Everything posted by விசுகு
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
வரலாறு தெரிந்தவர் நீங்கள். நாம் மேற்கை நம்பி எமது போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. எமது கனவும் அரவணைப்பும் இந்திய ரசிய சீன கியூபா மற்றும் வியட்நாம் சார்ந்து தான் ஆரம்பித்தது. ஆனால் இவர்கள் அனைவரும் கதவையும் காதையும் முற்றிலுமாக மூடிய பின்னரே நாம் அடுத்தவரை நாடினோம். போர்க்குற்றங்கள் மற்றும் பேரளிவுகளுக்கு எல்லோரும் தான் காரணம். அதில் இந்திய ரசிய சீன பங்கு மிக மிக அதிகம். மேற்குலகம் சில தடைகள் எச்சரிக்கைகளை யாவது செய்தது. அதுவும் இல்லாமல் இருந்திருந்தால் கட்டுப்பாடற்ற இந்திய ரசிய சீன ஆதரவுடன் இலங்கையில் தமிழர்களே முற்று முழுதாக இல்லாதொழிக்கப் படக்கூடிய வாய்ப்புகள் தான் அதிகம் உள்ளது.
-
சாணக்கியன், சுமந்திரன் ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியுடன் கலந்துரையாடல்..!
இதிலிருந்து தெரிய வருவது யாதெனில் சுமந்திரன் இல்லாமல் சாணக்கியன் பூச்சியம்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இதைத் தான் நானும் அண்ணைக்கு எழுத இருந்தேன். இப்படி தான் ஆரம்பத்தில் நானும் நினைத்தேன். அது தொடர்ந்தபோது இங்கே அதை சில நாட்களின் பின்னர் சுட்டிக் காட்டினேன். இதையும் இங்கே பல தடவைகள் சுட்டிக் காட்டி இருக்கின்றேன். எமக்கான நீதி வேண்டும் என்று நாம் முயலும் முன் இவ்வுலகில் யார் நீதிக்கு எதிரானவர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதுவே முதற்படி உலகின் எந்த நாட்டிலும் எந்த கட்சியிலும் இருக்கலாம். அவர்கள் எவராயினும் எமது அநீதிகளுக்கு குரல் தரவேண்டும் என்றால் நாம் மற்றவர்களின் அநீதிகளுக்கு குரல் கொடுப்பவராக கொடுத்தவராக இருக்கவேண்டும். நன்றி சகோ.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
சேகுவேரா ஒரு வரலாற்றை எமக்கெழுதிச்சென்றார். பிடல் காஸ்ட்ரோ ஒரு வரலாற்றை எமக்கு காண்பித்தார். அவர்கள் செதுக்கிய கியூபா எமக்கு நம்பிக்கையூட்டி முதுகில் குத்தி பாடம் தந்தது. இவற்றை வைத்து வரலாறு வழிகாட்டியாக நாம் ஒரு பாதை காணவேண்டும். காணுவோம்
-
இந்தியாவின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் இலங்கை மண்ணை பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை - மோடியிடம் ஜனாதிபதி அநுர உறுதி
இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றி மூச்சு????
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
நானும் முரண்பட்டு ஆறு ஏழு மாதங்கள் வெளியே நின்றேன். பல பேச்சுவார்த்தைகள் விளக்கங்களுடன் தமிழர்களுக்கு ஒரு பலமான இயக்கத்தின் தேவை குறையவே இல்லாத தாயக நிலை. பலமான மீனை இன்னும் பலமாக்குவதை தவிர வேறு வழி எமக்கு இல்லை. மீண்டும் இணைந்து கொண்டேன்.
-
யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா
ஆம் திறமை இருந்தாலும் இந்தப்பெரிய மாபியாக்கூட்டத்துடன் வெற்றி பெற முடியுமா என்பது கேள்விக் குறியே. ஆனால் நிச்சயமாக இந்த மாபியாக்கும்பல் புலத்திலிருந்து இயக்கப்படுவது அல்ல. இயக்கவும் முடியாது.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
ஒரு நல்ல கருத்து. அதிலும் உங்கள் வக்கிர புத்தி. உங்கள் தப்பில்லை கொடுக்கப்பட்ட தொழில். வாங்கும் கூலிக்கு நீங்கள் இவ்வாறு தான் எல்லோரையும் ஒரே சாக்கில் போட்டு கூவவேண்டும். அதில் என்னையும் போட்டு கட்ட கடந்த பல வருடங்களாக நீங்கள் முயல்வதை யாழ் களம் அறியும். புலத்தில் தலைவர் நம்பிய ஒரு சிலர் செய்த தவறுகளை வைத்து முழுப் பேரையும் தாயக நேசிப்பிலிருந்து துரத்தும் உங்கள் எஜமானர்களின் பணிகள் தொடர்ந்து வெற்றிப்பாதையில் செல்ல உங்கள் போன்ற கூலிகளின் முதுகுகுத்திகள் தான் காரணம். தாயக மக்களுக்கு புலத்தில் இருந்து கிடைக்கும் ஆதரவுக் கரத்தை ஒடுக்கும் தடுக்கும் உங்கள் கூலிப்பணிக்கு நீங்கள் பெறும் கூலி உங்கள் பரம்பரையையே நாசமாக்கும். (நான் இவ்வாறு யாழில் எவருக்கும் எழுதியதில்லை. ஆனால் எங்கும் தமிழர்களை புலம்பெயர் தமிழர்களை செயற்பாட்டாளர்களை தேசியத்தை நேசிப்பவர்களை நீங்கள் தொடர்ந்து கலைத்து கலைத்து தாக்கி வருவதால் இவ்வாறு எழுதவேண்டிய நிலை. இனி மேல் முதுகுகுத்தியுடன் எந்த தகவல் பரிமாற்றத்தையும் வைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. டொட்.)
-
கனடா நோக்கிப் பயணமாகியுள்ள சிறீதரன்
இதுவரை உலகமெல்லாம் சென்று வந்த எமது பிரதிநிதிகள் புலம்பெயர் மக்களிடமிருந்து எடுத்துச் சென்று தாயகத்தில் செய்த செயற்திட்டங்கள் ஏதாவது????
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
எங்கேயாகிலும் அநீதியைக் கண்டு கொதிப்பாயாக இருந்தால் நீயும் என் தோழனே. சேகுவேரா
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
முடியும் ஆனால் குள்ளநரிகளால் அது முடியாது. நேர்மையற்றவர்களிலாலும் பிழைகளை மட்டுமே தேடுபவர்களாலும் அது சாத்தியமே இல்லை..
-
திண்ணை
உங்களுக்கு பொறாமை. வந்து வந்து விழுந்த ஆளை விட்டு விட்டோமே என்று?😋
- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
- தமிழரசுக் கட்சியிலிருந்து சிலர் நீக்கப்படுவர்- எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
தமிழரசுக் கட்சி சார்ந்த இத்திரியில் தீவிர வரட்டு தேசியம் பற்றி பிதற்றும் தங்கள் மூளை கொஞ்சம் அல்ல மிகவும் முற்றிய பைத்தியநிலையே. எனவே பேசி இது தணிய வாய்ப்பில்லை. டொட்.
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
சூடு சுரணை உள்ளவர்களுக்கு நிச்சயம் வரும். அதிகாலையில் அடுத்த வீட்டில் மூக்கை நுழைத்து குற்றம் கண்டு சுகம் காணும் வியாதிகளுக்கு சுரணை சுட்டுப் போட்டாலும் வராது.
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
ஒரு தவறு கண்முன்னே நடக்கும் போது அதை கண்டிக்க வக்கில்லை. உடனே நீ நிறமோ? என்று பக்கத்து வீட்டின் மதிலால் பார்ப்பது???
- நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இந்த திரிக்கும் நீங்கள் எழுதிக் கொண்டு இருப்பதற்கும் என்ன சம்பந்தம்?? சிலதுகளுக்கு எப்படி போட்டு அடித்தாலும் நன்றி நன்றி என்று சிரித்தபடிதான் திரியுங்கள். அதுக்கு கொஞ்சம் சூடு சுரணை வேண்டும். இதற்கு மேலும் எழுதி மீண்டும் எச்சரிக்கை வாங்க விரும்பவில்லை. டொட்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
திரு. முதுகுகுத்தி ... உங்களுக்கு ஒரு மைனஸ் பாக்கி...
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
ஒரு கட்சியின் கூட்டத்தையே கையாளக் தெரியவில்லை?????
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
அதாவது இத்தனை வருடங்களாக நடந்த போராட்டத்தில் உங்களால் காண முடிந்த அல்லது தூக்கி காவ முடிந்த புலிகளின் தவறு இது தான். வெள்ளைத் துணியில் கறுப்பு பொட்டைத்தேடும் உங்களுக்குமாகத்தான் ஆயிரம் ஆயிரம் இளசுகள் தம்மை ஈகம் செய்தார்கள். தொடர்ந்து காவுங்கள். கொஞ்சம் கண்ணே மணியே என்றும் போட்டு அடுத்த தலைமுறைக்கும் கடத்துங்கள். முகங்களை மறைக்க தேவை இல்லை. இனி அவர்கள் வந்து பதில் தரப்போவதில்லை.
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இது வாழ்த்தா? கடியா சகோ.🤣
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
காலம் எல்லாவற்றையும் மாற்றும். அர்ச்சனாவின் பணி 😷 அது தான் என்று நினைக்கிறேன்.
-
யாழ்ப்பாணத்தில் கூரைமேல் சோலார் அனுமதியில் முறைகேடு நடந்தது உறுதி!
புலம்பெயர் தேசங்களில் இருந்து சென்று வீடுகட்டிய பலரும் உடனடியாகவே மின்சாரம் மற்றும் சோலார் பெற்றுக்கொண்டனர். எனவே கிளறினால் கனக்க வரும்????