Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. இத்தனை பேர் இருந்தும், எச்சரிக்கை கொடுத்தும், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை தடுக்க முடியவில்லை. நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டை தடுக்க முடியவில்லை, குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை. இவர்கள் இருந்தென்ன இல்லாமல் இருந்தாலென்ன? ஏதோ இந்த இராணுவந்தான் புலிகளை அழித்தது மாதிரி இன்னும் சிலர் கதை சொல்லிக்கொண்டு.
  2. மஹிந்த குடும்பத்தை கைது செய்ய வெளிக்கிட்டால், இந்த பொலிசுகள், இராணுவத்தினர் ஏதாவது கலகம் செய்து நாட்டில் ஒரு நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி அனுராவை கைது செய்யலாம், கொலையும் செய்யலாம். மஹிந்தவோ அல்லது அவர் சார்ந்த கட்சிக்காரரே செவ்வந்தி, இப்படியான குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து சந்தர்ப்பத்தை பார்த்திருக்கிறார்களோ யாரறிவார்? ஏதோ ஒரு அசம்பாவிதம் நிறைவேற காத்திருப்பதுபோல் தெரிகிறது. தமிழரை பருவத்திற்கு பருவம் அறுவடை செய்ததெல்லாம் இப்போ ஒரேயடியாக அவர்களுக்கெதிராகவே திரும்பலாம். போலீஸ் மா அதிபரும் அனுராவுக்கு எதிராக செயற்படுவதுபோல் தெரிகிறது. ஊழலுக்குள் நீந்தின அரசியல் வாதிகள், காவற்துறையினர், அரச உத்தியோகஸ்தர்களை அவ்வளவு இலகுவில் கட்டுப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியாது. தான் நாட்டின் தலைமைப் பொறுப்பை, ஏற்க தயாராகவுள்ளேன் என்று நாமல் சொன்னதன் பின்னணி என்ன? ஏன் அதை யாரும் கவனத்தில் எடுக்கவில்லை? சுமந்திரன் பாராளுமன்றம் போவேன் என்றும், அதற்காக கொடுத்த காரணம் போலுள்ளது. பல சந்தேகமான சமிக்கைகள்.
  3. இவர் என்ன சொல்ல வருகிறார்? நாள்முழுவதும் தனது நேர்காணலை ஒளி பரப்பி தன்னை பாராட்ட வேண்டுமென்கிறாரா? நாட்டிலே அதுதான் நடக்கிறது. ம், எழுபத்தாறு ஆண்டுகாலம் புரையோடிப்போன, எல்லா வீழ்ச்சிக்கும் காரணமான இனப்பிரச்சினையை யாராலும் தீர்க்க முடியவில்லையே, அது ஏன்? ஒருவர் பயங்கரவாதத்தை முறியடித்தேன் என பெருமை பேசுகிறார், சொந்த குடிமக்களை அழித்து விட்டு. இவர் வீழ்ந்துபோன பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தினேன் என்கிறார். ஆனால் எல்லாவற்றிற்கும் ஆணிவேரான உண்மையான பிரச்சனையை இனங்காணவோ தீர்க்கவோ முடியவில்லை, விரும்பவில்லை. அதுவரை உங்கள் பெருமைகள் எல்லாம் தாற்காலிகமானவையே, நாட்டை கட்டியெழுப்புவதில் தோற்றுபோனவர்களே.
  4. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திர தாரியை அறிவிக்கப்போவதாக ஞானசார தேரர் அறிவித்துள்ளார். குற்றவாளி யார் எனத்தெரிந்தும் அதை வெளியிடாமல் மௌனம் காத்த இவரும் குற்றவாளியே. குற்றவாளிகளை காட்டிக்கொடுக்கும் யாவரும் கொலை செய்யப்படுவார்கள். தப்பினால் சிறை செல்லக்கூடும். எத்தனைபேரை கொன்றாலும் உண்மையை கொலைசெய்ய முடியாது, தண்டனை அதிகரிக்கும். இவர்களது ஆதங்கம் அவர்களது கொலை கொள்ளைகளில் அவர்களுக்கு ஆதரவாக நின்று உதவியவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்படும்போதோ, சிறைச்சாலையில் இருக்கும்போதோ அவர்களை பயன்படுத்தியவர்கள் அவர்களை கைகழுவி அநாதையாக விட்ட கோபமே அவர்களை காட்டிக்கொடுக்க விழைகிறார்கள். அதை வெளிப்படையாக அறிவிப்பதால் கொலைசெய்யப்படுகிறார்கள். இதில், பல போலீசார் இராணுவத்தினரும் அடங்கும். தேசபந்து தென்னக்கோனுக்கு பாதுகாப்பு வழங்குபவர்களே அவரை கொலை செய்துவிட்டு அரசுமீது பழி போடலாம். தாம் தப்புவதற்காக எதையும் செய்வார்கள். ரணில், ஊடக சந்திப்பில் தான் அளித்த முக்கியமான, சிறப்பான பதில்களை அவர்கள் வெளியிடவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார். சுமந்திரனின் நண்பர்தானே ரணில், வேறு எதை சொல்வார். வளமாக மாட்டிக்கொண்டுள்ளார். நாமல் பிச்சு உதறப்போறார் ரணிலை. அந்தக்கலந்துரையாடலில் அம்பிகா சற்குணநாதன் கலந்து கொள்வாரென அறிவிக்கப்பட்டதாம், அதனால் தான் அதிக மகிழ்ச்சி கொண்டிருந்ததாகவும் ஆனால் அவருக்கு பதிலாக வேறு இருவரை நியமித்திருந்தார்கள் என்றும் அவர்கள் புலிகள் சார்பானவர்கள் என்றும் தெரிவித்திருக்கிறார். தானே அங்கு நடந்த கொடுமைகளை ஏற்றுக்கொண்டுள்ளார், ஆனால் உண்மையை ஆதாரங்களுடன் நிரூபித்து கேள்வி கேட்டவர்கள் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்கிறார். இப்படித்தான் இவ்வளவு காலமும் தங்களையும் மக்களையும் ஏமாற்றுகிறார்கள் என்பதை அறியவில்லை. இனியென்ன ஒன்றொன்றாக உண்மை வெளியில் வரும் காலம் அண்மையிலுள்ளது. "மூடர் தம் வாயாலேயே கெடுவர்."
  5. தமிழ் மக்கள், எல்லா மதமும் ஒரு மதம், மதிப்பிற்குரியதென வாழ்பவர்கள். எந்தவொரு இனத்துக்கோ, மதத்துக்கோ எதிரி கிடையாது. எந்த மத வழிபாடுகளையும் மதிப்பவர்கள். எல்லோரையும் அணைத்துபோபவர்கள். அதனாற்தான் சிங்களம் இலங்கையில் தழைத்து நின்று அணைத்த கையை அடிக்க முடிகிறது.
  6. ஐந்து நாடுகளை சேர்ந்த பிக்குகள், சமாதானம் வேண்டி கிளிநொச்சி, நாவற்குழி, யாழ்ப்பாணம் வருகிறார்கள் என்று ஏற்கெனவே ஒரு செய்தி வந்தது. கடந்த ஆண்டும் வந்ததுகளென நினைக்கிறன். இங்க இருக்கிறதுகள், இருக்கிற சமாதானத்தை அழிக்குதுகள். அதுக்கை இதுகள் வேறு. முற்றுந்துறந்துகளுக்கு இந்த மரியாதை. குடை பிடிக்க, கொடி பிடிக்க, கம்பளம் விரிக்க, சாமரம் வீச, பாதுகாப்புக்கு பரிவாரம் எல்லாம் கேலிக்கூத்தாகிப்போச்சு. அரசருக்குரிய மரியாதையைவிட மேல்.
  7. இந்த நேர்காணலை பார்க்கும்போது சிரிப்பாகவும் அதேநேரம் ரணிலின் கால நேரத்தையும் நினைத்தேன். விடுதலைப்போராட்டம் முடிவுக்கு வந்தபின் கோத்தாவை சணல் நான்கு என நினைக்கிறன், நேர் காணலில் கேட்ட கேள்விக்கு உண்மைக்கு புறம்பான கருத்தை கோத்த சொன்னபோது, கேள்வி கேட்டவர் ரொம்ப கடுப்பாகிவிட்டார். அப்போ கோத்த அவரை பாத்து சொன்னது, நீங்கள் ஏன் பதற்றப்படுகிறீர்கள்? பதற்றமடைய வேண்டியவன் நான், நானே அமைதியாக இருக்கிறேன் என்றார். திட்டமிட்டு செய்பவன் பதற்றமடைய மாட்டான், தேவையுமில்லை என்றே புரிகிறது. அதன் பின் மஹிந்தவை பல பத்திரிகைகள் நேர்காணல் கண்டன, அதில் அல் ஜெஸீரா, சணல் நான்கு கேட்ட கேள்வி ஒன்று. அதெப்படி உங்கள் அரசில் பல உங்கள் குடும்ப உறவுகள் பதவி வகிக்கின்றனர்? அதற்கு அவர் சிரித்துக்கொண்டே, மக்கள் வாக்களித்து தெரித்தெடுக்கின்றனர், அவர்கள் விரும்பாத போது அவர்கள் நம்மை வெளியேற்றுவார்கள் என்றார். கடந்த வருடமென நினைக்கிறன் இந்த நரியை ஒருவர் நேர்காணல் செய்து, உயிர்த்த ஞாயிறு பற்றி வினவிய போது. எப்படி அட்டகாசம் போட்டார்? சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க மாட்டேன், நான் இலங்கை கத்தோலிக்க சபையோடு உறவில் இருக்கிறேன், கர்தினால் மட்டுமே பிரச்சனை செய்கிறார் என்று என்று படு பொய் சொல்லி தப்பித்துக்கொண்டார். இந்தமுறை வளமாக மாட்டினார். உயிர்த்த ஞாயிறு சம்பவம் பற்றி கேள்வி கேட்டவுடன் நான் கார்த்தினாலோடு உறவிலுள்ளேன் என பொய் சொல்லுகிறார். அதே நேரம் எல்லா குற்றங்களுக்கும் தான் பொறுப்பில்லை என்கிறார். மஹிந்த வீட்டில் கேக் வெட்டினாராம். இவரது கட்சி ஆட்சி செலுத்திய காலத்திலும் தமிழருக்கு அநிஞாயம் நடந்திருக்கு. பலதடவை இவர் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார். ஏன் இந்தப்பிரச்னைக்கு தீர்வு காண இவரால் முடியவில்லை? தாங்கள் பாடசாலைகளை திறந்து மக்களுக்கு உணவு வழங்கினார்களாம். அப்போ கப்பலில் மக்களை வடக்கிற்கு அனுப்பியது யார்? ஏன் அந்த கலவரத்தை உடனடியாக நிறுத்தவில்லை? இதே ஜே .ஆர் .சொன்னார், போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம். புலிகளை அழிப்பதற்கு எந்தப்பேயுடனும் பேசத்தயார் என்றார். பாவம், அவரது இறப்பு நாட்டில் பொதுவிடுமுறை விடவில்லை, நாட்டின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவில்லை. இப்போ, கோத்த பாய, விமானப்படையே போருக்கு காரணம் என்பது மாதிரி சொல்லி தப்பி விட்டேனென நினைத்திருப்பார். ரணில் நாட்டுக்கு வர, எப்படியான வரவேற்பிருக்கிறது என்று பாப்போம். அப்படியானால், ஐநாவில் இவரது ஆட்சிக்காலத்தில் இவற்றை ஒத்துக்கொள்ளாதது ஏன்? ராஜ பக்சக்களை காப்பாற்றியது ஏன்? பாவம் ரணில்! ஆப்பிழுத்த குரங்குபோல டுமாட்டுப்பட்டு முழிப்பது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. உண்மையிலேயே ஹசனுக்கு ஒரு சலூட். பிச்சு உதறிட்டார். நிராஜ் தேவா என்பவரா அவர்? அவருந்தான் வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கலாம், தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார்.
  8. கனக்க யோசிக்காதீங்கோ பிரோ! இன்னும் நிறைய சமாச்சாரங்கள் உண்டு, விரைவில் வெளி வரும்.
  9. இல்லையில்லை, நான் நம்பமாட்டேன். அவர் அப்படித்தான் சொல்வர், ஆனால் அது உண்மையல்ல. சுமந்திரனைப்பற்றி விமர்சனம் வந்தால், ஏதோ ஒரு வகையில் விமர்ச்சித்தவரை நையாண்டி செய்து கருத்தெழுதுவர். இல்லையேல் காரணம் தேடிப்பிடிப்பார், அவரை எப்படியாவது உயர்த்தி விடமாட்டேனா எனும் நப்பாசையில். ஒருவர் இரு பெயர் சமாச்சாரங்களுமுண்டு. கண்டுபிடித்துவிட்டால், ஹிஹி...... வெளியே வருவார். எப்படியும் சமாளிச்சுப்போடும், ஆள் பலே கில்லாடி!
  10. உண்மைகளை ஒருபோதும் மறைக்க முடியாது, எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும் அத்தனையையும் உடைத்துக்கொண்டு ஒருநாள் தக்க சமயத்தில் வெளியில் வரும். சமுதாயத்தில் மதிக்கப்படவும் வரலாற்றில் இடம்பெறவும் செய்த சாகசங்கள் பின்னாளில் மறக்கப்பட்டு குற்றவாளிகளாக வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்களுமுண்டு. இதுதான் ஆரம்பம் உண்மைகள் வெளியே வர, இது தொடரும். எல்லோராலும் சிங்கள இனவாதிகளின் முகம் வெளியே கொண்டுவரப்படும். புதிய சமுதாயம் இதற்காக வெட்கப்படும்.
  11. குற்றவாளிகளை யார் உருவாக்கினார்களோ, பயன்படுத்தினார்களோ அவர்களே அவர்களின் செயலுக்கும் பொறுப்பானவர்கள். அங்கேதான் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பும். நாட்டை சுற்றுவதை விட இவர்களின் வீட்டையும் ஒருக்கா சுற்றி நோட்டமிடலாம், தப்பில்லை.
  12. சிங்கள அரசுகள் தமிழருக்கு எதையும் கொடுக்கப்போவதில்லை, தாம் செய்த தவறுகளை ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை என்பது கடத்திய காலம், சொல்லும் நிஞாயம் தெளிவாக சொல்கிறது. நிற்க, கடந்த கால அரசுகளும், முக்கியமாக வகைதொகையின்றி தமிழரை அழித்தவர்களும் இதையேதான் செய்தார்கள். அவர்களை சுமந்திரன் விமர்ச்சிக்கவில்லை, இன்னும் அவர்களுக்கு அனுசரணையே வழங்கினார், கால அவகாசம் கொடுக்கவேண்டும் என்று விளக்கம் வேறு சொன்னார். இப்போ திடீரென்று இவருக்கு என்ன வந்தது? எப்படியாவது அனுராவின் கடைக்கண் பார்வையாவது தன்மீது விழும் அவரோடு கைகோர்க்கலாமென என்னென்ன விதையெல்லாம் காட்டுகிறார், சவால் விடுகிறார். ஒருவேளை தான் இப்படி குரல் எழுப்பினால் சமரசம் செய்வதற்கு தன்னை அழைப்பார் என நினைத்து சத்தம் போடுகிறாரோ?
  13. வடக்கில் ஆவா குழுவை உருவாக்கியது, போதைப்பொருள் கடத்தல் முகவர்களை அனுப்பி விற்பனை செய்ததெல்லாம் திட்டமிட்டு ஆயுதப்படையினரால் அரங்கேற்றப்பட்டது. உழைப்பில், பொருளாதாரத்தில், கல்வியில், ஒழுக்கத்தில், அனிஞாயங்களை தட்டிக்கேட்பதில் முன்னின்ற சமுதாயத்தை பல தடையுத்தரவு, அதிகாரப்பறிப்பு என தடைகளை ஏற்படுத்தியபோதிலும் அவர்களை முழுமையாக அடிமைகளாக்க முடியவில்லை. அதை எதிர்த்து போராடினார்கள். இனிமேல் தமிழர் எதிலும் மேலெழக்கூடாது, எதையும் முன்னோக்கி சிந்திக்க கூடாது, அடிமைகளாக அலைய வேண்டுமென திட்டமிட்டு ராஜபக்க்ஷ பட்டாளம் செய்த வேலை. இவர்களது குடும்ப வாரிசுகளின் எதிர்காலம் எப்படி போகிறது என்பதை இவர்கள் இருந்து பார்க்கப்போவதில்லை, ஆனால் பல கடந்த பெரிய செல்வாக்கான மனிதர்களின் வாரிசுகளில் நாம் காண்கிறோம். எதை விதைத்தோமோ அதையே நம் சந்ததி அறுவடை செய்யும்.
  14. இது இயற்கை. அவருக்கே அவரில் நம்பிக்கையில்லாத போது, சிவஞானத்தை வைத்து காரியம் நகர்த்த முயலும்போது, மற்றவர்களுக்கு என்ன நன்மை ஏற்படப்போகிறது இவரால்? தொடர்ந்து அடாவடி செய்தால், அதற்கு பெயர் அரசியல் ரவுடி. தங்களது அரசியலும் இருண்டு வருவதை காணும் புத்திசாலிகள், சந்தர்ப்பவாதிகள் விலகத்தான் செய்வார்கள். ஒரு அன்பான வேண்டுகோள் உங்களிடம். விளங்குமென நினைக்கிறன்.
  15. சுமந்திரன் என்பவர் மக்களின் ஆணையை மதித்து சிறிது ஓய்வெடுத்து, தனது செயலை மாற்றி, எல்லோரையும் மதித்து, கட்சியின் கொள்கைகளோடு சேர்ந்து செயற்பட்டிருந்தால்: பின்னாளில் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் அவரோ, மக்களின் ஆணைக்கு சவால் விடுவதுபோல், மக்களால் தெரிவு செய்யப்பட்டவரை வெளியே தள்ளி, சர்வாதிகாரிபோல் இல்லாத பதவிகளை உருவாக்கி கையகப்படுத்திக்கொண்டிருந்தால், என்ன அர்த்தம்? கடந்த தேர்தலுக்கு முந்திய தேர்தலில் மாவையர் தோற்றபோது என்ன நடந்தது? அவர்க்கு அறிவிக்காமல், அவரோடு கலந்து பேசாமல், அவருக்கெதிரான கருத்துக்களை ஊடகங்களில் தன்னிச்சையாக பகிரங்கமாக அறிவித்து, சிறிதரனை மாவைக்கெதிராக கொம்பு சீவி அவரை அவமானப்படுத்தவில்லையா? இப்போ இவர் தோற்றபோது எப்படி செயற்படுகிறார்? இதுதான் கட்சியின் கொள்கையா? சட்டத்தரணியின் சமநிலை பேணும் தன்மையா? இவரது சர்வாதிகார செயலெல்லாம் அவரது திறமையில் உள்ள பாதுகாப்பற்ற தன்மையை உணர்கிறார், ஆனால் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். தான் ஒருபோதுமே மக்களால் தெரிவு செய்யப்படமாட்டேன் என எண்ணுவதினாலேயே குறுக்கு வழிகளை அவசரமாக தேடுகிறார்.
  16. அனுராவுக்கு தேவையானவர்களை அவர் தெரிந்தெடுத்துவிட்டார் மக்களை கொண்டே. மக்களால் நிராகரிக்கப்பட்ட, கட்சியால் நிராகரிக்கப்பட்ட இவரை எதற்கு? இடத்தை அடைத்துப்பிடிக்கவோ? இவருக்குரிய பதிலை அனுர கட்சியை சார்ந்தவர், ஏற்கெனவே ஹக்கீமுக்கு வழங்கியுள்ளார். இவர் அதை நேரடியாக கேட்க விரும்பினால் முயற்சிக்கட்டும்.
  17. ஆமா, எல்லோருக்கும் இப்போ தேசியத்தலைவரின் பெயர் மலினமாகிவிட்டது. தேசியத்தலைவர் போல் இவர் யாருக்கும், எதுக்கும் அஞ்சாமல் நேர்மையாக முடிவெடுத்து இனவிடுதலைக்காக உழைத்தாரா? அல்லது தன்னைப்போல் பதவிக்காக தலைவர் மாற்றி மாற்றி பேசினாரா? என்னதான் சொல்ல வருகிறார் இவர்? தமிழரசுக்கட்சி தனித்தே இந்த முடிவெடுத்தது, எந்தக்கட்டத்திலும் கூட்டமைப்பிலிருந்த எந்த கட்சிக்கும் முறையாக அறிவிக்கவில்லை. கூட்டங்கள் கூடினர், பேசினர் ஆனால் தாம் தனித்து போட்டியிடுவதுபற்றி அமுக்கமாகவே இருந்தார்கள். இதை சொல்ல உங்களுக்கு என்ன அருகதையிருக்கிறது? அன்றைய உங்கள் முடிவையும் நேரடியாக அவர்களுக்கு விளங்கப்படுத்தி சமாதானமாக போட்டியிட்டிருக்கலாமே?அவர்கள் கூட்டணியாக வேலை செய்துகொண்டிருக்கும்போது, திடீரென பத்திரிகைகள் உங்கள் தனிப்பட்ட முடிவை அறிவிக்கின்றன. அவர்கள் தனித்து போட்டியிடுவதற்கு தயாராகவில்லை, போதிய கால அவகாசம் இல்லை, உண்மையாகவே நீங்கள் அதை செய்யவில்லை. சுமந்திரன் அவர்களுக்கு சவால் விட்டார், கட்சி சின்னத்தை பாவிக்கப்படாது என. இதெல்லாம் தற்செயலாக நடந்ததா? அல்லது அவர்கள் தான் தவறாக சித்திரித்தார்களா? அப்போ எங்கே போனது தலைவரின் வழி? நீங்கள் தமிழினம் சார்ந்து எப்போ செயற்பட்டிருக்கிறீர்கள்? தேர்தல் வரும்போது உறுப்பினரை குழப்பியடித்து வெளியேற்றுவீர்கள், சவால் விடுவீர்கள், அவமதிப்பீர்கள். இப்போ உங்களுக்கு பயம் வந்ததாலேயே அவசரமாக அழைக்கிறீர்கள். எங்களுக்கு பயமில்லை என்கிறீர்கள். ஏமாற்றம் தெரிவிக்கிறீர்கள். அவர்களை குறை கூறுகிறீர்கள். ஏன் பாராளுமன்றத்தேர்தல் முடிந்தவுடன் உந்தகாரணத்தை சொல்லி அவர்களை அழைத்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை? கட்சி உறுப்பினரை விரட்ட சதிசெய்து கொண்டு, அவர் பதவியை ஏற்கவிடாமல் தடைகளை ஏற்படுத்திக்கொண்டு, இல்லாத பதவிகளை கையகப்படுத்திக்கொண்டு, அவரை கஜேந்திரனோடு சேர விடாமல் தடுத்துக்கொண்டு இனம் சார்ந்து யோசிக்கிறாராம். நம்புங்கோ! அவர்களுக்கு, தங்கள் விருப்பை தெரிவிக்கவோ, ஆலோசிக்கவோ உரிமை இருக்கிறது. உங்கள் தலைவர் யாரென்பது எங்களுக்கு தெரியும். எங்கேயாவது தோல்விப்பயம் வருபவர்கள், தலைவர் பெயரை உச்சரிப்பார்கள் என்பதும் நமக்குத்தெரியும். தமிழரசுக்கட்சி உங்கள் தனிப்பட்ட கட்சியாக கருதி எல்லோரையும் வெளியேற்றினீர்கள். இப்போ வீட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்டு உதவி தேடுகிறீர்கள் உங்களை மீட்க.
  18. அவரின் ஆடை அலங்காரமெல்லாம் மக்கள் முன் அவரை உயர்ந்தவராக காட்டவில்லையே? உந்த ஆடை அவருக்கு தகுதியற்றது என ஆயிற்று. செய்வாரென்றா நினைக்கிறீர்கள்? அப்படியானால் ஏன் சிறிதரனை அங்கே கலைத்து தான் பாராளுமன்றம் போக முயற்சிக்கிறார்? தானே முதலமைச்சருக்கு போட்டியிடலாமே? அவர் இப்போ தன் நிலைமையை இன்னும் மோசமாக்கி வைத்திருக்கிறார். அவரெல்லாம் தேர்தலில் நின்று வெல்வதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை. யாரையாவது விழுத்தி, ஏமாற்றி, குறுக்குவழியில் பாராளுமன்றம் போய் அநுராவின் காலை பிடிப்பதற்கு முயற்சிக்கிறார். அவருக்கு தெரிந்ததெல்லாம் அந்த தொழில்தான். சுமந்திரனுக்கு இப்போ இறங்கு முகம் போலுள்ளது, அவரது எஜமான்கள் வீழ்ந்தது. கண்டிப்பாக! அதுவரை அவருக்கு உறக்கமில்லை. அவர் எடுக்கிற முயற்சியெல்லாம் தடக்கிறது.
  19. வணக்கம் சிறியர்! சுமந்திரன் பின்வருபவற்றை முன் யோசிக்காமல் சறுக்கி விட்டார். சிறிதரன் தான் முதலமைச்சர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தது மட்டுமல்லாமல் அதற்குரிய காரணத்தையும் விளக்கியுள்ளார். நீதிமன்றத்துக்கு போய் சிறிதரனின் தலைவர் பதவியை பறிக்க போட்ட திட்டம் இப்போ, அவரை முதலமைச்சர் பதவிக்கு ஆசை காட்டி அவரை விரட்டி விட்டு தான் பாராளுமன்றம் போக போட்ட திட்டத்தை அப்படியே திருப்பி விட்டுள்ளது. சிறிதரன் முதலமைச்சர் போட்டியிட்டாலும் வெல்வார், அதற்குரிய வழிவகைகளை சுமந்திரன் செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் தனக்கு பதவியாசை இல்லையென்று விட்டார். இப்போ சுமந்திரன் சத்தியலிங்கத்தை நோக்கி திரும்புவார். அது எதிர்பார்த்ததுதான், நான் இதை உனக்குத்தருகிறேன் பின்அதை எனக்கு திருப்பித்தா என்பதுதான் உடன்பாடு.
  20. உந்த விசரில யாரையாவது இரகசியமாய் போட்டுத்தள்ளி விடுவாரோ என்று பயமாய் கிடக்கு. எதுக்கும் சிறிதரன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  21. சத்தியமூர்த்தி விலகினால் ஒன்றும் கட்சி முழுகிப்போகாது, அவர் ஒரு வவ்வால். அவர் கட்சியில் இருந்து சுமந்திரனுக்கு ஏவல் வேலைதான் பார்ப்பார். ஆனால் சிறிதரன் இவரின் பேச்சுக்கு எடுபடுமளவுக்கு முட்டாளல்ல. ஏற்கெனவே மாவையரை தலைவர் பதவியிலிருந்து விரட்ட சிறிதரனை கையாளாக பாவித்தவர் சுமந்திரன். அதிலிருந்து பாடம் கற்றிருப்பார் சிறிதரன். அந்தப்பாவத்திற்குத்தான் இப்போ அனுபவிக்கிறார். இனி சுமந்திரனால் விரட்டப்படுவது சிவஞானம் அண்ட் சத்தியலிங்கம். வெறி பிடித்து அலைகிறார் என்றும் சொல்லலாம். அது நிறைவேறாவிடில் ஆளுக்கு விசர் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
  22. சிறிதரனை கட்சியிலிருந்து துரத்துவதற்கு எத்தனை தந்திரம் செய்கிறார் எதுவும் பலிக்காதுபோல் இருக்கிறது. போட்டியிடலாம், யார் வாக்களிப்பது இவருக்கு? அதோடு வீட்டில போய் மோட்டைபாத்துக்கொண்டு இருக்கவேண்டியதுதான். அவருக்கு தெரியும், எங்கேயாவது நுழைந்து புகுந்து வந்தால் ஒழிய, நேர்வழியாய் வரமுடியாதென்பது. அதனால் சிறிதரனை சுத்துகிறார் செக்கு சுத்துற மாடு மாதிரி. கட்சியை பலாத்காரமாக கையகப்படுத்தினால் போதுமே, அவர் அதிகாரம் செலுத்த ஆட்கள் வேண்டுமே.
  23. எனக்கென்னவோ சுமந்து அவமானப்படுத்தப்படப்போகிறாரோ எனத்தோன்றுகிறது. ஒன்று அனுரா எடுக்கும் முயற்சிகளை தடுப்பார், அல்லது நான் சொல்லித்தான் நடந்தது என வியாபிப்பார். சிங்களத்தின் செல்லப்பிள்ளையாக வலம் வரவேண்டும், சுகம் அனுபவிக்க வேண்டும், யாரையும் அண்ட விடமாட்டார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.