Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பிரான்ஸ் பிரதமராகும் முதல் திருநர்! Digital News Team பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், வலதுசாரி கட்சிகளின் அழுத்தத்தில் இருந்து தனது மீதி பதவிக்காலத்தை காத்துகொள்ள புதிய தொடக்கமாக பிரான்ஸின் மிக இளவயது பிரதமரை அறிவித்துள்ளார். பிரான்ஸ் அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபர், பிரதமரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர். பிரதமர் உள்நாட்டு கொள்கைகளுக்கும் அமைச்சரவை ஒருங்கிணைப்புக்கும் பொறுப்பாவார். முன்பு இந்தப் பதவியில் இருந்த எலிசபெத் போர்ன் திங்கள்கிழமை பதவி விலகியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரான்ஸின் முதல் திருநர் பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் கேப்ரியல், 2020 முதல் 2022 வரை அரசின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றினார். முன்பு பொதுவுடைமை கட்சியில் இருந்தவர், 2016-ல் மேக்ரான் தொடங்கிய அரசியல் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பிரான்ஸின் கெளரவமிக்க பதவியான கல்வி அமைச்சராக இருந்தபோது பாடசாலைகளில் ஹிஜாப் போன்ற நீண்ட ஆடைகள் மாணவர்களிடையே மதச்சார்பின்மையைப் பாதிப்பதாகக் கூறி தடை செய்தார். பொது சீருடை திட்டத்தையும் முன்னெடுத்தார். https://thinakkural.lk/article/287667
  2. விஜயகாந்த் நினைவிடத்திலும் வயிறார உணவு! Digital News Team விஜயகாந்த் மறைவின்போது அவருடைய உதவிகள் பற்றியெல்லாம் பலரும் நினைவுகூர்ந்து கண்ணீர் விட்டனர். ஆனாலும், அவருடைய உதவிகளிலேயே பேருதவியாக, பெரிய விஷயமாகப் பேசப்பட்டது அவருடைய உணவு உபசரிப்புதான். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக உணவு விஷயத்தில் சிறப்பிடத்தைப் பெற்றவர் விஜயகாந்த் என்பதை அவருடைய மறைவுக் கால நினைவுகள் உறுதிப்படுத்தின. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகும் உணவும் உபசரிப்பும் தொடருகிறது. எங்கோ மதுரையில் பிறந்தவர் திரையுலகில் வளர்ச்சி அடையத் தொடங்கிய காலத்திலேயே மக்களுக்கு நல உதவிகள், உணவு வழங்குதல், கல்வி உதவிகள் என்று உதவிக்கரம் நீட்டினார். 2004-இல் அவர் தேமுதிகவைத் தொடங்கி, ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் வரை உயர்ந்தார். உடல்நலம் குன்றியிருந்த விஜயகாந்த் மறைவின்போது ஜாதி, மத, அரசியல் பாகுபாடின்றி அனைவரும் நேரிலும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் தங்களின் வேதனைகளை வெளிப்படுத்தினர். இறுதி ஊர்வலத்திலும் அஞ்சலி நிகழ்வுகளிலும் மறைந்த தலைவர்கள் பலருக்கு இணையாக மக்கள் திரண்டனர். விஜயகாந்த் உடல் அவருடைய இல்லம், தேமுதிக அலுவலகம், தீவுத்திடல் என மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இறுதி ஊர்வலத்துக்குப் பிறகு, விஜயகாந்த்தின் திருமண மண்டபமாக இருந்த தேமுதிக அலுவலக வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. இப்போது நாள்தோறும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காகத் தொடர்ந்து எண்ணற்ற மக்கள் வந்து கொண்டேயிருக்கின்றனர். மக்கள் வந்து செல்லும் வகையில் தனி வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் விஜயகாந்த் சமாதியில் மலர் அலங்காரம் செய்யப்படுகிறது. நினைவிடம் அருகே தேமுதிக நிர்வாகிகள் நின்றுகொண்டு, மூட்டையில் வைக்கப்பட்ட ரோஜாக்களிலிருந்து மக்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவதற்காகப் பூக்களை அளிக்கின்றனர். வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. நினைவிடத்தில் விஜயகாந்த் என்றதுமே நினைவுக்கு வருகிற உணவும் உபசரிப்பும் தொடருகிறது. வருவோருக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான மதிய உணவு சுடச்சுடத் தடையின்றி வழங்கப்படுகிறது. குடிநீர் பாட்டில்களும் வழங்கப்படுகின்றன. மக்களும் வரிசையில் நின்று உணவு பெறுகின்றனர். வீணாக்க வேண்டாம், சாப்பிட்டுவிட்டு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அங்கிருக்கும் தேமுதிக நிர்வாகிகள் கேட்டுக்கொள்கின்றனர். தீவிர ரசிகர்கள் சிலர் முடி காணிக்கை செலுத்தி, தங்களின் அபரிமிதமான பற்றை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். இதற்காகத் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் வரிசையாக நின்று சென்று நினைவிடத்தைப் பார்வையிடுவதை ஒழுங்குபடுத்த ஊழியர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். போலிஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இருந்தாலும் இறந்தாலும் ‘கேப்டன்’ பெயர் சொல்லும் இடத்தில் தொடருகிறது உணவும் உபசரிப்பும்! https://thinakkural.lk/article/287659
  3. 100 இல் ஒருவர் – இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு விகிதம் Digital News Team கடந்த 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி 2000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், தெற்கு இஸ்ரேலில் அதிரடியாக தரை, கடல் மற்றும் வான் வழியாக நுழைந்து, தாக்குதல் நடத்தி, 1500க்கும் மேற்பட்டவர்களை மிருகத்தனமாக கொன்று, மேலும் சுமார் 250 பேர்களை கடத்தி சென்றனர். உலகையே அதிர வைத்த இச்சம்பவத்தால் பெரும் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்து, போர் தொடுத்தது. இஸ்ரேலிய இராணுவ படை (IDF) அன்றிலிருந்து ஹமாஸ் அமைப்பினர் பெரும்பான்மையாக உள்ள பாலஸ்தீன காசா பகுதியில் தொடர் தாக்குதலை நடத்த தொடங்கியது. சில பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பிடம் இருந்து இஸ்ரேல் மீட்டாலும், இன்னும் பலர் அவர்களிடம் சிக்கி உள்ளதாக இஸ்ரேல் கூறி தேடுதல் வேட்டையை தொடர்ந்து வருகிறது. போர் நிறுத்தத்திற்கு பல உலக நாடுகள் விதித்த கோரிக்கையை புறக்கணித்து, மிக தீவிரமாக இஸ்ரேலிய படையினரால் நடத்தப்படும் இப்போர், 95 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் ஏராளமான காசா மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பாலஸ்தீன ரமல்லா பகுதியில் அந்நாட்டு சுகாதார துறை, போர் நிலவரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், காசா மக்கள் தொகையில் 100 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 58,416 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது. 2.27 மில்லியன் மக்கள் வசித்து வந்த பாலஸ்தீன காசாவில், போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 22,835 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது. கடந்த மாதம் இஸ்ரேலிய இராணுவ படை, போரினால் உயிரிழந்தவர்களில் 8000 பேர் ஹமாஸ் அமைப்பினர் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/287602
  4. மனிதனின் உற்ற நண்பனை இனி கொல்லக் கூடாது – தென் கொரியாவில் புதிய சட்டம் Digital News Team நாய்களை “மனிதனின் உற்ற நண்பன்” (Man’s best friend) என அடைமொழியிட்டு கூறுவது வழக்கம். நாய்களை பாதுகாப்பிற்கு ஏற்ற காவலனாகவும், தோழமைக்கு ஏற்ற உயிரினமாக கருதி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுபவர்கள் அயல்நாடுகளில் அதிகம். தென் கொரிய மக்களில் ஒரு சிலர் நாய் இறைச்சி உண்ணுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இது உலகளவில் விலங்கின ஆர்வலர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வந்தது. தென் கொரியாவின் பல பகுதிகளில் நாய் இறைச்சி பிரியர்களுக்கென பல உணவகங்களில் அவை சமைக்கப்பட்டு, பரிமாறப்பட்டு வந்தது. இந்நிலையில், தென் கொரிய பாராளுமன்றம் நாய் இறைச்சியை தடை செய்து புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. இத்தொழிலை சார்ந்துள்ள தொழிலாளர்களும், விற்பனையாளர்களும் வேறு தொழிலுக்கு மாறும் வகையில் 3-வருட-கால இடைவெளிக்கு பிறகே இச்சட்டம் 2027 இலிருந்து அமலுக்கு வரும். அத்தொழிலாளர்கள் புதிய தொழிலில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளும் வகையில் மானியம் வழங்கி உதவவும் எதிர்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இச்சட்டத்தின்படி, இறைச்சிக்காக நாய்களை வளர்ப்பது, கொல்வது, இறைச்சியை பதப்படுத்தி விற்பனை செய்வது உள்ளிட்ட அனைத்தும் சட்டவிரோதம். இதனை மீறுவோருக்கு 2 வருட-கால சிறை தண்டனையும், பெரும் தொகை அபராதமும் விதிக்கப்படும். தென் கொரிய ஜனாதிபதியின் மனைவி இச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். பிராணிகள் வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் உடைய ஜனாதிபதியும் அவர் மனைவியும் தங்கள் இல்லத்தில் 4 நாய்களும் 3 பூனைகளும் வளர்த்து வருகின்றனர். நாய்களை கொன்று உண்பதை தடை செய்யும் சட்டத்தை வரவேற்றுள்ள பிராணிகள் ஆர்வலர்கள், பல வருடங்களாகவே அந்நாட்டில் நாய் இறைச்சி உண்ணும் பழக்கத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/287592
  5. நல்ல விடயம் தான். கா.து முதல் அதிகாரிகள், அரசியல் வியாதிகள் வரை பரவி இருக்கும் ஊழல், இலஞ்சத்தை ஒழித்து உழைப்புக்கேற்ற ஊதியமும் அந்த ஊதியத்தில் வாழ்க்கை நடத்த முடிந்தால்.... கற்பனை கொஞ்சம் ஓவராத் தான் போகுதோ!🤭
  6. 2024இல் பல நாடுகளில் பெரிய அளவில் சுனாமி, நிலநடுக்கம் ஏற்பட போகிறது என்று பாபா வங்கா கணித்து இருக்கிறாராம்! அவரின் கணிப்பில் அடுத்தடுத்து 2 முக்கியமான சம்பவங்கள் நடந்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2024இல் என்னென்ன நடக்கும் என்றும் பாபா வங்கா தனது கணிப்பில் எழுதி வைத்து இருக்கிறாராம். அதன்படி 2024இல் இந்தியாவின் வெப்பநிலை 50 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெப்பநிலை காரணமாக அதிக அளவில் வெட்டுக்கிளிகள் வந்து தாக்கும் என்றும் இதனால் பயிர்கள் மொத்தமாக சேதம் அடைந்து மக்கள் பஞ்சத்தால் அழிய போகிறார்கள் என்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த நாட்டுக்காரரின் கையால் ஒரு பெரிய ரஷிய தலைவர், கொலை செய்யப்படுவார். அவரது கொலை உலகத்தை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளியது என்று தெரிவித்துள்ளார். அதாவது புதின் மரணம் பற்றி கூறியுள்ளார். 2024 -ம் ஆண்டில் பெயரிடப்படாத “பெரிய நாடு” உயிரியல் ஆயுதத் தாக்குதல்களை உருவாக்கும். அதை வைத்து தாக்குதல்களை மேற்கொள்ளும் அதே வேளையில், ஐரோப்பா முழுவதும் வேறு விதமான பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கும் என்றுள்ளார். 2024 -ல் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியை நாம் எதிர்கொள்ள உள்ளோம். இதற்கு பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்க வேண்டும். கடன் அளவுகள் உயரும் மற்றும் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் உலகப் பொருளாதாரத்தை குழப்பத்தில் ஆழ்த்தும் அபாயம் இருப்பதாக கூறியுள்ளனர். புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்களுக்கு புதிய சிகிச்சைகள் இருக்கும். உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த கூடிய போர் ஒன்று நடக்கும். இதே வருடம் நாம் ஏலியன்களை காண்போம் என்றும் அவர் கூறியுள்ளார். அடுத்தடுத்து நடந்த 2 அதிர்ச்சி சம்பவம் அவரின் கணிப்பில் அடுத்தடுத்து 2 முக்கியமான சம்பவங்கள் நடந்து உள்ளன. ஜப்பானில் புத்தாண்டு தினத்தில் சுனாமி ஏற்பட்டது. ஜப்பானில் கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஊருக்குள் கடல் நீர் வந்தது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் கடல் நீர் புகுந்தது. சுனாமி எச்சரிக்கையை அடுத்து கடல் நீர் அலை அலையாக புகுந்தது. ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்தனர். அதன்பின் சிறிய அளவிலான சுனாமி ஏற்பட்டது. அதேபோல் அமெரிக்காவில் ப்ளோரிடாவில் உள்ள மியாமியில் இருக்கும் மால் ஒன்றில் ஏலியன்கள் இறங்கியதாக வெளியாகும் செய்திகள் இணையத்தை உலுக்கி உள்ளன. 10 அடி உயரமுள்ள வேற்றுகிரக ஏலியன் ஒன்று மியாமி ஷாப்பிங் மாலில் சுற்றித் திரிந்ததாக புகார்கள் வந்ததால், அப்பகுதியில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2 நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை மற்றும் சோதனையின் அடிப்படையில் இந்த வீடியோ மற்றும் ஏலியன் வருகை எல்லாமே சில விஷமிகள் கிளப்பிவிட்ட வதந்தி என தகவல் வெளியாகி உள்ளது. சிறுவர்கள் சிலர் பட்டாசு வெடித்ததாகவும் இதனால் ஏற்பட்ட வெளிச்சத்தை வைத்து ஏலியன்கள் புகுந்ததாக காட்டுத்தீ போல வதந்தி பரவியிருப்பதாகவும் மியாமி நகர பொலிஸார் கூறியுள்ளனர். https://thinakkural.lk/article/287522
  7. வடக்கில் வசிக்கும் அனைத்து மக்களின் காணி உரிமைப் பிரச்சினையை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். மத்தியதரக் காணித் திட்டத்தின் கீழ் நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் அரசாங்க நலத்திட்டங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியுமா என பாராளுமன்ற உறுப்பினர் நிர்மலநாதன் கேள்வி எழுப்பினார். இது தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் இப்பிரச்சினையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்த அவர், சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிந்து, அந்தக் காணிகளில் குடியிருக்க அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிந்து, அவர்களுக்குக் காணிகளின் ஆக்கிரமிப்புச் சான்றிதழ் வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சில காணிகளின் ஆதிக்க உரிமையாளர்களுக்கும், அபகரிப்பாளர்களுக்கும் இடையில் உடன்பாடு ஏற்படக்கூடியதாக இருந்த போதிலும் அவ்வாறான உடன்படிக்கை ஏற்படாத இடங்களில் காணி உரிமை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட காணி உறுதித் திட்டத்திற்கும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கும் முன்னுரிமை அளித்து வடக்கு மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் வலியுறுத்தினார். சட்டப்பூர்வ குடியிருப்பாளர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் தேவையான நலன்களை அல்லது உதவிகளை வழங்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்றும் பிரதமர் இதன் போது தெரிவித்தார். விவசாயம், மீன்பிடி அல்லது பிற துறைகளில் ஈடுபடும் அனைவருக்கும் அவர்களுக்குத் தேவையான மானியங்கள் மற்றும் நலன்புரி சேவைகள் வழங்கப்படும் என்றும், திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு புகார் அளிக்கலாம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/287761
  8. நாடளாவிய ரீதியில் சுகாதார சேவைகளுடன் இணைந்த 10 தொழிற்சங்கங்கள் இன்று காலை 8 மணிமுதல் 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றன. வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி, குறித்த 10 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம், அரச மருந்தாளர்கள் சங்கம், மருத்துவ ஆய்வக தொழில் வல்லுநர்கள் சங்கம் மற்றும் அகில இலங்கை தாதியர் சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. இதன்காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு மருத்துவ சேவை மற்றும் சிகிச்சை பெற்றுக்கொள்ள சென்றுள்ள நோயாளர்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. https://thinakkural.lk/article/287727
  9. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (10) இரவு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பிரதிநிதிகள் நாளை (11) முதல் 17 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என்றும் நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொருளாதாரத்தின் அண்மைக்கால போக்குகளை ஆராய்வதற்காக இந்த குழு விஜயம் செய்யவுள்ளதுடன், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வசதிகளைப் பெற்றுக் கொண்ட பின்னர், நாட்டின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுகளும் குறித்த குழுவினால் மேற்கொள்ளப்படும் என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சுகள் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கலந்துரையாடல்களை முன்னெடுப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. https://thinakkural.lk/article/287721
  10. தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு Digital News Team நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு நிலவுகிறது. அந்த வகையில் 2023 இல் மொத்தம் 1,550 தொழுநோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவற்றில் 173 நோயாளர்கள் பாடசாலை மாணவர்களிடையே பதிவாகியுள்ளன. தொழுநோய் எதிர்ப்பு பிரசாரத்தின் படி, கொழும்பு மாவட்டத்திலிருந்து 315 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் . மேலும் முறையே 168 மற்றும் 151 நோயாளர்கள் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பதிவாகியுள்ளன. பாடசாலை மாணவர்களிடையே நோயாளர் அதிகரிப்பினால், தொழுநோய் தொற்றுகளைக் கண்டறியும் தேசிய அளவிலான திட்டம் பாடசாலை மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொழுநோய் எதிர்ப்பு பிரசாரம் மேலும் கூறுகையில், நாட்டில் இரண்டு வகையான தொழுநோய் பரவுகிறது – தொற்றக்கூடியது மற்றும் தொற்றாதது. துரதிர்ஷ்டவசமாக, கண்டறியப்பட்ட நோயளர்களில், 60% தொடர்பு கொள்ளக்கூடியவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன, இது பரவுவதற்கான அதிக அபாயத்தைக் குறிக்கிறது. தொழுநோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுகாதார அதிகாரிகள் நிலைமையை மதிப்பிடுவதற்கும் நிர்வகிப்பதற்கும் பணிபுரிகின்றனர், நோய்த்தொற்று மற்றும் தொற்றாத வடிவங்கள் இரண்டிற்கும் தீர்வு காண ஒரு விரிவான அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்துகிறது. https://thinakkural.lk/article/287692
  11. கொழும்பு துறைமுகத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுவிற்கு கப்பலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து தொடர்பான அண்மைய ஊடகச் செய்திகளை இலங்கை துறைமுக அதிகாரசபை மறுத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பி.க்கள் கொழும்பு துறைமுகத்தில் கப்பலில் இருந்தபோது உபசரிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட இலங்கை துறைமுக அதிகாரசபை, கொழும்பு துறைமுகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக அரசியல்வாதிகள், பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வழக்கமான கப்பல் பயணங்களை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் குழுவிற்கு கப்பல் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளதாக துறைமுக அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது. ஊடக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி உணவு அல்லது வேறு எந்த நடவடிக்கைகளுக்காகவும் தாம் செலவு செய்யவில்லை என்றும் துறைமுக அதிகாரசபை தெளிவுபடுத்தியுள்ளது. https://thinakkural.lk/article/287765
  12. அரசை ஏமாற்றி அரச உதவி பெறுபவர்களை கண்டுபிடிக்கவும் TIN இலக்கம் கொண்டுவாறாங்களோ தெரியவில்லை!
  13. என்னுடைய அப்புவும்(அம்மப்பா) தப்பி வந்த கதைகளை எங்களுக்கு சொல்கிறவர்.
  14. Published By: VISHNU 10 JAN, 2024 | 11:11 AM யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் 10 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறுகின்றது. இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு தொடக்கம் மாலை வரை யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் பொது மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் எவ்வித பேதமுமின்றி கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்த வேண்டுமென உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் சார்பில் முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந் அழைப்புவிடுத்துள்ளார். 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர். உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு, காவல்துறையினரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது. இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதுட்டுமன்றி தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. 10.01.1974 அன்று தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டோர் விபரம்: வேலுப்பிள்ளை கேசவராஜன் (வயது 15 – மாணவன்) பரம்சோதி சரவணபவன் (வயது 26) வைத்தியநாதன் யோகநாதன் (வயது 32) ஜோன்பிடலிஸ் சிக்மறிங்கம் (வயது 52 – ஆசிரியர்) புலேந்திரன் அருளப்பு (வயது 53) இராசதுரை சிவானந்தம் (வயது 21 – மாணவன்) இராஜன் தேவரட்ணம் (வயது 26) சின்னத்துரை பொன்னுத்துரை (வயது 56 – ஆயுள்வேத வைத்தியர்) சின்னத்தம்பி நந்தகுமார் (வயது 14 – மாணவன்) https://www.virakesari.lk/article/173584
  15. பிரித்தானிய இளவரசி ஆன் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்தார் Published By: DIGITAL DESK 3 10 JAN, 2024 | 09:53 AM இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரித்தானிய இளவரசி ஆன் (Anne) சற்றுமுன்னர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இளவரசி ஆன், அவருடைய கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமொதி லோரன்ஸூடன் (Timothy Laurence) இன்று புதன்கிழமை லண்டனில் இருந்து கொழும்புக்கு தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலே இலங்கைக்கு வருகிறார். இது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தனது உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தளத்தில், அரச குடும்பத்திற்கு ஏற்ற சேவை! இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் வகையில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக லண்டனில் இருந்து கொழும்புக்கு தனது பயணத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசி ஆன்னை (Princess Anne) வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இளவரசிக்கும் மற்றும் அவரது தூதுக்குழுவினருக்கு இலங்கையின் அரவணைப்பையும் விருந்தோம்பலையும் விரிவுபடுத்துவது உண்மையிலேயே ஒரு கௌரவமாகும். எங்கள் விமான சேவையை பயணத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு நன்றி என பதிவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/173577
  16. தக்காளி ரூ.700, கேரட் ரூ.800: இலங்கையில் காய்கறிகள் விலை 7 மடங்கு உயர்வு - என்ன காரணம்? கட்டுரை தகவல் எழுதியவர், யூ.எல். மப்றூக் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை மக்கள் தினசரி தேவைகளை குறைந்தபட்சம் நிறைவேற்றுவதற்கே சிரமப்படும் அளவுக்கு பொருளாதார ரீதியாக, கடும் இன்னல்களை எதிர்கொள்கின்றனர். உணவுப் பொருட்களின் விலைகள் மிக அதிகமாக உயர்ந்துள்ளன. அதிலும், காய்கறி, மரக்கறி வகைகள் மற்றும் உப உணவுப் பொருட்களின் விலைகள் முன்பு இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன. இந்நிலையில், ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ‘வாட்’ (VAT) எனப்படும் மதிப்பு கூட்டு வரியை 15 வீதத்திலிருந்து 18 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது. முன்னர் ’வாட்’ விதிக்கப்படாத பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு, தற்போது ‘வாட்’ விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மேலும் சிரமத்தை சந்திக்கின்றனர். சில்லறை விலையில் ஒரு கிலோகிராம் பீன்ஸ் 900 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கேரட் ஒரு கிலோ 800 ரூபாய். சாதாரண காலங்களில் ரூ.100-க்கும் குறைந்த விலையில் கிடைத்த ஒரு கிலோகிராம் தக்காளி தற்போது 7 மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, விலை 700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பச்சை மிளகாய் ஒரு கிலோகிராம் 1,500 ரூபாய். இஞ்சி ஒரு கிலோ 3,000 ரூபாய் வரையில் விற்பனையான நிலையில், தற்போது 1,800 ரூயாய்க்குக் கிடைக்கிறது. சாதாரண காலங்களில் ஒரு கிலோகிராம் இஞ்சியின் விலை 200 ரூபாய்க்கும் குறைவாகும். படக்குறிப்பு, உணவுப்பொருட்களின் விலை முன்பில்லாத வகையில் உயர்ந்துள்ளது. தேங்காய் ஒன்று ரூ.100 ஒரு மாதத்துக்கு முன்னர் ஒரு கிலோகிராம் அதிகபட்சமாக ரூ.150-க்கு சில்லறைக் கடைகளில் விற்கப்பட்ட பெரிய வெங்காயம், தற்போது 600 ரூபாய் வரையில் விலை போகிறது. பெரிய வெங்காயத்தின் ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். ரூ. 50-க்கும் குறைந்த விலையில் கிடைத்த தேங்காய் ஒன்று தற்போது ரூ.100 வரையில் விற்பனையாகிறது. இந்த நெருக்கடி நிலை குறித்து ஊடகங்களிடம் பேசிய ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய, “தேங்காய் சம்பலுக்கு கொஞ்சம் வெங்காயத்தை எப்படிச் சேர்ப்பது எனும் போராட்டத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்” என கவலை தெரிவித்துள்ளார். ”இந்த விலையை வாழ்நாளில் எதிர்கொண்டதில்லை” படக்குறிப்பு, இந்த விலை உயர்வை வாழ்நாளில் கண்டதில்லை என்கிறார், ஏ.எம். றிஸ்லி மரக்கறி வகைகளுக்கு இந்தளவு விலை அதிகரித்ததை தனது வாழ்நாளில் கண்டதில்லை என, கிழக்கு மாகாணம்-அக்கரைப்பற்றில் மரக்கறி மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் ஏ.எம். றிஸ்லி கூறுகிறார். 30 வருடங்களுக்கும் மேலாக இவர் மரக்கறி வியாபாரம் செய்கிறார். ‘ஆங்கில காய்கறிகள்’ எனப்படும் கேரட், பீன்ஸ், லீக்ஸ் (வெங்காய தாள்), கோவா (முட்டைக்கோஸ்), பீட்ரூட் போன்றவற்றை, அவை உற்பத்தி செய்யப்படும் நுவரெலியா பிரதேசத்திலிருந்து கொள்வனவு செய்துகொண்டு வந்து, அக்கரைப்பற்றில் றிஸ்லி விற்கிறார். அம்பாறை மாவட்டத்திலுள்ள பல வியாபாரிகள் இவரிடமிருந்து மரக்கறி வகைகளை மொத்தமாகக் கொள்வனவு செய்கின்றனர். சில்லறையாகவும் விற்கிறார். ”மரக்கறி வியாபாரத்தில் பல்வேறு சவால்கள் உள்ளன. சில மரக்கறி வகைகளை அன்றைய தினமே விற்று முடிக்க வேண்டும். மீதமானால் அவற்றை மறுநாள் விற்பது மிகவும் கடினம். அதேபோன்று, மரக்கறி வியாபாரத்தில் சேதாரம் அதிகம். உதாரணமாக, 63 கிலோகிராம் எடை கொண்ட ஒரு மூட்டை கோவாவை கொள்வனவு செய்யும் போது, அதில் 15 கிலோகிராம் சேதாரமாகிவிடும். அதேபோன்று, மரக்கறிகள் எடை குறைவதும் பெரிய சவாலாகும்” என, தனது வியாபாரத்திலுள்ள கஷ்ட நஷ்டங்கள் குறித்து றிஸ்லி பிபிசி தமிழிடம் பேசினார். படக்குறிப்பு, கேரட் ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை பன்மடங்கு அதிகரித்த கீரை விலை பச்சை மிளகாய், தக்காளி போன்றவற்றுக்கு இதற்கு முன்னர் இந்தளவு விலை உயர்ந்ததில்லை என்கிறார் றிஸ்லி. தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை, எரிபொருளுக்கான விலையேற்றம் ஆகியவை, மரக்கறி மற்றும் உப உணவுப் பொருட்களுக்கான அதிக விலையேற்றத்துக்கு பிரதான காரணம் என அவர் கூறுகிறார். கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் பசலை கீரைக்கான தட்டுப்பாடு ஏற்பட்டமையினாலும், பின்னர் பசலை கீரைக்கான விலைகள் பன்மடங்கு அதிகரித்தமையினாலும், மரக்கறிகளுக்கு அதிகரித்த விலை, இன்னும் சாதாரண நிலைக்குத் திரும்பவில்லை எனவும் றிஸ்லி சுட்டிக்காட்டினார். அக்கரைப்பற்றிலிருந்து நுவரெலியா சென்று, அங்கு மரக்கறிகளை கொள்முதல் செய்து, மீண்டும் அக்கரைப்பற்றுக்கு வருவதற்காக சுமார் 450 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு கொண்டு வரும் மரக்கறி வகைகளை, ஒரு கிலோவுக்கு 20 ரூபாய் மட்டுமே லாபம் வைத்து தாம் விற்பனை செய்வதாகவும் றிஸ்லி குறிப்பிடுகின்றார். நுவரெலியாவிலிருந்து மரக்கறியைக் கொண்டு வரும் வாகனத்துக்கு டிசம்பர் 31-ஆம் தேதி, ஒரு கிலோ ரூ. 9 எனும் கணக்கில் போக்குவரத்துக் கூலி வழங்கியதாகவும், ஆனால் ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து 12 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். படக்குறிப்பு, ஒரு கிலோகிராம் பீன்ஸ் 900 ரூபாய்க்கு விற்பனை பெட்ரோல் விலையும் உயர்வு நாட்டில் 13 வீதமாக இருந்த ‘வாட்’ வரியை 18 வீதமாக அரசு அதிகரித்துள்ளதோடு, முன்னர் ‘வாட்’ விதிக்கப்படாத பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் வாட் வரி விதித்தமையே போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளமைக்குக் காரணமாகும். எடுத்துக்காட்டாக எரிபொருள்களுக்கு முன்னர் ‘வாட்’ விதிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், தற்போது 18 வீதம் ‘வாட்’ வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஒரு லிட்டர் 346 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒக்டேன்-92 வகை பெட்ரோலின் விலை, தற்போது 366 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், ஒரு லிட்டர் 329 ரூயாய்க்கு விற்கப்பட்ட டீசல், தற்போது 358 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த எரிபொருள் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவர் தெரிவிக்கின்றார். படக்குறிப்பு, குறைவான லாபத்திற்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகள் ”13 ஆயிரம் கிலோவுக்குப் பதிலாக 600 கிலோ மட்டுமே விளைச்சல்” இலங்கையில் கேரட், பீன்ஸ் உள்ளிட்ட ஆங்கில மரக்கறிகளை உற்பத்தி செய்யும் பிரதேசங்களில் வெலிமடையும் ஒன்றாகும். அங்கு இம்முறை கேரட் செய்கையில் ஈடுபட்டுள்ளார் சிப்லி அஹமட். ஊடக நிறுவனமொன்றில் பணியாற்றிய இவர், தற்போது ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டே, தனது சொந்த இடத்தில் கேரட் விவசாயத்திலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், மரக்கறிச் செய்கை தற்போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சிப்லி அஹமட் கூறுகிறார். தொடர்ச்சியான மழை மற்றும் பசளைக்கான அதிக விலை போன்றவை மரக்கறி செய்கை பாதிக்கப்பட்டுள்ளமைக்கு பிரதான காரணங்கள் என்கிறார். ”50 கிராம் காரட் விதைகளை பயிரிட்டார், 90 நாட்களில் அவற்றிலிருந்து 600 கிலோகிராம் கேரட் அறுவடை செய்வோம். கேரட் செய்கைக்கு மழையும் வெயிலும் சம அளவில் வேண்டும். ஆனால், செப்டம்பர் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டிருக்கிறது. இதனால் மரக்கறிப் பயிர்களின் வளர்ச்சி மிகவும் குன்றிவிட்டது. மழை காலத்தில் நோய்களால் பயிர்கள் அதிகம் பாதிக்கப்படும், ஆனாலும் பூச்சி நாசினிகளை மழைக்காலத்தில் தெளிக்க முடியாது. தெளித்தாலும் பயிர்கள் மருந்தை உறிஞ்சுவதற்கு முன்னர் மழையில் கழுவுண்டு போய்விடும். என்னுடைய மாமா ஒருவர் 1,150 கிராம் கேரட் விதை பயிரிட்டார். அதிலிருந்து ஆகக்குறைந்தது 13,000 கிலோகிரம் கேரட் அறுவடையாகக் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், வெறும் 600 கிலோகிராம் மட்டுமே அறுவடையானது. இப்படியான காரணங்களால் மரக்கறிக்கான விலை சடுதியாக அதிகரித்துள்ளது” என்கிறார் சிப்லி அஹமட். படக்குறிப்பு, சீரற்ற காலநிலையும் இதற்கு காரணமாக இருக்கிறது. இறங்காத அரிசி விலை இதற்கிடையில், அரிசிக்கான விலையும் அதிகரித்த நிலையிலேயே உள்ளது. சில்லறை விலையில் ஒரு கிலோ சாதாரண அரிசி 220 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த சிறுபோகத்தில் 5,500 ரூபாய்க்கு விற்பனையான 66 கிலோகிராம் எடைகொண்ட ஒரு மூட்டை நெல்லின் விலை, தற்போது 7,000 ரூபாயாக உள்ளது என்கிறார், அம்பாறை மாவட்டத்தில் அரிசி ஆலை நடத்தும் ஏ.எல். பதுறுதீன். இதேவேளை, தற்போதைய பெரும்போகத்தில் பெய்துவரும் அதிக மழை மற்றும் வெள்ளம் காரணமாக நெல் விவசாயத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் நெல் உற்பத்தியில் 23 சதவீதம் பங்களிப்பு வழங்கும் அம்பாறை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக, நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் உள்ளடங்கலாக மூன்று மாவட்டங்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் இம்முறை பெரும்போகத்தில் 131,885.37 ஹெக்டேரில் நெல் விவசாயம் மேற்கொள்ள எதிர்பார்த்திருந்த நிலையில் 1,25,376.62 ஹெக்டேரில் நெல் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரிவித்தார். தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நெல் விவசாயத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அவை தொடர்பான கணக்கெடுப்பு காலநிலை சீரான பின்னரே மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தேயிலை மற்றும் தேங்காய் எண்ணெய்க்கும் ‘வாட்’ வரி ”’வாட்’ மூலம் 1,400 பில்லியன் ரூபாய் வருமானம் பெறத் தீர்மானம்” நாட்டில் 15 சதவீதமாக இருந்த ‘வாட்’ வரி, 2024-ஆம் ஆண்டிலிருந்து 18 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, 2024-ஆம் ஆண்டில் ‘வாட்’ வரி மூலமாக 1,400 பில்லியன் ரூபாயை அரச வருமானமாக பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக, ஜனாதிபதி அலுவலக அரச வருமானப் பிரிவின் பணிப்பாளர் கே.கே.ஐ. எரந்த தெரிவித்திருந்தார். 2023-ஆம் ஆண்டு ’வாட்’ வரி மூலம் 600 பில்லியன் ரூபாய் வருமானம் எதிர்பார்க்கப்பட்ட போதிலும், 450 பில்லியன் ரூபாய் மட்டுமே கிடைத்தது என்றும் அவர் கூறியிருந்தார். கல்விச் சேவை, மின்சாரம், சுகாதாரம், மருத்துவம், பயணிகள் போக்குவரத்து, உணவு, காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட சுமார் 90 வகையான பொருட்களுக்கு ‘வாட்’ வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும், முன்னர் ‘வாட்’ விதிக்கப்படாத 97 வகையான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு புதிதாக ‘வாட்’ வரி விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, ரசாயன உரங்களுக்கு ‘வாட்’ வரி விதிக்கப்பட்டுள்ளதோடு, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி, தேயிலை மற்றும் தேங்காய் எண்ணெய் போன்றவற்றுக்கும் ‘வாட்’ வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. ”ஏழைகளை மேலும் ஏழைகளாக்கி விடும்” படக்குறிப்பு, வரி விதிப்பால் மேலும் பாதகம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார், பேராசிரியர் ஏ.எல். ரஊப் ஆனால், இந்த வரி விதிப்பானது மக்களுக்கு மென்மேலும் பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை தலைமைப் பேராசிரியர் ஏ.எல். ரஊப் கூறுகின்றார். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தாமல், அல்லது அதற்குரிய திட்டங்களை முன்வைக்காமல், வரி விதிப்பின் மூலம்தான் நாட்டின் வருமானத்தைப் பெறலாம் எனும் யுக்தியை தொடர்ந்து கடைபிடிப்பது, தற்போதைய காலத்துக்குப் பொருத்தமற்றது எனவும் அவர் தெரிவிக்கின்றார். குறிப்பாக, உள்நாட்டு உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்கான எந்தத் திட்டமும் முன்வைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். எடுத்துக்காட்டாக, விவசாயத்துறை மற்றும் பால் உற்பத்தி துறை போன்றவற்றை மேம்படுத்துவதற்காக எந்தவித திட்டங்களையும் அரசாங்கம் கொண்டு வரவில்லை எனவும் பேராசிரியர் குறிப்பிடுகின்றார். ”தமது வாழ்க்கைச் செலவை ஈடுசெய்ய முடியாத சிக்கலானதொரு சூழ்நிலையில் மக்கள் உள்ளனர். மக்களின் வருமானத்தில் எந்தவித அதிகரிப்பும் இல்லாத நிலையில், மக்களுக்கு வரி விதித்து, அவர்களின் வாழ்க்கைச் செலவில் திடீரென அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளமை பாரதூரமான விடயம்” எனவும் அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கல்வி, மருத்துவ செலவுகளை குறைக்கும் மக்கள் கல்வி, மருத்துவ செலவுகளை குறைக்கும் நிலை நாளாந்த செலவுகளை நிறைவேற்ற முடியாத மக்களிடம் வரியை அதிகரித்து வசூலிப்பது, எந்த வகையிலும் நியாயமில்லை எனவும் பேராசிரியர் ரஊப் குறிப்படுகின்றார். இதனால் மக்கள் தமக்கான கல்வி மற்றும் மருத்துவம் போன்றவற்றுக்குரிய செலவுகளை குறைப்பதற்கு அல்லது கைவிடுவதற்கான நிலை ஏற்படும் எனவும் அவர் கவலை தெரிவித்தார். ”வரிகள் மூலம் பெறப்படும் வருமானத்தைக் கொண்டு, ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துதான் அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால், நாளாந்த வாழ்க்கையை நடத்துவதற்கே பொருளாதார ரீதியாக தடுமாறும் மக்களிடம், வரிக்கு மேல் வரியை அரசாங்கம் அறவிட்க் கொண்டிருக்கிறது” எனக்கூறிய தலைமைப் பேராசிரியர் ரஊப் ”இந்த நிலைமையானது ஏழைகளை இன்னும் ஏழைகளாக்கி விடும்” என்று கவலை தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cxe61ly13mro
  17. ஓமண்ணை, மறைந்து வாழ்பவர்களை வெளிப்படுத்த வந்தாவோ என எண்ணுகிறேன்.
  18. 09 JAN, 2024 | 05:16 PM நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு இன்று மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்றத்தினால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பாக குறித்த இராணுவ அதிகாரி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தனது வரவைப் பதிவு செய்ய வேண்டும் மற்றும் தனது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் விடுத்த உத்தரவை குறித்த இராணுவ அதிகாரி அவமதித்ததன் காரணமாக பிணை முறியை மீறிய குற்றத்திற்காக நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியல் உத்தரவை இன்று (9) மேல் நீதிமன்ற நீதிபதி திருச்செல்வம் ஜோசப் பிரபாகரன் விதித்தார். மேற்படி இராணுவ உயர் அதிகாரி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/173553
  19. ஹவுதி கிளர்ச்சிக்குழுவை அடக்குவதற்கு 250 மில்லியன் ரூபா செலவிடுவதால் நாட்டுக்கு கிடைக்கப்போகும் நன்மை என்ன - சஜித் கேள்வி Published By: VISHNU 09 JAN, 2024 | 05:26 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டு மக்கள் பாரிய பாொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் நிலையில் ஹவுதி கிளர்ச்சிக்குழுவை அடக்குவதற்கு அரசாங்கம் 250 மில்லியன் ரூபா செலவிட்டு கடற்படை கப்பலை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் நன்மை என்ன என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 250 மில்லியன் ரூபா செலவழித்து ஹவுதி கிளர்ச்சிக்குழுவை அடக்குவதற்கு கடற்படையின் கப்பல் ஒன்றை பயன்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு அன்றாட உணவு வேளை ஒன்றை வழங்க முடியாமல் இருக்கும் நிலையில், குறிப்பாக நாட்டில் இருக்கும் 220 இலட்சம் பேரும் பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டத்துடன் இருந்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் 250 மில்லியன் ரூபா செலவழித்து எமது கடற்படையின் கப்பலை ஹவுதி கிளர்ச்சிக்குழுவை அடக்குவதற்கு அனுப்புவதன் மூலம் எமக்கு கிடைக்கப்போகும் நன்மை என்ன என கேட்கிறோம். குறைந்தபட்சம் அரசாங்கம் இவ்வாறு 250 மில்லியன் ரூபாவை முதலீடுசெய்வதன் மூலம் எமது நாடு கடன் பெற்றுக்கொண்டுள்ள நாடுகள் எமது கடனில் 25 பில்லியனாவது குறைப்பதாக வாக்குறுதி வழங்கி இருக்கிறதா? எமது நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையில் நாட்டுக்கு சாதகமான விடயங்களுடனே சர்வதேசத்துடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அர்ப்பணிப்புக்காக சர்வதேசம் எமக்கு வழங்கப்போகும் பிரதி உபகாரம் என்ன? இவ்வாறான ஏதாவது இணக்கப்பாடுடனா அரசாங்கம் இந்த 250 மில்லியன் ரூபாவை செலவழிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது? அதனால் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு நாட்டு மக்கள் எதிர்கொண்டுவரும் அடிப்படை பிரச்சினை விளங்குவதில்லையா? பாடசாலை மாணவர்களுக்கு கணனி வசதி இல்லாமல் இருக்கிறது. இந்த 250 மில்லின் ரூபாவையும் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான கணனிகளை பெற்றுக்கொள்ள ஒதுக்க முடியும்தானே. எனவே நாட்டில் இவ்வளவு பாரிய தேவைகள் இருக்கும்போது அரசாங்கம் எதற்காக இவ்வாறு செயற்படுகிறது என கேட்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/173521
  20. Published By: VISHNU 09 JAN, 2024 | 05:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மின்கட்டணம் செலுத்தாத 10 இலட்சத்து 64 ஆயிரத்து 400 மின்பாவனையாளர்களின் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணத்தை குறைப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் ஊடக கண்காட்சிக்காக எதிர்க்கட்சித் தலைவர் மின்கட்டண குறைப்பு தொடர்பில் வழக்கு தாக்கல் செய்துள்ளார் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற அமர்வின் போது இருபத்தேழு இரண்டின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, மொத்த சனத்தொகையில் வீட்டு மின்பாவனையாளர்கள் உட்பட 76 இலட்சத்து 3923 மின்பாவனையாளர்கள் அரச மற்றும் தனியார் மின்விநியோக கட்டமைப்பின் ஊடாக மின்சாரத்தை பெற்றுக்கொள்கிறார்கள். பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் மின்கட்டணம் செலுத்தாத 10 இலட்சத்து 64 ஆயிரத்து 400 மின்பாவனையாளர்களின் மின்கட்டணம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்கட்டண திருத்தம் தொடர்பான யோசனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்படவில்லை. எதிர்வரும் வாரமளவில் யோசனை முன்வைக்கப்படும். பொது மக்களின் கருத்து கோரலுடன் மின்கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இறுதி தீர்மானத்தை எடுக்கும். மின்கட்டணத்தை திருத்தம் செய்யும் தீர்மானம் கடந்த மாதம் 05 ஆம் திகதி அமைச்சரவை அங்கிகாரத்துடன் எடுக்கப்பட்டது. கட்டண திருத்தத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் மின்கட்டணம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதனை ஊடக காட்சிப்படுத்தல் என்றே குறிப்பிட வேண்டும். ஊடக காட்சிப்படுத்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவுக்கு எதிர்க்கட்சித், தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் பாரிய போட்டி நிலவுகிறது என்றார். https://www.virakesari.lk/article/173545
  21. படக்குறிப்பு, புதுச்சேரி மழை பாதிப்புகள் 8 ஜனவரி 2024 தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. ஜனவரி முதல் வாரத்தைக் கடந்தும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கடந்த இரு தினங்களாகவே பரவலாக கனமழை பெய்துவருகிறது. திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக, சென்னையில் ஜன. 07 அன்று நாள் முழுவதும் மழை தொடர்ந்தது. புதுச்சேரியிலும் மழை பெய்துவருகிறது. இன்று (ஜன. 08) மதியம் ஒரு மணி வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 24 செ.மீ., கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 23 செ.மீ., நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 22 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,TAMILNADU WEATHERMAN/X வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் மழை பெய்வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஜன. 9, 10 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 3-4 ஆண்டுகளாகவே ஜனவரி மாதத்தில் மழை பெய்வது வழக்கமாகியுள்ளது. இதுவொரு `புதிய இயல்பா?`, இதற்கு காலநிலை மாற்றமும் ஒரு காரணமா? விவசாயிகள், பொதுமக்கள் இதற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டுமா என்ற கேள்விகள் இதையொட்டி எழுகின்றன. பட மூலாதாரம்,TAMILNADU WEATHERMAN/X லா நினோ காரணமா? இதுதொடர்பாக, தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் `எக்ஸ்` (ட்விட்டர்) தளத்தில், "கடந்த 4 ஆண்டுகளாகவே ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் மழை பெய்வது வழக்கமாகிவிட்டது. தமிழ்நாட்டுக்கு அருகே கிழக்கு நோக்கி வீசும் காற்று, மேற்கு நோக்கி வீசும் காற்றுடன் தொடர்புகொள்வதால் இந்த மழை பெய்துவருகிறது" என பதிவிட்டிருந்தார். ஜனவரி மாதத்திலும் தமிழகத்தில் ஏன் மழை பெய்கிறது என்ற கேள்வியை தனியார் வானிலை ஆர்வலர் ஸ்ரீகாந்திடம் எழுப்பினோம். "கடந்த 2-3 ஆண்டுகளாக லா நினோ விளைவு இருந்தது. அப்படியிருந்தால் பருவமழை சிறிது தாமதமாகத்தான் முடிவுக்கு வரும். இப்போது ஜனவரி முதல் வாரம் தான். அதனால் இதனை டிசம்பர் கடைசி வாரம் என்றே எடுத்துக் கொள்ளலாம். மேலும் பருவமழை தாமதமாக தொடங்கியதும் ஜனவரி மாதமும் பெய்யும் இந்த மழைக்குக் காரணமாக இருக்கலாம்" என்றார். மேலும், 2022-ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் வாரத்திற்கு பிறகும் மழை தொடர்ந்தது என தெரிவித்த அவர், இந்தாண்டு அப்படியிருக்காது என்றும் கூறினார். 1964-ஆம் ஆண்டில் தனுஷ்கோடியில் டிசம்பர் இறுதியில் ஏற்பட்ட புயல் மற்றும் 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட `தானே` போன்ற புயல்களை ஸ்ரீகாந்த் உதாரணமாக காட்டுகிறார். `தானே` புயலின் போது லா நினோ விளைவு இருந்ததாக கூறுகிறார். லா நினோ இருந்தால் டிசம்பர் இறுதி, ஜனவரி முதல் வாரத்தில் மழை தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார் அவர். பட மூலாதாரம்,TAMILNADU WEATHERMAN/X லா நினோ என்பது என்ன? "லா நினோ என்பது இந்தியப் பெருங்கடல் பகுதியில் வெப்பநிலை குறைந்து, மழைக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் நிலவும் வானிலையாகும். வெப்ப மண்டல காற்றுக்கூறுகள் மெதுவாகத்தான் பூமத்திய ரேகைக்கு தெற்கே நகரும். பூமத்திய ரேகையை நெருங்கி சென்றால்தான் மழை குறையும். லா நினோ வானிலையின் போது இந்த செயல்முறை மெதுவாக நடக்கும். எனவே, மழை தொடரும்" என்றார். எனினும், இப்போது பெய்யும் மழை `லா நினோ` விளைவால் ஏற்பட்டதல்ல என்கிறார் ஸ்ரீகாந்த். ஜனவரி மழைக்கு என்ன காரணம்? "வடகிழக்குப் பருவ மழை மற்றும் தென்மேற்கு பருவமழை காலத்திற்கு இடைப்பட்ட காலங்களில் மேற்கத்திய கலக்கம், மேடேன் ஜூலியன் ஒத்த அலைவு (MJO) மற்றும் வெப்ப மண்டல காற்று குவிதல் பகுதி (ITCZ) இவைகளின் நிலையே மழைக்கான முக்கிய காரணிகள். இந்த மூன்று காரணிகளில் ஏதேனும் ஒன்று சாதகமான சூழலில் இருந்தால் குளிர்கால / வெப்ப சலன மழை தென் இந்திய பகுதியில் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும்" என்பது ஸ்ரீகாந்த் போன்ற வானிலை ஆர்வலர்களின் விளக்கமாக இருக்கிறது. இதில், மேற்கத்திய கலக்கம் (Western disturbance) என்ற வானிலை நிகழ்வு, மழையை ஏற்படுத்தி வெப்பநிலையை குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேடன் -ஜூலியன் அலைவு ( MJO ) என்பது வெப்பமண்டல வளிமண்டலத்தில் உள்ள பருவகால மாறுபாட்டின் முக்கிய அங்கமாகும். தற்போது தமிழகத்தில் பெய்யும் மழைக்கு எம்.ஜே.ஓ, மேற்கத்திய கலக்கம் போன்ற இரு சூழல்களும் சாதகமாக இருப்பதே காரணம் என்கிறார் அவர். "இந்த சாத்தியக்கூறுகள் இல்லையென்றால் இம்மழை இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். தென் தமிழகத்தில் மட்டும் ஒருவேளை மழை பெய்திருக்கலாம்" என்கிறார் ஸ்ரீகாந்த். கடல் வெப்பம் அதிகமானால் மழையின் தன்மையில் இத்தகைய மாறுதல்கள் ஏற்படலாம் என அவர் கூறுகிறார். இப்படி பருவமழை அல்லாத காலங்களில் பெய்யும் மழையை ஓரளவு கணிக்க முடியும் எனக்கூறும் அவர், எனினும் எந்த பகுதிகளில் அதிக மழை இருக்கும் என்பதை சொல்ல முடியாது என தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES புதிய இயல்பா? காலநிலை மாற்றம் இதற்கு காரணமா என `பூவுலகின் நண்பர்கள்` அமைப்பின் சுந்தர்ராஜனிடம் கேட்டபோது, "கடந்த நான்கு ஆண்டுகளாகவே தமிழகத்தில் ஜனவரி மாதமும் மழை பெய்துவருகிறது. இதுவொரு புதிய இயல்புதான். பருவமழை தன்மைகள் மாறுபடுவதே காலநிலை மாற்றத்தால்தான். வளைகுடா நீரோட்டம், எம்.ஜே.ஓ போன்றவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அரபி கடலிலும் வெப்பம் அதிகரித்து அங்கேயும் பல புயல்கள் உருவாகி வருகின்றன. இந்த வானிலை மாறுதல்கள், இந்திய பருவமழையில் குறிப்பாக வடகிழக்குப் பருவமழையில் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்" என்றார். பாதிக்கப்படும் விவசாயிகள் இப்படி பருவம் தப்பிய மழையால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ளனர். ஜனவரி மாதம் பெரும்பாலான பகுதிகளில் அறுவடை காலம்.மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. கள்ளக்குறிச்சி அருகே மரூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாண்டு கூறுகையில், "பருவம் தவறி பெய்த மழையால் தனது மூன்று ஏக்கர் நிலத்தில் விளைந்திருந்த நெல் முற்றிலும் நாசமாகி போனது. எப்போதும் `தை பிறந்தால் வழி பிறக்கும்` என்பதற்கு ஏற்ப தை மாத அறுவடைக்குத் தயாராக இருக்கும் இந்த நேரத்தில் பெய்த மழையானது முழுமையான சேதத்தைக் கொடுத்து விட்டது" என தெரிவித்தார். புதுச்சேரி பகுதி கருக்கலாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் கூறுகையில், "நெல் அறுவடை செய்ய வேண்டிய இந்த நேரத்தில் கதிர் முற்றி இருக்கும் இந்த காலகட்டத்தில் இந்த மழை எதிர்பார்க்காத ஒன்று. இதனால் செய்த செலவு கூட வராது அனைத்து பயிர்களும் தண்ணீரில் மூழ்கி விட்டன என்ன செய்வது என்று தெரியவில்லை. வரத்து வாய்க்காலை தூர்வாரி இருந்தால் நஷ்டத்தை சற்று குறைத்திருக்கலாம் அல்லது தடுத்திருக்கலாம்" என தெரிவித்தார். எங்கெல்லாம் பாதிப்புகள்? திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வலங்கைமான் பேரூராட்சி 14-வது வார்டு கோவில்பத்து பகுதிகளில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள உப்பளங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட தாமரைக்குளம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் சிரமத்திற்கு ஆளாயினர். புதுச்சேரி கிருமாம்பாக்கம், ஏம்பலம், பாகூர் உள்ளிட்ட பகுதியில் 100 ஏக்கரில் பயிரிட்டு அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. https://www.bbc.com/tamil/articles/cz9qr4pwp75o
  22. Published By: VISHNU 09 JAN, 2024 | 08:11 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தேசிய ஒற்றுமையை, நல்லிணக்கத்தை ஸ்தாபிக்க அரசாங்கம் ஏற்றுக்கொண்ட விடயங்களை செயற்படுத்த வேண்டும் என சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அலுவலகத்தை ஸ்தாபித்ததன் பின்னர் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டால் அதனையும் செய்ய வேண்டும். ஆகவே நாட்டின் ஒற்றையாட்சிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தும் எதற்கும் ஆதரவு வழங்க முடியாது. இந்த சட்டமூலத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பேன் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டார். உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளது. இந்த ஆணைக்குழு ஊடாக இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்ட முடியும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவ அதிகாரிகள் இன்று தண்டிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு சர்வதேச மட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாராளுமன்றத்தின் ஊடாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான சட்டமூலத்தில் தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பதற்கு உருவாக்கப்பட்ட அரச கொள்கைகளை செயற்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டால் இந்த அலுவலகத்தின் ஊடாக அதனையும் செயற்படுத்த வேண்டும். 29 ஆயிரம் இராணுவத்தினர் இதற்காகவே உயிர் நீத்தார்கள். தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தை ஸ்தாபிக்கும் சட்டமூலம் சூழ்ச்சி நிறைந்தது. எதிர்காலத்தில் இராணுவத்தினருக்கு மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்தும் ஆகவே இந்த சட்டமூலத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பேன் என்றார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகம், தேசிய நீரளவை சட்டமூலம் என்பன மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/173569
  23. பிரதேச செயலகங்கள் மற்றும் முக்கிய பொது இடங்களில் TIN வழங்க தனி கருமபீடங்கள் அமைக்க நடவடிக்கை 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) வழங்குவதற்காக அனைத்து பிரதேச செயலகங்களிலும் தனியான கருமபீடங்களை திறக்குமாறு நிதி அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அரச வங்கிகள், ஆட் பதிவு திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் போன்ற இடங்களில் இது தொடர்பான கருமபீடங்களை திறக்க ஏற்பாடு செய்யுமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பணிப்புரை விடுத்துள்ளார். TIN வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களம், அரச நிர்வாகம் மற்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) ஆகியவற்றின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அனைத்து பிரதேச செயலகங்களும் பொது மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார். முன்னர் செய்தது போல், எரிபொருளுக்கான QR குறியீடுகளை வழங்குவதைப் போன்றே, TIN வழங்குவதற்கான திறமையான செயல்முறையை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். தற்போதைய ஒன்லைன் பதிவு விண்ணப்பப் படிவத்தை சுருக்கவும், ஐந்து நாட்களுக்குள் எண்ணை வழங்குவதற்கான நேரத்தை விரைவுபடுத்தவும் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/287577

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.