Everything posted by Kavi arunasalam
-
கருத்துப்படம் 23.07.2024
From the album: கிறுக்கல்கள்
-
குறுங்கதை 21 -- கோட்பாட்டின் சதி
ஒரு ஆணை, மாதாவைவிட சதிதான் நன்கு அறிந்து வைத்திருப்பாள்.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
- கருத்துப்படம் 23.07.2024
From the album: கிறுக்கல்கள்
- லதா மங்கேஷ்கரின், கடைசி வார்த்தைகள்.
காது அற்ற ஊசியும் வாராது காண் உன் கடை வழிக்கே- 'கைலாசா' பற்றி நித்தியானந்தா வெளியிட்டிருக்கும் புதிய தகவல்கள்
உற்சாகப் படுத்தியதற்கு நன்றி. ஆனால் வீட்டில் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. சுருட்டிக் கொண்டு ஒரு மூலையில் இருக்க வேண்டியதுதான்- 'கைலாசா' பற்றி நித்தியானந்தா வெளியிட்டிருக்கும் புதிய தகவல்கள்
இதில் ‘அனைத்தும்’ என்பது பிடிச்சிருக்கு.போகலாமா என்று யோசிக்கிறேன். வயது கொஞ்சம் தடுக்கிறது.- பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!
- பொதுவேட்பாளர் 22.07.2024
From the album: கிறுக்கல்கள்
- கருத்துப்படம் 22.07.2024
From the album: கிறுக்கல்கள்
- ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
- கருத்துப்படம் 21.07.2024
From the album: கிறுக்கல்கள்
- உதவி தேவை: விடுதலைக்கு வலுச்சேர்த்த தமிழ்நாட்டுத் திரைப்படப் பாடல்கள்
ஆரம்பத்தில் புலிகள் பயன் படுத்திய பாடல்கள் இவைகள். ‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்….’ (உலகம் சுற்றும் வாலிபன்) ‘ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்….’ (அரச கட்டளை) ‘அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்….’ (ஆயிரத்தில் ஒருவன்) ‘அச்சம் என்பது மடமையடா….’ (மன்னாதி மன்னன்) ‘தோல்வி நிலையென நினைத்தால்…’ (ஊமை விழிகள்) கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்…’ (மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்) ‘சங்கே முழங்கு பொங்கு தமிழுக்கு…’ (கலங்கரை விளக்கம்) ‘ஒரு தாய் மக்கள் நாமென்போம் ஒன்றே எங்கள் குலம் என்போம்’ (ஆனந்தஜோதி) சிலகாலங்களின் பின்னர் இந்தப் பாடல்களும் சேர்ந்து கொண்டன ‘இரவும் ஒருநாள் விடியும் அதனால் எழுந்திடுவாய் தோழா புயலும் புலியும் அழுவது இல்லை புறப்படுவாய் தோழா’ ‘சிறுத்தைகளே ஒன்று சேருங்கள் - இந்த ஜெகத்தை ஜெயிக்க வாருங்கள் கொட்டம் அடித்த குள்ள நரிகளின் ரத்தம் குடிக்க வாருங்கள்’ ‘ஒரு காலம் வரும் நல்ல நேரம் வரும் எங்கள் கண்ணீரிலே தீயும் தோன்றலாம்’ ‘இது எந்தன் ராஜ்சியம்தான்’ https://myspb.wordpress.com/2012/01/13/1260-இது-எந்தன்-ராஜ்ஜியம்-தான/ ‘தேவனின் கோவிலில் ஏற்றிய தீபம் தெருவினில் கிடக்குது இது என்ன ஞாயம்?’ (இந்தப்பாடல் இணையத்தில் கிடைக்கவில்லை)- குறுங்கதை 20 -- தங்க மீன்கள்
கடலில், தவளை மீன் இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். தவளை? இரண்டு தங்க மீன்களும் இறந்து போனது கவலைதான். சில வீடுகளில் தலைவன் முடிவெடுத்தால் தடுக்க வாய்ப்புகள் குறைவுதான். உங்கள் வீட்டில் கண்டிப்பாக அவருக்கு இரகசியமாக அர்சசனைகள் கிடைத்திருக்கும். நல்லது செய்வதாக நினைத்து சிலர் செய்யப் போக அது தவறாகப் போகவும் வாய்ப்பிருக்கிறது. இப்படியே போனால், ரசோதரன் ஆடு வளர்த்தார், குருவி வளர்த்தார், மீன் வளர்த்தார். நாய் வளக்க இல்லையே என்று சொல்லும் அளவுக்குப் போய்விடும்- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
- கருத்துப்படம் 20.07.2024
From the album: கிறுக்கல்கள்
- உதவி தேவை: விடுதலைக்கு வலுச்சேர்த்த தமிழ்நாட்டுத் திரைப்படப் பாடல்கள்
பொதுவாகவே எம்ஜிஆர் படங்களில் புரட்சி, எழுச்சிப் பாடல்கள் இருக்கும். இல்லாவிட்டால் ‘புரட்சி நடிகர்’ என்ற பட்டம் அவருக்குப் பொருந்தாது. அவரது படங்களில் இடம் பெறும் புரட்சிக் கருத்துக்கள், சில பாடல்களில் முழுமையாக இருக்கும் பலவற்றில் ஆங்காங்கே பட்டும் படாமலும் தெளித்தும், தெரியாமலும் விடப்பட்டிருக்கும். ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு…’ என்ற பாடலின் இறுதி வரிகள் இசைத்தட்டில், ‘இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து அதில் நீதிவரவில்லை என்றால் வாளை உயர்த்து’ என்றிருந்தது. ஆனால் தணிக்கை குழுவினரது கெடுபிடியால், நீதி உன்னைத் தேடிவரும் மாலை தொடுத்து’ என்று படத்தில் இடம் பெற்றிருக்கும். 77 இல் என்று நினைக்கிறேன். சரியாக நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை. கொழும்பில் கலவரங்கள் தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்து கொண்டிருந்ததன. எம்ஜிஆர் படத்தில் இடம் பெற்ற பாடல்களை கே.எஸ்.ராஜா வானொலியில் சுழல விட்டுக் கொண்டிருந்தார். எல்லாப் பாடல்களிலும் நேரடியாகத் தெரியாத தெளித்து விடப்பட்ட புரட்சி வரிகள் மட்டும் இருந்தன. ‘உலகத்தில் குருடர்கள் சரிபாதி ஊமைகள் குருடர்கள் அதில் பாதி கலகத்தில் பிறப்பதுதான் நீதி மனம் கலங்காதே மதி மயங்காதே’ என்ற ஒன்றை இங்கே உதாரணத்துக்குத் தருகிறேன். இந்த ஒலிபரப்புக்குப் பின்னால் கே.எஸ்.ராஜாவை சில காலம் வானொலியில் காணவில்லை. “கே.எஸ்.ராஜாவை நாலாவது மாடியில் வைத்து விசாரிக்கிறார்கள்” “அப்துல் ஹமீதுவின் உட்குத்து” என்றெல்லாம் வதந்திகள் வந்து கொண்டிருந்தன. எது எப்படியோ கே.எஸ்.ராஜா பல மாதங்கள் இலங்கை தமிழ் வர்த்தக ஒலிபரப்பில் இல்லை என்பது தெளிந்த உண்மை. அரச கட்டளை படத்தில், ரி.எம்.எஸ் பாடிய “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை…” பாடல் முழுப் புரட்சிப் பாடலாக படத்தில் இடம் பெற்றிருந்தது. இந்தப் பாடலை எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலில் பிரச்சாரப் பாடலாக்கினார்கள். பாடலின் இறுதி வரியில் இருந்த, “உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ -அதன் உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ…” வரிகளை இளைஞர்கள் எடுத்துக் கொண்டார்கள். அரசகட்டளையில், பி.சுசீலா பாடும் ஒரு பாடல் மக்களை ஒன்று திரட்டி போராட அழைப்பது போல் இருக்கும். “பண்பாடும் பறவையே என்ன தூக்கம்?-உன் பழங்காலக் கதை இங்கு யாரைக் காக்கும்? தண்ணீரும் ரத்தமும் ஒன்றுதானா? -நீ தாயற்ற கன்று போல் ஆகலாமா?…” ஆண்டாண்டு காலம் நாம் ஆண்ட நாடு அன்னை தந்தை மக்கள் சுற்றம் வாழ்ந்த நாடு தோன்றாமல் தோன்றும் வீரர் சொந்த நாடு தூங்கித் தூங்கி சோர்ந்து விட்டது இந்த நாடு கலங்கரை விளக்கம் திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய, சங்கே முழங்கு, சங்கே முழங்கு பொங்கு தமிழுக்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் ரி.எம்.எஸ் பாடிய, ‘தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம் ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம் உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்’ அதே படத்தில் இன்னுமொரு பாடல், ‘வீரமகன் போராட வெற்றி மகள் தாலாட்ட….’ மன்னாதி மன்னன் படத்தில் ரி.எம்.எஸ் பாடிய, ‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா கருவினில் மலரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள் பிள்ளை’ தனது மகனின் வீர மரணத்துக்கான ஒரு பாடல் மகாதேவி படத்தில் இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடலும் கூட, ரி.எஸ்.பகவதி பாடியிருப்பார். முன்னர் இந்தப் பாடலை வைத்து ஒரு பத்தி எழுதியிருந்தேன். ‘மானம் ஒன்றே பெரிதென எண்ணி வாழ்வது நமது சமுதாயம் மரண பயங்கரம் சூழ்ந்து வந்தாலும் மாறிவிடாது ஒருநாளும்…’ இப்படி நிறைய எம்ஜியார் பாடல்களில் தேடி எடுக்கலாம்.- குறுங்கதை 19 -- கள்ளப்பந்து
உடுப்பிட்டி சந்தியில் தைத்துத் தந்தவர் கால்பந்து விளையாடாமல் இருந்திருக்கலாம். அடிடாஸ் நிறுவனத்துக்கும் தெரியாமல் இருந்திருக்குமா? என்னது அடுத்த ஒழுங்கைக்காரன் பந்தா ? ‘இட்டார் கெட்டார்’ குறுங்கதையை இன்னுமொருக்கால் போய் வாசித்து விட்டு வருகிறேன்.- பாரிய தகவல்தொழில்நுட்ப கோளாறு - சர்வதேச அளவில் விமானசேவைகள் வங்கி சேவைகள் செயல் இழந்தன
- கருத்துப்படம் 19.07.2024
From the album: கிறுக்கல்கள்
- மகாவன்ச வரலாற்று நூல்கள் அடங்கிய தொகுப்பு உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிப்பு
ஓலைச் சுவடிகளில் உள்ள ஓட்டைகளை நூல் கொண்டு இணைப்பதனால் ‘நூல்’ என்றும் குறிப்பிடுவார்கள் என்று எங்கேயோ வாசித்திருக்கிறேன். அடுத்தவன் சேர்த்து வைத்ததெல்லாவற்றையும் எரித்து நாசம் செய்வார்கள். தங்களுடையதை பாரம்பரியமானது என்பார்கள்.- குறுங்கதை 17 -- நளபாகம்
எண்பதுகளின் ஆரம்பம். யேர்மனியில் அகதி முகாமில் இருந்த நேரம். மூன்று நேரமும் நல்ல ஆரோக்கிய உணவு தருவார்கள். ஆனால் சாப்பிட மனம் வருவதில்லை. ஊரில் உறைப்பு, உப்பு, புளி, தாளிப்புகளுடன் சாப்பிட்ட ருசி தேடி நாக்கு அடம்பிடிக்கும். தங்குமிடத்தில் சமைக்க அனுமதி இல்லை. ஆனாலும் 10 மார்க் கொடுத்து ஒரு மின்சார அடுப்பு வாங்கியிருந்தோம். அதை யார் கண்ணிலும் படாமல் கட்டிலின் கீழ் மறைத்து வைத்திருப்போம். எங்கள் முகாமுக்கு அருகே ‘பெனி’ மார்க்கெற் இருந்தது. அங்கே கோழியின் முதுகுப் பகுதியை 99 பெனிக்குகளுக்கு வாங்கிக் கொள்வோம். அதை வாங்குவதற்குக் கூட ‘சிண்டிகேட்’ தான். அப்பொழுது மாதாந்தம் கைச்செலவுக்கென கிடைத்தது 60 மார்க்குகள் மட்டுமே என்பதனால்தான் இந்தச் சிக்கனம். கோழியின் முதுகுப் பகுதியை விறாண்டினால்தான் ஏதோ கொஞ்சத் துகள்கள் போல் இறைச்சி கிடைக்கும். ஆனலும் சாப்பிட்டோம். அப்பொழுது என்னுடன் இருந்த சந்திரன், “எப்பதான் காப்புக் கையால் சமைச்ச சாப்பாட்டை சாப்பிடப் போறனோ?” என்று சொல்வான். சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவனைப் பார்க்கப் போயிருந்தேன். அவனது மனைவி “இருங்கோ வருவார்” என்று சொன்னார். கிச்சினை விட்டு வெளியே வந்த சந்திரன், “இரு மச்சான். கறி அடுப்பிலை. இறக்கிப் போட்டு வாறன்” என்று சொன்னான்- தமிழக மீனவர்களின் பாதுகாப்பு முக்கியமானது: இலங்கையில் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்பில் இந்தியமத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை அறிவுறுத்தல்
வாழ்வாதாரத்துக்காக, திருடினால் கொள்ளை அடித்தால் உள்நாட்டில்தான் தண்டனை தருவார்கள் போல.- ஹிந்தியன் 2 விமர்சனம்.
நான்தான் பிழையாக விளங்கி விட்டேன். Gunஐ கண் என்று நினைத்துவிட்டேன். கண்கள் என்று பன்மையில் வந்ததால் வந்த குழப்பம் அது.- குறுங்கதை 18 -- பூவரசம் வேர்
நினைச்சது சரிதான். சமையல் ஐயாதான் என்பது மேலும் உறுதியாயிற்று. பூவரசும் தேக்கு மாதிரி உறுதியானதுதான். தளபாடம் செய்யப் பயன்படுத்துவார்கள். அடுத்தமுறை ஊருக்குப் போய் பூவரசம் வேரில் செய்த இடியப்ப உரல் வாங்கி வந்து இடியப்பம் அவிச்சு எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். ஒன்றும் அவசரம் இல்லை. - கருத்துப்படம் 23.07.2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.