Everything posted by நியாயம்
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
வாட்ஸப் குழுமம் ஒன்றில் இந்த காணொளி பகிரப்பட்டது கந்தையர்.
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
- மகன் ஹண்டர் பைடனுக்கு அமெரிக்க ஜனாதிபதி மன்னிப்பு!
பைடன் ஐயாவை தேர்தலில் போட்டியிடவிடாமல் கபடமாக கமலா அக்காவை நுழைத்தார்கள். பைடன் பழி தீர்த்துள்ளார்.- தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி - நாடாளுமன்றத்தில் களேபரம் (காணொளி இணைப்பு)
மக்களிடம் தோற்றுப்போனவர்கள் மக்களின் தெரிவை கேளிக்கை செய்கின்றார்கள். மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா முடங்கவேண்டும் என்பதே பலரின் ஆவல், எதிர்பார்ப்பாக உள்ளது போலும்.- புலம் பெயர் அமைப்புக்களை தூக்கி எறிந்த அநுர அரசு
கலாநிதி அரூஸ் எந்த துறையில் கலாநிதி பட்டம் பெற்றார்? இவரை வைத்து தமிழ்வின் ஓடுது. பெருமாள் போன்றோரின் ஆசான் போலும்.- உக்ரைனிற்கு எதிரான போரில் யாழ் இளைஞர்களா?மறுக்கின்றது ரஸ்ய தூதரகம்
- பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
தம்பியின் பங்காளியே கோழியை அமுக்குமாறு தகவல் கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது அல்லவா?- முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
கைது செய்யப்பட்ட இளைஞனின் நிலமை இப்போது என்ன? பிணையில் வெளியில் வந்து விட்டாரா?- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உக்ரைன் நாட்டில் இருந்து யாழ் இயங்காவிட்டால் பரவாயில்லை சமாளிச்சிடலாம். ஆனால், உக்ரைன் போர் உக்கிரமாகிவிட்டது ஆட்கள் காணாது கருத்தெழுதிய எல்லாரும் அடிபட கட்டாயம் வரவேணும் என்று எங்களை மோகன் போர்க்களத்திற்கு கூட்டிக்கொண்டு போகாவிட்டால் சரி. 😁- உக்ரேனில் மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் அவதி!
அமெரிக்காவின் நீண்டதூர ஏவுகணைகளை பயன்படுத்தி போரில் வெல்லப்போகின்றார்கள் என்றல்லோ கருத்து சொல்லப்பட்டது.- யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மலேசிய செல்வந்தர் காலமானார்
கெளதம புத்தரின் வாழ்க்கை போல் உள்ளதே.- 16 வயதிற்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை; அவுஸ்திரேலியாவில் பிரேரணை நிறைவேறியது
பெற்றோரின் கைத்தொலைபேசிகளை பிள்ளைகள் பயன்படுத்துகின்றார்களே. தாம் சமூக ஊடக கணக்கை சொந்தமாக உருவாக்க முடியாது போனாலும் பெற்றோர் பயன்படுத்தும் இலத்திரனியல் சாதனங்கள் வாயிலாக பிள்ளைகள் சமூக ஊடகத்தினுள் உலவுவதை கட்டுப்படுத்த இயலாதே.- கனேடிய இலங்கை இரட்டைக் குடியுரிமை பெற்ற யாழ் கணக்காளர் விமான நிலையத்தில் கைது!
சிறீ லங்கன் விமானத்தில் பயணித்த ஒரு சிங்கள இரட்டை குடியுரிமையிடம் அதே விமானத்தில் பயணித்த ஒரு தமிழ் இரட்டை குடியுரிமை ஆட்டையை போட்டுள்ளது. வினோதமான உலகம். 😇- வடக்கு கிழக்கில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு தொடர்பான செய்திகள்
உடைந்து விழுந்துள்ள பாலத்தை பார்த்தால் பாரம் தாங்கக்கூடியதாக தெரிய இல்லையே. பாலத்தின் குறுக்குவெட்டுமுகத்தை பார்த்தால் இப்படியான பாலங்களின் மேல் எப்படி நம்பி வாகனத்தை ஓட முடியும் என தெரியவில்லை. காபெட் ரோட் என்று கதைப்பார்கள். அந்த காப்பெட் படத்தில் வடிவாய் தெரிகின்றது.- நிதி அமைச்சின் கீழ் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
இது பாரிய கடன் சுமையுடன் பலத்த நட்டத்தில் ஓடுகின்றது என்றுதானே செய்திகள் வந்தன. இனி லாபகரமாக இல்லை என்றாலும் நட்டம் இல்லாமல் நடாத்துவது நடைமுறை சாத்தியமா?- அருச்சுனாவுக்கு நீதிமன்றம் பிடியாணை
நீங்கள் சாபம் போடும் அளவிற்கு அவர் உங்களுக்கு என்னதான் தீங்கிளைத்தார்? வேண்டுமென்றால் முன்பு கமலகாசன் நடாத்திய இப்போது விஜய் சேதிபதி நடாத்தும் பிக் பாஸ் வீட்டுக்குள் விடவேண்டும் என கோருங்கள். அவர் அங்கு என்ன செய்கின்றார் என எல்லாரும் பார்க்கலாம்.- அருச்சுனாவுக்கு நீதிமன்றம் பிடியாணை
எப்பவோ மூன்று அரை வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்துக்கு இப்போது பிடியாணையா? மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பழைய கோப்புக்களை இப்போது தான் திறந்து பார்க்கின்றார்களோ? இலங்கையில் விபத்து ஏற்படும்போது ஆளையாள் தாக்குவது எல்லாம் வழமையாக நடைபெறும் விடயங்கள் தான். நான் கடந்த தடவை கொழும்பில் நின்றபோது ஒரு சம்பவத்தை பார்த்தேன். மிகவும் நாகரிகமாக அலுவலக உடை தரித்த ஒருவர் தனது வாகனத்தை விட்டு இறங்கி அதனுடன் முட்டிய முச்சரவண்டி சாரதி மீது குத்துக்கள் விட்டார். சுற்றி நின்று ஒரு பதினைந்துபேர் பார்த்தார்கள்.- கனடாவில் கொடூரம் - தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்ற மகன்! தமிழினப் பற்றாளர் மதி மரணம்
பெற்றோருடன் பிள்ளைகள் முரண்டுபிடிப்பது பிரச்சனைப்படுவது சண்டைபிடிப்பது வழமையான ஒன்றுதானே. பெற்றோர் பிள்ளைகள் இடையில் கருத்து முரண்பாடு, பிரச்சனை இல்லாத குடும்பம் என்றால் அதிசயம்தான். ஆனால், இங்கே நிதானம் இழக்கப்பட்டு உயிரிழப்புவரை சென்றுள்ளது. நாம் ஊகங்கள் செய்யலாம். உண்மை ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.- அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் – சபாநாயகர் தெரிவிப்பு
ஊமை குத்தும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. சிங்கம் சிரிச்சுக்கொண்டு பேஸ்புக்கில் பொன்மொழி, நேரலை லைப் என்று தூள் கிளப்பிக்கொண்டு உள்ளது.- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
இனியுந்தான் ஏஜென்சிகாரனிட்ட காசு கொடுத்து வெளிநாடு வரப்பார்ப்பார்கள் நம்ம ஆட்கள்? அவுஸ்திரேலியா அரசாங்கம் எங்கட ஆட்கள் களவாக அங்கு வரவேண்டாம் என்பதை மெத்த கஸ்டப்பட்டு பிரச்சாரம் செய்யிது. இனி இவ்வளவு கஸ்டம் வேணாம். களவாக வர வெளிக்கிட்டால் உக்ரைனுக்கு பிடிச்சு அடிபட அனுப்பி போடுவாங்கள் என்று சொல்லிவிட்டால் போதும்.- வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவர் சங்கங்கள் அனுப்பும் நிதி லஞ்சம், ஊழலை வளர்த்துவிடுகின்றது!” - ஆளுநர் வேதநாயகம்
அவர் என்ன சொல்ல வருகின்றார் என்றால் கொட்டுகின்ற காசை தங்களிட்ட கொண்டு வந்து தரட்டாம்.- தமிழரசியலில் ஒரு மிஸ்டர் பீன்ஸ்! நிலாந்தன்.
உங்களில் பலருக்கு மாஸ்டரின் மைண்ட் செட் புரியவில்லை. ஆனானப்பட்ட அரசியல் வித்தகர் தனக்கே கிடைக்காத பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒரு சின்னப்பொடியனுக்கு சிம்பிளாக கிடைத்துவிட்டது எனும் அவமானம், மன உளைச்சல் மாஸ்டருக்கு. அர்ச்சுனாவின் அலப்பறை பேஸ்புக் முழுதும் ஓடினால் தங்கள் அலப்பறையை யார் பார்ப்பார்கள் எனும் கவலை பலருக்கு. நான் யாழ் கருத்துக்களத்தில் அர்ச்சுனா ரசிகர் மன்றம் ஒன்று தொடங்கலாமோ என்று பார்க்கின்றேன்.- ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
நானும் இங்கு ஒரு கருத்தை பதிந்தேன். காணாமல் போய்விட்டது. கருத்தை தூக்கியவருக்கு பேஸ் கிட்டார் பிடிக்காதோ?- கனடாவில் கொடூரம் - தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்ற மகன்! தமிழினப் பற்றாளர் மதி மரணம்
மகனுக்கு மனநோய் என கூறப்படுகின்றதே. மனநோய் என்றாலே பிரச்சனை தானே.- அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
மருத்துவர் அர்ச்சனா என்னதான் செய்கின்றார் என தொடந்து அவதானிப்போம். மற்றைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்றார்களா என்னன்செய்தார்கள் என்று ஒரு செய்தியும் எனது கண்களில் படவில்லை. ஆனால், இவர் போகும் இடம் எல்லாம் அதிர்கின்றது. சரி பார்ப்போம். - மகன் ஹண்டர் பைடனுக்கு அமெரிக்க ஜனாதிபதி மன்னிப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.