Jump to content

Eppothum Thamizhan

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  1541
 • Joined

 • Last visited

Everything posted by Eppothum Thamizhan

 1. ஓம் ஓம், அதுவும் கருணா அம்மானின் கதையை எழுதினால் நீங்களும் சேர்ந்துதான் நாண்டுக்கிட்டு சாகணும் . பல புலம்பெயர் மக்கள் எவ்வளவு கஷ்டத்தின் மத்தியிலும் பணத்தை அள்ளிக்கொடுத்ததால்தான் போராட்டம் இவ்வளவுக்கு வளர்ந்தது என்ற சாதாரண புரிதல் கூட இல்லையா?? ஆட்களை மட்டும் வைத்து என்ன ஈட்டி, அம்பு கொண்டா போரிடுவது!! அந்தப்பணத்தை ஏப்பம் விட்டவர்களையும், அதைவைத்து இப்போ சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களையும் இதில் சேர்க்கவேண்டாம்.
 2. நானும் எனக்கு தெரிந்த பலரிடம் (சுமந்திரனுக்கு மிக நெருங்கிய) கேட்டுவிட்டேன். கிடைத்தபதில் எதற்கு சென்றாரென்று யாருக்குமே தெரியாதென்பதே!! மிகவும் ரகசியமான விடயமாக இருக்குமோ??
 3. இப்பவாவது விளங்கிதோ இந்த கொடிபிடிக்கிற கோஷ்டியை ஆட்டுவிக்கிறது யாரென்று??
 4. அப்படி யாரும் அங்கு இருந்ததாக நான் சொல்லவில்லையே! பாலசிங்கத்தார் பக்குவமாக ஒதுங்கியமாதிரி, தலைவரின் கொள்கைகள் பிடிக்காவிட்டால் தமிழினியும் ஒதுங்கியிருக்கலாம் என்றுதானே சொன்னேன்!!
 5. இப்படி எழுத அனுமதிக்கும் நிர்வாகம் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் என்று எழுதும்போதுமட்டும் ஏன் வெட்டியெறிகிறது? யாழ் நிர்வாகமும் இப்போ அந்த கூட்டத்துடன் சேர்ந்துவிட்டதோ ??
 6. போலீஸ் அதிகாரம் முக்கியமில்லையா கோஷான்?? எங்கட சனத்தட்டை குடுத்தாலும் பிரச்சனைதான்!!
 7. அப்ப என்ன இந்தியாக்காரன் வடிவா எழுதிகொடுத்திருப்பான் !!
 8. தலைவர் அரசியலை நம்பி போராட தொடங்கவில்லை, ஆயுதத்தை நம்பியே தொடங்கினார். ஆயுதத்தை கீழே வைத்தால் என்ன நடக்கும் என்பதை இந்திய அமைதிப்படை காலத்திலேயே உணர்ந்திருந்தார். ****
 9. நான் அப்படி ஒரு ரீலும் விடவில்லை ஜஸ்டின். நீங்கள் வழமைபோல் உங்கள் பாணியிலான சாளாப்பல்களை தொடங்கிவிட்டீர்கள். நான் சொன்னது தமிழினிக்கு தனது கருத்துக்களை கூற சந்தர்ப்பம் இருந்திருக்கும் என்றுதான். அதை தலைவர் ஏற்றால் சரி இல்லையென்றால் இனியும் தொடர முடியாது என்று ஒதுங்கியிருக்கலாம் என்றுதான். எல்லாம் முடிந்தபிறகு ராணுவ புலனாய்வாளர்கள் சொல்வதை ஒப்பித்தார். அதை வேதவாக்காக எடுத்து நீங்கள் பாடமெடுக்கிறீர்கள்.
 10. பாலசிங்கத்தாருக்கும் தலைவருக்கும் என்ன பிரச்சனையை என்பதை அவர்கள் இருவரோ அல்லது உயர்மட்ட தலைவர்களோ சொன்னால்தான் உண்டு. மற்றவர்கள் சொல்வதெல்லாம் ஊகங்களே. தலைவரின் நடவடிக்கையில் அதிருப்தி இருந்ததால் பாலசிங்கத்தார் பக்குவமாக ஒதுங்கிக்கொண்டார். தமிழினிக்கும் பிடிக்காமல் இருந்திருந்தால் ஒதுங்கியிருக்கலாமே? அவரும் அரசியல் பிரிவில்தானே இருந்தார்?
 11. ஆயுதப்போராட்டம் என்று ஒன்று தொடங்கியபின்தான் சர்வதேசமோ ஏன் ஸ்ரீலங்கா அரசாங்கமே தமிழ் தரப்புடன் பேச்சுவார்த்தை என்ற ஒன்றை தொடங்கியது என்பது சிலருக்கு புரிவதேயில்லை. எவ்வளவோ பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டபோதும் சர்வதேசமும் ஸ்ரீலங்கா அரசும் முன்வைத்த தீர்வுதான் என்ன என்பதை இந்த புத்திஜீவிகளை கூறச்சொல்லுங்கள் பார்க்கலாம்?
 12. நீங்கள்தானே ஊகத்தில் எழுதும் எல்லாவற்றிற்கும் ஆதாரம் கேட்பீர்கள். பலராலும் பதிவுசெய்யப்பட்ட கருத்துக்கள் அவர்களின் ஊகமே. அது உண்மையாக இருக்கவேண்டிய அவசியமில்லை. ஏதோ நீங்கள் அமைப்புக்குள் ஊடுருவி ரெக்கி எடுத்த ரேஞ்சுக்கு அடிச்சுவிடுறியள்! தொடருங்கோ, கைதட்டிற கூட்டம் இருக்கும்வரை!!
 13. கருணா செய்தது தலைமைக்கு சொல்லாமல். இவர் தமிழ்செல்வனுக்கு இணையான பதவியில் இருந்தவர் என்பதால் அவர் தனது கருத்துக்களை தலைமைக்கு சொல்ல சந்தர்ப்பங்கள் இருந்திருக்குமே? அவர் சொல்லியும் தலைமை கேட்கவில்லை என்று எங்காவது சொல்லியிருக்கிறாரா? அல்லது நீங்கள்தான் சும்மா அடிச்சு விடுகிறீர்களா?
 14. எப்போது இதை கூறினார். எல்லாம் முடிந்தபின்பா? முதலே இதை உணர்ந்திருந்தால் அதை ஏன் தனது தலைமையிடம் கூறி சரியான பாதையில் கொண்டு செல்ல முடியவில்லை? எல்லாம் முடிந்தபின் இதை செய்திருக்கலாம், அதைசெய்திருக்கலாம் என்று புத்திமதி கூறுவதும் குற்றம் கண்டுபிடிப்பதும் மிக இலகுவானது. உலகநாடுகளை அனுசரித்து தீர்வைப்பெற வேண்டுமென்றால் உலகநாடுகள் என்ன தீர்வை முன்வைத்தன? அரசாங்கம் எதற்காவது இணங்கியதா? அதுசரி எதற்கெடுத்தாலும் எதிர்கால தலைமுறை என்கிறீர்களே அது யார் சுமந்திரனும் சாணக்கியனுமா?
 15. அப்படியெல்லாம் கேட்கக்கூடாது குசா அண்ணை! எங்களுக்கு தெரிந்ததெல்லாம் புலிவாந்திதான்! நீங்கள் புதுசுபுதுசாக்கேட்டால் நாங்கள் எங்க போறது! கேட்டால் போராட்டத்தை 100, 200 வருடம் பின்னுக்கு கொண்டுபோட்டாங்கள் என்று கூப்பாடு. 100, 200 வருஷத்துக்கு முன் இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழருக்கும், சிங்களவருக்கு ஒரேயளவு உரிமைதான் இருந்ததென்ற அடிப்படை அறிவுகூட இல்லை. சும்மா அடிச்சுவிடுறது!!
 16. சென்றவாரம்தான் சிக்காகோ பொய் வந்ததாக பிக் போஸ்சில் கூறினாராம்!!
 17. அது சொல்புத்தியும் இல்லை சுயபுத்தியும் இல்லையென்று வந்திருக்கவேண்டும். வெள்ளிக்கிழமை எழுதியதால் கொஞ்சம் பிழைத்துவிட்டது. தமிழ் அறிவுள்ளோர் எல்லோரும் அப்படித்தான் வாசித்திருப்பார்கள். ஒருசிலருக்கு மட்டும் முட்டையில் கூந்தல் புடுங்குவதுதான் முழுநேர வேலையாயிற்றே! என்ன செய்வது??
 18. அது முள்ளிவாய்க்காலில் நடந்திருக்காது ஆனால் பரவலாகவே நடந்திருக்கும். அழிவு ஒன்றுதான்! ரணில் ஒன்றும் உதாரண புருஷரல்ல!! குள்ளநரி!! புலிகளுக்கு ஆப்படிப்பதில் அவ்வளவு சந்தோசம் போல! இருக்காத பின்னே, உங்களுக்கு ஞான உபதேசம் செய்தவர்களின் பிள்ளைகளையோ அல்லது சகோதரர்களையோ யுத்த களத்திற்கு அடாவடியாக கூட்டிச்சென்ற கொடியவர்கள் அல்லவா அவர்கள்!!
 19. இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை! விழுந்து விழுந்து சிரிக்கக்கூடியதாக இருந்தது. அருமையான கருத்து! இதுக்குத்தான் ரதியை அப்பப்ப வந்து கருத்தெழுதச்சொல்லிறது!! கன சனத்துக்கு குளிர்விட்டுப்போச்சு!!!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.