Everything posted by ஏராளன்
-
இரான் மீது அமெரிக்கா தாக்குதல்
அமெரிக்காவின் தாக்குதல் - வடகொரியா கடும் கண்டனம் 23 JUN, 2025 | 11:05 AM ஈரானின் அணுஉலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களை வடகொரியா கண்டித்துள்ளது. ஈரானின் பாதுகாப்பு நலன்கள் மிக மோசமாக மீறப்பட்டது என தெரிவித்துள்ள வடகொரியா ஈரானின் ஆள்புல உரிமைகளும் மீறப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேற்குலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஊக்குவிக்கப்பட்ட இஸ்ரேலின் இடைவிடாத போர் நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய விரிவாக்கத்தினால் உருவான மத்திய கிழக்கின் பதட்டங்களிற்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே குற்றவாளிகள் என வடகொரியாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு நலன்களை வன்முறையாக நசுக்கிய அமெரிக்காவின் தாக்குதலை வடகொரியா கடுமையாக கண்டிக்கின்றது என அந்த நாட்டின் வெளிவிவகார பேச்சாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு எதிராக நியாயமான சர்வதேச சமூகம் குரல் எழுப்பவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218190
-
சிரிய தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல்; 22 பேர் உயிரிழப்பு, 63 பேர் காயம்!
சிரிய தலைநகரில் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்; 22 பேர் உயிரிழப்பு Published By: DIGITAL DESK 3 23 JUN, 2025 | 10:53 AM சிரியாவின் தலைநகர் டமஸ்கஸில் உள்ள தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளதோடு, 63 பேர் காயமடைந்துள்ளனர். இதனை சிரிய சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியள்ளது. டமஸ்கஸ், ட்வீலா பகுதியிலுள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை (22) ஆராதனை நடைபெற்றுள்ளது. இதன்போது, தேவாலயத்துக்குள் வந்த நபரொருவர் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியுள்ளார். தற்கொலை குண்டு தாக்குதலை ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த நபர் மேற்கொண்டதாக் கூறப்பட்டாலும், அந்த அமைப்பு இந்த சம்பவத்தை இதுவரை உரிமைகோர வில்லை. குண்டு தாக்குதலில் தேவாலயத்திற்குள் பலிபீடத்துக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதோடு, உடைந்த கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும் பீடங்கள் மற்றும் சுவர்களில் இரத்தம் சிதறிக் கிடப்பது புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் பதிவாகியுள்ளன. சம்பவத்தை நேரில் பார்த்த லாரன்ஸ் மாமாரி, யாரோ ஒருவர் தேவாலயத்திற்குள் ஆயுதம் ஏந்தி நுழைந்து துப்பாக்கிச் சூட்டை நடத்தினார். அவர் குண்டை வெடிக்க செய்வதற்கு முன்னர் மக்கள் அவரை தடுக்க முயன்றனர் என அவர் ஏப்பி செய்தி சேவைக்குத் தெரிவித்துள்ளார். இலங்கையிலும் இதேபோன்றதொரு சம்பவம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்றது. அதில், 250க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, 219 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218182
-
யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீர்த் தேவை பற்றிய ஆய்வு
நிலத்தடி நீர்த் தேவை பற்றிய ஆய்வு Jun 22, 2025 - 10:20 - யாழ்ப்பாணத்தில் வழுக்கியாற்றைப் புனரமைப்பு செய்து நிலத்தடி நீர்த் தேவை மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஆய்வு ஒன்றினை யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் நேற்று (21) ஆரம்பித்தனர். யாழ்ப்பாணம் வறுத்தலைவிளான் பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பிக்கும் வழுக்கையாற்றில் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், அரச திணைக் களத்தை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். குறித்த ஆராய்ச்சி பயணத்தில் வருத்தலைவிளான் பகுதியில் ஆரம்பிக்கும் வழுக்கையாற்று பயணம் அராலியில் முடிவடையும். இதன்போது பொறியியலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மருத்துவ பீடம் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmc76w60i0076qp4khyhg75fy
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
LUNCH 1st Test, Leeds, June 20 - 24, 2025, India tour of England India (48 ov) 471 & 153/3 England 465 Day 4 - Session 1: India lead by 159 runs. Current RR: 3.18 • Min. Ov. Rem: 66 • Last 10 ov (RR): 28/0 (2.80)
-
இஸ்ரேலிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன? இரானை குற்றம்சாட்டும் இஸ்ரேலை சூழ்ந்துள்ள 'மர்மம்'
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தெற்கு இஸ்ரேலில் உள்ள டிமோனா அணுஉலை கட்டுரை தகவல் எழுதியவர், அலிசியா ஹெர்னாண்டஸ் பதவி, பிபிசி முண்டோ 23 ஜூன் 2025, 01:22 GMT இஸ்ரேலிடம் அணு ஆயுதம் 1960கள் முதலே இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒரு ரகசியம். ஆனாலும் இதனை இஸ்ரேல் ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ததில்லை. கடந்த வாரம் இரான் மீது ராணுவ தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. "அணு ஆயுதத்தை தயாரிக்கும் நிலையை இரான் எட்டியிருக்கிறது" என இஸ்ரேல் குற்றம் சாட்டியது. பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி இரான் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், இரு நாடுகளிடையேயான போராக மாறியது. அமைதி ஆராய்ச்சிக்கான சுயாதீன அமைப்பான அமைதிக் கல்விக்கான டாலஸ் மையத்தின் (Dallas Center for Peace Studies) ஆராய்ச்சியாளரான முனைவர் ஜேபியர் பிகஸ் பேசுகையில், "மத்திய கிழக்கில் அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரே நாடு இஸ்ரேல் தான்" என்று கூறினார். சர்வதேச அணுசக்தி முகமையின் தகவல்படி, யுரேனியத்தை செறிவூட்டுவதில் 60 சதவிகிதத்தை இரான் எட்டியுள்ளது. ஆனால் பிகஸ் அளிக்கும் விளக்கத்தின்படி, "அணு ஆயுதத்தை தயாரிக்க யுரேனியம் 90 சதவிகிதத்துக்கு மேல் செறிவூட்டப்பட்டிருக்க வேண்டும்" இஸ்ரேல் ஒருபோதும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. மாறாக, இரான், அமெரிக்கா மற்றும் ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. இதன் பொருள் என்னவென்றால், அணு ஆயுதங்கள் தொடர்பான எந்த ஆய்வுக்கும் இஸ்ரேல் அணு சக்தி மையங்களை உட்படுத்த முடியாது. இதன் காரணமாகத் தான் இஸ்ரேலின் அணு ஆயுதங்கள் தொடர்பான எந்த தகவல்களும் கசியவிடப்படுவதன் மூலமே பெறப்படுகின்றன. அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தித்துறை மற்றும் அணு சக்தி குறித்து கண்காணிப்பு மேற்கொள்ளும் சர்வதேச முகமைகள் மூலமாகவே இந்த தகவல்கள் வெளிப்படுகின்றன. இது தவிர, இஸ்ரேலின் அணுசக்தி திட்டங்களில் வேலை பார்த்து, பின்னர் அங்கிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவரான அணு பொறியாளர் மாவ்டுகாய் வானுனு 1986ம் ஆண்டு சன்டே டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியின் மூலமாகவும் பல தகவல்கள் கிடைத்தன. இஸ்ரேலிடம் அணு ஆயுதத்திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது என்பதை முதன்முதலில் வெளிப்படுத்திய இவர், பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டார். அமிமுட் அல்லது வேண்டுமென்றே தெளிவற்ற நிலை பட மூலாதாரம்,AFP/GETTY IMAGES படக்குறிப்பு, அணு ஆயுதங்கள் குறித்து "தெளிவின்மை" கொள்கையை கடைபிடிக்கும் இஸ்ரேல் இஸ்ரேலின் அணு ஆயுதம் குறித்த அதிகாரப்பூர்வ கொள்கையானது அமிமுட் (Amimut) என்ற ஹீப்ரு மொழி வார்த்தையால் குறிப்பிடப்படுகிறது. இதற்கு வேண்டுமென்றே தெளிவின்மையை ஏற்படுத்துதல் என பொருள் கொள்ளலாம். அதாவது, ஏற்கெனவே கூறியது போன்று அணு ஆயுதம் இருக்கிறதா என்பதை இஸ்ரேல் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. "இஸ்ரேலின் இந்த அணுகுமுறை அணு யுகத்தில் தனித்துவமானது என கருதலாம்" என, பிரிட்டனின் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்க்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் ஆவ்னெர் கோஹன். இவர் அணு ஆயுத பரவலை தடுப்பதற்கான கல்விகளுக்கான பேராசிரியர் என்பதோடு, இஸ்ரேல் அணு திட்டங்கள் குறித்த நிபுணராகவும் அறியப்படுகிறார். இந்த திட்டம் முற்றிலும் புதிது அல்ல இஸ்ரேலின் அதிபராகவும், பிரதமராகவும் இருந்துள்ள ஷிமோன் பெரஸ் தமது நினைவுக் குறிப்புகளில் இதனை எழுதியுள்ளார்: "தெளிவின்மைக்கு அசாதாரணமான சக்தி இருக்கிறது. சந்தேகம் என்பது இரண்டாவது ஹோலோகாஸ்ட்டை திட்டமிடுபவர்களுக்கு எதிரான சிறந்த தடுப்பரணாக இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார். கோஹன் கூறுகையில், "அணு சக்தி குறித்த தெளிவின்மை இஸ்ரேலின் மூலோபாய மற்றும் ராஜீய ரீதியான சாதனை" என குறிப்பிடுகிறார். அவரது கருத்தின்படி, சர்வதேச சமூகத்தின் மறைமுக ஒப்புதலுடன் கூடிய இந்த திட்டமானது "இஸ்ரேல் இரண்டு சூழ்நிலைகளிலும் பலனடைய உதவி செய்கிறது" என கூறியுள்ளார். "இஸ்ரேல் வேண்டுமேன்றே தெளிவற்ற தன்மையைத் தேர்வு செய்துள்ளது. இந்த நாடு அணுஆயுத பரவலை தடுப்பதற்கான எந்த ஒப்பந்தத்திலும் இணையவில்லை. இதனால் சர்வதேச அமைப்புகளின் எந்த ஆய்வுக்கும் உட்பட வேண்டியதில்லை" என பிபிசி முன்டோவிடம் கூறியுள்ளார் ஜேபியர் பிகஸ். "ராணுவ விவகாரங்களில் இஸ்ரேல் மட்டுமல்ல, உலகின் பல நாடுகள் வெளிப்படைத் தன்மை இல்லாமல் தான் உள்ளன. ஆனால், இஸ்ரேல் அணுசக்தி சார்ந்த விவகாரங்களிலும் வெளிப்படைத்தன்மை இன்றி இருக்கிறது " என்கிறார் பிகஸ். அவர் மேலும் கூறுகையில், "இஸ்ரேலின் பார்வையிலிருந்து இதனை அணுகும்போது, இந்த தெளிவின்மை அதன் விருப்பங்களை பாதுகாக்கிறது" என்கிறார். "இதில் உண்மை என்னவென்றால், இஸ்ரேலிடம் அணுசக்தி திட்டம் உள்ளது என்பது நமக்கு தெரியும், அந்நாட்டிடம் குண்டுகள் உள்ளன என்பதும் தெரியும். அவற்றை பயன்படுத்தும் திறனும் அந்நாட்டுக்கு இருக்கிறது என்பதையும் நாம் அறிவோம்" என பிகஸ் கூறுகிறார். பட மூலாதாரம், AHMAD GHARABLI/AFP/GETTY IMAGES "இந்த தெளிவின்மை வெளியிலிருந்து வந்த தகவல்களால் தான் உடைக்கப்பட்டது. இஸ்ரேல் ஒருபோதும் இதனை மறுக்கவோ, ஒப்புக்கொள்ளவோ இல்லை" என தமது அறிக்கையில் கூறும் கோஹன், "இந்த கொள்கை தனது இருப்பியலுக்கு எதிரான அச்சுறுத்தலில் இருந்து தற்காப்பு அளிப்பதோடு, அணு ஆயுதங்களை வைத்திருப்பதற்கு எதிரான அரசியல் பின்விளைவுகளிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் அணு ஆயுதங்களை வைத்திருப்பதற்காக அரசியல், ராஜ்ஜீய மற்றும் தார்மீக விலைகளையும் இஸ்ரேல் கொடுப்பதில்லை" என கோஹன் கூறுகிறார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆதரவு பத்திரிகையான 'இஸ்ரேல் ஹாயோம்' அந்நாட்டில் மிகப்பெரிய சந்தாதாரர்களைக் கொண்ட இலவச பத்திரிகையாக அறியப்படுகிறது. இந்த இதழில் வெளியான நீண்ட கட்டுரையில் இஸ்ரேல் தனது அணு சக்தி திறன் குறித்து ஏன் எச்சரிக்கையாக இருக்கிறது என விளக்கப்பட்டுள்ளது. இந்த பத்திரிகையின் கருத்துப்படி, "அணு ஆயுதப் பரவலை எந்த விலை கொடுத்தேனும் தடுக்க வேண்டும் என்பது தான் இஸ்ரேலின் முதன்மை இலக்கு" என கூறப்பட்டுள்ளது. தெளிவின்மை கொள்கையின் ஆதரவாளர்களின் கூற்றுப்படி, "இந்த அணுகுமுறையை கைவிடுவது மத்தியக் கிழக்கில் அணு ஆயுதப்போட்டி விரிவடைவதற்கும், ஆயுதப் போட்டிக்கும் ஊக்கியாக அமையும்" என கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் பரவலை தடுப்பதற்கான மையத்தின் வாதம் வேறாக உள்ளது. வெளிப்படைத் தன்மையற்று இருப்பது "மத்தியக் கிழக்கில் பேரழிவு ஆயுதங்கள் இல்லாத சூழலை ஏற்படுத்த தடையாக இருப்பதாக" அந்த மையம் கூறுகிறது. இஸ்ரேலிடம் அணுசக்தி திட்டம் இருப்பதை எப்படி அறியலாம்? பட மூலாதாரம்,SATELLITE IMAGE (C) 2020 MAXAR TECHNOLOGIES/GETTY IMAGES படக்குறிப்பு, நெகெவ் அணு ஆராய்ச்சி மையத்தின் செயற்கைக்கோள் புகைப்படம் இஸ்ரேலின் அணுசக்தித்திறன் குறித்த முதல் தகவலானது 1962ம் ஆண்டு அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகத்தின் குறிப்பாணை ஒன்றின் மூலம் வெளிப்பட்டது. இதில், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே 1950களில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் தெற்கு இஸ்ரேலின் டிமோனா நகரத்தில் அணு மின் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. "பிரான்ஸ் உடனான ஒத்துழைப்பு என்பது புளூட்டோனியத்தை உற்பத்தி செய்யும் அணுஉலையை கட்டமைப்பது" என்கிறார் பிகஸ். கூகுள் வரைபட உதவியுடனான தேடுதலின் முடிவில், "நெகெவ் அணு ஆராயச்சி மையம்" டிமோனா நகரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் பாலைவனத்தின் நடுவே இருப்பதாக அறிய முடிகிறது. முதலில் இந்த வளாகத்துக்கு ஜவுளி தொழிற்சாலை, உலோகவியல் ஆராய்ச்சி மையம், வேளாண் வளாகம் என பல்வேறு அறிமுகங்கள் கொடுக்கப்பட்டன. சில காலத்துக்குப் பிறகு 1960களில் அப்போதைய இஸ்ரேல் பிரதமரான டேவிட் பென் குரியன், நாட்டின் அணுசக்தி திட்டம் குறித்து பொதுவெளியில் அறிவித்தார். இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில், அணு ஆராய்ச்சி மையமானது "அமைதி நோக்கங்கள்" கொண்டிருப்பதாகக் கூறினார். அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தித் துறைகளின் விசாரணை அறிக்கைகள், "இஸ்ரேலிடம் அணு ஆயுத திட்டம் இருக்கிறது என்பதை தெளிவாக காட்டுகின்றன" என்கிறார் பிகஸ். ரகசிய ஆவணங்களாக இருந்து பின்னர் வெளியிடப்பட்ட சில ஆவணங்களின் மூலம், குறைந்தது 1975 வரையிலும் இஸ்ரேல் அணு ஆயுதங்களை தயாரித்தது என்பதில் அமெரிக்க அரசு உறுதியாக இருந்தது என்பது தெரியவந்துள்ளது. ஆனால், இஸ்ரேலின் அணுசக்தி திட்டங்கள் குறித்த வரலாற்றில் முக்கிய திருப்புமுனையானது ஒரு நபரின் பெயருடன் தொடர்புடையது: அவர் தான் மாவ்டுகாய் வானுனு சன்டே டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டி பட மூலாதாரம், DAN PORGES/GETTY IMAGES படக்குறிப்பு, டிமோனா அணுசக்தி மையத்தில் பணியாற்றிய வானுனு 1980களில் இஸ்ரேலின் அணுசக்தி திட்டங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாயின. வானுனு டிமோனா அணு உலையில் 1985ம் ஆண்டு வரையிலும் 9 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளார். அங்கிருந்து வெளியேறும் முன்னதாக வளாகத்தை இரண்டு முறை முழுமையாக புகைப்படம் எடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் அணு ஆயுத தயாரிப்புக்காக கதிரியக்கத் தன்மை கொண்ட பொருட்கள் பிரித்தெடுக்கப்படுவது மற்றும் தெர்மோநியூக்ளியர் ஆயுத வடிவமைப்புக்கான ஆய்வகங்களையும் காட்டின. 1986ம் ஆண்டில் ஆஸ்திரேலியா சென்ற வானுனு அணுசக்தி எதிர்ப்பு அமைப்பினரை சந்தித்தார். கொலம்பியாவைச் சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளரான ஆஸ்கர் கெரேரோவைச் சந்தித்த போது, இந்த புகைப்படங்களை வெளியிட சம்மதித்தார். இதன் மூலமாக வானுனு பிரிட்டிஷ் சன்டே டைம்ஸ் இதழுக்கு வேலை பார்க்கும் பீட்டர் ஹன்னம் எனும் பத்திரிகையாளரை சந்தித்தார். பிபிசியின் "விட்னஸ் டூ ஹிஸ்டரி" நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்த பீட்டர் இந்த தகவல்களை வெளியிடுவதன் மூலம், இஸ்ரேல் சர்வதேச அழுத்தத்துக்கு ஆளாகி அணுசக்தி திட்டத்தை நிறுத்தும் என வானுனு நம்பினார் என கூறினார். ஆனால், இந்த நம்பிக்கை எதுவும் நிறைவேறவில்லை. இந்த நிகழ்ச்சியில் வெளியான தகவல்களின்படி, அணுசக்தி குறித்த தகவல் வெளியானதும் வானுனு கடத்தப்பட்டு, போதை மருந்து கொடுக்கப்பட்டு இஸ்ரேல் கொண்டு செல்லப்பட்டார். விசாரணைக்குப் பின்னர் தேசத் துரோகம் மற்றும் உளவு பார்த்து இஸ்ரேலின் அணு ஆயுத ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டுக்காக 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2004ம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். அப்போது பேசிய அவர், தனது செயலுக்காக "மகிழ்ச்சியும் பெருமையும்" அடைவதாகக் கூறினார். ஆனால் அவர் விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறியதற்காக மீண்டும் தண்டிக்கப்பட்டார். இம்முறை வெளிநாட்டினருடன் பேசவும், இஸ்ரேலை விட்டு வெளியேறவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டது. வானுனு வெளிப்படுத்திய பின்னர் இஸ்ரேலிடம் அணு ஆயுத திட்டம் இருப்பது வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இஸ்ரேலிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன? பட மூலாதாரம், RONEN ZVULUN/POOL/AFP/GETTY IMAGES மாவ்டுகாய் வானுனு வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், அந்நாளில் இஸ்ரேலிடம் 100 முதல் 200 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டது. தற்போதைய சூழலில் ஸ்டாக் ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம் போன்ற, அணு செயல்பாட்டு கண்காணிப்பு நிறுவனங்களின் மதிப்பீட்டின்படி, இஸ்ரேலிடம் சுமார் 90 அணு ஆயுதங்கள் இருக்கலாம். இந்த ஆயுதங்களை தயாரிப்பதற்கான புளூட்டோனியம் டிமோனாவில் உள்ள நெகெவ் அணு ஆராய்ச்சி மையத்தில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இஸ்ரேலால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட தகவல்களின்படி, இந்த அணு உலையானது 26 மெகாவாட் திறனுடைய வெப்ப உலையைக் கொண்டுள்ளது. ஆனால், இதன் உண்மையான திறன் இன்னும் அதிகமாக இருக்கலாம் என சிலர் நம்புகின்றனர். இஸ்ரேலின் மற்ற பகுதிகளில் உள்ள அணு திட்டங்களைப் போன்று இந்த உலையானது சர்வதேச அணுசக்தி முகமையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டதல்ல. பாதுகாப்பு நெறிமுறைகளானது அணு கட்டமைப்புகள் அமைதியான நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதோடு வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதை தடை செய்கிறது. ஆனால், இஸ்ரேல் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் கொடுக்காத போது, அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை எப்படி கணக்கிட முடியும்? "சர்வதேச அமைப்புகள் அணு திட்டங்களை கண்காணித்து, ஆண்டுதோறும் ஆயுதங்கள் குறித்த மதிப்பீடுகளை வழங்குகின்றன" என்கிறார் பிகஸ். "குறைவான தகவல்களையே கொண்டிருக்கும் இஸ்ரேல் மற்றும் வடகொரியா போன்ற நாடுகளைப் பொருத்தவரையிலும், கடந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட யுரேனியம் மற்றும் புளூட்டோனியத்தின் உத்தேச அளவு மதிப்பிடப்பட்டு இதன் மூலம் அணு ஆயுதங்கள் கணக்கிடப்படும்" என பிகஸ் விளக்குகிறார். அணு உலைகள் இயங்கிய நேரம் மற்றும் அவற்றின் திறன் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, இவற்றில் தயாரிக்கப்படும் அணு பிளவு பொருளின் அளவு மதிப்பிடப்படுகிறது. சுமார் 50 அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வடகொரியாவுக்கோ அல்லது இஸ்ரேலுக்கோ பின்பற்றப்படும் இந்த அணுகுமுறையானது முற்றிலும் புதிது அல்ல. 2011-ல் நியூ ஸ்டார்ட் ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்பு , அணு உலைகளில் காலமுறைப்படியான ஆய்வுகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் கட்டாயமாக்கப்படவில்லை. அப்போது, சர்வதேச அமைப்புகள் சோவியத் ஒன்றியம் அமெரிக்காவிடம் இருக்கும் அணு ஆயுதங்களை தோராயமாகவே கணக்கிட்டன என்று பிகஸ் கூறுகிறார். "இந்த மதிப்பீடுகள் பின்னாளில் ஆய்வு நடத்தப்பட்டு வெளியான அறிக்கைகளுடன் ஒத்துப்போயின. எனவே, இஸ்ரேலுக்கான தற்போதைய கணக்கீடு உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் என நாம் கூறலாம்" என பிகஸ் கூறுகிறார். அணு ஆயுதமற்ற நாடாக மாற முடியுமா? பட மூலாதாரம்,REUTERS 2012-ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இஸ்ரேல் தனது அணுசக்தி திட்டங்களை சர்வதேச ஆய்வுக்கு அனுமதிக்குமாறு வலியுறுத்தியது. இஸ்ரேலை அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இணைய வலியுறுத்தும் இந்த தீர்மானத்துக்கு எதிராக இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் கனடா வாக்களித்தன. 1970-ஆம் ஆண்டு இந்த அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இரான் கையெழுத்திட்டது. சமீப நாட்களில் இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவது குறித்து இரான் நாடாளுமன்றம் ஆலோசித்து வருவதாக, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் இஸ்மாயில் பாகெய் குறிப்பிட்டார். மறுபுறம் மத்திய கிழக்கு பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக அறிவிக்கும் தீர்மானமானது ஐ.நா. பொதுச்சபையில் அவ்வப்போது முன்மொழியப்படுகிறது. "இந்த முன்மொழிவை இஸ்ரேல் மறுத்துவிட்டதோடு, இதனை தனது இறையாண்மை மீதான தாக்குதல்" என்றும் விமர்சிக்கிறது என்கிறார் பிகஸ். அவரது கூற்றுப்படி, ஐக்கிய நாடுகள் அவையின் ஆயுதக்குறைப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் பத்திரிகை காப்பக அறிக்கைகளின்படி, இதுபோன்ற கட்டுப்பாடுகள் பிராந்தியத்தில் உள்ள உண்மையான அபாயங்களை குறைக்காது என இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது. ஜேபியர் பிகஸ் வலியுறுத்துவது என்னவென்றால், "எந்த ஒரு நாடு அணு ஆயுதங்களை வைத்திருப்பதும் கவலை அளிக்கக்கூடியது தான். ஏனென்றால், இந்த ஆயுதங்களை வைத்திருப்பது இயல்பாகவே ஆபத்தானது" என்கிறார். "ஆனால் உண்மையில் இஸ்ரேல், ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானங்களை மீண்டும் மீண்டும் மீறி வருகிறது. சர்வதேச சட்டங்கள், மனிதாபிமான சட்டங்களை தொடர்ந்து புறக்கணிக்கும் இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. வேறு எந்த நாடும் அவற்றைத் தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியுது என்பது இந்த விஷயத்தை இன்னும் கவலையடையச் செய்கிறது" என பிகஸ் கூறுகிறார். இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cnvm326v8njo
-
'ஆட்சியில் பங்கு, கூடுதல் இடங்கள்': கூட்டணிக் கட்சிகளால் திமுகவுக்கு நெருக்கடியா?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 23 ஜூன் 2025, 06:31 GMT புதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு என்கிற குரல்கள் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. விசிகவைத் தொடர்ந்து காங்கிரசிலும் ஆட்சியில் பங்கு என்ற பேச்சுகள் வந்துள்ளன. "கடந்த முறை 25 தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்தமுறை அதிக தொகுதிகளை தி.மு.க-விடம் கேட்போம். பேச்சுவார்த்தையின்போது, அமைச்சரவையில் பங்கு கேட்போம்" - என்று கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ-வும் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவருமான ராஜேஷ்குமார் கூறியுள்ளார். இதனை மறுக்கும் தி.மு.கவே, 'கூட்டணி ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள்' என்று கூறுகிறது. கூட்டணிக் கட்சிகளால் தி.மு.க-வுக்கு நெருக்கடியா? தமிழ்நாட்டு அரசியலில் என்ன நடக்கிறது? 'ஆட்சியில் பங்கு ' கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் தங்களுக்கு குறைவான தொகுதிகளே ஒதுக்கப்பட்டதாக அப்போதே காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் முணுமுணுப்புகள் எழுந்தன. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் இப்போதே பேசத் தொடங்கியுள்ளனர். படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 20) செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், "கடந்த முறை 25 தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்தமுறை அதிக தொகுதிகளை தி.மு.க-விடம் கேட்போம்" என்றார். "காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி. தமிழ்நாட்டின் நிலவரத்தை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களிடம் தெரிவித்துள்ளோம். பேச்சுவார்த்தை நடக்கும் போது, 'அமைச்சரவையில் பங்கு வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும்' என்று கேட்போம்" என அவர் குறிப்பிட்டார். "துணை முதல்வர் பதவி...தராவிட்டால் மாற்று வழி" பட மூலாதாரம்,FACEBOOK/KRISHNAMURTHY படக்குறிப்பு, குறைந்தது 40 இடங்களைப் பெற வேண்டும் என்பதில் தலைமை உறுதியாக இருக்க வேண்டும் என்கிறார், பொன்.கிருஷ்ணமூர்த்தி இதே கருத்தை பிபிசி தமிழிடம் முன்வைத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, "கடந்த தேர்தலில் குறைவான தொகுதிகளை முடிவு செய்ததன் பின்னணியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் இருந்தார். தி.மு.க-வின் கோரிக்கையை ஏற்று குறைந்த இடங்களில் போட்டியிட்டோம்" எனக் கூறுகிறார். "ஆனால், 2026 தேர்தலில் குறைந்தது 40 இடங்களைப் பெற வேண்டும் என்பதில் தலைமை உறுதியாக இருக்க வேண்டும்" எனக் கூறும் பொன்.கிருஷ்ணமூர்த்தி, "அவ்வாறு கொடுக்காவிட்டால் மாற்று வழிகளை கட்சித் தலைமை ஆலோசிக்க வேண்டும். கூடவே, காங்கிரசுக்கு துணை முதலமைச்சர் பதவியும் தரப்பட வேண்டும்" என்கிறார். "தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு வலுவான கட்டமைப்பு உள்ளது. ஆட்சியில் பங்கு கொடுத்தால் தி.மு.க-வுக்கு அதன் பெருமை வந்து சேரும். கூட்டணி ஆட்சி என பா.ஜ.க கூறுகிறது. அவர்களே கூறும் போது, தமிழ்நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி கூறக் கூடாதா?" எனவும் பொன்.கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, "கூட்டணிக் கட்சிகளுக்கு தி.மு.க தொகுதிகளைக் குறைத்துக் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை" என்று மட்டும் பதில் அளித்தார். 'கூட்டணி யாருக்கு அவசியம்': மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் vs திமுக எதிர்க்கருத்தால் கூட்டணியில் பிளவா? தமிழ்நாட்டில் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்த பா.ம.க., இந்த நிலைக்கு வந்தது ஏன்? கமலுக்கு சீட், வைகோவுக்கு இல்லை - திமுக முடிவு ஏன்? அதிமுகவில் என்ன நடக்கிறது? "தனித்து நின்று வெற்றி பெற முடியாது" சமீப நாட்களாக, தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க, இடதுசாரிகள் ஆகிய கட்சிகள், 'அதிக தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம்' எனப் பேசி வருகின்றன. ஜூன் 10 அன்று மா.கம்யூ., கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், "2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதால் குறைவான தொகுதிகளைக் கேட்டுப் பெற்றோம். அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை" என பேட்டி ஒன்றில் தெரிவித்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தை அதிகரிக்க வேண்டும் எனக் கட்சியின் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். "தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க செயல்படுத்தினாலும் தனித்து நின்று வெற்றி பெறுவது சாத்தியமில்லை" எனக் கூறிய பெ.சண்முகம், "அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணியாக நின்று தேர்தலை எதிர்கொள்ளும் போது தி.மு.க தரப்பிலும் கூட்டணியாக நின்றால் மட்டுமே வெற்றி பெற முடியும்" எனக் கூறினார். பெ.சண்முகத்தின் கருத்தை வரவேற்று செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், "அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய தேவை, தி.மு.க-வுக்கு இருக்கிறது. அவர்களும் கூடுதல் இடங்களில் வெற்றி பெற வேண்டிய விருப்பத்தில் இருப்பார்கள்" எனக் கூறினார். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கைக்குப் பதில் அளித்த திருமாவளவன், "கூட்டணி ஆட்சி என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. வேண்டாம் என்ற நிலைப்பாடும் இல்லை. ஆனால், அந்தக் கோரிக்கையை வைக்கும் சூழல் கனியவில்லை" எனவும் தெரிவித்தார். "12 தொகுதிகள்" - துரை.வைகோ பட மூலாதாரம்,X/DURAIVAIKO படக்குறிப்பு, தங்கள் கட்சிக்கு குறைந்தது 12 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் அங்கீகாரம் கிடைக்கும் எனக் கூறுகிறார், ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை.வைகோ. ஜூன் 22 அன்று ஈரோட்டில் நடைபெற்ற மதிமுகவின் 31வது பொதுக்குழு கூட்டத்தில், "2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து கூடுதல் தொகுதிகளைப் பெற்று, வென்று, மதிமுக தேர்தல் அங்கீகாரம் பெற வேண்டும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. "தங்கள் கட்சி குறைந்தது 12 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் அங்கீகாரம் கிடைக்கும்" எனக் கூறுகிறார், ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை.வைகோ. "எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக மாறும்" "தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெறக் கூடிய அணியாக, தி.மு.க கூட்டணி உள்ளது. இதில் அதிக இடங்களைப் பெறுவதற்கான முயற்சிகள் இருக்கும். ஆனால், ஒதுக்கப்படும் இடங்களில் எத்தனை இடத்தில் கூட்டணிக் கட்சிகள் வெற்றிப்பெறப் போகிறார்கள் என்பது முக்கியம்" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் சிகாமணி. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கும் இடங்களில் அவை பாதிக்கும் குறைவாக வெற்றி பெற்றால் அது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக மாறும் சூழல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,FACEBOOK/SIGAMANI படக்குறிப்பு, எத்தனை இடத்தில் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது முக்கியம் எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் சிகாமணி. "உதாரணமாக, 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் அதிக இடங்களை பெற்றாலும் காங்கிரஸ் கட்சியால் குறைந்த இடங்களில் மட்டும் வெற்றி பெற முடிந்தது. இதை மனதில் வைத்தே தி.மு.க இடங்களை ஒதுக்கும்" எனவும் சிகாமணி திருப்பதி குறிப்பிட்டார். 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 63 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 5 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. தி.மு.க 119 இடங்களில் போட்டியிட்டு 23 இடங்களில் வெற்றி பெற்றது. 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. தேர்தல் முடிவில் எட்டு தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. தி.மு.க-வுக்கு 89 தொகுதிகள் கிடைத்தன. "தொகுதிகளை ஒதுக்குவது மட்டுமல்ல, அந்தத் தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளை வெற்றி பெற வைக்கவும் தி.மு.க அதிகம் உழைக்க வேண்டிய நிலை உள்ளது" எனக் கூறுகிறார், சிகாமணி திருப்பதி. "வெற்றி மட்டுமே அளவுகோல் கிடையாது" பட மூலாதாரம்,FACEBOOK/MK STALIN இந்தக் கருத்தை மறுத்துப் பேசும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி, "தேர்தலில் ஒரு கட்சியின் வெற்றி, தோல்வியை வைத்து கூட்டணியை முடிவு செய்ய முடியாது" எனக் கூறுகிறார். 2016 சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க, ம.தி.மு.க, த.மா.கா, இ.கம்யூ, மா.கம்யூ ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணியாக போட்டியிட்டன. "தி.மு.க தோல்வியடைவதற்கு இந்தக் கூட்டணியும் ஒரு காரணமாக இருந்தது. சுமார் ஒன்றரை சதவிகித வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. தேர்தலில் வெற்றி மட்டுமே அளவுகோல் கிடையாது. அதிகாரத்தில் பங்கு என்பதை நியாயமான கோரிக்கையாகவே பார்க்கிறேன்" எனக் கூறுகிறார் ஆர்.மணி. "காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை கூடுதல் இடங்களைக் கொடுக்காவிட்டால் கண்டிப்பாக பிரச்னை வரும். கூடுதல் இடங்களைத் தருவதைத் தவிர தி.மு.க-வுக்கு வேறு வழியில்லை" எனவும் ஆர்.மணி குறிப்பிட்டார். 'ஆட்சியில் பங்கு' என்ற காங்கிரஸின் கோரிக்கை குறித்துப் பேசும் ஆர்.மணி, " கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்கின்றனர். ஆனால், வெற்றி பெற்ற பிறகு நாங்கள் மட்டுமே அதிகாரத்தில் இருப்போம் என்பதை ஏற்க முடியாது" என்கிறார். "மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்தை தி.மு.க வைக்கிறது. ஆனால், அதிகாரத்தில் பங்கு என்பது தான் ஜனநாயகமாக இருக்கும். ஒரு கட்சி ஓர் இடத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும்" எனக் கூறுகிறார் ஆர்.மணி. தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை பா.ஜ.க தொடர்ந்து முன்வைப்பதாகக் கூறும் ஆர்.மணி, "இது நியாயமான கோரிக்கை. இதை பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகளும் முன்வைக்கின்றன" என்கிறார். "ஸ்டாலினால் சமாளிக்க முடியாது" - ஆர்.மணி 2006 சட்டமன்றத் தேர்தலில் 132 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க 96 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 36 பேரும் பா.ம.க உறுப்பினர்கள் 18 பேரும் தி.மு.க அரசுக்கு ஆதரவு கொடுத்தனர். இதை மேற்கோள் காட்டும் ஆர்.மணி, "2026 தேர்தலில் அப்படியொரு நிலை வந்தால் தி.மு.க தலைமையால் எதிர்கொள்ள முடியாது. வெளியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் அதிகாரத்தில் பங்கு கேட்கும். கருணாநிதியைப் போல ஸ்டாலினால் சமாளிக்க முடியாது" எனக் கூறுகிறார். "கூட்டணி ஆட்சி அமைவது தமிழ்நாட்டுக்கு நல்லது" எனக் கூறும் ஆர்.மணி, "மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சி அமைத்தாலும் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளது. அதேபோல், மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்." என்கிறார். "தமிழ்நாடு மக்கள் ஏற்க மாட்டார்கள்" - தி.மு.க பட மூலாதாரம்,FACEBOOK/CONSTANTINE படக்குறிப்பு, அதிகாரத்தில் பங்கு என்ற கருத்து ஏற்புடையதல்ல. அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் - தி.மு.க செய்தித் தொடர்புத் துறை செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் "அதிகாரத்தில் பங்கு என்ற கருத்து ஏற்புடையதல்ல. அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள்" எனக் கூறுகிறார், தி.மு.க செய்தித் தொடர்புத் துறை செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன். "மாநிலத்தில் கூட்டாட்சி என்பதை மக்கள் ஏற்பதில்லை. ஒருவர் ஆளும் போது மட்டுமே தெளிவான முடிவை எடுக்க முடியும் என நினைக்கிறார்கள். கூட்டணி ஆட்சியாக இருந்தால் முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்படும்" எனவும் அவர் குறிப்பிட்டார். 1980 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சரிபாதியாக தொகுதிகளை பிரித்துக்கொண்டு தி.மு.க-வும் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டதை நினைவுகூர்ந்து பேசிய கான்ஸ்டன்டைன், "அந்தக் கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை. 2011 தேர்தலில் குறைவான தொகுதிகளில் தி.மு.க போட்டியிட்டபோதும் மக்கள் ஏற்கவில்லை" என்கிறார். பட மூலாதாரம்,FACEBOOK/VCK படக்குறிப்பு, எளிய மக்களுக்கு அதிகாரம் என்பதை திருமாவளவன் முன்வைத்தார். தற்போதும் அவர் உறுதியாக இருக்கிறார். ஆனால், அது 2026 தேர்தலுக்குப் பொருந்துமா என்பது கிடையாது எனக் கூறிவிட்டார் - கான்ஸ்டன்டைன் "தவிர இது ஒன்றும் புதிய கோரிக்கை அல்ல" எனக் கூறும் கான்ஸ்டன்டைன், "கட்சி தொடங்கும் போதே, எளிய மக்களுக்கு அதிகாரம் என்பதை திருமாவளவன் முன்வைத்தார். தற்போதும் அவர் உறுதியாக இருக்கிறார். ஆனால், அது 2026 தேர்தலுக்குப் பொருந்துமா என்பது குறித்து அவர் ஏதும் கூறவில்லை." என்கிறார். அதிக இடங்களை கேட்பதன் மூலம், ஏற்கெனவே கொடுத்ததை குறைத்துவிட வேண்டாம் என கூட்டணிக் கட்சிகள் உணர்த்துவதாக கான்ஸ்டன்டைன் தெரிவித்தார். "கூட்டணிக் கட்சிகள் கேட்பதைப் போல தி.மு.க-வினரும் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று நினைப்பார்கள். தற்போதுள்ள எண்ணிக்கையே தொடரலாம் அல்லது சிறிய அளவில் மாற்றம் இருக்கலாம். அதைத் தலைமை முடிவு செய்யும்" என்கிறார், பேராசிரியர் கான்ஸ்டன்டைன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpqn91pp95qo
-
செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்!
நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடர வேண்டும் : செம்மணியில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் Published By: DIGITAL DESK 2 23 JUN, 2025 | 04:58 PM தமிழ் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளை உலக நாடுகள் அறிந்திருந்தாலும் நீதிக்காக மக்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்க வேண்டும் என யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார். செம்மணியில் திங்கட்கிழமை (23) ஆரம்பித்த அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உணர்வுபூர்வமான நிகழ்வில் கலந்து கொண்டுள்ளோம். தமிழ்மக்களின் வாழ்வில் நிண்டகால ஏற்படுத்தப்பட்ட பல அழிவுகளுக்கு நிநீகோரி இப்போராட்டம் நடாத்தப்படுகிறது. இது மக்களின் மனங்களில் அழியாத தாகமாக இருக்கிறது. இதுவரை காலமும் நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதனை உலக மக்கள் அனைவரும் சேர்ந்து செயற்படுத்த முன்வர வேண்டும். உலக நாடுகள் எல்லாம் எங்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளை அறிந்திருந்தாலும் அதைப்பற்றி எந்தவிதமான நீதியும் கிடைக்காமல் மக்கள் நிண்டகாலமாக அணையாத தாகத்தோடு அலைந்து கொட்டிருக்கிறார்கள். ஆகவே இவற்றுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தோடு இந்த அணையா தீபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . குறிப்பாக நாங்கள் நிக்கின்ற செம்மணி பிரதேசத்திலே மனித புதை குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. பல அப்பாவி மக்களது மனித எலும்புக்கூடுகள், எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுவரும் இந்த சூழலில் இந்த நிகழ்வு மிகவும் முக்கியமானதாகும். காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுகின்ற இந்த வேளையில் யுத்தத்தின் இறுதி நாட்களில் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று தேடுகின்ற, கேள்விகேட்கின்ற இந்த நாட்களில் மனித புதை குழிகள் பயங்கரமான ஒரு பதிவுகளை, கதைகளை எங்களுக்கு செல்லிக் கொண்டிருக்கின்றன. ஆகவே இவற்றை நாங்கள் உதாசினம் செய்து கொண்டிருக்காது இந்த அரசாங்கமும் உலக நாடுகளும் இந்த சந்தர்பத்தில் மக்கள் எதிர்பார்க்கின்ற நியாயமான நீதியை வழங்க வேண்டும். இனிமேலும் தாமதிக்க கூடாது, நீதியை பெறுவதற்கு தடையாக இருக்கின்ற எல்லாவிதமான தடைகளையும் நீக்கி நியாயமான முறையில் நீதிகிடைக்க வேண்டி இப்போராடம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் உணர்வோடு பங்குபற்றி இப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/218238
-
இலங்கையில் இதுவரை 20 மனித புதைகுழிகள் : செம்மணி புதைகுழியின் மர்மம் துலங்குமா?
Published By: PRIYATHARSHAN 19 JUN, 2025 | 04:06 PM வீ. பிரியதர்சன் உங்கள் பிள்ளை, உடன்பிறந்தவர், கணவன், மனைவி அல்லது பெற்றோர் என ஒரு அன்புக்குரியவர் காணாமல்போனதை கற்பனை செய்து பாருங்கள், அவர்களை மீண்டும் கொண்டுவர அல்லது குறைந்தபட்சம் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிய நீங்கள் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள், அதற்குப் பதிலாக உங்கள் வேண்டுகோள்கள் செவிடர் காதுகளில் விழுகின்றன. அரசாங்கங்களும் புரட்சிகளும் வந்துபோயின. அனைத்தும் நீதியை உறுதியளித்தன. ஆனால் இறுதியில் அந்த நீதியை வழங்கத் தவறிவிட்டன. ஆயினும் இலங்கையின் வடக்கு, கிழக்கில் 3 மூவாயிரம் நாட்களுக்கு மேலாக காணாமல்போனவர்களின் உறவினர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர் நீதிக்காக. ஆம், இந்நிலையிலேயே 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதி பாரிய மனிதப் புதைகுழியாக யாழ்ப்பாணத்தின் அரியாலைப் பகுதியிலுள்ள செம்மணி - சிந்துப்பாத்தி பகுதி அறிவிக்கப்பட்டது. அங்கு 19 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீண்டும் அங்கு அகழ்வாராய்ச்சி தொடங்கும் போது மேலும் பல எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 19 எலும்புக்கூடுகளில் 3 பிறந்த குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அல்லது பத்துமாதத்திற்கும் குறைவான குழந்தைகளின் எலும்புக்கூடுகள், மனித புதைகுழிகளின் 40 வீதத்தினை மாத்திரமே இதுவரை அகழ்ந்துள்ளோம். செயற்கோள் படங்கள் மற்றும் ஆளில்லா விமான படங்கள் மூலம் இரண்டாவது மனித புதைகுழி இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளுக்கு தலைமைதாங்கும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ்சோமதேவ கூறுகிறார். 1996 ஆம் ஆண்டில் கிருஷாந்தி குமாரசாமி வழக்கில் தண்டனை பெற்ற ஒரு இராணுவ சிப்பாயால் 1998 ஆம் ஆண்டில் முதன் முதலில் அம்பலப்படுத்தப்பட்டது செம்மணி புதைகுழி. இதையடுத்து 1999 ஆம் ஆண்டு அங்கு இடம்பெற்ற ஆகழ்வின்போது 15 எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவற்றில் சில எழும்புக்கூடுகள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன. இருப்பினும் அந்தக்காலப்பகுதியில் நீதி நிறுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக வடக்கு, கிழக்கைச் சேர்ந்த குடும்பங்கள் முக்கியமாக தாய்மார்கள் மற்றும் கணவனை தொலைத்த மனைவிமார்கள் தங்கள் காணாமல்போன அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை ஏந்தி நீதி கோரி தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அண்மையில் செம்மணியில் உள்ள சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் முன் போராட்டத்தை நடத்திய வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினர், சர்வதேச மேற்பார்வை மற்றும் சர்வதேச தரநிர்ணயங்களுக்கு அமைய மனிதப் புதைகுழியின் அகழ்வினை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியதுடன் இது ஒரு தனியான சம்பவமல்ல. இது குறித்த விசாரணைகள் மற்றும் அகழ்வுகள் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய முழு உண்மையையும் வெளிக்கொணர உதவும்" என கூறினர். இந்நிலையில், “ செம்மணி மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகள் சர்வதேச நடைமுறைகளை பின்பற்றி இடம்பெறுவது அவசியம் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தவர்களுக்கு நீதியையும் உண்மையையும் வழங்கும் நோக்கமாக அமைய வேண்டுமென்று சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டு மையம் (CHRD), காணாமல் போனவர்களின் குடும்பங்கள் (FoD), இலங்கை ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (JDS), கொழும்பு சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் - இலங்கை (ITJP) ஆகியன இணைந்து கடந்த 2023 இல் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல்களில், உடல்கள் புதைக்கப்பட்ட பல மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளதாகவும் ஆனால் இதுவரை 20 இடங்களில் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் இருந்து பகுதியளவில் மனித எச்சங்கள், எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இன்றுவரை தங்கள் அன்புக்குரியவர்களை தொலைத்த எந்தவொரு குடும்பமும் மனித எச்சங்களை பெறவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி குறித்து அரசாங்கமும் தென்னிலங்கை ஊடகங்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரும் மௌனமாக இருக்கின்றமை வலிகளை ஆழமாக்குவதுடன் இலங்கையின் ஒற்றுமை மற்றும் அமைதிக்கான வாய்ப்பை அச்சுறுத்துவதாக அமைகின்றது. எனவே அரசாங்கம் செம்மணி புதைகுழி அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கி, சர்வதேச தடயவியல் தரங்களை உறுதிப்படுத்த வேண்டும். காணாமல்போனோருக்கான அலுவலகம் போன்ற நிறுவனங்களை இயங்க வைப்பதன் மூலம் உண்மைகளை ஏற்றுக்கொண்டு நம்பிக்கையை கட்டியெழுப்பி, கடந்த காலத்தில் விட்ட தவறுகளை மீண்டும் நிகழாமல் தடுக்கலாம். கடந்த 1971 மற்றும் 1987, 1989 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஜே.வி.பி. கிளர்ச்சிகளின் போது, தெற்கிலுள்ள சிங்களக் குடும்பங்கள் சூரியகந்த மற்றும் மாத்தளை புதைகுழிகளில் இழந்த அன்புக்குரியவர்களை நினைத்து வேதனையையை எதிர்கொண்டனர். அண்மையில் சர்வதேச தொலைக்காட்சி நேர்காணல் மூலம் வெளிச்சத்துக்கு வந்த படலந்த விவகாரம் பொதுமக்களின் சீற்றத்தை தூண்டியது. ஆனால் இடம்பெற்ற அட்டூழியங்களுக்கு எந்தப்பொறுப்பும் அளிக்கப்படவில்லை. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என நாம் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அழுதோம். அப்படியானால் நாம் ஏன் செம்மணியிலிருந்து விலகிச்செல்கின்றோம் ? கடந்த காலத்தை எதிர்கொள்வது பிரிவினை அல்ல, அது ஒற்றுமைக்கான பாதையாகும். நல்லிணக்கம் என்பது எமது கடந்த காலத்தின் கொடூரங்களை மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான எமது கேடயம், மேலும் பொருளாதார மீட்சிக்கான பாதையும் கூட. நல்லிணக்கம் தான் முன்னோக்கிச் செல்லும் பாதை, அத்துடன் கடந்த கால தவறுகளுக்கு பொறுப்பேற்பது உண்மையைத் தேடுவதற்கும் உண்மையான குணப்படுத்தலுக்கும் இன்றியமையாதது. https://www.virakesari.lk/article/217915
-
இரான் மீது அமெரிக்கா தாக்குதல்
இரானை தாக்கி டிரம்ப் கையில் எடுத்த பேராபத்து என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஆண்டனி ஜுர்சர் பதவி, வட அமெரிக்க செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் "அமைதியை நிலைநாட்டுபவராக" இருப்பேன் என்ற வாக்குறுதியுடன் ஜனவரி மாதம் வெள்ளை மாளிக்கைக்கு திரும்பிய அதிபர் டொனால்ட் டிரம்ப், இரான் - இஸ்ரேல் இடையே நடைபெறும் இடர்கள் மிகுந்த மோதலில் அமெரிக்காவை திணிக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்த போரில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டுள்ளது. இதன் முலம் பதவியேற்றது முதல் மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டுவருவதற்கு மாறாக, பெரிய போரின் விளிம்பில் இந்த பிராந்தியத்தை டிரம்ப் அழைத்து சென்றுள்ளார். அமெரிக்க படைகள் இரானில் உள்ள மூன்று அணு ஆயுத நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சமூக ஊடகங்கள் மூலம் அறிவித்த இரண்டு மணி நேரத்தில் வெள்ளை மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய டிரம்ப், அந்த தாக்குதல் "அற்புதமான வெற்றியை," பெற்றதாக தெரிவித்தார். இந்த நகர்வு, இரான் ஒரு அணு ஆயுத சக்தியாக வளரக்கூடிய வாய்ப்பு இல்லாத ஒரு நீடித்த அமைதிக்கான கதவைத் திறக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். உச்சபட்ச பாதுகாப்பு கொண்ட தனது ஃபொர்டோ அணு ஆயுத நிலையத்திற்குச் சிறிய சேதங்கள்தான் ஏற்பட்டதாக இரான் தெரிவித்துள்ளது. எந்த தரப்பு சொல்வது உண்மை என்பதற்கு காலம் பதில் சொல்லும். அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடாவிட்டால், "மிகவும் மோசமான மற்றும் மிக எளிதான" தாக்குதல்களை எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரிடும் என துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்பு செயலாளார் பீட் ஹெக்செத் ஆகியோர் புடைசூழ, டிரம்ப் இரானுக்கு எச்சரிக்கை விடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மத்திய கிழக்கு ஏற்கனவே "விளிம்பில்" இருப்பதாக குறிப்பிட்டார் ஐநா பொதுச் செயலாளர் ஆந்தோனியோ குத்தேரஸ் இன்னமும் "பல இலக்குகளில் எஞ்சியிருப்பதாக" கூறிய டிரம்ப், அமெரிக்கா அவற்றை "வேகம், துல்லியம் மற்றும் திறனுடன்," தாக்கும் எனக் கூறினார். டிரம்ப்பின் வீரவேசமாக பேச்சுக்கள் ஒரு பக்கம் இருந்தாலும். இரானில் அமெரிக்க ராணுவம் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டால் அது அமெரிக்கா, அந்தப் பிராந்தியம் மற்றும் மொத்த உலகுக்குமே மிக மோசமான சூழ்நிலையாக அமையக்கூடும். மத்திய கிழக்கு ஏற்கனவே "விளிம்பில்" இருப்பதாக குறிப்பிட்ட ஐநா பொதுச் செயலாளர் ஆந்தோனியோ குத்தேரஸ், மோதலைத் தீவிரப்படுத்தும் அமெரிக்காவின் முடிவால் ஒரு சுழற்சியான குழப்பநிலை ஏற்படும் என எச்சரித்தார். அமெரிக்கா தாக்கினால் பதிலடி தரப்படும் என ஆயதுல்லா அலி காமனெயி எச்சரித்தது போல் இரான் பதிலடி தந்தால் – அதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயத்தை அமெரிக்க தரப்பு உணரக்கூடும். பி-2 போர் விமானம், ஜிபியூ- 57: இரானை தாக்க அமெரிக்கா இந்த ஆயுதங்களை இரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு - டிரம்ப் கூறியது என்ன? அமெரிக்க தாக்குதலில் இரான் அணுசக்தி தளங்களில் ஏற்பட்ட சேதம் என்ன? 5 கேள்வி-பதில்கள் காற்றில் பறந்த டிரம்ப்பின் இரண்டு வார எச்சரிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப்பின் வழக்கத்திற்கு மாறான முடிவு, தனது கட்சிக்குள் ஒற்றுமை இருப்பதாக காட்டிக்கொள்ளும் ஒரு முயற்சியாக இருக்கக்கூடும் இரான் "நிபந்தனையின்றி சரணடையவேண்டும்" என இந்த வாரத்தில் டிரம்ப் பேசியது அவர் மேலும் பின்வாங்குவதைக் கடினமாக்கும் ஒரு நிலைக்கு அவரைத் தள்ளக்கூடும். இரானும் தன் பங்குக்கு விடுத்த எச்சரிக்கைகள் காரணமாக அதே போன்றதொரு மூலையில் சிக்கிக்கொண்டிருக்கிறது. இப்படித்தான் போர்கள் தொடங்கி அதோடு தொடர்புடையவர்களின் கற்பனையையும், கட்டுப்பாட்டையும் மீறி பெரிதாகின்றன. வியாழக்கிழமை, இரானியர்களுக்கு டிரம்ப் இரண்டு வாரம் அவகாசம் கொடுத்திருந்தார், ஆனால் அது எதிர்பார்த்ததைவிட மிகக் குறுகிய காலமாக- வெறும் இரண்டு நாட்களாக மாறிப் போனது. தான் நடவடிக்கை எடுத்துவிட்டதாக டிரம்ப் சனிக்கிழமை இரவு அறிவித்தார். பேச்சுவார்த்தை நடத்துவதற்கு "இரண்டு வாரம் அவகாசம்" என்பது வெறும் ஏமாற்றுதானா? இரானியர்களுக்குப் போலியான ஒரு பாதுகாப்பு உணர்வை கொடுக்கும் முயற்சியா? அல்லது அமைதி பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப்பால் நியமிக்கப்பட்ட ஸ்டீவ் விட்காஃப் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததா? தாக்குதலுக்குப் பிந்தைய உடனடி தாக்கம் குறித்து அதிகம் தெரியவில்லை. ஆனால் தனது சமூக ஊடகப் பதிவு மற்றும் தனது தொலைக்காட்சி உரை மூலம் அமைதிக்கான கதவை திறக்க டிரம்ப் முயற்சி செய்தார். ஆனால் இது அதீத நம்பிக்கையின் வெளிப்பாடாக இருக்கலாம். இரானின் ராணுவ வலிமையைக் குறைக்க இஸ்ரேல் கணிசமான முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், ஆயதுல்லாவிடம் இன்னமும் ஆயுதங்கள் உள்ளன. நிலைமை வேகமாக மோசமடையக் கூடும். இப்போது காத்திருப்பு தொடங்குகிறது. தனது அணு ஆயுத திட்ட மகுடத்தின் முத்தாக கருதப்படும் ஃபோர்டோ உட்பட மூன்று நிலைகள் மீதான தாக்குதல்களுக்கு இரான் எப்படி பதிலளிக்கப்போகிறது? அமெரிக்க தாக்குதல்கள் பேச்சுவார்த்தையில் இரான் மேலும் இறங்கிவர வழிவகுக்கும் என டிரம்ப் நம்புவதாக தோன்றுகிறது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதலில் இருக்கும் போது பேச்சுவார்த்தை நடத்த விரும்பாத ஒரு நாடு, அமெரிக்கா குண்டுமழை பொழியும் போது பேசுவதற்கு தயாராக இருக்குமா என்பது கேள்விக்குறிதான். அமெரிக்காவின் தாக்குதல் தனித்துவமான வெற்றி பெற்றதாக டிரம்ப் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. அப்படி இல்லாவிட்டால், மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கான அழுத்தம் அதிகரிக்கும், மிகக் குறைந்த ராணுவ வெற்றிக்கு டிரம்ப் அதிக அரசியல் அபாயங்களை எதிர்கொள்ள நேரிடும். டிரம்ப் சந்திக்கும் அரசியல் எதிர்வினைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் தனது நடவடிக்கையை எடுத்துவிட்டார். ஆனால் இது எங்கு இட்டுச் செல்லும் என்பது அவரது கட்டுப்பாட்டில் இல்லை. உள்நாட்டு அரசியல் கவலைகளுடன் சர்வதேச பாதுகாப்பும் இந்த அபாயங்களில் அடங்கும். இரான் மீதான அமெரிக்க தாக்குதல் என்ற கருத்துக்கு ஜனநாயக கட்சியினர் மட்டுமல்லாது, டிரம்பின் "அமெரிக்கா முதலில் (America First)," இயக்கத்திற்குள்ளேயும் ஏற்கனவே கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. தனக்கு நெருக்கமான மூன்று ஆலோசகர்கள் உடன் தனது உரையை நிகழ்த்திய டிரம்ப்பின் வழக்கத்திற்கு மாறான முடிவு, தனது கட்சிக்குள் ஒற்றுமை இருப்பதாக காட்டிக்கொள்ளும் ஒரு முயற்சியாக இருக்கக்கூடும். குறிப்பாக வெளியுறவு கொள்கையில் அமெரிக்கா மேலும் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை வெளிப்படையாக பேசிக்கொண்டிருக்கும் வான்ஸ், டிரம்ப் இன்னமும் பிற நாடுகளின் விவகாரங்களில் தலையீடு செய்யாதவர்தான் எனவும் அவரது ஆதரவாளாவர்கள் அவரை நம்ப வேண்டும் எனவும் அண்மையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார். இந்த தாக்குதல் ஒருமுறை நடவடிக்கையாக இருந்தால், தனது சொந்த முகாமில் ஏற்பட்டுள்ள பிளவுகளை சீர்படுத்த டிரம்பால் முடியலாம். ஆனால் இது அமெரிக்காவை இதைவிட பெரிய மோதல்களுக்குள் இழுத்தால், அதிபர் தனது சொந்த தளபதிகள் மத்தியில் கலகத்தை எதிர்கொள்ள நேரலாம். தனது முதல் பதவிக்காலத்தில் போர் எதையும் தொடங்கவில்லை என மார்தட்டிக்கொண்டவரும், கடந்த ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது வெளிநாட்டு யுத்தங்களில் அமெரிக்காவை ஈடுபடுத்திய முந்தைய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பரப்புரை செய்தவருமான ஒரு அதிபருக்கு சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதல் ஒரு ஆக்ரோஷமான நடவடிக்கை. டிரம்ப் தனது நடவடிக்கையை எடுத்துவிட்டார். ஆனால் இது எங்கு இட்டுச் செல்லும் என்பது அவரது கட்டுப்பாட்டில் இல்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyq8550v4eo
-
இரான் மீது அமெரிக்கா தாக்குதல்
ஈரான் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்; இந்தியா ஒரு நட்பு நாடாக இருக்கும் - பிரதமர் மோடி Published By: VISHNU 22 JUN, 2025 | 08:42 PM ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (22) ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸ்கோவுடன் தொலைபேசியில் இந்த விவகாரம் குறித்து விவாதித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல்-ஈரானியப் போர் பத்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்கள் குறித்தும், நிலைமை மோசமடைவதைத் தடுக்க உரையாடல் மற்றும் ராஜதந்திரம் தேவை என்றும் இந்த அழைப்பு விவாதித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர தனது எக்ஸ் தளத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது; "ஈரான் ஜனாதிபதி பெசேகியுடன் பேசினேன். தற்போதைய நிலைமை குறித்து விரிவாக விவாதித்தோம். சமீபத்திய மோதல்களுக்கு நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தோம். பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கான முன்னோக்கி செல்லும் வழியாக, உடனடியாக பதற்றத்தைக் குறைத்தல், உரையாடல் மற்றும் ராஜதந்திரம் ஆகியவற்றுக்கான எங்கள் அழைப்பை மீண்டும் வலியுறுத்தினோம்." 45 நிமிட உரையாடலில், ஈரான் அதிபர் பெசேகி, பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு நன்றி தெரிவித்ததோடு, பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில் இந்தியா ஒரு நட்பு நாடாகவும் நண்பனாகவும் இருப்பதாகக் கூறினார். https://www.virakesari.lk/article/218166
-
யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரியின் T-10 கிரிக்கெட் சுற்றுப்போட்டி
யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி 175 ஆவது ஆண்டு நிறைவு மாபெரும் கால்பந்தாட்டப் போட்டி : சென் ஹென்றிஸ் கிண்ணத்தை சுவீகரித்தது Published By: VISHNU 22 JUN, 2025 | 06:47 PM யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி 175 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரான்ஸ் பழைய மாணவர் சங்க ஆதரவில் அகில இலங்கைரீதியில் அழைக்கப்பட்ட கல்லூரிகளுக்கு இடையில் நடாத்திய அணிக்கு 07 பேர் கொண்ட மாபெரும் காற்பந்தாட்டப் போட்டியின் இறுதியாட்டம் சென் பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது. இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி.(A-அணி)யும் இளவாலை சென் ஹென்றீஸ் கல்லூரி அணியும் தலா 01:01 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிய வெற்றி தோல்வியை தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட. சமநிலை தவிர்ப்பு உதையில்( Penalty) சென் ஹென்றிஸ் கல்லூரி சென் பற்றிக்ஸ் கல்லூரியை 04(05) : 01 (05) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சென் பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆண்டு நிறைவு கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. சென் பற்றிக்ஸ் கல்லூரி ( A-அணி) காலிறுதியாட்டத்தில் மன்னார் சென் சேவியர்ஸ் கல்லூரி அணியை 05:01 என்ற கோல்கணக்கிலும், அரையிறுதியாட்டத்தில் மன்னார்- நானாட்டான் சென் டிலாசால் கல்லூரியை 03:02 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218165
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
DRINKS 1st Test, Leeds, June 20 - 24, 2025, India tour of England India (15 ov) 471 & 64/1 England 465 Day 3 - Session 3: India lead by 70 runs. Current RR: 4.26 • Min. Ov. Rem: 23 • Last 10 ov (RR): 44/0 (4.40)
-
இரான் மீது அமெரிக்கா தாக்குதல்
Iran Nuclear Site மீது US நேரடி தாக்குதல்; உச்சகட்ட பதற்றத்தில் Middle East - என்ன நடக்கிறது? இரான் இஸ்ரேல் மோதலில் புதிய திருப்பமாக இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இரான் சமாதானத்தை நாட வேண்டும் என்றும் பதில் தாக்குதல் தொடுத்தால் தங்களின் பதிலடி தற்போது நடத்தப்பட்ட தாக்குதலை விட மிக வலிமையானதாக இருக்கும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். மறுபுறம், தங்களின் இறையாண்மையை தற்காத்துக்கொள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் என இரான் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? #Iran #America #DonaldTrump இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
ஜனாதிபதி நிதியமூடாக கிளிநொச்சியில் வட மாகாண மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு
ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு Published By: DIGITAL DESK 2 22 JUN, 2025 | 05:14 PM கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன்படி வட மாகாணத்தில் 2023 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (22) முற்பகல் இரணைமடு நெலும் பியச கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இங்கு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் 2023 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் உயர் சித்தி பெற்ற முதல் 10 மாணவர்கள் வீதம், ஒரு மாவட்டத்தில் இருந்து 60 மாணவர்கள் தெரிவு செய்து, 300 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் 30 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த வேலைத்திட்டம் ஏனைய மாவட்டங்களிலும் நடைமுறைப்படவுள்ளது. இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக, ஜனாதிபதி நிதியத்தினை முறைமைப்படுத்தி, அதன் சேவைகளை விஸ்தரிப்பதற்கும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார். கடந்த கால நடைமுறைகளில் இருந்த தவறுகளை சீர்செய்து, இன்று அதன் நன்மைகளைப் பெற வேண்டியவர்களுக்கு அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர், ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை செயற்திறன் மிக்க வகையில் மாற்றுவதற்கு அதனை டிஜிட்டல் மயப்படுத்தவும், அதன் சேவைகளை பிரதேச ரீதியாகப் பரவலாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இங்கு குறிப்பிட்டார். பிள்ளைகள் வாழ்க்கையை வெல்வதற்கு கல்வியே பிரதான கருவியாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பிள்ளைகள் தமக்கு கிடைக்கும் இந்த நன்மைகளை சரியாகப் பயன்படுத்தி, கல்வியில் சிறந்து விளங்குவதோடு, சிறந்த பிரஜைகளாக வாழ்வில் வெற்றி பெறுவதுடன் அதேபோன்று, நாடும் தேசமும் வெற்றிபெறும் வகையில் பிள்ளைகள் செயற்பட வேண்டும் என்றும் மேலும் அவர் குறிப்பிட்டார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரும் இங்கு உரையாற்றினார்கள். யாழ் இந்துக் கல்லூரி மாணவன் அபிஷேக் இங்கு நன்றியுரை ஆற்றியதுடன், பொருளாதாரத்தில் சிரமம் உள்ள மாணவர்கள் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும், அதற்காக ஜனாதிபதிக்கும் ஜனாதிபதி நிதியத்திற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்,கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கே. இளங்குமரன், ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, எம். ஜகதீஸ்வரன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே, உட்பட ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள், பாதுகாப்புப் பிரிவு பிரதானிகள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/218157
-
வவுனியா மாநகர சபை உறுப்பினரின் முன் மாதிரியான செயற்பாடு
22 JUN, 2025 | 05:17 PM வவுனியா மாநகரசபை உறுப்பினர் ஒருவர் 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர் விநியோகம் தடைப்பட்டிருந்த பகுதிகளில் தனது சொந்த நிதியில் வாகனத்தை கூலிக்கு அமர்த்தி நீர் விநியோகம் மேற்கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. வவுனியா மாநகர சபையின் பண்டாரிக்குள வட்டார உறுப்பினரான சி.பிறேமதாஸ் என்பவராலேயே குறித்த வேலைத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை (22) மேற்கொள்ளப்பட்டது. வவுனியா நகரின் சில பகுதிகள், மன்னார் வீதி, குருமன்காடு, நகரசபை விடுதி, அரச விடுதிப் பகுதி உளளிட்ட சில பகுதிகளில் சனிக்கிழமை (21) பிற்பகல் 3 மணி முதல் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பினால் வழங்கப்படும் நீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டு சுமார் 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர் விநியோகம் தடைப்பட்டிருந்தது. இதனால் வர்த்தக நிலையங்கள், உணவகங்கள், அரச விடுதிகள், வீடுகள் என்பவற்றில் தமது அன்றாட செயற்பாடுகளுக்கு நீரைப் பெற்றுக் கொள்ள முடியாமல் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கினர். இந்நிலையில் வவுனியா மாநககர சபை உறுப்பினர் சி.பிறேமதாஸ் நீர்தாங்கி வாகனம் ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி அதன் மூலம் அப் பகுதியில் உள்ள மக்களது வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு தானே நீரை எடுத்துக் கொடுத்து மக்களது அவசர நீர்த்தேவையை பூர்த்தி செய்துள்ளார். இவரது முன்மாதிரியான செயற்பாடு மக்களது பாராட்டைப் பெற்றுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர் விநியோக குழாயில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த வெடிப்பு புகையிரத தண்டவாளத்திற்கு கீழ் உள்ள குழாயில் ஏற்பட்டுள்ளதால் புகையிரத திணைக்க அதிகாரிகள் வருகை தந்த பின்னரே அதனை சீர் செய்ய முடியும் என்பதாலேயே தாமத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிது. https://www.virakesari.lk/article/218156
-
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டது
Published By: VISHNU 22 JUN, 2025 | 08:52 PM யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென காற்றுடன் பெய்த மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) மாலை தென்னிந்திய இசை கலைஞர்களின் பங்கேற்புடன் இசை நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தனியார் நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் 5000, 3000 மற்றும் 2000 ரூபாய் பெறுமதியான நுழைவு சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு, நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இசை நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக, மங்கள விளக்கேற்றும் வேளை திடீரென கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமையால், நிகழ்வுக்காக போடப்பட்டிருந்த கதிரைகள், அருகில் இருந்த பந்தல்களின் தகரங்கள் என்பன காற்றினால் தூக்கி வீசப்பட்டமையால், பார்வையாளர்கள் அங்கிருந்து வெளியேறி சென்றனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமையால், நிகழ்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக ஏற்பாட்டளர்கள் அறிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/218169
-
சிஸ்ட்டர் அன்ரா
தூக்கம் குறைவு என நீங்கள் முன்னர் குறிப்பிட்டதற்கும் சிறுவயதில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்கும் தொடர்பிருக்கலாமோ? தொடருங்கள் சகோதரா.
-
இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்
கமிந்துவின் அரைச் சதத்தை ஷத்மான், ஷன்டோ அரைச் சதங்கள் விஞ்சின; இலங்கையை விட 187 ஓட்டங்களால் பங்களாதேஷ் முன்னிலை Published By: VISHNU 20 JUN, 2025 | 07:55 PM (நெவில் அன்தனி) காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது உலக டெஸ்ட் சம்பயின்ஷிப் மற்றும் இருதரப்பு டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் இலங்கையின் கமிந்து மெண்டிஸ் குவித்த அரைச் சதத்தை ஷத்மான் இஸ்லாம், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ ஆகியோரின் அரைச் சதங்கள் விஞ்சியதுடன் பங்களாதேஷ் முன்னிலையில் இருக்கிறது. போட்டியின் நான்காம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (20) இலங்கையை முதலாவது இன்னிங்ஸில் 485 ஒட்டங்களுக்கு ஆட்டம் இழக்கச் செய்த பங்களாதேஷ் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு அமைய 2ஆவது இன்னிங்ஸில் மேலும் 7 விக்கெட்கள் மீதம் இருக்க இலங்கையை விட 187 ஓட்டங்களால் பங்களாதேஷ் முன்னிலையில் இருக்கிறது. இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (20) பாடாலை மாணவர்கள் காலி கோட்டைக்கு மேலே உள்ள புல்வெளியில் இருந்து போட்டியைக் கண்டு களித்தமை விசேட அம்சமாகும். போட்டியின் ஐந்தாவதும் கடைசியுமான நாளைய தினம் சனிக்கிழமை (21) அதிசயம் நிகழ்ந்தாலன்றி இந்தப் போட்டி சுவாரஸ்யமற்ற முடிவை நோக்கி நகர்வதை தவிர்க்க முடியாது. பங்களாதேஷின் இரண்டாவது இன்னிங்ஸில் அனாமுல் ஹக் (4), மொமினுள் ஹக் (14) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். ஆனால், ஷத்மான் இஸ்லாம் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 76 ஓட்டங்களைப் பெற்றதால் பங்களாதேஷ் நல்ல நிலையை அடைந்தது. ஷத்மான் இஸ்லாமும் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவும் 3ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். தொடர்ந்து ஷன்டோ திறமையாகத் துடுப்பெடுத்தாடி இப் போட்டியில் இரண்டாவது தடவையாக 50 ஓட்டங்களுக்கு மேல் பெற்றதுடன் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் முஷ்பிக்குர் ரஹிமுடன் 49 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளார். ஷன்டோ 56 ஓட்டங்களுடனும் ரஹீம் 22 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்னனர். பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய, தரிந்து ரத்நாயக்க, மிலன் ரத்நாயக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். முன்னதாக, நான்காம் நாள் காலை தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 368 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 485 ஓட்டங்களைப் பெற்றது. அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா (19), குசல் மெண்டிஸ் (5) ஆகிய இருவரும் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (386 - 6 விக்.) அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ், மிலன் ரத்நாயக்க ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் பெறுமதியான 84 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஆனால் இருவரும் மொத்த எண்ணிக்கை 470 ஓட்டங்களாக இருந்தபோது ஆட்டம் இழந்தனர். கமிந்து மெண்டிஸ் தனது 13ஆவது டெஸ்டில் 5ஆவது அரைச் சதத்தைப் பூர்த்திசெய்து 87 ஓட்டங்களுடன் வெளியேறினார். மிலன் ரத்நாயக்க 39 ஓட்டங்களைப் பெற்றார். பின்வரிசையில் பிரபாத் ஜயசூரிய 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் நயீம் ஹசன் 121 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஹசன் மஹ்முத் 74 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/218025 டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உணர்ச்சிவசப்பட்டவராக விடைபெற்றார் மெத்யூஸ் : இலங்கை - பங்களாதேஷ் டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவு 22 JUN, 2025 | 04:44 AM (நெவில் அன்தனி) காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் இருதரப்பு டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியான ஏஞ்சலோ மெத்யூஸின் பிரியாவிடை டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் தனது கடைசி இன்னிங்ஸில் ஏஞ்சலோ மெத்யூஸ் 8 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டம் இழந்தார். போட்டி முடிவில் பேசிய அவர், 'நான் ஏற்கனவே எனது ஓய்வை அறிவித்ததிலிருந்து எனக்கு கிடைத்த பாசத்தை என்னால் நம்பமுடியவில்லை. நிச்சயமாக பாசத்தினால் நிரம்பியிருக்கிறேன். எனக்கு ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது ஒரு எளிதான பயணம் அல்ல. நிறைய மேடு பள்ளங்களை சந்தித்தேன். ஆனால், எனக்கு கிடைத்த ஆதரவின் காரணமாக அவற்றை எல்லாம் கடந்து என்னால் எனது டெஸ்ட் வாழக்கைப் பயணத்தை நிறைவு செய்ய முடிந்தது. வெளிப்படையாக (நான் உணர்ச்சிவசப்படுறேன்) கூறுவதென்றால், கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வடிவத்திலிருந்தும் நான் விளையாட விரும்பிய வடிவத்திலிருந்தும் ஓய்வு பெறுகிறேன். இங்கிருந்து இளையவர்கள் கிரிக்கெட்டில் தொடர வேண்டிய தருணம் இது. 'ஓர் அற்புதமான டெஸ்ட் போட்டியில் விளையாடியதற்காக பங்களாதேஷை வாழ்த்தவேண்டும். முஷி (முஷ்பிக்குர்), ஷன்டோ ஆகிய இருவரும் மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடினர். அதேபோன்று பெத்துமும் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார்' என்றார் மெத்யூஸ். தனது சொந்த கிரிக்கெட் வாழ்க்கையில் ஈட்டிய மகத்தான வெற்றிகளைப் பற்றி மெத்யூஸ் கூறுகையில், 'இங்கிலாந்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஈட்டிய வெற்றி, அவுஸ்திரேலியாவிற்கு எதிராக எமது சொந்த மண்ணில் 3 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் ஈட்டிய முழுமையான வெற்றி என்பன முக்கியமானவையும் மகத்தானவையுமாகும். அது முழு அணிக்கும் கிடைத்த மிகப் பெரிய கௌரவமாகும். எனக்கு ஒத்துழைப்பு நல்கிய சகல வீரர்களுக்கும் பயிற்றுநர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் அறிமுகமானது முதல் என்னோடு இருந்த அனைத்து இரசிகர்களுக்கும் நன்றி. மிக்க நன்றி' என்றார். இது இவ்வாறிருக்க, இப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பங்களாதேஷ் அணித் தலைவர் சதங்கள் குவித்தது விசேட அம்சமாகும். பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 296 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆட்டம் முடிவுக்குவந்த போது 4 விக்கெட்களை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பெத்தும் நிஸ்ஸன்க 24 ஓட்டங்களைப் பெற்றதுடன் கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் தலா 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீ;ச்சில் தய்ஜுல் இஸ்லாம் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக போட்டியின் கடைசி நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பங்களாதேஷ் 6 விக்கெட்களை இழந்து 285 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ ஆட்டம் இழக்காமல் 125 ஓட்டங்களையும் ஷத்மான் இஸ்லாம் 76 ஓட்டங்களையும் முஷ்பிக்குர் ரஹிம் 45 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க 102 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் 495 ஓட்டங்களையும் இலங்கை 485 ஓட்டங்களையும் பெற்றன. https://www.virakesari.lk/article/218092
-
ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் என்ன நன்மை? அதை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆட்டுக்கால் சூப் குடிப்பது எலும்புகளுக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல நன்மைகளை வழங்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர் கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் எதிர்பாராதவிதமாக எலும்பு முறிவு ஏற்பட்டால், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் ஆட்டுக்கால் சூப் வைத்து தினசரி குடிக்குமாறு வலியுறுத்துவார்கள். காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகளால் அவதிப்படும் போது, வீட்டில் ஆட்டுக்கால் சூப் வைத்துக் கொடுப்பார்கள். இப்படி, பல விஷயங்களுக்கு ஆட்டுக்காலை சூப் வைத்துக் குடிக்குமாறு வலியுறுத்தும் அளவுக்கு அதில் அப்படி என்ன இருக்கிறது? உண்மையாகவே ஆட்டுக்கால் சூப், நமது ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக எலும்பு மற்றும் மூட்டுகளுக்கு வலிமையை வழங்குகிறதா? இதைத் தெரிந்துகொள்ள ஊட்டச்சத்து நிபுணர்களிடம் பேசினோம். ஆட்டுக்கால் சூப் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? எலும்பின் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பாற்றலுக்குத் தேவையான, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துகள் ஆட்டுக்காலில் இருந்து கிடைப்பதாக ஹார்வர்ட் பொது சுகாதாரக் கல்லூரியில் வெளியான ஒரு கட்டுரை கூறுகிறது. ஆட்டு இறைச்சியில், குறிப்பாக அதன் கால் எலும்புகளில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நமது எலும்புகள், மூட்டுகள், முடி, சருமம், ஆற்றல், நோய் எதிர்ப்பாற்றல் என்று பல வகைகளில் நன்மை பயப்பதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ். ஆட்டுக்காலில் கொலாஜென் மற்றும் ஜெலட்டின் நிறைந்துள்ளதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக். இந்தக் கூறுகள், மூட்டு ஆரோக்கியத்திற்கு உதவுவதாகவும், மூட்டு வலிக்கு நிவாரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார். அதுமட்டுமின்றி கொலாஜென் சரும ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் உதவுவதாகக் கூறுகிறார் ரம்யா. அவரது கூற்றை ஆமோதிக்கும் வகையில் பேசிய திவ்யா சத்யராஜ், ஆட்டுக்கால்களில் இருக்கும் கோலாஜென், மூட்டுகளில் உயவுப் பொருளாகச் (lubricant) செயல்படுவதாகக் குறிப்பிடுகிறார். அதோடு, அவை சருமத்தில் சுருக்கம் போன்ற முதிர்ச்சி அடைவதால் ஏற்படும் அறிகுறிகளைக் குறைப்பதாகவும், ஆட்டுக்கால் சூப்பை தொடர்ச்சியாகப் பருகுவது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும் எனவும் தெரிவித்தார். படக்குறிப்பு,ஆட்டுக்காலில் இருக்கும் கோலாஜென் எலும்பு மற்றும் மூட்டுகளை வலுப்படுத்த உதவுவதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக் ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் எலும்புகள், சருமம் மட்டுமின்றி உடலின் பல செயல்பாடுகளைச் சீராக வைத்துக்கொள்ள உதவுவதாக விளக்கினார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா. அவரது கூற்றுப்படி, அதிலுள்ள கிளைசீன், ப்ரோலீன் போன்ற அமினோ அமிலங்கள், குடல் செயல்பாடுகளைச் சீராக்க உதவுவதோடு, கல்லீரல் செயல்பாட்டைச் சீரமைப்பதன் மூலமாக உடலின் நச்சு நீக்க செயல்முறையையும் பேணுகின்றன. "பாரம்பரியமாகவே, தமிழ்நாட்டில் காய்ச்சல், எலும்பு முறிவு போன்றவற்றை எதிர்கொள்ளும் நபர்களுக்கு, ஆட்டுக்கால் சூப் கொடுப்பது அறிவுறுத்தப்படுகிறது. அதற்குக் காரணம், வேகமாக குணமடைவதற்கான ஊட்டச்சத்து, வலிமை மற்றும் ஆற்றலை அவை வழங்குவதே" என்கிறார் ரம்யா. ஆட்டுக்கால் சூப் யாருக்கெல்லாம் நல்லதல்ல? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆட்டுக்காலில் அதிக கொழுப்புச் சத்து இருப்பதால், கொழுப்பு அதிகமாக இருப்பவர்கள் அதைத் தவிர்ப்பது நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர் ஆட்டுக்கால் சூப் உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைச் செய்தாலும் அவற்றில் கொழுப்பு அளவு அதிகம் இருப்பதால் அவற்றை இதய நோய், அதீத கொழுப்பு, உடல் பருமன் போன்ற பிச்னைகள் உள்ளவர்களுக்கு அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ரம்யா. அவற்றைச் சமைக்கும் விதத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்துகிறார் அவர். "முழுமையாகச் சுத்தப்படுத்தப்படாத எலும்புகளில் சால்மொனெல்லா அல்லது ஈ.கோலி போன்ற பாக்டீரிய தொற்றுகள் இருப்பதற்கான அபாயம் உள்ளது. ஆகவே, அவற்றைச் சுத்தப்படுத்துவதில் அதிக கவனம் தேவை" என வலியுறுத்தும் ரம்யா, நன்கு சமைக்கப்படாத ஆட்டுக்கால்களை உட்கொள்வதிலும் இத்தகைய ஆபத்துகள் இருக்க வாய்ப்புள்ளது என எச்சரிக்கிறார். உடலில் யூரிக் அமிலம் அதிகளவில் இருப்பவர்கள், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கெனவே சிறுநீரக பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் இதை எடுத்துக்கொள்வது சிறந்தது என்று அறிவுறுத்துகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக். பொதுவாக, ஆட்டுக்கால்களில் இருக்கும் முழு பயன்களையும் பெற வேண்டுமெனில், அவற்றை 10 முதல் 12 மணிநேரம் வரை, மெல்லிய வெப்பத்தில் தொடர்ச்சியாக வேகவைக்க வேண்டும் என்கிறார் அவர். படக்குறிப்பு,மிகக் குறைந்த உடல் எடை கொண்டவர்களுக்கு, சைனஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் நல்ல பயன்கள் கிடைப்பதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ் ஆனால், "இன்றைய வாழ்க்கை முறையில் அது சாத்தியமில்லை. வீட்டில் வழக்கமாகச் சமைக்கும் முறையில்கூட ஓரளவுக்கு அந்த ஊட்டச்சத்துகள் கிடைக்கும் என்பதால், வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை என்ற அளவில் சீராக எடுத்துக்கொண்டாலே அதன் பயன்கள் உடலுக்குக் கிடைக்கும்," என்று விளக்கினார். "சுமார் 10 மணிநேரம் தொடர்ந்து மிதமான சூட்டில் சமைப்பதன் மூலம் அவற்றில் இருக்கும் அனைத்து ஊட்டச்சத்துகளும் சுமார் 95% கிடைக்கும். ஆனால், அப்படித்தான் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று இல்லை. வழக்கமான முறையில் சமைத்துச் சாப்பிட்டாலே ஆட்டுக்காலில் இருக்கும் சத்துகள் 50 முதல் 75 சதவிகிதம் வரை உடலுக்குக் கிடைக்கும். எனவே 10 மணிநேரம் சமைக்க வேண்டும் எனக் கருதி அவற்றைத் தவிர்ப்பதைவிட, வழக்கமான முறையில் சமைத்து தொடர்ந்து உட்கொள்வது சிறந்தது," என்கிறார் திவ்யா. ஆட்டுக்கால் சூப் யாருக்கெல்லாம் அவசியம்? ஆட்டுக்கால்களில் கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதால், கொழுப்பு அதிகமுள்ள நபர்களுக்கு அதைப் பரிந்துரைப்பதில்லை எனக் கூறும் திவ்யா சத்யராஜ், ஆட்டுக்கால் சூப் எலும்புகளை மட்டுமின்றி கிட்டத்தட்ட மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுவதாகக் குறிப்பிட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கீமோதெரபி சிகிச்சையில் இருப்பவர்களுக்கான உணவுமுறையில் ஆட்டுக்கால் சூப்பையும் தான் பரிந்துரைப்பதாகக் கூறுகிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES "பொதுவாக கீமோதெரபி சிகிச்சையில் பல பக்கவிளைவுகள் உள்ளன. அதை மேற்கொள்வோரால் பெரிதாகச் சாப்பிட முடியாது. ஆனால் அவர்கள் நிச்சயமாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டாக வேண்டும். ஆட்டுக்கால் சூப்பில் அத்தகைய அனைத்து ஊட்டச்சத்துகளும் இருப்பதால் அதைப் பருகுவது ஆரோக்கியத்திற்கு உதவும்," என்றார். கீமோதெரபியால் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் குறையும் எனக் கூறிய திவ்யா, அதை மேம்படுத்த ஆட்டுக்கால் சூப் உதவும் என்பதும் தான் அதை அதிகம் பரிந்துரைக்க ஒரு காரணம் எனக் குறிப்பிட்டார். ஜிம் செல்பவர்கள் இதை உட்கொள்வது உடலை வலுப்படுத்துவதில் பெரிதும் உதவுவதாகக் கூறும் திவ்யா, புரோட்டீன் பவுடர் போன்றவற்றை உட்கொள்வதைவிட, இவற்றில் அதிக நன்மைகள் கிடைப்பதாகத் தெரிவித்தார். இவைபோக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள், உடல் எடைக் குறைபாடு உடையவர்கள், சைனஸ் பாதிப்பு உள்ளவர்கள், பலவீனமான எலும்புகளைக் கொண்டவர்கள் இதைச் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும் என்றும் விளக்கினார் திவ்யா. அதுமட்டுமின்றி, முடி உதிர்வு பிரச்னையைக் குறைப்பதிலும் இது பயனளிப்பதாகக் குறிப்பிடும் அவர், ஆட்டுக்கால்களில் இருக்கும் கோலாஜென் உள்படப் பல கூறுகள், பலவிதமான நன்மைகளை உடலுக்கு வழங்குவதாகக் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1ljg064e89o
-
குறைந்த செலவிலான தரமான வலுசக்தி உற்பத்திக்கு உலக வங்கி 150 மில்லியன் டொலர் நிதியுதவி
22 JUN, 2025 | 01:08 PM (நா.தனுஜா) இலங்கையில் தூய, தரமான, குறைந்த செலவிலான வலுசக்தி உற்பத்தி செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்காக 150 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவதற்கு உலக வங்கிக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது. இச்செயற்திட்டத்தின் ஊடாக இலங்கையினால் குறைந்த செலவில் பாதுகாப்பானதும், நிலைபேறானதுமான வலுசக்தியை உற்பத்தி செய்யமுடியும் எனவும், இது அதிக செலவில் இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருளில் நாடு தங்கியிருப்பதைக் குறைப்பதற்கும், சோலார் மற்றும் காற்று மூலமான வலுசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் உலக வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 'இச்செயற்திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் உள்ள குடும்பங்களுக்கும் வணிகங்களுக்கும் குறைந்த விலையில், தீங்கற்ற மின்சாரத்தை விநியோகிக்க முடியும். இந்த இலக்கை யதார்த்தபூர்வமாக அடைந்துகொள்வதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்துடனும் தனியார் துறையினருடனும் இணைந்து பணியாற்றுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்' என மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் டேவிட் சிஸ்லென் தெரிவித்துள்ளார். அதேவேளை வலுசக்தி உற்பத்தியில் இலங்கை அடையவிருக்கும் நிலைமாற்றமானது தூய வலுசக்தி உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கும், வலுசக்திக் கிடைப்பனவை மேம்படுத்துவதற்கும், நீண்டகால அடிப்படையிலான வலுசக்தி மீளெழுச்சியைக் கட்டியெழுப்புவதற்கும் வாய்ப்பாக அமையும் என சர்வதேச நிதிக்கூட்டுத்தாபனத்தின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் இமாத் என் ஃபகோரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/218131
-
இரான் மீது அமெரிக்கா தாக்குதல்
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்க தாக்குதலிற்கு முன்னர் ஈரான் அகற்றிவிட்டது - ரொய்ட்டர் 22 JUN, 2025 | 01:59 PM அமெரிக்காவின் தாக்குதலிற்கு முன்னர் ஈரான் தனது போர்டோ அணுஉலையிலிருந்து மிகவும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றிவிட்டது என ஈரானிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் இரகசிய இடமொன்றிற்கு மாற்றிவிட்டது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். போர்டோ அணுஉலையில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். நேற்று எடுக்கப்பட்ட செய்மதி படங்கள் போர்டோ அணுஉலைக்கு அருகில் நீண்டவரிசையில் டிரக்குகள் காணப்படுவதை காண்பித்துள்ளன. https://www.virakesari.lk/article/218135
-
பிரேசிலில் வெப்பக்காற்று பலூன் தீப்பற்றி விபத்து; 8 பேர் பலி
Published By: DIGITAL DESK 3 22 JUN, 2025 | 09:48 AM பிரேசிலின் சாண்டா கேடரினா மாநிலத்தில் பிரியா கிராண்டே நகரில் சனிக்கிழமை (21) காலை வெப்பக்காற்று பலூன் ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அதில் வெப்பக்காற்று பலூனில் பயணம் செய்த 21 பேரில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு, 13 பேர் காயமடைந்துள்ளனர். சாண்டா கேடரினா மாநில தீயணைப்புத் துறையின் தகவல்படி , சுற்றுலாவிற்குப் பயன்படுத்தப்பட்ட பலூன், காலை விமானப் பயணத்தின் போது திடீரென தீப்பிடித்தது. தீ விபத்துக்குப் பின்னர், பலூன் பிரியா கிராண்டே நகரில் தரையில் விழுந்தது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உள்ளூர் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்த 13 பேர் உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சுற்றுலாப் பயணிகளிடையே வெப்பக்காற்று பலூன்களின் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, சாவ் பாலோ மாநிலத்தில் வானத்திலிருந்து மற்றொரு பலூன் விழுந்ததில் 27 வயது பெண்ணெருவர் உயிழந்ததோடு, 11 பேர் காயமடைந்ததாக உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. https://www.virakesari.lk/article/218104
-
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் - அரசாங்கம் அனுமதி
நாளை இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் 22 JUN, 2025 | 01:02 PM (நா.தனுஜா) அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளைய தினம் நாட்டுக்கு வருகைதரவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள், ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர், மகாநாயக்க தேரர்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார். இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட மூன்று தசாப்தகால யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்க்ள, மனிதகுலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல்கள் தொடர்பில் இன்னமும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் காலநீடிப்பு செய்யப்பட்ட தீர்மானத்தின் ஊடாக நாட்டில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் 'பொறுப்புக்கூறல் செயற்திட்டம்' முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு திங்கட்கிழமை (23) நாட்டுக்கு வருகைதரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு மற்றும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் என்பன அறிவித்துள்ளன. முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செயிட் அல் ஹுஸைன் கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகைதந்திருந்தார். அதன் பின்னரான காலப்பகுதியில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஒருவர் நாட்டுக்கு மேற்கொள்ளும் நான்காவது விஜயமாக இது அமைந்திருக்கின்றது. அதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை வரை (26) நாட்டில் தங்கியிருக்கும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். அத்தோடு பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ மற்றும் ஏனைய முக்கிய அரச கட்டமைப்புக்களின் அதிகாரிகளையும் அவர் சந்திக்கவுள்ளார். அதேவேளை செவ்வாயன்று (24) மாலை 4.30 மணிக்கு பாராளுமன்றக் கட்சித்தலைவர்களை பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் சந்தித்துக் கலந்துரையாடவிருக்கும் வோல்கர் டேர்க், மாலை 5.30 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட சந்திப்பொன்றில் பங்கேற்கவுள்ளார். இச்சந்திப்புக்கு முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர், மதத்தலைவர்கள், இராஜதந்திரிகள் என சுமார் 300 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது. இதன்போது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல், செயற்திறன்மிக்க தீர்வுகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் என்பன உள்ளடங்கலாக பரந்தளவிலான மனித உரிமைசார் பிரச்சினைகள் குறித்தும், பொருளாதார நெருக்கடியின் விளைவாக மனித உரிமைகளின்மீது ஏற்பட்டிருக்கும் தாக்கங்கள் குறித்தும் உயர்ஸ்தானிகர் கலந்துரையாடல்களை முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. தலைநகர் கொழும்பில் சந்திப்புக்களை முடித்துக்கொண்டு கண்டிக்கு விஜயம் செய்யவுள்ள உயர்ஸ்தானிகர், அங்கு தலதா மாளிகையில் மதவழிபாடுகளில் ஈடுபடவிருப்பதுடன் அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து உரையாடவுள்ளார். அதனைத்தொடர்ந்து கிழக்கில் திருகோணமலைக்கும், வடக்கில் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ள அவர், அங்கும் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளார். மேலும் இவ்விஜயத்தின் முடிவில் எதிர்வரும் வியாழக்கிழமை (26) கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ள வோல்கர் டேர்க், அதில் தனது இலங்கை விஜயத்துடன் தொடர்புடைய அவதானிப்புக்களையும், வலியுறுத்தல்களையும் வெளியிடவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடருடன் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முடிவுக்குவரவுள்ள நிலையில், அதற்கு முன்பதாக மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகைதருவது செப்டெம்பரில் அவர் வெளியிடவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையின் காத்திரமான தன்மையை மலினப்படுத்தும் என்ற கரிசனையின் அடிப்படையில் அவரை இப்போது நாட்டுக்கு வருகைதரவேண்டாம் என வலியுறுத்தி உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் உருவாகியிருந்த எதிர்ப்புக்கு மத்தியிலேயே அவரது இவ்விஜயம் இடம்பெறவுள்ளது. https://www.virakesari.lk/article/218129
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் - தலைநகரில் பல கட்டிடங்கள் சேதம் 22 JUN, 2025 | 11:23 AM ஈரானின் புதிய தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலிய தலைநகரில் கட்டிடங்கள் பலத்தை சேதத்தை சந்தித்துள்ள என அவசரசேவையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இது பெரிய அளவிலான அழிவு பல இரண்டு மாடிக்கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன, சில தரைமட்டமாகியுள்ளன என இஸ்ரேலின் அவசரசேவை பிரிவு தெரிவித்துள்ளது. தரைமட்டமாகியுள்ள கட்டிடமொன்றையும் பெரும் சேதத்தை சந்தித்துள்ள ஏனைய கட்டிடங்களையும் காண்பிக்கும் வீடியோவை இஸ்ரேலின் அவசரசேவை பிரிவினர் வெளியிட்டுள்ளனர். அந்த பகுதியில் பல அவசரசேவை பணியாளர்களை காணமுடிகின்றது. வெடிபொருட்கள் மத்திய இஸ்ரேலில் விழுந்துள்ளதால் அப்பகுதிக்கு குண்டு அகற்றும் பிரிவினர் அனுப்பப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஹைபா நகரும் தாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானின் தாக்குதலை தொடர்ந்து ஆகக்குறைந்தது பத்து இடங்களிற்காவது அவசரசேவை பிரிவினரை அனுப்பியுள்ளோம் 10 பேர் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலின் அவசரசேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/218117
-
இரான் மீது அமெரிக்கா தாக்குதல்
அமெரிக்காவின் தாக்குதல் - நித்திய விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என ஈரான் எச்சரிக்கை 22 JUN, 2025 | 10:45 AM ஈரானின் அணுஉலைகள் மீதான அமெரிக்கா தாக்குதலை கண்டித்துள்ள ஈரானின் வெளிவிவகார அமைச்சர் இந்த தாக்குதலால் நித்திய விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார். இன்றுகாலை நிகழ்வுகள் மூர்க்கத்தனமானவை மேலும் அவை நித்திய விளைவுகளை ஏற்படுத்தும் என தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள அபாஸ் அரக்சி ஈரானிற்கு அதன் இறையாண்மையை பாதுகாப்பதற்காக அனைத்து சாத்தியப்பாடுகளையும் பயன்படுத்த தயார் என குறிப்பிட்டுள்ளார். ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினரான அமெரிக்கா ஈரானின் அமைதியான அணுஉலைகளை தாக்கியதன் மூலம் ஐநா சாசனம் சர்வதேச சட்டம் மற்றும் அணுஆயுத தடை பரவல் ஒப்பந்தம் என்பவற்றை கடுமையாக மீறியுள்ளது என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218111