Everything posted by satan
-
நானும் ஊர்க் காணியும்
எனக்கென்னவோ ஆளாளுக்கு ஒருவரை சாட்டி ஒருவர் விளையாடுகிறார்கள் போலுள்ளது. சும்மா இருத்துகிறீர்கள் அவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி போகின்றனர். எது எது இருக்கிறது என்றொரு கணக்கில்லாமல் கொடுப்பது, போகும்போது அது எங்கே என்று கணக்கு கேட்பதில்லை கோவில் சொத்துபோல் தமக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு அடுத்தவர் மேல் பழி போடுவது. நான் செய்கிறேன் என்று இழுத்துப்போடுவோர் மட்டும் நல்லவர்கள் இல்லை. ரதி அக்காவில எனக்கொரு சந்தேகம், வீட்டில் குடியிருப்பவர் ரதி அக்காவுக்கு வேண்டப்பட்டவரோ, உறவினரோ? பொறுத்திருந்து பாப்போம்.
-
நானும் ஊர்க் காணியும்
சொந்த ஊரில், உறவுகளே வீட்டின் ஓடுகளை, கதவுகள், மின்குமிழ்கள்களை கழற்றி தமது வீட்டுக்கு மாற்றினார்கள், விற்றார்கள். எல்லா இடத்திலும், எல்லாரிடமும் உந்த கள்ள புத்தி உண்டு. ஒருவர் களவெடுத்து கொண்டு வீட்டை மாறினால், சொந்தக்காரர் எந்த நடவடிக்கையும் அதற்கெதிராக எடுக்காவிட்டால், தொடர்ந்து வருபவர்களும் அதையே செய்வார்கள். நீங்கள் எத்தனை பேரை மாற்றி மாற்றி இருத்தினாலும் உது தொடர்கதையாகும்.
-
அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை கிடையாது; ஈ.பி.டி.பி தெரிவிப்பு
உண்மையை சொன்னால் சேறடிப்பா தேர்தல் காலங்களில் மட்டுமல்ல எப்போதுமே உங்கள் மேல் விமர்சனம் உள்ளது ஏதோ பெரிய கட்சி பெருமெடுப்பில் வெற்றியீட்டுவதுபோல் பிம்பம் காட்டுகிறார். இவ்வளவு காலமும் எதை வைத்து அரசியல் செய்தார்கள்? ஏன் மக்களால் நிராகரிக்கப்பட்டார்கள்? இப்போ இவர்களை சுற்றி ஏமாற்று, ஊழல் வழக்குகள் தொடர இருப்பதால் புதுப்புரளி.
-
யாழ்.பல்கலைக்கழகத்தில் இருந்து 101 பேர் வெளிநாடுகளுக்கு தப்பியோட்டம்
தலையங்கத்துக்கும் செய்திக்கும் தொடர்பில்லை.
-
அப்பா ஏன் பின்தங்குகின்றார்.
என்ன, அப்பாவைப்பற்றியுயே தேடிதேடிப்படிக்கிறீர்கள் போலுள்ளதே! அப்பா, தன் அன்பையும் தேவையையும் கவலைகளையும் களைப்பையும் ஒருபோதும் வெளியில் காட்டுவதில்லை பொருட்படுத்துவதுமில்லை. காரணம், குடும்பத்தின் தேவைகள், கவலைகள், ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுப்பதால். அதனால் அவருக்கு ஏதும் குறைகள் இருப்பதாக அல்லது அவைகள் பிறரின் கண்ணுக்கு தெரிவதில்லை. அங்கேயும் ஒரு ஆன்மா, பிறர் தன் தேவைகள், குறைகள், கவலைகள் மற்றவரால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும், கவனிக்கப்படவேண்டுமென மௌனமாக ஏங்குகிறது.
-
நானும் ஊர்க் காணியும்
வீடு இருந்தாலும் கஸ்ரம், இல்லையென்றாலும் கஸ்ரம். ஊரில் வீட்டை வாங்கி விட்டு வெளிநாட்டில் இருப்பவர்கள் நிம்மதியாக இருக்க முடியாது. கேட்டால், தேவையில்லாத பகை. இருந்த நிம்மதியும் வாங்கிய வீட்டால் போய்விட்டது. ம் ....... தொடருங்கள் பாப்போம். உந்த விஷயம் வீட்டு அம்மாவுக்குத் தெரியுமோ? நானும் வீட்டைப்பாக்கப்போறேன் என்று வெளிக்கிட்டா என்றா சாமியாரின் கதை கந்தல்.
-
தமிழ் தலைவர்களை சந்தித்த மோடி
ஒன்றை கவனித்தீர்களோ? எப்போதும் கறுப்பு கோர்ட் சூட்டோடு திரிபவர், இந்தமுறை மோடி நிறத்தில நிக்கிறார். நானும் உங்களில் ஒருவன்! யாரோ சொன்னார்கள் சுமந்திரன் இந்தியாவின் கைக்கூலியல்ல, அமெரிக்க எஜமானின் நண்பன் என்று. இங்க பாத்தால்; மோடியோடு ஒட்டிக்கொண்டு நிக்கிறார். உவர் மக்களுக்காக உழைப்பவரல்ல, சும்மா படம் காட்ட ஒவ்வொரு நவீன உடுப்பை வெளியிடுவார். முந்தி கடற்தொழிலாளர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் குல்லா தொப்பியோட படம் காட்டினவர். நான் தமிழர் பிரதிநிதி, ஆனால் வெள்ளைக்காரன் என்கிற நினைப்பு. இவர் நவீன உடை அழகு காட்சிக்குத்தான் பொருத்தமானவர். போயும் சந்திக்கினம், வரும்போதெல்லாம் சந்திக்கினம், அவரும் பாசாங்காக தமிழர் பிரச்சனை தீர்க்கப்படவேண்டுமென சவுண்டு விடுவார். அந்தப்பிரச்சனை தீர்ந்தால் இந்தியாவை யார் கணக்கெடுப்பார்? ஏன் இங்கு வரவேண்டிய தேவை அவர்களுக்கு? தன் நாடுபோல் தன் நாட்டு பாதுகாப்போடு வந்திருக்கிறார், யாரும் எதிர்க்கவில்லை. அப்படியிருக்கும்போது தமிழர் பிரச்சனை அவர்களுக்கு சாதகமானதே.
-
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அவசர மகஜர்
சட்டம்பியாரிடம் யாரும் மகஜர் கையளிக்கவில்லையோ? அவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் இல்லையென்பது யாவரும் அறிந்ததே, ஆனாலும் முந்திக்கொண்டு அறிக்கை விடுவதும், வெளிநாட்டுத்தூதுவர்களுடன் நின்று படம் பிடிப்பதும், அழைப்பு கிடைக்கப்பெற்றவர்களை முந்திக்கொண்டு தான் பயணம் செய்து காணொளி பதிவிடுவதும் பார்த்தால்; அவர் இன்னும் யதார்த்தத்தை புரியவில்லை என்பது தெரிகிறது. பாருங்கள்! எந்த வழியிலாவது புகுந்து மோடி, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பில் தரிசனமாவார். அவர் தமிழ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்று சொல்லி வாக்கு வாங்கினாலும் வக்காலத்து வாங்குவது, உழைப்பதெல்லாம் சிங்களத்துக்கே. மோடியே தனக்கு பாதுகாப்பில்லை என, தனது வான், தரை, விசேஷ கொமோண்டோ பாதுகாப்பு படையுடன் வந்திறங்கியிருக்கிறார். இதுபற்றி பேசவா போகிறார்? தன் நாட்டில் வைத்தே பேசாதவர், இங்கு வந்து பேசுவாராம். பாப்போம்!
-
பகிடிவதைக்குள்ளான யாழ்.பல்கலையின் விஞ்ஞான பீட மாணவன் : காது கேட்கும் திறனும் இழப்பு
நூறு வீதம் உண்மை. "தாம் பெற்ற துயரம் மற்றவர்களும் பெறவேண்டும்." என விரும்புபவர்கள். பல வருங்கால கனவுகளுடன், எதிர்பார்ப்புகளுடன், லட்சியங்களுடன் வரும் புதுமுக மாணவர்களை அன்புடன் வரவேற்று, அவர்களின் தயக்கத்தை போக்கி, விதிகளை அறிமுகப்படுத்துவதுதான் மூத்த மாணவர்களின் கடமை, ஆரோக்கியமான பண்பு. இதுகளெல்லாம், பகிரங்கமாக செய்ய முடியாதவற்றை பல்கலையில் செய்து வீரம் காட்டும் கோழைகள். சமுதாயத்திற்கு வேண்டப்படாதவர்கள். இவர்கள் படித்து என்னத்தை சாதிக்கப்போகிறார்கள்? சமுதாயத்தை நாசம் செய்யவே படிக்கிறார்கள்.
-
நாக பாம்பினை கைகளால் பிடித்த குருக்கள் பாம்பு தீண்டி மரணம்!
- பூசா சிறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி தமிழ் கைதி உயிரிழப்பு!
விளக்கமறியலில் இருந்த கைதியிடம் எப்படி, எங்கிருந்து கூரிய ஆயுதம் வந்தது? அதுவும் மற்றய கைதிகள் தாக்கப்படவில்லை தமிழ் கைதி குறிவைக்கப்பட்டுள்ளாரா? எங்கு சென்றாலும் தமிழரை விடுவதில்லை என விரட்டி கொலை செய்கிறார்கள்.- வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். குமாருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
ரஞ்சித் குமார வாக இருக்கலாம்.- நித்தியானந்தா இறந்துவிட்டார்? சகோதரி மகன் பகீர் தகவல்
அது சரிதான், எதற்கு அவர் மறைந்து வாழ்ந்து, நேரலையில் தோன்றவேண்டும்? நேரடியாகவே தரிசனம் தந்தால் நம்புவோமில்ல.- யோகட் சாப்பிட பயன்படுத்தப்படும் மரக்கரண்டிகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி ?
ம்...நாட்டின் பொருளாதாரம் ஜெட் வேகத்தில் ஏறி தன்னிறைவு அடையப்போகுது நாடு என்கிறேன் நான்.- துப்பாக்கிகள் எங்கள் கைகளில் திணிக்கப்பட்டன - பிள்ளையான்
அதுதானே, இந்த *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம் எப்படி தடையிலிருந்து தப்பியது என்று யோசித்தேன், தோஸ்து காட்டிக்கொடுப்பார் என்று நினைக்கிறன்.- தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை மீதான வழக்கை தள்ளுபடி செய்தது கனடா உச்சநீதிமன்றம்
ஐயோ, இங்கேயும் அரசியலா? ஒருவரையும் நல்லது செய்ய விடாதேங்கோ. உடனடியாக அரசியலுக்குள் பிடிச்சு போடுங்கோ. அதோடு அவர்களுக்கு வேறு வேலை வந்துவிடும், இதற்கான குரல் முடங்கிப்போய்விடும். விடுங்கோ அவரை, ஏனைய நாடுகளுக்கும் இந்தச் சட்டத்தை விரிவுபடுத்துமளவுக்கென்றாலும் .- தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை மீதான வழக்கை தள்ளுபடி செய்தது கனடா உச்சநீதிமன்றம்
இலங்கையின் வரலாற்றை மாற்றி, வீரக்கதைகளையும், மூடக்கதைகளையும் புனையலாம். வெளிநாடு செல்லும் இலங்கையர் உண்மைக்கதைகளை அறியும் வாய்ப்பு ஏற்படுத்தப்படுள்ளது. இதற்காக உழைத்த யாவருக்கும் மனமார்ந்த நன்றி. உலகமே இவர்களின் கோரக்கதைகளை படிக்கும் போது, இவர்கள் தங்களை ஏமாற்றிக்கொள்ளட்டும். எதையும் ஏற்கமாட்டோம் அடிபணிய மாட்டோம் என்று அடம்பிடிக்கும்போது, உலகம், முழு இலங்கை வரலாற்றை படிக்கும். அங்குள்ள அசிங்க கதைகளை படித்து பிரமிக்கும், இப்படியும் ஒரு மதம் கொண்ட சமூகமா, இனமா என?- பட்டலந்தை அறிக்கை பற்றி பேசுபவர்கள் வடக்கு வதைமுகாம்கள் பற்றி விசாரிக்க தயாரில்லை - சத்தியலிங்கம்
உங்களையும் சேர்த்துத்தானே கூறுகிறீர்கள் மிஸ்ரர் சத்தியலிங்கம்? ஆமா... கடந்தகாலம் தொடங்கி இன்றுவரை தொடர்கிறது. அதை தடுக்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? எடுக்கப்போகிறீர்கள்? என்பதை சொல்லுங்கள் மக்களுக்கு முதலில்! அதற்கு நீங்களே தயாரில்லை என்பதுதான் உண்மை. அதை விசாரிக்க செய்வதற்கு என்ன செயற்பாடுகள், ராஜதந்திரத்தை முன்னெடுத்தீர்கள்? அல்லது அதற்காக எவ்வழியில் உழைத்தீர்கள்? ஐயா! மக்கள் ஒன்றும் தூங்கவில்லை, எழுபத்தாறு ஆண்டுகளாக மக்களை முட்டாளாக்கி உங்கள் சுகபோகங்களை அனுபவித்தீர்கள், இப்போ மக்கள் விழிப்பாயிருக்கிறார்கள். சாட்சிக்காரனின் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதென்று முடிவெடுத்துவிட்டார்கள். அதற்கு வழிகாட்டிகளும் நீங்களேதான்! ஆஹா.... அற்புதமான உவமானம். உங்களை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறீர்கள். நன்றி!- துப்பாக்கிகள் எங்கள் கைகளில் திணிக்கப்பட்டன - பிள்ளையான்
ஆயுதம் ஏந்தி போராடியது தவறு என்றுணர்ந்து ஜனநாயகத்துக்கு திரும்பியவர் பேசுற பேச்சா அல்லது பம்மாத்து வேலையா இது? தேர்தலுக்கு முன் ஒரு வீரப்பேச்சு, பின் வேறொரு அதிகாரப்பேச்சு. அது சரி, எல்லா கட்சிகளும் ஏதோ ஒரு கட்சிகளுடன் இணைகின்றன, இவர்களை இணைத்துக்கொள்வதற்கு யாரும் முன்வரவில்லை. வேறென்ன, அழுக்குகள் அழுக்குகளுடன் இணைய வேண்டும். இந்தப்பேச்சை யார் எழுதிக்கொடுத்தாரென தெரியவில்லை? ம்.... பெரும் பதவி முதலமைச்சர் பதவியிலிருந்து ஒரு பியோனைக்கூட பதவிக்கமர்த்த தன்னால் முடியவில்லை என்று புலம்பியவர், கிழக்கு மக்களின் தலைவிதியை மாற்றப்போகிறாராம். தாங்க முடியவில்லை இவரின் பகிடியை. அந்தபுலம்பலின் இணைப்பை யாராவது இணைத்துவிடுங்கள் முடிந்தால்.- ”கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்” - சுமந்திரன்
ஆமா, எழுபத்தாறு வருடங்களாக உதையே சொல்லிச்சொல்லி வாக்கு வாங்கி அவர்களோடு உறவாடுவது, மக்களையும் அவர்களையும் முடிஞ்சு வைப்பது. இப்போ மக்கள் நிதானமாக இருக்கிறார்கள், உங்களுக்கு போடுவதும் அவர்களுக்கு போடுவதும் ஒன்றுதான். புதுசு புதுசாய் யோசிச்சு கொழுத்திப்போடுறார், மக்கள் மயங்குவார்களென்று. இருந்த கட்சியை உடைத்து பல துண்டுகளாக்கி வைத்திருக்கிறார், எதற்கு போடுவது? பாவம் கட்சியை உடைத்து வெல்லலாமென கனவு கண்டு இப்போ தனித்துப்போய் கட்சியின் பெயரை வைத்து பிழைக்க பார்க்கிறார்.- வெளிநாட்டு அரசாங்கங்களால் துன்புறுத்தப்படும் முன்னாள் ஆயுதப்படையினரை தற்போதை அரசாங்கம் உறுதியாக பாதுகாக்க வேண்டும் : மகிந்த
இவற்றின் சூத்திரதாரிகளே நீங்கள்தான். மனித உரிமை மீறல்கள் நிரூபிக்கப்படவில்லையென்று அப்பாவி மக்களை ஏமாற்றுகிறீர்கள், சர்வதேசத்துக்கு வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறீர்கள், கால அவகாசம் கேட்டு இழுத்தடிக்கிறீர்கள், போரின்போது நடந்த சம்பவங்களை மக்கள் பார்க்காதபடி தடை விதிக்கிறீர்கள், சம்பந்தப்பட்ட நாடுகள் விசாரணையை ஆரம்பிக்க நாட்டை விட்டு தப்பியோடுகிறீர்கள், மின்சாரக்கதிரையில் ஏற்றப்போகிறார்கள் என்று சுய வாக்குமூலம் அளித்திருக்கிறீர்கள், விசாரணை குழுக்களை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். இவ்வளவும் செய்துபோட்டு நிரூபிக்கப்படவில்லையென்று எப்படி சொல்கிறீர்கள்? ஏன், உங்கள் பெயரும் தடைப்பட்டியலின் முடிவில் வெளிவருவதற்காக காத்திருக்கிறது. நீங்கள் உங்களை, உங்கள் வார்த்தைகளை நிரூபிக்க மிக சிறிய வேலைதான் உண்டு. சர்வதேச விசாரணைக்கு ஒப்புக்கொண்டு ஒத்தாசை வழங்குங்கள், இல்லையெனில் குற்றவாளி என்பதை ஏற்றுக்கொண்டு தண்டனையை அனுபவியுங்கள். இல்லையெனில் மக்களே உங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கையளிப்பார்கள்.- நானும் ஊர்க் காணியும்
பாவம் அப்பாவி ஆண்கள் இப்படித்தான் ஏமாற்றப்படுகிறார்கள். இதற்கு பின்னுமா உங்களை நம்புகிறார் அவர்? நான் பயந்தது சரியாய்ப்போச்சா? நீங்கள் நின்று கொண்டு அவர்கள் வெளியேறியபின் நீங்களே பூட்டை மாற்றி பூட்டி எடுத்திருக்கலாம். பின்னும் பாருங்கள், அவர்களிடம் காணாமல் போன பொருட்கள் பற்றி கேள்வி கேட்க்காமல், நஷ்ட ஈடு வாங்காமல் விட்டு விட்டீர்களே? பலாமரம் தறித்த உடனேயே, இவர் ஒரு ஏமாந்த சோணகிரி என்று தெரிந்து செயற்பட்டிருக்கிறார்கள். கஷ்டப்பட்டு சேர்த்த பணம், களவெடுத்தவர்களுக்கு நிலைத்து நிற்காது. எல்லாரும் சேர்ந்த கள்ளர், வெளிநாட்டுக்காரரை மொட்டியடித்து விடுவார்கள். தாங்கள் செயல்வீரர் என்று நினைப்பர், அவர்களுடைய சொத்துக்கள் சூறையாடப்படும்போது விளங்கும் வலி. அட இன்னும் ஊருக்கு போகவில்லையா? இனிப்போய் இருக்கும் போது இந்த நபர்களை தூரவே வையுங்கள். யார் என்ன சொன்னாலும் உடனேயே முடிவு எடுக்காதீர்கள், தீர யோசித்து, விசாரித்து செய்யுங்கள். பாவம் அப்பாவி மனிதனை ஏமாற்றாதீர்கள். பின் வேறு யாராவது உங்களை ஏமாற்றி விடுவார்கள்.- நானும் ஊர்க் காணியும்
பாவம் நீங்கள். எல்லோரும் உங்களைப்போலத்தான் என நினைக்கும் வெகுளியாக இருக்கிறீர்கள். அதுபோக, வீட்டு ஐயா ஊர்ப்புதினம் பார்ப்பதில்லையோ? இவ்வளவு துணிவாக எழுதுகிறீர்கள் அதனால கேட்டேன்.- பிக்கு ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!
சாரதியை கண்டுபிடித்து விசாரித்தால் விஷயம் வெளியில் வரும்.- நானும் ஊர்க் காணியும்
அந்தப்பிள்ளை ஆட்டுக்கு குழை, விறகுக்கு கொப்பு அடுக்குப்படுத்தி தறிக்க சொல்லிச்சு. தறிக்கிறவர்கள் கூலி, விறகு வியாபாரம். எல்லோரும் சேர்ந்து அம்மணியின் தலையில மிளகாய் அரைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சொத்துக்களை யாரும் அனுபவிப்பதை விரும்புவதில்லை, அதனாலேயே என்னவோ, பாடுபட்டு வீட்டைப்பராமரிப்பவர்களை திடுதிப்பென்று வந்து எழுப்பிவிடுகிறார்கள் சில புலம்பெயர்ந்தோர். எல்லாவற்றிற்கும் அனுபவம் வேண்டும். தங்கச்சியின் கணவரோடு ஆலோசித்து செய்திருக்கலாம். பலாக்கன்று வாங்கி நடலாம், அது வளர்ந்து வர எவ்வளவு காலம் எடுக்கும்? இன்னும் என்ன என்னத்தை கொண்டு போய்ச்சேர்க்கப்போகிறார்களோ? பயமாய் கிடக்கு. - பூசா சிறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி தமிழ் கைதி உயிரிழப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.