Everything posted by satan
-
2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
மாற்ற முடியாத அரசியல் என்று தமிழருக்கு சாதகமானவையை நீக்கி யாப்பு வடிச்சு வைச்சிருக்கினமெல்லோ, அப்படி, வலுவான, மாற்றமுடியாத, அசைக்க முடியாத சட்டமாக இயற்றி, நடைமுறைப்படுத்தவேண்டும் இவரது காலத்திலேயே. இவர் சொன்னவற்றை நிறைவேற்றினால்; இவர்தான் சதாகால ஜனாதிபதி! சின்னப்பொடியன்தானே, காலம் நிறைய இருக்கு அவருக்கு.
-
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
கவலைப்படாதீர்கள் பாஸ்! சந்தேகம் தெளிந்திருந்தால் அவரே அனுப்பி வைப்பார். அது ஒன்றும் சாதாரண சந்தேகமில்லை, சுமந்திரன் மேலுள்ள நம்பிக்கையினால், ஏற்றுக்கொள்ளாமையினால் உண்மையை கூறுபவர்கள் மேல் வந்த ஒரு வெறுப்பு போலுள்ளது. இல்லையென்றாலும் நீங்கள் அனுப்பி வைக்கலாம். நான் ஒன்றும் தவறாக, தனிபட்ட காழ்ப்புணர்சியினால் எழுதவில்லை. இன்னும் எத்தனையோ இருக்கு. உண்மையாகவே விளங்காதவராக இருந்தால்; இந்த விளக்கம் போதும். இல்லை சோதிக்கிறாரென்றால்; எந்த விளக்கம் கொடுத்தாலும் பிரயோசனமில்லை.
-
2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
இது வாலில்லை, தலைதான்! பயம் தெளிஞ்சு போச்சுது போல. கோசானுக்கு தெரியுமோ இந்த விஷயம்?
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
பயமா? முத்திரைக்கா? என்னை விட நீங்கள் அரசியல், சட்ட, பரந்த, இதர பல திறமையுடையவர். நான் ஒரு சாதாரணமான ஆள். எனது சொந்த சுற்றாடல் அனுபவத்தை வைத்தே எழுதுகிறேன். இவ்வளவும் கோசானின் தலைமையில் நடைபெற வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்!
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
நான் எதை சொன்னாலும் மல்லுத்தான் என்றாகிப்போச்சு. நீங்கள் நினைத்தபடியே வைத்துக்கொள்ளுங்கள். சிங்களம் தமிழருக்கு வைக்கும் தேர்வு இது போன்றதே. எதை தெரிந்தாலும் பாதகம் நமக்குத்தான். அது தேர்வல்ல பொறி! பதிலளித்தேன் என்று வையுங்கோ; எல்லா திரியும் அமோகமா ஓடும்! எனக்கெதிரா கூட்டம் இலகுவா சேர்த்துவிடுவீர்கள் போங்கோ!
-
அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிய சபாநாயகர்
பாவம் அந்தப்பிள்ளையை விடுங்கோ! நாய் வேஷம் போட்டால் குரைத்துத்தானே ஆகவேண்டுமென்கிற நிலையில், அவரின் எதிர்காலம் பாழாகப்போகுது.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இவர் ஒருத்தர். ஆம், இல்லை எனும் கேள்விப்பேப்பரோடை.
-
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
ஆண்டு சரியாக நினைவில்லை, தெரிந்தவர்கள் குறிப்பிடுவார்கள். ஜெனிவா கூட்டத்திற்கு நமது பிரச்சனைப்பற்றி கதைப்பதற்காக த. தே. கூட்டமைப்பு செல்வதாக முடிவெடுக்கப்பட்டது. அப்போது சுரேஷ் பிரேமச்சந்திரன் பேச்சாளராக இருந்தார். இந்த முடிவு எட்டியபின், சுரேஷ், அவருடன் சிலர் இந்தியா சென்றிருந்தனர். அந்த சமயம் சம்பந்தர், சுமந்திரன் கூடி ஜெனிவா போவதில்லை என முடிவெடுத்து வெளியிட்டனர். இது சுரேஷுக்கு தெரியாது. அவரை விமான நிலையத்தில் பேட்டி எடுத்த ஊடகவியலாளர், ஜெனிவா போவது பற்றி கேள்வி எழுப்பிய போது, நாம் செல்வோம் என்று பதில் கூறினார். அதற்கு பத்திரிகையாளர் சம்பந்தர் சுமந்திரனின் முடிவை கூறினார். இது சரியா? ஒரு கட்சி எடுத்த முடிவை இருவர் தன்னிச்சையாக, கட்சியோடு ஆலோசிக்காமல், தெரிவிக்காமல், முடிவெடுப்பது சரியா? உங்கள் வீட்டில், நீங்களும் மனைவியும் பிள்ளைகளும் சேர்ந்து, (உங்களுக்கு அந்த பந்தம் ஏற்பட்டிருக்கோ தெரியவில்லை, உதாரணத்துக்கு சொல்கிறேன். கோவிக்க வேண்டாம்!) எடுத்த முடிவை, உங்கள் மனைவி அதை உங்களுக்கு தெரியாமல் மாற்றி அதை இன்னொருவர் வந்து உங்களிடம் அறிவிக்கும்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்? அதுவும் உங்கள் குடும்பத்துக்கு பாதகமான முடிவை எடுக்கும்போது? இருக்கட்டும், அதன்பின் ஊடகவியலாளர்கள் இவரை அணுகி ஜெனீவாவுக்கு போவதாக எடுக்கப்பட்ட முடிவை ஏன் மாற்றினீர்கள்? எனக்கேட்ட போது, அமெரிக்கா சொன்னது, நீங்கள் வரவேண்டாம் அது நாங்கள் பாத்துக்கொள்கிறோம் என பதிலளித்தார். சொல்லுங்கள்! பாதிக்கப்பட்டது உங்கள் குடும்பம், வழக்கு நடக்கிறது, பாதிக்கப்பட்டவர் சார்பில் யாரும் இல்லாமல் வேறு ஒருவர் நமது துயரங்களை இழப்புகளை வலிகளை எடுத்துச்சொல்ல முடியுமா? நாமே அக்கறையில்லாமல் இருந்தால், விசாரிப்பவர்களுக்கு என்ன கரிசனை வந்துவிடப்போகிறது? சரி, அவர்கள் இழுத்தடிக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி நீதியை தேட வேண்டுமோ இல்லையோ? புலம்பெயர்ந்தோர் தவறாமல் போய் போராடுகிறார்கள். அவர்களையும் புலம்பெயர்ந்தோர் விருப்பத்திற்கு இங்கு அரசியல் செய்ய முடியாது என்றார். ஆனால் புலம்பெயர்ந்தவரிடம் ஏன் போகிறார்? இன்னொருதடவை ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய போது, இவர் அடிச்சு விழுந்து அமெரிக்காவுக்கு போய், இலங்கைக்கு அவகாசம் கொடுக்க வேண்டுமென்கிறார். எதற்கு? பிரச்சனையை அமெரிக்கா பாத்துக்கொள்ளும் என்றவர், இலங்கைக்கு அவகாசம் கொடுக்க ஏன் ஓடினார்? அதை அமெரிக்கா பாத்துக்கொள்ளாதா? பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதி, ஏன் அரசுக்காக ஓடுறார்? சும்மா வாயை வைச்சுக்கொண்டு இருக்க கூடாதா? முன்னாள் பிரித்தானிய பிரதமர் தமிழ் மக்களை, அவர்களின் பிரச்சனைகளை சந்திக்க, அரசாங்கத்தின் கெடுபிடிகளை, தடைகளையும் தாண்டி வருகிறார். மக்களின் பிரதிநிதிகள் அங்கில்லை. அப்போது, அவரது ஆங்கில புலமை, திறமை, சட்ட அறிவு, கோட்டு சூட்டு எங்கே போனது? அப்போ, மக்கள் இவரது புலமை, அறிவு, திறமை, இல்லாமல் தங்கள் சாதாரண உடையுடன் தங்கள் துயரங்களை பகிரவில்லையா? அல்லது டேவிட் கமரோன் அவர்கள் துயரங்களை கேட்க மறுத்தாரா? அவர் அந்த மக்களின் குடிசைகளை, வெள்ளம் நிரம்பிய பாதைகளை கடந்து சென்று, அவர்களோடு பேசினார். இவர் ஒருநாளாவது அந்த மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லியிருப்பாரா? தமிழரசு, தமிழ்த்தேசியம் என்றால் சிங்களவருக்கு கோபம், பயம் வருகிறதாம். அதற்கு நமக்கென்ன? அது தெரிந்துதானே அந்தக்கட்சியில் இணைந்தார், ஏன் இணைந்தார்? அதை இல்லாது செய்து சிங்களத்துக்கு மகழ்ச்சியை அளிக்கவா? அதைத்தான் தொடர்ந்து செய்து வருகிறார்? தன் மக்களுக்கு நடந்த அனிஞாயங்களுக்கு தீர்வு இல்லை, ஆறுதல் சொல்ல யாருமில்லை, முஸ்லீம் மேடையில் இருந்து முழங்குகிறார். இவர் யாரின் பிரதிநிதி, யாருக்காக பேச வேண்டும்? சிங்கள மக்களுடன் வாழுவது தனது அதிஸ்ட்டமாம். இருக்கட்டுமேன். யார் இவரை தட்டு வைத்து அழைத்தார்கள் தமிழரோடு வாழுங்கள் என்று? அங்கேயே வாக்கையும் சேகரிக்க வேண்டியதுதானே. இப்போ மக்கள் இவரை நிராகரித்து சிங்கள மக்களோடு வாழுங்கள் என்று அனுப்பிவிட்டனர். போகிறாரா மனிசன்? இன்னும் கூவிக்கொண்டு இங்கேதான் திரிகிறார். ஏனென்றால்; எம்மக்கள் ஏமாளிகள், முட்டாள்கள், நேரம் செலவிட்டு அடிமேல் அடிஅடித்தால் நகருவார்கள் என அவர்களின் இயலாமையை பாவிக்க நினைக்கிறார். எம்மக்கள் இழப்பிலே துவளுகிறார்கள் இறந்தவர்களை நினைவு கூர முடியாமல். இவர் பொப்பி பூ குத்திக்கொண்டு பாராளுமன்றம் போகிறார். கேட்டால், இராணுவத்தினருக்கு மரியாதையாம். ஒன்று அவர்கள் பக்கம் இருக்க வேண்டும் எங்களை விட்டு விலகி. நல்லாட்சி கலைக்கப்பட்டபோது இவர் ரணிலுக்காக நீதிமன்றம் போய் எதை சாதித்தார்? இருந்த ஒரு, மக்கள் அளித்த எதிர்க்கட்சி கதிரையும் பறி போனது. சரி, எங்களுடைய அரசியல் கைதிகள் எங்களை மீட்பார்கள் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள், இவர்களுக்காக இவர் என்ன செய்தார்? இரண்டொரு வருடத்திற்கு முன் தியாகி திலீபனின் நினைவு கூரலுக்கு நீதிமன்றம் பொலிஸாரின் கோரிக்கைக்கமைய தடை அறிவித்தது. இதுபற்றி ஊடகவியலாளர் சுமந்திரனிடம் கேட்ட போது, அவர் சொன்ன பதில், போனதடவை ஆர்னோல்ட் என்னை கேட்ட படியால் நான் நீதிமன்றம் போய் அனுமதி பெற்றேன். இந்தமுறை அவர் என்னை கேட்கவில்லை, (அவர் ஏன் கேட்கவில்லை என்பது அவர்களிருவருக்குந்தான் தெரியும்). நீதிபதி தடையுத்தரவு அளித்துவிட்டார், இது தாமதமாகிவிட்டது என்றார். சொல்லுங்கள்! அந்த மக்களின் பிரதிநிதி, அவர்களுக்காக தானாக ஒன்றும் செய்ய மாட்டார், யாராவது கேட்கவேண்டும், தட்ஷணை வைக்கவேண்டும். இலங்கைக்காக அமெரிக்கா ஓடுகிறார், ரணிலிக்காக நீதிமன்றம் செல்கிறார். இதெல்லாம் தெரியாதா உங்களுக்கு? ஒருவரை கண்மூடித்தனமாக ஆதரிப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், ஒன்று நக்குண்டார் நாவிடார், சுயநலம், அவரைப்பற்றி முழுமையாக தெரியாமை, அவரது குணாதிசயங்களோடு ஒத்தமை. அனுமதிப்பத்திரம் வழங்கிய செய்தி வந்தவுடன், அவர்கள் பெயர் அறிவிக்காமல், இவர் எப்படி பெயர் சுட்டி பிரச்சாரம் செய்தார்? ஏன் அனுமதி வழங்கிய ரணிலுக்கெதிராக ஏதும் கூவவில்லை? அதை தெரிந்தே மக்கள் குறிப்பட்டவர்களுக்கு வாக்களித்தார்கள், அதோடு அந்தப்பிரச்சனையை கைவிட வேண்டியது அல்லது சமூகபொறுப்புணர்ச்சி இருந்தால் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது மக்களுக்கு. செய்ய வேண்டியதை செய்யாமல், தனக்கு வேண்டியதை மட்டும் செய்தால், அது அவர் வீட்டில் செய்ய வேண்டும். ஏன், தேர்தலுக்கு முன்னர் என்ன சொன்னார்? நான் தனிப்பட்ட சந்திப்பை நடத்தி ரணில் எங்கள் இனப்பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதாக உறுதியளித்துள்ளார் என்று அவசர அவசரமாக அறிக்கை விட்டார். அடுத்தநாள், தான் யாருக்கும் எந்த உறுதியும் அளிக்கவில்லை எண்டு ரணில் பகிரங்கப்படுத்தியபின் வேறு கட்சிக்கு ஆதரவு என்றார். ஏன் இவ்வளவு அவசரம்,அபிமானம், பாசம் தனது மக்களை தவிர? இவரை இவ்வளவு காலமும் அரசியலில் இருக்க விட்டதே மக்களின் பெருந்தன்மை! இந்த வசனம் உங்களது அனுபவம் என்பது தெட்டத்தெளிவாக தெரிகிறது. ஆனாலும் என்னை சிக்க வைக்க வேண்டுமென நினைக்கிறீர்களோ தெரியவில்லை. எனக்கு அவரோடு எந்த தனி கொடுக்கல் வாங்கலுமில்லை, நடந்ததை சொல்லியிருக்கிறேன். முதல் முன்னாள் விக்கினேஸ்வரனுடன் சமராடினார். அவர் பதவி விலகவேண்டும் என்று போற வாற இடம், தெருக்கோடி எல்லாம் கூவினார், சவால் விட்டார், ஆட்களை கூட்டி விரட்டினார். பின்னர் வேறொரு கதை சொன்னார், அதை சொல்வதற்கு இவர் யார்? முடிந்தால் இந்தக்கட்சியை விட்டு வேறொரு கட்சியில் நின்று வென்று காட்டுங்கள் என்றார். அவர் செய்து காட்டினார். இன்னும் விடுகிறாரா அவரை? இவர் ஒரு தனி ரகம் சார்! தான் தான் எங்கும் எதிலும் முன்னுக்கு நிக்க வேணும் என்று அடம் பிடிப்பார். எதிர்ப்பவர் யாரும் இருந்தால், அவர்களை நாறடிச்சிடுவார். இதற்கு மேல் என்னால் தொடர முடியவில்லை தெரிந்தவர்கள் தொடர்வார்கள். நீங்கள் ஒன்றும் தெரியாமல் கேட்கவில்லை, ஆனாலும் கேட்டபடியால் சிலதை மட்டும் கூறியிருக்கிறேன். நேரில் சில சம்பவங்கள் அண்மைய காலங்களில் நடக்கின்றன சாட்சியாக. அவை உங்களுக்கு தெரியாமல் போக வாய்ப்பில்லை, அதை நீங்கள் நம்பமுடியாவிட்டால் நான் சொல்வதையும் விளங்கி தெளியும் என நான் நம்பவில்லை. விளங்குகிறது. நான் யாரையும் கண்மூடித்தனமாக ஆதரித்து, இன்னொருவரை மூர்க்கத்தனமாக எதிர்ப்பதில்லை. மக்களுக்கு எதிராக செயற்படும் யாரையும் சாடுகிறேன், விமர்ச்சிக்கிறேன். அதை நீங்கள் காணத்தவறி விட்டீர்கள், அல்லது விரும்பவில்லை என நினைக்கிறன். சிலர் எனது கருத்தை மேலோட்டமாக வாசிப்பார்கள். காரணம் பந்தி. நான் எழுதும் கருத்துக்கு ஆதாரம் கொடுக்கும்போது பந்தியாகிறது, கொடுக்காவிட்டால் உங்களைப்போல், மூர்க்கத்தனமாக எதிர்க்கிறேன் என்பார்கள். நான் அனுராவை புகழ்வது கோஸானை சீண்டுவதற்கே. எல்லாத்திரிகளிலும் நான் சொன்னதை இழுத்துக்கொண்டு ஓடி வருவார், அதை நான் ரசிப்பதுண்டு. முக்கியமாக "அனுரா தெய்யோ, கண்ணை குத்திப்போடுவார்." போராடி களைத்த, இனிமேல் இழப்பதற்கு எதுவும் இல்லை, ஆதரிக்க யாருமில்லை என ஏங்கும் என் இனத்துக்கு, கடைசி நட்சேத்திரம் அனுரா ஏதும் செய்ய மாட்டாரா என்கிற எதிர்பாப்பும் ஏக்கமும் பிரார்த்தனையும் இருக்கிறது. நன்றி வணக்கம்!
-
அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிய சபாநாயகர்
சத்தியமூத்தியை எதிர்க்கிறேன் என்று போய், சத்தியமூத்தியின் கையில் பொல்லைகொடுக்கிறாரே? அவசர காரனுக்கு புத்தி மத்திமம். "யாகாவா ராயினும் நாகாக்க; காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு." சந்தர்பத்திற்கேற்ப பேசத்தெரியவில்லை. வலி நிறைய அனுபவித்திருப்பார் போல்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
- சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இல்லை. மௌனம், தொடர்ந்து விவாதிக்க விரும்பவில்லை, பயனில்லை என்று எனது அர்த்தம். எனது கருத்து எடுபடாதென உணரும்போது மௌனமே சிறந்த வழி.- ‘சிரியா புதைகுழியில் குறைந்தது 100,000 உடல்கள்’
அங்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் இதுதான் நிலை. ஆனால் தன்னை பாதுகாக்க ஆயுதம் தூக்கினால் வரிஞ்சு கட்டிக்கொண்டு வரிசையில வருவினம். இந்த நிலை தொடர்ந்தால் அமெரிக்காவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகும், வெகு விரைவில் நடக்கலாம் காலந்தாழ்த்தியும் நடைபெறலாம்.- சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
காலம் பதில் சொல்லும்! அதுவரை மௌனம் நலம்.- இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் பூர்த்தி!
சகுனி நிக்கிற இடத்தில சில உறுப்பினர் தலை காட்ட விரும்புவதில்லை.- ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
இங்குள்ள சைவ ஆலயங்களை இடித்து விகாரை கட்டுவது, இந்தியாவுக்கு போய் திருப்பதியில் விழுந்து கும்பிடுகிறதெல்லாம் காலை வாருகிற வேலை. மனிசன் இங்கு எதை செய்தாரோ அதை யாருக்காகவும் மாற்றவில்லை எங்கும். அனுரா சொன்னால் சொன்னதுதான்! ஞானசார தேரரையே மனமுருக வைத்துவிட்டார்.- சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
அட... அது நீங்கள் இல்லையா? நீங்கள் என்றல்லவா நான் நினைத்திருந்தேன்!- மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கவி அருணாச்சலத்திற்கு! தொடருங்கள் தங்கள் பணியை.- ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
அதுவும் மோடி கொடுத்த ஆலோசனைதான். பின்னர், அனுரா நாட்டுக்கு திரும்பி வரவேண்டாமோ? இந்து ஆலயங்களை தரிசிக்கவில்லையா இந்தியாவை (மோடியை) மகிழ்விக்க?- பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
அந்த தீவிரமான குற்றச்சாட்டுக்கள் என்னவென்று வெளியில் எடுத்து வையுங்கள், சான்றுகள் இல்லையா இருக்கா என்று பார்க்கலாம்! ஒரு கட்சி அங்கத்தவர், மற்ற அங்கத்தவர்களைப்போல் இயங்குகிறாரா? மற்ற உறுப்பினர்களை பாதுகாக்கிறாரா? மதிக்கிறாரா? மற்ற உறுப்பினர்களை கடைத்தெரு வியாபாரிகள்போல் பொது இடத்தில தூற்றுகிறார், பதவி விலக வேண்டுமென்கிறார், தன்னிச்சையாக முடிவெடுக்கிறார், சந்திக்கிறார், கருத்து அறிக்கை விடுகிறார், அநாகரிக வார்த்தைப்பிரயோகம். மற்றவர் ஏதாவது ஒன்று செய்தாலே பதவி விலகு, இடை நிறுத்து, நீதிமன்றம் என்று இழுத்தடித்து மற்றவர்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கிறார். இதை யாராவது உங்களுக்கு செய்தால்; பரவாயில்லை என்று ஏற்றுக்கொள்வீர்களா? சிறிதரனையும் சாடுகிறோம். தவறு செய்பவர் எல்லோரையும் விமர்ச்சிக்கிறோம். காரணம்; இது மக்களின் பிரச்சினை, அதற்காக மக்கள் இழந்தவை ஈடு செய்ய முடியாதவை! இவர்களின் ஈனச்செயலால் பாதிக்கப்படுவது, சாதாரண ஏழை மக்கள். இதற்காகவா மக்கள் இவர்களை தெரிந்தெடுத்தனர்?- யாழ். சாவகச்சேரி நகரசபை முன் பதற்றம் - நுழைவாயிலை பூட்டி மக்கள் போராட்டம்
ரொம்ப அடாவடித்தனம், கொலை முயற்சி. இதை தட்டிக்கேட்க்கத்தான் வேண்டும். 2000ம் ஆண்டென்றால் அங்கயனுக்கும் தொடர்பு இருக்கலாம்.- யோஷித்த ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு
காரணம் காட்டமுடியாத பணச்சேர்ப்பு, அதில ஒரு வயதான பாட்டியை தனது பாட்டி அவரின் சொத்து, அவருக்கு இப்போ ஞாபக மறதியென்று நாமல் விசாரணைக்கு கூட்டி வந்திருந்தார் முன்பு. அதெல்லாம் ரணில் காலத்தில் ஒப்புக்கு எடுத்துவிட்டு மூடிவிட்டார். இவர்களுக்கு தெரியும் தாங்கள் எப்போதும் சட்ட சிக்கலை சந்திக்க வேண்டுமென்று. அதனாலேயே மக்களை கூட்டிக்கொண்டு விசாரணைக்கு தோன்றினர். இப்போ மக்களே இந்த திருடரை பிடியுங்கள் என்று கூறி விட்டனர். அனுராவை மக்கள் தேர்ந்தெடுத்ததன் முக்கிய நோக்கமும் அதே. சட்ட நடவடிக்கை எடுக்காமல் கைவிட்ட யாவரும் தண்டிக்கப்படவேண்டும்.- ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கடுப்பேத்திற நீ? இந்த வரவேற்பு, நாடகமெல்லாம் தங்கள் பாதுகாப்புக்கும் தங்கள் அபிவிருத்திக்குமே. இந்தியாவுக்கு உண்மையில் இலங்கை நலனில் அக்கறை இருந்திருந்தால்; போரையே உருவாக்கி நாட்டை அழிக்காமல் இருந்திருக்கும். அது அனுராவுக்கு நன்கு தெரியும், சிங்கள இனவாதிகளுக்கும் தெரியும். சுடுகாடாக்கிவிட்டு அபிவிருத்தி செய்கிறாராம். முட்டாள் சுயநலவாதிகள் இருக்கிறவரைக்கும் அவர்களுக்கு வெற்றியே.- பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
அதை சுமந்திரனே வெளிப்படுத்தி, அவர்கள் பதவி விலக வேண்டுமென்கிறார், கொழும்புக்கு ஓடி விட்டார் என்கிறார். யாரை சாடுகிறார் என்று தெரியவில்லையா உங்களுக்கு? விக்கினேஸ்வரன் அதற்கு பொறுப்பேற்று தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் கொழுப்புக்கு போனாலென்ன, லண்டனுக்கு போனால்த்தான் இவருக்கென்ன? அவரை விமர்ச்சிக்க இவர் யார்? ஏன் அடுத்த கட்சிக்குள் மூக்கை நுழைக்கிறார்? இது அநாகரீகமில்லையா? தன் தோல்விக்கு பொறுப்பெடுத்து கட்சியின் சகல நடவடிக்கையிலும் இருந்து விலக துப்பில்லை, போனதடவை மாவையரை விரட்ட பத்திரிகை அறிக்கைகளும் கூட்டங்களும் நடத்தியவருக்கு தெரியாதா தனது நிலை? எதுக்கெடுத்தாலும் பதவி விலக வேண்டுமென்ற கூப்பாடு, இதை தவிர வேறேதும் உருப்படியா செய்ததில்லை. அதுதான் மக்கள் ஓய்வெடுக்கும்படி அனுப்பியுள்ளனர். அடங்குதா மனிசன்? யாரை பதவி விலத்துவேன் என்று கூவித்திரியுது.- பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
எய்தவன் இருக்க அம்பை நோகலாமா? அனுமதியளித்தவர் ரணில், அவரின் தோஸ்து சுமந்திரன். அப்பவே தடுத்திருக்க வேண்டுமே சுமந்திரன்? ஏன் அதை செய்யவில்லை சமூகத்தில் அக்கறையிருந்தால்? இப்போ தேர்தல், பாராளுமன்ற கதிரை ஆசை வந்தவுடன் தனது பதவிக்காக தூக்கிப்பிடித்தால்; அது சமூக நலன் கிடையாது, சுத்த சுயநலம். அனுமதியளித்தவர் நாட்டின் ஜனாதிபதி! இங்கே ரணிலை குற்றம் சொல்ல பயம், வாங்கியவர்களை பதவிவிலக வேண்டுமாம். அது அவர்களுக்கு வாக்களித்தவர்கள் பிரச்சனை. அதை தெரிந்துகொண்டேதான் மக்கள் இவரை நிராகரித்து அவர்களை தெரிந்தெடுத்துள்ளனர். தனது தோல்வியையும், அவர்களின் வெற்றியையும் தாங்க முடியாமல் வயிற்றெரிச்சலில் தவிக்கிறார். இவரின் வாக்கு, செயல்களில் மக்களுக்கு நம்பிக்கையில்லை. இவர் இதை தேர்தலுக்கு முன்பு சொல்லி தடுத்திருந்தால் மக்களிடத்தில் இவரின் சொல்லுக்கு ஒரு மதிப்பு இருந்திருக்கும். மக்களுக்கு நன்றாகவே தெரியும் இவர் ஒரு பொறாமைக்காரன் என்று. இந்தபசாசு கட்சிக்குள் நுழைந்தபின்தான் இத்தனை குழப்பங்கள் விரிசல்கள். இத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும்போது, இவரை மட்டும் ஏன் விமர்சிக்கிறார்கள் என்று யோசித்தால். உண்மை விளங்குமுங்களுக்கு!- சாணக்கியன், சுமந்திரன் ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியுடன் கலந்துரையாடல்..!
அது! அவர் எதை இழந்தார் கவலைப்படுவதற்கு? சும்மா இருந்தவருக்கு தோல்வி ஏது? கட்சிக்குள் அடாவடி குறைந்ததா? எல்லாம் அப்படியே ஆளுகிறார். மக்கள் அடித்தாலென்ன? கட்சி அடித்தாலென்ன அவருக்கு நோகாது, அப்படி ஒரு எ---த் தோல். ஆமா ஒன்று சொல்லி அதை மறுத்து பத்திரிகையாளரை குற்றம் சாட்டும் இவரை எல்லாம் ஏன் பேட்டி எடுக்கிறார்கள். சரி எடுத்தவர்கள் தான் எடுத்தார்கள், மக்கள் ஏன் உங்களை தேர்தலில் நிராகரித்தார்கள் அதன் காரணம் என்ன எண்டு கேக்கிறார்களா? கேட்டால் சொல்வார், எங்கள் கட்சி பெரிய வெற்றி, வடக்கில் மூன்று, கிழக்கில் அபார வெற்றி எனக்கூறி தனது தோல்வியை மறைத்து கட்சி வெற்றி தனது உழைப்பால் வந்த வெற்றி என்பார். துரோகிகளுக்கு கோபம் ரோசம் மானம் இல்லை, பதவி அதிகாரமே குறியாக இருப்பர். நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள்? - சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.