Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. கல்மேகி சூறாவளியால் 114 பேர் பலி; பிலிப்பைன்ஸில் அவசரநிலை அறிவிப்பு 06 Nov, 2025 | 11:24 AM மத்திய பிலிப்பைன்ஸின் சில பகுதிகளை தாக்கிய கல்மேகி சூறாவளியில் சிக்கி 114 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அந்த நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பிலிப்பைன்ஸை நேற்று புதன்கிழமை (05) தாக்கிய சூறாவளி, இந்த ஆண்டு இப்பகுதியில் தாக்கிய மிக வலிமையான சூறாவளி என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கல்மேகி சூறாவளியால், பிராந்தியத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட தீவான செபு நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், 71 பேர் உயிரிழந்துள்ளதோடு, 127 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் 82 பேர் காயமடைந்துள்ளனர். நீரில் மூழ்கியதால் பெரும்பாலான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கல்மேகி சூறாவளி இன்று வியாழக்கிழமை (06) காலை பிலிப்பைன்ஸை விட்டு வெளியேறி மத்திய வியட்நாமை நோக்கி நகர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/229614
  2. 13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் Nov 6, 2025 - 05:10 PM 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே தனது எதிர்பார்ப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், இந்திய உலக விவகாரங்களுக்கான சபையில் உரையாற்றும் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய உலக விவகாரங்களுக்கான சபையில் முக்கிய உரையை நிகழ்த்தினார். அதில் அந்நாட்டின் ஊடகவியலாளர்கள், இராஜதந்திர அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். https://adaderanatamil.lk/news/cmhncuqiu01feo29nzz8otr4l
  3. 06 Nov, 2025 | 03:04 PM நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிப்பதற்கான பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தேசிய தொழுநோய் மாநாடு இன்று வியாழக்கிழமை (06) காலை கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் ஆரம்பமானதோடு அதன் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார். அடுத்த 10 ஆண்டுகளில் இலங்கையில் இருந்து தொழுநோயை ஒழிப்பதற்கான வரைபடம் இதன்போது வெளியிடப்பட்டது. உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) மற்றும் சசகாவா மன்றம் என்பவற்றின் ஒத்துழைப்புடன் சுகாதார அமைச்சின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய தொழுநோய் மாநாடு இன்று வியாழக்கிழமை (06) நாளை வெள்ளிக்கிழமை (07) கொழும்பில் நடைபெறும். நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ,பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் இலங்கை1995 ஆம் ஆண்டில் தொழுநோயை ஒழித்த போதிலும் அந்தப் பயணம் இன்னும் நிறைவடையவில்லை. தொடர்ந்தும் புதிய நோயாளிகள் அடையாளங் காணப்படுகின்றனர். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500-2000 புதிய தொழுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர்களில் சுமார் 10% பேர் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். அதன்படி, 2035 ஆம் ஆண்டுக்குள் இலங்கையை தொழுநோய் அற்ற நாடாக மாற்ற தற்போதைய அரசாங்கம் திட்டமிட்ட வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.நோய் பரவுவதற்கு காரணமான நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிதல், வைத்தியசாலை கட்டமைப்பால் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் வசதிகளை மேம்படுத்துதல், அங்கவீனமுற்றவர்களுக்கான முறையான புனர்வாழ்வுத் திட்டங்களை செயல்படுத்துதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொழுநோய் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகளை இந்த மாநாடு மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிப்பதில் பல ஆண்டுகளாக சுகாதார அமைச்சிற்கு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் சசகாவா மன்றம் என்பவற்றுக்கு அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார். இதேவேளை, புதிதாக அடையாளங்காணப்பட்டுள்ள தொழுநோயாளிகளில் சுமார் 40% மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான தொழுநோயாளிகள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதோடு முறையே மட்டக்களப்பு, கம்பஹா, குருநாகல் மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்தும் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக இதன்போது அறிவிக்கப்பட்டது. நிப்பொன் மன்றத்தின் தலைவரும் தொழுநோய் ஒழிப்புக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் நல்லெண்ணத் தூதுவர் மற்றும் தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகளுக்கான ஜப்பானிய அரசாங்க நல்லெண்ணத் தூதுவர் யோஹெய் சசகாவாவும் (Yohei Sasakawa) இந்த மாநாட்டில் முக்கிய உரையை நிகழ்த்தினார். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்கே மற்றும் தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் யசோமா வீரசேகர ஆகியோரும் இங்கு கருத்துத் தெரிவித்தனர். தொழுநோயாளிகள் சார்பாகவும் அஜித் திசாநாயக்க உரையாற்றினார். தொழில் அமைச்சர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதிஅமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி, ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமாடா(Akio ISOMATA), உலக சுகாதார ஸ்தாபனத்தின் உலகளாவிய தொழுநோய் திட்டத்தின் குழுத் தலைவர் மொமோ தகுயுச்சி(Momoe Takeuchi), உலக சுகாதார ஸ்தாபனத்தின் உலகளாவிய தொழுநோய் திட்டக் குழுத் தலைவர் வைத்தியர் விவேக் லால் உள்ளிட்ட உலக சுகாதார ஸ்தாபனத்தின் உள்நாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் சுகாதார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/229639
  4. அததெரண கருத்துப்படம்.
  5. பரவாயில்லை அண்ணா, உங்களை அந்த பட்டியலில் சேர்க்கமாட்டோம்! சுவை எப்படி என்று சொல்லுங்கோ?!
  6. அண்ணை, உண்டு கழித்த கோப்பிப்பழ விதையை சுத்தமாக்கி தான் பொடியாக்குவார்கள்! {யாழில ஒரு பெரும்புள்ளியை கண்டுபிடித்தாச்சி! ஒரு கப் கோப்பிக்கு 8000ரூபா(இந்திய) செலவளித்தால் பெரும்புள்ளி தானே?!}
  7. இப்போது எப்படி இருக்கிறது காஸா? - போரின் பேரழிவை நேரில் கண்ட பிபிசி கட்டுரை தகவல் லூசி வில்லியம்சன் மத்திய கிழக்கு செய்தியாளர், காஸா 3 மணி நேரங்களுக்கு முன்னர் காஸா நகரை நோக்கி இருக்கும் கரையிலிருந்து காணுகையில் போரின் விளைவுகளை மறைக்க முடியாது. வரைபடங்கள் மற்றும் நினைவுகளிலிருந்து காஸா நகரம் அழிந்துவிட்டது. ஒருபுறம் பெயிட் ஹனூன் முதல் மறுபுறம் காஸா சிட்டி வரை தரை மட்டமாக ஒரே நிறத்தில் காட்சியளிக்கும் இடிபாடுகளே நினைவில் உள்ளன. இன்னும் தொலைதூரத்தில் நின்றுகொண்டிருக்கும் கட்டடங்களை தவிர, காஸா நகரில் நீங்கள் பயணிப்பதற்கோ அல்லது பல பத்தாயிர மக்களின் இருப்பிடங்கள் அமைந்திருந்ததற்கான அடையாளங்களை காண்பதற்கோ உங்களுக்கு எதுவும் இல்லை. போரின் ஆரம்ப வாரங்களில் இஸ்ரேலிய தரைப்படையினர் நுழைந்த பகுதிகளில் இதுவும் ஒன்று. இதையடுத்து, தங்களின் வலுவான பகுதிகளில் ஹமாஸ் மீண்டும் இணைந்ததால், இஸ்ரேலிய படையினர் பலமுறை திரும்பி வந்துள்ளனர். காஸாவிலிருந்து செய்தி நிறுவனங்கள் சுயாதீனமாக செய்தி சேகரிக்க இஸ்ரேல் அனுமதிப்பதில்லை. புதன்கிழமையன்று, பிபிசியை சேர்ந்த பத்திரிகையாளர்கள் உட்பட சிலரை காஸா முனையில் இஸ்ரேலிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்கு அழைத்துச் சென்றது. குறுகிய நேரம் நீடித்த இந்த பயணம் தீவிரமாக கட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது, இதில் பாலத்தீனர்களையோ அல்லது காஸாவின் மற்ற பகுதிகளையோ அணுக முடியவில்லை. செய்திகள் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே அவை ராணுவ அதிகாரிகளால் பார்க்கும் வகையில் இஸ்ரேலின் ராணுவ தணிக்கை சட்டங்கள் உள்ளன. எனினும் இந்த செய்தியாக்கம் மீதான தனது கட்டுப்பாட்டை பிபிசி உறுதி செய்தது. படக்குறிப்பு, காஸா நகரத்தின் கிழக்குப்பகுதியில் உள்ள ஷெஜையாவில் காணப்பட்ட இடிபாடுகள் நாங்கள் சென்றுவந்த பகுதியில் அழிவு எந்தளவுக்கு உள்ளது என இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் நாடவ் ஷோஷானியிடம் கேட்டபோது, "எங்கள் இலக்கு அதுவல்ல" என பதிலளித்தார். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது திருமணத்திற்காக எடுக்கப்பட்ட ஐயப்பன் கோவில் தங்கம் - சபரிமலை மோசடி புகாரின் முழு பின்னணி நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளி நபர் தேர்வு: டிரம்ப் எதிர்ப்பை மீறி வென்றவருக்கு காத்திருக்கும் சவால்கள் ஒரு கப் காபி விலை ரூ.8,000: 'புனுகுப்பூனை' காபியில் அப்படி என்ன இருக்கிறது? ஜவ்வாது மலையில் தங்க புதையல் - கட்டுமானத்திற்காக தோண்டிய போது கிடைத்தது End of அதிகம் படிக்கப்பட்டது "பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுவதுதான் எங்களின் இலக்கு. கிட்டத்தட்ட அனைவரின் வீட்டிலும் பதுங்குக்குழி அல்லது கண்ணி பொறி அல்லது ராக்கெட் மூலம் செலுத்தப்படும் எறி குண்டு அல்லது குறிபார்த்து துப்பாக்கி சுடும் அமைப்பு உள்ளது," என அவர் தெரிவித்தார். "இங்கிருந்து நீங்கள் வேகமாக வாகனத்தை இயக்கினால், ஒரு நிமிடத்திற்குள் இஸ்ரேலிய மூதாட்டி அல்லது குழந்தையின் வீட்டின் அறைக்குள் இருப்பீர்கள். அதுதான் அக்டோபர் 7 அன்று நடந்தது." 2023ம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்களில் 1,100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 251 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். அப்போதிலிருந்து, காஸாவை சேர்ந்த 68,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக, ஹமாஸ் நடத்தும் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சாம்பல் நிற இடிபாடுகள் இந்த பகுதியில் பணயக்கைதிகள் சிலரின் உடல்கள் கண்டறியப்பட்டதாக கூறும் லெப்டினன்ட் கர்னல் ஷோஷானி, அதில் இந்த வாரம் ஹமாஸால் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட இடாய் சென்னின் உடலும் அடங்கும் என்றார். மற்ற ஏழு பணயக்கைதிகளின் உடல்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நாங்கள் சென்ற இஸ்ரேலிய ராணுவ தளமானது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அமைதி திட்டத்தின் படி அமைக்கப்பட்ட தற்காலிக எல்லையான மஞ்சள் கோட்டிலிருந்து சில நூறு மீட்டர்களில் அமைந்திருந்தது, இந்த பகுதி காஸாவில் ஹமாஸ் கட்டுப்படுத்தும் பகுதிகளில் இருந்து இன்னும் இஸ்ரேலிய படைகளால் கட்டுப்படுத்தப்படும் பகுதிகளை பிரிக்கிறது. ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மற்றும் பொதுமக்களை எச்சரிக்கும் விதமாக, அந்த மஞ்சள் கோட்டு பகுதியில் படிப்படியாக தடுப்புகளை அமைத்து இஸ்ரேலிய ராணுவம் குறியிட்டு வருகிறது. கோட்டின் இந்த பகுதியில் எந்த எல்லைகளும் இன்னும் வரையறுக்கப்படவில்லை எனக்கூறிய இஸ்ரேலிய படையை சேர்ந்த ஒருவர், கட்டடங்களின் சாம்பல் நிற இடிபாடுகளுக்கு இடையில் ஒரு சிறிய மணல் பகுதியை வழிகாட்டியாகப் பயன்படுத்தி சுட்டிக்காட்டினார். பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, காஸா நகரத்தில் புதன்கிழமை காணப்பட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவினர் போர் நிறுத்தம் ஏற்பட்டு ஒரு மாதமாகிவிட்டது, ஆனால் மஞ்சள் கோட்டு பகுதியில் ஹமாஸ் துப்பாக்கிதாரிகளுடன் "கிட்டத்தட்ட தினமும்" தாங்கள் சண்டையிடுவதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர். காஸா நகரத்தை நோக்கியிருக்கும் கரைகளில் உள்ள துப்பாக்கிச் சூடு நிலைகள் வெண்கல நிற தோட்டா உறைகளின் குவியல்களால் குறிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் "நூற்றுக்கணக்கான முறை" போர் நிறுத்த விதிகளை மீறியதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது, மேலும் அதன் விளைவாக 240க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவால் வழிநடத்தப்பட்ட அமைதி திட்டத்துக்கு இஸ்ரேலிய படைகள் உறுதி பூண்டுள்ளதாக கர்னல் ஷோஷானி கூறுகிறார், ஆனால் இஸ்ரேலிய குடிமக்களுக்கு ஹமாஸ் இனியும் ஓர் அச்சுறுத்தலாக இருக்காது என்பதை தாங்கள் உறுதி செய்வோம் என்றும், தேவையானவரை தாங்கள் இருப்போம் என்றும் கூறினார். "ஹமாஸ் ஆயுதங்களை வைத்துள்ளது மற்றும் காஸாவை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது என்பது எல்லோருக்கும் மிக தெளிவாக தெரியும்," என்கிறார் அவர். "இதற்கு தீர்வு காணத்தான் நாம் முயற்சிக்கிறோம், ஆனால் அது வெகு தொலைவில் உள்ளது" என ஷோஷானி தெரிவித்தார். பட மூலாதாரம், Moose Campbell/ BBC படக்குறிப்பு, காஸா நகரின் கட்டடங்கள் சாம்பல் நிற இடிபாடுகளாக உள்ள காட்சி அடுத்த கட்டம் என்ன? அமெரிக்காவின் அமைதித் திட்டத்தின் அடுத்த கட்டத்தின்படி, ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு, அதிபர் டிரம்ப் உட்பட சர்வதேச தலைவர்கள் உள்ள பாலத்தீன குழுவிடம் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும். ஆனால், அதிகாரம் மற்றும் ஆயுதங்களை கைவிடுவதற்கு பதிலாக, ஹமாஸ் அதற்கு எதிரானதை செய்துவருவதாக கர்னல் ஷோஷானி கூறுகிறார். "காஸா மீதான கட்டுப்பாடு மற்றும் ஆதிக்கத்தை நிறுவுவதற்காக, ஹமாஸ் தன்னை ஆயுதமயப்படுத்தி கொள்ள முயற்சிப்பதாக," அவர் என்னிடம் கூறினார். "பொதுமக்களை பயமுறுத்துவதற்காகவும் காஸாவில் யார் தலைமை வகிக்கிறார் என்பதை மக்கள் புரிந்துகொள்வதற்காகவும் ஹமாஸ் மக்களை பட்டப்பகலில் கொலை செய்கிறது. ஹமாஸ் தங்கள் ஆயுதங்களை கைவிடுவதை உறுதி செய்ய இந்த ஒப்பந்தம் போதுமான அழுத்தத்தை ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்." இஸ்ரேலியப் படையினர், இடிபாடுகளுக்கு அடியில் கண்டுபிடித்ததாகக் கூறும் சுரங்கப்பாதைகளின் வரைபடத்தை எங்களுக்குக் காட்டினர். "சிலந்தி வலை போன்ற பெரியளவிலான சுரங்கப்பாதைகளை" தாங்கள் கண்டதாக அவர்கள் தெரிவித்தனர், அதில் பல ஏற்கெனவே அழிந்துவிட்டன, சில அப்படியே உள்ளன, இன்னும் சில சுரங்கப்பாதைகளை படையினர் தேடிவருகின்றனர். இந்த அமைதி ஒப்பந்தத்தின் அடுத்த கட்டத்தில் என்ன நடக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை. இந்த ஒப்பந்தம் காஸாவை பதற்றமான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது. சூழல் எந்தளவுக்கு நிலையற்றதாக உள்ளது என்பதை அமெரிக்கா அறிந்துள்ளது, மேலும் போர் நிறுத்தம் ஏற்கெனவே இருமுறை தோல்வியடைந்துள்ளது. இந்த நிலையற்ற மோதலில் இருந்து நீடித்த அமைதியை நோக்கி முன்னேற அமெரிக்கா கடுமையாக முயற்சித்து வருகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுக்கு அமெரிக்கா அனுப்பிய வரைவு தீர்மானம் பிபிசியால் பார்க்கப்பட்டது, அதில் காஸாவின் பாதுகாப்பைக் கட்டுப்படுத்தவும் ஹமாஸ் ஆயுதங்களை கைவிடவும் ஒரு சர்வதேச ஸ்திரப்படுத்தும் படைக்கு (International Stabilisation Force - ISF) இரண்டு ஆண்டு கால அதிகாரத்தை வழங்குகிறது. ஆனால் இந்த ஒப்பந்தத்தின் அடுத்த கட்டம் குறித்து அதிக தகவல்கள் தெரியவில்லை: ஹமாஸ் ஆயுதக் குறைப்புக்கு முன்னதாக காஸாவைப் பாதுகாக்க எந்த நாடுகள் படைகளை அனுப்பும், இஸ்ரேலிய படைகள் எப்போது திரும்பப் பெறப்படும் அல்லது காஸாவின் புதிய தொழில்நுட்ப நிர்வாகத்தின் உறுப்பினர்கள் எவ்வாறு நியமிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. எதிர்காலத்தில் வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்து காஸாவை மத்திய கிழக்கு மையமாக கட்டமைக்கும் ஒரு தொலைநோக்குப் பார்வையை அதிபர் டிரம்ப் கோடிட்டுக் காட்டியுள்ளார். காஸா இன்று இருக்கும் சூழலில் அந்த நோக்கம் வெகு தொலைவில் உள்ளது. சண்டையை யார் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்பது மட்டுமல்லாமல், காஸா இஸ்ரேலால் பெரும்பாலும் அழிக்கப்பட்டு டிரம்பால் முதலீடாகக் கருதப்படும் நிலையில், காஸா மக்கள் தங்கள் நகரங்கள் மற்றும் நிலங்களின் மீது எதிர்காலத்தில் எவ்வளவு செல்வாக்கு செலுத்துவார்கள் என்பதும் கேள்வியாக உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62e0z9166do
  8. Published By: Vishnu 06 Nov, 2025 | 12:54 AM (எம்.ஆர்.எம்.வசீம்) முஸ்லிம் தாதியர்களின் ஹிஜாப் விவகாரத்தை அடிப்படையாகக்கொண்டு ஒருசிலர் நாட்டுக்குள் மீண்டும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அரசாங்கம் அதற்கு இடமளிக்கக்கூடாது. அதேநேரம் முஸ்லிம் தாதியர்கள் ஹிஜாப் அணிந்து கடமையில் ஈடுபட முடியும் என்பதை அரசாங்கம் சுற்றுநிருபம் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். முஸ்லிம் தாதியர்கள் தலையை மறைத்து அணியும் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டு ஐக்கியத்தை அமைத்துக்கொள்வதன் மூலமே நாட்டை அபிவிருத்தியை நோக்கி முன்னுக்கு கொண்டுசெல்ல முடியும். பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ளாமல், அதனை சுமையாக நாங்கள் காண்பதாக இருந்தால், பன்முகத்தன்மையை ஐக்கியத்துக்கு தடையாக நாங்கள் பார்ப்போமானால் எங்களால் ஒருபோதும் ஒருநாடாக முன்னுக்கு செல்ல முடியாது. இது வரலாற்றில் பல தடவைகள் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம் பெண் தாதியர்கள் (தலையை மறைத்து) அணியும் ஹிஜாப் புதிய விடயமல்ல. இலங்கையில் பல தனியார் வைத்தியசாலைகளில் பணிபுரியும் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்தே வேலை செய்கிறார்கள். அவ்வாறு எந்த தடையும் இல்லை. அதேபோன்று உயர் நீதிமன்றில் உள்ள பெண் சட்டத்தரணிகள் ஹிஜாப் அணிந்துகொண்டுதான் வழக்கு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகிறார்கள். பாராளுமன்றத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அஞ்சான் உம்மா ஹிஜாப் அணிந்தே சபை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். அதேபோன்று உலக நாடுகளை எடுத்துக்கொண்டால், விசேடமாக அமெரிக்காவில் பொலிஸ் சேவைக்கு இணையும் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்துகொண்டு கடமைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஐராேப்பிய நாடுகள் பலவற்றில் இவ்வாறு முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து கடமைகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது புதிய விடயமல்ல. அதனை அடிப்படையாகக்கொண்டு நாட்டுக்குள் மீண்டும் சந்தேகம், நம்பிக்கையில்லா தன்மை, பிரிவினைவாதத்தை ஏற்படுத்த ஒருசிலர் முயற்சிக்கின்றனர். அதனால் இதுதொடர்பில் அரசாங்கம் உறுதியாக செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் அரசாங்கம் இது தொடர்பில் மெளனமாக இருந்து வந்தால், இறுதியில் அரசாங்கத்துக்கு அவர்களுக்கு முன்னால் மண்டியிட வேண்டி ஏற்படும். ஏனெனில் தற்போது சமுகவலைத்தலங்களில், இனவாத, மதவாத கருத்துக்கள், வெறுப்பூட்டும் பிரசாரங்கள், பிரிவினை வாதத்தை தூண்டும் கருத்துக்கள் பாரியளவில் பிரசாரமாகி வருகின்றன. குறிப்பாக அண்மையில் இஸ்ரேலுக்கு சென்றுவந்த ஒருவர் சமூக வலைத்தளத்தில், பலஸ்தீனுக்கு ஷாட்டர் விமானம் ஒன்றை அனுப்பி அங்கு இடம்பெயர்ந்து வாழ்பவர்களை,இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்து வருகிறார். இது கடந்த காலங்களில் போன்று இனங்களுக்கிடையில் வேறுப்பு, சந்தேகத்தை ஏற்படுத்தும் விடயமாகும். சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையில் பிரச்சினையை தூண்டும் பேச்சாகும். இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டவர்களே இன்று அரசாங்கம் செய்கிறார்கள். ஆனால் இவற்றுக்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இவ்வாறான வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிராக அரசாங்கம் சட்டத்தை நிலை நாட்டுவதும் இல்லை. அத்துடன் தாதியர் சேவையி்ல் ஈடுபடும் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து சேவையில் ஈடுபட முடியும். அதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார்.அது நல்லவிடயம். அதனை சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்துமாறே நாங்கள் தெரிவிக்கிறோம். அதனை சுற்று நிருபம் ஒன்றின் மூலம் அறிவிக்க வேண்டும். ஜேஆரின் காலத்தில் கல்வி அமைச்சராக இருந்த நிஸ்ஸங்க விஜேரத்ன, முஸ்லிம் மாணவிகள் தங்கள் கலாசாரத்தின் பிரகாரம் பாடசாலை சீருடை அணிந்து செல்ல சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த சுற்று நிருபம் இன்றைக்கும் செல்லுபடியாகும். அதன் பிரகாரமே முஸ்லிம் மாணவிகள் பாடசாலை சீருடை அணிந்து செல்கிறார்கள். அதேபோன்று முஸ்லிம் தாதியர்களும் ஹிஜாப் அணிந்து கடமையில் ஈடுபட முடியுமான வகையில் அதனை சுற்று நிருபம் ஒன்றின் மூலம் அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/229593
  9. ஜவ்வாது மலையில் 103 தங்க காசுகள் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? படக்குறிப்பு, தங்க காசுகள் கட்டுரை தகவல் மாயகிருஷ்ணன் கண்ணன் பிபிசி தமிழுக்காக 5 நவம்பர் 2025 திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள சிவன் கோயிலில் கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டிய போது தங்க புதையல் கிடைத்துள்ளது. திருவண்ணாமலை கலசப்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலையில் அமைந்துள்ளது கோவிலூர் கிராமம். இங்கு பழமையான சிவன் கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவில் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தக் கோவில் வளாகத்தை புனரமைக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வந்த நிலையில், தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கட்டுமானப் பணியின் ஒரு பகுதியாக பள்ளம் தோன்றிய போது அதிலிருந்து 100-க்கும் மேற்பட்ட தங்க காசுகள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறிய அளவிலான தங்க காசுகள் கோவில் கட்டுமான பணியின் போது கிடைத்த தங்க காசுகளின் புதையல் தொடர்பாக அறநிலையத் துறை செயல் அலுவலர் சிலம்பரசன் பிபிசி தமிழிடம் தொலைபேசியில் விவரித்தார். "கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புனரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திங்கட்கிழமை (நவம்பர் 3) காலை ஊழியர்கள் திருமூலநாதர் கருவறையில் கட்டுமானப் பணிகளுக்காகப் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தரைக்குக் கீழே ஒரு சிறிய பானை புதைந்திருப்பதைக் கண்டனர்." படக்குறிப்பு, புரனமைப்பு பணிகள் செய்யப்படுவதற்கு முன் கோவிலின் தோற்றம் "சந்தேகத்துடன் அந்தப் பானையை வெளியே எடுத்துத் திறந்து பார்த்தபோது, அதனுள் தங்க காசுகள் இருந்துள்ளன. உடனடியாக நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டோம். அந்தப் பானையில் மொத்தம் 103 தங்க காசுகளும் இருந்தது உறுதி செய்யப்பட்டது." என்றார். கண்டெடுக்கப்பட்ட 103 தங்க காசுகளும் கைப்பற்றப்பட்டு, வருவாய்த்துறை மூலம் பாதுகாப்பாக அரசுக் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். படக்குறிப்பு, தங்க காசுகள் சோழர் காலத்து கோவில் திருவண்ணாமலை வட்டாட்சியரும் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலருமான பாலமுருகன் ஜவ்வாது மலையில் அமைந்துள்ள சிவன் கோவில் வரலாற்று தகவல்கள் குறித்து பிபிசி தமிழிடம் விவரித்தார். "சோழர் காலத்து கோவிலான இது தற்போது ஆதிஅருணாச்சலேஸ்வரர் கோவில் என்று அழைக்கப்பட்டாலும் கோவிலில் உள்ள கல்வெட்டுச் சான்றுகளின்படி திருமூலநாதர் கோவில் என்று அழைக்கப்பட்டுள்ளது." என்கிறார் பாலமுருகன். கோவிலின் பெரும்பாலான பகுதிகள் சிதிலமடைந்து விட்டதாகக் கூறிய அவர் அறநிலையத் துறை மூலம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். "இந்த தங்க காசுகள் மிக சிறிய அளவிலானவை. இந்த தங்க காசுகள் கோவில் மற்றும் வீடு கட்டும்போது கருவறை மற்றும் நில வாயில்படி பகுதியில் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டன," என்றும் குறிப்பிட்டார். படக்குறிப்பு, தங்க புதையல் கிடைத்த இடம் தங்க காசுகள் தவிர்த்து இந்தக் கோவிலின் அருகே பல வரலாற்றுச் சின்னங்கள் இருப்பதாகவும் பாலமுருகன் தெரிவித்தார். "கோவில் அருகிலேயே பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்கு கல்வெட்டும் காணப்படுகிறது. அதே போல் கோவிலின் சுவர் பகுதியில் சோழர் கால கல்வெட்டுகளும் வேறு சில கல்வெட்டுகளும் உள்ளன. சமநிலப் பகுதிகளில் சோழர்கள் மிக சிறப்பான வேலைப்பாடுகளுடன் கோவிலை கட்டியுள்ளார்கள். அதே போல் சிற்பங்களுடன் மிக கலைநயத்துடனே இந்தக் கோவிலை பல்லாயிரம் அடி உயரத்தில் ஜவ்வாது மலையில் கட்டியுள்ளது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது." என்றார் பாலமுருகன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2dx39k9ydo
  10. Published By: Vishnu 06 Nov, 2025 | 12:51 AM (எம்.மனோசித்ரா) நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் ஏற்கவே சுமார் 2000 வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள நிலையில், எதிர்வரும் காலங்களில் மேலும் 5000க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஆயத்தமாககிக் கொண்டிருக்கின்றனர். எனவே இவ்வாறு ஆயிரக்கணக்கில் வைத்தியர்கள் மருத்துவ சேவையிலிருந்து நீக்குவதைத் தவிர்ப்பதற்கும், சுகாதாரத்துறையிலுள்ள ஏனைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் 2026 வரவு - செலவு திட்டத்தின் ஊடாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் சுமார் 2000 வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். 5000க்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வெளிநாடு செல்வதை தடுத்து, இலவச சுகாதார சேவையை பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும். சுகாதாரத்துறையிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 8 யோசனைகளை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பரிந்துரைக்கிறது. அவற்றில் பிரதானமானது விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் உட்பட அனைவரையும் நாட்டில் தக்க வைத்துக் கொண்டு அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கி மக்களுக்கு உயரிய சுகாதார சேவையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வைத்தியசாலைகள், சுகாதார நிலையங்களில் நிலவும் அத்தியாவசிய மருந்து தட்டுப்பாடுகளும் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு வழங்கப்பட்டால் மாத்திரமே வினைத்திறனான மருத்துவ சேவையை வழங்க முடியும். குறைந்த எண்ணிக்கையிலான வைத்தியர்களைக் கொண்டு சுகாதார சேவையை விரிவுபடுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால் அது சாத்தியமற்றது. எனவே வைத்தியர்களின் பற்றாக்குறையை தீர்ப்பது குறித்தும் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். வைத்தியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பட்டப்படிப்பிற்கான ஒத்துழைப்புக்களையும் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கின்றோம். மேலும் நாட்டிலுள்ள ஆரம்ப பிரிவு சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். சுகாதார அமைச்சருடன் இது குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றோம். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றோம். கோரிக்கை விடுக்கப்பட்டு 4 மாதங்கள் கடந்தும் இதுவரையில் எமக்கான அழைப்பு கிடைக்கப் பெறவில்லை. கோரிக்கைகளைப் புறக்கணிக்காமல் பேச்சுவார்த்தைகள் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வருமாறு அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/229592
  11. பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் க.சுபகுணம் பிபிசி தமிழ் 5 நவம்பர் 2025 கட்டு வரியன் பாம்புக்கு வட இந்தியாவின் சில கிராமங்களில் 'மூச்சை விழுங்கும் பாம்பு' என்ற பெயருண்டு. அதன் கடிக்கு ஆளான பலரும் உறக்கத்திலேயே இறந்துவிடுவதுதான் இப்படி அழைக்கப்படுவதற்குக் காரணம். அதேவேளையில், கட்டு வரியன் கடித்துவிட்டாலே மரணம்தான் என்று அச்சப்படத் தேவையில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். சமீபத்தில், புதுக்கோட்டையில் அந்தப் பாம்பிடம் கடிபட்ட ஆறு வயது சிறுமி ஒருவர் ஒரு வாரம் கொடுக்கப்பட்ட தொடர் சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்திருப்பது அதற்குச் சான்றாக விளங்குகிறது. இருப்பினும், கட்டு வரியன் பாம்பு கடித்தால் பலரும் தூக்கத்திலேயே இறந்துவிடுவது ஏன்? அதன் நஞ்சு மனித உடலில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? இந்தத் தகவல்களை விரிவாகத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் பாம்புகள் மற்றும் அதன் நஞ்சு தொடர்பாக ஆராய்ந்து வரும் வல்லுநர்களைத் தொடர்புகொண்டது. வயிற்று வலியில் துடித்த ஆறு வயது சிறுமி புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே அமைந்துள்ளது குலவைப்பட்டி கிராமம். அங்கு வாழும் பழனி, பாப்பாத்தி தம்பதியின் ஆறு வயது மகள் ஸ்ரீமதி, கடந்த அக்டோபர் 15-ஆம் தேதியன்று இரவு திடீர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டார். சிறுமிக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பற்றிய தெளிவான தகவல்கள் ஏதும் பெற்றோர்களுக்குத் தெரிந்திருக்காத நிலையில், வயிற்று வலியில் துடித்த மகளை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பட மூலாதாரம், Dr A. Thanigaivel இரு வேறு தனியார் மருத்துவமனைகளில் வெவ்வேறு சிகிச்சைகளைப் பெற்று, முன்னேற்றம் இல்லாத நிலையில், இரண்டு நாட்கள் கழித்தே சிறுமி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கண்களைத் திறக்க முடியாத நிலையில் சிறுமியைக் கொண்டு வந்ததாகவும் மிகத் தாமதமாக வந்ததால் சிகிச்சை அளிப்பதில் பல சிரமங்கள் இருந்ததாகவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார் குழந்தைகள் நல மருத்துவர் அரவிந்த். "சிறுமி கடும் வயிற்று வலியால் சிரமப்பட்டதாக பெற்றோர் தெரிவித்தனர். அதோடு, கண்களைத் திறக்க முடியாத நிலையில், இமைகளின் நரம்பு பாதிக்கப்பட்டு இருந்தது. அவர் சுவாசிக்கவும் சிரமப்பட்டார். இவையனைத்துமே கட்டு வரியன் பாம்பு கடித்தால் ஏற்படக்கூடிய அறிகுறிகள். இதை உணர்ந்தவுடன், உரிய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு உறுதி செய்தோம். பின்னர் பாம்புக்கடிக்கு கொடுக்கப்படும் நஞ்சுமுறி மருந்தை சிறுமிக்கு கொடுத்து சிகிச்சையளிக்கத் தொடங்கினோம்," என்று தெரிவித்தார். கட்டு வரியன் கடித்தும் அதிக நேரம் உயிர் பிழைப்பது சாத்தியமா? பாம்பு கடிக்கும்போது எந்த அளவிலான நஞ்சை மனித உடலுக்குள் செலுத்துகிறது என்பதைப் பொறுத்தே இது மாறுபடும் என்கிறார் யுனிவெர்சல் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் மூத்த விஞ்ஞானியுமான முனைவர் மனோஜ். "இந்தக் குழந்தையைப் பொறுத்தவரை எப்போது பாம்பு கடித்தது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் கடிக்கும்போது சிறிய அளவிலான நஞ்சை மட்டுமே பாம்பு சிறுமியின் உடலில் செலுத்தியிருக்கலாம். இது அனைவருக்கும் அமையாது, நல்வாய்ப்பாக இந்தச் சிறுமிக்கு அமைந்துவிட்டது," என்று தெரிவித்தார் அவர். பட மூலாதாரம், Dr.M.P.Koteesvar படக்குறிப்பு, யுனிவெர்சல் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் மூத்த விஞ்ஞானியுமான முனைவர் மனோஜ் இதுபோல கட்டு வரியன் கடித்து ஒரு நாள், இரண்டு நாட்கள் கழித்தும்கூட சிகிச்சைக்காக மக்கள் மருத்துவமனையை நாடுவதைத் தனது அனுபவத்திலும் சில முறை கண்டிருப்பதாக முனைவர் மனோஜ் தெரிவித்தார். "இதற்குக் காரணம், நாகப் பாம்பு போல இதன் நஞ்சு உடலுக்குள் சென்றவுடன் வேலையைக் காட்டுவதில்லை. ஒருவேளை நஞ்சின் அளவு குறைவாக இருந்தால், அதன் வீரியம் தெரியத் தொடங்குவதற்குச் சில மணிநேரம் முதல் ஒரு நாள் வரைகூட ஆகலாம். உடல் தாங்கக்கூடிய சிறிய அளவிலான நஞ்சை மட்டுமே பாம்பு உட்செலுத்தியிருந்தாலும், அதன் அறிகுறிகளை ஒருவர் அனுபவிப்பார். அதில் மாற்றமில்லை. ஆனால் அதற்கு எடுக்கும் நேரம் அதிகம். ஒருவேளை இப்படிப்பட்ட சூழலை புதுக்கோட்டையில் பாதிக்கப்பட்ட சிறுமி எதிர்கொண்டிருக்க வாய்ப்புள்ளது." என்று அவர் விளக்கினார். நஞ்சின் அளவு குறைவாக இருந்தாலும், அதற்கான விளைவுகளை உடல் அனுபவிக்கவே செய்யும் என்பதைக் குறிப்பிட்ட அவர் அதற்கு சிகிச்சை அளிக்கும் வரை அந்த பாதிப்புகள் நீங்காது என்றார். அதுவே, இரண்டு நாட்களுக்கு மேல் பிழைத்திருக்க முடிந்தாலும், குழந்தை பல்வேறு பாதிப்புகளை அனுபவித்தமைக்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும் மனோஜ் குறிப்பிட்டார். இரவில் கடிக்கும் கட்டு வரியன் பாம்பு கட்டு வரியன் கடித்த பிறகும் இரு நாட்களுக்கு மேல் உயிர் பிழைத்திருந்த சிறுமி, பின்னர் ஒரு வார சிகிச்சையைத் தொடர்ந்து முற்றிலுமாகக் குணமடைந்தார். இதுபோல, கடிபட்டதன் விளைவுகளை ஒருவர் அனுபவிக்கச் சிறிது நேரம் எடுக்கலாம் என்றார் மனோஜ். ஆனால், 'இந்தியாவில் நிகழும் பாம்புக்கடி மரணங்களில் கணிசமான இறப்புகளுக்கு கட்டு வரியனும் காரணமாக இருப்பது ஏன்?' என்ற கேள்வி எழுகிறது. பட மூலாதாரம், Getty Images அதுகுறித்துக் கேட்டபோது, "பாம்பின் நஞ்சு குறைவான அளவில் செலுத்தப்பட்டால் மட்டுமே இப்படியான நல்வாய்ப்புகள் கிடைக்கும்" எனக் குறிப்பிட்ட அவர், மற்றபடி கட்டு வரியனின் நஞ்சு நுரையீரலில் வீக்கத்தை ஏற்படுத்துவதால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வதாகக் கூறினார். ஊர்வனவியலாளர் ரமேஸ்வரனின் கூற்றுப்படி, கட்டு வரியன் ஓர் இரவாடிப் பாம்பு, இரவில் அதிக சுறுசுறுப்புடன் இயங்கக்கூடியது. குறிப்பாக, நள்ளிரவில் மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் அது சுறுசுறுப்பாக இயங்கும். அதோடு, "வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவை காணப்படுகின்றன. இரவில் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும்போது வீடுகளுக்குள் வருவதால் மக்கள் எளிதில் கவனிப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு. அது மட்டுமின்றி, கட்டு வரியன்கள் பிற நச்சுப் பாம்புகளைப் போல சீண்டப்படும்போது சத்தமிடுவது, எச்சரிப்பது போன்ற செயல்களைச் செய்யாது. எனவே அதன் இருப்பு கவனிக்கப்படாமல் போக அதிக வாய்ப்புள்ளது. அவை வருவதை, செல்வதைக்கூட யாரும் கவனித்துவிடாதபடி கூச்ச சுபாவம் மிகுந்த நடத்தைகளைக் கொண்டவை. இந்தக் காரணத்தால் கட்டு வரியன் இருப்பதையே பல நேரங்களில் மக்கள் கவனிக்கத் தவறும் சூழ்நிலை ஏற்படலாம்," என்று விவரித்தார் ரமேஸ்வரன். படக்குறிப்பு, ஊர்வனவியலாளர் ரமேஸ்வரன் கட்டு வரியனை பொறுத்தவரை, "மரக்கட்டை குவியல்கள், சிலிண்டர் சந்துகள் போன்ற மறைவிடங்களை அதிகம் நாடுகின்றன. மழை மற்றும் குளிர்காலங்களில் கதகதப்பான இடம் தேடி வீடுகளுக்குள் புகுவதும் நடக்கின்றன. அதோடு, அதன் உடலமைப்பும் வீடுகளுக்குள் யார் கண்ணிலும் படாமல் எளிதில் வந்து செல்லும் சாதகத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. கூடுதலாக இரவு நேரத்தில் அதிகம் இயங்குகின்றன. இதுவே இரவில் கட்டு வரியனால் பாம்புக்கடி விபத்துகள் அதிகம் ஏற்படக் காரணம். எனவே அவை குறித்த எச்சரிக்கை உணர்வு மிக அதிகமாக இருக்க வேண்டியது அவசியம்," என்றார் ரமேஸ்வரன். உடலில் கட்டு வரியன் பாம்பு கடித்த இடத்தை கண்டுபிடிக்க முடியாதா? நாகம், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் ஆகிய நச்சுப் பாம்புகளைப் பொறுத்தவரை கடித்த இடத்தில் அதைக் காட்டக்கூடிய காயங்கள் தென்படும். ஆனால் கட்டு வரியனில் அப்படி எதுவும் தெரியாது என்கிறார் முனைவர் மனோஜ். பொதுவாக பாம்பு கடித்துவிட்டால், கடித்த இடத்தில் கடுமையான வலி, நச்சுப் பற்கள் பதிவது, வீக்கமடைவது, சிவப்பு அல்லது கருமை நிறத்திற்கு மாறுவது, தீப்புண் போன்ற கொப்புளங்கள் வருவது எனப் பல்வேறு வடிவங்களிலான காயங்களைக் காண முடியும். ஆனால், "கட்டு வரியன் கடித்த இடத்தில் எவ்வித தடயங்களையும் காண முடியாது. இதனால், நோயாளி பாம்பு கடித்ததால் ஏற்பட்ட பாதிப்புகளைத்தான் அனுபவிக்கிறார் என்பதை உறுதி செய்வதே மருத்துவர்களுக்குப் பெரிய சவாலாக இருக்கும்," என்று மனோஜ் விளக்கினார். அவரது கூற்றுப்படி, நாகப் பாம்புகளின் நச்சுப் பற்கள் சராசரியாக 8 முதல் 10 மில்லிமீட்டர் வரை இருக்கும். "கண்ணாடி விரியனின் நச்சுப்பல் அதைவிடப் பெரியது, சுமார் ஒன்றரை இன்ச் வரைகூட இருக்கும். எனவே அவை கடித்த இடத்தை எளிதில் கண்டறிய முடியும். சுருட்டை விரியன் விஷயத்தில்கூட பற்கள் சிறிதாக இருந்தாலும் கடித்த இடத்தில் கொப்புளங்கள் போன்ற காயங்கள் ஏற்படும். அதை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் வெறும் 4 மில்லி மீட்டருக்கும் குறைவான அளவைக் கொண்ட நச்சுப் பற்களை உடைய கட்டு வரியன் கடித்த இடத்தில் இப்படி எவ்வித தடயமும் இருக்காது." இதோடு, வழக்கமாக பாம்புக்கடியை உறுதி செய்யப் பயன்படுத்தப்படும் 20 நிமிட ரத்த உறைவு பரிசோதனையில்கூட, நாகம் மற்றும் கட்டு வரியனின் நஞ்சு ரத்தத்தில் இருப்பதைக் கண்டுபிடிப்பது சிரமம் எனவும் மனோஜ் தெரிவித்தார். இந்த சவால்கள், ஒருவர் உடல்நல பாதிப்புகளோடு மருத்துவமனைக்கு வரும்போது "உடலில் பாம்புக்கடி பாதிப்பு இருக்கிறதா என்பதை ஆராய்வதை சிக்கலாக்குகிறது." அதனால், "நோயாளிக்கு இருக்கும் பாதிப்புகள் கட்டு வரியன் கடியின் அறிகுறிகளை ஒத்திருந்தால் உடனே தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து, உரிய பரிசோதனைகளைச் செய்த பிறகு சிகிச்சைகளைத் தொடங்க வேண்டும் என்பது நடைமுறை," என்று விளக்கினார் பாம்பின் நஞ்சு மற்றும் பாம்புக்கடி குறித்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆராய்ந்து வரும் முனைவர் மனோஜ். பட மூலாதாரம், Getty Images கட்டு வரியன் கடித்தால் தூக்கத்திலேயே இறந்துவிடுவார்களா? இதுகுறித்து விளக்கிய ஊர்வனவியலாளர் ரமேஸ்வரன், "கட்டு வரியன் கடிப்பதாலேயே தூங்கும்போது இறப்பு நிகழ்வதாக அர்த்தமில்லை. அவை பல நேரங்களில் மனிதர்களை தூங்கும்போது கடித்துவிடுகிறது என்பதே அதற்குக் காரணம்," என்றார். குளிருக்கு கதகதப்பாக இருக்கும் வீடுகளுக்குள் புகுந்துவிடும் இவை சில நேரங்களில் மனிதர்களுக்கு நெருக்கமாகச் சுருண்டு படுத்திருப்பதாகவும், அப்போது எதேச்சையாக அவற்றை மனிதர்கள் அழுத்திவிட்டாலோ காயப்படுத்திவிட்டாலோ உடனே கடித்து விடுவதாகவும் முனைவர் மனோஜ் குறிப்பிட்டார். மறுபுறம், இதுபோன்ற சம்பவங்கள் பதிவாவதாக வாய்மொழித் தகவல்கள் வந்தாலும், கட்டு வரியன் மனிதர்களை இரவு நேரத்தில் நெருங்கி வருவது ஏன் என்பது குறித்துத் தெரிந்துகொள்ள விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார் ரமேஸ்வரன். கட்டு வரியன் பாம்பின் நஞ்சு நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது என்பதால், கடிபட்டவர்களுக்கு கடும் வயிற்று வலி, வாந்தி வருவதைப் போன்ற உணர்வு, கண்களைத் திறக்க முடியாமல் போவது, துர்நாற்றத்துடன் எச்சில் வடிதல், சுயநினைவை இழப்பது ஆகிய அறிகுறிகள் ஏற்படுவதாக மனோஜ் தெரிவித்தார். "நரம்பியல் மண்டலத்தை அதன் நஞ்சு தாக்குவதால், நுரையீரலில் வீக்கம் ஏற்படுகிறது, கண் இமைகளைத் திறக்க முடியாமல் கடிபட்டவர்கள் அரை மயக்க நிலைக்குச் செல்ல நேரிடுகிறது, சுயநினைவை இழக்கின்றனர். நுரையீரல் ஆக்சிஜனை உடல் முழுக்க கொண்டு செல்ல முடியாமல் போவதால் சுவாசிக்க முடியாமல் கடிபட்டவர்கள் உயிரிழக்கின்றனர்." என்று அறிகுறிகளை விளக்கினார் மனோஜ். இரவு நேரங்களில் தூங்கும்போது ஒருவேளை கடித்து, காலை வரை அதை யாரும் கவனிக்காத சூழல் நிலவினால் கடிபட்டவர் மரணிக்க அதிக வாய்ப்புள்ளது என்றவர், அதையே "இரவில் தூக்கத்திலேயே அதன் கடி மரணத்தை ஏற்படுத்துவதாக" கூறப்படுகிறது எனவும் விவரித்தார். இதனாலேயே அவற்றை வட இந்திய கிராமங்கள் பலவற்றில் "மூச்சை விழுங்கும் பாம்பு" என மக்கள் குறிப்பிடுவதாகவும் அவர் தெரிவித்தார். ஒருவரை கட்டு வரியன் கடித்து பல மணிநேரம் கழித்தும்கூட அறிகுறிகள் தெரியத் தொடங்கும் எனத் தெரிவித்த அவர், மிக முக்கியமாக நரம்பியல் செயல்பாடுகளை அதன் நஞ்சு தடை செய்வதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, சுவாசம் தடைபடுவதாகக் கூறினார். "அதற்கு வென்டிலேட்டர் உதவியுடன் நுரையீரலில் நேரடியாக ட்யூப் செலுத்தி செயற்கை சுவாசம் வழங்குவதன் மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்," என்று விளக்கினார் முனைவர் மனோஜ். அவரது கூற்றுப்படி, கட்டு வரியன் பாம்பின் நஞ்சு, நாகம் போன்ற பிற பாம்புகளின் நஞ்சைப் போல உடனடியாக பாதிப்புகளை ஏற்படுத்துவது குறைவுதான் என்றாலும், அவை கடித்துவிட்டதைக் கண்டுபிடிப்பதே கடினம் என்பதால், சவாலான பாம்புக்கடி சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. கூடுதல் தகவல்கள்: பிரபுராவ் ஆனந்தன், பிபிசி தமிழுக்காக - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2em107e7rlo
  12. Nov 5, 2025 - 03:56 PM ஹம்பாந்தோட்டை மற்றும் அநுராதபுரம் பகுதிகளில் செயற்படுத்தப்படும் யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்டும் நடவடிக்கைக்கு சுற்றாடல் அமைச்சு ஒப்புதல் அளிக்கவில்லை, அது குறித்து அறிவிக்கவும் இல்லை என்று அவ்வமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். "அத தெரண" வினவியபோது அவர் குறிப்பிடுகையில், இந்த "யானை விரட்டும் நடவடிக்கை" குறித்த செய்திகள் வெளியான பின்னரே அமைச்சு அதிகாரிகள் இது குறித்து அறிந்ததாகவும், அதன் பின்னர் அதுபற்றி வனவிலங்கு அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். அதன்படி, குறித்த நடவடிக்கைகளை உடனடியாக இடைநிறுத்துமாறு வனவிலங்கு அதிகாரிகளுக்கு சுற்றாமல் அமைச்சு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித-யானை மோதலைத் தீர்ப்பதற்காக, மனித-யானை மோதல் முகாமைத்துவத்திற்கான தேசியத் திட்டம் நடைமுறையில் இருக்கும் சூழ்நிலையில், இவ்வாறான ஒரு நடவடிக்கையை ஆரம்பிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்தச் சிரேஷ்ட அதிகாரி சுட்டிக்காட்டினார். யானைகளை பாரியளவில் பாதுகாப்பு வலயங்களுக்குள் விரட்டுவது என்பது மனித-யானை மோதலுக்கு எந்த வகையிலும் அறிவியல்பூர்வமான தீர்வு அல்ல என்றும் அந்தச் சிரேஷ்ட அதிகாரி கூறினார். மனித-யானை மோதல் முகாமைத்துவத்திற்கான தேசியத் திட்டத்தின்படி, தற்போது தப்பொவ மற்றும் கலாவெ ஆகிய வனப்பகுதிகளில் யானைகளுக்கான ஊட்டச்சத்து வலயத்தை ஏற்பாடு செய்தல், புத்தளம் உட்பட பல பகுதிகளில் சுமார் 70 ஏக்கர் புல்வெளிகளைப் பாதிக்கும் ஆக்கிரமிப்புத் தாவரங்களான அந்தர போன்றவற்றை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மின்வேலிகளைப் பலப்படுத்த புதிய அதிகாரிகளை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதுடன், வனவிலங்குத் திணைக்களத்துக்காக 100 கெப் வண்டிகள் மற்றும் 180 மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக்கொள்ளவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மனித-யானை மோதல் முகாமைத்துவத்துக்கான தேசியத் திட்டத்தில் 600 புதிய வனவிலங்கு அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதும் உள்ளடங்கியுள்ளது. தற்போது, சுமார் 60 வீதத்திற்கும் அதிகமான யானைகள் வனங்களுக்கு வெளியே தங்கியுள்ளதாகவும், கிராமப்புறங்களில் கிடைக்கும் உணவின் காரணமாகவே யானைகள் பாதுகாப்பு வனங்களுக்கு செல்வதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பாதுகாப்புப் பகுதிகளில் புற்கள் உட்பட யானைகளுக்குத் தேவையான உணவை அதிகளவில் கிடைக்கச் செய்வதன் மூலம் கிராமங்களுக்குள் நுழையும் யானைகளைக் குறைப்பது, யானை வழித்தடங்களை உருவாக்குவது, மற்றும் மின்வேலிகளைப் பலப்படுத்துவது ஆகியவையே மனித - யானை மோதல் முகாமைத்துவத்திற்கான தேசியத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் என்றும் சுற்றாடல் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி மேலும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் கிராமங்களுக்குள் நுழைந்த காட்டு யானைகளை விரட்டியடிக்கும் நடவடிக்கை கடந்த நவம்பர் 2ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது. இதில் வனவிலங்கு அதிகாரிகள், விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் உட்பட சுமார் 2000 அதிகாரிகள் இணைந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmhlurmxl01f5qplpz6h5xyzi
  13. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, புனுகு பூனை கட்டுரை தகவல் ஸ்ரீனிவாஸ் நிம்மகட்டா பிபிசி செய்தியாளர் 5 நவம்பர் 2025, 06:44 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் காலையில் கடைக்குப் போய் காபி குடித்தால் எவ்வளவு செலவாகும்? பத்து அல்லது பதினைந்து ரூபாய் ஆகலாம். ஒரு கேப்பச்சினோ குடித்தால் நூற்றைம்பது ரூபாய் ஆகலாம். ஆனால் ஒரு ஸ்பெஷல் காபி உள்ளது. அதைக் குடிக்க, நம்மிடம் அதிகப் பணம் இருக்க வேண்டும். அந்த காபியைக் குடிக்க, நீங்கள் ரூ. 1,600 முதல் ரூ. 8,000 வரை செலவழிக்க வேண்டும். அது, சிவெட் காபி என்று அழைக்கப்படுகிறது. இதற்கு கோபி லுவாக் காபி என்று மற்றொரு பெயரும் உண்டு. இந்த காபி இவ்வளவு விலை உயர்ந்ததாக இருப்பதற்குக் காரணம், ஆசிய பாம் சிவேட் (Asian Palm Civet) என்ற விலங்குதான். பொதுவாக 'புனுகு பூனை' என்று அழைக்கப்படும் இதில், பல இனங்கள் உள்ளன. இப்போது, உலகம் முழுவதும் இப்பூனையின் மலத்திலிருந்து தயாரிக்கப்படும் காபிக்கான தேவை அதிகரித்து வருகிறது. இது மிகவும் விலை உயர்ந்ததாகவும் மாறி வருகிறது. பூனையின் மலத்தில் கிடைக்கும் பொருளில் இருந்து தயாரிக்கப்படும் காபி என்றவுடன், கேட்பதற்கு சற்று விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் அது உண்மைதான். இந்த ஆசிய புனுகுப்பூனை எப்படி காபி தயாரிக்க உதவுகிறது என்பதைத் தெரிந்து கொள்வோம். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்த காபி இவ்வளவு விலை உயர்வாக இருப்பதற்குக் காரணம், ஆசிய பாம் சிவேட் (Asian Palm Civet) என்ற விலங்குதான். பூனை குடும்பத்தைச் சேர்ந்தது இல்லையா ? ஆந்திர பல்கலைக்கழகத்தின் விலங்கியல் பேராசிரியரான மஞ்சுலதா பிபிசியிடம் இதுகுறித்துப் பேசுகையில், புனுகு பூனை என்ற பெயரில் 'பூனை' என்ற சொல் இருப்பதால், அது பூனை குடும்பத்தைச் சேர்ந்தது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் "அது விவேரிடே குடும்பத்தைச் சேர்ந்தது, அதாவது காட்டில் சுற்றித் திரியும் பாலூட்டிகள். இதுவரை, புனுகு பூனையின் 38 இனங்கள் உலகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளன. சிவெட் பூனை சற்று நீளமான உடலையும், கூர்மையான நகங்களையும் கொண்டுள்ளது. தலை முதல் வால் வரை அதன் நீளம் இரண்டு முதல் இரண்டரை அடி வரை இருக்கும். அதன் எடை 3 முதல் 5 கிலோ வரை இருக்கும். அதன் ஆயுட்காலம் 15 முதல் 20 ஆண்டுகள்" என்று பேராசிரியர் மஞ்சுலதா விளக்கினார். "இது புழுக்கள், பழங்கள் மற்றும் பூச்சிகளை உண்ணும். காடுகள் மற்றும் மலைகளில் காணப்படும் இந்த புனுகுப்பூனை திறமையாக மரம் ஏறும். புனுகுப்பூனை வாசனையை வெளியிடும் ஒரு வாசனை சுரப்பியைக் கொண்டுள்ளது. அதனால் இது வாசனை திரவியங்களை தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. இப்போது அது தடை செய்யப்பட்டதால், இதே போன்ற வாசனையுடன் கூடிய செயற்கை புனுகுப்பூனை வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன" என்கிறார் மஞ்சுலதா. புனுகுப் பூனையில் இருந்து சேகரிக்கப்படும் எண்ணெய், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திருப்பதியில் நடைபெறும் அபிஷேக சேவையிலும், ஆண்டுதோறும் நடைபெறும் கஸ்தூரி ஜின்னே சேவையிலும் பயன்படுத்தப்படுகிறது. திருப்பதி விலங்கியல் பூங்காவில் 5 புனுகுப் பூனைகளை பராமரித்து வருவதாக அதன் கண்காணிப்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார். அங்குள்ள புனுகு பூனைகளைப் பராமரிக்க விலங்கியல் பூங்கா அதிகாரிகள் அனுப்பிய ரூ.1.97 கோடி திட்டத்திற்கு திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஒப்புதல் அளித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது. இவை இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான், தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனீசியா போன்ற நாடுகள் உட்பட தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன. இந்தியாவில் சேஷாசலம் காடுகள், திருப்பதியைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் அல்லூரி மாவட்டத்தின் காபி தோட்டங்களிலும் இதைக் காணலாம் என்று பேராசிரியர் மஞ்சுலதா கூறினார். சிவெட் காபி உருவான வரலாறு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒரு நாள், சிவெட் பூனை மலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட காபி கொட்டைகளை காபி தூளாக அரைத்தனர். மக்கள் அதைக் கொண்டு தயாரிக்கப்பட்ட காபியை ருசித்தனர். கோபி லுவாக் என்ற காபி முதன்முதலில் இந்தோனீசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காபி, சிவெட்டுகள் எனும் விலங்கு வகையின் மூலம் தயாரிக்கப்படுகிறது என்பதால் இது சிவெட் காபி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தோனீசியாவுக்குச் செல்லும் பலரும் இந்த காபியை ருசிக்காமல் திரும்ப முடியாது. ஆசிய பாம் சிவெட் என்ற இந்த விலங்கு உலகத்துக்கு அறிமுகமாக காரணம், டச்சு குடியேறிகள்தான் என்று பிபிசி முன்பு வெளியிட்ட ஒரு செய்தியில் கூறப்பட்டுள்ளது. அந்த செய்தியின் படி, அவர்கள் 300 ஆண்டுகள் முன்பு ஜாவா, சுமத்ரா, சுலவேசி தீவுகளில் காபி மரங்களை நட்டிருக்காவிட்டால், இன்று உலகம் இந்த விலங்கு குறித்து இவ்வளவு கவனம் செலுத்தியிருக்காது. அதுவரை அந்த தீவுகளில் பழங்கள், பெர்ரி வகைகள், பூச்சிகள் மற்றும் புழுக்களை உணவாகக் கொண்டு வந்த இந்த உயிரினம், காபி செடிகள் மூலம் புதிய சுவையான உணவைக் கண்டுபிடித்தது. இந்த புனுகு பூனைகள் காபி செடிகளில் வளரும் வட்ட வடிவ காபி செர்ரிகளை ருசித்தன. அவற்றுக்கு அந்தச் சுவை பிடித்திருந்தது. ஆனால், அவை காபி செர்ரியின் சதையை மட்டும் சாப்பிட்டுவிட்டு விதைகளை அப்புறப்படுத்திவிட்டன. காபி செர்ரிகளில் உள்ள விதைகள் புனுகுப்பூனையின் செரிமானப் பாதையிலிருந்து வெளியேறுவதைப் புரிந்துகொண்ட தோட்ட உரிமையாளர்கள், விதைகளைப் புனுகுப்பூனையின் மலத்திலிருந்து பிரிக்குமாறு தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தினர். "கழிவுகளைப் பயன்படுத்துவோம்" என்ற எண்ணம், சிவெட் மலத்திலிருந்து விலையுயர்ந்த காபியை உருவாக்க வழிவகுத்தது. ஒரு நாள், சிவெட் பூனை மலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட காபி கொட்டைகளை காபி தூளாக அரைத்தனர். அதைக் கொண்டு தயாரிக்கப்பட்ட காபியை மக்கள் ருசித்தனர். இந்த காபியில் இருந்து வந்த மண் வாசனை மற்றும் அரிதான சாக்லேட் போன்ற சுவையை மக்கள் விரும்பினர். இப்படித்தான், கோபி லுவாக் என்ற காபி பிறந்தது. சுவைக்கு என்ன காரணம்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, காட்டுப் புனுகுப் பூனைகள், பொதுவாக மிகவும் பழுத்த, சிறந்த சுவை கொண்ட காபி செர்ரிகளைத் தேர்ந்தெடுப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். காபி செர்ரிகளில் உள்ள விதைகள் சிவெட்டுகளின் செரிமானப் பாதை வழியாகச் செல்லும் போது, அவற்றின் செரிமான நொதிகள் காபி கொட்டைகளில் உள்ள புரத அமைப்பை உடைத்து , அவற்றின் அமிலத்தன்மையை நீக்குகின்றன. இது காபிக்கு அதன் தனித்துவமான சுவையையும் நறுமணத்தையும் தருகிறது. காட்டுப் புனுகுப் பூனைகள், பொதுவாக மிகவும் பழுத்த, சிறந்த சுவை கொண்ட காபி செர்ரிகளைத் தேர்ந்தெடுப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இயற்கையாக நடைபெறும் இந்தத் தேர்வுதான் காபியின் சுவையை மேம்படுத்துகிறது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் காடுகளில் சிவெட்டுகள் இன்னும் வாழ்ந்து வருகின்றன. இந்த காபி இப்போது உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன் அரிதான தன்மையின் காரணமாக, கோபி லுவாக் உலகின் மிக விலையுயர்ந்த காபிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இப்போது உலகில் நீங்கள் எங்கு சென்றாலும் ஒரு கப் வைல்ட் சிவெட் காபியின் விலை சுமார் ரூ. 1,600 முதல் ரூ. 8,300 வரை விற்கப்படுவதைக் காண முடியும். 'தி பக்கெட் லிஸ்ட்' திரைப்படத்தில் இடம்பெற்ற பிறகு இந்தக் காபிக்கான தேவை பெருமளவு அதிகரித்துள்ளது என்று தி கார்டியன் என்ற ஆங்கில செய்தித்தாள் முன்பு குறிப்பிட்டிருந்தது. சிவெட் காபி எங்கெல்லாம் கிடைக்கும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சிவெட் காபி தயாரிக்க, காட்டு சிவெட் பூனைகள் பிடிக்கப்பட்டு, நெரிசலான கூண்டுகளில் அடைக்கப்படுகின்றன. தென்கிழக்கு ஆசியா முழுவதும் சிவெட் காபி இப்போது உற்பத்தி செய்யப்படுகிறது. சிவெட் காபி இப்போது அதன் பிறப்பிடமான இந்தோனேசியாவில் மட்டுமல்லாமல், சிங்கப்பூர், வியட்நாம், கம்போடியா, லாவோஸ், இந்தியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட, அந்த பூனைகளின் இயற்கை வாழ்விடங்களிலும் உற்பத்தி செய்யப்படுகிறது . சிவெட் காபி தயாரிக்க, காட்டு சிவெட் பூனைகள் பிடிக்கப்பட்டு, நெரிசலான கூண்டுகளில் அடைக்கப்படுகின்றன. அவற்றுக்கு காபி செர்ரிகளும் உணவாக அளிக்கப்படுகின்றன. இதனால் அவை நோய்வாய்ப்படுவதால் அவற்றின் ஆயுட்காலம் குறைகிறது. அழியும் அபாயத்தில் இருக்கும் விலங்குகளாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் குறிக்கும் சிவப்பு பட்டியலில் 'குறைவான கவலைக்குரியவை' என்ற வகையில் சிவெட் பூனைகளை பட்டியலிட்டுள்ளது. இந்தியாவில் சிவெட் காபி தூள் எங்கே கிடைக்கும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மைசூர் மற்றும் குடகு பகுதிகளைச் சேர்ந்த நிறுவனங்கள் சிவெட் காபி தூளை ஆன்லைனிலும் விற்பனை செய்கின்றன. இந்தியாவிலும் சிவெட் காபி உற்பத்தி செய்யப்படுகிறது. கர்நாடகாவில் பல நிறுவனங்கள் இதை விற்பனை செய்கின்றன. இது தொடர்பாக, மடிகேரியில் உள்ள குடகு காபி விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை பிபிசி தொடர்பு கொண்டது. "நாங்கள் இங்கு சிவெட் காபி பொடியையும் விற்பனை செய்கிறோம். விவசாயிகளிடமிருந்து சிவெட் மலத்தை சேகரித்து, உலர்த்தி, கழுவி, சுத்தமான காபி பொடி தயாரிக்கிறோம். தற்போது, ஒரு கிலோவை ரூ.7,500க்கு விற்பனை செய்கிறோம். ஆண்டுக்கு 50 கிலோ விற்பனை செய்கிறோம்," என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது. மைசூர் மற்றும் குடகு பகுதிகளைச் சேர்ந்த நிறுவனங்கள் சிவெட் காபி தூளை ஆன்லைனிலும் விற்பனை செய்கின்றன. காபி தயாரிக்க விலங்குகள் துன்புறுத்தப்படுகின்றவா ? பட மூலாதாரம், Getty Images சிவெட் காபி தயாரிக்கும் முறையில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சாட்டி, பிபிசி முன்பு ஒரு புலனாய்வுக் கட்டுரையை வெளியிட்டது. அவை கூண்டில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படும் சூழல் குறித்து இந்தோனீசியாவில் நடத்தப்பட்ட புலனாய்வை அது விவரிக்கிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வனவிலங்கு பாதுகாப்பு ஆராய்ச்சி பிரிவு மற்றும் லண்டனை தளமாகக் கொண்ட உலக விலங்கு பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் பாலியில் உள்ள 16 தோட்டங்களில் கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 காட்டு புனுகு பூனைகளின் நிலையை மதிப்பிட்டனர். அதில், அவற்றின் கூண்டுகள் சுகாதாரமற்றவை என்றும் விலங்கு நலத் தரங்களை மீறுவதாகவும் அதில் கூறப்பட்டது. ஆனால், காடுகளில் சுதந்திரமாக சுற்றித் திரியும் புனுகுப் பூனைகளின் மலத்தை மட்டுமே சேகரித்து அதிலிருந்து காபி தூள் தயாரிப்பதாக, விற்பனையாளர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில், சிவெட் விலங்குகளின் செரிமான அமைப்பால் காபி கொட்டைகளில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களை, சிவெட்டுகளுக்கு தீங்கு விளைவிக்காமல், ஆய்வகங்களில் நகலெடுப்பதற்கான வழிகளை மற்ற ஆராய்ச்சியாளர்கள் தேடுகிறார்கள். சுவை எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும், அது ஒரு உயிரை விட மதிப்புமிக்கது அல்ல. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8gej3lx22o
  14. Published By: Digital Desk 3 05 Nov, 2025 | 04:06 PM யாழ்ப்பாணத்தின் தொன்மையையும் சிறப்பினையும் பாதுகாக்கும் விடயத்தில் பிரதேச செயலகம் மற்றும் தொல்லியல் திணைக்களம் போன்றவை அக்கறையின்றி பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் வெள்ளை சுண்ணாம்பு கல்லினால் உருவாக்கப்பட்ட நூற்றாண்டு கால பழமை வாய்ந்த வைரவர் ஆலயம் ஒன்று காணப்படுகின்றது குறித்த ஆலயத்தினை முற்றாக அழித்து, புனரமைப்பு செய்வதற்கு சிலரினால் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, தமிழர் தேசத்தின் சிறப்புக்களையும் தொன்மையும் பேணும் வகையில் வெள்ளை சுண்ணக்கல் கட்டிடக்கலை பாதுகாக்கப்பட வேண்டும் என்று இன்னுமொரு தரப்பினால் வலியுறுத்தப்படுவதாக தெரிகின்றது. இந்நிலையில் குறித்த விவகாரம் பிரதேச செயலகத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து, வரலாற்று தொன்மை மிக்க ஆலய கட்டிடக் கலையை முற்றாக அழிக்க முனைகின்ற தரப்பினரும், அதனை பாதுகாக்க விரும்புகின்ற தரப்பினரும் கலந்து கொண்ட கூட்டம், வலி வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, தொழில்நுட்ப அலுவலகர்கள் மூலம் ஆய்வு செய்து அவர்களின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் முடிவுக்கு வரலாம் என்று பிரதேச செயலாளரின் ஆலோசனை இரண்டு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்படி கள விஜயம் மேற்கொண்ட தொழில்நுட்ப அலுவலர்கள், தொழில்நுட்ப ரீதியான எந்தவிதமான ஆய்வுகளையும் மேற்கொள்ளாது, பறவைகள் தின்றுவிட்டு துப்பிய விதைகள் காரணமாக ஆலயத்தில் மரம் செடி முளைத்திருப்பதால் பேராபத்து ஏற்பட்டுள்ளதாகவும், வெள்ளை சுண்ணக்கல் கட்டிடம் உருவாக்கப்பட்டு நூறு வருடங்களுக்கு மேற்பட்டமையினால், அவை வலுவிழந்திருக்கும் என்ற தமது ஊகத்தின் அடிப்படையிலும், குறித்த ஆலயத்தினை முற்றாக இடித்து அழிப்பதற்கு பரிந்துரைப்பதாகவும் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். எந்த அடிப்படையும் அற்றமுறையில் சிறுபிள்ளைத்தனமாக குறித்த அறிக்கை அமைந்துள்ளதாகவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, வெள்ளை சுண்ணக்கல் கட்டிடக் கலையின் தாற்பரியங்களை புரிந்து கொள்ளாது பிரதேச செயலாளரினால் தெரிவிக்கப்பட்டிருப்பது வேதனையளிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களினால் வேதனை வெளியிடப்பட்டுள்ளதுடன், குறித்த விடயத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், வடக்கு மாகாண ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போறோர் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த விடயம் தொடர்பாக தொல்லியல் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், குறித்த இதுவரை காத்திரமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று ஆதங்கம் வெளியிடப்பட்டிருப்பதுடன், தமிழர்களி்ன் தொன்மையையும் சிறப்பையும் பாதுகாப்பதற்கு தொல்லியல் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும் தமிழர் தொன்மையை பாதுகாக்க விரும்பும் தரப்பினரால் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/229547
  15. யாழ்ப்பாணத்தில் மாபெரும் சுனாமி ஒத்திகை! 05 Nov, 2025 | 01:03 PM இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் முன்னாயத்த நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்க்காக வருடாந்தம் ஒழுங்குசெய்யப்படுகின்ற பிராந்திய நாடுகளுக்கான சுனாமி ஒத்திகை பயிற்சி புதன்கிழமை (05) பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் ஆரம்பமாகியது. காலை 9:15 மணியளவில் சுனமி எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவிகள் வகுப்பு வகுப்பாக அணிவகுக்கப்பட்ட அங்கு உரியவர்கள் அறுவுறுத்தப்பட்டனர். வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் இடைத்தங்கல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்கு மருத்துவ வசதிகள், உணவு, உட்பட பல்வேறு வசதிகளும் ஏற்படு செய்யப்பட்டிருந்தன. வட இந்து மகளிர் கல்லூரியில் வகுப்பு வகுப்பாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டதுடன் கிராம மக்களும தங்கவைக்கப்பட்டனர். இதேவேளை ஒத்திகையின்போது பாதுகாப்பாக நகர்ந்த மக்கள், மணவர்களில் ஒருசிலரிற்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்தவர்களை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், சென்ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் பருத்தித்துறை பொலிஸார் ஆகியோர் ஏற்றிவந்து வட இந்து மகளிர் கல்லூரியல் ஏற்பாடு செய்யப்பட்ட முதலுதவி சிகிச்சை நிலையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டனர். இவ் ஒத்திகை நிகழ்வில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், சென்ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் படைப்பிரிவு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, பருத்தித்துறை பொலிசார், கடற்படை, இராணுவம், சிறப்பு அதிரடி படை, பருத்தித்துறை மகரசபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர், கியூமெடிக்கா உட்பட பல்வேறு அமைப்புக்கள் திணைக்களங்கள் பங்குபற்றியிருந்தன. இச் சுனமி ஒத்திகை நிகழ்வில் சுமார் 500 வரையான வடமராட்சி மெதடிஸ்த பெண்கள கல்லூரி மாணவர்கள் சுமார் 500க்கு மேற்பட்டோரும், பொதுமக்கள் சுமார் 250 பேரும் கலந்துகொண்டுருந்தனர். குறித்த ஒத்திகை நிகழ்வு வருடாந்தம் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/229546
  16. Nov 5, 2025 - 05:38 PM ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையிலிருந்து 1983-ம் ஆண்டு ஈழத்தமிழர்கள் அங்கு நடந்த போர் சூழல் காரணமாக சொத்துகளை இழந்து தமிழ் மண்ணுக்கு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் குடியேறினர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஈழத்தமிழர்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தமிழகத்திலுள்ள 116 முகாம்களில் வசிக்கின்றனர். பல ஆண்டுகள் இவர்கள் இங்கு வாழ்ந்தாலும் இந்திய மக்களை போல சுதந்திரமாக வாழ முடியாத சூழல் இன்றும் நிலவுகிறது. தமிழ்நாட்டில் தற்போது தொடங்கவுள்ள தீவிர வாக்காளர் திருத்த பணியின்போது தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் பெயரில் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாநில அரசு மத்திய அரசிடம் கேட்டுப் பெற வேண்டும். மத்திய அரசும் ஈழத் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வாக்குரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குரிமை அளிக்கப்பட்டால் தான் ஈழத் தமிழர்களின் உரிமைக்காக அந்தந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் பணியாற்றுவார்கள். ஆகவே இவர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டியது அவசியம் ஆகும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். https://adaderanatamil.lk/news/cmhlyenbk01f6qplpl1ll93f5
  17. புதிய மாற்றத்தை நோக்கி செல்கையில் மாறுப்பட்ட கருத்துக்கள் தோற்றம் பெறுவது ஒன்றும் ஆச்சரியமல்ல; அரசாங்கம் என்ற அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும் - பிரதமர் 04 Nov, 2025 | 04:05 PM (இராஜதுரை ஹஷான்) புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்க முடியாது. பலசுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். அரசாங்கம் என்ற அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும். புதிய மாற்றத்தை நோக்கி செல்கையில் மாறுப்பட்ட கருத்துக்கள் தோற்றம் பெறுவது ஒன்றும் ஆச்சரியமல்ல என்று கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் குளியாப்பிட்டிய கல்வி அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, புதிய தொழிற்றுறையை உருவாக்கும் வகையில் கல்வி கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும். நாட்டில் வேலையின்மை பிரச்சினைக்கு கல்வி கொள்கை ஒரு காரணியாக உள்ளது. இதற்கு தீர்வாகவே புதிய கல்வி மறுசீரமைப்பை அறிமுகப்படுத்த தீர்மானித்தோம். புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்களுடன் இந்த ஆண்டு முதல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க முடியாது.தீர்மானங்களை செயற்படுத்த வேண்டும். புதிய மாற்றத்துக்கான தீர்மானங்களை எடுக்கும்போது மாற்றுக்கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் தோற்றம் பெறுவது இயல்பானதே. பாடசாலை கற்பித்தல் நேரம் அதிகரிப்பு தொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, கல்வி அமைச்சினால் சுற்றிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புதிய கல்வி மறுசீரமைப்பு அடுத்தாண்டு முதல் அமுல்படுத்தப்படும். 1-6 தரங்களுக்குரிய புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் இந்த மாதம் இறுதி பகுதியளவில் நிறைவடையும் என்றார். https://www.virakesari.lk/article/229474
  18. கல்மேகி சூறாவளி : பிலிப்பைன்ஸில் வெள்ளப்பெருக்கால் 58 பேர் பலி 05 Nov, 2025 | 09:43 AM மத்திய பிலிப்பைன்ஸின் சில பகுதிகளில் கல்மேகி சூறாவளி தாக்கியதால் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் 58 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 13 பேர் காணாமல் போயுள்ளதுடன் 200,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன. பல வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஆறு இராணுவ வீரர்களும் உயிரிழந்தவர்களில் அடங்குவர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த கல்மேகி சூறாவளி புதன்கிழமை (05) தென் சீனக் கடலை நோக்கிச் நகர்ந்து சென்றது. https://www.virakesari.lk/article/229523
  19. உலக சுனாமி தினத்தை முன்னிட்டு 4 மாவட்டங்களில் தயார்நிலை ஒத்திகை 04 Nov, 2025 | 05:28 PM (இராஜதுரை ஹஷான்) உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட 4 கரையோர மாவட்டங்களில் புதன்கிழமை (05) இந்தியப் பெருங்கடல் சுனாமி தயார்நிலை ஒத்திகை இடம்பெறவுள்ளது. களுத்துறை, காலி, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக சுனாமி அனர்த்த முன்னெச்சரிக்கை மற்றும் அபாய இழிவளவாக்கல் நடவடிக்கை ஒத்திகை இடம்பெறவுள்ளது. இச்சந்தர்ப்பத்தின் போது வீண் அச்சம்கொள்ள வேண்டாம் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது. இந்திய பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையத்தின் கீழ் 28 நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய அமைப்பினால் இந்த ஒத்திகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் ஒத்திகையை உண்மையான சுனாமி அச்சுறுத்தல் எனக் கருதி அச்சமடையவோ அல்லது தவறாகப் புரிந்து கொள்ளவோ வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரால் (ஓய்வுநிலை) சம்பத் கொடுவேகொட குறிப்பிடுகையில், சுனாமி அனர்த்தத்தின் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை தெளிவுப்படுத்தும் வகையில் தான் இந்த ஒத்திகை இடம்பெறுகிறது. கடந்த காலங்களில் இவ்வாறான ஒத்திகை இடம்பெறும் போது உண்மையில் சுனாமி அனர்த்தம் இடம்பெற்று விட்டது என்று பொதுமக்கள் அச்சமடைந்தார்கள். ஆகவே வீண் அச்சமடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். சுனாமி அனர்த்த முன்கூட்டிய சமிஞ்சை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட 77 கோபுரங்களும் செயலிழந்துள்ளன. இந்த கோபுரங்களுக்கு சமிஞ்சை வழங்கிய செய்மதிகள் செயலிழந்துள்ளதால் இவை முற்றாக செயலிழந்துள்ளன என்றார். https://www.virakesari.lk/article/229497
  20. அரசாங்கத்தின் அனுசரணையுடன் பாதாள குழுக்கள் செயற்படுகின்றன - நாமல் ராஜபக்ஷ 04 Nov, 2025 | 08:26 PM (இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்தின் அனுசரணையுடன் தான் பாதாளக்குழுக்கள் செயற்படுகின்றன. இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்படுபவர்கள் அனைவரும் பாதாளக் குழுக்களுடன் தொடர்பு என்று குறிப்பிடுவது அரசாங்கத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகோகொடயில் நடைபெறவுள்ள பேரணியில் நாங்கள் பங்கேற்போம். ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சகல எதிர்க்கட்சிகளுக்கும் உண்டு. அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகளால் நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த அரசியல் கட்சிகள் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அரசியல் கொள்கை வேறுபாடு என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியில் கலந்துக்கொள்ளாமல் இருப்பது முறையற்றது. அரசாங்கத்தின் அனுசரணையுடன் தான் பாதாளக்குழுக்கள் செயற்படுகின்றன. இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்படுபவர்கள் அனைவரும் பாதாளக் குழுக்களுடன் தொடர்பு என்று குறிப்பிடுவது அரசாங்கத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. பாதாளக்குழுக்கள் அரசாங்கத்தின் கட்டளைக்கு அமைய செயற்படுகின்றன. அரசாங்கம் குறிப்பிடும் போது துப்பாக்கிச்சூடுகள் இடம்பெறுகின்றன. பாதாளக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் காரணமாகவே துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிடுவது தேசிய பாதுகாப்பின் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது என்றார். https://www.virakesari.lk/article/229501
  21. ஐசிசி மகளிர் உலகக் கிண்ண தெரிவு அணியில் பாகிஸ்தான் விக்கெட் காப்பாளர் சிட்ரா நவாஸ் 04 Nov, 2025 | 08:54 PM (நெவில் அன்தனி) இந்தியாவிலும் இலங்கையிலும் நடந்து முடிந்த 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டம், பந்துவீச்சு, விக்கெட் காப்பு ஆகியவற்றில் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய 11 வீராங்கனைகள் உலகக் கிண்ண தெரிவு அணியில் பெயரிடப்பட்டுள்ளனர். தென் ஆபிரிக்க அணித் தலைவி லோரா வுல்வார்டை தலைவியாகக் கொண்ட உலகக் கிண்ண தெரிவு அணியில் பாகிஸ்தான் வீராங்கனை சிட்ரா நவாஸ் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகளில் விக்கெட் காப்பாளர் நிலையில் சிட்ரா நவாஸ் மிகச் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக தெரிவு அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். அவர் 4 பிடிகளை எடுத்ததுடன் 4 ஸ்டம்ப்களை செய்துள்ளார். கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோரின் மிகவும் கடினமான பிடியை சிட்ரா இடப்புறமாக தாவி எடுத்த விதமும் அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் கிம் கார்த்தை மின்னல் வெகத்தில் ஸ்டம்ப் செய்த விதமும் அனைவரையும் பிரமிக்கவைத்தது. அவரை விட உலகக் கிண்ண தெரிவு அணியில் உலக சம்பியனான இந்திய அணியிலிருந்து மூவரும் இரண்டாம் இடத்தைப் பெற்ற தென் ஆபிரிக்க அணியிலிருந்து மூவரும் இங்கிலாந்து அணியிலிருந்து ஒருவரும் பதில் விராங்கனை ஒருவரும் இடம்பெறுகின்றனர். உலகக் கிண்ணப் போட்டியில் அதிகூடிய மொத்த ஓட்டங்களைப் பெற்றவர் லோரா வுல்வார்ட் ஆவார். அவர் 2 சதங்கள் உட்பட 571 ஓட்டங்களைக் குவித்தார். பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 22 விக்கெட்களைக் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறார். அவர் துடுப்பாட்டத்திலும் 3 அரைச் சதங்களுடன் 215 ஓட்டங்களைப் பெற்றதால் மகளிர் உலகக் கிண்ண தொடர் நாயகி விருது அவருக்கு வழங்கப்பட்டது. துடுப்பாட்ட வரிசையில் அந்தந்த இலக்கங்களில் பிரகாசித்தவர்களில் அதிசிறந்தவர்களே உலகக் கிண்ண தெரிவு அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சகலதுறை வீராங்கனைகளாவர். உலகக் கிண்ண தெரிவு அணி (துடுப்பாட்ட வரிசை பிரகாரம்) ஸ்ம்ரித்தி மந்தனா (434 ஓட்டங்கள்), லோரா வுல்வார்ட் (571 ஓட்டங்கள்), ஜெமிமா ரொட்றிக்ஸ் (292 ஓட்டங்கள்), மாரிஸ்ஆன் கெப் (208 ஓட்டங்கள், 12 விக்கெட்கள்), ஏஷ்லி கார்ட்னர் (328 ஓட்டங்கள், 7 விக்கெட்கள்), தீப்தி ஷர்மா (215 ஓட்டங்கள், 22 விக்கெட்கள்), அனாபெல் சதர்லண்ட் (117 ஓட்டங்கள், 17 விக்கெட்கள்), நாடின் டி க்ளார்க் (208 ஓட்டங்கள்), சிட்ரா நவாஸ் (4 பிடிகள், 4 ஸ்டம்ப்கள்), அலானா கிங் (13 விக்கெட்கள், 59 ஓட்டங்கள்), சொஃபி எக்லஸ்டோன் (13 விக்கெட்கள்) 12ஆம் இலக்க வீராங்கனை: நெட் சிவர் - ப்றன்ட் (262 ஓட்டங்கள், 9 விக்கெட்கள்) https://www.virakesari.lk/article/229515
  22. 04 Nov, 2025 | 04:54 PM (எம்.மனோசித்ரா) முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அவரது சட்டத்துறை சார் சேவைகள் மீது என்றும் எமக்கு மதிப்பும் கௌரவமும் காணப்படுகிறது. திட்டமிட்டு அவருக்கான சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை. குறித்த காலப்பகுதியில் சேவை நீடிப்பிற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தனக்கான சேவை நீடிப்பு குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 4 சந்தர்ப்பங்களில் கடிதம் அனுப்பியதாகவும், அவற்றில் ஒன்றுக்கேனும் பதில் கிடைக்கவில்லை என்றும் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கவலை வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்களால் கேள்வியெழுப்பப்பட்டது. அவற்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மற்றும் அவரது சேவைகள் தொடர்பில் சமூகத்தில் மதிப்பும், கௌரவமும் காணப்படுகிறது. இவரைப் போன்று பல அரச அதிகாரிகள் காணப்படுகின்றனர். சில சந்தர்ப்பங்களில் நீதிமன்ற கட்டமைப்பிற்குள் சேவை நீடிப்புக்கள் வழங்கப்படும் போது பல விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும். சில சந்தர்ப்பங்களில் நீதிமன்ற கட்டமைப்பிற்குள் அடுத்தடுத்த நிலைகளுக்கு பதவியுயர்வு பெற வேண்டியவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படக் கூடும். அவ்வாறான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படாமல் இருந்திருக்கலாம். மாறாக திட்டமிட்டு அவருக்கான சேவை நீடிப்பு வழங்கப்படாமல் இருக்கவில்லை. இது வழமையான நடைமுறையாகும். சில துறைகளில் சேவை நீடிப்புக்கள் வழங்கப்பட்டிருக்குமாயின், அங்கு பதவி வெற்றிடங்களுக்கான நியமனங்களுக்கு பொறுத்தமானவர்கள் இல்லாமல் இருந்திருக்கலாம். எனவே தான் அங்கு ஓய்வு பெறவிருந்த அதிகாரிகளுக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டிருக்கும். எனவே முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனது சட்டத்துறைசார் சேவை மீது என்றும் எமக்கு மதிப்பும் கௌரவமும் காணப்படுகிறது என்றார். https://www.virakesari.lk/article/229482
  23. சண்டியர்களை நொண்டியர்களாக்குவோம்; வடக்கு மண்ணிலிருந்து போதைப்பொருள் மாபியாக்கள் உட்பட குற்றச்செயல்களில் ஈடுபடும் தரப்புகளை துடைத்தெறிவோம் - அமைச்சர் சந்திரசேகர் 04 Nov, 2025 | 08:19 PM போதைப்பொருளுக்கு முடிவு கட்டுவதற்குரிய சமர் ஆரம்பமாகியுள்ளது. இந்த சமரை கண்டு அஞ்ச வேண்டாம். அதற்கு பேராதரவு தாருங்கள். வடக்கு மண்ணில் இருந்து போதைப்பொருள் மாபியாக்கள் உட்பட குற்றச்செயல்களில் ஈடுபடும் தரப்புகளை துடைத்தெறிவோம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகம் இணைந்து நடத்திய நடமாடும் சேவை சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (4) இடம்பெற்றது. இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மாவட்ட செயலாளர் ம.பிரதீபன், சாவகச்சேரி பிரதேச செயலாளர் சத்தியசோதி, நகர சபை தவிசாளர், பிரதேச சபை தவிசாளர், அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு அழைப்பு விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “போதைப்பொருள் விற்பனையாளர்கள், கஞ்சா கடத்துபவர்கள் மற்றும் வாள்வெட்டு குழுவினரால் யாழ். மாவட்டம் சீரழிந்து வருகின்றது. எனவே, இவற்றுக்கு முடிவு கட்டி, சுமூக நிலைமையை தோற்று விக்குமாறு யாழ். மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது போதைப்பொருள் கும்பல் மற்றும் பாதாள குழு உறுப்பினர்களின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு வருகின்றது. போதைப்பொருளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதாள குழு பின்னணியில் கறுப்பு நிர்வாக பொறிமுறையொன்றே உள்ளது. இதற்கு உதவும் சில நபர்கள் எல்லா இடங்களிலும் இருக்கவே செய்கின்றனர். இதன் பின்னணியில் கறுப்பு பணம் புகுந்து விளையாடுகின்றது. இந்நிலைமையை கண்டும், காணாததுபோல் இருக்க முடியாது. அது எமது இளைய தலைமுறையினருக்கு இழைக்கும் பெரும் துரோகமாகும். எனவே, யுகத்துக்கு முடிவு கட்டப்படும். மக்களால் சட்டப்பூர்வமாக செயற்படும் அரசாங்கம் தான் நாட்டை ஆள வேண்டும். கறுப்பு உலகத்தால் நிர்வாகத்தை முன்னெடுக்க இடமளிக்க முடியாது. மக்களுக்காக செயலாற்றுவதே எமது அரசாங்கத்தின் நோக்கம். ஊழல், மோசடிகளற்ற தூய நிர்வாகத்தை நோக்கிய பயணத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குறிப்பாக அரசாங்க ஊழியர்கள் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அரச ஊழியர்களுக்குரிய அத்தனை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். போதைப்பொருளுக்கு முடிவு கட்டுவதற்குரிய சமர் ஆரம்பமாகியுள்ளது. இந்த சமரை கண்டு அஞ்ச வேண்டாம். அதற்கு பேராதரவு தாருங்கள். மக்களுக்கு தகவல் தெரியும். அதனை உரிய தரப்பினருக்கு அறிவியுங்கள். எதற்கும் அஞ்சவேண்டாம். இளைஞர்களே முன்வாருங்கள், உங்களுக்கு பின்னால் அரசாங்கம் நிற்கும். சண்டியர்களை நொண்டியர்களாக்குவோம்” என்றார். https://www.virakesari.lk/article/229511
  24. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, (சித்தரிப்புப்படம்) கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் அண்மைக் காலமாக துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளன. போதைப்பொருள், நிழலுலக செயற்பாடுகள் மற்றும் தனிப்பட்ட காரணங்களை மையப்படுத்தி இந்த துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இதன்படி, இந்த ஆண்டில் (2025) இதுவரையான காலம் வரை 105 துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் அரசு குற்ற ஆவணங்களில் பதிவாகியுள்ளன. இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் 53 பேர் உயிரிழந்ததுடன், 58 பேர் காயமடைந்துள்ளனர். அரசியல் மற்றும் நிழலுக நபர்களை குறிவைக்கும் துப்பாக்கிகள் நிழலுலக செயல்பாடுகளில் ஈடுபடுவோரை இலக்கு வைத்து அண்மை காலமாக அதிகளவான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியிருந்தன என்கிறது காவல்துறை. இதில் பிரபல நிழலுலக தலைவர் கனேமுல்ல சஞ்ஜீவ என அழைக்கப்படும் சஞ்ஜீவ குமார சமரரத்னவின் கொலை பேசு பொருளாக மாறியது. கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்ற விசாரணை கூண்டில் வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 19-ஆம் தேதி கனேமுல்ல சஞ்ஜீவ கொலை செய்யப்பட்டார். வழக்கறிஞர் வேடமிட்டு வந்திருந்த துப்பாக்கித்தாரி, இந்தக் கொலையை மேற்கொண்டு, நீதிமன்ற வளாகத்தை விட்டு தப்பியோடினார். சந்தேக நபரை போலீஸார், 8 மணிநேரத்தில் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக போலீஸார் சுட்டிக்காட்டும் இஷாரா செவ்வந்தி என்ற பெண், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டார். பட மூலாதாரம், ANANATHA WIJAYAPALA FB படக்குறிப்பு, பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மாத்தறை வரலாற்று சிறப்பு மிக்க தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு முன்பாக மார்ச் 21-ஆம் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி பிரயோக சம்பவம் நாட்டில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்தது. பௌத்த மக்களின் புனித ஆலயத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி பிரயோக சம்பவமும் அதிகளவில் பேசப்பட்ட ஒரு சம்பவமாக பதிவாகியிருந்தது. இதேவேளை, வெலிகம பிரதேச சபையின் தவிசாளராக கடமையாற்றிய லசந்த விக்ரமசேகர துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடந்த 22-ஆம் தேதி உயிரிழந்தார். வெலிகம பிரதேச சபை வளாகத்திற்குள் வந்த துப்பாக்கித்தாரிகள், பிரதேச சபையின் தவிசாளரின் அறைக்குள் சென்று துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர். இந்த துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த லசந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. லசந்த, இலங்கையின் பிரதான எதிர்கட்சியாக விளங்கும் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவாகியிருந்தார். உயிரிழந்த லசந்த விக்ரமசேகர, "நிழலுலக செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒருவர்" என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ''கடந்த காலங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களின் ஊடாக தேசிய பாதுகாப்புக்கு எந்த வித அச்சுறுத்தலும் கிடையாது. வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர என்ற வெலிகம லசா மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவர் நிழலுலக குற்றவாளி. மாத்தறை, குருநாகல் போன்ற மேல் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழக்கப்பட்டுள்ளது. நிழலுலக செயற்பாடுகளும் அவர் தொடர்புடையவர்.'' என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறினார். பட மூலாதாரம், pmd sri lanka ராணுவ ஆயுதங்கள் பயன்பாடு நாட்டில் இடம் பெறுகின்ற துப்பாக்கி பிரயோகங்கள் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாகவே காணப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கிறார். போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக முழு நாட்டையும் ஒன்றிணைக்கும், தேசிய செயற்பாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 30-ஆம் தேதி கொழும்பில் இடம்பெற்ற போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டிருந்தார். ''கருப்புப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வர்த்தகமாக போதைப்பொருள் மாறியுள்ளது. அதனால் அவர்களிடையே சந்தையை பங்கு போடுவதில் மோதல் காணப்படுகிறது. ஒவ்வொரு குழுக்களுக்கிடையில் துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரதேச எல்லைகளுக்கு மற்றைய தரப்பு நுழைய முடியாது. போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டதாகவே இந்த கொலைகள் நடைபெறுகின்றன. பொதுச் சமூகத்தின் பாதுகாப்பிற்காவே அரச பொறிமுறையொன்று உள்ளது. ஆனால் அவர்களிடமுள்ள பண பலத்தினால் அரச பொறிமுறை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இனிமேலும் இதனை மறைத்து இந்தப் பிரச்னைக்கு முகங்கொடுக்க முடியாது." என ஜனாதிபதி கூறினார். ராணுவத்தினர் பயன்படுத்தும் ஆயுதங்கள் குழுக்களிடமும் இருப்பதாக ஜனாதிபதி குற்றம் சாட்டினார். "அரசிடம் இருக்க வேண்டிய ஆயுதங்கள் எவ்வாறு அவர்கள் கைகளுக்குச் சென்றது? சில ராணுவ முகாங்களில் இருந்து 73 ரீ56 ரக துப்பாக்கிகள் அவர்களின் கைகளுக்குச் சென்றுள்ளன. அதில் சுமார் 35 துப்பாக்கிகள் மீளப் பெறப்பட்டுள்ளன. அதற்குப் பயன்படுத்தும் ரவைகள் பிடிபட்டுள்ளன. ராணுவ கேர்னல் ஒருவர்தான் இவற்றை வழங்கியுள்ளார். அதற்காக அவரின் வங்கிக் கணக்கிற்கு பணம் கிடைத்துள்ளது. ஒரு பொலிஸ் அதிகாரி தனது ஆயுதத்தை விற்பனை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். அந்த ஆயுதக் குழுக்களிடமுள்ள பண பலத்தினால் இவை நிகழ்ந்துள்ளன.'' என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார். பட மூலாதாரம், pmd sri lanka நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறிய பின்னர், அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. "பாதுகாப்பு இல்லாததால் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் மாஅதிபர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளனர்," என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே தெரிவித்துள்ளார். எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. போலீஸ் மாஅதிபர் பங்கு பெற்ற இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர். எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக எதிர்கட்சியினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2lpvrr48dyo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.