Everything posted by satan
-
சத்தியலிங்கத்தின் முக்கிய நியமனத்தின் பின்னணி இரகசியங்கள் அம்பலம்
எனக்கென்னவோ சுமந்து அவமானப்படுத்தப்படப்போகிறாரோ எனத்தோன்றுகிறது. ஒன்று அனுரா எடுக்கும் முயற்சிகளை தடுப்பார், அல்லது நான் சொல்லித்தான் நடந்தது என வியாபிப்பார். சிங்களத்தின் செல்லப்பிள்ளையாக வலம் வரவேண்டும், சுகம் அனுபவிக்க வேண்டும், யாரையும் அண்ட விடமாட்டார்.
-
நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம்
தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்லவே காய் நகர்த்தியவர், இப்போ வேறொரு துருப்பு கிடைத்ததால் கதையை மாற்றுகிறார். சிறிதரனை முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட வைத்தால், தன்மேலுள்ள விமர்சனம் தடுக்கப்படும், ஏனைய கட்சிகள் தங்களோடு ஒன்றிணைவதில் தடையேதும் இருக்காது என நினைக்கிறார். தேர்தலுக்கு முன்பாக அவசர வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். தேர்தலில் தனித்து நின்று பின்னர் இணைவோம், கட்சி சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்றெல்லாம் பத்திரிகை அறிக்கை மூலம் சக கட்சிகளுக்கு தெரியப்படுத்தியவர், இப்போ மாறி அழைக்கிறார். பின் அவர்களை துரத்த மாட்டார் என்பது என்ன நிட்சயம்? சணம் வாதம், சணம் பித்தம் கொண்ட புத்தியுள்ளவர் இவர். "வண்டியும் ஒருநாள் ஓடத்திலேறும், ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும்." சலன புத்தியுள்ளோரின் சகவாசம் வேண்டாம். நான் தேடுவது கள உறவு சிறியரை! அடித்து துரத்திய நாகபாம்பு மீண்டும் படமெடுக்க துடிக்குது.
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய 4 கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைய வேண்டும் - சி.வீ.கே.சிவஞானம்
இவரும் சத்தியலிங்கமும் தலையாட்டிகள், அவர்களுக்கென்று ஒரு கொள்கை கிடையாது, தன்மானம் கிடையாது, நீதி நேர்மை கிடையாது, சுயமாக சிந்திக்க தெரியாது, எடுப்பார்க்கைப்பிள்ளைகளை பயன்படுத்துகிறார்கள். பின்னர் இவர்களையே சாடி வெளியேற்றுவார்கள். அப்போ, சிவஞானம் ஊடகங்களை கூட்டி ஒப்பாரிவைப்பார்.
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய 4 கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைய வேண்டும் - சி.வீ.கே.சிவஞானம்
நீங்கள் போங்கோ என்று விரட்டினால் போகோணும், வாங்கோ என்று கூப்பிட்டால் வந்திடணுமா? அது எந்தக்கோட்டுச்சட்டம்? பதவியாசை பிடித்த உங்களுக்கே இந்த திமிர் என்றால், எங்களுக்கும் தன்மானம் இருக்கு. ஓரங்கட்டுவீர்கள், சவால் விடுவீர்கள், கட்சி உங்களது சின்னத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று கட்டளை போடுவீர்கள், பின் பதவி கொடுக்கவில்லை என்று கட்சியை விட்டு வெளியேறினார்கள் என்றுஅபாண்டமா பழிபோடுவீர்கள். உங்களோடு இணைவானேன் வருத்தப்படுவானேன்? உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள், எங்கள் வேலையை நாங்கள் பாத்துக்கொள்கிறோம். உங்கட சங்காத்தமே எங்களுக்கு வேண்டாம்.
-
பதவி விலகப் போகிறாரா அர்ச்சுனா...
ஹஹ்ஹா...... முதலமைச்சராகிறாரா அர்ச்சுனா? தங்களை தேர்தல் மேடைகளில் விமர்ச்சிக்கக்கூடாது என்று சிவஞானம் எதிர்பார்க்கிறார். அவர் எதிர் பாராத திசையிலிருந்து விமர்சனம் கிளம்புகிறது. இப்போ இவர் என்ன செய்வார்? தமிழரசுக்கட்சி என்றுமில்லாதவாறு யாவராலும் விமர்ச்சிக்கப்படப்போகிறது. பாவம் மக்கள். கனத்த ஏமாந்த குமுறலுடன் தெற்கு கட்சிக்கு வாக்களிக்க உந்தப்பட்டுள்ளனர். இவர்கள் வந்தாலும் தீர்வு வரப்போவதுமில்லை, வர இவர்கள் விடப்போவதுமில்லை. ஆகவே மக்கள் தாம் விரும்பியவர்களை தெரிவு செய்யும்போது குறைகூறவும் இடமில்லை. எழுபத்தாறு ஆண்டுகள் மக்கள் இவர்களோடு பயணித்ததன் பயன்; பல கட்சிகளை உருவாக்கி, தென்னிலங்கைக்கட்சிகளையும் நுழைத்தவர்களும் இவர்களே. அதற்கான பொறுப்பு இவர்களையே சாரும்.
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய 4 கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைய வேண்டும் - சி.வீ.கே.சிவஞானம்
இனத்தின் நலன் கருதியா அல்லது உங்களின் தனிநலன் கருதியா? அவர்களை கழட்டி விடும்போது உந்த ஞானம் எங்கே போனது? அங்கும் பாடி, இங்கும் பாடி இறுதியில் தனித்தே விடப்படப்போகிறார் இந்தக்கூத்தாடி. அவசரமாக தங்களது இடத்தை மக்களிடத்தில் தக்கவைப்பதும், அவர்களை திட்டமிட்டு ஒன்றுசேரவிடாமல் தடுப்பது, தம்மேல் எழும் விமர்சனங்களை தவிர்ப்பது முக்கிய நோக்கம். தொடர்ந்து குழிபறிப்புகளை செய்துகொண்டு, உறுப்பினர்களை வெளியேற்றிக்கொண்டு இந்த அழைப்பை விட வெட்கமில்லையா இவருக்கு? கூடி இருந்தவர்களை தொலைத்துவிட்டு, அதற்காக வருத்தப்படாமல், மீண்டும் அவர்களோடு உறவைபுதுப்பிக்க முயலும்போது அது உண்மையான உறவுமில்லை, அவர்கள் அதே ஆட்களாகஉங்களுக்கு திருப்பி கிடைக்கவும் மாட்டார்கள். இதுதான் உங்களின் சாணக்கியம்!
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய 4 கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைய வேண்டும் - சி.வீ.கே.சிவஞானம்
அதேதான்! நாங்கள் கேட்டோம் நீங்கள் எங்களுடன் இணையவில்லை, அதனால டக்கிலஸை சேர்த்துக்கொண்டோம் என்று கூறி அவரை அழைத்து சிறிதரனுக்கு குடைச்சல் கொடுத்து கட்சியை விட்டு வெளியேற்றுவதே சுமந்திரனின் திட்டம். சுமந்திரன் சொல்லியிருக்கிறார், தேர்தலில் சிறிதரனுக்கு அடுத்து தான் அதிக வாக்குகள் பெற்றதால் சிறிதரன் ஏதாவது காரணத்தால் பதவி விலகினால் தான் பாராளுமன்றம் செல்லக்கூடிய ஏது இருப்பதாகவும், யாழ்ப்பாணத்திற்கு இரண்டு ஆசனம் கிடைத்திருந்தால் தான் பாராளுமன்றம் போயிருப்பேன் என்றும் விளக்கமளித்துள்ளார். இவ்வளவு காலமும், தமிழரசுக்கட்சி எதுவும் மக்களுக்கு செய்யவில்லை, எனக்கு வாக்களித்தால் நான் பலவற்றை நிறைவேற்றுவேன் என்று புலம்பியும், என்னையும் தமிழ்கட்சிகளுடன் இணைத்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சியும் கிடைக்காத சந்தர்ப்பம் இப்போ தானாக, சிவஞானத்தின் அழைப்பு கிடைத்ததில் டக்கிளஸ் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். கூட்டிக்கழித்துப்பார்த்தால் சுமந்திரன் தமிழரசுக்கட்சியை தனது அதிகாரத்துக்குள் கொண்டுவருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அதேநேரம் சுமந்திரனால் கழற்றி விடப்பட்ட தேசியக்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்ள விளைகின்றன, அவர்களும் டக்கிலஸை தம்மோடு இணைப்பது பற்றி சிந்திப்பதாக தெரிகின்றது. டக்கிளஸ் மக்களால் நிராகரிக்கப்பட்டவர், அடுத்த தேர்தலோடு தான் அரசியலில் இருந்து விலகுவேன் என்று ஏற்கெனவே அறிவித்தவர். அவரில் ஒருவரே சுமந்திரனும். ஏதோ தமிழரசுக்கட்சியில் நுழைந்ததால் அரசியலில் தானும் ஒருவர் என்று சொல்லிக்கொண்டவர். குழப்பிகளை மக்கள் விருப்பத்திற்கு மாறாக இணைத்துக்கொண்டால்: அழிவை தேடி மக்களை வேறொரு பக்கத்திற்கு நீங்களாகவே அனுப்புகிறீர்கள். சுமந்திரன் தமிழரசுக்கட்சியை சின்னாபின்னமாக்கி தனது கைக்குள் கொண்டுவரலாம், ஆனால் அக்கட்சி தொடர்ந்து உயிர் வாழுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். தன் கட்சியில் உண்மையாக இல்லாமல் தில்லு முல்லு செய்பவர், மக்களுக்கு எதை சாதிக்கப்போகிறார்?
-
மூன்றாம் உலக போருடன் யுக்ரைன் ஜனாதிபதி சூதாடுகிறார் – வெள்ளை மாளிகையில் கருத்து மோதல்
உதாரணம்; ஒசாமா பின் லேடன், மத்திய கிழக்கு நாடுகள், இப்போ உக்ரேன். முட்டாளை நம்புவோரின் நிலை அம்போ.
-
மூன்றாம் உலக போருடன் யுக்ரைன் ஜனாதிபதி சூதாடுகிறார் – வெள்ளை மாளிகையில் கருத்து மோதல்
இது அமெரிக்காவின் வழமையான, எதிர்பார்த்த செயல்தான். ஒவ்வொரு நாட்டின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைப்பது, ஆயுத இராணுவ உதவிகளை வழங்குவது, அந்த நாட்டை சுடுகாடாக்குவது, இடைநடுவில் அம்போ என்று கைவிடுவது, அச்சுறுத்தி தான் நினைத்ததை சாதிப்பது. இவ்வாறு தனக்கு எதிரிகளை உருவாக்கி வைத்திருக்கிறது. போர் என்று தொடங்கினால் எல்லா நாடுகளும் சேர்ந்து அமெரிக்காவை மொத்தும். அதற்கு ஏற்ற ஆள்தான் ட்ரம்ப்.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
அநேக தமிழக கடற்தொழிலாளர்களின் படகுகள் தமிழக அரசியல் வாதிகளுக்கு அல்லது கொழுத்த பணக்காரர்களுக்கு சொந்தமானது எனச்சொல்கிறார்கள். கொள்ளை வருமானம் வந்தால் உரிமையாளருக்கு. கொலை, அடி, உதை என்றால் அப்பாவி தொழிலாளருக்கு. ஆகவே இந்திய தமிழக அரசு கண்டுகொள்ளாது. மற்றைய பக்கம் இந்த இடைவெளியில் சிங்கள மீனவர் எங்கள் வளங்களை அரசாங்க உதவியோடு சுரண்டிக்கொண்டு போகிறார்கள். எங்களுக்காக வாதாட, கதைக்க யார் இருக்கிறார்கள்?
-
பூனைகளின் பேச்சுவார்த்தை
ம், மூன்றாம் உலகப்போர் வெடிக்குமென பயமுறுத்துவார். ரஷ்யாவும் அதைச்சொல்லி களைத்து விட்டது. உலகப்போர் மூண்டால்; முதல் சிதறுவது அமெரிக்காதான்.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
ஐயோ! நான் சீமானுக்கு வக்காலத்து வாங்கவில்லை, எனக்குத்தெரிந்த இந்திய குடும்பவியல் சட்டம், நடைமுறை பற்றியே பேசினேன் கனம் கோட்டார் அவர்களே!
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
மாலை மாற்றி திருமணம் செய்திருந்தால், அந்த உறவில் குழந்தை இருந்தால் குழந்தைக்குரிய தந்தையாரின் சொத்தில் சட்டப்படி பிறந்த குழந்தைக்குரிய உரிமை பங்கு இருக்கிறது. ஆனால் அது சட்டப்படி அந்த திருமணம் செல்லாது. சட்டப்படி பதிவு செய்யப்பட்ட திருமணமே சட்டப்படி செல்லும், அதிலிருந்தே சட்டப்படி விவாகரத்து பெற முடியும். அது போக, இருவரும் மனமொத்து உடலுறவு வைத்துக்கொண்டால், அது குற்றமில்லை என இந்திய சட்டம் ஏற்றுக்கொள்கிறது. தற்போது இந்தியாவில் adultery குற்றமில்லை என்று சட்டம் சொல்கிறது.
-
விமானத்தில் உயிரிழந்த பயணியின் உடலிற்கு அருகில் அமர்ந்து நான்கு மணிநேரம் பயணம் - தங்கள் மனஉளைச்சல் குறித்து அவுஸ்திரேலிய தம்பதியினர் தகவல்
மற்றையோருக்கு எதுவும் தெரியாது, அவர்களுக்கு எந்த அனுபவமுமில்லை, தாம்தாம் எல்லாம் தெரிந்தவர்கள், அனுபவசாலிகள் எனும் நினைப்பில் மற்றயோரை மட்டந்தட்டி எழுதுவோருடன் வாதாடி நேரம் இழப்பதைத்தவிர, நமக்கு தெரிந்ததை எழுதி விட்டு விலகி விடவேண்டும். அவர்கள் தாங்களே கெட்டிக்காரர் என மகிழ்வதில் நமக்கு என்ன பிரச்சனை?
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
இங்கு எல்லாவற்றையும் முழுமையாக பார்ப்பதற்கு நேரம் இல்லை. ஆனால் சீமான் காவற்துறை குறிப்பிட்ட காலத்தில் தான் வரமுடியாமைக்கான காரணத்தை நேரடியாகவும், தனது சட்டத்தரணிகள் மூலமாகவும் அறிவித்திருக்கிறார். அதற்கு மதிப்பளித்து உடன்பட்டிருக்கவேண்டும். சரி, சட்ட அடிப்படையில் ஒட்டினார்கள், சாட்சியாக ஒளிப்பதிவு செய்தார்கள் அவர்களது கடமை நிறைவேறியது. அவர்கள் கிழிக்கிறார்களா, வாசிக்கிறார்களா என்பதை ஏன் ஒட்டுப்பார்க்கவேண்டும்? சரி கிழித்தது தவறென்றால் அதற்கு அவர்களை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் போலீசார், இராணுவத்தினர் ஆட்சியாளரின் கூலிகளாக செயற்படுகின்றனர். பின்னர் தாக்கப்படுவதும் தண்டிக்கப்படுவதும் அவர்களே. இங்கே அமலராஜ், பொலிஸாரின் துப்பாக்கியை பறித்து போலீசாரை தாக்க முயன்றார் போலீசார் உடனடியாக செயற்பட்டு அவரை சுட்டுக்கொன்றார் அல்லது சிறையில் தற்கொலை செய்து கொண்டாரென செய்தி வராமலிருந்தால் சரி. ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை அனுபவித்தவர்கள், உண்மையான குற்றவாளிகள் அல்லர் என்று தெரிந்தும், அவர்களை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்த கொடிய பாவிகள், அவர்கள் தங்கள் இறுதிக்காலத்தை கூட வெளியில் அனுபவிக்க விடாமல் அவர்களின் விடுதலையை எதிர்த்து கூப்பாடு போட்டவர்கள், தமிழருக்கு ஆதரவாக கதைக்கும் சீமானை பழிவாங்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியிருப்பார் எனும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது. அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என கடந்து போக முடியாது. வற்புறுத்தி செய்யாத குற்றத்தை ஏற்றுக்கொள்ள வைத்து தண்டனையளிப்பதும், பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து அப்பாவிகளை கைது செய்வதும் கொலை செய்வதும் ஒன்றும் இவர்களுக்கு புதிதில்லை. நாட்டில் அமைதி சமாதானம் நிலவவேண்டுமானால்; அரசியல் அடாவடிகள், துணைபோகும் நீதிமன்றம், காவற்துறை, ஊடகத்துறை பொறுப்போடு செயற்படவேண்டும். விஜய லட்சுமி பாதிக்கப்பட்டிருந்தால்; சீமானின் கலியாணத்தை நிறுத்தி அப்போதே பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்கலாம், சட்டத்துறையை நாடியிருக்கலாம், நட்ட ஈட்டை பெற்றிருக்கலாம், இல்லை அவரையே திருமணம் செய்திருக்கலாம் விரும்பினால். இதுவெல்லாம் நடக்காத காரியமா இந்தியாவில்? வேறென்ன செய்ய எதிர்பார்க்க முடியும் இச்சந்தர்ப்பத்தில்? அதை விட்டு காலம் காலமாக இந்த விடயத்தை நீட்டுவது ஏதோ பின்னணியில் என்பது தெளிவாக தெரிகிறது.
-
ரணிலின் அரசியல் நகர்வுகள் – அநுர அரசுக்கு ஆபத்தா?
ம், நரி தனது பிரித்தாளும் வேலையை தொடங்குகிறது போலிருக்கு.
-
ஈஸ்டர் தாக்குதல் எச்சரிக்கையை கார்டினல் புறக்கணித்தார்: ஞானசார தேரர் குற்றச்சாட்டு
மதவாத கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகி சிறை சென்ற ஞானசார தேரரா இவர்? நம்பமுடியவில்லையே இவரின் கூற்றை. இதுவரை இதுபற்றி இவர் வாயே திறக்கவில்லையே? கோத்தாவின் விசிறியாய் இருந்தவர், இப்போ அனுரா பக்கம் தாவுகிறாரா தன்னை காப்பாற்றிக்கொள்ள? பலருக்கு இந்த உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு பற்றி தெரிந்திருந்தது, முக்கியமாக அரசியல்வாதிகளுக்கு. அவர்கள் தமிழ் கிறிஸ்தவரை குறிவைத்து அரங்கேற்றியதால் வேண்டுமென்றோ, உதாசீனமாகவோ காத்திருந்திருக்கிறார்கள். மல்க்கம் ரஞ்சித் தனக்கு தெரியவே தெரியாது என்றது மட்டுமல்ல, கோத்தாவின் அபிமானியாகவும் இருந்தார்.
-
விமானத்தில் உயிரிழந்த பயணியின் உடலிற்கு அருகில் அமர்ந்து நான்கு மணிநேரம் பயணம் - தங்கள் மனஉளைச்சல் குறித்து அவுஸ்திரேலிய தம்பதியினர் தகவல்
சாதாரணமான நாட்களில் செய்ய முடியுமென்றால், அசாதாரண நாட்களில் செய்வதற்கு தக்க காரணம் இருக்கிறது. அதுதானே அவர் தனது மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார், கேள்வி கேட்க்கும் போது இடம் மாறி அமர்ந்ததற்கான காரணத்தை வெளிப்படுத்த முடியும், இது ஏற்றுக்கொள்ளக்கூடியது. வேறு ஆசனங்கள் காலியாக இருந்தது என்கிறார், அவற்றில் ஒன்றை அவர்கள் இறந்தவரை அமரவைக்க முடியாமைக்கான காரணத்தையும் ஏற்றுக்கொள்கிறார், அதே நேரம் இவர்களுக்கு உயிரிழந்தவரின் அருகில் அமர்வதால் அசௌகரியம் ஏதும் இல்லையோ என்றும் பாதிக்கப்பட்டவரென கூறுபவரையும் கேட்டுள்ளனர். அவர் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றே தோன்றுகிறது. ஒருவரை அவர் விருப்பத்திற்கு மாறாக வற்புறுத்தி இடம் மாற்ற முடியாது. ஆகவே இதில் குறை கூறுபவரிற்தான் ஏதோ தவறு. அதுதான் அவரருகில் இறந்த ஒருவரின் உடல் இருந்ததே. ஏதாவது பயங்கரவாத செயல் நடந்திருந்தால், சக பயணி தாக்கப்பட்டிருந்தால் இந்த கேள்வி கட்டாயம் கேட்கப்படவேண்டியது, கேட்க்கப்படும்.
-
கணேமுல்ல சஞ்சீவ சுமந்திரனை கொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டாரா?
அவருக்கு குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது, அதற்கு புலம்பெயர்ஸ் ஒத்தடம் கொடுக்க வேண்டுமாம்.
-
விமானத்தில் உயிரிழந்த பயணியின் உடலிற்கு அருகில் அமர்ந்து நான்கு மணிநேரம் பயணம் - தங்கள் மனஉளைச்சல் குறித்து அவுஸ்திரேலிய தம்பதியினர் தகவல்
நான், ஒருதடவை பயணம் செய்தபோது எனக்கு அருகில் ஒரு பயணிக்கு ஆசனம் நியமிக்கப்பட்டிருந்தது. எனக்குப்பின்னால் மூன்று ஆசனங்கள் காலியாக இருந்தன. அருகில் இருந்த பயணி பின்னால் சென்று, அந்த மூன்று ஆசனங்களையும் ஆக்கிரமித்து, கால் கையை நீட்டி ஆசுவாசமாக தூங்கியெழுந்தார். அவருக்குரிய உணவும் அங்கேயே பரிமாறப்பட்டது. யாரும் கேள்வி கேட்கவில்லை. அதிலும் இது ஒரு தவிர்க்க முடியாத அசாதாரண நிலை. காலியாக இருந்த ஆசனங்களை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருப்பர்
-
கணேமுல்ல சஞ்சீவ சுமந்திரனை கொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டாரா?
சுமந்திரன் தமிழரின் பிரதி என்று சொல்கிறார், மக்களுக்காக அவர் செய்த சேவை என்ன? கடந்த காலத்தில் மக்களே அவரை தெரிவு செய்ததாக அவர் தெரிவித்திருந்தார். புலம்பெயர் தமிழரல்லர். அப்படியிருக்கும்போது புலம்பெயர்ந்தோருக்கும் சுமந்திரனுக்கும் என்ன சம்பந்தம்? அவரை ஏன் கொலை செய்ய வேண்டும்? அவர் எதுவும் மக்களுக்கு செய்யாததினால் மட்டுமல்ல விரோதமான செயலில் ஈடுபட்டதினாலேயே மக்கள் சுமந்திரனை நிராகரித்தனர். அதிலிருந்து அவர் திருந்தவேயில்லை, இன்னும் இன்னும் மோசமான செயலிலேயே ஈடுபடுகின்றார். அதை மறைக்க புலம்பெயர்ந்தோர் அவரை கொலை செய்ய திட்டமிடுகின்றனர் என்று பொய்யான குற்றச்சாட்டை வைக்கிறார். ஏன் அந்தபுலம்பெயர்ந்தோருக்கு அல்லது அந்தப்பணியை செய்ய காத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புலனாய்வாளரால் முடியவில்லை?அவருக்குரிய சன்மானத்தை மக்கள் கொடுத்துவிட்டனர். இதற்குள் புலம்பெயர் வரக்காரணம் என்ன? ஏன் அவர்களை இவர் சந்தேகிக்கிறார்? அவர் அரசியல் செய்யலாம், ஆனால் மக்கள் தங்களுக்கு இவர் வேண்டாமென்கின்றனர், முடிந்தால் முயற்சித்து பார்க்கட்டும். வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் பகிரங்கமாக திரிகிறார், கூட்டங்களில் கலந்து கொள்கிறார், கொலைசெய்ய நினைத்தால் முடியாதா என்ன? இவரை கொலை செய்வதால் யாருக்கு என்ன லாபம்? அவரை தெரிந்தனுப்பியவர்களே நிராகரித்து விட்டனர். அது அவரது செயலுக்கு கிடைத்த சன்மானம். அதை மறைக்க கதையை திசை திருப்பினால் நாங்கள் இல்லாத ஒன்றுக்கு யாரை கண்டிப்பது? சிறிதரனுக்கு அல்லது வேறு பிரதிநிதிகளுக்கு இல்லாத அச்சுறுத்தல் இவருக்கு ஏன் வந்தது?
-
முன்னணியின் அழைப்பை நிராகரித்த தமிழரசுக் கட்சி- நிலாந்தன்!
தலைவர் ஒரு அறிவிப்பு, பொதுச்செயலாளர் வேறொரு அறிவிப்பு. இதற்கு ஜனநாயக கட்சி என்று அழைப்பு. என்ன, கஜேந்திரன் சிறிதரனின் முயற்சியை குழப்பி மக்களை அலைய வைக்கும் திட்டம். இவர்களின் தந்திரம் இவர்களையே குழப்புகிறது. "அவதந்திரம் தனக்கந்தரம்." சிவஞானம் சொல்கிறார், தாங்கள் கூட்டிணைவதுபற்றி பல அரசியற் கட்சிகளுடன் பேசியிருக்கிறாராம், அவர்கள் யார் என்பதை இப்போது சொல்லமாட்டாராம், ஏனென்றால் திட்டங்கள் குழம்பி விடுமாம், தான் தன் வாயால் ஒருபோதும் யாரையும் ஒட்டுக்குழு என்று சொல்லவில்லையாம், ஏனென்றால் அவர்களும் விடுதலைக்காக ஒருகாலத்தில் போராடியவர்களாம். சிவஞானத்தின் மனநிலையை நினைத்துப்பாருங்கள்! கட்சியை அழிக்க, சிறிதரனை கட்சியிலிருந்து விரட்ட எந்த அரக்கனோடும் கூட்டுசேர்வார்கள். தேர்தலில் சிறிதரனை விரட்ட எடுத்த தந்திரம், அவரையே வீட்டுக்கனுப்பியது. பரவாயில்லை முயற்சித்துப்பார்க்கட்டும். மூடர் சேர்ந்து தமக்கே ஆப்பு இறுக்குகிறார்கள். இவர்களோடு கூட்டுச்சேர்வதோ அல்லது கூட்டிணைவதோ அவர்களின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
-
கணேமுல்ல சஞ்சீவ சுமந்திரனை கொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டாரா?
சுமந்திரனின் எதேச்சாதிகாரத்தை மூடி மறைத்து, ஏதோ அவர் தமிழருக்கு காவலன் போல் எழுதுவதையே விமர்ச்சிக்கிறோமேயொழிய, அவரது சாவு பற்றி யாரும் இங்கு எழுதவுமில்லை, மற்றவர் செத்தால் நமக்குத்தான் பதவியென காத்திருக்கவுமில்லை. அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர், அவருக்கு யாரிடமிருந்து, ஏன் உயிரச்சுறுத்தல் வரவேண்டும்? அப்படி இருந்தால்: அவர் அரசியலை விட்டு வீட்டுக்கு போய் இருக்கவேண்டும். அவரை அரசியல் செய்யச்சொல்லி யார் வற்புறுத்தினார்கள்? அவர் என்னதான் மக்களுக்கு சாதித்தார்?
-
விமானத்தில் உயிரிழந்த பயணியின் உடலிற்கு அருகில் அமர்ந்து நான்கு மணிநேரம் பயணம் - தங்கள் மனஉளைச்சல் குறித்து அவுஸ்திரேலிய தம்பதியினர் தகவல்
இதைத்தான் நானும் நினைத்தேன் இதை வாசித்தபொழுது.
-
வடக்கு இளைஞர்களை கைது செய்ய மட்டுமே பயங்கரவாத தடை சட்டம்! நாமல் விசனம்
குழப்பத்தை உருவாக்கி, ஆட்சி பிடித்து குழப்பத்திலேயே ஆட்சியை நடத்துபவர்கள் இவர்கள். இப்போ, உருவாக்கிவிட்டு காத்திருக்கிறார் ஜனாதிபதியாக. உருவாக்கிய குழப்பத்தில் இவரே பலியாகப்போகிறாரோ தெரியவில்லை. அனுரா ஆட்சியில் இருக்கும்வரை பயங்கரவாத சட்டம் தேவையில்லை என்பார், காரணம் தாங்கள் பகிரங்கமாக இனவாத சொல், செயலில் ஈடுபட்டு நாட்டை எரிக்கவோ தமிழரின் குருதியில் குளிக்கவோ முடியாது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பயங்கரவாத சட்டம் தேவை என்கிறார் சர்வாதிகார ஆட்சிக்கு. தமிழர்மீது ஒன்றும் அக்கறையில்லை. இவர்களுடைய ஆட்சியிற்த்தானே பயங்கரவாத சட்டம் தமிழர் மேல் காரணமின்றி பாய்ந்தது. ஏவிய அம்பே அவர்களை தாக்கப்போகிறது. இதற்குத்தான் பயங்கரவாத சட்டம் இப்போதைக்கு நீக்கப்படாது என்று ஏற்கெனவே நான் கூறியது. இது மட்டும் இல்லையென்றால் இந்த இடைவெளியில் ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை பிடித்திருப்பார்கள்.