்லாமற் செய்ய வழி வகுக்கும். இதுவரையில் இத்தனை மக்களை கொன்றவர்கள், எங்களை விரட்டியவர்கள் ஒரு தடவையாவது மன்னிப்பு கேட்டார்களா? அல்லது தவறு நடந்து விட்டதென ஏற்றுக்கொண்டார்களா? ஆக்கிரமிப்பை நிறுத்தித்தான் கொண்டார்களா? ஒரு பக்கம் சமாதான கரம் நீட்டி பயனில்லை. தாக்குதலாளி உணரவேண்டும் உணர வைக்கப் பட வேண்டும்.
  14. சாரத்தின் ஒரு பகுதிக்கு இவ்வளவு பலம் இருக்கு என்று இதுவரை நான் நினைத்திருக்கவில்லை. அது சரி, எங்கே எப்படி தூக்குப்போட்டார்? சாரம் மட்டும் போதாதே தூங்குவதற்கு?
  15. கொரோனோவைத்தொடர்ந்து இதுவும் ஒரு தொற்று நோய் போலுள்ளது.
  16. நேற்று கம்மன்பில சொல்லியிருக்கிறார், அதாவது வெகு விரைவில் செம்மணி புதைகுழியிலிருந்து இராணுவத்தினரின் இலக்க தகடு வெளிவருமாம். எல்லாம் ஒரு நிகழ்ச்சி நிரலில் நகருகிறது என்பது உண்மை. முஸ்லிம்களை காக்க ஆயுதம் தாருங்கள், செம்மணியில் இராணுவத்தினரின் உடல்கள் என்று அடம் பிடித்தார், இப்போ இராணுவத்தகடு வெளிவருமாம். இராணுவத்தினரை வைத்து தம்மையும் அரசியலையும் பாதுகாக்க முனைகின்றனர். இராணுவ புலனாய்வினர் நாட்டை காப்பாற்றினர், இராணுவம் போரிட்டது என்று புழுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கும் போது, புலனாய்வுப்பிரிவே நாட்டில் பிரிவினையையும் அழிவுகளையும் ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டனர் எனும் ஆதாரங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் போது, நிலைமையை உணராமல் உளறுது சில பூச்சியங்கள்.
  17. விடுதலைப்புலிகள் மீண்டும் நாட்டில் தாக்குதலை நடத்துகிறார்கள் என்று பிரச்சனையை திசை திருப்புவது, அல்லது அவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டு பிள்ளையானை போட்டுத்தள்ளி அதை புலிகளின்மேல் சுமத்துவது, ஏதோ ஒரு பயங்கரத்திடம் தீட்டப்பட்டிருக்கிறது இதன் பின்னணியில். இப்போ எதிரிகளுக்கு எதிராக நாளாந்தம் சாட்சிகளும் ஆதாரங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கிழக்கில் ஊர்காவல் படை, ஹிஸ்புல்லா செய்த அட்டூழியங்களும் வருகின்றன. என்ன செய்து தம்மை காப்பாற்றலாம் என்கிற நிலையில் பலர் அறிவிழந்து விசர் பிடித்த ந** போல ஓடுகிறார்கள். அதற்கு வக்காலத்து வாங்க அதன் ஏவல்களும், இந உணர்வாளர்களும் சிலதை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். புலிகள் சிறாரை போராட்டத்தில் இணைத்தார்கள் என்று குற்றம் சுமத்தியவர்கள், செம்மணியில் பொம்மைகளோடும் பள்ளி பைகளோடும் இணைந்த சிறுவர்களின் உடல்களை இராணுவத்தினரின் உடல்கள் என்று உரிமை கொண்டாடுவது எந்த வகையில் ஏற்றுக்கொள்ளலாம்? சிங்களம் எது வேண்டுமானாலும் சொல்லும் செய்யும். அதனை சார்ந்தவர்களும் அதனை ஆமோதிப்பார்கள். இங்கு வயது முக்கியமல்ல அதன் பின்னால் உள்ள செயலே முக்கியம்!
  18. றக்பி வீரரின் கொலையோடு தொடர்பு பட்ட, சாட்சியங்களை அழித்த போலீஸ் அதிகாரியே நோயினால் இறந்ததாக முடித்தார்கள். அதனோடு தொடர்பு பட்ட புலனாய்வு அதிகாரிகளில் ஒருவர் தூக்கில் தொங்கினார். தாக்குதலாளி ஒருவரை காப்பாற்ற கொலைசெய்யப்பட்டாரா அல்லது அவரும் சேர்ந்தே தான் கொலை செய்தாரா என்பது வெகு விரைவில் வெளிவரும். நாளுக்கு நாள் திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன. அன்று அவை காதோடு காதாக பேசி செய்யப்பட்டவை. இன்று எல்லாமே பகிரங்கப்படுத்தப்படுகிறது. இதை அனுரா முடித்து வைக்கவேண்டும் இல்லையேல் அனுராவும் இலக்கு வைக்கப்படுவார்.
  19. தாம் குற்றச்செயலுக்கு பயன்படுத்தும் தமிழருக்கு, இராணுவ புலனாய்வு என்கிற பெயரில் சம்பளம் வழங்கி, இப்படியான தாக்குதலுக்கு பயன்படுத்துகிறார்கள். டக்கிளஸ் கூட இப்படி சிலரை பயன்படுத்தி அவர்களின் பணத்தில் பல லட்ஷங்களை கொள்ளையடித்திருக்கிறார். சுரேஷ் சாலேயே இந்த வேலைகளை கவனித்து வந்திருக்கிறார். இப்போ பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தாறுமாறாக ஓடி தாங்களாகவே மாட்டுப்படப்போகிறார்கள். சுரேஷ் சாலேயை கைது செய்வதற்கு பலமான சாட்சிக்காக காத்திருக்கிறார்கள். அதற்கிடையில் சுரேஷே பலமான ஆதாரத்தை கொடுக்கப்போகிறார் போலுள்ளது. அவன் கைது செய்யப்பட்டால், ராஜபக்ச குடும்பம் சிக்கும். அதற்கிடையில் ஏதோ ஒரு அனர்த்தம் நிகழ்த்த முயல்வார்கள், முடிந்தால் சாலேயின் கதையே முடியலாம்.
  20. அருண் சித்தார்த் சொல்லியிருக்கு, கிழக்கு முஸ்லீம் படுகொலைகளுடன் தொடர்புடைய புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், புலம்பெயர் புலிகள் தண்டிக்கப்படவேண்டுமாம். ஆனால் இராணுவத்துடன் இயங்கும் புலிகள் தண்டிக்கப்படக்கூடாதாம். அதாவது இராணுவத்தோடு இயங்கும் முன்னாள் போராளிகள், இராணுவம் எனும் பெயரில், முன்னாள் போராளிகளுடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார் அல்லது இராணுவத்தின் தாக்குதலில் புலிப்பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். நாட்டில் அப்பப்போ தமக்கு ஆதரவாக அல்லது தமக்கு நேரும் விசாரணைகளை திசை திருப்ப மோதல்களை உருவாக்க இப்படியான தமிழரை பயன்படுத்த இவ்வாறு செயற்படுத்துகிறார்கள். ஆனால் இவர்கள் யாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள், இயங்குகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்கள் தாங்களாக சிந்திக்கவோ, இயங்கவோ முடியாத நிலை. ஆகவே முன்னாள் புலிகளை சாட்டி செய்ய்யப்படும் குற்றச்செயல்களுக்கு இராணுவ புலனாய்வே பொறுப்பெடுக்க வேண்டும். அதோடு இவர் முன்னாள் புலி, தாக்குதலை நடத்தவே வந்தார் என்று சொன்னால்; வடக்கிலுள்ள இராணுவம் அதற்கு பொறுப்பெடுத்து வெளியேற வேண்டும். அவர்களால் எந்தப்பயனுமில்லை, அவர்களே முன்னாள் புலிகளை போதைப்பொருள் கடத்தவும், இப்படியான தாக்குதல்களை நடத்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதற்கு இதுவே தகுந்த ஆதாரம். தமிழரை கொத்துக்கொத்தாக அழித்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையேல் தர்மம் அவர்களை எந்த வழியிலேனும் தண்டிக்கும். அப்போ யாரும் யாரையும் குற்றம் சாட்டி கலவரங்களை ஏற்படுத்தவோ, ஊழையிடவோ முடியாது.
  21. இலங்கையில் இனப்படுகொலையே நடக்கவில்லை, அப்படி கதைப்பவர்களுக்கு எதிராக சட்டம் பாயும் என்று ஒரு பகுதி அச்சுறுத்துகிறது. இன்னொரு பகுதி அதற்கான ஆதாரங்கள் போதாது நிறுவுவதற்கு என்று வாதாடுகிறது. இத்தனைக்கும் காரணமான தாய் நாடு என்று இன்றும் நம்மவர் நம்பும் நாடு மௌனம் காக்கிறது. ஆனால் எங்கோ இருந்து ஒரு நாடு, இங்கு நடந்தது இனப்படுகொலைதான், தமிழரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று உரத்து சொல்கிறது. வழமைபோல் இது தேர்தல் உத்தி என்று கடந்து போகுமா இலங்கை?
  22. இந்த சொறியனுக்கே இலங்கை சட்டம் நீதியில் நம்பிக்கை இல்லையென்றால், இவற்றால், இவர்களால் பாதிக்கப்பட்ட நமக்கு இந்த நீதித்துறையில், நீதி கிடைக்குமென்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? சர்வதேசம் எப்படி உள்ளூர் விசாரணையை சிபாரிசு செய்யவோ, ஊக்கப்படுத்தவோ முடியும்? அனுர இந்த விசாரணைகள் மூலம் தமது நம்பிக்கையை வெளிப்படுத்தி தமது செல்வாக்கை மீள எழுப்பவும், தாமே யுத்த குற்றங்களை விசாரிக்க முடியுமென நிரூபிக்க முயற்சிக்கிறார். அவரால் இவர்களை விசாரித்து தண்டிக்க முடியுமென்றால், சர்வதேசம் தண்டிப்பதற்கு ஏன் முட்டுக்கட்டை போட வேண்டும்? அடுத்த ஐ .நா. தொடருக்கு முன் தடபுடலாக விசாரணையை ஆரம்பித்து, தம்மால் முடியுமென காட்ட முனைப்பு நடைபெறுகிறது. ஆனால் தண்டனை என்பது சாத்தியமா? அது இருக்க, தாம் அகப்படுமுன் கத்தி கூச்சல் போட்டு விசாரணைகளை தடுத்து விட்டால், தாம் தப்பித்துக்கொள்ளலாம் என்பது குற்றவாளிகளின் கற்பனை.
  23. எங்கள் உறவுகளில், தெரிந்தவர்கள், ஊரவர்கள் என்கிற வட்டத்தில் கூட பலர் சிங்கள பெண்களை, ஆண்களை செய்து வாழ்ந்தும் கெட்டும் இருக்கிறார்கள். இங்கு களத்தில் கூட சிலர் இருக்கலாம். அதில் சிங்களத்துக்கு அநிஞாயத்திற்கு வக்காலத்து வாங்குபவர்களே அதிகம். யாருக்காவது வக்காலத்து வாங்கலாம், ஆனால் நீதிக்கு புறம்பாக, பாதிக்கப்பட்டவர்களை தாக்குவது சரியல்ல, வக்கிரம்.
  24. இல்லை சிறி, அவர்கள் எல்லோருக்கும் சுமந்திரனை தெரியும், தெரிந்துதான் கூட்டுச்சேர்ந்தார்கள். ஏனெனில் அவர்களும் பதவிகளுக்காக தொழுது பின் திரிபவர்கள் தான். நேற்று வந்த சாணக்கியன், அதுவும் சிங்களத்தின் பாசறையில் இருந்து வந்தவர், வரலாறு தெரியாதவர், நஸீருடன் நடந்த நேர்காணலில் அதை ஏற்றுக்கொண்டவர், வந்ததுமுதல் முஸ்லிம்களோடு ஒட்டிஉறவாடுபவர், தமிழர் மத்தியில் வாய் வீச்சு மட்டும் காட்டுபவர், ஆரம்ப உறுப்பினர்களை பரிகசிப்பவர், கட்சியின் தலைமைக்கு ஆசைப்படுவது தமிழரை எந்தளவுக்கு காப்பாற்றும் என்று தெரியவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.