Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. முன்பு நீங்கள் எழுதியதை வாசிக்க எனக்கு கிடைக்கவில்லை, இப்போ கிடைத்திருக்கிறது. வாங்கிய வீட்டுக்கு என்ன நடந்ததென அறிய ஆவல். ஊரில் நடக்கும் விடயங்களை பார்த்தால்நெஞ்சு பக்கு பக்கென்று அடிக்குது.
  2. சும்மாவே எந்த தூதுவரின் அலுவலக கதவு திறந்திருந்தாலும், உள்நுழைந்து படம் எடுத்துப்போடும் சுமந்திரன், இப்போ உள்ளூராட்சி தேர்தல் வருகிறது சும்மா இருப்பாரா? ஏதோ மக்களுக்கு நல்லது செய்வதுபோல் எந்த தூதுவர் வருகிறார், எந்த பணிப்பாளர் வருகிறாரென காத்துக்கிடக்கிறார் போலுள்ளது. இத்தனை வருடங்களாக சாதிக்காதவர் இனித்தான் சாதிக்கப்போகிறார்? இனியும் உந்த போலி சந்திப்புகள், வாக்குறுதிகளை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை.
  3. என்ன இப்படி பொதுவில போட்டு உடைக்கிறீர்கள்? நீங்கள் வந்துவிட்டது போல் உணர்ந்தாலும், வந்து விட்டது என்றே முடிவு கட்டுமுலகமிது!
  4. "உயிருடன் விலகாத நட்பு, சில பொருளுடன் உறவாட கெடும்." சாமியார் புத்திசாலி.
  5. எங்களுக்கு வழிபடுவதற்கு ஆலயம் தேவை. எங்கள் உழைப்பில், பணத்தில், அனுமதிபெற்று, சட்டத்திற்கு அமைவாக காணி வாங்கி, கட்டுகிறோம், கும்பிடுகிறோம். யாரின் ஆலயங்களையும் இடித்து, வழிபாடுகளை தடுத்து, மக்களின் காணிகளில் கட்டவில்லை, அதிகாரம் காட்டவில்லை, குழப்பங்களை உருவாக்கவில்லை. உங்களுக்கு ஏன் இப்படி யோசனை போகிறதென யோசிக்கிறேன். இராவணன் ஒரு தீவிர சிவபக்தன். சிவனிடம் தியானம் செய்தே பலம் பெற்றதாக செய்திகள் கூறுகின்றன. அதுசரி, சரித்திரத்தை மாற்றி தங்களுக்கு சாதகமாக எழுதி நாடு பிடிப்பதுதான் அவர்களின் சரித்திரம்.
  6. இன்று ஓர் நேர்காணலில் ரில்வின் சில்வா ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார். தாம் ஏன் ஆயுதம் ஏந்தினோமென்று, அதை நிஞாயப்படுத்தியுள்ளார். அதே நிஞாயப்பாடுதான் நம்பக்கமும் இருந்தது. அதை மட்டும் எதிர்த்தது மட்டுமல்ல அழிக்க கங்கணமும் கட்டி சேர்ந்து அழித்து முடித்தார்கள். தனக்கொரு நீதி மற்றவருக்கொரு நீதி எப்படி சமனாகும்?
  7. இவாவுக்குத்தான் கண்ணை மறைத்தது, தங்கச்சிக்கல்ல. அக்காவை நல்லா ஏமாத்திப்போட்டா பாசத்தை வைச்சு. ஒருநாளைக்கு கணவர் உண்மையை அறியாமலா இருப்பார்?
  8. நெஞ்சு திக் திக் என்று அடிக்குது, ஏதோ ஏமாற்றம் வருமோ என்று. இருந்த வீட்டை அறாவிலைக்கு குடுத்துப்போட்டு உது தேவையா?
  9. இவர் ஒருபக்கம், சுமந்திரன் மறுபக்கம் வெல்வோமென சொல்லிக்கொள்கின்றனர். நிராகரிக்கப்பட்ட கட்சிகள் நீதிமன்றம் போய் நிஞாயம் கேட்ப்போம் என்கின்றனர். யாரென்றாலும் மக்களின் நிலையறிந்து அவர்களின் தேவைகளுக்காய், விடுதலைக்காய் உழைக்கின்ற உண்மையானவர்கள் வென்றால் மக்களுக்கு நலம்.
  10. பட்டலந்த விசாரணையை கேட்டால், தமிழர் பிரச்சனையை தூக்கி தப்புவது, தமிழர் இனப்படுகொலை விசாரணை கேட்டால், பட்டலந்த விசாரணையால் மறைப்பது இனிமேல் எடுபடுமா என்பது தெரியவில்லை? எல்லாமே மனிதப்படுகொலை, அவர்கள் வாழ்வதற்கான உரிமையை பலாத்காரமாக பறித்த கொடூரம். காலம் பொறுத்திருந்து சுற்றிவளைக்கும். இன்று ரணில் சொல்லியிருக்கிறார் அதாவது, "தமிழ் மக்களுக்கு நீதி வழங்குங்கள், சம்பந்தப்பட்டவர் யாரென்றாலும் தண்டியுங்கள், சர்வதேச பொறிமுறையை வெறுக்கிறேன், காரணம் அவர்களின் இரட்டைபொறிமுறை பலஸ்தீனத்துக்கு ஒரு முறை, உக்ரேனுக்கு வேறு ஒரு முறை, இதற்குள் நாம் அகப்பட விரும்பவில்லை, உள்நாட்டுக்குள் விசாரணை நடத்தி தமிழ் மக்களுக்கு நீதி வழங்குங்கள்." என்கிறார். யாரை யார் தண்டிப்பது? பலமுறை நாட்டின் தலைவராக, எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் ஏன் அதை செய்யவில்லை? அந்த மக்களை பாதுகாக்க ஏதாவது சட்டங்களை கொண்டு வரவில்லை? இப்போ ஏன் இந்த கரிசனை? யார் செய்ய வேண்டுமென்கிறார்? தன்னை காப்பாற்றவா? இனி நினைத்தாலும் நடந்து முடிந்ததை மறுபடியும் போய் திருத்த முடியாது. எழுதியது எழுதியதுதான் உங்கள் விதியை. இளமை, அதிகாரம் இருக்கும்போது மற்றவர்களின் உரிமையை பறித்து ரசித்தீர்கள். இப்போ, உங்களை காப்பாற்ற நாடகம். அப்போ நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள்? எவற்றை மக்களுக்கு வழிகாட்டினீர்கள்? அதையே அவர்களும் தொடர்வார்கள். நீங்கள் எதுவும் சொல்லத்தேவையில்லை. உங்களுக்கு தரப்பட்ட காலம் முடிந்தாயிற்று.
  11. ம்.... நாட்டின் சட்டங்களும், நடைமுறைகளும், விளக்கங்களும் விசித்திரமானவை, நகைச்சுவைக்குரியவை. வடக்கில் சுமந்திரனை தவிர யாருக்கும் சட்ட புலமை இல்லை என்பவர்களுக்கு, சுமந்திரனின் சட்ட புலமையை பரிசீலிக்கவும் திறமையில்லை, சட்டத்தை வாசித்தறியவும் தெரியவில்லை. தொழிலுக்கு தகுதியற்றவர்களை நியமித்து மக்களை முட்டாள்களாக்குவது.
  12. அண்மையில் ஒரு பௌத்த பிக்கு தமிழில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதாவது திஸ்ஸ மகா விகாரை பிரச்சனைக்கு தன்னால் தீர்வு காண முடியுமென்றும், வடக்குமக்கள்பௌத்தத்தை ஏற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இன்னொரு பிக்கு கூறியிருந்தார், திஸ்ஸ மகா விகாரையை தமிழ் பௌத்த அமைச்சிடம் கையளிப்போம் என்று. இவர்கள் தமிழ் பௌத்த மதத்திற்கு மக்களை மாற்றி, பரப்ப போகிறார்கள். உண்மையை எடுத்துரைக்க மாட்டார்கள், நாட்டில் அமைதியை ஏற்பட விடமாட்டார்கள்.
  13. நடத்துனரா சாரதியா என்பதா இப்போ பிரச்சனை? தமிழர் பிரதேசத்தில் நடைபெற்றிருக்கிறது. இது நமக்கும் வெட்கக்கேடு.
  14. இவருக்கு பதவிகளையும் பாதுகாப்பையும் கொடுத்தவர்கள் யாரென்று வெளியில் வந்தால், அது இன்னும் வெட்கக்கேடு. அதையும் சரி என்று வாதாடுவார்கள். நாடு முழுவதுமே வெட்கக்கேட்டால் நிறைந்துள்ளது. இவர் அதிகாரத்தில் இருக்கும் போது அளித்த சாட்சியங்கள் மீண்டும் விசாரணை செய்யப்படவேண்டும், இவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவரது நிதியிலிருந்து நிவாரணம் அளிக்கப்படவேண்டும். இவர் ஒன்று தற்கொலை செய்துகொள்ளலாம் அல்லது கொலை செய்யவும் படலாம். இவருக்கு உதவியவர்கள் யாவரும் விசாரணை, தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். இவர் முறையாக மன்றில் ஆயராகி தன் பக்க நிஞாயத்தை எடுத்துக்கூறியிருந்தால்; இவ்வளவு சிக்கல் வந்திருக்காது. இவர் மறைந்தது, இவருக்குப்பின் நிறைய சமாச்சாரங்கள் இருக்கின்றன என்பதையே நிரூபிக்கின்றன.
  15. ஏன் மக்கள் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென இவர் கேட்கிறார்? கட்சியை உடைத்த இவருக்கு அதை கேட்கும் அருகதை இருக்கிறதா? இருக்கிற கொஞ்ச நஞ்சஉணர்வுகளையும் இல்லாமல் செய்வதற்கா? அவர் வெற்றியடைய மாட்டார் என்பது அவருக்கே நன்றாகத்தெரியும்.
  16. லஞ்சமாக மதுப்போத்தல்களை கேட்டிருப்பாரோ பதவியில் இருந்தபோது. இவர் பதவியில் இருந்தபோது, பல சமூக விரோதிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்துள்ளாராம், அதனால்சிறையில், சிறைக்கைதிகளால் அவருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாம் என இவரது சட்டத்தரணி வாதாடியுள்ளார். இவரே ஒரு சமூக விரோதி, சட்டத்தை மதித்து காப்பாற்ற வேண்டியவர் சட்டத்திற்கு தண்ணி காட்டியவர், சட்டத்தை மதிக்கத்தெரியாதவர், இவர் யாருக்கு தண்டனை பெற்றுக்கொடுத்திருப்பார்? மதுப்போத்தல் கொடுக்க மறுத்தவர்களுக்கு? சட்டமா அதிபரின் சொலிசிற்றார் திலீப் சொல்கிறார், இவர் செய்த கர்மா வினைதான் இவரை பிடித்திருக்குதாம். அப்போ நாடுமுழுவதும் கர்மவினை நிறைந்திருக்கு, அவர்களை எப்போ அது பிடிக்கும்?
  17. குப்பையிலே போட்டாலும் குண்டுமணி மங்காதாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் சொன்ன வாழ்க்கைத் தத்துவமும் அதோடு ஒத்துப்போகிறது.
  18. ஒருகாலம் நீதிமன்றத்தை ஆட்டிப்படைத்தவர்கள், இப்பவும் நீதிக்கு மாறாக கோரிக்கை வைக்கிறார்கள்.
  19. எல்லா தமிழ்கட்சிகளையும் ஒன்றிணைந்து செயற்படுமாறு கோரிக்கையும் விட்டிருக்கிறார். எல்லோருக்கும் கண்கெட்டபின்தான் ஞானம் பிறக்குது. அடுத்தமுறை தமிழரசுக்கட்சி இப்படியொரு கோரிக்கையை வைக்க சாத்தியமுள்ளது. எதற்கும் ஒரு விதிமுறைகள் உண்டு. அதற்கு கட்டுப்படாமல் தானே ராஜா என்று ஆடும் சுயநலம், எப்போதும் தன்னையும் தன்னைச்சார்ந்தவர்களையும் அழிக்கும்.
  20. களத்திலுள்ள எல்லோரையும் எழுதும்படி ஊக்குவிக்கிறார்.
  21. அவர் மனதாலை கூட யாரையும் தொடமாட்டார், ஏகபத்தினி விரதன்!
  22. உங்களுக்கு தெரியாத மனிதர்களே இல்லைப்போல் இருக்கிறதே .
  23. கதை முடிந்தது என்று தன்பாட்டில போன மனுஷனை தொடருங்கள், தொடருங்கள் என்று தொடர வைத்து, எங்கேயோ தொடுத்து விடுகிற பிளான் போலிருக்கே.
  24. ஆமா, எல்லோரும் இணைகின்றனர், கழட்டிவிட்டு சென்றவர்களுடன் இணையவோ, இணைக்கவோ யாரும் மறுத்துவிட்டனர், வைத்த கோரிக்கையையும் நிராகரித்து விட்டனர். இப்போ, தமிழரசுக்கட்சி முஸ்லீம் காங்கிரஸ் இணைவு செய்தி, நாளைக்கு மறுப்புச்செய்தியும் வரலாம். சுயநலம் பிடித்த மூடரின் முடிவு எப்போதும் அழிவிலேயே முடியும். வீட்டில் குடியிருப்பது நச்சுப்பாம்புகளும் கறையான்களுமே. யாரும் குடியேற விரும்பவில்லை, நாளுக்கு நாள் வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.
  25. பலரின் இளமைக்கால நினைவுகள் மெல்ல மெல்ல வெளியில் வரக்காத்திருக்கிறது!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.