satan
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
Everything posted by satan
-
2024/2025 புது வருடம்!
எதிரியானாலும் சிரித்துக்கொண்டே கைகூப்பி, வரவேற்று, விருந்தளித்து, உபசரித்து, உபத்திரவத்தை பெற்றுக்கொண்டோம். அதைத்தான் இப்போ அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். எங்களுக்குள்ளே இருப்பது பொறாமை, எதிரியிடத்தில் காட்டுவது பெருந்தன்மை. இது நமது இனத்துக்கு வந்திருக்கக்கூடாது. வந்தது எமது இனத்தின் துரதிஷ்ட்டம் என்கிறேன் நான்!
-
விகாரைகளில் பணியில் இருந்த இராணுவத்தினர் நீக்கம்: பொதுஜன பெரமுன கட்சி கண்டனம்
தமிழர் பிரதேசங்களில் அடாத்தாக, இரகசியமாக விகாரைகள் கட்டுவது இராணுவம். அதை நம்ம அனுரா கண்டு பிடித்து, இராணுவத்தையும் பிக்குகளையும் வைத்து, அரசியல் இனவாதிகள் செய்யும் காணி அபகரிப்பை கண்டு பிடித்துள்ளார். இனி இதன் சூத்திரதாரிகள், அனுமதி வழங்கியோர் வசமாக மாட்டப்படுவர். ஒன்றை தொட்டால் தலையாரி தானா வந்து மாட்டுவார். எல்லா பக்கமும் ஒரே ஆட்கள், தங்கள் ஊழலை மறைத்து திசை திருப்ப கையிலெடுத்த ஆயுதம் தமிழரை சுரண்டுவது. சிங்களப்பகுதிகளில் தனியார் காணிகளில் அடாத்தாக விகாரைகள் கட்டப்படுவதில்லை, அதனால் அங்கு இராணுவம் தேவையில்லை. இங்கு அடாத்தாக மக்களின் காணிகளை அபகரிப்பது இராணுவம், விகாரை கட்டுவது இராணுவம், அதை சொந்தமக்களிடம் இருந்து பாதுகாப்பது இராணுவம். விகாரைக்கு ஏன் இராணுவம் தேவைப்படுகிறது? அவர்கள் இருக்க வேண்டியது இராணுவ முகாம்களில்.
-
டாக்ரரால் கள அரசியலான புல அரசியல்..
உண்மை. ஒவ்வொரு அரச அதிகாரிகளும், திணைக்களங்களும், சர்வாதிகாரிகள் போலவே நடந்து கொண்டனர் .யாரும் சட்டம் ஒழுங்கு சேவை என்று செய்யவில்லை. கேள்வி கேட்டவர்கள் தண்டிக்கப்பட்டார்கள், ஒதுக்கப்பட்டார்கள், பழிவாங்கப்பட்டார்கள். அடிதடி காரர் நிஞாயமற்ற வகையில் எல்லா சலுகைகளையும் சேவைகளையும் பெற்றுக்கொண்டார்கள், மரியாதை செலுத்தப்பட்டார்கள். போலீஸ் தனக்குரிய கடமையை செய்யாது மற்ற துறைகளில் மூக்கை நுழைத்து செயற்பட்டது. தாடியர் அவரது அமைச்சு கடற்தொழில். ஆனால் அதை விட்டு மற்ற எல்லாத்துறைகளையும் பற்றி கருத்துச்சொல்வார். இனிமேல் இவர்களுக்கெல்லாம் இருக்கு ஆப்பு. முடியா விட்டால் பணியில் இருந்து ஒதுங்கி செய்யக்கூடியவர்களிடம் கையளியுங்கள் பணியை.
-
குறைந்த செலவில் தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் !
அவற்றை மறைப்பதற்கு சுதந்திர தினம் தேவை.
-
விகாரைகளில் பணியில் இருந்த இராணுவத்தினர் நீக்கம்: பொதுஜன பெரமுன கட்சி கண்டனம்
செய்யிறதெல்லாம் அடாத்து, அபகரிப்பு. அதற்கு காவல் இராணுவம் இருக்கத்தான் வேண்டும். அவர்கள் செய்வது பயங்கரவாதம், அதை கேள்வி கேட்ப்பவர்கள் பயங்கரவாதிகள். ஆமியை வைத்து பறித்து, ஊழல் அரசியல் செய்தவர்கள் கூக்குரலிடத்தான் செய்வார்கள். அப்பாவி கிராம இளைஞர்களை பலிகொடுத்து அரசியல் செய்வது எவ்வளவு சுலபம்.
-
தும்புதடியினுள் போதைப்பொருளை மறைத்து சிறைச்சாலைக்குள் கொண்டுசெல்ல முற்பட்ட பெண் கைது
சிறைச்சாலையில் விற்பனை கைதிகளுக்கு? பணம் எங்கிருந்து வரும்?
-
மஹிந்த பிரபுக்கள் புலிகளுடன் நெருக்கமாக செயற்பட்டவர்கள்; பாதுகாப்பு வழங்குவது அவசியமற்றது - சரத் பொன்சேகா
இவரது கேள்விக்கு மஹிந்தா பதில் சொல்லட்டும்!
-
காசாவில் இறுதியாக செயற்பட்டுக்கொண்டிருந்த மருத்துவமனையும் செயல் இழந்துள்ளது - மருத்துவமனையின் இயக்குநர் இஸ்ரேலிய படையினரால் கைது
எல்லாம் அழிந்து, எல்லோரும் செத்து மடியும்வரை காத்திருக்கிறார்கள், சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, காலம் அளித்து, பொறுப்புக்கூற வைப்பதற்காக. இவர்களின் பேச்சை யார் கேக்கிறா? சும்மா கால, நேர, பண, இட விரையம் செய்து பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றுவது. ஒன்றும் செய்ய முடியாவிட்டால்; மூடி விட்டு முடங்கியிருக்க வேண்டும். முந்திக்கொண்டு வருவினம். இத்தனை காலமாய் அப்பாவி மக்கள் அழிக்கப்படுகிறார்கள், இவர்கள் எதை சாதித்தார்கள்? மௌனமாய் இருந்து வேடிக்கை பார்க்கிறார்கள்.
-
ஓய்வின் பின்னர் அரகலய சர்ச்சை தொடர்பில் மனம் திறந்த சவேந்திர சில்வா
காலமும் பதவியும் ஒருவரை எப்படி மாறி மாறி பேச வைக்கிறது. முள்ளிவாய்க்காலில் இவர் என்ன செய்தார்? அங்கே, வகை தொகையின்றி கொல்லப்பட்டவர்கள் சாதாரண பிரஜைகள் இல்லையா? நிராயுதபாணிகள் இல்லையா? யார் கட்டளையின் பேரில் அவ்வாறு நடந்துகொண்டார் என்று சொல்லவில்லையே. ஒருவேளை பின்னொருநாளில் சொல்லுவார். இப்போ, அடிச்சுக் கேட்டாலும் சொல்லமாட்டார், பின்னாளில் தானாகவே சொல்வார்.
-
பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல் வைக்க தலிபான் தடை
ஒடுக்குமுறையாலும், கட்டுப்பாடுகளாலும் காட்டுச்சட்டங்களாலும் ஒருவரின் சுதந்திரத்திற்கு அணை போட முடியாது. மாறாக, சம்பந்தப்பட்டவர்கள் முடிவு செய்ய வேண்டும். தமக்கு எது வேண்டும், எது சரியென. அதற்கு கல்வியும் முழுச்சுதந்திரமும் அளிக்கப்படவேண்டும்.
-
விகாரைகளில் பணியில் இருந்த இராணுவத்தினர் நீக்கம்: பொதுஜன பெரமுன கட்சி கண்டனம்
காரிய வம்சத்தின் சந்தேகம் அதுவல்ல, இப்போ, ஊழல்வாதிகளை விசாரணை செய்ய ஆரம்பித்துள்ளார்கள். ஒவ்வொருவராக சுழி இழுக்கப்போகுது. இவர்கள் எல்லோரும் சிக்குவது உண்மை. அதற்கிடையில் எங்கே கொழுத்தினால் பத்தும் என்று ஒவ்வொன்றாக பரீட்சித்துப்பார்க்கிறார்கள். சேரவும் முடியவில்லை, தப்பவும் முடியவில்லை இன்று அரசியல்வாதிகள், அரச உத்தியோகத்தர்கள் நிலைமை. அவர்கள் தம்மை பாதுகாப்பதற்காக இவ்வாறு சொல்கிறார்கள், செய்கிறார்கள். முன் போல் வீதிகளில் இறங்கி கர்ச்சிக்க முடியவில்லை, அவர்கள் போட்ட முடிச்சு இன்னும் இருக்கு. எப்படியாவது இந்த அரசை கலைத்து தம்மை காப்பாற்ற வேண்டும். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று ஆளாளாளுக்கு கண்சிமிட்டி செய்த வேலையெல்லாம் செய்து ஏமாற்ற முடியாது. நல்லவேளை! இந்த கூத்தாடிகளை அனுர தனது ஆட்சியில் சேர்த்துக்கொள்ளவில்லை. ஒருபுறம் எதிர்க்கிறார்கள், மறுபுறம் சேர்த்துக்கொள்ள மாட்டாரா என ஏங்குகிறார்கள். அங்கு மட்டுமல்ல எங்கள் பக்கமுந்தான். அனுராவுக்கு சட்ட உதவி செய்யவே தவம் கிடக்கிறார்கள். தன் பிரச்சனையை தீர்க்க வழி தெரியவில்லை அதற்குள் அனுராவுக்கு உதவிசெய்யப்போகிறேன் என்று தவம் கிடக்கிறார்கள்.
-
குறைந்த செலவில் தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் !
அவர், எங்கும் அனுமதி பெற்று செல்லும் ஆளல்லவே, நுழைந்து விடுவார்.
-
2024/2025 புது வருடம்!
நாங்கள் வரவேற்காவிட்டாலும் அது வந்தேதான் தீரும். இந்தா பிறந்துவிட்டது 2025 எனும் புதுக்குழந்தை!
-
புது வருட சிரிப்புகள்.
கள உறவுகள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! புதிய ஆண்டில் உங்கள் அனைவர்க்கும் அமைதி, மகிழ்ச்சி மலரட்டும்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிறு திருத்தம். "அம்மண தேசத்தில், கோமணம் கட்டியவன் விசரன் பைத்தியக்காரன்."
-
100 மில்லியன் நட்டஈடு கோரி அர்ச்சுனா மீது அவதூறு வழக்கு
சத்யமூர்த்தி ஆரம்பித்து வைத்துள்ளார். இன்னும் பலர் இவரை தொடர்ந்து அர்ச்சுனாவுக்கு எதிராக வழக்கு தொடர வாய்ப்புள்ளது.
-
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?
நானுந்தான், கனநாளாக இந்த சுமந்திரம் பேப்பருக்கு என்ன நடந்தது என்று கேட்க வேண்டும் என நினைத்தேன். யாராவது கைக்கு கிடைத்தால் அனுப்பிவிடவும். பத்திரிகை வெளியிட்டவரும், வாங்கியவரும்அவுட். இவர் மட்டும் வென்றிருந்தால் பாருங்கள்; அந்தப்பத்திரிகை எத்தனை பேரை கிழித்து தொங்க விட்டிருக்கும். ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கு வாக்கு போட்டது பிழை, எந்த மூஞ்சியோடு சிங்களவனிடம் போய் பேசுவது என்று வாதம் செய்தவர்கள், பாராளுமன்றத்தேர்தலில், எப்படி சிங்களக்கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களித்தார்கள் என்று மக்களை கேள்வி கேட்டார்கள். பொது வேட்ப்பாளரை தேர்ந்தெடுத்த மக்கள், அடுத்த தேர்தலில் சிங்களக்கட்சிக்கு ஏன்? யாரால்? வாக்களித்தார்கள் என்று தம்மைத்தாமே பரிசோதனை செய்தால், பதில் கிடைக்கும்! ஏதோ, நாம் ஒன்றும் செய்யத்தேவையில்லை, மக்கள் நமக்குத்தான் வாக்குபோடவேண்டும் என்று கனவு கண்டு, மக்களால் நிராகரிக்கப்பட்ட பலர், மற்றவர்கள் மேல் குற்றம்சாட்டி புலம்புகிறார்கள். இன்னும் சிலர், மக்கள் நிராகரித்தாலும் எங்காவது ஒரு இடைவெளி தெரியாதா? பூந்து விடலாமென அலைகிறார்கள். பதவியில் இருக்கும்போது தூங்கியவர்கள், பதவியிழந்த பின்தான் மக்களுக்கு சேவை செய்யப்போகிறார்களாம்.
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
முன்பெல்லாம், பங்குக்கு கிணறு என்றிருந்தது. பல குடும்ப உறவுகள் சேர்ந்து பொதுவாக கிணறு பாவித்தார்கள், உறவும் வளர்ந்தது. இன்று அப்படியில்லை அந்தக்கிணறுகள் பாவனையற்று புதர் மண்டியிருக்கிறது, உறவுகள் வெளியேறிவிட்டார்கள். இருப்பவர்களும் ஒருவரோடொருவர் கதைக்க விரும்புவதில்லை. நான்கு புறமும் மதில்கள், வீட்டுக்கொரு குழாய்கிணறு, அடுத்தவீட்டில் அழுது கேட்டாலும் போய்ப்பார்த்து என்னவென்று கேட்க மனித நேயமில்லை, நேரமில்லை. தோட்டத்தில், சுற்ற உள்ள வயல் காணிக்காரர் முறை போட்டு பகிர்ந்து வேலை செய்தார்கள், கூலியில்லை. இப்போ, அவன் காணியில் விளைச்சல் அதிகமாகிவிட்டால், தொண்டைக்கால தண்ணி இறங்காது. ஒருவன் விழுந்தால், மற்றவன் சிரிக்கிறான், ரசிக்கிறான். ஆனால் இயற்கை மட்டும் எங்களுக்கு ஏற்றவாறு உதவிபுரியவேண்டும். நாங்கள் எல்லாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? சிங்களவன் குடியேறுகிறான் என்று பொருமும் நாம், எமது இடங்களை சுருக்கி அவனை வரவழைக்கிறோம். நாம் சிந்திக்கணும், நமது எண்ணங்களை மாற்றவேணும். வீடு கட்ட வேண்டுமா, கிணறு தோண்ட வேண்டுமா, கழிப்பறை அமைக்க வேண்டுமா? சுகாதார பரிசோதகர் வந்து பரிசோதித்து தகுந்த இடம் காட்டுவார். இப்போ யார் அதை கடைபிடிக்கிறார்கள்? பரிசோதகர் என்று இருப்பார், அவருக்கே முறைகள், சட்டங்கள், ஒழுங்குகள் புரிவதில்லை, தெரியாது. தனக்கு வேண்டியவருக்கு ஒரு சட்டம், தனக்கு வேண்டாதவருக்கு வேறொரு சட்டம், ஒழுங்காக அனுமதிக்காக விண்ணப்பித்து காத்திருப்பவர்களின் விண்ணப்பங்களை ஆராயாது, யாராவது அவர்களுக்கு பிடிக்காதவர்கள் முறையற்ற விதத்தில் முறைப்பாடளித்தால், உடனடியாக வந்திறங்கி, முறையற்ற விதத்தில் தடைகளை ஏற்படுத்தி, அவர்களின் முயற்சியை தடுப்பது. நாமும் எமது திணைக்களங்களும் அதிகாரிகளும் இதில மற்றவரை தூற்றிக்கொண்டு.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்பிடி மரியாதையா எளிமையா சொல்லுங்கோ சாமியார், "ஆடையில்லா ஊரில், கோமணம் கட்டியவன் விசாரன் பைத்தியக்காரன்." அப்பத்தான் எல்லாருக்கும் விளங்கும்.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
அவ்வளவு நம்பிக்கையா மனைவிமேல்? ரொம்ப அப்பாவி ஐயா நீங்கள்!
-
சதித்திட்டத்தின் மூலம் எங்கள் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது – நாமல் ராஜபக்ச
இவர்களது ஊழல்களும் அதிகார துஸ்பிரயோகமும் கொலைகளுமே இவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட காரணம். தேர்ந்தெடுத்த மக்களே காரணம் சொல்லி விரட்டினார்கள், தேர்தலில் இவர்களை நிராகரித்தார்கள். தாங்கள் வென்றால்; மக்கள் எங்களுக்கு தந்த ஆணை என்று சொல்லி, இல்லாததும் பொல்லாததும் நிறைவேற்றுவார்கள். தங்கள் இஷ்ட்டத்துக்கு ஆடுவார்கள். அதே மக்கள் நிராகரித்தால்; ஊடக சூழ்ச்சி, உள்நாட்டு, வெளிநாட்டுச்சதி என்று எங்கோ கைகாட்டுவார்கள். இதன்மூலம் தெரிவது; இவர்கள் தாங்கள் உத்தமர்கள், எதையும் திருத்தப்போவதில்லை என்பதோடு இவர்கள் ஆட்சிக்கு மீண்டும் வந்தால்; இந்த நிலையே தொடரும் என்பதே இதன்மூலம் இவர்கள் தெரிவித்துக்கொள்கிறார்கள்!
-
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு படுகொலை..! கண்கண்ட சாட்சி வாக்குமூலம்
உண்மைகள் என்றும் உறங்குவதில்லை! அதன்மேல் எவ்வளவு மண்ணை போட்டு மூடினாலும், அதற்கு மேல் ஏறி, மேலெழுந்து வரும். அதை செய்யாவிடில், அனுர சொல்வீரராக மட்டுமே இருப்பார். அனுர அப்படியிருக்க மாட்டார் என்பதற்கு இவர் கொடுக்கும் சாட்சி ஒன்றே போதுமானது. இப்போ, இந்த கொலையின் சூத்திரதாரி படும் அவசரம் விடும் அறிக்கையை எதிர்பார்ப்போம். ஒரு தடவை ஐ. நாவில் அப்போதைய இலங்கை பிரதிநிதி, இந்த எக்னெலிகொட பிரான்சில் வசிப்பதாக ஒரு கதைவிட்டார். அதற்கான ஆதாரம் கேட்டபோது; யாரோ சொன்னார்களாம். ஒரு பொறுப்பான அதிகாரி சொல்லும் பதிலா இது? அவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும்!
-
வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற ஆணழகன் மற்றும் பெண்ணழகி போட்டி!
பாஞ் அவர்களே! தலையங்கங்களுக்கும் உங்களுக்கும் என்ன ஒரே பிரச்சனை? எப்போதுமே தலையங்கத்தை குறை பிடிக்கிறீர்களே? தலையங்கத்துக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள் போலுள்ளதே. ம்... திரிஷாவை அங்கம் அங்கமாக ரசித்திருக்கிறார்.
-
தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான்
தேங்காய் வாங்க காசில்லாமல் இருப்பவர்களுக்கு கொடுப்பதே கடவுளுக்கு செலுத்தும் நேர்த்தி. பாவப்பட்ட மக்கள் இதை எடுப்பதற்கு அனுமதித்திருப்பார்களா, தேங்காய் அடித்து நேர்த்தி செலுத்துபவர்கள்? ஒருவர் பிள்ளையாருக்கு வடை மாலை போடுவிட்டு, கண்மூடி தேவாரம் பாடினாராம், தேவாரம் முடிய கண் திறந்து பார்த்தபோது வடை மாலையை காணவில்லையாம். பின் என்ன நடந்திருக்கும்? வாசகர்களுக்கே விடுகிறேன் விடையை கண்டுபிடியுங்கள்!
-
வெளிநாட்டு நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட நீர்வழங்கல் திட்டங்களில் பாரிய நிதியிழப்பு : தேசிய கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டு
வீதியமைப்பில் பனையோலை. கள்ளத்தரகர் மூலம் நடத்தப்படும் ஊழல்.