Everything posted by விசுகு
-
“என் நாட்டுக்கு அனுப்பி வையுங்கள்”: இலங்கை தமிழர் கோரிக்கை!
தவறு அவர் அது இல்லாவிட்டால் இது என்று தான் கேட்கிறார். எனவே இரண்டுமே சமனாக.
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
நான் இதுவரை அவரை விமர்சனம் செய்வதில்லை. அவரது தந்தை மற்றும் அவரது படிப்பு சார்ந்து ஒரு எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் தேவை என்று நினைக்கிறேன். அதேநேரம் ஆதரிப்பதும் இல்லை. அதுவும் தவறான தகவலை பாதையை அவருக்கு தந்து விடக்கூடும்? பார்க்கலாம் ஆட்டம் எதுவரை என்று.
-
கழுத்து சுளுக்கிற்காக மசாஜ் செய்த பாடகிக்கு இறுதியில் நேர்ந்த சோகம்
எனக்கு இது பிடித்தமானது. ஆனால் இறுதி தலை முறிப்பில் உயிர் ஒருக்கா போய் மீண்டும் வரும்.🤣 நீங்கள் பார்த்த அந்த வீடியோவை நானும் பார்த்து தொலைத்தேன். 🤣
-
திடீர் காய்ச்சலால் யாழ்.போதனாவில் மூவர் உயிரிழப்பு
தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: அவசர செய்தி! உயிர்காக்க விரைவாகப் பகிருங்கள் நிலமை கடும் தீவிரமாகச் செல்கிறது. எலிக்காய்ச்சல் யாழ்ப்பாணத்தில் வெகு வேகமாகப் பரவுகின்றது. பருத்தித்துறை வைத்தியசாலை மருத்துவ நிபுணர் வெளியிட்டுள்ள செய்தியில் , இதுவரை பருத்தித்துறை வைத்தியசாலையில் மட்டுமே 5 பேர் உயிரிழந்துள்ளனர். பத்து நோயாளிகள் நோய் தீவிரமாகி யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். உங்களுக்கு காய்சல் , உடம்பு வலி , மூட்டு வலி , கண் சிவப்பாதல், சிறுநீர் கழிப்பது குறைதல், கண் சிவப்பாகுதல், வயிற்று வலி போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுங்கள். சேற்று நிலங்களில் வேலை செய்தவர்கள், விவசாயிகள், மீனவர்கள் , அண்மைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெள்ள நீரில் நடந்து திரிந்தவர்கள் பருத்தித்துறை சுகாதார பணிமனையை தொடர்புகொண்டு (MOH office) , நோய் வருவதற்கு முன்பான மாத்திரைகளை பயன்படுத்தி உங்களை உயிராபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். இவை தடுப்பூசிகள் அல்ல , அன்டிபயட்டிக் மாத்திரைகள். தடுப்பூசிக்கு பயப்படுவார்கள் கூட அச்சப்படாமல் இதைப் பயன்படுத்தலாம். அவசரமாக பகிருங்கள். உங்களுக்குத் தெரிந்து மேலே சொன்னதுபோல தேங்கி நிற்கும் நீர் நிலைகளோடு தொடர்பு பட்டு ஆபத்தில் உள்ளவர்களை உடனடியாக சுகாதார பணிமனைக்கு ( MOH office) யிற்கு அழைத்துப் போங்கள். உங்களுக்குத் தெரிந்த எல்லோருக்கும் இந்த செய்தியை அனுப்புங்கள். நீங்களும் யாரோ ஒருவரை மரணத்தில் இருந்து காப்பாற்றலாம். இதை புறக்கணிக்காமல் பகிருங்கள். தகவல் மூலம் : செல்லத்துரை பிரசாந், பொது மருத்துவ நிபுணர் பருத்தி துறை ஆதார வைத்தியசாலை . பிரதி - சி.சிவச்சந்திரன் https://www.facebook.com/share/p/18UmzZibeV/
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இதே வைத்தியர் அர்ச்சுனா ஒரு முறை தனது மேலதிகாரி தன்னை சார் என்று அழைக்கூமாறு கேட்டதே நக்கல் நையாண்டி செய்து பல வீடியோக்களை வெளியிடப்பட்டதாக ஞாபகம்lément blockquote
-
செல்வம் – கஜேந்திரகுமாா் விசேட சந்திப்பு
தொடரட்டும் .,..
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
1, 2, 3 எனது கருத்தும் இது தான். அதனால் தான் எங்கள் மூதாதையர்களோ நாங்களோ கட்டிய பணமல்ல நாங்கள் வந்த போது அனுபவித்தது என்று எழுதினேன். எனது மக்கள் உங்களைப்போல உயர் வீத வரி கட்டுபவர்கள் தான். ஆனால் பிரான்சில் தாம் பிறந்ததில் இருந்து மருத்துவம் மற்றும் உயர் படிப்பு வரை கல்வி என்பன இலவசமாக கிடைத்தன அதை தமக்காக மூத்த தலைமுறையினர் கட்டினர் என்பதை மறக்காதிருக்கும்படி வளர்த்திருக்கிறேன். அதனால் அவர்கள் அதுபற்றி திருப்பி கொள்கிறார்கள்.
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
கிட்டத்தட்ட இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வந்து 40 வருடங்களில் நான் ஜேர்மனிக்கு வந்தபோது எனக்கு உணவு உடை மருத்துவம் மற்றும் இருப்பிடத்தையும் இலவசமாக தந்த நாடு. இதற்கான பணம் என் முன்னோர்களோ அல்லது நானோ வரியாக கட்டியதல்ல. அவர்களது முன்னோர்கள் அல்லது அவர்கள் வரியாக கட்டியது. கட்டிக் கொண்டு இருப்பது. அல்லது அவர்களது முன்னோர்கள் களவெடுத்தது. ஆனால் அப்பொழுது எமக்கு அமிர்தமாக இருந்தது அல்லவா.
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
யேர்மனியில் வசிக்கும் அவருக்கு இது நன்றாகவே தெரியும்.
-
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்!
ஒரு முகநூல் பதிவு உங்களுக்காக: //யூதர்களின் மத நம்பிக்கையின்படி இறை தூதரின் (டேவிட் மாமன்னரின் மீள்பிறப்பு) வரவுடன் ஜெருசலேமில் (தற்போது இஸ்லாமியர்களின் புனித அல்-அக்ஸா மசூதி இருக்குமிடத்தில்) யூதர்களின் கோவில் மீளவும் எழுப்பப்படுமெனவும், அப்போது உலகில் வாழும் யூதர்கள் அனைவரும் அவர்களுக்கான சத்திய பூமிக்கு திரும்பி அழைக்கப்படுவார்கள் எனவும் உலகம் எங்கும் அப்போது சமாதானம் தழைக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்நிகழ்வு விரைவில் நடைபெறவிருக்கிறது எனவும் இவ்வுலக யூதர்களின் வரவிற்காக அகன்ற இஸ்ரேல் உருவாக்கப்படுகிறது எனவும் இதன் பொருட்டு நடைபெறும் மனித அழிவுகள் எல்லாமே கடவுளின் சித்தம் என எண்ணுவதால் யூதர்கள் மனக்குழப்பம் அடையத் தேவையில்லை என அவர்களின் மத போதகர்கள் போதனை செய்து வருகிறார்கள் எனவும் கூறப்படுகிறது. மேலே கூறப்பட்ட இளம்பெண்ணின் உணர்ச்சி வசப்பட்ட கூற்றும் இதையொட்டியே அமைந்திருக்கிறது. சிரியாவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இஸ்ரேல் ஏற்கெனவே சிரியாவிடமிருந்து 1967 போரில் கைப்பற்றிய கோலான் மலைப் பிரதேசத்தையும் தாண்டி மேலும் உள்ளே நகர்ந்துகொண்டிருப்பது இத் திட்டத்தின் பிரகாரமே.// முழுமையான கட்டுரைக்கு: சிரியா: தேவதூதரின் வரவிற்குத் தயாராகுங்கள்! - https://www.facebook.com/share/p/1AxcsSfD2Q/
-
ஹெய்ட்டியில் ஆயுதகுழுக்களால் 100க்கும் அதிகமானவர் படுகொலை - சர்வதேச ஊடகங்கள்
எங்கே போகிறோம்?????😭
-
அதிதீவிர சிகிச்சை பிரிவில் முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம்.
நலம் பெற வேண்டுகிறேன்
-
ஒரே நாளில் 1000 பேருடன் உடலுறவு; முண்டியடித்து விண்ணப்பிக்கும் ஆண்கள் - சாதனைக்கு தயாராகும் நடிகை
நமக்கு இது சரிப்பட்டு வராது. ஒருத்தருக்கு ஒரு நிமிடம் 4 செக்கன்கள்.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
ஒரு செயலுக்கும் மைக் பேச்சுக்குமான வித்தியாசம் என்னவென்றால் இங்கே அனுவுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்பவர்களும் கொடுக்க கூடாது என்பவர்களும் கூட இதற்காக ஒரு நாள் பதில் சொல்ல வேண்டி வரும். ஆனால் செயல் முடிவடைந்துவிடும். இதில் மதில் மேல் பூனைகள் மட்டுமே தப்பிக்கொள்ளும். உண்மை பொய் என்று இரண்டு தான் உண்டு. இதில் எந்த முடிவையும் எடுப்பதற்கு ஒரு காலக்கெடுவும் உந்துதலும் இருக்கும். எனவே அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை காலம் கடந்தோ ஞானம் பெற்றோ விமர்சனம் செய்வது பொருத்தமற்றதும் பொறுப்பற்றதும் கூட. முடிவுகளை எடுக்கும் போது வரலாறே வழி காட்டி என்று தான் தலைவர் முடிவுகளை எடுத்தார். அந்த வரலாற்றை வைத்து நாம் தற்போதைய முடிவுகளுக்கு பாவிக்கலாம். ஆனால் அதை நக்கல் நையாண்டி செய்வது மதில் மேல் பூனைகளின் தொடர்ச்சியே. அதை பார்த்து கடந்து செல்ல முடியாது.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
நன்றி சகோ. இங்கே தங்கள் நையாண்டி தேசத்தை நேசிப்பவர்களை கோபப்பட வைக்கும் என்று சிரித்து மகிழும் போது அவரும் ஆயிரமாயிரம் போராளிகளும் இவ்வாறு எவ்வளவு அவமானங்களை நையாண்டிகளை சகித்துக் கொண்டிருக்க வேண்டி இருந்திருக்கும் என்று தான் நினைத்தேன்.
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
நல்லதை மட்டுமே நினைப்போம். வளர்ப்போம்.
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
நீங்கள் குறிப்பிடும் நாடுகள் மதம் பிடித்த நாடுகள். அவை அழிந்து தான் போகும் போகணும். என் விருப்பமும் அது தான். நான் சொல்ல வருவது நாளடைவில் என்று மட்டுமே அண்ணா. மக்கள் நலன் மற்றும் உலக பொருளாதாரம் சார்ந்து சிந்தித்தால் நாளடைவில் முன்னுக்கு நான் எழுதிய நாடுகளின் வரிசையில் வரலாம் எனது உறவினர்களே இங்கிருந்து குவைத்தில் சொத்து வாங்கி விடுகிறார்கள். எனவே நம்பிக்கை தரும் இடமாக உள்ளது அல்லவா?
-
இந்திய மீனவர்களின் அத்துமீறல் செயற்பாடுகளை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை - இராமலிங்கம் சந்திரசேகர்!
சரி என்னதான் தீர்வு என்று ராமலிங்கத்தார் ஏன் ஒழிச்சு விளையாடுகிறார்???
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
ஒரு தகப்பன் இருக்கும் போது எமக்கிருக்கும் பலத்தையும் மரியாதையும் அவரை இழந்த பின்னர்.....? 😭
-
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர
உண்மையில் இனப் பிரச்சினையின் தாக்கம் மற்றும் இன்றைய இலங்கையின் பொருளாதார மற்றும் எதிர்கால நிலை சார்ந்த தூர நோக்கோடு சிந்திக்கும் திறன் தற்போதைய அரசுக்கு மற்றும் கட்சிக்கு இருக்குமானால் அத்தனை அதிகாரமும் பாராளுமன்ற வாக்களிப்பு பலமும் வசதிகளும் தாராளமாகவே இருக்கிறது. மனம் மட்டுமே வேண்டும். இருக்கா? கிடைக்குமா??
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
நாளடைவில் ஒரு குவைத் ஆகவோ சவூதி ஆகவோ மாறத் தான் வாய்ப்பிருக்கிறது. பார்க்கலாம்.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
மூஞ்சூறு சும்மா குறுக்க ஓடுது,?? பாராளுமன்ற உறுப்பினர் அல்லது மாகாணசபை தலைவர் இரண்டில் ஒன்று உறுதி?
- சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
-
புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல் வீழ்ச்சி!
இந்த திறைசேரி உண்டியல்கள் விற்பனைக்கு விடப்படுவதனூடாக இலங்கை பொருளாதாரத்தில் என்ன மாற்றங்கள் வரக்கூடும்?? இதன் நன்மை தீமைகள் என்ன? யாராவது தெரிந்தவர்கள் எழுதினால் நன்று.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
உங்கள் நோக்கம் தமிழரை புலம்பெயர் தாயகம் என பிரித்தல் தமிழர்களிடமும் அவர்களது போராட்டம் சார்ந்தும் குறைகளை மட்டுமே தேடி தேடி மீண்டும் மீண்டும் பரப்புரை செய்து தமிழர்கள் ஒற்றுமையாக பலமடையாது பார்த்துக் கொள்ளல் இதனூடாக தமிழ்த் தேசியத்தை பலவீனமாக்குதல் இது போன்ற உங்கள் பரப்புரைகள் தொடரும் வரை உங்களை நான் எச்சரிக்கை செய்வேன். அது என் உயிர் உள்ளவரை......