Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பிறந்தநாள் வாழ்த்துக்கள் நுணாவிலான் அண்ணை, வளத்துடன் வாழ்க.
  2. 16 ஆண்டுகளில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றமாகப்படுகிறது அண்ணை. அவருடைய நெருங்கிய நட்புகளாவது முயன்று பார்க்கலாமே? அவர் நேரடிப்போராளி இல்லைத்தானே? மனித உரிமைச் செயற்பாட்டாளர் தானே?
  3. உயரந்த ஜனநாயகப் பண்புகளைக் கொண்ட நாட்டில் கைது செய்ததில் உள்ள முரண்களைச் சுட்டி வழக்குத் தாக்கல் செய்ய முடியாதா?!
  4. யாழ்ப்பாணம் (Jaffna) - பலாலி விமான நிலையத்துக்கு கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து சேவைகள் இடம்பெற்றால் சிறப்பானது என கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் (Eric Walsh) வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்ட இலங்கைக்கான கனடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் (High Commissioner for Canada) வடக்கு மாகாண ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சுற்றுலா துறையில் அபிவிருத்தி அவசியம். பாதை வலையமைப்பு மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. வருகை தரும் புலம்பெயர் தமிழர்கள்பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பயணிகள் கப்பல் போக்குவரத்து என்பவையும் சிறப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இலங்கைக்கு வருகை தரும் புலம்பெயர் தமிழர்கள், தமது பயண பொதிகளை பேருந்துகளில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவிட்டு கொழும்பிலிருந்து சென்னைக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைகின்றனர் என கனடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுவதாகவும் குறிப்பிட்ட தூதுவர் அரசாங்கம் கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மக்கள் ஆவலாக இருக்கின்றமையை தான் சந்தித்த சிவில் சமூகக் குழுக்களிடமிருந்து அறியகக் கூடியதாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து மற்றுமொரு விமான சேவை
  5. அண்ணை, எனக்கும் வருவதில்லை! என் புரிதலின்படி நமக்கு நாமே முகப்புத்தகம் போல விருப்பக் குறி இடக்கூடாதென!
  6. இலாபம் அடைவதற்காக நாடகம் ஆடுகிறார் அதானி : வெளியான குற்றச்சாட்டுமன்னார்(mannar) காற்றாலை மின் திட்டத்திலிருந்து அதானி விலகுவது இலாபகரமான முதலீட்டிற்காக நடத்தப்படும் நாடகம். காற்றாலை திட்டத்திலிருந்து அதானி(adani) நிறுவனம் விலகியிருப்பது குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவதற்காக மக்கள் போராட்டக் கூட்டணி நடத்திய சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் துமிந்த நாகமுவா(Duminda Nagamuwa) இவ்வாறு கூறினார். இலங்கையின்(sri lanka) மன்னார் பகுதியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய காற்றாலை மின்சார திட்டத்தை செயல்படுத்துவதில்லை என்று இந்தியாவின் அதானி குழுமம் முடிவு செய்துள்ளதாகவும், அதானி செயல்படுத்தவிருந்த திட்டம் ஆரம்பத்திலிருந்தே பொதுமக்களின் பெரும் எதிர்ப்பைச் சந்தித்ததாகவும் நாகமுவா கூறினார். மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்..!பரிந்துரைக்கப்பட்ட கேள்வி நடைமுறைக்கு புறம்பாக அதானி நிறுவனத்திற்கு திட்டத்தை வழங்கியதே பொதுமக்களின் போராட்டத்திற்கு அடிப்படையாக அமைந்தது என்றும், அதிக விலைக்கு திட்டத்தை வழங்கியதால் மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். முன்மொழியப்பட்ட காற்றாலை திட்டம் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற மதிப்பீடும், தொடர்புடைய திட்டத்தால் நாட்டின் இறையாண்மைக்கு ஏற்படும் சேதமும் சூழ்நிலையின் மிகவும் தீவிரமான அம்சங்கள் என்று நாகமுவா கூறினார். உலகின் 16 முக்கியமான பறவை இடப்பெயர்வு மண்டலங்களில் ஒன்றுஇந்தத் திட்டம் செயல்படுத்தப்பட முன்மொழியப்பட்டுள்ள மன்னாரில் உள்ள விடத்தல் தீவு பகுதி, காலநிலை மாற்றத்தின் போது உலகின் 16 மிக முக்கியமான பறவை இடம்பெயர்வு மண்டலங்களில் ஒன்றாகும் என்று துமிந்த நாகமுவ தெரிவித்தார். மேலும், 30 நாடுகளிலிருந்து 15 மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் இந்தப் பகுதி வழியாக நாட்டிற்குள் இடம்பெயர்வதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மன்னார் பகுதியில் சுமார் ஒரு மில்லியன் பறவைகள் சுற்றித் திரிவதால், சுற்றுச்சூழல் பிரச்சினையை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், இது உலகத்தின் மற்றும் இலங்கையின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதிக்கிறது என்றும், எனவே இதை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார். ஹம்பாந்தோட்டை மிகவும் பொருத்தமானதுமன்னார் பகுதியை விட காற்றாலை மின் திட்டத்தை செயல்படுத்த ஹம்பாந்தோட்டை(hambantota) மிகவும் பொருத்தமானது என்று மொரட்டுவ பல்கலைக்கழகம் செய்த சமன்பாடு தெரியவந்துள்ளதாகவும், அந்தப் பகுதி கைவிடப்பட்டு மன்னாரில் இது அமைக்கப்படுவது இங்கு இந்தியாவின் தலையீடு இருப்பதைத் தெளிவுபடுத்துகிறது என்றும் மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய நிர்வாக உறுப்பினர் துமிந்த நாகமுவ மேலும் தெரிவித்தார். இலாபம் அடைவதற்காக நாடகம் ஆடுகிறார் அதானி : வெளியான குற்றச்சாட்டு
  7. யாழ். பல்கலை மாணவனுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடை: நிர்வாகம் எடுத்த தீர்மானம்யாழ். பல்கலையின் 4ஆம் வருட சட்டத்துறை மாணவனுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடை மீள பெறப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் மாணவனுக்கு அறிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் நடைபெற்ற மூன்று வெவ்வேறு விடயங்களில் 09 மாணவர்களுக்கு வகுப்புத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறித்த வகுப்புத்தடை குறித்து, மாணவர் ஒன்றியத்தின் செயலாளராக அண்மைக்காலம் வரை செயலாற்றிய சட்ட பீட மாணவனான சி.சிவகஜனால் விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டது. பேராசிரியர் ரகுராம்அதனை அடுத்து தன்மீது பாரதூரமான அவதூறை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு சிவகஜன் செவ்வி வழங்கினார் என பேராசிரியர் ரகுராம் துணைவேந்தரிடம் முறைப்பாடு செய்திருந்தார். பேராசிரியர் எஸ்.ரகுராம் கலைப்பீடாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த மறுநாளே குறித்த முறைப்பாடு வழங்கப்பட்டது. இந்நிலையில் முறைப்பாட்டின் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி பல்கலைக்கழகத் துணைவேந்தரால் சட்டத்துறை மாணவன் சிவகஜனுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டது. மாணவன் மீதான வகுப்புத்தடைஇந்த வகுப்புத் தடை யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீடாதி எஸ்.ரகுராம் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய விதிக்கப்பட்டுள்ளது என்று துணைவேந்தரால் மாணவனுக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகுப்புத் தடையைச் சவாலுக்குட்படுத்தி யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் சிறிசற்குணராஜா, கலை பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு சட்டத்துறை மாணவன் சிவகஜனால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையிலையே மாணவன் மீதான வகுப்புத்தடை நீக்கப்பட்டுள்ளதாக மாணவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வகுப்புத்தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும், சட்ட விதிமுறைகளை மீறி மாணவனுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராகவும் , இழப்பீடு கோரியும் வழக்கினை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://ibctamil.com/article/law-student-s-suspension-lifted-1739700195#google_vignette
  8. பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் - எம்.ஏ.சுமந்திரன் உறுதிPublished By: DIGITAL DESK 2 16 FEB, 2025 | 02:05 PM பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை (16) அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையினை மூடுமாறு வலியுறுத்தி பெரியநீலாவனை பகுதியில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பகுதிக்கு இன்றைய தினம் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் ஆகியோர் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்று போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார்கள். இதன்போது குறித்த பகுதியில் சிலர் பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் குறித்த மதுபான நிலையத்தினை மூட நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தினார்கள். குறித்த மதுபான நிலையம் தொடர்பில் நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு ஒன்றிணை பெற்றுத்தர நடவடிக்கையெடுப்பதாக இதன்போது,ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் உறுதியளித்தார். இதன்போது குறித்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகைதந்தபோது சிலர் இங்கு அரசியல்வாதிகள் தேவையில்லையென சிலர் முரண்பட்டநிலையில் அப்பகுதியில் பதற்ற நிலைமைகள் ஏற்பட்டபோதிலும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து திரும்பிச்சென்றனர். பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் - எம்.ஏ.சுமந்திரன் உறுதி
  9. யாழ்ப்பாணம் (Jaffna) - சாவகச்சேரி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் தமிழினி சதீசன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் இன்று (16.2.2024) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். அண்மையில் தீயில் எரிந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital ) சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த உதவி பிரதேச செயலாளர் தமிழினி சதீசன் நேர்மையாக துடிப்புடன் மிகச் சிறந்த சேவைகளை சாவகச்சேரி பகுதி மக்களுக்கு வழங்கி வந்தவர் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். செய்திகள் - பிரதீபன் யாழில் பெரும் சோகம் - பெண் அரச அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
  10. செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு சென்ற கஜேந்திரகுமார்16 FEB, 2025 | 12:26 PM யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு கடந்த வியாழக்கிழமை (13) அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளன. அதனை அடுத்து, கட்டட வேலைகளை முன்னெடுத்த ஒப்பந்தக்காரர் , அது தொடர்பில் நல்லூர் பிரதேச சபை மற்றும் மயான அபிவிருத்தி சபையினருக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் , கட்டட பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. அந்நிலையிலையே நேற்று சனிக்கிழமை (15) நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். 1996ஆம் ஆண்டு சுண்டுக்குளி மாணவி கிருஷாந்தி உள்ளிட்ட 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை 1995ஆம் ஆண்டு மற்றும் 96ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட பலர் படுகொலை செய்யப்பட்டு , செம்மணி பகுதியில் உள்ள வயல்வெளிகளில் புதைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் பகுதிகள் குறித்த மயானத்தை அண்மித்த பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு சென்ற கஜேந்திரகுமார்
  11. இலங்கையில் சுமார் ரூ.8,700 கோடி மின் திட்டத்தை அதானி நிறுவனம் கைவிட்டது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையின் மன்னார் பகுதியில் முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்த காற்றாலை மின் திட்டத்தைக் கைவிட அதானி கிரீன் நிறுவனம் முடிவெடுத்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 15 பிப்ரவரி 2025 இலங்கையின் மன்னார் பகுதியில் முன்னெடுக்கப்பட இருந்த காற்றாலை மின்சார திட்டத்தைக் கைவிட அதானி நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன் பின்னணியில், இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் வாரத்தில் இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய மற்றும் இலங்கை தரப்பினர் இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்த தீர்மானித்துள்ளனர். இலங்கையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வாகன இறக்குமதி - விலை இரட்டிப்பாகும் என்ற அச்சம் ஏன்? இலங்கை சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு - நடுக்கடலில் என்ன நடந்தது? காற்றாலை மின் திட்டத்தைக் கைவிட தீர்மானம்மன்னாரில் முன்னெடுக்க திட்டமிடப்பட்ட காற்றாலை மின்சார திட்டத்தைக் கைவிட தீர்மானித்துள்ளதாக இந்தியாவின் அதானி நிறுவனம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்திலிருந்து வெளியேறவுள்ளதாக இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் அர்ஜீன் ஹேரத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. புதிய அரசாங்கத்தினால் இந்தத் திட்டத்தை மீள் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமையினால் இந்தத் திட்டத்தில் இருந்து வெளியேறத் தீர்மானித்ததாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் பகுதியில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 8,700 கோடி) முதலீட்டில் இந்தத் திட்டத்தை முன்னெடுக்க ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு இருந்தது. காற்றாலை மின் திட்டத்தை அதானி குழுமம் கைவிட்டது ஏன்?மன்னார் காற்றாலை மின்சார திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பல அனுமதிகள் கிடைத்துள்ள போதிலும், சுற்றாடல் ஆய்வு அறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமையினால், இந்த அறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, திட்டத்தில் இருந்து வெளியேறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குறிப்பு,இலங்கை மின்சார சபையின் காற்றாலைகள் இந்தத் திட்டம் குறித்து அரசாங்கத் தரப்புடன் கடந்த இரண்டு வருட காலமாக கலந்துரையாடல்களை நடத்தியிருந்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 484 மெகாவாட் திட்டமாக இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவுடன் 14 தடவைக்கும் அதிகமான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கை, வரி விலக்குக்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுக் கொள்கின்றமை தொடர்பில் அனைத்து விடயங்களும் முழுமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதானி கிரீன் நிறுவனத்தின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் காற்றாலை மின்சார திட்டம் தொடர்பான கட்டமைப்பு உள்ளிட்ட முன்னோடி நடவடிக்கைகளுக்காக 5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அண்மித்த தொகை செலவிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தமது நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு அதிகாரிகள் மின்சக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த உத்தேச திட்ட யோசனை தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழு மற்றும் திட்டக் குழு மீண்டும் நியமிக்கப்பட்டமையினால், இலங்கையின் சுயாதீன உரிமைக்கு மதிப்பளித்து அந்தத் திட்டத்தில் இருந்து வெளியேற தமது நிறுவனத்தின் பணிப்பாளர் குழு தீர்மானித்துள்ளதாக அதானி நிறுவனம் குறிப்பிடுகின்றது. தமது நிறுவனம் எப்போதும் இலங்கைக்காக நிற்கும் என்றும், மீண்டும் அபிவிருத்தி வாய்ப்புக்காக இலங்கை அரசாங்கம் விடுக்கும் அழைப்பை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் நிறுவனத்தின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிரம்ப் இந்தியாவுக்கு விற்க உள்ள எப்-35 போர் விமானத்தின் சிறப்பம்சம் என்ன? ஒரு மணி நேரம் பறக்க ரூ. 34 லட்சம் செலவா?15 பிப்ரவரி 2025 வயநாடு கடையடைப்பு: காட்டுயானை தாக்குதலால் தொடரும் மரணங்கள் - அமைச்சர் பதவி விலக வலியுறுத்தல்15 பிப்ரவரி 2025 இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதா? பட மூலாதாரம்,PMD SRI LANKA அதானி கிரீன் நிறுவனம், மன்னார் காற்றாலை மின்சார திட்டத்தில் இருந்து வெளியேறுகின்றமை தொடர்பில் இதுவரை மின்வலு அமைச்சுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம்.உதயங்க ஹேமபால தெரிவிக்கின்றார். ''எமக்கு இதுவரை அறிவிக்கவில்லை. அதானி நிறுவனம் முதலீட்டு சபைக்கு இந்த அறிவிப்பை அனுப்பியுள்ளது. நானும் அந்தக் கடிதத்தைக் கண்டேன். அது முதலீட்டு சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம். முதலீட்டு சபையினால் எமக்கு அறிவிக்கப்பட வேண்டும். இல்லையென்றால், அந்த நிறுவனத்தினால் எமக்கு அறிவிக்கப்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் அதிகாரப்பூர்வமாக எதையும் கூற முடியாது" என்று அமைச்சின் செயலாளர் கூறுகின்றார். இலங்கையில் அதானி குழுமத்தின் மற்ற முதலீடுகளின் நிலை என்ன?மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் 500 மெகாவாட் காற்றாலை மின்சார திட்டத்தை முன்னெடுக்க அதானி நிறுவனம் இலங்கை அரசாங்கத்துடன் கையெழுத்திட்டுள்ளது. மேலும், கொழும்பு துறைமுக நகர் கொள்கலன் முனையத்தை ஒன்றிணைந்த வகையில் அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்காக இலங்கை அரசாங்கத்துடன் அதானி நிறுவனம் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி கையெழுத்திட்டது. சென்னையில் தலித்துகள், முஸ்லிம்கள் வாடகை வீடு தேடுவதில் சந்திக்கும் சவால்கள் என்ன?14 பிப்ரவரி 2025 டிரம்ப் - மோதி: 'அதானி, ஆவணமற்ற இந்தியர்கள்' - செய்தியாளர் சந்திப்பின் 5 முக்கிய அம்சங்கள்14 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தத் திட்டத்தின் ஊடாக 51 சதவீத பங்குகள் அதானி நிறுவனத்திற்கு கிடைக்கப் பெறவுள்ளன. அதானி நிறுவனத்தின் இலங்கை முகவரான ஜோன் கீல்ஸ் நிறுவனத்திற்கு 34 சதவீத பங்குகளும், இலங்கை துறைமுக அதிகார சபைக்கு 15 சதவீத பங்குகளும் உரித்தாகின்றன. இந்தத் திட்டத்திற்காக 700 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்படவுள்ளது. எவ்வாறாயினும், இலங்கையில் முந்தைய ஆட்சியாளர்களால் அதானி நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் புதிய அரசாங்கம் பதவியேற்ற பிறகு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். அதானி மின் திட்டத்திற்கு எழுந்த எதிர்ப்புகள்அதானி நிறுவனத்தினால் இலங்கையில் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்ட காற்றாலை திட்டத்திற்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. குறிப்பாக மன்னார் பகுதியில் உத்தேசிக்கப்பட்ட திட்டத்திற்கே இவ்வாறு எதிர்ப்புகள் எழுந்திருந்தன. வலசைப் பறவைகளின் வருகைக்கு இந்தத் திட்டத்தின் ஊடாகப் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதாக சூழலியலாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். மன்னார் வழியாகவே இந்த வலசைப் பறவைகள் நாட்டிற்குள் வருகை தருவதாகக் கூறப்படுகின்றது. 30 நாடுகளைச் சேர்ந்த பறவைகள் இலங்கைக்குள் வருகை தருவதுடன், ஓராண்டுக்கு சுமார் 15 மில்லியன் பறவைகள் வருவதாகக் கூறப்படுகின்றது. படக்குறிப்பு, எந்தவொரு காரணத்திற்காகவும் காற்றாலை மின்சார திட்டத்தை மன்னார் மாவட்டத்தில் அமைக்க இடமளிக்க மாட்டோம் என்கிறார் மன்னார் மாவட்ட மீனவ சங்கத்தின் தலைவர் ராஜா குரூஸ் அத்துடன், மன்னார் கரையோரப் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிபிசி தமிழிடம் அந்தப் பகுதி மீனவர்கள் குறிப்பிட்டனர். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது, எந்தவொரு காரணத்திற்காகவும் காற்றாலை மின்சார திட்டத்தை மன்னார் மாவட்டத்தில் அமைக்க இடமளிக்க மாட்டோம் என்று கூறினார் மன்னார் மாவட்ட மீனவ சங்கத்தின் தலைவர் ராஜா குரூஸ். படக்குறிப்பு, மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவரான அருட்தந்தை சந்தியோ மார்கஸ் காற்றாலை திட்டத்தினால் மக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுகின்றமையினால், இந்த திட்டத்திற்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவரான அருட்தந்தை சந்தியோ மார்கஸ், பிபிசி தமிழிடம் சில மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார். ''இலங்கை அரசாங்கத்தினால் ஏற்கெனவே 30 காற்றாலைகள் பொருத்தப்பட்டுள்ளன. அது பல்வேறு பாதிப்புகளை மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ளது. மக்கள் எதிர்நோக்கிய சிரமங்களை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளோம். அதனை நிவர்த்தி செய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கு பின்னர் காற்றாலை மின் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளோம்." என்று அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. இலங்கையில் சுமார் ரூ.8,700 கோடி மின் திட்டத்தை அதானி நிறுவனம் கைவிட்டது
  12. உலகெங்கும் அதிகளவில் பயன்படுத்தப்படும் கருத்தடை மாத்திரைகள் மாரடைப்பு, பக்கவாதம் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக டென்மார்க் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. டென்மார்க் நாட்டில் 1996ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், 15-49 வயதுடைய 20 லட்சத்துக்கும் அதிகமாக பெண்களின் மருத்துவ அறிக்கையை ஆய்வுக்குட்படுத்தி ஆய்வறிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் பெண்கள் கருத்தடை மாத்திரைகள் அடிக்கடி உட்கொள்வதால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்திரைகள், உடலுக்குள் பொறுத்திக்கொள்ளும் பொருட்கள், ஊசிகள் உள்ளிட்ட கருத்தடை நடைமுறைகளை அடிக்கடி பயன்படுத்துவதால் உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும் என ஏற்கெனவே அச்சங்கள் இருந்தாலும், அது ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை கூறியுள்ளது. உலகம் முழுவதும் ஒரு வருடத்திற்கு கருத்தடை மாத்திரையைப் பயன்படுத்தும் ஒவ்வொரு 4,760 பெண்களுக்கு மற்ற நோய்களுடன் கூடுதலாக பக்கவாதமும், ஒவ்வொரு வருடமும் பயன்படுத்தும் ஒவ்வொரு 10,000 பெண்களுக்கும் ஒரு கூடுதல் மாரடைப்பும் ஏற்படுகிறது. இதுபோன்ற கருத்தடைகளின் பரவலான பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு, சுகாதார நிபுணர்கள் அவற்றை பரிந்துரைக்கும்போது இந்த சாத்தியமான அபாயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கருத்தடை மாத்திரைகள் அதிகம் எடுத்துக்கொண்டால் அபாயம்; ஆய்வின் முடிவில் வெளியான அதிர்ச்சி
  13. 16 FEB, 2025 | 12:26 PM நாட்டில் 16 இலட்சம் அங்கவீனர்கள் காணப்படுவதாகவும் அவர்களில் 9 இலட்சம் பேர் பார்வைக் குறைபாடு கொண்டவர்கள் என அகில இலங்கை பார்வைக்குறைபாடுடையவர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசன்ன விக்கிரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை (16) தெரிவித்தார். மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோனுடனான கலந்துயைாடலில் போது அவர் இதனைத் தெரிவித்தார். கண்டியிலுள்ள மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில் ஆளுநருடன் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. மேற்படி சந்திப்பின் போது மத்திய மாகாணத்திலுள்ள பார்வைக் குறைபாடு கொண்டவர்களது பிரச்சினைகள் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது. மேற்படி கலந்துரையாடலின் போது மத்திய மாகாண பார்வைக் குறைபாடு கொண்டவர்களது பிரச்சினைகள் தொடர்பாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இவை தொடர்பாக தகவல்களைப் பெற்று வெகு விரைவில் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு தர முயற்சிப்பதாகவும் ஆளுநர் அங்கு தெரிவித்தார். மேற்படி சந்திப்பில் மத்திய மாகாண பார்வைக்குறைபாடுடையோல் சங்க நிர்வாக அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர். நாட்டில் 16 இலட்சம் அங்கவீனர்கள் காணப்படுகின்றனர்
  14. நாளை தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவு திட்டம் - புதிய வரிகள் இல்லை, ஏற்கனவே உள்ள வரிகள் நீடிப்பு, அரசாங்க ஊழியர்களிற்கு சம்பள அதிகரிப்பு16 FEB, 2025 | 11:43 AM நாளை நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ள முதலாவது வரவு செலவுதிட்டத்தில் அரசாங்க ஊழியர்களிற்கான சம்பள அதிகரிப்பு,அரசாங்க வேலைவாய்ப்பு போன்ற அறிவிப்புகள் வெளியாகும் எனினும் வரவு செலவுதிட்டம் எனினும் வரவு செலவுதிட்டம் சர்வதேசநாணயநிதியத்தின் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட அளவுறுவை மீறாததாக காணப்படும் என நிதியமைச்சின் சிரேஸ்டஅதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு ஏற்ப வரவு செலவு திட்டம் குறித்த விபரங்களை அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்திற்கு தெரிவித்துள்ளது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியம் வரவு செலவுதிட்டம் தனது திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட அளவுறுவை மீறாததாக காணப்பட்டால் மாத்திரமே இலங்கைக்கான மூன்றாவது தொகுதி உதவியை வழங்குவது குறித்து ஆராய முடியும் என தெரிவித்திருந்தது. அரசசேவைக்கு ஆட்களை சேர்க்கும்நடவடிக்கைகள் வரவுசெலவு திட்ட விவாதங்கள் முடிவடைந்த பின்னர் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ள நிதியமைச்சின் அதிகாரி,எனினும் பெருமளவில் அரசசேவைக்கு ஊழியர்களை சேர்க்கப்போவதில்லை அவசியமாக உள்ள வெற்றிடங்கள் மாத்திரம் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார். புதிய வரிகள் விதிக்கப்படாது ,நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுகொண்டிருப்பதால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள வரிகள் நீடிக்கும் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். நாளை தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவு திட்டம்
  15. படக்குறிப்பு, தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளும் கட்டுரை தகவல் எழுதியவர், இம்ரான் குரேஷி பதவி, பிபிசிக்காக 15 பிப்ரவரி 2025 தமிழ்நாட்டின், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள், பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் மூன்று டிரங்க் பெட்டிகளில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏகே-47 ஆயுதமேந்திய போலீசாரின் பாதுகாப்புடன், இன்று மாலை பெங்களூருவில் உள்ள நீதிமன்றத்தில் இருந்து சென்னைக்கு அவை கொண்டு வரப்பட்டன. கடந்த 1996ஆம் ஆண்டில் ஜெயலலிதாவிடம் இருந்து இவை கையகப்படுத்தப்பட்டன. அவை, 36வது கூடுதல் சிவில் மற்றும் செஷன்ஸ் நிதிபதி ஹெச்.எஸ்.மோகன் உத்தரவின் கீழ், இப்போது தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வைரக் கற்கள், மரகதங்கள், மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட நகைகள் உள்பட 27 கிலோகிராம் தங்க நகைகள், மூன்று வெள்ளிப் பொருட்கள் ஆகியவை கையகப்படுத்தப்பட்டவற்றில் அடக்கம். ரூ.59,870 மற்றும் ரூ.1,60,514 மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் (அப்போதைய ரூபாய் நோட்டுகள்), 10 கோடியே 18 லட்சத்து 75 ஆயிரத்து 591 ரூபாய் (ரூ.10,18,78,591.67) மதிப்பிலான நிரந்தர வைப்பு நிதி(2023இன்படி) ரசீதுகள் ஆகியவையும் தமிழ்நாடு காவல் துறை குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டன. ஜெயலலிதா: முன்னாள் முதல்வரின் இல்லத்துக்கு இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயம் ஜெயலலிதா 'இந்துத்துவ' தலைவர் என்று எந்த அடிப்படையில் அண்ணாமலை கூறினார்? மத்திய அரசில் மாறிமாறி இடம் பெற்ற திமுக, அதிமுக - தமிழ்நாட்டிற்கு என்ன நன்மை? ஓர் அலசல் இவற்றை உள்துறை இணை செயலாளர் ஜே.ஆன் மேரி ஸ்வர்ணா தலைமையிலான தமிழக அதிகாரிகள், சிறப்புப் புலனாய்வுப் பிரிவு எஸ்.பி.விமலா, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் மற்றும் பிற அதிகாரிகளிடம் நீதிமன்றம் ஒப்படைத்தது. ஒப்படைக்கப்பட்ட சொத்து ஆவணங்களில் சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருப்பத்தூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் அமைந்துள்ள 6 நிறுவனங்களுக்குச் சொந்தமான 1,526 ஏக்கர் நிலத்தின் சொத்துகளின் ஆவணங்களும் அடக்கம். ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் இந்த உத்தரவு கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதியன்று பிறப்பிக்கப்பட்டது. "பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை என்ன செய்வது என்பதை முடிவு செய்வது தமிழக அரசின் பொறுப்பு என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அதாவது, சொத்துகளை மதிப்பிட்டு ஏலத்தில் விற்று பணத்தை மீட்டெடுக்கலாம் அல்லது கருவூலத்திற்கு அனுப்பலாம்," என்று சிறப்பு அரசு வழக்கறிஞர் கிரண் எஸ்.ஜவாலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "இந்த வழக்கில் மக்களின் உணர்ச்சிகள் பெருமளவு சம்பந்தப்பட்டு இருப்பதாலும், இந்தப் பொருட்கள் சட்டவிரோத சொத்துகள் என அறிவிக்கப்பட்டு, அதற்கேற்ப தமிழக அரசு பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டு இருப்பதாலும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்வது என்று தமிழக அரசே முடிவு செய்வது சரியாக இருக்கும்," என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதோடு, அவற்றை என்ன செய்யலாம் என்பதற்குச் சில வழிகளையும் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. அதாவது, "இந்த நிலங்கள், பொது நோக்கங்களுக்காகவோ, வளர்ச்சிக்கான நிலங்களாகவோ அல்லது நிலமற்ற மக்களுக்கு வழங்கவோ பயன்படுத்தப்படலாம். இல்லையேல், அந்த நிலங்களை விற்று அரசு நிதி திரட்டவும் பயன்படுத்தலாம்," என்று உத்தரவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுமார் ரூ.8,700 கோடி மின் திட்டத்தை அதானி நிறுவனம் கைவிட்டது ஏன்?15 பிப்ரவரி 2025 குழாய் நீர், போர்வெல் நீர், ஆர்.ஓ. சுத்திகரிப்பு நீர் - எந்த நீரை குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது?15 பிப்ரவரி 2025 சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், நகைகள் மற்றும் நிலங்களை ஏலம் விடலாம் எனவும் அந்த வருமானத்தைப் பொது நோக்கத்திற்காகப் பயன்படுத்தலாம் எனவும் நீதிபதி மோகன் குறிப்பிட்டுள்ளார். "இந்த வழக்கின் உண்மைகளையும், நீதியையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு இந்த வருவாயை மாநிலம் முழுவதும் உள்ள குழந்தைகளின் ஆரம்பக் கல்விக்குத் தேவையான உள்கட்டமைப்புகளைக் கிராமப்புறங்களில் உருவாக்கப் பயன்படுத்தும்'' என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார். "அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றி, மக்களின் நலனுக்காகத் தங்கள் கடமைகளை எச்சரிக்கையாகவும், கவனமாகவும் அதிகாரத்தில் இருப்பவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்ற செய்தியை இது தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அனுப்பும்," என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். வி.கே.சசிகலா மற்றும் இளவரசியிடம் இருந்து வசூலிக்கப்பட்ட 20 கோடியே 20,000 ரூபாய் அபராதத் தொகையில், கர்நாடக அரசுக்கு ஐந்து கோடி ரூபாயும், விசாரணை நடத்துவதற்கும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கும் ஏற்பட்ட செலவுகளுக்காகக் கூடுதலாக எட்டு கோடி ரூபாயும் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் தனது தண்டனையை உறுதி செய்த கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா மே 11, 2015 அன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் முடிவெடுப்பதற்கு முன்பாகவே, அவர் டிசம்பர் 6, 2016இல் காலமானார். அவரது சொத்துகளை ஏலம் விடவோ, விற்கவோ சிறப்பு பொது வழக்கறிஞரை நியமிக்கக் கோரி வழக்கறிஞர் டி நரசிம்மமூர்த்தி சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, சிறப்பு பொது வழக்கறிஞர் 2024இல் நியமிக்கப்பட்டு, இறுதி உத்தரவுகள் இன்று நிறைவேற்றப்பட்டன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்த 27 கிலோ நகை, 1,526 ஏக்கர் சொத்து
  16. 16 FEB, 2025 | 07:20 AM புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நிகழ்வில் பங்கேற்கும் நோக்கில் சனிக்கிழமை (பிப்.15) இரவு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் தலைநகர் டெல்லியில் உள்ள புகையிரத நிலையத்தில் ரயிலில் பயணிக்க வேண்டி திரண்ட காரணத்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் புதுடெல்லி புகையிரத நிலையத்தின் நடைமேடை 13 மற்றும் 14-ல் நடந்தது. உயிரிழந்தந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதை டெல்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி உறுதி செய்துள்ளார். பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜுக்குச் செல்லும் இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் 13 மற்றும் 14-வது நடைமேடைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என டெல்லி தீயணைப்பு துறையின் தலைவர் அதுல் கார்க் கூறியுள்ளார். “டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடுபவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர்” என பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் எல்என்ஜேபி மருத்துவமனைக்கு டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனா மற்றும் காபந்து முதல்வர் ஆதிஷி நேரில் வந்து பார்த்தனர். கூட்ட நெரிசல் ஏற்பட்ட நடைமேடை எண் 13 மற்றும் 14-ல் நடைமேடையில் மக்கள் தங்களது உடைமைகளை விட்டுச் சென்றது அப்படியே இருக்கும் காட்சிகளும் வெளியாகி உள்ளனர. ட்ராலி, தண்ணீர் பாட்டில், காலணி போன்றவை அங்கும் இங்கும் சிதறிக் கிடக்கிறது. நடந்தது என்ன? - சனிக்கிழமை இரவு சுமார் 10 மணி அளவில் மகா கும்பமேளாவுக்கான ரயிலை பிடிக்க அதிகளவில் மக்கள் புதுடெல்லி ரயில் நிலைய நடைமேடை 13 மற்றும் 14-ல் திரண்டனர். அதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் பயணிகளும் பீதி அடைந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக அதில் சிக்கியவர்களுக்கு மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். சம்பவ இடத்துக்கு ரயில்வே போலீஸார், காவல் துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அங்குள்ள சூழலை கருத்தில் கொண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களும் விரைந்தன. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பேர் நடைமேடையில் கூடியது தான் கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 1,500 முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகள் விற்பனையானதும், ஸ்வதந்த்ரதா சேனானி எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஷ்வர் ராஜ்தானி ஆகிய ரயில்கள் தாமதமாக வந்ததும் இதற்கு காரணம் என ரயில்வே துணை போலீஸ் கமிஷனர் கே.பி.எஸ் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசல் ஏற்பட்ட பிறகு புதுடெல்லி ரயில் நிலையத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும், நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்துள்ளதாகவும், இது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளவும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டெல்லி புகையிரத நிலையத்தில் கூட்ட நெரிசலில் 15 பேர் உயிரிழப்பு
  17. இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது. களுவாஞ்சிகுடியில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இந்த மத்தியகுழு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே,சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகின்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் உட்பட மத்தியகுழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர். இதன்போது உயிரிழந்த தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பதில் தலைவர் தலைமையில் கூட்டம் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்
  18. 16 FEB, 2025 | 09:48 AM (லியோ நிரோஷ தர்ஷன்) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் சனிக்கிழமை (22) இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுப்பட உள்ளார். எவ்வாறாயினும் 'கடற்பிராந்திய ஒத்துழைப்பின் புதிய பரிமாணங்களை அடையாளங்காணல்' எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்ற 8 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் சிறப்பு அதிதியாக பங்கேற்பதற்காக ஓமான் சென்றுள்ள ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை நாடு திரும்பவுள்ளார். இதன் பின்னரே டெல்லிக்கு விஜயம் செய்வார் என முன்னாள் அரசாங்க தகவல் தினைக்களத்தின் பணிப்பாளர் நாயகமும் ரணில் விக்கிரமசிங்கவின் ஊடக செயலாளருமான தினித் சிந்தக கூறினார். 2024 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கை - இந்திய கூட்டுத்திட்டங்கள் தொடர்ந்தும் இழுபறி நிலையை எதிர்ககொண்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பிருந்தே இலங்கையில் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்ட இந்திய திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை மீளாய்வு செய்வதாக குறிப்பிட்டு வந்தது. குறிப்பாக அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் திட்டம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த அரசாங்கம், ஒப்பந்தத்தை மீளாய்வு செய்ய தீர்மானத்தை தொடர்ந்து அதானி நிறுவனம் அத்திட்டத்திலிருந்து விலகிக்கொண்டுள்ளது. மேலும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு பல்வேறு வகையில் ஒத்துழைப்புகளை வழங்கியிருந்த இந்தியா, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைப்பதற்கும் பங்காற்றியிருந்தது. ஆனால் இலங்கையில் இந்தியா திட்டமிட்டிருந்த கூட்டுத்திட்டங்கள் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தொடர்ந்தும் தாமதப்படுத்தப்படுகின்றமை டெல்லியின் கவலைகளில் ஒன்றாக காணப்படுகின்றது. குறிப்பாக, திருகோணமலை மின் நிலைய விவகாரம் மற்றும் வடக்கு தீவுகளின் சூரிய சக்தி திட்டம் என பல்வேறு திட்டங்கள் வெறும் ஆவண கோப்புகளாகவே உள்ளன. இத்தகைய நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இந்திய திட்டங்கள் குறித்து தொடர்ந்தும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், ரணில் விக்கிரமசிங்க டெல்லி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்திய பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்கும் ரணில்
  19. Published By: DIGITAL DESK 7 16 FEB, 2025 | 09:22 AM (லியோ நிரோஷ தர்ஷன்) சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் பிரகாரம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் விடயத்தை மாற்றியமைக்க நாணய நிதியத்திடம் கோரியுள்ள அரசாங்கம், அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதற்கு சாதகமான பதிலை அளித்துள்ள சர்வதேச நாணய நிதியம் நாளை திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ள அரசாங்கத்தின் கன்னி வரவு - செலவு திட்டத்தின் பின்னர் ஒப்பந்தத்தின் முன்னேற்றங்கள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் நாளை 17 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளதுடன், மார்ச் மாதம் 21 ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. இந்த வரவு - செலவு திட்டமானது மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையில் முன்வைக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. மறுபுறம் இந்த வரவு - செலவு திட்டமானது சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும் என நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி இலங்கையில், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வு குறித்து பணியாளர் மட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இதன் பிரகாரம் நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 333 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இலங்கைக்கு கிடைக்கும். எவ்வாறாயினும் இந்த நிதியுதவிக்கான மேலதிக உறுதிப்பாடல்களுக்கான கலந்துரையாடல்கள் எதிர்வரும் வாரங்களில் நடைபெற உள்ளது. 2024 ஆம் ஆண்டின் நான்காவது - மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.5 சதவீதம் வளர்ச்சியடைந்தது. 2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் சராசரி பணவீக்கம் இலக்கை விட மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் சர்வதேச இருப்புக்கள் 6.1 பில்லியனாக அதிகரித்துள்ளது. எனினும் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தை கருத்தில் கொள்ளும் போது, கடந்த நவம்பரில் எட்டப்பட்ட பணியாளர் நிலை ஒப்பந்துடன் தொடர்புப்படுகிறது. இதனை அடுத்த வாரங்களில் இடம்பெற கூடிய கலந்துரையாடல்களின் போது நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக நாணய நிதியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது கடினம்
  20. Published By: DIGITAL DESK 7 16 FEB, 2025 | 09:11 AM அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியமைப்பை உருவாக்குவது எமது பொறுப்பாகும். நாட்டினுள் அனைவருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கவும் அவர்களின் தனித்துவ அடையாளங்கள் பேணவும் வழிசமைப்போம் என்று பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரிய தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டையில் நேற்று சனிக்கிழமை (15) நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில் 24 மாவட்டங்களில் வெற்றிபெற்ற பிரதிநிதித்துவங்களுடன் அரசாங்கத்தினை அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி என்ற தனியொரு கட்சிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 76வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட அரசியலில் இருந்து எமது மக்கள் இம்முறை மாற்றத்தை உருவாக்கியிருக்கின்றார்கள். இது தான் மிக முக்கியமானதொரு வெற்றியாக உள்ளது. எமது அரசாங்கம் என்பது மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை உருவாக்குவதற்காக அதிகாரம் அளிக்கப்பட்ட பிரதிநிதித்துவமாகும். இத்தனை வருடங்களாக இனங்களுக்கு இடையில் எட்டப்படாதிருக்கும் இன ஐக்கியத்தினை இத்தடைவை காண வேண்டும் என்பதே எமது ஒரே நோக்கமாகவுள்ளது. எமது நாடு பல்வகைமையைக் கொண்டதாகும். அது பரந்துபட்டதாகும். அவ்வாறான நிலையில் பிரஜைகள் ஒவ்வொருவருக்கும் சிறப்பானதொரு வாழ்க்கையை நாட்டிற்குள் வாழ்வதற்கான சமத்துவ உரிமை காணப்படுகின்றது. அனைவரும் தமது அடையாளங்களை உறுதிப்படுத்தும் அதேநேரம், அனைவரும் ஒற்றுமையாக வேண்டிய அவசியமும் காணப்படுகின்றது. இலங்கை என்பது எமது வீடு. எமது வீட்டுக்குள் பிரச்சினைகள் உள்ளன. எங்கு தான் பிரச்சினைகள் இல்லை. எமது வீட்டுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை நாங்கள் தான் தீர்க்க வேண்டும். வடக்கில் உள்ள தயார் ஒருவர் பாடசாலைக்கு தனது பிள்ளையை அனுப்பும்போது எதிர்காலத்தினை சிந்திப்பது போன்று தான் தென்னிலங்கையில் உள்ள தாயாரும் தனது பிள்ளையின் எதிர்காலத்தினைக் கருதுகின்றார். உள்நாட்டு போர் நிறைவுக்கு வந்ததன் பின்னர் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள். தங்களுடைய அதிகார பலம் வீழும்போது இனவாதத்தினை , மதவாதத்தினை ஏற்படுத்துவார்கள். அதனை மக்கள் தோல்வியடைச் செய்தபோதும் தற்போது இனவாதத்தினை, மதவாத்தினை தூக்கிப் பிடிப்பதற்கு முனைகின்றார்கள். அடுத்த ஒருமாதத்துக்குள் அவ்வாறு கூக்குரல் இடுபவர்கள் சத்தம் முழுமையாக நின்றுவிடும். அதன்பின்னர் எமது எதிர்காலத்தினை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க முடியும். புதிய அரசியலமைப்பை உருவக்குவது எமது இலக்குகளில் ஒன்றாகும். அந்த அரசியலமைப்பினை அனைவருடனும், கலந்துரையாடியே அவர்களின் தீர்மானத்துக்கு அமைவாக முன்னெடுப்போம். அது எமது பொறுப்பாகும் என்றார். அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்; வட்டுக்கோட்டையில் பிரதமர் உறுதி
  21. 16 FEB, 2025 | 11:27 AM விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளைபிரபாகரன் படத்தை பொதுவெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் கடந்த 2010-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையிலான சண்டையின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனைஇ சீமான் போர் முனையில் சந்தி்த்து பேசியதாகவும்இ அதன் பிறகு ஏ.கே.47 ரக துப்பாக்கியால் போர் பயிற்சி எடுத்ததாகவும் சீமான் தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டபிறகுஇ விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் இலங்கை போர் தொடர்பான மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு சீமான் வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் படத்தை தனது அரசியல் ஆதாயங்களுக்காக தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தி வருகிறார். அவர் மார்பிங் செய்யப்பட்ட படங்களை பொது வெளியில் பயன்படுத்தி வருவதாக சங்ககிரி ராஜ்குமார் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர். கள்ளக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது ராஜீவ்காந்தியை நாங்கள் தான் கொலை செய்தோம் என சீமான் பகிரங்கமாக பேசியுள்ளார். எனவே தடை செய்யப்பட்ட பிரபாகரன் படத்தை பொது வெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. பிரபாகரனின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை கோரி வழக்கு
  22. ஜாம்பவான்கள் அடங்கிய ஆர்சிபி அணிக்கு இளம் வீரர் 'ரஜத் பட்டிதார்' கேப்டனாக தேர்வானது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்தி ராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 15 பிப்ரவரி 2025 ஐபிஎல் 20 ஓவர் தொடரில் இதுவரை 17 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் 8 கேப்டன்கள், 7 தலைமைப் பயிற்சியாளர்கள், 5 முறை லோகோ மாற்றம், 2 முறை பெயர்மாற்றம் என இவ்வளவு செய்தும் இன்னும் ஒரு முறை கூட அந்த அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை. இந்த முறையாவது கோப்பையை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கையில் புதிய வீரர்கள் மற்றும் புதிய கேப்டன் ரஜத் பட்டிதாருடன் ஐபிஎல் தொடரை எதிர்கொள்ள இருக்கிறது ஆர்சிபி அணி. 2025 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியை வழிநடத்த ரஜத் பட்டிதாரை கேப்டனாக நியமித்துள்ளது அந்த அணியின் நிர்வாகம். கடந்த 2 சீசன்களிலும் தென் ஆப்பிரிக்க அணியை சேர்ந்த டூப்பிளசி கேப்டனாக ஆர்சிபி அணியை வழிநடத்திய நிலையில், இந்த சீசனுக்கு விராட் கோலி கேப்டனாக மீண்டும் வருவார் என்று பல்வேறு ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக இளம் வீரர் ரஜத் பட்டிதாரை கேப்டனாக ஆர்சிபி நிர்வாகம் நியமித்துள்ளது. அவருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெரிதாக இல்லை, மேலும் அவர் 100 உள்நாட்டு போட்டிகளில் கூட விளையாடியாதில்லை. இருப்பினும் இந்த சீசனில் விராட் கோலி, மேக்ஸ்வெல், டிம் டேவிட், ஹேசல்வுட், பில் சால்ட், லிவிங்ஸ்டோன், புவனேஷ்வர் குமார் போன்ற அனுபவம் மிக்க வீரர்கள் இருக்கும் இந்த அணியை எவ்வாறு வழிநடத்தப் போகிறார், யாருக்கு முக்கியத்துவம் தரப்போகிறார் என்பதில்தான் ரஜத் பட்டிதாரின் வெற்றி இருக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பை 2025: பும்ரா இல்லாமல் இந்திய அணியால் தாக்குப் பிடிக்க முடியுமா? கபடியால் மாறிய வாழ்க்கை - ஒரு கிராமத்துப் பெண்களின் நெகிழ்ச்சி கதை பார்வை மாற்றுத்திறனாளிகள் ஓட்டப் பந்தயத்தில் பங்கெடுக்க உதவும் கைட் ரன்னர்கள் விளையாட்டுத் துறையில் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை குவிப்பதை நிதிப் பற்றாக்குறை தடுக்கிறதா? நனவாகாத கனவுஆர்சிபி அணிக்கும், ஐபிஎல் டி20 சாம்பியன் பட்டத்துக்கும் எட்டாப் பொருத்தமாகவே இருக்கிறது. இதுவரை 17 சீசன்களில் 3 முறை இறுதிப்போட்டிவரை சென்ற ஆர்சிபி அணி, கடந்த 5 சீசன்களில் 4 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது, ஒருமுறைகூட சாம்பியன் பட்டத்தை அந்த அணியால் வெல்ல முடியவில்லை. தொடக்கத்தில் இருந்து தற்போதுவரை ராகுல் டிராவிட், கெவின் பீட்டர்ஸன், அணில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி, ஷேன் வாட்ஸன், டூப்பிளசி உட்பட பல ஜாம்பவான்கள் கேப்டனாக இருந்தபோதிலும் அந்த அணியால் அதிகபட்சமாக பைனல் செல்ல முடிந்ததே தவிர சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முடியவில்லை. அதேசமயம், தொடக்கத்திலிருந்து பல முன்னணி வீரர்களையும் பயிற்சியாளர்களாக மாற்றிப்பார்த்தது ஆர்சிபி அணி. வெங்கடேஷ் பிரசாத், ரே ஜென்னிங்ஸ், டேனியல் வெட்டோரி, சைமன் கேடிச், கேரி கிறிஸ்டன், சஞ்சய் பங்கர், ஆன்டி பிளவர் ஆகியோரை அணியில் நியமித்து பார்த்தாலும் ஒரு முறைகூட கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால், 2025 ஐபிஎல் சீசனில் 3 வீரர்களை மட்டுமே தக்கவைத்த ஆர்சிபி அணி, முற்றிலும் புதிய வீரர்களுடன் களம் காண இருக்கிறது. கேப்டனாகவும் யாரும் எதிர்பாரா வகையில் இளம் வீரரை அறிமுகப்படுத்துகிறது. டிரம்ப் இந்தியாவுக்கு விற்க உள்ள எப்-35 போர் விமானத்தின் சிறப்பம்சம் என்ன? ஒரு மணி நேரம் பறக்க ரூ. 34 லட்சம் செலவா?15 பிப்ரவரி 2025 மராட்டியப் பேரரசில் கிளர்ச்சி மூலம் கொந்தளிப்பை ஏற்படுத்திய சிவாஜி மகன் சம்பாஜியின் சோகக் கதை15 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,RAJATPATIDAR/INSTAGRAM 8ஆம் வகுப்பு பாஸ் செய்ய திணறியவர்ஆர்சிபி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் ரஜத் பட்டிதார் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 1993 ஆம் ஆண்டு ஜூன் 1ம் தேதி அன்று பிறந்தார். பட்டிதாரின் தந்தை மனோகர் பட்டிதார் பெரிய வர்த்தகர் என்பதால் செல்வச் செழிப்பான சூழிலில் ரஜத் பட்டிதார் வளர்ந்தார். சிறுவயதிலிருந்து ரஜத் பட்டிதார் கிரிக்கெட்டில் ஆர்வமாக இருந்ததால், அவருக்கு 8 வயது ஆகும்போதே அவர் கிரிக்கெட் பயிற்சிக்கான வகுப்புகளில் குடும்பத்தினர் சேர்த்தனர். இந்தூரில் உள்ள நியூ திகம்பர் பள்ளியில் படித்து முடித்த பிறகு, அவர் குரு வஷிஸ்டா கல்லூரில் கல்லூரிப்படிப்பையும் முடித்தார். ரஜத் பட்டிதார் குறித்து அவரின் தந்தை மனோகர் பட்டிதார் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், "சிறுவயதில் இருந்தே ரஜத் பட்டித்தாருக்கு படிப்பின் மீது துளி கூட கவனம் இருந்தது இல்லை, 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறவே அவர் கடுமையாக சிரமப்பட்டார். கிரிக்கெட் பயிற்சிக்குச் சென்றபின் படிப்பின் மீது அவரது ஆர்வம் இன்னும் மோசமானது", என்றார். "கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, ரஞ்சிக் கோப்பைக்கு ரஜத் பட்டிதார் தேர்வானபின் அவருக்கு முழுசுதந்திரம் அளித்தோம், முழுமையாக கிரிக்கெட்டில் கவனம் செலுத்த அனுமதித்தோம். கிரிக்கெட் விளையாடுவதற்காக குடும்ப நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்க மாட்டார்", என்றார். சென்னை: இரும்பு வாயிற்கதவு விழுந்து 7 வயது சிறுமி உயிரிழப்பு – இன்றைய முக்கிய செய்திகள்15 பிப்ரவரி 2025 சிவகங்கை: புல்லட் ஓட்டியதற்காக தலித் இளைஞர் கைகள் வெட்டப்பட்டதா? காவல்துறை கூறுவது என்ன?15 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,RAJATPATIDAR/INSTAGRAM ரஞ்சிகோப்பைத் தொடரில் அறிமுகம்2015-16 ஆம் ஆண்டு நடந்த ரஞ்சிக் கோப்பைத் தொடரில்தான் மத்திய பிரதேச அணிக்காக விளையாட ரஜத் பட்டிதார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் மண்டல அளவிலான டி20 தொடருக்கும் பட்டிதார் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரின் கிரிக்கெட் வாழ்க்கை மெல்ல வளர்ந்தது. 2018-19 ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பை தொடரில் மத்திய பிரதேச அணிக்காக ஆடிய ரஜத் பட்டிதார் 8 போட்டிகளில் 713 ரன்கள் சேர்த்து முன்னணி வீரராக வலம்வந்தார். 2019 ஆம் ஆண்டில் இந்திய அணியின் ப்ளூ அணியிலும் பட்டிதாருக்கு இடம் கிடைத்தது. இதுவரை 68 முதல் தரப் போட்டிகளில் விளையாடிய ரஜத் பட்டிதார் 13 சதங்கள் 24 அரைசதங்கள் உட்பட 4738 ரன்கள் சேர்த்துள்ளார். 64 லிஸ்ட் ஏ போட்டிகளில் பங்கேற்றுள்ள பட்டிதார் 4 சதங்கள், 13 அரைசதங்கள் உள்பட 2211 ரன்கள் சேர்த்துள்ளார். 75 டி20 போட்டிகளில் ஆடி 2463 ரன்களையும் அவர் சேர்த்துள்ளார். சமீபத்தில் நடந்த சையத் முஷ்டாக் அலி கோப்பைத் தொடரிலும் மத்திய பிரேதச அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டார். 2024-25 சயத் முஸ்தாக் அலி கோப்பைத் தொடரில் மத்திய பிரதேச அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச்சென்றார் பட்டிதார். சையத் முஷ்டாக் அலி தொடரில் 9 இன்னிங்ஸில் 428 ரன்கள் குவித்து 2வது அதிகபட்ச ரன் குவித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார். அதன்பின் விஜய் ஹசாரே கோப்பைத் தொடரிலும் மத்திய பிரதேச அணியின் கேப்டனாக பட்டிதார் நியமிக்கப்பட்டு 226 ரன்கள் குவித்தார். பின்லாந்து: புவியின் வெப்பநிலையைக் குறைக்க துர்கு நகரின் பெண்கள் தலைமையிலான குழு எப்படி உதவுகிறது?15 பிப்ரவரி 2025 சென்னையில் தலித்துகள், முஸ்லிம்கள் வாடகை வீடு தேடுவதில் சந்திக்கும் சவால்கள் என்ன?14 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,RAJATPATIDAR/INSTAGRAM ஐபிஎல் தொடரில் அறிமுகம்2021-ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி அணி முதல்முறையாக ரஜத் பட்டிதாரை ஏலத்தில் ரூ.20லட்சத்துக்கு வாங்கியது. இந்தத் தொடரில் பட்டிதாருக்கு பெரிதாக வாய்ப்புக் கிடைக்கவில்லை, 4 போட்டிகளில் 71 ரன்கள் மட்டுமே பட்டிதாரால் சேர்க்க முடிந்தது. 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ரஜத் பட்டிதாரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. ஆனால், ஆர்சிபி அணியில் இடம் பெற்றிருந்த லிவித் சிசோடியா என்ற வீரர் காயத்தால் தொடரின் பாதியிலேயே விலகியதால், ரூ.20 லட்சத்துக்கு ரஜத் பட்டிதாரை ஆர்சிபி அணி மீண்டும் வாங்கி வாய்ப்பளித்தது. ஆனால், இந்த முறை தனக்குக் கிடைத்த வாய்ப்பை பட்டிதார் தவறவிடவில்லை. எலிமினேட்டர் சுற்றில் லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் பட்டிதார் 54 பந்துகளில் 112 ரன்கள் குவித்து மாபெரும் வெற்றியை ஆர்சிபிக்கு பெற்றுக்கொடுத்தார். 8 போட்டிகளில் பட்டிதார் 333 ரன்கள் குவித்து தன்னுடைய திறமையை நிரூபித்தார். இந்த சீசன் பட்டிதாருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தவே 2023 சீசனில் ஆர்சிபி அணி பட்டிதாரை தக்கவைத்து, 2024 ஏலத்திலும் பட்டிதாரை தக்கவைத்து, கேப்டனாக்கியுள்ளது. தோல் அரிப்பு: சொறிவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா? புதிய ஆய்வு கூறுவது என்ன?14 பிப்ரவரி 2025 டிரம்ப் - மோதி சந்திப்பில் பேசப்பட்ட முக்கிய விஷயங்கள் என்ன?14 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,RAJATPATIDAR/INSTAGRAM ஆர்சிபிக்காக திருமணம் தள்ளிவைப்புஆர்சிபி அணியில் விளையாடுவதற்காகவே தனக்கு நடக்க இருந்த திருமணத்தையே ஒத்திவைத்தவர் ரஜத் பட்டிதார். ரஜத் பட்டிதாருக்கும், குஞ்சன் பட்டிதார் என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. 2022 ஐபிஎல் ஏலத்தில் ரஜத்பட்டிதாரை எந்த அணியும் வாங்கவில்லை. இதனால் ஐபிஎல் நடக்கும் மே மாதம் 9ம் தேதி ரஜத் பட்டிதார் திருமணம் நடத்த முடிவுசெய்யப்பட்டது. ஆனால், ஆர்சிபி அணியில் சிசோடியா காயத்தால் பாதியிலேயே விலகியதால் அவருக்குப் பதிலாக பட்டிதாரை ஆர்சிபி அணி அழைத்தது. இதற்காக அவர் தனக்கு நடக்க இருந்த திருமணத்தை தள்ளி வைத்தார். திருமணத் தேதியை ஐபிஎல் தொடர் முடிந்தபின் வைத்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்து ஐபிஎல் போட்டிகளில் விளையாட சென்றுவிட்டார். ஐபிஎல் தொடர் முடிந்தபின்புதான் ரஜத் பட்டிதார் குஞ்சன் பட்டிதாரை திருமணம் செய்துகொண்டார். இதை பட்டிதாரின் தந்தை மனோகர் பட்டிதார் "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். பழங்குடியினர் படிப்பறிவு விகிதம் உத்தர பிரதேசத்தைவிட தமிழ்நாட்டில் குறைந்தது ஏன்?14 பிப்ரவரி 2025 காதலர் தினம்: உலகம் முழுக்கவே காதலிக்க ஆள் இல்லாமல் தவிக்கிறார்களா? ஏன் இந்தச் சிக்கல்?14 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,RAJATPATIDAR/INSTAGRAM பட்டிதாரின் ப்ளேயிங் ஸ்டைல், வலிமைரஜத் பட்டிதார் ஸ்ட்ரோக் ப்ளே மற்றும் பேட்டிங்கில் நல்ல ஷாட்களை ஆடக்கூடியவர். குறிப்பாக சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பலவிதமான ஷாட்களை அற்புதமாக பட்டிதார் ஆடக்கூடியவர். அணியில் தேவைப்படும் போது ஆங்கர் ரோலிலும், தொடக்க வீரராக களமிறங்கும்போது ஆக்ரோஷமான அதிரடி பேட்டிங்கையும் பட்டிதார் வெளிப்படுத்தக்கூடியவர். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சை எளிதாக சமாளித்து பேட் செய்யக்கூடிய திறமை படைத்தவர். உள்நாட்டுப் போட்டிகள், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடக் கூடியவர். 2022 ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் பட்டிதாரின் சதம், கடுமையான நெருக்கடியிலும் தன்னால் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியது. அதுவே அவருக்கான திருப்புமுனையாகவும் அமைந்தது. 'நீதிபதி நாத்திகனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை' - நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பிபிசி பேட்டியில் கூறியது என்ன?13 பிப்ரவரி 2025 துளசி கப்பார்ட்: டிரம்ப் அமெரிக்க உளவுத்துறை தலைவராக்கிய இவரது பின்னணி என்ன?13 பிப்ரவரி 2025 ஆர்சிபி கேப்டனாக ரஜத் பட்டிதார் தேர்வானது எப்படி?ஆர்சிபி அணியின் தலைமைப்பயிற்சியாளர் ஆன்டி பிளவர் கிரிக்இன்போ இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், ஆர்சிபி அணியின் கேப்டனாக பட்டிதாரை ஏன் தேர்வு செய்தனர் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில்," ரஜத் பட்டிதாரைப் பற்றி என்னால் நீண்டநேரம் பேச முடியும். பகிர்ந்து கொள்ள ஸ்வாரஸ்யமாக இருக்கும் என்று நான் நினைத்த மூன்று முக்கிய விஷயங்களை கூறுகிறேன். முதலாவதாக பட்டிதாரின் அமைதி மற்றும் எளிமை. இதுதான் அவருக்குரிய கேப்டன் பதவியை வழங்க பிரதான காரணமாக இருந்தது. ஒரு கேப்டனாக ஐபிஎல் அணிக்கு வரும்போது மிகவும் நிதானமாக, பதற்றமின்றி, எந்த சூழலையும் அமைதியாக கையாளும் திறமை இவருக்கு இருந்தது. அது மட்டுமல்லாமல் மத்திய பிரதேச அணிக்காக சையத் முஷ்டாக் அலி தொடரில் கேப்டனாக பட்டிதார் செயல்பட்டதை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன். அவரது முடிவு எடுக்கும் திறன், கிரிக்கெட் களத்தில் அவரின் அர்ப்பணிப்பு, வீரர்களுக்கு வழங்கும் ஆலோசனைகள் இவர் கேப்டனாக தகுதியானவர் என்பதை எனக்கு உணர்த்தின. இரண்டாவது விஷயம், அவர் இயல்பாகவே மிகவும் அமைதியானவர், தன்னை கவனித்துக்கொள்வது, அவரைச் சுற்றியுள்ளவர்களின் மேல் அவர் காண்பிக்கும் அக்கறை, அவருடன் விளையாடும் சகவீரர்கள் குறித்த அக்கறை, டிரஸ்ஸிங் ரூமில் அவரின் போக்கு அனைத்தும் எனக்கு பிடித்திருந்தது. சக வீரர்களுக்கு அளிக்கும் மரியாதை, அக்கறை அவரின் முக்கிய தகுதிகளாக எனக்குத் தெரிந்தது. ஒரு கேப்டனுக்கு இந்த தகுதிகள் முக்கியமானவை, அப்போதுதான் சகவீரர்கள் கேப்டனை பின்பற்றி நடக்க முடியும். மூன்றாவதாக, ரஜத் பட்டிதாரின் உத்வேகம். அணியில் ஏற்ற, இறக்கங்கள் வரும்போது அதீத வலிமையுடன், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதில் பட்டிதார் சிறந்தவர். அதனால்தான் பட்டிதாரை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியுள்ளோம்" எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. ஜாம்பவான்கள் அடங்கிய ஆர்சிபி அணிக்கு இளம் வீரர் 'ரஜத் பட்டிதார்' கேப்டனாக தேர்வானது எப்படி?
  23. பட மூலாதாரம்,EPA கட்டுரை தகவல் எழுதியவர், டியர்பெய்ல் ஜோர்டன் பதவி, செய்தியாளர், பிபிசி நியூஸ் 15 பிப்ரவரி 2025 அமெரிக்கா இனிமேலும் ஐரோப்பாவின் உதவிக்கு வராது என கருத்து தெரிவித்துள்ள யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி, ரஷ்யாவுக்கு எதிராக பாதுகாத்துக் கொள்ள "ஐரோப்பாவின் ராணுவம்" ஒன்றை உருவாக்க அழைப்பு விடுத்தார். மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், "யுக்ரேன் தங்கள் முதுகுக்கு பின்னால் தங்களது பங்களிப்பு இல்லாமல் செய்யப்படும் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொள்ளாது " என்றார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் அமைதி பேச்சுவார்த்தையைத் தொடங்க ஒப்புக்கொண்ட பிறகு ஸெலென்ஸ்கி இதைக் கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை நிகழ்த்திய உரையில் ஐரோப்பிய ஜனநாயகங்களை தாக்கிப் பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், பாதுகாப்புத் துறையில் "ஐரோப்பா பெரிய அளவில் முன்னேற வேண்டியிருப்பதாக" எச்சரித்திருந்தார். டிரம்ப் - புதின் தொலைபேசியில் 90 நிமிடம் பேசியது என்ன? இந்தியாவுக்கு அமெரிக்கா விற்க முன்வந்துள்ள எப்-35 போர் விமானத்தின் சிறப்புகள் இலங்கையில் சுமார் ரூ.8,700 கோடி மின் திட்டத்தை அதானி நிறுவனம் கைவிட்டது ஏன்? "ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது என நான் உண்மையில் நம்புகிறேன்" என்றார் ஸெலென்ஸ்கி. "பல பத்தாண்டுகளாக ஐரோப்பா மற்றும் அமெரிக்கா இடையே இருக்கும் உறவுகள் முடிவுக்கு வந்துகொண்டிருப்பதாக நேற்று இங்கே மியூனிச் நகரில், அமெரிக்க துணை அதிபர் தெளிவுபடுத்தினார்" என தெரிவித்தார். "இப்போது முதல் விஷயங்கள் வேறாக இருக்கும், அதற்கேற்ப ஐரோப்பா அனுசரித்து நடந்துகொள்ளவேண்டும்" என்றார் அவர். யுக்ரேன் மீது முழுவீச்சில் ரஷ்யா மேற்கொண்ட படையெடுப்பு, நேட்டோ கூட்டமைப்பு வலுவாகவும், பலமாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது என இவ்வாரத்தில், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹேக்சேத் கூறியிருந்தார். "நாம் நிதர்சனத்தைப் பேசுவோம். ஐரோப்பாவை அச்சுறுத்தும் ஒரு விஷயத்தில், அமெரிக்கா இல்லை என சொல்வதற்கான வாய்ப்பை நாம் மறுப்பதற்கில்லை," என சனிக்கிழமை ஸெலென்ஸ்கி தெரிவித்தார். "பல தலைவர்கள் ஐரோப்பாவிற்கு அதன் சொந்த ராணுவம் தேவை என்று பேசியுள்ளனர். ஒரு ராணுவம், ஐரோப்பாவின் ராணுவம்" என்றும் அவர் கூறினார். ஐரோப்பிய ராணுவம் என்ற கருத்தாக்கம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உட்பட மற்ற தலைவர்களால் முன்மொழியப்பட்டதுதான். அமெரிக்காவை சார்ந்திருப்பதை குறைப்பதற்கு ஐரோப்பாவிற்கு தனி ராணுவம் உருவாக்குவதற்கு மக்ரோன் ஆதரவு தெரிவித்திருந்தார். பிறப்பு அடிப்படையில் குடியுரிமை ரத்து - டிரம்பின் உத்தரவு அமெரிக்கவாழ் தமிழர்களை எவ்வாறு பாதிக்கும்?12 பிப்ரவரி 2025 இலங்கையில் சுமார் ரூ.8,700 கோடி மின் திட்டத்தை அதானி நிறுவனம் கைவிட்டது ஏன்?15 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இருவரும் அண்மையில் தொலைபேசியில் உரையாடினர் (கோப்புப் படம்) "புதினுடனான தன்னுடைய உரையாடல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் சில நாட்களுக்கு முன் என்னிடம் தெரிவித்தார். ஒருமுறைகூட ஐரோப்பா பேச்சுவார்தையில் இடம்பெற வேண்டும் என அவர் குறிப்பிடவிலை. அது பல விஷயங்களை சொல்கிறது," என்றார் ஸெலென்ஸ்கி. "ஐரோப்பாவை அமெரிக்கா ஆதரித்த அந்த பழைய நாட்கள் முடிந்துவிட்டன" என்று அவர் கூறினார். யுக்ரேன் மீது ரஷ்யா தொடுத்த படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவு நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், டிரம்ப் மற்றும் ஹெக்சேத் இருவருமே யுக்ரேன் நேட்டோவில் சேருவதற்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர். கடந்த 2014க்கு முந்தைய யுக்ரேனின் எல்லைகளுக்கு திரும்புவது யதார்த்தத்தில் சாத்தியம் இல்லை என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கூறியிருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு 'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு
  24. பாப்பரசரின் உடல்நிலை குறித்து வத்திக்கானின் அறிவிப்பு Published By: DIGITAL DESK 2 15 FEB, 2025 | 01:04 PM பாப்பரசர் பிரான்ஸிஸ் சுவாசத்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் அவருக்கு லேசான காய்ச்சல் உள்ளதாகவும் வத்திக்கான் தெரிவித்துள்ளது. 88 வயதான பாப்பரசர் பிரான்ஸிஸ், வெள்ளிக்கிழமை (14) திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, வத்திக்கானில் உள்ள வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் நுரையீரலில் தொற்றுப் பாதிப்பு இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மேலதிக சிகிச்கைக்காக இத்தாலியின் ரோமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாப்பரசர் பிரான்ஸிஸுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/206741
  25. Published By: DIGITAL DESK 2 15 FEB, 2025 | 04:37 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலமான மின் உற்பத்திகளை வரையறுப்பதற்காக இலங்கை மின்சாரசபையின் சிரேஷ்ட பொறியியலாளர்களை உள்ளடக்கி விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நிலக்கரி மற்றும் டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்வதற்காகவே அரசாங்கம் இவ்வாறானதொரு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைக்கமைய எதிர்காலத்தில் காற்றாலை மற்றும் சூரிய மின்உற்பத்தி திட்டங்களின் நிலைமை கேள்விக்குறியே. நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்படுவதற்கு முதல் நாள், அதாவது கடந்த 7ஆம் திகதி இலங்கை மின்சாரசபையால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. காற்றாலை, சூரிய மற்றும் நீர் மின்னுற்பத்திகளை வரையறுப்பது தொடர்பிலேயே அந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களை இவற்றை முற்றாக இல்லாமலாக்குவதற்கான நடவடிக்கைகளையே தற்போது அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. புதிய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் நிலக்கரி, டீசல் மாபியாக்கள் தலைதூக்கவுள்ளன. இது மிகவும் கவலைக்குரியதாகும். கடந்த காலங்களில் எம்மால் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் கட்டியெழுப்பப்பட்ட இந்த மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களே இன்று நாட்டில் பிரதான மின்னுற்பத்தி மூலங்களாகவுள்ளன. இவை அனைத்தையும் சீர் குலைக்கும் வேலைத்திட்டங்களை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இதற்காகவே இலங்கை மின்சாரசபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் பலரை உள்ளடக்கி இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையின் கீழ் அதானி மாத்திரமின்றி சகல சர்வதேச முதலீட்டாளர்களும் வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. கடந்த காலங்களில் மன்னார் காற்றலை மின்உற்பத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு 5 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அதானி நிறுவனம் முதலீட்டு சபைக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதனை அடிப்படையாகக் கொண்டு ஏனைய முதலீட்டாளர்களும் சிந்திப்பர். எந்தவொரு முதலீட்டாளருக்கும் போட்டித்தன்மை இன்றி வலுசக்தி துறையில் அதிகாரத்தை வழங்க வேண்டிய தேவை கிடையாது. அண்மையில் கூட விலைமனு கோரலின்றி நிறுவனமொன்றுக்கு 50 மொகாவோல்ட் காற்றாலை திட்டம் வழங்கப்பட்டது. இது முற்று முழுதாக விலைமனு கோரல் முறைமையை மீறிய மோசடி மிக்க கொடுக்கல் வாங்கலாகும் என்றார். https://www.virakesari.lk/article/206759

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.