Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    20287
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Everything posted by ஏராளன்

  1. கன்னித் தன்மை சான்றிதழ்: முதல் உறவில் கன்னித் திரையை தேடும் கணவர்கள் ஃபிரௌஸே அக்பரியன் & சோஃபியா பெட்டிசா பிபிசி 13 ஆகஸ்ட் 2022, 01:13 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இரானில் பெண்களில் பலரும் அவர்களுடைய குடும்பத்தினரும் திருமணத்திற்கு முன்பு கன்னித்தன்மையோடு இருப்பதை முக்கியமானதாகக் கருதுகிறார்கள். அதை உறுதி செய்துகொள்ள சில நேரங்களில் ஆண்கள் கன்னித்தன்மை சான்றிதழைக் கேட்கிறார்கள். இந்த நடவடிக்கை, மனித உரிமைகளுக்கு எதிரானது என்று உலக சுகாதார அமைப்பு கருதுகிறது. "நீ கன்னிப்பெண்ணாக இல்லாமல், என்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டாய். உண்மை தெரிந்திருந்தால் யாரும் உன்னை திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள்." முதல் முறையாக உடலுறவு கொண்ட பிறகு மரியத்தின் கணவர் அவரிடம் இப்படிக் கூறியுள்ளார். தனக்கு ரத்தம் வரவில்லை என்றாலும், இதுவரை உடலுறவு கொண்டதில்லை என்று தன் கணவரைச் சமாதானப்படுத்த அவர் முயன்றார். ஆனால், மரியத்தின் கணவர் அவரை நம்பவில்லை. அவரை கன்னித்தன்மை சான்றிதழைப் பெறச் சொன்னார். இரானில், இது அசாதாரணமான விஷயமல்ல. நிச்சயத்திற்குப் பிறகு, பல பெண்கள் மருத்துவரிடம் சென்று, தாங்கள் இதுவரை உடலுறவு கொள்ளவில்லை என்பதை நிரூபிக்கும் சோதனையைச் செய்து கொள்கிறார்கள். இருப்பினும், உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, கன்னித்தன்மை சோதனை அறிவியல்ரீதியாகத் தகுதி பெறாத ஒன்று. பெண் என்பதால் எனக்கு எப்போதும் வாய்ப்பு மறுக்கப்பட்டது இல்லை - சிஐஎஸ்ஆர் தலைவர் கலைச்செல்வி 'நாய்கூட சாப்பிடாத ரொட்டிகள்' - தட்டை கையில் ஏந்தியபடி கதறி அழுத உ.பி காவலர் வடகொரிய அதிபருக்கு வந்த 'காய்ச்சலுக்கு' தென்கொரியா எப்படி காரணமாகும்? சகோதரி தந்த விளக்கம் மரியமின் சான்றிதழில் அவரது கன்னித்திரை "நெகிழ்வுத்தன்மை கொண்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால், அவருக்கு உடலுறவுக்குப் பிறகும் ரத்தம் வராமல் இருக்கலாம். "இது என் சுயமரியாதையைக் காயப்படுத்தியது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால், எனது கணவர் என்னை அவமானப்படுத்தினார். அதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் நான் சில மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றேன்," என்று அவர் கூறுகிறார். சரியான நேரத்தில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதால் உயிர் பிழைத்தார். "அந்த இருள் சூழ்ந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது. அந்த நேரத்தில் நான் 20 கிலோ இளைத்திருந்தேன்." இந்தப் பழக்கத்திற்கு எதிராக வலுக்கும் குரல்கள் மரியமின் கதை இரானில் உள்ள பல பெண்களின் எதார்த்தமாக உள்ளது. திருமணத்திற்கு முன்பு கன்னியாக இருப்பது, பெண்களில் பலருக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் இடையே இன்னமும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது கலாசார பழைமைவாதத்தில் மதிப்புமிக்க ஒன்றாக, ஆழமாக வேரூன்றியுள்ளது. ஆனால் சமீபத்தில், இது மாறத் தொடங்கியுள்ளது. கன்னித்தன்மை பரிசோதனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் பெண்களும் ஆண்களும் பிரசாரம் செய்து வருகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த நவம்பர் மாதம், இதுகுறித்த ஒரு ஆன்லைன் மனு, ஒரே மாதத்தில் சுமார் 25,000 கையொப்ப ஆதரவுகளைப் பெற்றது. கன்னித்தன்மை பரிசோதனையை இரானில் பலர் வெளிப்படையாக எதிர்த்திருப்பது இதுவே முதல் முறை. "இது தனியுரிமையை மீறுவது, இது அவமானகரமானது," என்கிறார் நெடா. அவர் தெஹ்ரானில் 17 வயது மாணவியாக இருந்தபோது, தனது காதலனிடம் தனது கன்னித்தன்மையை இழந்தார். "நான் பீதியடைந்தேன். என் குடும்பத்தினருக்குத் தெரிந்தால் என்ன நடக்கும் என்று அஞ்சினேன்." எனவே, நெடா தனது கன்னித்திரையைச் சரிசெய்ய முடிவெடுத்தார். இந்தச் செயல்முறை சட்டவிரோதமானது அல்ல. ஆனால், சமூக ரீதியாக இது ஆபத்தான தாக்கங்களைக் கொண்டுள்ளது. ஆகவே, எந்த மருத்துவமனையும் இதைச் செய்ய ஒப்புக்கொள்வதில்லை. எனவே நெடா, இதை ரகசியமாக அதிக விலைக்குச் செய்யக்கூடிய ஒரு தனியார் கிளினிக்கை கண்டுபிடித்தார். "நான் என் சேமிப்பையெல்லாம் அதற்குச் செலவழித்தேன். என்னுடைய மடிக்கணினி, கைபேசி, தங்க நகைகளை விற்றேன்," என்று அவர் கூறுகிறார். மேலும், இதில் ஏதேனும் தவறு நடந்தால் முழுப் பொறுப்பையும் ஏற்கவும் அவர் ஓர் ஆவணத்தில் கையெழுத்திட வேண்டியிருந்தது. பிறகு, ஒரு மருத்துவச்சி அதைச் செய்தார். அந்தச் செயல்முறை சுமார் 40 நிமிடங்கள் நடந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், அதிலிருந்து நெடா குணமடைய பல வாரங்கள் தேவைப்பட்டது. "நான் மிகுந்த வலியில் இருந்தேன். என்னால், என் கால்களை அசைக்க முடியவில்லை," என்று அவர் நினைவு கூர்ந்தார். அவர் பெற்றோரிடம் இந்த முழு விஷயத்தையும் மறைத்தார். "நான் மிகவும் தனிமையாக இருப்பதைப் போல் உணர்ந்தேன். ஆனால், அவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற பயம் எனக்கு வலியைப் பொறுத்துக்கொள்ள உதவியது என்று நினைக்கிறேன்." கடைசியில் நேடா பொறுத்துக்கொண்ட சோதனையெல்லாம் அர்த்தமில்லாமல் போனது. ஓராண்டு கழித்து, அவரை திருமணம் செய்ய விரும்பிய ஒருவரை அவர் சந்தித்தார். ஆனால், அவர்கள் உடலுறவு கொண்டபோது, அவருக்கு ரத்தம் வரவில்லை. கன்னித்திரையைச் சரிசெய்யும் செயல்முறை தோல்வியடைந்தது. "அவரை ஏமாற்றி திருமணம் செய்துகொள்ள முயன்றதாக என்மீது குற்றம் சாட்டினார். நான் பொய் கூறுவதாகச் சொல்லி, என்னைத் திருமணம் செய்துகொள்ள இருந்தவர், என்னை விட்டுப் பிரிந்து சென்றார்." குடும்பத்தினரின் அழுத்தம் கன்னித்தன்மை பரிசோதனை நெறியற்றது, அறிவியல் தகுதி பெறாதது என்று உலக சுகாதார நிறுவனம் கண்டித்த போதிலும், இந்தோனேசியா, இராக், துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் இந்த நடைமுறை இன்னமும் மேற்கொள்ளப்படுகிறது. நீதிமன்ற வழக்குகள், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் போன்ற குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே கன்னித்தன்மை பரிசோதனையை மேற்கொள்வதாக இரானிய மருத்துவ அமைப்பு கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES இருப்பினும், கன்னித்தன்மை சான்றிதழுக்கான பெரும்பாலான கோரிக்கைகள் இன்னமும் திருமணம் செய்யத் திட்டமிடும் ஜோடிகளிடமிருந்து வருகின்றன. எனவே அவர்கள் பெரும்பாலும் தங்கள் அம்மாக்களுடன் தனியார் கிளினிக்குகளுக்கு செல்கிறார்கள். ஒரு மகப்பேறு மருத்துவரோ மருத்துவச்சியோ ஒரு பரிசோதனையை மேற்கொண்டு சான்றிதழை வழங்குவார். இதில் பெண்ணின் முழுப் பெயர், அவரது தந்தையின் பெயர், அவரது தேசிய அடையாளம் மற்றும் சில நேரங்களில் அவரது ஒளிப்படம் இருக்கும். இது அவரது கன்னித்திரையின் நிலையை விவரிக்கும். மேலும், "இந்தப் பெண் கன்னிப்பெண்ணாக இருக்கிறார்" என்ற வாசகத்தையும் அந்தச் சான்றிதழ் உள்ளடக்கியிருக்கும். மருத்துவர் ஃபரிபா பல ஆண்டுகளாக இத்தகைய சான்றிதழை வழங்கி வருகிறார். இதுவொரு அவமானகரமான நடைமுறை என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். ஆனால், அவர் உண்மையில் பல பெண்களுக்கு உதவுவதாக நம்புகிறார். "அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடமிருந்து வரும் அத்தகைய அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். சில நேரங்களில், ஏதேனும் ஜோடி திருமணத்திற்கு முன்பாக உடலுறவு வைத்திருந்து, அவர்கள் திருமணம் செய்துகொள்ள முயலும்போது, அவர்களுடைய குடும்பத்தினரின் முன், வாய்மொழியாக திருமணம் செய்யவுள்ள பெண் கன்னித்தன்மையை இழக்கவில்லை என்று பொய் கூறுவேன்," என்று அவர் கூறுகிறார். ஆனால், இன்னமும் பல ஆண்களுக்கு கன்னிப்பெண்ணை திருமணம் செய்வது அடிப்படையான விஷயமாக உள்ளது. "திருமணத்திற்கு முன்பாக ஒரு பெண் தனது கன்னித்தன்மையை இழந்தால், அவர் நம்பகமானவராக இருக்க முடியாது. வேறோர் ஆணுக்காகத் தன் கணவரை அவர் விட்டுச் செல்லக்கூடும்," என்று ஷிராஸை சேர்ந்த 34 வயதான எலக்ட்ரீஷியன் அலி கூறுகிறார். லால் சிங் சத்தா விமர்சனம் - வலதுசாரிகள் எதிர்த்த அமீர்கான் திரைப்படம் எப்படியிருக்கிறது? வன்கொடுமையால் பிறந்த மகன், தாய்க்கு நீதி வாங்கித் தந்த உணர்வுப் பூர்வமான கதை சதுரங்கக் காய்களில் ராஜாவின் தலையில் சிலுவைக் குறி இருப்பது ஏன்? தான் 10 பெண்களுடன் உடலுறவு கொண்டுள்ளதாகக் கூறும் அவர், "என்னால் அதைத் தடுக்க முடியவில்லை," என்கிறார். இரானிய சமுதாயத்தில் இரட்டை நிலை உள்ளது என்பதை அலி ஏற்றுக் கொள்கிறார். ஆனால், பாரம்பர்யத்தை உடைப்பதற்குரிய காரணம் எதுவும் இருப்பதாக அவர் நினைக்கவில்லை. "பெண்களை விட ஆண்களுக்கு அதிக சுதந்திரம் இருப்பதை சமூக விதிமுறைகள் ஏற்றுக் கொள்கின்றன" என்ற அலியின் பார்வை பலரிடமும், குறிப்பாக இரானின் கிராமப்புற, பழைமைவாத பகுதிகளில் இருக்கிறது. கன்னித்தன்மை சோதனைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஒருபுறம் பெருகி வந்தாலும், இந்தக் கருத்து இரானிய கலாசாரத்தில் மிக ஆழமாக வேரூன்றியிருப்பதால், அரசு இந்த நடைமுறைக்கு முழுமையாகத் தடை விதிப்பது சாத்தியமில்லை என்று பலர் நம்புகிறார்கள். எதிர்காலம் மீதான நம்பிக்கை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற, தவறான கணவருடன் வாழ்ந்த மரியம் இறுதியாக நீதிமன்றத்தின் மூலம் விவாகரத்து பெற முடிந்தது. சில வாரங்களுக்கு முன்பு தான் அவர் முழுமையாகப் பிரிந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES "ஆண் ஒருவரை மீண்டும் நம்புவது மிகவும் கடினமாக இருக்கும். எதிர்காலத்தில் நான் திருமணம் செய்து கொள்வதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை," என்று அவர் கூறுகிறார். பல்லாயிரக்கணக்கான பெண்களோடு, அவரும் கன்னித்தன்மை சான்றிதழ் வழங்குவதை நிறுத்துவதற்காக வளர்ந்து வரும் ஆன்லைன் மனுக்களில் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். அவருடைய வாழ்நாளிலேயே, உடனடியாக எதுவும் மாற வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கவில்லை என்றாலும், தன் நாட்டில் பெண்கள் அதிக சமத்துவத்தை எதிர்காலத்தில் ஒருநாள் பெறுவார்கள் என்று நம்புகிறார். "இது ஒரு நாள் சாத்தியமாகும் என்று நம்புகிறேன். எதிர்காலத்தில் நான் எதிர்கொண்டதை எந்தப் பெண்ணும் எதிர்கொள்ள வேண்டியிருக்காது என்று நம்புகிறேன்," நேர்காணல் அளித்தவர்கள் அனைவரின் பெயர்களும் அவர்களின் அடையாளங்களைப் பாதுகாப்பதற்காக மாற்றப்பட்டுள்ளன. கீழ்க்கண்ட கட்டுரைகளும் உங்களுக்குப் பிடிக்கும் கன்னித்திரை பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக் கதைகள் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு இந்தக் கட்டுரை உதவும் கன்னித்திரை என்பது என்ன? உண்மையும் கட்டுக்கதைகளும் https://www.bbc.com/tamil/global-62524047
  2. சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து - வென்டிலேட்டரில் சிகிச்சை, ஒரு கண்ணை இழக்கும் அபாயம் சாம் காப்ரால் பிபிசி நியூஸ், வாஷிங்டன் 12 ஆகஸ்ட் 2022 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்ட பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருப்பதாகவும் பேச முடியாத நிலையில் இருப்பதாகவும் அவரது முகவர் தெரிவித்துள்ளார். சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதிய பின்னர் பல ஆண்டுகளாக மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நியூயார்க்கில் ஒரு மேடையில் வைத்து கத்தியால் குத்தப்பட்டு தாக்கப்பட்டார். புக்கர் பரிசு வென்றவரான இவர், லாப நோக்கற்ற ஷட்டாக்குவா நிறுவன நிகழ்வில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு ஆளானார். அந்த நிகழ்ச்சியில் பார்வையாளராக இருந்த நபர், திடீரென்று மேடை மீது ஏறி ருஷ்டியை கழுத்துப் பகுதியில் குத்தித் தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சல்மான் ருஷ்டி யார்? முகமது நபியை அவமதித்ததாக முஸ்லிம்களின் வெறுப்புக்கு ஆளானது ஏன்? இந்து தேசத்தை உருவாக்குவதில் பின்னணியில் செயல்படும் இந்து அமைப்புக்களின் பங்கு இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், உடனடியாக சல்மான் ருஷ்டியிடம் விரைந்து சென்று அவரை காப்பாற்ற முற்படும் காட்சி, இணையத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் உள்ளது. அவர் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பட மூலாதாரம்,HORATIOGATES3 ஷட்டாக்குவா நிறுவன நிகழ்வில் இருந்த ஒரு மருத்துவர், கத்தியால் குத்தப்பட்ட பிறகு ருஷ்டிக்கு முதலுதவி செய்ததாக ரீடா லிண்ட்மேன் என்ற மருத்துவர் நியூயார்க் டைம்ஸிடம் கூறியுள்ளார்.ருஷ்டியின் கழுத்தின் வலது பக்கம் உட்பட பல இடங்களில் அவர் கத்திக் குத்து காயங்களால் அவதிப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் மேடையில் சரிந்த பகுதியில் ரத்தம் பீறிட்டு காணப்பட்டது. அந்த நேரத்தில் ருஷ்டி உயிருடன் இருப்பதாகத் தோன்றியது. அருகே இருந்தவர்களும் "அவருக்கு நாடித் துடிப்பு உள்ளது" என்று குரல் கொடுத்தனர்," என்று மருத்துவர் ரீடா லிண்ட்மேன் கூறினார். சம்பவ இடத்தில் இருந்து சல்மான் ருஷ்டியை தாக்கிய நபர் பிடிபட்டுள்ளார். அவரது பெயர் ஹாதி மட்டார். நியூஜெர்சியில் வசிப்பவர் எனத் தெரியவந்துள்ளதது. மேடையை நோக்கி ஓடிச் சென்ற அந்த நபர் சல்மான் ருஷ்டியையும் அவரைப் பேட்டி எடுத்த நபரையும் கத்தியால் குத்தியதாக நியூயார்க் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். பேட்டி எடுத்தவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த ருஷ்டிக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. "அவர் ஒரு கண்ணை இழக்கக்கூடும். கையில் உள்ள நரம்புகள் அறுபட்டிருக்கின்றன. கல்லீரல் சேதமடைந்திருக்கிறது" என அவரது முகவர் ஆண்ட்ரூ வெஸ்லி கூறினார். அவர் தாக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்பது பற்றி இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. தாக்கியவரின் பையில் இருந்த மின்னணு சாதனங்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 இந்த நிலையில், அமெரிக்க செனட் சபையின் பெரும்பான்மை அணித் தலைவர் சக் ஷூமர், சல்மான் ருஷ்டி தாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் மீதான தாக்குதல் இது என்று கூறியுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 கருத்து சுதந்திரத்திற்காக குரல் கொடுப்பவராகவும் பல சந்தர்ப்பங்களில் தனது படைப்புகளை பாதுகாக்கும் வகையில் கருத்துக்களையும் வெளியிட்டு வருபவருமாக அறியப்படுகிறார் சல்மான் ருஷ்டி. நியூயார்க்கில் உள்ள ஷட்டாக்குவா என்ற லாப நோக்கற்ற நிறுவனத்தால் நடத்தப்பட்ட கோடைகால விரிவுரைத் தொடர் நிகழ்வில், முதன்மையானதாக சல்மானின் உரை இடம்பெற்றிருந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு போலீஸ் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. லால் சிங் சத்தா: ஆமிர் கான் படத்தை இந்துத்துவவாதிகள் எதிர்ப்பது ஏன்? "இலங்கை போரில் காணாமல் போன பலர் பாலியல் தொழிலாளர்கள்" - உறவினர்கள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் நேரில் பார்த்தவர்களின் கூற்று இதற்கிடையே, தாக்குதல் நடத்தியவர் கறுப்பு முகமூடி அணிந்து வந்ததாக நேரில் பார்த்தவர்கள் உள்ளூர் ஊடகமான பஃபலோ நியூஸின் மார்க் சோமர் பிபிசியிடம் கூறியுள்ளார். பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த அந்த தாக்குதல்தாரி, திடீரென்று மேடை மீது ஏறி ருஷ்டியை தாக்கத் தொடங்கியதாக நேரில் பார்த்தவர்கள் தன்னிடம் கூறியதாக மார்க் சோமர் தெரிவித்தார். அந்த நபர் தாக்கத் தொடங்கிய உடனேயே சல்மான் ருஷ்டியை மீட்க 10 முதல் 15 பேர் வரை ஓடோடிச் சென்றதாகவும் அந்த நேரத்தில் ருஷ்டி சுமார் ஐந்து அல்லது அதற்கும் அதிகமான நிமிடங்கள்வரை தரையிலேயே சுருண்டு விழுந்ததாகவும் தெரிய வந்துள்ளது. அதன் பிறகு உடன் இருந்தவர்கள் அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று வெளியே காத்திருந்த ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு செல்ல உதவியுள்ளனர். "பொதுவாகவே சல்மான் ருஷ்டி மேலதிக பாதுகாப்பு காவலர்கள் புடை சூழ வெளியே வருவார். அவருக்கு போதிய பாதுகாப்பு இருந்திருக்காது என்று நம்புவது கடினமாக உள்ளது. நிகழ்ச்சி தொடங்கிய சில நொடிகளில் அவரைத் தாக்க வந்தவர் மேடை ஏறியிருக்க வேண்டும்," என்கிறார் செய்தியாளர் சோமர். படக்குறிப்பு, கார்ல் லெவன், பார்வையாளர் பகுதியில் 14 அல்லது 15வது வரிசையில் இருந்தவர். தாக்குதலை நேரில் பார்த்த கார்ல் லெவன், பிபிசியிடம் பேசும்போது, "நடந்த சம்பவத்தால் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் "இன்னும் பதற்றத்துடனேயே உள்ளனர்" என்கிறார். "இப்படியொரு காட்சியை பார்ப்பது முற்றிலும் பயங்கரமான விஷயம்," எனக்கூறும் அவர், ருஷ்டியை அந்த நபர் திரும்பத் திரும்ப தாக்கியதாகவும் தெரிவித்தார். மூடிய அரங்கில் நடந்த தாக்குதலில் கார்ல் லெவன், பார்வையாளர் பகுதியில் 14 அல்லது 15 வரிசைகள் பின்னால் அமர்ந்திருந்ததாக கூறினார். சாத்தானின் வசனங்கள் வெளியானபோது என்ன நடந்தது? இந்தியாவில் பிறந்த எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, 1981இல் மிட்நைட்ஸ் சில்ட்ரன் என்ற புதினத்தை எழுதியதன் மூலம் புக்கர் பரிசு வென்று சர்வதேச அளவில் புகழ் பெற்றார். பிரிட்டனில் மட்டும் இவரது புத்தகம், பத்து லட்சம் பிரதிகளுக்கும் அதிகமாக விற்றுத் தீர்ந்தது. ஆனால் சல்மான் ருஷ்டி, நான்காவதாக எழுதி 1988இல் வெளியிட்ட "தி சாத்தானிக் வெர்சஸ்" (சாத்தானின் வசனங்கள்) - அவர் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் தலைமறைவாக வாழும் நிலைக்கு அவரைக் கட்டாயப்படுத்தியது. மனதில் பட்டதை எழுத்து வடிவில் வெளிப்படையாக பதிவு செய்யக் கூடியவராகவும், நவீனத்துவ காலத்துக்குப் பிந்தைய கருத்தாக்கங்களையும் கொண்டவராக அடையாளப்படுத்திக் கொள்ளும் சல்மான் ருஷ்டி எழுதிய அந்த புத்தகம் சில முஸ்லிம்கள் மத்தியில் கோபத்தைத் தூண்டியது. காரணம், அந்த புத்தகத்தின் உள்ளடக்கம், தெய்வ நிந்தனைக்கு ஒப்பானதாகக் கருதப்பட்டது. பல நாடுகள் அந்த புத்தகத்துக்கு தடை விதித்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES அந்த புத்தகம் வெளிவந்து சரியாக ஒரு வருடம் கழித்து, இரானின் மூத்த மத குருவாக அப்போது இருந்த ஆயடூலா ருஹோல்லா கொமனேயி, சல்மான் ருஷ்டியை கொல்லுமாறு அழைப்பு விடுத்தார். சல்மான் ருஷ்டியை கொல்வோருக்கு 3 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வெகுமதி தரப்படும் என்று அவர் அறிவித்தார். அந்த நடவடிக்கையும் அந்த காலகட்டத்தில் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது. அதே சமயம், அந்த புத்தகம் வெளிவந்த பிறகு ஏற்பட்ட வன்முறையில் அதை மொழிபெயர்த்தவர்கள் சிலர் உள்பட டஜன் கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கொமனேயி அறிவித்த ஃபத்வா திரும்பப் பெறப்படாத நிலையில் அது இப்போதும் உயிர்ப்புடன் இருப்பதாகவே கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் இரானில் ஆளுகைக்கு வந்த அடுத்தடுத்த ஆட்சியாளர்கள், எந்த கருத்தையும் வெளியிடாமல் ஒதுங்கியே உள்ளனர். யார் இந்த சல்மான் ருஷ்டி? இந்தியாவில் பிறந்து பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் குடியுரிமை பெற்றிருப்பவர் சல்மான் ருஷ்டி. மரண அச்சுறுத்தல் உள்ளதைத் தொடர்ந்து அவருக்கு பிரிட்டன் காவல்துறை பாதுகாப்பு கொடுத்து வந்தது. அதே சமயம், 2008ஆம் ஆண்டு வரை ருஷ்டிக்கு எதுவும் ஆகாதபோதும், ஜப்பானில் அவரது புத்தகத்தை மொழி பெயர்த்தவர் 1991ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார். 2007ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசி சல்மான் ருஷ்டியின் இலக்கிய சேவைக்காக "நைட் பேச்சிலர்" என்ற சர் பட்டம் வழங்கி கெளரவித்தார். 2008இல் அமெரிக்க கலை மற்றும் எழுத்து அகாடெமியில் அவர் அங்கத்தினராக தேர்வானார். டைம்ஸ் இதழ் 1945க்குப் பிறகான 50 மிகச்சிறந்த பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் இவருக்கு பதின்மூன்றாவது இடம் வழங்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவர் லூக்கா அண்ட் ஃபயர் ஆஃப் லைஃப் என்ற புத்தகத்தை எழுதினார். 2007ஆம் ஆண்டில் இந்தியாவின் ராஜஸ்தானில் நடைபெற்ற ஜெய்பூர் இலக்கிய விழாவில், சல்மான் ருஷ்டி கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அப்போது அவருக்கு இந்தியாவில் அச்சுறுத்தல் நிலவுவதாக கூறப்பட்டதால் மாநில காவல்துறையின் வேண்டுகோளைத் தொடர்ந்து அவர் தமது பயண திட்டத்தை கைவிட்டார். https://www.bbc.com/tamil/global-62521467
  3. நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் - மேடையிலேயே சுருண்டு விழுந்தார் 24 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,JOSHUA GOODMAN படக்குறிப்பு, விரிவுரை நிகழ்வின்போது தாக்கப்பட்ட சல்மான் ருஷ்டியின் நிலையை பார்வையிடும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதிய பின்னர் பல ஆண்டுகளாக மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நியூயார்க்கில் ஒரு மேடையில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். புக்கர் பரிசு வென்றவரான இவர், சௌதாகுவா நிறுவன நிகழ்வில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தபோது அவர் தாக்குதலுக்கு ஆளானார். அந்த நிகழ்ச்சியில் பார்வையாளராக இருந்த நபர் திடீரென்று மேடை மீது ஏறி ருஷ்டியை குத்தித் தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், உடனடியாக சல்மான் ருஷ்டியிடம் விரைந்து சென்று அவரை காப்பாற்ற முற்படும் காட்சி, இணையத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் தெரிந்தது. சம்பவ இடத்தில் இருந்து சல்மான் ருஷ்டியை தாக்கிய நபர் பிடிக்கப்பட்டுள்ளார். ஆனால், ருஷ்டியின் நிலைமை தொடர்பான தகவல் இன்னும் தெரியவில்லை. https://www.bbc.com/tamil/global-62521467
  4. யானை-மனித எதிர்கொள்ளல்: பாதுகாப்பில் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருவது ஏன்? பி.சுதாகர் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES யானை ஒரு நாளைக்கு சராசரியாக 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை நடக்கும். தினமும் 250 கிலோ வரை உணவு எடுத்துக்கொள்ளும். 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். ஒரு இடத்தில் சாப்பிட்ட உணவின் மூலம், சாணத்தில் இருக்கும் விதைகளுக்கு உயிர்கொடுத்து புது செடிகளையும், மரங்களையும் மற்றொரு இடத்தில் வளர்க்கும் என்று சொல்லப்படுகிறது. யானைகளைக் குழந்தையைப் போல அன்பானது மற்றும் குறும்புத்தனம் கொண்டது என்று சொல்வதுண்டு. இன்று உலக யானைகள் தினம். 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நோக்கமே யானைகளைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான். இந்நிலையில், இன்றைய சூழலில் யானை-மனித எதிர்கொள்ளல் என்பது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. அதுகுறித்து, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் பிபிசி தமிழிடம் பேசும்போது, "இன்றைய சூழலில் யானை-மனித எதிர்கொள்ளல் அதிகளவில் உள்ளன. காட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் விவசாயிகள் தென்னை, வாழை, கரும்பு போன்ற பணப் பயிர்களை அதிகளவில் பயிரிடுகின்றனர். இந்தப் பயிர்கள் யானைகளுக்கு மிகப் பிடித்தமானது என்பதால் காட்டை ஒட்டியுள்ள விவசாய நிலங்களைத் தேடி வெளியே வருகின்றன. யானைகளுக்குப் பிடிக்காத பணப் பயிர்களும் இருக்கின்றன. அவற்றைப் பயிரிடுவதால், யானை-மனித எதிர்கொள்ளலைத் தவிர்க்க முடியும். பயிர்களுக்குச் சேதம் ஏற்படாது. காட்டைத் தேடி ஒரு யானையின் பயணம்: ரிவால்டோவுக்கான போராட்டம் வெற்றியடைந்தது எப்படி? அருகிவரும் உயிரினங்கள் நாள்: கோவையில் அதிகரிக்கும் யானைகள் மரணம் - உண்மை என்ன? யானைகளின் வழித்தடங்களை அடைப்பது யார்? அரசு என்ன செய்கிறது? காட்டுயிர்களை நாம் குறை சொல்ல முடியாது. நாம் தான் அதற்கு ஏற்றாற்போல் பயிரிட வேண்டும். இதனால் யானை-மனித எதிர்கொள்ளலைத் தவிர்க்கலாம். இதை மக்களிடம் எடுத்துரைத்து யானைகளைப் பாதுக்காக்க வேண்டிய சூழலை உருவாக்க வேண்டும். பட மூலாதாரம்,MANJUNATH KIRAN படக்குறிப்பு, முதுமலை புலிகள் சரணாலயத்தை நோக்கி செல்லும் சாலை யானைகளின் வலசைப்பாதையைப் பாதுகாக்க வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். முதுமலை புலிகள் காப்பகத்தில் சிகூர் காட்டுப் பகுதியில், அரசு யானைகளின் வலசைப் பாதையிலிருந்த ஆக்கிரமிப்புகள் 2010ஆம் ஆண்டு முதல் அகற்றப்பட்டு வருகிறது" என்றார். அதோடு, இந்த வலசைப் பாதை கேரளா, கர்நாடகா வழியாக முதுமலை வந்து சத்தியமங்கலம் வழியாக கிழக்குத் தொடர்ச்சி மலைக்குச் செல்லும் முக்கியமான பாதையாகும். இந்தப் பாதையை மீட்டெடுப்பதில் அரசும் வனத்துறையும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டார் வெங்கடேஷ். பட மூலாதாரம்,MANJUNATH KIRAN / GETTY IMAGES படக்குறிப்பு, முதுமலை புலிகள் சரணாலயத்தில் எடுக்கப்பட்டது மேற்கொண்டு பேசியவர், "வனத்தை விட்டு வெளியே வரும் யானைகள் மின்சார வேலிகளின் மூலம் விஷம் வைத்தும் கொல்லப்படுகின்றன. இது மிகவும் தவறு. யானை பாதுகாக்கப்படும் உயிரினங்கள் பட்டியலில் (schedule 1) இருக்கிறது. காட்டை விட்டு வெளியே வரும் யானைகள் குறித்து உடனே வனத்துறைக்குத் தகவல் கொடுக்க வேண்டும். அதைவிடுத்து, அவை வராமல் தடுக்க வேறு எந்தவொரு நடவடிக்கையும் பொதுமக்கள் எடுக்கக்கூடாது. அவ்வாறு எடுத்தால் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தின்படி குற்றமாகும்," என்று கூறினார். பட மூலாதாரம்,MANJUNATH KIRAN / GETTY IMAGES 10 ஆண்டுகளில் 1160 யானைகள் உயிரிழப்பு இந்தியா முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 1160 என, ஆர்டிஐ மூலம் தகவல் கிடைத்துள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பல்வேறு காரணங்களால் கொல்லப்பட்ட யானைகளின் எண்ணிக்கை, தற்போது இருக்கும் யானைகளின் எண்ணிக்கை மற்றும் யானைகளைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்று பல்வேறு கேள்விகளுக்குப் பதில் கேட்டிருந்தார். அதற்கு யானைகள் திட்ட வல்லுநரும் தலைமை பொது தகவல் அலுவலருமான முத்தமிழ்ச் செல்வன் பதிலளித்துள்ளார். ரயில் மோதல் கடந்த 10 ஆண்டுகளில் 186 யானைகள் ரயில் மோதி இறந்துள்ளன. அதிகபட்சமாக அசாம் மாநிலத்தில் 62 யானைகள் இறந்துள்ளன. மின்சாரம் தாக்கி இறத்தல் கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி 741 யானைகள் இறந்துள்ளன. இதில் அதிகபட்சமாக ஒடிசா மாநிலத்தில் 133 யானைகள் இறந்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 93 யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளன. பட மூலாதாரம்,AFP / GETTY IMGAES படக்குறிப்பு, அசாம் மாநிலத்தின் தீபோர் பீல் பறவைகள் சரணாலயத்தில் ரயிலில் அடிப்பட்டு இறந்த யானை. வேட்டைக்குப் பலி கடந்த 10 ஆண்டுகளில் வேட்டையாடப்பட்டு இறந்த யானைகளின் எண்ணிக்கை 169. இதில் அதிகபட்சமாக ஒடிசா மாநிலத்தில் 49 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 9 யானைகள் சட்டவிரோத காட்டுயிர் வேட்டைக்குப் பலியாகியுள்ளன. யானைகள் பாதுகாப்பு திட்டத்திற்கான செலவு இந்தியா முழுவதும் யானைகளைப் பாதுகாப்பதற்கான திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் 212.5 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆர்டிஐ ஆர்வலர் பாண்டியராஜாவிடம் பேசியபோது, "சமீப காலங்களில் யானைகளின் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. யானைகள் அழிந்தால் காடுகள் அழியும். வருங்கால சந்ததியினருக்காக யானைகளையும் காடுகளையும் பாதுகாக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக துரிதமாகச் செயல்பட்டு இந்த யானைகள் அழிவைத் தடுத்து நிறுத்த வேண்டும்," என்றார். ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் 12 ஆண்டுகளாக, காட்டுயிர் உயிரியல் துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கும் பி.ராமகிருஷ்ணன், 23 ஆண்டுகளாக யானைகளைப் பற்றி ஆய்வு செய்து வருகிறார். யானைகளின் வழித்தடங்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். வனநிலத்தில் ஆதியோகி சிலையா? - ஆர்.டி.ஐ பதிலும் ஈஷா யோகா மையம் சர்ச்சையும் யானை தந்தம், தோல், கால், எலும்பு எல்லாவற்றுக்கும் தனி ரேட்: உள்ளூர் முதல் சர்வதேச நெட்வொர்க் வரை அன்பான கும்கியாகிய ஆவேசமான காட்டு யானை: 26 பேரை கொன்ற மூர்த்தியின் கதை யானைகளின் உயிர்ச்சூழல் அதிகமாக இருக்கும் நீலகிரி பகுதியிலுள்ள யானை-மனித எதிர்கொள்ளல் குறித்த ஆராய்ச்சிகளைச் செய்துள்ளார். அவரிடம் பேசியபோது, "2010ஆம் ஆண்டில் மத்திய அரசு, யானையை 'பாரம்பர்ய உயிரினமாக' அறிவித்த பிறகு தான் யானைகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. யானைகள் பாதுகாப்புத் திட்டம் 1991ஆம் ஆண்டில் வருவதற்கு முன்பு, யானைகள் தந்தத்திற்காக அதிகளவில் வேட்டையாடப்பட்டன. தென்னிந்திய காடுகளில், வீரப்பனால் நிறைய யானைகள் கொல்லப்பட்டன. 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு யானையைப் பாதுகாக்க, வேட்டைத் தடுப்பு முகாம்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் என நிறைய திட்டங்கள் கொண்டுவரப்பட்டதால் யானைகள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,AFP / GETTY IMAGES படக்குறிப்பு, பெங்களூருவில் உள்ள ஹஸ்கூர் எனும் கிராமத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் கடுமையான நடவடிக்கையால், தந்தங்களை வணிகம் செய்ய முடியாத அளவுக்கு மத்திய, மாநில அரசுகள் சட்டங்களை இயற்றியுள்ளன. தந்தத்திற்காக யானைகள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டதால், ஆண் யானைகளின் எண்ணிக்கை பெருகியுள்ளது. இருப்பினும், யானைகளின் வலசைப்பாதை மறிக்கப்படுவது, அவற்றின் வாழ்விடம் பாதிக்கப்படுவது, யானை-மனித எதிர்கொள்ளல் அதிகளவிலான இழப்புகளை ஏற்படுத்துவது என்று, இன்னமும் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன," என்றார். அதிலும், குறிப்பாக ஆண் யானைகளைப் பாதுகாப்பதற்காகத் தான் யானைகள் பாதுகாப்புத் திட்டம் வந்தது. இதற்குச் சவாலான விஷயமே, மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதுதான். ஆனால், ஆரோக்கியமான இனப்பெருக்கத்திற்குத் தகுதியான 25 முதல் 35 வயது வரையுள்ள யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதால், காட்டு யானைகளிடையே பாலின விகிதம் பாதிக்கப்படுவதாகவும் ராமகிருஷ்ணன் கூறுகிறார். ஆகவே, மின்சார வேலி, மின்சார ஒயர்களால் யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க வேண்டிய கட்டாயாத்தில் நாம் இருக்கிறோம் என்று கூறியவர் மேலும், "கோடைக்காலங்களில் யானைகளுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது. அவற்றுக்கு வியர்வை சுரப்பிகள் கிடையாது. அதனால் தண்ணீருக்காக அனைத்து இடங்களுக்கும் செல்லும். யானைக்குத் தேவையான தண்ணீரை ஏற்படுத்திக் கொடுத்தால், யானைகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருவதைத் தவிர்க்கலாம்," என்று கூறினார். பறவையியல் ஆய்வாளர் சாலிம் அலி சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. "மனிதர்கள் இல்லாத உலகத்தில் பறவைகளும் மற்ற உயிரினங்களும் வாழும். ஆனால், பறவைகளும் மற்ற உயிரினங்களும் இல்லாத உலகத்தில், மனிதர்களால் உயிர் வாழ முடியாது." https://www.bbc.com/tamil/india-62522276
  5. 10 பவுண் எண்டால் 15 லட்சத்திற்கு மேல் எல்லோ! பல நகைக்கடை நடத்தும் பொற்கொல்லர்கள் இரவிரவாக தான் வேலை செய்கிறவர்கள்.
  6. "இலங்கை போரில் காணாமல் போன பலர் பாலியல் தொழிலாளர்கள்" - 2000ஆம் நாள் போராட்டத்தில் உறவினர்கள் அதிர்ச்சித் தகவல் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KOGULAN இலங்கையில் இடம்பெற்ற 30 வருட உள்நாட்டுப் போர் காரணமாக காணாமல் போனோரை கண்டறிந்து கொடுக்குமாறு வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் தொடர் போராட்டம் இன்று இரண்டாயிரமாவது நாளை எட்டியிருக்கிறது. வவுனியா - ஏ9 வீதியில் இந்த தொடர் சுழற்சி முறையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வவுனியாவில் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி இந்த போராட்டம் தொடங்கப்பட்டது. அதேபோன்று, கிளிநொச்சியில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதியும், முல்லைத்தீவில் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதியும் இந்த போராட்டம் தொடங்கப்பட்டது. இலங்கை வரலாறு: உள்நாட்டுப் போர் ஏற்பட காரணமான 'கருப்பு ஜூலை' நிகழ்வு தமிழர்கள் மீதான 1983 கருப்பு ஜூலை வன்முறையும், தற்போதைய ராணுவ தாக்குதலும்: ஒப்பிடும் சிங்களர்கள் இலங்கை நெருக்கடி: 'மத அரசியல்' விளைவித்த துன்பங்கள் - வரலாறு மாற்றியமைக்கப்படுமா? 2000ஆம் நாள் போராட்டத்தை முன்னிட்டு, வடக்கில் பல பகுதிகளில் இன்று மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. வவுனியாவில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் கொடிகளை ஏந்தியவாறு, சர்வதேசத்திடம் நீதி கோரியிருந்தனர். அதேவேளை, காணாமல் போனோரின் உறவுகளது படங்களையும் ஏந்திய இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கிளிநொச்சியிலும் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர். கிளிநொச்சியில் திரண்ட உறவினர்கள் பட மூலாதாரம்,KOGULAN கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இன்று (ஆக. 12) காலை 9.30 அளவில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும், காணாமல் போனோருக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பிலும் நீதியான விசாரணை வேண்டும் என வலியுறுத்தியும், ராஜபக்ச குடும்பத்தை கைது செய்து சட்டத்திற்கு முன்பாக நிறுத்த வேண்டும் எனவும் இதன்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜரொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,KOGULAN இந்த 2000 நாட்களில் தாம் பல்வேறு விடயங்களை கற்றுக்கொண்டதாகவும், இவ்வாறு கற்றுக்கொண்ட விடயங்களின் ஊடாக சில உறுதியான முடிவுகளை எடுத்ததாகவும் காணாமல் போனோர் உறவுகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு எடுத்த முடிவுகளை அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். 1. தமிழர்களுக்கு வடகிழக்கில் தாயகம் வேண்டும். 2. இந்த தாயகம் பாதுகாக்கப்பட்டதாக வேண்டும். 3. பாலியல் வன்கொடுமை, கடத்தல், கொலைகள், இனவழிப்பு போன்றவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நமக்குச் சொந்த இறையாண்மை இருக்க வேண்டும். 4. ஐக்கிய நாடுகளினால் கண்காணிக்கப்படும் வாக்கெடுப்பு மூலம் நமது பாதுகாப்பை அடைவதற்கான முறையான வழி. பட மூலாதாரம்,KOGULAN 5. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நல்லெண்ணத்தால் மட்டுமே அனைத்தும் சாத்தியமாகும். 6. நாம் இறையாண்மையைப் பெற்றால், நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்னையையும் தீர்க்க முடியும், குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிப்பது இலகுவாகும். 7. எங்கள் குழந்தைகள் எங்கு என்று எங்களுக்குத் தெரியும். அவர்களில் சிலர் பாலியல் அடிமைகளாகவும், வேலைக்காரர்களாகவும், அவர்களில் சிலர் பிக்குகளாகவும், அவர்களில் சிலர் சிங்களவர்களாகவும் மாற்றப்பட்டனர். 8. வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் தமிழர்களைப் பார்க்க பாவமாக இருப்பதாக கூறியிருந்தார் என்பதை நாம் இன்று சொல்ல விரும்புகிறோம். ஏனெனில் சிங்களவர்கள் தமிழுக்கு எதிராக வேலை செய்ய தமிழர்களை பணம் கொடுத்து உளவாளிகளாகவும், சம்பளம் வாங்கும் கொலைகாரர்களாகவும், பணம் கொடுத்து போதைப்பொருள் கடத்துபவர்களாகவும், பணம் கொடுத்து பாலியல் தொழிலாளர்களாகவும், தமிழ் கலாச்சாரங்களை அழிப்பதற்காகவும் பயன்படுத்துகிறார்கள். பட மூலாதாரம்,KOGULAN இதேவேளை, இந்த 2000 நாட்கள் தொடர் போராட்டத்தில் கலந்துக்கொண்ட, சுமார் 120க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அழைப்புகளை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், இலங்கை அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருவதாகவும் அவர் கூறுகின்றார். ''நாங்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் மீது தொடர்ந்தும் நம்பிக்கை வைத்துள்ளோம். இந்தியா மீதான நம்பிக்கையை இழந்து விட்டோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஆனால், பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா, இலங்கைக்கு அனைத்து ஆதரவையும் வழங்கியது. தமிழர்களுக்கும் அவர்களின் வாக்குறுதியளிக்கப்பட்ட அரசியல் தீர்மானத்திற்கும் எந்தவிதமான முயற்சியும் இந்தியா எடுக்கவில்லை என்பதை நாம் பார்த்தோம்," என அவர் குறிப்பிட்டார். https://www.bbc.com/tamil/sri-lanka-62521500
  7. தேசத்தின் நாளைய சொத்து | புத்தாக்க நடன ஆற்றுகை | A Creation By Santhira Bharatha Kalalayam | 4K
  8. சுதந்திர தினம்: 'காந்தி பாகிஸ்தானின் பாபு' என்று கோட்சே அளித்த வாக்குமூலத்தின் பின்னணி என்ன? வக்கார் முஸ்தஃபா பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர், லாகூர் 12 ஆகஸ்ட் 2022, 01:10 GMT பட மூலாதாரம்,HULTON ARCHIVE சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய துணைக் கண்டம், பாகிஸ்தான், இந்தியா என இரு நாடுகளாகப் பிரிந்து சில மாதங்களே ஆகியிருந்தன. ரத்தம் தோய்ந்த இந்தப் பிரிவினையால் இரு நாடுகளும் புண்பட்டிருந்தன. இருப்பினும் இரு நாட்டு தலைவர்களின் பேச்சில் கசப்பு இருக்கவில்லை. இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளின் சுதந்திர வரலாற்றில் தவிர்க்க முடியாமல் பேசப்படும் பிரிவினை மற்றும் ஜின்னா, காந்தி குறித்த சில முக்கியத் தகவல்களை இங்குப் பார்ப்போம். முகமது அலி ஜின்னா இந்தியா பற்றி என்ன கூறினார்? அப்போது பாகிஸ்தானின் தலைநகர் கராச்சியாக இருந்தது. அங்கு கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோது, பாகிஸ்தானின் நிறுவனர் மற்றும் கவர்னர் ஜெனரல் முகமது அலி ஜின்னா, அமெரிக்க தூதர் பால் ஆல்லிங்கிடம் 1948 மார்ச் மாதத்தில், பாகிஸ்தான்-இந்தியா உறவுகள் "அமெரிக்கா மற்றும் கனடா போல" இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகக் கூறினார். சுமார் 9,000 கிமீ எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்த இரு நாடுகளிலும் மகிழ்ச்சி நிலவும் பொருட்டு, இவற்றுக்கு இடையே சரக்குகள் மற்றும் மக்களின் போக்குவரத்தில் ஒத்துழைப்பு இருக்கும் என்பதாக இந்த அறிகுறி இருந்தது. இந்திய பிரிவினைக்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு முகமது அலி ஜின்னா ராய்ட்டர்ஸ் செய்தியாளர் டான் கேம்பிளுக்கு பேட்டி அளித்தார். "பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நட்பு மற்றும் நம்பகமான உறவை ஜின்னா விரும்பினார். இந்தியப் பிரிவினை, நிரந்தரப் பகைமை மற்றும் பதற்றம் காரணமாக ஏற்படவில்லை. மாறாக, பரஸ்பர பதற்றங்களுக்கு அது முற்றுப்புள்ளி வைத்தது என்று அவர் கருதினார்," என்று 1947 மே 22ஆம் தேதி டான் பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்த நேர்காணல் குறிப்பிடுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காந்தியின் படுகொலை குறித்து பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கான் வெளியிட்ட அறிக்கையில், 'இந்த இக்கட்டான நேரத்தில் இந்திய அரசியலில் இருந்து காந்தி மறைந்தது ஈடு செய்ய முடியாத இழப்பு' என்று கூறியிருந்தார் "இஸ்லாம் உலகுக்கு அமைதியை நிம்மதியை தந்தது" அவுட்லுக் இதழில் எழுதிய கட்டுரையில், மகாத்மா காந்தியின் பேரனும் 'The Good Boatman: A Portrait of Gandhi and Understanding the Muslim Mind' நூலின் ஆசிரியருமான ராஜ்மோகன் காந்தி, '40களின் பிற்பகுதியிலும், 50களின் தொடக்கத்திலும் காந்தி இருந்திருந்தால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மேம்பட்டிருக்கும்' என்று எழுதியிருந்தார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நெருங்கிய உதவியாளரான சுதீந்திர குல்கர்னி, 'மியூசிக் ஆஃப் தி ஸ்பின்னிங் வீல்' என்ற நூலை எழுதியவர். மேற்கத்திய நாடுகள் பயங்கரமான இருளில் இருந்தபோது, கிழக்கில் ஒளிர்ந்த இஸ்லாம் எனும் நட்சத்திரம், கலங்கிய உலகுக்கு ஒளியையும் அமைதியையும் நிம்மதியையும் தந்தது. இஸ்லாம் சண்டையிடும் மதம் அல்ல என்று காந்திஜி கூறினார் என்று குல்கர்னி குறிப்பிட்டுள்ளார். "இஸ்லாத்தின் விரைவான பரவல் பலப் பிரயோகம் காரணமாக ஏற்பட்டதல்ல என்ற முடிவுக்கு நான் வந்தேன். மாறாக, அதன் எளிமை, அறிவுபூர்வமான போதனைகள், தீர்க்கதரிசியின் உயர்ந்த ஒழுக்கம் ஆகியவற்றின் காரணமாக பலர் இஸ்லாத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர்." இந்திய விடுதலைக்கான இறுதிப் போராட்டத்துக்கு பெயர் வைத்த இஸ்லாமியர் - விரிவான வரலாறு வெப் தொடராகும் 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' - பிரபலங்கள் சிக்கிய கதை என்ன? இந்திய கொடியை இடுப்புக்கு கீழ் அணிவது குற்றம் - விதிகள் சொல்வது என்ன? 'காந்தி உண்மையில் பாகிஸ்தானின் பாபு (Bapu)' "காந்திக்கும் ஜின்னாவுக்கும் இடையிலான தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 'இந்தியாவின் வடமேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திர அரசுகள் என்ற கொள்கையை காந்தி ஆதரித்தார். ஜின்னாவிடம் "நீங்கள் விரும்பினால் அதை பாகிஸ்தான் என்று அழைக்கலாம்" என்று சொல்லும் அளவுக்கு லாகூர் தீர்மானத்தை அவர் ஏற்றுக் கொண்டார். 'எனவே நான் ஒரு வழியைப் பரிந்துரைத்தேன். அவசியம் என்றால், இரண்டு சகோதரர்களிடையே பிரிவினை நடக்கட்டும்' என்று காந்தி கூறினார்," என்று குல்கர்னி தெரிவித்துள்ளார். தான் கொல்லப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, காந்தி தனது பிரார்த்தனைக் கூட்டங்களில் 'இந்தியாவும் பாகிஸ்தானும் எனது நாடுகள்' என்று அறிவித்தார். பாகிஸ்தானுக்குச் செல்ல பாஸ்போர்ட் எடுக்க மாட்டேன். புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இந்தியா இரண்டாகப் பிரிந்தாலும், இதயத்தில் நண்பர்களாகவும் சகோதரர்களாகவும் ஒருவருக்கொருவர் உதவி செய்தும் மதித்தும், வெளியுலகில் ஒற்றுமையாக இருப்போம் என்றும் கூறும் துணிச்சலைக் காட்டினார் என்று குல்கர்னி குறிப்பிட்டார். இந்திய அரசு பாகிஸ்தானுக்கு தரவேண்டிய 55 கோடி ரூபாய் மற்றும் ராணுவ தளவாடங்களைத் தர மறுத்தபோது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக காந்திஜி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் வழங்குவதாக ஜனவரி 16ஆம் தேதி இந்திய அரசு அறிவிக்க வேண்டியதாயிற்று. இந்தக் 'குற்றத்திற்காக,' 1948 ஜனவரி 30 ஆம் தேதி நாதுராம் கோட்சே காந்தியை சுட்டுக் கொன்றார். "காந்தியை (Bapu) பாபு என்று அழைக்கிறார்கள், ஆனால், உண்மையில் அவர் பாகிஸ்தானின் பாபு. அவரது உள் குரல், அவரது ஆன்மீக சக்தி, அவரது தத்துவம், அனைத்தும் ஜின்னாவின் முன் தூளாகிவிட்டன" என்று கோட்சே நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னா தனது அறிக்கையில், இந்த மாபெரும் மனிதரின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவது மிகவும் கடினம் என்று கூறியிருந்தார் காந்தி படுகொலைக்குக் காரணமான மற்றுமொரு சம்பவம் இது தொடர்பான மற்றொரு சம்பவமும் காந்தியின் படுகொலைக்குக் காரணமாக அமைந்தது என்கிறார் எழுத்தாளரும் ஆய்வாளருமான அம்ஜத் சலீம் அல்வி. பிரிவினையின் போது வங்காள முஸ்லிம்களை இந்துக்களின் வெறுப்பிலிருந்து காப்பாற்றுவதற்காக, ஹுசைன் ஷாஹீத் சுஹ்ரவர்தி (கிழக்கு வங்காள முதல்வர்) காந்தியை வங்காளத்திற்கு அழைத்துச் சென்றார். "இதனால்தான் வங்காளம் இனப்படுகொலையில் இருந்து தப்பித்தது. காந்தி டெல்லியிலும் ரத்தக்களறியை நிறுத்தினார். இந்தியாவில் இருந்து இந்துக்களைக் கொண்டுவந்து லாகூரில் மாடல் டவுனில் குடியேற்றி, அங்கிருந்து ஒரு முஸ்லிம் குழுவை அழைத்து வந்து அவர்களின் மூதாதையர் வீடுகளில் கொண்டு சேர்க்க காந்தி திட்டமிட்டார்." "காந்தியின் வருகைக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக சுஹ்ரவர்தி 1948 ஜனவரி இறுதியில் லாகூர் வந்து இரண்டு நாட்கள் தங்கினார். இதன் போது அதிகாரிகளைச் சந்தித்து பேசினார். அவர் கிளம்பிச் சென்ற இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு காந்தி படுகொலை செய்யப்பட்டார்." பட மூலாதாரம்,KEYSTONE/GETTY IMAGES காந்தியின் படுகொலைக்கு பாகிஸ்தானிலும் இரங்கல் காந்தியின் மறைவுக்கு பாகிஸ்தானிலும் அதிகாரபூர்வமாக இரங்கல் தெரிவிக்கப்பட்டது. எல்லா அரசு அலுவலகங்களும் 1948 ஜனவரி 31 ஆம் தேதி மூடப்பட்டன. பாகிஸ்தான் டைம்ஸ் என்ற ஆங்கில நாளிதழின் அன்றைய பதிப்பில் 'நாளிதழின் அலுவலகங்கள் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும்' என்ற அறிவிப்பு வெளியானது. பாகிஸ்தான் டைம்ஸின் ஆசிரியர் ஃபைஸ் அகமது ஃபைஸ், காந்தியின் மரணம் குறித்து எழுதிய தலையங்கத்தில், 'இந்த நூற்றாண்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட இந்தத் தலைவர் தொட்ட உயரத்தை வெகு சில தலைவர்களே எட்டியுள்ளனர்' என்று குறிப்பிட்டார். காந்தியின் மறைவு ஒரு கூட்டு இழப்பு என்பதை எல்லை தாண்டிய நண்பர்களுக்குச் சொல்ல விரும்புகிறோம் என்றும் அவர் எழுதினார். காந்தி படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கேட்ட ஜின்னா, தான் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "காந்தி மீதான தாக்குதல் மற்றும் அவரது மரணம் பற்றி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். எங்களுக்குள் வேறுபாடுகள் இருந்தன. இருப்பினும் இந்துக்களிடையே பிறந்த மாமனிதர்களில் அவரும் ஒருவர்," என்று தெரிவித்தார். "அவர் தனது மக்களின் முழு மரியாதையையும் நம்பிக்கையையும் பெற்றிருந்தார். இது இந்தியாவுக்கு ஒரு மாபெரும் இழப்பு. அவரது மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவது மிகவும் கடினம்," என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,COURTESY THE PARTITION MUSEUM, TOWN HALL, AMRITSAR பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் காந்திக்கு அஞ்சலி 1948 பிப்ரவரி 4ஆம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற அமர்வில், அவைத் தலைவர் லியாகத் அலி கான், " நான் ஆழ்ந்த வருத்தத்துடன் காந்திஜியின் துயர மரணத்தைப் பற்றிப் பேச இங்கே நிற்கிறேன். அவர் நம் காலத்தின் மாமனிதர்களில் ஒருவர்" என்று கூறினார். "காந்தியடிகள் தன் வாழ்நாளில் சாதிக்க முடியாதது அவரது மறைவுக்குப் பிறகாவது நடக்கட்டும். அதாவது, இந்தத் துணைக்கண்டத்தில் இருக்கும் பல்வேறு நாடுகளுக்கு இடையே அமைதியும் நல்லிணக்கமும் ஏற்படட்டும் என்று நாம் பிரார்த்தனை செய்வோம்," என்று கூறி அவர் தனது உரையை முடித்தார். "ஜின்னா இந்துக்கள் அல்லது இந்தியாவுக்கு எதிரானவர் அல்ல" முகமது அலி ஜின்னா 1948 செப்டம்பர் 11 ஆம் தேதி காலமானார். 1948 செப்டம்பர் 13 ஆம் தேதி, 'தி இந்து 'நாளிதழின் தலையங்கம் 'மிஸ்டர் ஜின்னா' என்ற தலைப்பில் வெளியானது. காந்திஜிக்குப் பிறகு பிரிக்கப்படாத இந்தியாவின் மிக சக்திவாய்ந்த தலைவர் என்று ஜின்னா நினைவுகூரப்பட்டார். "ஜின்னாவுக்கு மனக்கசப்பு இருந்தபோதிலும், இரு நாடுகளுக்கும் (பாகிஸ்தான், இந்தியா) இடையே ஒரு வலுவான நட்பு சாத்தியம் மட்டுமல்ல, அவசியமானது என்பதை அவர் ஒருபோதும் மறக்கவில்லை" என்று தலையங்கம் கூறியது. ஜின்னா 'இந்துக்கள் அல்லது இந்தியாவுக்கு' எதிரானவர் அல்ல என்று குல்கர்னி கூறுகிறார். "1948 ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் உள்ள டாக்காவிற்கு பயணம் மேற்கொண்ட ஜின்னா, இந்து சமூகத்திடம் 'பதற்றப்பட வேண்டாம், பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டாம், ஏனெனில் பாகிஸ்தான் ஒரு ஜனநாயக நாடாக இருக்கும். இந்துக்களும் முஸ்லிம்களைப் போல சமமான உரிமைகளைப் பெறுவார்கள்' என்று உறுதியளித்தார்," என்று சுட்டிக்காட்டுகிறார். இந்திய அரசியலில் தமிழ்நாடு தனித்து நிற்பது ஏன்? மாநிலத்தின் போராட்ட வரலாறு இந்து தேசத்தை உருவாக்குவதில் பின்னணியில் செயல்படும் இந்து அமைப்புக்களின் பங்கு "தேநீர், பிரியாணி, எல்லை கடந்த அன்பு" - பாகிஸ்தான் தோழி குறித்து இந்திய பெண் நெகிழ்ச்சி இருநாடுகளுக்கு இடையே விசித்திரமான நெருக்கம் சுதந்திரத்திற்குப் பிறகு ஆரம்பக் காலங்களில் தலைவர்களின் உறவுகள் மட்டுமன்றி, கடந்த காலத்தில் ஒன்றிணைந்து பணிபுரிந்திருப்பதால் அதிகார வர்க்க உறவுகளும் நன்றாகவே இருந்தது என்று பல்லவி ராகவனின் ஆய்வு தெரிவிக்கிறது. பல்லவி ராகவன் தனது 'Animosity at Bay: An Alternative History of the India-Pakistan Relations, 1947-1952' என்ற புத்தகத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் ஐந்து வருட உறவுகளை ஆய்வு செய்தார். பிரிவினையால் எழுந்த பிரச்சனைகள் அதாவது சிறுபான்மையினரின் உரிமைகள் அல்லது மக்கள் இடம்பெயர்ந்த பிறகு விட்டுச் சென்ற சொத்துக்கள் போன்றவற்றுக்குத் தீர்வு காண, இரு நாடுகளுக்கும் இடையே மிகவும் விசித்திரமான நெருக்கம் மற்றும் நம்பமுடியாத தீவிர முயற்சிகள் காணப்பட்டன என்று புத்தகம் கூறுகிறது. தெற்காசியாவில் இத்தகைய புரிதல் ஆச்சரியத்தை அளித்தது. பட மூலாதாரம்,KEYSTONE/HULTON ARCHIVE படக்குறிப்பு, மவுண்ட்பேட்டன் பிரபு மற்றும் அவரது மனைவியுடன் முகமது அலி ஜின்னா "பகை நீங்கவில்லை ஆனால் சம்பிரதாயப் போக்கு வந்துவிட்டது" இருப்பினும் அது வெறும் 'சடங்கு' மட்டுமே என்று வரலாற்றாசிரியர் மெராஜ் ஹசன் கூறுகிறார். "ஆரம்பத்தில் [காஷ்மீர் தொடர்பாக] ஒரு போர் நடந்தது. பாகிஸ்தான் விரைவில் இந்தியாவுக்குத் திரும்பும் என்று இந்தியத் தலைவர்கள் கூறினர். போர் முடிந்ததும், நேரு-லியாகத் ஒப்பந்தம் இதற்கு வழி வகுத்தது." இது வெறும் சம்பிரதாயம் என்றும் அது இன்னும் தொடர்கிறது என்றும் மெராஜ் ஹசன் கருதுகிறார். "லியாகத்துக்கும் நேருவுக்கும் இடையிலான ஒரு சந்திப்பில் சண்டை ஏற்படும் நிலை உருவானது. மனக் கசப்பு நீங்கவில்லை, ஆனால் சம்பிரதாயம் வந்துவிட்டது." பிரிவினையை நிறுத்தியிருக்க முடியாது என்கிறார் சுதேந்திர குல்கர்னி. "பாகிஸ்தான் ஒரு தனி மற்றும் சுதந்திர நாடு, அது தொடரும். இந்தியாவில் வாழும் மக்கள் இந்த உண்மையை ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் ஒற்றுமையாகவும் நிலையானதாகவும் ஜனநாயகமாகவும் செழிப்பாகவும் இருக்க வேண்டும் என்று மனதார விரும்ப வேண்டும்." "வரலாற்றில் இருந்து சரியான பாடங்களைக் கற்றுக்கொண்டு, காந்தி, ஜின்னாவின் கனவுகளைப் பின்பற்றி நல்ல அண்டை வீட்டாரைப் போல வாழத் தொடங்க வேண்டும்," என்று கூறுகிறார் குல்கர்னி. https://www.bbc.com/tamil/india-62508486
  9. அபூர்வ வழக்கு: ரயில்வேயுடன் 20 ரூபாய்க்காக 22 ஆண்டு சட்டப் போராட்டம் நடத்தியவருக்கு கிடைத்தது என்ன தெரியுமா? செரிலன் மொல்லன் பிபிசி நியூஸ், மும்பை 9 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சதுர்வேதி, இந்த வழக்கு தொடர்பான 120 நீதிமன்ற விசாரணைகளில் பங்கெடுத்துள்ளார் ரயில் டிக்கெட்டுக்கு 20 ரூபாய் அதிகமாக வசூலித்ததற்காக 22 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவருக்கு என்ன கிடைத்தது தெரியுமா? 1999ஆம் ஆண்டில், துங்கநாத் சதுர்வேதி என்ற வழக்கறிஞர் வாங்கிய இரண்டு டிக்கெட்டுகளுக்கு 20 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தில் உள்ள மதுரா கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. கடந்த வாரம் ஒரு நுகர்வோர் நீதிமன்றம் சதுர்வேதிக்கு ஆதரவாக அளித்துள்ள தீர்ப்பில் வட்டியுடன் தொகையைத் திருப்பித் தருமாறு ரயில்வே துறையிடம் கூறியது. பிபிசியிடம் பேசிய 66 வயதான சதுர்வேதி, "இந்த வழக்கு தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட வழக்கு விசாரணைகளில் நான் பங்கெடுத்தேன். ஆனால், இந்த வழக்கினால் நான் இழந்த ஆற்றல் மற்றும் நேரத்திற்கு விலை வைக்க முடியாது," என்றார். இந்தியாவிலுள்ள நுகர்வோர் நீதிமன்றங்கள், குறிப்பாக சேவைகள் தொடர்பான குறைகளைக் கையாளுகின்றன. ஆனால், அவை அதீத வழக்குகளின் சுமையோடு இருப்பதாக அறியப்படுகிறது. சில நேரங்களில் எளிமையான வழக்குகள் கூட தீர்க்கப்படுவதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம். உத்தர பிரதேசத்தில் வசிக்கும் சதுர்வேதி, மதுராவிலிருந்து மொராதாபாத்துக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது, டிக்கெட் முன்பதிவு செய்யும் கிளெர்க் ஒருவர், அவர் வாங்கிய இரண்டு டிக்கெட்டுகளுக்கு அதிகக் கட்டணம் வசூலித்தார். டிக்கெட்டுகள் ஒவ்வொன்றும் 35 ரூபாய். ஆனால், சதுர்வேதி 100 ரூபாய் கொடுத்தபோது, 70 ரூபாய்க்குப் பதிலாக அவரிடம் 90 ரூபாய் கட்டணம் வசூலித்துக்கொண்டு, 10 ரூபாயை மட்டும் கிளெர்க் திருப்பிக் கொடுத்துள்ளார். "தேநீர், பிரியாணி, எல்லை கடந்த அன்பு" - பாகிஸ்தான் தோழி குறித்து இந்திய பெண் நெகிழ்ச்சி ஆசையைத் தூண்டி ஏமாற்றும் நிறுவனங்களைக் கண்டுபிடிப்பது எப்படி? கோவை நிதி மோசடி கூறும் பாடம் சதுரங்கக் காய்களில் ராஜாவின் தலையில் சிலுவைக் குறி இருப்பது ஏன்? அவர் தன்னிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக கிளெர்க்கிடம் கூறினார். ஆனால், சதுர்வேதி அந்த நேரத்தில் பணம் திரும்பக் கிடைக்கவில்லை. எனவே, அவர் வடகிழக்கில் உள்ள கோரக்பூர் ரயில்வே மீதும் முன்பதிவு செய்துகொடுத்த கிளெர்க் மீதும் மதுராவிலுள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடிவு செய்தார். இந்தியாவில் நீதித்துறையின் மெதுவான செயல்பாடு காரணமாக இந்த வழக்கில் தனக்குப் பல ஆண்டுகள் பிடித்ததாக அவர் கூறுகிறார். "ரயில்வேக்கு எதிரான புகார்கள் ரயில்வே தீர்ப்பாயத்தில் தெரிவிக்கப்பட வேண்டும். நுகர்வோர் நீதிமன்றத்தில் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்ய ரயில்வே முயன்றது," என்று சதுர்வேதி கூறினார். ரயில்வே உரிமை கோரல் தீர்ப்பாயம் என்பது இந்தியாவில் ரயில் பயணம் தொடர்பான கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய அமைக்கப்பட்ட நீதித்துறை சார்ந்த ஓர் அமைப்பு. "ஆனால், இந்த விஷயத்தை நுகர்வோர் நீதிமன்றத்தில் விசாரிக்கலாம் என்பதை நிரூபிக்க 2021ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பயன்படுத்தினோம்," என்று சதுர்வேதி கூறினார். சில நேரங்களில், நீதிபதிகள் விடுமுறை அல்லது விடுப்பில் இருப்பதால் தாமதாகும், என்றும் அவர் கூறினார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, ரயில்வே துறை அவருக்கு 15,000 ரூபாய் அபராதத் தொகையாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 1999 முதல் 2022 வரை அவருக்கு ஆண்டுக்கு 12% வட்டியில் 20 ரூபாயைத் திருப்பித் தருமாறு ரயில்வேக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. குறிப்பிட்ட 30 நாட்களுக்குள் தொகையைச் செலுத்தாவிட்டால், வட்டி விகிதம் 15% ஆகத் திருத்தப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES சதுர்வேதி தனக்குக் கிடைத்த இழப்பீடு அற்பமானது என்றும் இந்த வழக்கு தனக்கு ஏற்பட்ட மன வேதனையை அது ஈடு செய்யாது என்றும் கூறினார். அவருடைய குடும்பத்தினர், இது நேரத்தை வீணடிப்பதாகக் கூறி, அவரை வழக்கைத் தொடரவிடாமல் பலமுறை தடுக்க முயன்றனர். "பணம் முக்கியமல்ல. இது எப்போதும் நீதிக்கான ஊழலுக்கு எதிரான போராட்டமாக மட்டுமே இருந்தது. ஆகவே, எனக்கு அது மதிப்புக்குரியது," என்று அவர் கூறினார். "மேலும், நான் ஒரு வழக்கறிஞராக இருப்பதால், ஒரு வழக்கறிஞரிடம் பணம் செலுத்தவோ அல்லது நீதிமன்றத்திற்குச் செல்வதற்கான செலவை நான் ஏற்கவோ வேண்டியதில்லை. அது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்." ஒரு நபரின் உத்தியோகபூர்வ பதவி எதுவாக இருந்தாலும், "அதுகுறித்து மக்கள் அவர்களிடம் கேள்வி கேட்கத் தயாராக இருந்தால், அவர்களால் தவறுகளில் இருந்து தப்பிக்க முடியாது," என்று அவர் நம்புகிறார். "சண்டை கடினமாகத் தோன்றினாலும், விட்டுக் கொடுக்கத் தேவையில்லை," என்று மற்றவர்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்க அவருடைய வழக்கு உதவுமென்று தான் நம்புவதாகக் கூறுகிறார். https://www.bbc.com/tamil/india-62508480
  10. கலைச்செல்வி: 'லித்தியம் பேட்டரிகளுடன் 25 ஆண்டுகள்' - சி.எஸ்.ஐ.ஆர். தலைவரான விஞ்ஞானியின் உத்வேகப் பயணம் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் சிஎஸ்ஐஆர் என்றழைக்கப்படும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி கலைச்செல்வி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் 4500 விஞ்ஞானிகள் பணியாற்றும் ஆராய்ச்சி நிலையங்களுக்கு இவர் தலைமை வகிப்பார் என்பதும் இந்த மையத்திற்கு தலைமை தாங்கும் முதல் பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள கலைச்செல்வியுடன் பிபிசி தமிழ் பேசியது. கேள்வி: நீங்கள் செய்த முதல் ப்ராஜெக்ட் என்ன ? பதில்: மத்திய மின் வேதியியல் ஆய்வக விஞ்ஞானியாக 1997ஆம்ஆண்டு பெற்றதிலிருந்து லித்தியம் பேட்டரி சார்ந்த ஆய்வுகளில் முழுமையாக ஈடுபட்டு வருகிறேன். வாட்ஸ்அப் குழுவில் இருந்து இனி சத்தமில்லாமல் விலகலாம் - புதிய வசதிகள் என்னென்ன? மனிதர்கள் ஏன் முத்தமிடுகின்றனர்? - அறிவியல் கூறும் காரணம் லித்தியம் பேட்டரியில் தொடங்கி அதில் ஒவ்வொரு கட்டமாக வளர்ச்சியடைந்து ஒரு ஆனோட், ஒரு கேத்தோட், ஒரு எலக்ட்ரோலைட் என மூன்று பரிமாணங்களில் ஆய்வுகள் எடுத்துச் சென்று லித்தியம் பேட்டரி குறித்து முழுமையான புரிதலில் ஒரு சிறிய பகுதியை அனுபவபூர்வமாக நான் உணர்ந்திருக்கிறேன். கேள்வி: தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள் என்ற செய்தி கேட்டதும் உங்களுடைய மனநிலை எப்படி இருந்தது? பதில்: தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக என்னிடம் சொன்ன போது உண்மையிலேயே மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது. அந்த மகிழ்ச்சியையும் தாண்டி நான் உணர்ந்து விஷயம் என்னவென்றால் கடமையும், பொறுப்பும் அதிகரித்து இருக்கிறது என்பது. இது நிதர்சனமான உண்மை. பட மூலாதாரம்,KALAISELVI கேள்வி: லித்தியம் பேட்டரி பயன்படுத்தப்படும் மின்சார வாகனங்கள் அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவதால், லித்தியம் பேட்டரி பாதுகாப்பானதா? தற்போது லித்தியம் பேட்டரி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது தீ விபத்து. எந்த ஒரு தொழில்நுட்பமும் துவங்குகின்ற காலத்தில் அது குறித்து முழுமையான புரிதல் இல்லாத காரணத்தால் இது போன்ற பயம் நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அதில் லித்தியம் பேட்டரி தொழில்நுட்பமும் ஒன்று. லித்தியம் பேட்டரி குறித்த புரிதல் அனைத்து நாடுகளிலும் ஒரு மிகப்பெரிய உயரத்திற்கு சென்றுள்ள காரணத்தால் தான் நம் நாட்டில் அதற்கான தேடலும் புரிதலும் வேகமாக அதிகரித்து வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES லித்தியம் பேட்டரிகள் பயன்படுத்துவது குறித்த பயம், புரிதலும் குறுகிய காலத்தில் சரியாகிவிடும் என எனக்கு நம்பிக்கை உள்ளது. கேள்வி: இந்தியாவில் பெண் விஞ்ஞானிகளின் வளர்ச்சி எப்படி உள்ளது. பதில்: சமீப காலத்தில் பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளது. பெண்கள் அiனைத்து துறையிலும் சாதனை நிகழ்த்திக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பெண்களுக்கான தேடல் அதிகரித்துள்ளது. இதனை முழுமையாக உணர்ந்து கொண்டதால் பெண்கள் ஆராய்ச்சி துறையில் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீப காலங்களில் உயரிய பதவி வைக்கின்ற ஆண்களின் மொத்த விகிதத்தைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை விகிதம் உயர்ந்துள்ளது. இது இந்தியாவிலும் உலக அளவிலும் நடந்து வருகிறது. சிஎஸ்ஐஆர் நிறுவனம் இதில் முழு கவனம் செலுத்தி வருகிறது. முன்பை விட தற்போது பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்து காணப்படுகிறது. கேள்ளி: குழந்தைகளுக்கு ஆங்கில வழி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில் தமிழ் வழி கல்வியில் பயின்று முதன்மை இயக்குநராக பணி அமர்த்தப்பட்ட உங்கள் கருத்து என்ன? பதில்: நான் எழுபதுகளில் பள்ளியில் படிக்கும் போது தமிழ் வழிக் கல்வி மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது தமிழ், ஆங்கிலம் என இரு வழிகளிலும் குழந்தைகள் கல்வி பயிலும் வசதி உள்ளது. நம்முடைய நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்றால் 'நமக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை அளவு சரியாக பயன்படுத்தலாம் என்பதற்கான புரிதல் இருக்குமேயானால்' அது நிச்சயம் இளைய சமுதாயத்தை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு செல்லும். கேள்வி: ஒரு பெண் விஞ்ஞானி ஆக நீங்கள் எதிர்நோக்கிய பிரச்சனைகள் என்னென்ன ? பதில்: 10 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ப்ராஜக்ட் குறித்து நோடல் விஞ்ஞானியாக நான் பிரசன்டேஷன் செய்த போது என்னுடைய சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் மிகவும் வியந்து பாராட்டினார். மனிதர்கள் இறப்பது ஏன்? அதிசய கிணறு: தண்ணீர் உறிஞ்சும் குகைகள் - தோண்டத் தோண்ட விலகும் மர்மம் அப்போது அவர் சொன்ன வார்த்தை 'சரியான நபர் சரியான வேலையில் இருக்கிறார்' என்று. ஒரு பெண்ணாக இருப்பதால் எனக்கு எந்த ஒரு வாய்ப்பு மறுக்கப் பட்டதாக ஒருபோதும் நான் உணரவில்லை மாறாக ஒரு பெண் இவ்வளவு திறமையாக அவளுடைய எண்ணங்களை பிரதிபலிக்க முடிகிறது என்பதை ஆண்கள் அதிகமாக இருக்கும் சமுதாயத்தில் வியந்து பாராட்டியதை பலமுறை அனுபவித்துள்ளேன். கேள்வி: கூடுதலாக பெண் விஞ்ஞானிகளை இணைக்க திட்டம் உள்ளதா? பதில்: சிஎஸ்ஐஆர் டெல்லி உள்ளிட்ட தலைமை நிறுவனத்தில் அதிக அளவு பெண்கள் பணியாற்றி வருகிறோம். நான் தலைமை ஏற்கக்கூடிய 37 ஆராய்ச்சி நிறுவனங்களிலும் பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை நிச்சயமாக அதிகப்படுத்துவேன். கேள்வி: உங்களுடைய பொழுதுபோக்கு என்ன? தற்போது நீங்கள் வகிக்கும் பதவியில் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன? பதில்: நான் சிஎஸ்ஐஆர் விஞ்ஞானியாக பொறுப்பேற்ற காலத்திலிருந்து நான் தொலைக்காத ஒரே விஷயம் என்னுடைய புன்னகை மட்டுமே. நான் என்னுடைய பேச்சையும், குணத்தையும் இதுவரை மாற்றிக் கொண்டதில்லை. அதனால்தான் எவ்வளவு பெரிய பொறுப்புக்கு சென்றாலும் அதே அளவிற்கு மன நிம்மதியோடு மகிழ்ச்சியுடன் செயல்பட்டு வருவதாக நான் நம்புகின்றேன். என்னுடைய இலக்கு தாய்த்திரு நாட்டையும் நான் சார்ந்துள்ள இந்த சிஎஸ்ஐஆர் குழுமத்தையும் உலக அரங்கிலே பெரிய உயரத்துக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் தொட செய்ய வேண்டும் என்பதே அதை நான் நிச்சம் செய்து காட்டுவேன் என்றார். https://www.bbc.com/tamil/india-62514967
  11. பிறந்தநாள் வாழ்த்துகள் கிருபன் அண்ணை, வாழ்க வளத்துடன்.
  12. வாழ்வுநிலை vs வாழ்க்கைத்தரம் வாழ்வுநிலை, வாழ்க்கைத்தரம், இவற்றை முறையே ஆங்கிலத்தில் standard of living, quality of life என்பர். இவையிரண்டுமே கிட்டத்தட்ட ஒன்றுதான், ஆனால் வெவ்வேறானவை. சொத்து, வருமானம், அந்தஸ்து, உணவு, உடை, உறையுள் எல்லாமும் செழிக்க இருந்தால் அவருக்கான வாழ்வுநிலை மேம்பட்டதாகக் கருதலாம் ஒப்பீட்டளவில். ஒருவருக்கொருவர் ஒப்பீடுகள் நடக்கின்றன. ஏழை, பணக்காரன், நடுத்தரக்காரன் என்றெல்லாம் மதிப்பீடுகள் இடம் பெறுகின்றன. இயல்பாகவே, பணமிருப்பவருக்கு மருத்துவம், கல்வி, வாய்ப்புகள் என்பவை எளிதில் கிட்டிவிடும். ஆகவே அவரின் வாழ்வுநிலை மேம்பட்டது என்பதாகக் கருதப்படுகின்றது. பண்புகள், விழுமியம்(வேல்யூஸ்), இன்பம், உடல்நலம் முதலானவை நன்றாக இருப்பதாகக் கருதினால், அவரின் வாழ்க்கைத் தரம் சிறப்பு என்பதாகக் கொள்ளப்படும். வாழ்வுநிலை மேம்பட்டதாக இருந்தால், வாழ்க்கைத்தரமும் சிறப்பாகத்தானே அமைந்தாக வேண்டும்? உடல்நலம், இன்பம் இவற்றுக்கெல்லாம் வாழ்வுநிலைதானே அடிப்படை? ஆமாம். எனினும், வசதிகள் இருந்த மாத்திரத்திலேயே ஒருவரின் வாழ்க்கைத்தரம் அமைந்து விடாது. நீர்நிலை இருந்தால்தான் நீச்சல் அடிக்கமுடியும். ஆனால் நீர்நிலை இருப்பதாலேயே ஒருவர் நீச்சல்காரர் ஆகிவிட முடியாது. அதைப்போன்றதுதான் இவையிரண்டும். கடலளவு நீர் இருந்தால்தான் நீச்சல்காரர் ஆக முடியுமென்பதும் இல்லை. போதிய அளவுக்கான நீர்நிலை இருக்க, அவர் நீச்சல் பழகியிருக்க, அவர் நீச்சல்காரராக உருவெடுப்பார். அதே போன்றதுதான் வாழ்க்கைத்தரம் என்பதும். போதிய அளவு, தேவைப்படும் அளவுக்கான வாழ்வுநிலை அமையப் பெற்று, பண்புநலம், உடல்நலம், பயிற்சி, தன்னுமை(லிபர்ட்டி), இலக்கியம், கலை, சிந்தனையாற்றல், கேளிக்கை முதலானவையும் அமையப் பெறும் போது, அவருக்கான வாழ்க்கைத்தரம் மேம்பட்டதாக அமையும். ”The quality of life is more important than life itself. Quality of life actually begins at home - it's in your street, around your community.” -Charles Kennedy வாழ்வுநிலையெனும் வர்க்கபேதத்தில் புதையுண்டு விடாமல், வாழ்க்கைத்தரம் நோக்கிய பயணம் இன்புறுகவே! பணிவுடன் பழமைபேசி https://maniyinpakkam.blogspot.com/2022/08/vs.html
  13. தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கே. சிக்கிய 'லட்சுமிகாந்தன் கொலை' வெப் தொடராகிறது - கதை என்ன? நபில் அஹமது பிபிசி தமிழுக்காக 11 ஆகஸ்ட் 2022, 12:21 GMT புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NFAI படக்குறிப்பு, தியாகராஜ பாகவதர் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய கொலை வழக்காக கருதப்படும் 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' பிரபல ஓடிடி நிறுவனமான சோனி லிவ்- ல் வெப் தொடராக உருவாகி வருகிறது. 1940-களில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கின் பின்னணி, இது தொடராக எடுக்கப்படுவதன் காரணம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கட்டுரை அலசுகிறது. யார் இந்த லட்சுமி காந்தன்? சி.என்.லட்சுமி காந்தன், பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட அன்றைய மதராஸ் மாகாணத்தில் 1940 ஆம் ஆண்டு 'சினிமா தூது' என்ற பத்திரிக்கையை துவங்கி நடத்தி வந்தார். இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்ததால் காகித பற்றாக்குறை இருந்தது. அதனால் புதிதாக துவங்கிய பல பத்திரிக்கை நிறுவனங்களுக்கு பேப்பர் லைசென்ஸ் வழங்கப்படவில்லை. அதில் 'சினிமா தூது' பத்திரிக்கையும் அடக்கம். இருப்பினும் லட்சுமி காந்தன் பல வழிகளில் முயன்று அனுமதி பெறாமலேயே பத்திரிக்கையை வெளியிட்டு வந்தார். 'சினிமா தூது' பத்திரிக்கையில் திரைத்துறையிலிருந்த முக்கிய நட்சத்திரங்களின் அந்தரங்க வாழ்க்கையை பற்றி மிகவும் வெளிப்படையாக எழுதினார். இதனால், கோபமடைந்த திரைத்துறைச் சார்ந்த சிலர் அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்து சென்று பத்திரிகை உரிமையை முடக்கினர். 'தம்மம்' பட காட்சிகளை பௌத்தர்கள் சங்கம் எதிர்ப்பது ஏன்? "நீ ஸ்கிரிப்ட் எழுதி நான் பார்க்கவில்லையே" - ஸ்டாலின் சொன்னதை நினைவுகூரும் கிருத்திகா உதயநிதி மல்லிகா ஷெராவத் பேட்டி: "சமரசம் செய்யாததால் பட வாய்ப்புகள் குறைந்தன" இதனை அறிந்து கொண்ட லட்சுமி காந்தன், புதியதாக பத்திரிகை துவங்க பிரிட்டிஷ் அரசு தடைவிதித்து இருந்ததால், ஏற்கெனவே துவங்கி சிறு பத்திரிக்கையாக வெளிவந்துக்கொண்டு இருந்த 'இந்து நேசன்' என்ற பத்திரிக்கையை விலை கொடுத்து வாங்கி முன்பை விட மிக அதிகமாக திரைத்துறையைச் சார்ந்த பல தரப்பட்ட நபர்களை பற்றி எழுத துவங்கினார். இது அன்றைய காலக்கட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சையாக விளங்கியது. லட்சுமிகாந்தன் கொல்லப்பட்டது எப்படி? தொடர்ந்து திரைத்துறையை சார்ந்தவர்களை தாக்கி 'இந்து நேசன்' பத்திரிக்கையில் எழுதி வந்த லட்சுமிகாந்தனுக்கு எதிரிகள் பெருகினர். இதனால் 08-11-1944 அன்று லட்சுமிகாந்தன் மதராஸ் மாகாணம் புரசைவாக்கம் பகுதியில் ரிக்‌ஷாவில் சென்ற போது மர்மநபர்களால் கத்தியால் குத்தப்பட்டார். பட மூலாதாரம்,NFAI படக்குறிப்பு, என்.எஸ். கிருஷ்ணன் உயிருக்கு போராடிய லட்சுமிகாந்தனை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இதனிடையே அடுத்த நாள் 09-11-1944 அன்று உடல்நிலை கவலைக்கிடமாகி மருத்துவமனையில் லட்சுமிகாந்தன் உயிர் பிரிந்தது. அதன் பின் வழக்கு விசாரணையை தொடர்ந்த காவல்துறையினர் டிசம்பர் மாதம் 8 பேர் மீது லட்சுமி காந்தனை கொலை செய்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். அந்த 8 பேரில் நடிகர்கள் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடு உள்ளிட்டோரும் அடங்குவார்கள். கொலை மற்றும் கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவ்வழக்கு மதராஸ் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. தியாகராஜ பாகவதர் உள்ளிட்ட 8 பேருக்காக அன்றைய பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட இந்தியாவிலிருந்த மிகப்பெரிய வழக்குரைஞர்கள் வாதிட்டனர். வழக்கில் தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடு மற்றும் இன்னொருவர் மீது குற்றச்சாட்டு வலுவாக இல்லாத காரணத்தால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மீதமிருந்த தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் உட்பட அனைவருக்கும் குற்றத்தில் தொடர்பு இருப்பதாக கூறி 1945-ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்தது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 தீர்ப்பை எதிர்த்து மதராஸ் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றம் அவர்கள் வாதத்தை ஏற்க மறுத்து தண்டனையை உறுதி செய்தது. இதனால் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும் 1946-ஆம் ஆண்டு தங்கள் வழக்கை லண்டனிலுள்ள 'ப்ரிவி கவுன்ஸிலுக்கு' எடுத்துச் சென்று நடத்தினர். 1947-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 'ப்ரிவி கவுன்ஸில்' வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் என மதராஸ் உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. அதன் பின் மதராஸ் உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கை மறுவிசாரணை செய்து இருவரும் குற்றமற்றவர்கள் என 1947-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுதலை செய்தது. விடுதலை ஆன தியாகராஜ பாகவதருக்கு அதன் பின் திரைத்துறையில் மிகப்பெரிய சறுக்கல் ஏற்பட்டது. மீண்டெழ முடியாமல் அவர் திரைத்துறையைவிட்டே விலகினார். வெப் தொடராக லட்சுமி காந்தன் கொலை வழக்கு வெப் தொடராக தயாராகும் லட்சுமி காந்தன் கொலை வழக்கை இயக்குநர் சூர்ய பிரதாப் இயக்குகிறார். தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் ஒரு கொலை வழக்கால் எப்படி வீழ்ந்தார் என்பதை மையமாக வைத்து வெப் தொடரை இயக்க முடிவு செய்ததாக பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். பட மூலாதாரம்,SURYA PRATAP படக்குறிப்பு, இயக்குநர் பிரதாப் "என்னுடைய சினிமா பயணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கோச்சடையான் படத்தில் துவங்கியது. அதில் இணை இயக்குநராக பணியாற்றினேன் அதன் பின் ஈரோஸ் நிறுவனத்திற்கு 'பொன்னியின் செல்வன்' கதையை வெப் தொடராக தயாரிக்க இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்த் முயன்றார் அதை நான் இயக்குவதாக இருந்தது பல்வேறு காரணங்களுக்காக அது நடைபெறாமல் போனது அதன் பின் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த கதைக்கான தேடல்களை துவங்கிவிட்டேன் அதன் பின் பல ஓடிடி தளங்களுக்கு இக்கதையை விவரிக்கும் முயற்சியை துவங்கினேன், தற்போது இந்த வெப் தொடரின் தயாரிப்பாளர் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கார்த்திக் மூலம் சோனி லிவ் ஓடிடி தளத்திற்கும் கதையை அனுப்பினோம் மற்ற நிறுவனங்களை விட சோனி லிவ் இக்கதையில் மிகுந்த ஆர்வம் காட்டியது அதற்கு காரணமாக நான் கருதுவது அவர்கள் ஓடிடி சார்பில் வெளியிட்ட பல வெப் தொடர்களில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிட்ட தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் நீட்சியாக தான் தற்போது எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாக நம்புகிறேன்" என்றார். "நான் இந்த சம்பவத்தை பற்றி படிக்க துவங்கிய போது ஒரு வெப் தொடருக்கான மிகச்சிறந்த கதை கருவாக தோன்றியது, இவ்வழக்கு குறித்து மக்களுக்கு தெரிந்த பொதுவான விடயங்களை தாண்டி இதன் பின் மிகப்பெரிய அரசியல் உள்ளது அதுவே இத்தொடரின் மிக முக்கியமான பகுதி, தொடர் வெளியாகும் போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன் தற்போது முன் தயாரிப்பு பணிகள் முடிந்துவிட்டன நடிகர், நடிகைகள் தேர்வு நடந்துக்கொண்டு இருக்கிறது இறுதியான பின் தகவல் தெரிவிக்கிறேன்" என்று அவர் மேலும் கூறினார். இந்த வெப் தொடரை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த கார்த்தி அளித்த பேட்டியில், "இந்த வெப் தொடர் நிச்சயமாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை கதை கேட்கும் போது எனக்கு இருந்தது, தற்போது முன் தயாரிப்பு பணிகள் முடிந்தவுடன் அந்த நம்பிக்கை மேலும் வலுவடைந்துள்ளது." என்றார். பட மூலாதாரம்,KARTHIK படக்குறிப்பு, தயாரிப்பாளர் கார்த்திக் "இந்த தொடரில் எங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக இருந்த காலகட்டத்தை திரையில் கொண்டு வர வேண்டும் அதற்காக 4 பிரம்மாண்ட செட்டுகள் சென்னையில் அமைக்கும் பணி நடந்துக்கொண்டு இருக்கிறது. அது போக கல்கத்தாவில் அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம் அதே போல் மைசூரில் சில நாட்களும் இலங்கையில் சில நாட்களும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்" என்று கூறினார். இந்த வெப் தொடர் மிக அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட உள்ளதால் திறமையான ஷோ ரன்னர் தேவைப்பட்டது இயக்குநர் ஏ.எல்.விஜய் எனக்கு நல்ல நண்பர் ஏற்கனவே அவர் 'மதராஸப் பட்டிணம்' 'தலைவி' போன்ற படங்களை இயக்கியதால் அவர் ஷோ ரன்னராக இருந்தால் நன்றாக இருக்கும் என நான் நம்பினேன் சோனி லிவ் அதனை ஏற்றுக்கொண்டது ஏ.எல்.விஜய் அவர்களும் சம்மதம் தெரிவித்தார்" என்று கூறினார். தியாகராஜ பாகவதரின் பின்னணி தியாகராஜ பாகவதர் 1934 ஆம் ஆண்டு 'பவளக்கொடி' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர், இப்படம் சுமார் 100 வாரங்கள் ஓடியது. அதனை தொடர்ந்து மொத்தம் 15 திரைப்படங்கள் நடித்தார் அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 1944ஆம் ஆண்டும் 16 அக்டோபர் தீபாவளி அன்று வெளியான இவர் நடிப்பில் வெளியான 'ஹரிதாஸ்' என்ற திரைப்படம் 22 நவம்பர் 1946 வரை சுமார் 133 வாரங்கள் அதாவது 3 தீபாவளிகள் ஓடி சாதனை படைத்தது. அப்போதே இப்படம் 10 லட்சம் வசூலித்தும் சாதனை படைத்தது. Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 இவ்வளவு சாதனைக்குரிய ஒருவரின் இறுதி காலம் மிக மோசமாக அமைந்தது இன்றும் கூட தியாகராஜ பாகவதரின் சந்ததியினர் மிகவும் சிரமப்படும் சூழ்நிலையில் உள்ளனர். கடந்த 28ம் தேதி ஜூன் மாதம் 2021ஆம் ஆண்டு சென்னை தலைமை செயலகத்தில் தியாகராஜ பாகவதரின் 2-ஆவது மனைவி ராஜம்மாள் அவர்களின் மகள் அமிர்தலட்சுமி என்பவரின் மகன் சாய் ராம் என்பவர் ஒரு கோரிக்கை மனு அளித்தார், மனுவில் தான் புகைப்பட கலைஞராக இருந்ததாகவும் கொரோனா பரவல் காரணமாக வேலை எதுவும் கிடைக்கவில்லை என்பதால் வீட்டு வாடகை கூட கொடுக்க இயலாத சூழ்நிலை உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு எட்டிய உடன் தமிழக அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குறைந்த வாடகையில் வீடு ஒன்றும் 5 லட்ச ரூபாய் உதவியாகவும் அளித்து இருந்தார். இதற்கு முன்னதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி ரூ.1 லட்சம் நிதி அளித்து உதவியதாகவும் நடிகர் பார்த்திபன் சில பொருளாதர உதவிகள் செய்ததாகவும் சாய்ராம் கூறினார். நடிகர் சூர்யா தங்களின் அகரம் அறக்கட்டளையின் மூலம் குழந்தைகளின் படிப்பிற்கு உதவியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/arts-and-culture-62498952
  14. நெகிழ்ச்சிக் கதை: மகன் இறந்த பிறகு மருமகளின் மறுமணத்துக்காக புதிய மகனைத் தத்தெடுத்த பெண் 37 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சச்சின் - மித்தல் மகன் இறந்த பிறகு மொத்த குடும்பமும் சோகத்தில் முழ்கியிருந்த நிலையில், இன்னொரு மகனை தத்தெடுத்து தன் மருமகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார் மாமியர் ஒருவர். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் வசித்து வரும் கடுவா பட்டிடார் சமூகத்தை சேர்ந்த ஈஷ்வர்பாய் பிமானியின் மகன் சச்சின். 35 வயதாகும் இவர், தன் மனைவி, 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். ஒருநாள், பால் கறக்கும் மின்கருவி மூலம் இவர், தன் வீட்டு தொழுவத்தில் பால் கறந்துகொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவரது மரணம் மொத்த குடும்பத்தையும் நிலைகுலைய வைத்தது. சச்சினின் மனைவி மித்தல் இந்த சம்பவத்துக்குப் பின் பெரிதும் பாதிக்கப்பட்டார். இதன் விளைவாக, சமூக கட்டமைப்புகளுக்குட்பட்டு தன் மருமகளின் வாழ்க்கை குறித்தும் அவர், சிந்திக்க வேண்டியிருந்தது. தன் கணவரின் இழப்பு குறித்து பேசும்போது, "எங்களுக்கு 2010ல் திருமணம் நடந்தது. 12 ஆண்டுகள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழ்ந்தோம். 2012ல் தான் எங்கள் முதல் குழந்தை த்யான் பிறந்தான். நானும் சச்சினும் தினமும் கால்நடைகளுக்கு தீவனம் வைப்போம். அதே மாதிரிதான் அன்றும் வேலைகளை முடித்துவிட்டு பால்கறந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஷாக் அடித்து கீழே விழுந்தார். உடனடியாக உயிர் போய்விட்டது. அந்த சமயத்தில் என்னால எதுவுமே செய்ய முடியவில்லை" என்று உடைந்து அழுகிறார் மித்தல். மனிதர்கள் இறப்பது ஏன்? வன்கொடுமையால் பிறந்த மகன், தாய்க்கு நீதி வாங்கித் தந்த உணர்வுப் பூர்வமான கதை இனி தன் மாமியாருடனும் குழந்தைகளுடன் தன் மீத வாழ்வைக் கழிக்க முடிவு செய்தார் மருமகள் மித்தல். ஆனால், மாமியாரான ஈஷ்வர்பாய் மனதில் மித்தலுக்காக வேறொரு எண்ணம் இருந்தது. படக்குறிப்பு, மித்தல் புதிய மகனை தத்தெடுத்தல் ஒரு மகனை தத்தெடுத்து என் மருமகளுக்கு திருமணம் செய்து வைத்து என் குடும்பத்தின் நிலையை பழையபடிக்கு கொண்டுவர ஏன் நான் சிந்திக்கக் கூடாது என்று எண்ணினார் ஈஷ்வர்பாய். ஆரம்பத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்த மித்தல், பின்னர் ஒப்புக்கொண்டார். அதன்பிறகு, 35 வயதான யோகேஷ் தத்தெடுக்கப்பட தேர்வு செய்யப்பட்டார். இதுகுறித்து பிபிசியுடன் பேசிய மித்தலின் உறவினர் விஷன்ஜி பகத், "மித்தல் வாழ்க்கைக்காக நாங்கள் இரண்டு மூன்று வழிகளை யோசித்தோம் குழந்தைகளை வீட்டிலேயே வைத்துக்கொள்ள முடியுமா? இல்லாவிட்டால் அவர்களுக்கு என்ன செய்வது என்றும் கூடயோசித்தோம். கடைசியாகத்தான் இந்த முடிவுக்கு வந்தோம்" என்று தெரிவிக்கிறார். வளர்ந்தவர்கள் உளவியல் ரீதியாக தன் சொந்த பெற்றோருடன் அதிக பாசத்துடன் இருப்பர். எனவேதான், குழந்தைகளை தத்தெடுப்பது வழக்கம். ஆனால், இந்த விவகாரம் சற்று வித்யாசமானது. இப்படியொரு சம்பவம் இதுவரை கடுவா பட்டிடார் சமூகத்தில் நடந்ததே இல்லை. ஆனால், சமூகம் மற்றும் இரண்டு குடும்பங்களின் ஆதரவுடன் அனைத்தும் சுமுகமாகவே நடைபெற்றன. விவாகரத்து ஆனதை டிக்டாக்கில் வெளியிட்ட பெண்ணை சுட்டுக் கொன்ற கணவன் தாயை பாலியல் வல்லுறவு செய்தவர்களை 28 ஆண்டுகளுக்குப் பின் நீதியின் முன் நிறுத்திய மகன் புல்லட் மீதான காதல்: பிடித்ததை செய்ய வயது ஒரு தடையல்ல - நிரூபித்த பெண்கள் இந்த தத்தெடுப்பு நிகழ்ச்சிக்காக ஒட்டுமொத்த கிராமமும் திரண்டிருந்தது. காரணம், தன் குடும்பத்துடன் அனைத்து தொடர்புகளையும் அறுத்துக்கொண்டு ஒருவர் கிட்டத்தட்ட துறவறம் போவதற்கு இணையாக தயாராக வேண்டும். யோகேஷ் அதற்கு தயாரானர். மகளை திருமணத்துக்குப் பின் வழியனுப்பும் நிகழ்வு போல, தங்கள் ஊரின் மகனை வழியனுப்ப அவ்வளவு பேரும் திரண்டிருந்தனர். இறுதியில் யோகேஷின் பெற்றோர் சம்மதத்துடன் நெற்றியில் திலகமிட்டு தன் மகனாக யோகேஷை ஏற்றுக்கொண்டார் ஈஷ்வர்பாய். 35 வயதுக்கு பின் சாத்தியமா என்று நினைத்தேன் சொந்த ஊருக்கு திரும்பி வந்த பிறகு, கங்காபர் கிராமத்தில் இருந்த லக்ஷ்மிநாராயணன் கோயிலில் யோகேஷுக்கும் மித்தலுக்கும் திருமணம் நடைபெற்றது. படக்குறிப்பு, மித்தல் - யோகேஷ் "கல்யாணத்துக்கு பிறகு, நான் மித்தலோடு அங்கேயே தங்க வேண்டும் என்றார்கள். அப்படியென்றால் நான் என் குடும்பத்தை பிரிய வேண்டும். 35 வயதுக்கு பிறகு இதெல்லாம் சாத்தியமே இல்ல்லை என்றுதான் தோன்றியது. ஆனால், மித்தலையும் அவரது குடும்பத்தையும் சந்தித்த பிறகுதான், அந்த குடும்பத்துக்கு ஒரு மகன் இப்போது எவ்வளவு அவசியம் என்று உணர்ந்து கொண்டேன் " என்கிறார் மித்தலின் புதிய கணவர் யோகேஷ். குடும்பம் உடையக்கூடாது, வழக்கத்தை மீறி திருமணம் நடைபெறக் கூடாது ஆகிய காரணங்களுக்காக கடுவா சமூகத்தில் கைம்பெண் மறுமணத்துக்கு ஆதரவு உண்டு. ஆனால், இந்த விவகாரத்தில், மருமகளுக்கு மாமியாராக அல்லாமல் தாயாகவே மாறி முடிவெடுத்துள்ளார் ஈஷ்வர்பாய் பிமானி. https://www.bbc.com/tamil/india-62498755
  15. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு 'கொரோனா' காலத்தில் காய்ச்சல் இருந்தது - தென்கொரியா மீது சகோதரி கோபம் 55 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சகோதரியுடன் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் கொரோனா தொற்றுகாலத்தில், வட கொரியா அதிபரான கிம் ஜாங் உன்னுக்கு தொற்று (காய்ச்சல்) இருந்தது என்று அவரது சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். அவருக்கு கோவிட் தொற்று இருந்திருக்கலாம் என்பதற்கான முதல் ஆதாரமாக அவரது கூற்று பார்க்கப்படுகிறது. மேலும், தமது நாட்டிற்கு கொரோனா தொற்று ஏற்பட தென் கொரியாதான் காரணம் என்றும் கிம் யோ ஜாங் குற்றம் சாட்டியுள்ளார். எல்லை பகுதியில் கொரோனா தொற்று கொண்ட துண்டு பிரசுரங்களை அனுப்பியதாக அவர் கூறினார். இதனை தென் கொரியா ஆதாரமற்றது என்று கூறி மறுத்துள்ளது. கொரோனா தொற்றை எதிர்த்து தமது நாடு வெற்றி கண்டுள்ளது என்று கிம் ஜாங் உன்அறிவித்ததையடுத்து, அவரது சகோதரி இதுகுறித்து பேசினார். கடந்த மே மாதம், முதல் கொரோனா தொற்று ஏற்பட்டதாக அந்நாடு அறிவித்தது. அன்று முதல், மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு, சில உயிரிழப்புகளும் ஏற்பட்டன. ஆனால், அங்கு நடந்த மிக குறைவான உயிரிழப்புகளின் எண்ணிக்கையை கவனிக்கும்போது, இது தொடர்பான தரவு குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. வட கொரியா எந்த நேரமும் அணு குண்டு சோதனை நடத்தலாம் - அமெரிக்க அதிகாரி தகவல் அதிகாரிகளின் விசாரணைக்கு பதிலளிக்க மறுத்த டிரம்ப்: சொத்து விவரங்களை தவறாக குறிப்பிட்டாரா? சீனாவில் பரவும் புதிய வைரஸால் 35 பேர் பாதிப்பு - உலகத்துக்கு ஆபத்தா? அந்நாட்டில் கிம் யோ ஜாங் மிகவும் செல்வாக்குமிக்கவர். அவரது உரையில், எல்லையைத் தாண்டி, தென் கொரியா துண்டு பிரசுரங்களை அனுப்புவதன் மூலம் கோவிட் வடக்கில் பரவியதற்காக குற்றம் சாட்டினார். தென் கொரியாவில் உள்ள ஆர்வலர்கள் பல தசாப்தங்களாக பலூன்களைப் பயன்படுத்தி துண்டுப் பிரசுரங்களை, வட கொரியாவுக்கு எதிரான பிரசாரங்களை காற்றில் மிதக்கச் செய்தனர். இந்த நடைமுறை கடந்த ஆண்டு தடைசெய்யப்பட்டது. இத்தகைய துண்டுப் பிரசுரங்களை அனுப்புவதை "மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்செயல்," என்றும், தொற்று உள்ள பொருள்களை அனுப்புவதன் மூலம் தொற்றை இங்கு பரப்ப செய்யும் ஆபத்து உள்ளது" என்று அவர் கூறியதாக அந்நாட்டு அரசுசெய்தி முகமையான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. வட கொரியா இதற்கு ஒரு வலுவான பதிலடி கொடுப்பது பற்றி சிந்தித்து வருவதாகவும் அவர் எச்சரித்தார். மேலும் தமது உரையில் தமது சகோதரரின் உடல்நிலை குறித்து கிம் பேசினார். "அவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்த தொற்றுநோய்க்கு எதிரான போர் முடியும்வரை, அவர் மக்களைப் பார்த்துகொள்ள வேண்டிய நிலையில் இருந்ததால் ஒரு நிமிடம் கூட ஒய்வு எடுக்கவில்லை," என்றார். அங்கு கொரோனா தொற்றை கண்டறிய சோதனை கருவிகள் இல்லாததால், கொரோனா தொற்று என்பதை விட 'காய்ச்சல்' என்றே வட கொரியா குறிப்பிடுகிறது. பட மூலாதாரம்,KCNA VIA REUTERS படக்குறிப்பு, கோப்புப் படம் இந்த தொற்றுக்கு எதிராக நாடு மிகப்பெரிய வெற்றி அடைந்தது என்று அறிவித்த அதிபர், வட கொரியர்களின் மன உறுதியையும் பாராட்டினார் என்று கே.சி.என்.ஏ தெரிவித்தது. வடகொரியாவில் கட்டுப்பாடுகளை தளர்த்தி அதிபர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தொற்று காரணமாக வெறும் 74 உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளதை 'அதிசயம்' என்று பாராட்டியுள்ளார். ஜூலை 29ஆம் தேதி முதல் வட கொரியாவில் சந்தேகத்திற்கிடமான புதிய கொரோனா பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனால், அந்நாட்டில் சோதனை வசதி மிகவும் குறைவாக உள்ளது என்று சர்வதேச வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 4.8 மில்லியன் பேருக்கு தொற்று பாதிப்புகள் இருப்பதாக கே.சி.என்.ஏ கூறுகிறது. ஆனால் 74 இறப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இறப்பு விகிதம் 0.002% ஆக உள்ளது. இந்த விகிதம் உலகில் மிகவும் குறைந்த விகிதம். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த புள்ளிவிவரங்களை நம்புவது கடினம் என்று பல வல்லுநர்கள் கருதுகின்றனர்.. வெகுசில தீவிர சிகிச்சை பிரிவுகள், கோவிட் சிகிச்சை மருந்துகள், தடுப்பூசிகள் இல்லாத உலகின் மிக மோசமான சுகாதார அமைப்புகளில் ஒன்றாக இந்த நாடு உள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள். தொற்றுநோய்களின் போது வட கொரியா நாடு எந்த தடுப்பூசி திட்டத்தையும் அறிமுகப்படுத்தவில்லை. அதற்கு பதிலாக ஊரடங்கு, உள்நாட்டு சிகிச்சைகள் ஆகிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனை 'சாதகமான கொரிய பாணியில் உள்ள சமூகவுடைமை அமைப்பு' என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் குறிப்பிடுகிறார். https://www.bbc.com/tamil/global-62503290
  16. உவங்கட திட்டத்தை கொண்டே எங்க போடுவது! வன்னியில் பிறமாவட்டங்களில் இருந்து பணியாற்றும் அரச ஊழியர்களுக்கு நிலத்துடன் கூடிய நிரந்தர வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டது. 5-7 ஆண்டுகளின் பின் இடமாற்றம் பெற்று அவர்கள் தமது சொந்த மாவட்டங்களுக்கு திரும்பிவிட்டனர். இந்த திட்டத்தால் என்ன பயன்?! தரமான அரசு ஊழியர் குடியிருப்புகளை(staff quarters) கட்டி வழங்கி இருந்தால் அடுத்து வரும் ஊழியரும் பயன்படுத்தி இருக்கலாம்.
  17. தனது சொத்து விவரங்களை தவறாக குறிப்பிட்டாரா டிரம்ப்? - அதிகாரிகள் விசாரணைக்கு பதிலளிக்க மறுப்பு பெர்ன்ட் டெபுஸ்மன் ஜுனியர் வாஷிங்டனிலிருந்து 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், வரி சலுகை பெறுவதற்காக தனது சொத்து விவரங்களை தவறாக குறிப்பிட்டதாக எழுந்த புகாரின் பெயரில் நடந்த விசாரணையில் பதிலளிக்க மறுத்துவிட்டார். இதனை அவர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணைக்கு டொனால்ட் டிரம்ப் புதன்கிழமையன்று நியூயார்க் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்திற்கு வந்தார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூயார்க் மாகாண அரசு நடத்தும் விசாரணையின் ஒரு பகுதியாக தனது குடும்பத்தின் வணிக நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். முன்னதாக, நியூயார்க் மாகாண அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் புதன்கிழமையன்று நடந்த விசாரணையைத் தடுக்கும் நோக்கில் டிரம்ப் வழக்குத் தொடர்ந்துள்ளார். சாதகமான கடன்களையும், வரிச்சலுகைகளையும் பெறுவதற்காக டிரம்ப் தனது சொத்து மதிப்பு குறித்து தவறான தகவல்களை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள டிரம்ப், இந்த விசாரணை, அரசியல் உள் நோக்கத்துடன் நடக்கிறது என்றார். மன்ஹாட்டன் நகரிலுள்ள அவர் அலுவலகத்தில் விசாரணை நடந்த ஒரு மணிநேரத்திற்கு பிறகு, இது தொடர்பாக டிரம்ப் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸையும், இந்த விசாரணையையும் விமர்சித்துள்ளார். "இத்தகைய நாடகத்துக்கு பல வருட உழைப்பும், கோடிக்கணக்கான டாலர்களும் செலவழிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த பயனும் இல்லை. அமெரிக்காவின் அரசியலமைப்பின் கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்படும் உரிமைகள் மற்றும் சலுகைகளின் கீழ் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க நான் மறுத்துவிட்டேன்," என்று டிரம்ப் கூறியுள்ளார். இந்த விசாரணை புதன்கிழமையன்று நடந்தது என்றும், 'தன் மீதான குற்றச்சாட்டிற்கு எதிரான ஐந்தாவது சட்ட திருத்தத்தை பயன்படுத்தினார்," என்றும் லெட்டிடியா ஜேம்ஸ் அலுவலகம் தெரிவித்தது. "இந்த விவகாரத்தை எங்கு கொண்டு சென்றாலும், அட்டர்னி ஜெனரல் ஜேம்ஸ் அவர்கள் உண்மைகயையும் சட்டத்தையும் பின்பற்றுவார். எங்கள் விசாரணை தொடரும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "அமெரிக்க உளவுத்துறை புளோரிடாவில் அமைத்துள்ள டிரம்ப்புக்கு சொந்தமான எஸ்டேட் மார்-அ-லாகோவில் (Mar-a-Lago) முன் அறிவிப்பு இல்லாமல் சோதனை நடத்திய சில நாட்களுக்குப் பிறகு, அவரது வணிக நடவடிக்கைகள் குறித்து இந்த தனி விசாரணை நடந்தது. அதில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 மேலும், அட்டர்னி ஜெனரலின் விசாரணை ஒரு பொதுத்துறை விசாரணையாக இருந்தாலும், மன்ஹாட்டன் மாகாண அட்டர்னி அலுவலகத்தால் மற்றொரு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இந்த விசாரணை குற்றவியல் குற்றச்சாட்டுகளாக மாறலாம். டிரம்ப் புதன்கிழமையன்று கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்ததற்கு காரணம், அவரது பதில்கள் குற்றவியல் விசாரணையில் அவருக்கு எதிராக பயன் படுத்தப்படலாம் என்று சட்ட ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஐந்தாவது சட்ட திருத்தத்தை பயன்படுத்தினார். இந்த சட்ட திருத்தம் கிரிமினல் வழக்கில் தங்களுக்கு எதிராக சாட்சியாக தாமே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்கிறது. டொனால்ட் ட்ரம்ப் வீட்டில் ரகசிய ஆவணங்களைத் தேடி லாக்கரை உடைத்த எஃப்.பி.ஐ. அமெரிக்காவுடன் உறவை முறிக்கும் சீனா - காலநிலை மாற்றம், போதைமருந்து ஒழிப்பில் சிக்கல் தைவானை தனிமைப்படுத்த சீனாவை அனுமதிக்க மாட்டோம்: நான்சி பெலோசி இந்த விசாரணை சுமார் நான்கு மணி நேரம் நீடித்தது என்றும், இதில் நீண்ட இடைவேளைகளும் இருந்தது எனவும் டிரம்ப் வழக்கறிஞர் ரொனால்ட் பிஷெட்டி அமெரிக்க ஊடகத்திடம் தெரிவித்தார். அட்டர்னி ஜெனரலையும் அவரது விசாரணையையும் கண்டித்தும், டிரம்ப் தனது ஐந்தாவது திருத்த உரிமைகளை வலியுறுத்தியும் அவரது அறிக்கையைப் படிக்கத் தொடங்கினார். இந்த விசாரணை முடிவடைந்தவுடன், டிரம்ப் அல்லது அவரது நிறுவனத்திற்கு எதிராக நிதி அபராதம் கோரி வழக்குத் தொடர நியூ யார்க் மாகாண அட்டர்னி ஜெனரல் முடிவு செய்யலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூயார்க் மாகாண அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் முன்னதாக, டிரம்ப் மற்றும் அவரது இரு குழந்தைகளான இவான்கா மற்றும் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் ஆகியோரின் வாக்குமூலத்தை ஜேம்ஸ் ஆறு மாதங்களுக்கும் மேலாக கோரி வந்தார். இதற்கு அவரது குடும்பத்தினர் நியூயார்க் நீதிமன்ற அமைப்பு மூலம் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னாள் அதிபரையும், அவரது குழந்தைகளையும் விசாரிப்பதைத் தடுக்கும் முயற்சியில் ஜேம்ஸ் மீது வழக்குத் தொடர டிரம்ப் வழக்கறிஞர்கள் முயன்றனர். ஆனால் பிப்ரவரி மாதம், நியூயார்க் உச்ச நீதிமன்ற நீதிபதி மூவரும் வாக்குமூலம் அளிக்கவேண்டும் என்று தீர்ப்பளித்தார். இவாங்கா மற்றும் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் ஆகியோர் இந்த மாத தொடக்கத்தில் விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணையில்,'நிதி மோசடிக்கான சாத்தியமான ஆதாரங்கள்' கிடைத்துள்ளதாகவும், முன்னாள் அதிபரையும், அவரது இரண்டு குழந்தைகளையும் கேள்வி கேட்க, அட்டர்னி ஜெனரலுக்கு உரிமை வழங்குவதாக நீதிபதி கூறினார். நீதிபதியின் முடிவை ஜேம்ஸ் தனக்கான வெற்றி என்று பாராட்டினார். இந்த விசாரணை 2019ஆம் ஆண்டு முதன்முறையாக தொடங்கியது. டிரம்பும் அவரது நிறுவனமும் சாதகமான கடன்களையும், வரிச் சலுகைகளையும் பெறுவதற்காக சொத்து மதிப்பை தவறாகக் குறிப்பிட்டுள்ளனர் என்பதை இந்த விசாரணை நிரூபிக்க முயற்சி செய்கிறது. இந்த மோசடி டிரம்ப் பதவியேற்பதற்கு முன்பே நடந்ததாகக் கூறப்படுகிறது. https://www.bbc.com/tamil/global-62501313
  18. மனிதர்கள் இறப்பது ஏன்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சாகாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் மனித குல வரலாற்றில் புதியது அல்ல. ஆனால், அதை நோக்கிய ஆய்வுகளில் காலந்தோறும் புதிய புதிய வெளிச்சங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில், சாகாமல் வாழ்வதற்கு உடலில் என்ன இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடையை வழங்கியிருக்கிறது ஹைட்ரா என்னும் நீர்வாழ் உயிரி. கடலிலும் ஆறுகளிலும் உலவும் ஹைட்ரா வகை உயிரினங்களை இதுவரை நீங்கள் கவனிக்காமல் விட்டிருக்கலாம். பவளப்பாறை, கடல்தாமரை, ஜெல்லிமீன் ஆகியவற்றின் நன்னீர் வடிவமாகிய ஹைட்ராக்களில் பார்த்து ரசிக்க பெரிதாக ஒன்றுமில்லைதான். ஆனால், இந்த உயிரியின் வியக்க வைக்கும் பண்பு ஒன்று உயிரியலாளர்களை இந்தப் பக்கம் திரும்ப வைத்துள்ளது. அதுதான் மீட்டுருவாக்கம். இதனை எத்தனை துண்டுகளாக வெட்டினாலும், மீண்டும் முழு உடல் வளர்ந்து ஒவ்வொரு துண்டும் ஒரு புதிய உயிரியாக வாழத் தொடங்கிவிடும். அப்படியானால், இறக்காமல் வாழ்வதற்கான சாத்தியம் என்பது இயற்கையிலேயே இருக்கிறதா என்று உயிரியலாளர்களை எண்ண வைத்திருக்கிறது இந்த பண்பு. எனில் மரணம் தவிர்க்க முடிந்ததுதானா? ஏன் இந்த உயிரி மட்டும் மரணிப்பதில்லை? சீனாவில் பரவும் புதிய வைரஸால் 35 பேர் பாதிப்பு - உலகத்துக்கு ஆபத்தா? 65 வயதை கடந்தவர்கள் பாலுறவை அதிகமாக விரும்புகிறார்களா? தூக்கமின்றி தவிக்கிறீர்களா? - இந்த 6 வழிகளைப் பின்பற்றுங்கள் (இந்தக் கட்டுரையில் இயற்கையான தேர்வு முறை என்று அடிக்கடி சொல்லப்படும். உடலின் செல்கள், ஆற்றல் ஆகியவை அடங்கிய வளத்தை, தானாகவே உடல் ஆரோக்கியத்துக்காக உடலே எடுத்துக் கொள்ளும் முறைதான் இயற்கை தேர்வு முறை என்பதை நினைவில் கொள்ளுங்கள். சரி கட்டுரைக்குள் போகலாம்) வயது மூப்பு என்பது இனப்பெருக்கத்துக்கும் செல் பராமரிப்புக்கும் இடையிலான ஒரு சமாதான வர்த்தகம் என்று 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் சொல்லப்பட்டது. ஒவ்வொரு உயிரியின் உடலிலும் உள்ள வளங்களை (செல்கள்) அவை, ஆரோக்கியமாக வைத்திருக்க பயன்படுத்துகின்றன. குழந்தைப்பருவம் மற்றும் பதின்பருவத்தின் போது, உடல் தசைகளை வலுவாக வைத்திருக்க இந்த வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், பாலியல் முதிர்ச்சி வந்ததும் முன்னுரிமை இனப்பெருக்கத்துக்கு போய்விடுகிறது. ஏனெனில், பெரும்பாலான உயிரிகளில் குறைந்தளவே வளங்கள் உள்ளன. அவை இனப்பெருக்கத்துக்காக பயன்படுத்தப்படுவதால், உடலின் ஆரோக்கியத்துக்கு பயன்படுத்தப்படுவது குறையும். ஆனால், உயிர்கள் ஏன் இறக்கின்றன என்பதில் தற்போதைய புரிதல் கவனிக்கத்தக்கது. பாலியல் முதிர்ச்சி வந்ததும், இயற்கையாகவே வளங்களை பயன்படுத்தும் உடலின் பண்பு தளர்வடைந்து, வயதாகத் தொடங்குவது இறப்புக்கு வழிவகுக்கிறது என்கிறார் பிரிட்டன் கிழக்கு ஏஞ்சலியா பல்கலைக்கழக உயிரியல் மற்றும் உயிரியக்கவியல் பேராசியர் அலெக்சி மெக்லகோவ். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹைட்ரா நம் வாழ்நாளில் நமது மரபணுக்கள் ஏராளமான திரிபுகளைச் சேர்த்துக் கொள்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை தீங்கு விளைவிப்பவையாகவோ அல்லது ஏதும் செய்யாதவையாகவோ இருக்கலாம். வெகு சில மட்டுமே பயனுள்ளவை. பாலியல் முதிர்ச்சிக்கு முன்பாக, "இனப்பெருக்கத்துக்கான திறனை குறைக்கும் அல்லது இனப்பெருக்கத்துக்கு முன்பாக அந்த உயிரியை கொல்லும் எந்த ஒரு மரபணு திரிபும் உடலால் தேர்ந்தெடுக்கப்படும்." ஆனால், பாலியல் முதிர்ச்சியை ஒரு உயிரினம் அடைந்த பிறகு, தன் மரபணுக்களை அடுத்த தலைமுறைக்கு கடத்த முடியும். இதன்பிறகு, இயற்கையாக தேர்வு செய்யப்படும் முறை பலவீனமடைகிறது. உதாரணத்துக்கு, முட்டையிடும் சால்மன் மீன்களை எடுத்துக் கொண்டால், அவை இளம்பருவத்துக்கும் இனப்பெருக்கத்துக்கும் நன்றாக தயாராகின்றன. கடலில் பெரும்போராட்டத்தை வென்று முட்டையிட்ட பிறகு அவற்றின் சந்ததிகளும் இதே போன்று போராடி முட்டையிட வேண்டியிருக்கும். அதன்பின்னர் அவை இறந்துவிடுகின்றன. ஒருவேளை பிழைத்திருந்தால் (வாய்ப்பு குறைவு) இன்னொரு சுற்று முட்டையிடுமானால், அவை முந்தைய சந்ததி அளவுக்கு சிறப்பானதாக இருக்காது. காரணம், ஏற்கனவே ஒரு தலைமுறைக்கு (திரிபுகளற்ற மரபணுவை) அது வழங்கிவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், எல்லா உயிரினங்களும் அப்படி இல்லை. சில உயிரினங்கள் பலமுறை இனப்பெருக்கம் செய்கின்றன. அப்போது ஒவ்வொரு முறையும் டி.என்.ஏ.வில் மாற்றம் ஏற்படுகிறது. அவை சில சமயங்களில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். சில சமயங்களில் விளைவுகளற்றும் இருக்கலாம். நம் உடலே அதை சரி செய்து கொள்ள முடியும். ஆனால், நாள் செல்ல செல்ல வயது மூப்பும் இணைந்து கொண்டு, இயற்கையாகவே செல்களை பயன்படுத்தும் முறையை வெகுவாக பலவீனப்படுத்தி விடுகிறது. வயதாவதும் இறப்பதும் இரண்டு வழிகளில் நடைபெறுகின்றன. ஒன்று இயற்கையாகவே செல்களை தேர்வு செய்வது குறைந்துவிடுவதால் உடலில் உருவாகும் எதிர்மறை திரிபுகளின் தொகுப்பு; இன்னொன்று இனப்பெருக்கத்துக்கு பெருமளவு உதவவல்ல ஆனால், நீண்ட ஆயுட்காலத்துக்கு எதிரான தேர்வு முறை. வயாகரா சாப்பிட்டால் மறதி பிரச்னை நீங்குமா? ஆய்வாளர்கள் விளக்கம் மனிதர்கள் ஏன் முத்தமிடுகின்றனர்? - அறிவியல் கூறும் காரணம் வயதாவதைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் சில உயிரினங்கள் மிகவும் வெற்றிகரமாக இருக்கின்றன. அது, "எதிர்மறை முதுமை" என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இதற்கான ஆதாரங்கள் போதிய அளவுக்கு இல்லை என்கிறார் பேராசிரியர் மெக்லகாவ். ஏதோ காரணங்களுக்காக குறைவாக இனப்பெருக்கம் செய்யும் அல்லது இளமை முதலே இனப்பெருக்கம் செய்ய முடியாத சுற்றுச்சூழல் இருந்தால், அந்த உயிர்களில் செல்களை தேர்வு செய்வதற்கான முறையில் மாற்றம் நடைபெறுகிறது என்றும் தெரிவிக்கிறார் பேராசிரியர் மெக்லகாவ். எப்படியாயினும், முதுமையடைவது என்பதில் கலவி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. லண்டன் பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த ரூத் மேஸ் மற்றும் மேகன் ஆர்னாட் ஆகியோரின் ஆய்வின்படி, தொடர்ச்சியாக கலவியில் ஈடுபடும் பெண்களுக்கு மெனோப்பாஸ் தாமதமாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்தரிக்க வாய்ப்பில்லாத சமயங்களில், ஆற்றலை, முதிர்ந்த முட்டைகளை வெளியேற்ற பயன்படுத்துவதற்கு பதில், அந்த ஆற்றலை உடலின் மற்ற பாகங்கள் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்கிறது இந்த ஆய்வு. அதாவது, ஆற்றலை பயன்படுத்திக் கொள்வதில் பரஸ்பர சமாதானம் இங்கு ஏற்படுகிறது என்பதற்கான உதாரணமாக இந்த செயல்முறை உள்ளது. ஆனால், மீதமுள்ள விலங்குலகில், அதிகமான இனப்பெருக்க திறன் கொண்டிருக்கும் உயிரினங்களுக்கு வேகமாக வயதாவதாகத் தெரிகிறது. வௌவால்கள் அதிகமான முறை இனப்பெருக்கம் செய்கின்றன ஆனால் குறைந்த காலமே வாழ்கின்றன. "இளமைக்காலத்தில் அதிகமுறை இனப்பெருக்கம் செய்யும் உயிரினங்கள் வாழ்வின் பிற்பகுதியில் சிறப்பாக இல்லை" என்கிறார் பேராசிரியர் மெக்ஹக். சில உயிரினங்களில் பாலினத்தைப் பொறுத்தும் ஆயுட்காலம் வேறுபடுகிறது. குறிப்பாக எறும்புகள், தேனீக்கள் ஆகியவற்றில் ராணி எறும்பு / ராணித் தேனீ அதிகமான இனப்பெருக்க வல்லமையும் அதிகமான ஆயுட்காலமும் கொண்டுள்ளது. இங்கு மட்டும் ஏன் கலவிக்கும் முதுமைக்குமான தொடர்பு வேலை செய்யவில்லை? காரணம், இரண்டுக்குமான வாழ்வியல் முறைகளின் வேறுபாடுதான். பெரும்பாலும் பிரச்னைகளை காவல் எறும்புகளோ/தேனீக்களோ கையாளும் சூழலில் அவை வாழ்கின்றன. அதுபோக, மூப்பு அடைவதற்கான சூத்திரங்கள் இங்கு எல்லாவற்றுக்கும் சமமாக பொருந்துவதில்லை. சரி, மனிதனின் ஆயுட்காலத்தை நிர்ணயிப்பதில் இனப்பெருக்கத்துக்கு இப்படி ஒரு முக்கியத்துவம் உண்டு என்றால், குழந்தைகள் பெறுவதை நிறுத்திய பிறகும் ஏன் மனிதர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES 'பாட்டி கருதுகோள்' சொல்வதன்படி, வயது மூத்த நம் உறவினர்கள் உயிரோடு இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில், இனப்பெருக்கம் என்பது விலைமதிப்புமிக்க கடினமான செயலாகிவிட்டது. ஒரு பாட்டி தன் பேரக்குழந்தையுடன் நேரம் செலவிடுவதன் மூலம் அந்தக் குழந்தைக்குள் இருக்கும் தன் சொந்த மரபணுவை தூண்டி விட முடியும். இயற்கையான தேர்வு முறை என்ற அளவில், இது அவசியமாகிறது. பாட்டிகள் இருக்கும் குடும்பங்களில் அதிகமான இனப்பெருக்கத்திறன் காணப்படுகிறது. பாட்டிகளின் உதவி இருப்பதால் அடுத்த குழந்தை குறித்து அந்தத் தாயால் சிந்திக்க முடிவதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் கவுன்ரிடஸ். (பிபிசி ஃபியூச்சரில் வில்லியம் பார்க் எழுதிய கட்டுரை இது) https://www.bbc.com/tamil/india-62498045
  19. உலக யானைகள் தினம்: காட்டைத் தேடி ஒரு யானையின் பயணம்: ரிவால்டோவுக்கான போராட்டம் வெற்றியடைந்தது எப்படி? க. சுபகுணம் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MUDUMALAI TIGER RESERVE TEAM ரிவால்டோ. தும்பிக்கையின் நுனி வெட்டுப்பட்ட அந்த யானை, ஒரு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இப்போது அதன் இல்லமான முதுமலை காப்புக்காட்டுக்குள் சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாடு பல்லுயிர்ச்சூழல் வாரியத்தின் தலைவராக இருக்கும் முனைவர் ஷேகர் குமார் நீரஜ், இந்தியாவில் தனக்குத் தெரிந்து, வனத்துறையால் பிடிக்கப்பட்டு முகாமில் வைக்கப்பட்ட காட்டு யானை மீண்டும் காட்டிற்குள் சுதந்திரமாக விடுவிக்கப்பட்டது இதுவே முதல்முறையாக இருக்கலாம் என்கிறார். யார் இந்த ரிவால்டோ? பிரேசில் கால்பந்தாட்ட வீரரின் பெயரைக் கொண்ட இந்த யானை எதற்காக பிடிக்கப்பட்டது? அதை மீண்டும் காட்டில் விடுவிக்க ஏன் அவ்வளவு முயற்சிகள்? அதைத் தெரிந்துகொள்ள, சில நிமிடங்களுக்கு நாமும் ரிவால்டோவோடு முதுமலை காட்டுக்குள் பயணிப்போம். 2013ஆம் ஆண்டு காட்டுப் பன்றிகளைக் கொல்வதற்காக வைக்கப்பட்ட பன்றிக்காய் வெடித்ததில், ரிவால்டோ அவனது தும்பிக்கையின் நுனியில் 30 செமீ நீளத்தை இழக்க நேரிட்டதாக உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். அதற்குப் பிறகு சுயமாக உணவுண்ண சிரமப்பட்ட அவனுக்கு வனத்துறையினரும் வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்களும் உணவளிக்கத் தொடங்கினார்கள். ரிவால்டோ காட்டிலிருந்து ஊருக்குள் வருவதால் ஏற்பட்ட அச்சம் குறித்து, அவனை விடுவிப்பது குறித்து முடிவெடுப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவில் ஒருவரான உலக காட்டுயிர் நிதியத்தின் உறுப்பினர் மோகன் ராஜ் பிபிசி தமிழிடம் பேசியபோது, "பலா, தேங்காய், தர்பூசணி, பப்பாளி போன்ற பழங்கள் உட்பட அவனுக்குப் பல்வேறு உணவுகளை ஊர் மக்கள் கொடுக்கத் தொடங்கினர். அந்தப் பகுதிகளில் இருந்த ரிசார்ட்டுகளில் இருப்பவர்களும் அவனுக்கு உணவளித்துப் பழக்கியதால், அங்கும் அடிக்கடி சென்று கொண்டிருந்தான். இப்படியாக அனைவரிடையிலும் பிரபலமாகிவிட்ட ரிவால்டோ, ஊருக்குள் எப்போது வேண்டுமானாலும் வருவான், எங்கு வேண்டுமானாலும் உலவுவான். 'ரிவால்டோ': காட்டுப் பயணத்தில் வனத்துறைக்கு தண்ணி காட்டிய காட்டு யானை யானைகளின் வழித்தடங்களை அடைப்பது யார்? அரசு என்ன செய்கிறது? "காவன்" யானைக்கு விடுதலை: மூன்றாவது நாட்டிலாவது விடியல் பிறக்குமா? இது காட்டு யானைக்கு நல்லதல்ல என்பதாலும் அவனால் ஏற்படக்கூடிய பிரச்னைகள் பற்றிய அச்சம் அதிகரித்ததாலும் அவனை முகாமுக்குக் கொண்டு சென்றார்கள்," என்று கூறுகிறார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 ஆனால் ரிவால்டோவை விடுவிப்பது குறித்த விவாதங்களின் போது, "ரிவால்டோ வாழக்கூடிய சிகூர் பள்ளத்தாக்கு காட்டுப்பகுதி யானை வழித்தடமாக அறிவிக்கப்பட்ட காட்டுப் பகுதி. இங்கிருந்தே ஒரு யானையைப் பிடிப்பதாக இருந்தால், வேறு எங்கு கொண்டு போய்விடுவது என்று காட்டுயிர் பாதுகாப்பு ஆர்வலர்கள் வாதிட்டனர். அதோடு, முகாமில் வைப்பது என்பது ஆயுள் தண்டனையைப் போன்றது. அப்படியான தண்டனையைப் பெறும் அளவுக்கு ரிவால்டோ என்ன தவறு செய்துவிட்டான் என்று கேள்வியெழுப்பினர்," என்று மோகன் ராஜ் கூறினார். 2015ஆம் ஆண்டிலேயே ரிவால்டோவை பிடிக்க வேண்டும் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. ஆனால், அப்போது அதுகுறித்துப் பெரிதாகப் பேசப்படவில்லை. பிறகு, "2020ஆம் ஆண்டில் ரிவால்டோவை பிடிக்க வேண்டும் என்று அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து, 2021 மார்ச் மாதம், ரிவால்டோவின் வழித்தடமான வாழைத்தோட்டம் செக்போஸ்டில் யானைகளை அடைத்து வைக்கும் க்ரால் என்றழைக்கப்படும் கூண்டை வைத்து, அதற்குள் பலாப்பழம், பப்பாளி போன்ற பழங்களைப் போட்டு வைத்து அவனைப் பிடித்தார்கள்," என்கிறார் ரிவால்டோவை விடுவிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடுத்த பேரா.த.முருகவேள். பட மூலாதாரம்,MUDUMALAI TIGER RESERVE TEAM படக்குறிப்பு, மீண்டும் காட்டுக்குள் ரிவால்டோ மேலும், இப்படியாக பிடிக்கப்பட்ட யானையை க்ராலில் வைத்து பழக்கப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள் என்று கூறுபவர், "அதுகுறித்து நீதிமன்றத்தில் குறிப்பிட்டபோது, யானையைப் பழக்கப்படுத்தவில்லை. அதன் தும்பிக்கையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கு சிகிச்சையளிக்கவே பிடித்துள்ளோம் என்றும் விடுவித்துவிடுவோம் என்றும் தவறான தகவலை வனத்துறை தெரிவித்தது. ஆனால், உண்மையில் அங்கு அவனை அவர்கள் பழக்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள். க்ராலில் அடைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ரிவால்டோ, க்ராலின் மேல்பகுதியைத் தூக்க முயல்வது, இரவெல்லாம் பிளிறுவது என்றபடி இருந்தான். இதுகுறித்த ஓர் அறிக்கையை நாங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, யானைக்குப் பயிற்சியளிப்பது நீதிமன்ற உத்தரவுக்குப் புறம்பானது என்று நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பினோம். அதற்கான பதிலில் மீண்டும் சிகிச்சை தான் கொடுப்பதாகக் கூறப்பட்டது," என்று கூறுகிறார். இதற்கிடையே, 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், தலைமை வனப்பாதுகாவலராக முனைவர்.ஷேகர் குமார் நீரஜ் மாற்றப்படுகிறார். தமிழ்நாடு வனத்துறையின் தலைமை வனப்பாதுகாவலராகப் பதவியேற்றவுடன் அவர் கைக்கு வந்த முதல் வழக்கு ரிவால்டோ. பட மூலாதாரம்,DR SHEKHAR K NIRAJ "மக்களுடைய பொருட்களுக்குச் சேதம் விளைவிப்பதாகவும் உயிர் பலி ஏற்படும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் கூறி அவன் க்ராலில் அடைத்து வைக்கப்பட்டிருந்தான். அதுவரை இருந்த தகவலின்படி, அவனை க்ராலில் அடைத்து வைத்து, ஒரு குழுவால் கண்காணிக்கப்பட்டான். பிறகு, தெப்பக்காடு முகாமில் அவனை இருக்க வைப்பதும் முகாம் யானையாகப் பயன்படுத்தப்படலாம் என்பதும் தான் திட்டமாக இருந்தது. அதோடு, ரிவால்டோவின் தும்பிக்கை வெட்டுப்பட்டிருந்ததும் அவனுடைய ஒரு கண்ணில் கண்புரை பாதிப்பு இருந்ததும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவனுடைய உடல்நிலை, காட்டில் வாழக்கூடிய திறனைக் குறைத்துவிட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. நான் இந்த வழக்கைப் பகுப்பாய்வு செய்தபோது, சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு காட்டு யானையை ஏன் முகாமில் வைத்திருக்க வேண்டும் என்பதை நேரடியாகச் சென்று ஆராய முடிவெடுத்தேன். ஜூலை 10ஆம் தேதியன்று ரிவால்டோவை நேரில் பார்வையிட்டேன். முதல்முறையாக அந்தக் காட்டு யானையைப் பார்த்தபோது, எனக்கு அவன் நல்ல ஆரோக்கியத்தோடு, புத்திசாலியாக, மென்மையானவனாக இருப்பதாகவே தோன்றியது," என்கிறார் முனைவர் ஷேகர் குமார் நீரஜ். ரிவால்டோவின் உடல்நிலை குறித்துப் பேசும்போது, நீதிமன்றத்தில் முன்பே குறிப்பிட்டிருந்ததைப் போல சிகிச்சைக்காக அவனைப் பிடித்ததாக முந்தைய அறிக்கையில் கூறப்பட்டது. ஆனால், நான் காட்டுயிர்களுக்கான மருத்துவர்களிடம் கலந்து பேசியபோது, அவனுக்குக் கூடுதலாக சிகிச்சையளிக்க வேண்டிய தேவை எதுவுமில்லை என்று தெரிய வந்தது என்கிறார் நீரஜ். அதுமட்டுமின்றி, சுமார் 4,500 முதல் 5,000 டன்கள் வரை எடைகொண்ட ஒரு காட்டு யானை அந்த க்ராலில் தன் உடலைத் திருப்பக்கூட முடியாமல் சிரமத்தில் நின்றிருந்ததாகக் குறிப்பிட்டவர், "அன்றிரவு பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 10 வல்லுநர்களோடு இதுகுறித்து விவாதித்தேன். அடுத்த நாளில், யானைப்பாகன்களால் உணவு கொடுக்கப்பட்ட ரிவால்டோவை மீண்டும் கண்காணித்தேன். பிறகு சென்னைக்குத் திரும்பி, அஜய் தேசாய், மோகன் ராஜ், சந்தானராமன் ஆகியோரின் அறிக்கையைப் படித்தேன். அதோடு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பல வல்லுநர்களிடம் கலந்து பேசிய பிறகு, ரிவால்டோவை காட்டில் விடுவிக்கலாம் என்றும் இதைப் பல மடங்கு எச்சரிக்கையோடு முன்னெடுக்கவும் முடிவெடுத்தேன்," என்கிறார். அரசுக்கு, ரிவால்டோவை மீண்டும் காட்டில் விடுவிக்கும் முடிவு குறித்த தனது அறிக்கையைச் சமர்பித்தார் முனைவர்.ஷேகர் குமார் நீரஜ். முடிவை எடுத்தாகிவிட்டது. ஆனால், இனி தான், இதில் மிகப்பெரிய சவாலே காத்திருந்தது. ரிவால்டோ ஆபரேஷன் எப்படி நடந்தது? ஏற்கெனவே சுமார் 75-80 நாட்களாக க்ராலில் இருந்துவிட்டான், பாகன்களால் ஓரளவுக்குப் பழக்கப்படுத்தப்பட்டிருந்தான். இதையெல்லாம் தாண்டி அவனை காட்டிற்குள் மீண்டும் விடுவித்தாலும், ஊருக்குள் வராமல் இருக்க வேண்டும், மக்களின் பொருட்களுக்குச் சேதம் விளைவிக்காமல் இருக்க வேண்டும். இந்த சவால்கள் அனைத்தையும் கடந்து இன்று ரிவால்டோ வெற்றிகரமாக காட்டில் சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறான். காட்டுயிர் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த அந்த ஆபரேஷன் எப்படி நடந்தது? ரிவாரிவால்டோவை விடுவிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் காட்டில், அவனுக்கு மிகவும் பிடித்த தாவர வகைகள் அதிகமாகக் காணப்பட வேண்டும். க்ரால் இருக்குமிடத்தில் இருந்து தொலைவில் இருக்க வேண்டும். தண்ணீர் இருப்பு, அவன் தன்னைக் குளிர்வித்துக் கொள்வதற்கு ஏற்ற நீர்நிலைகள் ஆகியவை இருக்க வேண்டும். அவனை விடுவிக்கும் காடு, அவனுடைய இருக்கும் வாழைத்தோட்டம் பகுதியைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதியிலிருந்து துண்டாக்கப்படாத தொடர்ச்சியுள்ள நிலப்பகுதியாக இருக்க வேண்டும். அருகில் மனிதக் குடியிருப்புகள் இருக்கக்கூடாது. ரிவால்டோவை விடுவிக்கும் பகுதியில் வேறு ஆண் யானைகள் இருந்துவிட்டால், அது இரண்டுக்குமான வாழ்விட மோதலுக்கு வழிவகுக்கலாம், அதையும் கவனிக்க வேண்டும். இந்தக் காரணிகளைக் கருத்தில் கொண்டு ஆராய்ந்து இறுதியில், வாழைத்தோட்டத்திலுள்ள க்ராலில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவிலிருந்த சிக்காலா என்ற காட்டுப்பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது. பட மூலாதாரம்,MUDUMALAI TIGER RESERVE TEAM இதற்கிடையே, மனிதர்கள் வழங்கும் உணவைச் சாப்பிட்டுப் பழகியிருந்த ரிவால்டோவை அந்தப் பழக்கத்திலிருந்து மீண்டும் இயற்கையான காட்டு உணவுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். அதற்காக, சீரான அளவில் சிறிது சிறிதாக, 90% மனிதர்கள் வழங்கும் உணவு மற்றும் 10% இயற்கை உணவு என்ற விகிதத்தில் இருந்த அவனுடைய உணவுமுறையிலிருந்து, 10% மனிதர்கள் வழங்கும் உணவு மற்றும் 90% இயற்கை உணவு என்ற அளவிலான உணவுமுறைக்குப் பழக்கப்படுத்தப்பட்டான். அவனுடைய ரத்தம், சிறுநீர், டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு, தைராய்டு, நோய்த்தொற்றுகள் போன்றவற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. செயற்கைக்கோள் கண்காணிப்பு வசதி கொண்ட ரேடியோ காலர், வயர்லெஸ் தொடர்புச் சாதனங்கள் ஆகியவை ரிவால்டோவுக்காக தயாராகின. ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று அதிகாலை 3 மணியளவில் ரிவால்டோவை விடுவிக்கும் பணி தொடங்கியது. 25 முதல் 30 பேர் வரையிலான காட்டுயிர் வல்லுநர்கள், காட்டுயிர் மருத்துவர்கள் அடங்கிய குழு மற்றும் கூடுதலாகச் சுமார் 100 வனத்துறை பணியாளர்கள் அனைவரும் சேர்ந்து ரிவால்டோவை அவனுடைய இல்லத்திற்கு அனுப்பும் பணியைத் தொடங்கினார்கள். ஆனால், ஒரு தடங்கல். யானையை ஏற்றிச் செல்லும் லாரியில் ஏறுவதற்கு அவன் மறுத்துவிட்டான். திரும்பி வந்த ரிவால்டோ சுமார் நான்கு மணிநேரப் போராட்டத்தில், மிகக் குறைந்த அளவில் ஜைலஸீன்(300mg) என்ற மயக்க மருந்து கொடுத்த பிறகு, மெல்ல மெல்ல ரிவால்டோ லாரிக்குள் ஏறினான். ரிவால்டோவின் காட்டை நோக்கிய பயணம் அதிகாலை 6:30 மணியளவில் தொடங்கியது. 25 கி.மீட்டருக்கு மிகாமல் மிதமான வேகத்தில் தனக்கான விடியலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தான். அவனை விடுவிக்க வேண்டிய காட்டுப் பகுதியை அடையும்போது மணி 9 இருக்கும். அங்கு ஒன்றரை மனிநேர முயற்சிக்குப் பிறகு, லாரியிலிருந்து இறங்கி, சிறிது நேரம் நின்றுவிட்டு, மெல்ல நடைபோட்டு காட்டுக்குள் சென்றான். Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 ரிவால்டோவை சிறிது தூரம் இடைவெளி விட்டு, டிரோன் கேமரா பின் தொடர்ந்தது. அதற்கும் பின்னால், களத்தின் முன்னணியிலிருந்த முனைவர் ஷேகர் குமார் நீரஜ் உட்பட மூன்று பேர் கொண்ட குழுவும் அவர்களுக்குப் பின்னால் 15 பேர் கொண்ட மற்றொரு குழுவும் பின்தொடர்ந்தனர். காட்டுக்குள் செல்லச் செல்ல கண் பார்வையிலிருந்தும் டிரோன் கேமராவிடமிருந்தும் ரிவால்டோ மறைந்தான். இப்போது, அவன் கழுத்தில் மாட்டியிருந்த ரேடியோ காலரின் உதவியோடு, செயற்கைக்கோள் மூலம் அவன் பயணிக்கும் பாதையைக் கவனிக்கத் தொடங்கினார்கள். ஆனால், நீரஜ் உட்பட அந்தக் குழுவிலிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியளித்த ஒரு விஷயம் அன்று மாலை நடந்தது. ரிவால்டோ, அவனுடைய வலசைப் பாதையைப் பின்பற்றி மீண்டும் தெப்பக்காடு நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தான். சிக்காலாவிலிருந்து மசினகுடி, தெப்பக்காடு என்று வந்துகொண்டிருந்தவன், அடுத்த நாள் காலை சுமார் 9 மணியளவில் வாழைத்தோட்டம் காட்டுப்பகுதிக்கே திரும்பிவிட்டான். எங்கிருந்து 40 கிமீ தொலைவு கடந்து விடுவிக்கப்பட்டானோ, அதே இடத்திற்கு அடுத்த 24 மணிநேரத்திற்குள் திரும்பி வந்துவிட்டான் ரிவால்டோ. உடனடியாக, அதிகாரிகள் ஊர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். கிராமத்தைச் சுற்றி வனத்துறையினர் கண்காணிப்பு தொடங்கியது. மூன்று கும்கிகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. ஊர் மக்களிடையே அவனுக்கு உணவு கொடுப்பதைப் போன்ற நடவடிக்கைகளைச் செய்ய வேண்டாமென்று வலியுறுத்தப்பட்டது. காட்டுக்குள்ளிருந்து ஊருக்குள் வருவதற்கு இருந்த அனைத்து வழித்தடங்களும் வனத்துறையால் மறிக்கப்பட்டன. மரபு முறையில் பயன்படுத்தப்படும் மிளகாய் வேலிகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், ரிவால்டோ ஊருக்குள் வரவில்லை. மசினகுடி பகுதியிலுள்ள காட்டுப் பகுதிக்குள்ளாக உலவிக் கொண்டிருந்தான். அவன் மீதான வனத்துறையின் கண்காணிப்பு தொடர்ந்தது. "அடுத்த 15 நாட்களில் அவன் மேலும் இரண்டு ஆண் யானைகளோடு நட்பு பாராட்டி, மகிழ்ச்சியாக உலவிக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். அவன் முகாமில் இருந்தபோதும் கூட வேறு இரண்டு ஆண் காட்டு யானைகள், வந்து ரிவால்டோவை சந்தித்துவிட்டுச் செல்லும். இப்போது காட்டுக்குள்ளும் புதிய நண்பர்களோடு ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் அவன் இருப்பதைப் பார்க்க முடிந்தது. முத்தமிட்ட ரிவால்டோ ரிவால்டோ தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டான். செப்டம்பர், அக்டோபர் என்று அமைதியான நாட்கள் தொடர்ந்தன. சத்தியமங்கலம், முதுமலை, பந்திப்பூர் என்று ரிவால்டோவின் மகிழ்ச்சியான பயணங்களும் தொடர்ந்தன," என்கிறார் நீரஜ். இதற்கிடையே, ரிவால்டோ மீண்டும் வாழைத்தோட்டம் பகுதிக்கு வந்துவிட்டதைக் குறிப்பிட்டு உயர்நீதிமன்றத்தில் ரிவால்டோவை மீண்டும் காட்டுக்குள் செல்ல வற்புறுத்தக் கூடாது என்றும் அவனை எம்.ஆர் பாளையம் முகாமில் இருக்கும் 6 பெண் யானைகளோடு கொண்டு போய் வைக்க வேண்டும் என்றும் கோரி முரளிதரன் என்பவரால் ஒரு வழக்கு தொடரப்படுகிறது. ஆனால், அவை எதைப் பற்றியும் கவலைப்படாமல் ரிவால்டோ தனது வாழ்க்கைப் பாதையில் சுதந்திரமாகப் பயணித்துக் கொண்டிருந்தான். "ஒவ்வொரு யானைக்கும் யானை மந்தைக்கும் அற்றுக்கான வாழ்விடப் பகுதிகள் மற்றும் வலசைப் பாதைகள் இருக்கும். வடகிழக்குப் பருவமழையின்போது மழை பெய்யும் பகுதியில் புதிதாக வளரும் தாவரங்களைச் சாப்பிடப் பயணிக்கும். மீண்டும் அந்தப் பருவம் முடிந்தும் தனது பயணத்தை யானைகள் மீண்டும் தொடங்கும். இதில், மரபணுப்பன்மை பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக யானை மந்தையிலிருந்து 12 வயது ஆனதும் விரட்டப்படும் ஆண் யானைகள் தனியாக உலவுவதால், ஓப்பீட்டளவில் அவற்றுக்கான இந்தப் பயணப் பரப்பு குறைவாக இருக்கும். ஆகவே, வாழைத்தோட்டத்தில் இருக்கும் ரிவால்டோ, ஆண்டு முழுக்க அங்கேயே தான் இருப்பான். ஓராண்டில் மதநீர் வடியக்கூடிய மூன்று மாதங்களுக்கு மட்டும், இனப்பெருக்கத்திற்காக பந்திப்பூர் வரை செல்கிறான். அங்கிருந்து வயநாடு சென்று பிறகு மீண்டும் முதுமலைக்கு வந்துவிடுவான். இந்தக் காலகட்டத்தில் மட்டும் மந்தைகளோடு சேர்ந்து, இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது வழக்கம். பட மூலாதாரம்,MUDUMALAI TIGER RESERVE TEAM இப்போது அவனை விடுவித்த பிறகு, வழக்கமாகச் செல்வதைப் போல் இந்த முறை பந்திப்பூர், வயநாடு என்று தனது பயணத்தைத் தொடங்கினான்," என்கிறார் பேரா.த.முருகவேள். மேலும், "ரிவால்டோ தனது இயற்கையான, இயல்பான வாழ்க்கையை வாழத் தொடங்கிவிட்டான் என்பதற்கு இதுவே சான்று. இதைத் தேவையின்றி, பிரச்னை என்பதன் அடிப்படையில் பிடித்து, முகாமில் அடைத்து வைத்து, பழக்கப்படுத்தப் பார்த்தது தவறு. இதில் நீதிமன்றமும் சரியான அதிகாரிகளும் தலையிட்டதால், அவனுடைய சுதந்திரம் அவனுக்குக் கிடைத்தது," என்கிறார். இது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் முரளிதரன் என்பவர் தொடுத்த வழக்கு ஜூலை 1ஆம் தேதியன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி," பலரும் எப்படி தங்களுடைய உடலில் குறைபாடுகள் இருந்தாலும் அதைக் கடந்து இயல்பாக வாழ்கிறார்களோ, அதேபோல அந்த யானையும் அதன் உடலிலுள்ள குறைபாட்டோடு தான் வாழ்ந்தாக வேண்டும். ஆனால், அதன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு தான் மீண்டும் காட்டில் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுவிக்கப்பட்ட ஓராண்டில் குறிப்பிட்ட யானை உணவருந்தவோ சுவாசிக்கவோ சிரமப்படுவதாகக் கூறுவதற்கு மனுதாரர் கூறுவதைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை," என்று குறிப்பிட்டு மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. Twitter பதிவை கடந்து செல்ல, 3 Twitter பதிவின் முடிவு, 3 ரிவால்டோ காட்டில் விடுவிக்கப்பட்டது குறித்துப் பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ, "யானை சுதந்திரமாகக் காட்டில் வாழும்போது, யானைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். உதாரணமாக, ரிவால்டோ ஆண் யானை. அவன் மூலமாக இனப்பெருக்கம் நடக்கும்போது, அது யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். முகாமில் அடைத்து வைத்து ஒரு காட்டுயிரின் தன்னம்பிக்கையை உடைக்கும்போது, நாம் இயற்கையின் முக்கியமான வளத்தை இழக்கிறோம். ஒவ்வொரு யானையும் மிக மிக முக்கியம். ஆகவே அவற்றை சிறை போன்ற சூழலில் வைப்பதை விடவும் காட்டில் வாழ விடுவதே சரி. அதோடு, காட்டுயிர் பாதுகாப்பைப் பொறுத்தவரை, அதில் நிலைத்தன்மையோடு செயல்படுவது முக்கியம். ஒரு யானையைப் பிடித்து முகாமில் வைக்கும்போது, அதற்கு லட்சக்கணக்கில் செலவாகும். ரிவால்டோ ஆபரேஷனை போல் நன்கு திட்டமிட்டு காட்டில் விடும்போது, அதைக் கண்காணிக்க, உடல்நிலை கோளாறு எனில் சிகிச்சையளிக்க மட்டுமே செலவாகும்," என்று கூறினார். Twitter பதிவை கடந்து செல்ல, 4 Twitter பதிவின் முடிவு, 4 ரிவால்டோ சிக்காலா காட்டில் விடுவிக்கப்பட்ட தருணத்தைப் பற்றிப் பேசிய முனைவர் ஷேகர் குமார் நீரஜ், "அவன் லாரியிலிருந்து வெளியே இறங்குவதற்குச் சுமார் ஒன்றரை மணிநேரம் ஆனது. ஆரம்பத்தில் வெளியேறத் தயங்கினான்." "ஆனால், அவன் துணிந்து லாரியிலிருந்து இறங்கி காட்டு நிலத்தில் அடியெடுத்து வைத்தவுடன், தனது தும்பிக்கையால் மண்ணைக் கிளறி தனது உடலின் மீது வாரியிரைத்துக் கொண்டு, காட்டுக்குள் நடக்கத் தொடங்கினான். இது காட்டு யானைகளுக்கே உரிய தனித்துவமான பழக்கம். பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் இப்படிச் செய்யாது. அந்த நிமிடமே காட்டில் வாழும் தனது உள்ளுணர்வை அவன் இழக்கவில்லை என்பதை உணர்ந்தோம்," என்று கூறினார். காட்டு யானை அதன் தும்பிக்கையால் நிலத்திலிருந்து மண்ணை எடுத்து தன் மீது இரைத்துக் கொள்வது, தனது தாய்நிலத்திற்கு அது கொடுக்கும் முத்தத்தைப் போன்றது. ரிவால்டோ கொடுத்த அந்த முத்தம் மூலமாக, காட்டை அடைவதற்கான அந்த நெடும்பயணத்தில் அவன் தனது இலக்கை அடைந்துவிட்டதை உணர்த்தியுள்ளான். https://www.bbc.com/tamil/india-62495707
  20. சுவாமிமலை சோதனையில் ஆயிரம் ஆண்டு பழமையான சிலைகள் கைப்பற்றப்பட்டது எப்படி? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 24 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,IDOL WING தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு நடத்திய சோதனையில் 1,000 ஆண்டுகள் பழமையான ஐந்து சிலைகள் உட்பட 8 சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சிலைகள் கிடைத்தது எப்படி? ஏற்கனவே சில சிலை கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள மாசிலாமணி என்பவர் கோடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் சட்டவிரோதமாக பல பழங்காலச் சிலைகளை வைத்திருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. ஆனால், ஆகஸ்ட் எட்டாம் தேதி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அங்கே சோதனை நடத்தியபோது சிலைகள் ஏதும் கிடைக்கவில்லை. அதற்குள் அந்த நபர் அந்தச் சிலைகளை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமி மலைக்கு மாற்றிவிட்டதாகத் தெரியவந்தது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அங்கு சோதனை நடத்துவதற்கு வியூகம் வகுத்தனர். அதன்படி, கும்பகோணத்தைச் சேர்ந்த அணி ஒன்று உருவாக்கப்பட்டு, ஆகஸ்ட் 9ஆம் தேதி மதியமே சுவாமிமலையில் உள்ள மாசிலாமணியின் வீட்டில் சோதனை நடத்தியது. ராமானுஜர் சிலை: இந்தியாவின் '2வது உயரமான' சிலையின் சிறப்பு என்ன? பட்டேல் முதல் ராமானுஜர் வரை பெரிய சிலைகள் சீனாவில் செய்யப்படுவது ஏன்? இந்தியாவில் முடியாதா? இந்தத் தேடலில் முதலில் ஒரு நடராஜர் சிலை கிடைத்தது. பிறகு தேடலைத் தீவிரப்படுத்தியபோது, மேலும் 7 சிலைகள் கிடைத்தன. இந்த எட்டு சிலைகளும் சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய்க்கு விலைபோகக்கூடியவை என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவிக்கிறது. இதில் 113 செ.மீ. உயரமுள்ள போகசக்தியின் சிலையும் 68 செ.மீ. உயரமுள்ள ஆண்டாளின் சிலையும் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சுமார் 200 கிலோ எடையைக் கொண்டது. 79 செ.மீ. உயரமுள்ள நிற்கும் புத்தரின் சிலையும் 27 செ.மீ. உயரமுள்ள புத்தரின் சிலையும் இதேபோல 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர, 800 கிலோ எடையுடைய சிவகாமி அம்மன் சிலையும் இங்கிருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும்,விஷ்ணு, நடராஜர், ரமண மகரிஷி ஆகிய சிலைகளும் இங்கிருந்து கண்டெடுக்கப்பட்டன. பட மூலாதாரம்,IDOL WING இந்தத் தேடுதல் வேட்டையின்போது, சம்பந்தப்பட்ட சிலைகளின் பழமை குறித்து இந்தியத் தொல்லியல் துறை வழங்கிய சான்றிதழ்களும் கண்டெடுக்கப்பட்டதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்திருக்கிறது. போக சக்தி சிலைக்கு 2017லும் விஷ்ணு மற்றும் புத்தர் சிலைகளுக்கு 2011லும் இந்தச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்தச் சிலை தங்களுக்குச் சொந்தமானது என்பதைக் காட்டுவதற்கு, அங்கிருந்தவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. இதையடுத்து இந்தச் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. பட மூலாதாரம்,IDOL WING இந்தச் சிலைகள் எந்தக் கோவிலில் இருந்து திருடப்பட்டவை என்பது குறித்து தெரியாததால், அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சிலைகள் எங்கிருந்து வந்தவை என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் மாசிலாமணியிடமும் இல்லை. போதிய ஆவணங்கள் இன்றி இந்தச் சிலைகளை ஏன் வைத்திருந்தார் என்பதற்கான விளக்கமும் மாசிலாமணியிடம் இல்லை. இந்தச் சிலைகளை எப்படி வாங்கினார் என்பது குறித்தும் அவரால் விளக்கமளிக்க முடியவில்லை. இதைடுத்து மாசிலாமணி மீது கும்பகோணம் காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவுசெய்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளும் துவங்கியுள்ளன. கைப்பற்றப்பட்ட எட்டு சிலைகளில் ஐந்து சிலைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை எனத் தெரியவருவதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூறுகிறது. இந்த சோதனை நடந்து, சிலைகள் கைப்பற்றப்பட்டவுடன், சுவாமி மலையில் உள்ள 50க்கும் மேற்பட்ட சிற்பிகள் ஒன்றுகூடி சிற்பி மாசிலாமணி வீட்டில் இருந்து சிலைகளை எடுத்துச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர். மேலும் காவல்துறையினருக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர். இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டதால், கும்பகோணத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களும் சுவாமிமலைக்கு வரவழைக்கப்பட்டனர். பட மூலாதாரம்,IDOL WING மாசிலாமணி வீட்டில் இருந்து நடராசர் ,யோகசக்தி அம்மன், ஆண்டாள் , நின்ற நிலையில் புத்தர் சிலை, அமர்ந்த நிலையில் புத்தர் சிலை, ரமணர் ,விஷ்ணு, ஆகிய ஏழு சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு காவல் துறையினர் கைப்பற்றி சென்னைக்கு எடுத்துச் சென்றனர். 7 அடி உயரமுள்ள சிவகாமி அம்மன் சிலையை எடுத்துச் செல்ல முடியாதால் அந்த சிலை அவரது வீட்டிலேயே வைக்கப்பட்டது. இது குறித்துப் பேசிய மாசிலாமணியன் மகன் கௌரிசங்கர், காவல்துறையினர் கைப்பற்றி சென்ற ஏழு சிலைகளும் தான் தயாரித்த சிலைகள் என்றும், இவை தொன்மையான சிலைகள் அல்ல என்றும் தெரிவித்தார். ஆனால், இந்த மாசிலாமணி மீது ஏற்கனவே சிலை கடத்தல் தொடர்பாக வழக்குகள் (சிவகாஞ்சி வழக்கு) உள்ளதாக காவல்துறை கூறுகிறது. https://www.bbc.com/tamil/india-62497881
  21. லாங்யா வைரஸ்: சீனாவில் பரவும் புதிய வைரஸால் உலகத்துக்கு ஆபத்தா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சீனாவில் புதிய வைரஸ் ஒன்றால் 35 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இது விலங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். லாங்யா ஹெனிபாவைரஸ் (LayV) என்ற புதிய வகை வைரஸ் ஷாண்டோங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களில் பலருக்கு காய்ச்சல், சோர்வு மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தன. விலங்குகளிடமிருந்து அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. LayV வைரஸ் ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. ஆராய்ச்சியாளர்கள் இந்த வைரஸை முக்கியமாக எலி வகையைச் சேர்ந்த மூஞ்சூறுகளில் கண்டறிந்தனர். சீனா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எழுதிய கடிதத்தில் இந்த கண்டுபிடிப்பு குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 'நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்' சஞ்சிகையிலும் இது வெளியிடப்பட்டது. 'பிஎம்ஐ சரியாக இருந்தாலும் இடுப்புப் பகுதியில் அதிக கொழுப்பு இருந்தால் ஆபத்து' – அறிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள் கார்போஹைட்ரேட் உங்கள் உணவில் எந்த அளவு இருக்க வேண்டும்? சிங்கப்பூரில் உள்ள டியூக்-என்யுஎஸ் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான வாங் லின்ஃபா, "இது வரை கண்டறியப்பட்டிருக்கும் வைரஸ்கள் ஆபத்தானவை அல்ல. அதனால் பீதி அடையத் தேவையில்லை" என்று சீனாவின் அரசு இதழான குளோபல் டைம்ஸிடம் கூறியுள்ளார். இருப்பினும், இயற்கையில் இருக்கும் பல வைரஸ்கள் மனிதர்களைத் தாக்கத் தொடங்கிய பிறகு கணிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாக வாங் கூறியுள்ளார். சோதனை செய்யப்பட்ட 27% மூஞ்சூறுகளில் LayV வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவை இந்த வைரஸிற்கான "இயற்கை சேமிப்புக் கிடங்குகளாக" இருக்கலாம் என்று கூறுகிறார்கள். மூஞ்சூறுகள் தவிர, சுமார் 5% நாய்களிலும் மற்றும் 2% ஆடுகளிலும் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. புதிய வைரஸ் குறித்து உன்னிப்பாகக் கவனித்து வருவதாக தைவானின் நோய் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES லாங்யா என்பது ஒரு வகை ஹெனிபா வைரஸ் ஆகும். இவை விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் தாவக்கூடிய ஜூனோட்டிக் வைரஸ் வகையாகும். ஜூனோடிக் வைரஸ்கள் மிகவும் பொதுவாகக் காணப்படுபவை. ஆனால் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு அதிகமாகக் கவனிக்கப்படுகின்றன.. புதிதாகப் பரவும் நான்கு தொற்று நோய்களில் மூன்று தொற்றுநோய்கள் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுகின்றன என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுகிறது. காலநிலை மாற்றம் மற்றும் விலங்குகளின் அதீதப் பயன்பாடு ஆகியவற்றால் உலகம் இதுபோன்ற நோய்களைக் காண வேண்டியிருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை முன்பு எச்சரித்தது. சில ஜூனோடிக் வைரஸ்கள் மனிதர்களுக்கு ஆபத்தானவை. ஆசியாவில் விலங்குகள் மற்றும் மனிதர்களிடையே அவ்வப்போது பரவும் நிபா வைரஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் குதிரைகளில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஹெண்ட்ரா வைரஸ் ஆகியவை இதில் அடங்கும். https://www.bbc.com/tamil/global-62494642
  22. கோவை நிதி மோசடி: ஆசையைத் தூண்டி மோசடியில் ஈடுபடும் நிதி நிறுவனங்களைக் கண்டுபிடிப்பது எப்படி? பணம் திரும்பக் கிடைக்குமா? மோகன் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கோவையில் செயல்பட்டு வந்த ஐந்து தனியார் நிதி நிறுவனங்களால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்ய முன்வரலாம் என கோவை மாநகர காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இவை எந்தெந்த நிறுவனங்கள்? இவை எப்படி மோசடியில் ஈடுபட்டன? இதுபோன்ற மோசடியில் சிக்காமல் தப்புவது எப்படி? கோவையில் இராமநாதபுரத்தில் இயங்கி வந்த கிரீன் கிரெஸ்ட், சாய்பாபா காலனியில் இயங்கி வந்த டிரீம்ஸ் மேக்கர் குளோபல் லிமிடெட், காந்திபுரத்தில் செயல்பட்டு வந்த ஏரோ டிரேடிங், சரவணம்பட்டியில் செயல்பட்டு வந்த வின் வெல்த், குறிச்சியில் செயல்பட்டு வந்த கொங்குநாடு அன்னை சிட்ஸ் ஆகிய ஐந்து நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பணத்தை பெற்று ஏமாற்றியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட அனைவருமே புகார் அளிக்கவில்லை. அதனால் தான் அடுத்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளோம் எனப் பொருளாதார குற்றப் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய பொருளாதார குற்றிப்பிரிவு ஆய்வாளர் காந்திமதி, "இந்த குறிப்பிட்ட நிறுவனங்கள் மீதான வழக்கு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது. இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடிகள் அனைத்தும் 2019, 2020-ம் ஆண்டுகளில் நிகழ்ந்தவை. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெற வேண்டும் என்பதால் தான் மீண்டும் பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளோம்." என்றார். நிறுவனங்கள் மோசடி செய்தது எப்படி? "இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒரே செயல்முறையை தான் கையாள்கின்றன. ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ.20,000 வட்டி கிடைக்கும். ஒவ்வொரு திட்டம் முடிவுறுகின்றபோது முதலீடு செய்த அசல் தொகை முழுமையாக திருப்பிக் கொடுக்கப்படும் என்கின்றனர். இந்த நிறுவனங்கள் செயல்படுத்தும் திட்டங்களுக்கு முதலீட்டு தொகைக்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களை வைத்துக் கொள்கின்றனர். இதை நம்பி தான் மக்கள் முதலீடு செய்கின்றனர். ஒரு லட்சத்தில் தொடங்கி பல லட்சங்கள் வரை பாதிக்கப்பட்டவர்கள் முதலீடு செய்துள்ளனர். பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் பதிவாகியுள்ளது. செலவுகளைச் சமாளிப்பது எப்படி?: ஆனந்த் ஸ்ரீநிவாஸன் தரும் ஆலோசனை என்ன? உங்கள் பணத்தை எப்படி, எதில் முதலீடு செய்வது? - ஆனந்த் ஸ்ரீநிவாசன் தரும் டிப்ஸ் தனியார் நிதி நிறுவனங்கள் முதலீடு செய்பவர்களிடம் நம்பகத்தன்மையை பெற வேண்டும் என்பதற்காக முதல் 2, 3 மாதங்களுக்கு வட்டியை முறையாக கொடுத்துவிடுகின்றனர். அதன் பின்னர் பல்வேறு காரணங்களைக் கூறி வட்டி வழங்குவதை நிறுத்திவிடுகின்றனர். நிதி மோசடி புகாருக்கு உள்ளாகின்ற பெரும்பாலான நிறுவனங்களுக்கு இதே வழிமுறையை தான் கையாள்கின்றன. இந்த குறிப்பிட்ட நிறுவனங்கள் மீது தற்போது வரை சுமார் 60 புகார்கள் பதிவாகியுள்ளன. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கிறோம். மக்களும் ஏமாந்துவிட்டோம் என தயக்கம் இல்லாமல் புகார்களைப் பதிவு செய்ய வேண்டும்" என்றார் காந்திமதி. "மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்" இது போன்ற மோசடிகள் நடக்காமல் தடுப்பதற்கு மக்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் பாலகுமாரன் பிபிசி தமிழிடம் கூறினார். உங்கள் பணத்தை எந்தெந்த வழிகளில் சேமிக்கலாம் - ஆனந்த் ஸ்ரீநிவாஸன் ஆலோசனை "முதலீடு, நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் ஒரு சில நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டவை, சில நிறுவனங்கள் பதிவு செய்யப்படாதவை. மக்கள் தான் முதலீடு செய்வதற்கு முன்பாக நிறுவனங்களின் நம்பகத்தன்மையை ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும். ஒரே மாதிரியான புகார்கள் தான் பெரும்பாலான நிதி மோசடி நிறுவனங்கள் மீது வருகின்றன. மக்களின் அறியாமையை, ஆசையை தான் இந்த நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன." என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES "குறிப்பிட்ட ஐந்து நிறுவனங்கால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க அழைப்புவிடுத்துள்ளோம். குற்றம் நிகழ்ந்த பிறகு வருத்தப்படுவதைவிட குற்றம் நிகழ்வதற்கு முன்பாகவே மக்கள் தங்களின் பணத்தை விழிப்புடன் முதலீடு செய்ய வேண்டும். காவல்துறை சார்பில் வாரம்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகிறோம், விழிப்புணர்வு தொடர்பான விளம்பரங்களை வெளியிட்டு வருகிறோம். அதையும் மீறி தான் நிதி மோசடிகள் அரங்கேறுகின்றன. மக்கள் தான் கவனமுடன் இருக்க வேண்டும்" என்று அவர் மேலும் தெரிவித்தார். "25% மேல் லாபம் சாத்தியமில்லை" முதலீடு துறையில் அனுபவம் பெற்ற நிதி ஆலோசகர் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி பிபிசி தமிழிடம் பேசுகையில், `சதுரங்க வேட்டை படத்தில் வரும் வசனத்தைப் போல தான் ஒருவரை ஏமாற்ற வேண்டுமென்றால் அவரின் ஆசையைத் தூண்ட வேண்டும். அதை அடிப்படையாக வைத்து தான் இந்த மோசடிகள் அரங்கேறுகின்றன. குறுகிய காலத்தில் அதிக லாபம் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆசை மக்களிடம் உள்ளது. அந்த ஆசை தான் மோசடி செய்பவர்களின் முதலீடு." என்று தெரிவித்தார். சுகன்யா சம்ரிதி யோஜனா: பெண் குழந்தைகள் எதிர்காலத்திற்கான சேமிப்பு - நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் "பங்குச் சந்தை உட்பட எந்தவொரு சட்டப்பூர்வமான, அங்கீகரிக்கப்பட்ட நிதி, முதலீடு திட்டங்களின் மூலம் அதிகபட்சம் 25% வரை தான் லாபம் பார்க்க முடியும். அதற்கு மேல் லாபம் தருவதாக கூறும் எந்தவொரு திட்டமும் மோசடியானது தான்." என்று கிருஷ்ண மூர்த்தி கூறினார். "நிதி சேவை நிறுவனம் தொடங்க ரிசர்வ் வங்கி மற்றும் செபி பல்வேறு விதிகளை வைத்துள்ளது. அதன்படி அனைத்து நிறுவனங்களும் நிதி மற்றும் வைப்பு சேவைகளை தொடங்க முடியாது. வேறு தொழில் செய்வதாக பதிவு செய்து கொண்டு தான் முதலீடு திட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்களுக்கு வங்கி மற்றும் நிதி சேவைகளுக்கான (banking and financial services license) உரிமம் இருக்காது. முறையான உரிமம் பெற்று செயல்படும் நிறுவனங்கள் செய்திதாள்கள், தொலைக்காட்சி எனப் பெரிய விளம்பரம் செய்வார்கள், சிறிய அளவில் இயங்க மாட்டார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் இந்த மோசடி நிறுவனங்கள் எல்லாம் உள்ளுர் அளவில் இயங்குபவை. செய்திதாள்களில் கூட விளம்பரம் செய்ய மாட்டார்கள். முதலீட்டாளர்கள் மத்தியில் வாய்மொழியாக வரும் வார்த்தை மூலமாக தான் இந்த திட்டத்தில் மக்கள் இணைகிறார்கள். முதலில் ஒரு லட்சம் முதலீடு செய்து வட்டி கிடைத்ததும் அவர்களே மீண்டும் பல லட்சங்களை முதலீடு செய்கின்றனர். தங்களுக்கு தெரிந்தவர்களையும் முதலீடு செய்ய அழைக்கின்றனர். ஒவ்வொரு ஊரிலும் இதுபோல பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்களின் இலக்கு குறிப்பிட்ட ஒரு ஊர், பகுதி தான். அதை குறிவைத்து தான் இத்தகைய மோசடி நிறுவனங்கள் செயல்படுகின்றன. படிக்காதவர்கள், நடுத்தர குடும்ப மக்கள் தான் ஏமாறுகிறார்கள் என நினைப்பதும் தவறு. படித்த நண்பர்கள் பலருமே இத்தகைய மோசடி திட்டங்களால் பாதிக்கப்பட்ட சம்பவங்களை நான் பார்த்திருக்கிறேன். பட மூலாதாரம்,GETTY IMAGES இத்தகைய மோசடி வழக்குகளில் அரசோ, காவல்துறையோ செய்யக்கூடியவை மிகவும் குறைவு தான். குற்றம் பதிவானால் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க முடியும். முதலிடத்தில் குற்றம் நடைபெறாமல் இருப்பது மக்கள் கையில் தான் உள்ளது. நிதி மோசடி செய்பவர்கள் தங்களின் வடிவத்தை காலத்திற்கேற்ப மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். மக்கள் தொழில் மூலமோ அல்லது வேலையிலோ பணத்தை சம்பாதிப்பதில் செய்யும் உழைப்பில் சிறிய பங்கை கூட அதை சரியாக முதலீடு செய்வதில் காட்டுவதில்லை. சரியான முதலீடு பற்றிய விழிப்புணர்வு இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிறது. முதலீடு செய்பவர்கள் தான் அதை கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார். https://www.bbc.com/tamil/india-62492630
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.