Everything posted by satan
-
கோட்டாவின் உத்தரவு சட்ட விரோதமானது;உயர் நீதிமன்றம் அதிரடி
ஏன் அப்படிச்சொல்கிறீர்கள்?
-
தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்
தமிழ் மக்களால் கைவிடப்பட்ட கட்சிதான் தமிழரசுக்கட்சி. அது யாரோடு கூட்டு வைத்தாலென்ன நமக்கு? நாங்களே தமிழரின் ஏகபிரதிநிதிகள் என்கிறார்கள், பெரிய, ஆரம்ப கால கட்சி என்றார்கள். தமிழரசு, தமிழ்த்தேசியம் என்றால் சிங்களவருக்கு கோபம், பயம் என்றார்கள், அந்த கட்சியை ஏகபோகமாக்கி அக்குவேறு ஆணிவேறாகப்பிரித்தார்கள், தாங்கள் தனித்து போட்டியிடப்போகிறோமென்றார்கள், எங்களுக்கு கீழ் இணையுங்கள், எங்களை விமர்சிக்க கூடாது என்றார்கள். இப்போ அங்குமில்லை இங்குமில்லை. தேர்தல் சொல்லும் செய்தி என்னவென்று பொறுத்திருந்து பாப்போம். சட்டமேதை எடுக்கும் முடிவு சரியாத்தானிருக்கும். இடையனால கெட்டானாம் மடையன்.
-
கோட்டாவின் உத்தரவு சட்ட விரோதமானது;உயர் நீதிமன்றம் அதிரடி
நீங்கள் வெட்டி விட்டீர்களா இல்லையா? உங்கள் பெயரை கேட்டேன். வெள்ளைகாரண்ட வாயில் நுழையாத பெயரை வைத்திருந்தால், அவன் எப்படி உங்களை கூப்பிடுவான் என நினைக்கிறீர்கள்?
-
எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
அவரின் ஆன்மா அமைதியில் இளைப்பாறுவதாக. இவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அனைத்து உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
இலங்கையில் தனிநபரொருவருக்கு தேவைப்படும் குறைந்தபட்ச பணம் குறித்து வெளியான புதிய தகவல்
எனது உறவினர் ஒருவர் தனியாள், கணவரின் ஓய்வூதியம் இருபதினாயிரம், சொந்த வீடு, நீரழிவு நோய், இரத்த அழுத்தம், கொலஸ்ரோல் இப்படி பல வருத்தம், நடக்க முடியாது, போசாக்கான உணவு இல்லை, மிக சிக்கனமாக வாழ்கிறார், கூடுதலான மருந்து மாத்திரை தனியார் மருந்தகங்களிலேயே வாங்குகிறார், அதிகமாக மரக்கறி சாப்பாடு. அவர் படும் கஸ்ரத்தை பார்த்து நான் நினைக்கிறன், எந்த ஒரு வருமானமும்மில்லாமல் வாழும் குடும்பங்கள் என்ன செய்வார்கள்? முன் ஆயிரம் ரூபா ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்திற்கு போதுமானதாக இருந்தது. இப்போ ஆயிரம் ரூபா ஒரு மூலைக்குபத்தாது.
-
தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
சட்டமா அதிபர் வீட்டில் மறைந்திருக்கிறாரோ தெரியவில்லை. தேசபந்து தென்னகோனை கைது செய்ய வேண்டாமென உத்தரவிட்டிருக்கிறார் சட்டமா அதிபர். சட்டத்திற்கு முரணான உத்தரவுகளை வைக்கிறார் சட்டமா அதிபர். இவர் முன்னைய அரசுகளின் காவலன் போல் தெரிகிறது. இவரை முதல் கைது செய்து விசாரிக்க வேண்டும். இவ்வளவு நாளாக அவரை கைது செய்ய முடியவில்லையா பொலிஸாரால்? அல்லது கைது செய்ய மறுக்கிறார்களா?
-
இலங்கையில் தனிநபரொருவருக்கு தேவைப்படும் குறைந்தபட்ச பணம் குறித்து வெளியான புதிய தகவல்
வைத்தியசெலவு, மருந்துச்செலவு, போக்குவரத்துக்கு செலவு தவிர்த்து. இது குறைந்த பட்சம்.
-
ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட வேண்டும்; முன்னனி சோசலிசக் கட்சி
அது சரி, யார் குற்றவாளிகளை கைது செய்வது? காவற்துறை? இராணுவம்? அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டவர்களே காவற்துறையும் இராணுவமும், அவர்களது கட்டளைக்காக காத்திருக்கின்றன இந்த இரண்டு படைகளும் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்க.
-
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
ஒருவர் மன்னிப்பு கேட்டால், அவர்தான் குற்றவாளி என்பது சிலரின் சித்தாந்தம். அதை சொல்லிச்சொல்லியே தம்மை குற்றமற்றவர் என காண்பிப்பார்கள். மன்னிப்பு கேட்பது என்பது தவறு செய்து விட்டோம் என்பது பொருளல்ல பல இடங்களில். அதன் பொருள், தவறுகளை மறந்து இணக்கமாக வாழ்வோம் என்பதே பொருள். தமிழரை பொறுத்தமட்டில் பல பக்கத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள், இழப்புகளை சந்தித்தவர்கள், ஆதரவு கொடுக்க யாருமில்லாமல் தனித்து விடப்பட்டவர்கள். ஆகவே சுமுகமாக வாழுவதற்காக மன்னிப்பு கோருகின்றனர். அவர்கள் திட்டமிட்டு யாரையும் அழிக்கவில்லை, தம்மை தற்காத்துக்கொள்வதற்காகவே தாக்குதலை நடத்த வற்புறுத்தப்பட்டனர். ஆனால் தாம் செய்ததெல்லாம் சரியென நிரூபிப்பது தமிழர் கோரிய மன்னிப்பு அவர்களுக்கு சாதகமாகிறது. அவர்களுக்கு மன்னிக்கவும் தெரியாது, மன்னிப்பு கேட்கவும் தெரியாது. இவர்களிடம் அதை எதிர்பார்ப்பது நம்ம முட்டாள்த்தனம். நிஞாயமாக உரிமைகளை பகிர்ந்து வாழுங்கள் என்றால், நல்லிணக்கம் கெட்டுவிடும், நாட்டில் இன கலவரம் வெடிக்கும் என்கிறார்கள். இவர்களின் அறிவு எத்தகையது? மதம் என்பது சக மனிதனை மதித்து, அன்பு செய்து, பகிர்ந்து வாழ வலியுறுத்துகிறது. இங்கு, மதம் அடுத்தவனை கொன்று, அவர்களின் சொத்துக்களை அபகரித்து வாழ போதிக்கிறது. இவர்களுடன் நாம் விவாதிப்பதால் என்ன லாபம்? வெள்ளையை கறுப்பு என நிறுவும் கூட்டம். அவர்களை பொறுத்த வரையில், கறுப்பு என்றால் அதுதான் வெள்ளை. நீதி, நல்லிணக்கம் என்றால், அடுத்தவரை துன்புறுத்துவது.
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை, கொள்ளை கலாசாரத்தை மக்கள் விடுதலை முன்னணியே கற்றுக்கொடுத்தது : எஸ்.பி.திஸாநாயக்க
இப்போ புலிகள் இல்லை, இதையே ஏன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் வங்குரோத்து நிலையே நாடு குட்டிசுவராகி கள்ளரும், கொலைகாரரும் கடத்தல் காரரும் உருவாகி பெருகக் காரணம், உருவாக்கி வளர்த்தவர்களும் அவர்களே. அவர்கள் ஆட்சி நாட்டின் நன்மை கருதி நிஞாயமாக நடந்திருந்தால், நாட்டில் இப்படியான பிரச்சனைகள் உருவாகாமல் தன்னிறைவு கண்டிருக்கும். இனக்கலவரங்கள் நடந்தது தவறில்லை, அதிகாரங்கள் பறிக்கப்பட்டது, துஸ்பிரயோகம் செய்யப்பட்டது தவறில்லை, அதை தடுத்தது தவறு. இப்படியான மனநிலை உள்ள இவர்களிடம் இருந்து வேறெதை எதிர்பார்க்க முடியும்?
-
இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - நாமல் ராஜபக்ஷ
ஒரு நபரல்ல, பல நபர்கள் பல குற்றங்களில் சிக்கியிருக்கிறார்கள். "ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்." எல்லா தமிழர்களையும் புலி என்று அடையாளப்படுத்தி கொன்று குவிக்கும்போது எங்கே போனது உந்த வாதம்? அது உங்களை புனிதர்களாக்குவதற்கே! அதை நீங்கள் யாராவது செய்திருந்தால், இங்கு யாரும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் உங்கள் ஆதங்கமெல்லாம் இவற்றை பேசிக்கொண்டிருப்பதால், உங்கள் எதிர்கால அரசியல் கனவு சிதைக்கப்படுகிறேதே என்பதேயாம். இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்து நாட்டை சீரழித்ததன் இரகசியம் அதுதான். அவரே சொல்லியிருக்கிறார், "மஹிந்தவை மின்சாரக்கதிரையிலிருந்து காப்பாற்றியது தனது அரசாங்கமே." என்று. பட்டலந்த தண்டனையிலிருந்து அவரை காப்பாற்றியது அடுத்து வந்த அரசாங்கம். எல்லோரின் கைகளிலும் இரத்தம் தோய்ந்துள்ளது. அப்போ, நாட்டில் நீதிமன்றங்கள் எதற்கு? இழுத்து மூடுங்கள்! அவர்கள் தண்டிக்கப்படவேண்டும், நீங்கள் தண்டிக்கப்படக்கூடாது. நல்லாய் இருக்கு உங்கள் சித்தாந்தம்! படிக்காமல், பரீட்சை எழுதாமல், சித்தியடைந்த சட்டத்தரணி விவாதம் அப்படித்தான் இருக்கும் என்று தெரியும்.
-
ஊழல் எதிர்ப்பு அணி வன்னி என்னும் அவதூறு பரப்பிகளும் அதை பகிரும் மூடர்கூடமும்..…
போரால் வீழ்த்தப்பட்ட ஒரு சமுதாயத்தில் இப்படியான விளைவுகள் எதிர்பார்த்தவையே. இதைத்தான் சொல்லுறது "பனையாலை விழுந்தவனை மாடேறி உழக்கியது." என்று. தன்னம்பிக்கையற்ற ஆண்களின் இலக்கு, பெண்கள். அவர்களின் எழுச்சியை பொறுக்க மாட்டார்கள், எல்லாவிதத்திலும் அடக்கி, ஒடுக்கி மேலெழ விடாமல் கலாச்சாரம் என்கிற வேலிக்குள் அடைப்பார்கள். முன்னேற முயற்சிக்கும் சமுதாயத்திற்கு இது நல்லதல்ல.
-
பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை முடிவு - பிமல் ரத்நாயக்க
அனுராவின் ஆட்சி அமைந்தவுடன், வெகுவிரைவில் இந்த ஆட்சி கவிழும், கலைக்கப்படும் என்று ரணிலார் கலவரப்பட்டபோதே நினைத்தேன், பின்னால் ஏதோ செய்தி இருக்கிறதென்று. எல்லோரும் ஒருவரின் குற்றத்தை மற்றவர் மூடி மறைத்து, ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்து எழுபத்தாறு ஆண்டுகளாக நாட்டை சுடுகாடாக்கியதுதான் இவர்களின் சாதனை! இவர்களுக்கு எப்படியான மரணம் வரும்? மஹிந்த, கோத்தாவுக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள், இவர்கள் தப்பினாலும் அவர்கள் அனுபவிப்பார்கள். ஆனால் ரணில், அப்பாவிமாதிரி முகத்தை வைத்துக்கொண்டு போட்ட ஆட்டம் கொஞ்சமல்ல. அவர் செய்தவற்றுக்கெல்லாம் தானே அனுபவித்துத்தான் முடிய வேண்டும்.
-
ஊழல் எதிர்ப்பு அணி வன்னி என்னும் அவதூறு பரப்பிகளும் அதை பகிரும் மூடர்கூடமும்..…
ஒழுக்கமற்றவர்களிடம் இருந்து வேறெதை எதிர்பார்க்க முடியும்? தங்கள் எண்ணத்திலிருப்பதே வெளியில் வரும். தங்களையும் சமூகத்தில் முதன்மைப்படுத்துவதற்கு வேறேது அவர்களிடமுண்டு? அவர்களிடமுள்ளதை கொடுக்கிறார்கள்.
-
கண் கண்ட தெய்வம்
ம்.... உண்மை. அதில் சிலர், சிலவற்றை வெளிப்படுத்தியுள்ளனர். இருக்க ,முன்னுக்கு அமர்வதற்கு எந்த தயக்கமும் காட்ட வேண்டாம். ஏனென்றால் முன்னுக்கு இருப்பவர் முன்னுக்கே பார்ப்பார், நம்மைப்பார்ப்பதென்றால் பக்கத்துக்கோ, பின்னுக்கோ திரும்பியோ தான் பார்க்க வேண்டும். எவ்வளவு நேரம் பார்க்க முடியும் அவர்களால்? அதோடு நேரம், பணம் செலவழித்து நம்மைப்பார்க்கவா வருகிறார்கள் வருபவர்கள்? நமக்கு பின்னிருப்பவர் நமது பின்பக்கத்தையே பார்க்க முடியும். சிலர் முன் ஆசனத்திற்கு அடித்துபிடித்து ஓடுவர். வேடிக்கை பார்ப்பதற்கென்றே வருபவர்கள் எங்கிருந்தாலும் தமது நோக்கத்தை நிறைவேற்றுவர். உங்களைப்போன்ற தன்னடக்கமுள்ள சிலர் பின் ஆசனத்தில் அமர்வர். ஆனால் ஓணாண்டியார், தான் பின் ஆசனத்தில் வரிசையில் அமர்வதற்கான காரணத்தை சொன்னார் பாருங்கள்! அதைத்தான் நம்ப முடியவில்லை. நறுக்கென்று சொல்லால் வெட்டும் இவருக்கா தன்னம்பிக்கையில்லை? சொல்கிறார்.
-
கஜேந்திரகுமார் , கே.வி. தவராசா இணைவு.
சீற் கிடைக்காமல் வெளியேறுவது தவறுதான். ஆனால் சக உறுப்பினர்களுக்கு வெறுப்பூட்டி வெளியேற்றுவதும், மக்களால், கட்சி உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்ட பின்னும் தனக்கென இல்லாத பதவிகளை உருவாக்குவதும், சர்வாதிகாரிபோல் அடுத்தவரின் பதவிகளை பறிப்பதும், பெயருக்கு சேறடிப்பதும், பொறுப்புகளை கையகப்படுத்துவதும், கட்சியை தன் தனிச்சொத்துப்போல கட்டுப்படுத்தி செயற்படாமல் தடுப்பதும் எந்தவகையில் நிஞாயம்? அதே! இல்லையாயின் மக்களுக்கோ, இவர்களுக்கோ எந்த நன்மையையும் கிடையாது. பயனடைவது எதிரியே. இப்படியே பல கட்சிகள் உருவாக்க வாய்ப்பாகும். ஒரே ஒரு கட்சியென மக்களின் நலன் காக்கும் கட்சி உருவாக்க வேண்டும்.
-
அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு
கலந்துரையாடும்போது எடுத்த படத்தை போட்டிருக்கலாமே, இது ஏதோ போற வழியில எட்டிப்பாத்து சுகம் விசாரித்த மாதிரியிருக்கே.
-
அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு
சந்தித்து ....? நெடுகத்தான் சந்திக்கிறார். எதற்காக சந்திக்கிறார், என்ன சாதித்தார் என்றுதான் இதுவரை வெளிவரவில்லை. போய் கதவைத்தட்டினால் வந்திருப்பவர் யாரென்று பார்க்க வீட்டுக்காரர் கதவை திறப்பது வழமைதானே. இவர் ஏன் அவசரமாக ஓடுப்பட்டுத்திரியிறார்.? தேர்தல் வருவதால் மக்களுக்கு படம் காட்டுகிறார், தான் ஒரு செயல்வீரரென. இவரது செயலை மக்களும் அறிவர், தூதுவர்களும் அறிவர், இவர்மட்டுந்தான் அறியவில்லை.
-
தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்ய சதி!
ம். ஏற்கெனவே உடைந்த கட்சியை உடைக்க வேறொருவரா? இவர்களே போதும் கட்சியை உடைக்க, வேறு யாரும் வரத்தேவையில்லை. யாரோ உடைத்ததாக கூறி தேர்தல் காலத்தில் அனுதாபம் தேடப்பார்க்கிறார்கள். சுமந்திரனைத்தான் மறைமுகமாக சொல்கிறாரோ? நான் உங்களை சொல்லவில்லை என்பதற்காக அவர் பெயரை தன்னோடு சேர்த்து சொல்கிறார். எந்த நேர்காணலிலும் சுமந்திரன் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிக்கொண்டே இருப்பார், தலையாட்டி சிவஞானம்.
-
கண் கண்ட தெய்வம்
ஒவ்வொருவர் பின் வரிசையில் அமர்வதற்கு, தேர்ந்தெடுப்பதற்கு பல காரணங்கள் உண்டு. பின்வரிசையில் யாருக்கும் தெரியாமல் போவோர் வருவோரை விடுப்பும் பாக்கலாம்.
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
இவர்கள், யாரையும் முன்னேற்ற பணம் அனுப்பவில்லை. இதன் பிறகும் இவர்கள் கிருஷ்ணா பெயரில் பணம் அனுப்புவார்களாக இருந்தால்; இந்த ஏமாற்றுப்பேர்வழிகளை ஊக்குவிக்கிறார்கள், அதற்கு பின்னால் அனுப்புபவர்களுக்கு ஏதும் சுயலாபம் உண்டு, அல்லது சுய புத்தியை இழந்தவர்களாக இருப்பார்கள் என நினைக்கிறன்.
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
அரசியலுக்கு வேலை செய்வார்கள், கெத்து காட்டுவார்கள், ரவுடிகள் இருப்பார்கள், பார்ட்டிகள் கொடுப்பார்கள், ஊர் சுற்றுவார்கள், சுத்துமாத்தும் செய்வார்கள், பெரிய சமூக வேலை, கைநிறைய காசு. பின்பு ஒரேயடியாக எல்லோராலும் கைவிடப்பட்டு நடுத்தெருவில் நிற்பார். உழைத்து வாழக்கூடிய வயது, இப்படி ஏமாற்றி வாழ்கிறார்கள் புலம்பெயர்ந்தோர் உதவியில். இவர்களை வளர்ப்பதற்கே பல உதவி, தொண்டு நிறுவனங்களை, நபர்களை தடை செய்கிறது அரசாங்கம். உண்மையிலேயே கஸ்ரப்பட்டு வரி ஏய்ப்பு செய்யாமல் உழைக்கும் உறவுகள், உதவி செய்ய விரும்பும் குடும்பங்களின் வங்கி இலக்கம் மூலம் உதவி செய்யலாம் வரையறையோடு. தொழில் ஆரம்பிக்க, கல்வி செயற்பாடு, இப்படி பல முன்னோக்கு உதவிகள் செய்யலாம் அவர்கள். எதிலும் முன்னேறாமல் பணம் பெறுவதிலேயே குறியாய் இருந்தால்; குறிபிட்ட காலத்தின் பின் நிறுத்தி வேறொரு உதவி தேவைப்படும் நபர்களுக்கு செய்யலாம். எனது அனுபவத்தில் பலரை நம்பி ஏமாந்ததால் சொல்கிறேன், நீங்களே நேரில் சென்று செய்யுங்கள் இல்லையெனில் இவர்களுக்கு இவ்வளவு கொடுங்கள் என்னோடு தொடர்பு கொள்ளச்சொல்லுங்கள் என்று அறிவியுங்கள். உங்கள் பணம் எவ்வாறு முன்னேற்றப்பாதையில் செலவிடப்படுகிறது என்பதையும் கவனியுங்கள். "ஆற்றிலே போட்டாலும் அளவறிந்து போடவேணும்." அவ்வளவுதான் சொல்வேன்.
-
பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் : நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
குற்றவாளி படிப்படியாக குற்றச்செயல்களை கற்றுத்தேர்ந்திருக்கிறார். குற்றங்கள் எங்கே எப்படி உருவாக்கப்படுகின்றது என்பதற்கு இவர் சாட்சி. இதில பௌத்தம் உயர்வானது, இது பௌத்தநாடு, ஒழுக்கம் நிறைந்த இராணுவம் என பெருமை வேறு. இத்தனை பெண்கள் வடக்கில் போரில் கற்பழிக்கப்படும்போது குரல் கொடுக்காத சஜித், இப்போ தனக்கு பெண் குழந்தை இருப்பதால் குரல் கொடுக்கிறாராம். இதுவே முன்னைய அரசாங்கமாயிருந்தால் செய்தியே வெளிவந்திருக்காது. வரப்பிரசாதங்களையும், சுதந்திரத்தையும் தகுதியற்றவர்களுக்கு அள்ளி வழங்கினால்; துஸ்பிரயோகம் செய்யத்தான் செய்வார்கள். இந்த அரசாங்கத்தால் அவைகள் நிறுத்தப்படவேண்டும். நேற்று பாத்தேன், பிக்கு ஒண்டு கெல்மெற் போடாமல் பயணம் செய்திருக்கிறது. போலீசார் கேள்விகேட்டபோது, பிக்குகளுக்கு நாட்டின் சட்டங்களை கடைபிடிக்க தேவையில்லையாம், தங்களுக்கு வரப்பிரசாதங்கள் அளிக்கப்பட்டிருக்கிறதாம். பார்த்தீர்களா, இதுவே முன்னொரு தடவை ஒரு கிறிஸ்தவ பாதிரியார் கெல்மெற் போடவில்லையென்று தூசணப்பிக்கர் தெருவில் நின்று தாண்டவக்கூத்தாடியது. ஒழுக்கம், பணிவு, தர்மம் கற்பிக்க வேண்டியவர்கள் என்னத்தை கற்பித்திருக்கிறார்கள் என்பதை இந்த பிடிபட்டவர் நிரூபித்திருக்கிறார். தங்களாலேயே மதத்தை அழிக்கப்போகிறார்கள்.
-
பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் : நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
தமிழருக்கெதிராக திட்டமிட்டு வளர்த்தது, இப்போ தன் இனத்தையே மேயுது.
-
மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
என்னை மீட்டெடுத்தேன் என்று சொல்லும் கோசானுக்கு வாழ்த்துக்கள்! இங்கு யாரும் மதவெறி கொண்டு என்னை தாக்கவுமில்லை, நான் யாரையும் நம்பி கருத்தெழுதுவதுமில்லை, ஒரு விடயம் சம்பந்தமான திரியில் வேறொன்றை புகுத்துவதுமில்லை, எனக்குத்தெரிந்ததை தெரியப்படுத்துவேன். யாரும் இங்கு யாரையும் தாழ்வாக மதிப்பதுமில்லை, மிதிப்பதுமில்லை, அவரவர்க்கு தெரிந்ததை விவாதிக்கிறோம். இங்கு அடிபிடி இல்லை, அப்படி யாராவது இருந்தால் இனிவருங்காலத்தில் திருந்திக்கொள்வார்கள். அப்போ, நாம் கேட்கும் நிஞாயமெல்லாம், சிங்களவனும் அப்படித்தான் எடுத்துக்கொள்கிறானோ தெரியவில்லை? அதை தெளிவாக எழுதினால் எல்லோருக்கும் புரியும். சிலருக்கு ஜோசவ், ஜேசுநாதர் என்றால் யாரென்றே தெரியாது. சிலருக்கு அவர் நிஞாயவாதியாகவும் தெரியாது. தெரிந்தவற்றை கொண்டு தெரியாதவற்றை விளக்குவதே உவமை. தெரியாதவற்றை கொண்டு தெரியாததற்கு விளக்கம் கொடுக்கும் வாத்தியார். நன்றி விளக்கத்திற்கு. இதுதான் கோசானின் சிறப்பு. அதை நான் கேட்டதற்கே இவ்வளவு விளக்கமும். இங்கே எங்கே ஐயா மதநிந்தனை வந்தது? எதற்கு மீனவர் பிரச்சனையில் விஜய்க்காக ஜேசுநாதரை கூட்டிக்கொண்டு வருகிறீர்கள் என்றுதானே கேட்டேன்?