Everything posted by satan
-
"இஸ்ரேல் காசாவில் பொதுமக்களை கொலை செய்யவேண்டிய நிர்பந்தத்திற்குள்ளானது" - பில்கிளின்டனின் கருத்திற்கு கடும் எதிர்ப்பு
அவர்கள் மத்திய கிழக்கில் செய்ததும் அதுதானே. தனது நன்மைக்காக அந்த நாடுகளுக்குள் புகுந்து பயங்கரவாதத்தை உருவாக்கி சின்னா பின்னமாக்கியதே அமெரிக்காதான்.
-
இஸ்ரேல் ராணுவம் தடுத்து வைத்த பாலத்தீனர் கூட்டத்தில் இருந்த 3 வயது சிறுமி என்ன ஆனார்?
எங்கள் குழந்தைகள் யுத்தத்தின் பின் குடும்பமே அறியாமல் அனாதைகளாயினர். அங்கு, போரில் ஈடுபடாத குழந்தைகள் தான் இருக்கிறார்கள் என்று தெரிந்தும், பள்ளிக்கூடத்தில் குண்டுகளை பொழிந்து மரணத்தை ஏற்படுத்தினர், அவயவங்களை துண்டித்தனர். தாய் இறந்து விட்டாள் என்பதை கூட உணர முடியாத மழலை தாயில் பாலைத் தேடியது. இவைகள் எல்லாம் மறக்கக்கூடியதா? எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில், இந்த தாக்குதலில் இறந்த, காயமடைந்த, தவிக்கிற மக்களுக்கு எங்கள் கவலையை மட்டுந்தான் தெரிவிக்க முடியும். நீதியின் குரலை அடக்குபவர்கள் நடத்தும் தாக்குதல்கள், சொல்லும் காரணங்கள் எல்லாம் ஒரே மாதிரியாகவே இருக்கும். அவர்கள் ஒருவருக்கொருவர் உதவுகின்றனர், பயிற்சி அளிக்கின்றனர், அப்பாவிகளையும் குழந்தைகளையும், பெண்களையும், வயோதிபர்களையும், பெலவீனமானவர்களையும் தாக்கி கொன்று பழி தீர்க்கின்றனர். இவர்கள் கோழைகள்!
-
யாழில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது!
பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் யோசனை இல்லாதவர்கள், இவர்களால் வெளிநாட்டுக்கு மக்களை அனுப்ப முடியுமென்றால்; ஏன் இவர்கள் இங்கிருக்க வேண்டும்? மக்களின் ஆசைகளை அறிந்த போக்கிரிகள், அதை வைத்து பிழைத்துக்கொள்கிறார்கள். எவ்வளவு தான் நடந்தாலும் அறிந்தாலும் மக்களின் ஆசைகள் மாறுவதில்லை.
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
முகவரி இல்லாத, தலைவன் இல்லாத வீடு, அதற்கொரு விஞ்ஞாபனம்.
-
முல்லைத்தீவுக்கு செல்லவுள்ள பிரதமர் – ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றம்
இவரைத்தொடர்ந்து சில நாட்களில் அனுரா, முல்லைத்தீவு யாழ்ப்பாணம் வரவுள்ளார். மக்கள் அவருக்கு கொடுக்கவிருக்கும் வரவேற்பைப் பாருங்கள்! இப்படியொரு நெருக்கடி அவர்களுக்கு வரும் என்று அவர்கள் யாரும் நினைத்திருக்கவில்லை. இறுதியில் இருந்த வீட்டையும் உடைச்சுக்கொண்டு நிக்கிறார்கள். இவர்கள் தங்கள் கட்சியை தக்க வைக்க முடியவில்லை, இதில மக்களை எங்கே தக்க வைப்பது? மக்கள் முடிவு செய்தபின், அதை மாற்ற இவர்களிடம் என்ன துருப்பு இருக்கிறது அவர்கள் வரவழைக்க? ஒருவரை ஒருவர் தூற்றுவதுதான் இவர்களின் சாதனை. அனுரா, மக்களின் வேண்டுகோளை நிஞாயமாக அணுகினால்,இதுவே இவர்கள் போட்டியிடும் கடைசிதேர்தலாக அமையும். ஒருதடவை மஹிந்த சொன்னார், நாங்கள் தமிழ் மக்களிடம் நேரடியாக பேசுவோம், தலைவர்கள் தேவையில்லை என்றார், அவர் சொன்னது வேறு பிரச்சனை, ஆனால் அது இன்று நிறைவேறப்போகிறது.
-
இல்லாத ஒன்றுக்கு கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது - டக்ளஸ்
உண்மையை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. ஆனால் நீங்கள் அதைவிட வேறொன்றும் மாற்றி செய்யவில்லையே? அப்படியென்றால் உங்கள் சாதனையை சுட்டிக்காட்டியிருக்கலாமே? இனிமேலும் அலங்கரிக்கிற கனவோடு பாராளுமன்றம் போகாலாமென்கிற கனவோடு இருந்தீர்களானால்; அது தவறு. களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். உங்களுக்கு என்ன வேலை தெரியும்? முன்னைய வேலையெல்லாம் செய்ய முடியாது. கம்பிதான் எண்ண வேண்டும் முன்னைய பாக்கியையும் சேர்த்து. அப்படி ஒரு திறமை இருந்திருந்தால்; ஏன் இந்த ஏமாற்று வேலைக்கு போட்டியிடுகிறீர்கள்? அத்தோடு உங்களுக்கு கதிரையில் சரியாக உட்கார முடியவில்லை, எழுந்து நின்று பேச முடியவில்லை, காரில்லாமல் நடந்து செல்லவும் முடியாது, நாய் கலைத்தால் ஓடவும் இயலாது. பேசாமல் சொன்னது போல் ஓய்வெடுப்பதே உங்களுக்கு நல்லது. இவர் போன்றவர்கள் தேர்தல் மேடையில் நின்று மற்ற அரசியல்வாதிகளை விமர்சிக்கும் போது, கேட்டுக்கொண்டிருக்கும் மக்கள், மேடையில் ஊர் வம்பு பேசவேண்டாம், நீ என்ன செய்தாய் எங்களுக்கு? அதை சொல்லு, இனிமேல் பாராளுமன்றம் போய் என்ன சாதிக்கப்போறாய்? அதை சொல்லு கேட்க்கிறோம், அப்படியேதும் இல்லையானால் நாங்கள் போகிறோமென எழுந்து சென்று விடவேண்டும்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
என்னையும் போட்டியில் கலந்து கொள்ள தேடி அழைத்த சிறியருக்கு நன்றி!. ஆனால் இதில் கலந்து கொள்ளப்போவதில்லை என மிக வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.. மன்னிக்கவும் உங்கள் அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியாமைக்கு.
-
இல்லாத ஒன்றுக்கு கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது - டக்ளஸ்
அங்கு நிற்கிறார் செயலாளர் நாயகம்! அதிலிருந்தால், தான் செய்த குற்றங்களிலிருந்து தப்பி விடலாமென கனவு காண்கிறார். சாதாரண மக்களுக்கு அளிக்கும் தண்டனைகளை விட, அரசியல் வாதிகள், அரசியல் தலைவர்களுக்கு அதிக பட்ஷ தண்டனை அளிக்கப்படவேண்டும். மக்களின் பிரதிநிதிகள் அவர்களை நல்ல வழியில் நடத்த வேண்டியவர்கள். பொய்களை சொல்லி, மக்களை ஏமாற்றுவதும், கொலை, கொள்ளை நடத்துவதும் அரசியலில் முன்னிலையில் அமரும் திருடர்களை வாழ்நாள் சிறையில் அடைக்க வேண்டும். தேர்தலுக்கு முன் அரசியலில் இருந்து ஓய்வு தேர்தலின்போது ஒதுங்கப்போவதில்லை மக்களுக்கு சேவை. இவர் மக்களுக்கு சேவை செய்திருந்தால் இவர் என்ன சொல்வது? மக்களே தேர்ந்தெடுத்து அனுப்புவார்களே! இவர் ஏன் கெஞ்சுகிறார்? எத்தனை அடிஉயர கம்பத்தில் ஏறி வித்தை காட்டினாலும், காசு வாங்க தரைக்கு இறங்கி வந்தே ஆகவேண்டும்.பாராளுமன்ற கதிரை அலங்கரிக்க மக்கள் ஆணை கொடுத்தால் மட்டுமே கிட்டும். வேறெங்கு இவர்களின் பருப்பு வேகும்? மக்களுடன் இருந்தாற்தான் அவர்களை சுரண்டி வாழலாம், கொலை செய்தி கூலி பெறலாம். இதைவிட இவருக்கு வேறென்ன தெரியும்? இதைத்தான் ஒவ்வொரு தேர்தலிலும் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால் யாரும் கேட்பதுமில்லை. இவரால் அதை செயற்படுத்துவிக்கவும் முடியவில்லை. தேர்தல் காலங்களில் இதுதான் அவரது பிரச்சாரம். மக்களின் நலனுக்காக அரசியல் செய்பவர், அவர்களின் நலனுக்காக செய்த நன்மைகளையும் கொஞ்சம் எடுத்து விடலாமே? போன ஆசனத்துக்கு ஒன்றும் சாதிக்காதவர், வாழ்நாளில் எதையும் செய்யப்போவதில்லை. சிறியதில் நம்பிக்கையற்றவன் பெரியதிலும் நம்பிக்கையற்றவனே. அது என்ன கொள்கை? புளித்துப்போன, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதா? அங்கால ஒருவர் வேறொரு பல்லவி. இவர்களெல்லாம் தேர்தல் கால திருடர். அயோக்கியர்கள்.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
இவர்கள், முந்தைய அரசுகளில் அனுபவித்த சுகபோகங்களை எண்ணி மீண்டும் அடிச்சு பிடிச்சு போட்டியிடுகிறார்கள். மிக கஸ்ரப்படப்போகிறார்கள். இவர்கள் இந்தப் பதவியை மக்களால் பெற்று மக்களுக்கு ஒன்றும் செய்ததில்லை. மாறாக சும்மா இருந்து வசதிகளை பெற்றுக்கொண்டனர், ஆகவே மக்களின் கோரிக்கைகளை ஆளுநர் பாத்துக்கொள்வார், இவர்கள் உத்தியோகஸ்தர்களாக வேலை செய்ய வேண்டும். லஞ்சம் எல்லாம் பெற முடியாது, வசதிகள் குறைக்கப்படும், கன்ரீன் என்று பேசுபவர்களெல்லாம் அதற்குரிய பணம் செலுத்தியே வேண்டியவற்றை கொள்வனவு செய்யலாம், எல்லாம் இறுக்கப்போகிறது. பாப்போம் என்ன நடக்கிறதென்று. நாடாளுமன்ற உறுப்பினர் என்று நாட்டாமை காட்டியதெல்லாம் மறைந்து, அதை சொல்லவே பயப்பட வேண்டி வரும் போலிருக்கிறது. பயங்கரவாத சட்டம் கூட இப்போதைக்கு எடுக்காமல் இருப்பது நல்லதென்றே நான் நினைக்கிறன். இந்த சட்டத்தை பயன்படுத்தியே எதிரிகளை, கேள்வி கேட்டவர்களை நசுக்கினர் இதை உருவாக்கி. அதன் ஆபத்து என்ன என்பதை உருவாக்கியவர்கள் அனுபவித்து பார்க்க வேண்டாமோ? இதை அவசரப்பட்டு எடுத்தால் மீண்டும் வன்முறைகளை ஏவுவார்கள், ஏதாவது தமிழரின் நீதியான கோரிக்கைகைகளை நிறைவேற்ற நினைத்தால் பிக்குகள், இனவாதிகள், ஊழல் பெருச்சாளிகள் சும்மா இருப்பார்களா என்ன? அவர்கள் செய்யும்போது பாத்துக்கொண்டு இருந்தோம், அவர்களும் கொஞ்சம் அதன் தாக்கத்தை அனுபவிக்கட்டும். இதை இப்போ அவசரப்பட்டு எடுத்தால் மஹிந்தா பட்டாளம் சும்மா இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? அதை அவர்கள் மீது ஏவும்போது அவர்களால் குறை கூற முடியுமா?
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள்?
-
மக்கள் விடுதலை முன்னணிக்கு ஜனநாயக ஆடை இன்னும் பொருந்தவில்லை - ரணில்
எனக்கு வாக்கு அளியுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறார். அப்போ அவர் அதிகரித்த சம்பளத்தை அளிக்கும்வரை தேர்தலை தள்ளிப்போடலாமா? இவர் ஆட்சிக்காலத்தில் கொடுத்த உறுதி மொழிகளை நிறைவேற்றினாரா? சுதந்திர தினத்துக்கு முன் தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என்று அறிவித்தாரே, அதற்கு என்னாயிற்று? அனுராவின் வாயை கிளறி அவரது வாக்குகளை குறைக்கவும், அதேநேரம் தமது வாக்கு வங்கியை உயர்த்தவும் பலர் முயற்சிக்கின்றனர். ஆனால் அவரும் தேர்தல் முடியும்வரை எந்த விளக்கமும் பதிலும் அளிப்பதாக இல்லை. அதன் பின் இவர்கள் எதுவும் கேட்க போவதில்லை ஆகவே கேட்க வேண்டியவற்றையெல்லாம் இப்போதே கேட்டு விடட்டும். பதில் செயலில் கிடைக்கும், ஆட்சி முழுமையாக அவர் கையில் வந்தபின். அதுசரி.... ஜனாதிபதியாக எத்தனையோ பேர் வந்தார்கள், போனார்கள், ரணிலார் அரசை கவிழ்த்தார்கள், அவர்கள் மேற்கூட இவர் கோபப்பட்டதில்லை, ஏன் அனுரா மீது இவ்வளவு கடுப்பு, சாபம்? ஒருவேளை தமிழருக்கு ஏதாவது நன்மை செய்து விடுவாரோ என்ற பயமா? அரசியல்வாதிகளுக்கு கஸ்ரகாலந்தான். ஆனாலும் பின்னாளில் இந்த திட்டங்களை கைவிடும் நிலையும் வரலாம். இப்போ தனது அரசியல் எதிரிகளை தள்ளி வைப்பதற்கும் மக்களின் ஆதரவை பெறுவதற்கும் அதிரடியாக மேற்கொள்ளப்படும் திட்டங்கள், பின்னாளில் தாமும் அதனால் பாதிக்கப்படுவோம் எனும்போது மாற்றப்படலாம்.
-
தமிழரசுக் கட்சிக்குள் பிளவு...சுமந்திரனை கடுமையாக சாடும் சிறிநேசன்
எப்படியாவது அனுரா அமைச்சரவைக்குள் புகுந்து பதவி பெறுவது என முழு மூச்சாக நிற்கிறார் சுமந்திரன். மதுபான அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் பெயரை வெளியிடுவோம் என்றார்கள் வெளியிடவில்லை,முடிந்தால் வெளியிடுங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டவர்,அந்த அரசின் மீது பல குற்றச்சாட்டுக்களை அடுக்கியவர், இப்போ சேர்ந்து பயணிக்க காத்திருக்கிறார்.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
சொன்னதுதான் சொன்னியள், யாருக்கு வாக்களிப்பது என்றும் சொன்னால் வாக்காளருக்கு சௌகரியமாக இருக்கும். அவர்கள் நம்பி வாக்களித்து ஏமாந்ததாலேயே மக்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். மக்கள் சிங்களத்துக்கு வாக்களித்தால்; அது நடக்கும், இது நடவாது என்பவர்கள், அந்த வாக்குகளை வேண்டி அவர்கள் என்ன சாதித்தார்கள்? அதனால் மக்கள் என்ன பயனடைந்தார்கள்? அந்த வாக்குகளை வைத்து என்ன செய்கிறார்கள்? அந்த வாக்குகளுக்கு என்ன நடந்தது? என்றாவது விளக்குங்கள். பெரும்பான்மை கட்சிகள் எப்படி இவ்வளவு இலகுவாக தமிழ் மக்களிடத்தில் செல்வாக்கு பெற முடிந்தது? களைத்துப்போயிருக்கும் மக்களை சும்மா குறை கூறாதீர்கள். அதற்கு காரணமானவர்களை குறை கூறுங்கள்.
-
பதவி மோகத்தால் தமிழ்தேசியத்தை பலிகடாக்கும் சுமந்திரன் - சாணக்கியன்! வேலன் சுவாமி
அது ஏன் இந்த பேட்டி எடுப்பவர்கள் பேட்டியலாளரை முழுமையாக பேச விடாமல் குறுக்கிடுகிறார்கள்? பல பேட்டி எடுப்பவரை பார்த்திருக்கிறேன், தாங்கள் விரும்புவதை பேச வேண்டும் என விரும்புகிறார்களா அல்லது பொறுமை இல்லையா?எதற்கு ஒருவரை அழைத்து இப்படி அவமானப்படுத்துகிறார்கள்? அவர்கள் பேசி முடியும்வரை பொறுத்திருந்து கேள்வியை தொடரலாமே? பேட்டியை பார்க்கும்போது எரிச்சலாக இருக்கிறது.
-
அரசாங்கத்தின் பயணத்தை பார்க்கும்போது மீண்டும் ரணில் பிரதமராகும் சாத்தியம் - ராஜித சேனாரத்ன
அதுதான்! கோத்தாவுக்கு வாக்குப்போட லட்ஷக்கணக்கில் முண்டியடித்து வந்தவர்கள், பிறகு நாட்டுப்பக்கம் திரும்பியே பாத்திருக்க மாட்டார்கள். அப்படி இவருக்கும் வந்திருந்தால்; இவர் எண்ணிக்கை அறுபத்தொன்பது லட்ச்சத்தை தாண்டியிருக்க வேண்டுமே? ஏன் அனுராவை பாத்து இப்படி பயப்படுகிறார்கள்? ஊழல் ஒழிப்பு, விசாரணை இப்படி பலதால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் போலும்.
-
யாழில் தனியார் காணி ஒன்றை கைப்பற்றும் கடற்படையினரின் நடவடிக்கையை தடுத்த பொதுமக்கள்
ம்..... பல நாடகங்களை கண்டு விட்டோம். சாணக்கியன் தூஷண பிக்கு, தாடி இராணுவம், மகிந்தா கிறிஸ் பூதம், இப்படி ஒவ்வொரு தேர்தலுக்கும் நீளும். ஆனால் மக்கள் முன், வேறு நாடகம். அப்பாவி மக்களின் பயத்தை வைத்து அரங்கேறுகின்றன.
-
அரசாங்கத்தின் பயணத்தை பார்க்கும்போது மீண்டும் ரணில் பிரதமராகும் சாத்தியம் - ராஜித சேனாரத்ன
ரணிலாரினதும் அவரது ஆதரவாளர்களினதும் பிரார்த்தனையும் அதுவே. இவ்வளவு காலமும் திருட்டு, ஊழல் என்று உழன்ற நாடு, வேறு திசையில் சென்றால் இவர்களெல்லாம் எப்படி சீவிப்பது? திரும்பிச்செல்ல முடியாதென்றால் எப்படி வந்தார்களாம்? இவர், தற்போதைய ஜனாதிபதி. ஆறு வாகனம். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அதை விட பல மடங்கு வாகனங்கள் எதற்கு? ஒரே நேரத்தில் ஒருவர் இத்தனை வாகனங்களிலா பயணம் செய்வார்? அதுமட்டுமல்ல பயங்கரவாதத்தை வேரோடு அழித்து விட்டோம் என்று மார்தட்டியவர்கள், இப்போ பாதுகாப்பு வேண்டுமென்று கேட்ப்பது எந்த வகையில் நிஞாயம்? சரி..... அனுரா, பாதுகாப்பான ஒரு வீட்டில் உங்களை வாடகைக்கு அமர்த்துவார், உங்களுக்கு வேண்டிய நேரத்தில் பாதுகாப்பு, வாகன வசதி செய்து தருவார், உங்களுக்கு மட்டும். ஏற்றுக்கொள்ள தயாரா? ஆனால், அதன் சம்பளம், பராமரிப்பு, வாடகை, நீங்களே செலுத்த வேண்டும். மக்கள் வாக்குகளினாலே வந்து, அவர்கள் பணத்தில் நீங்கள் மட்டும் சலுகை அனுபவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
-
தமிழரசுக் கட்சிக்குள் பிளவு...சுமந்திரனை கடுமையாக சாடும் சிறிநேசன்
இது எத்தனை தடவையாக சொல்கிறீர்கள்? அத்தனை தரமும் மக்கள் உங்களை அனுப்பிவிட்டு நம்பிக்கையுடன் காத்திருந்தார்களே, என்ன சாதித்தீர்கள்? கட்சியையே காப்பாற்ற முடியாத உங்களால் எங்கள் பிரச்சனையை தீர்க்க முடியுமா என தேர்தலில் போட்டியிடுமுன் சிந்தித்து முடிவெடுத்திருந்தால்; இப்படி தேர்தல் மேடையில் ஒருவரை ஒருவர் சாடி, மக்கள் முகம் சுழிக்கும் நிலை வந்திருக்குமா? மக்கள் அனுரா பக்கம் சாய்ந்திருப்பார்களா? அவர்களை சாகவும் விடமாட் டீர்கள் வாழவும் விட மாட்டீர்கள்.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
ஆகா ..... ஆகா ..... நட்டு நறுக்காக சொல்லிவிட்டார். அவருக்கும் தெரியும், இதில் தமிழ் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அரசியல் செய்வார்கள் என்று. இனி வருங்காலத்தில் இவர்கள் மக்களுடன் கூட இருந்து சேவைசெய்தாலே அவர்கள் மக்களின் பிரதிநிதிகள். இல்லையேல் மக்கள் நேரடியாக ஜனாதிபதியின் பிரதிநிதியான ஆளுநரிடம் தமது வேண்டுகோளை சமர்ப்பிக்கலாம். அதற்கு பிரதிநிதிகள் என்கிற தரகர்கள், மக்களின் வாக்குகளையும், அதிக பணவிரையத்தையும் பெற வேண்டிய அவசியமில்லை. இப்ப பாருங்கள்! அனுரா யாழ்ப்பாணம் வரும்போது மக்கள் கொடுக்போகும் வரவேற்பை. செய்வோம் என்று வாக்களித்தவர்களை வரவேற்று வாக்களித்து வாழ்த்துச்சொல்லி காத்திருந்து ஏமாற்றப்பட்டவர்களுக்கு, செய்து காட்டிவிட்டு வாக்குக்கேட்டு வருபவரை காணாமல் இருப்பார்களோ? இதோடு அனுரா நல்லவராக இருந்தால்; அந்த மக்களின் வெள்ளை உள்ளத்தை பார்த்து, மனம் மாறுவார் இல்லையேல் பத்தோடு பதினொன்று. இவரை அனுரா ஆளுநராக நியமித்தபோது, யாரோ ஒரு உறவு, அதற்கான காரணத்தை பதிந்திருந்தார், யாரென்று மறந்துவிட்டேன். அந்த திரியில் பார்த்தீர்கள் என்றால் தெரிந்து கொள்ளலாம். போன ஆண்டு என நினைக்கிறன், இங்குள்ள ஒரு ஆலயத்தை திறக்கப்போகிறார்கள் என்று சொல்லி இராணுவம் புடைசூழ தாடியர் வாகனத்தில் வந்தவர், அப்போது செய்தியாளர் உட்ச்செல்ல அனுமதியளிக்கப்படவில்லை. தாடியரிடம் தாங்களும் உட்ச்செல்ல அனுமதி வாங்கித்தருமாறு கேட்டிருந்தார்கள். அவர் உள்ளே போனவர்தான் காத்திருந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஏனென்றால், அங்குள்ள நிலைமைகளை இவர்கள் படமெடுத்து மக்களுக்கு தெரியப்படுத்தி பிரச்சனையை உருவாக்குவார்களாம். தங்கள் நிலத்தை பார்வையிட மக்களுக்கு உரிமையில்லை. இது ஜனநாயக நாடு, இறைமையுள்ள நாடு என கர்ச்சிப்பார்கள்.
-
ஐநாவில் அதிரடி காட்டும் ஶ்ரீலங்கா! தமிழர்களுக்கு தீர்வு இதுவே!! | Sri Lanka | Jaffna
சுமந்திரன்தான் தமிழரின் பிரச்சனைகளையும் சர்வதேசத்தையும் கையாளக்கூடிய திறமை பொருந்தியவர் எனும் மாயை அவர் நலன்விரும்பிகளாலும் உறவுகளாலும் ஏற்படுத்தப்படும் நாடகம். அவரும் தகுந்தாற்போல சுழன்று சுழன்று தனியாக சந்திப்புகளை, அறிக்கைகளை நடத்துகிறார் விடுகிறார். ஆனால் அதற்கான ஆதாரம் சுமந்திரனிடமோ அவரது ஆதரவாளர்களிடமோ இல்லை, சும்மா தேவையற்ற விடயங்களை செருகி மறைக்க மறுக்க முயற்சிக்கிறார்கள். தமிழரின் பிரச்சனைகளை, அவலங்களை தமிழ்த்தலைமைகள் ஜெனீவாவுக்கு கொண்டு சென்று பேசவேண்டுமென்கிறார். அதை செய்ய அவர்கள் விரும்புவதில்லை, தயங்குகிறார்கள். சுற்றுலாவுக்கு, தனிச்சந்திப்புக்கு, சிங்களத்துக்கு வக்காலத்து வாங்குவதற்கு, சிங்களத்துக்கு கால அவகாசம் வாங்கிக்கொடுப்பதற்கு துரிதமாக காலநேரம் பார்க்காமல் விரைவார்கள். அடுத்து, மக்கள் அனுரா பக்கம் சாய்வது; அந்த சாதாரண மக்களுக்கு வேறு என்ன தெரிவு இருக்கிறது? அவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்து இருந்த போது அள்ளிக்கொடுத்து தமிழ் தேசியத்தை தாங்கினார்கள், சொந்த இடத்தை விட்டு வெளியேறினார்கள், தங்கள் சொந்தப்பிள்ளைகளை அனுப்பினார்கள், இப்போ அவர்களிடம் ஏதுமில்லை. அவர்கள் வலியில், இழப்பில், தனிமையில், வீடற்ற நிலையில் அவர்கள் பிரதிநிதிகள் என்று அவர்கள் நம்பி பாராளுமன்றம் அனுப்பியவர்கள் அருகில் இருந்தார்களா? ஆறுதல் சொன்னார்களா? நாட்டிற்த்தான் இருந்தார்களா? இப்போ, அவர்களிடம் எஞ்சி இருப்பது உயிர் ஒன்றே. அது பிழைக்க வேண்டுமென்றால் நடந்தேறாத, அவர்கள் பிரதிநிதிகளே இயலாத காரியம் என்று சொன்ன ஒன்றுக்காக சாவதை விட, வயிற்றை நிரப்பியாவது வாழ்ந்து சாவோம் என்று நினைப்பதில் தவறென்ன இருக்கிறது? இந்த ஒரு இலகுக்காகவே இலங்கை காய் நகர்த்தி, கொடுமைகளை புரிந்து படுகொலைகளை நிகழ்த்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் உடமைகளையே பகுதியாக திருப்பியளித்து, தண்டனையிலிருந்து தப்பிக்கொள்கிறது. அரசு மாற்றம் தானாகவே கால அவகாசம், கண்துடைப்பு காணாமற்போனோர் அலுவலகம், விசாரணை நம்ப வைப்பு, இதில் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கை நட்ஷத்திரங்கள் கொடுக்கும் கால அவகாசம். இவற்றோடு சாதாரண மக்களால் போராட முடியுமா? உறவுகளை இழந்த ஏக்கம், ஒரு தடவையாவது அவர்களை பார்த்து விட மாட்டோமா என்கிற தவிப்பு, வறுமை இவற்றாலேயே இருப்பவர்களும் மாண்டு போகிறார்கள். இனி தமிழ்த்தேசியம் என்கிற கனவு போய் வாழ்ந்தாலே போதும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த நிலைக்கு யார் காரணம்? புலிகள் போராடியிருக்காவிட்டால் எமது இழப்புகள் மூடி மறைக்கப்பட்டிருக்கும். அவர்கள் போராடியதாலேயே இன்றுவரை உலகம் அதுபற்றி பேசிக்கொண்டிருக்கிறது. ஐ .நா. ஏதாவது தீர்வு வழங்க முடியுமாயிருந்தால் எப்பவோ வழங்கியிருக்கும். இவ்வளவு கால நீடிப்பு தேவையில்லை, அதன்பின் நடக்கும் யுத்தங்களும் தடைப்பட்டிருக்கும். ஒரு அநிஞாயம் நடக்கும்போது கைகட்டி, வாழவிருந்து, இழப்புகளை வேடிக்கை பார்த்திருந்து விட்டு, காலத்தை கடத்தி வெறும் நாடகமே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிவாரணமோ நீதியோ கிடைக்க வாய்ப்பில்லை.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
அவர்தான் பதவிக்காக நாக்கைதொங்கபோட்டுக்கொண்டு திரியிறார் என்று வர்ணிக்கப்படுகிறார் இங்கு. அவர் அப்படி செய்வதில் தவறேதும் இல்லை, ஆனால் தமிழரசுக்கட்சியை சொந்தமாக்கி கொண்டவர்கள் என்ன செய்தார்கள் மக்களுக்கு? வெறும் அறிக்கைகளையும் மிரட்டல்களை விரட்டல்களையும் தவிர்த்து. அவரையும் கொஞ்சம் விமர்சித்தால் நீங்கள் நடுவுநிலையாளர்.
-
கனடாவில் நடந்த கொள்ளைச் சம்பவம் - தமிழர் ஒருவர் கைது
ஏன், கந்தையர்தான் திருடினார் என்று முடிவு செய்து விட்டீர்களா? பாவம் கந்தையர்.
-
34 ஆண்டுகள் கண்டுகொள்ளப்படாத வடக்கு முஸ்லிம் சமூகம்!
ம்..... சிங்களத்தோடு கூத்தடித்துக்கொண்டு இருப்பார்கள், தமிழருக்கு ஏதாவது ஒரு நல்ல செய்தி வந்தால் கிளம்பி விடுவினம். அவர்கள் கேட்கமாட்டார்கள், தமிழர் தனிநாடு கோரினால், பங்கு கேட்கவும் அதை தடுக்கவும் வருவார்கள். ஏன், ரவூப் கூறினாரே போரில் தாங்களும் அரசுக்கு உதவியதனாலேயே போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்று.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
அதுசரி, இந்த வீதியை திறக்குமாறு வேண்டுகோள் வைத்தவரின் தலைக்கறுப்பையே காணமே. அவருக்கு தெரிவிக்காமலேயே திறந்து விட்டார்களோ? யாராவது வந்து ஆடம்பரமாக திறந்திருந்தால், சுமந்திரன் வந்து வாய்வீச்சு விட்டிருப்பார். பாவம் அவர்தான் கோரிக்கை வைத்தார் அவருக்கு சொல்லாமலேயே எல்லாம் நடந்து முடிந்தது. இந்த மக்களின் மனம் மாறமுதல், அனுரா வருவார் வாக்கு கேட்க. சரி, செய்து காண்பித்து விட்டு கேட்பதில் தவறில்லை. ஒன்றும் செய்யாமலே வாங்குகளை வாங்கியோரும், வாங்கிக் கொடுத்தோரையும் விட இது பரவாயில்லை. ஆனால் தேர்தல் முடிய வீதியை பூட்டாமல் இருந்தால் சரி. பதவி வரும்போது பணிவும் வரவேண்டும், அப்படி வந்தால் அந்தபதவி நிலைக்கும். நான் வீதியை திறக்கப்போகிறேன் என்று அறிவித்திருந்தால்; தெற்கில் இருந்து ஒரு குழப்ப கோஷ்ட்டி வந்திறங்கியிருக்கும், வடக்கிலிருந்து வசந்தம், சுமந்திரன் போன்றோர் பட்டு வேட்டிகளோடு உரிமை கோரி வந்திருப்பினம். இப்போ, இவர்களே கேட்டுத்தான் அறிதிருப்பினம் இந்த விடையத்தை. அதுவே நல்ல விடையம். இதற்கு ரணில் எதிர்ப்பு தெரிவிப்பார். ரணிலை அன்று புலிகள் தேர்தலில் புறக்கணித்தது தவறு என எத்தனைபேர் பாடம் எடுத்தார்கள். இன்று மஹிந்தவுக்கு பாதுகாப்பு குறைக்கப்படக்கூடாது என கூறுகிறார். எனக்கு வேண்டாம் அவருக்கு பாதுகாப்பு அளியுங்கள் என்கிறார். இதிலிருந்தே அவர் அன்று பதவிக்கு வந்திருந்தால்; என்ன செய்திருப்பார் என்பதை விளங்கிக்கொள்வது ஒன்றும் கடினமில்லை அறிவுள்ளவருக்கு.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
சும்மா இருந்து வாக்கு சேர்க்கிறவர்களுக்கு, தாங்களும் செயல் வீரர் என்று காட்ட இதுகளை எதிர்பார்த்திருப்பார்கள், சம்பவ இடத்துக்கு அழைப்பில்லாமலேயே வலியப்போய் படம் எடுத்து தங்கள் சாதனை என்று சொல்வார்கள். செய்கிறவர்களோ தங்களுக்கு மக்கள் வாக்கு போடுவார்கள் எனும் எதிர்பார்ப்பிலேயே அதிரடியாக தக்க சமயத்தில் இவற்றை செய்கிறார்கள். இதைத்தான் வடக்கின் வசந்தமும் செய்கிறார், வலியப்போய் கூட்டத்தில இருப்பார், படத்துக்கு எட்டி முகம் காட்டுவார், கருத்து சொல்லுவார். அவர் சட்டம் ஒன்றும் படிக்கவில்லை, இனத்தை விற்று பதவி பெறுகிறார். இவர் படித்தவர் என்று சொல்கிறார் கட்சியை உடைத்து, தேசியத்தை விற்று பதவியில் தொடர்ந்து இருக்க பாடுபடுகிறார். தனது பதவியாசையை மற்றவர்மேல் திணிப்பார்.