Everything posted by satan
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
தான் ஒரு பெண் என்பதையும், தனக்கும் பிள்ளைகள் உண்டு என்பதையும் மறந்து பிள்ளையை இழந்த பெற்றோரின் மனநிலை ஏற்க மறுத்தும், அவர்களில் தவறு என்பதுபோல் காட்ட முயற்சி செய்கிறார். இவருக்கும் அந்த சூழ்நிலை வந்தால் புரியும். இவரின் இந்த கருத்துக்கு இவர் ஆதாரம் கொடுக்க வேண்டும். பிள்ளைக்கு சிகிச்சை அளித்தவர், எப்போ எதற்காக சிகிச்சை அளித்தார் என்பதை விளக்க வேண்டும். ஆசிரியரின் அத்துமீறிய செயலால் மனதளவில் பாதிக்கப்பட்ட குழந்தையை ஆற்றுப்படுத்த உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். அது மனநோய் அல்ல என்பதை பொறுப்புள்ள அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஒரு விமானம் வீழ்த்தப்பட்டால், அடுத்த விமானத்தை அனுப்ப பலதடவை யோசிப்பார்கள். அப்படியிருக்கும்போது இந்தியா இத்தனை விமானங்களை தொடர்ந்து அனுப்பியிருக்குமா என்கிற கேள்வி எழுகிறது. அப்படி உண்மையாகவே நடந்திருந்தால், இந்தியாவைப்போல் முட்டாள் இல்லை என்றே சொல்லலாம். இதற்குள் ஒரு றோ படை, பிராந்திய வல்லரசு என்றொரு எகத்தாளம். உண்மையிலேயே ஈழத்தமிழன் மிகவும் பரிதாபகரமானவன். இந்தியன் தனது நலனுக்கு இலங்கையை கையாள ஈழத்தமிழனை நசுக்குகிறான், சிங்களவன் இந்தியா நமக்கு ஏதோ அடைக்கலம் தந்துவிடுமென்று நம்மை அழிக்கிறான், இதற்குள் பாகிஸ்தான் நாம் இந்தியாவின் கைக்கூலிகள் என்று நம்மை அழிக்க உதவுகிறான். காரணமில்லாமல், கேட்க நாதியில்லாமல் அழிகிறான் ஈழத்தமிழன். காஸ்மீர் உண்மையிலேயே பாகிஸ்தானுடனேயே இணைய வேண்டிய பிரதேசம். ஆனால் இந்தியா தேவையில்லாமல் ஆக்கிரமிச்சு காலத்தையும், வளத்தையும், மக்களையும் அழிக்கிறது. அதனாலேயே நாம் சுதந்திரமாக பிரிந்து வாழுவதை இந்தியா தடுக்கிறது. ஐ. நாவில் எமக்கு எதிரான நிலையை எடுக்கிறது. எமது பிரிவை தடுத்தால் தான் காஸ்மீரை ஆக்கிரமிப்பது நிஞாயமானது என நினைக்கிறது. இந்தியா அழிந்தால் ஒழிய நமக்கு விடிவு வர விடாது. இவனுகள் எல்லாப்பக்கமும் போர் என்று தொடங்கி, மக்களை அழித்து, பஞ்சத்தை ஏற்படுத்தி, உலகை அழிக்கப்போகிறார்கள். ஒவ்வொருவரும் உலகப்போர், அணுவாயுதம் என்று ஒருவரை ஒருவர் அச்சுறுத்தி போட்டுத்துலைக்கப்போகிறார்கள்.
-
தந்தை செல்வாவின் 47வது நினைவேந்தலில் எம்.ஏ. சுமந்திரன் பேசிய உரை
புலிகளை வித்து அரசியல் செய்தவர் இனி அவர்களை வைத்து தனது சுயநல அரசியலுக்காக வாழ்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவரது எஜமானார்களே தலைவரை உயர்த்த ஆரம்பித்து விட்டனர், இவர் தன் பங்குக்கு சும்மா இருப்பாரா என்ன? ஒவ்வொரு விடயமாக கையிலெடுக்கிறார், அது கடைசி ஆயுதமாக இருக்கலாம் தனது ஒட்டுமொத்த அரசியல் சரிவை தடுக்க.
-
இலக்கில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தால் நிச்சயம் வென்றே தீருவோம்..
வாழ்த்துக்கள்! பெற்றோரின் அன்பான தூண்டுதலும், வழிகாட்டலும், பிள்ளைகளின் பொறுப்புணர்ச்சியும் முன்மாதிரியும் இருந்தால்; பிள்ளைகளால் உயர முடியுமென்பதற்கு இது ஒரு சான்று. அவரின் பொறுப்பான நண்பர்களுக்கும், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள். இதே பொறுப்பு, இலட்சியத்துடன் படித்து முன்னேறி மக்களுக்கும் வீட்டுக்கும் சேவை செய்ய வாழ்த்துகிறேன். இணைப்புக்கு நன்றி ஓணாண்டி!
-
காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை மீளப்பெற வேண்டும் : இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் - எம்.ஏ.சுமந்திரன்
சுமந்திரனோடு சேர்ந்து போராடப்போபவர்களுக்கு ஒரு அறிவித்தல்! அவருக்கு வாக்களியுங்கள், உங்கள் காணிகளை மீட்டுத்தருவார். ஆமா, உறுதி இருக்கிறது, உரிமகாரரும் சொந்த நாட்டிலேயே இருக்கிறார்கள் அகதிகளாக. அவர்களின் காணியில் விகாரை அமைத்து சொந்தமாக்கி வைத்திருக்கிறார்கள் பௌத்த மகா சங்கத்தினர். அவர்களுக்கெதிராக சவால் விட மாட்டீர்களா?
-
தந்தை செல்வாவின் 47வது நினைவேந்தலில் எம்.ஏ. சுமந்திரன் பேசிய உரை
தந்தை செல்வாவைப்பற்றி சொல்லும் தகுதி இவருக்குண்டா? அவர் சென்ற வழியில் இவர் செல்கின்றாரா? அவரே, தமிழரை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கையளித்தவர். பாராளுமன்றத்தேர்தலில் அவர் குடும்ப உறுப்பினரை களம் இறக்கினாரே, மக்கள் செவி சாய்த்தனரா? அவர் வழியை விட்டு விலகி பலதூரம் சென்று தொலைந்தபின் அவர் வழியை மீண்டும் தேடி கண்டுபிடிக்க, பல நபர்களை அறிமுகப்படுத்துகிறீர்கள். உந்த பச்சா எல்லாம் வாய்க்காது. உதெல்லாம் தேர்தலுக்கான தந்திரமென மக்கள் நன்கறிவர்.
-
இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
இவை உண்மையான தங்கந்தானா என்பது யாருக்குத் தெரியும்? மஹிந்தவின் காலத்தில் ஒருவருக்கு இந்த நகை அளிக்கப்பட்டது, அதை பரிசோதித்த போது அது போலியானது என பத்திரிகைகளில் வெளிவந்தது. இவ்வளவுகாலமும் வெளிவராத நகை இப்போ வெளிவந்ததன் பின்னணி என்ன? போலியானாலும் மக்கள் திரும்பப்போய் கேட்பார்களா வாங்கியவர்கள்? அதை திருப்பி அவர்கள் மேல் பழிபோட மாட்டார்களா? இவ்வளவையும் இழந்த பின்னும் புலிகளை வணங்குபவர்கள், புலிகள் கொள்ளையடித்தார்கள் என்று சொல்வார்களா? சுமந்திரன் தனக்கு முன்னாள் விடுதலைப்புலிகளால் உயிர் அச்சுறுத்தல் உள்ளது எனக்கூறி, இராணுவபாதுகாப்பு கோரியதையே ஆதாரமாக வைத்து பயங்கரவாத சட்டத்தை இரத்து செய்ய முடியாதென சர்வதேசத்துக்கு அறிக்கை விட்ட முன்னைய அரசாங்கம், இதனையும் ஆதாரமாகக் கொண்டு தம் போர்க்குற்றங்களை நிஞாயப்படுத்தும். ஏதோ ஒரு அவசரம் அவர்களை இப்படி ஒரு கதையை உருவாக்க வைத்துள்ளது. சர்வதேசத்தை ஏமாற்றி, போர்க்குற்றங்களை, மக்களை பாதுகாப்பதற்கே போர் புரிந்தோம் அது குற்றமாகாது மக்களே சாட்சி என்று இந்த சம்பவத்தை ஆதாரமாக வைக்கலாம். தேர்தல் வெற்றி. அரசாங்கங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக யோசிக்கின்றன தம்மை பாதுகாக்க. ஆனால் நம்ம தலைமைகளும், அவர்களோடு சல்லாபிக்க மக்களை பணயம் வைக்கின்றனர். மக்களின் வீட்டு கதவு, யன்னல்களை திருடிக்கொண்டுபோன இராணுவம், நிலத்தை கிண்டி நகை தேடிய இராணுவம், இத்தனைகாலம் தமிழரின் நகைகளை பாதுகாத்து வைத்திருந்ததாம், நம்பிற்றோமில்ல. அவர்கள் எடுத்தது இவ்வளவு தங்கம் அவ்வளவும் இங்குள்ளது என்று நிரூபிப்பயது யார்?
-
மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும் - யாழில் சுவரொட்டிகள்
இலங்கையில்தான் யாழ்ப்பாணம் உள்ளது என நான் இவ்வளவுநாளும் நம்பிக்கொண்டிருந்தேன். ஹிஹி.
-
காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை மீளப்பெற வேண்டும் : இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் - எம்.ஏ.சுமந்திரன்
எதற்கு இப்போ இந்த அனாவசிய கேள்வி? சுமந்திரனின் கபடத்தனத்தை, கையாலாகாத்தன்மையை எடுத்துக்கூறியதாலா? யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டுவேன், நல்லது செய்தால் பாராட்டத்தயங்க மாட்டேன். ஒருவரை கண்மூடித்தனமாய் நம்பி, சாமரம் வீசி, அவர்களின் தவறுகளை மூடி மறைக்கவும் மாட்டேன்.
-
தந்தை செல்வநாயகத்தின் உண்மையான கொள்கைகளுக்கு தமிழ் அரசுக் கட்சி நேர்மையாக பயணிக்க முன்வந்தால் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
நம்பி வாக்களித்த மக்களை ஒருமுறை ஏமாற்றலாம், எழுபத்தாறு வருடங்களாக ஏமாற்றி அவர்கள்மேல் சவாரி செய்தால் மக்கள்தான் என்ன செய்வார்கள்? தங்கள் நிலங்களை பறிகொடுத்து, உறவுகளை இழந்து, இனி இழப்பதற்கு ஒன்றுமேயில்லை எனும் இயலாமையில் இருக்கும் மக்களை குறைகூறுவதில் பயனில்லை. இந்த நிலையை மக்களுக்கு உருவாக்கியவர்களே தமிழ் அரசியல்வதிகளே! உங்களை திருத்துங்கள். ஆனாலும் காலம் கடந்துவிட்டது போல் தோன்றுகிறது. நிற்க, சுமந்திரன், கட்சியை தனது சொந்த அரசியலென நினைத்து சக உறுப்பினர்களுக்கு குடைச்சல் கொடுத்து, அவமானப்படுத்தி வெளியேற்றியபின், அவர்களுக்கு பதவி கொடுக்கவில்லை, அதனால் கட்சியை விட்டு வெளியேறி விட்டார்கள் என்று குற்றம் சுமத்தும் இவர், பதவி இல்லாவிட்டால் இவர் கட்சியில் இருப்பாரா? தானாகவே பதவிகளை உருவாக்கி கொள்கை, தர்மம் இல்லாமல் குந்திக்கொண்டு இருக்கிறார். ஆகவே இவர் சொல்லும் குற்றச்சாட்டு போலியானவை என நிரூபிக்கப்படும். தனது வழமையான குற்றச்சாட்டுக்கு இடமில்லை, சிறிதரனை மக்கள் தெரிந்தெடுத்துள்ளார்கள். ஆகவே அவர் பதவி இல்லாததால் விலகினார் என்கிற குற்றச்சாட்டு எடுபடாது. இருந்தும் அத்தனை அவமானங்களையும், குழிபறிப்புகளையும் தாங்கிக்கொண்டு நிற்கும் ஒருவரை, வலுக்கட்டாயமாக கட்சியிலிருந்து விலக்க முயற்சிக்கிறார். இப்போ சொல்லுங்கள் யார் பதவி ஆசை பிடித்தவர்கள் என்பதை? அவர்களாவது மானமுள்ளவர்கள், இந்த கரப்பான் பூச்சியின் குடைச்சல் தாங்காது விலகிச்சென்றார்கள். இவரோ, மற்றவரின் பதவிகளை பறிக்கிறார். இவர் சிறிதரனையும், மற்றவர்களையும் கட்சியிலிருந்து விலக்கினால்; தனக்கும், கட்சிக்கும் சாவுமணி அடித்தவராகிறார். இவரின் சுயநலமான முட்டாள்தனம் கட்சிக்கு நன்மையே பயக்கும். இவரை நம்பி இவருக்கு பின்னால் இழுபடும் தலையாட்டிகளை என்ன சொல்வது?
-
மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும் - யாழில் சுவரொட்டிகள்
யார் அந்த மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும்? மூன்று கோமாளிகள் என்று சாணக்கியன், சத்தியலிங்கம், சிவஞானத்தையும், பைத்தியம் என சுமந்திரனையுமா குறிப்பிட்டுள்ளார்கள்? "இடயனால கெட்டான் மடையனாம்."
-
காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை மீளப்பெற வேண்டும் : இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் - எம்.ஏ.சுமந்திரன்
சுமந்திரனால் சும்மா சவால் மட்டுந்தான் விடமுடியும், வேறெதுவும் முடியாது. அனுரா அரசால் ரொம்ப கலங்கிப்போய், கேள்விக்குறியாக இருக்கிறது அவரது பிழைப்பு. அதனாலேயே அடிக்கடி அவர்களை சீண்டுகிறார். எத்தனை தடவை அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்து, மேடைகளில் பேசி, மக்களை சந்தித்து விட்டு சென்று விட்டார். அப்பவெல்லாம் பாத்துக்கொண்டுதானே இருந்தவர், அப்போ தன் வீரத்தை காட்டியிருக்கலாமே, ஏன் பேசாமல் இருந்தவர்? இப்போ தேர்தலுக்காக மக்களை உசுப்பேற்ற வாய் கிழிய கத்துகிறார். அனுரா, நாட்டின் ஜனாதிபதி. வடபகுதி மக்களும் அவருக்கு வாக்களித்துள்ளார்கள். அவர் யாழ்ப்பாணத்திற்கு வருவதை இவர் எப்படி தடுக்க முடியும்? முடிந்தால் தடுத்துப் பார்க்கட்டுமேன். மக்கள் அனுராவுக்கு வாக்களிப்பதற்கும், அவர்கள் வடபகுதிக்கு வருவதற்கும் யார் காரணம்? அதற்கு முதலில் பதிலை கண்டுபிடித்துவிட்டு சவால் விடலாமே? இல்லாத கட்சிக்கு, ஒரு பதில் தலைவர், செயலாளர். நான்குபேருக்கு ஒரு கட்சி. இந்த லட்ஷணத்தில சவால் வேற.
-
காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை மீளப்பெற வேண்டும் : இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் - எம்.ஏ.சுமந்திரன்
அதுசரி, இந்த வீராவேசத்தை ஏன் கடந்தகால அரசாங்கங்களின் மேல் இவர் காட்டவில்லை? இதே தவறுகள் அப்போதும் நடந்ததே. இவர் சந்திக்க போனபோது, அனுரா இவருக்கு பதவி உத்தரவாதம் வழங்கவில்லை என்கிற கோபத்திலா இப்படி அனல் கக்குகிறார்? எலி தானாக போய் பொறியில் தலை வைக்கப்போகிறது போலுள்ளது.
-
இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை!
தன்னுடைய ஆயுதங்களை விற்பதற்கு வழி பண்ணுவார்.
-
இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன - பாக். அமைச்சரின் மிரட்டல் பேச்சு
இதென்ன சிறியர் குறளி வித்தைபோல் இருக்கிறது .
-
சிறீதரன் உள்ளிட்ட 35 பேருக்கு விளக்கம் கோரல் கடிதம் அனுப்பிய தமிழரசுக் கட்சி!
அப்போ, கட்சியில் சுமந்திரன், சிவஞானம், சாணக்கியன், சத்தியலிங்கம் தான் கட்சியில் மிஞ்சியுள்ளார்களா? எல்லா வழிகளிலும் முயற்சித்து முடியாமல், இப்போ இந்த வேலையில் இறங்கிவிட்டார்களா? நல்லது. அதோடு கட்சியுமில்லை, அரசியலுமில்லை. இதுதான் சட்டத்தரணியின் சாணக்கியம். சாணக்கியன் எந்த கட்சியிலும் குடியேறுவார்,அவருக்கு இது பழகிப்போன ஒன்று. சுமந்திரனும் அனுராவின் காலில் விழுந்தாவது பதவி பிடிப்பார். மற்றவர்கள்......?
-
பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையானது – கருணா ஆதங்கம்
சந்திரகாந்தனை மாட்டி விட்டவரே இவர்தான், அதை மறைக்க தேர்தல் கூட்டு வைத்து, இப்போ முதலிக்கண்ணீர் வடிக்கிறார். அவர் தன் பங்குக்கு சும்மாவா இருப்பார்? இருவரும் சேர்ந்த கள்ளர்தானே!
-
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் முன் ஆர்ப்பாட்டம்!
கந்தையர் கிண்டலாக சொன்னதை நீங்கள் சீரியஸாக எடுத்து உணர்ச்சி வசப்படுகிறீர்கள். இவர் ஒரு கட்சியை சேர்ந்தவர், அதிகம் பேசப்படாத கட்சி.
-
இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன - பாக். அமைச்சரின் மிரட்டல் பேச்சு
இந்தியா வெருட்டும் ஆனால் தொடங்காது என நான் நினைக்கிறன். தானே ஆசியாவின் வல்லரசு என எண்ணிக்கொண்டிருக்கிறது. தோற்றால்; அதன் நிலைமை என்னாவது? பிறகு இலங்கையே மதிக்காது அதுவும் தன் பங்குக்கு வெருட்டும். அப்படியொரு நிலைமை வரவேண்டும் என்பது எனது அவா.
-
இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன - பாக். அமைச்சரின் மிரட்டல் பேச்சு
தமிழரையும் சிங்களவரையும் மோதவிட்டு ரசித்தவர்களின் வீரத்தை, நாமும் பார்த்து ரசிப்போமென்றால்; இந்தியாவை அடித்து விரட்டி விட்டார்கள் போலுள்ளதே!
-
இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை!
அமெரிக்காவுக்கு ஓடியோடி பேச்சுவார்த்தை நடத்துவதே வேலையாகிப்போய்விட்டது. சமாதான விரும்பி.
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் FBI கண்டுபிடிப்பை நிராகரித்தால் அமெரிக்கா எதிர்வினையாற்றும் – ரணில் எச்சரிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரிக்க சர்வதேசம் வேண்டாமென்றார், சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டவுடன் பேசவேண்டுமென்றார், இப்போ அமெரிக்கா சீற்றமடையுமென்கிறார். இவரின் பிரச்சனைதானென்ன? கூண்டுக்குள் அடைபட்ட எலிபோல் துடிக்கிறார். இவருக்கு, அனுரா வைத்தியம் பார்ப்பது நல்லது. அனுரா பதவியேற்றவுடனேயே ராஜபக்ஸாக்களுக்கு முதலே இவர் பதற ஆரம்பித்து சாபமிட்டார். குற்றவாளிக்கு கொடுக்கும் தண்டனையை விட, அவரை காப்பாற்றியவர், ஆதாரங்களை மறைத்தவர்களுக்கு கூடுதல் தண்டனை அளிக்கப்பட வேண்டும். இவர் ஆட்சிக்கு வந்ததுமுதலே அவர்களை காப்பாற்றியே வந்துள்ளார். ஒரு கள்ளன் மற்ற கள்ளனை காப்பாற்றவே செய்வார்.
-
வெசாக் நிகழ்வில் பங்கேற்க வெளிநாடு பறக்கும் ஜனாதிபதி அனுர
புத்தரின் பெயரால் இத்தனை அட்டூழியங்களையும் நிகழ்த்தி விட்டு, ஐ. நாவில் அதற்கொரு கொண்டாட்டம். அழிக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூர்ந்தால்; போர்க்கொடி தூக்கி, கேள்வி எழுப்பி, அறிக்கை, கண்டனம் விடப்படும் வினோதமான உலகம்!
-
இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன - பாக். அமைச்சரின் மிரட்டல் பேச்சு
நான் கேட்க நினைத்ததை படமாக தந்துள்ளீர்கள் ஆப்பிழுத்த குரங்கின் நிலைதான் இலங்கை! உண்மைதானோ அல்லது ஒருவரை ஒருவர் பயமுறுத்துகிறார்களோ? ம் ..... உங்களுக்கென்றபடியால் இரத்தம் கொதிக்கிறது, மற்றவர்களின் இரத்தத்தை வெளியேற்றி ரசிப்பீர்கள். நாலு பக்கத்தாலும் உலகை அழிக்கிறோமென அடம் பிடிக்கிறார்கள், அழியப்போவது தாங்களுந்தான் என்பதை உணராமல். பகிடி என நினைத்து வெருட்டுகிறார்களோ ஒரு பகுதி மற்றொரு பகுதியை? விளையாட்டு வினையாகப்போகிறது.
-
கீரிமலை ஜனாதிபதி மாளிகை - எதிர்கால பயன்பாடு குறித்து கலந்தாய்வு!
வடமாகாணத்தில் ஜனாதிபதிக்கு மாளிகை அமைத்த மஹிந்தா, இப்போ உத்தியோகபூர்வ மாளிகையை விட்டு வெளியேற மறுக்கிறார். போற போற இடங்களில் சின்ன வீடு வைப்பதுபோல். வீடு மாறுவதற்கு பணம் இல்லையாம். தமிழ் மக்களை சொந்த இல்லங்களில் இருந்து விரட்டி ரசித்தவருக்கு இந்த நிலை. இலங்கை அரசியலை சொந்த குடும்ப அரசியலாக்க கனவு கண்டவருக்கு விழுந்த அடிமேல் அடி. தங்கள் அரசியலை உறுதிப்படுத்துவதற்கு தமிழ் மக்களை கொன்றார்கள், இப்போ தம் ஊழல் கொலைகளை மறைப்பதற்கு தங்கள் விசுவாசிகளையே கொலை செய்கின்றனர். மக்கள் பணத்தில் ஆடிய ஆட்டம், இந்த நிலைக்குத் தம்மை தள்ளுமென எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பௌத்த மதமே கர்மா பற்றி அதிகம் சொல்கிறது. இவர்கள் தமது சொந்த லாபத்திற்காக மதத்தை மாறினார்கள், உபயோகித்தார்கள். இப்போ அது தன் வேலையை தொடங்கியுள்ளது. எத்தனை பேரை கொன்றாலும் இவர்கள் தப்ப முடியாது. இன்னும் குற்றங்கள், தண்டனைகள் இவர்கள் மேல் பெருகும்.