Everything posted by விசுகு
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
@goshan_che இது ஒருவித காய்ச்சல் சகோ. நேரம் பொன்னானது. நன்றி.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
இது தான் எதிரிக்கு எதிரி நண்பன் என்பதாகும். இதை வைத்து கொஞ்ச நாளைக்கு தமிழ் தேசியத்தை வறுக்கலாம் வெருட்டலாம் என்ற கற்பனை தான். ஆனால் மாவீரர் நாளில் தாயகம் இவர்களை வெட்கப்பட வைத்துவிட்டது.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
மிகத் தவறான கருத்து. ஒரு தேசியம் சார்ந்த விடயங்களை பேச இன்ன தகுதிகள் வேண்டும் என்ற இறுமாப்புடன் செயற்படமுடியாது. அவரவர் தத்தமது கடமைகளை செவ்வனே செய்தாலே போதும். தூய்மை வாதம் பேசி ஆட்களை தேட தொடங்கினால் நானும் இல்லை நீங்களும் இல்லை. எவரும் இல்லை. அப்படியானால் யார்?????
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
இதைத் தான் ஆரம்பத்தில் இருந்தே நான் இங்கே எழுதி வருகிறேன். ஜேவிபியால் ஒரு போதும் இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து மீள வைக்க முடியாது என்று. ஏனெனில் அவர்களது கொள்கை அதற்கு எதிர்மறையானது.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
ஒரு செயற்பாட்டாளனின் முதல் அடி, முதல் கரிசனை அல்லது முதல் யுக்தி இது தான். நன்றி சகோ.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
அவரும் தனது தவறுகளை உணர்ந்திருப்பார் என்றே நினைக்கிறேன். மீண்டும் எல்லோரும் ஒன்றாக கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. நன்றி சகோ. (பச்சை கைவசம் இல்லை)
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
பொறுமை பொறுமை ராசா என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
இந்த உறவு அல்லது அரவணைப்பு இனம் சார்ந்து தூர நோக்கோடு இருக்கும் என்று நம்புகிறேன். மாறாக அரசியல் வஞ்சத்தை (சுமந்திரனுக்கு எதிராக எதிரிக்கு எதிரி நண்பன்) என்பதாக இருந்து விடக்கூடாது என்றும் நம்புகிறேன்.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
இதனை பார்க்கும்போது மக்களின் தீர்ப்பு சுட்ட பாடமாக இருந்தாலும் சுமந்திரன் ஒரு தடையாக இதுவரை இருந்திருக்கலாம் என்றும் பார்க்கலாம் அல்லவா. (உண்மையில் இதை விவாதத்திற்காக திசை திருப்ப முயலவில்லை) சுமந்திரனும் இதற்குள் கொண்டு வரப் படவேண்டும் என்பது தான் எனது தனிப்பட்ட கருத்து.
-
நான்கு வருடங்களின் பின்னர் சிரியாவின் அலப்போ நகரம் மீண்டும் கிளர்ச்சியாளர்கள் வசம் - சர்வதேச ஊடகங்கள்
நன்றி புட்டின்??
-
இன்று 10ஆவது பாராளுமன்றின் முதல் செயற்பாட்டு நாள்; அதற்கு சுமந்திரன் இல்லையாம்!
இன்று 10ஆவது பாராளுமன்றின் முதல் செயற்பாட்டு நாள்; அதற்கு சுமந்திரன் இல்லையாம்! இப்படியிருக்க சுமந்திரன் இல்லை அது தமிழருக்கு இழப்பு என்ற வகையாறு கதைகளை சுமந்திர ஆதரவாளர்கள் மட்டும் பதிவிட்டு வருகிறார்கள். அனுர அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்களை கைது செய்கிறது, சுமந்திரன் இல்லாத்து இழப்பு. என்று பத்தி எழுதுகிறார்கள். (இதில் காமடி விடயம் என்ன என்றால் சுமந்திரனை கொலை செய்ய முயற்சி செய்ததாக ஒரு வழக்கு விசாரணையில் 14 தமிழர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.) சர்வதேச மட்டத்தில் இராஜதந்திரிகளுடன் பேச சுமந்திரன் வேண்டுமாம். அதுக்கு சுமந்திரன் இல்லாதது இழப்பாம். சுமந்திர ஆதரவாளர்களே, முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்… 1) சுமந்திரன் மக்களுக்கு நேர்மையாக நடக்காததால் தான் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர். 2) சுமந்தின் கூட்டு முடிவு எடுக்காமல் தனித்து முடிவுகள் எடுத்ததால் தான் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பை பெற்றவர். (சம்பந்தன் இருக்கும் வரை மற்றவர்கள் பேசாமல் இருந்தார்கள். சம்பந்தனின் செயற்பாட்டு அரசியல் இல்லாமல் போன பின் சுமந்திரனின் தனித்த செயற்பாட்டை எதிர்த்தார்கள்) 3) 2020 இல் சிறீதரனின் வீட்டுக்கு சென்று ஆதரவு கேட்டு சிறீதரனின் ஆதரவில் வென்று எம்பியானார். சுமந்திரன் எமக்கு தேவை என்று சொன்ன சிறீதரனுக்கே முதுகில் குத்தினார் சுமந்திரன். 4) 2020 தேர்தலில் சுமந்திரன் வென்ற பின் தமிழரசின் தலைவராக சிறீதரன் வந்தால் ஆதரவளிப்பேன் என்று ஊடக சந்திப்பில் கூறினார். பின் அதே சிறீதரனுக்கு எதிராக போட்டி போட்டு தோற்றுவிட்டு, வென்ற சிறீதரனுக்கு எதிராக வழக்கு போட்டார். 5) 2017 இல் ஒரு நேர்காணலில் நல்லாட்சி காலத்தில் உருவாகும் அரசியலமைப்பு தோல்வியுற்றால் அரசியலில் இருந்து விலகிவிடுவேன். ராஜநாமா கடிதம் எழுதி பொக்கற்றுக்குள் வைத்திருக்கிறேன் என்றெல்லாம் அடித்துவிட்டார். அரசியலமைப்பும் இல்லை, சுமந்திரன் சொன்னதை செய்யவுமில்லை. 6) சொந்த கட்சிக்குள் இருப்பவர்களில் தனக்கு இசைவாக செயற்படாதவர்களை மெல்ல மெல்ல வெட்டி வெளியே விட்டார். 7) சட்டத்துறையில் சுமந்திரன் கெட்டிக்காரன் தான். ஆனால் ஒரு அரசியல்வாதியாக அவர் தமிழ் மக்களுக்கு பொருத்தமற்றவர். மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாதவர் மக்களின் பிரதிநிதியாக இருக்க முடியாது. இப்படி பல குழறுபடிகளை செய்து கட்சியையும் சிதைத்து, மக்களையும் குழப்பிவிட்ட சுமந்திரனை தெரிவு செய்யாதது பிழை என்று பத்தி எழுதும் ஆட்களை பார்க்கும் போது தான் பரிதாபமாக இருக்கிறது. இந்த முறை யாழில் தமிழரசுக்கட்சிக்கு வாக்கு போடாத பலர் சொன்ன விடயம். வீட்டுக்கு கூட வாக்கு போட்டால் சுமந்திரன் வந்திடுவார். என்பது தான். சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசமே 17,000 வாக்குகளுக்கு மேல் இருந்தது. அவளவிற்கு சுமந்திரன் மேல் மக்கள் வெறுப்பில் இருந்திருக்கிறார்கள். இப்போதும் ஒன்றும் குறையவில்லை. சிறீதரன் தலைவராக வருவதற்கு எதிராக சுமந்திரன் திருகோணமலையில் போட்ட வழக்கு வாபஸ் பெற்று புதிய தலைமையை திரும்ப தெரிவு செய்து தமிழரசுக் கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக பயணித்தாலே தமிழ் மக்கள் ஓரணியாக தமிழரசின் பின் அணிதிரள்வார்கள். தமிழரசுக்கட்சியை பலப்படுத்தி அதில் சுமந்திரனுக்கு வெளிவிகாரத்துறையையும், அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான குழுவின் தலைமை பொறுப்பையும் கொடுத்தால் கூட அதற்கு சிறீதரன் எதிர்க்க மாட்டார் என்பது என் பார்வையில் தெரிகிறது. இதெல்லாம் விட்டுவிட்டு பாராளுமன்றம் கூட முன்னரே சுமந்திரன் இல்லாதது இழப்பு என்று அனுதாப பத்தி எழுதுவது அழகில்லை. https://www.facebook.com/share/12HfapQog3C/
-
புலம் பெயர் அமைப்புக்களை தூக்கி எறிந்த அநுர அரசு
எப்படி வந்தவர் இன்று எப்படி அழைக்கப்படுகிறார். சும்மா அதிருதில்ல....?😭
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
நல்ல விடயம். அனைவரும் இது குறித்து சிந்திக்கவேண்டும்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
ஒரு ஓநாய் ஒரு ஆட்டுக்குட்டியை மடியில் வைத்திருந்தால் அதற்கு பெயர் இடைவெளியா அண்ணா?
-
மரணத்தை கணிக்கும் ’’மரணக் கடிகாரம்’’
அது எனக்கு தெரியும் நமக்கு தான் திருப்தி என்பதே கிடையாதே. அப்படியானால் அலையத் தானே வேண்டும்???😂
-
மரணத்தை கணிக்கும் ’’மரணக் கடிகாரம்’’
தம்பி பிழம்புவும் இதனை நம்புகிறாரா??
-
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
அவர் தனது தாயாரை இறுதிக் கணத்தில் பார்க்கவே உயிரை பணயம் வைத்து அங்கே வந்துள்ளார். நமக்காக உழைத்தவர்கள் படும் பாட்டை நாம் பார்க்கும் விதம் இருக்கே???? சொல்லி அழுதாலும் தீராது ஆறாது..😭
-
கடற்றொழில் அமைச்சரின் சகா என கூறி அடாவடியில் ஈடுபட்டவரால் யாழில் பரபரப்பு!
(கடற்றொழில் நீரியல் வள அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தனி நபர் ஒருவர்,) இவருக்கு தான் நடித்துகொண்டிருக்கும் நாடகத்தில் தன் பாத்திரம் மறந்து விட்டது. அல்லது இயக்குநர் சொல்லிக்கொடுத்தது காதில் விழுத்தவில்லைப்போலும்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
இங்கே யாரும் பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள் என்று எழுதவில்லை அண்ணா. உங்கட கோவணத்தையும் கழட்டி குடுத்துவிடாமலாவது இருங்கோ என்று தான் சொல்கிறார்கள்..
-
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
நான் போவதில்லை. பெரிய பெரிய மலைகளே போய் திரும்பி வருகிறார்கள். ஏன் நீங்கள் யோசிக்கிறீர்கள் என்பதும் இவர்கள் தான். போய் மாட்டிக் கொண்டால் என்ன பைத்தியக்காரத்தனம் இது என்பதும் இவர்கள் தான். என்னை சிங்களவர்கள் அடையாளம் கண்டு கொள்ள வாய்ப்பில்லை. எங்கடையள் நிச்சயமாக செய்து முடிப்பர். அவ்வளவு நம்பிக்கை எனக்கு அவர்கள் மேல்.😭
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
உண்மை ஆதாரம் மற்றும் புள்ளி விவரங்களுடன் வாழ்பவர்களுக்கு அநுராவுக்கு விழுந்த வாக்குகள் டக்லஸ் மற்றும் ஐங்கரன் சார்ந்த வேலை மற்றும் உதவி எதிர்பார்ப்பு வாக்குகள் என்பது தெரியாமலா இருக்கும்???? மற்றும் எமது அரசியல்வாதிகளின் செயற்பாடற்ற நிலை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடரும் போது அதன் வீரியம் அதிகரிக்குமே தவிர குறையாது என்பது பொது நலம் சார்ந்து சிந்திப்போருக்கு புதியதல்லவே....
-
பலஸ்தீனத்திற்கு சுயநிர்ணயத்துடனான தீர்வு அவசியம்,ஜனாதிபதி வலியுறுத்தல்
இது புரிந்தால் குற்றம்???
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
நன்றி சகோ உண்மையில் இது போன்ற கருத்துக்கள் என் போன்றவர்களை ஒதுங்குங்கள் என்பது தான். ஆனால் நான் இருப்பது என் இனத்திற்கு எவ்வளவு பலம் என்பதையும் நான் விலகுவது (நான் மற்றும் என்னைச் சார்ந்த அடுத்த அடுத்த தலைமுறை) எவ்வளவு பலவீனம் என்பதையும் தூர நோக்கோடு சிந்திப்பதால் மட்டுமே தொடர்கிறேன். மற்றும்படி என் வாழ்வில் இனம் சார்ந்த எனது செயற்பாடுகளால் எனக்கு மன நிம்மதியை தவிர இழப்பு பல கோடி பணம் மற்றும் மணித்துளிகள் மட்டுமே.. எனவே என் போன்றவர்களை தூக்க படாதபாடு படுபவர்கள் யாருக்கு நன்மை செய்ய விளைகிறார்கள்.??? தமிழருக்கா???
-
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
என்னண்ணா ? எல்லாம் மாறும் மாற்றவேண்டும் என்று வேறு எங்கோ எழுதியதாக ஞாபகம்?
-
மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடன் கைது செய்யுங்கள்: அநுர அரசுக்கு கடும் அழுத்தம்
நாங்க சிறீலங்கா அரசு செய்திகள் சார்ந்து பேசுகிறோம். நீங்க?? ஜேர்மனி? ஐரோப்பா? அமெரிக்கா???