Everything posted by Kapithan
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
உங்களுக்கு எழுத வாசிக்க கற்பித்த ஆசான் பரிதாபத்திற்குரியவர். 🤣
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
உங்கள் பிள்ளைகள் குளிக்கும்போதும் உடை மாற்றும்போதும் வீடியோ எடுத்தாலும் இப்ப்டித்தன் சமயத்தை இழுப்பீர்களா? சரியான சுரணை கெட்ட ஆளாக இருக்கிறீரே சுண்டல்,... 🤣 (நான் என்ன எழுதுகிறேன் என்று தெரிந்துகொண்டுதான் எழுதுகிறேன்.) விடியோ எடுத்ததைப் பற்றிக் கவலை இல்லை இந்த பன்னாடைக் கூட்டத்திற்கு. 😏😡
-
யாழ்ப்பாண வைத்தியர்களின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்
Tip of an iceberg வடபகுதித் தமிழர்களது ஊழலின் ஒரு முனையை வெளியே தெரிய வைத்திருக்கிறார். வைத்தியருக்கு நன்றிகள் உரித்தாகு. 🙏
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியிலுள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறுவடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை / ஆளுநர் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில், கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, இரண்டு இல்லங்களையும் உடனடியாக மூடுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மகளிர் இல்லம் ஒன்றில் பொருத்தமற்ற இடத்தில் நிறுவப்பட்ட சி.சி.ரி.வி கமராக்கள் தொடர்பிலும், பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லம் தொடர்பிலும் அபயம் பிரிவிற்கு முறைப்பாடு கிடைத்தது. அபயம் பிரிவினரால் கோரப்பட்டதற்கு அமைய தெல்லிப்பளை பிரதேச செயலாளரால் கௌரவ ஆளுநர் அவர்களுக்கு, களவிஜய விசாரணை அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இந்த அறிக்கைகளின் பிரகாரம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் குறித்த இரண்டு இல்லங்களையும் மூடுமாறும், விடயம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வடக்கு மாகாணத்திற்குள் இயங்கும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில் மேற்பார்வை செய்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்பிக்குமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாது இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களையும் உடனடியாக மூடுவதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வெளி மாகாணங்களில் உள்ள சிறார்களை வரவழைத்து வடக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்க வைக்க அனுமதி வழங்க வேண்டாம் எனவும், அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருப்பின் உரிய நடைமுறைகளை பின்பற்றி அவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறும் கௌரவ ஆளுநர் தெரிவித்துள்ளார். https://np.gov.lk/ta/யாழ்ப்பாணம்-தெல்லிப்பள-4/ வட மாகாண சபையின் official web 👆
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
https://tellidurga.com/about-our-temple/ தெல்லிப்பளை துர்க்கை சிறுவர் இல்லத் தகவல்கள் 👆 பிறிதொரு செய்தி 👇 யாழில் பாழடைந்த வீட்டில் சிறுவர் இல்லம். 2024-07-04 06:50 இலங்கைச் செய்திகள் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் ஆட்கள் தங்குவதற்கு உகந்த இடமல்லாத இடத்தில் சிறுவர் இல்லங்கள் நடத்தி வந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கடந்த தை மாதம் 03 மலையக மாணவர்களுடன் ஆரம்பமான ஒரு சிறுவர் இல்லம் கடந்த மே மாதம் மேலும் 03 மலையக மாணவர்கள் இணைக்கப்பட்டு 06 மாணவர்களுடன் ஒரு சிறுவர் இல்லம் நடத்தி செல்லப்பட்டுள்ளது. குறித்த சிறுவர் இல்லம் நடத்தி செல்லப்பட்ட வீடு பாழடைந்த நிலையில் காணப்படுவதுடன் , ஜன்னல்களுக்கு கதவுகள் அற்ற நிலையில் , மாணவர்கள் கட்டில் வசதிகள் இன்றி நிலத்திலையே படுத்து உறங்கி எழும்பும் நிலை காணப்பட்டுள்ளது. அத்துடன் மலசல கூட வசதிகள் மற்றும் குளியல் என்பவற்றுக்கு மாணவர்கள் , குறித்த வீட்டில் இருந்து சற்று தொலைவில் பிறிதொரு காணிக்கே செல்ல வேண்டிய நிலை காணப்பட்டுள்ளது. அதேவேளை தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு அருகில் , யூனியன் கல்லூரிக்கு சொந்தமான வீடொன்றில் கடந்த ஜூன் மாதம் தொடக்கம் 12 மலையக மாணவர்களுடன் ஒரு சிறுவர் இல்லம் நடத்தி செல்லப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள 12 மலையக மாணவர்களும் யூனியன் கல்லூரி மாணவர் விடுதிக்கு மாணவர்களை விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்கள் நிரப்பப்பட்டு மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. மாணவர்கள் யூனியன் கல்லூரியின் பொறுப்பில் இல்லாதது தனி நபர்களின் பொறுப்பிலேயே தங்கியுள்ள நிலையில், எவ்வாறு யூனியன் கல்லூரி மாணவர் விடுதியில் மாணவர்களை இணைக்கும் விண்ணப்பம் நிரப்பட்டு மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பில் தெளிவாக அறிய முடியாத சூழல் காணப்படுகிறது. அதேவேளை குறித்த சிறுவர் இல்லம் வடமாகாண சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தில் பதிவு செய்யாது சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இரண்டு சிறுவர் இல்லங்களை சேர்ந்த 16 மாணவர்களும் முன்னர் கற்ற பாடசாலைகளில் இருந்து விடுகை பாத்திரங்கள் பெற்று , முறைப்படி யூனியன் கல்லூரியில் இணைத்து கொள்ளப்படாமல் , தாற்காலிகமாகவே இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. இந்நிலையில் வடக்கில் பதிவு செய்யாது இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களையும் உடனடியாக மூடுவதற்கும் வடமாகாண ஆளூநரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வெளி மாகாணங்களில் உள்ள சிறார்களை வரவழைத்து வடக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்க வைக்க அனுமதி வழங்க வேண்டாம் எனவும், அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருப்பின் உரிய நடைமுறைகளை பின்பற்றி அவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறும் ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.eyetamil.ca/news-story/14911/news https://pagetamil.com/2024/07/04/தெல்லிப்பளை-சிறுவர்-இல்ல/ தெல்லிப்பளை சிறுவர் இல்ல விவகாரத்தில் பிரதேச செயலகம் மீதும் குற்றச்சாட்டு: சைவ சமயத்தின் பெயரால் மூடி மறைக்க முயற்சியா? யாழில் இப்படியொரு மோசமான இடத்தில் இயங்கிவந்த சிறுவர் இல்லங்கள்! விசாரணையில் அம்பலம் Sri Lanka PoliceJaffnaSri Lankan Peoples By Shankar 39 minutes ago விளம்பரம் யாழ். தெல்லிப்ப்பளை பகுதியில் ஆட்கள் தங்குவதற்கு முடியாத இடத்தில் சிறுவர் இல்லங்கள் நடத்தி வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 3 மலையக மாணவர்களுடன் ஆரம்பமான ஒரு சிறுவர் இல்லம் மே மாதம் மேலும் 03 மலையக மாணவர்கள் இணைக்கப்பட்டு 06 மாணவர்களுடன் ஒரு சிறுவர் இல்லம் இயங்கிவந்துள்ளது. யாழ் சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் புகுந்து வைத்திய அத்தியட்சகர் மீது தாக்குதல்! குறித்த சிறுவர் இல்லம் நடத்தி செல்லப்பட்ட வீடு பாழடைந்த நிலையில் காணப்படுவதுடன், ஜன்னல்களுக்கு கதவுகள் அற்ற நிலையில், மாணவர்கள் கட்டில் வசதிகள் இன்றி நிலத்திலையே உறங்கும் நிலையில் காணப்பட்டுள்ளது. மேலும், மலசல கூட வசதிகள் மற்றும் குளியல் என்பவற்றுக்கு மாணவர்கள், குறித்த வீட்டிலிருந்து சற்று தொலைவில் பிறிதொரு காணிக்கே செல்ல வேண்டிய நிலை காணப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையம் முன் நீண்ட நாட்களாக நின்ற கார் தொடர்பில் வெளியான தகவல்! இதேவேளை, தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு சொந்தமான வீடொன்றில் கடந்த ஜூன் மாதம் தொடக்கம் 12 மலையக மாணவர்களுடன் ஒரு சிறுவர் இல்லம் நடத்தி செல்லப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள 12 மலையக மாணவர்களும் யூனியன் கல்லூரி மாணவர் விடுதிக்கு மாணவர்களை விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்கள் நிரப்பப்பட்டு மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. மாணவர்கள் யூனியன் கல்லூரியின் பெறுப்பில் இல்லாதது தனி நபர்களின் பொறுப்பிலையே தங்கியுள்ள நிலையில், எவ்வாறு யூனியன் கல்லூரி மாணவர் விடுதியில் மாணவர்களை இணைக்கும் விண்ணப்பம் நிரப்பட்டு மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பில் தெளிவாக அறிய முடியாத சூழல் காணப்படுகிறது. இதேவேளை குறித்த சிறுவர் இல்லம் வட மாகாண சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தில் பதிவு செய்யாது சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இரு சிறுவர் இல்லங்களை சேர்ந்த 16 மாணவர்களும் முன்னர் கற்ற பாடசாலைகளில் இருந்து விடுகை பாத்திரங்கள் பெற்று, முறைப்படி யூனியன் கல்லூரியில் இணைத்து கொள்ளப்படாமல், தாற்காலிகமாகவே இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. இந்த நிலையில் வடக்கில் பதிவு செய்யாது இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களையும் உடனடியாக மூடுவதற்கும் வடமாகாண ஆளூநரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வெளி மாகாணங்களில் உள்ள சிறார்களை வரவழைத்து வடக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்க வைக்க அனுமதி வழங்க வேண்டாம் எனவும், அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருப்பின் உரிய நடைமுறைகளை பின்பற்றி அவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறும் ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://jvpnews.com/article/children-s-homes-operating-worse-place-in-jaffna-1720121745
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
👆உண்மையான பிரச்சனை இதுதான். அவர்கள் பிடித்திருக்கும் பனர்களில் மிகவும் கொச்சையாக எழுதப்பட்டுள்ள வசனங்கள் சாதிய வன்மத்தில் கூறப்படும் வசனங்கள் போன்று உள்ளதைக் கவனிக்க வேண்டும். இவர் போன்ற ஆட்களுக்கு கிறீஸ்தவ சமயத்தின் மேல் கோபம் வரக் காரணம். 👇 1) தாழ்வு மனப்பான்மை 2) ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் கீழ் கட்டி வைக்கப்பட்டிருந்த பின்னிலை மக்களுக்கு, சகல விதமான கட்டுக்களிலும் இருந்து விடுவித்து சுயமாக முடிவெடுக்கும் சுயகெளரவத்தைக் கொடுக்கும் கல்வியறிவை ஊட்டிய கோபம்
-
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
தங்கள் நாட்டின் கடல் எல்லைக்குள் மீன் பிடிப்பதை சுடாலின் உறுதி செய்ய வேண்டும். அப்போது பிரச்சனை தானாகவே தீரும். 😏
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
மறவன் புலவுக்கு மறை கழன்ற செயற்பாட்டைச் சிலர் கண்டித்தாலும் பலர் மறைமுகமாக வரவேற்கின்றனரோ? . ☹️
-
பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னிலை பெறும் தீவிர வலதுசாரிகள் - அதிபர் மக்ரோங்குக்கு என்ன சிக்கல்?
தேர்தலில் வெல்வதற்காக மக்ரோன் சகல தகிடுதத்தங்களையும் செய்ய வெளிக்கிட்டினம் போல கிடக்கு. 🤣
-
திருமணத்திற்கு மறுத்த காதலன் : பிறப்புறுப்பை வெட்டிய காதலி.
பாரதி கண்ட புதுமைப் பெண்,.. 🤣 இருக்கவே இருக்கிறது Super Glue,..🤣
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
நீங்கள் சொல்வது சரிதான் சாமியார், 1) போத்துக்கே, பறங்கிபடையின் எச்ச சொச்சங்களே" 2) தமிழ் பேசுவோரெல்லாம் தமிழர் இல்லை,. 3) பறங்கியனே,... இதுவெல்லாம் எதைக் கூற வருகிறது? ரெல்மீ ரெல்மீ,..... 🤣
-
முரல் மீனின் தாக்குதலுக்கு இலக்காகி மீனவர் பலி - யாழில் சம்பவம்
அதெல்லாம் சரிதான், அது என்ன ""தாக்குதல் " ? கரந்தடித் தாக்குதலாக இருக்குமோ? அல்லது பதுங்கித் தாக்குதலாக இருக்குமோ? 😏
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
தங்களுக்கு இத்தனை அநியாயங்களையும் செய்த பெளத்தர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ எதிர்ப்பெதையும் காட்டாமல் தங்களுடன் எப்போதும் கூட நிற்கும் கிறீஸ்தவர்களை மட்டும் இவர்கள் குறிவைப்பதன் காரணம் என்ன? 😁
-
பிரான்ஸ் தேர்தல் - மக்ரோனுக்கு மரண அடி.
சனநாயகக் காவலர்களில் ஒன்றான கனடா, ஈரானிய சனாதிபதித் தேர்தலின் போது கனடாவில் வாக்களிப்பை நடாத்த அனுமதிக்கவில்லை எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. 🤣
-
திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகிறாா் குகதாசன்
ஓடு மீன் ஓடி, உறு மீன்வ் வரும் வரை வாடியிருந்த கொக்கு. 😁
-
சம்பந்தர் காலமானார்
1) என்னையு சேர்த்துத்தான் கூறுகிறேன் 2) நிச்சயமாக வைக்க முடியும். 3) நிலத்தில் போராடும்போது அவர்களை அப்படியே விட்டுவிட்டு ஓடிவந்த எல்லோரையும் குறிப்பிடுகிறேன்.
-
சம்பந்தர் காலமானார்
தப்பி ஓடிய எல்லோரும் அந்த ரகம்தான்,...
-
சம்பந்தர் காலமானார்
நான் கூறியதன் உண்மையான அர்த்தம் புரிந்த தாங்களுக்கு நான் விளக்கம் சொல்லவா வேண்டும்?
-
சம்பந்தர் காலமானார்
சம்பந்தரின் அரசியலை கேள்வி கேட்கும, விமர்சிக்கும் உரிமையை மறுக்க முடியாது. ஆனால் யாரையும் துரோகி என்று முத்திரை குத்த யாருக்கும் அதிகாரம் இல்லை. அதுதான் எனது ஆணித்தரமான கருத்து.
-
சம்பந்தர் காலமானார்
ஒரு மசிரும் பிடுங்காத ஆட்கள்தான் பிறரைத் துரோகி என்று தற்போது கூறுகிறார்கள். துரோகி என்று பிறரைத் தூற்ருபவர்களை முச்சந்தியில் நிற்கவைத்து பச்சை மட்டையடி போட வேண்டும்.
-
சம்பந்தர் காலமானார்
தோல்வியை எழுதிச்செல்லும் தமிழர்களின் அடுத்த அத்தியாயம் ஆரம்பம். இனி இந்திய சிறீதரனுக்கும் மேற்கின் சுமந்திரனுக்குமான போட்டி தமிழர்களை முட்டாள்கள் என்று உலகுக்கு மீண்டும் பறைசாற்றும் பயணம் தொடரும்.
-
சம்பந்தர் காலமானார்
தேசத் துரோகி ?? இன்னொருவரைத் துரோகி என்று கூறுவதற்கு தாங்கள் பிடுங்கியது என்ன?
-
ஜோ பைடனை மாற்ற வலியுறுத்தல்: வேட்பாளராகிறார் மிச்சைல் ஒபாமா?
பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாகிப் போய்விட்டது சனனாயகக் கட்சியினரின் நிலை. 🤣
-
மாலைத்தீவு ஜனாதிபதிக்குப் பில்லிசூனியம் – இரு அமைச்சர்கள் கைது!
“”ப்ளக்மெஜிக் (Black Magic) மூலம் பில்லிசூனியம்“” பிளக் மெஜிக் மூலம் பில்லி சூனியம்,..........🤣😂😂😂😂😂 ஆதவன் தோற்றது,..... 🤣
-
டெல்லியில் கனமழை பாதிப்பு: விமான நிலைய மேற்கூரை விழுந்து 3 பேர் உயிரிழப்பு, பலர் காயம்
நிலாவுக்கு ஏதேதோ எல்லாம் அனுப்பியவை என்று கேள்வி? 🤣