Everything posted by satan
-
யாழில் ஒருவீட்டுக்கு இரண்டு உறுதிகள் - இளங்குமரன் எம்.பி
அப்போ, வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் அமைந்துள்ள காணிகளுக்கு இராணுவத்தினர் பெயரில்லா உறுதி உள்ளது? தையிட்டி திஸ்ஸ விகாரை இவரது காணியிலா அமைந்துள்ளது?
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
மக்களை தலைவன் இல்லா மந்தைகளாக்கி, கட்சியை கூறு போட்டு வைத்திருக்கிறார். இதற்கு மேல் என்ன கேடு வரப்போகிறது? ஒன்று கட்சி அழியும் அல்லது இவர் பலாத்காரமாக வெளியேற்றப்படுவார். கட்சியால், மக்களால் நிராகரிக்கப்பட்டும் தலைமைக்கு அடிபட்டு, அடுத்தவர் பதவியை கவர்ந்து இதல்லாம் ஒரு பிழைப்பு? இதை சட்டம் தெரிந்த சாணக்கியன் என்று புகழ்ச்சி வேறு. இவர் பாராளுமன்றம் போனாலும் ஏளனப்படுத்தப்படுவார். அதற்குத்தான் இவ்வளவு அவசரம். பதவிக்காக நாக்கைதொங்கபோட்டுக்கொண்டு அலைபவர்கள், கிடைக்கவில்லையென்றவுடன் கட்சியை பிரிந்து சென்றுவிட்டார்கள் என்று சொன்ன சுமந்திரனும், இங்கு சிலரும் கவனிக்க வேண்டும்; கட்சியின் அடாவடி, தன்னலம், ஓரங்கட்டல், குடைச்சல் தாங்காமல் மரியாதையாக வெளியேறினார்கள். ஆனால் மற்றவர்களை குறை சொல்லி, கட்சியை முடக்கி, உறுப்பினர்களை செயற்படவிடாமல் தடுத்து வைத்திருப்பதற்கு என்ன பெயர் சூட்டலாம்?
-
தமிழ் இன அழிப்பு போன்ற கருத்துகள் பகிரப்பட்டால் இனி சட்டம் பாயும் , அரசாங்கம் எச்சரிக்கை.
இவர் கட்சியிலுள்ளவரே, சில வாரங்களுக்கு முன், பட்டலந்த வதைமுகாமில் சிங்கள மக்களையே இவ்வாறு சித்திரவதை செய்திருப்பார்களென்றால், யுத்த காலத்தில் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியிருப்பார்களென்று பிமல் ரத்நாயக்க பாராளுமன்றில் சந்தேகம் எழுப்பியிருந்தார். இவரும் அங்கேதானே இருந்தார், ஏன் இவரால் பதில் சொல்லமுடியவில்லை? இதே அனுரா, பத்திரிகையாளர் சந்திப்பில், வடக்கில் உள்ளதுபோன்று தெற்கில் இராணுவ காவல் அரண்கள் இல்லை, இன்றும் தங்கள் பிள்ளைகளை தேடி அலைகின்றனர்என்று சொன்னாரே, அதற்கு இவர் பதில் என்ன? நீங்கள் சம்பளத்திற்காக போரிட்டவர்களை நினைவு கூரலாம் என்றால், நாம் ஏன் நம் வீரர்களை நினைவு கூரக்கூடாது? நீங்கள் எங்கள் சொந்த மண்ணில் விகாரைகளை அமைத்துக்கொண்டு நல்லிணக்கம் என்றால், கனடாவில் உள்ள நினைவுத்தூபியால் எப்படி நல்லிணக்கம் குலையும்? பகுத்தறிவு இல்லாதவர்கள் படித்தாலென்ன, படிக்காவிட்டாலென்ன எதுவும் மாற்றமடையாது? உரத்து சொல்லுங்கள், தமிழ் இன அழிப்பு இலங்கையில் நடைபெறவில்லையென, சர்வதேசம் எங்கும் இனவழிப்பிற்கான குரல்களும், நினைவாலயங்களும் கிளம்பும். நீங்கள் தனித்து விடப்படுவீர்கள். உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். நாளடைவில் சிங்கள மக்களே, இனஅழிப்பினாலேயே இந்த நாடு அழிந்தது, தனித்து விடப்பட்டது என நீதி தேடி அலைவார்கள். சர்வதேசம் ஏன் இன்னும் மௌனம் சாதிக்கிறது? ஆதாரங்களை அவரவர் புகைப்படங்களுடன் வெளியிட்டு நிரூபிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு. எங்களுடைய இன்றைய இந்த துயர நிலைக்கு ஐரோப்பிய ஒன்றியம், ஐ .நா. சர்வதேச நாடுகளே காரணம்! ஏன் ஐ நா சபைக்கு காலத்திற்கு காலம் காவடி எடுக்கிறீர்கள்? கொழும்பில் தமிழரை தேடித் தேடி கொல்லவில்லையா? அல்லது அப்போது இவர் பிறக்கவில்லையா? இவரைப்போல் பொய்யன் வேறு யாருமில்லை. இனவழிப்பு நடைபெற வில்லையென்றால், விசாரணைக்கு தயங்குவதேனோ? அதற்கான காரணத்தை அறிவியுங்கள்! மைத்திரிபால சொன்னார், "நிரந்தர பகிர்வு பொறிமுறையை நடைமுறைப்படுத்த இலங்கை தவறி விட்டது." என, அப்போ இந்த வெளிவிவகார அமைச்சர் எங்கே போயிருந்தார்? தன்நாட்டில் நடந்தவை அறியாத, மறந்த இவருக்கு வெளிவிவகார அமைச்சர் பதவி?
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
என்ன சிறியர் இப்படி சொல்லிவிட்டீர்கள்? நாங்களும் எங்கள் பாடுமாக இருந்த எங்களை அகதிகளாக்கி, தன் நாட்டுக்கு வரவழைத்து, இந்த ஆராத்தி எடுத்ததே இந்தியாதான். ஒரு உச்சமன்ற நீதிபதி பாவித்த வார்த்தைப்பிரயோகம்? அந்த மனிதனின் தன்மானத்தை கீறிக்கிழித்துள்ளது. ஆமா, இதை அறியாத இந்தியா தன் மக்கள் பிரச்னையோடு நின்று இருக்கவேண்டும். தன் பிரச்சனையை தீர்க்க முடியாத நாடு, எங்கள் விடுதலையில் ஏன் தலையிட்டது? ஏன் எடுத்ததற்கெல்லாம் இங்கே மூக்கை நீட்டுது? அதற்கு இந்த குஜராத் நீதிபதி பதில் சொல்ல கடமைப்படுள்ளார். நாங்கள் இந்தியாவுக்கு எதிராக கருத்து எழுதுவதற்கு காரணம் என்ன? பாகிஸ்தான் ஆயுதம் தூக்குது, எங்கள் ஆயுதங்களை பிடுங்கியெடுத்தால் பேனாவால் தாக்குவோம். நாங்களும் மனிதர்கள், எங்களுக்கும் உணர்வுகள் உண்டு, நாங்கள் எழுதுகிறோம், பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கியிருப்பதுதானே? எதற்கு மீண்டும் மீண்டும் எங்கள் பிரச்சனையை சிக்கலாக்குகிறார்கள்? தனது பாதுகாப்புக்கு எங்களை பணயம் வைக்கிறார்கள், மற்றைய நாடுகளை எங்களுக்கு உதவ விடாமல் தடுக்கிறார்கள், கனடா எங்களுக்கு அனுதாபம் தெரிவிப்பது, ஆதரவு தருவது இவர்களின் குற்ற உணர்வை தாக்குகிறது. அதுவே அவர் பெயர் குறிப்பிடாமல் வேறு நாடுகளுக்கு செல்லுங்கள் என்கிறார். அதை சொல்வதற்கு இவர் யார்? அப்படி செல்ல முடியுமென்றால் அவர்களே போவார்கள். விழுந்தவனை ஏறி மிதிப்பது எல்லோருக்கும் இலகு.
-
தமிழரசு கட்சியில் சுமந்திரனே அதிகாரம் மிக்கவர் – சிறிதரனுக்கு, சிவஞானம் அறிவுரை
உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னமே சிவஞானம் டக்கிலஸை குறிவைத்து, ஆயுதம் ஏந்தியவர் எல்லோரும் விடுதலைக்காக போராடியவர்கள் என்று கட்டியம் கூறும்போதே நினைத்தேன், டக்கிலஸை விட இவர் ஒருபடி கீழ் என்று. உண்மையிலேயே இவர்கள் ஈ. பி. டி. பியோடு இணைவதுதான் பொருத்தமானது. வீட்டை உடைத்தாயிற்று, அங்கே குடியேறுவதுதான் இவர்களுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும். சிங்கள எஜமானாரோடு கூடிக்குலாவி, அவர்களுக்கு வாக்கு போடும்படி மக்களை வழிநடத்தியவர்கள், அனுரா மட்டுமே ஏதோ சிங்களகட்சி அவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கக்கூடாது என்று கூட்டம் போட்டு கத்திவிட்டு, பின் அவர்களோடேயே டீல் போட்டு, சரிவராத சந்தர்ப்பத்தில் டக்கிலஸை வரவேற்கினம். வெட்கம், தன்மானம் கெட்டவர்கள். இந்த மனிதனுக்கு வயதிற்கு தகுந்த அறிவுமில்லை, அனுபவமுமில்லை, பட்டறிவுமில்லை. வெறும் வெத்து.
-
சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் - மஹிந்த ராஜபக்ஷ
இவ்வளவுகாலமும் போர் வெற்றிக்கதைகளைப்பேசியவர், சற்று மாற்றிப்பேசுகிறார். அனுராவின் பேச்சை கேட்டு சுருதி மாறிவிட்டதோ? அதை எப்படி இவர் சொல்லமுடியும்? போர் கனவிலேயே இருக்கிறார்.
-
தமிழரசு கட்சியில் சுமந்திரனே அதிகாரம் மிக்கவர் – சிறிதரனுக்கு, சிவஞானம் அறிவுரை
இந்த சிவஞானம் மூத்த அரசியல்வாதியா? அப்படி தெரியவில்லையே? மக்களால், கட்சியால் தெரிவு செய்யப்பட்டவர் சிறிதரன். அவரின் பதவியை முடக்கி வைத்துக்கொண்டு, பிடுங்கியெடுத்த பதவியை வைத்துக்கொண்டு ஆசைகாட்டும் சுமந்திரனின் பதவிக்காக தலையாட்டுகிறார். இவர்கள் எல்லாம் தன்னம்பிக்கையற்றவர்கள், மற்றவர்களை புகழ்ந்து, சார்ந்து வாழ்பவர்கள். இப்படியானவர்கள் இருக்குமட்டும், அவர்கள் தலையாட்டுவதில் அடிபொறுக்கிகள் தலைவராவர்.
-
யுத்தம் என்பது ஒரு துயரம், நாட்டில் மீண்டும் அவ்வாறானதொரு துயரம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் - 16 ஆவது இராணுவ வீரர்கள் நினைவு நிகழ்வில் ஜனாதிபதி
எல்லாம் சரி. அந்த போராட்டம் எதனால், யாரால்.எழுந்தது என தெளிவு படுத்த மறந்து விட்டாரா? மறைத்து விட்டாரா? போராட்டத்தின் மூல வேரை அறிந்து அகற்றாவிட்டால், இவர்கள் மூச்சுக்கு முன்னூறு தடவை உச்சரிக்கும் சமாதானம், நல்லிணக்கம் ஒருபோதும் உருவாகாது. சாந்தி, சமாதானத்தை அழித்த விழாவை கொண்டாடிக்கொண்டு, அதுபற்றி பேசுவது தங்களை தாங்களே ஏமாற்றுவதாகும். பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கும் ஜனாதிபதி என்று சொல்ல தகுதியற்றவர். இல்லை, தங்கள் பதவிகளை தற்காத்துக்கொள்ள அந்த ஏழை இளைஞர்கள் பலி கொடுக்கப்பட்டனர். சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக அவர்கள் போர்புரிந்திருந்தால், உயிர் துறந்திருந்தால், இன்று போர் வெற்றி விழா அல்ல சமாதானத்தின் விழாவாக இருந்திருக்கும். எத்தனை பெற்றோர், மனைவிமார், பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளின், கணவரின், தந்தையின் இறுதி உடலை காணாமல் அவர்களுக்கு என்ன நடந்ததென அறியாமல் இன்றும் தவித்துக்கொண்டிருக்கின்றனர். அது அந்த இறந்த வீரர்களுக்கு செய்யும் துரோகம். ஆமா, வெற்றி நாயகனின் உரை இன்னும் வெளிவரவில்லையா? இதற்குமேல் அவரால் என்ன உரையாற்ற முடியும்?
-
தமிழரசு கட்சியில் சுமந்திரனே அதிகாரம் மிக்கவர் – சிறிதரனுக்கு, சிவஞானம் அறிவுரை
பாவம் இவர்! பதவிக்காக எப்படியெல்லாம் ஆமா போடுகிறார். கட்சிக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்துவதே இவர்கள்தான் என்பதை ஏற்றுக்கொள்ள பதவியாசை விடவில்லை. ஆமா, ஆமா என்று எல்லாப்பக்கமும் தலையாட்டுவார், பின்னர் எல்லோராலும் கைவிடப்படுவார்.
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
தமிழர்களை அழித்து அவர்களை ஏதிலிகளாக்கும்போது இந்தியா இதை உணர்ந்திருக்க வேண்டும். அடைக்கலம் கொடுக்க முடியாதவர்கள் ஏன் அவர்களை அழிக்க தூண்டினர், உதவி செய்தனர்? எங்களது இன்றைய கையறுநிலைக்கு, இந்தியா, பிரிட்டன், ஐ.நா, இன்னும் சர்வதேச நாடுகளே பொறுப்புக்கூறவேண்டும், பொறுப்பெடுக்க வேண்டும். இந்த லட்ஷணத்தில காசா மக்களை லிபியாவில் குடியேற்ற போகிறாராம் ஒருவர். அப்போ நினைத்தேன், தமிழரை இந்தியாவில் குடியேறுங்கள் என்று சொன்னாலும் சொல்வார் என்று. அதற்குள் இந்தப்பதில் கிடைத்துள்ளது. அவர்களை தங்கள் நாட்டில் அமைதியாக வாழ விட்டிருந்தால், அவர்கள் ஏன் பிறநாடுகளில் தஞ்சமடைய வேண்டும். தமது நாட்டில் இருபத்தாறு பேர் கொலைசெய்யப்பட்டபோது, போர் முரசு கொட்டியவர்கள், லட்ஷம் பேரை காலத்திற்கு காலம் கொன்றபோது தம்மைப்பாதுகாப்பதற்காக ஆயுதம் ஏந்தியவர்களை கூடி அழித்தது எந்த வகையில் நிஞாயம்? அதற்கும் இந்த நீதிபதிகள் பதில் சொல்ல வேண்டும்!
-
பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் ஆட்சியாளர்கள் படையினரை கைவிட்டுள்ளனர் - தடைகள் காரணமாக என்னால் தென்னாசிய நாடுகளிற்கு கூட செல்ல முடியவில்லை - சவேந்திர சில்வா
ம், எத்தனை கனவுகளோடு அமெரிக்காவுக்கு போனார், சொல்லாமல் கொள்ளாமலே ஓடி வந்ததனால் தப்பிவிட்டார். தனது குடும்பத்துக்கும் தடை விதித்தது பெரிய கவலை. இதுவா... இன்னும் இருக்கு, அதை அவர் உணரவில்லை. தன் குடும்பம் பலியாகும்போது உணர்வார்.
-
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பிடமிருந்து தாயகத்தை விடுவித்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றோம்; சஜித் பிரேமதாச
கட்சி பேதம் மறந்து சிங்களம் ஒன்று சேருகிறது. பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் மக்களும், சட்டாம்பியும் கொடுத்த ஆதரவிற்கு கைம்மாறு. எந்தக்கட்சியும் வாக்குக்காகவே தமிழரை பயன்படுத்துகிறது.
-
பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் ஆட்சியாளர்கள் படையினரை கைவிட்டுள்ளனர் - தடைகள் காரணமாக என்னால் தென்னாசிய நாடுகளிற்கு கூட செல்ல முடியவில்லை - சவேந்திர சில்வா
ம், சொந்த அப்பாவி மக்களை கொன்றது கொண்டாடப்படவேண்டியது?
-
தேசிய போர் வீரர்களின் நினைவு: மஹிந்தவின் தனி விழாவுக்கு அனுமதி மறுப்பு
கேட்ப்போம் அனுரா என்ன உரையாற்றுகிறார் என்று.
-
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பிடமிருந்து தாயகத்தை விடுவித்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றோம்; சஜித் பிரேமதாச
சிங்களம் எப்போதும் தமிழரை ஏமாற்றுவதிலும், அடிமைப்படுத்துவதிலும், தமிழரை வெற்றிகாண்பதிலும் என்றும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. ஆனால் நம்மவர் மட்டும் ஏன் இப்படி ஏமாறுகிறார்கள்?
-
நான் உயிருடன் இல்லாவிட்டாலும் ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும் : இதுவே என்னுடைய ஒரே ஆசை - மஹிந்த ராஜபக்ஷ
உயிரோடு இல்லாத போது இது ஒரு வினோத ஆசை இவருக்கு.
-
10 இலட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியாவில் குடியமர்த்த ட்ரம்ப் திட்டம்
முட்டாள் பெரியண்ணனின் சமயோசித புத்தி. இவர் எத்தனை நாளைக்கு அதிகாரம் செலுத்த முடியும்? அதன் பின் குடியேறியவர்களின் நிலை என்னாவது? தனது நாட்டுக்குள் வரக்கூடாது என்று தடைபோடும் இவர், இன்னொரு நாட்டில் எப்படி இவர் முடிவெடுக்க முடியும்? முதலாவது பாலஸ்தீனியர்கள் லிபியாவில் குடியேற விரும்புவார்களா? அல்லது அவர்கள் நாட்டை அவர்களிடமிருந்து பறித்தெடுப்பதற்கு ஏற்கெனவே போட்ட திட்டமா இது?
-
வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு.
இதிலும் தோல்விதான்!
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
சுமந்திரன் முதலொரு தடவை ஆர்னோல்ட்க்கு எதிராக மணிவண்ணனை பாவித்தார். இப்போ, இவரை சிறிதரனுக்கு எதிராக இறக்கி குடைச்சல் கொடுக்க விழைகிறார். பாராளுமன்றத்தேர்தலின்போது பரப்புரைகளில், கொலைகாரர், ஆயுதக்காரர் என்று சுமந்திரன் இவர்களை விமர்ச்சித்திருந்தார். டக்கிளசுக்கும் தூது விட்டவர் சுமந்திரன். இவர் தனது நன்மைக்காக எந்த மட்டத்திற்கும் இறங்குவார். கொள்கை, நேர்மை இல்லாதவர். நான் ஆயுதப்போரை ஆதரிக்கவில்லை என்றவர், இப்போ யாரோடு கூட்டுச்சேர்ந்துள்ளார். கட்சிக்குள்ளேயே இருந்துகொண்டு குழி பறிக்கும் ஓநாய் இவர்.
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
லஞ்ச ஊழலை தடுப்பதற்கு ஒவ்வொரு உள்ளூராட்சி சபையிலும் புலனாய்வு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்களாமே? இது இவர்களுக்கு தெரிய வரவில்லையா? அல்லது அவர்களுக்கும் லஞ்சம் கொடுப்போம், வாங்குவோம் என்கிறார்களா. நீங்கள் நேரம் மினைக்கெட்டு இவற்றைப்பார்த்து பதில் எழுதி ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்பதே எனது ஆச்சரியம்? சுமந்திரனை விட திறமைசாலி இல்லை, அவர் அரிச்சந்திரனுக்கு அடுத்த ஆள் என நினைப்பவர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள்.
-
மீன் சந்தையில், மீன் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை.
தரமான மீனை எப்படி பார்த்து வாங்குகிறது என்கிற யோசனையை தரப்போகிறார் என்று நினைத்தே வாசிக்க ஆரம்பித்தேன். அங்க பாத்தால், ம்ம்..... தனது மீன் விற்பனையியாளின் வசன அலங்காரத்தை கூறுகிறார். இவர் மீன் சந்தைக்கு போகும்போது மனையாளும் கூடப்போவது நல்லது. மனையாள் திட்டினால் பொறுக்காது, மீன்வியாபாரி திட்டினால் ரசிப்பு. வீட்டுக்காரி சரியில்லை.
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
தமிழரசுக்கட்சி, ஈ பி டி ஐ தவிர்த்து மற்றைய கட்சிகளோடு இணைந்து கஜேந்திரன் பொன்னம்பலம்செயற்படலாமே? சுமந்திரனை வெளியேற்றாவிட்டால், தமிழரசுக்கட்சி வெகு விரைவில் காணாமல் போய்விடும். தாழுகிற கப்பலில் பயணம் செய்ய ஏன் நினைக்கிறார்?
-
தமிழ் இனப்படுகொலை – கனடாவில் நினைவுச் சின்னம் – நாமல் கொதிக்கிறார்!
அது சரி, சில நாட்களுக்கு முன், இவரேதான் அறிக்கை விட்டிருந்தார். போரில் சம்பந்தப்படாத சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டபோது தனது தந்தை மிகவும் கவலையடைந்திருந்தார் என்று. மாற்றி மாற்றி கதைப்பது இவர்களுக்கு கைதேர்ந்த கதை. அப்படி இனப்படுகொலை நடைபெறவில்லை என்றால், ஏன் இவரின் தந்தை தன்னை மின்சாரக்கதிரையில் ஏற்றப்போகிறார்கள் என்று ஒப்பாரி வைத்தவர்? இன்னும் ஐ. நாவுக்கு படையெடுக்கிறார்கள்? அதே! போர்குற்றவிசாரணையை மறுத்துக்கொண்டு, நாம் நல்லவர்கள் என்று அலம்புவதை விட்டு, விசாரணைக்கு ஒத்துழைப்புக்கொடுத்து உங்களை நிரூபியுங்கள்.
-
தேசிய மக்கள் சக்திக்கோ தமி்ழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஆதரவு இல்லை!; ஈ.பி.டி.பி. அதிரடி
அதே தான்! அந்தக்கட்சியை இல்லாமல் செய்ய ஒருவர் படாத பாடு படுகிறார், இதற்குள் இவர் ஒருவர் சமிக்கை காட்டுகிறார். உள்ளதே நாலு ஆசனம், அரசாங்கம் இவரை திரும்பியும் பாக்கவில்லை. இதற்குள் இவரின் அறிக்கை வேறு. சீசீ.... இந்தப்பழம் புளிக்கும்!
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
இப்போ புரிகிறதா மக்கள் ஏன் தென்பகுதி கட்சிகள் பக்கம் திரும்புகின்றனர் என்று? கெஞ்சி கூத்தாடி வாக்கு பெறுவது, பின்னர் ஆதிக்கம் செலுத்துவது. சுமந்திரனுக்கு யாரும் வாக்களிக்கவில்லை, வாக்களித்த மக்களுக்கே தாங்கள் விரும்புவோரை நியமிக்க அதிகாரமிருக்கிறது. சுமந்திரனை கட்சியிலிருந்து வெளியேற்றாவிடின், கட்சி மக்களிடமிருந்து நிராகரிக்கப்படும்.