Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. டக்கிலஸுக்கு மரணதண்டனை அளிக்கப்பட வாய்ப்பிருக்கிறதா? சிலரின் முதலமைச்சர் கனவில் இப்படி மண்ணை அள்ளிப்போட்டு விட்டார்களே. இப்போ யார் யார் சிக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லையே? கடல், விமான நிலையம் எல்லாம் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும். சாண் ஏற நினைக்கும்போது முழம் சறுக்குகிறதே. அனுராவை இப்போதைக்கு ஒழிக்க முடியாது, அப்படி நினைத்தால், நினைப்பவர்கள் அரசியல் கேள்விக்குறியாகும்போல் உள்ளதே!
  2. ம்.... இந்நாள்வரை அளவுக்கதிகமான கைதிகளை அடைத்து வைத்திருக்கும்போது குரல் எழுப்பாத சுரேன் ராகவன், இந்த ஜனநாயக வீரனுக்கு குரல் எழுப்புகிறார். இவர் வடக்கில் ஆளுநராக இருந்தபோது இந்த டக்கிளஸ் செய்த கொலை, கொள்ளை, சுரண்டல், அதிகாரதுஷ்ப்பிரயோகம் பற்றி அறியாமலா இருந்திருப்பார்? ஒருவேளை இவரும் தனது தேவைகளுக்காக இவரை பயன்படுத்தியிருப்பாரோ? சற்றுப்பொறுங்கள் ஆளுநர் அவர்களே! உங்கள் கூட்டாட்சியில் அங்கம் வகிக்கும்போது அவர் நிகழ்த்திய வண்டவாளங்கள் வெளியில் வரட்டும், அவர் அப்படி ஒரு தியாகியல்ல, அவரும் ஏனைய கைதிகள் போலவே சமமாக அடைக்கப்படவேண்டியவர்.
  3. யாழ்ப்பாணத்திலுள்ள தனது சக ஆசிரியரை சந்திக்க வந்த சிங்கள இந ஆசிரியர் அமரசிறி, அவர் சிங்களச்சிப்பாயல்ல.
  4. ஐயோ, இவர் இன்னும் செயல் வீரர் என பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர் என்ன ஜனநாயக வழியிலா செயற்பட்டு கொண்டிருந்தார் இவரை முடக்குவதற்கு? வைத்திருந்த கைதுப்பாக்கியையும் இரவல் கொடுத்து மாட்டுப்பட்டிருக்கிறார். இவர் செய்த எத்தனையோ தீவினைகள் இருக்க இப்படி மாட்டுப்படுவேன் என்று கனவிற்கூட நினைத்துப்பார்த்திருக்க மாட்டார். அவரது துணைக்கரங்களும் மடங்கி விட்டன. செய்த அநிஞாயம், அக்கிரமம், அதர்மம், வினை மட்டுமே இப்போது இவருடன் கூட இருக்கின்றன. அவரை கேள்வி கேட்டு கஸ்ரப்பட்டு விசாரிக்கத்தேவையில்லை, அவருடன் சேர்ந்தியங்கியவர்கள் அங்கே காத்திருக்கிறார்கள் இவரைக்காண, அவர்களை கண்டதும் இவர் உளறத்தொடங்கி விடுவார். ஒரு கேள்வி கேட்டால் சம்பந்தமில்லாமல் ஒன்பது உளறுவது இவரின் வழக்கம்.
  5. மலையக மக்களை குடியமர்த்தி வாழ்வளிக்க முன், தம் தேர்தல் தொகுதியில் உள்ள மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுங்கள் என பாசத்துடன் கேட்டுக்கொள்கிறேன். சுகாதார சுற்றுச்சூழல் கெடுதல் இதை முதல் கவனியுங்கள் சம்பந்தப்பட்டவர்களே!
  6. அடுத்து, வடக்கில் இன்னுமொரு அரசியல் புள்ளி கைது செய்யப்படுவாரென செய்திகள் சொல்கின்றன. அது சிர்த்தாத்தனாக இருக்குமோ? கொலைகார அரசுகளில் கொலைகாரன் மத்திய அமைச்சராக இருப்பதில் என்ன அதிசயம்? இவர்கள் திறமையினாலேயோ, மக்கள் ஆதரவினாலேயோ இவற்றைப்பெறவில்லை, செய்த கொலைகளுக்கு சன்மானம். ஏன் சிவநேசதுரை சந்திரகாந்ததனுக்கு முதலமைச்சர் பதவி எப்படி கிடைத்தது? பலி கொடுக்கப்போகும் கடாவுக்கு மாலை போட்டு, பொட்டு வைத்து, தூபம் காட்டி மரியாதை செய்வதில்லையா? அறிவு கொஞ்சமாவது இருந்திருந்தால் எதிர்காலம் மாறலாமென நினைத்திருக்க மாட்டாரா இந்த மனிதன்? ஜனநாயக வீரர், எங்கே இவரது ஜனநாயகம்? ஏன் இவரது கைதை மக்கள் வெடி கொழுத்தி கொண்டாடுகின்றனர்? அசுரன் அழிந்த நாளென்றா? மக்கள் உண்மையான தீபாபலியை கொண்டாடுகின்றனர். இவரோடு உடனிருந்தவர்கள் இவரை விட்டோடுகின்றனர், சிலர் காத்திருந்து காட்டிக்கொடுக்கின்றனர். இவரது ஜனநாயகத்தில் சாதித்தவை இவை. இவரால் கொல்லப்பட்ட ஆன்மாக்கள் சாந்தியடையட்டும் இவரை பழிவாங்கிய திருப்தியில். இந்த மனிதன் இந விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி எதையும் சாதிக்கவில்லை இந விடுதலைக்காய், அரசியல் செய்தும் இனத்தை அழித்ததுதான் மிச்சம், அதைத்தான் இப்போ அறுவடை செய்கிறார். அன்று புலிகளின் தாக்குதலில் இவர் இறந்திருந்தால்; இத்தனை கொடுமைகளும் வெளிவந்திருக்குமா? ஆண்டு நினைவலைகள் கொண்டாடப்பட்டிருக்கும் இவருக்கு, புலிகள் மேல் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும். ஒருபோதும் மக்களால் நினைவு கூரப்படக்கூடிய மனிதனல்ல இவ(ன்)ர். கர்மம் என்றால்; பாவம், அதர்மம் என்று பல்வேறு பொருள் தரும்.
  7. அதற்கிடையில் மதுஷின் மண்டையில் போட்டுவிட்டார்கள். கையில் விலங்குடன் இருந்த மதுஷ், போலீசாரை தாக்க முற்பட்டபோது போலீசார் திருப்பி தாக்கியதில் மதுஷ் கொல்லப்பட்டார். அவரோடு பல அரசியல்வாதிகளின் ரகசியங்களும் மறைந்தன. இப்போ, டக்கியார் தொடர்வார் மதுஷ் விட்டு இடத்திலிருந்து அல்லது அவரும் மதுஷ் போன இடத்திற்கே அனுப்பி வைக்கப்படுவார். டக்கிளசுக்கு தன் முடிவு எப்படியானது எனத் தெரிந்திருக்கும், அவரே பலருக்கு முடிவுகளை எடுத்தவராயிற்றே. இராணுவம், போலீசில் பல ஊழல்வாதிகளும் கொலைகாரரும் முன்னைய அதிபர் விசுவாசிகளும் உள்ளனர். கம்மன்பில தனது சட்டத்தரணி மேலங்கியை சலவைக்கு கொடுத்துள்ளாராம், அது வீட்டுக்கு வந்தவுடன் களத்தில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவஞானமும் சுமந்திரனும் மிகுந்த வேதனையில் உள்ளனராம், டக்கிளஸ் குற்றமற்றவர் என வெளியில் கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன என ஊர்க்குருவி ஒன்று சொல்லிச்சு. டக்கிளஸ் இவர்களை மாட்டி விட்டாலும் விடலாம் யாரறிவார்? அரசியலில் எதுவும் எந்நேரத்திலும் நிகழலாம். என்னவோ... புது வருடத்தில் நல்ல செய்திகள் வரட்டும்! செய்த "தர்மம் தலைகாக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும், கர்மம் காத்திருந்து கழுத்தறுக்கும்." ஓமோ, இல்லையோ?
  8. தான் கேட்க்கும்போது துப்பாக்கியை திருப்பி தரும்படி மதுஷிடம் கொடுத்து வைத்திருந்தாராம் டக்கிளஸ்!
  9. இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு அரசாங்கம் அவரது சொந்த பாதுகாப்பிற்காக துப்பாக்கி குடுத்துள்ளதாம். உளறுவாயன், அதை இடுப்பில் செருகிக்கொண்டு, என்னோடு யாராவது எதிர்த்து வாக்குவாதம் செய்தால், அவர்களின் மண்டையில் துளை போட்டுவிடுவேன் என்று பகிரங்கமாக உளறிக்கொண்டு திரிகிறார் அதன் விளைவு தெரியாமல். ஆனால் அவரது தற்போதைய சொல் செயலைப்பார்க்கும் போது செய்தாலும் செய்யக்கூடிய ஆள். இவரது தற்போதைய நடைமுறையை வைத்துப்பார்க்கும்போது எப்போ எது பேசுவார், எது செய்வார் என்றும் சொல்ல முடியாது. துப்பாக்கி என்றவுடன் இவரோடும் பெரிய தலைகள் பேரம் பேசலாம், சில பணிகள் தேடி வரலாம், போதைப்பொருள் வியாபாரிகளின் தொடர்பும் கிட்டலாம், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் என திரும்பப்பெறவும் வாய்ப்புண்டு. "அத்தைக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிக்குமாம்." பாதுகாப்புக்கு அளிக்கப்பட்ட துப்பாக்கியால் ஒருவர் இப்போ முழிக்கிறார், இன்னொருவர் எச்சரிக்கிறார் மக்களை.
  10. இவரு(னு) க்கு வகைதொகையின்றி துப்பாக்கிகளை அளித்து, தமிழர் தாயகத்தில் தங்களுக்கு வேண்டாத மக்கள், அரசியற்தலைவர்கள், ஊடகவியலார்கள், சமூக ஆர்வலர் என பல்வேறு கொலைகளை செய்வித்ததும் ஊக்குவித்ததும் முன்னைய ஜனாதிபதிகள் அனைவருமே. வடக்கில் வாள்வெட்டுக்குழு, போதைப்பொருள் குழு வழிகாட்டியும் இவரே(னே). எல்லாம் அந்த பெரிய மனிதர்களின் ஆசீர்வாத்தோடேயே நடந்தன. ஈழமுரசு ஆசிரியர் அற்புதராஜ் அவரது மைத்துனர் சுகிர்தன், நிமலராயன் தொடர்ந்துகொண்டே போகும். றக்பி வீரர் கொலையில் சி. சி. டி. கமரா காட்சி இந்த ஏவல் அடிமையின் காரியாலயத்தில் பதிந்திருந்தது. ஆனால் விசாரணைக்கு அதை கையளிக்க மறுத்து விட்டார்(ன்). காரணம் எஜமானர் விசுவாசம். எஜமானர் பதவியிழந்ததோடு மக்கள் சேவகன் மௌனமானார்(ன்). நான் கூட, பல தடவை நினைத்ததுண்டு, புலிகளின் பொறியில் தப்பிய மனிதன், ஏன் அப்படி ஒரு தவறு நடந்ததென்று, ஒருவேளை இந்தாளுக்கு இதைவிட கொடூரம் நடக்கலாமென தேறிக்கொண்டேன். இப்போ எஜமானர்களை மாட்டி விடுவாரா அல்லது இவர் துப்பாக்கி கொடுத்துவைத்தவர் மாண்டதுபோல் என்கவுண்டரில் போவாரோ தெரியவில்லை. முடிந்தளவு இவரிடமிருந்து பெறக்கூடிய சகல விடயங்களையும் விரைவாக பெற்றுவிட வேண்டும். இவர்(ன்) தமிழர் விரோதி துரோகி. இவர்(ன்) நடத்திய பல நரவேட்டைகளை கண்டு கலங்கியவர்களில் நானும் ஒரு நபர். விடை காணாத பல கொலைகளுக்கு, கொடூரங்களுக்கு, புதை குழிகளுக்கு, இராணுவ அடக்குமுறை காலத்தில் தீவக பாழுங்கிணறு கொலைகள், சித்திரவதைகள், பாலியல் கொடுமைகளுக்கு விடை கிடைக்கலாம் யாரறிவார்? இவர்(ன்) மரணம் பிழைத்துபோனதற்கு மிக முக்கிய காரணமிருக்கலாம். இவரோ(னோ)டு வி. முரளிதரன், சிவநேசதுரை சந்திரகாந்தன், பல இராணுவ புலநாய்கள் சிக்க வாய்ப்புண்டு.
  11. இராணுவ ஒட்டுக்குழு தாடியன், ஜனநாயக நீரோட்டத்தில் நீந்தமுன் பற்றைக்குள் போட்டுவிடு நீந்தப்போக, பாதாள உலக படை அதை களவாடி கொண்டு ஓடிவிட்டது. அதற்காக ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்தவரை கைது செய்வது எந்த வகையில் நிஞாயம்? இதன் பின்னால் விசாரணையில் இவர் செய்த கொலைகள், கொள்ளைகள், மண்கடத்தல், அதிகார துஸ்பிரயோகம் வெளிவந்தால் அதற்கு இந்த இடிஅமீனே விளக்கம் கொடுக்க வேண்டும். அப்போ.. இவனால் படுகொலை செய்யப்பட்டவர்கள் எல்லாம் இவன் நினைவில் வந்து மறைவார்கள், கெஞ்சுவான், அலறுவான். எப்படியெல்லாம் இவனை பார்த்து கும்பிட்டு உயிர் பிச்சை கேட்டிருப்பார்கள், உறவினர்கள் கதறியிருப்பார்கள். கதறக்கதற கலைத்து கலைத்து சுட்டு வீதியில் எறிந்து விட்டு இராணுவ காவலரணில் பதுங்கியிருந்து நோட்டம் வேறு பார்த்தது கொலைக்கும்பல். அன்று இவரோடு இணைந்திருந்தவர்களே இவரை காட்டிக்கொடுக்க ஆவலோடு காத்திருக்கிறார்கள். இராணுவ துணைப்படையில் தனது அடியாட்களை சேர்த்து பணம் பெற்று, ஒரு பகுதியை அவர்களுக்கு அளித்து விட்டு மிகுதியை சுருட்டிக்கொண்டவர். தனது எஜமானர் எல்லாம் தோற்றவுடனேயே இவருக்கு தன் இறுதி தருணம் புரிந்து மௌனமாகிவிட்டார். தப்பித்து விட்டேன் என நினைத்திருப்பாரோ? அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்று அறிவித்தவருக்கு இப்படி ஒரு கஸ்ரகாலமா?
  12. கள்வர் தாம் பிடிபடுவதற்குமுன் தம்மை பிடிப்பவரை தமக்கு அடிபணிய வைப்பது அல்லது அதிகாரத்தை பறித்து வீட்டுக்கனுப்புவது. தமிழரை நிம்மதியாக வாழ விடுவதில்லை என்பதில் கட்சி பேதமின்றி இணைந்து விடுகிறார்கள். இலங்கையில் அரசியல் செய்ய முக்கிய ஆதாரமே தமிழர்தான். அவர்கள் இல்லையென்றால் அரசியல் பூச்சியமே. இதற்கு சிங்கள மக்கள்தான் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இனவாதம் பேசாமல் ஆட்சியை பிடித்தவரே ஒரு இனத்தை வெறுத்து ஒதுக்குகிறார். நாடு முன்னேற வாய்ப்பேயில்லை, இது நாட்டின் சாபக்கேடு. நிற்க, அரசாங்க காணிகள் இருக்கின்றன, விகாரைக்குரிய காணி என்று வேறு சிலவற்றை குறிப்பிடுகிறார்கள் அப்படியிருக்கும்போது ஏன் சைவ ஆலயங்களை குறி வைக்கிறார்கள்? ஒரு இந மக்களின் பண்பாடு, நாகரிகம்,கல்வி, வரலாறு, வழிபாட்டு முறைகளை அழித்துவிட்டால் அந்த இனத்தை எளிதாக அழித்துவிடலாமென திட்டம் போட்டு செயற்படுத்துகிறார்கள். இவற்றை கவனிக்க அரசியல்வாதிகளுக்கு நேரம் காணாது. கட்சி அங்கத்தவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றுவது, கூட்டங்களில் கலகங்களை ஏற்படுத்துவதிலேயே காலத்தை கழிக்கிறார்கள். சட்ட மேதை என்று சொல்லிக்கொள்பவர் யாரும் தலையிடுவதில்லை, பின் மக்கள் தங்களுக்கு வாக்களிக்கவில்லையென குறை கூறுவது. இனஅழிப்பு நடந்ததற்கு ஆதாரமில்லை, இல்லையென்றால் வென்றுவிடுவேன். இதற்கு எல்லா ஆதாரமும் உண்டு ஆனால் என்னிடம் திறமையில்லை வழக்கை வெல்வதற்கு என ஏற்றுக்கொள்ள வரட்டு கௌரவம் விடுவதில்லை.
  13. உங்கள் பெயர்ப்பட்டியலில் என்னையும் இணைத்துக்கொண்டதற்கு நன்றி ஈழப்பிரியன். நான் விளையாட்டை ரசித்து பார்ப்பதுண்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம். ஆனால் போட்டியில் கலந்துகொள்ளும் ஆர்வமில்லை, அதனால் என்னை மன்னிக்கவும்.
  14. சம்பந்தர் போட்ட பிச்சையில், சுமந்திரன் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினரானார், அதை மறந்து தலைவரையே விமர்ச்சிக்கலானார், அவர் மறைவுக்குப்பின் அரசியல் அனாதையானார், விட்டபாடில்லை, கத்தி எடுத்து உறுப்பினரை வேட்டையாடுகிறார். கடந்தகால யாழ் மேயர் போட்டியில் சுமந்திரன் என்ன தந்திரம் செய்து ஆனோட்டை தோற்கடித்து மணிவண்ணனை வெற்றியாளராக்கினார் என்பதை யாரும் மறந்திருக்கலாம். தனக்கென்றால் வாதாடும் சட்டத்தரணி, மற்றவர்க்கென்றால் தீர்ப்பெழுதும் நீதிபதி. அதுசரி... எல்லா அரசியல்வாதிகளும் ஏதோ ஒருவகையில் ஊழல் செய்தவர்கள் தான், மக்களை ஏமாற்றியவர்கள் தான், கொள்கையை மீறி நடந்தவர்கள்தான். அப்படியிருக்கும்போது கட்சி பேதமின்றி சிறிதரனை எல்லோரும் குறிவைப்பது ஏன்? அனுராவையும் கட்சி பேதமின்றி விமர்ச்சிக்கிறார்கள்? ஒருவரும் தங்கள் குறைகளை ஏற்றுக்கொள்வதில்லை, மற்றவரை விமர்ச்சிப்பதால் தங்கள் குறைகள் மறைந்துவிடும் என நினைக்கிறார்களோ?
  15. இங்குதான் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும், அவை நாகரிகம் தெரியாமல் ஒருவருக்கொருவர் மரியாதை பாடம் எடுத்தார்கள். ஒருவரையும் பேசவிடுவதில்லை, நேரத்தை வீணடித்து, கலகம் செய்கிறார்கள். இவர்கள் தங்களுக்குள் அடிபடவே நேரம் காணாது இதற்குள் எப்படி மக்களுக்கு சேவை செய்வார்கள்? ஒருவரை சஜித் தேர்தலில் கொழும்புத் தொகுதியில் போட்டியிட அழைத்துள்ளாராம். ம்... அவருக்குரிய வைத்தியசாலை அருகில் இருப்பதால் சுலபமாக அனுப்பிவிடலாமென நினைத்து அழைத்தாரோ என்னவோ? ஒரு நாள் பாத்தால் நாமலை புகழ்வார், மறுநாள் சஜித், இன்னொருநாள் அனுரா. நாளும் பொழுதும் ஒவ்வொரு வம்பில மாட்டுப்படுவதும், அநாகரிக வார்த்தை பிரயோகம், ரவுடிசம். இதில மற்றவர்களுக்கு பாடம் நடத்துகிறார். அவர் தொழிலிலும் கரை சேரவில்லை, பாராளுமன்ற உறுப்பினராகவும் எதுவும் சாதிக்கவில்லை. நேரம் ஒரு கதை, எல்லோரையும் கிண்டல். ஆனால் அந்த மக்களின் வாக்கினாலேயே பாராளுமன்றம் போனார் அவர். கல்வித்திறமையினாலோ, தொழிற்திறமையினாலோ அல்ல. நன்கு கற்று தேர்ந்தவர் மற்றவரை ஏளனம் செய்ய மாட்டார்.
  16. என்னது இருந்தாற்போல் இவருக்கு இவ்வளவு கரிசனை? வெளிநாட்டு மத்யஸ்த்தோடு நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் இவர் பங்குபற்றியிருந்தார், நீதியமைச்சராக இருந்திருக்கிறார், அழிப்பு வேலை செய்த அரசாங்க கட்சிகளில் முக்கிய அமைச்சராக இருந்திருக்கிறார், கல்விமான் வேறு. அப்போதெல்லாம் வராத கரிசனை, இப்போ எப்படி வந்தது? சரி, இதையெல்லாம் எழுதி எதை மாற்றியமைக்கப்போகிறார்? ஓய்வு பெற்றபின் வயதான காலத்தில் துடிப்போடு இருக்க இப்படியெல்லாம் புத்தகம் எழுதுகிறார்களோ?
  17. கொஞ்ச நாளாக இவரின் தியாக, வீர பேச்சுக்களை காணோமே என்று ஏங்கினேன், இன்றைக்கு விடை கிடைத்து விட்டது. இவர்களை தன்னோடு சேர்க்கவும் மாட்டார், தன்னை எதிர்க்கவும் விட மாட்டார் அனுரா. சும்மா எச்சரிப்பு மட்டுந்தான்!
  18. இந்த விகாரை மொட்டுக்கட்சியினருக்கு கௌரவப்பிரச்சனை. அவர்களே இதை பின்னின்று நடத்துகிறார்கள். இவர்களது கட்சியை சேர்ந்த 02 இராணுவ முகாமின் புலனாய்வு துறைக்கு பொறுப்பான அதிகாரியே இதன் பின்னால் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. திஸ்ஸ விகாரை அகற்றப்பட்டால் பொறுமையாய் இருக்க மாட்டோம் என சரத் வீர சேகர எச்சரிக்கிறார், அனுரா புலம்பெயர்ந்தவர்களுடன் உடன்பாடு செய்து இராணுவ முகாம்களை அகற்றுகிறார், திஸ்ஸ விகாரையை அகற்றப்போகிறார், நாட்டில் பௌத்தத்துக்கு சுதந்திரமில்லை, கொழும்பில் சைவ ஆலயங்கள் இருக்கின்றன, வடக்கில் பௌத்தத்திற்கு சுதந்திரமில்லை என இன்னொரு மொட்டுக்கட்சி அமைச்சர் அப்பட்டமான பொய் கூறுகிறார். சஜித்தும், அரசும் சர்ச்சைக்குரிய திஸ்ஸ விகாராதிபதிக்கு உயரிய அதிகாரங்களை வழங்கும் தலைமைச்சங்க நாயகராக தெரிவு செய்கின்றனர். கொழும்பில் சைவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் தங்கள் வழிபாடுகளை நிகழ்த்துவதற்கு தங்கள் காசில் நிலம் வேண்டி உரிய அனுமதி பெற்று ஆலயங்களை அமைக்கிறார்கள் வழிபடுகிறார்கள். வடக்கில் எழும் விகாரைகள் அப்படியா? தையிட்டியில் நிலைமை அப்படியா? அங்கு பௌத்தர்கள் வாழ்கிறார்களா? எதற்காக மக்கள் காணியில் விகாரை, யாருக்காக? இராணுவ நிலங்கள், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள நிலங்கள் சரத் வீரசேகரவுடையதா? அல்லது மொட்டுக்கட்சியுடையதா? அதைப்பற்றி கதைக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இப்படி புலம்பெயர் தமிழரை சொன்னால் அனுரா கேட்டுக்கொண்டு அடாவடியாக நடக்கமுடியுமா? சட்டம், நீதி சொல்வதை செய்வதற்கு புலம்பெயர் தமிழர் கதை எதற்கு? பயங்கரவாதச் சட்டம் எதற்கு இன்னும் அமுலில் இருக்கிறது? அது தமிழருக்கு, உரிமையை கேட்பவருக்கு எதிராகவா? இப்படி ஒற்றுமையை அழிக்கும் பேச்சுக்களை பேசும் நபர்களுக்கு எதிராக ஏன் பாவிக்கவில்லை? அப்போ திஸ்ஸ விகாரை அகற்றப்படாதென்றால், இன்னும் பல விகாரைகள் வடக்கில் எழும். அனுரவுக்கெதிராக எல்லா அரசியல் கட்சிகளும் செயற்படுவதால், இவர் பயந்து விட்டாரா? அல்லது தமிழருக்கெதிராக இவரும் மற்றைய கட்சிகளோடு இணைந்துவிட்டாரா? ஒரு இனத்தை அடக்கி, அவர்களது நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டு எப்படி மூவினங்களும் ஒற்றுமையாக இந்த நாட்டில் வாழ முடியும் என அனுராதான் விளக்க வேண்டும். ஒரு இனத்தின் உரிமைகளை, நிலங்களை பறிப்பது நல்லிணக்கத்திற்கு குந்தகமா? அல்லது அடாத்தாக பறித்ததை திருப்பி கேட்பதால் நல்லிணக்கம் கெடுகிறதா என இவர்களது ஆசிரியர்கள், சட்டம், நீதி இவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இவர்களது மதமோ, இனமோ, சட்டமோ, நீதியோ எதற்குமே எது சரி என தெரியாது.
  19. ஐம்பத்து மூன்று வருடமாக யாழ்ப்பாணத்தில் இருக்கும் இவருக்கு கிடைக்காத பதவி பத்து வருடமாக இருந்த திஸ்ஸ விகாராதிபதிக்கு கிடைத்த பொறாமையாக இருக்கலாம். இந்த விகாரை நிர்மாணித்தது வடக்கின் சங்க நாயக்க தேரருக்கு தெரியும். பொதுமக்களின் காணிகளில் அமைக்கப்படுகிறது என்பதும் தெரியும், அனுமதி பெறாமல் அமைக்கிறார்கள் என்பதும் தெரியும், மதக்குரோதத்தை வளர்பதற்காகவே இது நடைபெறுகிறது என்பதும் நன்றாகவே தெரிந்திருக்கிறது இவருக்கு. ஏனென்றால் ஐம்பத்து மூன்று வருடம் இந்த மண்ணில் இவர் இருக்கிறார், விகாரைக்குரிய காணி தன் பெயரில் இருந்ததாகவும் இவரே முன்பு கூறியிருக்கிறார், அந்த தேரர் தனது பிழைப்புக்காக இந்த விகாரையை நிர்மாணித்ததாகவும் கூறியிருக்கிறார், அப்போதெல்லாம் மௌனமாக இருந்தவர், அதை பற்றிப்பேசாதவர், தடுக்கத்தவறியவர் இப்போ எதற்காக பேசுகிறார்? அப்போ பேசியிருந்தால் எவ்வளவோ நன்மையாக இருந்திருக்கும். இப்போ தன்னுடன் வேண்டுமாம். பேசினால் விகாரை அகற்றப்படுமா?
  20. ஆவணங்கள் இல்லாமற் போனதற்கும் மக்கள் சொந்த இடங்களை விட்டு குடிபெயர்ந்ததற்கும் யார் காரணம் என்பதையும் விளக்கலாம். அனுமதி பெறாமல் கட்டிய தனியார் கட்டிடங்களை இடிக்க மட்டும் உங்களுக்கு உரிமை சட்டம் உண்டா? யார் மோதல்களை உருவாக்குவது? தம்புள்ள நகரிலிருந்து முப்பது ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்திரகாளி அம்மன் ஆலயத்தை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டதாக பௌத்த பிக்குகள்செய்த முறைபாட்டுக்கமைய இரண்டாயிரத்து பதின்மூன்றாம் ஆண்டு ஒரே இரவில், முழுமையாக கோவிலை மூடுவதற்குமுன் செய்ய வேண்டிய மதச்சடங்குகளை செய்வதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையையும் மறுத்து இடிக்கப்பட்டது ஏன்? எந்த கட்சிஆட்சியமைத்தாலும் , மதமானாலும் இனமானாலும் சட்டம் ஒன்றுதான், யாவருக்கும் சமந்தான். திருகோணமலையில் விட்ட தவறு இப்போ திஸ்ஸ விகாரையில் வந்து நிற்கிறது, இது தொடர்ந்து ஆட்சி கவிழ்ப்பில் முடியும். அவர்கள் சோதனையில் வென்று விட்டார்கள். அனுரா தோற்றுவிட்டார் இது ஒன்றே போதும் இவரின் தோற்றுப்போன அரசியலுக்கு. இந, மத விரோதிகளுக்கு அடிபணிந்து விட்டார். நீதிமன்றத்தையும் சட்டத்தையும் மதிக்கவில்லை, பின் மக்களுக்கு எப்படி முன்மாதிரி காட்டுவார்? முன்னைய அரசாங்கங்களை விமர்சிக்க, தண்டிக்க இவருக்கு தகுதியுண்டா?
  21. இந்தச்சம்பவத்தை விமர்சித்து, சில அரசியல்வாதிகள் தாங்களே தமிழ் மக்களின் உண்மையான ஏக பிரதிநிதிகள் என உருவெடுக்க முயற்சிக்கின்றனர். நாளொரு வம்பில் மாட்டிக்கொண்டு, அதை மாற்ற தமிழர் போராட்டங்களையும் நிஞாயங்களையும் கேலி பண்ணி, எந்த அரசியல் கட்சியில் இணையலாமென தூண்டில் போடுகின்றனர். அதற்காக சிங்களம் செய்யுமெதையும் வேடிக்கை பார்க்கவேண்டுமென ஆலோசனையும் கூறுகின்றனர். இந்த அடாவடிகளை ஆமோதித்து மக்களை மூளைச்சலவை செய்கின்றனர். சிலரின் உணர்ச்சி பேச்சுகளுக்கு புலம்பெயர்ந்தோர் மயங்கி இவர்களுக்கு பணம் அனுப்பி இந்தக் கோமாளிகளை உசார் படுத்தக்கூடாது. நீதிமன்றத்தை நாடட்டாம். நீதிமன்றத்தை நாடாமலா மக்கள் போராடுகிறார்கள் இவ்வளவுகாலமும்? யார் நீதிமன்றத்தை மதிக்கிறார்கள்? ஒருவருக்கு சொந்தமான காணியை அடாத்தாக பிடித்து, அனுமதியில்லாமல் விகாரை கட்டி, சொந்தக்காரரை அதிகார, ஆயுத பலம் கொண்டு தாக்குவதும், நீதிமன்றத்தை அவமதிப்பதும் இவருக்கு தெரியாமல், தனக்கு பின்னால் இழுத்துக்கொண்டு திரியும் அந்த இளம் சட்டத்தரணியை பிரபல்யமாக்க ஏதோ நடவாத ஒன்றை இவர் அறிமுகப்படுத்துவதுபோலவும், தான் சொன்னால் போலீசார் கேட்டுவிடுவார்கள் போலவும் கதையளக்கிறார். அந்தப் பிரச்சனையின் வரலாறு தெரியாதவர், மக்களின் பிரச்சனைக்காக அவர்களின் பிரதிநிதிகள், அனுமதி பெறாமல் கட்டிய கட்டிடத்திற்காக அந்தத் துறையும் அமைதியான முறையில் போராடுகிறார்கள், அதை வன்முறையாக்குவது போலீசார். ஏதோ அவர்கள் பொலிஸாருக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுகிறார்கள், ஏனென்றால் அசைலம் அடைவதற்காக என்று கேலி வேறு. ஏன் இந்தப்பெண் கோமாளிக்குப்பின்னால் அலைந்து, தனது எதிர்காலத்தையும் பெயரையும் வீணடிக்கிறது? நாளும் பொழுதும் சட்டத்தை மதிக்காமல், வீண் வம்பில் மாட்டுப்பட்டு போலீஸ், நீதிமன்றம், பிடியாணை, சரண் என்று அலையும் இவர், மக்களுக்கு ஆலோசனை. இவர் வாயால் வீராவேசம் பேசுவார், அவர் பேசுவது என்னவென்று இவருக்கே தெரிவதில்லை. மறுநாள் வேறொன்று பேசுவார். மக்கள் தங்கள் காணி தங்களுக்கு வேண்டுமென்று போராடுகிறார்கள். அவர்களிடம் உறுதியில்லை, வழக்கு போடவில்லை, நல்லூர் கோயில் எங்கே இருந்தது? இப்போ எங்கிருக்கிறது? என்கிற விசர்த்தனமான கேள்வி. இதுதான் மக்கள் பிரதிநிதியின் பொறுப்பா? எங்கிருந்தோ வந்து பிரச்சனையை உருவாக்கி, நாட்டில் வன்முறையை தூண்ட வருகிறார்கள். அதை கேள்வி கேட்க வக்கில்லை, மக்களை, போராடுபவர்களை குறை கூறிக்கொண்டு. மக்களுக்காக குரல் எழுப்ப வேண்டும் இல்லையேல் ஒதுங்கியிருந்த நடக்கிறதை பார்க்கவேண்டும். இதில சஜித் கேட்டாராம் இவரை கொழும்பில் தேர்தலில் போட்டியிடச்சொல்லி. அவர்களே, ஒரு பைத்தியத்தை வடக்குமக்கள் பாராளுமன்றம் அனுப்பியிருக்கிறார்கள் என்று கேலி செய்கிறார்கள், இதில யாழ்ப்பாணத்திற்கு கௌசல்யாவை நியமித்துவிட்டு கொழும்பில் கேட்கலாமாம். பாவம் அந்தப்பெண்ணின் விதி, அரசியல் ஆசையால் தன் தொழில் வளர்ச்சி, எதிர்காலத்தை விட்டு இவர் விடும் தவறுகளை சுட்டிக்காட்ட பயந்து, இவரின் அடாவடிகளை சகித்துக்கொண்டு திரிகிறார். அந்தப்பெண் பக்கத்திலிருக்கும்போதே சட்டத்தை மதிக்காமல், மீறுகிறார், இடையூறு செய்கிறார், அடாவடி செய்கிறார், அநாகரிகமான வார்த்தைப்பிரயோகம். அதை தடுக்க, தவறை சுட்டிக்காட்ட அந்த வக்கீலால் முடியவில்லை. இதில மக்களுக்காக வாதாடப்போகிறாராம்?
  22. புலம்பெயர்ந்தோர் சிலர், மலையக மக்களுக்கு காணி, வீடு வழங்க இருப்பதாக சிலர் கூறிக்கொள்கின்றனர். அவர்களை காணி வங்கி என்கிற அமைப்பின் கீழ் பதியுமாறும் அவ்வாறான காணிகளை காணி தேவையானவர்களுக்கு அளிக்கப்படுமாம் அதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமாம் என்று கூறிக்கொள்கின்றனர். அப்படியானால் சிங்களவரும் விண்ணப்பிக்கலாம் அல்லவா? அப்படி விண்ணப்பித்து அவர்களுக்கு மறுக்கப்பட்டால் அதன் விளைவு என்னவாக அமையும்? உண்மையிலேயே வடக்கிலேயே பலர் காணியின்றி, வீடின்றி, குடிசைகளிலும், ஓட்டை வீடு, ஒழுகும் கூரை, பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்கள் வாழ்கின்றன, காணி இருந்தும் வீடு கட்ட இயலாத நிலைமையிலும் வாழ்கிறார்கள். அவர்களை கவனிக்க யாரும் நினைப்பதில்லை.
  23. பிந்திய செய்தி ஒன்று வாசித்தேன். யாழில் கடமையாற்றும் ஒரு இராணுவ அதிகாரியே இந்த திஸ்ஸவிகாரை பிரச்சனையை ஊக்கப்படுத்துவதாகவும், அவர் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்றும், அரசாங்கம் இதில் கவனமெடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இலங்கையில் எந்தத்துறை ஊழியர்களும் அரசியல்வாதிகளும் அனுராவுக்கு ஆதரவு தெரிவிப்பது கஸ்ரம். காரணம்; ஊழல், அதிகார துஸ்பிரயோகம், வேலைசெய்யாமல் ஊதியம், கையூட்டு பெறுவது, யுத்தக்குற்றம் புரிந்த இராணுவத்தினர், ஊழல் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுவர் என அறிவித்துள்ளார். இந்த குற்றங்கள் நேற்று முழைத்தவை அல்ல, கடந்த அரசியல்வாதிகள் வளர்த்து குளிர் காய்ந்தவை. இதனால் பலரும் வேலையிழப்பு, தண்டனை, சிறை, அரசியல் அஸ்தமனம் என எதிர்நோக்கவேண்டியுள்ளது. கடந்த அரசாங்கங்களில் தண்டனை, சோதனை, கேள்வியில்லை. அவர்களின் வாழ்வு வசந்தமாக இருந்தது. இப்போ இந்த நெருக்கடியை எதிர்கொள்ள அவர்களுக்கு முடியவில்லை. வன்முறையை தூண்டி, நாட்டை கொழுத்தி, அரசியலை பிடித்து அதில் குளிர் காய்ந்தவர்கள் எப்போதும் போல் ஒரு இனக்கலவரத்தை உருவாக்கி அரசியலை தட்டிப்பறிக்க புத்தரை பாவிக்கிறார்கள். என்னதான் கூத்தாடினாலும், நாமல் ஜனாதிபதியாகப்போவதில்லை. அனுராவை விரட்டவும் முடியாது, நன்றோ தீதோ அவருக்கு கொடுக்கப்பட்ட காலம்வரை அவர் ஜனாதிபதியாக தொடர்வார். பின்னர் அவர் செயற்படும் முறையைப்பொறுத்து மீண்டும் தொடர மக்கள் அனுமதிப்பர் அல்லது வீட்டுக்கு அனுப்பப்படுவார். வீணாக தேவையற்ற வன்முறைகளை தூண்டி, சிக்கலில் மாட்டுவர் யாராக இருந்தாலும். அனுரா இனியும் காலந்தாழ்த்தாமல் இந்தக் குற்றவாளிகளை பிடித்து கூண்டில் அடைக்க வேண்டும். இல்லையேல் இதுகள் சும்மா இருகாதுகள், நாட்டுக்கு நல்லது செய்யவும் விடாதுகள், இதன் பின்னால் இருப்பவர்கள் வெகு விரைவில் தாங்கள் விரித்த வலையில் விழுவர். தங்கள் விதியோடு விளையாடுகிறார்கள்.
  24. ஐயோ! இந்த கோமாளியின் தொல்லை தாங்க முடியவில்லை, திஸ்ஸ விகாரையை இடிக்க முதல் நல்லூர் கோயிலையும் தேவாலயத்தையும் இடிக்கட்டாம். முந்தைய நல்லூர் கோயில் இருந்த இடத்தில தேவாலயம் இருக்காம், இப்போதைய நல்லூரின் மூலஸ்தானத்தில் இஸ்லாமிய கட்டிடமாம். நல்லூர் கோயிலை போலீசார் மறித்தால் நாங்கள் சும்மா இருப்போமா என்கிறார், பிறகு தான் அப்படி சொல்லவில்லை என்று பெண்களுடன் சண்டைக்கு போகிறார். நீங்கள் மக்களா? நக்குபவர்கள் என்று தரக்குறைவாக பேசுகிறார். தேசியத்தலைவர் தன் தெய்வம் என்பவர், அவருக்கு எதிரான செயல்களும் அருவெறுப்பான பேச்சுகளும் பட்டிக்காடு மாதிரி பேசுகிறார். இவரெல்லாம் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்? ஒரு பைத்தியத்தை பாராளுமன்றம் அனுப்பியிருக்கிறார்கள் என்று சிங்களவர் சொன்னது சரிதான். ஒவ்வொருநாளும் ஏதோ ஒரு வம்பில் மாட்டிக்கொள்கிறார், மக்களுக்கு எங்கே சேவை செய்யப்போகிறார்? மக்கள் அமைதியான முறையில் போராடுகின்றனர், விகாரையை தாக்குகிறார்கள் என்பது போலவும், அந்த போராட்டம் தேவையற்றது, அபிவிருத்திக்காக, ரோட்டுபோடச்சொல்லி போராடலாமாம். அப்போ சிங்களவன் எங்கு வேண்டுமானாலும் விகாரை கட்டலாமென்கிறாரா? மக்களது தேவை, கவலை தெரியாத மனிதன், கடைசியில் மக்களாலேயே துரத்தியடிக்கப்படப்போகிறார். திஸ்ஸ விகாரை காணியில் என்ன நடக்கிறது என்பதே இவருக்கு தெரியாது, கருத்து சொல்கிறார். நீதிமன்றம் போகவேண்டுமாம், தான் இலவச சட்டத்தரணி ஏற்பாடு செய்து தருகிறாராம் ஆனால் உரிமையாளர் வருகிறார்கள் இல்லையாம். சிரிப்பாக இருக்கிறது, அனுமதி பெறாமல், பொது மக்களுடைய காணியில் எழுப்பப்பட்ட விகாரை, அதற்கு தடை நீதிமன்றம் போட்டிருக்கு, அதையும் மீறி செயற்படுகிறார்கள். அது தெரியவில்லை இவருக்கு, விகாரையில் கை வைத்தால் சிங்களவர் கொதித்தெழப்போகிறார்களாம். அனுமதியில்லாமல் பெறாமல் கட்டிய விகாரையை அனுமதியில்லாமல் உடைக்க முடியாதாம். இவர் பாராளுமன்றத்தில நின்று தேவையில்லாமல் கூவும்போது சிங்களவர் கொதிக்க மாட்டார்கள் என்றா கூவுகிறார்? உண்மையாகவே இந்த மனிதனுக்கு தலையில ஏதோ பிரச்சனை. வைத்தியசாலை பிரச்சனையை வைத்து பாராளுமன்றம் போனவர், அந்தப்பிரச்சனையை தீர்த்தாரா? அதை விட்டு வேறு பிரச்சனை பற்றி பேசுகிறார். மக்கள் போராடக்கூடாதாம், அப்போ இவருக்கு ஆதரவாக மக்கள் தெருவில் நின்று போராடும்போது இவர் என்ன செய்து கொண்டிருந்தார்?
  25. இந்தியாவும் சீனாவும் ஒன்று சேர்ந்து அமெரிக்காவுக்கெதிராக செயற்பட வாய்ப்புண்டா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.