Everything posted by ஏராளன்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் ஹமாசின் அதிரடி தாக்குதல் - பத்து இஸ்ரேலிய படையினர் பலி 14 DEC, 2023 | 10:49 AM காசாவில் இடம்பெற்ற தாக்குதலில் பத்து இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் அதிகாரி தரத்தை சேர்நு;த ஒருவர் உட்பட பத்துபேர் கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவின் வடபகுதியில் உள்ள செஜெய்யாவில் இ;ந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கட்டிடமொன்றில் ஹமாஸ் மீது தாக்குதலை மேற்கொண்ட படையினரை காப்பாற்ற முயன்ற படையினரே தாக்குதலிற்குள்ளாகியுள்ளனர். காசாவை இஸ்ரேலிய படையினரால் ஒருபோதும் அடக்கமுடியாது என்பதை இந்த தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளது என ஹமாஸ் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/171679
-
ஏமனில் பணம் கொடுத்தால் மரண தண்டனையிலிருந்து தப்பி விடலாமா? நிமிஷா பிரியா வழக்கின் பின்னணி என்ன?
படக்குறிப்பு, கேரள செவிலியர் நிமிஷா கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 14 டிசம்பர் 2023, 06:07 GMT புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் ஏமன் நாட்டில் மரண தண்டனை வழங்கப்பட்டுச் சிறையில் இருக்கும் கேரளாவைச் சேர்ந்த செவிலியரான நிமிஷா பிரியாவை விடுவிக்க அவரது குடும்பத்தின் தரப்பில் ஒரு பெரிய போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், நிமிஷாவின் குடும்பம், கொலை செய்யப்பட்ட ஏமன் நாட்டைச் சேர்ந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கினால் விடுதலை கிடைத்துவிடும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. இந்நிலையில் இது ‘ஏமனில் கொலை செய்துவிட்டுப் பணம் கொடுத்தால் தப்பித்துவிடலாம்’ என்பதுபோன்ற பிம்பத்தைத் தோற்றுவிப்பதாகக் கூறுகிறார்கள் நிமிஷாவை விடுவிக்கப் போராடி வருபவர்கள். பணத்தைவிட இந்த வழக்கில் முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. அது, கொலை செய்யப்பட்டவரின் குடும்பம் தரும் மன்னிப்பு. இந்த மன்னிப்பைப் பெறவே தாம் முயன்று வருவதாகவும், அதற்காகத்தான் அவர்கள் ஏமன் செல்லவிருப்பதாகவும் கூறுகின்றனர், நிமிஷாவை விடுவிக்கப் போராடி வருபவர்கள். என்ன வழக்கு? 2017-ஆம் ஆண்டு ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்ற உள்ளூர்வாசியின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு ஏமனின் மத்திய சிறையில் இருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த 34 வயதான செவிலியர் நிமிஷா பிரியா. மரண தண்டனையை ரத்து செய்யக் கோரிய அவரது மேல்முறையீட்டு மனுவை கடந்த நவம்பர் 13-ஆம் தேதி ஏமனின் தலைமை நீதித்துறை கவுன்சில் நிராகரித்தது. இதனால், மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு ஏமனின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நிமிஷா பிரியா. ஏமன் நாட்டில் ஷரியத் சட்டம் நடைமுறையில் உள்ளதால் மரண தண்டனையில் இருந்து தப்ப மற்றொரு வாய்ப்பு நிமிஷாவுக்கு உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மன்னிப்பைப் பெற்று இழப்பீட்டுத் தொகை செலுத்தி மரண தண்டனையில் இருந்து விடுதலையாவதே நிமிஷாவிற்கு இருக்கும் அந்த ஒரே வாய்ப்பு. ஆனால், ஏமன் நாடு ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கும் ஏமன் அரசுக்கும் இடையே நீண்ட காலமாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. ஹூதி கிளர்ச்சியாளர்களை இந்திய அரசு அங்கீகரிக்கவில்லை. எனவே இந்திய குடிமக்கள் ஏமனுக்கு செல்வது ஆபத்தானதாக இருக்கும் என இந்திய அரசு கருதுகிறது. எனவே இங்கிருந்து நிமிஷாவின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் சென்று அவரை மீட்பதில் சிக்கல் நிலவி வந்தது. ஏமனுக்கு செல்ல அனுமதி அளித்த டெல்லி உயர்நீதிமன்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஏமன் இது குறித்து முன்னர் பிபிசியிடம் பேசியிருந்த நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி. "நான் ஏமனுக்கு சென்று அவர்களிடம் மன்னிப்பு கேட்பேன். என் உயிரை எடுத்துக்கொள்ளுங்கள், மகளை மன்னித்துவிடுங்கள் என அவர்களிடம் கேட்பேன்," என்று கூறினார். நிமிஷாவை மீட்க ஏமன் செல்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அங்கு ராஜ்ஜிய ரீதியான கட்டமைப்பு இல்லை என்ற காரணத்தைக் கூறி இதற்கான அனுமதியை இந்திய அதிகாரிகள் நிராகரித்தனர். இதைத் தொடர்ந்து நிமிஷாவின் தாயார் பிரேமா டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில் குழு சார்பில் (Save Nimisha Priya International Action Council) டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பிரேமா குமரியை தங்கள் கவுன்சிலை சேர்ந்த இரு உறுப்பினர்கள் உடனிருந்து அழைத்துச் செல்வார்கள் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஏமனுக்கு நிமிஷாவின் தாயார் மற்றும் அவருடன் மேலும் ஒரு நபரும் பயணிக்க அனுமதி அளித்துள்ளது. இந்த பயணத்திற்கு அவர்கள் மத்திய அரசைச் சாராமல், சொந்த பாதுகாப்பை தாங்களே உறுதி செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஏமன் செல்ல டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தனது பயணம் தொடர்பாக ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறும், பயண விவரங்களையும் முழுமையாக தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். ஏமன் வரலாற்றில் இது முதல்முறை படக்குறிப்பு, தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமுவேல் நிமிஷாவை மீட்க முயற்சித்து வருகிறார் "ஏமனில் பல கொலை வழக்குகளுக்கு உடனடியாக தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழக்கில் நிமிஷா தரப்பு நியாயத்தை புரிந்துகொண்டு ஏமன் அரசு தண்டனை நிறைவேற்றுவதில் காலம் தாழ்த்தி வருகிறார்கள். ஏமன் வரலாற்றில் ஒரு வழக்கிற்கு இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொள்வது இதுவே முதல் முறை," என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஜெரோம். நிமிஷா பிரியா வழக்கை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் சாமுவேல் ஜெரோம். ஏமன் நாட்டில் வானூர்தி ஆலோசகராக பணிபுரியும் இவர் தற்போது தமிழ்நாட்டில் உள்ளார். நிமிஷாவின் தாயாருடன் ஏமன் செல்ல இவருக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தொடர்ந்து பேசிய சாமுவேல், "ஒரு சக இந்தியர் என்பதால் தான் நிமிஷா குறித்து ஊடகங்களிடம் கூறினேன். ஆரம்பத்தில் நானும் அவரை குற்றவாளியாக தான் பார்த்தேன். ஆனால் பின்னர் அவரது நிலையைக் குறித்து முழுதாக தெரிந்து கொண்டதால் அவர் பக்க நியாயம் எனக்கு புரிந்தது. நிமிஷாவின் நிலையில் இருந்து பார்க்கும்போது மன்னிக்கப்பட அவர் தகுதியானவரே," என்கிறார். அவர் மேலும் கூறுகையில், "முதலில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நிமிஷா கொலை செய்து விட்டார், இப்போது பணம் கொடுத்து அவரை நாங்கள் மீட்க போகிறோம் என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் அந்த குடும்பத்திடம் மன்னிப்பைப் பெறப் போகிறோம். "பணம் இங்கு ஒரு முக்கியமான விஷயமே அல்ல, மன்னிப்பிற்கான ஒரு குறியீடு மட்டுமே. அதை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் தலால் அப்தோ மஹ்தி குடும்பத்தின் தனிப்பட்ட விருப்பம்," என்று கூறுகிறார் சாமுவேல் ஜெரோம். 'பணம் கொடுக்க அல்ல, மன்னிப்பு பெறவே செல்கிறோம்' "ஏமன் நாட்டின் ஒரு குடிமகனைக் கொலை செய்துவிட்டு, பணம் கொடுத்தால் மட்டும் விட்டுவிடுவார்களா? பல கொலை வழக்குகளில் உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் நிமிஷாவின் நிலையைப் புரிந்து ஏமன் நாட்டு அதிகாரிகள் பொறுமை காத்து வருகிறார்கள். நிமிஷா செய்த செயலை நான் நியாயப்படுத்தவில்லை ஆனால் அவர் எந்த சூழ்நிலையில் அதை செய்தார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்," என்கிறார் சாமுவேல் ஜெரோம். அவர் மேலும் கூறியது, "ஏமன் நாட்டின் ஷரியத் சட்டத்தின் படி பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மன்னிப்பைப் பெறுவதே முக்கியம். முதலில் ஏமன் பழங்குடி இனத்தலைவர்களுடன் நாங்கள் பேச வேண்டும். அவர்கள் எங்கள் மன்னிப்பை ஏற்க வேண்டும். அதன் பின் பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் பழங்குடித் தலைவர்கள் பேசுவார்கள். அந்த குடும்பம் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். பின்னர் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை ஏமன் நீதிமன்றத்தில் தெரிவித்த பின் நிமிஷா விடுதலை செய்யப்படுவார். இது ஒரு கூட்டு முயற்சி," என்கிறார் சாமுவேல். "பணம் மட்டுமே பிரதானம் என்பது போல சில ஊடகங்கள் சித்தரித்து விட்டதால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மனம் புண்பட்டுள்ளது. உங்கள் குடும்பத்தில் ஒருவரை கொன்றுவிட்டு மிகப்பெரிய தொகையைத் தருகிறோம் என்று சொன்னால் யாராவது ஒப்புக் கொள்வார்களா? இதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். "எனவே நான் வைக்கும் ஒரு வேண்டுகோள், நிமிஷா ஒரு சூழ்நிலைக் கைதி. அவரது நிலையைப் புரிந்து அந்த நாட்டினரே மன்னிப்பைக் குறித்து யோசிக்கும் போது, பலரும் பணம் கொடுத்து அழைத்து வருகிறோம் என்று எழுதுகிறார்கள். அது உண்மையில்லை," என்று கூறுகிறார் சாமுவேல். ஜனவரியில் ஏமனுக்கு பயணம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஏமனில் நிலவும் போர் சூழல் நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரிக்கு விசா கிடைத்தவுடன் ஜனவரி மாதத்தின் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் ஏமனுக்கு செல்லவிருப்பதாக கூறினார் சாமுவேல். "டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. கேரளாவைச் சேர்ந்த சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில் குழுவின் முயற்சியால் தான் இது நடந்தது. நிமிஷாவை மீட்பதில் அவர்களது பங்கு முக்கியமானது. இந்திய அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளனர். எல்லாம் சரியாக நடக்கும் என நம்புகிறோம்" என்கிறார் சாமுவேல் ஜெரோம். பிரேமா குமரியின் வழக்கறிஞர் கே.எல்.பாலச்சந்திரனிடம் பேசிய போது, "டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பல வருட போராட்டத்திற்கு கிடைத்துள்ள பலன். 2020-இல் நிலைமை ஏமனில் சீராக இருந்தபோதே அங்கு செல்ல எனக்கும் நிமிஷாவின் தாயாருக்கும் இந்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. "பின்னர் போர் சூழல் நிலவியதால் எங்களால் அங்கு செல்ல முடியாத நிலை நிலவி வந்தது. இப்போது இந்த தீர்ப்பால் அடுத்த மாதம் ஏமன் செல்ல பிரேமா குமரிக்கு விசா கிடைத்து விடும். நிமிஷாவை கண்டிப்பாக மீட்டு விடலாம் என்ற நம்பிக்கை உள்ளது. அங்கு போர் சூழல் உள்ளதால் நிலைமை சற்று பதற்றமாக தான் உள்ளது, ஆனாலும் பிரேமா குமாரி தன் மகளை மீட்பதில் உறுதியாக உள்ளார்," என்று அவர் கூறினார். 'தடைகளைத் தாண்டி மகளை மீட்டு வருவேன்' படக்குறிப்பு, நிமிஷாவின் தாய் பிரேமா குமாரி "அயல்நாட்டு மண்ணில் என் மகள் இறப்பதை நான் விரும்பவில்லை. அங்கு நிலைமை சரியில்லை, பாதுகாப்பில்லை எனக் கூறுகிறார்கள், ஆனாலும் அங்கு செல்வதில் உறுதியாக உள்ளேன். எனக்கு நம்பிக்கை உள்ளது, பாதிக்கப்பட்ட குடும்பம் எனது மகளை நிச்சயமாக மன்னித்து விடுவார்கள்," எனக் கூறுகிறார் நிமிஷாவின் தாய் பிரேமா குமாரி. நாட்கள் கடக்க கடக்க பிரேமாவின் தாங்கொணா துயர் அதிகரித்து வருகிறது. "நிமிஷாவிற்கு பெண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தைக்கு தாய் இருக்க வேண்டும்," என்கிறார் பிரேமா. அவர் தொடர்ந்து கூறியது, "நிமிஷா படிப்பில் சிறந்து விளங்கினார். நாங்கள் வறுமையில் இருந்ததால் அவரது பள்ளி மற்றும் செவிலியர் படிப்பிற்கான செலவை உள்ளூர் தேவாலயம் ஏற்றுக்கொண்டது. ஆனால், டிப்ளமோ படிப்பிற்கு முந்தைய பள்ளி தேர்வில் தேர்ச்சி பெறாததால் கேரளாவில் செவிலியராகப் பணிபுரிய நிமிஷா தகுதி பெறவில்லை. எனவே தான் ஏமன் சென்றார்," என்கிறார் பிரேமா குமாரி. "வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க ஏமன் சென்ற என் மகள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாட்டிக்கொள்வார் என கனவிலும் நினைக்கவில்லை. எப்படியாவது என் மகளை மீட்டு விடுவேன்," எனக் கூறுகிறார் பிரேமா குமாரி. https://www.bbc.com/tamil/articles/c8v2pn86pepo
-
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் - செய்திகள்
19 வயதின் கீழ் ஆசிய கிண்ணம் : பங்களாதேஷிடம் தோற்ற இலங்கை போட்டியிலிருந்து வெளியேறியது 14 DEC, 2023 | 09:55 AM (நெவில் அன்தனி) துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் புதன்கிழமை (13) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் பி குழு போட்டியில் பங்களாதேஷிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இலங்கை சுற்றுப் போட்டியிலிருந்து முதல் சுற்றுடன் வெளியேறியது. அஷிக்குர் ரஹ்மான் ஷிபி குவித்த ஆட்டம் இழக்காத அபார சதம் பங்களாதேஷுக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தது. இந்த சுற்றுப் போட்டியில் மிக மோசமாக விளையாடிய இலங்கை, அறிமுக அணி ஜப்பானை மாத்திரம் வெற்றிகொண்டு ஏமாற்றத்துடன் நாடு திரும்பவுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிராக திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியிலும் இலங்கை தோல்வி அடைந்திருந்தது. பங்களாதேஷுடனான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 200 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. புலிந்து பெரேரா (28), விஷ்வா லஹிரு (26), அணித் தலைவர் சினேத் ஜயவர்தன (25), ருசந்த கமகே (24), ரவிஷான் டி சில்வா (21), ஷாருஜன் சண்முகநாதன் (21), தினுர கலுபஹன (20) ஆகிய 7 வீரர்கள் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்ற போதிலும் அவர்களால் அணியை பலமான நிலைக்கு இட்டுச் செல்ல முடியாமல் போனது. பந்துவீச்சில் வசி சித்திக் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மாறூவ் இம்ரிதா 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையம் மஹ்புஸுர் ரஹ்மான் ரபி 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 40.5 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 204 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டி அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஆரம்ப வீரர் அஷிக்குர் ரஹ்மான் ஷிபி 11 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் ஆட்டம் இழக்காமல் 116 ஓட்டங்களைக் குவித்தார். அவரைவிட சௌதுர் ரிஸ்வான் 32 ஓட்டங்களையும் அஹ்ரார் அமின் 23 ஓட்டங்களையும் பெற்றனர். சௌதுர் ரிஸ்வானுடன் 2ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களையும் அரிபுல் இஸ்லாமுடன் 3ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களையும் அஹ்ரார் அமினுடன் 4ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களையும் அஷிக்குர் ரஹ்மான் ஷிபி பகிர்ந்து அணியின் வெற்றியை இலகுவாக்கினார். பந்துவீச்சில் கருக்க சன்கேத் 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். அரை இறுதியில் ஐக்கிய அரபு இராச்சியம் ஜப்பானுக்கு எதிராக நடைபெற்ற பி குழுவுக்கான மற்றொரு 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் 107 ஓட்டங்களால் வெற்றியீட்டிய ஐக்கிய அரபு இராச்சியம் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட ஐக்கிய அரபு இராச்சியம் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 320 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட ஜப்பான் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. ஏ குழுவிலிருந்து பாகிஸ்தான், இந்தியா இந்த சுற்றுப் போட்டியில் ஏ குழுவிலிருந்து பாகிஸ்தானும் நடப்பு சம்பியன் இந்தியாவும் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றுள்ளன. பாகிஸ்தான் தனது 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன் இந்தியா 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றது. அரை இறுதிப் போட்டிகள் 15ஆம் திகதி நடைபெறவுள்ளன. ஒரு அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - ஐக்கிய அரபு இராச்சிய அணிகளும் மற்றைய அரை இறுதிப் போட்டியில் இந்தியா - பங்களாதேஷ் அணிகளும் மோதவுள்ளன. அப் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் 17ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும். https://www.virakesari.lk/article/171675
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
2024 ஐபிஎல்: வெளியிடப்பட்டுள்ள ஏலத்திற்கான வீரர்கள் பட்டியல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024ன் ஏலத்திற்கான வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஐபிஎல் 2024ஆம் ஆண்டிற்கான ஏலம் டிசம்பர் 19, 2023 அன்று, துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் ஏலத்தில் 333 கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். 333 கிரிக்கெட் வீரர்கள் 214 பேர் இந்தியர்கள் மற்றும் 119 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர். அதிகபட்சமாக 10 அணிகளிலும் 77 இடங்கள் காணப்படுகின்றன. 77 இடங்களில் வெளிநாட்டு வீரர்களுக்கு 30 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணி 1.5 கோடி ரூபாய் அடிப்படை விலையுடன் 13 வீரர்கள் ஏலப் பட்டியலில் உள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் அணி 38.15 கோடி ரூபாவுடன் அதிக ஏல பணத்தொகையை கொண்டுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 13.15 கோடி ரூபாவுடன் குறைந்த ஏல பணத்தொகையை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/ipl-2024-auction-players-list-with-price-india-1702327818?itm_source=article
-
இந்தியா தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்
தென் ஆப்ரிக்காவிடம் தோல்வி - ஐ.பி.எல்.லில் சாதித்து சர்வதேச அரங்கில் சறுக்கிய இளம் வீரர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 13 டிசம்பர் 2023, 03:12 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹென்ட்ரிக்ஸ், கேப்டன் மார்க்ரம் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியை5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது தென் ஆப்பிரிக்க அணி. இந்திய அணி வெற்றி பெறுவதற்கு பல வாய்ப்புகள் இருந்தபோதிலும் அனுபவமற்ற பந்துவீச்சு, ஆல்ரவுண்டர்கள் அதிகம் இல்லாதது, தொடக்க வீரர்களின் மோசமான பேட்டிங் போன்றவற்றால் இந்திய அணி தோற்றது. தென் ஆப்ரிக்கா முன்னிலை முதலில் பேட் செய்த இந்திய அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்தது. ஆனால், ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இலக்கு திருத்தப்பட்டு 15 ஓவர்களில் 152 ரன்கள் சேர்க்க தென் ஆப்பிரிக்காவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதிரடியான தொடக்கத்தை அளித்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி நடுப்பகுதியில் தடுமாறினாலும் இறுதியில் 7 பந்துகள் மீதமிருக்கையில் 13.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஜடேஜாவுக்கு வாய்ப்பு ஏன்? இதில் என்ன வியப்பு என்றால், தென் ஆப்பிரி்க்க சுழற்பந்துவீச்சாளர் ஷம்ஸிக்கு சுழற்பந்துவீச்சு சிறப்பாக எடுபட்ட ஆடுகளம் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் ஜடேஜா, குல்தீப் யாதவ் பந்துவீசும்போது பெரிதாக டர்ன் ஆகவில்லை. அதிலும் ஜடேஜாவை இன்னும் எத்தனை நாட்களுக்கு ஆல் ரவுண்டர் என்று கூறிக் கொண்டு அணியில் வைத்திருக்கப் போகிறது இந்திய அணி நிர்வாகம் எனத் தெரியவில்லை. கடந்த 2009ம் ஆண்டிலிருந்து இந்திய அணியில் டி20 போட்டிகளில் ஆடி வரும் ஜடேஜா இதுவரை சர்வதேச அரங்கில் ஒரு அரைசதம்கூட அடிக்கவில்லை. கடந்த 2009ம் ஆண்டிலிருந்து விளையாடி வரும் ஜடேஜா கடந்த ஆண்டுதான் 9 போட்டிகளில் அதிகபட்சமாக 201 ரன்கள் குவித்துள்ளார். இப்படியிருக்கும் போது ஏன் ஜடேஜாவை ஆல்ரவுண்டர் வரிசையில் இன்னும் அணியில் வைத்திருக்கிறார்கள், இவருக்குப் பதிலாக அக்ஸர் படேல், அல்லது ரவி பிஷ்னோய் போன்ற லெக் ஸ்பின்னர்களுடன் களமிறங்கி இருக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய டி20 வரலாற்றில் 2வது முறை இந்திய அணியின் தொடக்க பேட்டர்கள் ஜெய்ஸ்வால், சுப்மான் கில் இருவரும் நேற்று டக்அவுட்டில் ஆட்டமிழந்தனர். இந்திய டி20 வரலாற்றில், கடந்த 2016ம் ஆண்டுக்குப்பின் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் டக்அவுட்டில் ஆட்டமிழந்தது நேற்று 2வது முறையாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் கெய்க்வாட், ஜெய்ஸ்வால் ஜோடி சிறப்பான தொடக்கத்தை ஒவ்வொரு ஆட்டத்திலும் அளித்தனர்.ஜெய்ஸ்வால் அதிரடியான பேட்டிங்கை கையில் எடுத்தபோது கெய்க்வாட் நிதானம் காட்டினார். இருவருமே டி20 போட்டிகளில் குறிப்பிடத்தகுந்த அளவு ரன்கள் குவித்துள்ளனர். ஆனால், சுப்மான் கில்லைப் பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் மட்டுமே கில் பெரிய பேட்டர் என்று கூறிக்கொள்ளலாம். மற்ற வகையில் சர்வதேச அரங்கில் இதுவரை 12க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் ஆடிய கில் ஒரு சதம் அடித்ததைத் தவிர்த்துப் பார்த்தால் பெரிதாக ஸ்கோர் ஏதும் செய்யவில்லை. ஆதலால், அடுத்த ஆட்டத்தில் ஜெய்ஸ்வாலுடன் ஆடுவதற்கு கில்லுக்குப் பதிலாக கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு வழங்கலாம். அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை எதிர்நோக்கி இந்திய அணி தயாராகி வரும் நிலையில், தகுதியான பேட்டர்களுக்கு வாய்ப்பை வழங்கலாம் என்று வர்ணனையாளர்கள் தெரிவித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES பேட்டிங்கில் சொதப்பல் இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை கேப்டன் சூர்யகுமார் யாதவ் (56), ரிங்கு சிங் 68 நாட்அவுட் ஆகியோரின் பங்களிப்பைத் தவிர்த்துப் பார்த்தால் இந்திய அணியின் ஸ்கோர் 80 ரன்களைக் கூட தாண்டாது. தொடக்க பேட்டர்கள் ஏமாற்றியதால், ஒட்டுமொத்த சுமையும் நடுவரிசை பேட்டர்களான சூர்யகுமார், ரிங்கு மீது விழுந்தது. இதில் திலக் வர்மா சிறிய கேமியோ ஆடி 29 ரன்களில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே முடிவதற்குள் இந்திய அணி 55 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற மோசமானநிலையில் இருந்துதான் மீண்டது என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யகுமார்-ரிங்கு சிங் 4வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து 70 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும். மற்ற வகையில் ஜிதேஷ் ஷர்மா(1), ரவீந்திர ஜடேஜா(19) பெரிதாக நிலைத்து ஆடவில்லை. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளில் கடைசிவரை பேட்டர்களைக் கொண்டிருக்கும் அணியாக இருக்கிறது. ஆனால், இந்திய அணியைப் பொறுத்தவரை 7-வது வரிசைக்குப்பின் பேட்டர்களோ அல்லது ஆல்ரவுண்டர்களோ இல்லாதது பெரிய குறை. ஆதலால் இந்திய அணியின் பேட்டர்கள் ஒவ்வொருவரும் தங்களின் ஆட்டத்தின் பாணியை மாற்றி அதிரடி ஆட்டத்தை கையாண்டால்தான் கடைசி வரிசை வீரர்கள் மீது சுமை ஏற்றாமல் இருக்க முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES கண்ணாடியை உடைத்த ரிங்கு ரிங்கு சிங் களத்தில் இருந்தவரை இந்திய அணியின் ரன்ரேட் நிச்சயமாக உயரும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால், 16 முதல் 18 ஓவர்களுக்கு இடையே 2 பவுண்டர்கள் மட்டுமே சென்றது. இருப்பினும் ரிங்கு அவ்வப்போது தனது அதிரடியான ஷாட்களால் சிக்ஸர் பவுண்டரி அடிக்கத் தவறவில்லை. மார்க்ரம் வீசிய ஓவரில் ரிங்கு சிங் லாங் ஆன் திசையில் அடித்த பந்து, மைதானத்தில் இருந்த பத்திரிகையாளர் அறையின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு சென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES ‘கட்டுக்கோப்பில்லாத’ வேகப்பந்துவீச்சு பந்துவீச்சைப் பொறுத்தவரை குல்தீப் யாதவ் மட்டுமே ஓரளவுக்குக் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். மற்ற வகையில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான தென் ஆப்பிரிக்க ஆடுகளத்தில்கூட சிராஜ், முகேஷ் குமார், அர்ஷ்தீப் ஆகியோர் லைன் லென்த் தவறித்தான் பந்துவீசினர். அதிலும் முதல் 2 ஓவர்களில் ஹென்ட்ரிக்ஸ், பிரிட்ஸீ அடித்த அடியைப் பார்த்து மிரண்ட சூர்யகுமார் 3வது ஓவரிலேயே ஜடேஜாவுக்கு வழங்கினார். அதிலும் முகேஷ் குமார் யார்கர் வீச முயற்சி செய்தாலும் அதில் பெரும்பகுதி “லோ ஃபுல்டாஸாக” மாறிவிட்டதால் பேட்டர்கள் எளிதாக பெரிய ஷாட்களை அடிக்க ஏதுவாக இருந்தது. அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சு ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து மோசமாக இருந்து வரும்நிலையில் அவரை ஏன் தென் ஆப்பிரிக்கத் தொடருக்கும் தேர்ந்தெடுத்தார்கள் என்பது கேள்வியாக சமூக வலைத்தளத்தில் எழுகிறது. இந்த ஆட்டத்திலும் அர்ஷ்தீப் 2 ஓவர்கள் வீசி31 ரன்களை வாரி வழங்கினார். ஒட்டுமொத்தத்தில் பும்ரா, ஷமி இல்லாத நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு பலம், பலவீனம் என்ன என்பது தெளிவாகி வருகிறது. இதே நிலையில் தயாராகினால், டி20 உலகக் கோப்பைக்கும், ஷமி, பும்ராவின் உதவியை இந்திய அணி நாடினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES அர்ஷ்தீப் சிங்,முகேஷ் குமார் போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் ஐபிஎல் போன்ற வேறுபட்ட தளத்தில் பந்துவீச்சை வெளிப்படுத்தினாலும் சர்வதேச தளம் என்று வரும்போது அவர்களின் திறமைக்கு உரைகல்லாக ஒவ்வொரு போட்டியும் மாறிவிடுகிறது. இந்த ஆட்டத்தில் சிராஜ் வீசிய முதல் ஓவரிலே 2 கேட்ச்களை இந்திய அணிவீரர்கள் தவறவிட்டனர். அதன்பின் 2வது ஸ்லிப் வரை வைத்த போதிலும் சுப்மான் கில் ஒரு கேட்சை தவறவிட்டார். கேட்சுகளை தவறவிடுவது வெற்றியைத் தவறவிடுவது போன்றதாகும். சூர்யகுமார், கில் தவறவிட்ட கேட்சுகளை பிடித்திருந்தால் ஹென்ட்ரிக்ஸ், பிரிட்ஸ்கீ தொடக்கத்திலேயே ஆட்டமிழந்திருப்பார்கள் ஆட்டமும் திசைமாறியிருக்கும். கடைசி நேரத்தில் விழிப்பு இந்திய அணி தனது வெற்றி குறித்து கடைசி நேரத்தில்தான் உணர்ந்தது போல் செயல்பட்டது. அதனால்தான், கடைசி நேரத்தில் பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்ததால், 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்க அணி இழந்தது. குல்தீப் யாதவ் தனது கடைசி ஓவரை பவுண்டரியின்றி வீசினார், முகேஷ் குமார், சிராஜ் கட்டுக்கோப்பாக வீசி நெருக்கடியளித்தனர். இந்த நெருக்கடி தரும் பந்துவீச்சை தொடக்கத்திலேயே செய்திருந்தால் ஆட்டம் வேறு திசையில் பயணித்திருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES ஹென்ட்ரிக்ஸ் அதிரடி தொடக்கம் கடந்த டி20 உலகக் கோப்பைக்கு ஹென்ட்ரிக்ஸைத் தேர்வு செய்யாமல் சென்றது தவறு என்பதை இந்த ஆட்டத்தில் ஹென்ட்ரிக்ஸ் நிரூபித்துவிட்டார். இந்தியப் பந்துவீச்சை வெளுத்துவாங்கிய ஹென்ட்ரிக்ஸ் 27 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். கேப்டன் மார்க்ரம் 17 பந்துகளி்ல் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரைத் தவிர மற்ற பேட்டர்கள் பெரிதாக பங்களிப்பு செய்யவில்லை என்றாலும், தென் ஆப்பிரிக்கா வென்றுள்ளது என்பதுதான் போட்டியின் சிறப்பாகும். ஒவ்வொரு பேட்டரும் சிறிய அளவு கேமியோ ஆடிவிட்டு சென்றது வெற்றியை விரைவாக எட்ட உதவியது. குயின்டன் டீ காக் இல்லாத நிலையில் வாய்ப்புப் பெற்ற ஹென்ட்ரிக்ஸ் தனக்குரிய இடத்தைத் தக்கவைக்கும் விதத்திலேயே பேட் செய்தார். முதல் 16 பந்துகளில் ஹென்ட்ரிக்ஸ், பிரிட்கீ இருவரும் 46 ரன்கள் சேர்த்து இந்திய அணியை திணறடித்தனர். அதன்பின் மார்க்கிரத்துடன் சேர்ந்த ஹென்ட்ரிக்ஸ் 5 ஓவர்களில் 54 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு கடைசி 6ஓவர்களில் 44 ரன்கள் தேவைப்பட்டது. கிளாசன்(7), மில்லர்(17) என விரைவாக ஆட்டமிழந்தாலும், ஸ்டப்ஸ்(14), பெலுக்வாயோ(10) இருவரும் சேர்த்து அதிரடியாக பேட் செய்து வெற்றிக்கு வித்திட்டனர். தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சில் யான்சென், ஷம்ஸியின் பந்துவீச்சு நேற்று அற்புதமாக இருந்தது. உலகக் கோப்பைத் தொடரில் கலக்கிய யான்சென் டி20 தொடருக்கும் தன்னை எளிதாக தகவமைத்துக்கொண்டார். ஜெய்ஸ்வால் பலவீனத்தை உணர்ந்து பேக்வேர்ட் பாயின்ட் திசையில் பீல்டரை நிறுத்தி கேட்சுக்கு வழி செய்தார். வில்லியம்ஸ், கோட்ஸி இருவரும் பவர்ப்ளே ஓவருக்குள் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு பெரிய நெருக்கடி ஏற்படுத்தினர். தென் ஆப்பிரிக்க மைதானங்கள் என்றாலே வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாகவும், பவுன்ஸருக்கு ஏதுவாகவும் அமைக்கப்பட்டிருக்கும். அந்த மைதானத்தில் சுழற்பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்திய தப்ரியாஸ் ஷம்ஸி ஆட்டநாயகன் விருது பெற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் தொடர் வெற்றிக்கு தென் ஆப்ரிக்கா முற்றுப்புள்ளி இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டநிலையில் கடைசி ஆட்டம் நாளை(14ம்தேதி) ஜோகன்னஸ்பர்க் நகரில் நடக்கிறது. இதில் இந்திய அணி வென்றால் டி20 தொடரை 1-1 என்று சமன் செய்ய முடியும். இதன் மூலம் கடைசியாக விளையாடிய 3 தொடர்களையும் வென்று டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியின் வெற்றிநடைக்கு தென் ஆப்ரிக்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளது- சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி உள்நாட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய கையோடு தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டது. இரண்டாவது டி20 போட்டி இந்திய அணியின் பலவீனங்களை அம்பலமாக்கியுள்ளது. முதல்ஆட்டமே அதிர்ச்சியாக அமைந்துள்ளதால், புதிய மைதானம், காலநிலை, உள்ளூர் ரசிகர்கள் ஆகியவற்றுக்கு ஏற்றாற்போல் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். ஐ.பி.எல்.லில் சாதித்த சுப்மன் கில், முகேஷ் குமார் போன்ற வீரர்கள் சர்வதேச அரங்கில் சறுக்கியுள்ளனர். இதனால், மூத்த வீரர்களுக்கு விடை கொடுத்துவிட்டு இளம் வீரர்களைக் கொண்டு டி20 போட்டிகளில் சாதிக்கும் இந்திய அணியின் எதிர்கால திட்டங்களுககு சிக்கல் ஏற்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cx8ve7dnpl9o
-
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் - செய்திகள்
19 வயதின் கீழ் ஆசிய கிண்ண கிரிக்கெட் : ஐக்கிய அரபு இராச்சியத்திடம் வீழ்ந்தது இலங்கை 12 DEC, 2023 | 05:23 AM (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிராக துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை முற்றிலும் எதிர்பாராத விதமாக 2 விக்கெட்களால் தோல்வி அடைந்தது. இந்தத் தோல்வியை அடுத்து அரை இறுதியில் விளையாடும் இலங்கையின் வாய்ப்பு குறைந்துள்ளது. இந் நிலையில் பங்களாதேஷுக்கு எதிராக புதன்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் சிறந்த நிகர ஓட்ட வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்றால் மாத்திரமே அரை இறுதிக்கு முன்னேற முடியும். முன்வரிசை வீரர் தனிஷ் சூரி பெற்ற அரைச் சதமும் மத்திய வரிசையில் மாறூப் மேச்சன்ட், அணித் தலைவர் ஆயன் அப்சால் கான், அம்மார் படாமி ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டங்களும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெற்றியில் பிரதான பங்காற்றின. பி குழுவுக்கான அப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 221 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட ஐக்கிய அரபு இராச்சிய அணி 48.2 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடிய தனிஷ் சூரி 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 75 ஓட்டங்களைப் பெற்றார். அவருடன் 3ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்த இதான் டி சோசா 17 ஓட்டங்களைப் பெற்றார். அவர்களைவிட மத்திய வரிசையில் அப்சால் கான் 33 ஓட்டங்களையும் மாறூப் மேச்சன்ட் 20 ஓட்டங்களையும் அம்மார் படாமி ஆட்டம் இழக்காமல் 17 ஓட்டங்களையும் ஆய்மன் அஹமத் ஆட்டம் இழக்கமால் 10 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கருக்க சன்கேத் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றது. அணித் தலைவர் சினேத் ஜயவர்தனவும் ருசந்த கமகேயும் 3ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டபோதிலும் ஜயவர்தன ஆட்டம் இழந்த பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன. எவ்வாறாயினும் தினுர களுபஹனவும் விஷ்வா லஹிருவும் 9ஆவது விக்கெட்டில் சரியாக 50 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலம்சேர்த்தனர். ஆனால், பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகியவற்றில் பிரகாசிக்கத் தவறியதால் இலங்கை தோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் தினுர கலுபஹன ஆட்டம் இழக்காமல் 57 ஓட்டங்களையும் சினேத் ஜயவர்தன 49 ஓட்டங்களையும் ருசந்த கமகே, 10ஆம் இலக்க வீரர் விஷ்வா லஹிரு ஆகியோர் தலா 26 ஓட்டங்களையும் ஆரம்ப வீரர் புலிந்து பெரேரா 24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஆயன் அப்சால் கான் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஓமித் ரெஹ்மான் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/171502
-
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் - செய்திகள்
19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட்டில் ஜப்பானை சந்திக்கிறது இலங்கை 09 DEC, 2023 | 10:07 AM (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நேற்று ஆரம்பமான 8 நாடுகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் 10ஆவது அத்தியாயத்தில் பங்குபற்றும் இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் ஜப்பானை இன்று சனிக்கிழமை (09) எதிர்த்தாடவுள்ளது. இப் போட்டி துபாயில் அமைந்துள்ள ஐசிசி கிரிக்கெட் பயிற்சியக 2ஆம் இலக்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் அறிமுக அணியும் கிரிக்கெட்டின் மழலையுமான ஜப்பானை இலங்கை இலகுவாக வெற்றிகொள்ளும் என பெரிதும் நம்பப்படுகிறது. 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணப் போட்டிக்கு முன்னதாக மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய அணிகளுடனான இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் ஈட்டிய வெற்றி இலங்கை அணிக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. சினேத் ஜயவர்தன தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி, இந்த வருடம் முதல் தடவையாக சம்பியனாகும் குறிக்கோளுடன் விளையாடவுள்ளது. குழு பியில் ஜப்பானை இன்று எதிர்த்தாடும் இலங்கை, திங்கட்கிழமை ஐக்கிய அரபு இராச்சியத்தையும் புதன்கிழமை பங்களாதேஷையும் சந்திக்கவுள்ளது. ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் எந்த அணியையும் குறைத்து மதிப்பிடப் போவதில்லை எனவும் திறமையாக விளையாடி சகல போட்டிகளிலும் வெற்றிபெற்று ஆசிய இளையோர் சம்பியன் பட்டத்தை வென்றெடுப்பதே தமது அணியின் குறிக்கோள் எனவும் சினேத் ஜயவர்தன, இங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார். 'எமது அணி சம பலம்வாய்ந்தது. 8ஆம் இலக்கம் வரை துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கக் கூடியவர்கள் இடம்பெறுகின்றனர். எனவே சகல போட்டிகளிலும் திறமையாக விளையாடி வெற்றிபெற முயற்சிப்போம்' என அவர் கூறியிருந்தார். இதேவேளை, பி குழுவில் இடம்பெறும் பங்களாதேஷுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான மற்றொரு போட்டி ஐசிசி கிரிக்கெட் பயிற்சியக 1ஆம் இலக்க மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. 19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாம் சினேத் ஜயவர்தன (தலைவர், றோயல்), மல்ஷ தருப்பதி (உதவித் தலைவர், றிச்மண்ட்), புலிந்து பெரேரா (தர்மராஜ), விஷேன் ஹலம்பகே (புனித பேதுருவானவர்), ரவிஷான் டி சில்வா (பி. டி எஸ். குலரட்ன), சாருஜன் சண்முகநாதன் (புனித ஆசீர்வாதப்பர்), தினுர களுபஹன (மஹிந்த), விஹாஸ் தெவன்க (தேர்ஸ்டன்), விஷ்வா லஹிரு (ஸ்ரீ சுமங்கல), கருக்க சன்கேத் (வத்தளை, லைசியம்), துவிந்து ரணசிங்க (மஹநாம), ஹிருன் கப்புருபண்டார (புனித சூசையப்பர்), ருசந்த கமகே (புனித பேதுருவானவர்), தினுக்க தென்னக்கோன் (திரித்துவம்), ரவிஷான் பெரேரா (ஆனந்த). பயணிக்கும் பதில் வீரர்கள்: சுப்புன் வடுகே (திரித்துவம்), ஜனித் பெர்னாண்டோ (புனித ஜோசப் வாஸ்) 19 வயதுக்குட்பட்ட ஜப்பான் குழாம் கோஜி அபே (தலைவர்), கஸுமா கேட்டோ ஸ்டபர்ட் (உதவித் தலைவர்), சிஹாயா அரகவா, ஷொட்டாரோ ஹிரட்சுகா, சார்ள்ஸ் ஹின்ஸே, ஹிரோடக்கே கக்கினுமா, ஹியூகோ கெலி, டெனியல் பன்ச்ஹேர்ஸ்ட், நிஹார் பாமர், ஆதித்யா பாத்கே, திமத்தி முவர், டோமோ ரெயர், ஆரவ் திவாரி, கீபர் யமாமொட்டோ லேக். https://www.virakesari.lk/article/171295
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அண்ணை இது மிளகாயோ பயிற்றங்காயோ?!
-
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் - செய்திகள்
19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் : நடப்பு சம்பியன் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இலகுவான வெற்றி 09 DEC, 2023 | 10:08 AM (என்.வீ.ஏ.) ஐக்கிய அரபு இராச்சியத்தில் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஏ குழுவில் நடப்பு சம்பியன் இந்தியாவும் முன்னாள் இணை சம்பியன் பாகிஸ்தானும் தலா 7 விக்கெட்களால் வெற்றியீட்டின. ஐசிசி கிரிக்கெட் பயிற்சியக 1ஆம் இலக்க மைதானத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் அர்ஷின் குல்கர்னியின் சகலதுறை ஆட்ட உதவியுடன் இந்தியா 7 விக்கெட்களால் வெற்றிபெற்றது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஜம்ஷித் ஸத்ரான் அதிக்பட்சமாக 43 ஓட்டங்களைப் பெற்றதுடன் மொஹமத் யூனுஸ் (26), நுமான் ஷா (25), அக்ரம் மொஹமத்ஸாய் (20) ஆகிய மூவரும் சுமாரான பங்களிப்பை வழங்கினர். பந்துவீச்சில் அர்ஷின் குல்கர்னி 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ராஜ் லிம்பானி 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நாமன் திவாரி 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 174 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 37.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. அர்ஷின் குல்கர்னி ஆட்டம் இழக்காமல் 70 ஓட்டங்களையும் முஷீர் கான் ஆட்டம் இழக்காமல் 48 ஓட்டங்களையும் பெற்றதுடன் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 98 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை இலகுவாக்கினர். பாகிஸ்தான் வெற்றி நேபாளத்திற்கு எதிராக ஐசிசி கிரிக்கெட் பயிற்சியக 2ஆம் இலக்க மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு ஏ குழு போட்டியில் நேபாள அணியை 7 விக்கெட்களால் பாகிஸ்தான் வெற்றிகொண்டது. மொஹமத் ஸீஷானின் துல்லியமான பந்துவீச்சு, அஸான் அவய்ஸ், சாத் பெய்க் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள் என்பன பாகிஸ்தானை வெற்றிபெறச் செய்தன. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட நேபாள அணி 47.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது. உத்தம் மகர் 51 ஓட்டங்களையும் திப்பேஷ் கண்டல் 31 ஓட்டங்களையும் பெற்றதுடன் 6ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அவர்களை விட ஆரம்ப வீரர் அர்ஜுன் குமல் 21 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் மொஹமத் ஸீஷான் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 9.2 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் அணி 26.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்று வெற்றயீட்டியது. துடுப்பாட்டத்தில் அஸான் அவய்ஸ் ஆட்டம் இழக்காமல் 56 ஓட்டங்களையும் சாத் பெய்க் 50 ஓட்டங்களையும் பெற்றதுடன் அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 108 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பந்துவீச்சில் குல்சான் ஜா 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆகாஷ் திரிபதி 8 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/171294
-
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் - செய்திகள்
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பம் 08 DEC, 2023 | 11:59 AM (எம்.எம்.சில்வெஸ்டர்) ஆசிய கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடத்தப்படுகின்ற 10ஆவது 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று (08) வெள்ளிக்கிழமை இலங்கை நேரப்படி முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சந்திப்பதுடன், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை நேபாள அணி எதிர்த்தாடவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கின்ற இப்போட்டித் தொடரின் குழு 'ஏ'யில் நடப்புச் சம்பியனான இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 4 அணிகள் அங்கம் வகிக்கின்றன. அத்துடன் இலங்கை, பங்களாதேஷ், ஐக்கிய அரபு இராச்சியம், ஜப்பான் ஆகிய 4 அணிகள் குழு 'பீ'யில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் உள்ள அணிகளும் தங்கள் குழுவிலுள்ள ஏனைய 3 அணிகளுடன் தலா ஒரு தடவை எதிர்த்து விளையாடும். புள்ளிகள் பட்டியலில் தத்தம் குழுவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். அரையிறுதிப் போட்டிகள் எதிர்வரும் 15ஆம் திகதியன்று நடைபெறவுள்ளது. அத்துடன், இறுதிப் போட்டி 17ஆம் திகதியன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போட்டிகள் அனைத்தும் இலங்கை நேரப்படி முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. சினெத் ஜயவர்தன தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி நாளைய தினம் (9) ஜப்பான் அணியையும், 11ஆம் திகதியன்று ஐக்கிய அரபு இராச்சிய அணியையும், 13ஆம் திகதியன்று பங்களாதேஷ் அணியையும் எதிர்த்தாடவுள்ளது. சினெத் ஜயவர்தன தலைமையிலான இலங்கை அணியில் மல்ஷ தருபதி (உப அணித்தலைவர்), புலிந்து பெரேரா, ருசந்த கமகே, ரவிஷான் நெத்சர, சாருஜன் சண்முகநாதன், தினுர கலுபஹன, விஷ்வ லஹிரு, கருக சங்கேத்த, விஷேன் எலம்பகே, ருவிஷான் பெரேரா, விஹாஸ் தெவ்மிக, துவிந்து ரணதுங்க, ஹிருன் கப்புரு பண்டார, தினுக்க தென்னகோன் ஆகியோர் 15 பேர் அங்கம் வகிப்பதுடன், ஜனித் பெர்னாடோ, சுப்புன் வடுகே ஆகிய இருவரும் மேலதிக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர். 1989ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்றுள்ள 9 தொடர்களில் 7 தடவைகள் இந்தியா சம்பியன் பட்டத்தை வென்றுள்ளதுடன், ஒரு தடவை இந்தியா மற்றும் பாகிஸ்தான் (2012) ஆகியன கூட்டாக சம்பியன் பட்டத்தை வென்றிருந்தன. 2017இல் மலேஷியாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண போட்டியில் ஆப்கானிஸ்தான் சம்பியனாகியிருந்தது. 5 தடவைகள் உப சம்பியன் பட்டம் வென்றுள்ள இலங்கை ஒரு தடவை கூட சம்பியன் பட்டம் வென்றதில்லை. இந்த முறை அதனை மாற்றியமைத்து முதல் தடவையாக சம்பியன் பட்டம் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். https://www.virakesari.lk/article/171240
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
'காஸாவின் கடும் குளிரில் அரைநிர்வாணமாக்கி சித்ரவதை செய்தனர்' - ஒரு பாலத்தீன குடிமகனின் வாக்குமூலம் படக்குறிப்பு, இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன கட்டுரை தகவல் எழுதியவர், ஈதர் ஷைல்பி, ஷிரீன் யூசுப் பதவி, பிபிசி நிருபர், அரபு சேவை 3 மணி நேரங்களுக்கு முன்னர் 22 வயதான பாலத்தீனர் ஒருவர் கடந்த வியாழனன்று பிபிசியிடம், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் (IDF) வடக்கு காஸாவில் தான் சிறைப்பிடிக்கப்பட்டதையும், அதன் பிறகு அவருக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றியும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவருடன் சேர்த்து காஸா பகுதியைச் சேர்ந்த பலரை இஸ்ரேலிய இராணுவம் கைது செய்தது. இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை பிபிசி உறுதி செய்தது. அதில் உள்ளாடை மட்டுமே அணிந்த பல ஆண்கள் தரையில் முட்டிபோட்டவாறு இருப்பதைக் காண முடிகிறது. அருகே நிற்கும் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் அவர்களது துணிகளை அப்புறப்படுத்துவதைக் காண முடிகிறது. காஸா பகுதிக்கு வடக்கே உள்ள பெய்ட் லஹியாவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. "அவர்கள் எங்களை சாலையில் அமர வைத்தனர்," என்று ஒரு இளைஞர் தொலைபேசியில் பிபிசியிடம் கூறினார். பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் மற்றும் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து அவர், "சுமார் மூன்று மணி நேரம் அங்கேயே அமர்ந்திருந்தோம். லாரிகள் வந்த பின்னர் எங்கள் கைகளையும் கண்களையும் கட்டினர். பின்னர் வேறொரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம்," என்று விவரித்தார். அந்த வீடியோவில், ஏராளமான ஆண்கள் சாலையோரம் வரிசையாக அமர்ந்திருப்பதைக் காணலாம். காலணிகளைக் கழற்றச் சொன்னதாகத் தெரிகிறது. அவர்களது காலணிகள் எங்கும் சிதறிக் கிடக்கின்றன. அந்த வீடியோவில் இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் கவச வாகனங்கள் அவர்களைச் சுற்றி இருப்பதையும், இராணுவ வீரர்கள் அந்த ஆண்களைக் கண்காணித்துக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது. இஸ்ரேலிய இராணுவத்தால் கேட்கப்பட்ட கேள்விகள் இச்சம்பவம் தொடர்பான மற்றுமொரு வீடியோவில் இவர்கள் இராணுவ ட்ரக் வண்டிகளில் எங்கோ அழைத்துச் செல்லப்படுவதைக் காணமுடிகிறது. இவர்களை இஸ்ரேல் ராணுவத்திடம் சரணடைந்த ஹமாஸ் தீவிரவாதிகளாக இஸ்ரேல் ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், தான் மிகவும் மோசமான முறையில் விசாரிக்கப்பட்டதாக அந்த இளைஞர் கூறினார். பாலத்தீன கிளர்ச்சிக் குழுவான ஹமாஸ் உடனான அவரது தொடர்பு குறித்து கேட்கப்பட்டது. மற்றொரு புகைப்படம் (பிபிசி அதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை) அவர்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் மண்டியிட்டு இருப்பதைக் காட்டுகிறது. இவர்கள் ஒரு மணல்மேடு அருகே அமர்ந்திருப்பதாகத் தெரிகிறது. ‘வெறும் காலில் உடைந்த கண்ணாடிமேல் நடக்க வைத்தனர்’ பட மூலாதாரம்,MOHAMMED LUBBAD இந்த 22 வயது இளைஞரின் புகைப்படமே போதுமான ஆதாரமாக இருக்கிறது. சம்பவம் நடந்த இடம் குறித்து பிபிசியிடம் அவர் கூறியதும் சரியாக ஒத்துப் போகிறது. தானும், தன் தந்தையும், ஐந்து உறவினர்களும் அழைத்துச் செல்லப்பட்ட இடம் மணல் மேடுகளால் நிறைந்திருந்தது என்று அவர் கூறியிருந்தார். தான் அங்கு கிட்டத்தட்ட முழு நிர்வாணமாக விடப்பட்டதாகவும், இருப்பினும் இரவில் போர்த்துவதற்கு ஒரு போர்வை வழங்கப்பட்டது எனவும் அவர் கூறுகிறார். கேள்விகளுக்கு பதில் அளித்த பின் ஒரு புதிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்னர் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் கூறுகிறார். அவர் கூறுகையில், “எனது தந்தை மற்றும் எனது உறவினர் தவிர அனைவரும் விடுவிக்கப்பட்டோம். எனது தந்தை ஐக்கிய நாடுகளின் நிவாரண நிறுவனமான UNRWA உடன் பணிபுரிகிறார். எதற்காக அவரை அழைத்துச் சென்றார்கள் என்று எனக்கு புரியவில்லை," என்றார். அவர் தொடர்ந்து, "கற்கள் மற்றும் உடைந்த கண்ணாடிகள் சிதறிக் கிடந்த இருள் நிறைந்த சாலையில் வெறுங்காலுடன் நடந்தோம்," என்கிறார். சிறைபிடிக்கப்பட்ட 400 பேர் பட மூலாதாரம்,GETTY IMAGES பாலத்தீன குடிமகனான முகமது லுபாத் பெல்ஜியத்தில் வசித்து வருகிறார். அவர், 10 குடும்ப உறுப்பினர்களுடன் கைது செய்யப்பட்ட தனது சகோதரர் இப்ராஹிமைப் பற்றி சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஒரு புகைப்படத்தில், கைது செய்யப்பட்டவர்கள் மத்தியில் அமர்ந்திருந்த அண்ணன் இப்ராஹிமின் முகத்தை வட்டமிட்டு, 'இவர் என் சகோதரர்' என்று எழுதியுள்ளார். அந்த படத்தில், அவரது சகோதரர் தனது பெயர் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்துள்ளார். பின்னர் இது குறித்து பிபிசியிடம் பேச முகமது ஒப்புக்கொண்டார். "என் அண்ணன் இப்ராஹிமை கைது செய்து அழைத்துச் செல்வதற்கு முன், வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் இரண்டு மணி நேரம் பேசினேன். என் சகோதரர் ஒரு கணினிப் பொறியாளர்," என்று அவர் கூறினார். இப்ராஹிமுக்கு இரண்டு மகள்கள் இருப்பதாக அவர் பிபிசியிடம் கூறினார். தங்கள் வீடு மற்றும் பெய்ட் லஹியா கிராமம் முழுவதும் இஸ்ரேலிய இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக சகோதரர் தன்னிடம் கூறியதை முகமது நினைவு கூறுகிறார். அவர் தொடர்ந்து கூறியது "இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு நான் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவைப் பார்த்தேன். அதில் என் சகோதரனை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டேன், மேலும் சில அண்டை வீட்டுக்கார்களையும் அந்த வீடியோவில் பார்த்தேன்." இரண்டு உறவினர்களைத் தவிர அவரது மற்ற உறவினர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் 35 வயதான அஹ்மத் லுபாத், ஆசிரியர் வேலை பார்க்கும் அவர் நான்கு பிள்ளைகளின் தந்தையும் ஆவார். மனித உரிமை ஆர்வலரும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமான அய்மன் லுபாத் என்ற உறவினரும் இதில் உள்ளார். தனது குடும்பம் மிகவும் சாதாரணமானது என்றும் இராணுவத்துடன் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறுகிறார் முகமது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் உறவினர் பிபிசியிடம் கூறுகையில், இஸ்ரேல் மொத்தம் 400 பேரை சிறை பிடித்தது, அதில் 250 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேல் ராணுவத்தின் பதில் என்ன? பட மூலாதாரம்,அல்-அரேபி அல்-ஜதீத் படக்குறிப்பு, பாலத்தீன பத்திரிகையாளர் தியா அல்-கஹ்லூத் வீடியோவைப் பற்றி கேட்டபோது, இஸ்ரேலிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம், பிடித்து வைக்கப்பட்ட அனைவரும் இராணுவத்தில் சேரும் வயதுடையவர்கள் என்றும், மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட பகுதிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டவர்கள் இவர்கள் என்றும் கூறினார். வடக்கு காஸாவில் தரைவழித் தாக்குதல்களை நடத்துவதற்கு முன், காஸாவின் சமவெளியில் இருந்து தெற்கே செல்லுமாறு இங்குள்ள மக்களை இஸ்ரேல் கேட்டுக் கொண்டது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் புகைப்படம் மற்றும் வீடியோ பற்றி நேரடியாகக் கருத்து தெரிவிக்காமல், "இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் வீரர்கள் மற்றும் ஷின் பெட் அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகளை பிடித்து வைத்து விசாரித்தனர்," என வியாழனன்று கூறினார் இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி. அவர் தொடர்ந்து கூறியது, "இவர்களில் பலர் 24 மணித்தியாலங்களுக்குள் எமது படைகளிடம் சரணடைந்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் அவர்களிடம் இருந்து பெறப்படும் புலனாய்வுத் தகவல்கள் யுத்தத்தைத் தொடரப் பயன்படுத்தப்படும்." இஸ்ரேலிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் எலோன் லெவி வெள்ளிக்கிழமை பிபிசியிடம், வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா மற்றும் ஷெஜாயாவில் மக்கள் சிறை பிடிக்கப்பட்டதாகக் கூறினார். இந்த இரண்டு இடங்களும் "ஹமாஸின் கோட்டைகளாகவும் அவர்களின் முக்கிய சந்திப்பு பகுதிகளாகவும் கருதப்படுகின்றன," என்றார். இவர்களில் யார் ஹமாஸ் பயங்கரவாதிகள், யார் பொது மக்கள் என்பதைத் தெரிந்துகொள்ள இவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றார். 'இஸ்ரேலிய இராணுவத்தின் அட்டூழியத்திற்கு இந்த படங்களே சாட்சி" இங்கிலாந்திற்கான பாலத்தீன தூதர் தனது சமூக ஊடகப் பதிவில், "ஐ.நா. முகாம்களில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட சாதாரண குடிமக்களை இஸ்ரேலிய இராணுவம் நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தியதை அறிவிக்கும் படங்கள் இவை," என்று கூறினார். "இந்த படங்கள் மனிதகுல வரலாற்றில் மிக மோசமான நினைவுகளுக்கு சாட்சியாக இருக்கும்," என்று தூதர் ஹுஸாம் ஸோம்லாட் கூறினார். கைது செய்யப்பட்டவர்களில் பாலத்தீன ஊடகவியலாளரான தியா அல் கஹ்லூத்தும் அடங்குவார். அவர் அல்-அரபி அல்-ஜாதித் என்ற அரபு செய்தித்தாளின் காஸா பணியகத் தலைவர் ஆவார். இதை அந்த செய்தித்தாள் வியாழக்கிழமை அன்று உறுதிப்படுத்தியது. தியா அல் கஹ்லூத்தின் உறவினர், முகமது அல்-கஹ்லூத், காஸாவில் பிபிசியில் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளராகப் பணிபுரிகிறார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 24 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார். "அவர்களில் 12 பேரை நான் வைரலான வீடியோக்கள் மற்றும் படங்களிலிருந்து அடையாளம் கண்டுக் கொண்டேன்," என்கிறார் 27 வயதான முகமது. அதில் ஏழு நபர்கள் மட்டுமே வெள்ளிக்கிழமை அன்று விடுதலை செய்யப்பட்டதாக அவர் கூறுகிறார். "விடுதலை செய்யப்பட்டவர்கள் காஸாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான எல்லைக்கு அருகில் விடுவிக்கப்பட்டனர். எனக்குத் தெரிந்தவரை, ஜிகிம் அருகே உள்ள எல்லையில் இஸ்ரேலிய இராணுவத்தால் விடுவிக்கப்பட்டனர்," என்கிறார் முகமது. அவரது உறவினர்கள் வீட்டிற்கு செல்ல ஆறு கிலோமீட்டர்கள் நடக்க வேண்டியிருந்தது என முகமது கூறுகிறார். ஒரு அரபு மொழி செய்தி இணையதளம் (நியூ அரப் என்ற ஆங்கில மொழி இணையதளம் அதற்கு உள்ளது) அல்-கஹ்லூத்தின் கைது மிகவும் அவமானகரமானது என்று கடுமையாக விமர்சித்துள்ளது. "பாலத்தீன பிராந்தியத்தில் நடக்கும் பத்திரிகையாளர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை சர்வதேச சமூகம், ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைகளுக்காகப் பணியாற்றும் கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் ஏஜென்சிகள் கண்டிக்க வேண்டுமென நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று அந்த செய்தித்தாள் வேண்டுகோள் விடுத்துள்ளது. தியா அல்-கஹ்லூத்தை கைது செய்ததாக கூறப்படும் ஐடிஎஃப்-யிடம் இது குறித்து பிபிசி கேள்வி எழுப்பியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cjkp31447vlo
-
சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரித் திட்டம் ; இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பம் அடுத்த மாதம் கோரப்படும் - நிதி இராஜாங்க அமைச்சர் 10 DEC, 2023 | 11:06 PM (இராஜதுரை ஹஷான்) அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதலாம் கட்டத்தை முழுமையாக மீளாய்வு செய்யவும், இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் கோருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ள முதல் கட்டம் தொடர்பில் முழுமையான மீளாய்வு மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முதலாவது கட்டத்தில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு கண்டு இரண்டாம் கட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இரண்டாம் கட்டத்துக்காக அடுத்த மாதம் விண்ணப்பம் கோர எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 14 இலட்சத்து 6932 பயனாளர்களுக்கான ஒக்டோபர் மாத தவணை கொடுப்பனவு வங்கி கணக்குகளுக்கு வைப்பிடும் பணிகள் நிறைவுப்பெற்றுள்ளன. கடந்த செப்டெம்பர் தவணை கொடுப்பனவை பெற்றுக்கொண்ட 13 இலட்சத்து 77,000 பயனாளர்களை காட்டிலும் ஒக்டோபர் மாதம் 29,932 பயனாளர்கள் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் பயனாளர்களின் எண்ணிக்கையை 20 இலட்சமாக வரையறை செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நலன்புரி கொடுப்பனவுகளுக்காக மாத்திரம் 205 பில்லியன் ரூபா வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/171389
-
உடுப்பிட்டி மதுபானசாலைக்கு எதிராக தொடர் நடவடிக்கையில் ஈடுபட சமூக நல அமைப்புகள் தீர்மானம்
Published By: VISHNU 10 DEC, 2023 | 03:15 PM யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி மீளவும் மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு எதிராக சமூக மட்ட அமைப்புகள் தொடர் நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளன. உடுப்பிட்டி விநாயகர் சனசமூக நிலையத்தில், நேற்று சனிக்கிழமை (9) உடுப்பிட்டி சமூகமட்ட அமைப்புக்கள் இவ்விடயம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டன. கரவெட்டி பிரதேச செயலாளர் நேரடியாகவும், வாய்மொழி மூலமாகவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், தனக்கு அறிவுறுத்தியதனால் தான் இடத்துக்கான சிபாரிசினை வழங்கியதாக குறிப்பிட்டதற்கு இணங்க சமூகமட்ட அமைப்புக்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி மற்றும் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி ஆகியவற்றிலிருந்து 500 மீற்றருக்கும் குறைவான தொலைவில் உடுப்பிட்டிச் சந்தியிலிருந்து நவிண்டில் நோக்கிய வீதியில் இமையாணன் மேற்கில், பிரதான வீதியிலேயே இந்த மதுபானசாலை அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இமையாணன் இ.த.க பாடசாலையிலிருந்தும் நவிண்டில் தாமோதரா பாடசாலையிலிருந்தும் இந்த மதுபானசாலை மிகக் குறைந்த தூரத்தில் இருப்பதால், இது மாணவர்கள் மத்தியில் மதுபான பாவனையை ஊக்கப்படுத்திவிடும் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/171382
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உள்நுழைந்த பின் கருத்துக்களத்தில் இருக்கும் போதும் தற்போது தெரிகிறது திண்ணை. நன்றி மோகன் அண்ணா மற்றும் நிர்வாகிகள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் ராணுவம் பாலத்தீனர்களை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்ததா? கட்டுரை தகவல் எழுதியவர், பால் ஆடம்ஸ் பதவி, பிபிசி செய்திகள், ஜெருசலேம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கான் யூனிஸ் மற்றும் காஸாவின் வடக்குப் பகுதியில் சண்டை மூண்டுள்ள நிலையில், பல பாலத்தீனியர்களை இஸ்ரேல் பிடித்து வைத்துள்ளதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. பிபிசியால் சரிபார்க்கப்பட்ட இந்தக் காட்சிகளில் அவர்கள் தங்கள் உள்ளாடைகளைக் களையப்பட்டு, தரையில் மண்டியிட்டு, இஸ்ரேலிய படையினரால் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. காஸா பகுதியின் வடக்கே உள்ள பெய்ட் லாஹியாவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதில் சில ஆண்கள் விடுவிக்கப்பட்டதாக பிபிசிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட ஆண்களில் ஒருவர் நன்கு அறியப்பட்ட பாலத்தீனிய பத்திரிகையாளர் ஆவார். வீடியோவை பற்றிக் கேட்டதற்கு, இஸ்ரேலிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் அனைவரும் ராணுவத்தில் சேர்வதற்கான வயதுடையவர்கள் என்றும், பல வாரங்களுக்கு முன்பே பொதுமக்கள் வெளியேறியிருக்க வேண்டிய பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டவர்கள் என்றும் கூறினார். வீடியோவில், டஜன் கணக்கான ஆண்கள் ஒரு நடைபாதையில் வரிசையாக நிற்கிறார்கள் மற்றும் சாலை முழுவதும் சிதறிக் கிடக்கும் தங்கள் காலணிகளை கழற்றச் சொன்னதாகத் தெரிகிறது. இஸ்ரேலிய படைகளும், கவச வாகனங்களும் அவர்களின் பாதுகாப்புக்காக நிற்கின்றன. மற்ற படங்கள் அவர்கள் ராணுவ டிரக்குகளில் கொண்டு செல்லப்படுவதைக் காட்டுகின்றன. இஸ்ரேலிய ஊடகங்களில், இந்தக் கைதிகள் சரணடைந்த ஹமாஸ் போராளிகள் என்று வர்ணிக்கப்படுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES இன்னும் பிபிசியால் சரிபார்க்கப்படாத மற்றொரு படத்தில் புல்டோசரால் தோண்டப்பட்ட பெரிய குழியாகத் தோன்றும் இடத்தில் மனிதர்கள் கண்களை மூடியபடி மண்டியிட்டுக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF), இந்தப் படங்கள் குறித்து நேரடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி வியாழன் அன்று, "இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் போராளிகள் மற்றும் ஷின் பெட் அதிகாரிகள் நூற்றுக்கணக்கான பயங்கரவாத சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து விசாரித்தனர்," என்று கூறினார். "அவர்களில் பலர் கடந்த 24 மணிநேரத்தில் எங்கள் படைகளுக்கு தங்களைத் தாங்களே மாற்றிக் கொண்டனர். அவர்களின் விசாரணையில் இருந்து வெளிவரும் தகவல்கள் சண்டையைத் தொடர பயன்படுத்தப்படுகிறது," எனக் கூறினார். கடந்த வெள்ளியன்று, இஸ்ரேலிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் எய்லோன் லெவி பிபிசியிடம், வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியா மற்றும் ஷேஜாயாவில் ஆண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். அதை அவர் "ஹமாஸ் கோட்டைகள் மற்றும் ஈர்ப்பு மையங்கள்" என்று விவரித்தார். "சில வாரங்களுக்கு முன்பு பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படும் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ராணுவத்தில் சேர்வதற்கான வயதை ஒத்த ஆட்களைப் பற்றி நாங்கள் பேசுகிறோம்," என்று அவர் கூறினார். லெவி மேலும் கூறுகையில், "உண்மையில் யார் ஹமாஸ் பயங்கரவாதி, யார் அல்ல என்பதைக் கண்டறிய" அவர்கள் விசாரிக்கப்படுவார்கள். இஸ்ரேலியப் படைகள் ஹமாஸுடன் "நெருக்கமான போரில்" ஈடுபட்ட பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் வலியுறுத்தினார். அவர்கள் "வேண்டுமென்றே பொதுமக்கள் போல் மாறுவேடமிட்டு" சிவிலியன் கட்டடங்களில் இருந்து செயல்பட்டு வந்தனர். வியாழன் அன்று பெய்ட் லாஹியாவில் இஸ்ரேலிய ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்த குழுவில் அவரது உறவினர்கள் 10 பேர் அங்கம் வகித்ததாகக் கூறும் நபரிடம் பிபிசி பேசியுள்ளது. பாதுகாப்புக் கவலைகள் குறித்து அநாமதேயமாக இருக்க விரும்பும் நபர் - பிபிசி அரபியின் எதார் ஷலாபியிடம், இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைந்து மெகாஃபோன்களை பயன்படுத்தி ஆண்களை அவர்களது வீடுகள் மற்றும் ஐ.நா. நிவாரண நிறுவனம் (UNRWA) பள்ளிகளில் இருந்து ஆர்டர் செய்ததாகக் கூறினார். அப்பகுதியில் உள்ள பெண்களை அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்லும்படி ஐ.டி.எஃப் உத்தரவிட்டது. பின்னர் ஆண்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவில்லை என்றால் அவர்களை சுட்டுக் கொல்லப் போவதாக மிரட்டினர், என்றார். அந்த நபர் தனது உறவினர்கள் ஏழு பேர் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பியதாகக் கூறினார். ஆனால் இஸ்ரேலிய காவலில் இருக்கும் மூவரின் கதி என்னவென்று தனக்குத் தெரியாது என்று கூறினார். சமூக ஊடகங்களில் ஒரு பதிவில், பிரிட்டனுக்கான பாலத்தீனிய தூதர், "ஐ.நா. தங்குமிடத்தில் இருந்து எடுக்கப்பட்ட பொதுமக்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் தடுத்து வைத்து அகற்றும் காட்டுமிராண்டித்தனமான படங்கள்," என்று விவரித்தார். "இது மனிதகுலத்தின் வரலாற்றின் சில இருண்ட பத்திகளைத் தூண்டுகிறது," என்று ஹுசம் சோம்லாட் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES கைது செய்யப்பட்டவர்களின் வீடியோவில் இருந்தவர்களில் பாலத்தீனிய பத்திரிகையாளர், அல்-அரபி அல்-ஜதீதின் நிருபர் தியா அல்-கஹ்லூட் அடையாளம் காணப்பட்டுள்ளார். புதிய அரபு என்ற பெயரில் ஆங்கிலத்திலும் வெளியிடும் அரபு மொழி செய்தி நிறுவனம், அல்-கஹ்லூட் அவரது சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் "பிற குடிமக்களுடன்" பெய்ட் லாஹியாவில் இஸ்ரேலிய படைகளால் கைது செய்யப்பட்டதாகக் கூறியது. அல்-அரபி அல்-ஜதீத் வியாழன் அன்று அல்-கஹ்லூத்தை "அவமானகரமான" காவலில் வைத்தது என்று விவரிக்கிறது. படையினர் ஆண்களை அவர்களது ஆடைகளைக் கழற்றுமாறு வற்புறுத்தியதாகவும், "அவர்கள் கைது செய்யப்பட்டவுடன், அவர்களை வெளிப்படுத்தாத இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கு முன், அவர்களை ஆக்கிரமிப்புத் தேடுதல்கள் மற்றும் அவமானகரமான சிகிச்சைக்கு உட்படுத்தினர்" என்றும் அது கூறியது. இந்த வெளியீடானது "சர்வதேச சமூகம், ஊடகவியலாளர்களின் உரிமைப் பாதுகாவலர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளை இஸ்ரேல் பிராந்தியத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் மீது நடத்தும் இந்தத் தாக்குதலைக் கண்டிக்க வேண்டும்" என்று வலியுறுத்துகிறது. அல்-கஹ்லூட்டின் சக ஊழியர், பாலத்தீனிய பத்திரிகையாளர் லாமிஸ் ஆண்டோனி, வெள்ளிக்கிழமை ரேடியோ 4இன் மாலைநேர நிகழ்ச்சியில், பல கைதிகள் விடுவிக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் அல்-கஹ்லூட் விடுவிக்கப்படவில்லை. விடுவிக்கப்பட்டவர்கள், அவர் இஸ்ரேலில் உள்ள ஜிகிம் ராணுவத் தளத்திற்கு மாற்றப்பட்டதாக கஹ்லூட்டின் குடும்பத்தினரிடம் கூறியதாக அன்டோனி கூறினார். இந்தக் கூற்றை பிபிசி சரிபார்க்கவில்லை. "அவர்களின் நிலைமை பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. இந்த மனிதர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பயங்கரமானவை. நான் அதிர்ச்சியடைந்தேன்," என்று அவர் கூறினார். தனது ஊடகம் ஐ.நா வழியாக இஸ்ரேலியப் படைகளுடன் தொடர்பு கொள்கிறது. கூடுதல் செய்திகளை வழங்கியவர்கள்: பால் பிரவுன், பீட்டர் மவாய் மற்றும் அலெக்ஸ் முர்ரே https://www.bbc.com/tamil/articles/cv2z2p28dk5o
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
திண்ணை கருத்துக்களத்தில்(Home) நுழையும்போது தெரியவில்லை. திண்ணையை உள்நுழையாமல்(login) பார்க்க முடியவில்லை.
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
10 DEC, 2023 | 09:04 AM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பிராந்தியத்தில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இரு படகுகளுடன் 25 இந்திய மீனவர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/171352
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் போரை நிறுத்த ஐ.நா. சபையில் தீர்மானம்: சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தது அமெரிக்கா இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. காசா வடக்கு பகுதியைத் தொடர்ந்து தெற்கு பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. முதலில் வடக்கு காசாவில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தற்போது தெற்கு காசாவிலும் தொடர்ந்து குண்டு வீசப்பட்டு வருகிறது. குறிப்பாக கான் யூனிஸ் நகரை குறிவைத்து தீவிர தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் பலர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் 450 க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவம் கூறும்போது, 24 மணி நேரத்தில் நிலம், கடல், வான்வழியாக காசாவில் 450-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டன என தெரிவித்தது. காசாவில் போரை நிறுத்தும்படி இஸ்ரேலை ஐ.நா. சபை மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதை இஸ்ரேல் நிராகரித்தது. இந்த நிலையில் காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு பேரவையின் தீர்மானத்துக்கு 13 நாடுகள் ஆதரவு அளித்தன. இங்கிலாந்து பங்கேற்கவில்லை. அமெரிக்கா எதிராக வாக்களித்தது. இந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது. ஹமாஸ் அமைப்பிடம் 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இருக்கும் நிலையில், இந்த தீர்மானம் ஹமாசின் கைகளில் அதிகாரத்தை அளிக்கும் என தெரிவித்த அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரம் மூலம் தீர்மானத்தை நிராகரித்தது. இது தொடர்பாக ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் துணை தூதர் ரொபர்ட் வுட் கூறும்போது, “நீடித்த அமைதிக்கு இருநாடுகளின் தீர்வை காண ஹமாஸ் விரும்பவில்லை. இஸ்ரேலில் ஹமாசின் தாக்குதல்களைக் கண்டிக்கத் தவறி விட்டனர், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை அங்கீகரிக்கிறோம். இராணுவ நடவடிக்கையை நிறுத்துவது ஹமாஸ் ஆட்சியை தொடர அனுமதிக்கும். இது அடுத்த போருக்கான விதைகளை மட்டுமே விதைக்கும்” எனத் தெரிவித்தார். https://thinakkural.lk/article/284211
-
சூரியனை ஆய்வு செய்ய நாளை விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1
ஆதித்யா எல்1 எடுத்த முழு வட்ட புகைப்படங்கள் சூரியன் குறித்து அளிக்கக்கூடிய முக்கிய தகவல்கள் பட மூலாதாரம்,ISRO ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனின் முழு வட்ட புகைப்படங்களைப் படம்பிடித்து அனுப்பியுள்ளது. இதன்மூலம் என்ன பயன்? சூரியனை புரிந்துகொள்ள இது எப்படி உதவுகிறது? ஆதித்யா எல்1 விண்கலத்தில் இருந்த புற ஊதா கதிர்கள் மூலம் இயங்கக்கூடிய SUIT எனப்படும் தொலைநோக்கி உலகிலேயே முதல் முறையாக இந்தப் புகைப்படங்களை சூரியனுக்கு 200 முதல் 400 நேனோமீட்டர் அலைநீள அளவிற்கு அருகே சென்று படம் பிடித்துள்ளது. இந்தப் புகைப்படங்கள் மூலம் சூரியனின் ஒளிமண்டலம் (Photosphere), புற வளிமண்டலம் (Chromosphere) ஆகிய மேற்பரப்புகள் பற்றி நுண்ணிய தகவல்களைப் பெற முடியும். ஆதித்யா எல்1 நிகழ்த்தியுள்ள இந்தக் கண்டுபிடிப்பில் சாதனையாகக் கருதப்படுவது, சூரியனில் இருந்து வெளிப்படக்கூடிய புற ஊதா கதிர்களுக்கு அருகே சென்று இந்தப் புகைப்படங்களை SUIT என அழைக்கப்படும் சூரிய புற ஊதா தோற்றுருவாக்கல் தொலைநோக்கி (Solar Ultra Violet Imaging Telescope) படம் பிடித்துள்ளது. பட மூலாதாரம்,ISRO இந்தப் புகைப்படங்கள் மூலம் இரண்டு சிக்கலான ஆய்வுகளுக்கு உதவக்கூடிய கூடுதல் தகவல்களைப் பெற முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஒன்று, சூரியனின் மேற்பரப்பு நாம் அணுப்பக்கூடிய விண்கலம் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை ஆராய்வது. இரண்டாவது, சூரியக் கதிர்கள் பூமியின் காலநிலை மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை உன்னிப்பாக ஆராய்ந்து அதைக் கட்டுப்படுத்துவது. முழு வட்ட புகைப்படங்கள் என்றால் என்ன? புற ஊதா கதிர்களில் இயங்கக்கூடிய இந்த வகை தொலைநோக்கிளைப் பயன்படுத்தி இரண்டு விதமாக சூரியனை படம் பிடிக்க முடியும் என்று கூறுகிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன். சூரியனில் குறிப்பிட்ட ஓர் இடத்தை ஆழமாகப் படம் பிடிப்பது அதில் ஒருவகை. மற்றொன்று, பல்வேறு வடிகட்டிகள் மூலம் சூரியனை படம் பிடிப்பது என்று அவர் விளக்கினார். "தற்போது சூரியனின் ஒளிமண்டலம், புற வளிமண்டலம் ஆகிய அடுக்குகளை இந்தத் தொலைநோக்கி படம்பிடித்துள்ளது. இதன் மூலம் அந்த அடுக்குகளில் நடக்கும் நிகழ்வுகளை நம்மால் பார்க்க முடியும்.” அவர் மேலும் கூறுகையில், “இந்த அடுக்குகளின் புகைப்படங்களை ஆராய்வதன் மூலம் சூரியனின் இந்த அடுக்குகளில் எங்கே கருப்புப் புள்ளிகள் உள்ளன, எங்கே தீப்பிழம்புகள் உள்ளன, எந்த இடங்கள் அமைதியாக உள்ளன போன்ற கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்,” எனத் தெரிவித்தார். இந்த தொலைநோக்கி மூலம் பதினொரு வகையான ஃபில்டர் (Filter) என்றழைக்கப்படும் வடிகட்டிகளை பயன்படுத்தி சூரியனை படமெடுத்துள்ளதாக த.வி.வெங்கடேஸ்வரன் தெரிவித்தார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட SUIT தொலைநோக்கி பட மூலாதாரம்,ISRO சூரியனின் இந்த முழுவட்ட புகைப்படங்களை படம் பிடித்துள்ள SUIT தொலைநோக்கி இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பது இதில் சிறப்புக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த தொலைநோக்கியானது மகாராஷ்ட்டிரா மாநிலம் பூனேவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விண்வெளி நிறுவனத்தின் தலைமையில் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட கருவியாகும். இந்தக் கூட்டு முயற்சியில், இஸ்ரோ, மணிபால் உயர்கல்வி நிறுவனம் (MAHE), கொல்கத்தாவை சேர்ந்த இந்திய விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (CESSI), பெங்களூருவில் உள்ள வான் இயற்பியல் நிறுவனம் மற்றும் உதய்ப்பூர் சூரிய கண்கானிப்பகம் (USO-PRL) மற்றும் அசாமில் உள்ள டெஸ்பூர் பல்கலைக்கழகம் ஆகியவை ஈடுபட்டுள்ளன. இந்தத் தொலைநோக்கி குறித்து விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறுகையில், “இந்தியாவின் சொந்த தயாரிப்பான இந்த SUIT தொலைநோக்கி சிறப்பாகச் செயல்படுகிறது. அதற்கு இந்த தொலைநோக்கி அனுப்பியுள்ள இந்தப் புகைப்படங்களே சாட்சி,” என்றார். ஆதித்யா எல்1 விண்கலத்தின் அடுத்த கட்டம் என்ன? பட மூலாதாரம்,ISRO சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்1 விண்கலம் கடந்த 2ஆம் தேதி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. கடந்த டிசம்பர் 6ஆம் தேதி SUIT தொலைநோக்கி சூரியனின் ஒளிப்படத்தை வெளியிட்டது. இந்தத் தொலைநோக்கி கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி செயல்படத் தொடங்கிய நிலையில் தற்போது இரண்டாவது முறையாக புகைப்படங்களை அனுப்பியுள்ளது. இந்நிலையில், இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டம் என்ன என்பது குறித்து த.வி.வெங்கடேஸ்வரன் விளக்கினார். “இந்த விண்கலத்தின் நோக்கமே சூரியனை ஆராய்வதுதான். தற்போது இந்தப் புகைப்படங்கள் சூரியன் குறித்த ஆராய்ச்சிகளுக்கு உதவும். தற்போது கிடைத்துள்ள இந்தப் புகைப்படங்களை வைத்து சூரியனின் காந்தப்புலம் மற்றும் சூரியனின் வளிமண்டலம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்," என்கிறார் அவர். பட மூலாதாரம்,ISRO ஆனால், தற்போது கிடைத்துள்ள புகைப்படங்கள் மட்டுமே அதற்குப் போதாது என்றும் அவர் குறிப்பிட்டார். "இந்த புகைப்படங்களை வைத்து நம்மால் எந்த முடிவுக்கும் வர முடியாது. இதுபோல இன்னும் பல புகைப்படங்கள் நமக்குத் தேவை. அதை வைத்துதான் சூரியனுடைய இயக்கத்தைப் பற்றி ஆழமாகப் தெரிந்துகொள்ள முடியும்,” எனத் தெரிவித்தார். "இந்த SUIT தொலைநோக்கியைப் போல ஆதித்யா எல்1-இல் இருக்கக்கூடிய மற்ற கருவிகள் வரும் நாட்களில் பயன்படுத்தப்படும். அடுத்ததாக Plasma Analyser Package for Aditya (PAPA) எனப்படும் கருவி நிலைநின்ற பிறகு ஜனவரி 7 முதல் 15ஆம் தேதிக்குள் செயல்படுத்தப்படும். அந்தக் கருவியில் இருந்தும் நமக்கு அடுத்தகட்ட தகவல்கள் கிடைக்கும்." https://www.bbc.com/tamil/articles/cn0pw18e9wxo
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பாதிக்கப்பட்டவரா தான் இருக்கும் அண்ணை!!!
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
'மன உறுதி உடைந்துவிட்டது, இறந்துவிடலாம் எனத் தோன்றுகிறது' - காஸாவில் பிபிசி செய்தியாளர் படக்குறிப்பு, பிபிசி அரபு செய்தியாளர் அட்னான் எல்-பர்ஷ் 51 நிமிடங்களுக்கு முன்னர் கான் யூனிஸில் உள்ள நாசேர் மருத்துவமனை முன்பு ஜீன்ஸ் மற்றும் ஃபிளிப் ஃப்ளாப் அணிந்த இளைஞர்கள் ஏதோ இறுதி ஊர்வலம் நடப்பது போல வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர். தெற்கு காஸா பகுதியில் டிசம்பர் 1 முதல் இஸ்ரேல் தீவிர குண்டுவீச்சைத் தொடங்கியதில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு முன்பு மற்றுமொரு பதற்றமான இருள் சூழ்ந்த இரவு இது. ஸ்க்ரப் உடையில் ஆண்கள் அமைதியாகக் கூடி நின்று கொண்டிருந்தார்கள். திடீரென அவசர உதவிக்கான சத்தம் வந்ததும் அங்கு ஓடுகிறார்கள். அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போயும், மனச்சோர்வுடனும் இருந்தனர். படக்குறிப்பு, காஸா மருத்துவமனையில் தொடர்ந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஹாரன் ஒலித்தவாறே ஒரு கார் நுழைந்தவுடன், அதிலிருந்து ஒரு இளைஞரை ஸ்ட்ரெச்சர் படுக்கையில் இழுத்து மருத்துவமனைக்குள் வேகமாக அழைத்துச் செல்கிறார்கள். மற்றுமொரு புழுதி படிந்த கார் ஒன்றும் வந்தது. அதிலிருந்து நான்கு அல்லது 5 வயது மதிக்கத்தக்க குழந்தை இறங்கி நடந்து உள்ளே செல்கிறது. அடுத்த நாள், ஆறு குழந்தைகளுக்குத் தாயான சாமா இல்வான் உதவி கேட்டு மன்றாடிக் கொண்டிருக்கிறார். “ஒட்டுமொத்த உலகம் மற்றும் அரபு உலகத்திற்கு நான் ஒரு செய்தியைக் கூற விரும்புகிறேன்,” என்று கத்தினார் அவர். “நாங்கள் அப்பாவிகள். எந்தத் தவறையும் நாங்கள் செய்யவில்லை.” இரண்டு காலி தண்ணீர் பாட்டில்களை காற்றில் வீசியவாறே தனது 5 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் தாகத்தில் தவிக்கிறார்கள் என்று கூறினார் அவர். “நாங்கள் நாய்கள் மற்றும் பூனைகளைப் போல ஆகிவிட்டோம். அவற்றுக்குக்கூட செல்வதற்கு ஒரு இடம் இருக்கும். ஆனால் எங்களுக்கு அப்படியில்லை. நாங்கள் வீதிகளில் சிக்கித் தவிக்கிறோம்." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காஸாவில் 15,800 மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இருந்து, இவர்களது வாழ்க்கையே சிதைந்து விட்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் குறைந்தது 1,200 மக்களைக் கொன்றுள்ளது, 240க்கும் மேற்பட்டவர்களை காஸாவுக்கு பணயக் கைதிகளாக அழைத்துச் சென்றுள்ளது. அதிலிருந்து வாரக் கணக்கில் காஸாவின் வடக்குப் பகுதிக்குள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் தீவிர குண்டுவீச்சுத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி இதுவரை 15,800 மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகம். பாலத்தீன கைதிகளுக்கு மாற்றாக இஸ்ரேலிய பணயக் கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்ட ஏழு நாள் போர் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மீண்டும் போர் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மத்திய காஸாவில் என் குடும்பம் இருக்க நான் இங்கு தனியாக கான் யூனிஸில் இருக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு வரை நல்ல சிக்னலுடன் கூடிய சாட்டிலைட் வாகனத்திற்கு இந்த இடம் மிகவும் பாதுகாப்பானதாக இருந்தது. ஒரு பத்திரிக்கையாளராக இருப்பதற்கு நான் எப்போதும் பெருமையடைகிறேன். ஆனால், எனக்கான தேர்வுகள் தீர்ந்து வருகின்றன. வாழ்க்கை என்னை இறுக்கி கொண்டிருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலிய படை மத்திய காஸா செல்லும் சாலையை முழுவதுமாக தாக்குதல் நடத்தி அடைத்துவிட்டது. சில நாட்களுக்கு ஒரு முறையாவது எனது குடும்பத்தைப் பார்க்க மத்திய காஸா வரை என்னால் சென்று வர முடிந்தது. ஆனால் இப்போதோ இஸ்ரேலிய படை அங்கு செல்லும் ஒரு சாலையை முழுவதுமாக தாக்குதல் நடத்தி அடைத்துவிட்டது, மற்றொரு சாலையும் மிக ஆபத்தான நிலையில் இருக்கிறது. எனது பூர்வீகம் வடக்குப் பகுதிதான். ஆனால், தெற்குப் பக்கம் பாதுகாப்பானது என்று இஸ்ரேல் ராணுவம் அறிவித்தவுடன் எனது குடும்பத்தோடு தெற்குப் பக்கம் நோக்கி சென்றுவிட்டேன். தற்போதோ, கான் யூனிஸ் பகுதியில் ‘ஆபத்தான தரைவழித் தாக்குதலை’ நடத்த உள்ளதாகவும், தெற்கு நோக்கி எகிப்து எல்லைப் பகுதியில் உள்ள ரஃபாவுக்கு செல்லுமாறும் எங்களை எச்சரித்துள்ளது அது. போர் ஆரம்பித்ததில் இருந்து எனக்கும் எனது குடும்பத்திற்கும் நடந்தவற்றைத் தாண்டி, முதன்முறையாக நான் முழுமையாகத் தொடர்பு இழந்ததைப் போல் உணர்கிறேன். என்னுடைய ஒட்டுமொத்த மன உறுதியும் கட்டுப்பாடும் என்னிடமிருந்து துடைத்தெறியப் பட்டுவிட்டது. நான் என் குடும்பத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான திட்டங்களை வைத்திருந்தேன். ஆனால் தற்போது ஒரு நிலையான முடிவெடுக்க முடியாமல் நொறுங்கிப் போயிருக்கிறேன். ரஃபாவுக்கு சென்று தொடர்ந்து பணியாற்றிக் கொண்டே என்னுடைய குடும்பம் நலமாக இருக்கும் என்று நான் நம்பிக் கொண்டிருப்பதா? அல்லது இந்த நிலை மோசமடைந்தால் செய்தியளிப்பதை நிறுத்திவிட்டு, அவர்களிடம் சேர்ந்தே இறந்துவிடலா என்று என் குடும்பத்திடம் செல்ல முயல்வதா? இப்படியொரு மோசமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை யாருக்கும் ஏற்படாது என்று நான் நம்புகிறேன். https://www.bbc.com/tamil/articles/c517ly3rm8qo
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பெய்ரூட் காசாவாக மாறும்… ஹிஸ்புல்லாவிற்கு எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் பிரதமர் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் மீது போர் பிரகடன் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் மூர்க்கத்தனமான வகையில் தாக்குதல் நடத்தியது. இதனால் காசாவின் வடக்குப்பகுதி சீர்குலைந்துள்ளது. தற்போது தெற்கு பகுதியிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இதனால் பாலஸ்தீன மக்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் தங்குவதற்கு இடமின்றி அல்லாடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியபோது, லெபனானில் செயற்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஹமாஸ்க்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இரண்டு முனைகளில் இருந்து வரும் தாக்குதலை எதிர்கொண்டு இஸ்ரேல் காசாவை துவம்சம் செய்தது. இதனால் ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போர் பிராந்திய போராக மாறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் எகிப்து, ஈரான் மற்றும் அரபு நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை. இருந்த போதிலும் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஹிஸ்புல்லாவிற்கு இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில் “ஹிஸ்புல்லா முழு அளவில் போரை தொடங்க முடிவு செய்தால், அதன் சொந்த கைகளால் பெய்ரூட்டை காசாவாகவும், தெற்கு லெபனானை கான் யூனிஸ் நகராகவும் மாற்றும்” எனக் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/284062
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசா மக்களை எதிரியின் கரங்களை நோக்கி தள்ளவேண்டாம் - அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இஸ்ரேலிற்கு எச்சரிக்கை Published By: RAJEEBAN 07 DEC, 2023 | 01:11 PM காசா மக்களை எதிரியின் கரங்களிற்குள் தள்ளும் விதத்தில் இஸ்ரேல் செயற்படக்கூடாது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் எச்சரித்துள்ளார். காசாவில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்கள் என செல்வதற்கான இடங்கள் மிகக்குறைவு என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். இஸ்ரேலினதும் பாலஸ்தீனத்தினதும் எதிர்காலம் நியாயமான நிரந்தர சமாதானத்திலும் இரண்டு தேசங்கள் தீர்விலும் தங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் தற்போதைய சூழ்நிலை அனைவருக்கும் தோல்வியாக காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பயங்கரவாதிகளிற்கு எதிரான நகரப்போர்முறையில் மிகவும் திறமையானவர் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக போரிட்டஅனுபவம் உள்ளவர். இஸ்ரேலின் உறுதியான ஆதரவாளர் அவர் நீங்கள் பொதுமக்களை எதிரிகளின் கரங்களை நோக்கி தள்ளினால் மூலோபாய தோல்வியை சந்திப்பீர்கள் என குறிப்பிட்டுள்ளார் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். சமீபத்தைய மோதல் இடைநிறுத்தம் முடிவிற்குவந்துள்ளதை பாரிய பின்னடைவு என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/171181
-
அமெரிக்காவில் சீக்கிய செயற்பாட்டாளரை கொலை செய்ய சதி - முறியடிப்பு - பினான்சியல் டைம்ஸ்
பன்னுன் விவகாரம்: அமெரிக்க எஃப்.பி.ஐ இயக்குநர் அடுத்த வாரம் இந்தியா செல்கின்றார் 08 DEC, 2023 | 02:45 PM புதுடெல்லி: அமெரிக்க சீக்கியரான குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய நிகில் குப்தா என்ற இந்தியர் மூலம் இந்திய அதிகாரி முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக கூடுதல் விவரங்களைக் கேட்டுப் பெற அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ fbi இயக்குநர் கிறிஸ்டோபர் ரே அடுத்த வாரம் இந்தியாசெல்கின்றார் காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கியர்களுக்கான நீதி எனும் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன் அமெரிக்கா மற்றம் கனடாவின் குடியுரிமையைப் பெற்றுள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த உள்ளதாகவும் தற்போது அவர் அறிவித்துள்ளார். இந்தியாவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள அவரை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வைத்து கொலை செய்வதற்கான சதியில் நிகில் குப்தா என்ற இந்தியர் ஈடுபட்டதாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்திய அதிகாரியின் உத்தரவுக்கு இணங்க நிகில் குப்தா இந்த செயலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் இன்று கேள்வி எழுப்பிய சிபிஐ கட்சி எம்.பி ஜான் பிரிட்டாஸ் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரினார். மேலும் இதேபோன்ற குற்றச்சாட்டை கனடா ஏற்கெனவே முன்வைத்திருப்பது குறித்தும் ஜான் பிரிட்டாஸ் சுட்டிக்காட்டினார். பதில் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ''அமெரிக்கா உடனான இந்தியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக சில தகவல்களை அந்நாடு எங்களுக்கு வழங்கியுள்ளது. அந்த தகவல்கள் கவலை அளிப்பவையாக உள்ளன. ஏனெனில் அவை கடத்தல் மற்றும் பிற விஷயங்களுடன் தொடர்புடையவை. இது நமது தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கனடாவைப் பொறுத்த வரையில் குறிப்பிட்ட ஆதாரங்களோ தகவல்களோ நமக்கு வழங்கப்படவில்லை. எனவே கனடாவின் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கவில்லை . இது இரண்டு நாடுகளிடையே பாரபட்சமான அணுகுமுறை கிடையாது. ஆதாரங்கள் அளித்தவர்களையும்; அளிக்காதவர்களையும் ஒரே மாதிரியாகக் கருத முடியாது'' என தெரிவித்தார். இந்நிலையில் குருபத்வந்த் பன்னு விவகாரம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக எஃப்.பி.ஐ. இயக்குநர் கிறிஸ்டோபர் ரே அடுத்த வாரம் இந்தியா வர உள்ளார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி இதனை தெரிவித்துள்ளார். வரும் 11-ம் தேதி கிறிஸ்டோபர் ரே புதுடெல்லி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/171261
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
எவரையும் இழக்காத எவரையும் காசாவில் கண்டுபிடிப்பது சாத்தியமற்ற விடயம் - 120 பேரை இழந்த ஒருவர் Published By: RAJEEBAN 07 DEC, 2023 | 12:17 PM இஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பமான பின்னர் தனது குடும்பத்தை சேர்ந்த 120 பேரை இழந்துள்ளதாக காசாவை சேர்ந்த ஹொசாம் வைல் அபு சமல்லா அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் நான்கு யுத்தங்களை அவர் சந்தித்துள்ள போதிலும் அவை அனைத்தையும் சேர்த்தாலும் தற்போது இடம்பெறும் விடயங்கள் அவற்றை விட மிகவும் பயங்கரமானவை என அவர் குறிப்பிட்டுள்ளார். படுகொலைகளின் அளவு இனச்சுத்திகரிப்பு பொதுமக்கள் பல தடவை இடம்பெயர்ந்தது போன்ற புள்ளிவிபரங்களை அடிப்படையாக வைத்து பார்த்தால் நாங்கள் நக்பாவின் எண்ணிக்கைகளை எப்போதோ கடந்துவிட்டோம் என அவர் தெரிவித்துள்ளார். 1948 இஸ்ரேல் அராபிய யுத்தத்தின் போது இடம்பெற்ற பாரிய இடப்பெயர்வே நக்பா என அழைக்கப்படுகின்றது. எவரையும் இழக்காத எவரையும் கண்டுபிடிப்பது சாத்தியமற்றது என்ற நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்,அனைவரும் தங்கள்குடும்பத்தவர்கள் நண்பர்கள் உறவினர்கள் பாடசாலை அல்லது அலுலகத்தை சேர்ந்த எவரையாவது இழந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/171175