Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: Digital Desk 3 24 Oct, 2025 | 03:32 PM (இணையத்தள செய்திப் பிரிவு) இது கோழைத்தனம் அல்லது பின்வாங்குவதற்கான நேரமல்ல. இப்போது, முன்பை விட அதிகமாக, எந்த ஒரு நாடும் தனியாகத் தீர்க்க முடியாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உலகம் மீண்டும் உறுதிபூண வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவு பெறுவது மற்றும் இலங்கையுடனான அதன் கூட்டாண்மைக்கு 70 ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில், உலகளாவிய சவால்களின் காலத்தில் கூட்டு நடவடிக்கையின் விதமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் 2025 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் தினத்திற்காக இந்தச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். நாம் ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்.., இவை ஐக்கிய நாடுகள் சாசனத்தின் தொடக்க வரிகள் மட்டுமல்ல, அவை நாம் யார் என்பதை வரையறுக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை ஒரு நிறுவனம் என்பதை விடவும் மேலானதாகும். இது ஒரு வாழும் வாக்குறுதியாக, எல்லைகளைத் தாண்டி, கண்டங்களை இணைத்து, தலைமுறைகளுக்கு எழுச்சியூட்டுகிறது. எண்பது ஆண்டுகளாக, அமைதியைக் கட்டியெழுப்ப, வறுமை மற்றும் பசியைக் கையாள, மனித உரிமைகளை மேம்படுத்த, மற்றும் மிகவும் நிலைத்தன்மை வாய்ந்த உலகை உருவாக்க ஒன்றுபட்டு நாங்கள் உழைத்துள்ளோம். நாம் முன்னோக்கிச் செல்லும்போது, மோதல்கள் அதிகரித்தல், காலநிலைச் சீர்குலைவு, கட்டுப்பாடற்ற தொழில்நுட்பங்கள் மற்றும் நமது நிறுவனத்தின் இருப்புக்கான அச்சுறுத்தல்கள் போன்ற மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கிறோம். இது கோழைத்தனம் அல்லது பின்வாங்குவதற்கான நேரமல்ல. இப்போது, முன்பை விட அதிகமாக, எந்த ஒரு நாடும் தனியாகத் தீர்க்க முடியாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உலகம் மீண்டும் உறுதிபூண வேண்டும்.இந்த ஐக்கிய நாடுகள் தினத்தில், நாம் ஒன்றாக நின்று, உங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அசாதாரணமான வாக்குறுதியை நிறைவேற்றுவோம். “ மக்களாகிய நாம்”ஒன்றுபட்டுச் செயற்படுவதைத் தேர்ந்தெடுக்கும் போது சாத்தியமானது என்ன என்பதை உலகிற்குக் காண்பிப்போம் எந்த அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/228574
  2. பட மூலாதாரம், Anadolu via Getty Images படக்குறிப்பு, சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ, செயற்கை நுண்ணறிவில் (AI) தனது முதலீட்டில் இருந்து வருமானம் ஈட்டவும், அதேசமயம் வேகமாக வளர்ந்து வரும் தன்னுடைய பயனர் தளத்தை பயன்படுத்தவும் புதிய வழிகளைத் தேடி வருகிறது. 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் மிகவும் பிரபலமான பிரவுசரான கூகுள் குரோமைப் போன்ற போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் புதிய 'அட்லஸ்' எனும் வெப் பிரவுசரை ஓபன்ஏஐ செவ்வாயன்று அறிமுகப்படுத்தியுள்ளது. சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ, செயற்கை நுண்ணறிவில் (AI) தனது முதலீட்டில் இருந்து வருமானம் ஈட்டவும், அதேசமயம் வேகமாக வளர்ந்து வரும் தன்னுடைய பயனர் தளத்தை பயன்படுத்தவும் புதிய வழிகளைத் தேடி வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது அட்லஸ் அறிமுகமாகியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், ஓபன்ஏஐ தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன் இதுகுறித்து பேசுகையில், சாட்ஜிபிடியின் வாராந்திர ஆக்டிவ் பயனர்கள் 800 மில்லியனாக உயர்ந்துள்ளதாகவும், இது பிப்ரவரியில் 400 மில்லியனாக இருந்ததாகவும் கூறினார். அட்லஸ் மூலம், பயனர்கள் இணையத்தில் எவற்றையெல்லாம் தேடுகிறார்கள் என்பது குறித்த தரவுகளைச் சேகரித்து, அவர்களின் இணைய வாழ்க்கையில் மேலும் பல பகுதிகளில் ஓபன்ஏஐ விரிவடைய உள்ளது. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, ஓபன்ஏஐ தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன் இதன் முக்கிய அம்சங்கள் என்ன? அட்லஸ் பிரவுசர், இணைய பயன்பாட்டில் செயற்கை நுண்ணறிவை (AI) இணைக்க முயல்கிறது. வழக்கமான அட்ரஸ் பாரை (address bar) நீக்கி, "சாட்ஜிபிடியை மையமாகக் கொண்டு" அட்லஸ் உருவாக்கப்பட்டுள்ளதாக சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார். பயனர்கள் எந்த வலைப்பக்கத்திலும் சாட்ஜிபிடி சைட்பாரைத் திறந்து, உள்ளடக்கத்தை சுருக்கமாக அறியலாம், பொருட்களை ஒப்பிடலாம் அல்லது தரவை பகுப்பாய்வு செய்யலாம். கட்டணம் செலுத்தி பயன்படுத்தப்படும் "முகவர் பயன்முறை(Agent Mode)" வசதி மூலம், சாட்ஜிபிடியால் பயனர்களுக்காக இணையத்தில் தேடவும், வலைத்தளங்களுடன் தொடர்பு கொள்ளவும் முடியும். இதன் மூலம், பயணத்தைத் திட்டமிடுவது, ஆன்லைன் ஷாப்பிங் போன்ற வேலைகளை சாட்ஜிபிடி செய்யும். இதனை விளக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு நிகழ்வில், அட்லஸ் ஒரு சமையல் குறிப்பைக் கண்டுபிடித்து, இன்ஸ்டாகார்ட் (Instacart) மூலம் மளிகைப் பொருட்களை வாங்குவதை ஓபன்ஏஐ டெவலப்பர்கள் காட்டினர். அதேபோல் எட்சி (Etsy), ஷாபிஃபை (Shopify) போன்ற மின்வணிக தளங்களுடனும், எக்ஸ்பீடியா (Expedia), புக்கிங்.காம் (Booking.com) போன்ற சேவைகளுடனும் இணைந்து செயல்பட உள்ளதாக ஓபன்ஏஐ அறிவித்துள்ளது. "அட்லஸ் போன்ற ஏஐ பிரவுசர்கள் மிகவும் வசதியானவை. பல இணைப்புகளைத் தேடி, எது பொருத்தமானது என்று பார்க்க வேண்டியதில்லை. இப்போது வலைப்பக்கங்களின் சுருக்கத்தை எளிதாகப் பெறலாம்," என்கிறார் லண்டன் கிங்ஸ் கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு நிறுவனத் தலைவர் பேராசிரியர் எலெனா சிம்பர்ல். ஆனால், அவை எந்தளவுக்கு துல்லியமானவை என்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் "இந்த புதிய வகை ஏஐ பிரவுசர்கள், நம்பகமான வலைத்தளத்திலிருந்து வந்த தகவலையும் நம்பத்தகாத மூலத்திலிருந்து வந்த தகவலையும் வேறுபடுத்த முடியாதது ஒரு முக்கிய சிக்கலாக அமையும்" என்பதையும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம், PA Wire/PA Images இதில் ஆபத்துகள் உள்ளதா? ஓபன்ஏஐ, அட்லஸில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைச் சேர்த்துள்ளதாகக் கூறுகிறது. ஆனால், பயனர்களுக்காக இணையத்தில் செயல்படும் முகவர் (Agent) அம்சம் இன்னும் சில அபாயங்களைக் கொண்டிருப்பதாக ஒப்புக்கொள்கிறது. இந்த பாதுகாப்பு அம்சங்களின்படி, அட்லஸ் பிரவுசர் குறியீடுகளை இயக்கவோ, கோப்புகளைப் பதிவிறக்கவோ, பிற செயலிகளை அணுகவோ முடியாது. மேலும், வங்கிகள் போன்ற முக்கியமான வலைத்தளங்களில் தானாக இடைநிறுத்தப்படும். பயனர்கள் முகவரை லாக்-அவுட் முறையில் (logged-out mode) இயக்கிக்கொள்ளலாம். இதன் மூலம் அதன் செயல்பாடு வரையறுக்கப்படும் ஆனால், வலைப்பக்கங்கள் அல்லது மின்னஞ்சல்களில் மறைந்து இருக்கக்கூடிய தவறான அல்லது தீங்கு விளைவிக்கும் வழிமுறைகள் காரணமாக அபாயங்கள் உள்ளதாக ஓபன்ஏஐ எச்சரிக்கிறது. இவை எதிர்பாராத செயல்கள் அல்லது தரவு திருட்டுக்கு வழிவகுக்கலாம். விரிவான சோதனைகள் செய்து, பாதுகாப்புக் குறைபாடுகளை தொடர்ந்து சரிசெய்து வருவதாக ஓபன்ஏஐ கூறுகிறது. ஆனால், அதே சமயம் பயனர்கள் தங்கள் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், தகவல்களைப் பகிரும்போது எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்துகிறது. "நாம் நமது தனிப்பட்ட தகவல்களையும், பிரவுசிங் வரலாற்றையும், பயனர்களின் தனியுரிமையை மதிப்பதையும் அல்லது தரவை பாதுகாப்பதையும் இன்னும் நிரூபிக்காத ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கிறோம். இதனால், இதை முயற்சிக்கும்போது நான் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கிறேன்" என்கிறார் பேராசிரியர் எலெனா சிம்பர்ல். அட்லஸில் பிரவுசிங் மெமரி (Browser Memories) என்ற அம்சமும் உள்ளது. இது பயனர்களின் பிரவுசிங் வரலாற்றை நினைவில் வைத்துக்கொண்டு, கேட்டால் முந்தைய தேடல் விவரங்களை மீட்டெடுக்கும். ஆனால், ஓபன்ஏஐ இதை முற்றிலும் தேர்வின் அடிப்படையில் செயல்படும் என்றும், பயனர்களுக்கு முழு கட்டுப்பாடு உள்ளதாகவும் கூறுகிறது. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, உலகின் மிகவும் பிரபலமான பிரௌசரான கூகுள் குரோம் போன்ற போட்டியாளர்களுடன் போட்டியிடும் வகையில் அட்லஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது அட்லஸ் கூகுளுக்கு மாற்றாக இருக்குமா? இணையத்தில் பதில்கள் மற்றும் பரிந்துரைகளைத் தேடும் பயனர்கள், சாட்ஜிபிடி போன்ற பெரிய மொழி மாதிரிகளை (LLMs) பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அட்லஸ் இந்தப் போக்கை மேலும் வேகப்படுத்தக்கூடும், ஏனெனில் பயனர்கள் கூகுளின் பாரம்பரிய முறையிலான தேடல்களை விட, தகவல்களை ஒருங்கிணைத்து வழங்கும் உரையாடல் கருவிகளையே விரும்புகின்றனர். ஆராய்ச்சி நிறுவனமான டாட்டோஸ் வெளியிட்ட தகவலின்படி, ஜூலை 2025 நிலவரப்படி டெஸ்க்டாப் பிரவுசர்களில் நடைபெறும் தேடல்களில் 5.99% பெரிய மொழி மாதிரிகளுக்குச் சென்றுள்ளது. இது கடந்த வருடத்திலிருந்து இருமடங்கு அதிகம். ஆனால் கூகுளும் செயற்கை நுண்ணறிவில் தீவிரமாக முதலீடு செய்து வருகிறது. கடந்த ஒரு வருடமாக, அதன் தேடல் முடிவுகளில் ஏஐ உருவாக்கிய பதில்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. கடந்த மாதம், கூகுள் தனது ஜெமினி (Gemini) என்ற ஏஐ மாதிரியை அமெரிக்க பயனர்களுக்கான கிரோம் பிரவுசருடன் ஒருங்கிணைத்தது. விரைவில் ஐஓஎஸ் கிரோம் பயன்பாட்டிலும் அதைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. "புதிய ஓபன்ஏஐ பிரவுசரை ஆரம்பத்திலேயே பலர் முயற்சித்துப் பார்க்கப் போகிறார்கள் என்று நான் நம்புகிறேன்," என்கிறார் மூர் இன்சைட்ஸ் & ஸ்ட்ராட்டஜியின் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாட் மூர்ஹெட். ''ஆனால், அட்லஸ், கிரோம் அல்லது மைக்ரோசாஃப்ட் எட்ஜுக்கு பெரிய சவாலாக அமையும் என்று நான் நினைக்கவில்லை, ஏனெனில் பெரும்பாலான பொதுப் பயனர்கள் மற்றும் நிறுவனப் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த பிரவுசர்களில் இதே அம்சங்கள் வரும் வரை காத்திருப்பார்கள்" என குறிப்பிட்டார். மைக்ரோசாஃப்ட் எட்ஜ் ஏற்கனவே இதேபோன்ற பல அம்சங்களை வழங்குவதாகவும் மூர்ஹெட் குறிப்பிடுகிறார். போட்டி அதிகரித்து வந்தாலும், ஸ்டேட்கவுன்டர் தரவுகளின்படி, கூகுள் குரோம் இன்னும் உலகளாவிய பிரவுசர் சந்தையில் 71.9% பங்குடன் தனது முன்னிலைப் பதவியைத் தக்க வைத்துள்ளது. ஆனால், ஓபன்ஏஐயின் புதிய பிரவுசர் விளம்பர வருவாய் சந்தையில் புதிய போட்டியை உருவாக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். "ஒரு பிரவுசரில் உரையாடல் அம்சத்தை சேர்ப்பது ஓபன்ஏஐ விளம்பரங்களை விற்பனை செய்வதற்காக எடுத்த முதல் படியாகும். இதுவரை ஓபன்ஏஐ விளம்பரங்களை விற்கவில்லை. ஆனால் அது தொடங்கியவுடன், தேடல் விளம்பரங்களில் சுமார் 90% பங்கை வைத்திருக்கும் கூகுளின் சந்தையில் பெரும் பங்கைக் குறைக்கக்கூடும்," என்று டி.ஏ டேவிட்ஸன் நிறுவனத்தின் ஆய்வாளர் கில் லூரியா விளக்கினார். அட்லஸ் எப்போது பயன்பாட்டுக்கு வர உள்ளது? சாட்ஜிபிடி அட்லஸ் இப்போது ஆப்பிள் MacOS இயங்கு முறையில் Free, Plus, Pro, மற்றும் Go பயனாளர்களுக்கு கிடைக்கிறது. மேலும், இது தற்போது வணிக (Business) பயன்பாட்டிற்கான பீட்டா பதிப்பிலும் கிடைக்கிறது. மேலும் அவர்களின் பிளான் நிர்வாகி அனுமதித்தால், என்டர்பிரைஸ் மற்றும் எட்யூ பயனாளர்களுக்கும் கிடைக்கும். விண்டோஸ், ஐஓஎஸ், மற்றும் ஆன்ட்ராய்டு பயனர்களுக்கான புதிய அம்சங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று ஓபன்ஏஐ தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly9q529yv0o
  3. புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்துக்கு அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி கடும் எதிர்ப்பு : 7ஆம் திகதிக்கு முன் தீர்மானத்தை மாற்றுமாறும் வலியுறுத்தல் 24 Oct, 2025 | 04:49 PM (எம்.மனோசித்ரா) நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்துக்கமைய பாடசாலை நேரத்தை 30 நிமிடத்தால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி துறைசார்ந்தவர்களுடன் எந்தவொரு கலந்தாலோசனைகளையும் முன்னெடுக்காமல் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாக அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை (24) கொழும்பில் விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்து குறித்த தொழிற்சங்கம் இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை நேரத்தை அதிகரிப்பது குறித்த தீர்மானத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால் அடுத்த தவணை ஆரம்பமானதும் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது. இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அகில இலங்கை ஒன்றிணைந்த ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யல்வல பக்ஞ்ஞாசேகர தேரர், அதிபர், ஆசிரியர் உட்பட கல்வித்துறை சார்ந்தவர்களுடன் எவ்வித கலந்துரையாடல்களையும் முன்னெடுக்காமல் அரசாங்கம் தன்னிச்சையாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. தற்போது 1 - 1.30 மணியளவில் மாணவர்கள் சோர்வடைகின்றனர். அதிகாலை 3 மணிக்கு எழுந்து பல கிலோ மீற்றர் பயணம் செய்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும் இருக்கின்றனர். அவ்வாறெனில் அந்த மாணவர்களுக்கு அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்துக்கமைய அருகிலுள்ள பாடசாலையில் கல்வி கற்பதற்கான வசதிகளையாவது அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவ்வாறு எந்தவொரு முன்னாயத்தமும் திட்டமிடலும் இன்றி பாடசாலை நேரத்தில் 30 நிமிடத்தை அதிகரித்துள்ளமை நியாயமற்றது. எனவே இந்த தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும். பொருத்தமான மாற்றங்கள் தொடர்பில் துறைசார் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில், அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த புதிய முறையில் இடைவேளை இரு சந்தர்ப்பங்களில் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு இரு இடைவேளைகள் வழங்கப்பட்டால் மாணவர்களை வகுப்பறைகளிலிருந்து வெளியனுப்புவதற்கும், மீள அழைப்பதற்கும் கூட நேரம் போதாது. அவ்வாறிருக்கையில் இவ்வாறான ஒரு நடைமுறை சாத்தியமற்ற முறைமையை யோசனையை வழங்கியது யார்? தேசிய கல்வி நிறுவனத்தின் எவ்வித தகுதியும் அற்ற குழுக்களாலேயே இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. கலைத்துறை பட்டதாரிகள் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான பாடப்பரப்புக்களை தயாரிக்கின்றனர். இவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் குழுக்களில் அங்கத்துவம் வகித்தவர்களாவர். அதனால் அவர்களுக்கு இவ்வாறான முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. நவம்பர் 7ஆம் திகதி பாடசாலைகளுக்கு தவணை விடுமுறை வழங்க முன்னர் இந்த தீர்மானத்தை அரசாங்கம் மாற்ற வேண்டும். அவ்வாறில்லையெனில் பாடசாலை ஆரம்பமானதன் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/228581
  4. சிறப்பான நாடகம், நன்றி அண்ணை.
  5. Published By: Digital Desk 3 24 Oct, 2025 | 01:04 PM ஐஸ்லாந்து நுளம்புகள் இல்லாத நாடு என்ற பெருமையை இழந்துள்ளது. ஐஸ்லாந்தின் இயற்கை அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த பூச்சியியல் நிபுணர் மத்தியாஸ் ஆல்ப்ரெட்ஸன் (Matthias Alfredsson), தலைநகர் ரேக்ஜாவிக்கில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் (20 மைல்) வடக்கே, மூன்று நுளம்புகள் கண்டறியப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். 'குலிசெட்டா அன்யூலேட்டா' (Culiseta annulata) வகையைச் சேர்ந்த இந்தக் கொசுக்கள் இரண்டு பெண் என்றும் மற்றொன்று ஆண் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்தாட்டிக்காவுடன் சேர்த்து, ஐஸ்லாந்து நீண்ட காலமாக நுளம்புகள் இல்லாத சில இடங்களில் ஒன்றாக இருந்து வந்தது. இந்நிலையில், அங்கு நுளம்புகள் உருவாகியிருப்பதை மத்தியாஸ் ஆல்ப்ரெட்ஸன் கண்டுபிடித்துள்ளார். இந்தக் நுளம்புகள் அண்மையில் வந்த கப்பல்கள் அல்லது சரக்குப் பெட்டகங்கள் வழியாக ஐஸ்லாந்திற்குள் நுழைந்திருக்கலாம் என்று அவர் கருதுகிறார். மேலும், இந்த இனம் பல இடங்களில் பரவியுள்ளதா என்பதை அறிய, வசந்த காலத்தில் (Spring) கண்காணிப்பைத் தொடர வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/228547
  6. பட மூலாதாரம், imd.gov.in 24 அக்டோபர் 2025, 05:54 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 27ஆம் தேதி) வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ''தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்று மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதால், தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகியுள்ளது.'' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ''மேற்கு-வடமேற்கு திசையில் இது மெதுவாக நகர்ந்து, நாளை (25-10-2025) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பிறகு, வருகின்ற 26-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகின்ற 27-ம் தேதி காலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடையக்கூடும்'' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் 27ம் தேதி சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது என்றும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் (தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும்) மழை பெய்துள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 15 செ.மீ மழை பதிவாகியது. நெல்லையில் நாலுமுக்கு பகுதியில் 12 செ.மீ, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 10 செ.மீ மழை பதிவாகியது. கன்னியாகுமரி பேச்சிப்பாறையிலும் சென்னை மேடவாக்கத்திலும் தலா 9 செ.மீ மழை பெய்தது. பட மூலாதாரம், Getty Images தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடகிழக்கு திசையில் மணிக்கு 25 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று காலை 5.30 மணிக்கு கிழக்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் மேல் நிலவுகிறது. அதாவது லட்சத்தீவிலிருந்து 340 கி.மீ வடமேற்கிலும், கோவாவிலிருந்து 430 கி.மீ தென்மேற்கிலும் கர்நாடகாவிலிருந்து 480 கி.மீ மேற்கிலும் நிலை கொண்டுள்ளது. இது அரபிக் கடலில் மேலும் வடக்கு வடகிழக்கு திசையில் அடுத்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையிலிருந்து 55 ஆயிரம் கன அடி நீர் திறப்பு மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், இரவு முதல் வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் வெளியேற்றப்படும் நீரும் அதிகரித்துள்ளது. கடந்த 20-ம் தேதி பிற்பகலில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதனைத் தொடர்ந்து அணைக்கு வரும் நீர் வரத்து முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று மாலை காவிரியில் வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிப்பதால் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர், இரவு 11.00 மணி முதல் 45,000 கன அடியிலிருந்து 55,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 22,500 கன அடியும், எல்லிஸ் உபரி (16 கண் மதகு) வழியாக 32,500 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly1qdr4d93o
  7. இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட இரண்டு யானைகளை மீண்டும் தாய்லாந்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை Published By: Digital Desk 3 24 Oct, 2025 | 12:23 PM இலங்கைக்கு பரிசாக வழங்கிய இரண்டு யானைகளை மீண்டும் கொண்டு செல்ல தாய்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கையுடன் அக்டோபர் 28 ஆம் திகதி தாய்லாந்து கலந்துரையாடல் நடத்த உள்ளது. இரு யானைகளின் வாழ்கை நிலை மோசமடைந்துள்ளதாகவும், தவறாக வழி நடத்தப்படுவதாகவும் வெளியான செய்திகளைத் தொடர்ந்து, அவற்றை மீண்டும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக தாய்லாந்து அராசாங்கம் தெரிவித்துள்ளது. ப்ளாய் பிரட்டு பா மற்றும் ப்ளாய் ஸ்ரீனாரோங் ஆகிய யானைகளின் நலன் தொடர்பில் கவனம் அதிகரித்து வருவதால், தாய்லாந்து நாட்டின் துணைப் பிரதமரும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சருமான சுசார்ட் சோம்க்ளின் வியாழக்கிழமை (23) தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் அவசரமாக இலங்கைக்கு விமானத்தில் செல்ல திட்டமிட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு இந்த யானைகள் தொடர்பில் தாய் யானை மீட்புக் குழுவால் முதன்முதலில் கவலைகள் எழுப்பப்பட்டன. யானைகளின் வாழ்கை நிலை மோசமடைந்துள்ளமை தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உத்தியோகபூர்வ கடிதத்தை சமர்ப்பிக்க குழுவின் ஒருங்கிணைப்பாளர் யுவானுச் கியாட்டிவோங், 50 உறுப்பினர்களுடன் துணைப் பிரதமரும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரை சந்தித்துள்ளார். அந்த கடிதத்தில், தாய்லாந்தால் பரிசாக வழங்கப்பட்ட யானைகள், அதிகமாக வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டு, உடல் நலம் குன்றி உள்ளன. அவைகள் எல்லா நேரங்களிலும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளன. எனவே, சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்காக யானைகள் உடனடியாக தாய்லாந்துக்கு அழைத்துவரப்பட வேண்டும் என அந்தக் குழு வேண்டு கோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் தனது முகநூல் பதிவில் துணைப் பிரதம சுசார்ட், தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மற்றும் பிற அரச நிறுவனங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இந்தப் பிரச்சினையைப் புறக்கணிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். யானைகளை அழைத்து வருவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுடனும் ஒருங்கிணைக்க இராஜதந்திர முயற்சிகளுக்கு இணக்கம் தெரிவித்துள்ள பிரதமர் அனுடினுடன் இந்த விடயத்தைப் பற்றி கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு சிறிது காலம் எடுக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், துணைப் பிரதமர் சுசார்ட், தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் கால்நடை வைத்தியர்களுடன் யானைகளின் உடல்நலம் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை மதிப்பிடுவதற்காக இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இராஜதந்திர காலந்துரையடால்கள் தொடரும் அதேவேளையில், உள்நாட்டு பராமரிப்பாளர்களுக்கு முறையான பராமரிப்பு வழங்கவும் குழு அறிவுறுத்தவுள்ளது. தாய்லாந்தின் தேசிய பூங்காக்கள், வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர் அட்டாஃபோன் சரோயன்சான்சா, சுசார்ட்டுடன் இந்த பயணத்தில் பங்கேற்கவுள்ளார். இருநாடுகளுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் வெற்றிப் பெற்றால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட மற்றொரு யானையான பிளாய் சக் சுரின் திரும்பப் பெறுவதற்குப் பயன்படுத்தப்பட்ட அதே மாதிரியை அதிகாரிகள் பின்பற்ற திட்டமிட்டுள்ளதாக அட்டாஃபோன் தெரிவித்துள்ளார். தி ஸ்டாண்டர்டின் அறிக்கையில், 1979 ஆம் ஆண்டு 12 வயதாக இருந்தபோது இலங்கைக்கு அனுப்பப்பட்ட முதல் யானை பிளாய் பிரட்டு பா ஆகும். தற்போது அவர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் உள்ளது. ப்ளாய் ஸ்ரீனாரோங் 2001 ஆம் ஆண்டு ப்ளாய் சாக் சுரினுடன் சேர்ந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ப்ளாய் சாக் சுரின் ஏற்கனவே மீட்கப்பட்டு தாய்லாந்திற்கு திருப்பி அனுப்பப்பட்டாலும், ப்ளாய் ஸ்ரீனாரோங் கதிர்காமத்தில் உள்ள கிரிவெஹெர விகாரைக்கு அருகிலுள்ள யானைகள் காப்பகத்தில் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/228530
  8. யாழில் திடீர் பணக்காரர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை; 08 பேர் மீது வழக்கு 24 Oct, 2025 | 12:00 PM யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள், வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 08 பேருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், அவர்களில் ஐவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில், மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்படவுள்ளன. வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகை பணத்தினை பெருக்கோடு யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுதல், வட்டிக்கு பணத்தினை வழங்கி அதனை திரும்ப செலுத்த தவறுபவர்களை கடத்தி சென்று சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி, அவற்றை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுதல், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்தல், போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகள் ஊடாக சொத்துக்களை சேர்ந்தவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் பொலிஸ் விசேட பிரிவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக யாழ்ப்பாணத்தில் எட்டு பேர் அடையாளம் காணப்பட்டு , அவர்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து குறித்த நபர்களிடம் வாக்கு மூலங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்ப்பவர்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் தமக்கு கிடைக்க பெற்று வருவதாகவும், அது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுப்போம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/228539
  9. திருகோணமலை முத்துநகர் விவசாயிகள் 38ஆவது நாளாக கனமழையிலும் தொடரும் சத்தியாக்கிரகப் போராட்டம் Published By: Digital Desk 1 24 Oct, 2025 | 02:14 PM திருகோணமலை - முத்துநகர் விவசாயிகள் கனமழையிலும் இன்று (24) 38ஆவது நாளாக தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த விவசாயிகள் தங்களது விவசாய நிலம், சூரியமின் சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டதையடுத்து, அதனை மீள பெற்றுத்தரக்கோரி சத்தியாக் கிரகப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்று வருகிறது. இதுதொடர்பில் விவசாயிகள் தெரிவிக்கையில், மழை காலங்களில் நனைந்து போராடுவதை நடப்பு கால அரசாங்கம் ரசிக்கிறதா? எங்களுக்கான தீர்வை இப்படி தான் தருவோம் என்பதை எழுத்து மூலமாக அறிவித்தால் என்ன. இதற்கு முன்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அவ்வளவு அதிகாரிகளுக்குள்ளும் சொல்லப்படும் விடயங்கள் சாத்தியமில்லை.அரசாங்கத்தை நம்பியே இங்கு மழையில் நனைந்து தீர்வு கேட்கிறோம். எமது கஷ்டத்தை உணருங்கள் ஜனாதிபதி கூறுகிறார்"ஓடும் ரயிலில் அதே நிலையில் கைக்குழந்தையுடன் பெற்றோர்கள் வறுமையில் வாடுகின்றனர். அரசியலுக்காக அல்ல விவசாய பட்டியலை உரிய திணைக்களத்தில் பெற்று தீர்வினை பெற்றுத்தருவீர்கள் என காத்திருக்கிறோம் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/228557
  10. ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து விபத்து - 19 உடல்கள் மீட்பு பட மூலாதாரம், UGC 24 அக்டோபர் 2025, 02:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் எச்சரிக்கை : இந்தக் கட்டுரையில் உள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம். ஹைதராபாதிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பல பயணிகள் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிக்கி உயிரிழந்த 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவரது அடையாளம் மட்டும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று கர்னூல் ரேஞ்ச் டி ஐ ஜி ப்ரவீன் கோயா தெரிவித்துள்ளார். இந்த விபத்தால் பெரிதும் அதிர்ச்சியடைந்ததாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தமது எக்ஸ் வலைத்தள பதிவில் தெரிவித்துள்ளார். கர்னூலின் புறநகர்ப்பகுதியான கல்லூர் மண்டல் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் (NH-44) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்தில் எத்தனை பேர் இருந்தார்கள்? பட மூலாதாரம், UGC பேருந்து தீப்பிடித்த போது அதில் 43 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பேருந்தில் பயணித்தோரின் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். பட மூலாதாரம், NCBN/X பேருந்திலிருந்து உயிருடன் தப்பி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த சூர்யா, பேருந்தின் டீசல் டேங்க் மீது பைக் ஒன்று மோதியதால் தீப்பற்றியதாக கூறினார். காயமடைந்த பயணிகளை கர்னூல் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சிரி (SIRI) சந்தித்த பிறகு பேசினார். அதன்பிறகு செய்தியாளரைச் சந்தித்த அவர், பேருந்தில் பயணம் செய்த 43 பேரில் 23 பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறினார். "இந்த விபத்து அதிகாலை 3 மணி முதல் 3.10 மணிக்கு இடையில் நடைபெற்றுள்ளது. பேருந்து மீது பைக் மோதியதில் பேருந்திலிருந்து எரிபொருள் கசிந்து, அதன் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது" என்று அவர் கூறினார். பிபிசியிடம் பேசிய அவர், பேருந்து மீது பைக் மோதியவுடன் திடீரென தீப்பிடித்ததாக கூறினார். "பேருந்து மீது மோதிய பைக், பேருந்துக்கு அடியில் சென்று விட்டது. அப்போது பேருந்தின் என்ஜின் அருகே திடீரென தீப்பிடித்தது. எரிபொருள் டாங்கி தீப்பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கும் என்று முதல் கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன" என்று தெரிவித்தார். அதிகாலை 3 மணிக்கு நிகழ்ந்த விபத்து அதிகாலையில் பேருந்து தீப்பிடித்த போது பெரும்பாலான பயணிகள் தூங்கிக்கொண்டிருந்தனர். தீப்பற்றியதை அறிந்த சில பயணிகள் கண்ணாடி சன்னலை உடைத்து வெளியேறி உள்ளனர். 2 மாத மற்றும் 5 வயது குழந்தையுடன் பயணித்த தந்தை சன்னலை உடைத்துள்ளார். அவராலேயே பலரும் தப்பியுள்ளனர் என பேருந்தில் பயணித்தவர்கள் கூறியுள்ளனர். தீவிபத்தால் ஹைட்ராலிக் அமைப்பு எரிந்து சேதமடைந்தது, இதனால் கதவு திறக்கவில்லை. அடுத்த சில நிமிடங்களில் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமடைந்தது என காவல் துறையினர் கூறியதாக பிடிஐ செய்தி முகமை கூறுகிறது. மேலும், இதில் உயிர் பிழைத்தவர்களில் பெரும்பாலானோர் 25 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என காவலர்கள் தெரிவித்தனர் எனவும் பிடிஐ தெரிவித்தது. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0qpn4q02k1o
  11. யாழில் சட்டவிரோதச் செயற்பாடுகள் தீவிரத்தைக் குறைக்குமாறு ரஜீவன் கோரிக்கை 24 Oct, 2025 | 03:39 PM யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதச் செயற்பாடுகள் தீவிரத்தைக் குறைக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் தளத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில், பல குழுக்கள் தற்போது சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன என்பதை நான் கவனித்துள்ளேன். குறிப்பாக போதைப்பொருள் விற்பனை மிகுந்த அளவில் நடைபெற்று வருகிறது. இந்த போதைப்பொருள் விற்பனையிலிருந்து பெறப்படும் பணம், சமூக விரோதச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவதுடன், மீட்டர் வட்டி வணிகம், ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, குழுச் சண்டைகள் போன்ற குற்றச் செயல்களிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இச்செயற்பாடுகள் தற்போது பொது இடங்களிலும் சந்தைகளிலும் பரவலாக நடைபெறுவதால், அப்பாவி மக்களின் பாதுகாப்பு ஆபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் விளைவாக பாலியல் வன்முறை, கொலைகள், தற்கொலைகள் மற்றும் பல உளவியல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே, இவ்வாறான குற்றச் செயற்பாடுகளை தடுக்க உடனடி விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, இக்குழுக்களுடன் தொடர்புடையவர்களின் வங்கிக் கணக்குகள், சொத்துக்கள் மற்றும் வருமான மூலங்களை விசேடமாக கண்காணித்து, சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட பணம் அரசுடைமையாக்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். இந்த நடவடிக்கைகள் வடக்கு மக்களின் பாதுகாப்பையும் சமூக நலனையும் உறுதிப்படுத்தும் என்பதில் நான் உறுதியுடன் இருக்கிறேன். இது இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து காப்பாற்றவும், சமூகத்தில் அமைதி மற்றும் நம்பிக்கையை நிலைநாட்டவும் உதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/228573
  12. நியூஸிலாந்தை வெற்றிகொண்டு மகளிர் உலகக் கிண்ண அரை இறுதிக்குள் நுழைந்தது இந்தியா Published By: Vishnu 24 Oct, 2025 | 12:20 AM (நெவில் அன்தனி) நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தை வெற்றிகொண்ட இந்தியா, அரை இறுதியில் விளையாட நான்காவது அணியாகத் தகுதிபெற்றது. மழையினால் தடைப்பட்ட இப் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் நியூஸிலாந்தை 53 ஓட்டங்களால் இந்தியா வெற்றிகொண்டது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 49 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 340 ஓட்டங்களைக் குவித்தது. ஸ்ம்ரித்தி மந்தனா, ப்ரத்திகா ராவல் ஆகியோர் குவித்த அபார சதங்கள், ஜெமிமா ரொட்றிகஸ் பெற்ற அரைச் சதம் என்பன இந்தியாவை வலுவான நிலையில் இட்டன. இந்தியா 48 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 329 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால் பிற்பகல் 6.21 மணிக்கு ஆட்டம் தடைப்பட்டது. சுமார் ஒன்றரை மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் ஆட்டம் தொடர்ந்தபோது இந்தியாவுக்கு மேலும் ஒரு ஓவர் வழங்கப்பட்டது. அந்த ஓவரில் 11 ஓட்டங்கள் பெறப்பட்டதுடன் ஒரு விக்கெட்டும் வீழ்ந்தது. ப்ரத்திகா ராவல், ஸ்ம்ரித்தி மந்தனா ஆகிய இருவரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 212 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஸ்ம்ரித்தி மந்தனா 95 பந்துகளில் 10 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 109 ஓட்டங்களைக் குவித்து முதலாவதாக ஆட்டம் இழந்தார். மொத்த எண்ணிக்கை 288 ஓட்டங்களாக இருந்தபோது ப்ரத்திகா ராவல் 122 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். அவர் 134 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களை விளாசினார். இதனிடையே மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வேகமாக 1000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தவர் என்ற இணை சாதனையை லிண்ட்சே ரீலருடன் ப்ரத்திகா ராவல் பகிரந்துகொண்டார். இந்த சாதனையை லிண்ட்சே ரீலர் 37 வருடங்களுக்கு முன்னர் நிலைநாட்டி இருந்தார். அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்ட ஜெமீமா ரொட்றிகஸ் 55 பந்துகளில் 11 பவுண்டறிகள் அடங்கலாக 76 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் 10 ஓட்டங்ளைப் பெற்றார். நியூஸிலாந்தின் துடுப்பாட்டம் சிறு மழையினால் தாமதித்ததால் அதன் வெற்றி இலக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் 44 ஓவர்களில் 325 ஓட்டங்கள் என நிர்ணயிக்கப்பட்டது. கடினமான இந்த வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 44 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 271 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்ததுடன் உலகக் கிண்ண அரை இறுதி வாய்ப்பையும் பறிகொடுத்தது. முதலாவது விக்கெட்டை ஒரு ஓட்டத்திற்கு இழந்த நியூஸிலாந்து 12ஆவது ஓவரில் 3ஆவது விக்கெட்டை இழந்தபோது 59 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முன்வரிசையில் அமேலியா கேர் 45 ஓட்டங்களையும் ஜோர்ஜியா ப்லிம்மர் 30 ஓட்டங்களையும் பெற்றனர். மத்திய வரிசையில் ப்றூக் ஹாலிடே 81 ஓட்டங்களையும் இசபெல்லா கேஸ் ஆட்டம் இழக்காமல் 65 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரேனுகா சிங் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் க்ரான்தி கௌத் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: ஸ்ம்ரித்தி மந்தனா. https://www.virakesari.lk/article/228505
  13. இந்தியாவுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியாவுக்கு தொடர்ச்சியான வெற்றி Published By: Vishnu 23 Oct, 2025 | 08:30 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 3 போட்டிகள் கொண்ட ஆடவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, தொடரை தனதாக்கிக் கொண்டுள்ளது. பேர்த் விளையாட்டரங்கில் சில தினங்களுக்கு முன்னர் மழை காரணமாக அணிக்கு 26 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் அவுஸ்திரேலியா 7 விக்கெட்களால் வெற்றியீட்டி இருந்தது. அடிலெய்ட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் அவுஸ்திரேலியா 2 விக்கெட்களால் வெற்றியீட்டி ஒரு போட்டி மீதம் இருக்க தொடரைக் கைப்பற்றியது. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியாவின் சிரேஷ்ட நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராத் கோஹ்லி பூஜ்ஜியத்துடன் ஆட்டம் இழந்தார். இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 264 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா 73 ஓட்டங்களையும் ஷ்ரேயஸ் ஐயர் 61 ஓட்டங்களையும் அக்சார் பட்டேல் 44 ஓட்டங்களையும் பெற்றனர். பின்வரிசையில் ஹர்ஷித் ரானா ஆட்டம் இழக்காமல் 24 ஓட்டங்க்ளைப் பெற்றார். பந்துவீச்சில் அடம் ஸம்ப்பா 60 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் சேவியர் பாட்லட் 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டார்க் 62 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 46.2 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 265 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இதில் மெத்யூ ஷோட் 74 ஓட்டங்களையும் கூப்பர் கொனொலி 61 ஓட்டங்களையும் மிச்செல் ஒவென் 36 ஓட்டங்களையும் மெட் ரென்ஷோ 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வொஷிங்டன் சுந்தர் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹர்ஷித் ரானா 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/228499
  14. ஒவ்வொரு வழியில் மனதை ஆற்றுப்படுத்துகிறோம் என நினைக்கிறேன்.
  15. சுதேச மருத்துவப் பட்டதாரிகளின் நியமனந்தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் கடுமையாக கேள்வி எழுப்பினார் ரவிகரன் எம்.பி; நவம்பரில் 304பேருக்கு நியமனம் வழங்கப்படுமென - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பதில் Published By: Digital Desk 3 23 Oct, 2025 | 05:34 PM பட்டப்படிப்பையும் உள்ளகப்பயிற்சியையும் முடித்து வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் சுதேச மருத்துவப் பட்டதாரிகளின் நியமனம் தொடர்பாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் மிகக் கடுமையான முறையில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் கடந்த 2009, 2010, 2011ஆகிய கல்வியாண்டுகளில் ஆயுர்வேத, சித்த மற்றும், யுனானி ஆகிய சுதேச மருத்துவத்துறைகளில் பட்டப்படிப்பை நிறைவுசெய்த பட்டதாரிகள் 304பேரை ஆரம்ப சுதேச மருத்துவ அலுவலர் பதவிக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 03ஆம் திகதி நியமனம் செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பதிலளித்துள்ளார். அதேவேளை தற்போது நாட்டிலுள்ள சுதேச வைத்தியசாலைக் கட்டமைப்பிலே அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவர் ஆளணியைவிடவும் அதிகமான அளவில், சுதேச பட்டதாரிகள் காணப்படுவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றில் வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இவ்வாறு சுகாதார அமைச்சரிடம் மிகக் கடுமையாக கேள்வி எழுப்பியநிலையில் சுகாதார அமைச்சரால் மேற்கண்டவாறு பதிலளிக்கப்பட்டது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே! மேலைத்தேய மருத்துவ சேவை வழங்கல் என்றாலும் சரி, சுதேச மருத்துவ சேவை வழங்கல் என்றாலும் சரி எமது வன்னி மாவட்டத்திற்கான மருத்துவ சேவை வழங்கலை, சமச்சீராக அணுகுங்கள் என்பதே எம் கோரிக்கை. சுதேச மருத்துவ துறையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு காணப்படவேண்டிய 14 சமூக நல மருத்துவர்களில் ஒருவர் மட்டுமே பணியாற்றுகிறார். 13 பணி வெற்றிடங்கள் உள்ளன. மாவட்டம் முழுதும் ஒரேயொரு சமூக நல மருத்துவரைக்கொண்டு எவ்வாறு வினைத்திறனான சேவை வழங்கலை மேற்கொள்ள முடியும்? இது எத்தகைய சமச்சீரற்ற நிலை! முல்லைத்தீவு மாவட்டத்திற்கான ஐந்து சித்த மருத்துவ சேவை வழங்கும் மருத்துவமனைகளிலும் உள்ள மொத்த அனுமதிக்கப்பட்ட ஆளணி 64. தற்போது இங்கு 40 பணி வெற்றிடங்கள் உள்ளன. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஊழியர் அணியுடனே முல்லைத்தீவு மாவட்ட சித்த மருத்துவ அலகுகள் பணிபுரிகின்றன! 2025 இன் முதல் எட்டு மாதங்களிலும் சராசரியாக 1000 நோயாளிகளுக்கு மேல் மேற்படி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இன்னமும் அதிகமாக நோயாளிகளை உள்ளீர்த்து சேவை வழங்குவதில் உள்ள முதன்மையான மட்டுப்பாடு குறித்த மருத்துவமனைகளில் உள்ள ஆளணிப்பற்றாக்குறையே. சுகாதார அமைச்சர் அவர்களே! சுதேச மருத்துவத் துறையில் மருத்துவர் வெற்றிடங்களுடன் மருத்துவமனைச் சூழலுக்கு மிகவும் இன்றியமையாத சுகாதாரத் தொழிலாளர்கள், சுகாதார உதவியாளர்கள், சுகாதார தூய்மை பணியாளர்கள், மர்த்தனவியலாளர் உள்ளிட்ட ஊழியர் வெற்றிடங்களும் உள்ளன. வடமாகாணம் முழுவதும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான பணி வெற்றிடங்கள் சித்த மருத்துவத்துறையில் உள்ளன. மருத்துவ சேவை வழங்கலின் தரத்தை அதிகரிப்பதற்கு, மேற்படி சேவை நிலையங்களில் உள்ள ஆளணி வெற்றிடங்களை நிரப்புதலும் இன்றியமையாதது. எனது முதலாவது கேள்வி! இதுவரை ஆயுர்வேத, சித்த, யுனானி பட்டக்கற்கை நெறிகளைக் கற்று, உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்து பணிநியமனங்களுக்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். தற்போது பல்கலைக்கழங்களில் மேற்படி கற்கைநெறிகளை மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கற்று வருகின்றனர். இவர்களும் தங்களுக்கு அரசு வேலைவாய்ப்பை தரும் என்றே நம்பி கற்கின்றார்கள். மேற்படியாக ஏழாயிரத்துக்கும் மேற்பட்டுள்ள இப்பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு நீங்கள் அளிக்கும் உறுதி மொழி என்ன? படியுங்கள்- அரசிடம் வேலை வாய்ப்பை கோரவேண்டாம் என்பதா? படித்து நீங்களாக தனியார் மருத்துவ சேவை நிலையங்களை நடாத்துங்கள் என்பதா? அல்லது ஒவ்வோர் ஆண்டும் இத்தனை எண்ணிக்கையிலான அரச பணி வெற்றிட வாய்ப்பு தான் வழங்கப்படும் என்பதா? ஏனெனில், இது தொடர்பில் ஒரு தெளிவான அறிவித்தலை அரசு இதுவரை அவர்களுக்கு வழங்கவில்லை என்றே எண்ணுகிறேன் - என்றார். இந்நிலையில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இதற்குப் பதிலளிக்கையில், கடந்த 2025.06.30ஆம் திகதிய நிலவரப்படி இலங்கையின் சுதேசமருத்துவசேவையில், குறிப்பாக ஆயுர்வேதம், யுனானி, சித்தம் மூன்று மருத்துவத்துறைகளுக்குமாக 2567 அனுமதிக்கப்பட்ட சுதேச மருத்துவர் ஆளணிகள் காணப்படுகின்றன. இருப்பினும் தற்போது 2065 சுதேசமருத்துவர்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் 502 சுதேசமருத்துவர்களின் வெற்றிடங்கள் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் இலங்கை சுதேசமருத்துவசேவையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு முகாமைத்துவசேவைகள் திணைக்களத்திற்கு அனுமதிகிடைத்துள்ளது. அந்தவகையில் தற்போது நாட்டில் காணப்படும் 502 சுதேச மருத்துவர் வெற்றிடங்களில், 304 ஆரம்ப சுதேச மருத்துவ அலுவலர் பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச்செய்வதற்கான அமச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அதற்கமைய ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. குறிப்பாக இந்த 304 சுதேச மருத்துவர் பதவிவெற்றிடங்களும் 2009, 2010, 2011ஆகிய மூன்று கல்வியாண்டுகளில் பட்டப்படிப்பினை நிறைவுசெய்தவர்களைக்கொண்டே நிரப்புவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர்மாதம் 03ஆம்திகதி குறித்த 304 சுதேசமருத்துவ நியமனங்களையும் வழங்கவிருக்கின்றோம். இவ்வாறு 304பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டபின்னர் மிகுதியாகவுள்ள வெற்றிடங்களுக்கும் நியமனங்களை வழங்குவோம். மேலும் சுதேச மருத்துவத்தில், அதாவது ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம் ஆகிய மூன்று துறைகளிலும் 2021தொடக்கம் 2025ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் 1990பேர் பட்டப்படிப்பினை நிறைவுசெய்து வேலையை எதிர்பார்த்துள்ளனர். இதேவேளை குறித்த 2021 தொடக்கம் 2025வரையான காலப்பகுதியில் ஆயுர்வேதம், சித்த மற்றும் யுனானி ஆகிய மருத்துவ பட்டப்படிப்பிற்கென கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரச பல்கலைக்கழகங்களால் மொத்தம் 2,709மாணவர்கள் உள்ளீர்ப்புச் செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் நாட்டிலுள்ள எமது சுதேச வைத்தியசாலைக்கட்டமைப்பிற்குள் தற்போதுள்ள அனுமதிக்கப்பட்ட மருத்துவர் ஆளணியைவிட அதிகமான அளவில் சுதேச பட்டதாரிகள் காணப்படுகின்றனர். எனினும் தற்போதுள்ள சுதேசமருத்துவர் வெற்றிடங்கள் கணக்கீடுசெய்து அதற்கமையவே ஆட்சேர்புக்கள் செய்யப்படவிருக்கின்றன. பொது அட்டவணைக்கு அமையவே அந்த நியமனங்களை மேற்கொள்ளவுள்ளோம். அத்தோடு சுதேச மருத்துவத்துறையின் பணியாட்தொகுதிகளை நியமனஞ்செய்வதுதொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்கள் கோரிக்மைகளை முன்வைத்துள்ளார். குறித்த பணியாட்தொகுதிகளை நியமனஞ்செய்வதற்கும் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நியமனங்களை மேற்கொள்வதற்கென விண்ணப்பங்களைக்கோருதல், உள்ளீர்த்தல் என்பதற்கு அப்பால் அவர்களுக்கு பயிற்சியளிக்கவேண்டிய தேவையுமுள்ளது. பயிற்சிக்காலம் முடிவுற்றபின்னர் முரண்படுகளின்றி அந்த நியமனங்களை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/228481
  16. ரெட் அலர்ட் கொடுத்த இடங்களில் ஏன் அதி கனமழை பெய்யவில்லை? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் சாரதா வி பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் அதிகன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்திருந்தது. ரெட் அலர்ட் (அதி கனமழை) என்பது 20 செ.மீக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதை குறிக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் கனமழை முதல் மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்) வரை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் வேலூர், திருப்பத்தூர், திருச்சி, சேலம், தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை (மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டது. பட மூலாதாரம், Getty Images திரும்பப் பெறப்பட்ட ரெட் அலர்ட் ஆனால் அக்டோபர் 22-ஆம் தேதி காலை இந்த ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டது. புதன்கிழமை வெளியான தகவலின்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கே ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் வழங்கப்பட்டது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டது. பட மூலாதாரம், X@ChennaiRmc அக்டோபர் 22-ஆம் தேதி மழை நிலவரம் அக்டோபர் 22ம் தேதி காலை 8.30 மணி முதல் அக்டோபர் 23ம் தேதி காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணத்தில் 13 செ.மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டம் அரூரில் 11 செ.மீ மழை பெய்துள்ளது. நாமக்கல்லில் மோகனூர், நீலகிரியில் விண்ட் வர்த் எஸ்டேட், திருப்பூரில் வெள்ளக்கோயில் ஆகிய இடங்களில் 9 செ.மீ மழை பதிவாகியது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, நீலகிரியில் க்ளென்மார்கன், விழுப்புரம் ஆவலூர்பேட்டை ஆகிய இடங்களில் 8 செ.மீ மழை பதிவாகியது. சென்னை புறநகர் பகுதிகளில் மேடவாக்கத்தில் 4 செ.மீ மழையும் நுங்கம்பாக்கத்தில் 2 செ.மீ மழையும் பதிவானது. பட மூலாதாரம், Getty Images வலுவிழந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் என்று அக்டோபர் 21-ஆம் தேதி சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அன்றே அது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது. அப்போது அது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அது புயலாக மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அக்டோபர் 22-ஆம் தேதி கூற முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அக்டோபர் 22-ஆம் தேதி வெளியான அறிக்கையின்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதன் அடுத்த நிலையான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பட மூலாதாரம், imd.gov.in எச்சரிக்கை கொடுத்த இடங்களில் ஏன் கனமழை பெய்யவில்லை? வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை பொய்யாகி போவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் கனமழையை எச்சரிக்க தவறியது என்ற விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது வானிலை ஆய்வு மையம். அதே போன்று, வானிலை ஆய்வு மையம் எச்சரித்த தினங்களில், எச்சரித்த இடங்களில் மழை பெய்யாமல் போனதும் உண்டு. வானிலை ஆய்வு மைய எச்சரிக்கைக்கும் வானிலை நிகழ்வுக்கும் இடையில் உள்ள இடைவெளியை பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இது குறித்து பிபிசி தமிழிடம் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் ஒய்.இ.ஏ. ராஜ் விளக்கமாக பேசினார். வானிலை நிகழ்வுகளை 100% யாராலும் முழுமையாக கணிக்க முடியாது என்பதை முதலில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார். "வானிலை எச்சரிக்கைகள் எப்போதுமே 80-85% சரியாக இருக்கும். 100% சரியாக யாராலும் கணிக்க முடியாது" என்றார். இந்த முறை என்ன நடந்தது என்று விளக்கி பேசிய அவர், "வங்கக் கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறும் என்று முதலில் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அது வலுவிழந்து கரையை கடந்தது என்று கூற முடியாது, நகர்ந்து சென்றது என்றுதான் கூற வேண்டும். எனவே புதன்கிழமை மதியம் முதலே மழை குறைய தொடங்கியது" என்றார். பட மூலாதாரம், Y.E.A. Raj படக்குறிப்பு, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் ஒய்.இ.ஏ. ராஜ் முதலில் இருந்த வானிலை நிகழ்வில் அடுத்தடுத்த நேரத்தில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று சுட்டிக்காட்டும் அவர், "இந்த வானிலை நிகழ்வு தமிழ்நாட்டின் மேல் நிலவினாலும் இதன் மேகங்கள் ஆந்திராவின் பக்கம் குவியத் தொடங்கின. அதனால்தான் இப்போது ராயலசீமா பகுதிகளில் நல்ல மழை பெய்யக்கூடும். வானிலை நிகழ்வு ஒரு புறமும் அதன் மேகங்கள் மறுபுறமும் என சீரான நிலை இல்லாமல் இருப்பது வட கிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படக் கூடும்.'' என்றார் மேலும், ''புயல் போன்ற நிகழ்வில் அதன் மையம் எங்கு உள்ளது என்று தெளிவாக கூற முடியும். எனவே அது குறித்த கணிப்புகளும் சரியாக இருக்கக் கூடும். ஆனால் காற்றழுத்த தாழ்வுப் பகுதி போன்ற நிகழ்வுகளில் அதன் மையம் எங்குள்ளது என்று மிக தெளிவாக கூற முடியாது. எனவே சில மாற்றங்கள் இருக்கும். சென்னையிலிருந்து சுமார் 65 கி.மீ தள்ளி உள்ள அரக்கோணத்தில் 15 செ.மீ மழை பதிவாகியிருந்தது" என்றார். மேலும் வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகள் முழுவதும் தவறு என்று கூற முடியாது என்கிறார் ஒய்.இ.ஏ. ராஜ். "புதன்கிழமை பரவலாக ஆங்காங்கே மழை பெய்துள்ளது. சென்னையை சுற்றி பல இடங்களில் 3 முதல் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது." என்கிறார். ''வானிலை கணிப்புகளை பொருத்தவரை கடலில் நடக்கும் நிகழ்வுகளை நேரடியாக கண்காணிக்க வழியில்லை. தரையில் உள்ள நிகழ்வுகளை கண்காணிப்பது போல கடலில் கண்காணிக்க முடியாது. கடல் நிகழ்வுகளை பொருத்தவரை செயற்கைக்கோள் தரவுகளை நம்பியிருக்க வேண்டும். அது நிலத்தை நெருங்கி வரும் போதுதான் ரேடார் கொண்டு தகவல்கள் சேகரிக்க முடியும்" என்றார் ஒய்.இ.ஏ. ராஜ். பட மூலாதாரம், B.Amudha படக்குறிப்பு, வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பி. அமுதா இந்த குழப்பத்துக்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பி. அமுதா பிபிசி தமிழிடம் பேசுகையில், "நாங்கள் கொடுத்த ரெட் அலர்ட்டை திரும்பப் பெற்றதில் தவறு இல்லை. மக்களின் பாதுகாப்பு கருதி, அப்போதிருந்த தரவுகள் அடிப்படையில் அதிகனமழை எச்சரிக்கை கொடுத்தோம். ஆனால் நிலைமைகள் மாறிய போது அதை திரும்பப் பெற்றோம்" என்றார். தென் மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான அதே நேரத்தில் மேலும் மூன்று வானிலை நிகழ்வுகள் இருந்தன என்று சுட்டிக்காட்டும் அமுதா, "ஒரு கட்டத்தில் வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் இரண்டு பகுதிகளிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவியது. இது மட்டுமல்லாமல் தெற்கு அரைக்கோளத்தில் மேலும் இரண்டு நிகழ்வுகள் நிலவின. அது புயலாக வலுப்பெற்ற போது, தனது ஆற்றலைக் கொண்டு மேகங்களை தன் பக்கம் இழுக்க தொடங்கியது." என்றார். மேலும், ''பிறகு இதிலிருந்து முழுவதும் விலகி வேறு பக்கம் சென்று விட்டது. அப்போது இங்கிருந்த வானிலை நிகழ்வு வலுப்பெற முடியவில்லை. இந்த நிகழ்வை, இது இப்படி நடக்கும் என்று முன்கூட்டியே 100% கணிப்பது என்பது சாத்தியமில்லை. கடல் மீது இந்த நிகழ்வுகள் நடப்பதால் நாம் செயற்கைக்கோள் தரவுகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது" என்றார். பட மூலாதாரம், Getty Images கணிப்புகளை துல்லியமாக்க என்ன செய்ய வேண்டும்? வானிலை கணிப்பு மாதிரிகள் (weather prediction models) என்பவை கணினி அடிப்படையிலான கணிப்புகளே. எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், பல்வேறு இடங்களிலிருந்து கிடைக்கும் வெவ்வேறு தகவல்கள் கணினிக்கு வழங்கப்படும். அதை ஒட்டுமொத்தமாக ஆராய்ந்து ஒரு கணிப்பை கணினி வழங்கும். வானிலை ஆய்வாளர்கள் அந்த கணிப்பை புரிந்து கொண்டு தங்கள் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தின் மூலம் வானிலை அறிக்கைகள் தயாரிக்கின்றனர். கணினிகளுக்கு வழங்கப்படும் தரவுகளை துல்லியமாக்குவது, வானிலை கணிப்புகளை மேலும் துல்லியமாக்க உதவும். "வானிலை கண்காணிப்புகளை மேம்படுத்த வேண்டும், அதன் மூலம் கணிப்புகளை மேம்படுத்த முடியும். இந்திய வானிலை மைய மாதிரிகள் போலவே, Joint Typhoon Warning Centre (JTWC), Global Forecast System (GFS), European Centre for Medium-Range Weather Forecasts (ECMWF) என பல்வேறு வானிலை கணிப்பு மாதிரிகள் உள்ளன. இந்த கணிப்புகளுக்கு இடையே சில வித்தியாசங்கள் இருக்க தான் செய்யும்" என்றார் வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் அமுதா. 2021-ஆம் ஆண்டு வெள்ளத்துக்கு பிறகு பேரிடர்களை முன்கூட்டியே கணிக்கும் வகையிலான வானிலை மாதிரிகளை அமைக்க அவசியம் ஏற்பட்டுள்ளதாக கூறி தமிழக அரசு ரூ.10 கோடியை 2022-23 பட்ஜெட்டில் ஒதுக்கியது. இத்திட்டத்தின் கீழ் சூப்பர் கணினிகள், வானிலை பலூன்கள், இரண்டு ரேடார்கள், 100 தானியங்கி வானிலை நிலையங்கள், 400 தானியங்கி மழை அளவிடும் நிலையங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. "இந்தியாவில் 559 கண்காணிப்பு மையங்கள் இருந்த காலம் மாறி தற்போது 1000க்கும் மேற்பட்ட மழை அளவிடும் நிலையங்கள் மற்றும் வானிலை கண்காணிப்பு நிலையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 65 தானியங்கி வானிலை நிலையங்கள் மற்றும் 80 மழை அளவிடும் நிலையங்கள் உள்ளன. சென்னையில் முதலில் நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் மட்டுமே கண்காணிப்பு மையங்கள் இருந்தன. அந்த தரவுகளை வைத்து மட்டுமே கணிப்புகளை தயாரிக்க வேண்டும். ஆனால் சென்னையிலேயே பல்வேறு இடங்களில் இந்த மையங்கள் இருப்பதால் பரவலான தரவுகள் கிடைக்கின்றன, எனவே கணினி மாதிரிகள் மேம்பட்டுள்ளன" என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் அமுதா கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2kpvgdjz8yo
  17. பாதாள உலக தலைவர் கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி மற்றும், அவருக்கு உதவிய நபர்களிடம் இருந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் திடுக்கிடும் சம்பவமொன்று வெளியாகியுள்ளது. இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச்சென்ற விடயம் குறித்து அண்மைய நாட்களில் கிளிநொச்சி யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு அவர் தங்கியிருந்த இடங்களை அடையாளம் காட்டியிருந்தார். இந்த பின்னணியில் அவரை இந்தியாவுக்கு கடத்த ஆனந்தன் என்ற நபர் உதவியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இந்நிலையில் ஆனந்தன் என்பவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பலரை கடல் வழியாக தப்பிச் செல்ல உதவியதாக தெரியவந்துள்ளது. இது தொடடர்பில் தெரிய வருகையில், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியை, யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு மீன்பிடி படகில் ஏற்றிச் சென்ற ஆனந்தன் என்ற பிரதான சந்தேக நபர், தொடர்பில் மேலும் பல தகவல் வெளியாகியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய பல சந்தேக நபர்களையும் கடல் வழியாக தப்பிச் செல்ல ஆனந்தன் என்பவரே ஏற்பாடு செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், உதயபுரம், மூன்றாம் பாதையில் வசிக்கும் 29 வயதான ஏ.பி. ஆனந்தன் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், நேற்று முன்தினம் இரவு கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த சந்தேக நபருக்கு கிளிநொச்சியில் உள்ள சொந்தமான வீட்டில் இருந்து மைக்ரோ வகை துப்பாக்கியையும் கொழும்பு குற்றப்பிரிவு மீட்டுள்ளது. இந்நிலையில் சந்தேக நபர் திஹாரிய, ஒகொடபொலவில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்தியாவுக்கு கடத்தும் வலையமைப்பு பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பிற குற்றவாளிகளை படகு மூலம் இந்தியாவுக்கு கடத்தும் வலையமைப்பின் பின்னணியில் உள்ள மூளையாக ஆனந்தன் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனந்தன் தனது தம்பிகள் இருவருடன் இணைந்து இந்த மோசடியை செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. கேரள கஞ்சா மோசடி தொடர்பாக அவரது தம்பிகள் இருவரும் தற்போது காவல்துறையின் தடுப்பு காவலில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் வழிகள் வழியாக மேற்கொள்ளப்படும் கேரள கஞ்சா வியாபாரத்திலும் இந்த சகோதரக் குழு ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்தக் குழுவின் தலையீட்டால் சமீப காலங்களில் பிரதான குற்றவாளிகள் மற்றும் பாதாள உலக துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் கடல் வழிகள் வழியாகத் தப்பிச் செல்ல இந்த நபர் உதவி செய்துள்ளதாகவும் கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. அவர் உதவி செய்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சந்தேக நபர்கள் யார் என்பதை மேலும் உறுதிப்படுத்தி வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://ibctamil.com/article/jaffna-man-who-helped-easter-killers-escape-1761202503
  18. யாழ். அரியாலையில் தங்கிய இஷாரா - கைதுசெய்யப்பட்ட ஆனந்தன்: 5 லட்சத்துக்கு நடந்த கடத்தல் இஷாரா செவ்வந்தி இந்தியா செல்ல உதவிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் இன்று அல்லது நாளை கைது செய்ய்ப்படுவார் என கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பிற குற்றவாளிகளை படகு மூலம் இந்தியாவிற்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லும் ஒரு வலையமைப்பை அடையாளம் கண்டுள்ளது. இந்த குழுவின் மூலம் கடந்த சில ஆண்டுகளில் குற்றவாளிகள் மற்றும் பாதாள உலக துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் உட்பட சுமார் 100 பேர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. குழுவின் மூளையாகச் செயல் இந்தக் கும்பலைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கேரள கஞ்சா கடத்தல் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சகோதரர்களில் மூத்தவரான ஆனந்தன், இந்தக் குழுவின் மூளையாகச் செயல்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் பிடிக்கப்பட்டு இந்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 6 பேரில் இஷாரா செவ்வந்தியும் ஆனந்தனால் இந்தியாவிற்குக் கடத்தப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. கொழும்பு குற்றப்பிரிவால் கைது யாழ்ப்பாணத்தின் அரியாலையில் இருந்து இஷாரா செவ்வந்தி ஒரு மீன்பிடிப் படகில் ஏற்றப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்பட்டதுடன் அங்கு அழைத்துச் செல்ல அவரிடம் ரூ. 5 லட்சம் பெற்றுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்தப் பணத்தை ஜே.கே. பாய் கொடுத்தது தெரியவந்துள்ளது. இஷாரா செவ்வந்தி கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் ஆனந்தன் என்ற கடத்தல்காரரின் இரண்டு வீடுகளில் தங்கியிருந்துள்ளார். இஷாரா செவ்வந்திக்கு கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் தங்குமிடம் வழங்கி நாட்டை விட்டு வெளியேற உதவிய நான்கு பேரும் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் தங்குமிடம் இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்கு எடுத்துச் சென்ற படகையும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்தப் படகையும் ஆதாரமாக காவல்துறையினரின் காவலில் எடுக்கப்பட உள்ளது. இவ்வாறு, ஆனந்தன் சகோதரர்களின் பாதுகாப்புடன் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லும் பாதாள உலகக் குற்றவாளிகளுக்கு ஜே.கே. பாய் மற்றும் சிலோன் பாய் ஆகியோர் இந்தியாவில் தங்குமிடம் மற்றும் வசதிகளை வழங்குகிறார்கள். விசாரணையில், ஆனந்தனும் அவரது சகோதரர்களும் பாதாள உலகத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் பல்வேறு குற்றங்களுக்காக காவல்துறையினரால் தேடப்படுபவர்களை இந்த வழியில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவும் வகையில் 500,000 முதல் 1000,000 ரூபாய் வரை வசூலிப்பது தெரியவந்துள்ளது. https://ibctamil.com/article/ishara-stayed-in-ariyalai-jaffna-anandan-will-soon-1761124302
  19. வெலிகம லசா கொலையில் ஜேவிபி! சர்ச்சையை கிளப்பும் முன்னாள் அமைச்சர் வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை அரசாங்க அடக்குமுறையின் இரண்டாம் கட்டமா என்ற சந்தேகம் இருப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள கட்சி தலைமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜே.வி.பியின் முயற்சி இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள துமிந்த, “வெலிகம பிரதேச சபையில் ஜே.வி.பி தலைமையிலான திசைகாட்டி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு கடுமையாக முயற்சி செய்தது. அது நம் அனைவருக்கும் தெரியும். தேர்தலின் போது உறுப்பினர்கள் கடத்தப்பட்டனர். ஜே.வி.பி உறுப்பினர் ஒருவர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. வெலிகம பிரதேச சபையில் அதிகாரத்தைப் பெற ஜே.வி.பி பெரும் முயற்சி எடுத்தது. ஆனால், அதை ஐக்கிய மக்கள் சக்தி வென்றது. படுகொலை அவர்கள் தேர்தல் மூலம் அதைக் கைப்பற்ற முயன்றனர், பின்னர் அவர்கள் வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தினர். ஆனால் அதிகாரம் எதிர்க்கட்சிக்குச் சென்றது. இந்த நிலையில் அதன் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது அரசாங்கத்தின் அடக்குமுறையின் இரண்டாம் கட்டமா என்று எங்களுக்கு சந்தேகம் உள்ளது.” என தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/weligama-chairman-murder-govt-crackdown-duminda-1761136664
  20. மனிதன் 3 லட்சம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் எதிர்காலத்தில் தடயமே கிடைக்காதா? பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மனிதர்களான நாம் நீண்ட காலமாகப் கடந்த காலத்தைப் பற்றி ஆராய்வதில் ஆர்வம் கொண்டிருக்கிறோம். பூமியின் 4.5 பில்லியன் ஆண்டுகால வரலாற்றின் நினைவுச் சின்னங்களாக இருக்கும் எண்ணற்ற தொல்லுயிர் எச்சங்களை நாம் மண்ணிலிருந்து தோண்டியெடுத்துள்ளோம். நாம் தோன்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பு பண்டைய இனங்கள் எவ்வாறு வாழ்ந்தன என்பதற்கான குறிப்புகளை இவை நமக்கு வழங்குகின்றன. ஆனால், நாம் அழிந்துபோய், பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு புத்திசாலித்தனமான இனம் தோன்றினால் – நாம் இருந்தோம் என்பதை எப்போதாவது அவர்கள் அறிந்துகொள்வார்களா? அல்லது நமது நாகரிகம் எப்படி இருந்தது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வார்களா? எச்சங்களாக மாறுவதற்கான வாய்ப்பு குறைவு எதிர்கால தொல்லுயிர் ஆய்வாளர்கள் நமது எச்சங்களைளைக் கண்டுபிடிப்பார்கள் என்று நாம் நம்ப முடியாது என்கிறார் அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் பேராசிரியர் ஆடம் ஃபிராங்க். "புவியியல் ரீதியாக ஒரு நாகரிகம் குறுகிய காலம் மட்டுமே நீடித்தால், பூமியின் உயிர்களில் ஒரு சிறிய பகுதி மட்டுமே எச்சங்களாக மாறும்," என்று அவர் விளக்குகிறார். பட மூலாதாரம், Courtney Hale/E+ via Getty Images படக்குறிப்பு, ஆடம் ஃபிராங்க் மற்றும் கேவின் ஷ்மிட் ஆகியோரின் 2018-ஆம் ஆண்டு ஆய்வுக் கட்டுரையின்படி, டைனோசர்களின் இருப்பு இருந்த ஒவ்வொரு 100,000 ஆண்டுகளுக்கும், ஒரு சில முழுமையான டைனோசர் எச்சங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் ஃபிராங்க் இணைந்து எழுதிய 2018-ஆம் ஆண்டு ஆய்வுக் கட்டுரை ஒன்று, 165 மில்லியன் ஆண்டுகளாக டைனோசர்கள் பூமியில் சுற்றித் திரிந்த போதிலும், இதுவரை ஒப்பீட்டளவில் சில முழுமையான எச்சங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டுகிறது. எனவே, நமது மனித இனம் சுமார் 300,000 ஆண்டுகளாகத்தான் (இதுவரை) இருந்து வருவதால், தொல்லுயிர் எச்ச பதிவில் நாம் பெரிய அளவில் எந்தத் தடயத்தையும் விட்டுச் செல்லாமல் போகலாம் என்று அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது. இருப்பினும், நாம் வேறு தடயங்களை விட்டுச் செல்லக்கூடும். பூமியின் வேதியியலை மாற்றுதல் பூமியின் இயற்கையான புவியியலின் ஒரு பகுதியாக, பாறைகள் தொடர்ந்து அடுக்குகளாக அல்லது மண் படிவங்களாக மண்ணில் படிய வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு படிவத்தின் வேதியியல் கலவையும் அந்தக் காலக்கட்டத்தில் நிலைமைகளுக்கு ஏற்ப இருக்கும். பேராசிரியர் ஃபிராங்க் கூற்றுப்படி, மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை உயர்வு மற்றும் கடல் மட்ட மாற்றங்கள் ஆகியவை பாறையில் படியும் விஷயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது "இன்னும் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு கூட கண்டறியப்படலாம்" என்கிறார். "மனிதச் செயல்பாட்டால் பூமியின் காலநிலை அமைப்பு மாறியதால், ஆக்ஸிஜன் ஐசோடோப்புகள், கார்பன் ஐசோடோப்புகளில் ஒரு வித்தியாசம் இருப்பதை அவர்கள் காண்பார்கள்," என்கிறார் ஃபிராங்க். பரிணாமத்தை மறுவடிவமைத்தல் நமது எலும்புகள் தொல்லுயிர் எச்சங்களில் அதிகமாகக் காணப்படாவிட்டாலும், நாம் உலகம் முழுவதும் கொண்டு சென்ற அல்லது பல்லுயிர்த் தன்மையை மாற்றியமைத்த மற்ற இனங்களின் எச்சங்களை நாம் மாற்றியிருக்கலாம். படக்குறிப்பு, 2018-ஆம் ஆண்டு ஆய்வின்படி, வாழும் பாலூட்டிகளின் உயிர் எடையை (biomass) ஒப்பிட்டதில், அதில் 4% மட்டுமே காட்டுப் பாலூட்டிகளைக் கொண்டது என்று கண்டறியப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, உலகில் உள்ள அனைத்து பாலூட்டிகளிலும் 96% நாம் அல்லது நம்முடைய கால்நடைகள் என்று உயிர் எடையின் (biomass - அனைத்து உயிரினங்களின் மொத்த எடை) அடிப்படையில் அளவிடப்பட்டுள்ளது. உலகில் உள்ள பறவைகளின் உயிர் எடையில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமாக நம்முடைய கோழிப் பண்ணைகளிலிருந்து வருகிறது. அவர் வேர்ல்ட் இன் டேட்டா (Our World in Data) என்ற லாப நோக்கற்ற இதழின்படி, நாம் ஒவ்வொரு ஆண்டும் 75 பில்லியனுக்கும் அதிகமான கோழிகளைக் கொல்கிறோம். எனவே, அதிக எண்ணிக்கையில் இறக்கும் இந்த பறவைகளின் எச்சங்கள் எதிர்காலத்தில் கவனத்தை ஈர்க்கலாம். "நாம் உயிரியல் பரிணாமத்தின் பாதையை மாற்றியுள்ளோம்," என்கிறார் பிரிட்டனில் உள்ள லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர், தொல்லுயிரியியலர் மற்றும் கெளரவ பேராசிரியர் ஜான் ஸலாசியேவிச். "நமது தொலைதூர எதிர்கால ஆராய்ச்சியாளர்கள், 'என்ன நடந்தது? ஏன் இது நடந்தது?' என்று ஆச்சரியப்படுவார்கள்," என்று அவர் கூறுகிறார். "அவர்கள் இவையெல்லாம் தொடங்கிய அடுக்குகளைத் தேடுவார்கள், அது நமது அடுக்குதான்." நமது 'இறுதி மரபுச் சின்னம்' பேராசிரியர் ஸலாசியேவிச் மற்றும் அவரது லீசெஸ்டர் பல்கலைக்கழக சக பேராசிரியர் சாரா கேபோட் இணைந்து எழுதிய "Discarded: How Technofossils Will Be Our Ultimate Legacy" என்ற புத்தகத்தில், நமது அன்றாடப் பொருட்கள் பூமியின் புவியியல் பதிவில் நீடித்து நிற்கும் என்று வாதிடுகின்றனர். ஒரு அலுமினிய பாட்டில், பாலியஸ்டர் ஸ்வெட்டர் அல்லது நிலத்தடி கார் பார்க்கிங் என இவற்றை அவர்கள் தொழில்நுட்பப் எச்சங்கள் என்று அழைக்கிறார்கள். பட மூலாதாரம், Sarah Gabbott படக்குறிப்பு, பூமியின் மண் படிவங்களில் (sediment) தடயத்தை விட்டுச்செல்லும் அன்றாடப் பொருட்கள், நாம் எப்படி வாழ்ந்தோம் என்பது குறித்த குறிப்புகளை எதிர்கால நாகரிகங்களுக்கு வழங்கக்கூடும். 2020-ஆம் ஆண்டு ஆய்வின்படி, நாம் ஆண்டுதோறும் 30 ஜிகா டன் பொருட்களை உற்பத்தி செய்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது பூமியில் உள்ள ஒவ்வொருவரும் வாரந்தோறும் தங்கள் உடல் எடையை விட அதிகமாக உற்பத்தி செய்வதற்குச் சமம். பூமியில் இப்போது உயிருடன் உள்ள பொருள்களைவிட, மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களின் அளவு (அவற்றின் உலர்ந்த எடை) அதிகமாக உள்ளது என்று அந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மனித உற்பத்தியில் மிகப்பெரிய விகிதம் கான்கிரீட்டிலிருந்து வருகிறது. இது எதிர்காலத்தில் கண்டுபிடிப்பவர்களுக்கு மிகவும் இயற்கைக்கு மாறானதாகத் தோன்றலாம். ''கான்கிரீட் கட்டடங்களின் விளிம்புகள், நடைபாதை கற்கள் என தொல்லுயிர் எச்சங்களில் வடிவங்களை அவர்கள் கண்டால்... அது இயற்கையான படிவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை அறிவார்கள்." என்கிறார் ஜான் ஸலாசியேவிச். படக்குறிப்பு, நேச்சர் (Nature) இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 2020-ஆம் ஆண்டில், உலகில் உள்ள வாழும் விலங்குகளை விட மனிதனால் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக்கின் அளவு இரு மடங்கு அதிகமாக இருந்தது. நமது பல பொருட்கள் மிக நீண்ட காலத்திற்கு அப்படியே இருக்கும். பிளாஸ்டிக் "ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மட்டுமல்ல, மில்லியன் கணக்கான ஆண்டுகள் கூட நீடிக்கலாம்" என்று பேராசிரியர் கேபோட் கூறுகிறார். 2050-ஆம் ஆண்டுக்குள் கடலில் மீன்களை விட அதிக பிளாஸ்டிக் இருக்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கும் அளவு நாம் அவ்வளவு அதிகமான பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்கிறோம். ஆனால் இது பிளாஸ்டிக் மட்டும் அல்ல. "நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளில் கிராஃபைட் உள்ளது," என்று பேராசிரியர் கேபோட் கூறுகிறார். "எனவே, பென்சில் வடிவில் உள்ள கிராஃபைட் நான்கு பில்லியன் ஆண்டுகள் நீடிக்கும்." நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிவ இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று இந்தப் தொல்லுயிரியியலர் கூறுகிறார். "காகிதம் செல்லுலோஸால் ஆனது, அது இலைகளின் பொருளே ஆகும். எனவே... சரியான சூழலில் காகிதம் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகள் நீடிக்கலாம்," என்று அவர் ஊகிக்கிறார். கிரக அளவில் ஏற்படும் மாற்றங்கள் மனிதர்கள் பூமியின் புவியியலில் ஒரு பெரிய தடத்தை ஏற்கனவே பதித்திருக்கலாம். நம் மறைவுக்குப் பிறகு, வேறொரு புத்திசாலித்தனமான இனம் ஒரு நாள் அதைப் பார்க்குமா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு நமது மரபுச் சின்னத்தை கற்பனை செய்ய இவை பயனுள்ளதாக இருக்குமா? என்று கேட்டால் பேராசிரியர் ஃபிராங்க் ''ஆம்'' என்கிறார். "பூமியில் ஏற்படும் இந்த பெரிய மாற்றங்கள் - பல நூற்றாண்டுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகள், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்விளைவுகளை ஏற்படுத்தும்," என்று அவர் கூறுகிறார். பிபிசி உலக சேவையின் கிரவுட் சயின்ஸ் நிகழ்ச்சியின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டது. கூடுதல் தகவல்கள்: எல்லென் சேங் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crmxj8n4n2lo
  21. Published By: Digital Desk 3 23 Oct, 2025 | 03:04 PM சுகாதார அமைச்சிக்கான புதிய 16 மாடி அலுவலக தொகுதியின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவடையும், மேலும் குத்தகை அடிப்படையில் சுகாதார அமைச்சகத்தால் தற்போது இயங்கிவரும் அனைத்து அலுவலகங்களும் புதிய கட்டிடத்தின் முதல் கட்டத்தின் முதல் தளத்தில் நிறுவப்படும். கொழும்பில் உள்ள காசல் வீதியிலுள்ள மகளிர் போதனா வைத்தியசாலைக்கு அருகாமையில் கட்டப்பட்டு வரும் சுகாதார அமைச்சின் புதிய 16 மாடி அலுவலக வளாகத்தின் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்வதற்கான சிறப்பு ஆய்வு விஜயத்தின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார். தற்போது, சுகாதார அமைச்சின் கீழ் உள்ள பல அலுவலகங்கள் குத்தகை அடிப்படையில் ஒரு தனியார் கட்டிடத்தில் இயங்குகின்றன, மேலும் அந்த கட்டிடத்தின் குத்தகை காலத்தை வரும் ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டாம் என்றும், புதிய கட்டிடத்தின் கட்டுமானத்தை விரைவுபடுத்தவும், அந்த அலுவலகங்கள் அனைத்தையும் புதிய கட்டிடத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த புதிய கட்டிட கட்டுமானப் பணிகள் நீண்ட காலமாக முடங்கிக் கிடந்தன. மேலும் அரசாங்க நிதியைப் பயன்படுத்தி கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 375,000 (முந்நூற்று எழுபத்தைந்தாயிரம்) சதுர அடி பரப்பளவைக் கொண்ட இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை முடிப்பதற்கான தற்போதைய மதிப்பிடப்பட்ட செலவு சுமார் 14,000 மில்லியன் ரூபாய் ஆகும். இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கட்டுமானப் பணிகளுக்காக ரூ. 3,000 மில்லியன் ஒதுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது, மேலும் இந்த ஆண்டு இந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளுக்கும் தேவையான தளபாடங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கும் மேலும் ரூ. 1,500 மில்லியன் ஒதுக்க அமைச்சகம் தீர்மானித்துள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள ஒன்றரை இலட்சம் சுகாதார ஊழியர்களுக்கான சேவைகள் மற்றும் நாட்டில் உள்ள சுகாதாரத் துறை தொடர்பான அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் அமைந்துள்ள இந்த கட்டிடத்திலிருந்து விரைவில் நிறுவப்படும். தற்போது பல்வேறு இடங்களிலிருந்து சேவைகளை வழங்கி வரும் சுகாதார அலுவலகங்களை ஒரே கட்டிட வளாகத்திற்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பை இது வழங்கும், மேலும் வாடகை அடிப்படையில் பராமரிக்கப்படும் கட்டிடங்களுக்கு செலுத்தப்படும் பெரிய அளவிலான பணத்தையும், போக்குவரத்து மற்றும் பிற சேவைகளுக்கு செலவிடப்படும் பெரிய அளவிலான பணத்தையும் மிச்சப்படுத்தும். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ, கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலையைக் கவனித்தார். கட்டுமானப் பணிகள் தொடர்பான சேவைகளை வழங்கும் ஒப்பந்த நிறுவனங்களான மத்திய பொறியியல் சேவைகள் நிறுவனம் மற்றும் மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகத்தின் அதிகாரிகளுடன் கட்டுமான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் நீண்ட கலந்துரையாடலை நடத்தினார். இந்த முழு கட்டிடத்தின் கட்டுமானத்தையும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டங்களைத் தயாரிக்குமாறு மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகத்திற்கு (CECB) அமைச்சர் தெரிவித்தார். இந்த கண்காணிப்பு விஐயம் மற்றும் மற்றும் கலந்துரையாடலில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர், நிபுணர் வைத்தியர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர்கள் சாலிந்த பண்டார, சுனில் கலகம, ஜனக கித்சிறி குணவர்தன, துணை இயக்குநர் தினிப்பிராலய ஹேரத், மத்திய பொறியியல் சேவைகள் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் மத்திய பொறியியல் ஆலோசனை பணியகத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/228459
  22. ஏஷ்லி, அனாபெல் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்கள் ஆஸியை வெல்ல வைத்தன; இங்கிலாந்துக்கு முதலாவது தோல்வி Published By: Vishnu 22 Oct, 2025 | 10:49 PM (நெவில் அன்தனி) இந்தியாவின் இந்தூர் ஹொல்கார் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (22) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 6 விக்கெட்களால் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா இலகுவாக வெற்றிகொண்டது. ஏஷ்லி கார்ட்னர் ஆட்டம் இழக்காமல் குவித்த அபார சதம், அனாபெல் சதர்லண்ட் ஆட்டம் இழக்காமல் குவித்த அரைச் சதம் என்பன அவுஸ்திரேலியாவின் வெற்றியை இலகுவாக்கின. இந்த வருட உலகக் கிண்ணத்தில் தோல்வி அடையாமல் இருந்த இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து முதல் தடவையாக தோல்வியைத் தழுவியது. இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 245 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 9.3 ஓவர்கள் மிதமாக இருக்க 4 விக்கெட்களை இழந்து 248 ஓட்டங்களைக் குவித்து வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் 11 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா மீண்டும் முதலாம் இடத்தை அடைந்தது. அவுஸ்திரேலியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய போது 16ஆவது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 68 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. இதன் காரணமாக அவுஸ்திரேலியா பலத்த அழுத்தத்தை எதிர்கொண்டது. ஆனால், அனாபெல் சதர்லண்ட், ஏஷ்லி கார்ட்னர் ஆகிய இருவரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 148 பந்துகளில் 180 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு அபார வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர். இந்தப் போட்டியில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஏஷ்லி கார்ட்னர் 72 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். முதல் 50 ஓட்டங்களுக்கு 47 பந்துகளை எதிர்கொண்ட ஏஷ்லி கார்டனருக்கு அடுத்த 50 ஓட்டங்களைப் பெற வெறும் 22 பந்துகளே தேவைப்பட்டது. அவர் 73 பந்துகளை எதிர்கொண்டு 16 பவுண்டறிகளுடன் 104 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காதிருந்தார். அவருக்கு பக்கபலமாக திறமையாகத் துடுப்பெடுத்தாடிய அனாபெல் சதர்லண்ட் துரதிர்ஷ்டவசமாக 2 ஓட்டங்களால் சதத்தைப் பூர்த்திசெய்யத் தவறினார். 112 பந்துகளை எதிர்கொண்ட அனாபெல் சதர்லண்ட் 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 98 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவர்களைவிட பெத் மூனி 20 ஓட்டங்களையும் எல்சி பெரி 13 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் லின்சி ஸ்மித் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றது. அமி ஜோன்ஸ், டமி போமொன்ட் ஆகிய இருவரும் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அமி ஜோன்ஸ் 18 ஓட்டங்களைப் பெற்றதுடன் அடுத்து களம் புகுந்த ஹீதர் நைட் 20 ஓட்டங்களுடன் வெளியேறினார். அணித் தலைவி நெட் சிவர் - ப்ரன்ட் வெறும் 7 ஓட்டங்களையே பெற்றார். (105 - 3 விக்.) சிறப்பாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த டமி போமொன்ட் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 78 ஓட்டங்ளைப் பெற்று ஆட்டம் இழந்தார். எம்மா லாம்ப் (7), சொஃபியா டன்க்லி (22) ஆகிய இருவரும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க இங்கிலாந்து (166 - 6 விக்.) சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது. ஆனால், அலிஸ் கெப்சி (38), சார்ளி டீன் (26) ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 227 ஓட்டங்களாக உயர்த்தி அதே எண்ணிக்கையில் இருவரும் ஆடுகளம் விட்டகன்றனர். சொஃபி எக்லஸ்டோன் 10 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் லின்சி ஸ்மித் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டநாயகி: அனாபெல் சதர்லண்ட் https://www.virakesari.lk/article/228420
  23. போதை மருந்து கடத்தலுக்கு மரண தண்டனையா? கடந்த சில வாரங்களாக இலங்கை அரசாங்கத்தினால் போதைப்பொருள் கடத்துபவர்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்கள் என பலதரப்படடவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் இவ்வாறான குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை மரண தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என சில புத்திஜீவிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் இலங்கையில் மரண தண்டனையினை நாம் ஏன் எதிர்க்க வேண்டும் என இப்பதிவு விளக்குகின்றது. மரண தண்டனையினை எதிர்ப்பதற்கான காரணங்களாவன இலங்கை போன்ற நாட்டில் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்படும் பொழுது பெருமளவு மனித உரிமை மீறல்கள் நடக்க சாத்தியம் அதிகம் உள்ளது. சட்ட விரோத கைதுகள், வழக்குகள் போன்றவை நடைபெறும். இலங்கையின் தற்போதைய சட்டத்தின் பிரகாரம் 2 கிராம் ஹெரோயின் வைத்திருந்தாலே மரணதண்டனை இந்நிலையில் (மிக சிறிய அளவு – இலகுவாக ஒளித்து வைக்கலாம் ) தனது எதிரிகளை இல்லாது ஒழிக்க பலர் இச்சட்டத்தினை பாவிக்க முற்படுவர் போதைப்பொருள் கடத்தலின் முக்கிய சூத்திரதாரிகளான நபர்கள் மற்றும் அதில் ஈடுபடும் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் மற்றும் பண பலத்தினை பாவித்து நிச்சயம் தப்பிவிடுவார்கள். மேலும் அவர்களுக்காக சிறந்த சட்டதரணிகள் வாதாடி சட்டத்தில் உள்ள ஓட்டைகளால் அவர்கள் நிச்சயம் வெளிவந்து விடுவார்கள். பணவசதியற்ற ஏழைகளின் தலைகளே எதிர்காலத்தில் உருளும். மேலும் போதைப்பொருள் கடத்துபவர்கள் பெரும்பாலும் தமது வருமானத்திற்காகவே செய்வார்கள். அவர்களை இயக்கும் நபர்கள் பெரும்பாலும் தப்பிவிடுவார்கள். போதைப்பொருட்கள் தொடர்பான வழக்குகள் குற்றவியல் வழக்குகள் ஆகும். இவ்வாறன ஒரு குற்றவியல் விசாரணையின் பொழுது சம்பந்தப்படும் பல தரப்புக்கள் தவறினை விடலாம். உதாரணமாக போலீசார் உரிய சந்தேக நபரினை கைது செய்யாமல் விடலாம், போலீசார் உரிய சாட்சியினை வழங்காது விடலாம், அதிகாரிகள் தவறான சான்று பொருட்களை சமர்ப்பிக்கலாம், போலீசார் நீதி மன்றினை தவறாக வழிநடத்தலாம் மற்றும் சிறந்த குற்றவியல் சட்ட தரணியின் சேவை சந்தேக நபருக்கு கிடைக்காமல் விடலாம். அரசியல்வாதிகளை பழிவாங்கவும், சிறுபான்மையினரை பழிவாங்கவும் மரணதண்டனை பயன்படலாம் மேலும் இதன் காரணமாக பொருளாதாரத்தில் நலிவுற்றோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். நீதித்துறையின் தவறு காரணமாக மரண தண்டனை வழங்கப்படலாம். அமெரிக்காவில் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட 200 மேற்பட்டவர்கள் பிற்பாடு நடந்த தீவிர விசாரணை மீளாய்வு காரணமாக மரண தண்டனையில் இருந்து கடந்த காலங்களில் விடுதலை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மரண தண்டனை போன்ற பாரிய தண்டனைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் குற்றங்கள் குறைக்கப்பட்டதாய் விஞ்ஞான ரீதியில் சான்றுகள் ஏதும் இல்லை. எனவே மரண தண்டனையினை எதிர்ப்போம். https://rb.gy/j0twu8 கட்டுரையாளர் பற்றி பொதுசுகாதார மற்றும் தனி நபர்சுகாதார விடயங்கள் (public and personal hygiene) போன்றவற்றை அறிந்து வைத்திருப்பது போல சட்ட மருத்துவ விடயங்கள் பலவற்றையும் சாதாரண மக்கள் பகுதியளவில்லேனும் அறிந்து இருக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் அனாவசியமான உயிரிழப்புகள் மற்றும் பாரதூரமான காயங்கள் என்பவற்றில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளலாம். மேலும் பாலியல் துஸ்பிரயோகங்கள், பால்நிலைக்கு எதிரான வன்முறைகள், மனித சித்திரவதைகள். தொழிற்ச்சாலை காயங்கள் (Occupational injuries)… போன்றவற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் அத்தோடு அவற்றிக்கு எதிராகவும் போராடவும் முடியும். Dr. கனகசபாபதி வாசுதேவா ஆகிய நான் MBBS , Post Graduate Diploma in Legal Medicine (DLM ), Post Graduate Diploma in Toxicology மற்றும் MD (Forensic Medicine) ஆகிய கற்கை நெறிகளை கற்றுள்ளேன். சட்ட மருத்துவராக மேற்படிப்பு கற்பதற்கும் கடமை ஆற்றுவதற்கும் பெரும்பாலான வைத்தியர்கள் விரும்பாத நிலையில் என்னை ஊக்குவித்து இந்நிலைக்கு உயர்த்திய எனது பெற்றோர்களான திரு. செல்லத்துரை கனகசபாபதி மற்றும் சிவகுரு சிவசக்தி ஆகியோருக்கு எனது இவ்வலைப்பூவினை காணிக்கை ஆக்குகின்றேன்.
  24. மலசலக்குழியில் வெடிப்பு சம்பவம் ஏன்?? நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் October 14, 2025 இலங்கையில், கல்சியம் கார்பைட் என்ற இரசாயனப்பொருள் பெரும்பாலும் மலசல கூட மற்றும் சமையலறைக் கழிவு குழாய்களில் ஏற்படும் அடைபாடுகளை நீக்க பயன்படுகிறது. துயர சம்பவம் நடந்த பகுதி, கொழும்பு மாநகரின் புறநகர் பகுதி அக்குடும்பத்தினரின் மலசலகூடம் ஆனது வீட்டுடன் இணைந்த நிலையில் இருந்தது. ஆனால் கழிவுத் தொட்டியானது (Septic tank) ஏறத்தாழ 30 அடி தூரத்தில் வளவின் பின்புறத்தில் அமைந்திருந்தது. அதிக தூர காரணமாக அடிக்கடி அவர்களது மலக்கழிவு கொண்டுசெல்லும் குழாயில் அடைப்பு ஏற்படும். வழமையாக அவர்கள் கல்சியம் காபைட் இணை பாவித்து அடைப்பு எடுப்பார்கள். அன்று மாலையும் அவ்வாறே ஏற்பட்டது. வீட்டு தலைவன், அவரது மச்சான் மற்றும் பிள்ளைகள் உடனடியாக காரியத்தில் இறங்கினர். தலைவர் கல்சியம் காபைட் கல்லுகளை மலக்குழியினுள் (Toilet pan) போட்டு இறப்பர் குழாய் மூலம் கழிவுத்தொட்டியினை நோக்கி தள்ளினார். மற்றவர்கள் கழிவுத்தொட்டியின் மேற்பகுதியில் உள்ள சிறு துவாரம் மூலம் அடைப்பு எடுபடுகின்றதா? என்று மாறிமாறி அவதானித்து வீட்டு தலைவனுக்கு சொல்லிக்கொண்டிருந்தனர். வெகுநேரம் ஆகியும் அடைப்பு எதுவும் எடுபட்ட மாதிரி தெரியவில்லை. இருளும் சூழ தொடங்கிவிட்டது. கடைசியாக மச்சான் தனது பொக்கற்றில் இருந்த சிகரற்று லைட்டறினை எடுத்து பற்றவைத்து பார்த்தார். ஒரு சிலவினாடிகள் தான் பெரும் வெடியோசை ஒன்று கேட்டது. மலசல கழிவுத்துத்தொட்டியினை சுற்றி நின்ற சிறுவர்கள், லைட்டரினை பற்ற வைத்து பார்த்த மச்சான் ஆகியோர் பலதூர அடிகளுக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டனர். மலசல கழிவுத்தொட்டியின் சிமெந்து மூடியும் தூக்கி வீசப்பட்டது. அவர்களில் மச்சான் தலையில் ஏற்பட்ட அதிக காயம் காரணமாக உடனேயே மரணித்தார். இராணுவமும் போலீசாரும் குவிக்கப்பட்டு ஏதாவது வெடிபொருள் வெடித்ததா? என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியது. 12/10/2025 இல் நடந்த சம்பவம் 2020 இல் நடந்த சம்பவம் கல்சியம் காபைட் ஆனது நீருடன் தாக்கம் அடையும் பொழுது அசற்றலின் வாயு வெளிவரும், இவ்வாயுவானது மிக எளிதாக தீப்பற்றி எரியும் தன்மையுடையது மற்றும் இவ் இரசாயனத் தாக்கம் ஒரு புறவெப்பத் தாக்கம் இதன் காரணமாக தானாகவே தீப்பற்றும் சாத்தியக்கூறு உள்ளது. இங்கு மலசலக்கழிவுத்தொட்டியானது ஓர் இறுக்கமான மூடிய அறை ஆகும். இங்கு அசற்றலின் வாயு தீ பற்றி ஏரியும்பொழுது அதனுள் இருந்த வாயுக்கள் சடுதியாக பெருமளவில் விரிவடையும் அப்பொழுது எவ்வித வெடிபொருளும் இன்றி வெடிப்பு (Blast) சம்பவம் நிகழலாம். இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி பலவீடுகளில் அடிக்கடி நடைபெறுகின்றது. இந்த நிலையில் இவ்வாறு ஏற்படும் அடைப்புக்களை கார்பைட் பாவித்து எடுக்க முயற்சிக்க கூடாது. மாறாக வேறு பின்வரும் வழிமுறைகளில் ஒன்றினை கைக்கொள்வதன் மூலம் தேவையற்ற உயிரிழப்புக்களை தடுத்து கொள்ளலாம் 1. டிஷ் சோப்பும் வெந்நீரும் கழிப்பறை காகிதம் அல்லது மலக் கழிவுகளால் ஏற்பட்ட அடைப்புகளை நீக்க இது உதவும். செய்முறை, அரைக்கட்டி அளவு டிஷ் சோப்பை டாய்லெட் பேசினில் போடவும் பிற்பாடு ஒரு வாளி நீரில், சூடான, ஆனால் கொதிக்காத (போர்சிலின் உடையாமல் இருக்க) நீரை எடுத்துக் கொள்ளவும். அதை இடுப்பு உயரத்திலிருந்து டாய்லெட் பேசினில் ஊற்றவும். இந்த கலவையை 15–30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். சோப் அடைப்பை இளக்கிவிடும். பிறகு, தண்ணீர் ஊற்றி ஃபிளஷ் செய்யவும். 2. பேக்கிங் சோடா மற்றும் வினிகர் பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கலவையின் இரசாயனத்தாக்கம் ஆபத்தில்லாத காபனீர்ஓட்ஸைட் வாயுவினை உருவாக்கும், இது அடைப்புகளை உடைக்க உதவும். செய்முறை, ஒரு கப் பேக்கிங் சோடாவை டாய்லெட் பேசினில் ஊற்றவும். பிறகு, இரண்டு கப் வெள்ளை வினிகரை மெதுவாக ஊற்றவும். நுரைக்க 30–60 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். பின்னர், டாய்லெட்டை ஃபிளஷ் செய்யவும். 3. பிளன்கர் (Plunger) முறை சாதாரண அடைப்புகளுக்கு, பிளன்கர் மிகவும் பயனுள்ள கருவியாகும். செய்முறை, பிளன்கரின் ரப்பர் முனை முழுவதுமாக நீரில் மூழ்கியிருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். தேவைப்பட்டால், கூடுதல் நீரை ஊற்றலாம். பிளஞ்ச் செய்யுங்கள். பிளன்கரைக் கொண்டு, பம்ப் செய்வது போல, அழுத்தி மேலும் கீழும் வேகமாகக் குலுக்கவும். இதை 15 முதல் 20 வினாடிகள் செய்யுங்கள். அடைப்பு நீங்கிவிட்டதா என்பதைச் சோதிக்க, பிளன்கரை அகற்றிவிட்டு, தண்ணீர் வடியும் வேகத்தைப் பார்க்கவும். 4. விசேடமாக வடிவமைக்கப்பட்ட கம்பிகளை கொண்டு சீர்செய்யும் முறை (Flexible grabber claw) மேற்குறிய முறைகளில் அடைப்பு எடுபடவிட்டால் அடைப்பு மிகவும் கடுமையானதாக இருந்தால், நீங்கள் ஒரு பிளம்பரை அழைக்க வேண்டியிருக்கலாம். அடைப்பை நீக்கும் முன், டாய்லெட் பேசினில் தண்ணீர் நிரம்பி வழிவதைத் தவிர்க்க, ஃபிளஷ் செய்ய வேண்டாம் நன்றி https://tamilforensic.wordpress.com/2025/10/14/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?fbclid=IwVERDUANgJHtleHRuA2FlbQIxMAABHmTVDgNJaTM4KzcFX9t5uWlkPBMD3zlpr5GSgr23YVekpxZ6qKchEvPfRvbY_aem_YQgQfifOdNkqslhk4k2L3w

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.