Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    22997
  • Joined

  • Last visited

  • Days Won

    16

Everything posted by ஏராளன்

  1. 300 இலங்கை அகதிகளுடன் நடுக்கடலில் தத்தளித்த கப்பல் மீட்பு கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 300 அகதிகளுடன் பயணித்த கப்பல் ஒன்று மூழ்கும் தறுவாயில் இருந்த நிலையில், அந்த கப்பலில் பயணித்த அகதிகளை சிங்கப்பூர் அதிகாரிகள் மீட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது. இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா இதனை பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார். வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை அண்மித்த கடற்பரப்பில், தாம் பயணிக்கும் கப்பல் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக, அந்த கப்பலிலிருந்து தமது கடற்படையின் மீட்பு நிலையத்திற்கு நேற்றைய தினம் தகவலொன்று கிடைத்துள்ளதாக அவர் கூறுகின்றார். இதையடுத்து, இலங்கை அதிகாரிகள் வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கடற்படையின் மீட்பு நிலையங்களுக்கு தகவலை பரிமாறியுள்ளனர். இந்த நிலையில், 300 அகதிகளுடன் பயணித்த கப்பலில் இருந்தவர்களை தமது முயற்சியில் மீட்க முடிந்தாக சிங்கப்பூர் அதிகாரிகள், இலங்கை கடற்படைக்கு அறிவித்துள்ளனர். இலங்கை புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 50க்கும் அதிகமான கைதிகள் தப்பியோட்டம் - என்ன நடந்தது?7 நவம்பர் 2022 இலங்கையில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராக முயற்சியா?7 நவம்பர் 2022 ரணில் அரசாங்கம் 8 அரசியல் கைதிகளுக்கு வழங்கிய பொது மன்னிப்பு - முழு விவரம்25 அக்டோபர் 2022 சிங்கப்பூரை அண்மித்த கடலில் பயணித்த மற்றுமொரு கப்பலின் உதவியுடன், இந்த அகதிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அதிகாரிகள், இலங்கைக்கு அறிவித்துள்ளனர். இந்த கப்பலில் இலங்கையர்கள் பயணிப்பதாக நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் குரல் பதிவொன்று பகிரப்பட்டு வந்தது. கப்பலில் பயணிக்கும் ஒருவர், தம்மை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கும் குரல் பதிவொன்றை இவ்வாறு பகிரப்பட்டது. ''பிலிப்பைன்ஸ் கடலில் 317 அகதிகளுடன் பயணித்த கப்பலொன்று மூழ்கும் அபாயத்தில் உள்ளது. குழந்தை பிள்ளைகள் இருக்கின்றார்கள். பெண்கள் இருக்கின்றார்கள். வயதானவர்கள் இருக்கின்றார்கள். அகதிகளுடன் வந்த கப்பலொன்று மூழ்க போகின்றது என செய்திகளுக்கு அறிவியுங்கள். 317 பேரின் உயிர்களை காப்பாற்றி விடுங்கள். கப்பல் மூழ்குகின்றது. நாங்கள் பிலிப்பைன்ஸிற்கும், வியட்நாமிற்கும் இடையில் நிற்கின்றோம்" என கப்பலில் பயணித்த அகதியொருவர் தொலைபேசியூடாக கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில், குறித்த கப்பலில் இலங்கையர்கள் இருக்கின்றார்களா என, பிபிசி தமிழ், கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வாவிடம் வினவியது. பட மூலாதாரம்,GETTY IMAGES அகதிகள் இருப்பதாகவே தமக்கு தகவல் கிடைக்கப் பெற்ற போதிலும், அதில் இலங்கையர்கள் இருக்கின்றார்களா என்பது தொடர்பில் தமக்கு தெரியாது என அவர் பதிலளித்தார். மூழ்கும் அபாயத்திலுள்ள கப்பல் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அல்லது இலங்கையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த கப்பல் கிடையாது என்பது உறுதி எனவும் அவர் கூறினார். வெளிநாடொன்றிலிருந்து பயணித்த கப்பலிலேயே இந்த. அகதிகள் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். இந்த கப்பலில் இலங்கையர்கள் இருக்கின்றார்களா என்பது தொடர்பில் இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார். இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த சூழ்நிலையில், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு கடல்மார்க்கமாக பலர் சட்டவிரோதமாக சென்றுள்ளனர். அத்துடன், இலங்கையிலிருந்து அகதிகளாக செல்ல முயற்சித்த பலரை, இலங்கை அதிகாரிகள் கடந்த காலங்களில் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cv29yxdrm7mo
  2. நானும் முதலாவதாம்!😀 கொஞ்சநாளா கிருபன் அண்ணையும் ஈழப்பிரியன் அண்ணையும் சொல்லிக் கொண்டிருக்கினம்.🤭
  3. அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க வேண்டும் - வடமாகாண பட்டதாரிகள் ஒன்றிய தலைவர் By DIGITAL DESK 2 07 NOV, 2022 | 03:12 PM பட்டதாரி நியமனத்தில் 35 வயதிற்கு மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குமாறு வடமாகாண பட்டதாரிகள் ஒன்றிய தலைவர் சிவசுப்பிரமணியம் லோகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (நவ.07) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு கோரிக்கை விடுத்தார். மேலும் தெரிவிக்கையில், 35 வயதிற்கு மேற்பட்ட 8000 பட்டதாரிகள் பாடசாலை ஆசிரியர் பயிற்சிக்காக காத்திருக்கிறார்கள். அரசாங்க சேவையில் 35 வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகளை நியமனத்திற்கு உள்வாங்கியது போல 35 வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகளாக இருக்கின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இந்த சந்தர்பத்தில் உள்வாங்கப்பட வேண்டும். ரணில் விக்கிரமசிங்க வின் ஆட்சிக்காலத்தில் தொண்டராசிரியர்கள் நூறு நாட்கள் பாடசாலையில் தேசிய பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பயிற்சியின் பின்னர் சட்டப்பிரமாணங்களின் படி ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்பட்டார்கள். அதேபோல் 2018ஆம் ஆண்டு தேசிய பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நேர்முக மற்றும் பரீட்சை மூலமும் உள்வாங்கப்பட்டார்கள். இந்நிலையில் எம்மை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கு பரீட்சை ஒன்றை வைத்து அதன் மூலம் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது அரசாங்கம் இருக்கும் சூழ்நிலையில் எம்மை பரீட்சை மூலம் உள்வாங்குவதற்கு நிதி உட்பட பல இடர்பாடுகள் காணப்படுகின்றது. அதனை சமாளிப்பதற்காக எமது அரசாங்கத்திற்கு நாம் செய்யும் தியாகமாக எம்மை ஒரு வருடகாலத்திற்கு அபிவிருத்தி உத்தியோகத்தராக இருந்து அதன் பின் எம்மை ஆசிரியர் சேலைக்குள் உள்வாங்கினால் அரசாங்கத்திற்கு செய்யும் தியாகமாக அமைவதுடன் அரசாங்கத்தின் நிதி பிரச்சினைக்கும் தீர்வாக அமையும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/139360
  4. சட்ட ரீதியாக திருமணம் செய்யாத மனைவிக்கு கடும் சித்திவதைகளை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அரச நிறுவனம் ஒன்றில் உதவிப்பணிப்பாளராக தொழில் புரியும் நபரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பதில் நீதவான் வசந்தா குணசேகர இன்று உத்தரவிட்டுள்ளார். சமிந்த குருப்பு நாணயக்கார என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்ப்டுள்ளார். சட்ட ரீதியாக திருமணம் செய்துக்கொண்ட தம்பதியினர் அல்ல கம்பஹா பிரதேசத்தில் வீடொன்றில் மேல் மாடியில் இருந்து குதித்த நிலையில் காயமடைந்த 40 வயதான பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பெண் கொழும்பில் உள்ள நிறுவனம் ஒன்றில் உயர் பதவியை வகித்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சந்தேக நபரும், காயமடைந்த பெண் சட்ட ரீதியாக மணம் செய்துக்கொண்ட தம்பதியினர் அல்ல என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பெண்ணை அயன் பெட்டியால் சுட்ட சந்தேக நபர் சந்தேக நபருக்கும் காயமடைந்த பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையின் போது, சந்தேக நபர் துணிகளை அயன் செய்யும் அயன் பெட்டியால் சுட்டு, சித்திரவதை செய்த போது, பெண் உயிர் தப்புவதற்காக வீட்டின் மேல் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் பெண் மேல் மாடியில் இருந்து குதித்தாரா அல்லது சந்தேக நபர் தள்ளி விட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்துவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். காயமடைந்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால், அவரிடம் இதுவரை வாக்குமூலம் பெறவில்லை எனவும் பொலிஸார் நீதிமன்றத்திடம் கூறியுள்ளனர். https://tamilwin.com/article/the-reason-behind-the-woman-jumping-from-the-floor-1667820867
  5. கடந்த மாதத்தில் யாழில் போதைக்கு அடிமையான 183 பேர் அடையாளம்! By VISHNU 07 NOV, 2022 | 03:10 PM யாழ்ப்பாணத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 183 பேர் ஹெரோயின் போதைப்பொருளை அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலைகளில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டவர்களில் 155 பேர் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையானர்வர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை நீதிமன்றங்களினால் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டவர்களில் 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/139358
  6. யாழின் முக்கியமான இடங்களில் இராணுவ சோதனை சாவடிகள் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக இன்றிலிருந்து முக்கியமான இடங்களில் இராணுவ சோதனை சாவடிகள் அமைத்து வீதியால் பயணிப்போரை சோதனையிட உள்ளதாக யாழ்ப்பாண ராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து இந்த போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் பொதுவெளியில் அதிகளவாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேற்படி விடயம் தொடர்பில் அண்மையில் விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநரால் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இடம்பெற்றிருந்தது. வடக்கு மாகாண ஆளுநரின் பரிந்துரைக்கு அமைய சோதனைச் சாவடி வடக்கு மாகாண ஆளுநரின் பரிந்துரைக்கு அமைய இன்று முதல் யாழ்ப்பாணத்தின் முக்கியமான இடங்களில் இராணுவத்தினரால் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு போதை பொருள் விநியோகம் மற்றும் போதை பொருள் பாவிப்போர் கைது செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் போதை பொருள் விற்பனை செய்வோர் மற்றும் போதை பொருள் பாவிப் போர் தொடர்பில் ஏதாவது தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள் அருகில் உள்ள ராணுவ முகாமில் தகவல்களை தெரிவிக்கும் இடத்தில் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய உதவியாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் போதை பொருளை கட்டுப்படுத்த மக்களின் உதவி எனினும் இன்றிலிருந்து யாழ்ப்பாணத்தில் போதை பொருளை கட்டுப்படுத்தும் முகமாக இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடும் இராணுவம் பொதுமக்கள் இந்த விடயத்திற்கு தமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். எதிர்கால சந்ததியினரை போதைக்கு அடிமையாக்குவதற்கு நாங்கள் இடமளிக்காது போதைப்புக்கு அடிமையானவர்களை இனம் கண்டு அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவே இன் நடவடிக்கை றே்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. போதை பொருள் பாவனையினை குறைப்பதற்கு ஒத்துழைப்பு இவ்வாறான காரணங்களால் சோதனை சாவடிகள் அமைக்கப்படுகின்றன எனவே பொதுமக்கள் யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பாவனையினை குறைப்பதற்கு எமக்கு முழு ஒத்துழைப்பினையும் வழங்க வேண்டும் என இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது. இராணுவத்தின் இவ்வாறான சோதனைச்சாவடி அமைக்கும் திடீர் நடவடிக்கை மக்கள் மத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. https://tamilwin.com/article/sudden-military-raids-on-booths-1667830568?itm_source=parsely-detail
  7. துப்பாக்கியை எடுத்துச்சென்ற சட்டத்தரணி கைது 07 NOV, 2022 | 10:04 PM அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி ஒன்றை வேனில் எடுத்துச் சென்ற குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் புத்தளம் குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்துக்குரிய சட்டத்தரணி தனது வேனில் சாலியவெவ கலவெவ பகுதிக்குச் சென்று கொண்டிருந்த போது வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோதே துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. https://www.virakesari.lk/article/139387
  8. இலங்கை அணியின் களத்தடுப்பில் கவனம் செலுத்தவேண்டியுள்ளது - பயிற்றுநர் சில்வர்வூட் 07 NOV, 2022 | 10:01 PM (நெவில் அன்தனி) ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியிலிருந்து நிறைய நேர்மறையான விடயங்களை எடுத்துக் கொண்டதாகவும் ஆனால், சில அம்சங்களில் குறிப்பாக களத்தடுப்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநர் கிறிஸ் சில்வர்வூட் தெரிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்த பின்னரே இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநர் கிறிஸ் சில்வவூட் இதனைத் தெரிவித்தார். இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் எந்த அணிகளை இலங்கை வென்றெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டதோ அவற்றில் ஐக்கிய அரபு இராச்சியம், நெதர்லாந்து ஆகிய அணிகளை முதல் சுற்றிலும் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை சுப்பர் 12 சுற்றிலும் இலங்கை வெற்றிகொண்டது. மிகப் பெரிய அல்லது பிரபல்ய அணிகளான அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளிடம் இலங்கை தோல்வி அடைந்தது. முதல் சுற்றில் நமிபியாவிடம் இலங்கை அடைந்த தோல்வி கிறிஸ் சில்வர்வூடை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் என்பது நிச்சயம். அதேவேளை அந்தப் போட்டியில் அடைந்த தோல்வி இலங்கை அணிக்கு மாத்திரம் அல்ல முழு இலங்கைக்கும் பெரும் ஏமாற்றதைக் கொடுத்துள்ளது. இங்கிலாந்துடனான கடைசிப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றிருந்தால் குழு 1க்கான அணிகள் நிலையில் இலங்கை மூன்றாம் இடத்திற்கு முன்னேறி இருக்கும். ஆனால், இங்கிலாந்திடம் கடைசி ஓவர் வரை போராடி தோல்வி அடைந்த இலங்கையினால் அணிகள் நிலையில் 4ஆம் இடத்தையே பெற முடிந்தது. எவ்வாறாயினும் இங்கிலாந்தை கடைசி ஓவர்வரை இலங்கை போராட வைத்தது சில்வர்வூடுக்கு திருப்தியைக் கொடுத்துள்ளது. 'இங்கிலாந்துடனான போட்டியில் தோல்வி அடைந்தது ஏமாற்றதைக் கொடுக்கிறது. ஆனால். எனது வீரர்கள் பெருமளவு திறமையை வெளிப்படுத்தினர். இங்கிலாந்துடன் எவ்வாறு விளையாடவேண்டும் என்பது குறித்து விரிவாக திட்டமிட்டோம். அதன் பலனாக இங்கிலாந்தை கடைசிவரை போராட வைத்தோம்' என இங்கிலாந்தின் முன்னாள் பயிற்றுநர் சில்வர்வூட் தெரிவித்தார். அப் போட்டியில் இலங்கையின் சுழல்பந்துவீச்சில் இங்கிலாந்தின் மத்தியவரிசை ஆட்டங்கண்டது. ஆனால், பென் ஸ்டோக்ஸின் ஆட்டமிழக்காத 42 ஓட்டங்களின் உதவியுடன் 2 பந்துகள் மீதமிருக்க வெற்றியீட்டிய இங்கிலாந்து அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. அவுஸ்திரேலியாவில் பெயர் பெற்ற அணிகளை இலங்கை வெற்றிகொள்ளாதபோதிலும் தான் பயிற்றநராக பொறுப்பேற்றதிலிருந்து அணியில் முன்னேற்றதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது என கிறிஸ் சில்வர்வூட் கூறினார். 'ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு செல்வதற்கு முன்னர் வெள்ளைப் பந்து (மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் வகை) கிரிக்கெட் போட்டிகளில் நாங்கள் ஆரம்பித்த சில முறைமைகளில் முன்னேற்றத்தை காணலாம். எப்போது தாக்க வேண்டும், எப்போது தாக்கக்கூடாது, எப்போது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தவேண்டும் என்பதை உறுதிசெய்யும்வகையில் நாங்கள் எமது கூட்டுமுயற்சியை கட்டியெழுப்பிவருகிறோம். அதுதான் எனக்கு தேவை. அவர்கள் அவர்களாகவே இருக்கவேண்டும். ஆடுகளத்தினுள் சென்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி முன்னேற்றத்தை தொடரவேண்டும்' என்றார் சில்வர்வூட். இங்கிலாந்துடனான போட்டியில் களத்தடுப்பு சற்று சிறப்பாக இருந்தபோதிலும் அவுஸ்திரேலியாவில் பொதுவாக இலங்கையின் களத்தடுப்பு சிறப்பாக அமையவில்லை என்பதை சில்வர்வூட் ஒப்புக்கொண்டார். 'களத்தடுப்பு விடயத்தில் நாங்கள் அதிகமாக கவனம் செலுத்தி கடுமையாக பயிற்சியில் ஈடுபடவேண்டும். அதிலிருந்து நாங்கள் ஒதுங்க மாட்டோம். இது நாங்கள் செய்யவேண்டிய ஒரு தொடர்ச்சியான செயல்முறை. அதில் நாங்கள் முன்னேறவேண்டும்' என அவர் கூறினார். இதேவேளை, குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸன்க, வனிந்து ஹசரங்க டி சில்வா ஆகியோர் குறித்து சில்வர்வூட் தனது திருப்தியை வெளியிட்டார். 'சில மாதங்களுக்கு முன்னர் குசல் மெண்டிஸை விக்கெட்காப்பாளராகவும் ஆரம்ப வீரராகவும் நாங்கள் அறிவித்தபோது அவர் அதனை சிறப்பாக நிறைவேற்றிக்காட்டினார். அவரை குறித்தும் முன்வரிசை (முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்கள்) துடுப்பாட்டம் குறித்தும் நான் திருப்தி அடைகிறேன். அவர்கள் சிறந்த ஆரம்பங்களை இட்டுக்கொடுத்தனர். 'வனிந்து ஹசரங்க ஒரு வெற்றிவீரர் அல்லவா? அவர் ஒரு சிறந்த வீரர். அதேபோன்று பெத்தும் நிஸ்ஸன்க கடந்த 12 மாதங்களில் படிப்படியாக முன்னேறியுள்ளார். அவரது திறமை என்னை மிகவும் கவர்ந்துள்ளது. அவருக்கு எப்போதும், எதுவும் இலகுவாக அமையவில்லை. அதற்காக அவர் கடுமையாக பயிற்சியில் ஈடுபடுவார். வலைப்பயிற்சியில் சிறப்பாக ஈடுபாடுவார். அவர் துடுப்பெடுத்தாடிவரும் விதம் அவருக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது' என்றார் சில்வர்வூட். இந்த வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்த மூவருடன் தனஞ்சய டி சில்வா, சரித் அசலன்க, மஹீஷ் தீக்ஷன, மாற்றுவீரர் லஹிரு குமார ஆகியோரே தங்களாலான அதிகப்பட்ச பங்கிளிப்பை இலங்கை அணிக்கு வழங்கியிருந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணித் தலைவர் தசுன் ஷானக்க, பானுக்க ராஜபக்ஷ, சாமிக்க கருணாரட்ன ஆகியோர் பிரகாசிக்காதது இலங்கை அணிக்|கு பாதககத்;தை ஏற்படுத்தியது. 8 போட்டிகளில் விளையாடிய குசல் மெண்டிஸ் 2 அரைச் சதங்களுடன் 223 ஓட்டங்களையும் 7 போட்டிகளில் விளையாடிய பெத்தும் நிஸ்ஸன்க 2 அரைச் சதங்களுடன் 214 ஓட்டங்களையும் 8 போட்டிகளில் விளையாடிய தனஞ்சய டி சில்வா ஒரு அரைச் சதத்துடன் 177 ஓட்டங்களையும் 7 போட்டிகளில் விளையாடிய சரித் அசலன்க 131 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் திறமையாக செயற்பட்டனர். ஆனால், 8 போட்டிகளில் விளையாடிய பானுக்க ராஜபக்ஷ, தசுன் ஷானக்க, 7 போட்டிகளில் விளையாடிய சாமிக்க கருணாரட்ன ஆகியோர் பிரகாசிக்கத் தவறினர். பந்துவீச்சில் 8 போட்டிகளிலும் விளையாடிய வனிந்த ஹசரங்க டி சில்வா 15 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 9 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா 6 விக்கெட்களையும் மாற்று வீரராக அணியில் இணைந்து 6 போட்டிகளில் விளையாடிய லஹிரு குமார 6 விக்கெட்களையும் கைப்பற்றி திறமையை வெளிப்படுத்தியிருந்தனர். இது இவ்வாறிருக்க, 'அடுத்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுவதால் அந் நாட்டு சூழ்நிலை இலங்கை வீரர்களுக்கு பழக்கப்பட்டது. அது எமது வீரர்களுக்கு அனுகூலமாக அமையும். ஆனால், சில விடயங்களை கட்டியெழுப்பவேண்டியுள்ளது' என கிறிஸ் சில்வர்வூட் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/139386
  9. விலை சூத்திரத்திற்கமைவான எரிபொருள் விலை திருத்த முறைமையில் மாற்றம் இல்லை - வலு சக்தி அமைச்சு By VISHNU 07 NOV, 2022 | 08:07 PM (எம்.மனோசித்ரா) விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலை திருத்தங்களை மேற்கொள்வதில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறாது என்று வலு சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. உலக சந்தையில் காணப்படும் விலைக்கு ஏற்பவே உள்நாட்டிலும் எரிபொருள் விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மாதாந்தம் முதலாம் திகதி மற்றும் 15 ஆம் திகதிகளில் விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். எனினும் இது நியாயமான விடயமல்ல என்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மற்றும் விநியோகத்தர்களினால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறான நிலைமைக்குள் எரிபொருள் விலை குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் எரிபொருளுக்கான முற்பதிவுகள் மிகக் குறைவாகவே கிடைக்கப் பெற்றன. எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்களின் இந்த செயற்பாட்டினால் கடந்த வாரம் சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடும் , அதன் காரணமாக வாகன வரிசையும் ஏற்பட்டது. எவ்வாறிருப்பினும் எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் ஏற்படாது என்று வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்ததையடுத்து , நிரப்பு நிலைய உரிமையாளர்களால் வழமையைப் போன்று முற்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய தற்போது எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/139375
  10. துட்டன்காமூன் மட்டுமே தனது ஆட்சிக்கு அப்பால், தனது நாட்டைப் பாதுகாத்து கவனித்துக்கொண்ட ஒரே பார்வோ மன்னன். துட்டன்காமூன் மட்டுமே தனது ஆட்சிக்கு அப்பால், தனது நாட்டைப் பாதுகாத்து கவனித்துக்கொண்ட ஒரே பார்வோ மன்னன்., ஏனெனில் அவர் தொடர்ந்து கொடையளிப்பவராக இருந்தார். 2022 துட்டன்காமுனின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்ட 100 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இவை அனைத்தும் 1922ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதிதான் தொடங்கியது. எகிப்தின் லக்சரில் உள்ள கிங்ஸ் பள்ளத்தாக்கில் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹோவர்ட் கார்ட்டர் மற்றும் அவரது குழுவினருக்கு தண்ணீர் எடுக்கும்போது ஒரு சிறுவன் கல் தடுக்கி விழுந்தான். அந்த செயல்தான், கார்ட்டர் மற்றும் அவரது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு கிமு1332க்கும் கிமு1323க்கும் இடையில் ஆட்சி செய்த எகிப்திய மன்னரான துட்டன்காமுனின் கல்லறையைக் கண்டுபிடிக்க வழிவகுத்தது. https://www.bbc.com/tamil/science-63540136
  11. தென்கடலில் சிக்கிய 600 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் : இதுவரை 10 பேர் கைது 07 NOV, 2022 | 07:35 PM ( எம்.எப்.எம்.பஸீர்) சர்வதேச கடலுக்கு சென்று, கடத்தல்காரர்களிடம் இருந்து சுமார் 300 கிலோ ஹெரோயின் போதைப்பொருளினைப் பெற்று நாட்டுக்குள் நுழையும் நோக்குடன் வந்துகொண்டிருந்த ' கவிந்து புதா' எனும் மீன் பிடிப்படகை, கடற்படை, அதிரடிப் படை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் உள்ளடங்கிய குழு ஒன்றிணைந்த நடவடிக்கை மூலம் கைப்பற்றி சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் தெரு பெறுமதி 600 கோடி ரூபா ஆகும். அதன்படி குறித்த மீன் பிடி படகில் இருந்த 6 சந்தேக நபர்கள், அப்படகுக்காக உளவு பார்த்து வந்த சிறிய ரக படகு மற்றும் அதிலிருந்த பெண் ஒருவர் உட்பட இருவர், கரையில் போதைப் பொருளை கையேற்க தயாராக இருந்த இருவர் என 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் அம்பாந்தோட்டை, கோட்டேகொட, திக்வெல்ல மற்றும் மஹமடல ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், அவர்கள் 31 வயது முதல் 62 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடம், குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவுகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜே.ஏ.யு.பி. ஜயசூரிய ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சாமந்த விஜேசேகரவின் ஆலோசனையின் கீழ் சிறப்புக் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. கிடைக்கப்பெற்ற உளவுத் தகவல் ஒன்றுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளில் இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படைக்கு சொந்தமான விக்ரம 2 எனும் கடற்படைக் கண்கானிப்பு கப்பல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் கடற்படையினர், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் என ஒன்றிணைந்த நடவடிக்கைகளினை முன்னெடுக்கும் குழுவினர் இருந்துள்ளனர். அதன்படி, மஹா இராவணன் வெளிச்ச வீட்டிலிருந்து 10 கடல் மைல் தொலைவில் ( 18 கிலோ மீற்றர்) சந்தேகத்துக்கு இடமான மீன் பிடி படகு அவதானிக்கப்ப்ட்டு, அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதன்போது படகை சோதனை செய்துள்ள ஒன்றிணைந்த நடவடிக்கை குழுவினர், படகிலிருந்து 12 உரப்பைகளில் இருந்த 300 பெக்கட்டுக்களில் பொதி செய்யப்பட்டிருந்த இந்த ஹெரோயின் தொகையினை கைப்பற்றி சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். அதன் போது குறித்த மீன் பிடி படகுக்காக உளவு பார்த்து வந்த சிறிய படகினைக் கைப்பற்றியிருந்த நடவடிக்கை குழுவினர், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் வழி நடத்தலில், நில்வெல்ல தீவுப் பகுதியை ஒட்டிய மலைப்பாங்கான பகுதியில் வைத்து போதைப் பொருளை கையேற்க வந்த இருவரையும் கைது செய்துள்ளனர். கடந்த 5 ஆம் திகதியும் 6 ஆம் திகதியும் இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்ற நிலையில், இன்று திங்கட்கிழமை ( 7) சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் காலி துறைமுகத்துக்கு எடுத்து வரப்பட்டது. இந் நிலையில் சந்தேக நபர்களை, தடுப்புக் காவலில் எடுத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் திட்டமிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/139382
  12. குற்றச்சாட்டை மறுக்கும் தனுஷ்க : அவுஸ்திரேலிய சிறையிலடைக்கப்பட்டார் ! 07 NOV, 2022 | 07:53 PM பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டை இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதேவேளை, தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள சில்வவோட்டர் ( Silverwater ) சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனுஷ்கவின் வெளிநாட்டு கடவுச்சீட்டை அவுஸ்திரேலிய பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன் 10 முதல் 12 மாதங்கள் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் நீளும் என செய்திகள் வெளியாகியுள்ளன. சிட்னி கிழக்கு ரோஸ் பே பகுதியைச் சேர்ந்த 29 வயதான பெண்ணொருவரால் தனுஷ்க பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பேரில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சனிக்கிழமை (06) அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட தனுஷ்க குணதிலக மீது பொலிஸாரால் 4 பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (06) பொலிஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் 2 ஆவது முறையாக தனுஷ்க குணதிலக, சிட்னி பொலிஸாரால் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டார். இதன்படி, டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற நீதவான் றொபர்ட் வில்லியம் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தனுஷ்க சார்பில் சட்டத்தரணி ஆனந்த அமர்நாத் பிணை கோரியிருந்தார். எவ்வாறாயினும், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் அண்மைக்காலமாக கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் வெளிநாட்டவர் என்பதால் தனுஷ்கவிற்கு பிணை வழங்க நீதவான் மறுத்துள்ளார். இந்நிலையில், தனுஷ்க 05 நாட்களுக்கு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இது தொடர்பில் உயர் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்யவுள்ளதாக தனுஷ்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ள நிலையில், தனுஷ்க குணதிலக சிட்னியில் உள்ள சில்வவோட்டர் ( Silverwater ) சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/139383
  13. EWS உயர் வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் மற்றும் வாதிடுபவர்கள் முன்வைத்த வாதங்கள் என்ன? இக்பால் அகமது பிபிசி இந்தி 23 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பொருளாதார அடிப்படையில் பின்தங்கியுள்ள உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விதியை இந்திய உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆனால் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வெளியானதில் இருந்து இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது. உண்மையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு 3:2 என்ற வகையில் வெளிவந்திருக்கிறது. அதாவது, ஐந்து நீதிபதிகளில் மூன்று பேர் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஆதரவாக உள்ளனர். பொருளாதார அடிப்படையில் உயர் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் இரு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதில் சுவாரஸ்யமான அம்சமாக, பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதில் உடன்படாத நீதிபதிகளில் இந்திய தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் உள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதை அவர்கள் ஆதரிக்கவில்லை. இந்த விவகாரம் ஆரம்பம் முதலே சர்ச்சைக்குள்ளானது. அரசின் இந்த முடிவை பல அரசியல் கட்சிகள் வரவேற்றாலும், தமிழ்நாட்டில் ஆளும் திமுக மற்றும் பிகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆதரவும் எதிர்ப்பும் - வாதங்கள் என்ன? உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ள மத்தியில் ஆளும் பாஜக, ''நாட்டின் ஏழைகளுக்கு சமூக நீதி வழங்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோதியின் பணிக்கு கிடைத்த வெற்றி இது'' என்று கூறியிருக்கிறது Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 பிகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோதி, "இந்த தீர்ப்பு வரலாற்றுபூர்வமானது" என்று கூறியுள்ளார். இந்த முடிவுக்கு பிறகு எந்த வாயை வைத்துக் கொண்டு ஆர்ஜேடியும், ஆம் ஆத்மி கட்சியும் உயர் ஜாதியினரிடம் ஓட்டு கேட்கப் போகின்றன என்று சுஷில் மோதி கேள்வி எழுப்பியுள்ளார். "இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல": கி. வீரமணி 'உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு செல்லும்': உச்சநீதிமன்ற தீர்ப்பு - முக்கிய தகவல்கள் பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு: ஆதரித்தது யார், எதிர்த்தது யார்? பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதோ அதை ஆர்ஜேடி, திமுக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக ஆகிய கட்சிகள் மசோதா மீதான வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்தன. Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 Twitter பதிவை கடந்து செல்ல, 3 Twitter பதிவின் முடிவு, 3 இதேவேளை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்றுள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 4 Twitter பதிவின் முடிவு, 4 இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2005-2006ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் சின்ஹா கமிஷனை அமைத்தார். அந்த ஆணையம் 2010ஆம் ஆண்டு தனது அறிக்கையை அளித்தது. 2014 ஆம் ஆண்டிலேயே இந்த ஆணையத்தின் அறிக்கையை ஆராய்ந்து இந்த மசோதா தயாரிக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதாவை நிறைவேற்ற மோதி அரசு 5 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. ஜாதிவாரி கணக்கெடுப்பு பணியும் 2012ஆம் ஆண்டிலேயே முடிவடைந்ததாகவும், ஆனால் மோதி அரசு இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்றும் அவர் கூறினார். ஜாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. இதற்கிடையே, இந்த தீர்ப்புக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதோடு, பல நூற்றாண்டுகளாக நீடித்து வரும் சமூக நீதிக்கான போராட்டத்திற்கு உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பின்னடைவு என்று கூறியுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 5 Twitter பதிவின் முடிவு, 5 இந்த மசோதாவை அவரது கட்சியான திமுக நாடாளுமன்றத்தில் எதிர்த்ததுடன், தமிழக அரசும் இந்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது. எதிர் தரப்பு வாதங்கள் என்ன? உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்பவர்கள், "இடஒதுக்கீடு வழங்கப்படுவதன் நோக்கமே சமூக ரீதியாக பின்தங்கியவர்களின் நிலையை அகற்றுவதே தவிர, பொருளாதார சமத்துவமின்மையைத் தீர்ப்பதற்காக அல்ல," என்று கூறுகிறார்கள். பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது சமூகத்தில் பின்தங்கிய மக்களின் பலன்களைக் குறைக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஏனெனில் இடஒதுக்கீட்டின் வரம்பு 50 சதவீதமாக வரையறுக்கப்பட்டால், பிற பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடி சமூகங்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு பாதிக்கப்படும். மேலும் இடஒதுக்கீடு வரம்பை 50ல் இருந்து 60 சதவீதமாக உயர்த்தினால், இடஒதுக்கீடு பலனைப் பெறாத பிரிவினருக்கு 40 சதவீதமே எஞ்சியருக்கும். மகாராஷ்டிராவின் முன்னாள் ஐஜி அப்துர் ரஹ்மான், "இடஒதுக்கீடு என்பது பலன்களை ஏழைகளுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்படும் வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல," என்று கூறினார். Twitter பதிவை கடந்து செல்ல, 6 Twitter பதிவின் முடிவு, 6 இந்த முடிவு குறித்து அதிருப்தி தெரிவிக்கும் அவர், "ஓபிசி அல்லது பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பான பிரச்னை ஏற்படும்போதெல்லாம், சரியான தரவு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மக்கள்தொகை சதவீதத்தை வழங்கும்படி நீதிமன்றம் கேட்கிறது. 50% வரம்பை மீற முடியாது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான தரவு நம்மிடையே இல்லை. பிறகு எப்படி அவசரகதியில் அந்த பிரிவினருக்காக 10% ஒதுக்கீடு வழங்கப்பட்டது?" என்று கேள்வி எழுப்புகிறார். காங்கிரஸ் தலைவரும், மக்களவை முன்னாள் பாஜக எம்.பி.யுமான உதித் ராஜும் இந்த தீர்ப்பு குறித்து கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 7 Twitter பதிவின் முடிவு, 7 Twitter பதிவை கடந்து செல்ல, 8 Twitter பதிவின் முடிவு, 8 "நான் ஏழை உயர் வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டிற்கு எதிரானவன் அல்ல, ஆனால் எஸ்சி/எஸ்டி/ஓபிசி விவகாரம் வரும்போதெல்லாம், இந்திரா சாவ்னி வழக்கில் 50% வரம்பை தாண்ட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது. நான் எப்போதும் அந்த மனநிலையில் தான் இருக்கிறேன்" என்கிறார் உதித். தி வயர் செய்தி இணையதளத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், "பெண்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க பிரதமர் மோதி முடிவு செய்துள்ளதையும், எஸ்சி-எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட ஜாதி பெண்களை ஒதுக்கி வைப்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஏற்கெனவே இடஒதுக்கீட்டின் பலன்கள் கிடைப்பதாகக் கூறி ஒதுக்கி வைத்தால் நிலைமை என்னவாகும்" என்கிறார். Twitter பதிவை கடந்து செல்ல, 9 Twitter பதிவின் முடிவு, 9 மூத்த பத்திரிக்கையாளரும், சமூக ஊடகங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக உறுதியாகக் குரல் கொடுப்பவருமான வழக்கறிஞர் திலீப் மண்டல், இந்த தீர்ப்பின் நேர்மறையான பக்கத்தைக் குறிப்பிடுகிறார். Twitter பதிவை கடந்து செல்ல, 10 Twitter பதிவின் முடிவு, 10 பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் அதிகபட்ச வரம்பை அதிகரிக்க இது வழிவகை செய்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். முழு விஷயம் என்ன? இந்திய அரசியலமைப்பின்படி, பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைகளில் 49.5 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற்றுள்ளனர். இது தவிர பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு அரசியல் சட்ட திருத்தத்தின் கீழ் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த வகை இடஒதுக்கீட்டை எதிர்த்து 40 மனுக்கள் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றை ஜன்ஹித் அபியான் 2019இல் தாக்கல் செய்தார். இந்த வகை இடஒதுக்கீடு நீடித்தால், சம வாய்ப்புகள் முடிவுக்கு வரும் என்று மனுதாரர்கள் கூறுகின்றனர். பொருளாதார அடிப்படையில் வழங்கப்படும் இந்த இடஒதுக்கீட்டை ஆதரிப்பது என்பது, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் உரிமையை மாநில அரசுகளுக்கு அளிக்கும் என்பதுதான். பொருளாதார அடிப்படையானது குடும்பத்திற்கு சொந்தமான நிலம், ஆண்டு வருமானம் அல்லது வேறுவிதமாக இருக்கலாம். சின்ஹோ கமிஷனின் பரிந்துரைகள் 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் மத்தியில் அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் எஸ்ஆர் சின்ஹா கமிஷனை அமைத்தது. அது 2010ஆம் ஆண்டில் அதன் அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் EWS இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினரின் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் அனைத்துக் குடும்பங்களும், வருமான வரி வரம்பை விட ஆண்டு வருமானம் குறைவாக உள்ள குடும்பங்களும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பாகக் கருதப்பட வேண்டும் என்று ஆணையம் தனது அறிக்கையில் கூறியிருந்தது. மண்டல் கமிஷன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீட்டின் அதிகபட்ச வரம்பை 50 சதவீதமாக நிர்ணயித்தது. இந்த ஒதுக்கீடு 50 சதவீத வரம்பை மீறுவதாக EWSக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்கள் வாதிட்டனர். https://www.bbc.com/tamil/india-63543269
  14. காலநிலை மாற்றம்: "கிளிமஞ்சாரோ, ஆஃப்ரிக்காவின் கடைசி பனிப்பாறைகள் 2050இல் உருகும்" பேட்ரிக் ஹ்யூக்ஸ் பருவநிலை, அறிவியல் பிரிவு, பிபிசி நியூஸ் 16 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையை மூடி நிற்கும் பனிப்பாறைப் படலம் 2050 வாக்கில் இல்லாமலே அழிந்து போகும். ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ தனது அறிக்கையில், காலநிலை மாற்றம் காரணமாக ஆஃப்ரிக்காவில் எஞ்சியிருக்கும் கடைசி பனிப்பாறைகள் உள்பட உலகில் உள்ள பனிப்பாறைகள் 2050ஆம் ஆண்டுக்குள் தவிர்க்க முடியாதபடி உருகி விடும் என்று கூறியிருக்கிறது. ஐநாவின் உலக பாரம்பரிய இடங்களில் மூன்றில் ஒரு மடங்கு இடம் பெற்றுள்ள பனிப்பாறைகள் 30 ஆண்டுகளுக்குள் உருகிவிடும் என்றும் யுனெஸ்கோ அதன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. கிளிமஞ்சாரோ சிகரத்தின் கடைசி பனிப்பாறைகள், ஆல்ப்ஸ், அமெரிக்காவின் யோசெமிட்டி தேசிய பூங்காவில் உள்ள பனிப்பாறைகள் போல உருகி மறைந்து விடும். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான உலகளாவிய நடவடிக்கைகள் எதுவாக இருந்தபோதிலும் அவை உருகுவதை தடுக்க முடியாது என அந்த அறிக்கையை எழுதியவர்கள் கூறியுள்ளனர். செயற்கைக்கோள் தரவுகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ள தகவல்களைக் கொண்ட இந்த அறிக்கை, எகிப்து நடைபெற்று வரும் COP27 என்ற காலநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. ஐநாவின் 50 உலக பாரம்பர்ய இடங்களில் 18,600 பனிப்பாறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. புகழ்பெற்ற சுற்றுலா இடங்கள் , உள்ளூர் மக்கள் புனிதமாக கருதும் இடங்கள் உள்ளிட்ட பூமி பரப்பில் உள்ள ஏறக்குறைய 10 சதவிகித பனிப்பாறைகளை இவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. பனிப்பாறைகள் காணமல் போவது, பின்னடைவு என்பது புவி வெப்பமடைவதற்கான மிக தீவிரமான சாட்சியங்களில் ஒன்றாகும் என அறிக்கை குறிப்பிடுகிறது. "நாம் தவறாக கருதி இருக்கலாம் என்று நாம் நம்புகின்றோம். ஆனால், இது ஒரு கவனத்தில் கொள்ளக்கூடிய அறிவியலாகும்," என அறிக்கையை எழுதியவர்களில் ஒருவரான யுனெஸ்கோவின் திட்ட அலுவலர் டேல்ஸ் கார்வாலோ ரெசெண்டே கூறுகிறார். "இது உண்மையில் நடப்பதை நாம் காணக்கூடிய ஒன்றாக இருப்பதால், பருவநிலை மாற்றத்தை முன்னறிவிக்கக்கூடிய மதிப்பு மிக்க ஒன்றாக, பனிப்பாறைகள் திகழ்கின்றன," என்றும் அவர் தெரிவிக்கிறார். மூன்றில் இரண்டு மடங்கு ஐநா உலக பாரம்பர்ய இடங்களில் உள்ள பனிப்பாறைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், உலகம் வெப்பமடைவதை 1.5 சென்டிகிரேட் ஆக வரம்புக்கு உட்படுத்தினால் மட்டுமே அது சாத்தியம் என அறிக்கையின் எழுத்தாளர்கள் சொல்கின்றனர். ஆனால், இந்த இலக்கை அடைவதற்கு நம்பகமான எந்த ஒரு வழியும் இப்போதைக்கு உலகின் முன்பு இல்லை என்று கடந்த வாரம் வெளியான ஐநாவின் இன்னொரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யோசெமிட்டி தேசிய பூங்காவில் உள்ள பனிப்பாறைகள் அழியும் ஆபத்தில் உள்ளன உலகின் பாரம்பர்ய இடமான பனிப்பாறைகள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு எவ்வாறு மாற்றமடைகின்றன என்பதை கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட மாதிரிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முந்தைய அறிக்கையின் அடிப்படையில் இந்த கணிப்புகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. எவரெஸ்ட்டில் உருகும் பனிப்பாறைகள் - அடிவார முகாமை மாற்றும் நேபாளம் பிரமாண்ட பனிப்பாறை உடைவதால் உயிரினங்கள் எதிர்கொள்ளும் ஆபத்து அண்டார்டிகாவில் குட்டி போட்ட பனிப்பாறை: 50 ஆண்டுகளில் இல்லாத அளவு பெரிய அதிசயம் "வரலாற்றுப் பதிவில் மிகவும் முன்னோடியில்லாத விஷயம் என்னவென்றால், இது எவ்வளவு விரைவாக நடக்கிறது என்பதுதான்" என பஃபலோ பல்கலைக்கழகத்தின் பனிப்பாறை நிபுணர் பீட்டா க்சாத்தோ கூறினார். ஆனால், இவர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை. "1900ஆம் ஆண்டுகளின் மத்தியில் பனிப்பாறைகள் மிகவும் நிலையாக இருந்தன," என்ற அவர், "பின்னர் நம்பமுடியாத வகையிலான இந்த வேகமாக பின்னடைவு நேரிட்டது," என்றும் கூறினார். 2050ஆம் ஆண்டுக்குள் காணாமல் போகும் பனிப்பாறைகளின் உலக பாரம்பர்ய இடங்களின் பட்டியல் ஹிர்கேனியன் காடுகள் (இரான்) டர்மிட்டர் தேசிய பூங்கா (மான்டினீக்ரோ) விருங்கா தேசிய பூங்கா (காங்கோ ஜனநாயக குடியரசு) ஹுவான்லாங் இயற்கை மற்றும் வரலாற்று ஆர்வப் பகுதி (சீனா) யெல்லோஸ்டோன் தேசிய பூங்கா (அமெரிக்கா) மவுன்ட் கென்யா தேசிய பூங்கா/இயற்கை காடு (கென்யா) பைரனீஸ் மாண்ட் பெர்டு (பிரான்ஸ், ஸ்பெயின்) ருவென்சோரி மலைகள் தேசிய பூங்கா (உகாண்டா) புடோரானா பீடபூமி (ரஷ்யா) சுவிஸ் டெக்டோனிக் அரினா சர்டோனா (சுவிட்சர்லாந்து) நஹன்னி தேசிய பூங்கா (கனடா) லோரென்ட்ஸ் தேசிய பூங்கா (இந்தோனேசியா) ரேங்கல் தீவு ரிசர்வ் இயற்கை அமைப்பு (ரஷ்யா) கிளிமஞ்சாரோ தேசிய பூங்கா (தான்சானியா) யோசெமிட்டி தேசிய பூங்கா (அமெரிக்கா) டோலமைட்ஸ் (இத்தாலி) விர்ஜின் கோமி காடுகள் (ரஷ்யா) உலக பாரம்பரிய இடங்களில் உள்ள ஐஸ் கட்டிகள் உருகியதன் காரணமாக 2000ஆவது ஆண்டு மற்றும் 2020ஆவது ஆண்டுக்கும் இடையே உலக அளவில் கடல் மட்டமானது 4.5 சதவிகிதம் உயர்ந்ததை காண முடிந்தது. இந்த பனிப்பாறைகள் ஒவ்வோர் ஆண்டும் 58 பில்லியன் ஐஸ்கட்டிகளை இழந்தன. இது பிரான்ஸ், ஸ்பெயின் இரு நாடுகளும் சேர்ந்து ஆண்டு முழுவதும் உபயோகிக்கும் தண்ணீர் அளவுக்கு சமமானதாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES பல்வேறு உள்ளூர் மக்கள் தங்களின் தண்ணீர் தேவைக்காகவும், வேளாண் உபயோகத்துக்காகவும் பனிப்பாறைகளை நம்பி உள்ளனர். அவர்களின் இழப்பு என்பது வறண்ட காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை நோக்கி இட்டுச் செல்லும் என லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் பனிப்பாறை ஆராய்ச்சி நிபுணர் பேராசிரியர் டங்கன் குயின்சி கூறுகிறார். இந்த ஆராய்ச்சியில் அவர் ஈடுபடவில்லை. "இந்த தண்ணீரை தங்களது பயிர்களின் பாசனத்துக்கு அவர்கள் பயன்படுத்துவதால் இது உணவு பாதுகாப்பு விஷயங்களை நோக்கி இட்டுச்செல்லும்," என குயின்சி கூறுகிறார். 'உயிரினங்கள் நசுங்கி அழியும்' - உருகி நகரும் 4,200 சதுர கி.மீ பனிப்பாறை அண்டார்டிக்காவில் உள்ள உலகின் மிக பெரிய பனிப்பாறை உடையப்போகிறதா? பனிப்பாறை இழப்பால் உருவாகும் வெள்ளம் காரணமாக உள்ளூர் சமூகத்தினர் , பழங்குடியின மக்கள் விரும்பத்தகாத சூழலை எதிர்கொள்ள நேரிடும் என இந்த அறிக்கையின் எழுத்தாளர்கள் கூறுகின்றனர். எனவே முன்னெச்சரிக்கை செய்யும், அபாயத்தை குறைக்கும் பேரழிவு மேலாண்மை நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். எனினும், உலகம் வெப்பமயமாதலின் வரம்பை குறைக்க வேண்டிய தேவை நமக்கு உள்ளது என்பது மிகவும் வெளிப்படையான விஷயமாகும். "இந்த ஒரு செய்தியே இங்கே நம்பிக்கையாக இருக்கிறது," என்கிறார் கார்வாலோ ரெசெண்டே. "உமிழ்வை வெகுவாகக் குறைப்பதை நம்மால் நிர்வகிக்க முடிந்தால், இந்த பனிப்பாறைகளில் பெரும்பாலானவற்றை நம்மால் திறம்பட பாதுகாக்க முடியும்," என்றும் அவர் குறிப்பிடுகிறார். "இது ஒவ்வொரு மட்டத்திலும் நடவடிக்கை எடுப்பதற்கான உண்மையான ஒரு அழைப்பாகும். அரசியல் மட்ட அளவில் மட்டுமின்றி, மனிதர்களாகிய நமது மட்டத்திலும் எடுக்கப்பட வேண்டிய அழைப்பாகும். https://www.bbc.com/tamil/global-63526011
  15. ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்ட இரத்தம் மனிதர்களுக்கு முதல் தடவையாக செலுத்தப்பட்டது By DIGITAL DESK 3 07 NOV, 2022 | 05:31 PM ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை இரத்தம் உலகில் முதல் தடவையாக மனிதர்கள் இருவருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு கரண்டிகள் அளவிலான சொற்ப அளவில், ஆய்வுடத்தில் உருவாக்கப்பட்ட இரத்தம் சோதனைக்காக இவர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. குருதி மாற்றீடுகளுக்கு மனிதர்களின் நன்கொடைகளிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், முக்கியமான ஆனால், பெறுவதற்கு கடினமான அரிய வகையான வகைகளைச் சேரந்;த குருதிகளை ஆய்வுகூடத்தில் உருவாக்குவதை இந்த ஆய்வு நோக்கமாக கொண்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனின் பிரிஸ்டல், கேம்பிரிட்ஜ், லண்டன் நகரங்களைச் சேர்ந்த ஆய்வுக்குழுக்களும் பிரத்தானிய தேசிய சுகாதார சேவையின் குருதி மற்றம் உறுப்பு மாற்றீட்டு பிரிவும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளன. ஆய்வுகூடத்தில் வளர்க்கப்பட்ட இரத்தத்தை ஆரோக்கியமihன 10 தொண்டர்களுக்கு செலுத்தி சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அவர்களில் இருவருக்கு இந்த இரத்தம் செலுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/139377
  16. COP27: வளரும் நாடுகளுக்கு காலநிலை நிதி கிடைக்குமா? விவாதமாகும் “இழப்பு மற்றும் சேதம்” நவீன் சிங் கட்கா சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி 50 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES எகிப்தில் நடந்துகொண்டிருக்கும் இந்த ஆண்டின் காலநிலை மாநாட்டில் சலசலப்பை ஏற்படுத்தும் இரண்டு பெரிய வார்த்தைகள் "இழப்பு" மற்றும் "சேதம்." அவற்றுக்குரிய அர்த்தம் என்ன? ஏன் அவை விவாதங்களை ஏற்படுத்துகின்றன? பசுமை இல்ல வாயுக்களை எவ்வாறு குறைப்பது, காலநிலை நெருக்கடியின் தாக்கங்களை எப்படிச் சமாளிப்பது ஆகிய கேள்விகளில் தான் பெரும்பாலும் காலநிலை பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்துகின்றன. இந்த ஆண்டு மாநாட்டில் மூன்றாவதாக இன்னொரு பிரச்னையும் ஆதிக்கம் செலுத்தலாம். காலநிலை மாற்ற சிக்கலை ஏற்படுத்துவதில் பெரும்பான்மையாகப் பங்களிக்கும் அதிக தொழில்மயமான நாடுகள், பாதிப்புகளை நேரடியாக அனுபவிக்கக்கூடிய நாடுகளுக்குப் பணம் செலுத்த வேண்டுமா என்பதுதான் அந்த மூன்றாவது பிரச்னை. காலநிலை மாற்றத்தின் விளைவாக, வெள்ளம், வறட்சி, சூறாவளி, நிலச்சரிவு, காட்டுத்தீ போன்ற பேரழிவுகள் அனைத்தும் அடிக்கடி நிகழ்வதோடு தீவிரமடைந்தும் வருகின்றன. பாதிக்கப்பட்ட நாடுகள் அவற்றின் விளைவுகளைச் சமாளிக்கப் பல ஆண்டுகளாக நிதியுதவி கேட்டுக் கொண்டிருக்கின்றன. இதுதான் "இழப்பு மற்றும் சேதம்" என்ற வார்த்தையின் அர்த்தம். இந்தச் சொற்றொடர் வீடுகள், நிலம், வேளாண் நிலங்கள், வணிகங்கள் போன்றவற்றில் ஏற்படும் பொருளாதார இழப்புகள் மற்றும் உயிரிழப்ப்பு, கலாசார தளங்களின் இழப்பு, பல்லுயிர் இழப்பு போன்ற பொருளாதாரமல்லாத இழப்புகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா கொடுத்த வாக்குறுதிகளின் நிலை என்ன? டைனோசர் குட்டிகளை விழுங்கிய சனாஜே பாம்புகளை இந்தியாவில் கண்டுபிடித்தது எப்படி? விண்வெளியில் தயாரிக்கப்படும் மின்சாரம் கம்பி இல்லாமல் பூமிக்கு எப்படி வரும்? நவம்பர் 6ஆம் தேதி 27வது காலநிலை மாநாடு (COP27) தொடங்குவதற்கு முன் இரண்டு நாட்களாக நடந்த தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்த விஷயத்தை அதிகாரபூர்வ நிகழ்ச்சி நிரலில் சேர்க்க பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டனர். ஏழை நாடுகள் பசுமை இல்ல வாயு வெளியீட்டைக் குறைப்பது, காலநிலை மாற்ற தாக்கங்களைச் சமாளிக்க நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றுக்காக பருவநிலை நிதியுதவியில் பணக்கார நாடுகள் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்கள் கொடுக்க ஒப்புக்கொண்டதோடு கூடுதலாக இந்த நிதியை ஏழை நாடுகள் கேட்கின்றன. "தீவிரமான புயல்கள், பேரழிவு தரும் வெள்ளம், உருகும் பனிப்பாறைகள் ஆகியவற்றால் ஏற்படும் இழப்புகள் மற்றும் சேதங்களால் மக்கள் அவதிப்படுகின்றனர். வளரும் நாடுகளில் உள்ளவர்களுக்கு ஒரு பேரிடர் நடந்து பிறகு மீண்டும் அடுத்த பேரிடர் தாக்குதல் நடப்பதற்கு முன்பாக மறுகட்டமைப்பு செய்துகொண்டு உரிய நேரத்தில் மீண்டு வருவதற்குச் சரியான ஆதரவு இல்லை. மோசமான தாக்கங்களின் பாதிப்புகளுக்கு உள்ளாகும் வகையில் முன்வரிசையில் இப்போதுள்ள மக்கள் சமூகங்கள் இந்த நெருக்கடியை ஏற்படுத்துவதில் குறைந்த பங்களிப்பையே செய்துள்ளன," என்கிறார் கிளைமேட் ஆக்ஷன் நெட்வொர்க் இன்டர்நேஷனலில் உலகளாவிய அரசியல் மூலோபாயத்தின் தலைவர் ஹர்ஜீத் சிங். இழப்பு மற்றும் சேதத்திற்கான செலவு எவ்வளவு பெரியது? உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்களின் குழுவான லாஸ் அண்ட் டேமேஜ் கொலாபரேஷன், சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை, மாறிவரும் காலநிலைக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய 55 நாடுகளின் பொருளாதாரங்கள், 2000 முதல் 2020 வரை அரை டிரில்லியன் டாலர்களுக்கு மேல் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பைச் சந்தித்ததாகக் கூறுகிறது. அடுத்த பத்தாண்டுகளில் அது இன்னும் அரை டிரில்லியனாக உயரலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வேளாண்கள் மற்றும் கால்நடைகளின் இழப்பு என்பது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்பு மற்றும் சேதத்தின் ஒரு வடிவம் "மேலும் புவி வெப்பமயமாதலின் ஒவ்வொரு டிகிரியும் அதிக காலநிலை தாக்கங்களைக் குறிக்கிறது. வளரும் நாடுகளில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகள் 2030ஆம் ஆண்டுக்குள் 290 பில்லியன் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது," என்று அந்த அறிக்கையின் ஆசிரியர்கள் கூறுகின்றனர். தொழில்மயமாக்கலுக்கு முந்தைய காலத்தோடு ஒப்பிடும்போது உலகம் ஏற்கெனவே சராசரியாக 1.1 டிகிரி வெப்பநிலை உயர்வைக் கண்டிருந்தது. ஏழ்மையான மற்றும் குறைந்த தொழில்மயத்தைக் கண்டுள்ள நாடுகள், இதன் விளைவாக ஏற்படும் தீவிர வானிலையின் தாக்கம் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் தாங்கள் மேற்கொள்ளும் எந்த முன்னேற்றத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று கூறுகின்றன. எதிர்கொண்ட இழப்புகளையும் சேதங்களையும் சமாளிக்க கடன் வாங்க வேண்டியிருப்பதால், கடன் சுமையில் சிக்கிவிட்டதாகச் சிலர் கூறுகிறார்கள். இழப்பு மற்றும் சேதங்களுக்கான கொடுப்பனவுகள் எவ்வளவு காலமாக விவாதிக்கப்பட்டன? ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, பாரிஸ் ஒப்பந்தம் "காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளுடன் தொடர்புடைய இழப்பு மற்றும் சேதத்தைத் தவிர்ப்பது, குறைப்பது மற்றும் நிவர்த்தி செய்வது," ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அங்கீகரித்தது. ஆனால், இதை எப்படிச் செய்வது என்று முடிவு செய்யப்படவில்லை. "இழப்பு மற்றும் சேதம் பல ஆண்டுகளாக மிகவும் பிரச்னைக்குரிய தலைப்பாக இருந்தது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையே மிக மிக சூடான விவாதஙகள் நடந்துள்ளன," என்று ஜெர்மனியின் பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் மாநில செயலாளர் ஜோச்சன் ஃப்ளாஸ்பர்த் கூறுகிறார். இழப்பு மற்றும் சேதத்திற்கான நிதி இந்தியாவுக்கு பலனளிக்குமா? காலநிலை மாநாட்டில் இழப்பு மற்றும் சேதத்திற்கான நிதி வசதியை நிறுவுவதற்கான ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டால், அது வளரும் நாடுகள் தங்களைக் கட்டியெழுப்பும் வேகத்தைக் கூட்டக்கூடும் என்று ஒருபுறம் சொல்லப்படுகிறது. ஆனால், இந்தியாவை பொறுத்தவரை இந்த நிதி உடனடி தாக்கத்தைத் தாங்குவதற்கு உறுதுணையாக இருக்கும் என்றாலும் அதையே முழுவதுமாக நம்பிவிட முடியாது என்கிறார் பொருளாதார நிபுணர் வ.நாகப்பன். "இது மிகவும் அவசியமான, சமநிலைப்படுத்தும் செயலாக ஒரு நல்ல விஷயம். இருப்பினும், இதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அவற்றை விரிவான முறையில் தீர்ப்பது மிகவும் கடினமாக இருக்கும். வழக்கம்போல், அமெரிக்கா போன்ற அதிக கரிம வெளியீட்டிற்குப் பொறுப்பாளியான நாடுகள் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள் ஒப்புக்கொள்ளலாம். ஆனால், கணக்கீடுகள், நியாயத்தன்மை போன்றவை இதன் நீண்டகால செயலாக்கத்தை உருவாக்கும். ஆரம்பத்தில் கரிம கிரெடிட் முறையும் இதுபோல் பெரியளவில் சென்றடையவில்லை. ஆனால், இப்போது பரவலாகச் சென்றடைந்து, சில மதிப்பாய்வு தொழில்நுட்பங்களோடு இப்போது அமலில் உள்ளது. இதுவும் அதேபோல் நடக்கலாம். ஆனால், அதற்கு மிக நீண்ட காலம் எடுக்க வாய்ப்புள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவை பொறுத்தவரை, மிகப்பெரிய கடலோர நிலப்பரப்பு உள்ளது. அது கடல்மட்ட உயர்வு, சுனாமி, வெள்ள பாதிப்புகள் என்று பல்வேறு பேரிடர் அபாயங்களைக் கொண்டுள்ளன. அதுபோக, நிலநடுக்கம், வெள்ளம், வறட்சி போன்ற பேரிடர் அபாயங்களும் இந்திய நிலப்பரப்புகளில் இருக்கின்றன. ஆகவே, கொடுப்பதை விட அதிகமாக இந்தப் பேரிடர்களைச் சமாளிக்க நிதி கிடைக்கவே வாய்ப்புள்ளது. இந்தியா, தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்துப் பேசி அதற்குரிய நிதியைப் பெற வேண்டும். இருப்பினும், இது தான் நம்மை இழப்புகளில் இருந்து காப்பாற்றும் என்று எதிர்பார்த்துவிட முடியாது. நாம் பேரிடர் இழப்புகளால் ஏற்படும் தாக்கத்தை எதிர்கொள்வதற்கு ஒரு கட்டம் வரை நமக்கு உதவலாம். எவ்வளவு நிதி இதில் சேரப் போகிறது, எந்த அடிப்படையில் மதிப்பீடு செய்யப் போகிறார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை," என்று பிபிசி தமிழுக்காகப் பேசியபோது கூறினார் பொருளாதார நிபுணர் வ.நாகப்பன். காலநிலை மாற்றம் காரணமாக இந்தியா, பாகிஸ்தானில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்ப அலைகள் 30 மடங்கு அதிகமாக இருந்தது. உரிய தரவுகள் இல்லாமல் உண்மையான சூழலியல் இழப்புகளைக் கணக்கிட முடியாது. இருப்பினும், உயிரிழப்புகள், பெரியளவிலான பயிர் இழப்புகள், அதிகரிக்கும் உணவுப் பாதுகாப்பின்மை போன்றவை, வெப்ப அலை போன்ற பாதிப்புகளின் தீவிரத்தையும் அவற்றின் நேரடி இழப்புகளையும் சேதங்களையும் காட்டுகின்றன. ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், அவற்றைச் சமாளிப்பதில் இந்த நிதி குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கலாம். "பெரியளவில் கரிம வெளியீடு செய்வோருக்கு இதுவொரு சட்டபூர்வ கடமையாக மாறக்கூடும் என்று வளர்ந்த நாடுகளில் கவலைகள் இருந்தன. பெரும்பாலான வளர்ந்த நாடுகளுக்கு இது ஒரு சிவப்புக் கோடாகவே இருந்து வருகிறது." எகிப்தில் நடக்கும் 27வது காலநிலை மாநாட்டில் பேச்சுவார்த்தை நடத்துபவர்கள், பணக்கார நாடுகள் தாங்கள் என்பதையும் இழப்பு மற்றும் சேதத்திற்கு இழப்பீடு வழங்குவதற்கான எந்தவொரு கடமையும் தங்களுக்கு இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புவதாகக் கூறினர். வளரும் நாடுகள் அதை எதிர்த்தன. ஆனால், இப்போது பொறுப்பு மற்றும் இழப்பீடு விவாதிக்கப்படாது என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அபுதாபியில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மாநாட்டில் இடைக்கால முடிவெடுப்பதற்கும் 2024-க்குள் உறுதியான முடிவை எடுப்பதற்கும் இந்த மாநாட்டில் இழப்பு மற்றும் சேத நிதி குறித்து விவாதிக்கப்படும் என்று ஒப்பந்தம் கூறுகிறது. "இன்றைய சூழலில் ஒவ்வொரு நாளும் வளரும் நாடு எதிர்கொள்ளும் நெருக்கடிகளைச் சமாளிக்க வழக்கமான, யூகிக்கக்கூடிய, நிலையான நிதியைக் கோரி வருகிறோம். இந்த ஒப்பந்தம் முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. ஆனால், பேச்சுவார்த்தை எப்படி நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்," என்று ஐ.நா காலநிலை கூட்டங்களில் ஆப்பிரிக்கா குழுவுடன் முன்னணி காலநிலை பேச்சுவார்த்தையாளர் ஆல்ஃபா உமர் கலோகா கூறுகிறார். கிளைமேட் ஆக்ஷன் நெட்வொர்க்கை சேர்ந்த ஹர்ஜீத் சிங், ஒப்பந்தம் ஒரு சமரசம் என்கிறார். "பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கும் நாடுகளுக்கும் எந்தவித உறுதியான ஆதரவையும் வழங்காமல், வரலாற்றுரீதியாக மாசுபடுத்திக் கொண்டிருப்பவர்களை இழப்பீடு மற்றும் பொறுப்பேற்பதில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்கும், பணக்கார நாடுகள் வளரும் நாடுகளைத் தள்ளும் விதம் உண்மையில் ஒரு நம்பிக்கைத் துரோகம்." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பருவநிலை மாற்றம் தங்களின் வளர்ச்சி விகிதத்தைக் குறைத்துவிட்டதாக ஏழை நாடுகள் கூறுகின்றன இழப்பு மற்றும் சேதம் பற்றிய முக்கிய கருத்து வேறுபாடுகள் என்னவாக இருக்கும்? இழப்பு மற்றும் சேதத்திற்கான கொடுப்பனவுகளை எந்த அமைப்பு கையாளும் என்பதை நாடுகள் ஒப்புக்கொள்வது கடினமாக இருக்கலாம். காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா மாநாட்டின் மூலம் நிறுவப்பட்ட கருவிகளுக்குள்ளும் அதற்கு வெளியிலும் பொறுப்பேற்கக்கூடிய வழிமுறைகள் இருப்பதாக வளர்ந்த நாடுகள் கூறுகின்றன. வளரும் நாடுகள், தற்போதுள்ள எந்த நிறுவனமும் அதற்குப் பொருத்தமானவையாக இல்லை என்று கூறுகின்றன. "சான்றாக, பாகிஸ்தான் சமீபத்திய வெள்ளத்தால் பேரழிவை எதிர்கொண்டபோது, நைஜீரியா பாதிக்கப்பட்டபோது அல்லது சமீபத்தில் கரீபியனை தாக்கிய இயன் சூறாவளியின் போது அந்த அமைப்புகள் எங்கே இருந்தன?" எனக் கேட்கிறார், ஐ.நா காலநிலை கூட்டங்களில் கூட்டுப் பேச்சுவார்த்தை நடத்தும் 39 சிறிய தீவு நாடுகளின் குழுவான அலையன்ஸ் ஆஃப் ஸ்மால் ஐலேண்ட் ஸ்டேட்டஸ் (Aosis) என்ற கூட்டமைப்புக்கான முன்னணி காலநிலை நிதி பேச்சுவார்த்தையாளர் மிகாய் ராபர்ட்சன். சிறிய தீவு நாடுகளின் குழுவான அலையன்ஸ் ஆஃப் ஸ்மால் ஐலேண்ட் ஸ்டேட்டஸ் (Aosis) என்ற கூட்டமைப்பு, ஆப்பிரிக்க குழு ஆகிய இரண்டும் ஐ.நா காலநிலை மாற்ற அமைப்புடன் இணைக்கப்பட்ட ஒரு புதிய நிதி வசதிக்கு அழுத்தம் கொடுக்கின்றன. அந்த அமைப்பு, தற்போதுள்ள காலநிலை நிதி நிறுவனங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட வடிவம். இந்தத் தனித்த வசதியின் யோசனை பரவலான ஆதரவைப் பெறாமல் போகலாம் என்கிறார் ஃப்ளாஸ்பர்த். இதுவரை நடந்த COP27 மாநாட்டில் ஏதேனும் முன்னேற்றம் உள்ளதா? கடந்த ஆண்டு 26வது காலநிலை மாநாட்டின்போது, இழப்பு மற்றும் சேதத்திற்கு ஸ்காட்லாந்து ஒரு மில்லியம் டாலர் நிதியுதவிக்கு உறுதியளித்தது. கடந்த மாதம், டென்மார்க் 13 மில்லியன் டாலர் பங்களிப்பதாக அறிவித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இழப்பு மற்றும் சேதங்களுக்கான உரிமைகோரல்களுக்கு பணத்தை எவ்வாறு வழங்குவது என்பது ஒரு சர்ச்சைக்குரிய பிரச்னை கடந்த வாரம், ஐரோப்பிய நாடாளுமன்றம், வளரும் நாடுகளுக்கு நிதியளிப்பதில் கவனம் செலுத்துவதற்கு, இழப்பு மற்றும் சேதங்களை "தவிர்ப்பதற்கு, குறைப்பதற்கு மற்றும் நிவர்த்தி செய்வதற்கு" கடன்களைவிட மானியங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. மேலும், 55 பாதிக்கப்பட்டக்கூடிய நிலையிலுள்ள நாடுகளின் குழுக்களான ஜி7 மற்றும் வீ20, சமீபத்தில் காலநிலை பேரிடர்களுக்கு எதிராக குளோபல் ஷீல்ட் என்ற முன்முயற்சியைத் தொடங்க ஒப்புக்கொண்டது. இது காப்பீட்டு முறை மூலமாக, ஓரளவுக்கு இழப்பு மற்றும் சேதத்திற்கான நிதியை வழங்கும். வி20 குழு, அலையன்ஸ் ஆஃப் ஸ்மால் ஐலேண்ட் ஸ்டேட்டஸ் அளவில் பாதி உறுப்பினர்களைக் கூட கொண்டிருக்கவில்லை என்பதால் இது முறையானதாக இருக்க முடியாது என்று அலையன்ஸ் ஆஃப் ஸ்மால் ஐலேண்ட் ஸ்டேட்டஸ் கூறுகிறது. "ஜி7, அவர்கள் தேர்ந்தெடுத்த நாடுகளோடு மட்டுமல்ல, நம் அனைவருடனும் பேச வேண்டும்," என்று கூறுகிறார், அலையன்ஸ் ஆஃப் ஸ்மால் ஐலேண்ட் ஸ்டேட்டஸ் குழுவின் முன்னணி காலநிலை நிதி பேச்சுவார்த்தையாளர் மிகாய் ராபர்ட்சன். ஏழை நாடுகளால் இன்னும் கூடுதலான காலநிலை நிதியைப் பெற முடியுமா? காலநிலை நிதியை அளிக்கும் நிதி நிறுவனங்கள் மற்றும் அதைப் பெறும் நாடுகள் இரண்டிலும் கடந்த காலங்களில் சிக்கல்கள் இருந்துள்ளன. சர்வதேச நிதி நிறுவனங்களின் அதிகாரத்துவம் காரணமாக, நிதி கிடைக்க நீண்ட காலம் எடுக்கும். மேலும் நிதியைப் பெறும் சில நாடுகளில் மோசமான நிர்வாகம், ஊழல் பிரச்னைகள் உள்ளன. இருப்பினும், இழப்பு மற்றும் சேதத்திற்கான நிதியளிக்கும் திட்டத்தை ஓரங்கட்டுவதற்கு இதை ஒரு நியாயமான காரணமாக ஏழை நாடுகள் ஏற்றுக்கொள்ளாது. https://www.bbc.com/tamil/science-63540131
  17. வடகிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வுகோரி 100 நாள் செயல் முனைவின் இறுதி நாள் 8 மாவட்டங்களில் முன்னெடுப்பு By VISHNU 07 NOV, 2022 | 03:49 PM ஹஸ்பர் வடகிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு வேண்டும் என 100 நாள் செயல் முனைவின் மக்கள் குரல் பிரகடனத்தின் 100 ம் நாள் பிரகடன ஒன்று கூடலானது 08 ஆம் திகதி காலை 10.00மணிக்கு வடகிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களில் இடம் பெறவுள்ளது. இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் நல்லூர் சங்கிலியன் பூங்காவிலும், அம்பாறையில் காரைதீவு பிரதேச சபை பூங்காவிலும், கிளிநொச்சியில் இளைஞர் மட்ட விளையாட்டு மைதானம் பரந்தன் சந்தியிலும், மட்டக்களப்பு புனித சூசையப்பர் விளையாட்டு மைதானத்திலும், வவுனியாவில் நகர சபை மைதானத்திலும், திருகோணமலையில் முத்தவெளி வெளியரங்கிலும், முல்லைத் தீவில் கரைதுறைபற்று பிரதேச மைதானத்திலும் மன்னாரில் மன்னார் பொது விளையாட்டு மைதானதாதிலும் இடம் பெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர். "புரையோடிக் கிடக்கின்ற தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான சமஷ்டி அரசியல் தீர்வு " வேண்டிய மக்கள் பிரகடமாக இது இடம் பெறவுள்ளது வடகிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ள இதில் சகல மக்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றனர். https://www.virakesari.lk/article/139364
  18. பதவியாசை ஆரை விட்டது?!😎 (இதுக்கும் ஐயாவுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை🤭)
  19. 306 இலங்கை அகதிகளுடன் நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல் 07 NOV, 2022 | 06:12 PM இலங்கையைச் சோந்த 306 பேருடன் கனடாவுக்கு சட்டவிரோதமாக பயணித்த கப்பலொன்று பிலிப்பையன்ஸிற்கும் வியட்நாமிற்கும் இடையிலுள்ள கடல்பரப்பில் சூறாவளி காற்றில் சிக்குண்டு கடலில் முழ்கிவருவதாகவும் கப்பலில் உள்ளவர்களை உடனடியாக காப்பாற்றுமாறும் அந்த கப்பலில் இருந்த ஒருவர் தோலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கப்பலில் சிறுவர்கள் உட்பட 306 இலங்கையைச் சேர்ந்தவர்கள் இருப்பதாகவும் இவர்களின் உயிரை காப்பாற்றுமாறு ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை விடுக்குமாறும் அந்த கப்பலில் பயணித்துள்ளவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படை உடனடி ஆய்வொன்றை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/139378
  20. அடுத்தபோட்டியுடன் எனது முதல்வர் பதவியை இழப்பேன் என்பதை பணி வன்புடன் தெரிவித்துக் கொல்கிறேன்!🤭
  21. தமிழர் பகுதியை உலுக்கிய கோர விபத்து - உயிர் தப்பியோர் வழங்கிய பதறவைக்கும் வாக்குமூலம் வவுனியா, நொச்சிமோட்டை பாலத்துக்கு அருகில் விபத்து இடம்பெறுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னரே உணவுக்காக கடையொன்றில் அதிசொகுசு பேருந்து நிறுத்தப்பட்டது. இதனால் பேருந்தில் பெரும்பாலானவர்கள் நித்திரை கொள்ளவில்லை. விபத்து இடம்பெற்றபோது விழித்திருந்தமையால் பேருந்தின் கம்பிகளைப் பிடித்து அதிகளவானோர் உயிர்ச் சேதங்கள் இன்றி தப்பித்தனர் என விபத்துக்குள்ளான குறித்த அதிசொகுசு பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட அதி சொகுசு பேருந்து வவுனியா, நொச்சிமோட்டை பாலத்துக்கு அருகில் அதிகாலை 12.20 மணியளவில், வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதகுடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 3 பேர் உயிரிழப்பு 23 பேர் காயம் இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் அநுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களில் 4 பேர் நேற்று மாலை வீடு திரும்பினர். யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவபீட மாணவியான நாவலப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த இராமகிருஷ்ணன் சயாகரி (வயது - 23), சாரதியான கோவிலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.சிவரூபன் (வயது 32), இன்பர்சிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 25) ஆகியோரே உயிரிழந்தனர். உயிரிழந்த முதலாம் வருட மாணவியான சயாகரி, வீடு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்தில் உயிரிழந்தார். இதேவேளை, நிதர்சன் வெளிநாடு செல்லும் பயண ஏற்பாட்டுக்காகக் கொழும்புக்குச் சென்றுகொண்டிருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். வடமராட்சியைச் சேர்ந்தவர் தெரிவித்ததாவது:- "இரவு 11.45 மணியளவில் கனகராயன்குளத்தில் உணவுக்காக பேருந்து நிறுத்தப்பட்டது. சுமார் 10 அல்லது 15 நிமிடங்களில் அங்கிருந்து பேருந்து புறப்பட்டது. தேநீர் அருந்தி, உணவு உண்டமையால் பேருந்தில் பெரும்பாலானவர்கள் விழிப்பாகவே இருந்தார்கள். சுமார் 20 நிமிடத்தில் பேருந்து வளைவு ஒன்றில் திரும்பியது. இதன்போது பேருந்து கொஞ்சம் தளம்பியதை உணர முடிந்தது. அந்த வளைவைத் தொடர்ந்து வந்த மற்றொரு வளைவில் மதகுடன் இதேபோன்று திரும்பும் போதே மோதியது. அந்த மதகுடன் அமைந்திருந்த நடைபாதை போன்ற ஒற்றையடி பாதையில் பேருந்தின் ஒரு சில்லும், மதகின் மற்றைய பக்கத்துடன்பேருந்தின் பின்முனையும் மோதி சாரதியின் இருக்கைப் பக்கமாக பேருந்து சரிந்து விழுந்தது. தூக்கி வீசப்பட்ட மாணவி, சாரதி பெரும்பாலானவர்கள் விழித்திருந்தமையால் பேருந்து சரியும் போதே கம்பிகளைப் பிடித்து தப்பினர். சாரதியும், பல்கலைக்கழக மாணவியும் தூக்கி வீசப்பட்டு கல்லுடன் மோதுண்டிருந்தார்கள். மற்றையவர், கண்ணாடி உடைந்து வெளியே விழுந்துள்ளார். அவர் மீதே பேருந்து சரிந்து வீழ்ந்தது. பின்னால் இன்னொரு அதிசொகுசு பேருந்தும் வந்தது. அதுவும் தளம்பியவாறே வந்தாலும், சாரதியின் சாதுரியத்தால் விபத்திலிருந்து தப்பித்தது. வீதியை விட்டு விலகினாலும் விபத்து ஏற்படவில்லை. அங்கிருந்து ஓடிய நடத்துநர் அந்த பேருந்தில் வந்தவர்களும் உடனடியாக உதவிகளைச் செய்து எமது பேருந்தில் பயணித்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். பேருந்தின் நடத்துநர் இளைஞர் ஒருவரே. அவர் முதல் தடவையாக இந்த பேருந்தில் பணியாற்றினார். அவரும் எங்களுடன் கம்பியைப் பிடித்தே உயிர் தப்பினார். சாரதி உயிரிழந்ததைப் பார்த்ததும் பயத்தால் அவர் அங்கிருந்து ஓடி விட்டார்" - என்றார். 3 அதிசொகுசுப் பேருந்து விபத்துக்கள் இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் இந்த விபத்து உள்ளடங்கலாக நேற்று மாத்திரம் 3 அதிசொகுசுப் பேருந்து விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விபத்தில் மாத்திரமே பயணிகள் பாதிப்படைந்துள்ளனர். வவுனியா, நொச்சிமோட்டைப் பாலதுக்கு அருகில் விபத்துக்குளான அதிசொகுசு பேருந்தை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்ட போது ஏ - 9 வீதிப் போக்குவரத்து இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாகப் பாதிக்கப்பட்டது. https://ibctamil.com/article/vavuniya-bus-accent-details-1667796785
  22. மிரட்டுகிறது சீனா -இந்திய பெருங்கடலுக்குள் நுழைந்த மற்றுமொரு கப்பல் கடந்த ஓகஸ்ட் மாதம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 இன் (YW5)சகோதரியான யுவான் வாங் 6 என்ற கப்பல் (YW6) இந்தோனேசியாவின் லோம்போக் நீரிணை வழியாக இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த நாட்களில், அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் (HIP) சீன அரசுக்கு சொந்தமான கப்பலை நிறுத்த அனுமதிப்பது குறித்து பிராந்திய ஜாம்பவான் இந்தியா தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது, இதன் காரணமாக, ஒரு இராஜதந்திர மோதல் உருவானது. இது முதல் முறையல்ல புலனாய்வு ஆய்வாளர்கள் மற்றும் MarineTraffic வரைபடங்களின்படி, யுவான் வாங் 6 நேற்று (5) மாலை இந்தியப் பெருங்கடலுக்குள் நுழையும் துறைமுகம் எதுவும் பட்டியலிடப்படவில்லை. யுவான் வாங் 6 இந்தியப் பெருங்கடலுக்குள் செல்வது இது முதல் முறையல்ல. இந்த கப்பல் 2020 ஆம் ஆண்டின் முதல் பாதியில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு இந்தியப் பெருங்கடலில் நங்கூரமிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியா தீவிர கவனம் இந்த கப்பல் குறித்து இந்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக இந்தியாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. யுவான் வாங் 6 கப்பல் இந்தியப் பெருங்கடலுக்கு வருவதை இந்தியாவோ அல்லது இலங்கையோ இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. https://ibctamil.com/article/yuan-wang-6-ship-has-arrived-in-the-indian-ocean-1667766997?itm_source=parsely-api
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.