Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. தென்னாப்பிரிக்காவை ஏன் இந்திய அணி சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் சதமடித்த ஜெமிமா கட்டுரை தகவல் சஞ்சய் கிஷோர் பிபிசி ஹிந்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் 1983-ஆம் ஆண்டு ஆடவர் ஒருநாள் உலக கோப்பையைப் போலவே இந்திய மகளிர் கிரிக்கெட்டிற்கு முக்கியமான தருணம் இது. இன்று நடைபெறவுள்ள மகளிர் ஒருநாள் உலககோப்பை இறுதிப் போட்டி வரலாற்று புத்தகங்களில் பொன் எழுத்துக்களால் எழுதப்பட உள்ளது. 2006-ஆம் ஆண்டு பிசிசிஐ மகளிர் கிரிக்கெட்டை தங்களின் குடைக்குள் எடுத்துக் கொண்டது. அப்போது மகளிர் கிரிக்கெட் இன்று அடைந்துள்ள உயரத்தை அடையும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். மகளிர் கிரிக்கெட்டின் ஆரம்ப காலகட்டத்தில் மைதானங்கள் காலியாக இருந்தன, தொலைக்காட்சிகளில் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய போராட வேண்டியிருந்தது. அந்தச் சூழல் தற்போது மாறிவிட்டது, வீராங்கனைகள் நட்சத்திரங்களாக மாறி உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்படுகின்றனர். பெண்கள் கிரிக்கெட் பிரபலமடைந்துள்ளது. ஆனால் மைதானங்களுக்கு ரசிகர்களைக் கொண்டு வருவதில் வெற்றியடையவில்லை. இந்திய அணிக்குப் பின்னால் உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ உள்ளது. அவர்களிடம் வளமும் கட்டமைப்பும் உள்ளது. ஆனால் கிரிக்கெட் என்பது பணத்தால் மட்டுமல்ல, தைரியத்தால் வெல்லப்படுகிறது என்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது. ரசிகர்களின் மனங்களை வெல்ல வேண்டுமென்றால் எந்த அணியும் கோப்பைகளை வெல்ல வேண்டும். இந்திய கிரிக்கெட்டின் பிம்பத்தையும் தலைவிதியையும் மாற்ற கபில் தேவின் அணி உலக கோப்பையை வெல்ல வேண்டியிருந்தது. தற்போது அதே போன்றதொரு சூழல் மகளிர் அணிக்கும் உருவாகியுள்ளது. இந்திய அணி இறுதிப் போட்டியில் மட்டும் விளையாடவில்லை, ஒரு கனவை நிறைவேற்றவும் விளையாடுகிறது. ஆனால் தென் ஆப்ரிக்க அணிக்கு இறுதிப் போட்டியில் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 2024 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது தென் ஆப்ரிக்கா. இறுதி போட்டி வெற்றியைக் கொண்டாடுவாதற்காக டேன்சிங் ஷூக்களை எடுத்து வந்துள்ளனர். தென் ஆப்ரிக்க அணியின் இயக்குநர் ஈனோச் நிக்வே தனது அணியை "ஆர்டிஸ்டிக் ஹன்டர்கள்" என அழைக்கிறார். இரு 'உதய சூரியன்' அணிகளின் கதை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அரை இறுதி போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது தென் ஆப்ரிக்க அணி வரலாற்றை மாற்றும் இறுதி போட்டியாக இது அமைந்துள்ளது. முதல்முறையாக ஆஸ்த்ரேலியா, இங்கிலாந்து அல்லாமல் ஒரு புதிய அணி உலக சாம்பியனாக உள்ளது. இது, இந்தத் தொடரில் விட்டுக் கொடுக்காத உணர்வை வெளிப்படுத்திய இரு 'உதய சூரியன்' அணிகளின் கதைகளாகும். இந்திய அணி முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகளை தோற்கடிக்காமல் நாக்-அவுட் சுற்றுக்கு வந்தது. அதன் பிறகு அரை இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவிடம் வரலாற்று வெற்றி பெற்று இறுதி போட்டியை அடைந்தது. இந்த வெற்றி, இந்திய அணி அழுத்தமான சூழல்களுக்காக தயாராக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது. ஜெமிமா ரோட்ரிகசின் சதம் (ஆட்டமிழக்காமல் 127 ரன்கள்) மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுரின் 89 ரன்களும் இந்திய அணி எந்த இலக்கையையும் அடைய முடியம் என்பதை நிரூபித்தது. மறுபுறம் தென் ஆப்ரிக்க அணி இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் முறையே 69 மற்றும் 97 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததிலிருந்து மீண்டு வந்துள்ளது. அரை இறுதிப் போட்டியில் தங்களின் பரம எதிரியான இங்கிலாந்து அணியை 125 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இது அவர்களின் அசாத்தியமான மன உறுதிக்குச் சான்றாக உள்ளது. இந்தப் போட்டி, தங்களின் கிராமங்கள் மற்றும் நகரங்களிலிருந்து போராடி இந்தக் கட்டத்தை அடைந்திருக்கும் வீராங்கனைகளின் கனவுகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இன்று வெற்றி என்பது வெறும் கோப்பையாக மட்டும் இருக்காது. மாறாக பொருளாதார சுதந்திரம், சமூக மாற்றம் மற்றும் அசாத்தியமானதை சாத்தியமாக்குவதாக இருக்கும். அணிகளின் நிலை மற்றும் முக்கியமான சவால்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஸ்மிரிதி மந்தனாவின் அனுபவம் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு உதவியாக இருக்கும். அரை இறுதி போட்டிக்கு இந்திய அணி தேர்வு செய்த காம்பினேஷன் (ஆறு பந்து வீச்சாளர்கள் மற்றும் 8 வது வீரர் வரை பேட்டிங் ஆடுவது) தான் இறுதி போட்டிக்கும் உகந்ததாக இருக்கும் ஒபனிங் மற்றும் மிடில் ஆர்டர்: இந்திய அணிக்கு ஓபனிங்கில் ஸ்மிரிதி மந்தனா மற்றும் செஃபாலி வர்மா நல்ல தொடக்கம் தர வேண்டும் என்கிற அழுத்தத்தில் இருப்பார்கள். செஃபாலி கடந்த போட்டியில் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால் அதிரடியான தொடக்கம் தருவதற்கான திறன் அவரிடம் உள்ளது. மிடில் ஆர்டர்: ஜெமிமா ரோட்ரிகஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மிடில் ஆர்டரில் இந்திய அணிக்கு அசைக்க முடியாத கூட்டணியாக உள்ளனர். ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மாவின் அனுபவமும் அமைதியான அணுகுமுறையும் இந்த அணியில் முக்கியமான பங்கு வகிக்கிறது. ரிச்சா கோஷின் அதிரடி ஃபினிஷிங் மற்றும் அமன்ஜோத் கவுரின் திறன்கள் நவீன கால கிரிக்கெட்டின் தேவைகளாக உள்ளன. சுழற்பந்து வீச்சு: தென் ஆப்ரிக்க அணியில் வலது கை பேட்டர்கள் அதிகமாக இருப்பதால் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ராதா யாதவ் சிறந்த தேர்வாக இருப்பார். இந்த நகர்வு மிடில் ஓவர்களில் இந்தியா ரன்களைக் கட்டுப்படுத்த உதவும். வேகப்பந்து வீச்சு: கிராந்தி கவுட் மற்றும் ரேணுகா சிங் காம்பினேஷன் தொடக்க ஓவர்களில் விக்கெட் எடுத்து ரன்களைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். கவனமுடன் இருக்க வேண்டும் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தற்போதைய தென் ஆப்ரிக்க அணியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. தென் ஆப்ரிக்க அணி சாம்பலில் இருந்து எழுந்து வந்துள்ளது. இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் மிக குறைவான ரன்களை எடுத்திருந்தாலும் 5 போட்டிகளில் தொடர்ந்து வென்று இறுதி போட்டிக்கு வந்துள்ளது. தென் ஆப்ரிக்க அணியின் வெற்றிக்கு நான்கு உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். உத்தி சார்ந்த செயல்திட்டம்: கடுமையான போட்டிகள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்திய அணியின் பெர்ஃபார்மன்ஸ் வேகப்பந்து வீச்சை எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பதை பொருத்து அமையும். இன்றைய போட்டியின் முடிவு சில முக்கியமான அம்சங்களால் தீர்மானிக்கப்படும். மந்தனா vs கப் - உலகின் நம்பர் 1 பேட்டரான ஸ்மிரிதி மந்தனா, கப்-இன் துல்லியமான ஸ்விங் பந்து வீச்சை இறுதிப் போட்டியின் அழுத்தத்தில் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார் என்பது சுவாரஸ்யமாக இருக்கும். டி கிளார்க் vs இந்தியாவின் டெத் ஓவர் பவுலிங்: லீக் சுற்று தோல்வியை மறந்து இந்திய அணி டி கிளார்க்கை கட்டுப்படுத்த ஏதேனும் திட்டத்துடன் வருமா என்பதை கவனிக்க வேண்டும். தீப்தி சர்மா vs வோல்வார்ட்: தொடர்ச்சியாகவே வோல்வார்ட்டிற்கு எதிராக குறைவான ரன் ரேட்டை தீப்தி சர்மா கடைபிடித்து வருகிறார். இது மிடில் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு முக்கியமானதாக இருக்கும். செஃபாலி வர்மா: அணியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் வந்துள்ள செஃபாலி வர்மாவுக்கு ஜொலிப்பதற்கான வாய்ப்பு இது. இத்தகைய பிட்ச் மற்றும் வாய்ப்பைப் பயன்படுத்தி அவர் பெரிதாக சாதிக்க முடியும். நவி மும்பை எனும் கடுமையான போட்டிக்களம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நவி மும்பை மைதானம் நவி மும்பை மைதானம் 30,000 ரசிகர்கள், உப்பு கலந்த கடல் காற்று மற்றும் கணிக்க முடியாத வானிலையைக் கொண்டிருக்கும். டி.ஒய் பாட்டீல் மைதானம் இந்திய அணிக்கு சாதகமானதாகவே இருந்துள்ளது. இங்கு நடைபெற்ற கடைசி மூன்று போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. தென் ஆப்ரிக்க அணி முதல் முறையாக இங்கு விளையாடுகிறது. இது இந்தியா அணிக்குச் சாதகமான அமையும். ஆனால் கணிக்க முடியாத வானிலை மற்றும் பனி டாஸ் ஜெயிப்பதை முக்கியமாக்குகிறது. மூன்றாவது முறை இந்திய அணிக்கு சாதகமாகுமா? பட மூலாதாரம், @ICC படக்குறிப்பு, மகளிர் உலக கோப்பை இந்திய மகளிர் அணிக்கு இந்த இறுதி போட்டி மூன்றாவது முயற்சியாக இருக்கும். 2005 (இங்கிலாந்திடம் தோற்றது) மற்றும் 2017-இல் (இங்கிலாந்திடம் தோற்றது) இந்திய அணி இறுதி போட்டியை அடைந்தது. மாறாக, தென் ஆப்ரிக்க அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் மூன்று முறை அரை இறுதி போட்டி வரை சென்றுள்ளது தென் ஆப்ரிக்கா. இப்போது மிகவும் தொழில்முறை அணியாக மாறியுள்ள தென் ஆப்ரிக்கா கடந்த 12 ஆண்டுகளில் நான்கு முறை ஐசிசி தொடர்களில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgkzzkzl6ezo
  2. 02 Nov, 2025 | 03:02 PM வடக்கில் இருந்து வெளியேற்றிய முஸ்லிம் மக்களை மீண்டும் வடக்கில் குடியேற வருமாறு பிரபாகரன் அழைப்பு விடுத்ததாக செல்வின் இரேனியஸ் மரியாம்பிள்ளை தெரிவித்துள்ளார். வடக்கில் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 35 வருட நிறைவை நினைவுகூரும் முகமாக, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில், யாழ். தந்தை செல்வா கலையரங்கத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கையொப்பமிட்ட ஒரே ஒரு ஆவணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீமுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குமிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரான புரிந்துணர்வு ஒப்பந்த ஆவணம் மட்டும்தான். சமாதான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில்கூட அன்ரன் பாலசிங்கம் கையொப்பமிட்டிருப்பார், தமிழ்ச்செல்வன் கையொப்பமிட்டிருப்பார், புலித்தேவன் கையொப்பமிட்டிருப்பார், அல்லது திட்டமிடல் பணிப்பகத்தின் பணிப்பாளர் கையொப்பமிட்டிருப்பார். ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரன் அந்த ஒருடத்திலும் கையொப்பமிடவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீமுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குமிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் "பிரபாகரன், இடம்பெயர்ந்த முஸ்லீம்கள் அனைவரையும் மீண்டும் குடியேறுவதற்கு வருமாறு அழைக்கின்றார்" என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரவூப் ஹக்கீமுடன் புலிகள் கதைத்த நாட்கள் வலிமையுடனும் அங்கீகரிப்புடனும் இருந்த நாட்கள். தோற்றுப் போய் அழிவடைய போகின்றோம் எந்த நிலையில் இருந்து அவர்கள் கதைக்கவில்லை. சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டு, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மிகவும் பலமாக இருந்த நாட்களிலேயே கதைத்தார்கள். அப்போது யாழ்ப்பாண மாவட்டம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லாத யாழ்ப்பாணத்தில் குடியேறுங்கள் என்று சொல்வதற்கு புலிகளால் முடியாது. அந்தச் சூழலில் தங்களால், மீள குடியேறவுள்ள முஸ்லீம் மக்களுக்கு உத்தரவாதம் தர முடியாது என்பதே புலிகளின் சாராம்சமாக இருந்தது. முஸ்லிம் மக்கள் மதரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவுப், ஏனைய விடயங்கள் ரீதியாகவும் தனித்துவமானவர்கள். அவர்களது உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விடயம் அந்த ஒப்பந்த ஆவணத்தில் தெளிவாக கூறப்படுகிறது. யார் யாரிடம் மன்னிப்பு கேட்பது? குற்றம் செய்தவர் மன்னிப்பு கேட்பதா? அல்லது குற்றம் செய்தவர் சார்பில் மூன்றாம் தரப்பினர் ஒருவர் மன்னிப்பு கேட்பதா? அல்லது அந்த குற்றத்தை பார்த்த ஒருவர் மன்னிப்பு கேட்பதா? மன்னிப்பு என்பது தவறு செய்தவர் தான் உணர்ந்து செய்வதுதான் மன்னிப்பு என்றார். https://www.virakesari.lk/article/229292
  3. IND Women vs SA Women, Final at Navi Mumbai, Women's World Cup, Nov 02 2025 Match delayed by a wet outfield Pitch Report: There is a nice breeze and that seems to have pushed the clouds away. Still quite muggy, though, with 79 percent humidity. The pitch is in the centre of the square. 66m straight hit, 56m and 57m square boundaries. Mel Jones thinks the pitch, being under covers, with the rain around, might interest swing bowlers such as Kapp and Renuka. Very similar to the one that saw the semi-final between India and Australia, although this strip was last used for the Ind-NZ game. Charani has been one of the few spinners to get the ball to turn at this venue, and it will be interesting to see how much purchase she can extract. India XI: Shafali Verma, Smriti Mandhana, Jemimah Rodrigues, Harmanpreet Kaur (capt), Richa Ghosh (wk), Deepti Sharma, Amanjot Kaur, Radha Yadav, Kranti Gaud, Shree Charani, Renuka Singh South Africa XI: Laura Wolvaardt (capt), Tazmin Brits, Anneke Bosch, Sune Luus, Marizanne Kapp, Annerie Dercksen, Sinalo Jafta (wk), Chloe Tryon, Nadine de Klerk, Ayabonga Khaka, Nonkululeko Mlaba
  4. இலங்கை - இந்திய மின் இணைப்புத் திட்டம் இறுதிக்கட்டத்தில் : இரு சாப்த கால கனவு 02 Nov, 2025 | 09:11 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இந்தியா மற்றும் இலங்கையின் தேசிய மின்சார கட்டமைப்புக்களை இணைக்கும் திட்டம், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வந்த பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆய்வுகளுக்குப் பிறகு, இப்போது நடைமுறைக்கு வரும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது, இரு நாடுகளுக்கும் இடையே 1000 மெகாவாட் மின்சாரத்தை இருவழிப் பரிமாற்றம் செய்ய முடியும். இந்நிலையில், இரு நாட்டு அதிகாரிகள் குழு மெய்நிகர் மூலம் இந்த திட்டம் குறித்து கடந்த வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் இந்திய குழுவுக்கு ஒன்றிய மின்துறை செயலாளர் பங்கஜ் அகர்வாலும், இலங்கை குழுவுக்கு மின்வலுசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபாலவும் தலைமை தாங்கினர். இருதரப்பு அதிகாரிகளும் மின்கட்டமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அம்சங்கள் குறித்து கலந்துரையாடினர். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், 'இலங்கையின் எரிசக்தி பாதுகாப்புக்கு 1,000 மெகாவாட் மின் இணைப்பு திட்டம் மிகவும் முக்கியமானது. மின் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் இலங்கையால் இந்தியாவில் இருந்து உத்தேச இணைப்பு திட்டத்தின் மூலம் மின்சாரத்தை இறக்குமதி செய்ய இயலும். மேலும் உபரியாக இருக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கை அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் என தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் 2002 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தியா - இலங்கை மின் கட்டமைப்பு இணைப்பிற்கான யோசனை 1970 களிலிருந்தே பேசப்பட்டிருந்தாலும், தீவிரமான நடவடிக்கைகள் 2002 ஆம் ஆண்டிலேயே தொடங்கின. 2010 ஆண்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளின் அரசாங்கங்களும் ஒரு விரிவான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தன. இவ்வாறு நீண்ட கலந்துரையாடல்களுக்கு பின்னர், தற்போது உத்தேச மின் இணைப்பு திட்டம் குறித்து ஒரு இலக்கை அடைய இருநாடுகளும் தீர்மானித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன. https://www.virakesari.lk/article/229257
  5. பெண்கள் உலகக் கோப்பை: 'இந்த 5 விஷயங்கள் நடந்தால் இந்தியாவுக்கு வெற்றி பிரகாசம்' பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மு.பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 1 நவம்பர் 2025 பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது இந்தியா. அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நம்பிக்கையோடு வருகிறது இந்திய அணி. இந்த 5 முக்கிய விஷயங்கள் நடந்தால் இந்திய அணி சாம்பியன் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார் சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் (முன்பு - தேசிய கிரிக்கெட் அகாடெமி) பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரன். அவை என்ன? 1) இந்தியா சேஸ் செய்வது சாதகமாக அமையலாம் இந்திய அணி டாஸ் வென்றால், பந்துவீச்சை தேர்வு செய்வது சாதகமாக அமையலாம் என்று சொல்கிறார் ஆர்த்தி சங்கரன். "வழக்கமாக இதுபோன்ற பெரிய போட்டிகளில் எந்த அணியுமே முதலில் பேட்டிங்கை தான் தேர்வு செய்வார்கள். பெரிய ரன்கள் அடித்தால், அதுவே எதிரணிக்கு நெருக்கடி ஏற்படுத்திவிடும். அது வழக்கம் தான். ஆனால், இந்தப் போட்டியில் இந்தியா இரண்டாவது பேட்டிங் செய்வது நல்லது என்று தோன்றுகிறது" என்றார் அவர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 339 ரன்களை சேஸ் செய்தது இந்தியா தான் அப்படிச் சொன்னதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகக் கூறினார் அவர். "பனி (Dew) இந்தப் போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பௌலர்களுக்குப் பந்தைப் பிடிப்பது எளிதாக இருக்காது. அரையிறுதியின் கடைசி கட்டத்தில் ஆஸ்திரேலிய பௌலர்கள் நிறைய வைட்கள் வீசியதைப் பார்த்தோம். அதுமட்டுமல்லாமல் பந்தும் பேட்டிற்கு நன்றாக வரும். அதனால் இந்த மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் நல்லது. அதுமட்டுமல்லாமல் மழை பெய்யக்கூடும் என்பதால் ஆடுகளம் மூடி வைக்கப்படலாம். அப்படி மூடிவைக்கப்பட்ட ஆடுகளத்தில் பந்து சற்று நின்று வரும். அப்படியிருக்கும்போது முதலில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது. அதனால் இரண்டாவது பேட்டிங் செய்வது நல்லது என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் இந்திய அணி இரண்டாவது பேட்டிங் செய்துதான் வரலாற்று வெற்றி பெற்றது. 339 ரன்களை சேஸ் செய்து, பெண்கள் ஒருநாள் போட்டிகளில் மிகப் பெரிய சேஸையும் பதிவு செய்தது இந்தியா. 2) ரேணுகா தாக்கூருக்குப் பதில் ஸ்னே ராணா அரையிறுதியில் ஆடிய அணியில் ஒரு மாற்றம் மேற்கொள்வது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார் பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரன். "ஸ்னே ராணாவால் இறுதிப் போட்டியில் நல்ல தாக்கம் ஏற்படுத்த முடியும் என்று நான் நினைக்கிறேன். அரையிறுதியின் முக்கிய கட்டத்தில் அவர் இல்லாததை உணர முடிந்தது. அதேசமயம் ரேணுகா இந்தியாவின் சிக்கனமான பௌலராக இருக்கிறார். இருந்தாலும், அவரை முதல் ஸ்பெல்லுக்குப் பின் பெரிதாகப் பயன்படுத்த முடிவதில்லை. கடைசி கட்டங்களில் ஒரு பௌலர் குறைவாக இருப்பது போலத்தான். அதனால் எந்த கட்டத்திலும் பந்துவீசக்கூடிய ஸ்னே ராணாவை ஆடவைப்பது மிடில் ஓவர்களுக்கும், டெத் ஓவர்களுக்கும் உதவும்" என்று கூறுகிறார் ஆர்த்தி. இந்த உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் ஆடியிருக்கும் ரேணுகா 4.13 என்ற எகானமியில் பந்துவீசி 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். 6 போட்டிகளில் ஆடியிருக்கும் ஸ்னே ராணா, 5.67 என்ற எகானமியில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் ஸ்னே ராணா ஆடவில்லை 3) மரிசான் காப் வீசும் 10 ஓவர்களை சரியாகக் கையாளவேண்டும் தென்னாப்பிரிக்காவின் முன்னணி பௌலரான மரிசான் காப்பை இந்திய பேட்டர்கள் நன்றாகக் கையாளவேண்டும் என்கிறார் ஆர்த்தி. "காப் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் அவருடைய 10 ஓவர்களை இந்தியா சிறப்பாகக் கையாளவேண்டும். ஒரு நல்ல விஷயம், இங்கிலாந்து பேட்டர்களுக்கு இருந்ததுபோல் இந்திய பேட்டர்களுக்கு இன்ஸ்விங்கை சமாளிக்கும் பிரச்னை இல்லை" என்றும் அவர் குறிப்பிட்டார். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார் காப். பவர்பிளேவில் பேட்டர்களுக்கு சவால் விடக்கூடிய அவர், இதுவரை 3.83 என்ற எகானமியில் 12 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். இந்தியாவுக்கு பவர்பிளேவில் அவர் கொஞ்சம் பிரச்னை தரலாம் என்று சொல்லும் ஆர்த்தி, காப்போடு டெல்லி அணியில் ஷஃபாலி ஆடியது அவருக்குக் கொஞ்சம் சாதகமாக அமையலாம் என்றும் குறிப்பிட்டார். கடந்த 3 ஆண்டுகளாக ஷஃபாலி வர்மா, மரிசான் காப் இருவரும் வுமன்ஸ் பிரிமீயர் லீக் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக ஒன்றாக விளையாடி வருகின்றனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் மரிசான் காப் அதேசமயம் ஷஃபாலி வர்மா அவருடைய இயல்பான அதிரடி ஆட்டத்தை விளையாடவும் அணி நிர்வாகம் அனுமதிக்கவேண்டும் என்று கூறுகிறார் ஆர்த்தி. காப் தவிர்த்து, இடது கை ஸ்பின்னரான மலாபா இந்தியாவுக்கு சவாலாக இருக்கலாம் என்று கணிக்கிறார் ஆர்த்தி. ஆனால், அவர் பந்துவீச்சில் அதிரடியாக அடித்து ஆடுவதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 4) மூன்று முக்கிய விக்கெட்டுகளை சீக்கிரம் கைப்பற்றவேண்டும் தென்னாப்பிரிக்க பேட்டர்கள் லாரா வோல்ஃபார்ட், டாஸ்மின் பிரிட்ஸ், மரிசான் காப் ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் சீக்கிரம் வெளியேற்ற வேண்டும் என்கிறார் ஆர்த்தி சங்கரன். "தென்னாப்பிரிக்க பேட்டர்களைப் பொறுத்தவரை ஓப்பனர்கள் இருவருமே பெரிய சவாலாக அமைவார்கள். அவர்கள் போக காப்புடைய அனுபவமும் சிக்கல் கொடுக்கும். இவர்கள் மூவரையும் சீக்கிரம் பெவிலியனுக்கு அனுப்பினால், தென்னாப்பிரிக்க பேட்டிங்கின் முதுகெலும்பை உடைக்கலாம். அவர்கள் மூவருமே இல்லாதபோது மற்றவர்களுக்கு நெருக்கடி ஏற்படும்." என்று கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, லாரா வோல்ஃபார்ட் & டாஸ்மின் பிரிட்ஸ் இந்தத் தொடரில் 470 ரன்கள் அடித்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் தென்னாப்பிரிக்க கேப்டன் வோல்ஃபார்ட். ''இவ்விரு அணிகளும் மோதிய முந்தைய போட்டியில் நடீன் டி கிளார்க் தான் 54 பந்துகளில் 84 ரன்கள் அடித்து தென்னாப்பிரிக்காவை வெற்றி பெற வைத்தார். அப்போது பெரும்பகுதி அவரோடு வோல்ஃபார்ட் விளையாடியிருந்தார். அந்த 3 பேரை (வோல்ஃபார்ட், பிரிட்ஸ், காப்) அப்படி நீண்ட நேரம் ஆடவிடாமல் செய்தால், பின்னால் வருபவர்கள் தாக்கம் ஏற்படுத்த முடியாமல் செய்ய முடியும்'' என்கிறார் ஆர்த்தி. 5) ஹர்மன், ஸ்மிரிதி இருவரின் நிதானமும் முக்கியம் இந்தியாவின் இரு தூண்களான ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிரிதி மந்தனா இருவரும் இறுதிப் போட்டியில் நிதானமாக இருக்கவேண்டும் என்கிறார் ஆர்த்தி. "இந்தியாவின் இந்த இரண்டு ஸ்டார்களும் நெருக்கடிகளை தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டு, மற்றவர்கள் அவர்களின் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வழி வகுக்க வேண்டும்" என்று கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவின் கேப்டனும், துணைக் கேப்டனும் நெருக்கடியான போட்டியை நிதானமாகக் கையாளவேண்டும் என்கிறார் ஆர்த்தி சங்கரன் மேலும், "அவர்கள் இருவரும் இப்போது பல ஃபைனல்கள் விளையாடி விட்டார்கள். நிறைய சூழ்நிலைகளை சந்தித்திருக்கிறார்கள். அதனால் அந்த நெருக்கடிகளையெல்லாம் அவர்கள் தோள்களில் தாங்கி அதை சமாளிக்கவேண்டும். மற்றவர்களுமே சிறந்த செயல்பாட்டைக் கொடுக்கிறார்கள். ஆனால், இந்த இரு சீனியர்களின் நிதானம் முக்கியம்" என்றார் ஆர்த்தி. இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் இருக்கும் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்குத் தொடங்கும். இந்த இரு அணிகளுமே இதுவரை உலகக் கோப்பை எதுவும் வென்றதில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm277k624lvo
  6. ஆண்டின் இறுதிக்குள் முதலீட்டாளர் பாதுகாப்புச் சட்டமூலம் அறிமுகம்; அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ அறிவிப்பு : சினோபெக் திட்டப் பேச்சுக்கள் இறுதிக்கட்டதை அடைந்துள்ளதாகவும் தெரிவிப்பு Published By: Digital Desk 1 02 Nov, 2025 | 09:33 AM ஆர்.ராம் நாட்டில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உருவாக்கும் நோக்கத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள் அரசாங்கம் முதலீட்டாளர் பாதுகாப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவரும் என்று தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். முதலீட்டாளர்களிடையே ஏற்படும் ஏதேனும் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதன் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். புதிய சட்டமூலமானது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பதன் மூலம் முதலீடு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன், நாட்டில் வெளிப்படைத்தன்மை, ஸ்திரத்தன்மை மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை குறித்த சட்டமூலம் உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார். இதேவேளை, சினோபெக் திட்டம் சம்பந்தமான உரையாடல்கள்இறுதி கட்டத்தில் இருப்பதால், 3.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள குறித்த திட்டம் விரைவில் அமுலாக்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். குறித்த திட்டம் சம்பந்தமாக நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்று தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதோடு விரைவில் குறித்த திட்டத்தினை பகிரங்கப்படுத்தப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார். சீன தூதரகம் மற்றும் சினோபெக் அலுவலகங்கள் உள்ளிட்ட தொடர்புடைய பங்காளர்களுடன் நாங்கள் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தியுள்ள நிலையில் தற்போது அவை இறுதிக்கட்டத்தினை அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். நாட்டிற்கு அதிவேகமான பொருளாதார வளர்ச்சி தேவையாக உள்ளது என்றும் தொழில்நுட்பம் மற்றும் புவிசார் அரசியல் கட்டமைப்புகள் போன்ற எந்தவொரு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதன் ஊடாக அதனை முன்னேற்றகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/229255
  7. பட மூலாதாரம், Press Association படக்குறிப்பு, பூண்டை வெறும் வயிற்றில் உட்கொள்வது இரைப்பை குடல் கோளாறு, வாய்வு மற்றும் குடலில் மாற்றங்களை ஏற்படுத்தும். கட்டுரை தகவல் தி ஃபுட் செயின் ப்ரோக்ராம் பிபிசி உலக சேவை 2 நவம்பர் 2025, 01:52 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பூண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதன் தனித்துவமான சுவை மற்றும் மருத்துவ குணங்களுக்காக மதிக்கப்படுகிறது. இது நுண்ணுயிரிகளையும் வைரஸ்களையும் எதிர்க்கும் திறன் கொண்டதால், சமையலிலும் பாரம்பரிய மருத்துவத்திலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. மத்திய ஆசியாவில் தோன்றிய பூண்டு, மக்கள் இடம்பெயர்ந்தபோது ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் பரவியது. இன்று, உலகில் அதிக அளவில் பூண்டை உற்பத்தி செய்கிற நாடாக சீனா உள்ளது. பிபிசி உலக சேவையின் புட் செயின் நிகழ்ச்சி, பூண்டின் வரலாறு மற்றும் கலாசார முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறது. அதே சமயம், பூண்டு உண்மையில் நமது ஆரோக்கியத்துக்கு நல்லதா? என்ற ஒரு முக்கியமான கேள்வியையும் எழுப்புகிறது. சமையலில் அத்தியாவசியமான பொருள் பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, பூண்டு உலகெங்கிலும் உள்ள பல உணவு வகைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பூண்டு உலகெங்கிலும் உள்ள பல உணவு வகைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வடமேற்கு பிரான்ஸில் உள்ள தனது பிரெஞ்சு சமையல் பள்ளியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் ஆசியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்பிக்கும் டேனிஷ் சமையல் கலைஞரான பவுல் எரிக் ஜென்சன், 'பூண்டைப் பற்றித் தெரியாத மாணவரை நான் சந்தித்ததே இல்லை' என்கிறார். பூண்டு உணவின் சுவையைப் பெரிதும் உயர்த்துவதாக அவர் நம்புகிறார். 'பூண்டு இல்லாமல் பிரெஞ்சு உணவு எப்படி இருக்கும்?' என்று அவர் ஆச்சரியப்படுகிறார். "பிரெஞ்சுக்காரர்களால் பூண்டு இல்லாத உணவை கற்பனை கூட செய்ய முடியாது என நான் நினைக்கிறேன்," குழம்பு முதல் சூப் வரை, காய்கறி அல்லது இறைச்சி உணவுகள் வரை, எல்லாவற்றிலும் ஒரு பல் பூண்டு கண்டிப்பாக இருக்கும். பூண்டு இல்லாமல் சமைப்பதை கற்பனை செய்யவே முடியாது." என்று ஜென்சன் கூறுகிறார். ஆனால் 1970களின் தொடக்கத்தில் டென்மார்க்கின் கிராமப்புறத்தில் வளர்ந்தபோது, பூண்டு அவருக்கு புதிதாக இருந்தது. அதன் கடுமையான மணத்தின் காரணமாக மக்கள் அதை அப்போது பயன்படுத்தவில்லை. பின்னர், துருக்கிய தொழிலாளர்கள் டென்மார்க்கிற்கு வந்தபோது, பூண்டு சேர்த்த உணவு பரவலானது. இத்தாலிய பீட்சாக்கள் மூலமாகவும் ஜென்சன் பூண்டை ரசிக்கத் தொடங்கினார். இப்போது, குளிர்காலத்தில் ஆரோக்கியத்திற்காகவும் பூண்டைப் பயன்படுத்துகிறார். "நானும் என் துணைவியும், காலையில் ஒரு கப் சூப் குடிப்போம். அதில் ஒவ்வொருவரும் ஒரு முழு பூண்டு பல்லைப் பிழிந்து சேர்ப்போம். இதனால் எங்களுக்கு சளி, காய்ச்சல் எதுவும் வருவதில்லை. அதற்கு காரணம் பூண்டு தான் என நான் நிச்சயமாக நம்புகிறேன்." என்று அவர் குறிப்பிடுகிறார். ஒரு நீண்ட பயணம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 20ஆம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்தவர்கள் புதிய இடங்களுக்கு பூண்டை கொண்டு வந்தனர் பூண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கலாசார மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் பெற்றுள்ளது. பண்டைய கிரேக்கர்கள், சூனியம் மற்றும் வீடுகளின் பாதுகாவலரான ஹெகேட்டுக்கு காணிக்கையாக சாலைச் சந்திப்புகளில் பூண்டை வைத்தனர். எகிப்தில், புகழ்பெற்ற துட்டன்காமூனின் கல்லறையில் பூண்டு கிடைத்தது, அவரைப் பாதுகாக்கும் சக்தி பூண்டுக்கு உண்டு என்றும் அவர்கள் நம்பினர். அதேபோல், சீன மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டுப்புறக் கதைகளில், காட்டேரிகளை விரட்ட பூண்டு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. "உலகின் பழமையான சமையல் செய்முறை ஒரு மெசபடோமிய குழம்பு. அது 3,500 ஆண்டுகள் பழமையானது. அதில் இரண்டு பூண்டு பற்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன" என 'கார்லிக்: எடிபில் பயோகிராபி'என்ற ('Garlic: An Edible Biography') புத்தகத்தின் ஆசிரியரான ராபின் செர்ரி கூறுகிறார். "பூண்டு குறித்து உள்ள மிகப் பழமையான மருத்துவ குறிப்பும் சுமார் 3,500 ஆண்டுகள் பழமையானது. 'எபர்ஸ் பாப்பிரஸ்' என்று அழைக்கப்படும் அந்த ஆவணத்தில், உடல்நலக்குறைவு முதல் உடலிலுள்ள ஒட்டுண்ணிகள், இதயம் மற்றும் சுவாசக் கோளாறுகள் வரை பல பிரச்னைகளுக்கு பூண்டை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய பல குறிப்புகள் இருந்தன," என்றும் அவர் கூறுகிறார். பண்டைய கிரேக்க மருத்துவரும் தத்துவஞானியுமான ஹிப்போகிரட்டீஸ் தனது மருத்துவ சிகிச்சைகளில் பூண்டைப் பயன்படுத்தியதாக செர்ரி குறிப்பிடுகிறார். அரிஸ்டாட்டில், அரிஸ்டோபேன்ஸ் போன்ற பல சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் பூண்டின் மருத்துவ பயன்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். அடிமைகளின் உணவில் இருந்து அரச குடும்பத்தின் உணவு வரை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பீட்சா போன்ற நமக்குப் பிடித்த பல உணவுகளில் பூண்டு பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. பண்டைய மெசபடோமியா, எகிப்து, கிரீஸ், ரோம், சீனா, இந்தியா போன்ற பல நாகரிகங்களில் பூண்டு மிகவும் பிரபலமாக இருந்தது. ரோமானிய வீரர்கள் பூண்டு தங்களுக்கு தைரியமும் வலிமையும் தருவதாக நம்பினர். அவர்கள் யுத்தங்களில் வெற்றி பெற்று புதிய பகுதிகளைக் கைப்பற்றிய போது, பூண்டை ஐரோப்பா முழுவதும் பரவலாக்கினர். பூண்டு உணவாகவும் மருந்தாகவும் பயன்பட்டாலும், ஒரு காலத்தில் சமையலில் அது ஏழைகளால் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. "அது ஏழைகள் உண்ணும் உணவாகவே கருதப்பட்டது." என்று கூறிய ராபின் செர்ரி, "எகிப்தில் பிரமிடுகள் கட்டிய அடிமைகளுக்கும், ரோமானிய மாலுமிகளுக்கும் வலிமை தருவதற்காக பூண்டு கொடுத்தனர். அது மலிவானது மட்டும் அல்லாமல், கெட்டுப் போன உணவின் சுவையையும் மறைக்கக்கூடும். அதனால் அது ஏழைகள் சாப்பிடும் உணவாகவே நீண்ட காலம் பார்க்கப்பட்டது." என்றும் விளக்குகிறார். ஆனால் 14 முதல் 16-ஆம் நூற்றாண்டு வரையிலான மறுமலர்ச்சி காலத்தில் பூண்டின் மதிப்பு மாறியது. அது, ஐரோப்பாவில் கலை, அறிவியல் வளர்ந்த காலம். "பிரான்சின் நான்காம் ஹென்றி பூண்டால் ஞானஸ்நானம் செய்யப்பட்டு, அதை அதிகம் உண்டார். இது பூண்டை பிரபலப்படுத்தியது. 19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டனிலும் பூண்டு பிரபலமானது," என்கிறார் செர்ரி. 1950-60களில் குடியேறியவர்கள் மூலம் பூண்டு அமெரிக்காவுக்கு வந்தது. இது எதிர்மறையான கருத்துகளை மாற்ற உதவியது. "யூதர்கள், இத்தாலியர்கள், கொரியர்கள் ஆகியோரை 'பூண்டு சாப்பிடுபவர்கள்' என்று அவமானகரமாக அழைத்தனர். இதற்கு மோசமான அர்த்தம் இருந்தது," என்றார் செர்ரி. மருந்தாகப் பயன்படுத்தப்படும் பூண்டு பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, பூண்டு அதன் மருத்துவ குணங்களுக்காக இன்றும் விரும்பப்படுகிறது உலகில் தற்போது 600-க்கும் மேற்பட்ட பூண்டு வகைகள் உள்ளன. உஸ்பெகிஸ்தான், ஜார்ஜியா போன்ற இடங்களில் விளையும் சில வகைகள் சமீபத்தில் தான் உலக சந்தையில் கிடைக்கத் தொடங்கியுள்ளன. சமையலில் முக்கியப் பங்கு வகிப்பதைத் தாண்டி, பூண்டு சளியின் அறிகுறிகளைக் குறைக்கவும் பயன்படுகிறது. ரத்த அழுத்தம், கொழுப்பு, புற்றுநோய் ஆகியவற்றில் பூண்டின் தாக்கத்தை ஆய்வு செய்ய பல மருத்துவப் பரிசோதனைகள் நடந்துள்ளன. ஆனால் அதில் வெளியான முடிவுகள் மாறுபட்டதாக உள்ளன. உதாரணமாக, இரானில் நடந்த சிறிய ஆய்வு, பூண்டு மற்றும் எலுமிச்சை சாறு ஆறு வாரங்களில் கொழுப்பையும் ரத்த அழுத்தத்தையும் குறைத்ததாகக் கூறுகிறது. ஆனால், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 200 நபர்களிடம் ஆறு மாதங்களுக்கு நடந்த ஆய்வில் கொழுப்பு குறைவதற்கான குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் காணப்படவில்லை. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனா இப்போது உலகின் மிகப்பெரிய பூண்டு உற்பத்தியாளராக உள்ளது 2014-இல் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு, பூண்டு வலுவான நுண்ணுயிர், வைரஸ் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியது. "பூண்டில் அதிக அளவு பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், கந்தகம் ஆகியவை இருக்கின்றன. மெக்னீசியம், மாங்கனீசு, இரும்பு போன்றவை மிதமான அளவில் உள்ளன. உண்மையில் இது ஒரு அதிசய காய்கறி," என்கிறார் பிரிட்டிஷ் டயட்டெடிக் அசோசியேஷனின் செய்தித் தொடர்பாளரும் குழந்தை மருத்துவ உணவியல் நிபுணருமான பஹீ வான் டி போர். "பூண்டில் 'அல்லிசின்' என்ற கந்தகம் கூட்டு பொருள் உள்ளது. இதில், நம் குடல் மிகவும் விரும்பும் ப்ரீபயாடிக் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதனால் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதில் நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மையும் உள்ளது." என்றார். அதேபோல் பூண்டின் நார்ச்சத்து குடல் பாக்டீரியாவை வளர்க்க உதவுகிறது, மலச்சிக்கல், வயிறு வீக்கம் ஆகியவற்றையும் குறைக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். தினமும் ஒன்று அல்லது இரண்டு பூண்டு பற்களை பச்சையாக சாப்பிடுவது பாதுகாப்பானது. ஆனால் அமெரிக்கன் ஃபேமிலி ஃபிசிஷியன் (American Family Physician) என்ற மருத்துவ இதழில் வெளியாகியுள்ள அறிக்கையின்படி, பூண்டை அதிகமாக, குறிப்பாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வயிற்றுப் பிரச்னைகள், வாயு பிரச்னை மற்றும் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவில் மாற்றம் ஏற்படலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8drre7vv3do
  8. ஐ.நா வெளியகப் பொறிமுறை தொடர்பில் முறைப்பாடு உத்தியோகபூர்வமாக ஆராய்வதாக ஐ.நா. உள்ளகக் கண்காணிப்பு அலுவலகம் தெரிவிப்பு Published By: Digital Desk 1 02 Nov, 2025 | 09:14 AM நா.தனுஜா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான வெளியகப் பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாடு குறித்து உத்தியோகபூர்வமாக ஆராயப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளகக் கண்காணிப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளகக் கண்காணிப்பு அலுவலகமானது உள்ளகக் கணக்காய்வு, விசாரணை, மேற்பார்வை மற்றும் சேவை மதிப்பீடு போன்ற நடவடிக்கைகளின் மூலம் ஊழியர்கள் மற்றும் வளங்கள் தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகம் கொண்டிருக்கும் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கும். அதன்படி இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் வெளியகப்பொறிமுறை குறித்து இலங்கைப் பிரஜைகள் மூவருடன் இணைந்து அரச சார்பற்ற அமைப்பு ஒன்றினால் கடந்த செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளகக் கண்காணிப்பு அலுவலகத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் கோட்பாடுகளுக்கு அப்பால் இலங்கையின் ஒப்புதல் இன்றி ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் வெளியகப்பொறிமுறையொன்று நிறுவப்பட்டுள்ளமையானது அதன் சட்டபூர்வத்தன்மை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு என்பன பற்றிய கேள்வியைத் தோற்றுவிப்பதாக அம்முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்முறைப்பாடு தொடர்பில் உள்ளக ரீதியில் ஆராயப்படுவதன் காரணமாக, அதன் இரகசியத்தன்மையைக் காரணங்காட்டி ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளகக் கண்காணிப்பு அலுவலகம் மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை. https://www.virakesari.lk/article/229253
  9. Nov 2, 2025 - 08:51 AM நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சன் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதாகும் வில்லியம்சன் 2011 ஆம் ஆண்டில் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை 93 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 18 அரை சதத்துடன் 2,575 ஓட்டங்களை பெற்றுள்ளார். தமது ஓய்வு குறித்து அவர் தெரிவிக்கையில், எதிர்பார்த்ததைவிட, அதிக ஆண்டுகள் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளேன். மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்துள்ளது. நிறைய அனுபவங்களையும் நியூசிலாந்து டி20 அணியில் கற்றுக்கொண்டேன் என தெரிவித்துள்ளார். டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள கேன் வில்லியம்சன், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாட உள்ளார். https://adaderanatamil.lk/news/cmhh597uu01c8o29ndn1dgf0s
  10. 01 Nov, 2025 | 04:51 PM ரோயல் பிரசாந்த் கருத்தரிப்பு மையம் வெள்ளவத்தை ரோயல் வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்­பட்டுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை (31) கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் மற்றும் வைத்தியர் கீதா ஹரிப்பிரியா ஆகியோரின் பங்கேற்புடன் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. (படப்பிடிப்பு : ஜே. சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/229242
  11. Nov 2, 2025 - 08:18 AM இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடந்த போது, பயணிகள் டொன்காஸ்டரில் இருந்து லண்டனில் உள்ள கிங்ஸ் கிராஸ் நோக்கிப் பயணித்துள்ளனர். கத்திக் குத்துக்கு உள்ளானவர்களில் 9 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தை அடுத்து, அந்த ரயிலின் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், நகரத்தின் பல வீதிகளையும் அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினர் மூடியுள்ளனர். https://adaderanatamil.lk/news/cmhh436c301c7o29ng88tb3uv
  12. யாழில் சிறுவனை காணவில்லை ; பொதுமக்களின் உதவியை நாடும் பெற்றோர்! 02 Nov, 2025 | 09:31 AM யாழ். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் 17 வயதுடைய மகன் ச.சயோசியன் என்பவரை காணவில்லை என அவரது தந்தை முறைப்பாடு பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் - மல்லாகம், நரியிட்டான் பகுதியில் வசித்துவந்த குறித்த இளைஞன் வெள்ளிக்கிழமை (31) வீட்டைவிட்டு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் பெற்றோர் அல்லது தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/229260
  13. ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது 01 Nov, 2025 | 02:28 PM ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, வெள்ளிக்கிழமை (31) நாட்டை விட்டுப் புறப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரால் இந்தக் கப்பலுக்கு பாரம்பரிய கடற்படை முறைப்படி பிரியாவிடை வழங்கப்பட்டது. இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, AKEBONO இன் கட்டளை அதிகாரி கமாண்டர் ARAI Katsutomo மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமார ஆகியோருக்கு இடையே கப்பலில் ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெற்றதுடன் AKEBONO தீவில் தங்கியிருந்த காலத்தில், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லெண்ணத்தை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த கிரிக்கெட் போட்டியிலும், கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்திலும் கப்பலின் குழுவினர் பங்கேற்றனர். மேலும், தீவின் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவதில் கப்பலின் பணியாளர்களும் பங்கேற்றதுடன், மேலும் இலங்கை கடற்படை வீரர்களுக்கும் கப்பலின் செயல்பாட்டு நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. https://www.virakesari.lk/article/229224
  14. பட மூலாதாரம், Riya Dhage படக்குறிப்பு, ஒரு செல் உயிரியான ஈஸ்ட் பூஞ்சைகளால் செவ்வாய் கோளில்கூட பிழைத்திருக்க முடியும் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 1 நவம்பர் 2025, 05:02 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரெட், பீர் போன்ற உணவுப் பொருள்களில் பயன்படுத்தப்படும் நுரைமம் அல்லது நொதி என அழைக்கப்படும் ஈஸ்ட் என்ற பூஞ்சையால் செவ்வாய் கோளில்கூட சாகாமல் உயிர் பிழைத்திருக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஒரு செல் உயிரியான ஈஸ்ட், பூமி தவிர்த்துப் பிற கோள்களில் உயிர்கள் எவ்வாறு பிழைத்திருக்க முடியும் என்பதற்கான தடயங்களைக் கொண்டுள்ளதாக, இந்திய அறிவியல் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு, "விண்வெளியில் மனித செல்கள் சந்திக்கும் அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளைக் கண்டறிவதற்கான ஓர் அளவுகோலாக ஈஸ்ட் இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது," என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் முன்னாள் விஞ்ஞானியும் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியருமான முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். பெங்களூருவில் அமைந்திருக்கும் இந்திய அறிவியல் நிறுவனத்தின் உயிரிவேதியியல் துறை ஆய்வாளர்கள் மற்றும் ஆமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ஆய்வாளர்கள் கூட்டாக இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, செவ்வாய் கோளின் வளிமண்டலம் மற்றும் சுற்றுச்சூழல் பல சவால்களைக் கொண்டது விண்வெளிப் பரிசோதனையில் ஈஸ்ட் பூஞ்சை உயிர்கள் பூமி தவிர பிற கோள்களில் பிழைத்திருக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்த புரிதலைப் பெறுவதற்காக பிரெட், மைதா போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ஈஸ்ட் என்ற பூஞ்சையை வைத்து விஞ்ஞானிகள் ஒரு விண்வெளி மாதிரிப் பரிசோதனையை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் ஆக்ஸ்ஃபோர்ட் அகாடெமிக் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, செவ்வாய் கோளின் கடினமான சுற்றுச்சூழலை ஒத்த மாதிரிகளை உருவாக்கிய ஆய்வுக் குழுவினர், அதைத் தாங்கிப் பிழைத்திருக்கக் கூடிய தன்மை ஈஸ்டுக்கு இருக்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர். செவ்வாய் கோளில் தொடர்ந்து நிகழும் விண்கல் மோதல் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. அதே அளவிலான அதிர்ச்சி அலைகளை ஈஸ்ட் பூஞ்சைகள் எதிர்கொள்ளும் சூழல், ஹிஸ்டா என்றழைக்கப்படும் ஹை-இன்டன்சிடி ஷாக் டியூப் (HISTA) என்ற கருவி மூலம் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் உள்ள முனைவர் பாலமுருகன் சிவராமனின் ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்டது. அதோடு, செவ்வாய் கோளில் உள்ள மண்ணில் காணப்படும் நச்சு வேதிப்பொருளான சோடியம் பெர்க்ளோரேடை ஈஸ்ட் எதிர்கொள்ளக் கூடிய சூழலையும் விஞ்ஞானிகள் ஏற்படுத்தினர். பட மூலாதாரம், Dr Bhalamurugan Sivaraman படக்குறிப்பு, செவ்வாய் கோள் மீது விண்கற்கள் மோதுவதால் ஏற்படும் தாக்கத்தைப் பிரதிபலிக்கும் அதிர்வுகளை உருவாக்க உதவிய ஹிஸ்டா கருவி செவ்வாய் கோளின் வளிமண்டலத்தில், அதன் சுற்றுச்சூழலில் பல சவால்கள் உள்ளன. "அப்படிப்பட்ட இரண்டு சவால்கள் மீது கவனம் செலுத்தி இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒன்றுதான் செவ்வாயில் ஏற்படும் அதிர்வுகளை ஒத்த பரிசோதனை" என்று விவரித்தார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். அதுகுறித்து எளிமையாக விளக்கிய அவர், "செவ்வாய்க் கோளினுடைய வளிமண்டலம் பூமியைவிட மிகக் குறைவான அடர்த்தியுடன் இருக்கும். அதனால் தடையின்றி விண்கற்கள் செவ்வாயின் மேற்பரப்பில் மோதும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கும். எனவே, ஒளியைவிட 5.6 மடங்கு அதிக வேகத்தில் விண்கல் மோதல் நிகழ்வதை ஒத்த கடுமையான அதிர்வுகளை ஈஸ்ட் பூஞ்சைகள் எதிர்கொள்ளும் சூழல் உருவாக்கப்பட்டது," என்றார். மேற்கொண்டு பேசியவர், "மற்றுமொரு சூழ்நிலையில், செவ்வாய் மண்ணில் காணப்படும் சோடியம் பெர்க்ளோரைட் என்ற நச்சு வேதிமத்தைக் கொண்டு ஆய்வு செய்தனர். இந்த வேதிமம் குறிப்பாக, நீருடன் ஒட்டாத வேதிப் பொருள்களுடன் வினைபுரியும். அப்படி வினைபுரிவது, உயிரினங்களின் செல்களை உடைத்துவிடும். அத்தகைய உயிரி செல்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வேதிமத்துடன் ஈஸ்டுகள் பரிசோதிக்கப்பட்டன," என்று விளக்கினார். இந்த இரண்டு சவால்களையும் தனித்தனியாகவும் ஒருசேரவும் ஈஸ்ட் பூஞ்சைகளை எதிர்கொள்ள வைத்து விஞ்ஞானிகள் பரிசோதித்தனர். அப்போது அவற்றின் எண்ணிக்கை பெருகுவதன் வேகம் குறைந்ததே தவிர அவை இறக்கவில்லை என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. பட மூலாதாரம், Riya Dhage படக்குறிப்பு, செவ்வாயின் சூழலை ஒத்த அழுத்தம் ஏற்பட்டபோது, புகைப்படத்தில் மஞ்சள் நிறப் புள்ளிகளாகத் தெரியும் ஆர்.என்.பி கவசங்களை உருவாக்கித் தமது எம்.ஆர்.ஏ மூலக்கூறுகளை ஈஸ்டுகள் பாதுகாத்துக் கொண்டது ஆய்வில் தெரிய வந்துள்ளது. செவ்வாய் கோளில் ஈஸ்ட் பூஞ்சை உயிர் பிழைத்தது எப்படி? ஒற்றை செல் பூஞ்சைகளான ஈஸ்டுகள் செவ்வாய் கோளின் சுற்றுச்சூழலை ஒத்திருக்கும் மிகக் கடினமான சவால்களைக்கூட சமாளித்து உயிர் பிழைத்திருந்தது எப்படி? அதற்கான காரணம், "இந்த ஈஸ்டுகள் தங்களுக்குள் ஆர்.என்.பி எனப்படும் புரதத்தை சிறிய, துளி போன்ற கட்டமைப்புகளாக, ஒரு கவசத்தைப் போல் உருவாக்கிக் கொண்டதே" என்று ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இந்திய அறிவியல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, "இந்த ஆர்.என்.பி கவசங்கள் அணுவின் சாதாரண பாகங்களைப் போல் இருக்கவில்லை. அது ஒரு நீர்த்துளியை ஒத்த வடிவில் இருந்தது. "அணுவானது ஒரு புற அழுத்தத்தை எதிர்கொள்ளும்போது, அதன் மரபணு செயல்முறைகளைக் கடத்தும் எம்.ஆர்.என்.ஏ மூலக்கூறுகளைச் சுற்றி இந்த ஆர்.என்.பி புரதத் துளிகள் ஒரு கவசம் போல் உருவாகின. அதன் மூலம் ஈஸ்டுகள் செவ்வாய் கோளின் கடினமான சூழலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்பட்டன." இத்தகைய பாதுகாப்புக் கவசங்களை உருவாக்கிக் கொள்ளாத ஈஸ்டுகள் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறு மிக மிகக் குறைவு எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Swati Lamba படக்குறிப்பு,முனைவர் புருஷர்த் ராஜ்யகுரு (வலது), ஆய்வாளர் ரியா காதே (இடது) அதேவேளையில், "இந்த ஆர்.என்.பி கவசத் துளிகள், தட்பவெப்ப நிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு, ஆக்சிஜனேற்ற அயற்சி போன்ற பல காரணங்களின் விளைவாகவும் உருவாகலாம்" ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. இந்நிலையில், செவ்வாய் கோளை ஒத்த சவால் மிகுந்த சுற்றுச்சூழலை எதிர்கொண்டதன் விளைவாக, அதிலிருந்து உயிர் பிழைக்கவே ஈஸ்ட் பூஞ்சைகள் இந்தக் கவசத்தை உருவாக்கின என்ற முடிவுக்கு எப்படி வர முடியும், என்ற கேள்வி எழுகிறது. அதற்குப் பதிலளித்த முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன், "ஈஸ்ட் பூஞ்சைகள் இந்த ஆர்.என்.பி. கவசங்களை பல்வேறு கடினமான சூழ்நிலைகளைச் சமாளிக்க உருவாக்கலாம். ஆனால், அவை பரிசோதிக்கப்படும் நேரத்தில் எப்படிப்பட்ட சவாலை எதிர்கொள்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். இந்தப் பரிசோதனையில் அவை செவ்வாய் கோளின் விண்கல் தாக்கம் மற்றும் நச்சு வேதிம அபாயத்தை எதிர்கொண்டன. அதுதவிர வேறு அழுத்தங்களை அவை எதிர்கொள்ளவில்லை. எனவே, அவற்றுக்கு எதிர்வினையாகவே அவை ஆர்.என்.பி கவசங்களை உருவாக்கின என்ற முடிவுக்கு வரலாம்," என்று குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி, பூஞ்சையில் தோன்றும் இந்தச் சிறிய துளி போன்ற கவசங்கள், "விண்வெளி போன்ற சூழ்நிலைகளில் உயிர்கள் இருக்கும்போது அவற்றின் செல்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறிக்க உதவும் உயிரியல் அளவுகோலாகப் பயன்படுத்தப்படலாம்" என்றும் அவர் கூறினார். படக்குறிப்பு, முனைவர் பாலமுருகன் சிவராமன் (இடது), முனைவர் அரிஜித் ராய் (வலது) செவ்வாய் கோளில் ஈஸ்ட் பிழைத்திருப்பதால் மனிதர்களுக்கு என்ன பயன்? இந்த ஆய்வு மனிதர்கள் விண்வெளியில் உயிர் பிழைக்க ஏதுவான வழிகளைக் கண்டறிய உதவுமா? ஈஸ்ட் பூஞ்சையை செவ்வாய் கோளின் சுற்றுச்சூழல் மாதியில் பரிசோதிப்பதால் என்ன பயன்? ஆய்வுக் குழுவைச் சேர்ந்தவரும் ஆமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்தின் பேராசிரியருமான முனைவர் பாலமுருகன் சிவராமன் இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசினார். அப்போது அவர், "நிச்சயமாக இந்த ஆய்வு எதிர்காலத்தில் மனிதர்களின் பல விண்வெளித் திட்டங்களுக்கு உதவும். இது இந்தியாவின் விண்வெளித் திட்டங்களுக்கு மிகவும் முக்கியமானது" எனக் கூறினார். செவ்வாய் கோளில் ஒரு உயிர் பிழைத்திருக்கப் பல வகை சவால்கள் இருப்பதாகக் கூறிய அவர், "அவற்றில் சில சவால்களான விண்கல் மோதல் மற்றும் நச்சு வேதிமத்துடனான எதிர்வினை இந்த ஆய்வில் பரிசோதிக்கப்பட்டன" என்றும் அவற்றில் சாகாமல் ஈஸ்டுகள் பிழைத்து இருந்ததாகவும் கூறினார். ஆனால், "மனிதர்கள் விண்வெளியில் பிழைத்திருப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வதற்கு, மேலும் பல கட்டங்களில் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகளில் இது ஒரு துளி மட்டுமே" என்றும் அவர் குறிப்பிட்டார். அதோடு, வான் உயிரியல், வான் வேதியியல் ஆகிய துறைகளில் இந்தியா ஆரம்ப நிலையிலேயே இருப்பதாகக் கூறிய முனைவர் பாலமுருகன், அதில் இன்னும் மேம்படுவதன் மூலம் நாம் பலவற்றைத் தெரிந்துகொள்ள முடியும்," என்றும் தெரிவித்தார். விண்வெளி சூழலில் ஆய்வு செய்ய ஈஸ்ட் பூஞ்சையை தேர்வு செய்தது ஏன்? விண்வெளியில் உயிர்கள் பிழைத்திருக்க முடியுமா என்பதை ஆராய ஈஸ்ட் போன்ற மிகச் சாதாரணமான பூஞ்சை நுண்ணுயிரி உதவக்கூடும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த ஆய்வில், சாக்கரோமைசெஸ் செரிவிசியே (Saccharomyces cerevisiae) என்ற வகையைச் சேர்ந்த ஈஸ்டுகள் பயன்படுத்தப்பட்டன. இந்த ஆராய்ச்சிக்கு அது தேர்வு செய்யப்பட மிக முக்கியக் காரணம் இருந்ததாகக் கூறுகிறார் ஆய்வுக் குழுவைச் சேர்ந்தவரும் இந்திய அறிவியல் நிறுவனத்தின் இணை பேராசிரியருமான புருஷர்த் ராஜ்யகுரு. இந்த ஆய்வில் பரிசோதிக்கப்பட்ட குறிப்பிட்ட வகை ஈஸ்ட், ஒரு ஒற்றை செல் பூஞ்சைதான். இருந்தாலும், "அது மனித உடலில் நடப்பவை குறித்துப் பல பயனுள்ள தகவல்களை வழங்குகிறது. அதில் நடக்கக்கூடிய பல செயல்பாடுகள் நம் உடலிலும் நடக்கின்றன. அதனால்தான் இதை வைத்து விண்வெளியில் வாழும் திறனை பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டது." மேலும் அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய பேராசிரியர் ராஜ்யகுரு, "செவ்வாய் கோளின் அழுத்தமான சூழலில் ஈஸ்ட் பூஞ்சைகள் தமது ஆர்.என்.ஏ மற்றும் புரதங்களை எவ்வாறு பாதுகாக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வது, உயிர்கள் பூமிக்கு வெளியே விண்வெளியின் பிற பகுதிகளில் பிழைத்திருக்க முடியுமா என்பதைப் புரிந்துகொள்ள எதிர்காலத்தில் உதவக்கூடும்" என்று விளக்கினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1e3dxvlylpo
  15. புதுக்குடியிருப்பில் ஆடை உற்பத்தி நிலையத்துக்கு அபராதம் 01 Nov, 2025 | 05:23 PM முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகரத்தை அண்டிய பிரபலமான ஆடை உற்பத்தி நிறுவனமொன்றில் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகளை சமையலுக்காக தயாராக வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதில் ரூபா 30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டபோது, சமையலறையில் பழுதடைந்த மற்றும் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகள் சமையலுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது. இது தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த நிறுவனம் மீது 30,000 ரூபா அபராதம் விதித்ததுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்செயல்கள் மீண்டும் இடம்பெறாதவாறு எச்சரிக்கையுடன் விடுவித்தார். இச்சோதனை நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்களான கோகுலன், பிரதாஸ் மற்றும் றொஜிஸ்ரன் உள்ளிட்டவர்களினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/229249
  16. க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 01 Nov, 2025 | 02:49 PM 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (04) நள்ளிரவு முதல் தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் காலம் நிறைவடையும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்று பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் வெள்ளிக்கிழமை (05) வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/229229
  17. “முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 1076 பேர் கைது! 01 Nov, 2025 | 02:45 PM ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை 9031) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 1076 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 1072 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் 407 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 354 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன் 43 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 268 பேரும், போதை மாத்திரைகளுடன் 41 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 20 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/229230
  18. 01 Nov, 2025 | 01:00 PM அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் போது காயம் காரணமாக சிட்னியில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இந்திய அணியின் துணைத் தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர், தற்போது சிகிச்சை முடித்து அங்கிருந்து வெளியேறியுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற 3 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது, அவுஸ்திரேலிய விக்கெட்காப்பாளர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை அருமையாகக் கேட்ச் பிடிப்பதற்காகப் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்தபோது, ஷ்ரேயாஸ் அய்யரின் இடது விலாப்பகுதி மைதானத்தில் பலமாக அடிபட்டது. வலியால் துடித்த அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார், அதன் பிறகு அவரால் களத்தடுப்பு செய்ய வர முடியவில்லை. ஆரம்பத்தில் அவர் இடது கீழ் விலா எலும்புப் பகுதியில் காயமடைந்திருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால், சில 'ஸ்கேன்' பரிசோதனைகளுக்குப் பிறகு, காயம் விலா எலும்பையும் தாண்டி மண்ணீரலில் கீறலை ஏற்படுத்தி, அதனால் உள்ளுறுப்பு இரத்தக்கசிவு (Internal Bleeding) உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அணியின் வைத்தியரின் அறிவுறுத்தலின் பேரில் சிட்னியில் உள்ள ஒரு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்குச் சிறப்பு மருத்துவக் குழுவினர் உடனடியாக இரத்தக்கசிவைத் தடுப்பதற்கான சிகிச்சைகளை அளித்தனர். தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஷ்ரேயாஸ் அய்யர், தற்போது உடல்நிலை சீரானதையடுத்து (Condition is Stable) வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை முடித்து வெளியேறியுள்ளார். அவர் பூரண குணமடைந்து விரைவில் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/229223
  19. 01 Nov, 2025 | 04:30 PM சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பல கோரிக்கைகளை முன்வைத்து சனிக்கிழமை (01) யாழ்ப்பாண நகரப் பகுதியில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. செம்மணி புதைகுழி விவகாரம், பயங்கரவாத தடைச் சட்ட விவகாரம், பட்டலந்தை வதை முகாம் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோரது விவகாரம், ஏனைய புதைகுழி விவகாரம் போன்றவற்றுக்கு உடனடி விசாரணைகளையும், நீதியையும் வேண்டி இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பி, "அனைத்து காணாமல் ஆக்கல்களுக்கும் இப்போதாவது நீதியை வழங்கு, செம்மணியை மீண்டும் புதைக்க இடம்கொடுக்காமல் உண்மையை வெளிப்படுத்து, மீண்டும் மீண்டும் அடக்குமுறைகள் வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனே நீக்கு, அனைத்து தேசிய இனங்களுக்குமான உரிமையை உறுதிசெய்" என்ற வாசகங்களை எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பௌத்த மதகுருக்கள், சமவுரிமை இயக்கத்தினர், வசந்த முதலிகே, சிங்கள மக்கள், தமிழ் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/229243
  20. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் கட்டுரை தகவல் லானா லாம் பிபிசி செய்தியாளர் 42 நிமிடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவிற்கு சென்ற ஒரு கொகுசு கப்பல், அதில் பயணித்த மூதாட்டி ஒருவரை அங்கேயே விட்டுவிட்டு கிளம்பிவிட்டது. அதன் பிறகு அந்த மூதாட்டி தீவில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். லிசார்ட் தீவிற்கு பயணிகளை அழைத்துச் சென்ற 'கோரல் அட்வென்ச்சர்' என்ற கப்பலில் 80 வயதான சுசான் ரீஸ் பயணித்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள சுசான் ரீஸின் மகள், "கப்பல் நிர்வாகத்தின் கவனக்குறைவு மற்றும் அவர்களுக்கு அடிப்படை அறிவு இல்லாததே'' தனது தாயின் மரணத்திற்குக் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து 'கோரல் அட்வென்ச்சர்' கப்பலின் '60 நாள்' பயணம் நிறுத்தப்பட்டுள்ளது. "சுசான் ரீஸின் துயர மரணம் மற்றும் அதற்கு முன்னர் கப்பலில் கண்டறியப்பட்ட இயந்திர சிக்கல்கள் காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோரல் அட்வென்ச்சர் கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த விஷயம் புதன்கிழமை அன்று தெரிவிக்கப்பட்டது" என கப்பல் நிறுனவனமான கோரல் எக்ஸ்பெடிஷன்ஸ்-இன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஃபைஃபீல்ட் தெரிவித்துள்ளார். "பயணிகளுக்கு டிக்கெட்டிற்கான முழுப் பணமும் திரும்ப வழங்கப்படும் என்றும், தனி விமானங்கள் மூலம் பயணிகளை திருப்பி அனுப்புவதற்கான பணிகளை கோரல் எக்ஸ்பெடிஷன்ஸ் நிறுவனம் ஒருங்கிணைத்து வருவதாகவும்" அவர் ஒரு அறிக்கை மூலம் கூறியுள்ளார். பட மூலாதாரம், Supplied படக்குறிப்பு, சுசான் ரீஸ் என்ன நடந்தது? கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் 26) கிரேட் பேரியர் ரீஃபில் உள்ள லிசார்ட் தீவில் உயிரிழந்த நிலையில் சுசான் ரீஸ்-இன் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதற்கு முந்தைய நாள் சனிக்கிழமையன்று, அவர் தனது சக பயணிகளுடன் தீவில் நடைபயணம் மேற்கொண்டிருந்தார். ஆனால் சில மணிநேரங்களுக்குப் பிறகு கப்பல் புறப்பட்டபோது அதில் அவர் இல்லை என்பதை யாரும் அறியவில்லை. கோரல் அட்வென்ச்சர் கப்பல், தீவில் இருந்து கிளம்பும்போது "என் அம்மா இல்லாமல் கிளம்பியது என்ற செய்தி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிப்பதாக" உயிரிழந்தவரின் மகளான கேத்தரின் ரீஸ் கூறியுள்ளார். தனது தாய் சுறுசுறுப்பானவர், ஆரோக்கியமானவர், தோட்டப் பராமரிப்பில் ஆர்வமுள்ளவர் மற்றும் காட்டுப்பகுதிகளில் நடப்பதில் ஆர்வம் கொண்டவர் என்று அவர் விவரித்தார். "எங்களுக்குச் சொல்லப்பட்ட சில விஷயங்களிலிருந்து, கவனக்குறைவு மற்றும் அடிப்படை அறிவு இல்லாததே இல்லாததே இந்த சம்பவத்திற்கு காரணம் என தெரிகிறது," என்று அவர் கூறினார். பட மூலாதாரம், Coral Expeditions ஆஸ்திரேலியாவைச் சுற்றிப்பார்க்க 60 நாள் பயணமாக கோரல் அட்வென்ச்சர் கப்பல் இந்த வார தொடக்கத்தில் கெய்ர்ன்ஸ் நகரத்திலிருந்து புறப்பட்டது. இதில் பயணித்த நியூ செளத் வேல்ஸைச் சேர்ந்த சுசான் ரீஸ், இந்தப் பயணத்தின் முதல் நிறுத்தமான லிசார்ட் தீவில் இருந்தபோது உயிரிழந்துள்ளார் என்று தெரிகிறது. பல்லாயிரக்கணக்கான டாலர்களை செலுத்தி இந்தக் கப்பலில் பயணிக்கும் பயணிகள், ஒரு நாள் பயணத்திற்காக பிரத்யேக தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பயணிகளுக்கு மலையேற்றம் அல்லது ஸ்நோர்கெல்லிங் என இரண்டு விருப்பத்தெரிவுகள் இருந்தன. தீவின் மிக உயரமான சிகரமான குக்ஸ் லுக்கிற்கு சுசான் நடந்து செல்ல முடிவு செய்து மலையேற்றக் குழுவில் சேர்ந்தார். இருப்பினும் அவருக்கு ஓய்வு தேவைப்பட்டதால் குழுவிடமிருந்து பிரியும் சூழல் ஏற்பட்டது. "காவல்துறை அளித்த தகவலில் இருந்து நாங்கள் புரிந்துகொண்டது என்னவென்றால், அன்று வெப்பம் அதிகமாக இருந்துள்ளது, மலை ஏறும் போது அம்மாவின் உடல்நிலை சரியில்லாமல் போனது," என்று கேத்தரின் கூறினார். "அவரை தனியாக கீழே செல்லும்படி கூறியிருக்கின்றனர். பின்னர் கப்பல் கிளம்பும்போதும் பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிடாமல், அம்மாவை விட்டுவிட்டு சென்றுள்ளனர்." "இதில் ஏதோ ஒரு கட்டத்தில், அல்லது பிறரிடமிருந்து பிரிந்த சிறிது நேரத்திலேயே, தனியாக இருந்த அம்மா இறந்துவிட்டார்." "அம்மாவின் உயிரைக் காப்பாற்ற நிறுவனம் என்ன செய்திருக்க வேண்டும் என்பது விசாரணையில் தெரியவரும்" என்று நம்புவதாக கேத்ரின் கூறினார். ஆஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு ஆணையம்(Amsa), இந்த மரணம் குறித்து விசாரித்து வருவதாகவும், கப்பல் பணியாளர்களைச் சந்தித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணிக்கு காணாமல் போன மூதாட்டி குறித்து கப்பலின் கேப்டன் முதலில் தகவல் தெரிவித்ததாக Amsa செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தகவல் கிடைத்த சில மணி நேரத்தில், பயணியைத் தேடி தேடல் குழு ஒன்று தீவுக்குத் சென்றது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தேடும் முயற்சிகள் நிறுத்தப்பட்டாலும், பின்னர் ஒரு ஹெலிகாப்டர் திரும்பி வந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சுசானே ரீஸ்-இன் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. புதன்கிழமை (அக்டோபர் 29) அன்று பேசிய, கோரல் எக்ஸ்பெடிஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் ஃபிஃபீல்ட், "சுசானே ரீஸ்-இன் மரணத்திற்கு நிறுவனம் 'மிகவும் வருந்துவதாகவும்', ரீஸ் குடும்பத்திற்கு தங்கள் ஆதரவை வழங்குவதாகவும்" கூறினார். "குயின்ஸ்லாந்து காவல்துறை மற்றும் பிற அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம், அவர்களின் விசாரணைக்கு உதவுகிறோம். விசாரணை முடியும் வரை நாங்கள் எந்தவிதக் கருத்துகளையும் கூற முடியாது" என்று மார்க் ஃபிஃபீல்ட் கூறினார். நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி, கோரல் அட்வென்ச்சர் கப்பல் 46 பணியாளர்களுடன் 120 விருந்தினர்கள் பயணிக்கும் வசதி கொண்டது. இது ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் உள்ள தொலைதூரப் பகுதிகளை அணுகுவதற்காக வடிவமைக்கப்பட்டது. இந்தக் கப்பலில் பகல்நேர சுற்றுலாக்களுக்காக பயணிகளை அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் 'டெண்டர்ஸ்' எனப்படும் சிறிய படகுகள் பொருத்தப்பட்டுள்ளன. இது போன்ற சம்பவங்கள் அரிதானவை என்றும், மேலும் பயணக் கப்பல்களில் எந்தப் பயணிகள் ஏறுகிறார்கள் அல்லது இறங்குகிறார்கள் என்பதைப் பதிவு செய்யும் அமைப்புகள் உள்ளன என்றும் பயண வலைத்தளமான செய்ல்அவேஸ்-இன் (Sailawaze) 'க்ரூஸ்' பிரிவு ஆசிரியர் ஹாரியட் மாலின்சன் பிபிசியிடம் தெரிவித்தார். "பயணக் கப்பல் நிறுவனங்கள் இந்த நடைமுறைகளை மிகவும் தீவிரமாக நடைமுறைப்படுத்துகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. தற்போது நடைபெற்ற சம்பவம் மிகவும் அதிர்ச்சியூட்டும் ஒன்று என்றாலும், இது அரிதான நிகழ்வாகும்" என்று மாலின்சன் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp85jk2znvno
  21. 01 Nov, 2025 | 12:34 PM இலங்கை மற்றும் ஜப்பானிய கடற்படை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டுப் புறப்பட்ட ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO, வெள்ளிக்கிழமை (31) மேற்குக் கடலில் இலங்கை கடற்படைக் கப்பலான சயுரவுடன் கூட்டு கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டது. இந்தக் கூட்டு கடற்படைப் பயிற்சியின் போது (PASSEX), கப்பல்கள் வரிசையில் நகர்வது, கப்பல்களுக்கிடையே செய்திப் பரிமாற்றம் மற்றும் கடற்படை விமான நடவடிக்கைகள் போன்ற கடற்படைப் பயிற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, கப்பல்களுக்கு இடையே மரியாதைகள் செலுத்திய பின்னர் பயிற்சி முடிவடைந்தது. மேலும், இத்தகைய உத்தியோகபூர்வ வருகைகள் இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே மேம்பட்ட கடற்படை ஒத்துழைப்பு மற்றும் இயங்குதன்மையை பெரிதும் எளிதாக்கும், மேலும் கடல் பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களுக்கு பதிலளிப்பதற்கான ஒரு கூட்டு அணுகுமுறையையும் எளிதாக்கும். https://www.virakesari.lk/article/229221
  22. Published By: Vishnu 01 Nov, 2025 | 02:27 AM பின்தங்கிய சமூகங்களுக்கும் முக்கிய சமூக, பொருளாதார நிலையங்களுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கென ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 90 மில்லியன் டொலர் கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் நிதியமைச்சு கைச்சாத்திட்டுள்ளது. பின்தங்கிய பிரதேசங்களுக்கான சுமார் 500 கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி, காலநிலை சவால்களுக்கு ஈடுகொடுப்பதற்கு ஏற்றவாறானதும் பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு நேயமான வசதிகளை மேம்படுத்தல் என்பவற்றுக்கு இந்தக் கடன் நிதி பயன்படுத்தப்படும். அத்தோடு இந்நிதி தேசிய ரீதியில் சுமார் 21 கிலோமீற்றர் நெடுஞ்சாலைகளின் புனரமைப்பு மற்றும் பின்தங்கிய பகுதிகளில் சுமார் 100 கிலோமீற்றர் வீதிகளின் பராமரிப்பு என்பவற்றுக்கும் உதவும் என நிதியமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. மேற்படி கடன் உதவிக்கான ஒப்பந்தத்தில் இலங்கையின் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பில் இலங்கை;கான அதன் பணிப்பாளர் டக்காஃபுமி கடானோவும் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/229201
  23. பட மூலாதாரம், Getty Images 31 அக்டோபர் 2025 பருவமழை மேகங்கள் கூடி மழை பெய்யத் தொடங்கிவிட்டால் போதும், பல வீடுகளில் ஈசல்கள் கூட்டம் கூட்டமாக மொய்த்துவிடும். அப்படி மழையின்போது வீட்டு உள்ளேயும் வீட்டைச் சுற்றியும் வரும் ஈசல்களைப் பிடித்து இறக்கைகளை பிய்த்துவிட்டு மூங்கில் கூடை ஒன்றில் சேகரிப்பதை ஊர்ப்புறங்களில் பார்த்திருப்போம். ஒரு கூடை நிறைய ஈசல் சேர்ந்த பிறகு அவற்றை வாணலியில் நன்கு வறுத்தெடுப்பார்கள். அப்போதே, ஈசல்களின் தலை தனியே உடல் தனியே பிரிந்துவிடும். பின்னர், தலை மற்றும் மீதமுள்ள இறக்கையை முறம் கொண்டு புடைத்து பிரித்துவிட்டு, வறுக்கப்பட்ட ஈசலை பொறியில் கலந்து சாப்பிடுவது, பொடியாக்கி உணவுடன் சேர்த்துக் கொள்வது எனப் பல வடிவங்களில் அது உணவாகிறது. ஆனால், இந்த ஈசல்கள் எப்போதும் மழை நேரத்தில் மட்டுமே வருவது ஏன்? அவற்றின் மொத்த ஆயுளே ஒருநாள்தான் என்பது உண்மையா? அவற்றை உணவாகச் சாப்பிடுவது நல்லதா? அதுகுறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள பூச்சியியல் ஆய்வாளர்களிடம் பேசினோம். பட மூலாதாரம், Getty Images ஈசல்கள் எங்கிருந்து வருகின்றன? ஈசல் என்பது ஒரு தனிப்பட்ட பூச்சியினம் கிடையாது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. உண்மையில், இறக்கைகள் முளைத்த கரையான்களே ஈசல்கள். அவ்வளவு ஏன், கரையான்களின் அடுத்த சந்ததிகள் பிறப்பதற்கே ஈசல்கள்தான் அடிப்படைக் காரணமாகத் திகழ்கின்றன. கரையான்கள், எறும்புகளைப் போலவே ஒரு சமூகமாக வாழும் பண்புடையவை. ஒரு புற்றில் சில ஆயிரங்கள் முதல் பல லட்சங்கள் வரை என்ற எண்ணிக்கையில் கரையான்கள் வாழக்கூடும். தேனீக்கள், எறும்புகள் போன்ற கூட்டு சமுதாய வாழ்க்கை முறையைக் கொண்ட பிற பூச்சிகளைப் போலவே கரையான்களிலும் ஒரு புற்றில் ராணி, ராஜா, வேலைக்கார கரையான்கள், காவல்கார கரையான்கள் ஆகிய நான்கு பிரிவுகளாக அவை வாழ்கின்றன. அதில், அந்தப் புற்று உருப்பெறக் காரணமாக இருக்கும் ராணி கரையான் நிமிடத்திற்கு 25 முட்டைகள் முதல் நாளொன்றுக்குச் சில ஆயிரம் முட்டைகள் வரை இடுகின்றன. படக்குறிப்பு, பூச்சியியல் ஆய்வாளர் முனைவர் பிரியதர்ஷன் தர்ம ராஜன் தேனீக்கள், எறும்புகள் போன்ற சமூக வாழ்வுமுறை கொண்ட பிற பூச்சிகளில் இல்லாத ஒரு தனித்துவம் கரையான்களுக்கு உள்ளது. "பொதுவாக, இனப்பெருக்க செயல்பாடுகள் முடிந்தவுடன் ஆண் எறும்பு அல்லது ஆண் தேனீ இறந்துவிடும். ஆனால், கரையான்களைப் பொறுத்தவரை ராணி, ராஜா இரண்டும் சேர்ந்துதான் ஒரு புற்றையே உருவாக்குகின்றன" என்றார், பெங்களூருவில் உள்ள அசோகா சுற்றுச்சூழல் ஆய்வு அறக்கட்டளையைச் சேர்ந்த பூச்சியியலாளர் முனைவர் பிரியதர்ஷன் தர்ம ராஜன். மேலும், "ராணி கரையானின் உடலில் விந்தணுவை சேகரித்து வைக்கும் தன்மை இல்லை என்பதால், ராஜா கரையான் அதனுடனே இருந்து பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடும்" என்றும் விளக்கினார். அதுமட்டுமின்றி, ஒரு புற்றில் முதன்மையாக ராணி, ராஜா இருப்பதைப் போலவே, இரண்டாவது, மூன்றாவது நிலைகளில் சில ஆண் மற்றும் பெண் கரையான்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். "ஒருவேளை புற்றின் முக்கிய அங்கமாக இருக்கும் ராஜாவோ, ராணியோ இறந்துவிட்டால், அவர்களின் இடத்தை நிரப்பிக் கொள்வது இந்த இரண்டாம் நிலை ஆண், பெண் கரையான்களின் வேலையாக இருக்கும். அதன்மூலம், ஒரு புற்று பல்லாண்டுக் காலத்திற்குப் பற்பல சந்ததிகளைக் கொண்டு செழுமை பெற அவற்றின் சமூகக் கட்டமைப்பு உதவுகிறது." பல கரையான் புற்றுகள் நன்கு உயர்ந்து நிற்பதைப் பல இடத்தில் பார்த்திருப்போம். இனி அதைப் பார்க்கையில், அந்தப் புற்று அவ்வளவு அதிகமான சந்ததிகளைப் பார்த்துள்ளது எனப் புரிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட சுவாரஸ்யமான கரையான் புற்று உருப்பெறுவதில் முக்கியப் பங்கு வகிப்பதே மழைக் காலத்தில் கூட்டம் கூட்டமாக வீடுகளை மொய்க்கும் ஈசல்கள்தான். பட மூலாதாரம், Getty Images ஈசல்கள் மழை நேரத்தில் மட்டும் வருவது ஏன்? முனைவர் பிரியதர்ஷனின் கூற்றுப்படி, ஒரு புற்றில் அதன் தோற்றம் மற்றும் நீட்சிக்குக் காரணமாக இருக்கும் ராணி, ராஜா கரையான்கள் மட்டுமின்றி, மேலும் பல ஆண், பெண் கரையான்கள் இனப்பெருக்க திறனுடன் இருக்கும். அவை, "மழைக் காலத்தின்போது வெளியேறி வந்து உயரப் பறந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. அப்படி இறக்கைகளுடன் புற்றுகளில் இருந்து வெளியேறி வரும் கரையான்களையே ஈசல்கள் என அழைக்கிறோம்," என்று விவரித்தார் அவர். இதுகுறித்து விரிவாகப் பேசிய பூச்சியியல் ஆய்வாளர் சஹானாஸ்ரீ ராமகிருஷ்ணய்யா, "இனப்பெருக்கம் செய்து புதிய புற்றுகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஈசல்கள் தாங்கள் ஏற்கெனவே வாழ்ந்து வந்த புற்றுகளை விட்டு வெளியே வருகின்றன," என்றவர், அவை அதற்கு உகந்த காலமாக மழைக் காலத்தை தேர்வு செய்வது ஏன் என்பது குறித்தும் விளக்கினார். மழைக்காலம் மிகவும் ஈரப்பதம் நிறைந்திருக்கும். ஈரப்பதம் மற்றும் வெப்பத்தின் கலவை அவற்றுக்கு உகந்த சூழ்நிலையை வழங்குவதாகக் கூறுகிறார் சஹானாஶ்ரீ. மழைக்காலம் ஈசல்களுக்கு மட்டுமின்றி பெரும்பாலான உயிரினங்களின் இனப்பெருக்க காலமாகவும் இருக்கிறது. மழையின்போது அதிகளவில் உணவு கிடைப்பதும் அதற்கான ஒரு காரணமாக இருக்கிறது. இவற்றோடு ஈசல்களைப் பொறுத்தவரை, "மழைக்குப் பிறகு நில அமைப்பு ஈரப்பதம் கொண்டு, மண் நிறைவுற்று இருக்கும். அதன் விளைவாக மண் மென்மையான தன்மையில் இருப்பதால், புதிதாக இணைந்த கரையான் ஜோடிகள் துளையிட்டுப் புதிய புற்றைக் கட்டுவது எளிதாகிறது," என்று விவரித்தார் சஹானாஸ்ரீ. அவரிடம் ஈசல்களின் ஆயுள் ஒருநாள்தான் என்று கூறப்படுவது குறித்துக் கேட்டபோது, "அது உண்மையில்லை" என்று தெரிவித்தார். "பொதுவாக பல ஆயிரம் ஜோடிகள் புற்றை விட்டு இனப்பெருக்கம் செய்யக் கிளம்பினாலும், இறப்பு விகிதம் அதிகம் என்பதால் அதில் குறைந்த அளவிலானவையே உயிர் பிழைத்து, புற்று அமைக்கின்றன. எனவே பல நூறு ஈசல்கள் விரைவில் மடிவதைப் பார்த்ததன் அடிப்படையில் இந்தக் கட்டுக்கதை உருவாகியிருக்கலாம்." படக்குறிப்பு, பூச்சியியல் ஆய்வாளர் சஹானாஸ்ரீ ராமகிருஷ்ணய்யா ஈசல்களை மக்கள் உணவாகச் சாப்பிடலாமா? புற்றை விட்டு வெளியே வரும் ஈசல்களின் இறப்பு விகிதம் அதிகளவில் இருப்பதற்கு, பறவைகள், வேட்டையாடிப் பூச்சிகள், தவளை போன்ற வேட்டையாடி உயிரினங்கள் பலவும் காரணமாக இருக்கின்றன. அதேவேளையில் அவற்றின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கு மனிதர்களும் ஒரு காரணம் என்கிறார் பூச்சியியலாளர் முனைவர் பிரியதர்ஷன். இந்தியாவின் பல பகுதிகளில் ஈசல்களை உணவாகக் கொள்ளும் பழக்கம் பல்வேறு கலாசாரங்களில் இருப்பதாகக் கூறுகிறார் சஹானாஸ்ரீ. "மழை நேரத்தில் ஈசல்கள் அதிக எண்ணிக்கையில் வெளியே வரும்போது அவற்றை உணவுக்காக கிராமப்புறங்களில் மக்கள் சேகரிப்பார்கள். சில இடங்களில், அவற்றை உலர்த்தி, வறுத்து கொள்ளுப் பருப்பு போன்ற தானியங்களுடன் கலந்து பயன்படுத்துவது உண்டு." ஈசல்கள் ஒரு காலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த, சுவைமிக்க உணவாகக் கருதப்பட்டது எனக் கூறும் சஹானா, "இது கிராமப்புற உணவு மரபுகளுக்கும் நிலையான புரத மூலங்களுக்கும் இடையிலுள்ள ஆழமான தொடர்பைப் பிரதிபலிப்பதாக" குறிப்பிட்டார். ஈசல்களை உணவாகச் சாப்பிடுவது நல்லதா, அவை உண்மையாகவே புரதம் நிறைந்த உணவுதானா என்று ஊட்டச்சத்து நிபுணர் பிரியங்காவிடம் கேட்டபோது, "அவற்றை உணவாக உட்கொள்ளும் பழக்கம் பல்வேறு பகுதிகளில் இன்றளவும் உள்ளது. கோழி, ஆடு, மாடு ஆகியவற்றைச் சாப்பிடுவது போலத்தான் இவையும். எனவே, ஈசல்களை சுகாதாரமான முறையில் உட்கொள்வதால் எந்தவிதப் பிரச்னையும் இல்லை. அதோடு அவை புரதம் மிக்க உணவு எனச் சொல்லப்பட்டாலும், அதுகுறித்த அறிவியல்பூர்வ ஆய்வுகள் இந்தியாவில் இன்னும் விரிவாகச் செய்யப்படவில்லை," என்று தெரிவித்தார். இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா, ஜார்கண்ட், சட்டீஸ்கர், மேகாலயா, அசாம் போன்ற மாநிலங்களில் இன்றளவும் ஈசல்களை உணவாகப் பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y938124ylo
  24. அண்ணை, குடும்ப கட்டுப்பாடு திட்டமிட்டமுறையில் பகிரங்கமாக வெளியே தெரியாமல் நடைபெறுவதாக வாசித்த நினைவு உள்ளது.
  25. தமிழ்தேசியக் க(கா)ட்சிகள் எதிர் என்பிபி என இருக்கும் என நினைத்தால் என்பிபி எதிர் தமிழ்தேசியக் க(கா)ட்சிகள் என மாறிவிட்டதா?!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.