Everything posted by nunavilan
-
ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் நடத்தைக்கெதிரான கண்டன அறிக்கை
ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல்களுக்கெதிரான கண்டன அறிக்கை ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல்களுக்கெதிரான கண்டன அறிக்கை “கலாசாரமானது ஆதிக்கத்தன்மையுடையதாக இருக்கும்போது, அது வன்முறையானதாக இருப்பது மட்டுமன்றி அனைத்து உறவுகளையும் அதிகாரத்திற்கான போரட்டங்களாகவும் கட்டமைக்கும்” - பெல் ஹூக்ஸ் The Will to Change: Men, Masculinity, and Love “நாம் ஆற்றல் மிக்கவர்கள். ஏனெனில் வன்முறையிலிருந்து வெளியேறி தொடர்ந்து வாழ்வதென்பதே நமது ஆற்றலுக்கு சாட்சிதான். இதன் மொத்த சாராம்சமும் முற்றுமுழுதாக நமது ஆற்றலையும் வளர்ச்சியையும் பற்றியது” - ஓட்ரி லோர்ட் https://www.blackpast.org/african-american-history/1982-audre-lorde-learning-60s/ பெண்ணிய அக்கறையாளர்கள் இணைந்து தயாரித்த கண்டனக் கூட்டறிக்கையை உங்கள் கவனத்திற்கு வைக்கிறோம். எழுத்தாளர் நடிகர் ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் நடவடிக்கைகளால் பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பல பெண்கள் மற்றும் குயர் சமூகத்தினரின் வாக்குமூலங்களை ஆழமாகவும் விரிவாகவும் பரிசீலித்ததின் அடிப்படையில், அவர்களுக்கான எங்களின் முழுமையான ஆதரவையும், ஆணதிகார துஷ்பிரயோகத்திற்கான எதிர்ப்பையும் பரவலாக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் பொறுப்பேற்று அதற்கமைந்த பெண்கள் கூட்டமைப்பொன்றினை உருவாக்கியுள்ளோம். பெண்களின் குரல்கள் எழும்போதெல்லாம் காக்கப்படும் கள்ள மெளனங்கள் நம்மை மேலும் மேலும் பலவீனமாக்குவதை அனுமதிக்க முடியாதென்பதாலும் கலை இலக்கிய அரசியல் வெளிகளுக்குத் துணிந்து செயலாற்ற வரும் பெண்களுக்கும் பால்பல்வகையினருக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அதிமுக்கியமான தேவை என்பதாலும் இந்த கையெழுத்து இயக்கத்தை முன்னெடுக்கிறோம். பாலியல் சுரண்டலானது ஆண் பாலினத்திற்கு வழங்கப்பட்ட சலுகையாக இயல்பாக்கப்பட்டிருப்பதும், வரலாறு நெடுகிலும் வன்முறையை அனுபவிப்பதே பெண் பாலினத்திற்கும், பால்பல்வகைமையினர்களுக்கும் விதிக்கப்பட்ட நியமமாக இருப்பதும் கண்கூடு. இதை வெற்று மெளனத்தால் கடப்பது, ஒடுக்குமுறைகளிலேயே அதிமுதன்மையான நிறுவனமான ஆணாதிக்கத்தின் அடிமைச் சங்கிலிகளை இன்னும் இறுக்கி கொள்வதற்கு சமமானது தான் என்பதால் நாங்கள் அதை உடைத்து நொறுக்குவதில் உறுதியாக இருக்கிறோம். எழுதும் ஆண் தன் ஆதிக்கப்பால்நிலை (cis gender) அடையாளத்தை, அது தரும் அதிகாரத்தை, பாலியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக பெண்களைச் சுரண்டுவதற்கும், பெண்களுக்கும், பால்பல்வகைமையினர் (queer) மற்றும் திருநர்களுக்கும் எதிரான வன்முறைகளுக்குப் பயன்படுத்துவதும், அதை அறிவுப்பித்து, கலைமனப்பிறழ்வு, மீறல், கட்டுடைத்தல் என்று முட்டுக் கொடுப்பதும் தமிழ்ச்சூழலில் தொடர்ச்சியாக நடந்துவருகிறது. சுயமரியாதை சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, தாங்கள் சார்ந்த குடும்பம் - சாதி- மத அமைப்புகளின் கடும் எதிர்ப்புகளைத் தாண்டி அரசியல், கலை, இலக்கியம் என்று அறிவுத் துறைகளைத் தேர்ந்தெடுத்து வரும் பெண்களும் திருநங்கைகளும் அதே சுரண்டலால் பாதிக்கப்படும்போது சமூக ரீதியாக எந்த பாதுகாப்புமற்ற சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். திரும்புவதற்கு இடமில்லாமல் அநாதரவாகின்றார்கள். கனவுகளைக் காவு கொடுத்துவிட்டு தங்கள் கூண்டுகளுக்கே திரும்ப நேர்கின்றனர். தமிழில் தேர்ந்த எழுத்தாளர் என்று தன் தொடர்ச்சியான படைப்புகளால் அடையாளம் காணப்படுபவர் ஷோபாசக்தி. பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய, பெண்ணியக் கோட்பாடுகளால் வழிநடத்தப்படுவராகவும் தன்னை முன்னிறுத்திக்கொண்டவர். ஆனால் அவர் மேல் பாலியல் சுரண்டல் புகார்களை பல பெண்களும் குயர் சமூகத்தினரும் எழுப்பியுள்ளனர். இந்தியாவிலும், கனடாவிலும் ஐரோப்பாவிலும் பல பெண்களுக்கு பொய் வாக்குறுதிகள் தந்து உறவில் ஈடுபடுத்திவிட்டுப் பின், அதில் இரண்டு பெண்களைத் தற்கொலை முயற்சிக்கு தள்ளுமளவு மனச்சேதத்தை ஏற்படுத்தியுள்ளார். இவ்வறிக்கை பாதிக்கப்பட்டவர்களின் தீவிர பங்கேற்புடனும், ஷோபாசக்தியால் தங்களுக்கு இழைக்கப்பட்ட துஷ்பிரயோகத்தின் அனுபவங்களை வெளிப்படையாகவும் தனிப்பட்ட முறையிலும் வெளிப்படுத்திய பல பெண்களுடனும் ‘குயர்’ சமூகத்தினருடனும் இடம்பெற்ற தொடர்ச்சியான உரையாடல்களின் விளைவாகவும் உருவாக்கப்பட்டதாகும். ஷோபாசக்தியால் பாதிக்கப்பட்ட நபர்களுடனான இந்த உரையாடல்களில் வெளிப்பட்ட துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலின் வடிவங்கள்/போக்குகள்: ஷோபாசக்தி தன்னையொத்த கண்ணோட்டம் கொண்ட பெண்களைச் (பெண்ணிலைவாதிகள், மார்க்சியவாதிகள், சாதி மறுப்பாளர்கள், ‘குயர்’ சமூக கூட்டாளிகள்) சுரண்ட தனது அரசியல், கலை சார்ந்த பார்வைகளை பயன்படுத்துகின்றமை. ஷோபாசக்தி பொதுவெளியில் அறியப்பட்ட பெண்ணிலைவாதிகள், கலைஞர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களுடனான தனது தொடர்புகள் மற்றும்/அல்லது உறவுகளைப் பயன்படுத்தி தனது துஷ்பிரயோக மற்றும் சுரண்டல் நடத்தைகள் குறித்த சந்தேகங்கள் எழாதவாறான சூழலை உருவாக்குகின்றமை. ஷோபாசக்தி தான் அகதியாக இருந்த வரலாற்றையும், ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பின் முன்னாள் உறுப்பினராக இருந்த அடையாளத்தையும், தன்மீது அனுதாபத்தினை ஏற்படுத்துவதற்கும், அதன்மூலம் பெண்களை ஏமாற்றித் தன்வசப்படுத்துவதற்கும் பயன்படுத்துகின்றமை. ஷோபாசக்தி சர்வதேச தொடர்புகளையும் செல்வாக்கையும் பயன்படுத்தி, குடியுரிமை தொடர்பான சட்டச்சிக்கல்களைக் கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் ‘குயர்’ சமூகத்தினருக்கு புகலிடக் கோரிக்கைகள்/குடியுரிமைகள் விடயத்தில் உதவுவதாக நம்பிக்கை ஏற்படுத்தியதோடு தனது அந்தஸ்தையும் அனுபவங்களையும் பயன்படுத்தி நீண்டகால வதிவுரிமைப் பாதுகாப்பிற்கான பொய் நம்பிக்கைகளை விதைத்தமை. ஷோபாசக்தி தன்மீது உணர்வு ரீதியாக நெருக்கமாகி, சார்ந்திருக்க வேண்டிய நிலையை (co-dependency) உந்துகிற வகையில் தனது வயதையும், உடல் நலம் சார்ந்த பராமரிப்புக்கான தேவையையும் கூறி பெண்களிடம் கழிவிரக்கம் தேடுகின்றமை. ஷோபாசக்தி திருமணம், குடும்பமாக சேர்ந்து வாழ்தல் போன்ற பொய்யான வாக்குறுதிகளைத் தந்து, உணர்வுரீதியாகவும் உடல்ரீதியாகவும் நெருங்கி வாழத் தொடங்கியப் பெண்களிடம் ஆரம்பக்கட்டத்தில் அளவுக்கதிகமாக அன்பை கொட்டுவதைப்(love bombing) போல காட்டி அவ்வப்போது தனிமைப்படுத்திப் பின் ஒரேயடியாக புறக்கணித்து அவர்களை முற்றிலும் பலவீனப்படுத்திப் பயன்படுத்திக்கொண்டமை. ஷோபாசக்தி அவரை விட்டு விலக முடிவெடுக்கும் பெண்களுக்கு அமையும் வேறு உறவுகளைக் குழப்பும் வகையில், அவர்களின் வாழ்வை அத்துமீறிப் பின்தொடர்வதோடு (stalking) அவர்கள் மீதான தனது 'உடைமை உணர்வையும்’(territorializing) தக்கவைத்துக் கொள்கின்றமை. ஷோபாசக்தி தனது அரசியல், இலக்கிய சகபாடிகளைத் திரட்டி பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் ‘குயர்’ சமூகத்தினரின் பாடுகளையும் அனுபவங்களையும் கீழ்மைப்படுத்தி, 'கலைஞனின் பிறழ்வு இயல்பானது' எனக் கற்பிதங்களைப் பரப்பி தனது வக்கிரங்களை நியாயப்படுத்துகின்றமை. ஷோபாசக்தி தனது விசுவாசமிக்க ஆதரவாளர்களைக்கொண்டு பெண்களையும் ‘குயர்’ சமூகத்தினரையும் ஏளனப்படுத்தியும் அச்சுறுத்தியும் மலினப்படுத்தியும் வாயடைக்கச் செய்கின்றமை. இதன்மூலம் பாதிப்புக்குட்படுத்தப்பட்டவர்களின் சுயத்தை உடைத்து அவர்களை கழிவிரக்கத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்துகின்றமை. ஷோபாசக்தி ஒரே சமயத்தில், பல்வேறு நாடுகளில், நகரங்களில் பல பெண்களிடம் அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக, நிலைத்த துணைக்கான - நீடித்த பந்தத்துக்கான உத்தரவாதத்தைப் பொய்யாக அளித்து, உறவு வைத்துக் கொண்டு ஏமாற்றி பித்தலாட்டம் செய்து வஞ்சித்தமை. பாதிப்புக்குட்படுத்தப்பட்டவர்களால் வெளிப்படுத்தப்பட்ட அனுபவங்கள்: பாலியல் சுரண்டல் இடம்பெறும் வகையில் சூழலை உருவாக்குவது: ஷோபாசக்தி பாலியல் ரீதியாக சுரண்டிய பெண்களில் பெரும்பாலானோர், அவருக்கு எப்போதும் நற்சான்றிதழ் தரும் அறிவுஜீவிகள் மற்றும் கலைஞர்கள் நிறைந்த சபைகளிலும் இடங்களிலும் தான் அவரை சந்தித்ததாகவும், அவர்கள் அவரிடம் காட்டும் அதே மரியாதையுடனும் அக்கறையுடனும் தம்மையும் நடத்துவார்கள் என்று நம்பியதாகவும் தங்கள் வாக்குமூலத்தில் தெரிவித்தனர். அவரோடான உறவை ஊக்குவித்த மேன்மக்களை அணுகி உறவில் நடக்கும் முறைகேடுகளை பேச முற்பட்ட போதெல்லாம், ஷோபாசக்தி போரினால் பாதிக்கப்பட்டவர் - அகதி, பல கஷ்டங்களை அனுபவித்தவர் என அவர்மீது அனுதாபம் கொள்ளும்வகையில் பேசியதுடன், கலைஞனின் அதீதம் புரிந்துகொள்ளப்படவேண்டியது என வாதாடியதன் மூலமும் மெளனிக்கப்பட்டிருக்கிறார்கள். அவருடைய வெறித்தனமான நடத்தை (obsession) தொடர்பில் பெண்கள் சந்தேகப்பட்டு அவரின் சகாக்களிடம் பேசுகையில், எழுத்தாளனதும் கலைஞனதும் பிறழ்வுகள், அதீதப் போக்குகள் இயற்கையானவை என அப்பெண்களிடம் சொல்லப்பட்டு இவரின் துஷ்பிரயோக நடத்தைகள் நியாயப்படுத்தப் பட்டிருக்கின்றன. அதன்மூலமாக அந்த உறவினை அவராக முறித்துக்கொள்ளும்வரை, சுரண்டல் என்று உணர்ந்தும் அப்பெண்கள் அந்த உறவில் தொடர்ந்து நிலைத்திருப்பதனை அவரின் கூட்டாளிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். எழுதிவைக்கப்பட்டது போலவே ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகளை ஒரேமாதிரி ‘திடீரென’ முறித்துக்கொள்ளும் போது, தனது ‘ஆளுமையாலும், புகழாலும், மேதைமையாலும்’ ஈர்க்கப்பட்டு அப்பெண்கள், திருமணம் குடும்பம் எனக்கேட்டு தன்னை ‘நிறுவனமயப்படுத்த’(institutionalise) முற்படுவதாக பொய்சொல்லி, ஷோபாசக்தி தன் சுரண்டலை ஒவ்வொரு தடவையும் நியாயப்படுத்தியிருக்கிறார். கட்டுப்படுத்துவதும்(Controlling) தன்னுடைமை(Ownership) என அதீத உரிமை எடுப்பதும்: பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்களின் அனுபவங்களின்படி ஷோபாசக்தி தன்னுடன் உறவிலிருந்த பெண்கள்மீது அதீத உடமையுணர்வை (possessive) வெளிப்படுத்தி வந்திருக்கிறார். அவருடன் நீண்டகால உறவிலிருந்த ஒரு பெண்ணிடம், அவர் கழிவறை போகும் போதுகூட ‘என்னை விட்டுவிட்டு அப்படியே வெளியே போய்விடுவாயா?’ என்று கேட்டு அழும் அளவிற்கு வெறித்தனமான (obsessive) ஒட்டுதலுடன் இருந்திருக்கிறார். தன்னுடன் உறவிலிருந்த பெண்கள் தங்களது வாழ்க்கையில் கவனம் செலுத்துகையில் குறிப்பாக அவர்கள் மற்றுமொரு உறவிற்குச் செல்லுகையில், ஷோபாசக்தி திடீரென அறிவிக்காமல் அவர்களது வீடுகளுக்குச் செல்லுதல், பொதுவெளிகளில் எதிர்பாராவிதத்தில் சந்திக்கும் இடங்களில்கூட அப்பெண்களின் துணைவர்களுக்கு சந்தேகம்வரச் செய்வதனை நோக்கமாக கொண்டு, அவருடனான உறவு இன்னும் முடியவில்லை என்பதுபோல நிரூபிக்க முயற்சித்தல் ஆகிய நடத்தைகளைக் கொண்டிருந்திருக்கிறார். இதன் காரணமாக இவருடன் உறவிலிருந்த பெண்களை உறவிற்குப் பின்னரும் ஏதோ ஒருவிதத்தில் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதன் மூலம் எப்போதாவது வாய்ப்புக்கிடைக்கும்போது பாலியல் சுரண்டலில் ஈடுபடுவதற்கு ஏதுவான சூழலினைப் பேணியிருந்திருக்கிறார். அனுதாபத்தை ஏற்படுத்தி நச்சு சார்புநிலையை உருவாக்குதல்: ஷோபாசக்தி அளவுக்கு மீறிய சுயஅபிமானக் (narcissist) கூறுகள் நிறைந்த நடத்தைகளை அவருடன் பழகிய பெண்கள் எல்லோரோடும் வெளிப்படுத்தியிருக்கிறார். உறவுகளின் ஆரம்பத்திலிருந்தே அளவுக்கதிகமாக அப்பெண்களை நேசிப்பதாக நடிப்பதில் தொடங்கி, பிறக்காத கற்பனைப் பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பது வரை எதிர்காலத்திற்கான பொய்யான உத்தரவாதத்தினை வழங்கி நம்பிக்கையைக் கட்டியெழுப்பி திட்டமிட்டு பாலியல் சுரண்டலை நடத்தியிருக்கிறார். ஐரோப்பாவில் பால்நிலைசார் அகதியாக புகலிடம் பெற்றுத் தருவதாக வாக்குத்தந்து குயர் உறவுகளைப் பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். உறவிலிருக்கும் பெண்கள்மீது இவர் வைத்திருந்த கட்டுப்பாடு (control); மிகையான அன்பைக் கொட்டுவது(love bombing); அதன்பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு அப்பெண்களை கண்டு கொள்ளாமல் விடுவதன் மூலம் (neglect) தன்னை நினைத்து ஏங்கச் செய்வது; இவ்வாறான ஒரு வன் (abusive) உறவு ஏற்படுத்தும் பதட்டங்களை உருவாக்கி, அப் பெண்களைவிட்டு இவர் விலகும்போது, இலகுவில் அவரைவிட்டு விலகமுடியாத நிலையினையும், அதன் காரணமாக ஆழ்ந்த மனச்சிதைவையும் ஏற்படுத்தியிருந்திருக்கிறார். தான் கடந்த காலத்தில் அகதியாக இருந்த கதைகளை சொல்லியும் தன் நோய்களைச் சுட்டியும், தன்னைப் பார்த்துக்கொள்ள யாருமே இல்லை என்று பச்சாதாபத்தை ஏற்படுத்தியும், தான் செத்தால் கொள்ளி போட வேண்டும் என்று கேட்டும், தன் மேல் அனுதாபத்தை ஏற்படுத்தி, உணர்வுகளைச் சுரண்டி, ஒரு நச்சான சார்பு நிலையை உறவுகளில் உருவாக்கியிருக்கிறார். பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்ணொருவர் கூறுகையில் ஷோபாசக்தி குடிக்கு அடிமையாக இருப்பதுடன் தன்னையும் அப்பழக்கத்திற்கு ஆளாக்கிவிட முனைந்தார் என்பதாலேயே அவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டதைக் குறிப்பிட்டார். ஆக இவருடன் உறவில் இருந்த பெண்களோ, குயர் சமூகத்தினரோ இவர் பரப்பிய பொய்யான பிம்பத்தைப் போன்று இவரின் ஆளுமைமீது மோகம் கொண்டு இணைந்து வாழ விரும்பியிருக்கவில்லை. மாறாக இவர் அவர்கள்மீது காட்டிய வெறித்தனமான பிடித்தம், எதிர்காலம் குறித்து ஷோபாசக்தி ஏற்படுத்திய நம்பிக்கை, முற்போக்கு சித்தாந்தங்களைப் பேசி உருவாக்கிய பாதுகாப்புணர்வு என்பவற்றின் காரணமாகவே அவர்மீது ஆழமான நேசத்தினை வளர்த்திருந்தனர். விளிம்புநிலை திருநங்கைகளை சுரண்டுதல்: ஷோபாசக்தி வெளிநாட்டில் பால்நிலைசார் அகதியாக புகலிடம் பெற்றுத் தருவதாக கூறி திருநங்கை செயற்பாட்டாளரை பாலியல் ரீதியாக சுரண்டியதோடு மட்டுமல்லாமல், தான் திரைக்கதை எழுதி நடித்த ரூபாவிலும்(Roobha) அந்த உறவில் நடந்தவற்றையெல்லாம் பயன்படுத்தி காட்சிகளாக்கியுள்ளார். பாதிப்புக்குட்படுத்தப்பட்ட அத்திருநங்கை, “ரூபா” திரைப்படத்தைப் பார்த்தபோது தனக்கேற்பட்ட உணர்வுகள் தொடர்பில் கூறுகையில், அந்தப் படத்தில் வெளிப்பட்ட திருநங்கை வெறுப்பே (transphobia) திருநர்கள் தொடர்பில் ஷோபாசக்தி யின் உண்மையான நிலைப்பாடு எனவும், தன்னை அவர் மற்ற ஆண்களைப் போல மனிதத்தன்மையற்ற முறையில் தனது பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளவே பயன்படுத்திக் கொண்டதாகவும் குறிப்பிட்டார். பொதுச் சமூகத்தில் திருநங்கைகளைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவது இயல்பானதாயிருக்கின்றதாயினும் திருநர் கூட்டாளியாக (trans ally) தன்னைக் காட்டிக்கொண்ட இவரிடம் அத்தகைய கீழ்மையான செயலைத் தான் எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் கூறி வருந்தினார். பெண்களையும் ‘குயர்’ சமூகத்தினரையும் இழிவுபடுத்துதல்: ஷோபாசக்தி தான் உறவிலிருந்த பெண்களுடன் உறவினை எதேச்சதிகாரமாக முறித்துக்கொண்டது தொடர்பில் பிறர் வினவும்போது அப்பெண்கள் தன் மீது உடைமை உணர்வுடன் (possessive) இருப்பதாகவும், சில பெண்கள் தனது அம்மா மற்றும் தங்கையுடன் பேசுவதைக்கூட விரும்புவதில்லை எனும் அளவிற்கு தன்னை சொந்தம் கொண்டாடுவதாகவும், உறவென்றான பிறகு தன்னைத் திருமணம் செய்ய அவர்கள் வற்புறுத்துவதாகவும் கூறி அதனாலேயே தான் அந்த உறவினை முறித்துக்கொண்டதாக சாட்டு சொல்லி நியாயப்படுத்தி வந்த ஷோபாசக்தி, தனது ஆளுமையினைக் கேடயமாக்கி தன்னைத்தானே தொடர்ந்து பாதுகாத்தும் வந்திருக்கிறார். மற்ற இளைய எழுத்தாளர்கள் மீது பாலியல் புகார்கள் வைக்கப்பட்டபோதும், ஷோபாசக்தி தன் இலக்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கு அரண்கொடுக்கும் நடவடிக்கைகளை திட்டமிட்டவகையில் மேற்கொண்டுவந்திருக்கின்றார். அவர்களோடு இணைந்து பாலியல் சுரண்டலாளர்களை ஆராதிக்கும் ஒரு கலைக்குழுவை உருவாக்குவது போன்ற செயல்பாடுகள், தன் அழுக்கை மறைத்துக் கொள்வதற்கான பிரயத்தனங்கள் என்றே புரிந்துக்கொள்ள முடிகிறது. மிரட்டுதலும் மெளனிக்கச்செய்வதும்: ஷோபாசக்தி அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக பேசுபவர்களிடம், நீங்கள் என்ன கலாசார காவலர்களா (cultural Policing) என்று கேட்டதுடன் அவருடைய சக அறிவுஜீவி கூட்டாளிகளை விட்டு அதையொட்டி கட்டுரை எழுத வைப்பது, அறிக்கை விடச் செய்வது என்று தனது செல்வாக்கை ஊடகமாக்கி, பாதிப்புக்குட்பபடுத்தப்பட்ட பெண்களையும் அவர்களுக்காக பேச வந்தவர்களையும் பிற்போக்காளர்களாக அடையாளப்படுத்தி குணக்கொலை (character assassination) செய்திருக்கிறார். இந்தியாவிலும், கனடாவிலும் ஐரோப்பாவிலும் பல பெண்களையும் ‘குயர்’ சமூகத்தினரையும் தனது ஒரே பாணியிலான மூளைச் சலவைக் கதைகளினூடாகச் சுரண்டி அதில் இரண்டு பெண்களைத் தற்கொலைக்கு தள்ளுமளவு மனச்சேதத்தை ஏற்படுத்தியுள்ளார். தற்கொலை முயற்சியினை மேற்கொண்ட பெண்களையும் ஷோபாசக்தி யும் அவரது குழாமும் விட்டுவைக்கவில்லை. “ஆளுமை இருக்கும் பெண்கள் இந்த அனுபவத்திலிருந்து மீண்டு இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தமது வாழ்க்கையில் கவனம் செலுத்துவார்கள், ஆளுமை குறைந்த அல்லது ஆளுமையற்ற பெண்களே இதுதொடர்பில் சதா புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது தற்கொலை முயற்சி செய்கிறார்கள்” என அப்பெண்களை அவர்கள் குற்றம் சுமத்துவதானது (victim blaming) பாதிக்கப்பட்டவர்களை மனிதத்தன்மை நீக்கம் செய்வதல்லாமல் (dehumanising) வேறேது? பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்கள், பாதிக்கப்பட்டவர்களாக உணரக்கூடாது் - அவ்வாறு உணர்வது இழிவானது, பாதிக்கப்பட்டாலும் அதை சத்தம் போடாமல் கடந்து போவது தான் ‘பின் நவீன சிந்தனை’ எனப் பேசி, ஷோபாசக்தி யின் ‘எழுத்துலக, கலையுலக, அரசியிலுலக’ சகாக்கள், பாலியல் சுரண்டலினை சாதாரணமயப்படுத்தி வந்திருக்கின்றார்கள். அதுதவிர அன்பு செய்த அளவிற்கு ஏமாற்றத்தையும் துரோகத்தையும் ஒரு மனவடுவாக உணர்வதும் அதைத் தாங்கிக்கொள்ளமுடியாதளவிற்கு மனச்சிதைவினை ஏற்படுத்தியவனை விட்டுவிட்டு தற்கொலை முயற்சி செய்யும் பெண்களைக்கூட குற்றஞ்சுமத்தி, ஆளுமையான பெண்கள் இவ்வாறான சுரண்டல்களைக் கடந்துபோய்விடுவார்கள் என்பதாகப்பேசி நேர்மறையான தீர்ப்பு (positive judgement) மூலமாக அவர்களின் குரலை ஒடுக்கியிருக்கிறார்கள். ஆண் கலைஞர்களது பிறழ்வுகள் எத்தகையதாயினும் மனநோயாகவோ அல்லது மன அழுத்தமாகவோ கருதப்படுவது பால்நிலை பாரபட்சமும் இரட்டை நிலைப்பாடுமல்லாது வேறேது? இருபதிற்கும் மேற்பட்ட பெண்களிடம் ஒரே நாடகத்தை மீண்டும் மீண்டும் ஆடி பாலியல் ரீதியாக சுரண்டுவதற்கான அனுமதியை(license) 'எழுத்தாளர்', 'கலைஞர்' என்ற பெயரில் ஆண்களுக்கு வழங்குவதை எந்த சித்தாந்தம் வழிமொழிகிறது? ஆக பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவதுடன் அதிலிருந்து தமக்குத்தாமே தண்டனை விலக்கும் பொறுப்புக் கூறலிலிருந்து விலக்கும் பெற்றுக் கொள்வதற்காக, பாலியல் சுரண்டலில் ஈடுபடும் ஷோபாசக்தி போன்றோராலும் அவர்களது குழாமினாலும் உருவாக்கப்பட்டு பரவவிடப்பட்ட கருத்தியல் கட்டுக்கதையே கலைஞர்களின் ‘பிறழ்'வாகும். பொதுவாக பாலியல் சுரண்டல்காரர்களின் உத்திகளில் பல பொதுவான போக்குகளை அவதானிக்க முடியும். அவை ஒரேமாதிரியானவை. அதிலொன்றுதான் பெண்களையும் திருநங்கைகளையும் பாலியல் பண்டங்களாக நடத்தும் போக்கு. தன்னைவிட இளவயது பெண்களிடம் உறவிலிருக்கும் போது, அதையும் பெருமையாக, 'I am having a young lover' எனப் பெருமை பாடியும், அவர் குடிக்குமிடங்களில் தன்னோடு உறவிலிருந்து பெண்களைப் பற்றி பிதற்றியும் தனது ஈகோவிற்கும் ஆணாதிக்கச் சிந்தனைக்கும் தீனியளித்து வந்த ஷோபாசக்தி சமூகத்தில் தன்னை முற்போக்கானவராகவும், அநீதிக்கெதிரான ஒடுக்குமுறைக்கான குரலாகவும் காட்டிக் கொண்டாலும், அவர் பார்வையில் பெண்கள் வெறும் பாலியல் பண்டங்களே! இந்தப் புகார்களுக்கெல்லாம் ஆதாரம் என்ன, அந்தப் பெண்கள் ஏன் அப்போதே பேசவில்லை, ஏன் போலீஸுக்குப் போகவில்லை, ஏன் தற்காப்பு கலைகள் பயிலவில்லை, அவர்களும் மனம் ஒத்து தானே அவரிடம் பழகினார்கள், என்று கேட்பதற்கான எந்த அருகதையும், பேசத்துணியும் பெண்களையெல்லாம் வார்த்தைகளாலும் பார்வைகளாலும், தங்கள் தீர்ப்புகளாலும் வன்முறை செய்யக் காத்திருப்பவர்களுக்கு இல்லை என்பதையும், ஆண்மைய சமூகத்தில் நிலவும் அதிகார ஏற்றத்தாழ்களில் ஒப்புதல்(consent) எப்படி திரிவுபடுத்தப்படுகின்றது என்ற புரிதல் இல்லாதது போல பாசாங்கு செய்பவர்கள் சுரண்டலுக்குப் பல்லக்கு தூக்குகிறவர்கள் என்பதையும் இங்கு நினைவுறுத்துகிறோம். இந்தச் சமுகம் பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்கள் பேசுவதை மதிக்கக்கூடிய, நம்பக்கூடிய மன உயரங்களை அடையும்போது இந்த அறிக்கைகள் எழுதும் பொறுப்பிலிருந்தும் எம்மை நாம் விடுவித்துக்கொள்வோம். சமூக அழுத்தங்களையும் மீறி குரலெழுப்பிய பெண்கள் மற்றும் குயர் சமூகத்தினரின் வாக்குமூலங்களைக் கேட்டறிந்த பின்னும், அதற்கான எந்தவொரு பொறுப்புக் கூறலையும் கோராத அதேவேளை, ஷோபாசக்திக்கும் அவரது பாலியல் சுரண்டல் நடவடிக்கைகளை முன்னுதாரணமாகக் கொண்டு அவரைப் பின்பற்றும் இளம் எழுத்தாளர்களுக்கும் தளங்களை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களுக்கு விருதுகளையும் அங்கீகாரத்தினையும் வழங்கிய ‘முற்போக்கு' இயக்கங்கள், காந்தியவாதிகள், பதிப்பாளர்கள், அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எமது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஷோபாசக்தி, பல பெண்களையும் குயர் மக்களையும் உணர்வுரீதியாகவும், உடல்ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும், மோசமாகப் பாதிப்படையச் செய்த தனது நடத்தைகளுக்குப் பொறுப்புக்கூறுவதுடன், இனி இத்தகைய நடத்தைகளில் ஈடுபடுவதை அறவே நிறுத்திக் கொள்ள வேண்டும். ஷோபாசக்தி, தான் எதிர்காலத்தில் இதுபோன்ற நடத்தைகளில் ஈடுபடமாட்டார் என்பதை தன்னுடன் தொடர்புள்ள கலை இலக்கியச் சமூகத்திற்கு உறுதிப்படுத்த வேண்டும் . ஷோபாசக்தியைப் பொறுப்புக்கூறச் செய்வதற்குப் பதிலாக, அவரது முறையற்ற நடத்தையினைச் சாத்தியப்படுத்திய அவரது அனைத்து நட்புசக்திகளிடமும் தமது செயற்பாடுகள் குறித்துச் சிந்திக்குமாறு வலியுறுத்துகிறோம். ஷோபாசக்தியுடன் இயங்கும் அனைத்து அமைப்புக்களையும், தெரிந்தும் தெரியாமலும் அவரது இத்தகைய செயற்பாடுகளுக்கு உடந்தையாயிருந்தமைக்காக பொறுப்புக் கூற வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஷோபாசக்தியால் பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்களையும் குயர் சமூகத்தினரையும் கருத்தில் கொள்ளாத அமைப்புக்களிடமும் நபர்களிடமும் (கலைஞர்கள், அறிவுஜீவிகள் மற்றும் அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள்) இப்பெண்கள் மற்றும் குயர் சமூகத்தினரை நீண்டகாலமாக நச்சுச் சூழலில் நீடிக்கச் செய்தமை தொடர்பிலும், அதன் விளைவாக அவர்கள் பங்களிப்புச் செய்து கொண்டிருந்த துறைக்கும், இயக்கங்களுக்கும் ஏற்படுத்திய தீங்கு தொடர்பிலும் சிந்திக்குமாறு வலியுறுத்துகிறோம். அநீதியின் மீதான மெளனமும், பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்குரல்வளைகளின் மீது அலட்சியமாக நடந்து செல்லும் போக்கும் சுரண்டலுக்கும் வன்முறைக்கும் துணை நிற்கும் அநீதியான சூழலில், எதிர்ப்பு ஒன்று தான் மனிதத்தின் மனசாட்சியாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த அறிக்கை அதன் எதிரொலி. In Solidarity Ambai (Writer/Mumbai, India) Ajitha K (Feminist Activist, President - Anweshi/Kozhikode, Kerala) Ajitha (Youth Leader/Vallamai, Jaffna, Sri Lanka) Amala (Advocate/Delhi, India) Anandhi Suresh (Feminist Activist, Switzerland) Ananya ( Researcher and Artist/Delhi, India) Angel Queentus (LGBTQ+ Activist/Sri Lanka) Anjana (Feminist Activist/Britain) Anitha Vinayagam (Women and Queer Rights Activist and Entrepreneur/Chennai, India) Ardra Sivan V (Member - Dravidian Political Society/Trivandrum/India) Arpita Banerjee (Performing Artist and Writer/Mumbai) Asha Achi Joseph (Film Director - Women in Cinema Collective/Kerala, India) Asha Latha (Poet and Translator/Kerala, India) Barathy Sivaraja (Marxist Feminist/Britain) Bina Paul (Film Editor - Women in Cinema Collective/Kerala, India) Bisliya Bhutto (Social Activist/Puttalam, Sri Lanka) Chandra Nalliah (Feminist Activist/Canada) Chinmayi Sriprada (Singer, Voice Actor and Entrepreneur/India) Dhamayanthi (Writer and Filmmaker/ Chennai, India) J Devika (Feminist Scholar and Writer/Kerala, India) Deedi Damodaran (Screenwriter-Women in Cinema Collective/Kerala, India) Deepalakshmi (Techie-Writer-Feminist/Chennai, India) Dhivya Marunthaiah (Political Activist/India) Divya Bharathi (Independent Filmmaker and Advocate/Madurai, India) Divya Gopinath (Actor-Women in Cinema Collective/Kerala, India) Gargi Harithakam (Queer Feminist Activist - Vanaja Collective/ Kerala, India) Glady Angel (Theatre Artist/Canada) Geetha Narayanan (Development Consultant and Researcher/Chennai, India) Harikeerthana (Feminist Activist/Australia) Hemalatha (Feminist Activist/Vallamai, Jaffna, Sri Lanka) Iris Koala (Poet and Translator/Kerala, India) Ithayarani (Feminist Activist/Vizhuthu,Trinco, Sri Lanka) Jamal Hairunnisha (National Co-ordinator, Shakthi Abhiyan/Chennai, India) Jothilakshmi (Advocate/Chennai, India) Juwairiya Mohideen (Feminist Activist/Puttalam, Sri Lanka) Kaitlin Emmanuel (Writer and Researcher/Toronto, Canada) Kala Sriranjan (Writer/London, Britain) Kalpradah (Filmmaker-Lyricist-Screenwriter/Chennai, India) Kamaleshwary L(Activist/Colombo, Sri Lanka) Kanthimathi (Advocate and Social worker/Chennai, India) Kavitha Krishnan (Feminist Activist and Writer/Delhi, India) Kavitha Muralidharan (Journalist/Chennai, India) Kounthini R (Feminist Activist-Vallamai/Jaffna, Sri Lanka) Kutti Revathi(Poet, Filmmaker/Chennai, India) Lareena Abdul Haq (Senior Lecturer-University of Sri Lanka/ Belihuloya, Sri Lanka) Leena Manimekalai (Poet and Filmmaker/India, Canada) Leena Yadav (Filmmaker/Mumbai, India) Leeny Elango (Poet, Researcher and Activist/Chennai, India) Luxmy Sivasamboo (Feminist Activist, France) Dr. Marie Drath (Literary Scholar and Activist/Switzerland) Malathi Maithri (Poet, Publisher-Anangu/Pondicherry, India) Meera Sanghamitra (Activist, All India Feminist Alliance, India) Menaka (Feminist Activist/Switzerland) Mekha Rajan (Actor - Film and Theatre/Chennai/India) Mohana Dharshini (Political Activist/Sri Lanka) Moumita Alam (Poet and Essayist/West Bengal, India) Nalini Ratnarajah (Women’s Human Rights Defender/ Batticaloa, Sri Lanka) Nedra Rodrigo (Writer - Translator - Activist/Canada) Negha (Actor and Activist/Chennai, India) Neeruja (Feminist Activist - Thozhamai V/Jaffna, Sri Lanka) Nithika S (Political Activist - Semmugam/Jaffna, Sri Lanka) Nishtha Jain (Independent Filmmaker/Mumbai, India) Nivedita Louis (Co-Founder - Her Stories/Chennai, India) Nivetha Krishnan (Feminist, Entrepreneur/Chennai, India) Niventhini S (Feminist Activist - Vallamai/Jaffna, Sri Lanka) Niyanthini Kadirgramar (PhD Candidate/USA) Padma Prabha (Feminist Activist/Davos, Switzerland) Ponni A (Independent Feminist Historian/Sri Lanka) Ponni Brinda (Feminist Researcher Consultant/India) Poorani (Co-Founder - Penn Collective/Chennai, India) Pranjali (Researcher/Delhi, India) Pritha Mahanti (Independent Writer and Editor/West Bengal, India) Priya Kanniah (Activist, Entrepreneur/Chennai, India) Priya Tharmaseelan (Photographer/Canada) Priyatharshini Vincentperis (Independent Journalist/Canada) Ramya Sampathkumar (Member-Dravidian Political Society/Bangalore/India) Ratneswari (Feminist Activist-Aanaikkottai Women’s Organisation/Sri Lanka) Rachel Walter (Political Activist/India) Rajany Rajeshwary (Consultant -Thozhamai V/Jaffna, Sri Lanka) Ranjani Krishnankumar (Writer and Entrepreneur/Chennai, India) Revathy (Film Director and Actor - Women in Cinema Collective/India) Rima Kallingal (Film Producer and Actor - Women in Cinema Collective/Kerala, India) Sabaritha (Social Worker/Chennai, India) Sathiya R (Student/Trinco, Sri Lanka) Selvi ( Co-ordinator - Manithi/ Chennai, India) Shabnam Hashmi (Social Activist, Founder - ANHAD/New Delhi, India) Shamini V (Feminist Activist, Thozhamai V/Jaffna, Sri Lanka) Sharmila Sagara (Professor - Anant National University/Gujarat, India) Sheeva Dubey (National Alliance For People’s Movements/Pune, India) Shobhitha Krishnamoorthy (Writer/Chennai, India) Shreen Abdul Saroor (Co-Founder, Women’s Action Network/Sri Lanka) Shydhah Zara Nizamudeen (Human Rights Activists/Mount Lavinia, Sri Lanka) Siva Malathy (Feminist Activist/Sri Lanka) Sreejaya Radhakrishnan (Screenwriter/Mumbai, India) Subanya Sivajothy (Writer and Librarian/Toronto, Canada) Subhathra Devi ( Vice President - Rajiv Gandhi Panjayati Raj Sangathan/Chennai, India) Sutha Selvarajah (HIV Peer Educator/Vavuniya, Sri Lanka) Sumathy Karupy (Writer & Filmmaker/Toronto, Canada) Suganthi (Feminist Activist, Vallamai/Sri Lanka) Dr. Tadchaigeni Panchalingam (Health Educator/USA) Tamil Arts Collective, Canada Tamil Feminist Collective, Canada Tamilini (Artist/Canada) Tangella Madhavi (Independent Filmmaker/Kolkata, India) Tharmika (Lawyer/ Sri Lanka Dr. Tanuja Thurairajah (Feminist Geographer and Human Rights Enthusiast/Sri Lanka, Switzerland) Uma Shanika (Feminist Activist/Germany) Uma Makheswari K (Tamil Professor/Pollachi, India) Usha P.E (Feminist Activist/Trivandrum/Kerala, India) Utpala (Activist/Allahabad, India) Vanaja Kanthiah (Feminist Activist/ Paris, France) Vasuki (Social Activist/Toronto, Canada) Vigy Nalliah (Feminist Activist/France) Viji Murugaiyah (Community Organiser/Toronto, Canada) Vinta Nanda (Filmmaker, Writer and Editor of The Daily Eye/Mumbai, India)zs Vinothini Balasubramaniam (Journalist, Social Activist/Colombo, Sri Lanka) Vijayalakshmi T (Professor, Writer and Activist/Kerala, India) Vithursha Kamaleswaran (Feminist Activist, Sri Lanka) Yalini (Writer/Canada) https://adhocfeministcollective.blogspot.com/2025/04/blog-post.html?fbclid=IwY2xjawJrym5leHRuA2FlbQIxMAABHrO5zkyAg8Lqvk5qeMB-GE5wQXRyh4WIx9tIWN_Zgq-d8qZvSWzp1LNNFV9v_aem_tFqfG9aOf5jZuHyAXIE3Ag
-
ட்றம்பரின் ஊழித்தாண்டவம்
ட்றம்பரின் ஊழித்தாண்டவம் சிவதாசன்அது இயக்கங்கள் வானம் தொட்ட காலம். கிராமங்களின் ‘டவுண்ரவுண்கள்’ எனப்படும் கடைச் சந்திகளில் இயக்கக்காரர் ஆள்பிடிகளில் ஈடுபட்டிருந்த அக்காலத்தின் ஒருநாளில் இச்சம்பவம் நடந்தது. அவ்வூரிலுள்ள நோஞ்சான் ஒருவனுக்கு இயக்கத்தில் சேர ஆசை. ஒரு முக்கிய இயக்கத்தின் நாயகர் ஒருவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். நோஞ்சானின் புஜபல பராக்கிரமத்தை நன்றாக அறிந்த அந்த நாயகர் இதர தோழர்களிடம் இதைக்கூறி அந்நோஞ்சானை விடுப்புப் பார்வையாளர் முன்னால் எள்ளி நகையாடிவிட்டார். மனமுடைந்துபோன நோஞ்சான் “இப்ப உங்களுக்குக் காட்டிறன் நான் ஆரெண்டு” என்றபடி அவ்விடத்திலிருந்து நகர்ந்தார். அதற்கும் அந்த நாயகர் கூட்டம் அவரை எள்ளிநகையாடி உரத்துச் சிரித்து வழியனுப்பி வைத்தது. சற்று நேரத்தில் அந்த நோஞ்சான் வீட்டிலிருந்து ஒரு கோடரியுடன் வந்து அச்சந்தியில் விடுப்புப் பார்த்துக்கொண்டு நின்ற ஒரு மெலிந்த முதியவரைத் தள்ளி நிலத்தில் வீழ்த்திவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது கைகளையும் கால்களையும் கோடரியால் துண்டிது விட்டு “இப்ப என்னை இயக்கத்துக்கு எடுப்பீங்களா?” எனக் கேட்டது. நம்ம அமெரிக்கட் ட்றம்பரைப் பார்க்கும்போது இந்த நோஞ்சானின் ஞாபகம் வந்து போகிறது. உளவியல் ரீதியாக இருவருக்கும் ஒரே நிலை இருக்கலாமோ? இருவருமே தமது பலவீனங்களையும் இயலாமைகளையும் மறைக்க இப்படியான அநாகரீக தந்திரங்களைப் பிரயோகிக்கின்றனரோ? ட்றம்பர் கல்வியில் போதாமை கொண்டவர். எவ்வளவு தான் பணமிருந்தாலும் வால் ஸ்ட்றீட் நாயகர்களால் எள்ளி நகையாடப்படுபவர். மோசடிகளாலும், மிரட்டல்களாலும் அவர் சேர்த்த கோடிகளே அவரைச் சுற்றிய அரக்கு மாளிகையைஅ எழுப்ப உதவி செய்தன. அழகிய மனைவி சகிதம் அவர் அங்கு தன்னை முடிசூட்டிக்கொண்ட பின்னர் தான் தன்னை ஒதுக்கிய நாயகர்களை நோக்கி கோடரியுடன் வந்தார். இனிமேல் அவர்தான் ‘இயக்கம்’ என்றளவுக்கு நிலைமையை மாற்றிக்கொண்டார். இந்த ‘இயக்கத்தின்’ மூலம் அவர் அமெரிக்காவுக்கு ‘விடுதலை’ வாங்கித் தருவேன் எனச் சூளுரைக்கிறார். ட்றம்பரின் முதலாவது ஆட்சியின் போது அவருக்கு அனுபவம் போதாது. அவரது வழிப்பறிச் சகாக்களே அவரது ஆலோசகர்களாக இருந்தனர். வால்ஸ்ட்றீட்டின் வெள்ளைச் சேட்டு வீரவான்கள் ட்றம்பரை மதிக்கவில்லை. அப்போதுதான் அவருக்குப் புரிந்தது தனது மக்கள் ‘சிவப்புக் கழுத்துக்காரர்கள்’ என அழைக்கப்படும் வெள்ளைக் கூலிக்காரர். அவரது இரண்டாவது வருகையைச் சாத்தியமாக்கியது இவர்கள் தான். ட்றம்பரை உசுப்பேத்திவிட்டுத் தமது காரியங்களைச் சாதிக்கலாமென்று நினைத்த மஸ்க் போன்றவர்களும், ட்றம்பர் போடும் எலும்புத் துண்டுகளுக்காக ஓடித்திரியும் மார்க்கோ ரூபியோ போன்றவர்களும் அவருக்கு ஆலவட்டம் வீசுகிறார்கள். ட்றம்பர் ஒரு விடயத்தில் மிகவும் உறுதியாக இருக்கிறார். இப்போது அவராடும் ஊழித்தாண்டவத்தின் அசைவுகளை அவர் தேர்தலுக்கு முன்னரே கூறியிருந்தவர். “அமெரிக்காவின் வர்த்தகப் பங்காளிகளுக்கு நான் ஒரு பாடம் படிப்பிப்பேன்; திருட்டுத்தனமாக நாட்டில் புகுந்தவர்களை நாடு கடத்துவேன்; போர்களை நிறுத்துவேன்; அமெரிக்க உற்பத்தி நிறுவனங்களை மீண்டும் இங்கு கொண்டுவருவேன்” என அப்போது உரக்கக் கூவியிருந்தார். அவரது வரவை எதிர்பார்க்காத ஜனநாயகக் கட்சியினதும், குடியரசுக் கட்சியினதும் வெள்ளைச் சேட்டு வீரவான்கள் அவரைத் தொடர்ந்து ஏளனம் செய்து அவரது ஓர்மத்தை உச்சிக்குக் கொண்டுசென்றுவிட்டனர். வந்ததும் வராததுமாக அவர் தன் கோடரியை விசுக்க ஆரம்பித்துவிட்டார். அவர் சொல்லாததைச் செய்யவில்லை. அவரது முதலாவது கோடரி வீச்சு இறக்குமதித் தீர்வை என்ற பெயரில் அமெரிக்காவின் நண்பர்களான கனடா, மெக்சிக்கோ மீது விழுந்தது. இருவருமே ஓடிப்போய் அவரது கால்களில் வீழ்ந்து ‘மன்னிப்புக் கோரினர்’. இன்னுமொரு தென்னமெரிக்க நாடான கொலம்பியா “நாடகற்றப்பட்டவர்களைத் தான் எடுத்துக்கொள்கிறேன்” எனப் பேரம் பேசி தீர்வையைக் குறைத்துக்கொண்டு ஓரமாக ஒதுங்கிக்கொண்டது. எல் சல்வடோர் ‘அமெரிக்க பயங்கரவாதிகளை’ இன்னமும் இறக்குமதி செய்து விபச்சாரம் செய்துகொண்டிருக்கிறது. இன்னும் 75 நாடுகள் ஓடோடி வந்து ட்றம்பரின் கால்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கதறுகின்றன. இதில் ‘அனுரதீப’ வும் ஒன்று. நியூசீலந்திற்கு அருகேயுள்ள பென்குவின்கள் வாழும் தீவொன்றுக்கும் தீர்வை விதிக்கப்பட்டதெனவும் விரைவில் அவையும் கதறிக்கொண்டு ஓடிவரலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவையெல்லாம் ட்றம்பரின் ஊழித்தாண்டவத்தின் வெற்றிகள். “சொன்னேன், செய்தேன், பார்த்தீர்களா” என அவர் கர்ச்சிப்பதற்கான அத்தனை காரணங்களுமுண்டு. அவரது வெற்றியைப் பறைசாற்றுமாப்போல் சந்தைகள் ஓலமிட்டுக்கொண்டு சரிகின்றன. சீனா, இந்தியா, ஐரோப்பா போன்ற பெரிய சந்தைகள் “நாங்களும் சண்டியர்கள்” என்ற கணக்கில் வாணங்களை விட்டாலும் சரிவடையும் சந்தைகள் இவர்களையும் பாதிப்புக்குள்ளாக்கி விட்டன. மேற்கின் பொருளாதாரத் தடைகளால் முற்றுகையிடப்பட்ட ரஸ்யா, ஈரான், வெனிசுவேலா போன்ற நாடுகள் வாய்களைப் பொத்திக்கொண்டு சிரிக்கின்றன. இந்த ஊழிக்காலங்களுக்கு அவை பழகிப்போய்விட்டவையாக இருக்கலாம். ட்றம்பரின் இந்த ஊழித் தாண்டவம் பொருளாதாரம் சார்ந்தது அல்ல. “நான் ஆரெண்டு காட்டுறன் பார். என்ர கால்களில உங்களை விழச்செய்கிறேன்” என்ற அவரது பழிவாங்கலே இது. ஆனால் அவர் கிளப்பிவிட்ட இந்த உலகப் புயலின் பின்னால் ஒரு அமைதி வரத்தான் போகிறது. அதற்கு முதல் சந்தைகள் புரளும், எண்ணை விலைகள் இறங்கும். உலகம் தன் கால்களில் மட்டும் நிற்பதற்கான முயற்சிகளில் இறங்கும். மொத்தத்தில் நாரதர் கலகம் நன்மையில் தான் முடியப்போகிறது. அமெரிக்க முதலாளிகளான மூட்டைப் பூச்சிகள் வறிய நாடுகளின் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுத்து விட்டன. அவை தாமாகக் கழரும் நிலை இப்போது. “வேண்டுமானால் வந்து நம்ம வீட்டுக் காரரைக் கடி” என்கிறார் ட்றம்பர். சீனா, இந்தியா போன்ற நாடுகளின் இரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருக்கும் அப்பிள் நிறுவனம், வியட்நாமின் இரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருக்கும் நைக்கி நிறுவனமும் அமெரிக்கா மீள வேண்டும். ட்றம்பர் இதில் பாரபட்சம் காட்டவில்லை. சீனாவின் இரண்டு டொலர் ரீ சேட்டை இனிமேல் இருபது டொலர்களுக்கு அமெரிக்கர்கள் வாங்கப்போகிறார்கள். அமெரிக்கர்களுக்கு இனிமேல் தான் வியர்க்கப்போகிறது. இதுவே தான் ட்றம்பர் சொன்ன அமெரிக்க விடுதலை. நேற்று அமெரிக்காவிலிருந்து நண்பர் ஒருவர் கூறினார். சுப்பர் மார்க்கட்டுகளில் பழ்ங்கள், காய்கறிகள் தட்டுப்பாடு என. பழங்களைப் பிடுங்குவதற்கு வரிசையில் நின்ற தென்னமெரிக்க குடிமக்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுவிட்டார்கள். தோட்டக்காரர் கூலிகள் கிடைக்காமல் அல்லல் படுகிறார்கள். இவர்கள் தான் ட்றம்பரை ஆட்சியில் அமர்த்தியவர்கள். அவர்களால் தான் ட்றம்பர் தூக்கியெறியப்படவேண்டும். ட்றம்பருக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் களை கட்ட ஆரம்பித்துவிட்டன. மூன்றாவது தடவையாக ட்றம்பரை உள்ளே தள்ளுவதற்கான முயற்சிகளும் ஆரம்பித்து விட்டன. 2026 இல் நடைபெறவிருக்கும் நடுத்தவணைத் தேர்தலில்களில் குடியரசுக் கட்சி படுதோல்வியடைய வாய்ப்புக்கள் ஏராளம். கட்சிக்குள் குத்துக்களும் முறியல்களும் ஆரம்பித்து விட்டன. குடியரசுக் கட்சியின் செனட்டர் ரெட் குறூஸ் இரத்தக்களரி பற்றிப் பேச ஆரம்பித்து விட்டார். “ட்றம்பரின் பொருளாதார ஆலோசகர் பீட்டர் நவாரோ ஒரு முட்டாள், ஒரு உருளைக்கிழங்கு மூட்டையை விட மொக்கர்” என இலான் மஸ்க் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். இவ்வர்த்தகப் போர் தோல்வியில் முடியும் என்பது மஸ்க் உட்படப் பலருக்குத் தெரியும். அதே வேளை ட்றம்பரின் உளநிலை / குணாதிசயம் பற்றியும் அவர்களுக்குத் தெரியும். இத் தோல்வியையும் அவர் வெற்றியெனவே மாற்ற முற்படுவார். இந்த வணங்காமுடியின் குணத்தை அறிந்து அவரது பரிவாரங்கள் “வெற்றி வேல், வீரவேல்” ஒலிக்கத்தான் வேண்டும். “எனது தீர்வை அறிவிப்பைத் தொடர்ந்து 75 நாடுகள் என்னுடன் பேசிவிட்டன. அவர்களது தீர்வையை 10% மாகக் குறைத்தது மட்டுமல்லாது 90 நாட்கள் அவகாசமும் கொடுத்திருக்கிறேன்” என இந்த வணங்காமுடி வீரவசனம் பேச ஆரம்பித்திருக்கிறது. அவர் பேசிக் களைத்து அடுத்த காரியத்தை ஆரம்பிக்கும்வரை ஒத்தூதவேண்டிய அவசியம் இருக்கிறது. ‘வெற்றி’ ஒன்றே அவரைத் திருப்திப்படுத்தும். அது போலியாகவிருந்தாலுங்கூட. இக்கலகத்தை முடிவுக்குக் கொண்டுவர இரண்டே வழிகள் தானுள்ளன. “அமெரிக்காவின் வர்த்தகப் பங்காளிகள் எல்லோரும் தமது கால்களில் வீழ்ந்துவிட்டார்கள் அதனால் அவர்களுக்கு நான் சலுகையைக் கொடுத்திருக்கிறேன்” என ட்றம்பருக்கு வெற்றிக் கேடயத்தைக் கொடுத்து விடுவது. இதைப் பெற்றுக்கொண்டு அவர் யூக்கிரெய்னுடனோ, பாலஸ்தீனத்துடனோ அல்லது ஈரானுடனோ விளையாடப் போய்விடுவார். அல்லது அமெரிக்காவை அவர் விடுதலை செய்வதற்கு முதல் அவரிடமிருந்து மக்கள் அமெரிக்காவை விடுதலை செய்தல். எல்லாம் அமெரிக்கர்கள் கைகளில்தான். |ட்றம்பரின் ஊழித்தாண்டவம் |சிவதாசன் அது இயக்கங்கள் வானம் தொட்ட காலம். கிராமங்களின் 'டவுண்ரவுண்கள்' எனப்படும் கடைச் சந்திகளில் இயக்கக்காரர் ஆள்பிடிகளில் ஈடுபட்டிருந்த அக்காலத்தின் ஒருநாளில் இச்சம்பவம் நடந்தது. அவ்வூரிலுள்ள நோ...
-
தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம் ; தேசத் திரட்சியே வேண்டும்
தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம் ; தேசத் திரட்சியே வேண்டும் பிரதமர் ஹரினி மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்துள்ளார்.50 ஆண்டுகளுக்குப் பின் நடந்த கும்பாபிஷேக வைபவத்தில் அவர் விருந்தினராக வரவேற்கப்பட்டுள்ளார். அங்கே தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் காண முடியவில்லை. மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்குத் தமிழ் மக்களின் போராட்டத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. 1968 ஜூன் மாதம் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி வெற்றி பெற்ற கோவில் அது. அந்தப் போராட்டத்திற்கு கலாநிதி சண்முகதாசன் தலைமையிலான சீன சார்பு கொம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கியது;வெற்றி பெற்றது. ஆனால் இங்குள்ள முரண் என்னவென்றால் அந்தப் போராட்டத்தில் கொம்யூனிஸ்ட் கட்சி போராடும் தரப்பின் பக்கம் நின்று தலைமை தாங்கியது.தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தராகிய சுந்தரலிங்கம் ஒடுக்கும் தரப்பின் பக்கம் நின்றார். குறிப்பிட்ட சில சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது என்ற தரப்பின் பக்கம் சுந்தரலிங்கம் நின்றார். அவர் அடங்காத் தமிழன் என்று அழைக்கப்பட்டவர். எனினும் சமூக விடுதலை இல்லாத தேசிய விடுதலை என்பது விடுதலையே அல்ல என்ற அடிப்படை விளக்கம் அவரிடம் இருந்திருக்கவில்லை. ஆனால் இது நடந்து கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளின் பின் 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபொழுது சமூக விடுதலை இல்லாமல் தேசிய விடுதலை இல்லை என்ற கொள்கை விளக்கம் தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் உருவாகியிருந்தது.எனினும் இப்பொழுதும்கூட தமிழ்த்தேசிய முகமூடி அணிந்திருக்கும் பலரிடம் இந்த விளக்கம் இல்லை. அல்லது அது அவர்களுடைய வாழ்க்கை முறையாக இல்லை. சீன சார்புக் கொமியுனிஸ்ராகிய சண்முகதாசன்(சண்) தமிழர்களுடைய விடுதலைப் போராட்டம் தொடர்பில் விமர்சனங்களைக் கொண்டிருந்தாலும் தெளிவான ஆதரவு நிலைப்பாட்டையும் கொண்டிருந்தார். கட்சியின் இளையோர் அணிக்குத் தலைவராக இருந்த ரோகன விஜயவீர 1964இல் கட்சியிலிருந்து பிரிந்து 1965இல் ஜேவிபியை உருவாக்கினார். “ஜேவிபி ஒர் அரைப்பாசிச, இனவாத அமைப்பு” என்று சண்குகதாசன் குற்றம் சாட்டினார்.ஜேவிபியின் முதலாவது கொழும்புக் கூட்டத்திலேயே அதன் வகுப்புவாதத்தை அம்பலப்படுத்தி சண்முகதாசனின் கட்சியின் தோழர்கள் துண்டுப் பிரசுரம் விநியோகித்தார்கள்.பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டபோது சண் பின்வருமாறு கூறினார்…“பழைய இடதுசாரிக் கட்சிகள் இந்திய விஸ்தரிப்பு வாதத்தை எதிர்க்கத் தவறியதால் வகுப்புவாத, அரைப் பாசிச ஜேவிபி சிங்கள இனத்தின் இரட்சகராகத் தோன்றி இந்திய விஸ்தரிப்பு வாதத்தை எதிர்த்தது. அரசாங்க எதிர்ப்பு, தமிழர் எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு உணர்வுகளை ஜேவிபி நன்கு பயன்படுத்திக் கொண்டது” இத்தகவல்களை சண் எழுதிய “ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள்” என்ற நூலின் 332ஆம் பக்கத்தில் காணலாம். ரோகண விஜயவீர உருவாக்கிய ஜேவிபியை அடித்தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இப்பொழுது ஆட்சி செய்கின்றது.1965இல் ஜேவிபி உருவாக்கப்பட்டு மூன்று ஆண்டுகளின் பின் மாவிட்டபுரம் ஆலய பிரவேசப் போராட்டம் இடம்பெற்றது.இப்படிப்பட்டதோர் பின்னணியில், பிரதமர் ஹரிணி மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்கு வந்தது. தற்செயலானதா ?அல்லது திட்டமிடப்பட்டதா? பிரதமர் ஹரிணி அவருடைய வடக்கு விஜயத்தின் போது அவர் எங்கெங்கே போகிறார் என்று பார்த்தால் தமிழ்த்தேசிய நிலைப்பாடு தொடர்பாக விமர்சனங்களை கொண்ட அல்லது தமிழ்த்தேசிய நிலைப்பாடு தொடர்பில் முழு உடன்பாடு இல்லாத இடங்கள், நபர்களைத் தேடிச் அவர் செல்வது தெரிகிறது. ஹரிணி மட்டுமல்ல அரசாங்கத்தின் பிரதானிகள் அடிக்கடி வடக்குக்கு வருகிறார்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சபைகளை கைப்பற்றும் நோக்கத்தோடு தீயாக வேலை செய்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் அவர்களுக்கு கொடுத்த வெற்றி அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.அந்த வெற்றியை அவர்கள் வெளியரங்கில் குறிப்பாக டெல்லியிலும் ஐநாவிலும் ஒரு மக்கள் ஆணையாக காட்டி பேசுகிறார்கள். இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு தமிழ் மக்கள் தங்களுக்கு ஆணை வழங்கியிருப்பதாக அதை வியாக்கியானப்படுத்துகிறார்கள்.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ். தேர்தல் தொகுதியில் கிளிநொச்சியில் மட்டும் தமிழரசுக் கட்சிக்கு ஓர் ஆசனம் கிடைத்தது.ஆனால் யாழ்ப்பாணத்தில் ஒரு ஆசனம்கூட கிடைக்கவில்லை.தேசிய மக்கள் சக்திக்கு மொத்தம் மூன்று ஆசனங்கள் கிடைத்தன. அந்த வெற்றியை அடுத்த கட்டத்திற்கு விஸ்தரிப்பதன் மூலம் தமிழ் மக்களின் ஆணை தமக்கே அதிகம் உண்டு என்று அவர்கள் நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்.கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பின் தமிழ் தரப்பு எனப்படுவது தமிழ் தேசிய தரப்பு மட்டுமல்ல என்ற ஒரு வாதத்தை அவர்கள் முன்வைத்து வருகிறார்கள். அந்த வாதத்தை மேலும் பலப்படுத்துவதற்காக அவர்களுக்கு உள்ளூராட்சி சபைகளில் வெற்றி தேவைப்படுகிறது. அந்த வெற்றியை நோக்கி அவர்கள் தீயாக வேலை செய்கிறார்கள். 34 ஆண்டுகளின் பின் பலாலி வீதியைத் திறந்ததும் அந்த நோக்கத்தோடுதான்.ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 15 ஆண்டுகளின் பின்னர் தான் ஒரு பிரதான வீதியை அதுவும் யாழ்குடா நாட்டின் நெஞ்சை ஊடறுத்துச் செல்லும் ஒரு வீதியைத் திறக்க முடிகிறது என்றால் யுத்தத்தில் அவர்கள் பெற்ற வெற்றியின் பொருள் என்ன? போருக்கு பின்னரான அரசியல் என்பதன் பொருள் என்ன? நிலை மாற்றம் என்று ஐநா கூறுவதன் பொருள் என்ன? 15 ஆண்டுகளின் பின்னரும் கூட அந்தப் பாதையை முழுமையாக திறக்க முடியவில்லை என்பதைதான் அந்தப் பாதை வழியே நிறுத்தப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகை காட்டுகின்றது.அந்தப் பலகையில் பின்வரும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. காலை 6:00 மணியிலிருந்து பிற்பகல் 6:00 மணி வரையிலும் தான் அந்த பாதையைப் பயன்படுத்தலாம்.பயணிகள் பேருந்துகள் தவிர ஏனைய கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. வாகனங்களை இடையில் நிறுத்தவோ திருப்பவோ கூடாது. வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தில்தான் பயணம் செய்ய வேண்டும். வாகன சாரதிகள் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் கைவசம் வைத்திருக்க வேண்டும். அந்த வழியால் யாரும் நடந்து போக முடியாது. அந்த வழியில் இரு புறங்களிலும் உள்ள உயர் பாதுகாப்பு வலையத்தை யாரும் படம் எடுக்க முடியாது. இவைதான் விதிகள்.இந்த விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிவித்தல் கூறுகின்றது. எந்த சட்டத்தின் அடிப்படையில் அந்த அறிவித்தல் பலகை அங்கே வைக்கப்பட்டிருக்கிறது என்று சுமந்திரன் கேள்வி கேட்டிருக்கிறார். அந்த அறிவிப்பு ஏறக்குறைய போர்க்காலத்தை நினைவு படுத்துவது. ஒரு போர்க்காலத்தில் அப்படிப்பட்ட பாதையால் போகும்போது அவ்வாறான நிபந்தனைகள் விதிக்கப்படுவதுண்டு.ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த15 ஆண்டுகளின் பின்னரும் அவ்வாறான நிபந்தனைகளை விதிப்பதன் பொருள் என்ன? நாடு யாருக்குப் பயப்படுகின்றது? உயர் பாதுகாப்பு வலையங்கள் இல்லாத பாதுகாப்பான ஒரு நாட்டை ஏன் சிங்கள பௌத்த அரச கட்டமைப்பால் கட்டியெழுப்ப முடியவில்லை? சிங்கள பௌத்த அரச சிந்தனை அல்லது மகாவம்சம் மனோநிலை எனப்படுவது எப்பொழுதும் தற்காப்பு உணர்வோடு எதிரிக்கு எதிரான அச்சத்தோடு முள்ளுக் கம்பிகளுக்குள் இருப்பதுதானா? தேர்தல் காலத்தில் பாதை திறக்கப்பட்டமை தேர்தல் நோக்கங்களைக் கொண்டதா என்று வழக்கறிஞர் கே.எஸ்.ரட்னவேல் கேள்வி எழுப்பி உள்ளார். கொழும்பில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர் அவ்வாறு கேட்டிருக்கிறார். தமிழ் மக்கள் மத்தியில் உள்ள மதிப்புக்குரிய ஒரு சட்டச் செயற்பாட்டாளர் அவர். ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல்களை முன்னிட்டு தமிழ்ப் பகுதிகளில் காணப்பட்ட சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டதையும் வீதித் தடைகள் அகற்றப்பட்டதையும் குறிப்பாக பலாலி பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரமான ஒரு பகுதி விடுவிக்கப்பட்டதையும் இங்கு நினைவூட்ட வேண்டும். ஆனால் அவ்வாறு திறக்கப்பட்ட பெரும்பாலான வீதித் தடைகளும் சோதனைச் சாவடிகளும் பின்னர் மீண்டும் தேர்தல்கள் முடிந்ததும் முளைத்து விட்டன. குறிப்பாக ஆனையிறவு மண்டை தீவின் நுழைவாயில்,புங்குடு தீவின் நுழைவாயில், வன்னியில் உள்ள சோதனைச் சாவடிகள் போன்ற பல சோதனைச் சாவடிகள் அல்லது வீதித் தடைகள் தொடர்ந்தும் இயங்கி வருகின்றன.சில மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஐநாவின் வதிவிடப் பிரதிநிதியிடம் இது தொடர்பாக சிவில் சமூகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன. தேர்தல் நோக்கங்களுக்காக அரசாங்கம் பாதைகளை திறக்கின்றது. தேர்தல் தேவைகளுக்காக அரச வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் வெற்றியை இலக்காக வைத்து அதாவது நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மேலும் உறுதிப்படுத்தி பலப்படுத்த வேண்டும் என்ற இலக்கோடு தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் வடக்கு கிழக்கில் தீவிரமாக செயற்பட்டு வருகிறார்கள். “வெற்றி நமதே ஊர் எமதே” என்பது தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கான தமிழ்க் கோஷமாகக காணப்படுகிறது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு அது எதிர்பார்க்கும் வெற்றிகள் கிடைக்குமாக இருந்தால் தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாகக் கருதவில்லை;தங்களை ஒரு தேசிய இனமாகக் கருதவில்லை என்று அரசாங்கம் வெளி உலகத்துக்குக் கூறப்போகிறது. தமிழ் மக்கள் இன அழிப்புக்கு எதிராக நீதியைக் கேட்கவில்லை; ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு தீர்வைக் கேட்கவில்லை என்றும் கூறப்போகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மீது கொண்ட வெறுப்பினால் தமிழ் மக்கள் ‘தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம்’ என்று தீர்மானித்து வாக்களித்தார்கள்.ஆனால் தேசமும் வேண்டாம் என்று தீர்மானித்து வாக்களிக்கவில்லை என்பதை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நிரூபிக்க வேண்டும். ஆதவன் இணையத் தளத்தில் 13.04.2025 பிரசுரிக்கப்பட்ட கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம் https://www.nillanthan.com/7320/?fbclid=IwY2xjawJrqvNleHRuA2FlbQIxMQABHlRwaQyhqEnRbW5xpLLVXHARk8luHBz247bVlkUAHIz2oVQnX5m8_htqCxws_aem_DEPeUDz19oSAcTSEjw5kTg
-
ஜெர்மனியில் தமிழர்களை பார்த்து நடுங்கும் சிங்கள மாணவர்கள்
இரத்த பொட்டு வாங்கிய அமிரும் மங்கையர்கரசியும் இன வெறியர்கள் இல்லையா?
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
கருணாநிதி தெலுங்கர் எனில் அவரது மகன் தெலுங்கர் தானே. எமது பிள்ளைகள் இங்கு பிறந்தாலும் அவர்கள் தமிழர்கள் தானே. வேணுமானால் தமிழ் அமெரிக்கர், தமிழ் கனேடியன் என கூறலாம்.
-
கருத்து படங்கள்
- நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
அப்போ தெலுங்கு ஸ்ராலின் தமிழ் நாட்டை ஆள்வது???🙂- கோல்ப் 2025 Masters ஒரு வீரனின் நீண்ட போராட்டம்
விஜய் சிங் விளையாடவில்லை போல.- நல்லதே நடக்கும்! கட்சி சகாக்களுடன் பேசிய பின் பா.ம.க., ராமதாஸ் அறிவிப்பு
சென்னை: பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தது, அக்கட்சியில் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில், நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பேசிய ராமதாஸ், 'நல்லதே நடக்கும்' என்று கூறியது, அவர்களுக்கு மன நிம்மதியை தந்துள்ளது. ஆனாலும், அவரின் மகன் முரண்டு பிடிப்பதால், கட்சி நிர்வாகிகள் மீண்டும் சமரச முயற்சியை தொடர்ந்துள்ளனர். பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே, கடந்த லோக்சபா தேர்தலின் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ராமதாஸ் தன் மகள் வழி பேரன் முகுந்தனை, பா.ம.க.,வின் இளைஞர் அணி தலைவராக அறிவித்தார். அதை, பொதுமேடையிலேயே அன்புமணி எதிர்த்தார். இதனால், இருவருக்கும் இடையிலான மோதல் அதிகரித்தது. இந்நிலையில், பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக, கடந்த 10ம் தேதி ராமதாஸ் அறிவித்தார். அத்துடன் 'இனி நானே தலைவராக செயல்படுவேன். அன்புமணி செயல் தலைவராக இருப்பார்' என்றார். இது, கட்சியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழி நடத்துவேன் இரு தினங்கள் அமைதியாக இருந்த அன்புமணி, நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், 'பா.ம.க.,வை தொடர்ந்து வழி நடத்தி செல்வேன். 2022 மே 28ம் தேதி சென்னையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். தேர்தல் கமிஷனும் அங்கீகரித்துள்ளது. 'எனவே, தலைவராக தொடர்ந்து செயல்படுவேன். மே 11ல் மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவேன்' என்று குறிப்பிட்டிருந்தார். அவரின் அறிவிப்பை, கட்சியினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர். அதேநேரம், அன்புமணியின் அறிவிப்பு, ராமதாசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து, கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி, அடுத்த கட்டமாக பொதுக்குழுவை கூட்டி, தனக்குள்ள ஆதரவை நிரூபிக்கும் முடிவிற்கு வந்தார். உடன், தைலாபுரம் தோட்டத்திலிருந்த கட்சியின் தலைமை நிலைய செயலர் அன்பழகன் வழியே, மாவட்ட செயலர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு திடீர் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆலோசனை விழுப்புரம், கடலுார், புதுச்சேரி, மயிலாடுதுறை என, பல்வேறு மாவட்டங்களிலிருந்து நிர்வாகிகள், கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, மயிலம் எம்.எல்.ஏ., சிவகுமார், விழுப்புரம் மாவட்ட செயலர் ஜெயராஜ், மயிலாடுதுறை மாவட்ட செயலர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தைலாபுரம் தோட்டத்திற்கு ஒருவர் பின் ஒருவராக, நேற்று காலையிலிருந்து வரத்துவங்கினர். பின் நடந்த ஆலோசனை கூட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில், அன்புமணியின் அறிவிப்பு குறித்தும், பொதுக்குழுவை கூட்டும் தேதி குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, நிர்வாகிகளிடம் பேசிய ராமதாஸ், 'எல்லாம் சரியாகி விடும்' என்று கூறியதாகவும் தகவல் வெளியானது. கூட்டத்தில் இருந்து வெளியே வந்த மயிலம் எம்.எல்.ஏ., சிவகுமார், மாவட்ட செயலர் ஜெயராஜ் ஆகியோர், 'மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு மாநில மாநாடு குறித்தும், மாநாட்டில் அதிக அளவில் கட்சியினர் பங்கேற்பது குறித்தும், ராமதாஸ் தலைமையில் ஆலோசனை நடந்தது' என்று தெரிவித்தனர். தைலாபுரம் தோட்டத்திற்கு, நேற்று பகல், 1:30 மணிக்கு வந்த, பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி, ''விரைவில் நல்ல செய்தி வரும். ராமதாஸ், அன்புமணி ஆகியோர் விரைவில் சந்தித்து பேசி நல்ல முடிவை எடுப்பர்,'' என்றார். இந்தச் சூழலில், நேற்று மாலை அன்புமணி, மாமல்லபுரம் சென்றார். அங்கு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடக்கும் இடத்தை பார்வையிட்டார். அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,''இது எங்கள் உட்கட்சி விவகாரம். எங்களுக்குள் நாங்கள் பேசி தீர்த்துக் கொள்வோம். ராமதாஸ் வழிகாட்டுதலுடன், அவரது கொள்கையை நிலைநாட்ட, பா.ம.க.,வை, ஆளும் கட்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், எல்லோரும் சேர்ந்து உழைப்போம்,'' என்றார். அன்புமணி இனி, கட்சியின் செயல் தலைவராக செயல்படுவார் என்று ராமதாஸ் அறிவித்த நிலையில், 'நான் கட்சி தலைவராக செயல்படுவேன்' என, அன்புமணி அறிவித்துள்ளது, கட்சியினரிடம் குழப்பத்தை அதிகரித்துள்ளது. தொடர்ந்து தந்தை மற்றும் மகனை சமாதானப்படுத்தும் முயற்சியில், கட்சி நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். அன்புமணியுடன் முகுந்தன் சமரசம்ராமதாஸ் தன் பேரன் முகுந்தன் பரசுராமனை, பா.ம.க., இளைஞர் அணி தலைவராக நியமித்ததே, அன்புமணிக்கும், ராமதாசுக்கும் இடையே மோதல் ஏற்பட காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், முகுந்தன் நேற்று மதியம் சென்னை பனையூரில் உள்ள அன்புமணி வீட்டிற்கு சென்றார். அங்கு இருவரும் ஒரு மணி நேரம் சந்தித்து பேசினர். அதன்பின், மாமல்லபுரம் புறப்பட்டு சென்றார் அன்புமணி. https://www.dinamalar.com/news/tamil-nadu-news/good-things-are-happening-pmk-ramadoss-announces-after-talking-to-party-colleagues-reconciliation-attempt-again-as-son-anbumani-is-also-at-loggerheads/3904312- சஜித்தை டெல்லிக்கு அழைத்த மோடி
உனக்கு என்ன வேண்டுமென்றாலும் தருகிறேன். சிவப்பு சட்டையை காலி பண்ணு என்று கேட்டிருப்பார் போல. சிம்போலிக்காக கொடுக்கிறாராம்.🙂- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- ஜெர்மனியில் தமிழர்களை பார்த்து நடுங்கும் சிங்கள மாணவர்கள்
💥ஜெர்மனியில் தமிழர்களை பார்த்து நடுங்கும் சிங்கள மாணவர்கள் | நீங்கள் புலியா? | Thusanth vlogs சிங்களவர்கள் இன்னும் இந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை.- சீனா மீது அமெரிக்கா 104% வரி; பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவு!
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அருமையான கிளிக்.- தமிழில் தண்டப் பத்திரம் கேட்ட சாரதியை இழுத்துச் சென்று வழக்குப் பதிவு செய்த வவுனியா பொலிஸ்!
தமிழில் தண்டப் பத்திரம் கேட்ட சாரதியை இழுத்துச் சென்று வழக்குப் பதிவு செய்த வவுனியா பொலிஸ்! வவுனியா, குருமண்காட்டு சந்தியில் நேற்று தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியினை, வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார், பிடித்து இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்ற முற்பட்டமையினால் பதற்ற நிலை ஏற்பட்டது. வாகன சாரதி ஒருவர் வர்த்தக நோக்கத்திற்காக குருமண்காடு சந்தியில் வாகனத்தினை நிறுத்தியுள்ளார். இதன்போது வாகனத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை இறக்குவதினால் சிறிது நேரம் கால அவகாசம் தருமாறு வாகன சாரதி கோரிய சமயத்தில் போக்குவரத்து பொலிஸார் வாகன திறப்பினை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். இதன்போது வாகனத்தினை நிறுத்த தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தினை நிறுத்தியமை என சிங்கள மொழியில் பொலிஸார் தண்டப்பத்திரம் வழங்கிய சமயத்தில் தமக்கு என்ன குற்றம் என தெளிவில்லை. எனவே, தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரியமையினால் வாகன சாரதி - போக்குவரத்து பொலிஸாருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி கடமைக்கு இடையூறு என தெரிவித்து குறித்த வாகன சாரதியினை முச்சக்கர வண்டியில் பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றிச்செல்ல முற்பட்ட சமயத்தில் அவ்விடத்தில் பதற்ற நிலமை ஏற்பட்டது. எந்த தவறும் செய்யாது என்னை எவ்வாறு கைது செய்ய முடியும். மேலும் அவ்வாறு தவறு செய்தால் தண்டப்பத்திரம் தானே வழங்க வேண்டும் என வாகன சாரதி கூறி, முச்சக்கர வண்டியில் ஏற மறுப்பு தெரிவித்தமையடுத்து போக்குவரத்து பொலிஸார் குறித்த வாகன சாரதியின் தலையை பிடித்து இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்றி வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றிச் சென்றனர். வாகன சாரதி மீது வவுனியா போக்குவரத்து பொலிஸார் வழக்கு தாக்கல் மேற்கொண்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர். https://seithy.com/breifNews.php?newsID=331973&category=TamilNews&language=tamil- தமிழர்களை மையப்படுத்திய மூலோபாயத்தினை இந்தியா கைவிட்டுள்ளது!
தமிழர்களை மையப்படுத்திய மூலோபாயத்தினை இந்தியா கைவிட்டுள்ளது! வட, கிழக்கு தமிழர்களை மையப்படுத்திய மூலோபாயத்தினை இந்தியா கைவிட்டுள்ளது என்பதற்கான மிகப்பெரிய சமிக்ஞையாகவுள்ளது என்று இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி.தயான் ஜயத்திலக்க சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயம் சம்பந்தமாகவும் தமிழ்த் தலைமைகளின் சந்திப்புத் தொடர்பாகவும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 1987ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் வருகைக்கும் 2025இல் நரேந்திர மோடியின் வருகைக்கும் இடையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1987இல் இந்தியப்படைகள் நிலை கொண்டிருக்கையில், மிராஜ் விமானங்கள் வட்டமிட்டுக்கொண்டிருக்கையில் தான் ராஜீவ் காந்தியின் வருகை நிகழ்ந்தபோது அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் அச்சமடைந்த நிலையில் இருந்தார். ஆனால், இந்திய எதிர்ப்புவாதக் கொள்கையில் செயற்பட்ட ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற தருணத்தில் பிரதமர் மோடியின் வருகை நிகழ்ந்திருக்கின்ற நிலையில் அது அமைதியாகவும் சுமூகமாகவும் நடைபெற்றிருக்கின்றது. அதேபோன்று ராஜீவ் காந்தியின் வருகையானது, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை மையப்படுத்தியதாக இருந்தது. குறிப்பாக, தமிழ் மக்களின் பூர்வகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தியதாகவே இருந்தது. ஆனால், பிரதமர் மோடியின் விஜயமானது, ஒட்டுமொத்தமாக பொருளாதாரத்தை மையப்படுத்தியதாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவின் எதிர்கால பொருளாதார மூலோபயத் திட்டங்களை மையப்படுத்தியதாகவே உள்ளது. அதனடிப்படையில் தான் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தவகையில் பார்க்கின்றபோது, இந்தியா தற்போது பொறுமையிழந்துவிட்டது என்றே கொள்ளவேண்டியுள்ளது. ஏனென்றால், பிரதமர் மோடி தனது இலங்கை விஜயத்தின்போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேசியப் பிரச்சினை தொடர்பிலோ, அதிகாரப்பகிர்வு தொடர்பிலோ உத்தியோக பூர்வமாக எந்த விடயங்களையும் குறிப்பிடவில்லை. அவர் ஆகக்குறைந்தது 13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாகக் கூட நேரடியாகக் கூறாது, இலங்கையின் அரசியலமைப்பு முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்றே கூறியிருக்கின்றார். மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். இந்த நிலைமைக்கு முழுக்க முழுக்க காரணமாக இருப்பவர்கள் வடக்கு, கிழக்கு தமிழ்த் தலைவர்களே. ஏனென்றால் இவர்கள் 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டபோது அதனை ஏற்றுக்கொண்டு மாகாண சபை முறையில் பங்கேற்கவில்லை. குறிப்பிட்ட விடுதலை இயக்கங்கள் மட்டுமே பங்கேற்றன. பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகளும் பங்கேற்கவில்லை. அதன்பின்னர் புலிகளின் தனிநாட்டுக் கொள்கையை தலைவர்கள் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டு பயணித்தார்கள். பிரபாகரனின் தீர்மானங்களையும் செயற்பாடுகளையும் அங்கீகரித்தார்கள். போரின் முடிவின் பின்னர் அவர்கள் தங்களுடைய எதிர்காலச் செயற்பாடுகள் சம்பந்தமாக மீளாய்வு செய்வில்லை. மாறாக, டில்லி வழங்கிய அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் தொடர்ச்சியாக ஏற்றுக்கொள்ளாது அவர்களுக்கு கிடைத்த அத்தனை சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தாது வரலாற்றுத் தவறிழைத்தார்கள். டில்லியை விடவும் புலம்பெயர் தமிழர்களையும் மேற்குலகத்தையும் அபரிதமாக நம்பிக்கொண்டு 13ஆவது திருத்தச்சட்டம், அதிகாரப்பகிர்வு, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு உள்ளிட்ட விடயங்களை முறையாக கையாளாது அவற்றை ஒற்றையாட்சிக்குள் பெறமுடியாதென நிராகரித்துவிட்டு, பொறுப்புக்கூறல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், வெளிநாட்டு விசாரணையாளர்கள் என்று நடைமுறைச்சாத்தியமற்ற விடயங்களின் மீது காலத்தினைக் கடத்தினார்கள். இதன் விளைவாக, தமிழ் மக்களுக்காக இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை மேற்கொண்டிருந்த இந்தியாவுக்கும் தமிழ்த் தலைவர்களுக்கமான இடைவெளி அதிகரித்து விட்டது. அந் நிலைமையானது, நான்கு தசாப்த இந்தியாவின் காத்திருப்புக்குப் பின்னர் ‘பொருளாதாரத்தினை மட்டும் மையப்படுத்தியதாக’ தனது மூலோபாயத்தினை மாற்றியமைத்துள்ளது. அதனை அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் நன்கு புரிந்துகொண்டுள்ளது. இந்த நிலைமையானது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் ஆபத்தானதொரு சூழலாகும். ஏனென்றால், அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாட்டை கையிலெடுத்தால் மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளது. அவ்விதமானதொரு சூழல் ஏற்பட்டால் பிரதமர் மோடியின் அடுத்த இலங்கைக்கான பயணத்தின்போது அவர் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்று கூடக் கோரிக்கை விடுக்கான நிலைமைகளே ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே, தற்போதைய சூழலை தமிழ்த் தலைவர்கள் புரிந்துகொண்டு தமது பழைய சித்தாதந்தங்களை கைவிட்டு நடைமுறைச் சாத்தியமான விடயங்களுக்கான டில்லியுடன் மீள் ஊடாட்டத்துக்குச் செல்ல வேண்டியது அவசியமாகின்றது என்றார். https://seithy.com/breifNews.php?newsID=331977&category=TamilNews&language=tamil- மனிதப் படுகொலையாளியான ரணிலுக்கு இறுதிக்காலத்திலாவது தண்டனையளிப்போம் - அமைச்சர் பிமல் அறிவிப்பு
தையிட்டிக்கே தீர்வு தர விரும்பாமல் இழுத்து அடிக்கிறீர்கள். நீங்களா தமிழ் மக்களுக்கு தீர்வு தரக்கூடியவர்கள்???- 10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
Data Sources RBI State Finances Reports Ministry of Statistics & Programme Implementation (MoSPI) Economic Surveys of States --https://viduthalai.in/110383/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9-3/ வாசித்து விளங்க தெரியாவிட்டாலும் தற்குறிதனம் தான். கூகிளில் தேடினாலும் ஏ ஐ தான் தரவிகளை தேடி தருகிறது. நீங்கள் உங்களுக்கு சார்பான தகவலை தரும் போது ஏனையவர்கள் தரக்கூடாதா? வாசகர்கள் வாசித்து சரி பிழையை சொல்லட்டும். அது சரி நீங்கள் தரவு எடுத்த இடம் தெய்வீக தளமோ?- வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் - பிரதமர்
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரதமர் இந்து மக்களின் உணர்வுகளை கீறி காயப்படுத்தியுள்ளார். அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். எதிர்வரும் 6ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது தேர்தல் சட்டம் அமுலில் இருக்கிறது. தேர்தல் சட்டங்களை கடைப்பிடிக்குமாறு தேர்தல் திணைக்களம் சகல கட்சிகள் சுயேச்சை குழுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார். அவர் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்றைய தினம் நடைபெற்ற போது, ஆலயத்தினுள் அதிரடியாக பாதுகாப்பு அதிகாரிகளுடன் புகுந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்துள்ளார். பிரதமரின் பாதுகாப்புக்காக வந்தவர்கள், காலணிகளோடு ஆலய வளாகத்தில் புகுந்துள்ளார்கள். அது இந்து மக்களுக்கு மிகப் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மாவிட்டபுரத்துக்கு சென்றது மிக மலிவான தேர்தல் பிரச்சாரத்துக்காகவே, மாவிட்டபுரத்துக்கு கடந்த காலங்களில் பல அரசியல்வாதிகள் வந்து சென்றிருக்கிறார்கள். அவர்கள் பக்தர்களுக்கு இடையூறு விளைவிக்கவில்லை. பிரதமரின் அதிரடி வருகையால் பக்தர்களின் வயிற்றெரிச்சலை தான் பெற்றுச் சென்றுள்ளனர். இந்த மலிவான அரசியலுக்கு நாம் கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறோம். இந்து மக்களின் உணர்வுகளை கீறி காயப்படுத்தியுள்ளார், பிரதமர். தனது செயலுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்காக பிரதமர் என்ன சொல்லப்போகிறார் ? அதேபோன்று நேற்றைய தினம் காரைநகர் மற்றும் நீர்வேலி பகுதியில் ஆலய வளாகத்தில் மேடை அமைத்து, தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் பிரதமர் ஈடுபட்டிருந்தார். இவ்வாறான மலிவான அரசியலை நாட்டின் பிரதமர் செய்யக்கூடாது. இங்குள்ள எடுபிடி அரசியல்வாதிகள், சின்ன பிள்ளை அரசியல் செய்பவர்களின் சொல்லை கேட்டு நடக்கக்கூடாது. வடக்கை நோக்கி பல அரசியல்வாதிகள் உள்ளூராட்சி தேர்தலுக்காக படையெடுத்து வருகின்றனர். அவர்கள் தங்கள் அரசியல் நடவடிக்கைகளை மத தலங்களில் மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். மலிவான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதை அரசாங்கம் கைவிட வேண்டும். தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் தமது கடமைகளை சரியாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றார். https://seithy.com/breifNews.php?newsID=331932&category=TamilNews&language=tamil- 10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
Here’s an overview of the economic growth of Indian states over the last 10 years (2013–2023 to 2023–2024), based on Gross State Domestic Product (GSDP) trends: Top Performing States (High Growth)Gujarat – Avg. ~8-10% (Consistent growth due to manufacturing & ports) Maharashtra – Avg. ~7-9% (Financial hub, services & industry) Karnataka – Avg. ~8-10% (IT, startups, and tech-driven growth) Tamil Nadu – Avg. ~7-9% (Auto, textiles, and FDI inflows) Telangana – Avg. ~9-11% (Post-bifurcation IT & pharma boom) Andhra Pradesh – Avg. ~7-9% (Infrastructure & services push) Fast-Growing Smaller States & NEGoa – Avg. ~6-8% (Tourism & mining) Himachal Pradesh – Avg. ~6-7% (Hydroelectricity & agriculture) Assam – Avg. ~6-8% (Improving infrastructure & oil) States with Moderate GrowthUttar Pradesh – Avg. ~5-7% (Large population, recent infra push) Madhya Pradesh – Avg. ~6-7% (Agriculture & manufacturing) Rajasthan – Avg. ~6-7% (Mining & renewable energy) West Bengal – Avg. ~5-7% (Mixed, slowed by political factors) States with Slower GrowthPunjab – Avg. ~4-6% (Agrarian stress, low industry) Jharkhand – Avg. ~4-6% (Mining-dependent, fluctuating) Bihar – Avg. ~5-7% (Low base, but improving) Key Trends (2013–2023)Southern & Western states dominated growth due to industrialization & services. Gujarat, Maharashtra, Karnataka, Tamil Nadu, and Telangana were leaders. Eastern & Northern states (Bihar, UP, Odisha) saw growth but at a slower pace. Post-COVID recovery was faster in states with strong manufacturing/IT (e.g., Karnataka, TN). Data SourcesRBI State Finances Reports Ministry of Statistics & Programme Implementation (MoSPI) Economic Surveys of States- தமிழீழ பாடல்கள்
தங்கமாலை கழுத்துகளே கொஞ்சம் நில்லுங்கள் நஞ்சு மாலை கழுத்துகளை நினைவில் கொள்ளுங்கள்- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பலஸ்தீனியர்கள் மேல் தாக்குதல் மேற்கொள்ள வேண்டாம் என கூறிய துணை விமானபடையினர் நூற்றுக்கணக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.- டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பங்குசந்தையை தனக்கு சாதகமான விதத்தில் பயன்படுத்த முயன்றாரா? புதிய குற்றச்சாட்டுகள்
- 26/11 மும்பை தாக்குதல்; அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா!
Conversation Narendra Modi @narendramodi US declaring Tahawwur Rana innocent in Mumbai attack has disgraced the sovereignty of India & it is a “major foreign policy setback” 1- டொமினிகன் குடியரசில் இரவு விடுதி ஒன்றில் கூரை இடிந்து வீழந்து ஏற்பட்ட 184 பேர் உயிரிழப்பு!
221 பேர் இறந்ததாக இறுதியாக கிடைத்த தகவல் கூறுகிறது. பல பிரபலங்களும் இறந்ததாக கூறப்படுகிறது. - நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.