Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. ஆங் அப்படியொரு நிலை இருக்கா? இல்லை வருமா? சர்வதேச அளவில் இந்தியாவின் இருப்பு தளர்ந்து வருகிறது, அதில இவர்கள்தான் இந்தியாவை தூக்கி நிலைநிறுத்துகிறார்கள். இத்தனை தமிழரை அழித்து தமிழரின் இருப்பை கேள்விக்குறியாக்கியதே இந்தியாதான், அதை அனுரா வெளிப்படையாகவே கூறியுள்ளார். அவருக்கு இவை இந்தியாவை கதாநாயகனாக காட்ட வேண்டிய தேவை.
  2. சுடலை ஞானம் பேசுகிறார் அம்மணி. இவர் ஆட்சி நடத்தும்போது தமிழரை சொந்த இடங்களில் இருந்து விரட்டியடிக்காமல் நல்லாட்சி நடத்தியிருக்கலாம். அன்று விதைத்ததை இன்று அறுக்கிறார் கவலையோடு. இனி கவலைப்பட்டு என்ன பிரயோசனம். "ஏழை அழுத கண்ணீர் ஏழு தலைமுறைக்கு." "ஏழையின் கண்ணீர் கூரிய வாள் போன்றது." அறுத்தே தீரும். ம், வைத்தியசாலை, ஆலயம் என்று பாராமல் விரட்டி விரட்டி அடித்தீர்களே. இப்போ உங்களுக்கு சிகிச்சை. உங்களுக்கும் சந்தர்ப்பம் உண்டு கவலைப்படாதீர்கள். இந்த குற்றங்கள் எல்லாம் இன்று நேற்று நடந்தவையல்ல, உங்கள் ஆட்சி காலத்திலும் நடந்தவையே, நீங்களும் அவற்றிற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்காக நீங்களும் பொறுப்புக்கூறவேண்டும். யாருமே ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்ப விரும்பவில்லை. ஊழலிலேயே வாழ்ந்து, ஊக்குவித்து வளர்த்து விட்டவர்கள். அதற்காக நீங்களும் தண்டிக்கப்பட வேண்டியவரே. ஊழலை ஒழிக்காமல் எப்படி நல்லாட்சி செய்வது என்றும் சொல்லலாமே. பிச்சைக்காரரெல்லாம் ஆட்சி நடத்திய நாடு இதுவாகத்தான் இருக்கும். எல்லா ஜனாதிபதிகளும் வீடு இல்லை, வாழ வழியில்லை என்கிறார்கள். ஆனால் ஆட்சியை பிடிப்போமென்றும் சூழுரைக்கிறார்கள்.
  3. சுமந்திரனின் அனுதாபி, அபிமானிகள் அப்பப்போ வந்து கருத்து வைப்பார்கள்!
  4. அதைத்தாங்கய்யா எல்லோரும் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அப்பப்போ சொல்கிறீர்கள்.
  5. நாட்டுக்கு நாடு வேறுபடுவார்களென நினைக்கிறன். அலுப்புத்தட்டாது, ஆர்வத்தை தூண்டும் அழகிய எளிய வசன நடை. மற்றவரை நோகடிக்காது அவர்களையும் அரவணைத்து எழுதும் உங்கள் மனநிலை எழுத்தில் தெரிகிறது. வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் எழுத்துக்கள்.
  6. நடவாது என்று சொல்வார்கள்...... பின்னாளில் அது நடந்து விடும். நடந்த கதைகளுமுண்டு,
  7. கள்ளர் கூட்டத்தலைவனை சந்தித்து அடுத்த கட்ட திட்டம் பற்றி யோசிக்கிறார்கள். ஒருபுறம் பிச்சைப்பாட்டு, மறுபுறம் வீரப்பேச்சு. எத்தனை நாளுக்கு மக்களை கூட்ட முடியும்? கூட்டம் கலையும் முன் ஏதாவது திட்டம் தீட்ட வேண்டுமே. இந்தளவுக்கு தெருவுக்கு வருவோமென எந்த அரசியல் வாதியும் நினைத்திருக்க மாட்டார்கள். அனுரா அரசியல் கதிரைக்கு வந்தவுடன் சவால் விட்டவர், அச்சுறுத்தியவர்கள் இப்போ தம்மை காப்பாற்ற கூடுகின்றனர். இத்தனை பிச்சைக்காரர்களை மக்களே போசித்துள்ளனர் இவ்வளவு காலமும். உதயன் கம்மன் பில சொன்னார், "நாங்கள் உழைத்துச்சாப்பிடவில்லை , 1950 ல் இருந்து கடன் வாங்கியே வாழ்ந்தோம்." ஆனால் உண்மை அதுவல்ல. சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து நாட்டை கொள்ளையடித்து விருந்துண்டார்கள். அதற்கு தமிழரை விலையாக காட்டி, ஏழை மக்களை ஏமாற்றினார்கள். மீண்டும் வெட்கமில்லாமல் அந்த மக்களிடம் தஞ்சசமடைகிறார்கள் இராணுவத்தின் பின்னால். இவர்களின் பழிகளை இராணுவம் சுமக்கிறது. இராணுவம் தம்மை புனிதப்படுத்த வேண்டுமென்றால்; குற்றவாளிகளை அடையாளம் காட்டி தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும். எத்தனை கலந்தான் ஏமாற்றுவார் நாட்டை?
  8. எனது கருத்தும் அதுவே. அப்படி இந்தியா அச்சப்பட்டு அதை தடுக்க முயற்சித்தால், தானாகவே அந்த முடிவை நோக்கி மாநிலங்களை தள்ளுகிறது. எவ்வாறெனினும் அது ஒருநாள் நடக்கத்தான் போகிறது.
  9. இவரின் ஒரு சகோதரியின் கணவர் தமிழர். அவர்தான் அந்த தமிழர். அவர் பெயரில் மஹிந்த வாங்கி வைத்திருக்கலாம். இப்போ, தனது வீட்டை தமிழர் ஒருவர் தனக்கு தருவதாக அனுராவுக்கு கடுப்பேற்றுகிறார். மைத்துனர் என்பதை விட, தமிழர் என்று சொல்வதில் பெருமை போலும். இன்னுமா இவரை சிங்களமக்கள் நம்புகிறார்கள்?
  10. நாமல், நூறு மில்லியன் சொத்து காட்டியுள்ளார். காட்டாதது, மறைத்தது, பதுக்கியது எவ்வளவோ? அவர் என்ன தொழில் செய்தார்? பதிலில் உண்மையில்லை சொதப்புகிறார். மனைவியின் சொத்து, அதை பிரித்து அறியதெரியாதவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள் என்கிறார். தன் பெயரில் உள்ள சொத்து என தானே அறிவித்துவிட்டு, பிரித்தறியதெரியாதவர்கள் என்கிறார். இப்போ மனைவியின் சொத்து விசாரணை செய்துவிட்டால் தெரிந்து விடும். நாமலே மனைவியின் சொத்தை பிரித்தறிய அழைப்பு விடுகிறார். இது இருக்க, அவரின் தம்பி புலம்புகிறார், மற்றவர் நினைப்பதுபோல் மஹிந்த குடும்பத்திடம் ஒன்றுமில்லையாம். மற்றவர், இவர்களிடம் இருப்பது எது என்று சொன்னார்களா? அவர்களுக்கு வீடு வழங்க வேண்டுமென்றுதான் நினைக்கிறார்கள். இவர், கார் இல்லையாம், வீடு இல்லையாம், அரசாங்க கார் அல்லது வேறு யாரிடமாவது தானாம் இரவல் கார் வாங்குவார்களாம். அம்மா மோசடி செய்து நிலங்களை கொள்வனவு செய்து இப்போ முழிக்கிறார். தனது தந்தை எப்போதும் சொல்வாராம், பிறர் உழைப்பில் நாம் வாழக்கூடாது, உழைத்து வாழ வேண்டுமென்று. அப்போ, காலம் பூராவும் மக்கள் பணத்தில் சுகபோகம் வாழவேண்டுமென்று அடம்பிடிப்பதும் கோரிக்கை வைப்பதுமேன்? தனக்கு வாழ வழியில்லையாம், படிப்பு சொல்லிக்கொடுக்கிறாராம் அதுவும் சும்மாவாம். எந்தப்பாடசாலையில் என்று சொல்லவில்லை. வாழ வழியில்லாதவர் சும்மா கற்பிக்கிறாராம். பகிடியாய் இல்லை? இவர்கள் வங்கிக்கணக்கில் எவ்வளவு கோடி, எவ்வளவு கோடி சொத்து, எத்தனை கோடி மதிப்புள்ள கார்கள் வெளிவராமலா போகும்? அப்போ என்ன சொல்லப்போகிறார் இவர்? இவர்களை வெளியில் விட்டு வைத்தால் யாரையும் விட்டு வைக்க மாட்டார்கள். இவர்களின் பேச்சை இன்னுமா மக்கள் நம்புகிறார்கள்? தானாக வந்து பொறியில் தலை மாட்டும்வரை அனுரா பொறுத்திருக்கிறாரா அல்லது பொறி வைத்து காத்திருக்கிறாரா? ஏதோ ஒன்று வெகு சீக்கிரம் நடைபெற போகிறது. மின்சார சபை ஊழியரை யாரோ இயக்குகிறார்கள். அந்த இயக்குனரை கைது செய்தால், பின்னால் இயங்குபவர்கள் வெளியில் வருவார்கள். மக்களுக்கு இவர்களின் சொத்துக்களையும் பினாமிகளையும் விரைவில் வெளியிடுங்கள். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் அவர்கள் சாதகமாக்கிக்கொள்வார்கள்.
  11. ஒரு கள்ளனை கைது செய்தால், பல கள்ளர் பதறியடித்துக்கொண்டு தெருவில் இறங்கி கதறுகிறார்கள், வாழ வழியில்லை என்று பிச்சைப்பாட்டு பாடுகிறார்கள், மக்களை கூட்டுகிறார்கள், சட்டத்தை நீதிமன்றத்தை விமர்ச்சிக்கிறார்கள் ஏன்? ஒரு கள்ளனுக்கு பின்னால் பல கள்ளர் மறைந்திருக்கிறார்கள். அந்தக் கள்ளனை பாதுகாத்தால் தாம் அகப்படப்போவதில்லை பாதுகாப்பாக இருக்கலாமென நினைக்கிறார்கள். சூழ்ச்சி செய்து அரசை கவிழ்க்க முயற்சிப்பார்கள். முடியாவிட்டால், தாம் அரச சாட்சிகளாக மாறி ஒப்புதல் வாக்குமூலம் அளித்து தம்மை காப்பாற்றிக்கொள்வார்கள். கள்ளரின் தலைவன் நிலை என்ன?
  12. மக்களுக்காக மக்களால் அமைக்கப்பட்டு, பிரதிநிதிகளை தம் சார்பாக தெரிந்தெடுத்து, தமது பிரச்சனைகளை பாராளுமன்றம் எடுத்துச்சென்று தீர்த்து வைப்பதும், அவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு முன்னுரிமை கொடுப்பதும் மக்கள் பிரதிநிதிகளின் கடமை. கட்சி மக்களுக்காவன்றி கட்சிக்காக மக்களல்ல. அப்படியிருக்கும் போது, ஜனாதிபதி வேட்ப்பாளருக்கு கணிசமான மக்கள் வாக்களித்துள்ளார்கள். அவர்களின் விருப்பும் அதுவாகத்தான் இருந்தது. மக்களின் விருப்புக்கு, ஆதரவாக செயற்பட்ட உறுப்பினரை, கட்சியில் இருந்து நீக்க யாருக்கும் உரிமையில்லை. அப்படி ஒருவர் மக்கள் எதிர்பார்ப்புக்கு எதிராக செயற்படுபவராக இருந்தால், அவரை மக்கள் தங்கள் பிரதிநிதியாக, கட்சியின் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்து, கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும், அதுதான் நடந்தது. ஆனால் அதை குறித்த நபர், ஏற்றுக்கொள்ள மறுத்து, தன்னிச்சையாக, கட்சி உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தலாக கட்சியையும், அதன் பதவிகளையும் கையகப்படுத்தும் போது, மக்கள் அந்தக்கட்சியை நிராகரிக்க வேண்டிய கட்டாயம், தேவை ஏற்படுகிறது. இந்த எதேச்சாதிகார உறுப்பினரின் நடவடிக்கையால் கட்சியிலிருந்து நீக்கப்படும், பழிவாங்கப்படும் உறுப்பினர்களை எங்கிருந்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தயாராக வேண்டும். மக்களுக்கு சேவை செய்பவர்கள், மக்களின் விருப்பு வெறுப்புக்கு முன்னுரிமை வழங்குபவர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் அவர்கள் சேவை தொடரும். கட்சி முக்கியமல்ல, மக்களுக்கான சேவையே முக்கியம். உறுப்பினர்களுக்கு குடைச்சல் கொடுத்து, அவமானப்படுத்தி வெளியேற்றுவது. பின், சவால் விடுவது குற்றம் சுமத்துவது இந்த பிடாரியின் வழக்கம். தமிழரசுக்கட்சி மக்களுக்கான கட்சி. சுமந்திரனின் வீட்டுச்சொத்தல்ல. தமிழரசுக்கட்சியை சுமந்திரன் இறுக்கப்பிடித்தால், மக்கள் வேறொரு கட்சியை உருவாக்க வேண்டிய தேவையை இவரே உருவாக்குகிறார். தமிழரசுக்கட்சியை விட்டு வெளியேறி வேறொரு கட்சியில் நின்று வென்று காட்டுங்கள் பாப்போம் என்று சவால் விட்டவர், தமிழரசுக்கட்சியில் நின்றே வென்று காட்டட்டும், பாப்போம் மக்கள் நாம்! இது மக்கள் அவருக்கு வைக்கும் சவால்!
  13. தமிழரை அழிக்காமல் வேறு என்ன செய்வார்? ஆயுளை மிகுதியாக வேண்டிக்கொடுங்கள்.
  14. ஐயோ! வருங்கால ஜனாதிபதி கனவில் மிதந்தவர்களின் கனவு கலைந்ததே.
  15. அவருக்கு கொழும்பில் மட்டுமா வீடு உண்டு? பொறுத்திருங்கள். விசாரணை என்றவுடன் பதறியடித்துக்கொண்டு குழப்பங்களை உருவாக்கி, ஆட்சியை பிடித்து, தனது உண்மை கோர முகம் வெளியில் வராதபடி செய்து, தான் செய்த கொலைகளையும் அராஜகங்களையும் சாதனையாக காட்டி, இராணுவத்தினரை முன்னிறுத்தி நாட்டின் தியாகியாக மக்களுக்கு உரையாற்றி, தன்னை காத்துக்கொள்வார். அவருக்கு தெரியும், நாட்டின் சட்டம் நீதியை எவ்வாறு வளைத்து, தன்னை மறைத்தேன், தன் சகாக்களை காத்தேன், வேண்டாதவர்களை பழிவாங்கினேன் என்பது. அது எங்கே தனக்கு எதிராக திரும்பி தன்னை தண்டித்து விடுமென அஞ்சுகிறார். அதற்காகவே திருடர்களை வளர்த்து தன்கூடவே வைத்திருக்கிறார். தமிழரை எதிரிகளாக சிங்கள மக்களிடம் திணிக்கிறார். இவற்றையெல்லாம் கடந்து அனுரா சாதிப்பாரானால், மகிந்த பழைய நிலைமைக்கு திரும்புவார். திருடர் கூட்டம் என இவர்களை சந்திரிகா விழித்தது நூறு வீதம் உண்மை. திருடர் கூட்டம் மட்டுமல்ல பொறுக்கிகள் கூட்டம்.
  16. தனக்கு சவாலானவர்களை நீக்குவார், ஒத்தூதுபவர்களை பதவியில் இருத்துவார், இறுதியில் இவரால் நீக்கப்பட யாரும் இருக்கமாட்டார் கட்சியில், இவரை நீக்கவுவும் யாருமிலர். தானாகவே கோப்பு கட்டுகளோடு நீங்குவார். அப்போ; சுமந்திரன் என்றால் தமிழரசுக்கட்சியை வேரோடு நாசம் செய்தவர் என்றே மக்களுக்கு நினைவு வரும்.
  17. தமிழரிடமிருந்து எதை பிடுங்குவேன் என்று அலையும் சிங்களத்திடம் தமிழருக்கு கொடுப்பதற்கு ஒன்றுமேயில்லை. அவர்கள் பேச்சுமேடைக்கு போவதே புலிகளை பெலவீனப்படுத்துவதற்கே. கொடுப்பதற்கு எதுவும் இருந்திருந்தால்; புலிகளை அழித்த பின்தான் தீர்வு என்று ஏன் சொல்ல வேண்டும்? சரி, சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்கின்படி, அவர்களை அழித்த பின் ஏன் கொடுக்கவில்லை கொடுக்க இருந்ததை உறுதியளித்ததை? இன்னும் மக்களின் காணிகளை ஏன் விகாரைகளிற்கும் இராணுவத்திற்கும் அபகரிக்கிறார்கள்? இடைத்தரகர்களிற்கும் தெரியும், அவர்களும் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களை களையுங்கள் என்று கேட்டபோதே மறுத்து விட்டார்கள். புலிகள் இருந்தால் ஏமாற்ற முடியாது, உடன்படிக்கைகளை கிழித்தெறிய முடியாது என்பதற்காக அவர்களை அழித்தார்கள். இந்தப்பிரச்சனை இயற்கையால் தீர்த்து வைக்கப்பட்டால் அன்றி எந்த சிங்களமும் இனப்பிரச்சினையை தீர்க்காது. இல்லை சிங்கள மக்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு உண்மையான வரலாறு தெரியாது. தெரியவும் வாய்ப்பில்லை. இது மிகவும் துரதிஷ்டம். அதற்காகவே திட்டமிட்டு நூலகத்தை தீக்கிரையாக்கி வரலாற்றைத்திரித்து, புதிய குடியேற்றங்களையும் விகாரைகளை நிறுவியுள்ளார்கள். இயற்கையின் சீற்றம் ஒருநாள் இந்த இனத்திற்கு எதிராக திரும்பி வரலாற்றை எழுதும். அப்போது இதை எழுதும் நான் உயிரோடு இருக்கப்போவதில்லை. சிங்களத்திற்கு முண்டு கொடுத்த கதிர்காமருக்கு பிரதமர் பதவியை அளிக்க விரும்பாத சிங்களம், எதை தமிழருக்கு கொடுத்திருக்கும்? புலம்பெயர் தமிழரின் பணத்தை வாரிக்கொடுத்த பத்மநாதன், வி. முரளிதரன், டக்கிளஸ் போல நக்கிப்பிழைத்துக்கொண்டிருந்திருக்க வேண்டும். இத்தனை மக்களை, சொத்துக்களை பலி கொடுத்து, தன்னை காப்பாற்றிக்கொள்ள என்தலைவன் நினைக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால்; அவரை யாரும் தலைவன் என்று பெருமை பாராட்ட வாய்ப்பில்லை.
  18. அந்தத் தேவையுமில்லை இவருக்கு. இவர் ஜனாதிபதியாக இருந்து நடந்த ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலை தடுக்க முடியவில்லை இவரால், அரசவையில் இருந்தபோது தமிழருக்கெதிரான தாக்குதலை தடுக்கவோ கண்டிக்கவோ முடியவில்லை. நாட்டின் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. தோத்துப்போன ஜனாதிபதி, அரசியல்வாதி இவர். இனிமேல் ஜனாதிபதி பதவியுமில்லை, சுகபோகங்களுமில்லை, ஓய்வூதியமுமில்லை, போதை, பாதாள உழைப்புமில்லை. சாதாரண மக்கள் போல் வாழுங்கள், அவர்களுடைய கஸ்ரம், உரிமை, சேவை புரியுமுங்களுக்கு. ஏழைமக்களின் பணத்தில் காலம் பூராவும் சவாரி செய்வது நிறுத்தப்படவேண்டும். ம், உண்மைகள் வெளிவந்துவிடக்கூடாதென்பதற்காக அவர்களின் கதையும் முடிவுக்கு வரவைக்கப்பட்டது. எய்தவன் இருக்க அம்பை பிடுங்கினீர்கள். அவர்களை நெருங்க உங்களால் முடியாது. அவர்களின் பாதுகாப்பும் கௌரவமும் உங்களுக்கிருப்பது போல் இல்லை. உங்களளவு பாதுகாப்பு பரிவாரங்கள், சமையற் காரர்கள் இல்லை. போதை பொருள் வியாபாரம் இல்லை. சட்டத்தில் விலக்கு இல்லை, நீதி பரிபாலனத்தில் தலையிடுவதில்லை, தான் தோன்றித்தனமாக சட்டத்தை மாற்றுவதில்லை, குடும்ப அரசியல் இல்லை. மக்களின் ஆணைக்கு கட்டுப்பட்டு செயற்படுகிறார்கள். மொத்தத்தில் அவர்கள் சாதாரண மனிதர்கள் போல் வாழ்கிறார்கள். உங்களுக்கு அவர்களைப்போல் வாழவோ, ஆட்சி செய்யவோ தெரியவில்லை.
  19. அவர் எவர் என்று நீங்களே குறிப்பிட வேண்டியது. வி. முரளி, பகிரங்கமாக கூறியது. தலைவர் ஒரு சர்வாதிகாரி, தான், ஆயதப்போராட்டம் தவறானது என திருந்தி ஜனநாயகத்துக்கு திரும்பினேன் என்று பலதடவை கூறியுள்ளான். சரி, ஜனநாயகத்துக்கு திரும்பி என்ன சாதித்தார்? கோடீஸ்வரர். அது எங்கிருந்து வந்தது? பல கொலைக்குற்றச்சாட்டுகள் இவர்மேல். அத்தனையும் புலிகளிலிருந்து பிரிந்து, அப்பாவி மக்களை, அரசியல் பழிவாங்கல், பணத்துக்காக செய்யப்பட்டவை. ஜனநாயகம் நாட்டில் இருந்திருந்தால்; ஏன் புலிகளில் இணைந்தார் என்றொரு கேள்வியுண்டு. போராளிகள் மூடன்கள், என்னைப்போல் நக்கிப்பிழைத்திருக்கலாம் என எண்ணியிருப்பான்.
  20. ஐயா! நான் ஆயுதம் ஏந்தி போராடவில்லை, அதனால் அது ஏற்படுத்தும் காயங்கள் எப்படிப்பட்டது என தெரியாமல் இருக்கலாம். ஆனால் போராட்டத்தின் வலி, இடப்பெயர்வு, பசி, இல்லாமை, உயிர் பிழைக்க ஓடிய ஓட்டம், ஒழிந்த மறைவிடங்கள், கண்ணெதிரே உறவுகளின் உயிரற்று சரிந்த உடலங்கள், அழிவுகள், இழப்புகள், துயர்கள் போராளிகளின் வீரம், மனவுறுதி அனைத்தையும் நேரடியாகவே கண்டு அனுபவித்த நபர். பல போராளிகளை கட்டி வைத்து வெட்டி அந்தகாயத்திலிருந்து இரத்தம் வழிவதை பார்த்து ரசித்த கூட்டம் இது. பல அப்பாவிப்பெண்களை துகிலுரித்து பாலியல் துஸ்பிரயோகம் செய்து ரசித்த இனமிது, மணலாற்றில் மரணமடைந்த பெண்போராளிகளின் அந்தரங்க பகுதியில் வெடிகுண்டுகளை வைத்து ரசித்த கூட்டம் இது. சரணடைந்த போராளிகளை நிர்வாணமாக்கி, கைகளை பின்னால் பிணைத்து, கண்களை கட்டி, முட்டிக்கால் போட வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தி உடலை காலால் உதைத்து வீழ்த்தி வீரம் காட்டிய வீரர்கள் இவர்கள், அப்பாவிகளை விரட்டி விரட்டி கொன்றுவிட்டு பயங்கரவாதிகளை அழித்தேன் என்று முரசு கொட்டிய கூட்டமிது. இதற்கு பெயர் மனிதாபிமானப் போர், வீரர்கள். தங்களுக்குத்தாங்களே கொடுத்துக்கொள்ள வேண்டிய பட்டம். அதன் தண்டனை என்னவென்று தானே தன் வாயால் கூறிக்கொள்கிறார். மின்சாரக்கதிரை! அவரே, அது தான் தனக்குரிய தண்டனையென்கிறார். ஒருவேளை தலைவர் தன்னைத்தானே சுட்டுதற்கோலை செய்து கொண்டிருக்கலாம். ஒரு மாபெரும் வீரன், தான் எதிரியிடம் உயிரோடு பிடிபட்டு அவமானப்படுவதையோ, அல்லது அடிமை வாழ்வு, சுகபோக வாழ்வு எதையோ வாழ்வதை விரும்பாமல் இருந்திருக்கலாம். இது எனது தனிப்பட்ட கருத்து. என் தலைவர் இறந்தபின்பு இராணுவமும், அரசியல், போர் கதாநாயகர்களும் நடந்து கொண்ட விதம், சொல்லப்பட்ட முரண்பாடான கதைகள், இந்தியவுக்கு சொல்லப்பட்ட கதை, அன்றைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட ஏமாற்றமான கருத்து, அதையே எனக்கு உணர்த்துகிறது. இந்தியாவும் இலங்கையும் எதிர்பார்த்த குறிக்கோளை அடைய என் தலைவன் அனுமதிக்கவில்லை. நெற்றியில் சூடு. ஒன்று, வேறொருவர் நேருக்கு நேர் நின்று அவரை சுட்டிருக்க வேண்டும். அது ஒரு போராளியால் அவரின் வேண்டுகோளுக்கமைய, அல்லது அவரே தன்னைத்தான் சுட்டிருக்க வேண்டும்! ஒரு போராட்ட களத்தில், அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட போராட்டம். நெற்றி தவிர வேறெங்கும் காயமில்லை. ஆயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு ஆயுதங்கள், இராணுவம். ம் .... கதையெழுதுகிறோமென உண்மையை ஒப்புக்கொள்கிறார்களா இவர்கள்?
  21. இருபகுதியும் தங்களை முன்னிலைப்படுத்த வேண்டிய தேவையிலுள்ளனர். சரிந்து போகும் தங்கள் மதிப்பை உயர்த்திக்காட்ட இப்படியான சந்திப்பு தேவைப்படுகிறது. உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்டாய் என்று எதையோ பேசுவார்கள், தமிழ் இனத்தின் அழிவின் லாப நட்ட கணக்கு பார்ப்பார்கள், எப்படி மீண்டும் ஆட்சியை பிடித்து சுடுகாடாக்குவது என்று யோசிப்பார்கள். இவர்களின் சந்திப்பு நாட்டுக்கு நல்லதை கொண்டு வராது. அழிவைப்பற்றியே யோசிப்பார்கள், பேசுவார்கள். மறைந்தவர்களும் அதையே செய்து காட்டினார்கள். இருப்பவர்களும் தொடர்கிறார்கள். இவர்கள் விரட்டப்பட வேண்டியவர்கள்
  22. அப்போ, கோடரியும் கொண்டுதான் இலங்கை இராணுவம் போரிட்டுள்ளதா? ஏதோ இலங்கைப்படை சாதித்ததாக எழுதியுள்ளனர். விநாயக மூர்த்தி முரளிதரன் இராணுவ கூட்டிலேயே இருந்துள்ளான். தலைவருடன் ஒன்றாக இருந்து உண்டு, குடித்து அவரையே காட்டிக்கொடுத்த துரோகி, அவரை அடையாளம் காட்ட வந்தானாம். சரத் பொன்சேகா சொன்னது, நாங்கள் கிளிநொச்சியுடன் எங்கள் போரை நிறுத்திக்கொள்ள நினைத்தோம், ஆனால் இந்தியாவே எங்களை வற்புறுத்தி போரை தொடரச்செய்தது. மஹிந்தா அறிவித்தது, நாங்கள் கேட்க்காமலேயே இந்தியா போருக்கான எல்லா உதவிகளையும் செய்தது. நாங்கள் செய்தது இந்தியாவுக்கான போர். ஏன், அமெரிக்கா, பாகிஸ்தான்,பலஸ்தீன், இஸ்ரேல் இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். அதைவிட நாடு முழுவதும் கடனால் நிறைந்திருக்கிறது. ஆனால் புலிகள் தங்கள் சொந்த முயற்சியினால் முப்பது ஆண்டுகள் தமிழருக்கெதிரான வன்முறையை கட்டுபாட்டில் வைத்திருந்தனர். ஒரு விடுதலை போராட்டம் துரோகத்தினாலேயே முடிவுக்கு வந்தது. இனிமேல் துரோகத்தின் பலனை அனுபவிக்கும் போது அதன் வலி புரியும். என் தலைவன், குளிரூட்டிய அறையிலிருந்து போர் புரியவில்லை, போராளிகளின் இழப்பில் புகழ் தேடவில்லை, பிள்ளைகளை வெளிநாட்டில் சுகம் தேட அனுப்பவில்லை. தானும் குடும்பமும் சேர்ந்தே போராடினார். உலகிலேயே சிறந்த எடுத்துக்காட்டு.
  23. அப்போ, இவர் கட்சியின் கட்டுப்பாட்டை, விதிமுறைகளை மீறி கருத்துச்சொல்லும்போது, பதவிகளை இறுக்கப்பற்றிக்கொண்டிருக்கும்போதும், தனக்காக இல்லாத புது பதவிகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும்போதும் இவருக்கெதிராக யார் நடவடிக்கை எடுப்பது? ஒன்று, உவர் தானாக கட்சியை விட்டு வெளியேற வேண்டும், இல்லையேல் உவரை விட்டு மற்றவர்கள் வெளியேறவேண்டும். கறையான் புற்றெடுக்க விஷ கரு நாகம் இடையில் புகுந்திருந்து புற்றையே கலைக்குது. இவ்வளவு அவமானப்பட்டும் திருந்தவில்லை, என்ன ஜென்மமோ? இதில சட்டத்தரணி வேற.
  24. இன்னும் சிறிது காலத்தில் படுத்த படுக்கையாகிறாரோ சிறையில் அடைக்கப்படுகிறாரோ மக்களால் மறக்கப்படுகிறாரோ தெரியவில்லை அதற்குள் எழுந்து நிற்கப்போகிறாராம். அப்பதான் இன்னும் கொள்ளையடிக்கலாம். அதுசரி, எல்லா முன்னாள் ஜனாதிபதிகளையுந்தான் அரச இல்லங்களை விட்டு வெளியேறச் சொல்லப்பட்டிருக்கிறது. இவரும் சந்திரிகாவுந்தான் ஒப்பாரி வைக்கிறார்கள். இவர்கள் வெளியேறினால் அந்த வீடுகளை பராமரிப்பததற்கு செலவு அதிகமாகுமாம் என்கிறார் ஒரு அரசியல்வாதி. இவர்கள் குடியிருக்கும்போதே பராமரிப்பு, திருத்தம் என்று கோடிக்கணக்கில் மக்களின் சொத்தை கொள்ளையடித்துள்ளார்கள். அப்போ எப்படி செலவு அதிகமாகும் இவர்கள் வெளியேறினால்? இன்னும் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியம் ரத்து செய்யப்படவில்லை. அவர்கள் பெற்ற ஓய்வூதியம் சாதாரண தொகையுமல்ல. இப்படியிருக்கும் போது சந்திரிகா, தன் சொந்த வீட்டை விற்று வாழ்கிறாவாம் என அழுகிறதா. இவர்களை விட தெருப்பிச்சைக்காரர் பரவாயில்லைபோலுள்ளதே. இவர்கள் அரசியலுக்கு வராவிட்டால் தெருவிற்தான் கையேந்திக்கொண்டு நின்றிருப்பார்களோ என்கிற சந்தேகம் எனக்கு. இந்த லட்ஷணத்தில் இன்னும் அரசியல் ஆசை. மக்களுக்காகவா, தங்களுக்காகவா? இவர்கள் சிறை செல்வது உறுதியாயிற்று. ஆனால் அதற்கு முதல் நாட்டில் ஒரு பிரளயம் ஏற்படுத்தாமல் விடமாட்டார்கள். உடனேயே இவர்களை பிடித்து அடைப்பதற்கு அனுரா தயாராக இருக்க வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.