Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. ரொம்ப ரொம்ப அவமானம்! இந்த நிலைகளே உலகில் நலிந்தவர்கள் தாக்கப்படவும், குரல்வளைகள் நசுக்கப்படவும் காரணம். மனித நேயமே இல்லாத மிருகங்கள் மனித நேயப்பணியில். இவர்கள் இப்படியான சூழ்நிலைகளை வளர்த்து பிழைப்பு நடத்துகின்றனர்.
  2. ஒரு உடையை நிலத்தை வாங்கும்போது தெரிவுசெய்யும்போது எத்தனை யோசிக்கிறோம் விசாரிக்கிறோம் ஆனால் பெண்ணை கொடுக்கும் போது அவ்வளவு சிரத்தை எடுப்பதில்லை பெரும்பாலும் இரகசியமாகவே வைத்திருக்கிறார்கள் காரணம் யாராவது காது குத்தி குழப்பிப்போடுவார்கள் என்கிற பயம் இது இருபாலாருக்கும் பொருந்தும். தெரிந்தவர்கள், உறவினர், எதிரிகள், அண்டை வீட்டார், தொழில் புரியுமிடம் என பலரிடமும் விசாரிக்க வேண்டும். இதற்குத்தான் நம்மவர் சொல்வர் "ஒரு கலியாணம் செய்து வைப்பதென்றால் ஏழு செருப்பு தேயவேண்டுமென்று." பெண் வீட்டிலிருந்து பெறும் வரதட்ஷணையில் வாழ நினைப்பதும், தொடர்ந்து வாங்கி வாழலாம் என நினைப்பதும் தவறு. இதுவே இன்றைய ஆண் பிள்ளைகள், அவர்களைப்பெற்றவர்களின் நினைப்பு. பணமும் போய் பிள்ளையையும் இழந்து தவிக்கிறார்கள்.
  3. சேர்ந்து குடித்தவர்கள், விசாரணை என்றவுடன் தலைமறைவு. தங்கள் பெயர் வெளிவரக்கூடாது என்றா? விசாரணையை எதிர்கொள்ள பயமா? "நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியவர்." என்றவுடனேயே சொல்லாமலே நண்பர்கள் யார் என்று தெரிந்துவிடும்.
  4. செம்மணி அகழ்வை திசைதிருப்பி, அங்கே இராணுவ உடல்கள் என ஆதாரப்படுத்த சில அடையாளங்களை புதைப்பதற்கும் அகழ்வை நிறுத்துவதற்கும் செய்யப்படும் தந்திரோபாயமாக இருக்கலாம். அங்கே ஒரு மர்மம் வாகனம் நோட்டமிடுவதாக செய்தி வருகிறது. துணுக்காயில் சடலங்கள் புதைக்கப்படிருந்தால் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் இலங்கை, இந்திய, மற்றும் துணை ஆயுதக்குழுக்களே பொறுப்பு. அவர்களை விசாரியுங்கள். தனது தந்தை என்ன தொழில் செய்து தன்னை படிக்க வைத்தார் என்று சொல்லும் அருண் சித்தார்த், தான் படித்தாரா என்று சொல்லவில்லை. பாவம் அந்த தந்தை! தன்னைப்போல் கஷ்ரப்படாமல் மகன் படித்து முன்னேற வேண்டுமென்று நினைத்திருப்பார், ஆனால் நடந்தது, தனது சமூகத்தாலேயே வெறுத்தொதுக்கும் வேலையை செய்து அந்த தந்தையின் கனவை சிதறடித்துள்ளார். தனது தந்தையையும் சமூகத்தையும் கேவலப்படுத்துகிறார்.
  5. ம் ....வரதட்ஷனை இல்லாதவர்களை யாரும் பெண் பார்ப்பதில்லை, காதலிப்பதில்லை. தன் பெண் வாழவேண்டுமென்பதற்காகவே எத்தனையோ பெற்றோர் கடன் வாங்கி கலியாணத்தை நடத்தி பின் கடன் அடைக்க முடியாமல் தற்கொலை செய்துள்ளார்கள். வரதட்ஷனை கொடுக்க மாட்டேன் என அடம்பிடிப்பவர்கள் வாழ்நாள் எல்லாம் வாழாக்குமரி எனும் பட்டம். தன் பெண்ணுக்கு திருமணமாகிவிட வேண்டுமென பல லட்ஷங்களை செலவிடும் பெற்றோர் மாப்பிள்ளையின் தொழில், குடும்ப பின்னணி ஆராய்வதில்லை, பின் பெண் திரும்பி பிறந்த வீட்டுக்கு வந்தால் குடும்ப கௌரவம் போய் விடும், ஏனைய பிள்ளைகளுக்கு வரன் வராமல் போய்விடுமென சமாதானம் செய்து புகுந்த வீட்டுக்கே அனுப்பி வைக்கிறார்கள், அல்லது தமது பெற்றோர் பட்ட கஷ்ரம், படும் கஸ்ரம் கண்டு மேலும் கஷ்ரப்படுத்தாமல் தவறான முடிவை எடுக்கிறார்கள். இதுவே ஆண் வீட்டடாருக்கு வசதியாக போய்விடுகிறது. கிடாய் வளர்ப்பது போல் சீதன சந்தையில் விற்று விட தீனி போட்டு வளர்க்கிறார்கள், நல்ல பண்பை, தன் மானத்தை சொல்லிக்கொடுப்பதில்லை. காதலித்து தந்தையாகிய பின்னும் சீதனம் என்றவுடன் வாயைப்பிளந்துகொண்டு இன்னொரு கலியாணத்திற்கு சம்மதிக்கிறார்கள். நம்பிய பெண்ணை கைவிட்டு அசிங்கப்படுத்துகிறார்கள். இதுவே பெண் செய்தால் ஏற்றுக்கொள்வதில்லை. பெற்றோர் பெண்குழந்தைகளை வெறுப்பதற்கும் சிறுவயதில் திருமணம் செய்து வைப்பதற்கும், சீதன தொகை உயர்வுக்கும் காரணமாகிறது. அதிக சீதனம் கொடுப்பதோடு வாழ்நாள் பிரச்சனைகளையும் ஏற்படுத்திக்கொள்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு நிச்சயம் செய்கிறார்கள் பின் வேறொரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் காரணம், சீதனச்சந்தையில் அதிக விலைகொடுத்து வாங்கிவிட்டார்கள். சீதனம் எனும் பிரச்சனையால் கரையேறாக் குமரிகளும் தன்மானம் கெட்ட கழுதைகளும் பெரும் சுமையாக உள்ளது. படித்த பெண்ணுக்கு அதிக வரதட்சனை. காரணம் பெண்ணை விட படித்த, மேலான வேலை பார்க்கும் மாப்பிளை என்பதால். படித்த மேலான வேலை பார்க்கும் ஆணுக்கு ஒரு பெண்ணை காப்பாற்ற முடியாதா? அப்படிப்பட்டவரை நம்பி எதற்கு பெண்ணை ஒப்படைகிறார்கள். இது சீதனமுமல்ல அந்தப்பெண்ணை பராமரிப்பதற்கு அளிக்கப்படும் தொகை, பிச்சை. அந்தப்பெண், பிள்ளை பெற மாட்டேன் என்றால் சம்மதிப்பார்களா? அல்லது அதற்கு பணம் கொடுப்பார்களா மாப்பிள்ளை வீட்டார்? சீதனத்தையும் கொடுத்து அந்த வீட்டுக்கு சம்பளமில்லாமல் மாடாய் உழைக்கிறாள் பெண். அதில் பெண் குழந்தை பிறந்தால் அது வேறு அவள்தான் தாக்கப்படுகிறாள். குழந்தை பெறாவிட்டாலும் வசை பாடுகிறார்கள், வேறு கலியாணம் செய்கிறார்கள். சீதனம் கொடுப்பது, பிள்ளை பெறுவதற்கு மட்டுமே பெண்ணை வாங்குகிறார்கள். அவளுக்கும் மனதுண்டு, ஆசை, விருப்பு வெறுப்பு உண்டு என்பதை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆணிற்த் தான் குறைபாடு என்பதை ஏற்க மறுக்கிறார்கள்.
  6. மிருக வளர்ப்பில் கொஞ்சம் அனுபவம் தெரிகிறது!
  7. எல்லாம் வீட்டுக்காரி இந்தப்பக்கம் வரமாட்டார், படிக்கமாட்டார் என்கிற துணிவுதான்.
  8. அங்கே, இந்திய, இலங்கை இராணுவத்துடன் ஒட்டுக்குழுக்களும் இயங்கி இருந்தன. இவ்வளவு காலமாக தேடாத தந்தையை, இப்போ தனியாக தேடுகிறாராம். சுன்னாகத்தில் அலுவலகத்தில் சலீம் என்பவரை அன்று சென்று விசாரித்தனராம். அந்த நேரம் சுன்னாகத்தில் அலுவலகம் நடத்திய துணை ஆயுதக்குழு எது? சலீம் என்பவர் யார்? என்பதை விசாரித்தால் உண்மை வெளிவரும். செம்மணி புதைகுழி விடயம் வெளிவரும் வரை இந்தப்பெண் தனது தந்தையை தேடாமல், முறையிடாமல், ஏனையோரைபோல் போராடாமல் காத்திருந்த மர்மம் என்ன?
  9. தொழில் இல்லாதவர்களுக்கும் பெண்ணிடம் சன்மானம் கேட்கும் தன்மானமில்லா ஆண்களுக்கும் ஏன் பெண்ணை கொடுக்கிறார்கள் ?
  10. அவ்வளவு தூரம் காரை ஓட்டி வந்த பெண், தானே வாகன தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு நடந்து சென்றிருக்கலாம், அல்லது தாயை கோவில் வாசலில் இறக்கிவிட்டு தான் சென்று நிறுத்தியிருக்கலாம். ஒரு உயிர் போய்விட்டது, இனி ஒரு உயிர் போகாமல் பாதுகாக்கலாமேயொழிய போன உயிரை திரும்பப்பெற முடியாது. கார் ஓட்டத்தெரியாதவர் சாவியை வாங்கியிருக்கக்கூடாது. வீட்டிலிருந்து பத்திரமாய் கொண்டுவந்த நகையை இவ்வாறு அசமந்தமாய் விட்டிருக்கலாமா?
  11. ஒரு பயந்தாங்கொள்ளியாற்தான் மற்ற பயந்தாங்கொள்ளியை இனங்காண முடியும். நசிந்து தொங்கும் பூனைக்குட்டியை கண்டவுடனேயே ஓடிய ஆள் எப்படியான ஆள்? தூக்கிவிடவே பயம். அதுக்கு அந்தபெண் பூனையே பரவாயில்லை, அங்கேயே துணிந்து குட்டி போட்டு பாதுகாத்திருக்கிறது. அதற்குள் பயந்தாங் கொள்ளிகுட்டியெது என்கிற ஆராய்ச்சி வேறு. நல்லவேளை! இவர் கடுவன் பூனையின் கண்ணில் படவில்லை.
  12. சிவநேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்யக்கோரி கையெழுத்து வேட்டை நக்கிறதாம். கேள்விப்படவில்லையா சிறியர்? எய்தவர்கள் பிடிபட வேண்டும். அம்புகளை பிடிப்பதால் பிரச்சனை தீரப்போவதில்லை.
  13. இது சிங்கள இராணுவ, பொலிஸாருடைய உடல்கள் என அடம்பிடிக்கும் அரசியல்வாதிகள் பிக்குகளின் வாயை அடைக்க வெளிப்பட்டிருக்கிறது. நன்றாக அவர்களைபேசுங்கள், நீங்களாகவே உங்களையுமறியாமல் உண்மைகளை வெளிக்கொண்டு வாருங்கள். இறைவா! ஒரு பாவமுமறியாத எங்கள் குழந்தைகளுக்கு இந்த நிலையா? ஒருவரை ஒருவர் பாதுகாக்க, காப்பாற்ற இறந்தவர்கள் அணைத்திருந்திருப்பார்களோ? அன்றி புதைகுழியில் ஒன்றோடு ஒன்றை பிணைத்து போட்டிருப்பார்களோ? எப்படியெல்லாம் கதறியிருப்பார்கள், கெஞ்சியிருப்பார்கள்? அந்த நிமிடத்தை, இதை செய்தவர்கள் நினைத்திருந்தால்; இந்த நிலை தொடர்ந்திருக்காது. இன்றுவரை இந்த புதைகுழி மௌனமாய் இருந்திருக்காது. புதைகுழி திறந்ததுபோல் கொடியவர்கள் மனதும் திறந்து உண்மையை கொண்டுவரவேண்டும். ஒரு சிங்கள இராணுவம் உண்மையை சொல்லியும் ஏற்காமல் விதண்டாவாதம் பண்ணும் ஒவ்வொருவரும் இதனோடு சம்பந்தப்பட்டவர்களே! இதன் பின்னும் நம்மவர் சிங்களத்துக்கு வெள்ளையடிப்பார்களா? ஆம்! அருண் சிர்த்தாத் வெளிக்கிட்டிருக்கிறார்.
  14. இந்தப்பிக்கு கூட்டத்திற்கு ஒரு தலைமை இருப்பதாக தெரியவில்லை. ஒழுக்கம் இல்லை, பொறுப்புகூறல் இல்லை, கேள்வி இல்லை, கோட்பாடு இல்லை, தண்டனை இல்லை, அதது தன் வயிற்றுக்கு இனவாதம் பேசுது, நிலம் பிடிக்குது, இதற்கு இல்லறத்திலேயே இருந்திருக்கலாம்.
  15. பின் எதற்காக அச்சப்படுகின்றீர்கள்? முழு உண்மையும் வெளியில் வர விடுங்கள். இவன் எதற்காக இப்போ பதற்றப்படுகிறான்? இராணுவத்தினுடைய உடல்கள் என்கிறான், ஏன் தோண்டுகிறார்கள் என்கிறான். இராணுவத்தினருடைய உடல்கள் என்றால்; அவர்களின் உறவினர் யாரும் இதுபற்றி வாய் திறக்கவில்லையே? ஒரு இனத்தையே கொன்று புதைத்துவிட்டு, யாசகனின் காயமாம். மக்களுக்கு காருண்யத்தையும் அன்பையும் போதித்து வழிகாட்ட வேண்டிய மதகுரு, அழிவை போதித்து அதை நிஞாயப்படுத்துகிறார். இது என்ன இனமோ? இவற்றைப்பார்க்கும் போது வாழ்க்கையே வெறுத்துப்போகிறது நமக்கு. உலக ஆசையை துறந்து வந்த துறவி பேசுகிற பேச்சா இது? ?
  16. அதற்காகத்தான் இவ்வளவு உறுமலும். அவருக்கு பாராளுமன்ற கதிரை இல்லாமல் இருக்க முடியாது.
  17. யாரும் யாரையும் வாசலில் போய் சந்திக்கவில்லை. டேவிட் கமரூன் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க யாழ்ப்பாணம் வந்தார். இலங்கை அரசு அவர் வருவதை தடை செய்ய எத்தனையோ காரணங்களை சொன்னது. இருந்தாலும் அவர் அவைகளை கடந்து வந்தார். மக்களை சந்திக்க விடாமல் போலீசார் தடைகளை ஏற்படுத்தினர். அங்கே செல்வராசா கஜேந்திரன், மதகுருக்கள், அனந்தி போன்றோர் மக்களுடன் கலந்து நின்றனர். அப்போ நம்ம தலைகள் யாழ் நூல்நிலையத்திலிருந்து பின்கதவு வழியாக வெளியேறிக்கொண்டிருந்தனர். அனந்தி பொலிஸாரின் தடைகளையும் தாண்டி ஓடிச்சென்று கார் யன்னல்வழியாக அறிக்கை ஒன்றை டேவிட் கமரோனிடம் கையளித்தார். இந்த சம்பவத்திற்கு பின் காணாமல் போன உறவுகளை சந்திக்க சென்றனர். கோபமடைந்த உறவுகள், அவர்களுடன் உரையாட மறுத்து, எங்கள் பிரச்சனைகளில் எங்களோடு நிற்கவில்லை இப்போ மாப்பிளை அழைக்க வந்தீர்களோ என விசனத்தை தெரிவிக்க, குனிந்த தலையுடன் சுமந்திரன் சம்பந்தர் வெளியேறினர்.
  18. அப்போ சந்திரசேகர், இளங்குமரனையும் வெளியேறும்படி கோரியிருந்தனரே, அவர்களும் தங்கள் கட்சியை சேர்ந்தவர்களை வெளியேற்றியிருந்தனரோ? தங்கள் தவறுகளை மறைக்க வேறொருவர் மேல் பழியை போட்டு தப்புவது உங்கள் மரபு. நீங்கள் அரிய நேந்திரனை சொல்கிறீர்கள் போலுள்ளது. அவருக்காக யாழ்ப்பாணத்தில் குரலெழுப்பினரா? அல்லது உங்களது மனசாட்சியின் குரலா அது?
  19. புதைத்தவனே அடையாளம் காட்டி, கொலை செய்தவர்களையும் காட்டிக்கொடுத்துள்ளான். அவர்களுக்கு தண்டனையை கொடுங்கள். இல்லையேல் யாருடையது என அன்றே நிரூபித்திருக்கலாமே, எதற்கு காலத்தை கடத்தினீர்கள்? அவர் சுத்தமானவர் என்றால் அமெரிக்காவை விட்டு ஏன் தப்பியோடிவந்தார்? அங்கேயே நின்று விசாரணையை எதிர்கொண்டு தனது நிஞாயத்தை கூறி தான் சுற்றவாளி என நிரூபித்திருக்கலாமே? ஏன் அப்படி செய்யவில்லை? அவர் மனித உரிமை ஆணையாளர், அவர் அரசியல் பேசவோ, சட்டம் பேசவோ வரவில்லை. அவரை அவர்கள் அழைக்கவுமில்லை. உங்களுக்கு ஐ நா வில் காலத்திற்கு காலம் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு நீங்கள் உறுதி அளித்துள்ளீர்கள். அதை செயற்படுத்தாமல் ஏமாற்றி, காலத்தை கடத்தி, புனை கதை சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். வெகு விரைவில் மக்களால் நையப் புடைக்கப்படுவீர்கள். முதலில் உள்நாட்டில் உங்களுக்கெதிராக உள்ள வழக்குகளில் இருந்து உங்களை விடுவியுங்கள்.
  20. இது சரியான நிஞாயம்! இதை செய்யாமல் நாடு இம்மியளவும் முன்னேறாது. காலத்திற்கு காலம் இவற்றை சொல்லி ஏமாற்றியே தலைமைகள் மாறிக்கொண்டிருக்கும்.
  21. இதைத்தானே சி. வி .விக்கினேஸ்வரனும் ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தார். அப்போ, சாணக்கியன் உட்பட பலர் விமர்சித்திருந்தனரே?
  22. செம்மணியில் நடந்த போராட்டம், மக்கள் தமது தொலைந்துபோன, காணாமல் ஆக்கப்பட்ட, கொலை செய்யபட்ட உறவுகளுக்கு நீதி தேடி, அவர்கள் தம் அரசியல் தலைவர்களால் கவனிப்பாரற்று கேட்ப்பாரற்று கைவிடப்பட்டவர்கள் தாங்களாகவே தமது நீதியை தேடி போராட புறப்பட்டவர்கள். அவர்களின் கேள்விக்கு, போராட்டத்திற்கு அவர்களால் தெரிந்தெடுக்கப்பட்ட பெரும் கட்சி, தாய்க்கட்சி, ஏகோபித்த வரவேற்பை பெற்ற கட்சி என்று பீற்றிக்கொள்பவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் தேடிக்கொண்டிருப்பவர்களை, கொலை, காணாமல் போகச்செய்தவர்கள், புதைத்தவர்களோடு தம் பதவிக்காக தம்மை தேர்ந்தெடுத்த மக்களின் ஆணைக்கு எதிராக பேரம் பேசுபவர்கள், செம்மணி என்பது வாய்வழிக்கதை அப்படி அங்கே ஒன்றுமில்லை என்று சொல்லும் கட்சியை சார்ந்தவர்கள், அந்த மக்களின் துயரத்தை வைத்து தம் லாபம் தேட விட முடியுமா? அப்படி விட்டால்; அதனால் என்ன பயன்? அவர்கள் உணர வேண்டும், கடமை செய்யாமல் மக்களின் போராட்டத்திற்கு உரிமை கோர முடியாது என்பதை உணரவேண்டும், திருந்த வேண்டும். இல்லையேல் துரத்தியடிக்கப்படுவார்கள். ஐ. நாவில் இத்தனை ஆண்டுகளாய் நமது பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது. நம்ம அரசியல்வாதிகள் தமது மக்களுக்காக, அவர்கள் துயரங்களை எடுத்துச்சொல்ல சென்றார்களா? அநீதியிழைத்தவனுக்கு கால அவகாசம் வேண்டிக்கொடுக்க விரைகின்றனர். இதெல்லாம் உலகத்திற்கு, ஐ. நாவிற்கு தெரியாது? அவர்கள் இந்த போராட்டத்திற்தான் இவர்கள் செயற்பாட்டை கண்டுணரப்போகிறார்களாக்கும். அந்த மக்கள் கொன்றொழிக்கப்படும்போது, பல நாட்டு தூதுவர்கள் வந்திருந்தார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பேச அவர்கள் பிரதிநிதிகள் யாரும் நாட்டில் இல்லை. அவர்கள் எல்லோராலும் கைவிடப்பட்டு, உயிரற்ற உறவுகளின் உடலங்களை எடுத்து இறுதி மரியாதை செய்யக்கூட அவகாசமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தார்களே... அப்போது இவர்கள் ஏன் அவர்களுடன் இருக்கவில்லை? இப்போ மட்டும் எங்கிருந்து இந்த பொறுப்பு ஏன் வந்தது? எல்லாமே ஐநாவுக்கும் தெரியும் சர்வதேசத்திற்கும் தெரியும். இப்போ மக்களின் போராட்டத்தை நீர்த்துபோகச்செய்யவே அங்கே போய் பிரச்சனையை உருவாக்குகிறார்கள்.
  23. முல்லைத்தீவு துணுக்காய் பகுதியில், அடுத்த டக்கிளஸ் அருண் சித்தாத், தனது பெண் கூட்டாளியுடன் சென்று, அந்தப் பெண்ணின் தந்தையுடன் நாலாயிரம் பேரை புலிகள் அங்கு தடுத்து வைத்து கொலை செய்து அங்கு புதைத்ததாகவும் அதை தேடி அகழப்போவதாக ஒரு நகைச்சுவை நாடகம் நடத்தியுள்ளார். ம் இத்தனை ஆண்டுகள் இவர்களை தேட, புதைகுழியை அடையாளம் காட்ட, முறைப்பாடு செய்ய முடியவில்லை. இத்தனைக்கும் போரை முடிவுக்கு கொண்டு வந்தேன் என்று சொன்னவர் இவரின் கடவுள் மஹிந்தா. அவரிடம் ஏன் இதைப்பற்றி பேசவில்லை? விகாரைக்கு வக்காலத்து வாங்குவது, மஹிந்தவின் எதிரணியை குழப்ப புகுந்து அடிவாங்குவது, இப்போ, எஜமானரை காக்க புது நாடகத்துடன் வந்துள்ளார். அந்தப்பெண் கேக்கிறாள் செம்மணி புதைகுழி தோண்டலாம் இது தோண்டக்கூடாதோ என்கிறாள். ஆனால் நாடகத்திற்கான பயிற்சி போதாது, நடிக்கத்தெரியவில்லை. ஒரு பெண், அருண் சித்தாத் கமராக்காரனாம் (மீடியாக்காரன். காமராவோ வேறு எதுவுமோ அவரிடம் காணப்படவில்லை)என்று மூவர் புதை குழி தோண்ட வந்தனராம். குழி தோண்ட வந்தாரோ அல்லது பெண்ணை கடத்திவந்து அகப்பட்டுக்கொண்டாரோ தெரியவில்லை. தகப்பனையும் நாலாயிரம்பேரையும் புலிகள் கடத்தும்போது இவளுக்கு ஆறு வயதாம். தொண்ணூறாம் ஆண்டு நடந்ததாம். சுண்ணாகத்தில் புலிகள் அலுவலகத்தில் போய் விசாரித்தனராம். அப்போ எதிரில் நின்றவர் கேட்டார், நீங்கள் சொல்லும் காலப்பகுதியில் இந்தியன் இராணுவந்தான் இங்கிருந்தது, புலிகளுக்கு எங்கும் அலுவலகம் திறந்து காரியமாற்றும் சூழ்நிலை இருக்கவில்லை. உங்களுக்கு யார் சொன்னது இங்கு புலிகள் அவர்களை தடுத்து வைத்து கொலை செய்து புதைத்ததாக என்று கேட்க, யாரோ சொன்னார்களாம். அந்த யாரையோ கூட்டி வாருங்கள் அல்லது தொலைபேசி இலக்கத்தை தாருங்கள் என்று கேட்டபோது, தொலைபேசி இலக்கம் தெரியாதாம், அவர்கள் வந்து சாட்சி சொல்ல அவர்களுக்கு பயமாம். யாருக்கு பயம், ஏன் பயம்? இப்படி இழிதொழில் செய்து பிழைக்கும் கூட்டத்தை விட, இவர் சொல்லும் தொழிலேதும் குறைவானதல்ல. இவரது செயலே, இந்த இழிதொழிலே இவரை ஒதுக்குவதற்கு போதுமானது. சந்திரகாந்தனுக்கு வக்காலத்து வாங்கபோய் கம்மன்பில அவரை மீள முடியா விசாரணைக்கு வழிவகுத்து பல கொலை கொள்ளை வெளிவர காரணமானார். அதுபோல் இவரும் முன்வந்துள்ளார். இவருக்கு, தன்னை சமுதாயத்தில் அடக்கி வைத்தார்களாம் அதற்கு பழிவாங்க இனத்தை அழிக்க இவர் எடுத்த வழிமுறை இது. வடிவாக இவரின் முகத்தைப்பாருங்கள், டக்கிலஸின் சாயல் அடிக்கிறது. இன்னொரு கோசத்தோடு சிங்கள பிக்கு கூட்டம் வெகு விரைவில் இவர் காட்டிய இடத்திற்குவந்திறங்குமென்று எதிர்பார்க்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.