Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. நடராஜன் உள்ளிட்ட தமிழ்நாட்டு வீரர்கள் புறக்கணிப்பா? இந்திய கிரிக்கெட் அணி தேர்வில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், சிவகுமார் ராஜகுலம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அதிர்ச்சி... ஆச்சர்யம்... உலகக்கோப்பைக்கு 140 கோடி இந்தியர்களின் கனவுகளை சுமந்து செல்லும் அணி அறிவிக்கப்படும் ஒவ்வொரு முறையும் கிரிக்கெட் உலகில் தவறாமல் பேசப்படும் சொற்கள் இவை. எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வும் அதற்கு விதிவிலக்கு அல்ல. அதுவும், நாடெங்கும் ஐபிஎல் கிரிக்கெட் ஜூரம் உச்சத்தில் இருக்கும் வேளையில் டி20 அணி அறிவிப்பு வெளியாகியிருப்பது கூடுதல் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. கிரிக்கெட் நேரலையில் பங்கேற்கும் வர்ணனையாளர்கள், கிரிக்கெட் நிபுணர்கள் உலகக்கோப்பை இந்திய அணித் தேர்வு குறித்து அலசி, ஆராய்ந்து வரும் வேளையில் சமூக ஊடகங்களில் ரசிகர்களும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்திய அணியில் தங்களது சொந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வீரர் கூட இடம் பெறாதது வருத்தம் தருவதாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி வரும் நடராஜனுக்கு வாய்ப்பு தரப்படாதது குறித்து அவர்கள் தங்களது அதிருப்தியை சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் பத்ரிநாத்தின் கருத்து அதற்கு உரம் சேர்ப்பதாக அமைந்தது. தமிழ்நாட்டு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் பத்ரிநாத்தின் பேச்சைக் குறிப்பிட்டு, இந்திய அணியில் தமிழ்நாட்டு வீரர் ஒருவர் கூட இடம் பெறாதது குறித்த ஏமாற்றத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்த ரசிகர்களின் சமூக ஊடக விமர்சனங்கள் இன்னும் ஓயாத நிலையில், அந்த அணியை தேர்வு செய்த பிசிசிஐ தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகார்கரும், அணி கேப்டன் ரோகித் சர்மாவும் செய்தியாளர் சந்திப்பில் சில விளக்கங்களை அளித்துள்ளனர். இந்திய அணி தேர்வில் அவர்கள் கடைபிடித்த அணுகுமுறை என்ன? உலகக்கோப்பையை வெல்வதற்கான எந்தெந்த உத்திகளின் அடிப்படையில் இந்திய அணியை அவர்கள் தேர்வு செய்தார்கள்? இந்திய அணி தேர்வில், குறிப்பாக நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்காததில் ரசிகர்கள் விமர்சிப்பதைப் போல அரசியல் விளையாடியுள்ளதா? இந்திய அணி தேர்வு எவ்வாறு நடக்கிறது? விரிவாகப் பார்க்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி வரும் ஜூன் 2-ம் தேதி தொடங்கும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் 4 சுழற்பந்துவீச்சாளர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்கள், 2 விக்கெட் கீப்பர்கள் இடம் பெற்றிருந்தனர். ரோகித் சர்மா, விராட் கோலி, ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் டாப் ஆர்டர் பேட்டிங்கில் இடம் பிடித்திருந்தனர். ரிஷப் பந்த், சஞ்சு சாம்ஸன் ஆகிய 2 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இரு ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர்களுடன், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய சுழற்பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். வேகப்பந்துவீச்சை கவனித்துக் கொள்ள ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோருடன் அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே ஆகிய இருவரும் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாக வாய்ப்பு பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் குறைக்கப்பட்டு, கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன் மாற்று வீரர்களாக, சுப்மான் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES நடராஜன் சேர்க்கப்படாததால் ரசிகர்கள் அதிருப்தி டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட அந்த விநாடியே, இந்தியா முழுவதும் அதுகுறித்த விவாதங்கள் தொடங்கிவிட்டன. அதுவும் ஐபிஎல் கிரிக்கெட் வேளையில் அறிவிப்பு வெளியானதால் அது இன்னும் கூடுதல் கவனத்தை பெற்றுவிட்டது. சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பலரும் இந்திய அணி தேர்வு குறித்த தங்களது பார்வையை பதிவிடத் தொடங்கிவிட்டனர். டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே “நடராஜன்” என்ற பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாறியது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 பத்ரிநாத் கூறியது என்ன? காட்சி ஊடகங்களும், யூடியூப் சேனல்களும் தங்கள் பங்கிற்கு கிரிக்கெட் சேவையாற்றின. அவற்றில் தோன்றிய கிரிக்கெட் நிபுணர்கள் இந்திய அணியில் தேர்வான வீரர்கள், ரசிகர்கள் எதிர்பார்த்து வாய்ப்பு கிடைக்காமல் போன வீரர்களின் ஆட்டங்கள் குறித்த புள்ளிவிவரங்களுடன் தங்களது விமர்சனப் பார்வைகளை முன்வைத்தனர். அந்த வரிசையில், டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரரும், இன்றைய கிரிக்கெட் வர்ணனையாளருமான சுப்ரமணியம் பத்ரிநாத்தின் கருத்து, சமூக ஊடகங்களில் நடராஜனுக்காக களமாடிய தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் மனநிலையை அப்படியே பிரதிபலித்தது. "இந்திய அணியில் நடராஜன் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்திய அணியில் இடம் பிடிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மட்டும் ஏன் 2 மடங்கு சிறப்பாக விளையாடி திறமையை நிரூபிக்க வேண்டியுள்ளது. தனிப்பட்ட முறையில் நானும் இதுபோன்ற சூழலை எதிர்கொண்டிருக்கிறேன். 500 விக்கெட் எடுத்த அஸ்வினின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். 65 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள முரளிவிஜய் இந்தியாவின் தலைசிறந்த 5 சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவர். அவர் 2 இன்னிங்ஸ் சிறப்பாக ஆடாவிட்டால் கேள்வி எழுப்புகிறார்கள், " என்று அவர் தெரிவித்தார். அத்துடன், தனது சமூக வலைத்தளப் பக்கத்திலும் நடராஜனுக்கு ஆதரவாக பத்ரிநாத் கருத்துப் பதிவிட்டிருந்தார். "அர்ஷ்தீப் அல்லது கலீல் அகமதுவுக்கு மேலாக நடராஜன் பெயர் இல்லாதது ஆச்சர்யம் அளிக்கிறது" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். Twitter பதிவை கடந்து செல்ல, 2 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 ஐபிஎல் போட்டிகளில் நடராஜன் செயல்பாடு எப்படி? நடராஜன் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்த அதிருப்தியில் இருந்த தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் குமுறலை பத்ரிநாத்தின் கருத்து இன்னும் அதிகப்படுத்திவிட்டது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாடுகள் குறித்த புள்ளிவிவரங்களை ஒப்பிட்டு நடராஜனின் செயல்பாட்டை பாராட்டு சமூக ஊடகங்களில் அவர்கள் எழுதத் தொடங்கிவிட்டார்கள். நாமும் ஐபிஎல் இணையதளத்தில் வீரர்களின் செயல்பாடுகள் குறித்த புள்ளிவிவரங்களை ஆராய்ந்தோம். அதன்படி பார்த்தோமானால், இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது நடராஜன், சன்ரைசர்ஸ் அணிக்காக 7 போட்டிகளில் ஆடி 13 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அவர் ஓவருக்கு சராசரியாக 9 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். அதேநேரத்தில், உலகக்கோப்பைக்கான அணியில் தேர்வாகியுள்ள முகமது சிராஜ் 9 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார். ஓவருக்கு சராசரியாக 9.50 ரன்களை அவர் விட்டுக் கொடுத்துள்ளார். அணியில் தேர்வாகியுள்ள மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் 9 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது எகானமி ரேட் 9.68. ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே நடராஜனை விட சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்துவீச்சாளர் என்று ஐ.பி.எல். புள்ளிவிவரம் கூறியது. அவர் 10 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தனது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கையை 15ஆக உயர்த்திக் கொண்டுள்ள நடராஜன், அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளருக்கான நீலத் தொப்பியை வசப்படுத்தியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஹர்திக் பாண்டியா தேர்வு பற்றி ரசிகர்கள் கேள்வி நடப்பு ஐ.பிஎல். தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் சஞ்சு சாம்ஸன், ஷிவம் துபே, சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். தற்போதைய இந்திய அணியில் சிறந்த கிளாசிக் பேட்ஸ்மேனாக கருதப்படும் லோகேஷ் ராகுல், நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட ரிஷப் பந்த், சாம்ஸன் ஆகியோருடனான போட்டியில் பின்தங்கியுள்ளார். நடு வரிசையில் அதிரடி காட்டும் ரிங்கு சிங்கிற்கு மாற்று வீரராக மட்டுமே இடம் கிடைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் காயமடைந்து வெளியேறிய பிறகு இன்னும் ஒரு சர்வதேச போட்டியில் கூட ஆடாத, நடப்பு ஐ,பி.எல். தொடரிலும் பேட்டிங், பந்துவீச்சு, கேப்டன்சி என்று எதிலுமே பெரிதாக ஜொலிக்காத ஹர்திக் பாண்டியாவுக்கு அணியில் இடம் கிடைத்ததுடன், துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருப்பது ரசிகர்களின் புருவத்தை உயரச் செய்துள்ளது. பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவும் கூட, ஹர்திக் பாண்டியா தேர்வு குறித்த தனது கருத்தை பதிவிட்டிருந்தார். "மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக ஹர்திக் பாண்டியா மீது தேர்வுக்குழு வைத்துள்ள நம்பிக்கையையே இது காட்டுகிறது" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். Twitter பதிவை கடந்து செல்ல, 3 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 3 தமிழ்நாடு அமைச்சர் கருத்து அதேநேரத்தில், நடப்பு ஐ.பிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படும் நடராஜனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது அதிர்ச்சி அளிப்பதாகவே ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர். கிரிக்கெட் வர்ணனையாளர்கள், நிபுணர்கள், ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டு அமைச்சர் ஒருவருமே இதற்கு நேரடியாக கருத்துப் பகிர்ந்தார். தமிழ்நாட்டின் தொழிற்துறை அமைச்சரான டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "இது விரிவாக விவாதிக்கப்படுவது சிறப்பான ஒன்று. தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு பலமுறை அவர்களுக்குரிய இடத்தைக் கொடுக்காமல் டெல்லி மறுத்துள்ளது. இது சமீப காலமாக அதிக அளவில் நடக்கிறது. இது ஆட்சிக்கெல்லாம் அப்பாற்பட்டது. பல விளையாட்டுகளிலும் டெல்லி இவ்வாறுதான் குறுகிய பார்வையுடன் செயல்படுகிறது. தென் மாநிலங்களைச் சேர்ந்த சிறந்த திறன் மிக்க விளையாட்டு வீரர்கள் குறித்து டெல்லி பெரும்பாலான நேரங்களில் பாராமுகமாகவே இருக்கிறது." என்று குறிப்பிட்டதுடன், பத்ரிநாத் தனது மனதில் பட்டதை பேசியதற்காக பாராட்டியும் இருந்தார். Twitter பதிவை கடந்து செல்ல, 4 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 4 "நடராஜனை தேர்வு செய்திருக்க வேண்டும்" ஹர்திக் பாண்டியா தேர்வு, நடராஜனுக்கு அணியில் இடம் கிடைக்காதது, பத்ரிநாத் கருத்து மற்றும் ரசிகர்களின் விமர்சனம் குறித்து விளையாட்டு விமர்சகர் சுமந்த் சி.ராமன், பிபிசி தமிழிடம் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். பத்ரிநாத் ஆதங்கம் குறித்துக் கேட்ட போது, "பத்ரிநாத்தின் கருத்தை ஓரளவு ஏற்றுக் கொள்லாம். ஆனால், அத்துடன் அப்படியே உடன்பட முடியாது. தற்போது சிறப்பான ஃபார்மில் இருக்கும் நடராஜனை இந்திய அணியில் சேர்த்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். யார்க்கர் வீசுவதில் வல்லவரான நடராஜன், டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படுகிறார். அவர் இந்திய அணிக்கு சிறந்த தேர்வாக இருந்திருப்பார். பும்ரா அல்லது முகமது சிராஜூக்குப் பதிலாக நடராஜனை சேர்க்க வேண்டும் என்று கூறவில்லை. அதற்கு அடுத்த இடத்தை நடராஜனுக்கு வழங்கி இருக்கலாம். அர்ஷ்தீப், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகியோரில் ஒருவருக்குப் பதிலாக நடராஜன் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கலாம்" என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணி தேர்வு எப்படி நடக்கிறது? இந்திய அணியில் இடம் பெற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் 2 மடங்கு சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது என்ற பத்ரிநாத் விமர்சனம் குறித்த கேள்விக்கு, "அப்படி எல்லாம் சொல்ல முடியாது. சமீபத்திய ஆணடுகளில் இந்திய அணிக்காக முரளி விஜய், அஸ்வின், நடராஜன், வருண் சக்கரவர்த்தி, சாய் சுதர்சன் என பல வீரர்கள் விளையாடியுள்ளனர். அடுத்தடுத்து வாய்ப்பு பெற்று வருகின்றனர். ஒரு காலத்தில் இந்திய அணியில் மும்பை, கர்நாடகா, தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களே அதிகம் இடம் பிடித்து வந்தனர். அதுவே, சமீப காலமாக மும்பை மற்றும் டெல்லியைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இடம் பிடிக்கின்றனர். தற்போதைய அணியிலும் கூட 8 அல்லது 9 வீரர்கள் மும்பை மற்றும் டெல்லியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்." என்றார் சுமந்த் சி.ராமன். அப்படி என்றால் வீரர்கள் தேர்வில் அரசியல் இருக்கிறது என்ற ரசிகர்களின் விமர்சனம் உண்மைதானா? என்று கேள்வி எழுப்பிய போது, "அது அப்படி அல்ல. இந்திய அணி தேர்வாளர்கள் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள கிளப்களுக்கும், அகாடமிகளுக்கும் அடிக்கடி செல்வார்கள். அங்கே, வீரர்களின் திறமையை நேரில் பார்க்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கிறது. அதுதவிர, தேர்வாளர்களுடன் அறிமுகமாகி சில வீரர்கள் ஓரளவு பரிச்சயத்தையும் ஏற்படுத்திக் கொள்வார்கள். சில வீரர்கள் தங்களது திறமையால் தேர்வாளர்களை நேரடியாக கவர்வதும் உண்டு. அணி தேர்வு என்பது வெறும் ரன்கள், விக்கெட்டுகள் அடிப்படையில் மட்டும் நடக்காது. அணியில் உத்தி சார்ந்து சில தேவைகள் எழும் போது, திறமையான ஆட்டத்தால் நேரில் கவர்ந்த அல்லது பரிச்சயமான வீரர்கள் பொருத்தமாக இருப்பார்கள் என்று தேர்வாளர்கள் கருதும் பட்சத்தில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிடும். எல்லோரும் மனிதர்கள் தானே. புள்ளிவிவரங்களைக் காட்டிலும் நேரடி சந்திப்புகளும், திறமையால் ஏற்பட்ட ஈரப்பும் எப்போதும் அவர்கள் மனதில் இருக்கும் தானே. இதுவே, மும்பை மற்றும் டெல்லி வீரர்களுக்கு அனுகூலமானதாக இருக்கிறது. நான் சொல்ல வருவது மும்பை மற்றும் டெல்லியில் வசிக்கும் வீரர்களை. ரஞ்சி, ஐபிஎல் போன்ற உள்நாட்டு தொடர்களில் அவர்கள் வெவ்வேறு அணிகளுக்கு விளையாடுபவர்களாக இருக்கலாம்." என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES "ஹர்திக் பாண்டியா தேர்வு ஏன்?" டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணித் தேர்வு நாடெங்கும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பேசுபொருளாக இருக்கும் நிலையில், இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கரும், கேப்டன் ரோகித் சர்மாவும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது எதிர்பார்க்கப்பட்டபடியே ஹர்திக் பாண்டியா தேர்வு குறித்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். சர்வதேச போட்டிகளில் கடந்த அக்டோபருக்குப் பிறகு விளையாடாத, தற்போது நல்ல ஃபார்மிலும் இல்லாத ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்தது ஏன்?அவரை துணை கேப்டனாக நியமித்தது ஏன்? என்பனவற்றை நியாயப்படுத்த இருவருக்குமே சற்று நேரம் பிடித்தது. "ஹர்திக் பாண்டியா நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்துள்ளார்" என்ற அகார்கர், "மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் விளையாடுகிறார். உலகக்கோப்பையில் எங்களது முதல் போட்டியில் ஆட இன்னும் ஒரு மாதத்திற்கும் அதிக காலம் உள்ளது. அதற்கு அவர் தனது பார்மை மீட்டுவிடுவார்" என்று குறிப்பிட்டார். நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் போது, இந்திய அணிக்கு ஹர்திக் சேர்க்கும் வலிமையை, இப்போதைய நிலையில் குறிப்பாக பந்துவீச்சில் வேறு யாரும் தர முடியாது. அவரது உடல் தகுதி மிக முக்கியமானது. ஐ.பிஎல். இதுவரையிலும் அவருக்கு சிறப்பானதாகவே இருக்கிறது." என்று அகார்கர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழக வீரர்களில் யார் பெயர் பரிசீலிக்கப்பட்டது? பந்துவீச்சு கூட்டணி தேர்வு குறித்துப் பேசிய ரோகித் சர்மா, "4 சுழற்பந்துவீச்சாளர்கள், 3 வேகப்பந்துவிச்சாளகள் மற்றும் ஹர்திக் பாண்டியா இருக்க வேண்டும் என்று விரும்பினேன். சுழற்பந்துவீச்சில் குல்தீப், சாஹல் ஆகியோருடன் ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய ஆல்ரவுண்டர்கள் பலம் சேர்ப்பார்கள். எதிரணியைப் பொருத்து ஆடும் 11 வீரர்களை இறுதி செய்வோம்" என்றார். இந்திய அணியில் 4 சுழற்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றிருந்தாலும் அவர்களில் ஒருவர் கூட ஆஃப் ஸ்பின்னர் இல்லை. அனைவருமே இடது கை பந்துவீச்சாளர்கள். ஆகவே ஆஃப் ஸ்பின்னரை ஏன் எடுக்கவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த ரோகித், அதுகுறித்து அணி நிர்வாகம் நிறைய விவாதித்ததாக கூறினார். "துரதிர்ஷ்டவசமாக அதில் வாஷிங்டன் சுந்தர் இடம் பெறவில்லை. அவர் சமீப காலமாக அதிக போட்டிகள் விளையாடவில்லை. ஆகவே, அஸ்வினா அல்லது அக்ஸர் படேலா என்பதாகவே விவாதம் இருந்தது. அஸ்வின் நீண்ட காலமாக சர்வதேச டி20 கிரிக்கெட் ஆடவில்லை. அதேநேரத்தில், கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய 5 போட்டிகளில் விளையாடிய போது அக்ஸர் படேல் நல்ல ஃபார்மில் இருந்தார். அவர் சிறப்பாக பந்துவீசி வருகிறார். அத்துடன், பேட்டிங்கிலும் நடு வரிசையில் இடது கை பேட்ஸ்மேனை களமிறங்க விரும்புகையில் அதற்கான சிறந்த தெரிவாக அக்ஸர் படேல் இருப்பார்" என்று கூறினார். அதேபோல், வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியாவும், ஷிவம் துபேவும் பந்துவீச்சிலும் அணிக்கு வலுசேர்ப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக ரோகித் சர்மா தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES அணியில் 4 சுழற்பந்துவீச்சாளர்கள் ஏன்? வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் வெஸ்ட் இண்டீஸில் நடக்கக் கூடிய டி20 உலகக்கோப்பைக்கு 4 சுழற்பந்துவீச்சாளர்கள் ஏன் என்ற கேள்வி இந்திய அணி அறிவிக்கப்பட்டது முதலே இருந்து வருகிறது. நடராஜனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பத்ரிநாத் கூட, 4 சுழற்பந்துவீச்சாளர்கள் எதற்கு என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். இதே கேள்வியை செய்தியாளர்கள் முன்வைத்த போது பதிலளித்த ரோகித் சர்மா, "அதுதொடர்பாக விரிவான தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் அனைத்து எதிரணி கேப்டன்களும் இதனை கேட்பார்கள். அதனால் சுருக்கமாக பதிலளிக்கிறேன். 4 சுழற்பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பெற வேண்டும் என்று விரும்பினேன். அங்கே நிறைய போட்டிகள் விளையாடியுள்ளோம். அங்குள்ள சூழல் எங்களுக்கு நன்றாக தெரியும். போட்டிகள் காலை 10 அல்லது 10.30 மணிக்கு தொடங்கவுள்ளன. அதில் டெக்னிக்கலாக சில விஷயங்கள் உள்ளன. வெஸ்ட் இண்டீசில் எனது முதல் செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து கூடுதல் விவரங்களை பகிர்ந்து கொள்வேன். 4 சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்ததற்கு காரணம் உள்ளது. அதனை அங்கே நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் நிச்சயம் கூறுவேன்." என்று தெரிவித்தார். டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் 2 முதல் ஜூன் 29 வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. அதில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி வரும் 21-ம் தேதி அமெரிக்கா புறப்படுகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி நியூயார்க் நகரில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. https://www.bbc.com/tamil/articles/cljd0rgdk4go
  2. Published By: DIGITAL DESK 3 03 MAY, 2024 | 11:54 AM அரகலய போராட்ட காலத்தில் கண்டி அணிவத்த பிரதேசத்தில் உள்ள வீடு தீக்கிரையாக்கப்பட்டதையடுத்து, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட பாவனைக்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட மத்திய மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மார்ச் மாதத்திற்கான வாடகைத் தொகை கிடைக்காத நிலையில், ரம்புக்வெல்லவின் சம்பளத்தில் இருந்து உரிய பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு மத்திய மாகாண முதலமைச்சு பாராளுமன்ற செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இது தொடர்பான கடிதம் ஏப்ரல் முதலாம் திகதி அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இதுவரை எந்த பதிலும் வரவில்லை எனவும் மத்திய மாகாண சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் இந்த வீட்டை பயன்படுத்துவதற்காக தனது சம்பளத்தில் 20 வீதத்தை மாகாண சபை கணக்கில் வரவு வைத்துள்ளார் என்றும், சுற்றாடல் அமைச்சராக இருந்த காலத்தில் உரிய தொகையை மத்திய மாகாண சபை உரிய முறையில் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடிதம் ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, ரம்புக்வெல்ல தற்போது பாராளுமன்ற உறுப்பினராக உள்ளநிலையில், அவரது தனிப்பட்ட ஊழியர்கள் தற்போது மத்திய மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தை பயன்படுத்தி வருகின்றனர். முன்னால் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சுப் பதவியை இழந்துள்ளமையினால், அவரது அமைச்சுப் பதவியில் இருந்து குறித்த இல்லத்தை பயன்படுத்துவதற்கு மாகாண சபைக்கு செலுத்த வேண்டிய தொகையை பெற்றுக்கொள்ளுமாறு கோரி மாகாண முதலமைச்சு பாராளுமன்ற செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. https://www.virakesari.lk/article/182544
  3. லாப் சமையல் எரிவாயு விலைகள் குறைப்பு Published By: DIGITAL DESK 3 03 MAY, 2024 | 12:37 PM லாப் சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று வெள்ளிக்கிழமை (03) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 3,840 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 110 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 1,542 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/182565
  4. நடராஜனுக்கு பர்ப்பிள் தொப்பி - ராஜஸ்தானை 1 ரன்னில் வீழ்த்திய ஹைதராபாத்தின் துல்லியமான யார்க்கர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மே 2024, 02:41 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஐபிஎல் தொடரில் வியாழக்கிழமை நடந்த ஆட்டத்தில், கடைசி ஓவரின் 5வது பந்துவரை ஆட்டம் ராஜஸ்தான் பக்கம் இருந்த நிலையில் கடைசிப்பந்தில் ஆட்டம் சன்ரைசர்ஸ் பக்கம் திரும்பி வெற்றி பெற்றதை யாராலும் கணித்திருக்க முடியாது. சன்ரைசர்ஸ் அணியினருக்கு கூட தாங்கள் வெற்றி பெறுவோமா என்பதில் சந்தேகம் இருந்திருக்கக்கூடும். ஆனால் முடிவு அவர்களுக்குச் சாதகமாகவே அமைந்துவிட்டது. அதேசமயம், ராஜஸ்தான் அணியினருக்கும் எப்படித் தோற்றோம் எங்கு தோற்றம் என்பது புதிராக இருந்தது. 19-ஆவது ஓவர்வரை ராஜஸ்தான் அணியின் ரன்ரேட் 10 ரன்களுக்குக் குறையாமல் இருந்துவந்தநிலையில் கடைசி ஓவரிலும் வெற்றிக்கு அருகே சென்று கோட்டைவிட்டுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 50-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஒரு ரன்னில் தோற்கடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்தது. 202 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் சேர்த்து ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பிளே ஆப் வாய்ப்பு யாருக்கு? இந்தத் தோல்வியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் தொடர்ந்து 10 போட்டிகளில் 8வெற்றி, 2 தோல்வி என 16 புள்ளிகளுடன் முதலிடத்தில், நிகர ரன்ரேட் 0.622 என்று இருக்கிறது. இன்னும் ராஜஸ்தான் அணிக்கு 4 லீக் ஆட்டங்கள் இருக்கும் நிலையில் அதில் குறைந்தபட்சம் 2 போட்டிகளில் வென்றாலே ப்ளே ஆஃப் சுற்றுக்குள் முதல் இரு இடங்களைப் பிடித்துவிட முடியும். சன்ரைசர்ஸ் அணி 10 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்வி என 12 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்துக்கு நகர்ந்துள்ளது. நிகர ரன்ரேட் 0.072 என்று வைத்துள்ளது. சிஎஸ்கே அணி 4ஆவது இடத்தில் இருந்தநிலையில் 5-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் அணிக்கு இன்னும் மீதம் 4 ஆட்டங்கள் உள்ளன. இதில் குறைந்தபட்சம் அடுத்துவரும் 3 ஆட்டங்களில் வென்றால்தான் சன்ரைசர்ஸ் சிக்கல் இல்லாமல் ப்ளே ஆஃப் செல்ல முடியும். இல்லாவிடில், 16 புள்ளிகளோடு இருந்தால், நிகர ரன்ரேட் சிக்கல் வந்துவிடும். சன்ரைசர்ஸ் அணிக்கு, மும்பை(மே6), லக்னோ(மே8), குஜராத்(மே16), பஞ்சாப்(மே19) ஆகிய அணிகளுடன் போட்டிகள் உள்ளன. மும்பை அணியை ஏற்கெனவே சன்ரைசர்ஸ் தோற்கடித்திருப்பதால், 2-ஆவது முறையும் தோற்கடித்தால், மும்பையின் ப்ளே ஆஃப்கனவு முடிந்துவிடும். அதேபோல பஞ்சாப், குஜராத் அணிகள் சன்ரைசர்ஸ் அணியுடன் தோற்றாலே ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்வது கடினமாகிவிடும். இதுவரை 50 லீக் ஆட்டங்கள் முடிந்துவிட்டன. ஆனால், இதுவரை எந்த அணியும் ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேற்றப்படவும் இல்லை, எந்த அணியும் அதிகாரப்பூர்வமாக ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதியாகவும் இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் - ராஜஸ்தான் போட்டியில் என்ன நடந்தது? சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு மூல காரணமாக இருந்தது புவனேஷ்வர் குமாரின் அனுபவமான பந்துவீச்சுதான். அனுபவமான பந்துவீச்சாளர் என்பதை கடைசி ஓவரிலும் முதல் ஓவரிலும் வெளிப்படுத்திவிட்டார். முதல் ஓவரிலேயே பட்லர், சாம்ஸன் இரு பெரிய ஆபத்தான பேட்டர்களை டக்அவுட்டில் வெளியேற்றி ராஜஸ்தான் அணிக்கு பெரிய ஷாக் அளித்தார். முதல் ஓவரில் புவனேஷ்வர் இதுவரை 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.. கடைசி ஓவரிலும் அவரது துல்லியமான பந்துவீச்சு தொடர்ந்தது. 13 ரன்களுக்குள் முடக்க வேண்டும் என்ற நிலையில், கடைசிப்பந்தில் பாவெலுக்கு கால்காப்பில் வீசி அவுட் ஆக்கி சன்ரைசர்ஸ் அணிக்கு புவனேஷ்வர் வெற்றி தேடித்தந்தார். 4 ஓவர்கள் வீசி 41ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். பட மூலாதாரம்,SPORTZPICS கடைசிப் பந்து வெற்றி பற்றி கம்மின்ஸ் கூறியது என்ன? சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “ அற்புதமான போட்டி. கடைசிப்பந்துவரை நாங்கள் வெற்றி பெறுவோம் என நான் நினைக்கவில்லை. இது டி20 கிரிக்கெட் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். புவனேஷ்வர் 6 யார்கர்களை வீசி அற்புதமாக பந்துவீசினார். கடைசிப்பந்தில் நிச்சயம் சூப்பர் ஓவருக்கு கொண்டு செல்லும் என நினைத்தேன். நடராஜன் அருமையான யார்கர் பந்துவீச்சாளர். ராஜஸ்தான் அணியும் நன்கு பேட்செய்தனர், ஆனால் தொடக்கத்தில்தான் விக்கெட்டுகளை இழந்தனர். தரமான வீரர்கள் என்பதால் கடைசிவரை எங்களுக்கு வெற்றிக்கான வாய்ப்பைத் தரவில்லை. நிதிஷ் குமார் சிறப்பாக பேட் செய்து இக்கட்டான சூழலில் நல்ல ஸ்கோர் செய்தார்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டு வீரர் நடராஜன் எட்டிய புதிய மைல்கல் தமிழ்நாட்டைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் 4 ஓவர்கள்வீசி 35 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றி நடராஜன் புதிய மைல்கல் எட்டினார். சிம்ரன் ஹெட்மயர் விக்கெட்டை நடராஜன் எடுத்தபோது இந்த சாதனையைப் படைத்தார். 89 டி20 போட்டிகளில் நடராஜன் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், இவரின் எகானமி 9 ரன்களுக்கும் குறைவாகவே இருக்கிறது. இதற்கு முன் நடராஜன் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது, 55 போட்டிகளில் 63 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த சீசனில் இதுவரை 8 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா நிற தொப்பியையும் பெற்றுள்ளார். சன்ரைசர்ஸ் அணிக்கு அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்த 3-ஆவது பந்துவீச்சாளராக நடராஜன் இருக்கிறார். முதலிடத்தில் புவனேஷ்வரும், 2வது இடத்தில் ரஷித் கானும் உள்ளனர். ஆட்டத்தை மாற்றிய கடைசி 2 ஓவர்கள் 18-ஆவது ஓவர்கள் வரை ஆட்டத்தின் வெற்றி ராஜஸ்தான் அணி பக்கமே இருந்தது. கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் துருவ் ஜுரெல், ரோவ்மென் பாவல் இருந்தனர். 19-ஆவது ஓவரை கேப்டன் கம்மின்ஸ் வீசினார். உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களுள் ஒருவர் என்பதை கம்மின்ஸ் இந்த ஓவரில் வெளிப்படுத்தினார். முதல் பந்தைச் சந்தித்த துருவ் ஜுரெல்(1) யார்க்கராக வீசப்பட்ட பந்தை லெக்திசையில் மடக்கி அடிக்க அபிஷேக்கிடம் கேட்சானது. அடுத்து அஸ்வின் களமிறங்கி 2வது பந்தில் ஒரு ரன்எடுத்து ஸ்ட்ரைக்கே பாவெலிடம் கொடுத்தார். தொடர்ந்து 3 பந்துகளை டாட் பந்துகளாக கம்மின்ஸ் வீசி பாவெலை திணறடித்தார். கடைசிப்பந்தை கம்மின்ஸ் வைடு யார்க்கராகவீச, அதை பாவெல் சிக்ஸருக்கு விளாச ஆட்டம் பரபரப்பானது. இந்த ஓவரில் கம்மின்ஸ் வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் எடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசி ஓவரில் புவனேஷ்வர் நிகழ்த்திய திருப்பம் கடைசி ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். ராஜஸ்தான் அணி வெற்றி பெற 6 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டது. புவனேஷ்வர் வீசிய முதல் பந்தில் அஸ்வின் ஒரு ரன் எடுத்து, ஸ்ட்ரைக்கை பாவெலிடம் வழங்கினார். 2ஆவது பந்தில் பாவெல் 2 ரன்களும், 3வது பந்தில் பாவெல் பவுண்டரி அடித்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தனார். புவி வீசிய 4ஆவது பந்தில் பாவெல் 2 ரன்களும், 5-வது பந்தில் 2 ரன்களும் எடுத்தார். கடைசிப்பந்தில் ராஜஸ்தான் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு ரன் எடுத்தால் சூப்பர் ஓவர்செல்லும் 2 ரன்கள் எடுத்தார் ராஜஸ்தான் வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. பாவெல் கடைசிப்பந்தை எதிர்கொள்ள அதை புவி லோஃபுல்டாசாக வீசவே, பாவெல் கால்காப்பில் வாங்கி 27 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒட்டுமொத்தத்தில் ராஜஸ்தான் அணியிடம் இருந்த வெற்றியை சன்ரைசர்ஸ் அணி பறித்துக்கொண்டது என்றே கூறலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES ரியான் பராக்-ஜெய்ஸ்வால் கூட்டணி ராஜஸ்தான் அணி முதல் ஓவரிலேயே கேப்டன் சாம்ஸன், பட்லர் இருவரின் விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. 3ஆவது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், ரியான் பராக் கூட்டணி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், ஜெய்ஸ்வால், பராக் கூட்டணி அதிரடியைக் கைவிடவில்லை, 4.5 ஓவர்களில் ராஜஸ்தான் 50 ரன்களை எட்டியது. சன்ரைசர்ஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கி பவர்ப்ளே ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்தனர். 9.6 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 100 ரன்களை எட்டியது. ஜெய்ஸ்வால் 30 பந்துகளில் அரைசதத்தையும், 31 பந்துகளில் ரியான் பராக் ஒரு அரைசதத்தையும் விளாசினர். இருவருமே ஆட்டத்தை முடித்துவிடுவார்கள் என்று எண்ணப்பட்டது. ஆனால் ஜெய்ஸ்வால் தேவையற்ற ஒரு ஸ்விட்ச் ஹிட்ஷாட் ஆட முயன்று நடராஜன் பந்துவீச்சில் க்ளீன்போல்டாகி 67 ரன்களில் ஆட்டமிழந்தார்.இருவரும் 3வது விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஜெய்ஸ்வால் விக்கெட்தான், சன்ரைசர்ஸ் அணிக்கான வெற்றி வாய்ப்புக் கதவுகளை திறந்தது. அதுவரை ஆட்டம் ராஜஸ்தான் அணி பக்கம்தான் இருந்தது. அடுத்த சிறிறு நேரத்தில் ரியான் பராக் 49 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தநிலையில் கம்மின்ஸ் பந்தவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஹெட்மயர் ஒருசிக்ஸர், பவுண்டரி உள்பட 13 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த 3பேட்டர்கள் ஆட்டமிழந்து ராஜஸ்தான் அணியை நெருக்கடிக்குள் தள்ளினர். கடைசி நேரத்தில் ரோவ்மென் பாவல் அதிரடியாக ஆடினாலும், எதிர்முனையில் அவரின் அழுத்தத்தைக் குறைக்கும் பேட்டர்கள் இல்லை. கடந்த போட்டியில் சிறப்பான அரைசதம் அடித்த ஜூரெல் இந்த ஆட்டத்தில் ஒரு ரன்னில் வெளியேறி ஏமாற்றினார். 5-ஆவது முறையாக 200 ரன்கள் சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் மட்டும் 5வது முறையாக 200 ரன்கள் ஸ்கோரைச் சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் அபிஷேக்(12) ரன்னில் ஆவேஷ் கானும், அன்மோல்பிரித் சிங்கை(5) ரன்னில் சந்தீப் குமாரும் வீழ்த்தி தொடக்கத்திலேயே அழுத்தம் கொடுத்தனர். பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் மிகக்குறைவாக 37 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. https://www.bbc.com/tamil/articles/c14k8g9nlnno
  5. அகோர வெயிலோட இலவச இணைப்பாக தடிமன், காய்ச்சல், இருமல். இருமல் தான் இன்னும் மாறாதாம்.
  6. 03 MAY, 2024 | 09:35 AM நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளின் 2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று வெள்ளிக்கிழமை (03) முடிவடைகிறது . இதேவேளை , பாடசாலைகளின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை மே 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/182531
  7. கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக நாளை (04) ஆட்பதிவு திணைக்களம் திறக்கப்படும் என அறிவிகப்பட்டுள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம், காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலகங்கள் நாளை (04) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாத்திரம் திறக்கப்படும். இதுவரை தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத விண்ணப்பதாரர்கள், முதன்மை அல்லது கிராம அலுவலரால் சான்றளிக்கப்பட்ட முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.drp.gov.lk இலிருந்து உரிய தகவல் உறுதிப்படுத்தல் கடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/300770
  8. 03 MAY, 2024 | 10:28 AM ஊழலை வெளிப்படுத்துவதன் மூலமும் வெளிப்படைதன்மைக்காக குரல் கொடுப்பதன் மூலம் அதிகாரம் மக்களின் கரங்களிலேயே இருப்பதை உறுதி செய்பவர்கள் பத்திரிகையாளர்கள் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. உண்மையை துணிச்சலுடன் பின்பற்றும் உலகெங்கிலும் உள்ள மற்றும் இலங்கையை சேர்ந்த பத்திரிகையாளர்களிற்கு நாங்கள் என்றும் ஆதரவாக இருக்கின்றோம். ஆரோக்கியமான ஜனநாயகத்தை பேணுவதிலும் பொதுமக்களிற்கு விடயங்களை தெரியப்படுத்துவதிலும் பத்திரிகையாளர்கள் இன்றியமையாத பங்கை வகிக்கின்றனர். அவர்கள் பொது நிறுவனங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வணிகங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊழலை வெளிப்படுத்துவதன் மூலமும் வெளிப்படைதன்மைக்காக குரல் கொடுப்பதன் மூலம் விமர்சனத்துடனான ஆய்வுகளை முன்வைப்பதன் மூலம் பத்திரிகையாளர்கள் அதிகாரம் மக்கள் நீடித்திருப்பதை உறுதி செய்கின்றனர். https://www.virakesari.lk/article/182540
  9. 28 APR, 2024 | 06:36 PM நேர்கண்டவர் - ரொபட் அன்டனி இலங்கையில் சுற்றுலாத்துறை மிகப் பெரிய ஒரு துறையாக காணப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு தான் மிகவும் உயர்ந்த அளவான சுற்றுலாத்துறை ஆற்றலை கொண்டிருக்கிறது. எனவே இலங்கையும் தமிழகமும் சுற்றுலாத்துறை விடயத்தில் ஒரு கூட்டு பொறிமுறையை வகுத்து செயல்பட்டால் சிறந்த முன்னேற்றத்தை எட்ட முடியும் என்று தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ரோட்டரி கழகத்தின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவியிலேயே இதனை சுட்டிக்காட்டினார். மிக முக்கியமாக இலங்கையில் ரோட்டரி கழகத்தின் மாநாட்டில் பங்கேற்ற தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கமையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் தமிழகத்தின் நிதித்துறை, வரிவருமான விடயம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி, பெண்களின் பொருளாதார பங்களிப்பு குறித்து அமைச்சர் சுட்டிக்காட்டினார். ‘’ ஒரு நாட்டில் பெண்கள் கல்வியில் வளர்ச்சிaடையும் போது அவர்களுக்கு சம உரிமை வழங்கப்படும் போதுதான் அந்த நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தி அடையும். எனவே பொருளாதாரத்தை அபிவிருத்தி அடைய செய்வதில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது’’ என்று பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார். மேலும் இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக கருத்து வெளியிட்ட பழனிவேல் தியாகராஜன் பொறியியல் ரீதியாக கட்டடவியல் ரீதியாக இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது சாத்தியமானதே என்று தெரிவித்ததுடன் உலக நாடுகளில் இதனை விட நீளமான பாலங்கள் இருப்பதையும் சுட்டிக் காட்டினார். கச்சத்தீவு விவகாரம் தொடர்பிலும் அமைச்சர் தியாகராஜன் கருத்து வெளியிட்டார். ‘’ 50 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்குk; இந்தியாவுக்கும் இடையில் கடல்சார் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாகவே இந்த விடயம் காணப்படுகிறது. எல்லைகள் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் அதிகாரம் உலகில் எந்த ஒரு இடத்திலும் மாநிலங்களுக்கு வழங்கப்படவில்லை‘’ என்றும் பழனிவேல் தியாகராஜன் எடுத்துக்காட்டினார். செவ்வியின் முழு விபரம் வருமாறு கேள்வி நாங்கள் 2022 ஆம் ஆண்டு இலங்கையில் நிதி நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருந்தபோது நீங்கள் தமிழகத்தில் மிகப்பெரிய நிதி ஸ்திரத்தன்மை ரீதியான சாதனையை நிகழ்த்தி கொண்டிருந்தீர்கள். அது தொடர்பாக விளக்க முடியுமா பதில் இந்த விடயத்தில் நான் உலகத்தில் பெற்ற அனுபவத்தையோ கல்வியையோ தாண்டி இன்றைய முதலமைச்சர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வழங்கிய ஆதரவும் பொறுப்பும் தான் இதற்கு காரணமாகும். 2016 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டுவரை நான் எதிர்க்கட்சியில் இருந்தபோது அரசாங்க கணக்கு குழுவில் அங்கம் வகித்தேன். இதில் பல விடயங்களை ஆராய்ந்தேன். ஆயிரக்கணக்கான விடயங்கள் தொடர்பாக வாசிக்க கிடைத்தது. குறிப்பாக மீனவத்துறை வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எங்கு பிரச்சனைகள் இருக்கின்றன என்பன தொடர்பாக ஆராய்ந்து அது தொடர்பான ஒரு தெளிவை பெற்றுக் கொள்ள என்னால் முடிந்தது. இந்த குழுவின் ஊடாக பல இடங்களுக்கு சென்று ஆய்வு செய்ய முடிந்தது. அதேபோன்று பல பல அதிகாரிகளை அழைத்து கேள்வி கேடகும் உரிமையும் இந்த குழுவுக்கு காணப்பட்டது. இந்த ஐந்து வருட காலப்பகுதியில் நான் சிறந்த புரிதலையும் தெளிவையும் பெற்றேன். எங்கே என்னென்ன பிரச்சனைகள் காணப்படுகின்றன? அவற்றை எவ்வாறு திருத்துவது? என்பதை இந்த ஐந்து ஆண்டுகளில் நான் மதிப்பீடு செய்துவிட்டு தான் பதவிக்கு வந்தேன். அந்த அனுபவம், அந்த புரிதல் நான் இந்த செயற்பாட்டை மேற்கொள்வதற்கு கை கொடுத்தது, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் அறிவோ தெளிவோ தொழில்நுட்ப திறமையோ முக்கியமாக இருக்காது. மாறாக மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற ஒரு அரசியல் ரீதியான நோக்கம் இருக்க வேண்டும். அந்த அரசியல் நோக்கம் அல்லது எதிர்பார்ப்பு (Political will) முதலமைச்சரிடம் மட்டும் இருந்தே வர வேண்டும். முதல்வரின் அந்த நோக்கம் தெளிவாக இருந்தது. அதற்காக அவர் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். இந்த விடயத்தில் எனக்கு ஆலோசனை ஒத்துழைப்பு தந்தது மட்டுமன்றி முதல்வர் என்னை பாதுகாப்பாகவும் வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த சில வருடங்களில் ஒருமுறை கூட முதல்வர் ஏன் இப்படி செய்தீர்கள்? ஏன் இப்படி செய்யவில்லை என்று கேட்டது கிடையாது. கடந்த காலங்களில் நான் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கோப்புகளை ஆய்வு செய்து கையொப்பம் இட வேண்டி ஏற்பட்டது. அந்த 7000 கோப்புகளில் பத்து சதவீதமானவை மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டு திருத்தப்பட்டு கொண்டுவரப்பட்டன. இதன் காரணமாகவே 20 ஆண்டுகளில் ஏற்படுத்த முடியாத ஒரு மாற்றத்தை என்னால் இரண்டு ஆண்டுகளில் மாற்றி அமைக்க முடிந்தது. ஒரு முறையை நீங்கள் தொடர்ந்து அவ்வாறே செய்து கொண்டிருந்தால் மாற்றம் வராது. முறையை மாற்றினால் கூட விளைவு வருமா என்பது தெரியாது. ஆனால் மாற்றத்தை ஆரம்பிக்க வேண்டியது அவசியம். அதனையே நாங்கள் செய்தோம். கேள்வி நீங்கள் சமூகநீதி, சமஷ்டி முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசுகின்றீர்கள். ஆனால் பெண்கள் கல்வி கற்றால் மட்டுமே ஒரு சமூகம் விரைவாக வளர்ச்சி அடைய முடியும் என்று கூறுகின்றீர்கள். இதனை எவ்வாறு நீங்கள் மேற்கொள்கின்றீர்கள்? பதில் சகல சமூகங்களிலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பெண்கள் பின்தங்கி வைக்கப்பட்டனர். அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் சக்தியை கொண்டிருப்பதால் அவர்கள் வீடுகளில் இருந்து குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு எண்ணம் காணப்பட்டது. நீங்கள் இந்த நூற்றாண்டை எடுத்துப் பார்த்தால் ஒரு சமூகம் எந்த அளவுக்கு பெண்களுக்கு சமகல்வி சம உரிமை அளிக்கின்றதோ அங்கு பாரியதொரு பொருளாதார அபிவிருத்தி முன்னேற்றத்தை காண்கிறோம். ஸ்கடேினேவிய நாடுகள், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இந்த நிலைமையை பரவலாக காணமுடியும், மிக முக்கியமாக ஜப்பானில் இதை பார்க்கலாம். ஜப்பானில் பெண்களுக்கு சமஉரிமை சமத்துவம் வழங்கப்பட்டதன் பின்னர் அந்த நாட்டின் அபார வளர்ச்சியை புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. பெண்கள் எத்தனை ஆண்டுகள் கல்வி கற்கின்றார்களோ, உயர் கல்வியை பெறுகின்றார்களோ அத்தனை ஆண்டுகள் அவர்கள் திருமணம் செய்வதும் குழந்தை பெற்றுக் கொள்வதும் தாமதமாகிறது. பெண்கள் எந்த சூழலில் குழந்தையை பெற்றுக் கொள்கிறார்கள், அப்போது அவர்களது பொருளாதார நிலைமை எவ்வாறு இருக்கின்றது என்பதில்தான் அந்த குழந்தையின் எதிர்காலம் தங்கி இருக்கிறது. எனவே பெண்களுக்கு நீங்கள் சமகல்வி சமஉரிமை வழங்கினீர்கள் என்றால் சுகாதார ரீதியான ஒரு முன்னேற்றத்திலிருந்து நாட்டின் அபிவிருத்தி ஆரம்பமாகிறது. பெண்கள் தாமதித்து குழந்தை பெற்றுக் கொள்வார்களாயின் அந்த குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமானதாக வளரும். பிரசவ மரணம் குறைவடையும். அரசாங்கத்தின் மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்பான சுமை குறைவடைகிறது. அப்படிபார்க்கும்போது எந்தளவு தூரம் ஆண்களுக்கு சமமாக பெண்கள் பலத்தை அடைகிறார்களோ அங்கு முன்னேற்றம் தானாக உருவாகிவிடும். ஆண்களுக்கு சிறந்த கல்வியை கொடுத்து அவர்களை முன்னேற்றிவிட்டு பெண்களுக்கு ஒன்றும் செய்யாமல் விட்டால் அங்கு என்ன நடக்கும் ? அங்கு அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான சராசரி எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கும் அதேயளவு சமஉரிமையும் சம கல்வியும் வழங்கப்பட்டால் சமுதாயத்தின் உற்பத்தி திறன் அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சி அபிவிருத்தி உயர்வடையும். இன்று தமிழ்நாடு இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பாரிய வளர்ச்சியை அடைந்திருப்பதாக கூறுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் அனைவருக்கும் கல்வி என்ற சட்ட திருத்தம் 1921 ஆம் ஆண்டு நீதி கட்சியினால் உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் எந்தக் கட்சியும் பின் வாங்கியதில்லை. இன்று தமிழ்நாடு இலத்திரணியல் உற்பத்தி ஏற்றுமதியில் உயர்ந்த இடத்துக்கு வந்துவிட்டது. அதில் அதிகளமான பங்களிப்பை பெண்களே வழங்குகிறார்கள் என்பது இங்கு ஒரு முக்கியமான விடயம். இன்று இந்தியா முழுவதும் தொழிற்சாலைகளில் ஏனைய இடங்களில் தொழில் புரியும் பெண்களில் 43 சதவீதமானோர் தமிழ்நாட்டில் இருக்கின்றனர். இதன் காரணமாகவே தமிழகத்தின் தலா வருமானம் அதிகரிக்கிறது. கேள்வி தற்போது நீங்கள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகிக்கின்ற வகிக்கின்றீர்கள். தற்போது இந்தியாவில் ஹைதராபாத் பெங்களூர் பூனே ஆகிய நகரங்களே தகவல் தொழில்நுட்பத் துறையில் பாரிய வளர்ச்சி அடைந்திருக்கின்றன. தமிழகம் எப்போது இந்த இடத்தை நோக்கி பயணிக்கும்? பதில் தமிழகத்தின் மிகப்பெரிய இயற்கை பலம் என்னவென்றால் அது தமிழக மக்களின் மனித வளமாகும். இந்தத் துறையின் எதிர்காலத்தை கருதி 1991 ஆம் ஆண்டு முன்னால் முதல்வர் கலைஞர் தகவல் தொழில்நுட்ப திணைக்களத்தை உருவாக்கினார். ஆனால் கடந்த 25 வருடங்களில் தமிழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியானது இயற்கையான வளர்ச்சியாக அமைந்துவிட்டது. ஆனால் பெங்களூர் ஹைதராபாத் பூனே ஆகிய நகரங்கள் இந்த விடயத்தை தேடிச் சென்று கஷ்டப்பட்டு உருவாக்கின. தற்போது பெங்களூரு நகரத்தை பார்த்தால் அங்கு தகவல் தொழில்நுட்பம் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை என்ற நிலைமை வந்துவிட்டது. ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லை. பல துறைகளில் முன்னேற்றம் காணப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம் என்ற விடயம் வெளிக்காட்டவில்லை. அதாவது தமிழகத்தில் இந்த துறையை அதிகளவில் நாம் ஊக்குவிக்க வில்லை. பொதுவாக இந்த துறையில் எந்தெந்த கம்பெனிகள் எங்கெங்கே முதலீடு செய்து இருக்கின்றன என்ற தகவல் மாநில அரசாங்கத்தில் இருக்கும். ஆனால் தமிழகத்தில் அந்தத் தரவு கட்டமைப்பு கூட இல்லை. காரணம் நாங்கள் ஊக்குவிப்பு வழங்காமல் இயற்கையாக இந்த துறை வளர்ந்திருக்கிறது. அதனால் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் பின்தங்கி இல்லை என்பதை நான் உங்களுக்கு இப்போது கூற விளைகிறேன். எம்மிடம் தகவல் கட்டமைப்பு தான் இல்லை. மாறாக அந்த துறை முன்னேறியிருக்கிறது. இதனை நாம் நுணுக்கமாக தேட ஆரம்பித்தால் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை பாரியளவில் வளர்ச்சி அடைந்திருக்கின்றது என்ற உண்மையை கண்டுபிடிக்க முடியும். மேலும் தற்போது ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 10,000 தொழில் வாய்ப்புகள் இந்த துறையில் உருவாக்கப்படுகின்றன. இதனை நான் சட்டமன்றத்திலும் கூறி இருக்கிறேன். ஆனால் இது மிகப் பெரிய ஒரு எண்ணிக்கை அல்ல. இது இயற்கையாக நடந்து கொண்டிருக்கின்றது. ஆனாலும் இது கவனிக்கத்தக்கது ஒன்றாக உள்ளது. நாங்கள் அரசாங்கமாக இதனை இன்னும் ஊக்குவிக்கவில்லை. எனவே முதலில் தகவல் கட்டமைப்பை திரட்ட வேண்டும். அது தொடர்பான விபரங்களை உண்மையை வெளியிட வேண்டும். அதைவைத்து ஒரு சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு இந்த துறையை மேலும் வலுவானதாக உருவாக்குவோம். கேள்வி 2030ஆம் ஆண்டில் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டொலர் பெறுமதிக்கு கொண்டு வர முயற்சிக்கின்றீர்கள். இது சாத்தியமா? பதில் இது முதலமைச்சர் ஸ்டாலினின் இலக்காக காணப்படுகிறது அதற்கு ஏற்ப நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். கேள்வி நீங்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கின்றீர்கள். இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து தற்போது மீண்டும் வந்து கொண்டிருக்கின்றது. உங்களின் பார்வையில் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையில் பொருளாதார உறவை எவ்வாறு மேம்படுத்த முடியும்? பதில் நான் மாநில அமைச்சராக இருப்பதால் மாநிலம் சம்பந்தமான விடயங்களிலேயே அவதானம் செலுத்த வேண்டும். காரணம் இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என்றாலும் அல்லது தொடர்புகளை மேம்படுத்த வேண்டும் என்றாலும் அது இந்திய மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் மற்றும் ஆசீர்வாதத்துடனேயே முன்னெடுக்கப்பட முடியும். அரசியலமைப்பில் இது தொடர்பில் பல தேவைகள் காணப்படுகின்றன. தற்போதைய சூழலில் மாநில உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன. தற்போதைய டெல்லி அரசாங்கம் இருக்கும்வரை இந்த விடயங்களில் முற்போக்கான நிலைமை ஏற்படுமா என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அப்படியான ஒரு தடை இல்லாவிடில் தமிழகமும் இலங்கையும் மிக நெருக்கமாக செயல்படுவதற்கான இயற்கை ரீதியாக பல வழிகள் காணப்படுகின்றன. சக்திவளத்துறையில் நாங்கள் நெருக்கடியை சந்திக்கிறோம். ஆனால் இலங்கையில் அளவுக்கு அதிகமாக இந்த புதுப்பிக்கத்தக்க வகையிலான வலு சக்தி துறையில் உற்பத்தியை செய்ய முடியும். அதில் இணைந்து செயற்பட ஆற்றல் காணப்படுகிறது. மனிதவள அபிவிருத்தி கல்வி அபிவிருத்தி போன்றவற்றில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்திருக்கின்றது. இந்த விடயத்திலும் இலங்கை இளைஞர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி தொழில் செய்யும்போது பயிற்சி வழங்குதல் போன்றவற்றில் நாம் இணைந்து செயல்படலாம். இலங்கையில் சுற்றுலாத்துறை மிகப் பெரிய ஒரு துறையாக காணப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு தான் மிகவும் உயர்ந்த அளவான சுற்றுலாத்துறை ஆற்றலை கொண்டிருக்கிறது. எனவே இலங்கையும் தமிழகமும் சுற்றுலாத்துறை விடயத்தில் ஒரு கூட்டு பொறிமுறையை வகுத்து செயல்பட்டால் சிறந்த முன்னேற்றத்தை எட்ட முடியும். அதாவது தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள கலாசார தொடர்புகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக்கொண்டு இதனை முன்னெடுக்கலாம். கேள்வி தற்போது இந்த கச்சதீவு விவகாரம் மீண்டும் களத்துக்கு வந்திருக்கிறது. இது மத்திய அரசாங்கத்தின் விடயம் ஆனாலும் மாநில அரசாங்கத்தின் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. எனவே இந்த கச்சதீவு விவகாரத்தை தமிழக அமைச்சர் என்ற ரீதியில் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? பதில் என்னைப்பொறுத்த வரையில் இந்த விடயம் சட்டமன்றத்திலும் சரி தற்போது அரசியல் களத்திலும் சரி வெறுமனே பேசப்படுகிறது. 50 வருடங்களுக்கு முன்னரே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 12 கிலோமீட்டர் அடிப்படையிலான கடல் சார்ந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே இந்த விடயம் (கச்சதீவு) இடம் பெற்றுள்ளது. அல்லது அந்த ஒப்பந்தத்தின் ஒரு பங்காக இந்த விடயம் காணப்படுகிறது. 50 வருடங்களுக்கு முதல் நடந்த ஒரு விடயம் குறித்து கடந்த 10 வருடங்களாக டெல்லியில் ஆட்சியில் இருந்த எதனையும் செய்யவில்லை. ஆனால் தற்போது இதனை இங்கே அரசியலுக்காக பேசுகின்றார்கள். கவனச்சிதறல் முயற்சியாகவே இது தெரிகிறது. இது இந்த விடயத்தில் மாநிலத்துக்கு எவ்வளவு அக்கறை, எவ்வளவு தேவை, ஈடுபாடு இருந்தாலும் கூட இந்த எல்லை நிர்ணய விடயங்களை மத்திய அரசாங்கமே செய்யும். கேள்வி தற்போது இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக பேசப்படுகிறது. நீங்கள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர். முன்னாள் நிதி அமைச்சர். பொருளாதார ரீதியாக இதன் சாத்தியத்தன்மை குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? பதில் இதற்கு சாத்தியம் இல்லை என்று கூற முடியாது. இதற்கான சாத்தியம் கேள்விக்கு உட்படுத்தப்பட முடியாதது. உலகளவில் இதனை விட நீளமான பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நானே பயணம் செய்திருக்கிறேன். ஆனால் இதில் பொருளாதார விளைவுகள் என்ன ? செலவு என்ன என்பது முக்கியமாகும். தொடர்புகள், பாதுகாப்பு விடயங்கள் என்பன ஆராயப்பட வேண்டும். என்னுடைய துறையுடன் இது உடனடியாக தொடர்புபடவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பாக ஆராய்வார்கள். ஆனால் இதனை சாத்தியமில்லை என்று உறுதியாக கூற முடியாது. உலக அளவில் இதனைவிட நீளமான எத்தனையோ பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொறியியல் ரீதியாக கட்டிடவியல் ரீதியாக அது சாத்தியமானதாகும். கேள்வி உங்களின் இரண்டு கைகளிலும் இரண்டு கைக்கடிகாரங்கள் கட்டப்பட்டுள்ளனவே? பதில் இதற்கான காரணம் உள்ளது. அதில் எனது இடது கையில் இருப்பது என்னுடைய தாத்தாவின் கைக்கடிகாரமாகும். அதனை 1990 ஆம் ஆண்டு எனது தந்தை எனக்கு வழங்கினார். நான் அதனை திருத்தி பழுதுபார்த்து தொடர்ச்சியாக எனது இடது கையில் கட்டிக் கொண்டிருக்கின்றேன். வலது கையில் இருப்பது மிகவும் நவீனமான எனக்கு பல்வேறு தொழில்நுட்ப ரீதியான ஆலோசனைகளை வழங்குகின்ற கைக்கடிகாரமாகும். உங்களுக்கு தெரியும் எங்களது குடும்பம் அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பம். எனவே இந்த கைக்கடிகாரம் எனக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. https://www.virakesari.lk/article/182174
  10. எங்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்யும் உங்களிற்கு எங்கள் இதயத்திலிருந்து நன்றிகள் - அமெரிக்க கனடா பல்கலைகழக மாணவர்களிற்கு பாலஸ்தீன சிறுவர்கள் 02 MAY, 2024 | 11:05 AM காசாபள்ளத்தாக்கின் மத்தியில் உள்ள டெய்ர் எல் பலாவில் இடம்பெற்ற பேரணியில் அமெரிக்கா கனடாவில் தங்களிற்காக குரல்கொடுக்கும்மாணவர்களிற்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்களுடன் பாலஸ்தீன சிறுவர்கள் காணப்படும் படங்கள் வெளியாகியுள்ளன. கொலம்பியா பல்கலைகழக மாணவர்களிற்கும் ஏனைய பல்கலைகழக மாணவர்களிற்கும் அவர்கள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/182463
  11. வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் பணிகளை வெளிநாட்டு நிறுவனத்துக்கு முழுமையாக ஒப்படைக்கவில்லை - அரசாங்கம் 02 MAY, 2024 | 09:45 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பணிகள் வெளிநாட்டு நிறுவனத்துக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. விசா விநியோகிக்கும் பணிகளுக்கு உரிய வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளுக்கான பொறுப்பு மாத்திரமே இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசா விநியோகத்தில் ஏற்பட்ட தாமத நிலைமை தொடர்பில் வெளியாகிய செய்திகள் குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வருகை தரும் போது(உள் வருகையின் போது விசா) முறைமை ஊடாக விசா விநியோகிக்கும் செயற்பாடு வி.எப்.எஸ்.குளோபல் நிறுவனத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் வழங்கப்பட்டது. 2023.09.11 ஆம் திகதி நாட்டுக்குள் உள் வரும் போது விசா விநியோகிக்கும் செயற்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்ட வெளியாள் நிறுவனத்துக்கு வழங்கும் பத்திரத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சமர்ப்பித்திருந்தார். இதற்கமைய முறையான விலைமனுகோரலுக்கு அமைய விண்ணப்பம் கோரப்பட்டு,கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களில் இந்த நிறுவனம் மிகச் சிறந்ததாக கருதப்பட்டது. வெளிநாட்டவர்கள் நாட்டுக்குள் வருகை தரும் போது விசா விநியோகித்தல் மற்றும் நிகழ்நிலை முறைமை ஊடாக விசாவுக்கு விண்ணப்பம் செய்தல் என்பனவற்றுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. இந்த நிறுவனம் நவீன தொழில்னுட்பத்தை பயன்படுத்தி சேவைகளை முன்னெடுத்துள்ளது. 3388 மத்திய நிலையங்கள் ஊடாக 151 நாடுகளுக்கு விசா விநியோகிக்கும் வகையில் இந்நிறுவனம் உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்துள்ளது. இருப்பினும் கடந்த நாட்களில் இந்நிறுவனத்தின் சேவையில் சிக்கல் தோற்றம் பெற்றுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அமைச்சரவையின் அனுமதி இல்லாமல் இந்த நிறுவனத்துக்கு பொறுப்பு வழங்கபட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பணிகள் வெளிநாட்டு நிறுவனத்துக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. விசா விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்காக உரிய வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளுக்கான பொறுப்பு மாத்திரமே இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவை தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி கருத்துக்களை வெளியிடும் அல்லது செயற்படும் உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/182525
  12. யுத்தம் இடம்பெற்ற காலத்துக்குத் திரும்பிச்செல்வதை எவரும் விரும்பவில்லை ; அரசு அதிகாரங்களைப் பகிரவேண்டும் - எரிக் சொல்ஹெய்ம் Published By: DIGITAL DESK 3 02 MAY, 2024 | 05:16 PM (நா.தனுஜா) தற்போது வட இலங்கை சமாதானத்தை அனுபவிப்பதாகவும், யுத்தம் இடம்பெற்ற காலத்துக்குத் திரும்பிச்செல்வதை எவரும் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ள இலங்கைக்கான முன்னாள் சமாதானத்தூதுவரும், நோர்வே நாட்டு இராஜதந்திரியுமான எரிக் சொல்ஹெய்ம், இருப்பினும் இன்னமும் தமிழர்களின் அபிலாஷைகள் முழுமையாகப் பூர்த்திசெய்யப்படாத நிலையில் இலங்கை அரசு அதிகாரங்களைப் பகிரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மே தினத்தன்று (1) யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த எரிக் சொல்ஹெய்ம் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இலங்கைத் தமிழரசுக்கட்சித் தலைவர் எஸ்.சிறிதரன் உள்ளிட்ட தரப்பினருடனும் சந்திப்புக்களை நடத்தியிருந்தார். அதேவேளை இவ்விஜயம் தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் எரிக் சொல்ஹெய்ம், அதில் மேலும் கூறியிருப்பதாவது: சுமார் இருபது ஆண்டுகளின் பின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருப்பதானது என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச்செய்திருக்கின்றது. இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் பலமுறை நான் இங்கு வந்திருக்கின்றேன். சிங்களவர்கள் மற்றும் தமிழர்களின் எனது நெருங்கிய நண்பர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். யுத்தத்தின் பின்னர் இப்போதுதான் நான் முதன்முறையாக யாழ்ப்பாணத்துக்கும், கிளிநொச்சிக்கும் விஜயம் செய்திருக்கின்றேன். என்னுடைய நண்பர்களான நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் ஹிமன்ஷு குலாட்டி மற்றும் கவின்குமார் கந்தசாமி ஆகியோருடன் இன்று (நேற்று முன்தினம்) இங்கு சென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. அதேபோன்று இலங்கையின் சிரேஷ்ட தமிழ் தலைவரான எஸ்.சிறிதரனுடன் அண்மையகால அரசியல் நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடியதுடன், தற்போது ஆன்மிக நிலையமொன்றை நடாத்திவருபவரும், சமாதானப்பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற காலத்தில் எனது பழைய நண்பருமான ஜே.மகேஸ்வரனையும் சந்தித்தேன். அத்தோடு எம்மைச் சந்திப்பதற்கு அழைப்புவிடுத்த வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கு நன்றி கூறுகிறேன். தற்போது வட இலங்கை சமாதானத்தை அனுபவிப்பதுடன், அது மிகச்சிறந்த விடயமாகும். பாதுகாப்பு சிறந்த நிலையில் உள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்துக்குத் திரும்பிச்செல்வதை எவரும் விரும்பவில்லை. இருப்பினும் தமிழர்களின் பல அபிலாஷைகள் இன்னமும் பூர்த்திசெய்யப்படவேண்டிய நிலையிலேயே உள்ளன. குறிப்பாக யுத்தத்தின்போது காணாமல்போன தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் காத்திருக்கின்றன. கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் இன்னமும் முழுமையாக அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவில்லை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மதவழிபாட்டுத்தலங்கள் மற்றும் ஆலயங்களை அடிப்படையாகக்கொண்டு நிலவும் குழப்பங்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்படவேண்டும். வட இலங்கையில் வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுபீட்சம் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும். இலங்கை அரசு அதிகாரங்களைப் பகிரவேண்டும். தமிழர் உரிமைகளுக்கான போராட்டம் தொடரும். இருப்பினும் அது வன்முறையற்ற விதத்தில் தொடரும் என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/182501
  13. Published By: DIGITAL DESK 7 02 MAY, 2024 | 05:14 PM முல்லைத்தீவில் கரியல்வயல் , சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள மக்களில் 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 1908ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் பயிர் செய்து வாழ்ந்துவரும் நிலையில் குறித்த இடத்தில் உள்ள மக்கள் தம் காணிகளை துப்பரவு செய்தமையை அடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அது தமக்குரிய காணி என முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். சுண்டிக்குளம் தேசியா பூங்காவிற்குள் உட்சென்றமை , தாவரங்களை வெட்டி வெளியாக்கியமை , காணிகளை வெளியாக்கியமை, பாதைகளை அமைத்தல் மற்றும் பாதைகளை பயன்படுத்தியமை போன்ற காரணங்களை முன்வைத்து குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கானது கடந்த வருடம் 7.12.2023 அன்றையதினம் இடம்பெற்று 02.05.2024 வழக்கு தவணையிடப்பட்டிருந்தது. இதற்கமைய இன்றையதினம் குறித்த வழக்கானது விசாரணைக்காக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு தொடுக்கப்பட்ட மக்கள் சார்பில் சட்டத்தரணி சி.தனஞ்சயன் முன்னிலையாகியிருந்தார். இது தொடர்பாக வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது , இன்றையதினம் புதுக்குடியிருப்பு பகுதியிலே இருக்கின்ற கரியல் வயல் பிரதேசத்திலே வாழும் 100 மேற்பட்ட மக்களின் காணிகள் வனஜீவவராசிகள் திணைக்களத்திற்கு கீழே வருகின்ற காணிகள் என வனஜீவராசிகள் திணைக்களத்தினால் தொடரப்பட்ட வழக்குகள் இரண்டாம் தவணையாக நீதிமன்றிலே எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த வழக்கிலே சம்பந்தபட்ட மக்கள் ஏற்கனவே தனியார் காணிகளுக்கான நூற்றாண்டு உறுதி வழங்கப்பட்ட மக்களும், தனியார் காணிகளுக்கு சொந்தமான மக்களும் அரச அனுமதிபத்திரம் பெற்றமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இருக்கும் குறைபாடுகளை ஏற்கனவே நாம் சுட்டிகாட்டி இருந்தோம். அதேபோல் இன்றைய தினமும் இந்த வழக்கில் சுட்டிகாட்டியிருந்தோம். இந்த வழக்கு தொடர்பாக மீள் பரிசீலனை செய்து இவ் வழக்குகள் தொடர்பாக குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்ய வேண்டி இருப்பின் தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றத்தினால் வழக்கு தொடுனர் தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டு குறித்த வழக்கானது மூன்றாக பிரித்து வருகின்ற ஜூலை மாதம் 19 ஆம் திகதி, 25 ஆம் திகதி, 26 ஆம் திகதிகளுக்கும் தவணையிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/182505
  14. Published By: DIGITAL DESK 7 02 MAY, 2024 | 05:18 PM மாணவர் போசாக்கின்மைக்கு வறுமை காரணம் அல்ல உணவு முறையில் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியம் என வேலணை பிரதேச செயலாளர் சிவகரன் வலியுறுத்தியுள்ளார். கல்வி மட்டும் ஒரு பிள்ளைக்கு ஆரோக்கியமான வாழ் நிலை மட்டத்தை கொடுத்துவிடாது. கல்வியுடன் விளையாட்டும் இணைந்தே அந்தப் பிள்ளையை பூரணமடைந்தவனாக உருவாக்குகின்றது என சுட்டிக்காட்டிய தீவகம் தெற்கு வேலணை பிரதேச செயலாளர் கைலாயபிள்ளை சிவகரன் போசாக்கு மட்டமே ஒரு பிள்ளையின் கல்வியையும் விளையாட்டு துறையையும் நிர்ணயிக்கின்றது என்றும் சுட்டிக்காடியுள்ளார். வேலணை மத்திய கல்லுரியின் வருடாந்த விளையாட்டு திறமை காண் நிகழ்வு பாடசாலையின் முதல்வர் அன்ரன் ரோய் தலைமையில் கடந்த 30.04.2024 செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி சிறப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில் - வேலணைப் பிரதேசத்தின் மாணவர் மத்தியிலான போசாக்கின்மைக்கு வறுமை ஒருபோதும் காரணமாக இருக்காது. அவர்கள் உண்ணும் உணவின் தரங்கள் அல்லது பழக்கங்கள் தான் அதற்கு முழுமையான காரணமாகின்றது என தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த நிலைக்கு பெற்றோரே முக்கிய பொறுப்பானவர்களாகவும் இருக்கின்றனர். ஏனெனில் இப்பிரதேசத்தின் மாணவர் இடையே போசாக்கு மட்டத்தை அறிந்து கொள்ளும் வகையில் பிரதேச செயலகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளியான தகவல் எம்மை ஆச்சரியமடைய செய்துள்ளது. குறிப்பாக அந்த ஆய்வின்படி பாதிக்கப்பட்ட 90 வீதத்துக்கும் அதிகமான பிள்ளைகளின் பெற்றோர் வறுமைக்கோடின் கீழ் அல்லாத நிரந்தர வருமானம் கொண்டவர்களாகவும் பணம் படைத்தவர்களாகவுமே இருந்துள்ளனர். குறித்த ஆய்வின் பெறுபேறுகளுக்கமைய அவர்களது உணவுப் பழக்கவழக்கங்களே இந்த நிலைக்கு முக்கிய காரணமாகியுள்ளதை அறிய முடிந்தது. இதனடிப்படையில் பணம் இருக்கின்றது என்பதற்காக ஆடம்பரமான ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதால் பயனில்லை என்பதும் உறுதியாகியுள்ளது. அத்துடன் பிள்ளைகளின் ஆரோக்கியத்தை வளர்க்க பெற்றோர் தமது அவசர உணவு பழக்க வளக்கத்தில் மாற்றத்தை கொண்டுவருவதும் அவசியமாக உள்ளது. அந்தவகையில் பிள்ளைகளின் கல்வித் தரநிலையையும் விளையாட்டு உள்ளிட்ட ஏனைய செயற்பாடுகளையும் ஆரோக்கியமான உடற்கட்டமைப்பையும் நிர்ணயிப்பது ஊட்டச்சத்துள்ள உணவுப் பழக்க வழக்கமாகவே உள்ளது. அதனடிப்படையில் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் ஒவ்வொரு பிள்ளைகளினதும் பெற்றோர் முழுமையான பங்கெடுப்பது அவசியம். இதே நேரம் விளையாட்டை விளையாட்டாக விளையாடுவதும் அவசியம் . அதே நேரம் விளையாட்டை விளையாட்டாக விளையாடாதிருப்பதும் அவசியமானது அந்தவகையில் இந்த விளையாட்டு திறமைகாண் நிகழ்வானது வெற்றி பெறுவதற்காக மடுமல்ல கூட்டிணைந்த உறவுகளுடன் கூடிய சிறந்த மனப்பாங்கையும் உருவாக்கிக் கொள்ளும் களமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/182492
  15. பட மூலாதாரம்,GETTY IMAGES 46 நிமிடங்களுக்கு முன்னர் நவீன யுத்தத்தின் சவால்களைக் கருத்தில் கொண்டு சீனா தனது ராணுவத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் செய்யப்பட்ட மிகப்பெரிய மாற்றம் இது. பிபிசி மானிட்டரிங் செய்திப் பிரிவின்படி, ஏப்ரல் 19 அன்று சீனா ஒரு புதிய ராணுவப் பிரிவை உருவாக்குவதாக அறிவித்தது. சீனாவின் அரசாங்க செய்தி முகமை ஷின்ஹுவாவின் கூற்றுப்படி, இந்தப் புதிய ராணுவப் பிரிவுக்கு தகவல் ஆதரவுப் படை (Information Support Force) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு ராணுவப் பிரிவு ஒரு நிகழ்ச்சியின்போது அறிவிக்கப்பட்டதாக, அச்செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் அதிபர் ஷி ஜின்பிங்குடன் மத்திய ராணுவ ஆணையத்தின் மூத்த உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராக ஷி ஜின்பிங் உள்ளார். இந்தச் சிறப்புப் பிரிவு ராணுவத்தின் ஒரு மூலோபாயப் பிரிவாக இருக்கும் என்றும், தகவல் அமைப்புச் சங்கிலியை வலுப்படுத்துவதே அதன் பணியாக இருக்கும் என்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிகாரிகளிடம் அவர் கூறினார். கட்சியின் கட்டளைகளை உறுதியாகக் கேட்டு, ராணுவத்தின் முழுமையான தலைமையின் கொள்கை மற்றும் அமைப்பைச் செயல்படுத்தி, அப்பிரிவு விசுவாசமாகவும் நம்பகமானதாகவும் இருப்பதை உறுதி செய்யும்படி ஷி ஜின்பிங் கேட்டுக் கொண்டார். சீனாவின் நான்கு படைப் பிரிவுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES செய்தி முகமை ஷின்ஹுவாவின் அறிக்கைப்படி, டிசம்பர் 31, 2015 அன்று உருவாக்கப்பட்ட மூலோபாய ஆதரவுப் படை கலைக்கப்பட்டதுதான், ராணுவத்தில் கடைசியாக செய்யப்பட்ட பெரிய சீர்திருத்தம். இதன்கீழ், விண்வெளி மற்றும் சைபர் பிரிவுகள் தகவல் ஆதரவுப் படைக்கு இணையாகச் செயல்படுகின்றன. புதிய பிரிவு உருவாக்கம் குறித்து சீன பாதுகாப்பு அமைச்சகம் செய்தியாளர் சந்திப்பையும் நடத்தியது. புதிய சீர்திருத்தத்தின் கீழ், மக்கள் விடுதலை ராணுவம் இப்போது ராணுவம், கடற்படை, விமானப் படை மற்றும் ராக்கெட் படை என நான்கு சேவைகளைக் கொண்டுள்ளதாக செய்தித் தொடர்பாளர் வூ கியான் கூறினார். இந்த நான்கு சேவைகளைத் தவிர, பிஎல்ஏ (மக்கள் விடுதலை ராணுவம்) நான்கு படைப் பிரிவுகளையும் கொண்டுள்ளது. அவற்றில், விண்வெளி படை, சைபர் படை, தகவல் ஆதரவுப் படை மற்றும் கூட்டுத் தளவாடங்கள் ஆதரவுப் படை ஆகியவை அடங்கும். "விண்வெளி படையின் உதவியுடன் சீனா விண்வெளியில் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும், சைபர் தாக்குதல்களில் இருந்து சைபர் படை நாட்டைப் பாதுகாக்கும், தரவுகளைப் பாதுகாப்பதற்கும் உதவும்" என்று செய்தித் தொடர்பாளர் வூ கியான் கூறினார். இருப்பினும், புதிய பிரிவு குறித்து அவர் அதிக தகவல்களைத் தெரிவிக்கவில்லை. ராணுவத்தின் செய்தித்தாளான பிஎல்ஏ டெய்லி, நவீன போர்களில் வெற்றி என்பது தகவல்களைப் பொறுத்தது, அத்தகைய சூழ்நிலையில் சிறந்த தகவல்களைக் கொண்டவர்களே போரில் வெற்றி பெறுவர் எனத் தெரிவித்துள்ளது. மூலோபாயப் படையில் பணிபுரிந்தவர்களுக்கு புதிய பொறுப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஷி ஜின்பிங் சீன ஊடகங்களைப் போலன்றி, ஹாங்காங் ஊடகங்கள் இந்தப் புதிய பிரிவை யார் வழிநடத்துவார்கள் என்பதில் ஆர்வமாக உள்ளன. புதிய பிரிவின் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் பி யி (Bi Yi) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு அவர் மூலோபாய ஆதரவுப் படையின் துணைத் தளபதியாக இருந்தார். ஹாங்காங்கின் சுயாதீன செய்தித்தாள் மிங் பாவோவின் கூற்றுப்படி, மூலோபாய ஆதரவுப் படையின் அரசியல் ஆணையராக இருந்த ஜெனரல் லி வெய், புதிய பிரிவின் அரசியல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். வியூக ஆதரவுப் படையின் முன்னாள் தளபதியும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்தியக் குழுவின் உறுப்பினருமான சூ கியான்ஷெங், புதிய பிரிவை வழிநடத்தத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என ட்சிங் டாவ் டெய்லி (Tsing Tao Daily) எழுதியுள்ளது. இதனால் அவர் ராணுவ ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர் என்ற ஊகங்கள் வலுப்பெற்றுள்ளன. தற்செயலாக, ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்ஃபு, 2016இல் மூலோபாய ஆதரவுப் படையின் துணைத் தளபதியாக இருந்தார். கடலில் சீனாவின் ஏற்பாடுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES இதற்கிடையில், இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மேற்கு பசிபிசிக் கடற்படை நிகழ்ச்சியின் 19வது நிகழ்வு சீனாவின் செங்டுவில் ஏப்ரல் 21 முதல் 24 வரை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மையத்தில் கடல்சார் பாதுகாப்பில் சீனாவின் எதிர்கால ஏற்பாடுகள் குறித்துப் பேசப்பட்டது. சீன ஊடகங்கள் இந்த நிகழ்வைப் பயன்படுத்தி பிராந்தியத்தில் அதன் அமைதியான நோக்கங்களை ஊக்குவிக்கின்றன. அதே நேரத்தில், சீன ஊடகங்களும் அமெரிக்கா பிராந்தியத்தைச் சீர்குலைப்பதாக விமர்சித்துள்ளன. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராணுவ நிபுணர் ஜாங் ஜுன்ஷே கூறுகையில், இந்தக் கூட்டத்தை சீனா நடத்துவது, 'சர்வதேச கடல்சார் வணிகத்தில் சீனாவின் பங்கை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கிறது' என்பதற்கான அறிகுறி என்று தெரிவித்தார். ஏப்ரல் 23ஆம் தேதி சீன ராணுவ நாளிதழில் வெளியான செய்தியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். சீன அரசாங்கத்தின் ஆதரவு செய்தித்தாளான 'குளோபல் டைம்ஸ்' அதன் தலையங்கத்தில், 'மேற்கு பசிபிக் கடற்படை திட்டத்தில் சீன கடற்படையின் அர்ப்பணிப்பு வெளிப்பட்டதாக' தலைப்பிட்டிருந்தது. சீனாவின் ராணுவ பலம் பட மூலாதாரம்,GETTY IMAGES "அமைதி என்ற வார்த்தை இந்த ஆண்டுக்கான கூட்டத்தின் முக்கிய வார்த்தையாக இருந்தது. மேலும், இது பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது," என்று அந்த தலையங்கம் கூறியது. "பிராந்தியத்திற்கு வெளியே சில நாடுகள் அடிக்கடி ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும் சூழ்நிலைகளில் இது நடைபெற்றுள்ளதாக" தலையங்கம் கூறியது. பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவது ஒன்று அல்லது இரண்டு நாடுகளின் பொறுப்பல்ல, அனைத்து நாடுகளின் கூட்டு முயற்சிகள் தேவை. இந்த நிகழ்வில் பிலிப்பைன்ஸ் பங்கேற்காதது குறித்தும் ஊடகங்கள் விவாதித்தன. ஏப்ரல் 22 அன்று 'குளோபல் டைம்ஸ்' உடன் பேசிய ஜாங் ஜுன்ஷே, சர்வதேச கவனத்தை ஈர்க்கும் திட்டத்தில் பிலிப்பைன்ஸ் இல்லாதது, திட்டத்திற்கு சிரமங்களை உருவாக்கும் நோக்கம் கொண்டது என்று கூறினார். இதுதவிர, ஸ்வீடன் நாட்டு சிந்தனைக் குழுவான ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, பத்து ஆண்டுகளில் கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய பாதுகாப்பு செலவு செய்யப்பட்டுள்ளது என்று, ஏப்ரல் 22 அன்று ஹாங்காங்கின் 'சௌத் சைனா மார்னிங் போஸ்ட்' கூறியது. சீனாவின் அதிகரித்து வரும் ராணுவ பலத்தைக் கருத்தில் கொண்டு, அதன் அண்டை நாடுகளான ஜப்பான் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் தங்கள் ராணுவ வரவு செலவுகளை அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. https://www.bbc.com/tamil/articles/ck7lk07mykgo
  16. Published By: DIGITAL DESK 7 02 MAY, 2024 | 05:20 PM ( எம்.நியூட்டன்) உள்ளூர் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தரச் சான்றிதழைப் வழங்கும் நிறுவனம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கொன்றோள் யூனியன் (CONTROL UNION) என்ற நிறுவனம் யாழ்ப்பாணம் செட்டித்தெரு இல.40 இல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தொடர்பில் யாழ்ப்பாண வர்த்தக சங்க தலைவர் இ. ஜெயசேகரம் கருத்து தெரிவிக்கையில் வடமாகாணத்திலுள்ள உற்பத்தியாளர்கள் விவசாயம் உணவு உற்பத்தி போன்ற பல வகையான உற்பத்திகளுக்கான உற்பத்தி தரச் சான்றிதழை வழங்குவதற்கு இந்த நிறுவனம் தயாராகவுள்ளது. உற்பத்தியாளர்கள் ஏற்றுமதிக்கான தரத்தினை மேம்படுத்திக் கொள்வதற்கான ஆலோசனைகளையும் , தரச் சான்றிதழ்களுக்கான ஆய்வுகள் செய்து வழங்குவார்கள் ஏற்கனவே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருப்பவர்களும் இந்த நிறுவனத்தின் தரச் சான்றிதழைப் பயன்படுத்தி தரத்தை உயர்த்தி பொருட்களை எற்றுமதி செய்யமுடியும். ஏற்றுமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்கான தரச் சான்றிதழ்களைப் பெற்று அனுப்புகின்றபோது குறித்த உற்பத்திப் பொருட்களை தங்கு தடையின்றி தொடர்ந்தும் அனுப்பக்கூடியதாக இருக்கும். வடக்கு மாகாணத்தில் இருந்து ஏற்கனவே பல நிறுவுனங்கள் இந்தச் தரச் சான்றிதழ்களை கொழும்பு சென்றே பெற்று பொருட்களை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கும் நிலையில் இன்று வியாழக்கிழமை இந்த நிறுவனம் இங்கு ஆரம்பித்துள்ளமையினால் ஏனைய உற்பத்தியாளர்களும் இந்த நிறுவனத்தைப் பயன்படுத்தி தரச் சான்றிதடைகளைப் பெற்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியை பெற்றுக் கொள்ளமுடியும் எனவே உள்ளுர் உற்பத்தியாளர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இந்த நிகழ்வில் இந் நிறுவனத்தின் முகாமத்துவ பணிப்பாளர் றொசான் றணவக்க ,வர்த்தக முகாமையாளர் சுனர விக்கிரமாராச்சி மற்றும் நிறுவன அதிகாரிகள்,யாழ்ப்பாண வர்த்தக சங்க தலைவர் இ,ஜெயசேகரன்,மாகாண கைத்தொழில் அபிவிருத்தி பணிப்பாளர் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/182506
  17. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அதீத காலநிலை நிகழ்வுகள் காரணமாக தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். புனேவை தளமாகக் கொண்டு இயங்கி வரும் வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வின் முடிவுகள், இந்தியப் பெருங்கடல் அடுத்த 80 ஆண்டுகளில் அதீத காலநிலை நிகழ்வுகளை எதிர்கொள்ளப் போவதாகவும் இதனால் பெருங்கடல் பகுதியில் பவளப்பாறைகள் அழிவு, கடல் அமிலமயமாதல், அதிக புயல் மற்றும் சூறாவளி நிகழ்வுகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கிறது. எல்சேவியர்ஸ் ஆய்விதழில் வெளியாகியுள்ள ‘இந்தியப் பெருங்கடலின் வெப்பமண்டல பகுதிக்கான எதிர்கால கணிப்புகள்’ என்ற தலைப்பிலான இந்த ஆய்வின் முன்னணி விஞ்ஞானியான ஐஐடிஎம் புனேவை சேர்ந்த காலநிலை விஞ்ஞானி ராக்சி மேத்யு கோல், “எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் வெப்பநிலை உயர்வு, ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்புக்கு நிகரான வெப்பத்தை உண்டாக்கும்” என்று தனது ஆய்வின் முடிவுகள் குறித்து விவரிக்கிறார். மேலும், “இந்த மாற்றங்களின் தாக்கங்கள் நமது எதிர்கால சந்ததிகள் எதிர்கொள்ளக் கூடியவை என்று புறக்கணிக்க முடியாது. இவற்றின் விளைவுகளை நாம் ஏற்கெனவே சந்தித்து வருகிறோம்." என்கிறார் அவர். பட மூலாதாரம்,ROXY MATHEW KOLL/FB "வெள்ளம், வறட்சி, சூறாவளி, நிலம் மற்றும் கடல் ஆகிய இரண்டிலும் நிகழும் வெப்ப அலைகள் நம்மை அதிகளவில் பாதிக்கின்றன. காலநிலை நெருக்கடியைத் தணிப்பதற்கான தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இந்தத் தீவிர வானிலை நிகழ்வுகள் ஆய்வு முடிவுகள் கூறும் காலத்திற்கும் முன்பே தீவிரமடையும்,” என்று எச்சரிக்கிறார் ராக்சி மேத்யூ கோல். இந்தியப் பெருங்கடலின் வெப்பமண்டலப் பகுதி குறித்து ஆய்வறிக்கை முன்வைக்கும் எச்சரிக்கைகள்: கடந்த 70 ஆண்டுகளில்(1950-2020) நூற்றாண்டுக்கு 1.2 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவுக்கு இந்தியப் பெருங்கடலில் வெப்பநிலை அதிகரித்தது. ஆனால், அடுத்த 80 ஆண்டுகளில் (2020-2100) நூற்றாண்டுக்கு 1.7 டிகிரி செல்ஷியஸ் முதல் அதிகபட்சமாக 3.8 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும். அரபிக் கடல் உட்பட வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதி அதிகபட்ச வெப்பநிலை உயர்வை எதிர்கொள்ளக்கூடும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிதீவிர பருவநிலை நிகழ்வுகள் ஏற்படலாம். கடந்த 1950கள் முதல் அதிகன மழை, அதிதீவிர சூறாவளிகள் ஆகியவை அதிகரித்துள்ளன. இந்த நிகழ்வுகளின் அளவு வரும் ஆண்டுகளில் உயரப்போகும் கடல் வெப்பநிலை காரணமாக மேன்மேலும் அதிகரிக்கும். கடல் மேற்பரப்பு மட்டுமின்றி, கடலின் 2000 மீட்டர் ஆழத்திலும்கூட பத்து ஆண்டுகளுக்கு 4.5 ஜெட்டா-ஜூல் என்ற கணக்கில் ஏற்கெனவே வெப்பமடைந்து வருகிறது. இவற்றின் விளைவாக இந்தியப் பெருங்கடலில் அதிகரிக்கப் போகும் கடல் அமிலமயமாதல், பவளப்பாறை அழிவு, கடல்புல் அழிவு, கடல்பாசி நிறைந்த பகுதிகளின் அழிவு ஆகியவற்றால் வாழ்விடச் சிதைவு ஏற்படக்கூடும். இதனால் பெருங்கடலின் மீன்வளத்துறை பெரியளவில் பாதிக்கப்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தக் காலநிலை விளைவுகளால் மீனவர்கள் எதிர்கொள்ளப் போகும் ஆபத்து என்ன? "இதுபோன்ற எச்சரிக்கைகள் புதிதல்ல" என்கிறார் நெய்தல் சமூக ஆய்வாளரும் உலக மீனவர் மன்றத்தின் பிரதிநிதியுமான ஜோன்ஸ் தாமஸ் பார்டகஸ். "இவை குறித்து என்ன செய்யலாம் என்று மீனவ சமூகங்களிடம் கலந்து பேசினால் மட்டுமே அவர்களுக்கு ஏற்ற உரிய தீர்வு கிடைக்கும்" என்றும் வலியுறுத்துகிறார். கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச இடை அரசுக் குழுவின் (ஐபிசிசி) சிறப்பு அறிக்கை, “கடல் வெப்பநிலை எதிர்பாராத வேகத்தில் உயர்வதாகவும் இதனால் அதைச் சார்ந்துள்ள சமூகங்கள் பெரியளவிலான பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் எச்சரித்தது. அந்த எச்சரிக்கையை மேலும் அழுத்தமாகத் தற்போதைய ஆய்வு எடுத்துக்காட்டுவதாகக் கூறுகிறார் ஜோன்ஸ். கடல் வெப்பநிலை அதிகரிப்பது, கடல் மட்டம் உயர்வது, கடல் நீர் உட்புகுதல் ஆகியவை கழிமுகப் பகுதிகளில் ஆக்சிஜன் நீக்கம் ஏற்படக் காரணமாக அமைவதாகவும் இதனால், மீன் இனங்களின் இடப்பெயர்ச்சி நடப்பதாகவும் ஐபிசிசி அறிக்கை எச்சரித்தது. அதன்படி, வாழ்விடப் பரவல், மீன்களின் இருப்பு ஆகியவற்றின்மீது வெப்பநிலை உயர்வு ஏற்படுத்தியதன் விளைவுகளை ஏற்கெனவே மீன்பிடித் தொழிலும் அதைச் சார்ந்து வாழும் சமூகங்களும் எதிர்கொள்கின்றன. படக்குறிப்பு,மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதாக எச்சரிக்கிறார் நெய்தல் சமூக ஆய்வாளரும் உலக மீனவர் மன்றத்தின் பிரதிநிதியுமான ஜோன்ஸ் தாமஸ் பார்டகஸ். இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஆய்வு “கடந்த 70 ஆண்டுகளில் (1950-2020) இந்தியப் பெருங்கடலின் வெப்பநிலை 1.2 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால், காலநிலை மாதிரிகள் கணித்துள்ளதன்படி அடுத்த 80 ஆண்டுகளில் (2020-2100) இந்த அளவு குறைந்தபட்சம் 1.7 டிகிரி முதல் அதிகபட்சமாக 3.8 டிகிரி வரை இருக்கும்” என்று எச்சரிக்கிறது. குறிப்பாக, இந்தியப் பெருங்கடலின் வடமேற்குப் பகுதியும் அரபிக் கடலும்தான் இதன் தீவிரத்தை அதிகம் உணரப் போவதாகவும் ஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன. இது கடலோர சமூகங்கள், குறிப்பாக கடல் வளங்களைச் சார்ந்திருக்கும் மீனவ சமூகங்கள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கிறார் ஜோன்ஸ். கேள்விக்குறியாகும் மீனவர்களின் வாழ்வாதாரம் சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற 55-ஆவது மனித உரிமை மன்றத்தில் மீனவ சமூகங்களின் பிரதிநிதியாகப் பங்கெடுத்த ஜோன்ஸ், “இந்தியப் பெருங்கடல் அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம் எனப் பல முனைகளிலும் குறிவைக்கப்படுவதால், இதுபோன்ற காலநிலை நெருக்கடிகளோ அதன் விளைவாகப் பாதிக்கப்படும் மீனவ சமூகங்களோ கண்டுகொள்ளப்படுவது இல்லை,” என்று கடுமையாக விமர்சிக்கிறார். “இந்தியப் பெருங்கடல் என்னும்போது, அதை மட்டுமே பார்க்கக்கூடாது. இதைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் சுமார் 80 சதவீதம் வர்த்தகம் நடைபெறுகிறது. அதுபோக, பாதுகாப்பு ரீதியாகவும் மிகப்பெரிய கவனம் பெற்றுள்ளது. பல நாடுகள் இங்குள்ள தீவுகளின்மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. மீன் சார்ந்த தொழில் துறையும் இங்கு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், இங்குள்ள மக்களின் வாழ்வியல் மற்றும் வாழ்வாதாரம் குறித்து யாருமே கவலைப்படுவது இல்லை,” என்று குற்றம் சாட்டுகிறார் ஜோன்ஸ். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தப் பகுதியிலுள்ள அனைத்து மீனவர்களும் வரலாற்று ரீதியாகவே ஓர் இன ஒதுக்கலை எதிர்கொள்வதாக அவர் கூறுகிறார். “இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பொறுத்தவரை பேரிடர்களும் வளர்ச்சிகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஆனால், அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் மீனவ மக்கள் அதன் பாதிப்புகளை எதிர்கொள்கிறார்களே தவிர, இங்கு கிடைக்கும் நன்மைகள் அவர்களைச் சென்றடைவதே இல்லை.” சமீபத்திய ஆய்வறிக்கை, இந்தியப் பெருங்கடலின் வெப்பமண்டலப் பகுதிகளில் ஆக்சிஜன் செறிவு குறைந்து வருவதாகவும் கண்டறிந்துள்ளது. சர்வதேச அளவில் கரிம உமிழ்வை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துவதாகக் கூறுகிறார் இந்த ஆய்வின் முன்னணி விஞ்ஞானி ராக்சி மேத்யூ கோல். பலமுனைகளில் இருந்து இதை அணுகுவதன் மூலம்தான் வரவிருக்கும் சவால்களைச் சமாளிக்க முடியும் என்றும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதாவது, உலகளாவிய கரிம உமிழ்வைக் கட்டுப்படுத்துவது, இதன் விளைவாக ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ளத்தக்க கட்டுமானங்களை உருவாக்குவது எனப் பலமுனை நடவடிக்கைகளை ஒருசேர எடுப்பதே கடலோர சமூகங்கள் எதிர்கொள்ளவிருக்கும் இந்தப் பேராபத்தைத் தடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES ‘மூச்சுமுட்டும் நிலையில் தவிக்கும் மீனவர்கள்’ ஆனால், ஏற்கெனவே மீனவர்கள் எதிர்கொண்டு வரும் அபாயங்களே அவர்களை மூச்சுமுட்ட வைப்பதாகவும் இந்த நிலையில் இப்படியொரு எச்சரிக்கை வந்திருப்பது சிவப்பு எச்சரிக்கையைவிடத் தீவிரமானது என்றும் கூறுகிறார் ஜோன்ஸ். “கடலோர பொருளாதார மண்டலங்கள், கடலில் நடக்கும் பொருளாதார நடவடிக்கைகள், இவற்றுக்கு மேல் காலநிலை நெருக்கடியால் ஏற்படும் தொழில், வாழ்வாதார பாதிப்புகள் என்று அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தாக்குதல் நிகழும்போது மீனவர்களால் எந்தப் பக்கம் ஓட முடியும்?” என்று வினவும் ஜோன்ஸ், மீனவ சமூகங்கள் அனைத்துமே இப்போதே உள்நாட்டு சூழலியல் அகதிகளாகத்தான் இருப்பதாகவும் கூறுகிறார். அதே நேரத்தில், இத்தகைய ஆய்வுகளை முற்றிலுமாகச் சார்ந்திருக்க முடியாது என்கிறார் ஐஐடி மும்பையை சேர்ந்த பேராசிரியரும் காலநிலை விஞ்ஞானியுமான ரகு முர்துகுட்டே. அவரது கூற்றுப்படி, ஒருவேளை உண்மையாக இத்தகைய பேராபத்து வரவுள்ளது என வைத்துக்கொண்டாலும்கூட அதைச் சமாளிக்க என்ன செய்யப் போகிறோம் என்பதற்கான பதில் நம்மிடம் இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES காலநிலை மாதிரிகள் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் எதிர்காலம் குறித்த ஊகங்களை மட்டுமே வழங்குவதாகவும் அவற்றை முழுமையாக நம்ப முடியாது என்று கூறும் முர்துகுட்டே, பவளப் பாறைகள் அழிவு, கடல்பரப்பில் வெப்பநிலை உயர்வு, கடல் அமிலமயமாதல் ஆகிய அபாயங்கள் அதிகரித்து வருவதை ஏற்றுக்கொள்கிறார். “கடல் பகுதியில் ஏற்படும் வெப்ப அலைகளை, அதன் பாதிப்புகளை இப்போது எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது குறித்து நாம் கலந்தாலோசித்து திட்டமிட வேண்டும். அதன் பிறகு, 2100-இல் ஏற்படப்போகும் ஆபத்துகளைப் பற்றிச் சிந்திக்கலாம்.” மீன் வளத்தைப் பொறுத்தவரை அளவுக்கு அதிகமாக மீன் பிடிப்பது ஒருபுறம் பிரச்னையாக இருக்க, மறுபுறம் காலநிலை நெருக்கடியால் மீன் வளம் குறைவது ஒரு முக்கியப் பிரச்னையாக இருக்கிறது. இந்த இரண்டையும் தனித்தனி பிரச்னைகளாக அணுக வேண்டியது அவசியம் என்கிறார் ரகு முர்துகுட்டே. “கடலோரங்களில் அலையாத்திக் காடுகள், பவளப் பாறைகள் மீது அதிக கவனம் செலுத்துவது, மாசுபாடுகளைக் கட்டுப்படுத்துவது, மீனவ சமூகங்கள் ஒட்டுமொத்தமாக மீன் பிடிக்காமல், அவர்களில் யாரெல்லாம், எந்தெந்த காலகட்டங்களில் மீன் பிடிக்கலாம் என்பது போன்ற ஏற்பாடுகளைச் செய்வது, மீன்வள மேலாண்மையில் நிலைத்தன்மையைக் கொண்டு வருவது எனப் பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த வகையில் எடுக்க வேண்டியது அவசியம். அதன்மூலம் இந்த அபாயத்தைக் கட்டுப்படுத்த முடியும்.” எனவும் வலியுறுத்துகிறார் அவர். காலநிலை நெருக்கடியைக் கையாள என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாக்கவும், காலநிலை தகவமைப்புடன் கூடிய அணுகுமுறையைக் கையாள வேண்டியது அவசியம் எனவும் இதில் சர்வதேச ஒத்துழைப்பையும் வளர்க்க வேண்டும் என்று சமீபத்திய ஆய்வறிக்கை அறிவுறுத்துகிறது. ஆனால் காலநிலை நெருக்கடியின் விளைவாக ஏற்படும் ஆபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக நிலைமையை மோசமாக்கும் வகையிலேயே அரசின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாகவும் கூறுகிறார் ரகு முர்துகுட்டே. கடலோர பொருளாதார மண்டலங்கள் மூலம் துறைமுகங்களைப் புதிதாகக் கட்டுவது, ஆழ்கடல் சுரங்கங்கள், ஹைட்ரோகார்பன் திட்டங்கள், தூய ஆற்றல் என்ற பெயரில் ஆழ்கடலில் காற்றாலைகளை நிறுவுவது எனப் பல திட்டங்கள் இந்தியப் பெருங்கடல், வங்கக் கடல் பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால், “இத்தகைய பொருளாதார நோக்கிலான திட்டங்களால் தற்போது கூறப்படும் காலநிலை எச்சரிக்கைகள் துரிதப்படுமே தவிர, தணியாது” என்று விமர்சிக்கிறார் ஜோன்ஸ். மனித நடவடிக்கைகளால் துரிதமடையும் அபாயங்களை மட்டுப்படுத்தாமல், “வளர்ச்சித் திட்டங்கள்” மூலம் அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதையே அரசு செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார். பட மூலாதாரம்,SIVA.V.MEYYANATHAN/TWITTER காலநிலை நெருக்கடியின் விளைவுகள் மட்டுமின்றி மேற்கூறிய மனித நடவடிக்கைகளால் ஏற்படும் அபாயங்களையும் கையாள்வதற்கான அணுகுமுறையைத் திட்டமிடும்போது மீனவ சமூகங்களின் பார்வை மிகவும் அவசியம் என அவர் வாதிடுகிறார். “உள்ளூர் மக்கள் சமூகங்களைத் திட்டமிடுதலில் இணைத்துக்கொள்ள வேண்டுமென்ற பார்வையே அதிகாரிகள், வல்லுநர்கள் என யாரிடத்திலும் இல்லை. அப்படி நினைத்தால் மட்டுமே அவர்களுக்குத் தேவையான நடவடிகைகளை மேற்கொள்ள முடியும். அதன் மூலமாகத்தான் எதிர்வரும் அபாயங்களைக் கையாள முடியும்” என்கிறார் ஜோன்ஸ். மீனவர்கள் நலனில் அரசு அக்கறை செலுத்துகிறதா? தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டு காலத்தில் எந்தவித அபாயகரமான திட்டமும் கடற்கரையோரங்களில் நிறைவேற்றப்படவில்லை என்று கூறுகிறார் தமிழ்நாடு சுற்றுச்சூழல், காடு, காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். எந்தவொரு திட்டமோ நடவடிக்கையோ கொண்டு வரப்படும்போது மீனவ சமூகங்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்துக் கேட்டபோது, “மீனவ மக்களுடைய உரிமைகள், வாழ்வாதாரம் தொடர்பான பணிகளை, மீனவ சங்கப் பிரதிநிதிகளிடம் கேட்டு, அவர்கள் அறிவுறுத்தியதன்படியே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என்றார். எதிர்காலத்தில் காலநிலை நெருக்கடியால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருத்தில் கொண்டே நெய்தல் மீட்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கூறினார் மெய்யநாதன். அந்தத் திட்டத்தால் மீனவ மக்களுக்குப் பெரிய பயன் ஏதுமில்லை என்ற விமர்சனம் குறித்துக் கேட்டபோது, “மீன்பிடித் தடைக்காலத்தில் கொடுக்கப்படும் தொகை உயர்த்தப்பட்டுள்ளது, மீனவ மக்களுக்கான வீட்டு வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன” என்று கூறியவர் அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் நிறைவேற்றித் தருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c84z39xx194o
  18. லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு! 02 MAY, 2024 | 08:04 PM லிட்ரோ எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 4,115 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 12.5 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் தற்போது 4,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/182519
  19. Published By: DIGITAL DESK 3 02 MAY, 2024 | 04:41 PM பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய தேடுதல் நடவடிக்கையின் கீழ் குற்றப்புலனாய்வு பிரிவு கீழ் பணிக்கப்பட்ட விசாரணைக்கு அமைவாக சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மன்னாரில் சந்தேக நபர் ஒருவரின் 9 கோடியே 30 இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் இன்று வியாழக்கிழமை (2) முடக்கப்பட்டுள்ளது. தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 43 வயதான சந்தேக நபர் ஒருவருக்கு சொந்தமான இரண்டு வீடுகள்,சொகுசு வாகனம் உள்ளடங்களாக 9 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மேற்படி நீதிமன்ற அனுமதியுடன் முடக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் 2002 ஆம் ஆண்டு அரச வீட்டுத்திட்டம் ஒன்றை பெற்று இரண்டு படகுகளை வைத்து சாதாரண குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில் 2019 பின்னர் குறிப்பிட்ட காலத்திற்குள் பல கோடி சொத்துக்களை சேர்த்துள்ளார். அதன் அடிப்படையில் குற்றப்புலனாய்வு பிரிவின் கீழ் இயங்கும் சொத்து முடக்கள் பிரிவினர் கடந்த இரண்டு வருடங்களாக விசாரணைகளை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் நீதிமன்ற அனுமதியை பெற்று வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் சாமந்த விஜசேகர மேற்பார்வையின் கீழ் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின் தலைமையில் கொழும்பு குற்றபுலனாய்வு பிரிவின் சட்ட விரோத விசாரணை பிரிவு பொலிஸாரினால் தற்காலிகமாக இன்றில் இருந்து 7 தினங்களுக்கு சந்தேக நபரின் சின்னக்கடையில் காணப்படும் கடைதொகுதியுடன் கூடிய வீடு ஒன்றும் தலைமன்னார் பகுதியில் உள்ள விசாலமான வீடு சொகுசு வாகனம் ஒன்று முடக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இதனை தொடர்ந்து உயர் நீதி மன்றத்தின் அனுமதியுடன் சொத்துக்களை அரசுடமையாக்கும் செயற்பாட்டை மேற்கொள்ளும் நடவடிக்கையில் பொலிஸார் ஈட்பட்டுள்ளனர். வடக்கில் சட்ட விரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் முறை என்பதுடன் இது போன்று சட்ட விரோதமாக சொத்துக்கள் ஈட்டிய பல்வேறு நபர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/182504
  20. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 5 முதல் 16ஆம் தேதிக்குள் 4 காவல் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இது தொடரக்கூடாது என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். இந்தச் சம்பவங்களில் என்ன நடந்தது? கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் கொடி வழங்கும் விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை தமிழக காவல்துறையினர் ஏற்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டார். ஆனால், அந்த ஆண்டுத் துவக்கத்தில் இருந்து ஏப்ரல் மாதத்திற்குள் மட்டும் 3 காவல் மரணங்கள் நடந்திருந்தன. முதலமைச்சர் இப்படிச் சுட்டிக்காட்டிப் பேசிய பிறகும்கூட போலீஸ் காவலில் இருப்பவர்கள் மரணமடைவது தொடர்ந்துகொண்டே இருந்தது. ஆனால், இப்போது ஒரே மாதத்தில் 12 நாட்களுக்குள் நான்கு பேர் போலீஸ் காவலில் இறந்திருப்பதுதான் பலரையும் அதிர வைத்திருக்கிறது. ஏப்ரல் 5ஆம் தேதி முதல் 16ஆம் தேதிவரை நான்கு பேர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது உயிரிழந்திருக்கின்றனர். இந்த நான்கு பேரில் 2 பேர் காவல் நிலையத்தில் உயிரிழந்திருக்கின்றனர். இரண்டு பேர் நீதிமன்றக் காவலில் உயிரிழந்திருக்கின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவர் காவலில் மரணம் மணிமேகலையும் அவரது கணவர் கணேசனும் மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையின் வாயிலில் கடை வைத்து பிழைத்துக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் கடைகள் அங்கிருந்து அகற்றப்படவே, தற்போது கூலி வேலை செய்கிறார்கள் இந்தத் தம்பதி. இவர்களது ஒரே மகன் கார்த்திக். இவருக்குத் திருமணமாகி, ஒரு வயதிலும் 3 வயதிலும் குழந்தைகள் இருக்கின்றனர். இவர் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில்தான் ஒரு வழிப்பறி வழக்கில் கைதுசெய்யப்பட்ட கார்த்திக், போலீஸ் காவலிலேயே இறந்து போயிருக்கிறார். "ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவனை போலீஸ்காரர்கள் வந்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள். நான் வேலைக்குப் போயிருந்ததால், பிற்பகல் நான்கு மணி அளவில் தொலைபேசியில் தகவல் சொன்னார்கள். நான் என் மருமகளிடம் விவரத்தைச் சொன்னேன். அதற்குப் பிறகு ஆறு மணிக்கு என் மகனே போன் செய்தான். தன்னை ரிமாண்ட் செய்யப்போவதாகவும் வந்து பார்க்கும்படியும் சொன்னான். உடனே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனோம். பத்து மணியளவில் அவனை ரிமாண்ட் செய்து ஜெயிலுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். நாங்கள் வீட்டுக்குப் போய்விட்டோம்." என்கிறார் கார்த்தியின் தாயாரான மணிமேகலை. "அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு காவல் துறையிடமிருந்து போன் வந்தது. என்னுடைய மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகச் சொன்னார்கள். போய்ப் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினோம். அன்று இரவு 2 மணிக்கு போலீஸிடமிருந்து மறுபடியும் போன் வந்தது. எனது மகனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டதாகவும் வந்து பார்க்கும்படியும் சொன்னார்கள். நாங்கள் போய் பார்த்த சிறிது நேரத்திலேயே அவன் இறந்துவிட்டான். என்ன நடந்ததென்றே தெரியவில்லை" என்கிறார் மணிமேகலை. அதீத காய்ச்சலால் இறந்ததாகக் கூறிய காவல்துறை அவர் அதீதமான காய்ச்சலால் உயிரிழந்ததாக காவல் துறை கூறியிருக்கிறது. இருந்தாலும் குடும்பத்தினரால் நம்ப முடியவில்லை. நன்றாகப் பேசிக்கொண்டிருந்த மகன் எப்படி திடீரென இறக்க முடியும் எனக் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கு சில நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு அருகிலுள்ள பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் போலீஸ் காவலில் இறந்து போனார். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு,இட்லி கார்த்திக். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட படம் பாஜக நிர்வாகி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு நேர்ந்தது என்ன? பா.ஜ.கவின் பட்டியல் அணி பிரிவின் மாநிலப் பொருளாளரான சங்கர் என்பவர் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த கவுன்சிலரான 30 வயது சாந்தகுமார் என்பவர் கைதுசெய்யப்பட்டு 11 மாதங்களுக்குப் பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார். அவர் நசரத்பேட்டை காவல்நிலையத்தில் கையெழுத்திட்டுவந்தார். இதற்காக புட்லூரில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் அவரையும் அவருடன் இருந்த வேறு ஆறு பேரையும் கைதுசெய்தனர். செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் காவல் துறையினர் இவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக சாந்தகுமார் கூறியதாகவும் அதனால், அவரை மருத்துமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் வழியிலேயே இறந்துவிட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES திட்டமிட்ட படுகொலை எனக் கூறும் சாந்தகுமாரின் மனைவி இது திட்டமிட்ட படுகொலை என்று குற்றம்சாட்டிய சாந்தகுமாரின் மனைவியும் அவரது குடும்பத்தினரும் சாந்தகுமாரின் மரணம் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். "என் கணவரின் சொந்த ஊரே புட்லூர்தான். அவருடைய அம்மா வழியில் வந்த நிலம் அங்கிருந்தது. அதை விற்பது குறித்து பேசத்தான் அவர் அங்கே போயிருந்தார். ஆனால், ஆயுதங்களோடு இருந்ததாகக் கூறி கைதுசெய்திருக்கிறார்கள். அன்று மாலை நான்கு மணியளவில்தான் எனக்குத் தகவல் தெரிந்தது. நான் வழக்கறிஞர்களை அனுப்பிவைத்தேன். உள்ளே விசாரணை நடந்துவந்ததால், அவர்களால் அவரை சந்திக்க முடியவில்லை. ஐந்தரை மணியளவில் போன் செய்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு வரச் சொன்னார்கள். அங்கே போனபோது, மார்ச்சுவரியில் என் கணவரின் உடல் இருப்பதாகச் சொல்லிவிட்டார்கள்" என்கிறார் அவரது மனைவி விஜயலட்சுமி. இப்போது இந்த விவகாரம் தொடர்பாக குற்றவியல் நடுவர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. சாந்தகுமாரிடம் விசாரணை நடத்திய நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் குணசேகரன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது எப்படி நடந்தது என்பது குறித்து ஆவடி மாநகர காவல் துறை ஆணையர் ஷங்கரிடம் கேட்டபோது, "பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. ஆனால், இதுவரை கிடைத்த தகவல்களின் படி அவரது உடலில் காயங்கள் ஏதும் இல்லை. இருதய நாளங்களில் அடைப்பு இருந்ததால்தான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார். ஆனால், காவல் நிலையத்தில் இருக்கும்போது இந்தச் சம்பவம் நேரிட்டதால் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். நீதித்துறை நடுவர் விசாரணை நடக்கிறது. விசாரணையின் முடிவை வைத்து கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். ஆனால், சாந்தகுமாருக்கு வயது வெறும் 30தான் எனும்போது சந்தேகம் ஏற்படாதா எனக் கேட்டபோது, "இப்போது சிறு வயதினருக்கே மாரடைப்பு ஏற்படுகிறது. உடற்பயிற்சி கூடத்தில்கூட மாரடைப்பு ஏற்பட்டு இறக்கின்றனர். இருந்தாலும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் எதையும் சொல்ல முடியும்" என்கிறார் அவர். உயிரிழந்த சாந்தகுமாருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES இதேபோல, ஏப்ரல் 10ஆம் தேதி விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு வீடு திரும்பிய கே. ராஜா என்பவர், வீட்டிற்குள் வந்தவுடன் உயிரிழந்தார். விழுப்புரம் டவுன் ஜிஆர்பி தெருவைச் சேர்ந்த 44 வயதான கே. ராஜா என்பவரை ஏப்ரல் 9ஆம் தேதி முதல் காணவில்லை. ஏப்ரல் பத்தாம் தேதி காலையில் அவர் காவல் துறையால் கைதுசெய்யப்பட்டிருப்பது குடும்பத்தினருக்குத் தெரியவந்தது. இதற்குப் பிறகு அவரைச் சந்திக்க அவரது குடும்பத்தினர் சென்றனர். அவர்கள் கைதியை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இதற்குப் பிறகு காலை 11.30 மணியளவில் அவர் வீடு திரும்பினார். டாஸ்மாக் ஒன்றுக்கு அருகில் இருந்த உணவகத்தில் வேலை பார்த்த ராஜா, மது விற்பனைக்கான நேரம் முடிந்த பிறகும் கள்ளச்சந்தையில் மது விற்ற குற்றச்சாட்டில் விசாரிக்கப்பட்டதாக காவல்துறை கூறியது. வீட்டுக்குத் திரும்பிய ராஜா, தன்னைக் காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதாக குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார். அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் வாயிலிருந்து நுரை தள்ளி கீழே சாயவே, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இப்போது இது தொடர்பாக விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட சிவகாசியை சேர்ந்த 60 வயதான ஜெயக்குமார் என்ற விசாரணைக் கைதி ஏப்ரல் 15ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அங்கேயே உயிரிழந்தார். விழுப்புரம் வழக்கைத் தவிர, மற்ற மூன்று சம்பவங்கள் தொடர்பாகவும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 176 (1) (அ)ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நான்கு சம்பவங்களிலும் தமிழ்நாடு அரசு இழப்பீடு ஏதும் அறிவிக்கவில்லை. விழுப்புரம் ராஜாவின் மரணம் சந்தேக மரணமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இப்போது மறு பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவு பெறப்பட்டுள்ளது. "இந்த வழக்குகளின் புலன் விசாரணையை உடனடியாக குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CB-CID) மாற்ற தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இந்த மரணங்களில் தொடர்புடைய காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மேலும் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இந்த நான்கு சம்பவங்களிலும் தொடர்புடைய அனைத்து காவலர்கள், சிறைச்சாலை அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இது தொடர்பான விவரங்களை தேசிய மனித உரிமை ஆணையத்திடம் (NHRC) தெரிவிக்க வேண்டும்" என்கிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளரான ஹென்றி திஃபேன். மேலும் சில விஷயங்களையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். "இதுபோல நடந்தால் என்ன செய்ய வேண்டுமென 'சந்தேஷ் VS மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர்' வழக்கின் தீர்ப்பில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவர் போலீஸ் காவலில் இறந்தால், குடும்ப உறுப்பினர்கள் பார்க்காமல் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கே அனுப்பக்கூடாது. பிரேதப் பரிசோதனை அறிக்கையை உடனடியாக குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும். அவர்கள் அதனைப் படித்துப் பார்த்து, ஒப்புதல் தெரிவிக்க கால அவகாசம் வழங்கியே சடலத்திற்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும். இப்படியெல்லாம் செய்தாலே, பாதி பிரச்னைகள் எழாது. இந்தப் பரிந்துரைகள் எல்லாமே காவல்துறைக்கு எதிரானவையல்ல. அவர்களுக்கு ஆதரவானவைதான். இந்த விதிமுறைகளின்படி நடந்தால், காவல்துறை அதிகாரிகள் எந்தச் சிக்கலிலும் சிக்க மாட்டார்களே.. ஆனால், அப்படி செய்யாமலிருப்பது ஏன் எனத் தெரியவில்லை" என்கிறார் ஹென்றி. பட மூலாதாரம்,GETTY IMAGES காவல்துறையில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க ஏற்கெனவே உள்ள விதிமுறைகளைப் பின்பற்றினாலே போதும் என்கிறார் முன்னாள் டிஜிபியான திலகவதி. "ஒருவரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துவரும்போது பல சமயங்களில் அவரது உடல் நிலை மோசமாகக்கூட இருக்கலாம். அதனால்கூட மரணங்கள் நேரலாம். அதற்கு காவல்துறை பொறுப்பேற்க நேர்கிறது. ஆகவே, ஒருவரை விசாரணைக்கு அழைத்துவரும்போதே அவரை மருத்துவ பரிசோதனை செய்துதான் அழைத்து வரவேண்டும். அவருக்கு உடல்நிலை மோசமாக இருந்தால், மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமே தவிர, காவல் நிலையத்திற்கு அழைத்துவரக்கூடாது. கைது செய்யப்பட்டவுடனேயே உறவினர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும். கைதி விரும்பினால் வழக்கறிஞர்களிடம் பேச அனுமதிக்க வேண்டும்." "எந்தக் கைதியையும் இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் தங்க வைக்கக்கூடாது. காரணம், இரவில் காவல் நிலையத்தில் மிகக் குறைவான காவலர்களே இருப்பார்கள். திடீரென கைதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் ஒன்றிரண்டு காவலர்களால் எதுவும் செய்ய முடியாது. இந்த விதிமுறைகளை திரும்பத் திரும்ப காவல்துறையினருக்கு சொல்லிவர வேண்டும். மனித உயிர் விலைமதிப்பற்றது" என்கிறார் திலகவதி. தேசிய மனித உரிமை ஆணையம் அளிக்கும் புள்ளிவிவரங்களின்படி, 2018-19ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 11 காவல் மரணங்களும் 89 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன. இந்திய அளவில் 137 காவல் மரணங்களும் 1797 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன. 2019 - 20ல் தமிழ்நாட்டில் 12 காவல் நிலைய மரணங்களும் 57 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன. https://www.bbc.com/tamil/articles/c72pkrxp3xxo
  21. யாழ். புங்குடுதீவு மனித எச்ச அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு வந்தது Published By: DIGITAL DESK 3 02 MAY, 2024 | 02:14 PM யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணிகள் மதியத்துடன் நிறைவுக்கு வந்தது. புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் அரசினர் வைத்தியசாலையை அண்மித்த பகுதியிலுள்ள தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது, மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அண்மையில் வெளிவந்தன. அதனை தொடர்ந்தே கிடங்கு வெட்டும் பணிகளை இடைநிறுத்தி அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதை, அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , அவ்விடத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்த நிலையில் அவ்விடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர். அதன் அடிப்படையில் இன்றையதினம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நளினி சுபாகரன், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், தொல்லியல் துறை அதிகாரி மணிமாறன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள், பொலிஸார், தடயவியல் பொலிஸார் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அகழ்வின் போது பெண்ணொருவரினுடையதாக கருதப்படும் எலும்புக் கூடு முழுமையாக மீட்கப்பட்டது. எலும்புக் கூடுடன் செப்பு நாணயங்கள், துணி, அரிசி துகள்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி முன்னைய காலத்தில் மயானமாக இருந்திருக்கலாம் என்றும் குறித்த பெண்ணின் உடல் இந்து முறைப்படி கிரியை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் மீட்கப்பட்ட எலும்புக் கூடு மற்றும் ஏனைய சான்றுப் பொருட்களை பார்வையிட்ட நீதவான் இது தொடர்பான பகுப்பாய்வு பரிசோதனையை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க சட்ட மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து அப்பகுதியில் அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு வந்ததுடன் மீட்கப்பட்டுள்ள எலும்புக் கூடு மற்றும் சான்றுப் பொருட்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/182482
  22. பிரபஞ்சத்தில் தனித்துவிடப்பட்ட உயிர்க்கோளமான பூமிக்கு அப்பால், அதே போன்ற இன்னொரு கிரகத்தில் உயிர்களின் சாத்தியத்தை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி உறுதி செய்திருக்கிறது. சுமார் 124 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிவப்பு குள்ள நட்சத்திரத்தை சுற்றிவரும் K2-18b என்ற கிரகத்தை, உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகளுடன் ஜேம்ஸ் வெப் விண்வெளி ஆய்வுக்கான தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. இதுவரை ஏவப்பட்டவற்றில் சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் தந்திருக்கும் தரவுகள், விண்வெளி ஆய்வாளர்களுக்கு ஆச்சரியம் தந்துள்ளன. பூமி – K2-18b கற்பனை ஒப்பீடு K2-18b கிரகம் பலவகையிலும் பூமியை ஒத்துள்ளது. பூமியின் அளவில் 2.6 மடங்கு பெரிதான K2-18b, பூமி போன்றே கடல்கள் சூழ அமைந்துள்ளது. கூடவே இந்த கிரகம் உயிர்கள் வாழத் தகுதியானது என்பதை நிரூபிக்கும் தரவுகளும் அடுத்தடுத்து கிடைத்து வருகின்றன. இவை உலகம் முழுக்க விண்வெளி அறிவியலாளர்களை K2-18b திசைக்கு திருப்பியுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த கிரகத்தின் இருப்பு உறுதி செய்யப்பட்டாலும், அண்மை ஆய்வுகள் அதில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புகளை அதிகம் உறுதிசெய்து வருகின்றன. குறிப்பாக உயிர்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் டைமெதில் சல்பைடு வாயு அந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட ஆய்வுகள் மேற்படி கிரகத்தின் வளிமண்டலத்தில் மீத்தேன் மற்றும் கார்பனி ரொ க்சைடு இருப்பை உறுதிப்படுத்த முயன்று வருகின்றன. அடுத்த 6 மாதங்களில் இதற்கான விடை கிடைத்துவிடும் என்றும் நாசா அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கிருக்கும் ஏலியன்கள் அல்லது ஏதோவொரு உயிர்களை, மேலும் நெருக்கமாக ஆராய்வதற்கு பூமிக்கும் K2-18b கிரகத்துக்கும் இடையிலான தொலைவு பெருந்தடையாக உள்ளது. 124 ஒளியாண்டுகள் தொலைவு என்பது, K2-18b கிரகத்தை நோக்கி பயணம் மேற்கொள்வதில் மனிதனின் அற்பமான ஆயுளோடு ஒப்பிடுகையில் மிகப் பிரம்மாண்டமானது. மணிக்கு 38,000 மைல் வேகத்தில் சீறும் வாயேஜர் விண்கலத்தில் ஏறி விரைந்தாலும் கூட, அந்த கிரகத்தை அடைய சுமார் 22 இலட்சம் ஆண்டுகள் ஆகும். தலைசுற்றச் செய்யும் இந்த தொலைவுதான் K2-18b ஏலியனுக்கும் நமக்கும் இடையே பெரும் தடையாக இருக்கிறது. இதற்கு தீர்வு தரும் தொழில்நுட்பம் கண்டறியப்படும்போது K2-18b ஏலியனை மெய்யாலுமே சந்தித்து ஹலோ சொல்லலாம். ஒன்று மட்டும் நிச்சயமாகி இருக்கிறது. நாம் இந்த பிரபஞ்சத்தில் தனியாக இல்லை. https://thinakkural.lk/article/300607
  23. 02 MAY, 2024 | 01:30 PM ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீமின் விசேட அழைப்பின் பேரில் இந்திய உயர்ஸ்தானியர் சந்தோஷ் ஜா புதன்கிழமை (01) ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். ஒலுவில் துறைமுக விஜயத்தின் பின்னர் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஏ.சீ.ரியாஸ் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர்,முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஜே.பீ, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய இணைப்பாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப், அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் நஜீயா சாபீர், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான ஏ.சீ.சமால்டீன், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பள்ளிவாசல்களின் தலைவர்கள், மீனவ சங்கங்களின் தலைவர்கள், அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் நிந்தவூர் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/182471
  24. "ஆனந்த ராகம் கேட்கும் காலம்" - இளையராஜா இசையில் உமா ரமணன் பாடிய மறக்க முடியாத 10 பாடல்கள் பட மூலாதாரம்,AV RAMANAN கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தனித்துவமிக்க குரல் வளமுடைய பாடகரான உமா ரமணன் 69 வயதில் காலமானார். தமிழ்த் திரைப்படங்களில் இளையராஜாவின் இசையில் சில மறக்க முடியாத பாடல்களைப் பாடியிருக்கிறார். உமாரமணன் பாடிய முக்கியமான 10 தமிழ்ப்பாடல்கள் இதோ. 1. பூங்கதவே தாழ் திறவாய்: பாரதிராஜா இயக்கத்தில் 1981ல் வெளிவந்த 'நிழல்கள்' படத்தில் உமா ரமணன் பாடிய பாடல் இது. இளையராஜாவின் இசையில் வைரமுத்து எழுதிய இந்தப் பாடலை தீபன் சக்கரவர்த்தியுடன் இணைந்து பாடியிருப்பார் உமா ரமணன். 1977ல் வெளியான கிருஷ்ண லீலா படத்திலேயே உமா ரமணன் பாடியிருந்தாலும், இந்தப் பாடலே அவரை வெளியுலகிற்கு பிரபலப்படுத்தியது. இந்தப் பாடல் வெளியாகி 44 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தபோதும் இந்தப் பாடல் இன்றும் பரவலாக ஒலிக்கப்படுகிறது. பாடலின் இரண்டாவது பகுதியில், "திருத்தேகம் எனதாகும்" என தீபன் சக்கரவர்த்தி பாட ஆரம்பிக்க, உமா ரமணன் 'ம்ம்..' என ஹம்மிங் செய்வார். அது இந்தப் பாடலில் அதிகம் ரசிக்கப்பட்ட இடமாகும். 2. ஆனந்த ராகம் கேட்கும் காலம்: 1981ல் பாரதி வாசு வெளியான பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இடம்பெற்ற பாடல் இது. கங்கை அமரன் எழுதிய பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடலின் துவக்கத்தில், வயலின், கீபோர்ட், கிடார் ஆகியவை இணைந்து ஒலிக்கும். அதன் பிறகு "ஆனந்த ராகம்" என உயரும் உமா ரமணனின் குரல் கவனிக்கப்பட்டது. இளம்பருவத்துக் காதலின் உணர்வைச் சொல்வதாக ஒலிக்கும் இந்தப் பாடலைக் கேட்பவர்கள், சற்றேனும் கடந்த காலத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பி வருவார்கள் எனலாம். 3. பூபாளம் இசைக்கும்: இளையராஜா இசையில் வெளியான தூறல் நின்னு போச்சு படத்தில் இடம்பெற்ற பாடல் இது. பாக்யராஜும் சுலக்ஷணாவும் பாடுவதாக அமைந்திருக்கும் இந்தப் பாடலை எழுதியவர் முத்துலிங்கம். இந்தப் பாடலில் முதல் சரணம் முடியும்போது 'தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது... னன னன னன னன னா னன னன னன னன னா' என்று உமா ரமணன் பாடும் இடம் அதிக ரசனைக்குரியது. பட மூலாதாரம்,AV RAMANAN படக்குறிப்பு,1977ல் வெளியான கிருஷ்ண லீலா படத்திலேயே உமா ரமணன் பாடியிருந்தாலும், பூங்கதவே தாழ் திறவாய் பாடலே அவரை வெளியுலகிற்கு பிரபலப்படுத்தியது. 4. செவ்வந்தி பூக்களில் செய்த வீடு: 1983ல் பாரதி வாசு இயக்கத்தில் வெளியான மெல்லப் பேசுங்கள் படத்தில் இடம்பெற்ற பாடல் இது. பானுப்ரியாவுக்கு இது முதல் படம். இந்தப் பாடலின் துவக்கத்தில் மாணிக்கவாசகர் எழுதிய திருப்பள்ளியெழுச்சியின் சில வரிகள் இடம்பெற்றிருக்கும். அந்த வரிகளைப் பாடிவிட்டு, "செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு" என உமா ரமணன் துவங்கும்போது, அதிகாலையின் புத்துணர்வைத் தரும். இந்தப் படம் பெரிதாக அறியப்படவில்லை. ஆனால், பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. 5. செவ்வரளி தோட்டத்துல உன்னை நினைச்சேன்: 1983ல் ஆர். செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பகவதிபுரம் ரயில்வே கேட்' படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இளையராஜா இசையமைத்த இந்தப் பாடலை, கங்கை அமரன் எழுதியிருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற 'காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு' என்ற பாடலும் மிகச் சிறப்பாக இருந்தாலும், இந்தப் பாடலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலை உமா ரமணனுடன் இணைந்து இளையராஜா பாடியிருப்பார். 80களில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலித்த பாடல் இது. 6. கண்மணி நீ வரக் காத்திருந்தேன்: ஸ்ரீதர் இயக்கி 1985ல் வெளியான தென்றலே என்னைத் தொடு படத்தில் இடம்பெற்ற பாடல் இது. மோகனும் ஜெயஸ்ரீயும் பாடுவதாக வரும் இந்தப் பாடல். வாலி எழுதிய இந்தப் பாடலை கே.ஜே. யேசுதாஸுடன் இணைந்து பாடியிருந்தார் உமா ரமணன். 'அந்திப் பகல் கன்னி மயில் உன்னருகேஏஏ' என உமா ரமணனின் குரல் உயரும் இடம் முக்கியமானது. 7. யார் தூரிகை தந்த ஓவியம்: இந்தப் பாடலை பார்த்தவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். ஆனால், 80களில் வானொலியில் அடிக்கடி ஒலித்த பாடல் இது. 'பாரு பாரு பட்டணம் பாரு' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை, எஸ்.பி.பியுடன் இணைந்து பாடியிருந்தார் உமா ரமணன். இளையராஜாவின் இசை, உமா ரமணனின் குரல், கங்கை அமரனின் வரிகள் இணைந்து இந்தப் பாடலை கவனிக்க வைத்தன. பட மூலாதாரம்,GNANAPRAKASAM படக்குறிப்பு,இளம் வயதில் உமா ரமணன் 8. நீ பாதி நான் பாதி கண்ணே: வசந்த் இயக்கத்தில் வெளியான கேளடி கண்மணி படத்தில் கே.ஜே. ஜேசுதாஸும் உமா ரமணனும் இணைந்து பாடிய பாடல் இது. இளையராஜா இசையமைத்த இந்தப் பாடல், சோகத்திற்கான சக்ரவாக ராகத்தில் உருவாக்கப்பட்டது. ஆனால், ஜேசுதாஸ் - உமா ரமணனின் குரல்கள், கேட்பவர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தும் வகையில் இருந்தன. இடையிடையே வரும் கிடார் இசை ஒரு போனஸ். 9. ஆகாய வெண்ணிலாவே, தரை மீது வந்ததேனோ: 1990ல் ஃபாசிலின் இயக்கத்தில் வெளியான அரங்கேற்ற வேளை திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இளையராஜாவின் இசையில் உருவான இந்தப் பாடலை, கே.ஜே. ஜேசுதாஸும் உமா ரமணனும் இணைந்து பாடியிருந்தார்கள். தமிழ் சினிமாவின் ஆரம்ப காலப் பாடல்களின் தொனியில் உருவாக்கப்பட்ட இசையில், நவீன இசைக் கருவிகளைப் பயன்படுத்தி பாடலைக் கம்போஸ் செய்திருப்பார் இளையராஜா. பாடலை "ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ" என்று ஜேசுதாஸ் ஆரம்பித்தவுடன், "அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ" என்று உமா ரமணன் பின்தொடரும்போதே முழு பாடலையும் கேட்ட திருப்தி ஏற்பட்டுவிடும். "தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம். பாதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம். வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம். கேளாத வேணு கானம் கிளி பேச்சில் கேட்கக் கூடும்" என்று செல்லும் பாடல் வரிகளை எழுதியவர் வாலி. 10. நில் நில் நில்.. பதில் சொல் சொல்: பி.ஆர். விஜயலட்சுமி இயக்கத்தில் 1995ல் வெளியான 'பாட்டுப் பாடவா' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை வாலி எழுதியிருந்தார். இந்தப் படத்திற்கு இசையமைத்த இளையராஜா, இந்தப் பாடலையும் உமா ரமணனுடன் இணைந்து பாடியிருந்தார். இந்தப் பாடலின் வரிகளே இதற்கு ஒரு தனித்துவத்தைத் தந்தன என்றாலும், உமா ரமணனின் குரல் கூடுதல் இனிமையைச் சேர்த்தது. https://www.bbc.com/tamil/articles/cle0wxvxlqno

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.