Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. டெல்ஹியின் வெற்றியில் கெப், ஜொனாசன், ஷஃபாலி பிரகாசிப்பு; மந்தனாவின் அரைச் சதம் வீண் 01 MAR, 2024 | 03:05 PM (நெவில் அன்தனி) பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (29) இரவு நடைபெற்ற மகளிர் பீறிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 25 ஓட்டங்களால் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணி வெற்றிகொண்டது. மாரிஸ்ஆன் கெப், ஜெஸ் ஜொனாசன் ஆகியோரின் சகலதுறை ஆட்டங்கள், ஷஃபாலி வர்மாவின் அதிரடி துடுப்பாட்டம் என்பன டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியை வெற்றிபெறச் செய்தன. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 194 ஓட்டங்களைக் குவித்தது. ஷஃபாலி முதாலவது ஓவரில் கொடுத்த இலகுவான பிடியை ஷ்ரியன்கா மேகனா தவறவிட்டது றோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை சாதகமாக்கிக்கொண்டு அதிரடியில் இறங்கிய ஷஃபாலி வர்மா 31 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 3 பவண்டறிகளுடன் 50 ஓட்டங்களைக் குவித்ததுடன் அலிஸ் கெப்சியுடன் 2ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார். அலிஸ் கெப்சி 33 பந்துகளில் 46 ஓட்டங்களைப் பெற்றார். அவர்களை விட மத்திய வரிசையில் மாரிஸ் ஆன் கெப் 16 பந்துகளில் 32 ஓட்டங்களையும் ஜெஸ் ஜொனாசென் 16 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 36 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சொஃபி டிவைன் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நாடின் டி க்ளார்க் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. அணித் தலைவி ஸ்ம்ரித்தி மந்தனா தனது வழமையான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 43 பந்துகளில் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 74 ஓட்டங்களைக் குவித்தார். மந்தனாவும் சொஃபி டிவைனும் முதலாவது விக்கெட்டில் 51 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். சொஃபி டிவைன் 23 ஓட்டங்களைப் பெற்றார். ஏனைய துடுப்பாட்ட வீராங்னைகளில் சபினேனி மேகான (36), ரிச்சா கோஷ் (16) ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் ஜெஸ் ஜொனாசன் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மாரிஸ்ஆன் கெப் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அருந்ததி ரெட்டி 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/177669
  2. சர்ச்சைக்குரிய இம்யுனோகுளோபுலின் மருந்து கொடுக்கல் - வாங்கல் : ஆரம்பகட்ட விசாரணைகள் 14 நாட்களுக்குள் நிறைவடைய வேண்டும் : மாளிகாகந்த நீதவான் அதிகாரிகளுக்கு உத்தரவு 01 MAR, 2024 | 07:10 PM (எம்.வை.எம்.சியாம்) சர்ச்சைக்குரிய இம்யுனோகுளோபுலின் மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை பெப்ரவரி 15ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாமல் இருக்கும் அளவுக்கு அவரது உடல் நிலை பாதிக்கப்படவில்லை என உடல்நலக்குறைவு தொடர்பில் பரிசீலனை மேற்கொண்ட 9 பேர் அடங்கிய வைத்தியக் குழுவின் அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதனிடையே எதிர்வரும் 14 நாட்களுக்குள் இந்த வழக்கு தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் அனைத்தையும் நிறைவு செய்யுமாறும், மேலும் இந்த மருந்து கொடுக்கல் வாங்கலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு மாளிகாகந்த நீதவான் உத்தரவு பிறப்பித்தார். வழக்கின் 8ஆவது சந்தேக நபரான முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, உடல் நலம் தொடர்பில் பொய்யான காரணிகளை குறிப்பிட்டுக்கொண்டு, கடந்த 15ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாவதை அவர் தவிர்த்திருப்பதாக வாதங்களை முன்வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அவரது உடல்நலக்குறைவு தொடர்பில் நீதிமன்றத்துக்கு போலியான தகவல்களை முன்வைத்த சிறைச்சாலை வைத்தியர் தொடர்பில் கட்டளையை பிறப்பிக்குமாறும் குறிப்பிட்டார். தரமற்ற இம்யுனோகுளோபுலின் மருந்து கொள்வனவு விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று (29) மாளிகாகந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபயவிக்கிரம முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, “எனது சேவை பெறுநர் நின்று கொண்டிருக்க முடியாத அளவுக்கு இருக்கிறார். அவர் ஆசனத்தில் அமர்வதற்கு அனுமதியளியுங்கள்" என கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்த நீதவான் “நின்றுகொண்டிருக்க முடியாத எந்த சந்தேக நபரும் குற்றவாளிக் கூண்டில் அமர முடியும்” என குறிப்பிட்டார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை கடந்த 15ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமல் இருந்த காரணிகளாக குறிப்பிடப்பட்ட உடல்நலக்குறைவு தொடர்பில் பரிசீலனையை மேற்கொண்ட 9 பேர் அடங்கிய வைத்திய குழுவின் அறிக்கையை அரச பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரியாகம திறந்த மன்றில் முன்வைத்தார். ".....கனம் நீதவான் அவர்களே, இதுவரையில் எனது கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள விசேட வைத்திய அறிக்கையில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை கடந்த 15ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாமல் இருக்கும் அளவுக்கு அவரது உடல் நிலை பாதிக்கப்படவில்லை என மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபருக்கு மூச்சு விடுவதற்கும், மார்பின் வலது புறத்தில் வருத்தம் காணப்பட்ட போதிலும், அது நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கவில்லை என நியமிக்கப்பட்ட விசேட வைத்திய குழு குறிப்பிட்டுள்ளது." அத்துடன் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “சந்தேக நபரை சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து தேசிய வைத்தியசாலைக்கு மாற்றும் அளவுக்கு அவரது உடல்நிலை மோசமாக இருக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் நீதிமன்றத்துக்கு பொய்யான தகவல்களை முன்வைத்த சிறைச்சாலை வைத்தியருக்கு உரிய கட்டளை பிறப்பிக்குமாறு உங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” இதற்கு பதிலளித்த நீதவான், இதுபோன்ற வழக்குகளில் ஏனைய சந்தேக நபர்களை போன்று அறிக்கை வழங்கக் கூடாது என சிறைச்சாலை வைத்தியர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில், இவ்வாறான அறிக்கை நீதிபதிகளின் தீர்மானங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, சட்டமா அதிபர் தலையிட்டு வைத்திய சபையுடன் ஒன்றிணைந்து சிறைச்சாலை வைத்தியர் நீதிமன்றத்துக்கு உண்மையான தகவல்களை மாத்திரம் வழங்கும் வகையில் தயார்ப்படுத்த வேண்டும்' என குறிப்பிட்டார். அத்துடன், இந்த சர்ச்சைக்குரிய மருந்து கொள்வனவு விவகாரத்தில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவின் தலையீடு எவ்வாறு இருந்தது என நீதவான் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரியாகம ...கனம் நீதவான் அவர்களே “முன்னாள் சுகாதார அமைச்சரால் போலியான முறையில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவைக்கு முன்வைத்த பத்திரத்தை வைத்தியர் சமன் ரத்நாயக்கவின் கீழ் உள்ள மருத்துவ உற்பத்தி மற்றும் விநியோக ஒழுங்குபடுத்தல் பிரிவே தயார்ப்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கு விசாரணை தொடர்பில் மேலதிக வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ள சி.ஐ.டிக்கு முன்னிலையாகுமாறு அவரது நிரந்தர முகவரிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தோம். அதனை அவரது மனைவி பொறுப்பேற்றுக்கொண்டார். எவ்வாறாயினும், அவரது தொலைபேசி செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவர் தற்காலிகமாக வசிப்பதாக அதிகாரிகளுக்கு குறிப்பிட்டுள்ள முகவரியும் போலியானது. இவ்வாறான நிலையில் அவர் நேற்றுமுன்தினம் பகல் விசாரணை அதிகாரிக்கு தனிப்பட்ட காரணங்களுக்காக இரண்டு நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளதாக குறுஞ்செய்தி மூலம் அனுப்பியிருக்கிறார். மேலும் வனாத்துவில் பகுதியில் இருப்பதாகவும் பிறிதொரு நாளில் வருகை தந்து வாக்குமூலம் வழங்குவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டபோது இரண்டு நாட்கள் விடுமுறை எனக் கூறிய போதிலும் அவர் காரியாலயத்தில் கடமையில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது. ஆகவே இந்த காரணங்களை ஆராய்ந்து நாளை காலை 9 மணிக்கு சி.ஐ.டி.,க்கு ஆஜராகுமாறு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” இந்த கோரிக்கைக்கு பதிலளித்த நீதவான் நபர் ஒருவர் விசாரணைகளை தவிர்ப்பாராயின் அதற்குரிய விடயதானங்களுக்கு அமைய உரிய அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுங்கள் என்றார். சர்ச்சைக்குரிய இந்த மருந்து கொள்வனவு மற்றும் விநியோகப் பிரிவின் உறுப்பினராக செயற்பட்ட வைத்தியர் ஜெயனாத் புத்திக்க, விசாரணைகளை புறக்கணித்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் சந்தேக நபருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பிறப்பித்து அவரை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறும் அரச சொலிசிட்டர் ஜெனரல் மன்றில் கோரிக்கை விடுத்தார். இதற்கு நீதவான் சந்தேக நபருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பித்தார். இந்நிலையில், விடயங்களை ஆராய்ந்த நீதவான், எதிர்வரும் 14 நாட்களுக்குள் இந்த வழக்கு தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளையும் அனைத்தையும் நிறைவு செய்யுமாறும் மேலும் இந்த மருந்து கொடுக்கல் வாங்கலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 6 பேரும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிபதி லோசினி அபேவிக்கிரம உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/177699
  3. யாழில் அதிகரிக்கும் விபத்துக்கள்: பேராசிரியர் சுரேந்திரகுமார் கவலை யாழில் இடம்பெறும் விபத்துக்கள் உலக சுகாதார நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அளவைக் காட்டிலும் அதிகமாக இடம்பெறுவதாக யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திர குமார் கவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "கல்வி அமைச்சின் நிதியுதவியுடன் மருத்துவ பீடத்திற்காக எட்டுமாடிகள் கொண்ட கட்டிடம் யாழ் நகரத்திலுல் அமைக்கப்பட்டிருக்கிறது. குறித்த கட்டடத்திற்கான நிலத்தினை 2015ஆம் ஆண்டு மாநகர சபை வழங்கப்பட்டிருந்தது. குறித்த கட்டடத்தில் கல்வி, ஆய்வுகள் சேவைகள் என்பன இடம்பெறவுள்ளது. பாரிய தாக்கம் மேலும், மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் நோயாளர்களுக்கான சிகிச்சைகள் என்பனவும் முன்னெடுக்கப்படவுள்ளன. அத்துடன் மாணவர்கள், வைத்தியர்கள், தாதியர்களுக்கான நவீனத்துவமான பயிற்சிகளை வழங்குவதற்கான பயிற்சிகள் என்பனவும் வழங்கப்படவுள்ளது. குறித்த சேவைகளை முன்னெடுப்பதற்கு எமக்கு சவாலாக இருப்பது நீண்ட தூரம் தரித்து நிற்கும் பேருந்துகளே. நாம் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இருப்பினும் இப்போது எமது கட்டடத்திற்கு முன்பாக தரித்து நிற்கும் பேருந்துகள் எமது மருத்துவ சேவைகளை முன்னெடுப்பதற்கும் குறிப்பாக நோயாளிகளின் ஆரோக்கியம் தொடர்பிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. யாழ்.மாநகரசபை, மாவட்டச்செயலகம், ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து யாழ்ப்பாண ஆரோக்கிய நகரம் எனும் திட்டத்தினை உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளோம். வாகன நெரிசல் ஒரு இடையூறு குறித்த திட்டத்தினை மேற்கொள்வதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கை பணியாளர்களும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பணியாளர்களும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வருகைதரவுள்ளனர். எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் யாழ்ப்பாண நகரத்தினை ஆரோக்கிய நகரமாக மாற்றுவதற்கான வேலை திட்டங்களை அவர்கள் மேற்கொள்ளவுள்ளனர். எனவே, எதிர்காலத்திலும் அது நகரத்தினை ஆரோக்கியமாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பதற்கு வாகன நெரிசல் ஒரு இடையூறாக காணப்படுகிறது. இந்த போக்குவரத்தின் செயற்பாடுகள் இடையூறாகவும் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன. நமது எல்லைக்குள் இடம்பெறும் விபத்துக்கள் உலக சுகாதார நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அளவைக் காட்டிலும் அதிகமாக இடம்பெறுகிறது. எனவே, இதற்கு காரணமாக உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி நகரத்தை தூய்மையாக பேணுவதற்கு அனைவரும் முன்வரவேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/accidents-increase-in-july-1709277457
  4. வடக்கின் 3 தீவுகளை இலக்கு வைத்து இந்தியாவின் புதிய திட்டம் வடமாகாணத்தின் மூன்று தீவுகளில் மீள்புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி அமைப்பு முறைகளை உருவாக்குவது தொடர்பான உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் 10995 அமெரிக்க டொலர் முழுமையான நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நெடுந்தீவு, அனலை தீவு, நயினா தீவு ஆகியன 2025ஆம் மார்ச் மாதத்திற்குள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைப்புமுறைகளை பெற்றுக் கொள்ளும் என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் நன்றி தெரிவிப்பு இந்தியாவை தளமாக கொண்ட யு- சோலர் கிளீன் எனர்ஜி சொலுசன்ஸ் என்ற நிறுவனம் இந்த திட்டத்தின் கீழ் 530 கிலோவோட் காற்றாலை மின்சாரம் 1700 கிலோவோட் சூரியசக்தி உட்பட சக்தி அமைப்புகளை இந்த தீவில் உருவாக்கவுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த திட்ட உதவிகளுக்காக இந்திய அரசாங்கம் இலங்கைக்கான இந்திய தூதுவர் முன்னாள் தூதுவர் உட்பட இந்திய அதிகாரிகளுக்கு அமைச்சர் காஞ்சன விஜயசேகர நன்றி தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/india-s-plan-in-northern-province-1709296184
  5. யாழ். புதிய பஸ் நிலைய போக்குவரத்து சேவை தொடர்பில் ஆராய ஐவர் அடங்கிய குழு நியமனம் 01 MAR, 2024 | 07:05 PM யாழ்ப்பாணம் புதிய பஸ் நிலையத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கு போக்குவரத்து சேவையை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கு வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் பணிப்புரைக்கமைய 5 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. வட மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேனவின் தலைமையில் இக்குழு இன்று (01) நியமிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளர்களின் கோரிக்கையின் பிரகாரம், நேற்று (29) நடைபெற்ற கூட்டத்தில் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து உரிய தீர்வுகளை வழங்குவதற்காக குழுவொன்று நியமிக்கப்படும் என ஆளுநர் அறிவித்தார். அதன்படி இன்று நியமிக்கப்பட்ட இக்குழுவின் ஊடாக யாழ். புதிய பஸ் நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்களை இணைந்த நேர அட்டவணைக்கமைய, தூர சேவைகளில் எவ்வாறு ஈடுபடுத்த முடியும் என்பது குறித்து ஆராயப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பான பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை ஒரு வாரத்துக்குள் ஆளுநருக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/177694
  6. 01 MAR, 2024 | 03:58 PM வடமாகாணத்தின் மூன்று தீவுகளில் மீள்புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி அமைப்புமுறைகளை உருவாக்குவது தொடர்பான உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் 10995 அமெரிக்க டொலர் முழுமையான நிதி உதவி திட்டத்தின் கீழ் நெடுந்தீவு, அனலை தீவு, நயினா தீவு ஆகியன 2025ம் மார்ச்மாததத்திற்குள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைப்புமுறைகளை பெற்றுக்கொள்ளும் என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இந்தியாவை தளமாக கொண்ட யு- சோலர் கிளீன் எனர்ஜி சொலுசன்ஸ் என்ற நிறுவனம் இந்த திட்டத்தின் கீழ் 530 கிலோவோட் காற்றாலை மின்சாரம் 1700 கிலோவோட் சூரியசக்தி உட்பட சக்தி அமைப்புகளை இந்த தீவில் உருவாக்கவுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த திட்ட உதவிகளிற்காக இந்திய அரசாங்கம் இலங்கைக்கான இந்திய தூதுவர் முன்னாள் தூதுவர் உட்பட இந்திய அதிகாரிகளுக்கு அமைச்சர்காஞ்சன விஜயசேகர நன்றி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/177686
  7. 01 MAR, 2024 | 03:32 PM இலங்கையில் பொருளாதார உரிமைகள் மீறப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாரென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். செங்கடலில் இலங்கையின் பொருளாதார உரிமைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், அதற்கு எதிரான செயற்பாடுகளை இலங்கை முன்னெடுக்கும் என்றும், வலய - உலகளாவிய பிரச்சினைகளின்போது ஐக்கிய நாடுகள் சபையின் வேலைத்திட்டங்களுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை இலங்கை வழங்கும் என்றும் உறுதியளித்தார். திருகோணமலை சீனக்குடா விமானப்படை தளத்தில் நேற்று (29) இடம்பெற்ற இலங்கை விமானப்படை கெடட் அதிகாரிகளுக்கு அதிகார ஆணை அளிக்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். வரலாற்று காலத்திலிருந்தே இலங்கை உலக அமைதி, பிராந்திய சமாதானத்தை பாதுகாக்க அர்ப்பணித்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உலக சமாதானத்துக்காக நேரடியான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் வேளையில் முப்படையினரின் கடமை மற்றும் பொறுப்புணர்வுகள் எவ்வாறானவை என்பது குறித்தும் நினைவூட்டினார். இந்த விடுகை அணிவகுப்பு இலங்கை விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக இரவு நேரத்தில் நடத்தப்பட்டமை சிறப்பம்சமாகும். திருகோணமலை சீனக்குடா விமானப்படைத் தளத்துக்குச் சென்ற முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு விமானப்படை மரியாதையுடன் வரவேற்பளித்தது இதன்போது இலக்கம் 36, 37, 38 பாடநெறியை நிறைவு செய்த கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 16 பெண் கெடட் அதிகாரிகள், இலக்கம் 65, 66 கெடட் பாடநெறியை நிறைவு செய்த 36 கெடட் அதிகாரிகள் மற்றும் இலக்கம் 17, 18 கெடட் பாடநெறியை நிறைவு செய்திருக்கும் 5 பெண் அதிகாரிகளோடு 2023 அமெரிக்க கெடட் அதிகாரியொருவரும் அதிகார ஆணையை பெற்றுக்கொண்டனர். அதனையடுத்து பயிற்சியில் சிறந்து விளங்கிய 05 கெடட் அதிகாரிகளுக்கும் பெண் கெடட் அதிகாரி ஒருவருக்கும் ஜனாதிபதியால் விருது வழங்கப்பட்டது. மேலும், அணிவகுப்புக்கு பெருமிதம் சேர்க்கும் வகையில் விமானப்படை இசைக்குழுவின் வண்ணமயமான இசை நிகழ்ச்சியும், கலாசார நிகழ்ச்சிகளும், விமானப்படை வீரர்களின் பரசூட் சாகசங்களும் இதன்போது நிகழ்த்தப்பட்டன. விடுகை அணிவகுப்பையடுத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறுகையில், இன்று அதிகார ஆணை பெரும் 58 அதிகாரிகளுக்கும் முக்கிய தினமாகும். உங்களை வளர்த்த பெற்றோரை மறக்கக்கூடாது. உங்கள் வாழ்க்கையை வடிவமைக்க பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்களை அர்ப்பணித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி கூற வேண்டும். விமானப்படை அதிகாரிகள் என்ற வகையில் முக்கியமான பணியை மேற்கொள்கிறீர்கள். மேலும், நாட்டின் அரசியலமைப்பை பாதுகாக்கும் பொறுப்பும், உங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கும் பொறுப்பும் உங்களுக்கு கிடைக்கிறது. நாட்டின் அரசியலமைப்பை பாதுகாப்பதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். அதை ஒருபோதும் மறக்கக்கூடாது. அந்தக் கடமையை நீங்கள் நிறைவேற்றினால்தான் இலங்கையின் ஸ்திரத்தன்மையும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். எனவே, இதனை ஒரு முதன்மைப் பணியாக கருதிச் செயற்படுங்கள். மேலும், உங்களுடன் பணி புரிவோர் மற்றும் உங்கள் தலைமைத்துவத்தின் கீழ் இருக்கின்ற அனைவருக்கும் மதிப்பளிக்க வேண்டும். அவர்களை வழிநடத்த வேண்டும். எப்போதும் முன்மாதிரியாக இருங்கள். உங்களுக்கு கீழ் இருப்பவர்கள் உங்களிடம் பணிவுடன் நடக்க வேண்டுமெனில், உங்கள் சிரேஷ்டர்களுக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும். அதனூடாகவே உண்மையான ஒழுக்கத்தை கட்டியெழுப்ப முடியும். ஒரு அதிகாரியாக நீங்கள் உங்கள் அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டும். தலைமைத்துவத்தை வழங்க பின்நிற்க வேண்டாம். பிரச்சினைகள் வரும்போது விலகிச் செல்லாதீர்கள். குடியரசின் பொறுப்பு உங்களை சார்ந்துள்ளது. அந்த பொறுப்பை அச்சமின்றி நிறைவேற்றுவது உங்கள் கடமையாகும். உள்நாட்டு, வெளிநாட்டு விரோதிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பு உங்களை சார்ந்திருக்கிறது. இன்று நமது நாட்டின் பொருளாதாரம், சமூக கட்டமைப்பு, அரசியல் முறைமை சரிவிலிருந்து மீண்டு வருகின்றன. கடந்த காலத்துக்கு மீண்டும் செல்ல முடியாது. எனவே, நாம் இங்கிருந்து முன்னேற வேண்டும். அதற்கு நாட்டில் மிகப் பெரியளவில் நவீனமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். துரிதமாக பொருளாதார மாற்றத்துக்கு செல்ல வேண்டும். வளர்ச்சியடையாத நாடாக நாம் தொடர்ந்தும் இருக்க முடியாது. இந்தப் பொறுப்பை நிறைவேற்றும்போது அதன் பலன்கள் உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் கிடைக்கும். எனவே, நாட்டின் அனைத்து தருணங்களிலும் நாட்டின் சட்டத்தை பாதுகாப்பதன் மூலம் அரசியலமைப்பின் பிரகாரம், ஸ்திரத்தன்மையை தக்க வைத்துக்கொள்வதற்காக நீங்கள் உங்களை அர்ப்பணிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். மேலும் எமது நாட்டை எதிரிகளின் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பது மட்டுமன்றி, இன்றைய சர்வதேச அரசியல் சூழலுக்கு ஏற்ப பிராந்திய பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். பிராந்தியத்தின் அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்பட்டால் அது எமது நாட்டுக்கும் ஆபத்தானதாகும். நாம் தனியொரு நாடாக மட்டும் வாழ முடியாது. ஒவ்வொரு நாட்டுடனும் கைகோர்த்து முன்னேற வேண்டும். இலங்கை போன்ற யுத்த அனுபவம் மிக்க நாடு ஒதுங்கி நிற்பது கடமைகளை துறந்து செயற்படுவதாகிவிடும். பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு மிக முக்கியமானது. அதேபோல் உலக அமைதியும் முக்கியமானது. எனவே, இவ்வாறான விடயங்களுக்கு எமது ஒத்துழைப்பு அவசியப்படும்போது ஒரு நாடு என்ற வகையில் முப்படையினரின் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். எமது படையினர் மாலி இராச்சியத்தை பயங்கரவாதத்திலிருந்து மீட்க உதவியது. அது பாராட்டப்பட வேண்டியதாகும். இன்று செங்கடலில் நமது பொருளாதார உரிமைகள் பாதிக்கப்படுமானால் அவற்றை பாதுகாப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். எனவே, பிராந்தியம் மற்றும் உலக அமைதிக்கு சவால்கள் விடுக்கப்படும் வேளைகளிலும் ஐக்கிய நாடுகள் சபைக்கு தேவையான ஆதரவை வழங்குவோம். எனவே, உலக அமைதி ஸ்திரத்தன்மையை போன்றே நமது நாட்டின் அமைதியும் ஸ்திரத்தன்மையும் பாதுகாக்க வேண்டும். முப்படைகளும் அடுத்த தசாப்தத்தில் பெருமளவான மாற்றங்களை சந்திக்கும். இன்றைய உலகம் தொழில்நுட்ப யுகத்தில் உள்ளது. இராணுவங்கள் தொழில்நுட்பத்தை மையப்படுத்தியே செயற்படுகின்றன. நாமும் படிப்படியாக அந்த நிலையை எட்ட வேண்டும். உங்களுக்கு அதற்கான பொறுப்பு உள்ளது. இந்த அனைத்து விடயங்களுடனும் நீங்கள் வலுவான இராணுவமாக உருவாக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என்றார். இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் ஏனைய அதிகாரிகள், விமானப்படையினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/177678
  8. 01 MAR, 2024 | 03:49 PM (மெல்றோய்) திருகோணமலை இந்து கல்லூரியின் 13 வயதான மாணவன் ஹரிகரன் தன்வந்த் தனுஸ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்துள்ளார். இன்றைய தினம் (01) அதிகாலை 5.30 மணியளவில் தனுஸ்கோடியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த தன்வந்த் மதியம் 2.00 மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார். தனுஸ்கோடி முதல் தலைமன்னார் வரையான 32 கிலோ மீற்றர் தூரத்தை மிகக் குறைவான நேரத்தில் நீந்திக் கடந்து இலங்கையில் சாதனையை நிலைநாட்டியுள்ளார். 9 மணித்தியாலங்கள் 37 நிமிடங்கள் 54 செக்கன்களில் நீந்திக் கடந்து இலங்கையில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/177683
  9. 01 MAR, 2024 | 05:48 PM யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து நிற்கும் பேருந்துகளால் நோயாளிகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக மருத்துவ பீட பீடாதிபதி வைத்திய கலாநிதி சுரேந்திர குமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (29) ஊடகங்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், சர்வதேச தரத்திலான மருத்துவ வசதிகளை வழங்குவதற்கு நெரிசலற்ற அமைதியான சூழல் யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் ஏற்படுத்தப்பட வேண்டும். மருத்துவ சேவைகளை முன்னெடுப்பதற்கு எமக்கு சவாலாக இருப்பது நீண்ட தூரம் பயணிப்பதற்கு தரித்து நிற்கும் பேருந்துகள். நாம் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. வைத்தியசாலையின் புதிய கட்டட தொகுதிக்கு முன்பாக தரித்து நிற்கும் பேருந்துகள், எமது மருத்துவ சேவைகளை முன்னெடுப்பதிலும், நோயாளிகளின் ஆரோக்கியம் தொடர்பிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. அதனால் யாழ். மாநகர சபை, மாவட்டச் செயலகம், ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து யாழ்ப்பாண ஆரோக்கிய நகரம் எனும் திட்டத்தினை உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளோம். இத்திட்டத்தினை முன்னெடுப்பதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கை பணியாளர்களும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பணியாளர்களும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வருகை தரவுள்ளனர். எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் யாழ்ப்பாண நகரத்தினை ஆரோக்கிய நகரமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்களை அவர்கள் மேற்கொள்ளவுள்ளனர். எனவே, எதிர்காலத்திலும் நகரத்தினை ஆரோக்கியமாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பதற்கு வாகன நெரிசல் ஒரு இடையூறாக காணப்படுகிறது. இதற்கு காரணமாக உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி நகரத்தை தூய்மையாக பேணுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலை கட்டட தொகுதி சூழலில் தரித்து நின்று சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளை அவ்விடத்தில் தரித்து நிற்கக்கூடாது என கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான கூட்டமொன்றில் முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான வேலைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதையடுத்து, தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177700
  10. நீதிமன்றத்தை ஏமாற்ற முயன்ற கெஹெலிய தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி விடயத்தில் நாட்டு மக்களுக்குப் பொய்யுரைத்த கெஹெலிய ரம்புக்வெல்ல, தற்போது நீதிமன்றத்தையும் ஏமாற்ற முனைந்துள்ளமை தெரியவந்துள்ளது. முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு நீதிமன்றத்திற்கு வர முடியாத அளவுக்கு கடுமையான நோய் எதுவும் இல்லை எனவும், சிறைச்சாலை வைத்தியசாலையினால் பொய்யான மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி தொடர்பான விசாரணைகளின் பிரகாரம், முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கடந்த பெப்ரவரி மாதம் 02ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். அதனையடுத்து. பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி மாளிகாகந்தை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட கெஹெலியவை, பெப்ரவரி 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் சுகவீனமடைந்த முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் கடந்த பெப்ரவரி 14 அன்று கெஹெலியவுக்கு எதிரான வழக்கு மாளிகாகந்தை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவில்லை.நீதிமன்றத்துக்கு அழைத்து வரமுடியாத கடுமையான நோயினால் கெஹெலிய பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதே நேரம், கெஹெலிய ரம்புக்வெல்ல இரவு நேரங்களில் சுவாசிப்பதற்கே சிரமப்பமடுவதாகவும், செயற்கை சுவாசம் அளிக்க வேண்டியுள்ளதாகவும், அதற்கும் மேலதிகமாக பல்வேறு கடுமையாக வியாதிகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்ற உத்தரவிடுமாறு கெஹெலியவின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். அம்பலமான தகவல் கெஹெலியவின் நோய்கள் தொடர்பில் சிகிச்சை அளிப்பதற்குப் போதுமான வசதிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எனினும் சிறைச்சாலை மருத்துவமனையின் மருத்துவ சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து ஆராயவும், அவரை தேசிய மருத்துவமனைக்கு மாற்ற வேண்டுமா என்பது குறித்து ஆராயவும் நீதிமன்ற உத்தரவின் பேரில், சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது. தற்போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாத அளவுக்கு கடுமையான நோய் எதுவும் இல்லை என்பது நிபுணர்குழுவின் அறிக்கை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கெஹெலியவை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. நேற்றைய வழக்கு விசாரணையின் போது குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் கெஹெலிய ரம்புக்வெல்லவும் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். அதனையடுத்து நீதிமன்றத்தில் போலி மருத்துவ அறிக்கை சமர்ப்பித்த சிறைச்சாலை மருத்துவமனை மருத்துவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம கோரிக்கை விடுத்த போதும், நீதிமன்றம் அதற்கு இணங்கவில்லை. சிறைச்சாலை வைத்தியசாலையின் மருத்துவர்களால் சமர்ப்பிக்கப்படும் மருத்துவ அறிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு நீதவான் லோசனா அபேவிக்கிரம அறிவுறுத்தியுள்ளார். https://tamilwin.com/article/keheliya-tried-to-cheat-the-court-1709282665
  11. அலெக்சி நவால்னி இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது ரஷ்ய ஜனாதிபதி புட்டினை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி (47), மீது இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. இதனால் கடந்த 2013 இல் பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், கோர்ட் அவமதிப்பு உட்பட பல்வேறு வழக்குகளில் அலெக்சி நவால்னிக்கு மொத்தம் 19 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். சில தினங்களுக்கு முன் அலெக்சி நவால்னி திடீரென சிறையிலேயே உயிரிழந்ததாக ரஷ்ய ஊடகங்களில் செய்தி வெளியானது. அவரது உயிரிழப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்துள்ள ஜனாதிபதி புட்டினுக்கு அலெக்சி நவால்னியின் மரணம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. இதற்கிடையே, நவால்னியின் உடலை ரஷ்ய அரசு தங்களிடம் ஒப்படைக்க மறுப்பதாக அவரது மனைவி, தாயார் குற்றம்சாட்டினர். இந்நிலையில், அலெக்சி நவால்னியின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, நவால்னியின் செய்தி தொடர்பாளர் கிரா யார்மிஷ் கூறுகையில், மாஸ்கோவின் தென்கிழக்கு மரியினோ மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அலெக்சி நவால்னியின் இறுதிச்சடங்கு நடைபெறும். பின் அருகில் உள்ள மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/293882
  12. ஒரு வாரம் முகாமிட்ட சீனாவின் கப்பல் மாலைத்தீவில் இருந்து புறப்பட்டது இந்தியா- மாலைத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் சீனாவின் சியாங்யாங் ஹாங்-03 என்ற உளவுக்கப்பல் மாலைத்தீவை நோக்கி வந்தது. 4300 தொன் எடை கொண்ட இந்த கப்பல், ஆய்வுப்பணிகளுக்காக மாலைத்தீவுக்கு வந்ததாக தெரிவிக்கப்பபட்டது. இந்திய பெருங்கடல் வழியாக சென்ற சீன உளவுக்கப்பல் கடந்த 22 ஆம் திகதி மாலைத்தீவை சென்றடைந்தது. இது இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக கருதப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி இந்திய கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது. மாலைத்தீவு தலைநகர் மாலேவில் இருந்து மேற்கே 7.5 கி.மீ. தொலைவில் உள்ள திலா புஷி துறைமுகத்தில் சீன உளவுக்கப்பல் நிலைநிறுத்தப்பட்டது. உயர் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த சீன கப்பல் நுண்ணுயிர் மரபணு ஆய்வு, உப்புத் தன்மை, நீருக்கடியில் கனிம ஆய்வு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட ஆய்வுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாலைத்தீவு துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட சீன உளவு கப்பல் ஒரு வாரத்துக்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சீன கப்பல் மாலைத்தீவு கடற்கரையை விட்டு வெளியேறியதாக மாலைத்தீவின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. மேலும் துறைமுகத்தில் இருந்து சீன கப்பல் புறப்பட்ட போதிலும் கப்பலின் கடைசி சிக்னல் மாலைத்தீவின் ஹுல்ஹு மாலே அருகே காட்டின என்றும் தெரிவித்தது. மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் மாலைத்தீவில் இருந்து இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதன்படி இந்திய படைகள் வெளியேற்றம் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/293771
  13. நேற்று இரவு குருமெட்டிய, கித்துல்கல அருகே கொழும்பு- ஹற்றன் வீதியில் ஓடும் முச்சக்கர வண்டியில் இருந்து ஒரு மாத கைக்குழந்தை ஒன்று விழுந்துள்ளது. நீர்கொழும்பில் இருந்து ஏனையவர்களுடன் பயணித்த தாய், முச்சக்கர வண்டியின் பின்புறத்தில் உறங்கிக் கொண்டிருந்த போது, கைக்குழந்தை மடியிலிருந்து விழுந்துள்ளது. முச்சக்கரவண்டியை பின்தொடர்ந்து வந்த காரில் வந்தவர்கள் வீதியில் குழந்தை இருப்பதை அவதானித்து கித்துல்கல பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதுடன், குழந்தையை உடனடியாக கித்துல்கல வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அம்மாவும் ஏனையவர்களும் இந்தச் சம்பவத்தை அறியாமல் பயணத்தைத் தொடர்ந்தனர். குழந்தை காணாமல் போனதை அறிந்த அவர்கள் மீண்டும் தேடிச் சென்று பார்த்தபோது, குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் வசிப்பவர்களின் ஊடாக தெரிய வந்துள்ளது. பின்னர் கித்துல்கல வைத்தியசாலைக்கு சென்று குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். வைத்தியர்கள் குழந்தையை பரிசோதித்ததில் காயம் எதுவும் இல்லை. எவ்வாறாயினும், தாயுடன் குழந்தை மேலதிக கண்காணிப்பிற்காக கரவனெல்ல ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். https://thinakkural.lk/article/293911
  14. தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தை (National Cyber Security Act) இவ்வருடத்திற்குள் கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் சைபர் பாதுகாப்பு அதிகார சபையை நிறுவவுள்ளதாகவும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(29) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கடந்த காலத்தில் 4.73% ஆக காணப்பட்ட டிஜிட்டல் பொருளாதாரம் இன்று 5% வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அதனால் பொருளாதாரமும் வலுவடைந்திருக்கிறது. அதனை மேலும் பலப்படுத்தும் வகையிலேயே டிஜிட்டல் பொருளாதார மாநாடு ஜூலை மாத இறுதியில் இலங்கையில் நடத்தப்படவுள்ளது. அதனூடாக உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை வௌிநாட்டு தூதரகங்கள், வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுக்கவுள்ளன. கடந்த வருடத்தில் SLSI நிறுவனம் 50 மில்லியன் ரூபா இலாபத்தை திறைசேரிக்கு வழங்கியிருந்தது. அதன்படி ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமை, நாட்டின் பொருளாதாரத்திற்கு 52% பங்களிப்பை வழங்கும் சிறு மற்றும் மத்தியத் தர தொழில்துறையைப் பலப்படுத்த புதிய வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிறு மற்றும் மத்திய தரத் தொழிலாளர்களை, தொழில்நுட்ப ரீதியாகப் பலப்படுத்துவதே அதன் நோக்கமாகும். இதன்போது தொழில் முனைவோருக்கு GMP மற்றும் SLSI சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஊடாக குறைந்த வட்டியில் கடன் உதவிகளை வழங்கவும் எதிர்பார்க்கிறோம். சிறிய மற்றும் மத்திய தரத் தொழிலாளர்களை, தொழில்சந்தையை நோக்கி நகர்த்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதேபோல் இலங்கை சர்ட் நிறுவனத்தின் (Sri Lanka Cert Institute) ஊடாக தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டம் (National Cyber Security Act) இவ்வருடத்திற்குள் கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அதனையடுத்து சைபர் பாதுகாப்பு அதிகார சபையும் விரைவில் நிறுவப்படும். அத்தோடு, தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, கல்வி அமைச்சின் உதவியுடன் தொழில்நுட்ப வசதிகள் அற்ற 1000 பாடசாலைகளில் 700 பாடசாலைகளுக்கு இணைய வசதிகளைப் பெற்றுக்கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் இரண்டாம் கட்டமாக பாடசாலைகள் மட்டத்தில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மேலும் கல்வி அமைச்சுடன் இணைந்து தொழில்நுட்ப அறிவைப் பெறாமலிருக்கும் 10,000 பட்டதாரிகளைத் தெரிவுசெய்து அவர்களுக்கு தொழில்நுட்ப அறிவை வழங்கும் வேலைத்திட்டம் மே மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/293851
  15. காசாவுக்குள் நுழைந்த உணவு வாகனங்களை சூழ்ந்த மக்கள் : துப்பாக்கி பிரயோகம் செய்த இஸ்ரேலிய படையினர் - தப்பியோட முயன்ற வாகனங்களில் மோதுண்டு உயிரிழந்த பலர் - சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிப்பு Published By: RAJEEBAN 01 MAR, 2024 | 12:40 PM ஹமாஸ் இஸ்ரேல் யுத்தம் ஆரம்பித்த பின்னர் இடம்பெற்ற சம்பவங்களில் மிக மோசமான சம்பவம் என குறிப்பிடத்தக்க சம்பவம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. காசாவில் உணவை பெறுவதற்காக பெருமளவில் திரண்டிருந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உணவுவாகனங்களை நோக்கி பெருமளவில் திரண்ட பசியின் பிடியில் சிக்கியுள்ள பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 117 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. முற்றுகைக்குள்ளாகியுள்ள காசா பள்ளத்தாக்கில் பசியும் பட்டினியும் பெருமளவில் காணப்படும் ஒரு சூழ்நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்கு உணவுப்பொருட்களுடன் வாகனங்கள் வருவது குறைவு என்பதால் அவ்வாறான வாகனங்களை பார்த்தவுடன் பட்டினியில் சிக்குண்டுள்ள மக்கள் பதற்றம் ஏற்படுவது வழமை. எனினும் என்ன நடந்தது என்பது குறித்து இஸ்ரேலும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் தெரிவித்த விடயங்களில் முரண்பாடுகள் உள்ளன. என்ன நடந்தது? காசாவின் மேற்குபகுதியில் உள்ள ஹரூன் அல் ரசீட் வீதியில் பெரும் குழப்பங்களிற்கு மத்தியில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. வியாழக்கிழமை காலை 18 உணவு வாகனங்கள் அந்த பகுதிக்கு வந்துள்ளன. கட்டார், சவுதிஅரேபியா உட்பட பல நாடுகள் அனுப்பிய உணவு வாகனங்களை சுற்றி சுற்றி பசியுடன் காணப்பட்ட பாலஸ்தீனியர்கள் குவிந்தனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். புதிதாக வந்த உணவுப்பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனங்களை சுற்றி பொதுமக்கள் குவியத் தொடங்கியதும் இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட ஆரம்பித்தனர் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து உதவிப்பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனங்கள் அங்கிருந்து தப்பிவெளியேற முயன்றவேளை அவற்றினால் மோதுண்டு பலர் உயிரிழந்தனர் காயமடைந்தனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இடிபாடுகள் காரணமாக அம்புலன்ஸ்களால் உடனடியாக அந்த பகுதிக்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் துப்பாக்கி பிரயோகத்திலிருந்து தப்பமுயன்ற உணவு வாகனங்கள் மோதியதால் பலர் உயிரிழந்துள்ளனர் என காசா பத்திரிகையாளர் காடெர் அல் ஜனுன் தெரிவித்துள்ளார். உணவை பெறுவதற்காக பெருமளவு மக்கள் காத்திருந்தனர் இஸ்ரேலிய படையினர் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதும் ஏற்பட்ட குழப்பத்தினால் வாகனங்களால் பொதுமக்கள் மோதப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்ட குழப்பத்தினால் தப்பிச்செல்ல முயன்ற வாகனங்களால் மோதுண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர் என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தெரிவித்திருப்பது என்ன? பாலஸ்தீனியர்கள் உணவு வாகனங்களை கொள்ளையடிக்க முயன்றவேளை தனது படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதிகாலையில் காசாவிற்குள் மனிதாபிமான பொருட்களுடன் வாகனங்கள் நுழைந்ததும் பொதுமக்கள் அந்த வாகனங்களை சூழ்ந்துகொண்ட பொருட்களை கொள்ளையடிக்க தொடங்கினர், இதன் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் பலர் காயமடைந்தனர் என இஸ்ரேல் முதலில் தெரிவித்தது. பின்னர் உணவுவாகனங்கள் தொடர்பில் இரண்டு சம்பவங்கள் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளன என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. முதலில் காசாவிற்குள் உணவுப்பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனங்கள் நுழைந்ததும் மக்கள் அவற்றை நோக்கி பெருமளவில் ஓடினார்கள். அதன்போது அவற்றினால் மோதுண்டு பலர் இறந்தனர். இதன் பின்னர் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய படையினரை நோக்கி சென்றவேளை இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதன் பின்னர் அந்த டிரக்குகள் வடபகுதியை நோக்கி சென்றன அங்கு தள்ளுமுள்ளு இடம்பெற்றது அதன் பின்னர் படையினருக்கு எதிரான சம்பவங்கள் இடம்பெற்றன எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/177657
  16. குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால், இரண்டு வயதுக்கு முன்பே இனிப்பு உணவு மற்றும் பானங்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு பெற்றோர்களுக்கு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். குழந்தைகளுக்கு இரண்டு வயதுக்குப் பிறகு மட்டுமே இனிப்பு உணவு பரிந்துரைக்கப்படுகிறது, அதே நேரத்தில் முதல் ஆறு மாதங்களில் தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். ”இனிப்பான உணவு மற்றும் பானங்களை உட்கொள்வது அதிக எடை அல்லது உடல் பருமன் அதிகரிக்கும் அபாயத்துடன் தொடர்புடையது” என அவர் வலியுறுத்தினார். “சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களில் இனிப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் அவை ஒரு துண்டு பழம் அல்லது பால் குவளையில் இருக்கும் இயற்கை சர்க்கரைகளிலிருந்து வேறுபடுகின்றன,” எனவே, குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். https://thinakkural.lk/article/293848
  17. கடந்த ஜனவரி மாதத்தில், சுற்றுலாத்துறையின் ஊடாக 342 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின்னர் பதிவான மாதம் ஒன்றின் அதிகூடிய சுற்றுலாத்துறை வருவாய் என இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் 269 மில்லியன் அமெரிக்க டொலர் சுற்றுலாத்துறையின் ஊடாக வருமானமாக ஈட்டப்பட்டிருந்ததாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/293838
  18. பாடப் புத்தகங்களை பகுதிகளாக அச்சிடுவதற்கு நடவடிக்கை பாடசாலை மாணவர்களின் புத்தகப் பையின் நிறை அதிகரிப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படும் முள்ளந்தண்டு உள்ளிட்ட பல பிரச்சினைகளை குறைப்பதற்கு பாடசாலை அதிபர்களுக்கு கல்வியமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பாடப்புத்தகங்களை பகுதிகளாக அச்சிடுவதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், செயல்நூல்கள் தவிர்ந்த ஏனைய பாடப்புத்தங்களை பாடசாலைக்கு கொண்டு வருவதை குறைப்பதற்கு அதிபரின் நேரடி கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் குறித்த சுற்றிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/293832
  19. ஈழத் தமிழர்களை சிதைத்தெடுக்கும் சித்திரவதை முகாமிற்கு இனியாவது இந்திய மத்திய, மாநில அரசுகள் முடிவு கட்டவேண்டும் - யாழ். பல்கலைகழக மாணவர் அமைப்பு 01 MAR, 2024 | 12:56 PM ராஜீவ்காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏனைய மூன்று ஈழத்தமிழர்களையும் அவர்கள் விரும்பும் இடங்களில் வசிப்பதற்கு அனுமதிக்க வேண்டுவதோடு தாயகம் திரும்ப எவரேனும் விரும்பினால் அவர்களை அழைத்து வர இனியாவது உரிய நடவடிக்ககை எடுக்குமாறு ஈழத்தமிழ் அரசியல் தரப்புக்களையும் இலங்கை இந்திய அரசுகளையும் வலியுறுத்துகின்றோம்.என யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஊடக மற்றும் வெகுசன தொடர்புபிரிவு தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஊடக மற்றும் வெகுசன தொடர்புபிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது. தமிழர் தேசக் கனவோடு தாயகம் பிரிந்து இந்திய ஒன்றியத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு முழுமை பெறாத நீதி விசாரணையால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு தமிழர்களில் ஒருவராக 33 ஆண்டுகள் சிறைவாழ்வை அனுபவித்து தாயகம் காண காத்திருந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜா எனும் இயற்பெயருடைய சாந்தன் அவர்கள் விரைவில் நாடு திரும்புவார் எனும் தமிழர்களின் எதிர்பார்ப்பும் தாயையும் தாய் மண்ணையும் காண வேண்டும் என்னும் இறுதி ஆசையும் நிறைவேறாமலேயே அவர் உயிர்பிரிந்த செய்தி தமிழர் இதயங்களைக் கனக்க வைத்துள்ளது. பெற்ற மகனை ஒரு முறையாவது உயிருடன் பார்த்து விட வேண்டுமென்ற தாய்க்கும் - மகனுக்கும் இடையிலான 33 ஆண்டுகள் பாசப் போராட்டத்தில் சாந்தன் அவர்களின் இழப்பு அனைவரையும் வெடித்தழ வைக்கின்றது. மரணம் நிகழ்ந்த 28 ஆம் திகதி காலையில்க் கூட மகன் வருவான் என்று கோவில் தீர்த்தத்துடன் காத்திருந்த தாய்க்கு வாழ்நாள் ஏக்கம் கனவாய்ப் போனது பெருந்துயர் ! ஏதும் அறியா இளைஞனாக தமிழகம் வந்தவரை மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாகச் சிறைப்படுத்தி சித்திரவதை செய்து நீண்ட நெடிய சட்டப் போராட்டங்களின் பின்னர் 11.11.2022 ஆம் திகதி இந்திய ஒன்றிய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்த பின்னரும் இயற்கை நீதிக்கு முரணாக தொடர்ந்து 15 மாதகாலம் திருச்சி சிறப்பு முகாமில் தடுப்பில் வைத்திருந்து உடல் உள ரீதியாய் பலவீனப்படுத்தி சிறுகச் சிறுகச் கொன்று தாயையும் தாய் மண்ணையும் காண ஆவல் கொண்டிருந்தவரை இன்று உயிரற்ற சடலமாய் அனுப்பி வைத்திருக்கிறது இந்தியம். பாரத தேசத்தின் பிராந்திய நலன்களிற்கு எதிராகச் செயற்பட்டு தொடர்ந்தும் அவமதித்து வரும் சிறிலங்கா அரசுடன் நட்புப் பாராட்டும் காந்தி தேசம் தங்களின் அற்ப பூகோள நலன்களிற்காக தங்களை நோக்கி என்றுமே நேசக்கரம் நீட்டும் ஈழத்தமிழ் மக்களைத் வஞ்சிப்பதென்பது அந்த நாடு இதுவரைகாலமும் தான் கொண்ட வரலாற்றிற்கும் பெருமைகளிற்கும் இழுக்கானதாகும். அன்று முதல் இன்று வரை காந்தியின் பெயர்கொண்டுஇ புரியும் கொடுரங்களால் தனக்கு மேல் போர்த்திய போர்வை களைந்து நிர்வாணமாய் நிற்கின்றது காந்தி தேசம். 29.02.2024 அன்று நடந்த நீதிமன்ற வாதங்களில் தமிழக அரசு வழக்கறிஞரின் கூற்றுப்படி தமிழக அரசே சாந்தன் அவர்களை விடுவிப்பதில் காலந்தாழ்த்தியது எனும் துயரச் செய்தி எமக்காய் தமிழக உறவுகளும் தமிழக அரசும் நிற்பார்கள் என்று நம்பும் ஈழத்தமிழ் மக்களிற்கு துரோகச் செய்தியாய்ப் போனது இன்னுமொரு பெருந் துயரம்! சாந்தன் அவர்களைத் தாயகம் அழைத்து வருவதற்கு இறுதி ஒரு மாதகாலத்திற்குள் காணப்பட்ட ஏதுநிலையை குறிப்பிட்ட சில காலங்களிற்கு முன்னதாகவேனும் உருவாக்கிட நடவடிக்கை ஏதும் எடுத்திருந்தாற் கூட பெற்ற தாயைக் காண வேண்டும் எனும் இறுதி ஆசையையேனும் நிறைவேற்றிக் கொடுத்திருந்திருக்கலாம். ஆனால்இ ஏழு தமிழர்கள் இந்திய ஒன்றிய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஒன்றாண்டு காலப்பகுதிக்குள் ஈழத்தமிழ் அரசியல் தலைமைகள் கூட்டாக ஒரு தீர்க்ககரமான தீர்மானங்களெதனையும் மேற்கொள்ளாது அசமந்தமாகவும் அலட்சியப் போக்குடனும் செயற்பட்டமை என்பது மன்னிக்க இயலாத கண்டனத்திற்குரியதொன்று. நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் இயற்கை நீதிக்கு விரோதமாக சிறப்பு சித்திரவதை முகாம்களில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சியுள்ளவர்களையும் விடுதலை செய்து ஈழத்தமிழர்களை சிதைத்தெடுக்கும் சித்திரவதை முகாமிற்கு இனியாவது முடிவுரையெழுத இந்திய ஒன்றிய மாநில அரசுகளை வேண்டுகின்றோம். ராஜீவ்காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏனைய மூன்று ஈழத்தமிழர்களையும் அவர்கள் விரும்பும் இடங்களில் வசிப்பதற்கு அனுமதிக்க வேண்டுவதோடு தாயகம் திரும்ப எவரேனும் விரும்பினால் அவர்களை அழைத்து வர இனியாவது உரிய நடவடிக்ககை எடுக்குமாறு ஈழத்தமிழ் அரசியல் தரப்புக்களையும் சிறிலங்காஇ இந்திய அரசுகளையும் வலியுறுத்துகின்றோம். நீதியைக் காத்து நிலைநாட்டுவதில் பக்கம் சாராமல் இந்திய உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்ட காலம் முதல் அவர்களின் விடுதலைக்கான காலம் வரையில் காலத்திற்குக் காலம் எத்தனையோ வாய்ப்புக்களை வழங்கியும் இந்திய ஒன்றிய அரசும் தமிழக அரசும் தொடர்ச்சியான சட்ட செயற்பாடுகளின் மூலம் தாமதப்படுத்தியமை என்பது ஈழத்தமிழ் மக்களின் மீதான கசப்புணர்வையே வெளிப்படுத்தியிருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது. இனிமேலாவது ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளிற்கு விரோதமான செயல்களிற்கு முற்றுப்புள்ளி வைத்து ஈழத்தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க உளச்சுத்தியுடன் இந்திய அதிகாரம் செயற்பட வேண்டுகின்றோம். உயிரோடு வந்தவரை இன்று உயிரற்று அனுப்பி வைத்துள்ளது பாரதம்! சாந்தன் அவர்களின் இறப்பு – காந்தி தேசத்தின் அவலக் குறியீடு! https://www.virakesari.lk/article/177663
  20. சாந்தனின் உடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது உடல்நல பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தன் என்ற சுதேந்திர ராசாவின் உடலம் இன்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவரது உடலம் இன்று முற்பகல் 11.35க்கு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 122 என்ற விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உடல்நல பாதிப்பால் உயிரிழந்த சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக அரசுக்கு சென்னை மேல்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய சாந்தன் சென்னையில் வைத்து நேற்று முன்தினம் காலமானார். குறித்த கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த சாந்தன் விடுவிக்கப்பட்டு திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பை அடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக சென்னையில் உள்ள ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். எவ்வாறாயினும் அவர் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் காலை 7.50 அளவில் உயிரிழந்ததாக ராஜீவ் காந்தி அரச மருத்துவமனையின் பிரதான வைத்தியர் தோணிராஜன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். https://thinakkural.lk/article/293900
  21. காஸாவில் உணவு பெற முண்டியடித்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 112 பேர் பலி, 760 பேர் காயம் Published By: SETHU 01 MAR, 2024 | 11:11 AM பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில், உணவுப் பொருட்களைப் பெறுவதற்காக திரண்டிருந்த மக்கள் மீது இஸ்ரேலியப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததால் குறைந்தபட்சம் 112 பேர் உயிரிந்ததுடன் மேலும் 760 பேர் காயமடைந்துள்ளனர். காஸா நகரில் நேற்று (29) இச்சம்பவம் இடம்பெற்றது. மக்கள் மீது தனது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததை இஸ்ரேலிய இராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது. அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கருதி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. 38 உணவு லொறிகளை ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்த நிலையில் 'சனநெரிசல்' ஏற்பட்டதகாவும், சிலர் லொறிகளினால் மோதப்பட்டு உயிரிழந்தாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல்வேறு நாடுகளும் தொண்டர் அமைப்புகளும் கண்டித்துள்ளன. இதேவேளை? மேற்படி சம்பவத்தை ஐநா பாதுகாப்புப் சபை கண்டிக்க வேண்டும் என ஐ.நாவுக்கான பலஸ்தீன தூதுவர் ரியாத் மன்சூர் வலியுறுத்தியுள்ளார். இச்சம்பவத்தை கண்டிப்பதற்கான பிரேரணையொன்றை ஐநா பாதுகாப்புச் சபைகயிடம் அல்ஜீரியா முன்வைத்தது, எனினும், அமெரிக்கா அப்பிரேரணையை வீட்டோ செய்தது. 'இது குறிதது ஐநாவுக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் ரொபர்ட் வூட் கூறுகையில், இச்சம்பவம் குறித்த அனைத்து தகவல்களும் எம்மிடம் இல்லை. மக்கள் எப்படி இறந்தார்கள் என்பதை உறுதிப்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது' என்றார். https://www.virakesari.lk/article/177651
  22. சாந்தன் உடலை இன்று இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை 01 MAR, 2024 | 10:22 AM சென்னை: சாந்தன் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல தேவையான உதவிகளை செய்து வருவதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சாந்தன், கடந்த 28-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் அவர் ஏற்கெனவே தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்: தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ்: சாந்தனை இலங்கைக்கு அனுப்ப தேவையான பணிகள் நடந்து வந்த நிலையில் துரதிருஷ்டவசமாக உயிரிழந்தார். நீதிபதிகள்: சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்க மத்திய அரசின் அனுமதி எப்போது கிடைத்தது? மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன்: அவரை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு சார்பில் பிப். 22-ம்தேதியே அனுமதி வழங்கப்பட்டு விட்டது. நீதிபதிகள்: மத்திய அரசு முன்கூட்டியே அனுமதி அளித்தும், சாந்தனை இலங்கைக்கு தமிழக அரசு அனுப்பாதது ஏன்? மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா: சாந்தனின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த ஜனவரி 24-ம் தேதி திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரால் நகரக்கூட முடியாத சூழலில் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏர்ஆம்புலன்ஸ் மூலமாக அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுத்து வந்த நிலையில், மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார். (மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்தார். சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. மத்திய அரசின் கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன்: சாந்தன் உடலை இலங்கைக்கு கொண்டுசெல்ல தூதரக அனுமதி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் உடனடியாக வழங்கப்படும். இவ்வாறு வாதம் நடந்தது. இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: உயிரிழந்த சாந்தன் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும். சாந்தன் உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏதுவாக தூதரக அளவிலான சான்றிதழ்களை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான பொறுப்பு (‘நோடல்’) அதிகாரிகளாக மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், அதுதொடர்பான அறிக்கையை மார்ச் 4-ம் தேதி தாக்கல் செய்ய அறிவுறுத்தி உள்ளனர். சாந்தன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு: சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து யாழ்ப்பாணம் அருகே உள்ள கிராமத்துக்கு செல்வதற்காக, அவரது உடல் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று காலை 9.45 மணிக்கு பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத் தப்பட்டது. பின்னர் எம்பார்மிங் செய்யப்பட்டது. இதையடுத்து இரவு 9 மணிக்கு சாந்தனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று விமானம் மூலம் அவரது உடல் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுகிறது. https://www.virakesari.lk/article/177646
  23. 01 MAR, 2024 | 10:12 AM பாடசாலை புத்தகப் பையின் சுமையை குறைப்பதற்கு கல்வி அமைச்சால் புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட பயிற்சிப் புத்தகங்களைத் தவிர, பாடசாலைக்கு கொண்டு வரப்படும் பாடப்புத்தகங்களை குறைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை புத்தகப் பையின் எடை காரணமாக, முதுகுத் தண்டுவடக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளை பாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடப்புத்தகங்களை தொகுப்பாக அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் அனைத்து அதிபர்களுக்கும் உரிய வழிகாட்டுதல்களுடன் சுற்று நிருபம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகங்களை வகுப்பறையில் பாதுகாப்பாக வைக்க திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்றும் குறித்து சுற்றுநிருபத்தில் கூறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177644
  24. வடக்கு மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்களின் பணிப் புறக்கணிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது Published By: VISHNU 01 MAR, 2024 | 02:04 AM வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் வியாழக்கிழமை (29) மாலை ஆளுநர் செயலகத்தில் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த தனியார் பேருந்து உாிமையாளர் சங்கத்தினருடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தவிசாளர் மற்றும் பொலிஸார் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர். இன்றைய கலந்துரையாடலில் வழங்கப்பட்ட உறுதி மொழியை அடுத்து பணி புறக்கணிப்பை கைவிட்டு வெள்ளிக்கிழமை (1) முதல் வழமை போன்று சேவை முன்னெடுக்க உள்ளதாக வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்திற்கான தனியார் மற்றும் இ.போ.ச நெடுந்தூர பேருந்து சேவைகள் அனைத்தும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து விரைவில் சேவையை முன்னெடுக்கப்படும் எனவும், ஒரு கிழமை மாத்திரம் தனியார் பேருந்து சேவைகள் வழமை போன்று மின்சார நிலைய வீதியிலிருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து தாம் சேவை முன்னெடுப்பதாக இருந்தால் இலங்கை போக்குவரத்து சபையினரும் இணைந்து கொள்ள வேண்டும் என தெரிவித்து இன்று காலை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை முற்றிகையிட்டு தனியார் பேருந்து உாிமையாளா்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள். இதன்போது போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகைதந்த வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வியாழக்கிழமை (29) பிற்பகல் 6 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் குறித்த விடையம் தொடர்பில் கலந்துரையாடி உரிய தீர்வினை பொற்றுத்தருவதாக வாக்குறுதி வழங்கியதை அடுத்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்ட தனியாா் பேருந்து உாிமையாளா்கள் தொடர்ந்து பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையிலேயே வியாழக்கிழமை (29) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177635
  25. “சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை சிறப்பு முகாமில் உள்ள மற்ற மூவருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது!” – ராபர்ட் பயஸ் 29 FEB, 2024 | 09:24 PM சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை சிறப்பு முகாமில் உள்ள மற்ற மூவருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என ராபர்ட் பயஸ் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட நளினி, முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், சாந்தன் ஆகியோரை கடந்த 2022 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் விடுவித்தது. இதில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் இந்தியர்கள் என்பதால் அவர்களது இல்லத்திற்கு சென்றனர். ஆனால் முருகன், ஜெயக்குமார், சாந்தன், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை குடிமக்கள் என்பதால் அவர்கள் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து சாந்தனின் இறப்பு குறித்து சிறப்பு முகாமில் உள்ள ராபர்ட் பாயஸ் உலகத் தமிழர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில், திருச்சி சிறப்பு முகாம் சிறையை விட கொடுமையானது என குறிப்பிட்டுள்ள அவர், தன் மகனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று ஏங்கிய சாந்தனின் தாயிடம் உயிரற்ற உடலை தான் கொண்டு சேர்க்கப்போகிறோம் என தெரிவித்துள்ளார். மேலும், நீண்டகால சிறைவாசமும், குடும்பங்களை பிரிந்த துயரமும் எங்களை நோயாளிகளாக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள ராபர்ட் பயஸ், சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை, சிறப்பு முகாமில் உள்ள மற்ற மூவருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என தெரிவித்துள்ளார்.மேலும், தங்களின் கடைசி காலத்தை குடும்பத்தினருடன் செலவழிக்க அரசு இனியாவது நடவடிக்கை எடுக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். https://www.virakesari.lk/article/177629

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.